Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிறந்தநாள் கொண்டாட்டம்; தடுப்பதற்காக யாழில் பாதுகாப்பு அதிகரிப்பு

Featured Replies

பிறந்தநாள் கொண்டாட்டம்; தடுப்பதற்காக யாழில் பாதுகாப்பு அதிகரிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் சுவரொட்டிகளை ஒட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து யாழ்.குடாநாட்டின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.

இந்நிலையில், பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு எந்தவிதக் கொண்டாட்டங்களோ அல்லது நிகழ்ச்சிகளோ யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் முன்னெடுக்கப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிரிதொரு குழுவொன்றினால் யாழில் சுவரொட்டிகள் ஒட்டப்படவுள்ளதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து இராணுவத்தினருடன் பொலிஸாரும் ஈடுபடுத்தப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் சாதாரண தினமாகவே காணப்படப்போகின்றது. இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் எந்தவொரு கொண்டாட்டமும் இடம்பெறப்போவதில்லை என்று என்னால் உறுதி கூற முடியும் என்றும் யாழ். கட்டளைத்தளபதி தெரிவித்தார்.

யாழ்ப்பாண நகரின் பல வீதிகளிலும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள படையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் இரவு வேளைகளிலும் இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், யாழ்ப்பாணத்தின் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸாருடன் இணைந்து இராணுவத்தினர் முன்னெடுத்து வருகின்றனர் என்று மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க மேலும் குறிப்பிட்டார்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/31511-2011-11-26-03-51-55.html

  • தொடங்கியவர்

இராணுவத்தின் கண்காணிப்பு கிளிநொச்சியில் அதிகரிப்பு

பதற்றத்தில் மக்கள்

கிளிநொச்சி பிரதேசத்தில் படையினரின் கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக பிரதேச தகவல்கள் தெரிவித்தன. நேற்று வீதியில் செல்லும் வாகனங்களை மறித்த படையினர் அவற்றுள் ஏறிச் சோதனை மேற்கொண்டதாக கூறப்பட் டுள்ளது. விடுதலைப்புலிகளின் மாவீரர் தினம் நாளை என்பதால் இந்நடவடிக்கைகளை படையினர் மேற்கொண்டிருக் கக்கூடும் என மக்கள் கருத்துத் தெரிவித்தனர்.

சில கடைகளுக்குச் சென்ற படையி னர் நாளை 27-ம் திகதி வர்த்தக நிலையங்களை அவசியமாகத் திற க்கவேண்டும் என்று உரிமையாளர்களுக்கு கட்டளையிட்டுள்ளனர். மாவீரர் தினத்தை முன்னிட்டு வர்த்தக நிலையங்களை உரிமை யாளர்கள் மூடக் கூடும் என்று அஞ்சியே படையினர் இவ்வாறு கட்டளையிட்டுள்ளனர். அத்துடன் கிளிநொச்சியில் படையினர் கண்காணிப்பை தொடர்ச்சியாக தீவிரப்படுத்தி வருவதால் மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதா கவும் அதனை இராணுவத்தினர் அகற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப் படுகிறது. அங்கு மர்மமாக மாவீரர் தின சுவரொட்டிகள் ஒட்டப் பட்டதையடுத்து படையினர் அவ்விடத்திற்குச் சென்று அவற்றை கிழித்துள்ளனர்.

இதேவேளை யாழ் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்தஇனந்தெரியாத நபர்கள் மாவீரர் தினத்தை முன்னிட்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்த பெயர்ப் பலகையை அடித்து நொருக் கியுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் பிற்பகல் ஒரு மணியளவில் இடம் பெற்றுள்ளது. நாளை 27ம் திகதி வரும் மாவீரர் நினைவு தினத்தை முன்னிட்டும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினத்தை முன்னிட் டும் யாழ் பல்கலைக்கழக மாணவர் பொது அறையில் உள்ள பெயர்ப் பலகைகளில் சுவரொட் டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

யாழ். பல்கலைக்கழக சமூகம் என்ற பெயரில் ஒட்டப்பட்ட இந்த சுவ ரொட்டிகளுடன் பெயர்ப் பலகை யையும் யாழ் பல்கலைக்கழகத்திற் குள் திடீரென மோட்டார் சைக்கிளில் நுழைந்த மர்ம நபர்கள் அடித்து நொருக்கியுள்ளனர். பல்கலைக்கழக செயற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த பொழுதே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இதேவேளை யாழ்ப்பாணம், மற்றும் வன்னியிலுள்ள இந்து ஆலயங் களில் படையினரின் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வரு வதுடன் மணியடிப்பதற்கும் தடை விதித்துள்ளனர்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=25618

  • கருத்துக்கள உறவுகள்

தானாடாமல் விட்டாலும்.... தசையாடும்.

இந்த, உணர்வை.. எந்த அடக்குமுறையாலும்... ஒடுக்க முடியாது.

தானாடாமல் விட்டாலும்.... தசையாடும்.

இந்த, உணர்வை.. எந்த அடக்குமுறையாலும்... ஒடுக்க முடியாது.

உங்கள் கருத்தே எனது கருத்தும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.