Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

லண்டன் மாவீரர் நாள் நிகழ்வில் பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்பு!(பட தொகுப்பு)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

photo14-150x150.jpg

தமிழ்த் தேசிய மாவீரர்நாள் நிகழ்வு உலகம் முழுமையிலும் உள்ள தமிழ் மக்களால் உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்டிருக்கின்றது. தாயகத்தில் மக்கள் வெளிப்படையாக வணக்கம் செலுத்த முடியாவிட்டாலும் தனித்தனியாக மக்கள் வணக்கம் செலுத்தியிருக்கின்றனர். பிரித்தானியாவில் இன்று பிற்பகல் நடைபெற்ற நிகழ்வில் பல்லாயிரக் கணக்கான மக்கள் பங்கு கொண்டு மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தியதாக அங்கிருந்து எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பிற்பகல் 12.30மணியளவில் தொடங்கிய நிகழ்விற்கு பிரித்தானியாவின் பல பாகங்களில் இருந்தும் பல்லாயிரக் கணக்கான மக்கள் திரண்டு வந்திருந்தாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர். மேலதிக விபரங்களும் ஒளிப்படங்களும் சில மணி நேரத்தில் சரிதத்தில் வெளிவரும்.

[show as slideshow]

thumbs_heros-day-london-2011-1.jpg

thumbs_heros-day-london-2011-10.jpg

thumbs_heros-day-london-2011-11.jpg

thumbs_heros-day-london-2011-12.jpg

thumbs_heros-day-london-2011-13.jpg

thumbs_heros-day-london-2011-14.jpg

thumbs_heros-day-london-2011-15.jpg

thumbs_heros-day-london-2011-16.jpg

thumbs_heros-day-london-2011-17.jpg

thumbs_heros-day-london-2011-18.jpg

thumbs_heros-day-london-2011-19.jpg

thumbs_heros-day-london-2011-2.jpg

thumbs_heros-day-london-2011-20.jpg

thumbs_heros-day-london-2011-21.jpg

thumbs_heros-day-london-2011-22.jpg

thumbs_heros-day-london-2011-23.jpg

thumbs_heros-day-london-2011-24.jpg

thumbs_heros-day-london-2011-25.jpg

thumbs_heros-day-london-2011-26.jpg

http://www.saritham.com/?p=42075

NW_maaveerar1.JPG

தமிழீழதேசத்தின் விடுதலைக்காக விதையாக வீழ்ந்த எமது தேசப்புதல்வர்களை நினைவு செய்யும் மாவீரர்நாள் பிரித்தானியாவில் ஆறு இடங்களில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. மண்டபங்கள் திறக்கப்பட்ட சிறிதுநேரத்திலேயே மண்டபங்கள் நிறைந்து, மண்டபத்துக்கு வெளியிலும் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து மாவீரர்களுக்கு மலர்வணக்கம் செய்தனர்.

NW_maaveerar2.JPG

மிகவும் உணர்வுமிகுந்ததாக இன்றைய நிகழ்வுகள் அமைந்திருந்தன. தாயகவிடுதலைக்காக தமது இனிய உயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களின் நினைவில் உருகி வணக்கம் செய்த மக்கள் மண்டபத்துக்கு வெளியில் காத்திருந்த பெருந்திரளான மக்களுக்கும் இடம்கொடுக்கும் விதத்தில் நகர்ந்துகொண்டே இருந்தது எல்லா மண்டபங்களிலும் காணக்கிடைத்தது. மாவீரர்நாளில் தாயகத்தில் கடைப்பிடிக்கப்படும் நிகழ்வுகளின் வரிசைக்கிரமத்தில் இங்கும் நிகழ்வுகள் நடாத்தப்பட்டன. மாவீரரை நினைத்து மணிகள் ஒலிக்க ஒரு கணம் மௌனமாகி துயிலும் இல்லப் பாடலுக்கு ஒவ்வொருவரும் தமது கைகளில் மாவீரர்நினைவு தீபங்களை ஏந்திப்பிடித்து நின்றது உணர்வுகளின் உச்சமாகவே இருந்தது.

sw_maaveerar3.JPG

அதன்பின்னர் தமிழகத்திலிருந்து வருகை தந்திருக்கும் தமிழின உணர்வாளர்களும், தமிழீழ விடுதலைக்காக நீண்டகாலமாக குரல் எழுப்பி போராடி வருபவர்களுமாகிய திரு.மணியரசன், திரு.செயப்பிரகாசம் ஆகியோர் மாவீரர்களின் கனவுகளை நனவாக்குவதற்காக இனிவரும் காலங்களில் தமிழினம் என்ன செய்யவேண்டும் என்று உரையாற்றினார்கள். தமிழகத்திலிருந்து தமிழின உணர்வாளர்களும், தமிழீழ விடுதலைப் போராட்டத்துடனும் தமிழீழத் தேசிய தலைவருடனும் நெருக்கமாக பழகியவர்களுமான திரு.பழ.நெடுமாறன் ஐயா,திரு.வைகோ,

உணர்ச்சிக்கவிஞர் காசிஆனந்தன் ஆகியோர் வழங்கிய மாவீரர் நாள் செய்திகள் வெண்திரையில் காண்பிக்கப்பட்டது.

se_maaveerar.JPG

அத்துடன் தேசிய செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் கவிஞர் திரு.கந்தையா ராஜமனோகரன் அவர்கள் வடமேற்கு லண்டன் மாவீரர்நிகழ்வு மண்டபத்திலும், தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தில் நீண்டகாலம் செயற்பட்டவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான திரு.ஜெயனந்தமூர்த்தி அவர்கள் தென்மேற்கு லண்டன் மாவீரர் நிகழ்வு மண்டபத்திலும் உரையாற்றினார்கள்.

மேலும் Siobhan McDonnagh MP (Mitcham Morden), Andrew Pelling former Croydon Central MP ஆகியோர் தென்மேற்க்கு லண்டனிலும் Jim Cunningham MP (Coventry South), Councillor Jim Sawyers, Councillor Neem Hussain, Councillor Jaswant Singh Virdie, Councillor Marco Manak ஆகியோர் கொவன்றியிலும் Theresa Pearce MP (Erith & Thamesmead) ஆகியோர் தென்கிழக்கு லண்டனிலும் Act Now அமைப்பைச் சேர்ந்த Graham Williamson வடகிழக்கு இலண்டனிலும், முன்னாள் ஐரோப்பியப் பாராளுமன்ற உறுப்பினர் Robert Evans வடமேற்கு இலண்டனிலும் உரையாற்றினர்.

மாவீரரை நினைந்து வணங்கும் இன்றைய நிகழ்வை குழப்புவதற்கும், மக்கள் உணர்வுடன் தேசிய தலைவரின் பாதையில் திரள்வதை தடுப்பதற்கும் எத்தனையோ தடைகளையும் பொய்ப் பிரச்சாரங்களையும் சிறீலங்காஅரசாங்கத்தின் துணையுடன் சிலர் மேற்கொண்டபோதும் எமது மக்கள் தமது ஒன்றுதிரண்ட வருகையின் மூலம் அதனை உடைத்தெறிந்துள்ளார்கள். இறுதி நேரங்களில், நாற்பத்தியெட்டு மணித்தியாலங்களுக்குள் மண்டபங்கள் மாற்றம் செய்யப்பட்டு அவற்றை அறிவிப்பதற்கு 'மக்கள் வானொலி' மூலமும் மக்களே ஒவ்வொருவருக்கு ஒவ்வொருவர் தாமாகவே அனுப்பிய குறுஞ்செய்திகள் மூலமும் இவ்வளவு திரளான மக்களை திரட்டி இருப்பது மாவீரரின் ஈகத்துக்கு கிடைத்த வெற்றியாகும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இணைப்புக்கு நெல்லையன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
http://youtu.be/gABfWI0Nkvs

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப எக்சல் மண்டப நிகழ்சி என்னவானது, ஜிரிவி கூவி கூவி ரிக்கற் வித்திச்சுது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.