Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிழலின் அருமை வெயிலில் தெரியும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

thalaivaa15.jpg

கல்தோன்றி மண்தோன்றா காலத்து முன்தோன்றிய மூத்த குடியாம் தமிழ்குடி

தரணியெங்கும் தன்முனைப்புடன் வாழ்வது தானைத்தலைவன் வரவினாலே….!

காலத்தால் அழியாத கல்லணை கண்ட கரிகாலன்…

சரித்திரம் போற்றும் தஞ்சைப் பெருங்கோயில் அமைத்த ராசராசன்…

ஈழஅரசமைத்து சிங்களத்தை சிதைத்த எல்லாளன்…

யாழ்பாண இராச்சியம் ஆண்ட சங்கிலியன்…

வணங்கா மண் வன்னியை மான்புடன் ஆண்ட பண்டாரவன்னியன்…

ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் தம்வீரத்தால் நல்லாட்சி தந்தவர்கள் அல்லவா இந்த மாமன்னர்கள்.

தடம்மாறிய பயணத்தால் ஈழத்தீவில் கால்பதித்தான் சிங்களன்.

பொருள்தேடி கடலோடிய மேலைத்தேயர்களது வருகை தாய் மண்ணை நிறம் மாற்றியது.

வாள் கொண்டு வேல் கொண்டு எதிர்நின்ற பகை வென்று

தரணியெங்கும் தமிழ்க் கொடி நாட்டிய வேந்தர்கள்.

இவர்கள் வீரத்தின் பெருமை பேசும் போதே கர்வம் கொள்ளவைக்கும்

நெஞ்சுநிமிர்த்திய மாவீரமல்லவா!

வாளும் வேலும் மறைந்து மான்பிழந்து நூற்றாண்டு சென்றபின்

இருள்கிழித்த பகலவனாக வந்துதித்தான் எங்கள் தலைவன் பிரபாகரன்.

சிங்களத்தின் கொலைக்கரங்கள் தமிழர் வாழ்வை

சூறையாடி சன்னதம் கொண்டு ஆடிநிற்கையில்

இளம்புலியாக கருவிஏந்தி களமாடினான் வல்வை வீரன்.

உலகம் வியக்கும் வண்ணம் படை நடாத்தியதோடு

வான்படை கண்டு தமிழர் வரலாற்றில் தனிப்பெருந் தலைவனான் எங்கள் அண்ணன் பிரபாகரன்.

தமிழர்களின் தார்மீக ஆதரவுடன் படைநடாத்தி

சிங்களத்தின் படைகளை சிதைத்து ஈழத்தை அமைக்கும் தறுவாயில் தடைபோட்டது உலகம்.

படைகள் திரட்டி சிங்களத்தின் பின்நின்று ஈழத்தை சுடுகாடாக்கியது உலகநாடுகள்

தடையோடு பகைமையும் கொண்டு தமிழினத்தை காவுவாங்கியது காந்திதேசம்.

உலகமே சதிசெய்ய முள்ளிவாய்கால் கடற்கரையில் அநாதையானது தமிழினம்.

தமிழினத்தின் நிரந்தர விடியல் வேண்டி நிறைவாகும் வரை மறைவாக இருக்கும் தலைவா

தமிழினத்தின் ஒருமித்த ஆளுமை அல்லவா நீங்கள்.

களத்தில் இருந்த போதும் இப்போது மெளனமாக இருக்கின்ற போதும் நடப்பவைதான் நாடறிந்ததே.

நிழலின் அருமை வெயிலில் தெரியும்.

தமிழினத்தின் தலைமகனாகிய உங்கள் தலைமைத்துவம் இன்றி

உலகத் தமிழினம் தடுமாறுகிறது.. தள்ளாடுகின்றது... தத்தளிக்கின்றது…..

நாளை தலைநிமிர்வோம் என்ற நம்பிக்கையுடன்

ஈழதேசம் இணையத்திற்காக : ம.செந்தமிழ்.national%20leader%20eelam%204.jpg

http://eeladhesam.com/index.php?option

சாவற்ற சந்நிதியின் பாடல்! ஈழத்தில் இருந்து…!- பொன்.காந்தன்

புல்லரிக்கிற ஒரு கவிதையை பொழிவதற்கு புதுவை இல்லையென்றும்

புனிதர்களை பல்லக்கில் ஏற்றிவைத்து பாடுதற்கு ஒரு பாவலனும் இல்லையென்றான ஏக்கவெளியில் நின்றுகொண்டு கல்லறைத்துண்டுகளை கவியாக்கி காலக்கடமையை

அந்தக் காவல்தெய்வங்களின் நித்திய கடனை நிறைவேற்ற நெஞ்சம் பதறிடுமாம்.

எருக்கலைக்காடாய் எவனோ மிதித்து எச்சில்படுத்தும் குப்பைகளின் மேடாய்

என் சொத்தென்று பத்திரங்கள் நிரப்பி பாழாய்ப் போனவர்கள் வேலியிடும் வம்சப் பெருவடுவாய்

எம் குஞ்சுகளை மலர்தூவி மார்பில் இறுமாந்து மண்ணள்ளித்தூவி மலையாய் நிமிர்ந்த சத்தியமைந்தர்களின் சாவற்ற சந்நிதி நித்தியம் பார்த்து நாம் நெகிழ்ந்த நெருப்புகளின் இருப்பு தொழுதிட முடியா துரதிஸ்டமாயிற்று

ஒன்றா இரண்டா ஓராயிரம் கனவல்லவா கண்டார்

நிச்சயம் ஒரு நினைவழியா நாள் வருமென்றுதானே கொற்றவைதேவியின் கோயிலில் இத்தனை செல்வங்களும் இரத்தபுஸ்பங்களாய் சத்திய வரிகளை எழுதிச் சாய்ந்தனர் பற்றி எரிகிறது வயிறு

இத்தனை பெரிய அடிமை இருளில் ஏங்கித்திரியவா பச்சைக் குழந்தைகள் பாடை ஏறின

மடியில் இருக்கும் போதும் மண்ணுக்குள் இருக்கும் போதும்

தன் பிள்ளையின் எண்ணம் தாயறிவாள்

அம்மாவின் அரவணைப்பை பிள்ளை ஆதர்சமாய் அடையும்

அதை எந்த வல்லரசாலும் வெல்லமுடியாது

கதிரை அரசியலே கடவுள் என்கிறோம்

எங்கள் கடைக்கோடி வரை வந்து எவன் எவனொ களவெடுக்கிறான்

கற்பை உருவுகிறான் கன்னத்தில் அறைகிறான் செத்தபிணம்போல திரிகிறோம்

எங்களில் சில பேருக்கு நேற்று அப்பிடியும் இன்று இப்படியும் எப்படி முடிகிறது

ஓர் அழகிய சாலை பாதங்களை இழந்து பாழடைந்து கிடக்கின்றது

ஒற்றைக் கண்ணீரில் விழுந்துடைகின்றது ஒரு இராச்சியத்தின் கனவு

எத்தனை நாட்களை கொண்டாட நாம் சித்தங்கொண்டிருந்தோம்

இன்று ஒற்றை நாளைக்கூட கண்ணிலொற்ற மறுக்கப்பட்டோம்

http://www.alaikal.com/news/?p=89003

பிரபாகரன் மீது தமிழ் மக்கள் கொண்ட அன்பு மெய்சிலிர்க்க வைக்கிறது

தமீழம் என்ற தேசச் சிந்தனையை மக்கள் மனங்களில் தூவிய தலைவர். அதை தானே முதன்மைத் தளபதியாக நின்று வழிநடாத்திய பெருமைக்குரியவருமான மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு மகத்தான 57 வது பிறந்தநாள் வாழ்த்துக்களை உலகம் முழுவதும் தமிழ் மக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

பிரபாகரன் என்ற தலைவரின் ஆளுமையை இன்று உலகம் முழுவதும் மெச்சி வருகிறது. இப்படியொரு வீரன் தமது இனத்தில் பிறக்கவில்லையே என்ற கவலை உலகின் அத்தனை இனங்களுக்கும் இருக்கிறது. ஒன்றே உலகம் என்ற கொள்கையை உலகின் முன் வைத்த முதல் மனிதன் தமிழனான கணியன் பூங்குன்றனே. அதுபோல உலகம் முழுவதும் ஒன்றுபட்டு போர் தொடுத்தபோது ஒருவனாக தலைமைதாங்கி உலகத்தின் பொறாமைமிக்க அத்தனை வல்லரசுகளையும் எதிர்த்த வீரன் பிரபாகரன் ஒருவன் மட்டுமே.

உலகப் பெரு வீரர்களான நெப்போலியன், அலெக்சாண்டர் போன்றவர்கள் கூட உலகத்திற்கு எதிராக போர் புரிந்தவர்கள் அல்ல. உலகத்தை நேசித்த உன்னதத் தலைவனாம் பிரபாகரனை பீ.பீ.சி உலகின் மிகச்சிறந்த கெரில்லா படைத் தலைவனாக தேர்வு செய்தது தெரிந்ததே. அப்படிப்பட்ட இமாலய புகழை அழிக்க பொறாமையால் ஒன்று திரண்ட வல்லரசுகளை சிரித்த முகத்துடன் சந்தித்த சுந்தரத் தமிழன். உலகின் முதல் நாகரிக இனமான தமிழினத்தின் தன்மானத்தை உலகப்பந்தின் மீது ஓங்கி முத்திரை பதித்த உன்னத மனிதன். அத்தகைய வீரனுக்கு உலக மக்கள் பிறந்தநாள் வாழ்த்து சொல்லி மகிழ்கிறார்கள். உலகம் முழுவதும் பரந்து வாழம் தமிழ் மக்கள் தலைவர் பிரபாகரனின் மேல் கொண்டுள்ள அன்பு மெய்சிலிர்க்க வைப்பதாக அவருடைய சகோதரர் மனோகரன் வேலுப்பிள்ளை சற்றுமுன் எமக்கு தெரிவித்தார்.

http://www.alaikal.com/news/?p=89055

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.