Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச நீதிமன்றில் 2012 இல் சிங்களம் நிற்குமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Ivorycoast-and-Mr-150x150.jpg

முன்நாள் ஐவரிக்கோஸ்ட் தலைவர் லோரன் கபாகோ இப்போது சர்வதேச நீதிமன்றில் வழக்கினை எதிர்கொண்டுவருகின்றார். இவர் தனது பத்து ஆண்டு கால ஆட்சியில் நான்கு மனித உரிமை மீறல் சம்பவங்களை செய்துள்ளதாக வழக்கு பதிவாகியுள்ளது.

தேர்தலில் மோசடி, வன்செயல்கள், பாலியல் பலாத்காரம், கொலை, ஆட்கடத்தல் என இந்த மனித உரிமை மீறல்கள் இவரது ஆட்சிக்காலத்தில் நடந்தது. இவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்காக பதிவு செய்யப்பட்டு இப்போது விசாரணை நடந்துவருகின்றது. 2009- 2011 வரை ஐவரி கோஸ்ட் போன்று உகண்டா, டிஆர் கொங்கோ, மத்திய ஆபிரிக்க குடியரசு, டாபூர், லிபியா, கென்யா, சேர்பியா என சர்வதேச நீதிமன்றில் மனித உரிமை மீறல்களிற்காக நாடுகள் விசாரணைகளில் உள்ளன.

இங்கு கேள்வி என்னவென்றால் 2012 இல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் நாடாக சிறிலங்கா இருக்குமா என்பதே. போர் முடிந்துவிட்டதாக அறிவித்து மூன்று வருடங்கள் ஆகப்போகின்றன. போர் உக்கிரமாக நடந்த மார்ச் மாதமே ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளன. இந்தக் கூட்டத்தொடரில் அரசாங்கங்கள், ஐக்கிய நாடுகள், மனித உரிமை அமைப்புக்கள், தமிழர் தரப்புக்கள் எவ்வாறு செயற்படப்போகின்றார்கள் என்பது துலங்காவிட்டாலும் ஏதாவது செய்யத்தான் போகின்றார்கள் என்ற சிறு நம்பிக்கை தமிழ் மக்களுக்கு உண்டு.

சிறிலங்கா மீது அனைத்துலக சமூகமும், ஐக்கிய நாடுகள் சபையும் நடவடிக்கை எடுக்க வேண்டுமாயின் அந்த சந்தர்ப்பம் மார்ச் மாதம் நடைபெறும் மனித உரிமை கூட்டத்த்தின் போதே தங்கியுள்ளது. இந்த சந்தர்ப்பத்தினை தவறவிட்டால் அது மனித நாகரிகத்தின் மிகபெரிய தோல்வியாக வரலாறு பதிவு செய்யும்.

சிங்கள அரசாங்கமானது தன்னை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முடுக்கிவிட்டுள்ளது. இவற்றை கீழ் வருமாறு வகுத்து நோக்கலாம்.

1. நல்லிணக்கம், மீழ் குடியமர்வு நடைபெறுகின்றது.

2. அரசியல் தீர்விற்கான பேச்சுவார்த்தை நடக்கின்றது

3. போரின் போது குற்றங்கள் நடந்திருக்கின்றனவா என்பதனை விசாரனை செய்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது ( LLRC)

4. கைது செய்யப்பட்ட போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்படுகின்றனர்.

5. நாட்டில் இப்போது அகதிகள் இல்லை, பொருளாதார வளர்ச்சி பதிவு செய்யபப்ட்டுள்ளது.

6. மனித உரிமை சாசனத்தை ஒழுங்காக நடைமுறைப்படுத்தப்போவதாக மீண்டும் கூறுவது.

மேற்குறிப்பிட்ட விடயங்களில் தனது முன்னேற்றத்தினை காண்பிக்க சிங்கள அரசாங்கம் எவற்றை செய்கின்றது?

மீழ் குடியேற்றம் முற்றாக முடிந்துவிட்டதனைக் காண்பிக்க தற்போது உள் நாட்டில் அகதிகள் இல்லை என்ற புள்ளிவிபரத்தினை காண்பிக்கின்றது. வடக்கு கிழக்கிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, வடக்கு கிழக்கில் நடக்கும் நிகழ்ச்சிகள், மக்கள் பங்கேற்பு என்பதனைக் காட்டி அங்கு நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றது என்பதனை காட்ட முயற்சிக்கின்றது. கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையினை மேற்கொள்ளல் அல்லது அது சறுக்கிப்போனால் தெரிவுக்குழு ஒன்றின் மூலம் தீர்வுகானப்போவதாக கூறலாம் அதற்காகவே பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கபப்டுள்ளது.

.

அடுத்ததாக முக்கியமாக போரின் போது போர்க்குற்றங்கள் நடந்திருக்கின்றனவா என்பதனை விசாரிக்க நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரகாரம் ஒரு போலி விசாரணை நீதிமன்றை உருவாக்குவது. இதன் மூலம் சிலருக்கு தண்டனையும் வழங்கப்படலாம்.

கைதுசெய்யப்பட்ட போராளிகள் ஒரு தொகுதியினரை கடந்த முறைபோன்று மார்ச் மாதமளவில் விடுதலை செய்வது. கூடவே அந்த விடயங்களை உறுதிப்படுத்த சில நாடுகளின் நிதி அன்பளிப்பு நடவடிக்கைகளை பெரிதாக காட்டி பிரச்சாரம் செய்யலாம். ( அவுஸ்ரேலிய தூதுவரை வைத்து படம் காட்டியது போன்று)

நாட்டில் போரை இல்லாமல் செய்ததன் மூலம் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கியூடாக தவறான புள்ளிவிபரங்களை காட்டுவது. கூடவே சுற்றுலாப்பயணிகளின் வரவையும் காட்டுவார்கள். இவ்வளவு நடைமுறைகளும் பொதுவான சிங்களத்தின் சாதாரண நிகழ்வுகளே. ஆனால் மறைமுகமாக பல்வேறு இராஜ தந்திர நகர்வுகளையும் செய்துகொண்டுதான் இருக்கின்றார்கள்.

சிறிலங்காவின் இராஜதந்திர செயற்பாடுகளுக்கு வலுவூட்டுவனவாக அண்மையில் நடந்த சில சம்பவங்கள் இருக்கலாம். அதாவது பொது நலவாய நாடுகள் மா நாட்டில் சிறிலங்காவிற்கு சாதகமாக சில விடயங்கள் நடந்ததும், அது மேற்குலகின் ஒரு தோல்வியாக இருந்ததும் மறுக்க முடியாது. அதுபோலவே 2012 ஜெனீவாவிலும் நடக்கலாம் அல்லவா?

சிறிலங்கா அரசாங்கம் தம்மை கடுமையாக பார்க்கும் நாடுகளை வளைத்துப்போட அவர்களின் விருப்பங்களை நிரைவேற்றும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. அதில் தற்போது இறுதியாக அவுஸ்ரேலியாவையும் தென்னாபிரிக்காவினையும் தன்பக்கம் இழுப்பதில் வெற்றி கண்டுள்ளது. அவுஸ்ரேலியாவிற்கு அகதிகள் வருவதனை தடுக்கவேண்டும். இதனை சிறிலங்கா அர்சாங்கம் தான் செய்து தருவதாக வாக்குறுதி அளித்துள்ளது. (ஆனால் தற்போது சென்றிருக்கும் அகதிகள் படகு இந்த வாக்குறுதிகளை யோசிக்க வைக்கும்).

தனது நெருக்கமான நாடுகளான சீனா, இரஷ்யா, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இஸ்லாமிய நாடுகளை தொடர்ந்து நன்கு கவனிக்கும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளது. இந்த விடயத்தில் இந்தியா சிலவேளை காலை வாரினால் அதற்கு சீனா என்கின்ற மருந்தை சிங்களம் முறையாக பயன்படுத்தும்.

அதே போல மேற்குலக நாடுகளை , நாடுகளின் இராஜ தந்திரிகளை திருப்திப்படுத்தும் வகையில் அவர்களுக்கு நிலம், பொருள், உட்பட்ட சகல ஏற்பாடுகளையும் செய்து கொடுக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இந்த விடயத்தில் யார் யார் விழப்போகின்றார்கள் என்பது மார்ச் மாதம் தான் தெரியும். ஆனாலும் பிரித்தானியாவின் பாதுகாப்பு செயலர் லியாம் பொக்ஸ் இற்கு ஏற்பட்ட அனுபவம் எல்லோரையும் ஒரு கணம் சிந்திக்கவும் வைக்க கூடும்.

.

அடுத்து இறுதியானதும் மிகமிக உள்நோக்கம் கொண்டதுமான நடவடிக்கையே புலம்பெயர் தமிழர்க்கு எதிரான நடவடிக்கையாகும். தமக்கு எதிரான சக்தி இப்போ மேற்குலகை விடபுலம்பெயர் மக்கள்தான் என்பதனை மஹிந்த அண்மையில் கூறி இருந்தார். புலத்து தமிழர்களின் பலத்தினை உடைக்க சிறிலங்கா அரசாங்கம் பல்வேறு நடவடிகைகளை மேற்கொண்டாலும் அவை வெற்றி பெற சாத்தியம் இல்லை. காரணம் அவர்களின் வாழ்வாதார, பொருளாதார, அரசியல் தளங்கள் சிங்களத்தின் கட்டுப்பாட்டில் இல்லை. ஆகவே இரண்டு வழிகளில்தான் புலத்து தமிழர்களை கைக்குள் கொண்டுவரலாம் என திட்டமிட்டு அதனை செய்து வருகின்றது சிங்களம்.

.

உள்நாட்டில் அவர்களின் சொத்துக்கள், உறவுகள் மீது கைவைத்து புலத்து தமிழர்களை கைக்குள் போடுதல். ( காணிப்பதிவு, ஓய்வூதியத்தை நிறுத்தல், உறவினர்களுக்கு தொல்லை கொடுத்தல்) ஆகியன.

அடுத்ததாக புலத்து தமிழர்களிற்கு விரும்பியதை செய்து அவர்களை உள்வங்குதல் ( வியாபாரங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குதல், உல்லாசப்பயண வசதி, நிதி அன்பளிப்பு,சட்ட உதவிகள்,குற்றவாளிகளைப் பாதுகாத்தல்) போன்றவை ஆகும். அடுத்ததாக புலத்து தமிழர்களின் வரவை அதிகரிப்பதும் புலத்து தமிழர்களுடன் தாம் ஒற்றுமையாக இருப்பதாகவும் காட்டுதல்.

மேற்கூறிய விடயங்களால் புலம்பெயர் தமிழர்களை உள்வாங்கலாம் எனவும், சர்வதேச சமூகத்திற்கு அதனை ஆதாரமாக காட்ட முயற்சிக்கலாம். அடுத்து முக்கியமாக போர்க்குற்ற நடவடிக்கைகளை கைவிட அல்லது மேலதிக அழுத்தங்களை அரசாங்கத்திற்கு எதிராக பிரயோகிப்பதனை தடுக்க முடியும் எனவும் சிங்களம் நம்புகின்றது. இந்த விடயத்தில் சிங்களம் தோல்வியை சந்தித்துக்கொண்டு இருந்தாலும் அதனை மீண்டும் மீண்டும் செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.

மேற்கூறப்பட்ட சூழல்களில் நாம், தமிழர்கள் என்னவகையான தந்திரோபாயத்தை கையாண்டு இவற்றை எல்லா முறியடிக்கவேண்டும். இருக்கின்ற திட்டங்கள் போதுமானவையா? அவை 2012 மார்ச் மாதம் வரையாவது தாக்குப்பிடிக்குமா? மஹிந்த அரசின் சூழ்ச்சிகளை வெல்வதும் , அதனை உடைப்பதும் ஒரு தந்திரோபாயமாக இருந்தாலும் அடுத்து ஏதாவது ஒரு சக்தியினை புதிதாக எமக்காக மாற்றும் திட்டங்கள் பற்றி யோசிக்கின்றோமா? மிக இலகுவான நாடான தென்னாபிரிக்காவை முயற்சி செய்யலாமே.

http://www.tamilthai.../newsite/?p=948

மேற்கூறப்பட்ட சூழல்களில் நாம், தமிழர்கள் என்னவகையான தந்திரோபாயத்தை கையாண்டு இவற்றை எல்லா முறியடிக்கவேண்டும். இருக்கின்ற திட்டங்கள் போதுமானவையா? அவை 2012 மார்ச் மாதம் வரையாவது தாக்குப்பிடிக்குமா? மஹிந்த அரசின் சூழ்ச்சிகளை வெல்வதும் ,

அதனை உடைப்பதும் ஒரு தந்திரோபாயமாக இருந்தாலும் அடுத்து ஏதாவது ஒரு சக்தியினை புதிதாக எமக்காக மாற்றும் திட்டங்கள் பற்றி யோசிக்கின்றோமா? மிக இலகுவான நாடான தென்னாபிரிக்காவை முயற்சி செய்யலாமே.

அவர் செய்வார் இல்லை இவர் செய்வார் என்று இருக்காமல் நாம் ஒவ்வொருவருவரும் எம்மால் என்ன செய்ய முடியும் என பார்த்து செய்யவேண்டும். செய்பவர்களுக்கு ஆதரவு தர வேண்டும். பரப்புரைகளை முன்னெடுக்கவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.