Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வெள்ளை வான் கடத்தலும் தேசமான்ய இனியபாரதியும்

Featured Replies

lk-1.jpg

2005ம் ஆண்டு நவம்பர் மாதம் நாட்டுக்கும் சர்வதேசத்திற்கும் ஆற்றிய சேவைகளை கருத்திற் கொண்டு, ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ராதிகா குமாரசுவாமிக்கு தேசமான்ய விருதினை வழங்கியிருந்தார்.

ஐக்கிய நாடுகளின் சிறுவர் மற்றும் ஆயுத முரண்பாடு தொடர்பான விசேட பிரதிநிதியாக ராதிகா குமாரசுவாமி கடமையாற்றி வருகின்றார்.

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட சிறுவர் சிறுமியரின் நலனை உறுதிப்படுத்தும் நோக்கில் ராதிகா குமாரசுவாமி நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றார்.

2011ம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இனியபாரதி எனப்படும் புஷ்ப குமார என்பவருக்கு தேசமான்ய விருது வழங்கப்பட்டது.

திருக்கோவிலில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் இந்த விருது வழங்கப்பட்டதாக சண்டே லீடர் பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.

Inayapaarathi%20005.jpg

யார் இந்த இனியபாரதி

சிறுவர் போராளிகளை ஆயுத போராட்டத்தில் பலவந்தமாக ஈடுபடுத்தியதாக இனிய பாரதிக்கு எதிராக ஐக்கிய நாடுகள் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில், அக்கரைப்பற்று, திருக்கோவில் மற்றும் விநாயகபுரம் போன்ற பிரதேசங்களில் கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் இனியபாரதிக்கு எதிராக மக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா அம்மானின் துணை இராணுவக்குழுவின் முக்கிய உறுப்பினராக இனியபாரதி திகழ்கின்றார். கருணா அம்மான் பிரதி அமைச்சராக கடமையாற்றி வருகின்றார். இனிய பாரதி ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளராக கடமையாற்றி வருகின்றார்.

Inayapaarathi%20002.jpg

Outside the TMVP office in Tirukkovil - White van with newspaper in place of number plate and Jeevendran and Inayapaarathi – Picture taken from inside our van through the windscreen - Picture by Uvindu Kurukulasuriya

2011ம் ஆண்டு மார்ச் மாதம் 26ம் திகதி உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவிடம் அம்பாறை மாவட்டத்தில் சாட்சியமளித்த 90 வீதமானவர்கள் கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்களுக்கு இனிய பாரதியே காரணம் என குற்றம் சுமத்தியுள்ளனர்.

தேர்தல் காலத்தில் வாக்காளர்களை அச்சுத்தல், கொலை அச்சுறுத்தல் விடுத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களும் இனிய பாரதிக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளது.

குற்றச் செயல் ஒன்றில் ஈடுபட்டமைக்காக, இனிய பாரதிக்கு கல்முனை நீதிமன்றம் பத்தாண்டு கால ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனையை விதித்துள்ளது.

வெள்ளை வான் கடத்தலும் இனிய பாரதியும்

Inayapaarathi%20003.jpg

TMVP Tirukkovil van has no number plate Photo by Athula Vithanage

2007ம் ஆண்டு ஜூன் மாதம் 19ம் திகதி இனிய பாரதியை சந்திக்க சந்தர்ப்பம் கிடைத்தது. சுதந்திர ஊடக அமைப்பின் சார்பில் கிழக்கிற்கு விஜயம் செய்திருந்த போது இனிய பாரதியை சந்திக்க முடிந்தது.

சர்வதேச ஊடக நிறுவகத்தின் பணிப்பாளர், முஸ்லிம் ஊடகப் பேரவை பிரதிநிதி, சர்வதேச ஊடகவியலாளர் பேரவையின் பிரதிநிதி உள்ளிட்ட பல ஊடக நண்பர்களும் இந்த விஜயத்தில் இணைந்து கொண்டிருந்தனர்.

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கும் துணை இராணுவக் குழுக்களுக்கும் இடையில் நிலவிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் ஊடகவியலாளர்கள் இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்தனர்.

Inayapaarathi%20004.jpg

TMVP child soldiers - Athula Vithanage pretends to take notes - our diver and TMVP carder and our van Photo by Uvindu Kurukulasuriya

இனிய பாரதியின் அலுவலகத்தில் ஆயுதங்கள் சிறுவர்கள் இருப்பதனை காண முடிந்தது. இலக்கத் தகடுகள் மூடப்பட்ட வெள்ளை வான் ஒன்றை அவதானிக்க முடிந்தது.

சிறுவர் போராளிகள் மற்றும் வெள்ளை வான் போன்றவற்றை புகைப்படம் எடுக்கக் கூடிய அரிய சந்தர்ப்பம் கிடைத்தது, முதல் தடவையாக இந்த புகைப்படங்கள் ஊடகங்களுக்கு வெளியிடப்படுகின்றன.

இலக்கத் தகடு அற்ற வெள்ளை வான் கிழக்கில் இடம்பெற்ற கடத்தல் சம்பவங்களை வெளிப்படுத்துகின்றன.

வெள்ளைவான் கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் நூற்றுக் கணக்கான முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள போதிலும், இதுவரையில் விசாரணை முடிவுக்குக் கொண்டுவரப்படவில்லை.

சிறுவர் போராளிகளை படையில் இணைத்தல் மற்றும் இனியபாரதி –

Inayapaarathi%20006.jpg

TMVP child soldiers - Athula Vithanage pretends to take notes - our diver and TMVP carder and our van Photo by Uvindu Kurukulasuriya

யுனிசெப் அமைப்பினால் இலங்கையில் காணாமல் போன குழந்தைகள் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இனிய பாரதி சிறுவர் போராளிகளை பயன்படுத்துவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் 64 வீதமான சிறுவர் போராளிகளை இணைத்துக் கொள்ளும் சம்பவங்களுடன் தொடர்பு இருப்பதாகவும், துணை இராணுவக் குழுக்களும் சிறுவர்களை போராளிகளைப் பயன்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போராட்டங்களின் போது அரசாங்க ஆதரவு துணை இராணுவக் குழுவினர் சிறுவர் போராளிகளைப் பயன்படுத்தியுள்ளனர்.

சிறுவர் போராளிகள் தொடர்பில் ஜனாதிபதியும் பாதுகாப்புச் செயலாளரும் அறிந்திருந்ததாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கையில் சிறுவர் கடத்தல் மற்றும் காணாமல் போதல், சிறுவர் போராளிகள் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளை மட்டுமே குற்றம் சுமத்த முடியாது.

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகளின் போது சிறுவர் போராளிகள் விவகாரம் குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமானது.

தேசமான்ய பட்டம் மற்றும் இனியபாரதி

நாட்டுக்கு உன்னத சேவையாற்றிய முக்கியஸ்தர்களுக்கு இலங்கை அரசாங்கத்தினால் தேசமான்ய பட்டம் வழங்கப்படுகின்றது.

நாட்டுக்கு சேவையாற்றுவோருக்கு வழங்கப்படும் இரண்டாவது மிக முக்கியமான விருதுகளில் ஒன்றாக தேசமான்ய பட்டம் கருதப்படுகின்றது.

பிரபல கட்டிட நிர்மாணக் கலைஞர் ஜிவரிபாவா, பாடகர் பண்டித் அமரதேவ, சிவில் உத்தியோகத்தர் பிரட்மன் வீரக்கோன், உச்ச நீதிமன்ற நீதுவான் வீ.மாணிக்கவாசகர் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களுக்கு தேசமான்ய பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

எனினும், சிறுவர் போராளிகளை பயன்படுத்திய, நபர்களை கடத்திய இனியபாரதி போன்றவர்களுக்கும் தேசமான்ய பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

http://colombotelegraph.com/2011/12/03/exclusive-photographic-evidence-of-sl-government-whitevanning-child-soldier-recruitments-and-deshamanya-iniyapaarathi/

Edited by சிறிலிங்கம்

தனது 'உயர்விருதுகளுக்கு' தானே சேறு பூசியுள்ளது சிங்களம்.

இணைப்புக்கும் மொழிபெயர்ப்புக்கும் நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.