Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ நா நிபுணர் குழுவின் அறிக்கையின் வாய்ப்பாடு கூறும் தீர்வுகள் ஏற்புடையனவல்ல என்கிறார் அகாஷி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

japan.jpg

இலங்கையில் இனங்களுக்கு இடையே நல்லுறவு நிரந்தரமாக நீடிக்க நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்படுவதோடு, அதில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என ஜப்பான் அரசு எதிர்பார்க்கின்றது.

இவ்வாறு இலங்கை வந்துள்ள ஜப்பானிய முன்னாள் சமாதானத் தூதுவர் யசூசி அகாஷி கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

அத்துடன், பொறுப்பு கூறல் தொடர்பில் உள்நாட்டு செயன்முறை தேவை. எனினும் அது சர்வதேச நியமங்களுக்கு ஏற்றதாக இருத்தல் வேண்டும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையானது தேவை கருதி மக்கள் மத்தியில் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என ஜப்பானிய அரசு எதிர்பார்க்கின்றது. அத்துடன் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முன்மொழிவுகளை இலங்கை அரசு அமுல்படுத்தும் எனவும் ஜப்பான் அரசு நம்புகின்றது.

அரசிற்கும், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெறும் பேச்சுகளில் ஒரு முடிவு ஏற்படும் என ஜப்பான் நம்புகின்றது. இதன் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பதற்காக நியமிக்கப்படவுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்ளும் என எதிர்பார்க்கின்றோம்.

வடக்கில் மேற்கொள்ளப்படும் இராணுவ மயமாக்கல், காணி அபகரிப்பு தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள் என்னிடம் தெரிவித்தனர். ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழுவின் அறிக்கையின் வாய்ப்பாடு கூறும் தீர்வுகள் ஏற்புடையனவல்ல. வேற்று நாடுகளிலிருந்து இரவலாக பெறப்பட்ட மாதிரிகளை திணிக்கலாகாது. அவசரகால சட்டமூலம் நீக்கப்பட்டமை மற்றும் மனித உரிமைகளை பாதுகாப்பிற்கும் மேம்படுத்துவதற்குமான தேசிய செயத்திட்டத்தை பாராட்டுகிறோம் என்றார்.

http://www.saritham.com/?p=42485

இப்படி அரசு அரசாக நம்பிக்கையை மட்டும் வெளிப்படுத்தினால் எப்போ இவையெல்லாம் நடப்பது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.