Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சரணடைந்த 100க்கும் மேற்பட்டோருக்கு என்ன நடந்தது ?

Featured Replies

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரணடைந்த 100க்கும் மேற்பட்டோருக்கு என்ன நடந்தது ?- சிறீதரன்

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக் கொடியுடன் வந்து சரணடைந்தவர்களுக்கும் ஆயர் ஒருவரின் உதவியுடன் சரணடைந்த 100க்கு மேற்பட்டோருக்கும் என்ன நடந்தது என்ற தகவலை அரசாங்கம் இன்னும் வெளியிடாது இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் விசனம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்தார்.

அத்துடன் அப்பா வருவார் என்று கண்ணீருடனும், ஏக்கத்துடனும் பல பிள்ளைகள் காத்திருக்கும் நிலைமையே வன்னியில் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், சரணடைந்த போராளிகளுக்கு அரசாங்கம் பாரபட்சம் காட்டுவது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். அத்துடன் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் பலர் நிம்மதியற்ற வாழ்க்கையே வாழ்ந்து வருவதாக குறிப்பிட்ட அவர், போரில் இறந்தவர்களை நினைத்து அவர்களுக்கு பூவைத்து வணங்க முடியாத தூப்பாக்கிய நிலைமையே காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் இளைஞர்கள் காணமல்போவது மற்றும் கைது செய்யப்படும் சம்பவங்கள் மீண்டும் அதிகரித்துள்ளதாகம் அவர் சுட்டிக்காட்னார். யுத்தம் முடிவடைந்தாலும் தமிழ் பிரதேசங்களில் இளைஞர்கள் தொடர்ந்தும் அச்சத்துடனேயே வாழ்ந்து வருவதாக குறிப்பிட்டதுடன், கிளிநொச்சியில் கடந்த சில தினங்களில் பாடசாலை மாணவர்கள், தொழில்புரியும் இளைஞர்கள் கடத்தப்பட்டுள்ளமையினையும் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை கிளிநொச்சி உட்பட வன்னிப் பகுதிகளில் வாத்தகர்கள் சிலர் அச்சுறுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த அவர், அரச படையினரின் உதவியுடன் பொதுமக்களின் சொத்துக்கள் கொள்ளையிடப்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார். இது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டாலும் உரிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் குறிப்பிட்டார்.

அத்துடன் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் பலர் நிம்மதியற்ற வாழ்க்கையே வாழ்ந்து வருவதாக குறிப்பிட்ட அவர், போரில் இறந்தவர்களை நினைத்து அவர்களுக்கு பூவைத்து வணங்க முடியாத தூப்பாக்கிய நிலைமையே காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

மூலம்: உலகத் தமிழ் செய்திகள்

பிரசுரித்த நாள்: Nov 25, 2011 18:15:02 GMT

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் இளைஞர்கள் காணமல்போவது மற்றும் கைது செய்யப்படும் சம்பவங்கள் மீண்டும் அதிகரித்துள்ளதாகம் அவர் சுட்டிக்காட்னார். யுத்தம் முடிவடைந்தாலும் தமிழ் பிரதேசங்களில் இளைஞர்கள் தொடர்ந்தும் அச்சத்துடனேயே வாழ்ந்து வருவதாக குறிப்பிட்டதுடன், கிளிநொச்சியில் கடந்த சில தினங்களில் பாடசாலை மாணவர்கள், தொழில்புரியும் இளைஞர்கள் கடத்தப்பட்டுள்ளமையினையும் சுட்டிக்காட்டினார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.