Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழத் தேசியத் தலைவரது பிறந்தநாள் நிகழ்வினை தன்னெழுச்சியுடன் கொண்டாடிவருகின்றனர் தமிழக மக்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

thalaivar.jpg

"தேசத்தின் சொத்து" தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது 57வது அகவை நிறைவு நாளும் தமிழினத்தின் விடுதலையினை வென்றெடுக்கும் களத்தில் நடைபோடும் 58வது பிறந்தநாள் துவக்க நாளும் இன்றாகும்.

தம்பி என்று வாஞ்சையோடு அழைக்கப்பட்ட தலைவன் பிரபாகரன் அவர்கள் ஒவ்வொரு தமிழர்களின் நெஞ்சத்திலும் வீற்றிருந்து இரத்த நாளங்களிலும் சுவாசத்திலும் விடுதலை தாகத்தை கடத்திவருவதனால் அவரது பிறந்தநாள் உலகத்தமிழர்களது போற்றுதலுக்கும் கொண்டாட்டத்திற்கும் உரிய நாளாக மாறிவிட்டது. இந்த பேறு பெற்றவர்கள் தமிழுலகில் இன்றளவும் யாரும் இல்லை என்றால் மிகையாகாது.

இவ்வாறு சிறப்புப்பெற்ற தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது பிறந்தநாளாகிய இன்று தாய்த்தமிழக மக்கள் தன்னெழுச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

அதிகாலை முதல் ஆரம்பித்திருக்கும் இக் கொண்டாடத்தில் ஈடுபட்டிருக்கும் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக காணப்படுகின்றனர். கோவில்களில் சிறப்பு பூசைகளும் அபிசேக ஆராதனைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

தமிழகத்தின் பல இடங்களில் புதிய கடைகள் இல்லங்கள் திறப்புவிழாவினை நடாத்துவதற்கு தமிழீழத் தேசியத் தலைவரது பிறந்தநாளான இன்றைய தினத்தை தெரிவு செய்து நடாத்திவருகின்றனர்.

இவைதவிர அதிகாலை முதல் தமிழக மக்கள் இனிப்புப் பண்டங்களை மக்களிற்கு வழங்கி கொண்டாடிவருகின்றனர். தமிழகத்தின் மூலை முடுக்குகளில் இருக்கும் நண்பர்கள் உறவினர்களிற்கு கைத்தொலைபேசியில் குறுந்தகவல்களை அனுப்பி பிறந்தநாள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள தமிழீழ ஆதரவாளர்கள் எல்லோரும் தத்தமது தரப்பு காரணங்களிற்காக அமைதிகாத்து நிற்கையில் தமிழகத்து மக்கள் தன்னெழுச்சியாக தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றமை அவர்களது எழுச்சியினை காட்டிநிற்கின்றது.

ஈழதேசம் இணையத்திற்காக தமிழகத்தில் இருந்து புலிமறவன்.thalaivar1.jpg

http://eeladhesam.com/index.php?option

பிரபாகரன் பிறந்தநாள்...உலகெங்கும் கொண்டாட்டம்!

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 57வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

நசுக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்க, இலங்கையில் 30 ஆண்டு காலம் தனி ஈழம் கேட்டுப் போராடியது பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு.

கடந்த 2009ம் ஆண்டு உலக நாடுகளின் துணையுடன் பிரபாகரனின் படைகளை வென்றது இலங்கை ராணுவம். தங்கள் ஆயுதப் போராட்டத்துக்கு உலகம் எதிர்ப்பு காட்டுவதைப் புரிந்துகொண்ட புலிகள் அமைப்பு, ஆயுதங்களை மவுனிப்பதாகக் கூறிவிட்டு, அரசியல் ரீதியான போராட்டங்களை முன்னெடுத்துள்ளது.

புலிகளின் வலையமைப்பு இன்னும் உயிர்ப்புடன் இருப்பதாக இலங்கை புலம்பிக் கொண்டுள்ளது. அதே நேரம் 'போர்க்குற்றவாளி' மகிந்த ராஜபக்சேவும் அவரது தம்பிகளும் எந்த நாட்டுக்குள்ளும் கால் வைக்க முடியாத அளவுக்கு தமிழர் எதிர்ப்பு தீவிரமடைந்துள்ளது.

முள்ளி வாய்க்கால் போரில் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக ராணுவம் அறிவித்தாலும், அவர் இன்னும் இருப்பதாக இன்னொரு தரப்பு கூறுகிறது. விடுதலைப் புலிகள் இயக்கமும் இதுவரை அவரது இறப்பை உறுதிப்படுத்தவில்லை. ஆண்டுதோறும் வெளியாகும் மாவீரர் தின அறிக்கையில், தேசியத் தலைவர் வழிகாட்டுதலில் போராட்டம் தொடரும் என்றே கூறி வருகின்றனர்.

இந்த சூழலில் பிரபாகரனின் 57வது பிறந்த தினம் இன்று வந்துள்ளது. பொதுவாக பிரபாகரன் தனது பிறந்த நாளுக்கு அதிக முக்கியத்துவம் தராமல், தன்னுடன் நின்று இலங்கை ராணுவத்தை எதிர்த்துப் போரிட்டு மடிந்த போராளிகளின் நினைவு நாளான மாவீரர் தினத்துக்குதான் (நவம்பர் 27) அதிக முக்கியத்துவம் தருவார்.

நாளை நடக்கும் மாவீரர் தினத்துக்கான ஏற்பாடுகளும் நடந்து கொண்டுள்ளன. இன்று பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு உலகமெங்கும் வாழும் தமிழின உணர்வாளர்கள், அவர்களது இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

தமிழ் அமைப்புகள் அனைத்தும் அவர்களது அலுவலகங்களில் பிரபாகரனின் பிறந்த நாளுக்கு புலிக்கொடி ஏற்றியும் கேக் வெட்டியும் கொண்டாடி வருகின்றன.

நாளை நடக்கும் மாவீரர் தினத்தையொட்டி சேலத்தில் கொளத்தூர் மணி தலைமையில் பல்வேறு கட்சியினர் மாவீரர் தின எழுச்சியில் பங்கேற்கிறார்கள்.

நாமக்கல்லில் சீமான் தலைமையில் மாவீரர் எழுச்சி தினக் கூட்டம் நடக்கிறது. இந்த எழுச்சி கூட்டங்களுக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. ஆனால், தடையை மீறி இக்கூட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.

http://tamil.oneindia.in/news/2011/11/26/srilanka-prabhakaran-birthday-celebration-aid0136.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.