Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிராமத்தைத் தர மறுக்கும் இராணுவம் -குமுதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

29.jpg 07.12.11 மற்றவை லங்கையில் கடைசி யுத்தம் முடிந்து இரண்டரை ஆண்டுகள் கடந்துவிட்டன. போர் முடிந்ததும், ‘‘முகாம்களில் தங்க வைக்கப்பட்ட தமிழர்களை உடனே மீள் குடியமர்த் திவிடுவோம்’’ என்றார் இலங்கை அதிபர் ராஜபக்ஷே. சொன்னதைச் செய்தாரா? செய்யவில்லை என்பதற்கு சாட்சியாக இருக்கிறது திருகோணமலை அருகேயுள்ள தமிழர் கிராமமான சம்பூர். இனி எப்போதும் இந்த அழகிய கிராமம் தமிழர்களுக்குக் கிடைக்காது என்ற சிங்கள அரசுடன் இந்தியாவும் கைகோர்த்துள்ளதுதான் ஆச்சரியம்! “இங்கே அனல் மின் நிலையம் ஒன்றை அமைக்க இலங்கை அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது இந்திய அரசு’’ என்கிறார்கள்!

உண்மை என்ன என்பதை அறிய சம்பூர்வாசிகளுடன் பேசினோம்.

”சம்பூர், தமிழர்கள் காலம் காலமாக வாழ்ந்து வந்த பூர்வீக நிலம். புலிகளுடனான சமாதான ஒப்பந்தத்தை முறித்து, முதன்முதலாக 2006ஆம் ஆண்டு சிங்கள அரசு யுத் தத்தைத் தொடங்கியது இந்த ஊரில்தான். பயங்கரவாதிகளிடமிருந்து சம்பூர் மக்களை விடுவிக்கவே யுத்தம் செய்வதாகச் சொல்லிக்கொண்டு ராணுவம் யுத்தத்தைத் தொடங்கியது. அன்றிலிருந்து நாங்கள் எங்கள் நிலத்தை இழந்து அகதிகளாக தவிக்கிறோம். விடுதலைப்புலிகளிடம் இருந்து கைப்பற்றிய சம்பூரை ராணுவத்தின் பாது காப்புக்கும் பொருளாதார தேவைக்கும் எடுப்பதாக சொல்லிக்கொண்டு ராஜபக்ஷே அரசு ராணுவ அதி உயர்பாதுகாப்பு வளையமாக்கியது. இப்போது வேறு நிலம் தரு கிறோம், அங்கே குடியேறுங்கள் என்கிறார்கள். எப்படி முடியும்? எங்கட நிலத்தை எங்களிட்ட தராட்டி எல்லாருக்கும் விசத்த தரட்டும்; அத குடிச்சி எல்லாரும் செத்து ப்போறம். அப்பதான் இதுக்கு ஒரு தீர்வு வரும்’’ என்று கொதிக்கிறார், ஐந்து பிள்ளைகளின் தாயான க.பரமேஸ்வரி.

29a.jpg

‘‘எங்கள் மக்கள் மீது கண்மூடித்தனமான விமானத் தாக்குதல்களும் எறிகணைத் தாக்குதல்களும் நடத்தப்பட்ட பொழுது மக்கள் பலர் கொல்லப்பட்டார்கள். இரவோடு இரவாக கையில் அகப்பட்டவற்றை எடுத்துக்கொண்டு இடம்பெயர்ந்து நல்லூர், பாட்டாளிபுரம் போன்ற இடங்களுக்குச் சென்றவர்கள் உயிர் பிழைத்தோம். பின்னர் மட் டக்களப்பை அடைந்தோம்’’ என்கிறார் 46 வயதான காளியப்பு செல்வமலர்.

சம்பூர் பிரதேசத்தில் கூனித்தீவு, சூடைக்குடா, நவரெட்ணபுரம் ஆகிய கிராமப் பிரிவுகளும் உள்ளடங்குகின்றன. மட்டக்களப்பில் அகதி முகாம்களில் வசித்த இப்பிரதேச மக்கள் பின்னர் மூதூருக்கு அழைத்து வரப்பட்டு கிளிவெட்டி, பட்டித்திடல், மணற்சேனை, கட்டைபறிச்சான் ஆகிய இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். யுத்தம் முடிந்தபிறகு விரைவில் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பிவிடலாம் என கனவுகளுடன் காத்திருந்தவர்களுக்கு இடிபோல் வந்து இறங்கியது அந்தச் செய்தி.

சம்பூரில் அனல் மின்நிலையம் ஒன்றை அமைக்க இலங்கை அரசு, இந்திய அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால், இவர்களின் பூர்வீக நிலத்தை மறந்து அரசு த ரும் வேறு நிலத்தில் குடியேறுமாறு இந்த மக்களை தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது. இந்த நடவடிக்கை மக்களிடத்தில் பெரும் கோபத்தையும் அதற்கெதிரான போராட்டத் தையும் உருவாக்கியிருக்கிறது. இலங்கை ராணுவத்தின் அதி உயர் பாதுகாப்பு வளையத்திற்கு எதிரான போராட்டம், இப்பொழுது அனல் மின் நிலையத்திற்கு எதிராக மாறியுள்ளது. அரசாங்கத்தின் பலவந்த குடியேற்றத்திற்கு சம்மதிக்காமல் தொடர்ந்து அகதி முகாம்களில் வாழ்ந்து வருவதுதான் சம்பூர் மக்களின் இன்றைய போராட்டம். அதுதான் ராஜபக்ஷே அரசுக்கு மிகுந்த நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது.

அறுபது வயதான மு.நேசதுரை, பெரும் குமுறலுடன், “இனி எதுக்கையா நாங்க உயிர் வாழனும். குமர் பிள்ளயள் எல்லாம் கல்யாணம் கட்டாம இருக்கு. அவங்களுக்கு குடுக்க ஒரு காணித்துண்டு கூட இல்லை. எல்லாம் ஊரோட பொயிற்று. நான் கடல் தொழில் செய்யிறவன். இப்ப தொழிலும் இல்ல. எனக்கு நாலு பிள்ளயள்; என்ன செய்ய முடியும்? பாவியள் கொஞ்சம் கூட இரக்கம் காட்டயில்ல’’ என்றார்.

குடியேற்றத்திற்கு மக்கள் சம்மதிக்காவிட்டால் மக்களின் அகதி அந்தஸ்து பறிக்கப்படும் என்றும் நிவாரணத்தை நிறுத்துவோம் என்றும் கிழக்கு மாகாண ஆளுநரும் கிழக்கு மாகாண ராணுவத் தளபதியும் எச்சரித்துள்ளார்கள். மக்கள் அவர்களின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாது, “நாங்க போமாட்டம். செத்தாலும் பரவால்ல, எங்கட ஊருக்கு த்தான் போவம்’’ என்று உறுதிபட நிற்கிறார்கள்.

“எனக்கு இப்ப அறுபத்தஞ்சு வயதாகுது. குடியாட்டம் இல்லாத எவ்வளவோ இடம் இலங்கையில இருக்கு. ஆனாலும், அதெல்லாம் எடுக்காம சனங்கள் காலங்காலமா வாழ்ந்து வந்த ஊரில இருந்து மக்கள துரத்திற்று தொழிற்சால கட்டுவம்னு நிக்குது அரசாங்கம். எது நடந்தாலும் கேக்கிறதுக்கு ஆளில்லாத இனத்தில பிறந்த பாவத்துக்கு இதெல்லாம் அனுபவிச்சித்தான் ஆகனும். நான் சாகிரத்துக்கிடையிலயாவது கடவுள் அந்த ஊர தாறாரா என்டுதான் காத்திருக்கிறன்’’ என்றார், 65 வயதான முதியவர் ச.மு த்துக்குமார்.

இந்த முதியவரின் கேள்விக்கு யார் பதில் தருவார்கள்?.

இலங்கையிலிருந்து செய்தி, படங்கள்: தீபச்செல்வன்.

-குமுதம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.