Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பஞ்சதந்திரம் – தொடர்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சதந்திரம் தொடர் 37 – விதிப்படி உரியதை ஒருவன் அடைந்தே தீருவான்

அன்னபூர்னா ஈஸ்வரன்
 

 

ஒரு ஊரில் சாகரதத்தன் என்றாரு வியாபாரி இருந்தான். அவனுடைய மகன் ஒருசமயம் நூறு ரூபாய் கொடுத்து ஒரு புத்தகத்தை வாங்கினான். அதில் ‘’விதிப்படி உரிய பொருளை ஒருவன் அடைந்தே தீருவான்’’ என்று ஒரு வாக்கியம் காணப்பட்டது. அதை சாகரதத்தான் பார்த்துவிட்டு, ‘’மகனே, இந்தப் புத்தகத்தை என்ன விலைக்கு வாங்கினாய்?’’ என்று மகனைக் கேட்டான். ‘’நூறு ரூபாய் தந்தேன்’’ என்றான் மகன்.

‘’சீ, மடையா! இந்த ஒரு அடிச்செய்யுள் மட்டுமே உள்ள இந்தப் புத்தகத்துக்கா நூறு ரூபாய் கொடுத்தாய்? இந்தமட்டில் புத்தி இருந்தால், எப்படி நீ பணம் சம்பாதிக்கப் போகிறாய்? இன்று முதல் நீ என் வீட்டில் காலடி வைக்காதே, போ!’’ என்று சாகரதத்தன் திட்டிவிட்டு மகனை வீட்டைவிட்டுத் துரத்திவிட்டான்.

துயருற்ற மகன் வேறு தேசம் சென்றான். ஏதோ ஒரு ஊருக்கு வந்து தங்கினான். சில நாட்கள் கழிந்தபிறகு, அவனைப் பார்த்து அந்த ஊர் வாசியான யாரோ ஒருவன், ‘’எங்கிருந்து நீங்கள் வருகிறீர்கள்? உங்கள் பெயரென்ன?’’ என்று விசாரித்தான். அதைக் கேட்ட இந்த வாலிபன், ‘’விதிப்படி உரியதை ஒருவன் அடைந்தே தீருவான்’’ என்று பதிலளித்தான். வேறொருவன் கேட்ட கேள்விக்கும் இதே பதிலைத் தந்தான். யார் கேள்வி கேட்டாலும், இதே பதிலைத்தான் திரும்பத் திரும்பச் சொல்லி வந்தான். ஆகவே ‘’விதித்த பொருள்’’ என்று பெயர் பெற்றுப் பிரசித்தமடைந்தான் அவன்.

ஒருநாள் சந்திரமதி என்ற அரசகுமாரி தனது தோழியுடன் பட்டணத்தைப் பார்த்தபடியே நின்று கொண்டிருந்தாள். வாலிபத்தின் அழகுடன் அரசகுமாரி விளங்கினாள். அந்த நேரத்தில், அழகும், பொலிவும் நிறைந்த யாரோ ஒரு அரச குமாரன் அவள் கண்ணில் பட்டுவிட்டான். அவனைப் பார்த்த மாத்திரத்திலே அரசகுமாரி அவன் மேல் காதல் கொண்டாள். ‘’தோழி, எங்களிருவரையும் நீ எப்படியாவது இன்றே சேர்த்து வைக்க வேண்டும்’’ என்று தோழியிடம் கூறினாள்.

தோழி அரசகுமாரனை அணுகினாள். ‘’சந்திரமதி என்னை உன்னிடம் அனுப்பிவைத்தாள். உன்னைப் பார்த்ததிலிருந்து தான் காதலின் கடைசி கட்டத்துக்கு வந்துவிட்டிருப்பதாகவும், எனவே நீ சீக்கிரம் தன்னருகில் வரவேண்டுமென்றும், வராவிட்டால் தான் சாவது நிச்சயம் என்றும் தெரிவிக்கச் சொன்னாள்’’ என்று அரசகுமாரனிடம் தோழி சொன்னாள்.

‘’நான் அவசியம் போய்த்தீர வேண்டுமென்றால், அரண்மனையில் நுழைவதற்கு எனக்கொரு வழி சொல்!’’ என்றான் அரசகுமாரன்.

‘’இரவானவுடன் அரண்மனையின் ஒரு உப்பரிகையிலிருந்து ஒரு பலமான கயிறு தொங்கவிடப்படும். அதைப் பிடித்து ஏறி நீ வந்து விடலாம்’’ என்று தோழி பதில் சொன்னாள். ‘’அதுவே உங்கள் முடிவு என்றால் நான் அப்படியே செய்கிறேன்’’ என்றான் அரசகுமாரன். இப்படி நிச்சயம் செய்தபிறகு தோழி சந்திரமதியிடம் திரும்பிப்போனாள்.

இரவு வந்தது. அரசகுமாரன் யோசிக்கத் தலைப்பட்டான்.
குருவின் மகளையும், நண்பனின் மனைவியையும், ராஜசேவகர்களின் மனைவியரையும் சேர்கிறவன் பிரம்மஹத்தி (பிராமணனைக் கொன்ற பாவி) ஆகிறான், என்று சொல்கிறார்கள்.

கெட்டபெயரும் கொடிய கதியும் உண்டாக்குகிற செய்கையை, நன்மையளிக்காத செய்கையை, செய்யாமல் விடுவதே சரி.

ஆகவே, அரசகுமாரியிடம் போகாமலே அரசகுமாரன் இருந்துவிட்டான். ஆனால் வியாபாரியின் மகன் (‘’விதித்த பொருள்’’ என்று பெயர் பெற்றவன்) மட்டும் இரவெல்லாம் ஊர் சுற்றித் திரிந்தபடியே வந்து, ஒரு வெள்ளை மாளிகையின் அருகில் ஒரு கயிறு தொங்குவதைக் கண்டு விட்டான். ஆவலும் துணிச்சலும் உந்தித்தள்ளவே, அவன் கயிற்றைப் பிடித்துக் கொண்டு ஏறினான்.

எதிர்பார்த்த அரசகுமாரன் இவனே என்று அரசகுமாரி திடமாக நம்பினாள். உயர்வாக அவனை உபசரித்தாள், ஸ்நானம், உணவு, நீர், நல்ல உடைகள் எல்லாம் தந்து மரியாதை செய்தாள். அவனோடு சென்று படுக்கையில் படுத்துக்கொண்டாள். அவனுடைய அங்க ஸ்பரிசத்தால் அவள் உடலெல்லாம் புளகித்து, சந்தோஷமடைந்தவளாய், ‘’உங்களைக் கண்ட மாத்திரத்திலே காதல் கொண்டு என்னை உங்களுக்கு அர்ப்பணித்துவிட்டேன். வேறொரு கணவனை மனத்தாலும் ஏற்க மாட்டேன். இதை அறிந்தும் ஏன் ஒன்றும் பேசாமல் இருக்கிறீர்கள்?’’ என்று கேட்டாள்.

அதற்கு அவன் ‘’விதிப்படி உரிய பொருளை ஒருவன் அடைந்தே தீருவான்’’ என்று பதிலளித்தான்.

இந்தச் சொற்களைக் கேட்டதும் அரசகுமாரியின் இதயம் ஸ்தம்பித்துவிட்டது. சீக்கிரம் சீக்கிரமாகக் கயிற்றின் வழியே அவனை வெளியேற்றி வைத்தாள். ஆதலால் அவன் ஒரு பாழடைந்த கோவிலை அடைந்து தூங்கினான். யாரோ ஒரு விபச்சாரியோடு சேரத் தீர்மானித்த ஒரு ராஜசேவகன் அங்கு வந்து அவன் தூங்குவதைக் கண்டான். தன் ரகசியத்தை மூடிமறைக்க விரும்பிய ராஜசேவகன், ‘’நீ யார்?’’ என்று வியாபாரியின் மகனைக் கேட்டான்.

அதற்கு அவன் ‘’விதிப்படி உரிய பொருளை ஒருவன் அடைந்தே தீருவான்’’ என்று சொன்னான்.
இதைக்கேட்ட ராஜசேவகன், ‘’இந்தக் கோயிலில் யாரும் இல்லை. எனவே, நீ போய் என் படுக்கையில் படுத்துத் தூங்கு!’’ என்று சொன்னான். அதற்கு ஒப்புக்கொண்டு வியாபாரியின் மகன்போய் வேறொரு படுக்கையில் தவறுதலாகப் படுத்துவிட்டான். அந்தப் படுக்கை ராஜசேவகனின் மூத்த மகளாகிய அவினயவதி என்பவளுடையது. அவள் வாலிபமும் அழகும் உள்ளவள். யாரோ ஒருவன்மீது அவள் காதல் கொண்டு அடையாளம் சொல்லிவிட்டு வந்து அவனை எதிர்பார்த்தபடியே அந்தப் படுக்கையில் அவள் படுத்திருந்தாள். வியாபாரியின் மகன் வருவதை அவள் பார்த்துவிட்டு ‘என் காதலனே இவன்’ என்று எண்ணிவிட்டாள். அது மையிருட்டு, எனவே தவறு நடந்துவிட்டது. அவள் எழுந்து சென்று காந்தர்வ முறைப்படி அவனை மணந்துகொண்டு, அவனோடு படுக்கையில் படுத்துக்கொண்டாள். அவளது தாமரைக் கண்களும் வதனமும் மலர்ச்சியுற்றன. ‘’பேசாமலே இருக்கிறீர்களே, இப்போதாவது நீங்கள் பேசக்கூடாதா?’’ என்று அவள் கேட்டாள்.

அதற்கு அவன், ‘’விதிப்படி உரிய பொருளை ஒருவன் அடைந்தே தீருவான்’’ என்று பதில் சொன்னான்.

இந்தச் சொற்களைக் கேட்டதும் அவள் யோசித்தாள். ‘’கவனமின்றிக் காரியம் செய்தால் இப்படித்தான் பலன் கிடைக்கும்’ என்று நினைத்தவளாய், துயரத்தோடு அவனைத் திட்டி வெளியனுப்பி விட்டாள்.

வியாபாரியின் மகன் கடைத்தெரு வழியே நடந்தான். அந்த நேரத்தில், அந்தத் தெரு வழியே, வேறு ஊரைச்சேர்ந்த வரகீர்த்தி என்ற ஒரு மணமகன் பலத்த வாத்திய கோஷங்களுடன் வந்து கொண்டிருந்தான். அந்த ஊர்வலத்தில் வியாபாரியின் மகனும் கலந்து கொண்டான். கல்யாண முகூர்த்தவேளை நெருங்கிவிட்டதால் வணிகனின் மகளான மணமகள் ராஜவீதியினருகே தன் தகப்பனார் வீட்டு வாசலிலே நின்று கொண்டிருந்தாள். வாசலில் அலங்கரித்திருந்த உயர்ந்த மண்டபத்தில் அவள் மணக்கோலத்தில் உடையுடுத்தித் தன்னை அலங்கரித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தாள்.

அந்தச் சமயத்தில் மதயானை ஒன்று அந்த இடத்துக்கு வந்துவிட்டது. அது பாகனைக் கொன்றுவிட்டு யார் கட்டுக்கும் அடங்காமல் அங்கு வந்து சேர்ந்தது. ஜனங்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. அறிவைக் கிலி பறக்கடித்துவிட்டது. மணமகனின் ஊர்வலக் கோஷ்டி யானையைக் கண்டது. மணமகன் உள்ளிட்டு எல்லோரும் திசைக்கோடிகளை நோக்கி ஓட்டம் பிடித்தனர்.

இந்த நெருக்கடியான சமயத்தில் மணமகளை வியாபாரியின் மகன் பார்த்துவிட்டான். அவள் தனியே நின்றிருந்தாள். பயத்தால் அவளுடைய கண்கள் துடித்துக்கொண்டிருந்தன. ‘’நீ பயப்படாதே! உன்னை நான் காப்பாற்றுகிறேன்!’’ என்று அவன் அவளைத் தேற்றி, அவளுடைய வலது கையைப் பற்றியபடியே மிகுந்த துணிவுடன் யானையைக் கடுமையாகத் திட்டி அதட்டினான். விதியின் செயல் அப்படி, நிஜமாகவே யானை திரும்பிப் போய்விட்டது.

முகூர்த்த வேளை கடந்தபிறகு மணமகனும் அவனுடைய நண்பர்களும் உறவினர்கள் அங்கு திரும்பி வந்தனர். வேறொருவனுடைய கையை மணப்பெண் பிடித்துக்கொண்டிருப்பதை மணமகன் பார்த்துவிட்டான். ‘’மாமா, நீ செய்தது தவறு. எனக்குக் கொடுக்க வேண்டிய பெண்ணை வேறொருவனுக்குக் கொடுத்து விட்டிருக்கிறாய்’’ என்று மணமகன் சொன்னான். அதற்கு அவன் மாமனார், ‘’பெரியோர்களே! நானும் யானைக்குப் பயந்து ஓடிப்போய், உங்களோடு கூடவே திரும்பி வந்திருக்கிறேன். என்னை நடந்தது என்று எனக்கும் தெரியாது’’ என்று சொன்னார். பிறகு தன் பெண்ணைப் பார்த்து, ‘’குழந்தாய், நீ செய்தது அழகல்ல. இதற்கெல்லாம் என்ன அர்த்தம்?’’ என்று கேட்டார்.

‘’பெரிய விபத்திலிருந்து என்னைக் காப்பாற்றியவர் இவர்தான். எனவே இந்த ஜன்மத்தில் இவரைத்தவிர வேறு யாரும் என்னை மணக்கக்கூடாது’’ என்றாள் அவள்.

இந்தச் செய்தி ஊரெங்கும் பரவுவதற்கும் பொழுது விடிவதற்கும் சரியாயிருந்தது. காலையில் பெரிய ஜனத்திரள் திரண்டுவிட்டது. அந்தச் செய்தியைக் கேட்ட அரசகுமாரி அங்கு வந்தாள். வாய் மூலமாகப் பரவிய வதந்தியைக் கேட்டு ராஜசேவகனின் மகளும் அந்த இடத்துக்கு வந்தாள். ஜனங்கள் திரண்டு நிற்பதைக் கேள்வியுற்ற அரசனும் அங்கு நேரில் விஜயம் செய்தான். வியாபாரியின் மகனைப் பார்த்து, ‘’பயமில்லாமல் சொல். என்ன நடந்தது?’’ என்று அரசன் கேட்டான்.

அதற்கு வியாபாரியின் மகன், ‘’விதிப்படி உரிய பொருளை ஒருவன் அடைந்தே தீருவான்’’ என்று பதில் தெரிவித்தான்.

இந்தச் சொற்கள் தன் ஞாபகத்துக்கு வரவே அரசகுமாரி, ‘’தேவர்களாலும் அதைத் தடுக்க முடியாது’’ என்று சொன்னாள்.

பிறகு ராஜசேவகனின் மகள், ‘’அதைக் கண்டு நான் வியப்படையவுமில்லை, வருந்தவுமில்லை’’ என்று கூறினாள்.

இவை யாவற்றையும் கேட்ட வியாபாரியின் மகள் (மணமகள்), ‘’எனக்குரிய பொருளை வேறொருவன் எடுத்துச் செல்ல முடியாது’’ என்று கூறினாள்.

அவர்கள் எல்லோருக்கும் அரசன் அபயம் அளித்து, ஒவ்வொருவரையும் தனியே விசாரித்து விவரமறிந்துகொண்டான். விஷயம் தெரிந்தவுடனே அரசன் தன் மகளை மரியாதைகளுடன் அவனுக்கு மணமுடித்தான். ஆயிரம் கிராமங்களையும் தந்தான். தனக்குப் பிள்ளை இல்லாத காரணத்தால் அவளையே யுவராஜாவாக அபிஷேகம் செய்வித்தான். வியாபாரியின் மகன் குடும்ப சகிதமாகப் பல சுகபோகங்களோடு வாழ்ந்து வந்தான்.

அதனால்தான் ‘விதிப்படி உரிய பொருளை ஒருவன் அடைந்தே தீருவான்…’ என்றெல்லாம் சொன்னேன்’’ என்றது ஹிரண்யன். மேலும் ஹிரண்யன் தொடர்ந்து பேசியது: ‘’இவ்வாறு யோசித்துபிறகு, பணத்தின்மேல் நான் கொண்ட மோகத்தை விட்டொழித்தேன்.

பார்ப்பது ஞானமே தவிர, கண்களல்ல. நற்குடியைக் குறிப்பது குணமே தவிர, பிறப்பு அல்ல. மனத்திருப்திதான் உண்மைச் செல்வமே தவிர, பணம் அல்ல. தீய செயல்களிலிருந்து விலகுவதே உண்மை அறிவாகும்.

மகிழ்ச்சி நிறைந்த மனத்தையுடையவன்தான் சகல செல்வங்களும் உடையவன். தோல் செருப்பு அணிந்த கால்களை உடையவனுக்குப் பூமி பூராவும் தோல் போர்த்திக் கொண்டிருப்பதுபோலத் தெரியும்.

பேராசை என்ற வாகனத்தில் சவாரி செய்பவனுக்கு நூறு யோசனைகள்கூட ஒரு தூரமாகத் தெரிவதில்லை. திருப்தி நிறைந்த மனம் படைத்தவன் கைக்குப் பணம் வந்தாலும் அதை அவன் பற்றிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.

மனிதனைத் துணிவுறச் செய்யும் பேராசைத் தேவியே, உன்னை வணங்குகிறோம்! மூவுலகிற்கும் தலைவனான மகாவிஷ்ணுவையே நீ வாமனனாகச் செய்துவிட்டாய் அல்லவா?

அவமானத்தின் மனைவியாகிய பேராசையே! உன்னால் ஆகாதது ஒன்றுமில்லை. கருணையுள்ளம் படைத்தவனாயிருந்தும் ஒருவன் பேராசை கொண்டானேயானால் அவனையும் அவமானத்துக்குள்ளாக்குகிறாய் நீ!

சகிக்க முடியாததையெல்லாம் சகித்துக் கொண்டேன். விரும்பாததையெல்லாம் பேசினேன். பிறர் வீட்டு வாயிற்படி ஏறிக் காத்துக் கிடந்தேன். பேராசையே! உனக்கு திருப்திதானே?

நாற்றமடிக்கும் நீரைக் குடித்தேன். ஒடிந்த முற்களின் குவியல்மேல் படுத்து உறங்கினேன். மனைவியின் பிரிவைச் சகித்துக்கொண்டேன். பிழைப்பைக் கருதி பிறரிடம் இரந்தேன். காலால் வழி நடந்தேன். கடலையும் கடந்து சென்றேன். உடைந்த ஜாடியையும் பொக்கிஷமாகப் பாதுகாத்தேன். பேராசை என்னும் பாவியே! இன்னும் வேறு ஏதாவது செய்ய வேண்டி இருக்கிறதா? இருந்தால் உடனே கட்டளை இடு!

காரணத்தையும் சொல்லி, அத்தாட்சியையும் காட்டிப் பேசினாலும் ஏழையின் சொல் அம்பலம் ஏறுவதில்லை. தோஷம் நிறைந்த, உருட்டல் மிரட்டலோடு கூடிய கொடிய சொற்களைப் பணக்காரன் பிதற்றினாலும் அவை ஏற்கப்படுகின்றன.

பணக்காரன் கீழ்க்குடியில் பிறந்தவனாக இருந்தாலும் உலகம் அவனுக்கு மரியாதை செய்கிறது. துல்லியமான சந்திரன்போல் ஒளிர்கின்ற உயர்குடியில் ஏழை பிறந்திருந்தாலும் அவனை உலகம் இகழ்கிறது.

ஒருவன் கிழடுதட்டி இருந்தாலும் அவனிடம் பணம் மட்டும் இருந்தால்போதும். அவன் வாலிபன் ஆகிவிடுகிறான். பணமில்லாதவன் உண்மையிலே வாலிபனாக இருந்தபோதிலும் அவன் கிழவனாகிவிடுகிறான்.

பணம் போய்விட்டால் அண்ணன், தம்பி, மனைவி மக்கள், நண்பர்கள் எல்லோரும் போய்விடுகின்றனர். பணம் வந்து சேர்ந்தால் அவர்களும் வந்து சேருகிறார்கள். உலகில் மனிதனுக்கு நட்பும் சுற்றமும் பணம் ஒன்றுதான்.

இப்படிப்பட்ட சிந்தனைகளிலே நான் மூழ்கி என் ஜாகைக்குப் போயிருந்த தருணத்தில் நம் நண்பன் லகுபதனகன் என்னிடம் வந்தான். இங்கே போய்விடலாம் என்று என்னிடம் தெரிவித்தான். எனவே நான் அங்கு வந்துவிடடேன். உன்னைக் கண்டு போகலாம் என்றுதான் அவனோடு வந்தேன். என் மனோவிரக்திக்குக் காரணத்தைச் சொல்லிவிட்டேன்.

மான், பாம்பு, யானை, தேவர்கள், அசுரர்கள், மனிதன், ஏன் மூவுலகமுமே நடுப்பகல் கழிவதற்கு முன்பு சாப்பாட்டை முடித்துக் கொள்கின்றன.

உரிய வேளையும், நல்ல பசியும் வந்துவிட்டால், உலகை வெல்லும் வீரனுக்கும் சரி கஷ்ட தசையிலிருப்பவனுக்கும் சரி ஒரு பிடி சோறு இருந்தால் போதும்.

இந்த ஒரு பிடி சோற்றுக்காக யார்தான் மோசமான நிலையிலிருந்து மேலும் படுமோசமான நிலைக்குக் கொண்டுவந்து சேர்க்கிற தீச்செய்கைகளைச் செய்வார்கள்?

என்று முடித்தது ஹிரண்யன்

இந்தச் சொற்களைக் கேட்ட மந்தரகன் ஹரண்யனைத் தேற்றத் தொடங்கியது. ‘’நண்பனே, நீ உன் நாட்டைவிட்டு வந்துவிட்டாய் என்பதற்காக அதைரியப்படக்கூடாது. நீ புத்திசாலியாக இருந்ததும் காரணமின்றி கவலைப் படுவானேன்?

இந்தச் சொற்களைக் கேட்ட மந்தரகன் ஹரண்யனைத் தேற்றத் தொடங்கியது. ‘’நண்பனே, நீ உன் நாட்டைவிட்டு வந்துவிட்டாய் என்பதற்காக அதைரியப்படக்கூடாது. நீ புத்திசாலியாக இருந்ததும் காரணமின்றி கவலைப் படுவானேன்?

அறநூல்களைப் படித்தவன்கூட முட்டாளாக இருக்கிறான். யார் செய்கை செய்கிறானோ அவனே அறிவாளி. நல்ல மருந்தை நினைத்துக் கொண்டால் மட்டும் போதுமா, நோயாளியின் நோய் குணமாகி விடுமா?

தைரியமிக்க அறிவாளிக்குச் சொந்த நாடு அன்னியநாடு என்று ஏதாவது உண்டா? எந்த நாட்டுக்குச் செல்கிறானோ அந்த நாட்டைத்தன் புஜபலத்தால் தனதாக்கிக் கொள்கிறான். சிங்கம் தனது பல், நகம், வால் பலத்தின் உபயோகத்தால் காடுபூராவிலும் ஆட்சி செலுத்துகிறது. உணவுக்காகக் காட்டில் யானையைக் கொல்கிறது. யானையின் ரத்தத்தைக் கொண்டு சிங்கம் தன் வேலையாட்களின் தாகத்தைத் தணிக்கிறது.

எனவே நீ எப்பொழுதும் முயற்சியுடையவனாக இருக்க வேண்டும். பணமும் சுகமும் எங்கு வந்து தங்கும் என்று எண்ணுகிறாய்?

தவளைகள் நீர் குடிக்கும் இடத்துக்கு வந்து சேர்வது போல், பறவைகள் நீர் நிறைந்த குளத்தை வந்தடைவதுபோல், நட்பும் பணமும் இடைவிடாத முயற்சியுள்ளவனிடம் வந்து சேர்கின்றன.

இன்னொரு விதமாகவும் அதைச் சொல்லலாம்:

தைரியம், திட நட்பு, நன்றியறிதல், அறவழிகளைப் பற்றி நிற்கும் ஒருவன், கஷ்ட காலத்திலும் துயரப்படாமல் உற்சாகத்தோடு ஒரு திடமான வாழ்க்கை நடத்தி வந்தால் சீதேவி தானாகவே அவன் விட்டைத் தேடி அடைகிறாள்.

கருமியாகவும், மூடனாகவும், சபல புத்தியுள்ளவனாகவும் இல்லாமல் திடச்சித்தமும், அறிவும், வீரமும், கவலையற்ற மனமும் உள்ள மனிதனை சீதேவி அடையாவிட்டால் சீதேவி தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்கிறாள்
.
முயற்சியில்லாதவன், சோம்பேறி, திடச்சித்தமற்றவன், வெளிப் படையாகப் பேசாதவன் இவர்களைச் சீதேவி முத்தமிட விரும்புவதில்லை, கிழபுருஷனைக் குமரி முத்தமிட விரும்பாதது போல்!

செயலிலிறங்கப் பயப்படுகிறவனுக்கு ஆழ்ந்த கல்வி ஞானமும் பிரயோஜனமளிப்பதில்லை. தொலைந்துவிட்ட பொருளைத் தேடுவதற்குக் கையில் விளக்கு இருந்த போதிலும் கண் குருடாக இருந்தால் என்ன பிரயோஜனம்?

விதிச்சக்கரம் சுழன்று வரும்போது கொடையாளி பிச்சைக்காரனாகி விடுகிறான். கொலையாளியைப் பலவீனன் கொல்கிறான், பிச்சைக்காரர்கள் பிச்சையெடுப்பதில்லை அல்லவா?

பல்லும், நகமும், மனிதனும், ரோமமும் வேண்டாத இடத்தில் இடம்பெற்றால் சோபிக்கிறதில்லை என்ற பழமொழியை நீ கேட்டுவிட்டு, பிறந்த ஊரைவிட்டு வெளியேறக்கூடாது என்ற முடிவுக்கு வந்துவிடக்கூடாது. ஆற்றலுள்ளவனுக்குச் சொந்த நாடு, அன்னிய நாடு என்ற வித்தியாசம் கிடையாது.

வீரனும், அறிவாளியும், அழகிய பெண்ணும் செல்கிற இடமெல்லாம் சொந்த வீட்டிலிருப்பதேபோல் சகஜமாகவும் சிறப்பாகவும் நடத்தப்படுகிறார்கள்.

விவேகமுள்ள வீரன் எப்போதும் பணத்தின்மேல் ஆதிக்கம் செலுத்துகிறான். பிருகஸ்பதிபோல் ஒருவனுக்கு அறிவு இருந்தாலும் செயலில் துணிவு இல்லாதவனுக்கு அது சாத்தியமில்லை.

தற்சமயம் உன்னிடம் பணம் ஒன்றும் இல்லைதான். இருந்தபோதிலும் உன்னிடம் அறிவும் ஆர்வமும் நிறைய இருக்கின்றன. எனவே நீ ஒரு சாமானிய மனிதன் போலில்லை. ஒரு பழமொழி சொல்வது போல்:

ஏழையாக இருந்தபோதிலும் செயலில் திடச்சித்தமுள்ளவன் உன்னதமான மதிப்பைப் பெறுகிறான். பணம் நிறைய இருந்தபோதிலும் சிறுமதி படைத்தவர்கள் தாழ்வு அடைகின்றனர். இயல்பாகவே மாட்சிமையுள்ள சிங்கம் நற்செய்கைகளைச் செய்வதால்தான் செல்வம் சேர்க்கிறது. தங்கத்தால் செய்த கழுத்துப்பட்டை அணிந்திருந்தாலும் நாய் அந்தச் சிங்கத்துக்கு ஈடாகுமா?

உற்சாகம், முயற்சி, தைரியம் உள்ள பலசாலிக்குச் சமுத்திரம் ஒரு சிறு குட்டைபோல, இமயமலையே ஒரு எறும்புப் புற்றுபோல! சீதேவி அவனைத்தான் வந்தடைகிறானே தவிர கோழைகளை அணுகுவதில்லை.

முயற்சியுடையவனுக்கு மேருமலையும் ஒரு உயரமில்லை, பாதாளமும் ஒரு பள்ளமில்லை, சமுத்திரமும் கரையற்றதில்லை.

பணமிருக்கிறது என்று ஏன் கர்வப்படுகிறாய்? பணம் இல்லை என்று ஏன் கவலைப்படுகிறாய்? அடிக்கப்பட்ட பந்துபோல் அதிர்ஷடம் எழும், விழும்.

எனவே, வாலிபமும், செல்வமும், நீர்க்குமிழிபோல் நிலையற்றவை.

ஒரு பழமொழி கூறுவதுபோல்.

மேகத்தின் நிழலும், துஷ்டனின் நட்பும் புதிய தானியமும், பெண்ணும், வாலிபமும், செல்வமும் சிறிது காலத்துக்குத்தான் இன்பமளிக்கின்றன.
எனவே இந்த நிலையற்ற செல்வத்தை அறிவாளிகள் அடைந்தால் அதைத் தானம் செய்வதிலும் அனுபவிப்பதிலும் பலன் காண வேண்டும்.

ஒரு பழமொழி கூறுவதுபோல்,

நூறுவித முயற்சிகள் செய்து, உயிரைவிட மேலாக மதித்து, மனிதன் சம்பாதிக்கிற பணத்துக்கு ஒரே கதிதான் உண்டு. ஒன்று, தானமாக தருவது; அல்லது, அது நாசமடைவது. பணத்தை தானம் செய்ய வேண்டும். அல்லது அனுபவிக்க வேண்டும். அப்படிச் செய்யாதவனிடம் பணம் தங்கி இருப்பது, பிறருக்கு வாழ்க்கைப்படவேண்டிய பெண்மணி வீட்டில் அடைபட்டிருப்பது போலத்தான்.

ஒரு கஞ்சன் கஷ்டப்பட்டுச் சேர்க்கிற பணம் எல்லாம் பிறர் அனுபவிப்பதற்குத் தான். தேனீக்கள் கஷ்டப்பட்டுத் தேன் திரட்டுகின்றன என்றாலும், அதை வேறு யாராவது குடிக்கிறார்கள் அல்லவா?

இவையெல்லாம் விதிப்படிதான் நடக்கும். ஒரு பழமொழி கூறுகூதுபோல,

ஆயுதங்கொண்டு நடக்கிற சண்டையாகட்டும், வீடாகட்டும், எரிகின்ற நெருப்பு ஆகட்டும், மலைக்குகை சமுத்திரம் ஆகட்டும், படமெடுத்துச் சீறும் பாம்பு ஆகட்டும், எங்கு நீ இருந்தாலும் சரி. விதிப்படி நடக்கவேண்டியது நடந்து தீரும், நடக்கக்கூடாதது நடக்காது.

நீ ஆரோக்யமாக இருக்கிறாய். மனச் சாந்தியும் பெற்றிருக்கிறாய். அவையே சிறந்த செல்வம். ஒரு பழமொழி கூறுவதுபோல்,

ஏழு கண்டங்களுக்கு அதிபதியானாலும் பேராசை யாரைக் கவ்வுகிறதோ அவன் தரித்திரன்தான் என்று தெரிந்துகொள். திருப்தியோடு இருப்பவனே செல்வந்தன்.

தானத்துக்குச் சமமான செல்வம் வேறில்லை. திருப்திக்கு ஒப்பான தனமும் வேறுண்டா? குணத்துக்கு ஈடான நகை வேறு ஒன்று உண்டா? ஆரோக்யத்துக்கு ஒப்பான செல்வமும் வேறுண்டா?

இன்னொன்று, ‘’சொத்தெல்லாம் இழந்துவிட்டேனே, இனி எப்படிப் பிழைப்பது?’’ என்று எண்ணாதே. ஏனென்றால், பணம் போய்க் கொண்டேயிருக்கும். குணம் ஒன்றே தங்கும், நிற்கும்.

ஒரு பழமொழி கூறுவதுபோல்,

குணசாலி வீழ்ச்சியடைந்தாலும் தரையைத் தொட்ட பந்துபோல் மீண்டும் எழுந்துவிடுவான். கோழை வீழ்ச்சியடைந்தால் மண்கட்டி விழுந்து தரையோடு ஒட்டிக்கொள்வதுபோல் கிடப்பான்.

அதிகம் பேசுவானேன்? கடமையின் தத்துவத்தைக் கேள். இந்த உலகத்தில் ஒரு சிலர் பணத்தை அனுபவிப்பதற்கும், ஒரு சிலர் அதைப் பத்திரப் படுத்துவதற்கும் இருக்கிறார்கள். இதற்குப் பொருத்தமான கதை யொன்று இருக்கிறது.

சோமிலகன் என்ற மூடன் காட்டை அடைந்த கதை போல், பாக்கியமில்லாதவன் பணத்தைச் சேர்த்து வைத்திருந்தபோதிலும் அதை அனுபவிப்பதில்லை.

என்றது மந்தரகன் (ஆமை). ‘’அது எப்படி?’’ என்று ஹிரண்யன் கேட்டது.

ஆமை சொல்லத் தொடங்கியது:

http://puthu.thinnai.com/?p=9981

  • Replies 72
  • Views 19.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சதந்திரம் தொடர் 38 – சோமிலகன் என்ற நெசவாளி
அன்னபூர்னா ஈஸ்வரன்


ஒரு நகரத்தில் ஒரு நெசவாளி இருந்தான். அவன் பெயர் சோமிலகன். விதவிதமான வர்ணங்களிலே அரசர்களுக்கேற்ற அரிய அழகிய ஆடைகளையே அவன் எப்போதும் நெய்து கொண்டிருந்தான். எவ்வளவோ பாடுபட்டுப் பார்த்தபோதிலும், உணவுக்கும் துணிக்கும் வேண்டியதற்கு மேலாக அவனால் பணம் சம்பாதிக்க முடியவில்லை. மோட்டா ரகத் துணிகளை நெய்த இதர நெசவாளிகள் பணத்தில் புரளுவதையும் அவன் கண்டான். தன் மனைவியிடம், ‘’அன்பே அவர்களைப் பார்! அவர்கள் மோட்டா ரகத் துணிதான் நெய்கிறார்கள். என்றாலும் பணத்தைக் குவித்தவாறு இருக்கிறார்கள். இந்த ஊர் எனக்கு லாயக்கு இல்லை. நான் வேறெங்காவது போகப் போகிறேன்’’ என்று சொன்னான் அவன்.

‘’நாதா, வெளியூருக்குப் பிரயாணம் செய்தால் பணம் கிடைக்கும் என்று சொல்வது தவறு, ஒரு பழமொழி கூறுவதுபோல்,

விதி இல்லாமல் ஒன்றும் நடக்காது. விதி இருந்தால் மனித முயற்சி இல்லாமலே ஒன்று நடந்தேறும். விதி இல்லையானால், கைக்கு எட்டினதும் வாய்க்கு எட்டாது போகும்.

ஆயிரம் மாடுகளின் மத்தியிலிருந்தாலும், தாய்ப்பசுவைக் கன்றுக் குட்டி கண்டுபிடித்துவிடுகிறது. அதுபோலவே, முற்பிறப்பின் வினைப் பயனும் ஒருவனைப் பின்தொடர்கிறது.

நிழலும், வெய்யிலும் ஒன்றோடொன்று இணைந்துள்ளன. அது போலவே, செய்கையும் செய்வோனும் பிணைக்கப்பட்டுள்ளனர்.

எனவே, நீங்கள் இங்கேயே இருந்து காரியத்தைப் பாருங்கள் என்றாள் அவன் மனைவி.

‘’நீ சொல்வது தவறு. முயற்சி இல்லாமல் பயன் எதுவும் கிட்டாது. ஒரு பழமொழி கூறுவதுபோல்,

ஒரு கையால், தட்டி ஓசையுண்டாக்க முடியாததல்லவா? அதே போல், முயற்சியில்லாமல் காரியத்தின் பயனைப் பற்றிச் சிந்திக்கவும் முடியாது.

சாப்பிடும் வேளையில் விதிவசமாகச் சோறு கிடைத்தாலும் கையின் முயற்சியில்லாமல் ஒருபோதும் அந்தச் சோறு வாய்க்கு எட்டாது.

முயற்சியாலேயே செய்கைகள் பயன்பெறுகின்றன. மனோ ராஜ்யத்தால் அல்ல. சிங்கம் தூங்கிக்கொண்டிருந்தால், மிருகங்கள் தாமாக வந்து அதன் வாயில் விழுகின்றனவா? இல்லை!

முடிந்த அளவுக்கு ஒருவன் முயற்சி செய்து பார்த்தும் காரியம் பலிக்காவிட்டால் அவனைக் குறை சொல்வதில் பயனில்லை. விதிதான் அவன் முயற்சியில் குறுக்கிட்டுத் தடுத்தது.

ஆகவே, நான் கட்டாயம் வேறு தேசம் போகவேண்டும்’’ என்றான் நெசவாளி. வர்த்தமானபுரம் என்ற ஊருக்குச் சென்றான். அங்கே மூன்று ஆண்டுகள் தங்கினான். முன்னூறு பொற்காசுகளைச் சேர்த்தான். பிறகு தன் வீட்டுக்குத் திரும்பி வரலானான்.

பாதி வழியே ஒரு காட்டில் செல்ல வேண்டியதாயிற்று. காட்டில் நடக்கிறபோது சூரியன் அஸ்தமித்துவிட்டது. உயிருக்குப் பயந்தவனாய் அவன் ஒரு ஆலமரக்கிளையில் ஏறிப் படுத்துத் தூங்கினான். நடுராத்தியில் தூக்கத்தில் அவன் கனவு கண்டான். கனவில் இரண்டுபேர், கோபத்தால் கண்கள் சிவக்க ஒருவரையொருவர் ஏசிக் கொண்டிருந்ததைக் கண்டான்.

அதில் ஒருவன், ‘’ஏ செய்வோனே, இந்தச் சோமிலகன் உணவுக்கும் துணிக்கும் மேலாக எதையும் சம்பாதிக்க முடியாதபடி நீதான் பல வழிகளில் தடுத்திருக்கிறாய். ஆகவே நீ அவனுக்கு எதையும் கொடுக்கக்கூடாது. அப்படியிருக்க, ஏன் அவனுக்கு முன்னூறு பொற்காசுகளைத் தந்தாய்?’’ எனறான்.

மற்றவன், ‘’ஏ செய்கையே, முயற்சிக்கிறவர்களுக்கு நான் கட்டாயம் முயற்சிக்குத் தகுந்த பலனளித்துத் தீரவேண்டியிருக்கிறது. அதன் முடிவு உன்னைப் பொறுத்தது. அதை அவனிடமிருந்து நீதான் பறிக்க வேண்டும்’’ என்று பதில் சொன்னான். இதைக் கேட்டதும், நெசவாளி விழித்தெழுந்து பார்த்தான். பணப்பை காலியாயிருந்தது. ‘’ஐயோ, எத்தனைக் கஷ்டப்பட்டுச் சேர்த்த பணம் அது. ஒரே நொடியில் மறைந்து விட்டதே! என் முயற்சியெல்லாம் வீணாயிற்றே! பணமில்லாமல் எப்படி என் மனைவியின் முகத்திலும் நண்பர்கள் முகத்திலும் விழிப்பேன்?’’ என்று யோசித்தான். மறுபடியும் வர்த்தமானபுரத்துக்குப் போவதென்று தீர்மானித்தான். அங்கு போய், ஒரு வருஷத்திற்குள் ஐந்நூறு பொற்காசுகளைச் சம்பாதித்தான். திரும்பவும் வீட்டுக்குப்போகக் கிளம்பினான். வேறு வழியாகவும் நடந்தான்.

சூரியன் அஸ்தமித்தவுடன் அவன் மீண்டும் பழைய ஆலமரத்தடிக்கு வந்து சேர்ந்தான். ‘’ஐயையோ, விதி எப்படியெல்லாம் ஆட்டி வைக்கிறது என்னை! ஆலமர ரூபத்திலுள்ள அதே அரக்கனிடம் வந்து விட்டேனே!’’ என்று நினைத்தான். இப்படி எண்ணியபடியே மரக்கிளையில் தூங்கிப் போனான். கனவில் மறுபடியும் அந்த இரண்டு பேரையும் கண்டான். அவ்விருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். ஒருவன், ‘’ஏ செய்வோனே, சோமிலகனுக்கு நீ ஏன் ஐந்நூறு பொற்காசுகள் கொடுத்தாய்? சாப்பாடு, துணி தவிர மேற்கொண்டு அவனுக்கு ஒன்றும் கிடையாதென்று உனக்குத் தெரியாதா?’’ என்று சொன்னான்.

அதற்கு மற்றவன், ‘’ஏ செய்கையே, முயற்சி செய்கிறவனுக்கு நான் கொடுதுதுத் தீரவேண்டியிருக்கிறது. அதன் முடிவு உன் பொறுப்பு என்னை ஏன் ஏசுகிறாய்?’’ என்று பதிலளித்தான்.

இதைக் கேட்டதும் சோமிலகன் பையைப் பார்த்தான். பை காலியாக இருந்தது. அவனுக்கு விரக்தி ஏற்பட்டது. ‘’ஐயோ, பணமில்லாமல் நான் வாழ்ந்து என்ன பிரயோஜனம்? இந்த ஆலமரத்திலேயே தூக்குப்போட்டுக் கொண்டு உயிர் விடுகிறேன்’’ என்று யோசித்தான்.

அப்படியே அவன் தீர்மானித்து, தர்ப்பைப் புல்லெடுத்து கயிறு செய்து கழுத்தில் சுற்றிக்கொண்டு ஒரு கிளைமேல் ஏறினான். அதில் கயிற்றின் ஒரு நுனியைக் கட்டினான். பிறகு அவன் கீழே குதிக்கப் போனான். அந்த வினாடியே, கனவில் வந்த இருவரில் ஒருவன் வானத்தில் தோன்றி, ‘’சோமிலகனே, இப்படி அவசரப்பட்டு நடக்காதே! நான்தான் உன் பணத்தை எடுத்துக்கொண்டேன். சாப்பாட்டுக்கும் துணிக்கும் மேலாக ஒரு காசுகூட உனக்குத் தராதவன் நானே. ஆகவே, நீ வீட்டுக்குப் போ! என்றாலும் நீ என்னைத் தரிசித்தது வீணாகவேண்டாம். இஷ்டமானதைக் கேள்’’ என்றான்.

‘’அப்படியானால் எனக்கு நிறைய பணம் கொடு’’ என்று சோமிலகன் கேட்டான்.

‘’நண்பனே, உன்னால் அனுபவிக்க முடியாததும், தானம் செய்ய முடியாததுமான பணத்தால் உனக்கு என்ன பலன்? உணவுக்கும் துணிக்கும் மேலாக உனக்கு அது பிரயோஜனப்படப் போவதில்லையே!’’ என்றான் அவன்.

‘’பிரயோஜனப்படாவிட்டாலும், அது எனக்கு வேண்டும். ஒரு பழமொழி உண்டு:

சிறந்த தானம் வழங்குவதில் மனங்கொண்டிருப்பவன் குரூபியாக இருந்தாலும், குலமற்றவனாயிருந்தாலும், அவனை உலகம் போற்றுகிறது.

நானும் பதினைந்து வருஷங்களாகப் பார்த்து வருகிறேன்.

அவை தொளதொளவென்று இருந்தாலும், இறுக்கமாகத்தான் இருக்கின்றன. விழப்போகிறவைபோல் காணப்பட்டாலும் அவை விழவில்லை.

என்றொரு பழமொழி உண்டு’’ என்றான் சோமிலகன். ‘’எது எப்படி?’’ என்று அவன் கேட்க, சோமிலகன் சொல்லலானான்:

http://puthu.thinnai.com/?p=10157

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சதந்திரம் தொடர் 39 – நரியும் காளையும்
அன்னபூர்னா ஈஸ்வரன்


ஏதோ ஒரு ஊரில் பிரலம்பவிருஷணன் என்றொரு காளை இருந்தது. அது மதம் பிடித்துப்போய் தன் மந்தையை விட்டுவிட்டுக் காட்டுக்குப் போய் விட்டது. காட்டில் ஆற்றங்கரையைக் கொம்புகளால் முட்டிக் கிளறிக் கொண்டும், இஷ்டம்போல் மரகதம் போன்ற புல்லை மேய்ந்து கொண்டும் அது திரிந்து வந்தது.

அந்தக் காட்டில் பிரலோபிகன் என்றொரு நரி இருந்தது. அது தன் மனைவியோடு ஒருநாள் நதிக்கரையில் இன்பமாய் உட்கார்ந்திருந்தது. அந்த நேரத்தில் காளை நீர் குடிப்பதற்காக அந்த மணற்பரப்பிற்கு வந்து சேர்ந்தது. காளையின் இரண்டு விரைகளும் தொங்கியாடுவதைப் பெண் நரி பார்த்து விட்டது. ஆண் நரியைப் பார்த்து, ‘’நாதா, அந்தக் காளையின் மடியில் இரண்டு மாம்ச பிண்டங்கள் தொங்குகின்றனவே, பார்த்தீர்களா? அனை இப்பொழுதோ அல்லது இன்னும் கொஞ்ச நேரத்திலோ விழப்போகின்றன. ஆகவே நீங்கள் அதன் பின்னாலேயே போங்கள்’’ என்றது.

‘’அன்பே, அவை எப்போதாவது விழலாம் அல்லது விழாமலே இருக்கலாம்! யார் கண்டது? ஏன் என்னை இந்த வீண்வேலையைச் செய்யச் சொல்கிறாய்? அதைச் செய்வதைவிட உன்னோடு இங்கிருந்து கொண்டு நீர் குடிக்க வருகிற எலிகளைப் பிடித்துச் சாப்பிடுவேனா! எலிகள் வரும்வழி இதுதான். காளையின் பின்னால் நான் போய்விட்டால், வேறு யாராவது வந்து இந்த இடத்தைப் பிடித்துக் கொள்வார்கள். நான் போகாமலிருப்பதே சரி.

நிச்சயமாகக் கிடைக்கக் கூடியதைவிட்டு நிச்சயமற்றதைத் தேடிச் சென்றால், கிடைக்கக்கூடியதும் தவறிவிடும். நிச்சயமற்றது முன்போலவே நிச்சயமற்றிருக்கும்.

என்றொரு பழமொழி உண்டு’’ என்றது ஆண் நரி.

‘’நீங்கள் ஒரு கோழை. கொஞ்சத்தைக்கொண்டு திருப்தியடைகிறீர்கள். அது சுத்தத் தவறு. நாமெல்லோரும், முக்கியமாக ஆண்கள் எல்லோரும் எப்போதும் முயற்சியுடையவர்களாக இருக்க வேண்டும்.

சோம்பல் இல்லாமல் உற்சாகம் காணப்படுகிற இடத்தில் திறமையும் வலிமையும் இருக்கும். அங்குதான் லட்சுமி நிச்சயமாகத் தங்குவான்.

எல்லாம் விதி என்று எண்ணி முயற்சியைக் கைவிடலாகாது. முயற்சி இல்லாவிட்டால் நமக்கு எள்ளிலிருந்து எண்ணெய் கூட கிடைக்காது.

விழுந்தாலும் விழலாம், விழாமலும் போகலாம்’ என்று சொன்னீர்களே, அப்படி சொல்வதும் தப்பு. ஒரு பழமொழியை ஞாபகத்தில் வையுங்கள்.

திடச் சித்தமுடையவனே வணங்கத்தக்கவன். உயர் பதவியிலிருந்தால் மட்டும் போதாது. சாதகப் பறவைக்கு இந்திரன் நீர் தருகிறான் என்றால், அது ஏழைப்பறவை என்று யாராவது இரக்கப்படுவார்களா?

மேலும், எலிமாம்சம் சாப்பிட்டு எனக்கு அலுத்துவிட்டது. அந்த இரண்டு மாம்சபிண்டங்களும் எந்த நேரத்திலும் விழலாம்போல் தெரிகின்றன. என் பேச்சைத் தட்டாதீர்கள்’’ என்றது பெண் நரி.

இதைக் கேட்ட ஆண் நரி, எலிகள் கிடைக்கும் அந்த இடத்தைவிட்டு அகன்று, காளையின் பின்னே போயிற்று. என்ன செய்யலாம்?

பெண்பிள்ளையின் பேச்சு என்ற அங்குசம் ஆணின் காதைத் துளைத்துத் தூண்டாதிருக்கும்வரை ஆண்பிள்ளை எல்லாக் காரியங் களுக்கும் தானே எஜமானனாயிருக்கிறான்.
என்று சொல்லில் நிறைய விவேகம் இருக்கிறது. மேலும்,

பெண் பேச்சால் தூண்டப்பெற்றவனுக்குச் செய்ய முடியாதவை யெல்லாம் செய்யத்தக்கவை போலவும், அடைய முடியாதவை யெல்லாம் அடையக் கூடியவை போலவும், சாப்பிட முடியாதவையெல்லாம் சாப்பிடக் கூடியவை போலவும் தோன்றும்.

காளையின் பின்னே தன் மனைவியோடு ஆண் நரி சென்றது. வெகுகாலம் இப்படியே கழிந்தது. என்றாலும் காளையின் விரைகள் விழவில்லை. கடைசியில் பதினைந்து வருஷங்கள் சென்றபிறகு, ஆண்நரி விரக்தியடைந்துவிட்டது. தன் மனைவியைப் பார்த்து,

‘’அன்பே! நானும் பதினைந்து வருஷங்களாகப் பார்த்து வருகிறேன். அவை தொளதொளவென்று காணப்பட்டாலும் இறுக்கமாகவே உள்ளன. விழப்போகிறவை போல் காணப்பட்டாலும் அவை விழவில்லை.

ஆகவே இனிமேலும் அவை விழப்போவதில்லை என்ற முடிவுக்கு வருவோம். எலிகள் வருகிற அந்தப் பழைய இடத்துக்குத் திரும்பிப் போவோம்’’ என்று சொல்லிற்று.

அதனால்தான், ‘’அவை தொளதொளவென்று காணபட்டாலும்…’’ என்ற செய்யுளைச் சொன்னேன். சம்பத்துள்ளவனை எல்லோரும் விரும்புகிறார்கள். எனவே நீ எனக்குப் பணம் கொடு’’ என்றான் சோமிலகன்.

‘’அப்படியானால் வர்த்தமானபுரத்துக்குத் திரும்பிப் போ. அங்கே வியாபாரிகளின் புத்திரர்கள் இரண்டுபேர் இருக்கிறார்கள். அவர்களின் பெயர் தனகுப்தன், புக்ததனன் என்பது. அவர்களின் நடத்தையை நன்கு தெரிந்து கொண்ட பிறகு, இருவரில் யாராவது ஒருவனுடைய குணத்தைக் கேட்டு வாங்கிக்கொள்’’ என்று அவன் மறுமொழி தந்து மறைந்து போனான். சோமிலகன் ஆச்சரியத்தில் மூழ்கியவனாய் மீண்டும் வர்த்தமானபுரத்துக்கு வந்து சேர்ந்தான்.

சாயங்காலத்தில், களைப்படைந்துபோய், தனகுப்தனின் வீட்டை விசாரித்துக்கொண்டே போனான். மிகவும் கஷ்டப்பட்டு அவன் வீட்டைக் கடைசியில் கண்டுபிடித்து உள்ளே நுழைந்தான். தனகுப்தனின் மனைவியும், பிள்ளைகளும் மற்றவர்களும் அவனைத் திட்டிய போதிலும் அதைப் பொருட் படுத்தாமல் வீட்டின் தாழ்வாரத்திற்கு வந்து உட்கார்ந்தான். சாப்பாட்டு வேளை வந்தது. அவனுக்குச் சோறு போட்டார்கள். ஆனால் அன்பு வார்த்தை ஒன்று பேசவில்லை. அங்கேயே அவன் படுத்துத் தூங்கினான்.

தூக்கத்தில் பழைய நபர்கள் இருவரும் தோன்றி ஒருவர்க்கொருவர் பேசிக்கொள்வதை அவன் மறுபடியும் கேட்டான். ஒருவன், ‘’ஏ செய்வோனே, எதற்காக நீ தனக்குப்தனுக்கு அதிக செலவு வைக்கிறாய்? சோமிலகனுக்கு அவன் அன்னமளித்தானே! நீ செய்வது சரியல்ல’’ என்றான்.

அதற்கு மற்றவன், ‘’ஏ செய்கையே. அது என் குற்றமல்ல. வரவும் செலவும் பார்த்துக்கொள்ள வேண்டியவனே நான். அவற்றின் முடிவு என்னவோ உன் பொறுப்புத்தான்’’ என்று பதிலளித்தான். சோமிலகன் விழித்துக்கொண்டான். தனகுப்தன் காலராவில் படுத்து அது இரண்டாவது நாள். எனவே சோமிலகன் பட்டினி கிடக்க வேண்டியதாயிற்று.

சோமிலகன் அந்த வீட்டிலிருந்து வெளியேறி, புக்ததனனின் வீட்டுக்கு வந்தான். அவன் இவனுக்கு நல்வரவு கூறி, உணவும் உடையும் தந்து கௌரவித்தான். அந்த வீட்டில் சுகமான படுக்கையில் படுத்து, சோமிகலகன் தூங்கினான். கனவில் மீண்டும் அந்த இரு நபர்களைக் கண்டான். இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். ஒருவன் மற்றவனைப் பார்த்து, ‘’ஏ செய்வோனே, புக்ததனன் சோமிலகனுக்கு உபசாரங்கள் செய்திருக்கிறான். புக்ததனனுக்கு அதிகச் செலவு வைத்துவிட்டாய் நீ. லேவாதேவிக் கடையிலிருந்துதான் எல்லா பணத்தையும் அவன் எடுத்துவந்து செலவழித்திருக்கிறான். அதை எப்படி அவன் திருப்பிக் கொடுக்கப் போகிறான்!’’ என்றான்.

‘’ஏ செய்கையே, அப்படித்தான் செய்து தீர வேண்டியிருந்தது எனக்கு. அதன் முடிவு உன்னைப் பொறுத்து’’ என்று பதிலளித்தான். பொழுது விடிந்ததும், யாரோ ஒரு ராஜசேவகன் அரசன் சந்தோஷப்பட்டுத் தந்த பணத்தை எடுத்துவந்து புக்ததனனிடம் கொடுத்தான்.

அதைக் கண்ணுற்ற சோமிலகன், ‘’இந்தப் புக்ததனனிடம் பணம் இல்லா விட்டாலும் அந்தக் கஞ்சன் தனகுப்தனைவிட எவ்வளவோ மேலானவன்.

வேதம் தரும் பயன் வீட்டில் ஹோமம் வளர்த்தல்; கல்வி தரும் பயன் நன்னடத்தை; மனைவி தரும் பயன் சுகமும், புத்திர சந்தானமும்; செல்வம் தரும் பயன் தானமும், போகமும்.

என்னொரு பழமொழி கூறுகூது சரி. சர்வவல்லமை படைத்த இறைவனே, கொடையளிக்கும் புக்ததனனைப்போல என்னைச் செய்வீர்களாக! நான் தனகுப்தன் போல் இருப்பதில் பயனில்லை’’ என்று எண்ணினான்.

அவன் வார்த்தைப்படியே, கடவுள் அவனைப் புக்ததனனைப்போல் ஆக்கிவிட்டார்.

அதனால்தான் ‘செல்வத்தைச் சேர்த்து வைத்திருந்தாலும்…. என்றபடி சொல்கிறேன். எனவே, ஹிரண்யனே, நீ இவற்றை அறிந்து, பண விஷயத்தில் கவலைப்படாமலிருக்க வேண்டும். ஒரு பழமொழி உண்டு.

சுபீட்சமான காலத்தில் மேன்மக்களின் உள்ளம் தாமரை மலர்போல் மிருதுவாயிருக்கும், ஆபத்துக்காலத்தில் இமயமலைக் கற்பாறைகள்போல் கடினமாயிருக்கும்.

பணம் கஷ்டப்பட்டுத் தேடியடைய வேண்டியதாக இருக்கலாம் என்றாலும், விதிமட்டும் இருந்தால் முயற்சி செய்யாமல் தூங்கிக் கொண்டிருக்கிறவனிடம் அது வந்து சேருகிறது. மக்கள் எவ்வளவுதான் முயற்சித்தாலும் விதிப்படி நடக்கிறது நடக்கும், நடக்காதது நடக்காது.

எண்ணி எண்ணிப் பயனென்ன? மனத்தை வருத்திப் பயனென்ன? நெற்றியில் விதி எழுதிவைத்தபடி நடப்பது நடந்தே தீரும்.

தொலைவில் உள்ள தீவிலிருந்தாலும், சமுத்திரத்தின் மத்தியில் இ¢ருந்தாலும், உலகத்தின் ஒரு கோடியிலிருந்தாலும், தான் மனம் வைத்தவனிடம் விதி அதை ஒரு நொடிப்பொழுதில் கொண்டு வந்து தருகிறது.

சம்பந்தமில்லாதவர்களை விதி சேர்த்துவைக்கிறது; சம்பந்தமுள்ளவர் களைப் பிரிக்கிறது; மனிதன் எதிர் பார்க்காததையெல்லாம் விதி ஒன்றாய்ச் சேர்த்து வைக்கிறது.

நீ விரும்பாவிட்டாலும், வருகிற துக்கம் வந்து தீருகிறது. அது நிம்மதியளிப்பதில்லைதான். இருந்தாலும் அதைச் சுகம் என்றே நினைத்து நட! மனத்தை அலட்டிக்கொள்வதால் என்ன பயன்?

சாஸ்திரம் கற்ற அறிஞர்கள் விதியின் செயலை ஆராய்ந்து அதைச் சிறிது மாற்ற விரும்புகின்றனர். ஆனால் விதி வேறு விதமாகச் செல்கிறது.

அன்னப்பறவைக்கு வெண்மையும், கிளிக்குப் பச்சையும், மயிலுக்குப் பல வர்ணணங்களும் தந்த அதே கடவுள்தான் நம்மையும் படைத்து நடத்துகிறான்.

இந்தக் கதையில் நியாயம் இருக்கிறது:

மனம் உடைந்து, பசியால் வாடிப்போய், ஒரு பாம்பு கூடையில் அடைப்பட்டுக் கிடக்கிறது. எலி தானாகவே வந்து அந்தக் கூடையில் மகிழ்ச்சியோடு ஓட்டைபோட்டுச் சென்று பாம்பின் வாயில் விழுகிறது. திருப்தியடைந்த அந்தப் பாம்பு ஓட்டை வழியே வேகமாக வெளியேறி விடுகிறது. ஆகவே நீ மனநிம்மதியோடு இரு! மனிதனின் நன்மைக்காயினும் தீமைக்காயினும் வேலை செய்வது விதியே.

இதை மனத்தில் நிறுத்தி, நல்லதையே நினை!

தூய மனத்தோடு விரதம், நியமம், உபவாசம் முதலிய தர்மங்களைச் சிறிதாவது தினந்தோறும் செய்ய வேண்டும். மனித முயற்சி எவ்வளவுதான் இருந்தாலும், விதி அவன் ஆயுளை நாளுக்குப்பின் நாளாகக் குறைத்துக் கொண்டே போகிறது.

என்று அதைப்பற்றியும் ஒரு செய்யுள் உண்டு. ஆகவே, திருப்தி இருப்பதே விவேகம்.

திருப்தி என்ற அமுதத்தைப் பருகுவதால் நிம்மதியுள்ள மனதுக்கு இன்பம் ஏற்படுகிறது. பணத்தாசை பிடித்து ஓடி அலைகிறவனுக்கு எப்படி அந்த இன்பம் கிடைக்கும்? சகிப்புத்தன்மைக்கு ஒப்பான தவம் வேறில்லை. திருப்திக்கு ஒப்பான இன்பம் வேறில்லை. நட்புக்கு ஈடான தானம் வேறில்லை. தயைக்கு ஈடான தர்மமும் வேறில்லை.

அதிகமாகச் சொல்வதில் பிரயோஜனமென்ன? இதை உன் வீடுபோல் நினைத்துக்கொள். கலக்கம் தரும் கவலையை விட்டுவிடு. என்னோடு நட்புப் பூண்டு இங்கேயே இருந்துவா!’’ என்றது மந்தரகன்.
மந்தரகனின் உபதேசத்தில் பல சாஸ்திரங்களின் சாரம் அடங்கியிருந்தது. அதைக்கேட்டு லகுபதனகனின் முகம் மலர்ந்தது. அது மகிழ்ச்சியோடு, ‘’நண்பா, மந்தரகனே, நீ மிகவும் நல்லவன், மற்றவர்கள் பார்த்து அனுசரிக்கத்தக்க குணங்கள் உன்னிடம் உள்ளன. காரணம், ஹிரண்யனைத் தேற்றுவதின் வழியாக என் உள்ளத்திலும் மகிழ்ச்சி ஊட்டியிருக்கிறாய் நீ.

இன்பத்தின் சாரத்தை அனுபவித்துவரும் நல்லோர்கள், நண்பர்களால் தாமும் மகிழ்ச்சியடைந்து நண்பர்களையும் மகிழ்வித்து, அவர்களோடு அன்பைப் பேணுகின்றனர்.

நட்பு என்னும் அணிகலனை அணியாதவன் செல்வந்தனாயிருந்த போதிலும் அவன் வாழ்வு வெறும் வாழ்வுதான். பேராசையால் பீடிக்கப் பட்ட மனமும், வீண் சிரமமும் நிறைந்தது அந்த வாழ்வு.

துயரக்கடலில் மூழ்கியிருந்த நமது நண்பனான ஹிரண்யனை நீ உன் நல்லுபதேசத்தால் கரையேற்றியிருக்கிறாய்.

நல்லவர்களை ஆபத்திலிருந்து நல்லவர்கள்தான் காப்பாற்றத் தகுந்தவர்கள். சேற்றில் இறங்கிய யானைகளை யானைகள்தான் தூக்கிவிட முடியும்.

தன்னிடம் யாசித்தவர்களும், அடைக்கலம் புகுந்தவர்களும் ஆசாபங்கம் அடைந்து முகம்திருப்பிச் செல்லாதபடி யார் நடந்து கொள்கிறானோ அவனே உலக மக்களால் புகழத்தக்கவன். அவன்தான் நற்குண விரதங்களைக் கரைகண்டவன்.

துயருற்றவர்களைக் காக்காத வீரம் என்ன வீரம்? யாசித்தவர் களுக்குத் தராத தனம் என்ன தனம்? நன்மை அளிக்காத செய்கை என்ன செய்கை? புகழைக் கெடுக்கும் வாழ்வு என்ன வாழ்வு?

இப்படி இவர்கள் பேசிக்கொண்டேயிருந்த சமயத்தில் சித்ராங்கன் என்ற மான் அங்கு வந்தது. அந்த மான் தாகம் கொண்டிருந்தது. வேடனின் அம்புகள் தன்மேல் பாயுமோ என்று பயந்து நடுங்கிக் கொண்டிருந்தது. அது வருவதைக் கண்டு லகுபதனகன் மரக்கிளைக்குப் பறந்துபோயிற்று. ஹிரண்யன் புல்புதருக்குள் புகுந்துகொண்டது. மந்தரகன் நீருக்குள் சென்றுவிட்டது. உயிருக்கு பயந்தபடியே அந்த மான் குளக்கரையில் நின்றது. பிறகு லகுபதனகன் உயரக் கிளம்பி ஒரு யோஜனை தூரம் நாலாபுறமும் பறந்து சென்று சுற்றிப் பார்த்தது. மீண்டும் மரக்கிளைக்குத் திரும்பிவந்து உட்கார்ந்து, மந்தரகனைக் கூப்பிட்டது. ‘’நண்பா, மந்தரகனே, வெளியே வா! உனக்கு இங்கே ஒரு ஆபத்துமில்லை. இந்தக் காட்டைநன்றாகச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்தேன், பாவம் இந்த மான்தான் நீர் குடிக்க இந்தக் குளக்கரைக்கு வந்திருக்கிறது’’ என்றது லகுபதனகன். உடனே அவை மூன்றும் முன்போல் கூடிவிட்டன.

வந்த விருந்தாளி மேல் அன்பு ஏற்பட்டு மந்தரகன் அந்த மானிடம், ‘’நண்பனே, நீ தண்ணீரைக் குடி. ஸ்னாநம் செய். இந்த நீர் சுத்தமானது. குளுமையானது’’ என்று சொல்லியது. இந்த நல்வரவைக் கண்ட சித்ராங்கன் யோசிக்கத் தொடங்கியது.

’இவர்களால் எனக்கு ஒரு ஆபத்தும் இல்லை. காரணம், நீரிலிருந்தால் தான் ஆமைக்குப் பலம். எலியும் காக்கையும் செத்ததைத்தான் சாப்பிடும். ஆகவே இவர்களோடு சேர்ந்து பழகலாம்’’ என்று சிந்தித்து விட்டு அவற்றுடன் சேர்ந்துகொண்டது.

பிறகு ஆமை மானை வரவேற்று உபசரித்துக் கௌரவித்தது.

‘’நீ சௌக்கியந்தானே? இந்த அடர்ந்த காட்டுக்குள் நீ எப்படி வந்தாய் என்று சொல்!’’ என்று விசாரித்தது.

‘’அன்பு இல்லாத இந்த வாழ்வைக் கண்டு நான் அலுத்துவிட்டேன். குதிரைமேல் வருகிறவர்கள் நாய்கள், வேடர்கள் என்னை இங்கும் அங்கும் துரத்தியடித்தார்கள். பயத்தால் அதிவேகமாக ஓடி, அவர்கள் எல்லோரையும் பின்னே விட்டுவிட்டு இங்கு நீர் குடிக்க வந்தேன். இப்போது உங்கள் நட்பை நான் விரும்புகிறேன்’’ என்று மான் பதில் சொல்லிற்று.

‘’நாங்கள் சிறிய உடல் உள்ளவர்கள். ஆகவே எங்களுடைய நண்பனாக நீ இருக்க முடியாது. ஏனெனில், உதவிக்குப் பதில் உதவி செய்யத் தக்கவர்களுடன் நட்புகொள்ளத்தகும்” என்றது மந்தரகன்.

சித்ராங்கன் பதில் சொல்லிற்று:

நீசர்களோடு இந்திரனின் அரண்மனையில் வாழ்வதைவிட அறிவாளிகளோடு நரகத்தில் வாழ்வதே மேல்.

உடல் சிறியதோ, இல்லையோ, ஏன் இப்படி தன்னைத்தானே இகழ்ச்சியாகப் பேசுகிறீர்கள்? சரிதான்; எப்படியிருந்தாலும், இப்படிப் பேசுவதும் உத்தமர்களுக்கு தகுந்ததுதான். எனவே, நீங்கள் இன்றைக்கு என்னோடு கட்டாயம் நட்பு கொள்ளவேண்டும்.

பலசாலியாயிருந்தாலும் சரி, பலவீனனாயிருந்தாலும் சரி, அவனைச் சிநேகிதனாகக் கொள்! காட்டில் கட்டுண்ட யானைக் கூட்டத்தை எலிகள் விடுவித்தன அல்லவா?

என்ற முதுமொழியை நீங்கள் கேட்டிருப்பீர்களே!’’ என்றது மான்.

‘’அது எப்படி?’’ என்று மந்தரகன் கேட்க, மான் சொல்லத் தொடங்கியது:

http://puthu.thinnai.com/?p=10407

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சதந்திரம் தொடர் 40 – யானைகளை விடுவித்த எலிகள்
அன்னபூர்னா ஈஸ்வரன்

 

மக்களும், வீடுகளும், கோவில்களும் க்ஷ£ணித்துப்போன வட்டாரம் ஒன்று ஒரு காலத்தில் இருந்தது. அதன் பழங்குடிகள் அங்கிருந்த எலிகளே. பிள்ளை, பேரன், பேத்தி, கொள்ளுப்பேரன் கொள்ளுப்பேத்தி என்றபடி அவை பெருகிவளர்ந்தன. பெரிய வீடுகளின் தரையிலுள்ள துளைகளில் அவை இருந்துவந்தன. குடும்பம் பெருகப் பெருக ஒவ்வொரு அரண்மனையையும் அடைந்து வசிக்கலாயின. பல விழாக்கள், நாடகங்கள், விவாகங்கள், விருந்துகள், பானங்கள் முதலியவற்றைக் கொண்டு ஆனந்தம் கொண்டாடி அவை காலம் கழித்து வந்தன.

இப்படி அவை இருந்து வருகையில், ஏரியில் நீர் இருக்கிறது என்று யானை அரசன் கேள்விப்பட்டது. அது நீர் குடிக்க விரும்பி, ஆயிரம் யானைகள் புடைசூழ, ஏரியை நோக்கிச் செல்லத தொடங்கியது. அது எலிகள் வாழும் இடத்துக்கு வந்தவுடனே எதிரே வந்த பல எலிகளின் முகமும், கண்ணும், தலையும், கழுத்தும், அதன் காலடியில் நசுக்குண்டன. உயிர் தப்பித்த மற்ற எலிகள் எல்லாம் ஒரு கூட்டமாய்க் கூடின. ‘’இந்த வழியே செல்கிற கெட்ட யானைகள் நம்மைக் கொன்று வருகின்றன. மறுபடியும் அவை இந்தப் பக்கம் வந்தால், நாம் ஒரு குஞ்சுக்குக்கூட மிஞ்ச மாட்டோம். மேலும்,

யானை தொட்டாலும் சாவு, பாம்பு மூச்சு விட்டாலும் சாவு. அரசன் சிரித்தாலும் சாவு. துஷ்டன் கௌரவித்தாலும் சாவுதான்.

ஆகவே, இதற்குத் தகுந்த உபாயம் கண்டுபிடிக்க வேண்டும்’’ என்று பேசின. அவ்விதமே உபாயம் கண்டுபிடித்த பிறகு, சில எலிகள் ஏரிக்கரைக்குச் சென்றன. யானை அரசனை வணங்கி மரியாதையோடு, ‘’அரசே! இதன் அருகாமையிலிருப்பதுதான் எங்கள் பரம்பரை ஜாகை. பேரன்பேத்திகளோடு தலைமுறை தலைமுறையாக நாங்கள் அங்கு வாழ்ந்து வம்ச விருத்தி அடைந்தோம். அப்படியிருக்கையில், நீர் குடிக்க இங்கு வந்த நீங்கள் எங்கள் ஆயிரக்கணக்கிலே கொன்று விட்டீர்கள். மறுபடியும் அதே வழியாக நீங்கள் போனால் ஒரு குஞ்சுக்குக்கூட நாங்கள் மிஞ்சமாட்டோம். எங்கள் மேல் உங்களுக்குக் கருணை இருந்தால் நீங்கள் வேறு வழியே செல்லுங்கள். ஏனென்றால், எங்களைப் போன்றவர்களும் எப்போதாவது கட்டாயம் உதவிகரமாக இருப்போம்’’ என்று அவை சொல்லின.

‘இந்த எலிகள் சொல்வதும் சரிதான்’ என்று யானை அரசன் எண்ணியது. எலிகளின் விருப்பத்துக்கு இணங்கியது.

பல நாட்கள் சென்றன. யாரோ ஒரு அரசன் யானைகளைப் பிடிக்குபடி யானை பிடிப்பவர்களுக்கு உத்தரவிட்டான். அவர்கள் ஒரு பொய் நீர் நிலையைச் சிருஷ்டித்தனர். அதில் யானைத் தலைவனையும் அதன் பரிவாரங்களையும் சிறைப்பிடித்தனர். மூன்று நாட்கள் சென்ற பிறகு, கயிறு முதலியவற்றால் செய்த கட்டுகளைக் கொண்டு அந்தக் காட்டில் பெரிய மரங்களோடு சேர்த்து யானைகளைக் கட்டிப் போட்டார்கள்.

யானை பிடிப்பவர்கள் போன பிறகு யானை அரசன் யோசிக்கத் தொடங்கியது. ‘எப்படி நாம் தப்பிப்பது? யார் உதவியைக் கொண்டு தப்பிப்பது?’ என்று சிந்தித்தது. ‘எலிகளை விட்டால் நம்மை விடுவிக்கக் கூடியவர்கள் வேறு யாருமில்லை’ என்று அதற்கு ஒரு யோசனை தோன்றியது. அங்கே ஒரு பெண் யானை சிக்காமல் தப்பித்துக்கொண்டிருந்தது. அதற்கு எலிகளை ஏற்கனவே தெரியும். அதன்மூலம் தான் கட்டுண்ட விஷயத்தை கடந்தபடி யானைத் தலைவன் எலிகளுக்குத் தெரிவித்தது.

அந்த விஷயத்தைக் கேட்ட எலிகள் ஆயிரக்கணக்கிலே ஒன்று திரண்டன. அவை பதில் உதவி செய்ய விரும்பி யானைக் கூட்டத்திடம் போயின. யானை அரசனும் அதன் பரிவாரமும் கட்டுண்டு கிடப்பதைக் கண்டன. அவை நின்ற இடத்திலிருந்த கட்டுகளைக் கடித்து அறுத்தன. பிறகு மரங்களில் ஏறி கட்டியிருந்த கயிறுகளையும் அறுத்தன. யானைகளைக் கட்டுகளிலிருந்து விடுதலை செய்து விட்டன.

அதனால்தான் ‘பலசாலியாயிருந்தாலும் சரி, பலவீனனாயிருந்தாலும் சரி, அவனைச் சிநேகம் செய்துகொள்….’ என்றெல்லாம் சொல்லுகிறேன்’’ என்றது மான்.

அதைக்கேட்ட ஆமை, நண்பனே, அப்படியே ஆகட்டும். நீ பயப்படாதே. இது உன் வீடுமாதிரியே. கவலையில்லாமல் உன் இஷ்டம்போல் இங்கே இருந்து வா’’ என்றது.

பிறகு இஷ்டப்பட்ட வேளையில் அவை சாப்பாட்டையும் விளையாட்டையும் முடித்துக்கொண்டன. பிற்பகலில், அகலமான ஏரிக்கரையில் ஒரு மரக் கூட்டத்தின் நிழலில் அவை ஒன்று கூடின. அறம், பொருள் முதலிய பலவித சாஸ்திர விசாரணையில் ஈடுபட்டன. ஒன்றன் மேல் மற்றொன்று அன்பு செலுத்தி வாழ்ந்து வந்தன.

நல்ல கவிதையையும், அறநூல்களையும் கொண்டு அறிவாளிகள் பொழுதைக் கழிக்கின்றனர். மூடர்கள் துயரத்திலும், தூக்கத்திலும், கலகங்களிலும் தங்கள் பொழுதைக் கழிக்கின்றனர்.

பெண்களின் சேர்க்கை இல்லாமலே, நல்லுரைகளின் ரசத்தைப் பருகிய விவேகிகளின் நெஞ்சில் புனகமும் சுகமும் உண்டாகிறது.

பிறகு ஒருநாள் சித்ராங்கன் குறித்தவேளையில் வரவில்லை, அது வராமற்போனதையும் அந்தச் சமயத்தில் ஒரு கெட்ட சகுனம் ஏற்பட்டதையும் கண்டுவிட்ட அவை பயந்துபோயின. சித்ராங்கனுக்கு ஏதோ தீங்கு நேர்ந்திருக்க வேண்டும் என்று எண்ணின. மிகுந்த மனக்கலக்கம் அடைந்தன. மந்தரகனும் ஹிரண்யனும் லகுபதனகளைப் பார்த்து, ‘’நண்பனே, நாங்கள் இருவரும் மெள்ள நடப்பவர்கள். எங்களால் மானைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாது. நீதான் அதைத் தேடவேண்டும். அதைச் சிங்கம் ஏதாவது கொன்று தின்று விட்டதா, அல்லது காட்டுத்தீயில் அகப்பட்டுக் கொண்டு விட்டதா, அல்லது வேடர்கள் முதலியவர்களிடம் பிடிபட்டுவிட்டதா, என்று அறிந்து வா.

நமது அன்புக்குரியவர்கள் கேளிக்கை மண்டபங்களில் விளையாடிக் கொண்டிருந்தாலும் அவர்களுக்கு ஏதாவது ஆபத்து நேருமோ என்று நாம் பயப்படுகிறோமே! பயங்கரமான ஆபத்துக்கள் நிறைந்த இந்தக் காட்டின் நடுவே அவர்கள் இருந்தால் பிறகு கேட்க வேண்டுமா?

என்றொரு பழமொழி உண்டு. ஆகவே நீ போய் எப்படியாவது மானைப்பற்றி உண்மையான விவரங்களைத் தெரிந்துகொண்டு வா, சீக்கிரமாக வா!’’ என்று சொல்லின.

அதைக் கேட்ட லகுபதனகன் பறந்து போயிற்று. கொஞ்ச தூரம் பறந்ததும், ஒரு சதுப்புக்குழியின் அருகில் வேலங்குச்சிகளால் கட்டப்பட்ட கூட்டில் மான் விழுந்திருப்பதைக் காக்கை கண்டது. அதற்குத் துக்கம் வந்து விட்டது. ‘’நண்பனே, உனக்கு எப்படி இந்த ஆபத்து உண்டாயிற்று?’’ என்று மானைக் கேட்டது.
‘’நண்பனே, தாமதிக்க இது நேரமில்லை, நான் சொல்வதைக் கேள்.

உயிர்போகும் தருணத்தில் உயிர்த்தோழனின் தரிசனம் கிடைத்தால், அது இறந்து கொண்டிருப்பவனுக்கும் உயிரோடிருப்பவனுக்கும் ஒருங்கே இன்பம் தருகிறது.

நமது கூட்டங்களில் பேசிக் கொண்டிருக்கையில் நான் ஏதாவது கோபத்தில் சொல்லியிருந்தால் அதை மன்னித்துவிடு. அப்படியே ஹிரண்யனையும் மந்தரகனையும் மன்னிப்பு கேட்டதாகச் சொல்.

தெரிந்தோ தெரியாமலோ கெட்ட வார்த்தை ஏதாவது பேசியிருந்தால், அதை நீங்கள் அன்புகனிந்த மனத்துடன் மன்னித்துவிட வேண்டும்.” என்றது மான்.

‘’நண்பனே, எங்களைப்போன்ற நண்பர்கள் இருக்கும்வரை நீ எதற்கும் பயப்படத் தேவையில்லை. நான் உடனே போய் ஹிரண்யனைக் கூட்டி வருகிறேன். அது உன் கட்டுகளை அறுத்துவிடும்’’ என்று லகுபதனகன் பதிலளித்தது. பிறகு நெஞ்சம் படபடக்க லகுபதனகன் பறந்து மந்தரகனையும் ஹிரண்யனையும் அடைந்து, சித்ராங்கன் சிக்கிக்கொண்டிருக்கும் நிலைமையை தெரிவித்தது. ஹிரண்யனை அலகால் தூக்கிக்கொண்டு மான் இருக்கும் இடத்துக்குத் திரும்பிப் போயிற்று.

மான் அவஸ்தைப் படுவதைப் பார்த்து ஹிரண்யனும் துக்கப்பட்டது. ‘’நண்பனே, உனக்கு எப்போதுமே பயந்த சுபாவமும் கூரிய பார்வையும் உண்டே, எப்படி இந்த ஆபத்தில் சிக்கிக்கொண்டாய்?’’ என்று மானைக் கேட்டது.

’அதை ஏன் கேட்கிறாய்! விதி வலிமை படைத்தாயிற்றே!

யமனே துக்கக் கடலாகக் குமுறியெழும்போது கூர்மதி படைத்தவர்களால் என்ன செய்யமுடியும்? பகலிலோ இரவிலோ விதி அடித்துவிடுகிறது.

மறைவிலிருந்து தாக்கும் விரோதியுடன் எப்படிச் சண்டையிடுவது? என் சாது நண்பனே, உனக்குத்தான் விதியின் நியமம் தெரியுமே! அந்தக் கொடி வேடன் இங்கு வருவதற்குள் வேகமாகக் கட்டை அறுத்துவிடு’’ என்றது மான்.

‘’நான் உன்னருகில் இருக்கும்போது நீ எதற்கும் பயப்பட வேண்டாம். மேலும் என் மனதில் ஒரு பெரிய துயரம் இருக்கிறது. உன் வரலாற்றைச் சொல்லி என் துயரத்தை விலக்கு. புத்தியுள்ள உனக்கு எப்படி இந்தக் கஷ்டம் வந்தது?’ என்று ஹிரண்யன் கேட்டது.

கட்டாயம் தெரிய வேண்டுமா? சரி, ஏற்கனவே இந்தக் கட்டின் வேதனையை அனுபவித்திருந்த நான் மறுபடியும் விதிவசத்தால் எப்படி சிக்கிக்கொண்டேன் என்பதைச் சொல்கிறேன், கேள்’’ என்றது மான்.

ஏற்கனவே எப்படி இந்தக் கட்டின் வேதனையை அனுபவித்தாய்? எல்லாவற்றையும் விவரமாகச் சொல், நான் கேட்க விரும்புகிறேன்’’ என்றது ஹிரண்யன். சித்ராங்கன் சொல்லத் தொடங்கியது.
சித்ராங்கனின் அனுபவம்

ரொம்ப காலத்துக்கு முன்னால் நடந்த சங்கதி. அப்போது எனக்கு வயது ஆறு மாதம்தான் ஆகியிருக்கும். எல்லோர் முன்னிலையில் நான் குழந்தைபோல் விளையாடிக்கொண்டிருப்பேன். உற்சாகத் துடிப்பால் நான் வெகுதூரம் ஓடிப்போய் மான் கூட்டம் வருவதை எதிர்பார்த்து நின்று கொள்வேன். எங்களுக்கு இரண்டுவிதமான நடையுண்டு. ஒன்று துள்ளித் தாவுவது, மற்றொன்று நேராக ஓடுவது. இவற்றில், நேராக ஓடுவதைத்தான் நான் அறிந்திருந்தேன். துள்ளித் தாவ எனக்குத் தெரியாது.

ஒருநாள் நான் சுற்றித் திரிந்து கொண்டிருந்தேன். மான் கூட்டத்தை விட்டு விலகிச் சென்று விட்டது உணர்ந்தேன். எனக்கு ஏற்பட்ட மனக் கலவரம் இவ்வளவு அவ்வளவு அல்ல. ‘அவை எங்கே போயிருக்கும்?’ என்று எல்லாத் திக்குகளிலும் பார்த்தேன். கொஞ்ச தூரத்தில் அவை இருப்பதைப் பார்த்தேன். அவற்றிற்குத் துள்ளித் தாவியோடத் தெரியும். ஆகவே ஒரு வலையில் சிக்காமல் துள்ளித் தாவி எனக்கு முன்னேபோய் ஒரே கூட்டமாய் நின்று கொண்டு என்னைப் பார்த்தபடி இருந்தன. எனக்குத் துள்ளித்தாவத் தெரியாததல்லவா? வலையில் நான் அகப்பட்டுக் கொண்டேன்.

இதை இழுத்துக்கொண்டு மான் கூட்டத்திடன் நான் போக முயற்சித்தேன். அப்போது வேடன் வந்து என்னைக் கட்டிப்போட்டான். தலை குப்புற தரையில் விழுந்துவிட்டேன். நான் தப்பிக்க முடியாது என்று நம்பிக்கை இழந்து மான் கூட்டம் மறைந்து விட்டது.

அந்த வேடன் என்னைக் கொல்லவில்லை. ‘’இது ஒரு குட்டி, வளர்ந்து விளையாடுவதற்குத்தான் தகுந்தது’’ என்று நினைத்து அவன் மனம் இளகி விட்டது. எனவே என்னைக் கொல்வதற்குப் பதிலாக என்னைப் பத்திரமாகத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குக் கொண்டு போனான். பிறகு விளையாடிக் கொண்டிருப்பதற்காக ஒரு அரசகுமாரனுக்கு என்னைக் கொடுத்துவிட்டான். என்னைப் பெறுவதில் மகிழ்ச்சியடைந்த அரசகுமாரன் வேடனுக்கு நிறையப் பரிசு கொடுத்தான்.

அரசகுமாரன் என்னை அன்பாக நடத்தினான். மெழுகுப்பூச்சு, ஸ்னாநம், உணவு, சந்தனப்பூச்சு எல்லாம் செய்வித்தான். எனக்குத் தந்த உணவு எனக்குத் தகுந்ததாயும், சுவையுள்ளதாயும் இருந்தது. அப்படியிருந்தபோதிலும், அந்த அந்தப்புரத்திலிருந்தவர்களில் குழந்தைகள் ஆவலோடு என்னைப்பற்றி, கைக்குக் கை மாற்றி, ஒவ்வொருவரும் என் கைகளையும், கால்களையும், கண்களையும், காதுகளையும் தொட்டு நீவினார்கள். நான் மிகுந்த வேதனையடைந்தேன்.

பிறகு ஒருநாள், அப்போது மழைக்காலம். அரசகுமாரனின் படுக்கைக்குக் கீழே நான் படுத்திருந்தேன். மின்னல் மின்னுவதைக் கண்டேன். இடியோசையைக் கேட்டேன். எனக்கு என் மான் கூட்டத்தை ஞாபகம் வந்து விட்டது.

காற்றைக் கிழித்துக்கொண்டு தாவியோடும் மான்கூட்டத்தின் பின்னே இனி நான் எப்போது போகப் போகிறேன்? ஐயோ, இனி எப்போது போகப் போகிறேன்?

என்ற பாட்டைப் பாடினேன்.

‘’அப்படிப் பாடியது யார்?’’ என்று அரசகுமாரன் பயந்து போய் கேட்டான். சுற்றுமுற்றும் பார்த்தான். அவன் என்னைப் பார்த்து விட்டான். ‘’இதைப் பாடியது மான், மனிதனல்ல. எனவே, இதனால் எனக்கு நாசம்தான் விளையும்’’ என்று எண்ணினான். ஆடை குலைந்தபடியே பேய் பிடித்தவன் போல் அரண்மனையிலிருந்து வெளியேறி விட்டான்.

தன்னைப் பேய் பிடித்திருக்கிறது என்று அவன் எண்ணிவிட்டான். மந்திரவாதிகளையும் தந்திரவாதிகளையும் பணம் கொடுத்து வரவழைத்தான். ‘’என் துயரத்தை யார் விலக்குகிறார்களோ அவனுக்கு நிறைய பணம் கொடுப்பேன்’’ என்று தெரிவித்தான்.

அதிகமாக அவசரப்பட்ட சில பேர் கல்லும் கட்டை மட்டைகளும் கொண்டு வந்து என்னை அடிக்கத் தொடங்கினார்கள். எனக்கு ஆயுள் பாக்கி இருந்திருக்க வேண்டும். யாரோ ஒரு சந்நியாசி அப்போது அங்கு வந்தார். ‘’பாவம், இந்தச் சாதுவான பிராணியை ஏன் கொல்லுகிறீர்கள்?’’ என்று சொல்லி என்னைக் காப்பாற்றினார்.

அந்தச் சந்தியாசி என் மனவருத்தத்தையும் புரிந்துகொண்டார். அரசகுமாரனிடம், ‘’ஐயனே, இந்த மான்குட்டி, மழைக்காலம் வந்ததும் உற்சாகம் கொண்டு, தன் மான் கூட்டத்தை ஏக்கத்தோடு நினைத்துக் கொண்டுதான் பின்வருமாறு சொல்லிற்று:

காற்றைக் கிழித்துக்கொண்டு தாவியோடும் மான் கூட்டத்தின் பின்னே இனி நான் எப்போது போகப்போகிறேன்! ஐயோ, இனி எப்போது போகப் போகிறேன்?

ஆகவே உங்களுடைய காய்ச்சலுக்குக் காரணமேயில்லை’’ என்று சொன்னார்.

அரசகுமாரனுடைய காய்ச்சல் ஒழிந்தது. பழையபடி உடல்நிலை குணமாகி விட்டது. தன் வேலையாட்களைப் பார்த்து, ‘’தண்ணீரை நிறைய தலையில் கொட்டி இந்த மான்குட்டியை அதன் காட்டில் கொண்டுபோய் விட்டு விடுங்கள்’’ என்று அரசகுமாரன் சொன்னான். அப்படியே வேலையாட்கள் என்னைக் கொண்டு வந்து காட்டில் விட்டார்கள். இப்படித் தான் ஏற்கனவே நான் சிக்கி வேதனைப் பட்டேன். இருந்த போதிலும் மறுபடியும் சிக்கிக்கொண்டிருக்கிறேன்’’ என்றது மான்.

அந்தச் சமயத்தில் ஆமையும் அங்கு வந்து சேர்ந்தது. தன் சிநேகிதனின் மேலிருந்த பாசத்தால், ஆமை புல்புதர்களையும் தர்ப்பைப் புல்லையும் வழிநெடுகிலும் நசுக்கிவிட்டு, ஏங்கிய உள்ளத்துடன் வந்து சேர்ந்துவிட்டது. அதைக் கண்டதும் அவற்றின் துயரம் இன்னும் அதிகமாயிற்று. ஆமையைப் பார்த்து ஹிரண்யன், ‘’நண்பனே, உன் கோட்டையை விட்டு இங்கு நீ வந்தது சரியல்ல. காரணத்தைக் கேள். கட்டுகளை அறுத்தவுடன் வேடன் வந்தால் மான் ஓடித் தப்பித்துக்கொள்ளும். என் உடல் சிறியது. எங்காவது ஒரு துளையில் போய்ப் புகுந்துகொள்வேன். நீ அவன் கண்ணில் பட்டுவிட்டால் என்ன செய்வாய்?’’ என்று கேட்டது. ஹிரண்யன் சொன்னதைக் கேட்டு ஆமை ‘’அப்படியெல்லாம் என்னை நிந்திக்காதே. ஏனென்றால்,
நண்பர்களின் சேர்க்கைதான் அருமருந்து போலிருந்து உடம்பைப் தேற்றுகிறது. அது இல்லாமற்போனால் நண்பர்களின் பிரிவையும் சொத்து நாசத்தையும் எப்படித் தாங்க முடியும்?

உயிர் நண்பர்களான நல்லவர்களை தங்கு தடையின்றி சந்தித்துப் பழகும் ஒவ்வொரு நாளும், வாழ்க்கை என்னும் காட்டில் அழகிய சாலைகளை அமைத்துக் கொள்வதுபோல!

ஆழ்ந்த அன்புசெலுத்தும் நண்பர்கள், குணமுள்ள மனைவி, அனுதாபமுள்ள எஜமான்-இவர்களிடம் துயரத்தை வெளியிட்டால் மனச் சாந்தி ஏற்படுகிறது.

அதனால் நண்பனே!

ஆழ்ந்த அன்பும் சீரிய குணமும் படைத்த நண்பனின் பிரிவால் கண்கள் ஏக்கங்கொண்டு எங்கெங்கோ செல்கின்றன. துயருற்ற மனம் எங்கெங்கோ தாவித் தவிக்கிறது.

உங்களைப்போன்ற நண்பர்களைப் பிரிவிதைவிட உயிர் பிரிவதே மேல். மறுபிறப்பிலாவது உயிர் திரும்பி வரும். உங்களைப் போன்றவர்கள் மறுபடியும் கிடைக்கமாட்டார்கள். என்றது ஆமை.

இந்தச் சந்தர்ப்பத்தில் வேடன் வில்லும் அம்பும் கையுமாக அங்கே வந்துவிட்டான். அவனைக் கண்டதும் ஹிரண்யன் கட்டுகளை அறுத்து முன் குறிப்பிட்ட துளைக்குள் புகுந்து கொண்டது. காக்கை ஆகாயத்தில் பறந்து போயிற்று. மான் ஓடிவிட்டது.

மானைக் கட்டியிருந்த கட்டுகள் அறுபட்டிருப்பதைக் கண்டு வேடன் ஆச்சரியமடைந்தான். ‘’மான்கள் கயிற்றை என்றும் அறுத்தது கிடையாது. இது அறுந்திருப்பதால் இது ஒரு தெய்வீக மான்தான்’’ என்று சொன்னான். இருக்கத்தகாத இடத்தில் ஆமை ஒன்று இருப்பதை வேடன் கண்டான். சற்றும் மனநிம்மதி அடையாதவனாய், ‘’விதிவசமாக மான் கயிற்றை அறுத்துக்கொண்டு தப்பி விட்டது. ஏன்றாலும் இந்த ஆமை கிடைத்திருக்கிறது.

தரையில் நடக்கும் ஜந்துக்கள், ஊர்ந்து செல்லும் ஐந்துக்கள், ஆகாயத்தில் பறக்கும் ஜந்துக்கள்- எதுவானாலும், கொடுத்து வைத்திருந்தாலொழிய கிடைக்காது.

என்று யோசித்தான்.

பிறகு கத்தியால் தர்ப்பைப்புல்லை அறுத்து, திடமான கயிறாக அதைத் திரித்தான். அந்தக் கயிற்றால் ஆமையின் இரு கால்களையும் வெளியே இழுத்துப் பலமாகக் கட்டிவிட்டான். அந்தக் கயிற்றை வில் நுனியில் கட்டிப் போட்டான். வந்த வழியே செல்லத் தொடங்கினான்.

ஆமையை வேடன் கொண்டு செல்வதை ஹிரண்யன் பார்த்தது. மிகுந்த துயரத்துடன், ‘’என்ன கஷ்டம்! என்ன துயரம்?’’
சமுத்திரத்தின் கரையை எட்டியதுபோல் ஒரு துயரத்தின் முடிவை எட்டியதும், இன்னொரு துயரம் என்னை வந்தடைந்திக்கிறது. எளியாரைத் தான் துயரங்கள் அதிகமாக மொய்க்கின்றன.

பட்ட இடத்தில்தான் மீண்டும் அடிபடுகிறது: சோறில்லாத போதுதான் பசி அதிகமாகிறது. ஆபத்துக்காலத்தில்தான் பகைமைகள் அதிகமாகின்றன. எளியாரைத்தான் துயரங்கள் அதிகமாக மொய்க்கின்றன.

கால் தடுக்காதவரை ஒருவன் சமதரையில் நன்றாகத்தான் நடந்துபோகிறான். கால் தடுக்க ஆரம்பித்துவிட்டால் ஒவ்வொரு அடிக்கும் தடுக்கி விழுகிறான்.

ஆபத்தில் உதவுகிற நண்பன், வலிமையும், லாகவமும் பொருந்திய வில், குணமும் குலமுமுள்ள பெண் — வாழ்வில் இவர்களைக் காண்பது அபூர்வம்.

போலி நண்பர்களைப் பெறுவது சர்வசாதாரணம். குணம் சிறந்த நண்பர்களை அப்படிப் பெறமுடியாது. அதற்குப் பாக்கியம் செய்திருக்க வேண்டும்.

நண்பனிடம் பெறும் நிம்மதியைப்போல், தாயிடமோ, மனைவியிடமோ, மகனிடமோ, சகோதரனிடமோ காணமுடியாது.

நண்பர்களைப் பிணைக்கும் அன்பு அனுபவிக்க அனுபவிக்கக் குறைவதில்லை. அதைப் புல்லியர்கள் பறித்துச் செல்ல முடியாது. மரணம் ஒன்றுதான் அதற்கு முடிவு கட்டுகிறது.

இது என்ன விதி, விடாமல் என்னைத் தாக்கி வருகிறதே! முதலில் பணம் நாசமாயிற்று; பிறகு, ஏழ்மையால் உறவினர்களிடமிருந்து நிந்தனைகள் வந்து சேர்ந்தன; அதன் வேதனையால் நாடு விட்டு வர நேரிட்டது. இப்போது ஒரு நண்பனையும் விட்டுப் பிரியும்படி விதி செய்திருக்கிறது.

உண்மையில் பணம் போனதில் எனக்கு வருத்தமில்லை. அதிருஷ்டமிருந்தால் அது மறுபடியும் திரும்பிவரும். பண நஷ்டமானதோடு, நட்பு நஷ்டமும் எனக்கு ஏற்பட்டதுதான் என்னைச் சுட்டெரிக்கிறது.

நான் செய்த செய்கைகளின் நற்பயனையோ, தீயபயனையோ மறுபிறப்பில் அனுபவிப்பதற்குப் பதிலாக இந்தப் பிறப்பிலேயே அனுபவிப்பதற்குப் பதிலாக இந்தப் பிறப்பிலேயே அனுபவிக்கிறேன்.

பிறவியெடுத்த உடலைப் பல ஆபத்துக்கள் சூழ்கின்றன; சம்பத்து எப்பொழுதும் விபத்து உண்டாக்கும்; பாசங்கள் எல்லாம் பிரிவில் முடிகின்றன; உலகமே பொடித்துப் போகிற ஒரு பொருள்தான்.

ஐயோ, நண்பனை இழந்தேன், உயிர் இழந்தேன், எனது உற்றாருக்காகவும் நான் இவ்வளவு வருந்தவில்லை.

துன்பத்தையும் துயரத்தையும் பயத்தையும் போக்கி, நம்பிக்கைக்கும் அன்புக்கும் உறைவிடமாயிருக்கும் இந்த ரத்தினம் யார் படைத்ததோ?
மி-த்ரஹ (மித்திரன்) என்று இரண்டே எழுத்துக்களாலான இந்த ரத்தினம் யார் படைத்ததோ?

நல்லோர்களின் சேர்க்கையில் வளர்வது நட்பு; ஒவ்வொரு மூச்சிழையிலும் அது அன்பு பொழிகிறது; அன்புக்கயிற்றால் பிணைக்கப்பட்ட சாதனம் அது. சகிக்கொணாத சாவுதான் அதை அறுக்கிறது.

நன்கு பழகிப் பிணைந்த நட்பையும், இன்பமளிக்கும் செல்வத்தையும் தீரர்களின் பகைமையையும் மரணம் ஒரே வெட்டில் அறுத்து விடுகின்றது.

வாழ்க்கையில் மூப்பும் நரையும் வந்திடாவிட்டால், அன்புக்குரியவர்களிடமிருந்து பிரிவு ஏற்படாவிட்டால், யாவும் சாகும் என்ற நிலை இல்லாவிட்டால், இந்த வாழ்வில் யாருக்குத்தான் விருப்பம் இருக்கும்?

இவ்வாறு ஹிரண்யன் துயரம் நிறைந்த சொற்களைப் பேசிக் கொண்டிருக்கையில் சித்ராங்கனும் லகுபதனகனும் அங்கு வந்து சேர்ந்தன. அவையும் புலம்பத் தொடங்கின. பிறகு ஹிரண்யன் அவற்றைப் பார்த்து, ‘’மந்தரகன் நம் கண்ணிலிருந்து மறையாதிருக்கும் வரை அதைக் காக்க நமக்கு வழி இருக்கிறது. ஆகவே சித்ராங்கனே, நீ போ! வேடன் உன்னைப் பார்க்காதபடி அவனுக்கு முன்னே போய் எங்காவது நீர் உள்ள இடத்தின் அருகில் இறந்துவிட்டதுபோல் தரையில்கிட! லகுபதனகனே, நீ சித்ராங்கனின் கூடுபோன்ற கொம்புகளில் கால் வைத்து உட்கார்ந்துகொண்டு கண்களைக் கொத்துவதுபோல் பாசாங்கு செய்! அப்போது அந்தக் கெட்ட வேடன், ‘மான் செத்துக் கிடக்கிறது, எடுத்துக்கொண்டு போகலாம்’ என்று பேராசைக் கொள்வான். ஆமையைத் தரையில் போடடுவிட்டு மான் இருக்கும் இடத்துக்குப் போவான். அவன் போனதும் நான் போய் ஒரு நொடியில் ஆமையின் கட்டுகளை அறுத்துவிடுகிறேன். பக்கத்திலுள்ள நீர் ஆமைக்கு கோட்டை போன்றது. அதில் போய் அது பதுங்கிக்கொள்ளும். நான் போய் புல் புதர்களிடையே புகுந்துகொள்கிறேன். நீ ஓட்டமெடுத்து மறுபடியும் தப்பித்துக்கொள்ள வேண்டும்’’ என்று சொல்லியது.

இந்தத் திட்டப்படியே அவை செய்தன. ஒரு நீர்நிலைக்கருகில் செத்ததுபோல் கிடக்கிற மானை வேடன் கண்டான். அவனுக்கு ஒரே சந்தோஷம். ஆமையை தரையில் எறிந்துவிட்டு ஒரு தடி எடுக்க ஓடினான். அவனுடைய காலடிச் சத்தத்தைக் கேட்ட மான், வேடன் அருகில் வந்துவிட்டான் என்று தெரிந்துகொண்டு ஒரே வேகமாக ஓடி அடர்ந்த காட்டில் மறைந்து விட்டது. லகுபதனகன் பறந்துபோய் ஒரு மரத்தில் உட்கார்ந்துகொண்டது. ஹிரண்யன் ஆமையின் கட்டுகளை அறுக்கவே அது போய்த் தண்ணீரில் புகுந்து கொண்டது. ஹிரண்யனும் புல்களுக்கிடையே மறைந்து கொண்டது.

இது இந்திரஜாலமே என்று வேடன் எண்ணிக்கொண்டான். ‘’என்ன இது, இப்படியாயிற்றே!’’ என்று ஏமாற்றத்தோடு கேட்டுக்கொண்டான்.ஆமையைப் போட்ட இடத்திற்குத் திரும்பிப் போனான். அங்கே விரலவுகூட நீளமில்லாதபடி நூற்றுக்கணக்கான துண்டுகளாக அமையைக் கட்டிபோட்டிருந்த கயிறு அறுக்கப்பட்டிருப்பதைக் கண்டான். யோகி மறைவதுபோல் ஆமை மறைந்து விட்டிருப்பதையும் கண்டான். தன் உயிருக்கே ஆபத்து ஏற்படுமோ என்று பயந்துபோனான். கலங்கிய மனத்துடன் திக்குகளைப் பார்த்துக் கொண்டே காட்டிலிருந்து வெளியேறி வீட்டுக்குச் சென்றான்.

அதன்பிறகு அவை நான்கும் உடம்பில் ஒரு காயமும் இல்லாமல் பத்திரமாகத் திரும்பி ஒன்றுகூடின. ஒன்றோடொன்று நேசம் பாராட்டிக்கொண்டன. மறுபிறப்பு அடைந்து ஒன்றாய்ச் சேர்ந்தவை போல் இன்பமாக வாழ்ந்த வந்தன. ஆகவே,

உலகம் ஏற்கும் இப்படிப்பட்ட நட்பு மிருகங்களிடத்தில் கூட இருக்கும் என்றால் விவேகமுள்ள மனிதர்களிடத்தில் அது இருப்பது ஆச்சரியமில்லையல்லவா?

இத்துடன் நட்பு அடைதல் என்ற இரண்டாவது தந்திரம் முடிவு பெறுகிறது. அதன் முதற்செய்யுள் பின்வருமாறு:

சாதனமும் செல்வமும் இல்லாமற் போனாலும் அறிவாளிகளும் கல்விமான்களும், காக்கை, எலி, மான், ஆமை செய்ததுபோல் எடுத்த காரியத்தைத் தொடுத்து முடிக்கின்றனர்.

 

http://puthu.thinnai.com/?p=10579

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சதந்திரம் தொடர் 41-காக்கைகளும் ஆந்தைகளும்

அன்னபூர்னா ஈஸ்வரன்



இங்கே, காக்கைகளும், ஆந்தைகளும் என்ற மூன்றாவது தந்திரம் ஆரம்பமாகிறது. அது போரும், சமாதானமும் பற்றியது. அதன் முதற் செய்யுள் பின்வருமாறு:

ஏற்கனவே பகைவர்களாயிருந்து பின்னால்
நேசம் பாராட்டுகிறவர்களை நம்பவேண்டாம்!
ஆந்தைகள் கூடிவாழ்ந்த குகைக்குக் காக்கைகள்
நெருப்பு வைத்து எரித்துவிட்டன.

‘’அது எப்படி?’’ என்று அரசகுமாரர்கள் கேட்க, விஷ்ணு சர்மன் சொல்லத் தொடங்கினார்:

தென்னாட்டில் பிருதிவிப்பிரதிஷ்டானம் என்றொரு நகரம் இருக்கிறது. அதன் அருகாமையிலே பல கிளைகளுள்ள பெரிய ஆலமரம் ஒன்றிருக்கிறது. அதில் மேகவர்ணன் என்ற காக்கையரசன் இருந்து வந்தது. அதற்கு ஏராளமான காக்கைப் பரிவாரங்கள் உண்டு. மேகவர்ணன் அந்த மரத்தையே தனது ஜாகையாகக் கொண்டு காலங் கழித்து வந்தது.

அதேமாதிரி, ஒரு மலைக்குகையைத் தன் கோட்டையாகக் கொண்டு அரிமர்ததனம் என்ற ஆந்தையரசன் கணக்கற்ற ஆந்தைப் பரிவாரங்களோடு இருந்து வந்தது. ஏற்கனவே இவற்றிடையே பகைமை இருந்து வந்தது. ஆகவே, குகைக்கு அருகில் சுற்றித் திரியும் எந்தக் காக்கையைக் கண்டாலும் அதை ஆந்தையரசன் கொன்றுவிட்டுச் சென்றது. இப்படியே தினந்தோறும் காக்கைகள் கொல்லப்பட்டு வந்தன. அந்த ஆலமரத்தைச் சுற்றிலும் எங்கு பார்த்தாலும் காக்கைகள் இறந்து கிடந்தன. இப்படி நடப்பது சகஜம்தான். ஏனெனில்,

பகைவனைக் தன்னிஷ்டம்போல் நடக்க அனுமதித்தாலும், சோம்பலினால் நோயைக் கவனிக்காமல் விட்டாலும், அவை நாளடைவில் மெள்ள, ஆனால் நிச்சியமாக, உன்னைக் கொன்றுவிடுகின்றன.

ஒருநாள் மேகவர்ணன் தனது மந்திரிகள் எல்லாவற்றையும் கூப்பிட்டது. அவர்களைப் பார்த்து, ‘’தோழர்களே, நமது எதிரி திமிர் படைத்தவன். முயற்சியுள்ளவன் சமயமறிந்தவன். இரவில் தினசரி வந்து நம் அணிகளைக் கொல்கிறான். அவனைத் திருப்பித் தாக்குவதற்கு என்னவழி? இரவிலே நமக்குக் கண் தெரிவதில்லை. பகலிலோ அவனுடைய கோட்டை எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. தெரிந்திருந்தால் நாம் போய் அதைத் தாக்கலாம். இதற்கு என்ன உபாயம் செய்யலாம? சமாதானம், சண்டை, தளத்தை மாற்றிச் செல்வது, இடம் பெயராது இருந்துகொள்வது, உறவு கொள்வது, நயவஞ்சமாக நடந்து கொள்வது — என்று ஆறு வகை உபாயங்கள், உண்டு. இப்பொழுது இவற்றில் எதை அனுஷ்டித்தால் நல்லது?’’ என்று கேட்டது.

‘’அரசே! தாங்கள் இந்தக் கேள்வியைக் கேட்டது மிகவும் தகும்.

அரசர்கள் தங்களைக் கேட்காவிட்டாலும் மந்திரிகள் நல்லதைச் சொல்ல வேண்டும். அரசன் கேட்பானேயானால் நிச்சயமாகச் சொல்லவேண்டும்.

(முதலில் கசந்தாலும்) முடிவிலே நன்மையைத் தரும் உண்மையைச் சொல்லாமல் முகஸ்துதியாகப் பேசிக்கொண்டிருக்கிற மந்திரிகள் அரசனுக்கு விரோதிகளே.

என்றொரு பழமொழி இருக்கிறது. எனவே இபோது ரகசியாலோசனை செய்வது நல்லதே’’ என்றன மந்திரிகள்.

மேகவர்ணன் தன் பரம்பரை மந்திரிகளான உஜ்ஜீவி, சஞ்ஜீவி, அனுஜீவி, பிரஜீவி, சிரஜீவி என்கிற ஐந்து மந்திரிகளையும் தனித்தனியே ஆலோசனை கேட்கத் தொடங்கியது. முதலில் உஜ்ஜீவியைப் பார்த்து, ‘’நண்பனே, இருக்கிற நிலைமையில், நீ என்ன நினைக்கிறாய்?’’ என்று கேட்டது. அதற்கு அது, ‘’அரசே, பலசாலிகளோடு சண்டை பிடிக்கக் கூடாது. அவனோ பலசாலிமட்டுமல்ல. சமயமறிந்து தாக்குகிறவனாகவும் இருக்கிறான். ஆகவே தாங்கள் அவனோடு சமாதானம் செய்து கொள்ளுங்கள்.

வல்லவனுக்குத் தலைவணங்கு! பிறகு தக்க சமயம் நேரும் போது தலைதூக்கு! எப்போதும் தலைக்குமேல் வெள்ளம் போய்க்கொண்டிராது. அப்படியே அவனது செல்வமும் என்றென்றும் மேலோங்கியிராது.

செல்வமும், குணமும், அறிவும், வெற்றிப்பரம்பரையும் பெற்று உள்நாட்டில் பிளவுகள் அற்றிருக்கும் பகைவனோடு சமாதானம் செய்துகொள்!

உன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் போலிருந்தால் துஷ்டர்களோடு சமாதானமாகப் போய்விடு! உயிரை முதலில் பாதுகாத்துக் கொண்டால் பின்னால் ராஜ்யத்தைக் காத்துக் கொள்ளமுடியும்.

எண்ணற்ற போர்களில் வெற்றி கொண்டவனுடன் சுமாதானம் செய்து கொள்! அவனுடைய வல்லமையைக் கண்டு உனக்கு மற்றப் பகைவர்கள் தலைவணங்குவார்கள்.
உனக்குச் சமமானவனோடும் சமாதானம் செய்துகொள்! போரில் வெற்றி என்பது யாருக்கும் நிச்சயமானதில்லை. எனவே சந்தேகத்திற்கிடமளித்துவிடாதே, என்று பிரகஸ்பதி சொல்லுகிறார்.

சமபலமுள்ள பகைவர்களோடு சண்டை செய்தால் வெற்றி யாருக்கு
என்று சொல்வதற்கில்லை. ஆகவே முதலில் முதன் மூன்று உபாயங்களை (ஸாமம், தானம், பேதம்)ச் செய்து பார். கடைசியாகச் சண்டை செய்!

சமாதானத்தின் பெருமையை அறியாமல், அதிகார போதையில் அறிவு குருடாகி, சமபலமுள்ளவனோடு சண்டை செய்பவன் மண்குடம் உடைவதேபோல் சிதைவுறுகிறான். நிலம், நண்பன், பொன், இவை மூன்றும் சண்டையின் பலனாகக் கிடைக்கின்றன. மூன்றில் ஏதாவது ஒன்று கூடக் குறைவதானாலும் நீ சண்டைக்குப் போகாதே!

கல்லும் மண்ணும் நிறைந்த வளையைச் சிங்கம் தோண்டினால் அதன் நகங்கள்தான் ஒடிந்து போகும். அதிகமாக மிஞ்சினால் ஒரு எலிதான் கிடைக்கும்.

ஆகவே, எங்கே நல்ல பயன் கிடைக்காமல், கடும் போர் மட்டும் கையில் மிஞ்சுமோ, அங்கே சண்டையைக் கிளறி விடாதே?

வல்லவர்கள் தாக்கும்போது நாணல் புல்லைப்போல் தலையைக் குனிந்துகொடு; லட்சுமியின் அருள் தடங்கலின்றிக் கிடைத்து வர வேண்டுமானால் பாம்பைப்போல் ஒரு போதும் சீறாதே!

நாணல்புல்லைப்போல் தலைவணங்குபவன் காலக்கிரமத்தில் உயர்நிலையடைகிறான். பாம்புபோல் சீறுகிறவர்கள் கொலையுண்டு போகின்றனர்.

ஆமை ஓட்டுக்குள் புகுந்து கொள்வதுபோல் தலை பதுங்கிக் கொள்; அடிபடவேண்டி நேரிட்டாலும் படு! தக்க தருணம் வருகிறபோதெல்லாம் புத்திசாலிகள் கருநாகம்போல் தலைதூக்கிப் பார்ப்பார்கள்.

சுருங்கச் சொன்னால்,

வல்லவனோடு சண்டையிடக்கூடாது என்று எனக்குத் தோன்றுகிறது. காற்றை எதிர்த்து மேகம் சண்டை செய்வதை யாராவது கண்டதுண்டா?

என்று பதிலளித்தது உஜ்ஜீவி.

இந்தச் சொற்களைக் கேட்ட காக்கையரசன் சஞ்ஜீவி என்ற மந்திரியைப் பார்த்து, ‘’நண்பனே, உன் அபிப்பிராயத்தையும் கேட்க விரும்புகிறேன்’’ எறது.

‘’அரசே! உஜ்ஜீவி சொல்வது எனக்குச் சரியென்று தோன்றவில்லை. ஏனென்றால் எதிரி கொடியவனாய், பேராசை பிடித்தவனாய், தர்மமில்லாதவனாய் இருக்கிறான். எனவே தாங்கள் அவனோடு சமாதானம் செய்யக்கூடாது.

சத்தியமும் தர்மமும் அற்ற சத்துருக்களுடன் என்றும் சமாதானமாகப் போய்விடக் கூடாது. அப்படியே செய்து கொண்டாலும் அவர்களின் துஷ்டத்தனத்தால் சீக்கிரமே மாறிவிடுவார்கள்.

எனவே, அவனோடு சண்டை பிடிக்க வேண்டும் என்பதே என் அபிப்பிராயம்.

கொடுமை, பேராசை, சோம்பல், பொய், மடமை, அச்சம், உறுதியின்மை, தயாரிப்பிலில்லாமை, வீரர்களை அவமதிக்கும் போக்கு, முதலிய தன்மைகளைப் பெற்ற பகைவனைச் சுபலமாக வெல்ல முடியும்.

என்றொரு பழமொழி கூறுகிறது. இதற்கு மேலாக இன்னொரு விஷயமும் உண்டு. அவன் நம்மை அவமானப்படுத்தியிருக்கிறான். அவனோடு இப்போது நீங்கள் சமாதானம் பேசினால் அவன் கோபங்கொண்டு மறுபடியும் தாக்குவான்.

நான்காவது உபாயத்தால் (சண்டையால்) ஜெயிக்க வேண்டிய எதிரியிடம் சமாதானம் என்பது கூடாது. வியர்க்க வைத்து ஜுரத்தை இறக்கவேண்டியிருக்க, யாராவது நீரில் தலைகுளிக்கச் செய்வார்களா?

மிகுந்த கோபமுள்ளவனிடம் சமரசம் பேசினால் அவனது கோபம் வெடித்துக் கிளம்பும். நன்றாகக் கொதிக்கும் எண்ணெய்யில் தண்ணீர்த் துளிகளை விட்டால் எப்படியாகுமோ அப்படி!

மேலும், அவன் பலசாலி என்று சொல்வதும் ஆதாரமற்றது.

சிங்கம் யானையைக் கொல்வதுபோல், உற்சாகமும், திறமையுள்ள மெலியவன்கூட வலுவுள்ள எதிரியை ஜெயித்து சாம்ராஜ்யத்தை அடைகிறான்.

சுயபலத்தால் எதிரியைக் கொல்ல முடியாமற்போனால் மாயத்தால் அவனைக் கொல்லவேண்டும். பீமன் பெண்ணுருவம் கொண்டு சென்று கீசகனைக் கொல்லவில்லையா, அதுபோல!

யமனைப்போல் உக்கிரமுள்ள அரசனுக்கு எல்லா எதிரிகளும் தலைவணங்கி விடுகின்றனர். அவனே இரக்கங்காட்டுபவனாகி விட்டால் அவனை எல்லா எதிரிகளும் கொல்ல விரும்புகிறார்கள்.

இன்னொரு பலசாலியின் முன்னே ஒருவனுடைய பலம் மங்குமேயானால், அவனது தாயின் இளமை வீணானதைத் தவிர அவன் பிறந்ததனால் என்ன பயன்?

பகைவனின் ரத்தம் என்கிற குங்குமத்தால் ராஜ்யலட்சுமியின் உடலில் பூசாவிட்டால் அவள் தைரியசாலிகளுக்குக் கூட தன் முழு அருளையும் அளிப்பதில்லை.

பகைவனின் ரத்தத்தாலும், பகைவனின் மனைவியின் கண்ணீராலும் நனைக்கப்பட்டிராத ராஜ்யமுள்ள அரசனின் வாழ்வில் சிறப்பு ஏது?

என்று பதிலளித்தது சஞ்ஜீவி.

பிறகு காக்கையரசன் அனுஜீவியைப் பார்த்து, ‘’நண்பனே, உன் அபிப்பிராயத்தைச் சொல்’’ என்றது. அதற்கு அந்த மந்திரி, ‘’அரசே, அந்தத் துஷ்டன் அதிக பலமுள்ளவன், மரியாதையில்லாதவன்; ஆகவே அவனோடு சண்டைக்குப் போவது, சமாதானம் செய்வது, இரண்டும் சரியில்லை. இந்தத் தளத்தைவிட்டுச் சென்று விடுவதே நமக்குத் தகும்.

பலத்தினால் திமிர் கொண்டவனும், துஷ்டனும், மரியாதையில்லாதவனுமான விரோதியுடன் சண்டை சமாதானம் இரண்டும் கூடாது. தளத்தைவிட்டுச் செல்வதே வெற்றிக்கு வழி.

தளமாற்றத்தால் இரண்டு நன்மைகள் உண்டு: ஒன்று, ஆபத்திலிருந்து உயிரைக் காத்துக்கொள்வது: இரண்டாவது, வெற்றி கிட்டும் முறையில் திட்டமிட்டு படையெடுப்பதற்கு அவகாசம் பெறுவது.

சிறந்த வீரனும் வெற்றிபெற விரும்புகிறவனும் சித்திரை, கார்த்திகை மாதங்களுக்கிடையேதான் எதிரி நாட்டின் மேல்படையெடுக்க வேண்டும். மற்ற மாதங்களில் படையெடுக்கலாது.

எதிரி சங்கடத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறபோதும், பலவீனனாயிருக்கிறபோதும், போரார்வம் மிக்கவர்களுக்கு எந்தக் காலமும் படையெடுக்கத் தகுந்த காலமே.

தீரர்களையும், வீரர்களையும், பலசாலிகளையும், வைத்துச் சொந்த தளத்தைப் பலப்படுத்திக்கொண்ட பிறகு எதிரி நாட்டில் முதலில் ஒற்றர்களைப் பரப்பிவிட்டு கடைசியில் படையெடுக்க வேண்டும்.

ஆகவே, அரசே! தற்சமயம் தாங்கள் தளத்தை மாற்றுவதுதான் தகுந்த காரியம். பலசாலியான அந்தப் பாவியுடன் சண்டையோ சமாதானமோ செய்வது சரியல்ல.

இன்னொரு விஷயம், காரணம் காரியம் இரண்டையும் கவனிப்போமானால் பின்வாங்கிச் செல்வதே தக்கது என்று ராஜநீதி சொல்கிறது. எப்படியென்றால்,

ஆடு பின்வாங்குவது பலமாக முட்டுவதற்கே. சிங்கம் பதுங்குவது மேலும் கோபத்தோடு பாய்வதற்கே. புத்திசாலிகள் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு நெஞ்சில் வஞ்சத்தை இரகசியத்தில் வைத்து வளர்த்து வருவார்கள்.

பலம் பொருந்திய பகைவனைக் கண்டு நாட்டைவிட்டுச் செல்பவன், யுதிஷ்டிரனைப்போல் உயிரைக் காத்துக் கொண்டு பிறகு ராஜ்யத்தை அடைகிறான்.

பலவீனன் அகங்காரங்கொண்டு பலசாலியோடு சண்டை செய்தால் அவன் எதிரியின் விருப்பத்தைத்தான் நிறைவேற்றுவான். தனது உயிரையும் குலத்தையும் தான் நாசமாக்கிக் கொள்வான்.

ஆகவே, பலசாலியை நாம் சமாளிக்க வேண்டியிருப்பதால் இப்போது பின்வாங்குவதே நல்லது. இது சண்டையோ, சமாதானமோ செய்துகொள்ளும் காலமில்லை’’ என்று பதில் வந்தது.

அதனுடைய வார்த்தைகளைக் கேட்டபிறகு காக்கை அரசன் பிரஜீவி என்ற மந்திரியிடம், ‘’நண்பனே, உன் அபிப்ராயத்தைத் தெரிவி’’ என்று சொல்லிற்று.

‘’அரசே, எனக்குச் சண்டை, சமாதானம், தளமாற்றம் மூன்றுமே சரியென்று தோன்றவில்லை. முக்கியமாகத் தளமாற்றம் சரியென்று தோன்றவேயில்லை. எப்படியென்றால்,

முதலை தன் இருப்பிடத்திலிருக்கும்போதுதான் யானையைக் கூட ஜெயித்துவிடும். தன் இருப்பிடத்தை விட்டுப்போனால் நாய்கூட அதைத் தோற்கடித்துவிடும்.

பலசாலிகள் தாக்கும்போது நீ உன் சொந்தக் கோட்டைக்குள் இருந்துகொள்! அங்கிருந்துகொண்டே உன் நண்பர்களை உதவிக்கு அழைத்து உன் விடுதலைக்கு முயற்சி செய்!

எதிரி வருவதைக் கண்டு பயத்தால் நடுங்கிப்போய் தன் இருப்பிடத்தை விட்டுச் செல்கிறவன், மறுபடியும் அங்குத் திரும்பி வருவதில்லை.

தன் தளத்திலேயே இருந்து கொள்கிற ஒருவன் பலமுள்ள நூறு சத்ருக்களையும் எதிர்த்துச் சண்டை செய்ய முடியும். ஆகவே இருக்கிற இடத்தைவிடட்டுப் பெயரக்கூடாது.

எனவே, தன் கோட்டையைப் பலப்படுத்த வேண்டும். அதன் அகழியையும், மதிற்சுவர்களையும் திடப்படுத்த வேண்டும். இயந்திரங்களும், அம்புகளும் கொண்டு திகழும்படி அதைச் செய்து வைக்க வேண்டும். தானியவகைகளைக் கொண்டு கோட்டையை நிரப்பி வைக்க வேண்டும்.

யுத்தம் செய்யத் தீர்மானித்து எப்போதும் தயாராக இருக்கிறவன் யுத்தத்தில் பிழைத்தால் புகழ்பெறுகிறான், இறந்தால் சுவர்க்கம் அடைகிறான்.
இளைத்தவர்களேயானாலும் அவர்களெல்லோரும் ஒன்று சேர்ந்தால் அவர்களைப் பலசாலிகளாலும் துன்புறுத்த முடியாது. ஒரேயிடத்தில் கூட்டமாக வளரும் புதரைப் புயல்காற்று பெயர்ப்பதில்லையல்லவா?

மரம் பெரிதாக இருக்கலாம். நன்றாக வேரூன்றியும் இருக்கலாம். இருந்தாலும் அது தனி மரமாக நின்றால் அதைப் பலமான புயல்காற்று வேரோடு பெயர்த்து எறிகிறது.

ஆனால் மரங்கள் நன்கு வேரூன்றி கூட்டம் கூட்டமாக இருந்தால் அவற்றைப் புயல்காற்று சுலபத்தில் பெயர்க்கிறதில்லை.

அதுமாதிரியே, தனி மனிதன் ஒருவன் அதிவீரனாக இருந்தபோதிலும் அவனைத் தோற்கடிக்க முடியுமென்றே எதிரிகள் மதிக்கின்றனர். ஆகவே அவனை இம்சிக்கின்றனர்.

என்று சொல்லிற்று.

அந்த விஷயத்தையும் கேட்டபிறகு காக்கையரசன் சிரஜீவியைப் பார்த்து, ‘’நண்பனே, உன் அபிப்பிராயத்தையும் சொல்’’ என்றது.

‘’அரசே, அந்த ஆறு உபாயங்களில் உறவுகொள்வதே சிறந்தது என்று எனக்குத் தோன்றுகிறது. எனவே தாங்கள் அதையே அனுசரிக்க வேண்டும். எப்படியென்றால்,

சாமர்த்தியமும், தீரமும் இருந்தாலும் சகாயமில்லாமல் என்ன செய்ய முடியும்? காற்று சிறிதேனும் அடிக்காவிட்டால் நெருப்பு தானாகவே அணைந்துவிடுகிறது.

ஆகவே, நீங்கள் இருந்துகொண்டே யாராவது ஒரு பலசாலியுடன் உறவு உடன்படிக்கை செய்துகொள்ளவேண்டும். அவன் மூலம் எதிரிக்கு ஈடு கொடுக்கும் அளவுக்குப் பலம் சேர்க்க முடியும். அப்படிச் செய்யாமல், தாங்கள் சொந்த தளத்தைவிட்டுச் சென்றால் யாரும் வாய் வார்த்தையால் கூடத் தங்களுக்கு உதவமாட்டான்.

காட்டில் எரியும் நெருப்புக்குக் காற்று உதவியாக இருக்கிறது. அதே காற்றுத்தான் விளக்கையும் அணைக்கிறது. இளைத்தவனை யார் மதிப்பார்கள்?

மேலும், பலசாலியோடுதான் உறவுகொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. பலவீனர்களோடு வைத்துக்கொள்கிற உறவும் தன்னைக் காத்துக்கொள்ள உதவும்.

மூங்கில் பலமில்லாததுதான் என்றாலும் அது கூட்டமாக இருந்தால் அதை வீழ்த்துவது கஷ்டம். பலமில்லாத அரசர்கள் ஒன்றாய்ச் சேர்ந்திருந்தால் அவர்களை ஜெயிக்க முடியாது.

அப்படியிருக்க, பலசாலிகளோடு உறவுகொள்வதைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா? எப்படியென்றால்,

பெரியவர்களோடு ஒன்று சேர்ந்தால் யாருக்குத்தான் உயர்வு இல்லை? தாமரை இலைமேல் இருக்கும் நீர்த்துளி முத்துப்போல் ஒளிபெறுகின்றது அல்லவா?

எனவே, அரசே! உறவு கொள்வதின்றி வேறு விதத்தில் பலம் சேர்க்க முடியாது. உறவுகொள்ள வேண்டும் என்பதே என் அபிப்ராயம்’’ என்று சிரஜீவி பதிலளித்தது.

இந்த அபிப்பிராயங்களைக் கேட்டபின் மேகவர்ணன் ஸ்திரஜீவி என்கிற மந்திரியைக் கேட்டது. மேகவர்ணனின் தந்தையிடம் வெகுகாலமாக மந்திரியாயிருந்தது ஸ்திரஜீவி. அது ஒரு தீர்க்கதரிசி. எல்லா ராஜநீதி சாஸ்திரங்களையும் கரைகண்டது. அதைப் பார்த்து மேகவர்ணன், ‘’பெரியவரே, நீங்கள் இங்கு இருக்கும்போதே இவர்கள் எல்லோரையும் நான் கேட்டதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அவர்கள் சொன்னதை எல்லாம் நீங்கள் கேட்டுவிட்டு எது சரியோ அதைச் சொல்வீர்கள் என்பதே அது. ஆகவே எது சரியோ அதன்படி கட்டளையிடுங்கள்’’ என்று சொல்லிற்று.

அதற்கு ஸ்திரஜீவி, ‘’குழந்தாய், இவர்கள் எல்லோரும் நீதி சாஸ்திரத்தைக் கொண்டுதான் சொன்னார்கள். ஒவ்வொன்றும் அந்தந்தக் காலத்துக்குச் சரியானதுதான். ஆனால் தற்சமயம் நயவஞ்சமாக நடப்பதற்குத் தான் காலம். ஒரு பழமொழி உண்டு

சண்டையிலும் சரி, சமாதானத்திலும் சரி, நம்பிக்கை வைக்கலாகாது. பலம்வாய்ந்த பாவியை நயவஞ்சகத்தைக் கொண்டுதான் வெல்லவேண்டும்.

தான் யாரையும் நம்பாமல், ஆசைகாட்டி எதிரியை நம்ப வைத்து அதன்மூலம் சுலபமாக வென்றுவிடலாம்.

நாசமாக்க விரும்பும் விரோதியை அறிவாளிகள் முதலில் தாங்களே வளர்த்துவிடுகின்றனர். சர்க்கரைப்பாகு முதலில் ஜலதோஷத்தை அதிகரிக்கச் செய்யும். பின்னால் அதை அறவே போக்கிவிடும்.

பெண்கள், பகைவர்கள், கெட்ட நண்பர்கள், குறிப்பாக விலைமாதர்கள் இவர்களிடம் நேராக நடந்துகொள்கிறவன் வாழ்வதில்லை.

கடவுள், பிராமணன், குரு ஆகியோரிடமும், தன்னிடத்திலும் ஒருவன் நேராகவே நடந்துகொள்ள வேண்டும். மற்றவர்களிடம் கபடமாகத்தான் நடக்க வேண்டும்.

மனதை அடக்கும் சந்நியாசி உலகமுழுவதையும் நேராகப் பார்க்கலாம். ஆனால் செல்வம் விரும்புகிறவர்கள், முக்கியமாக அரசர்கள், அப்படிச் செய்வதற்கில்லை.

நயவஞ்சகமாக நடந்துகொள்கிற நீ, நிச்சயமாக உன் ஸ்தானத்திலேயே இருப்பாய். பேராசையுள்ள பகைவனைச் சாவு சீக்கிரமே கொண்டுபோய் விடுகிறது.

மேலும், எப்போது விரோதியிடம் பலவீனம் ஏதாவது ஏற்படுகிறதோ அப்போது பார்த்து அவனைக் கொல்லவேண்டும்’’ என்று ஸ்திரஜீவி சொல்லிற்று.

‘’பெரியவரே, விரோதியின் இருப்பிடமே எனக்குத் தெரியவில்லையே! பின் எப்படி அவன் பலவீனம் தெரியப்போகிறது!’’ என்றது மேகவர்ணன்.

‘’குழந்தாய், அவன் இருப்பிடத்தை மட்டுமல்ல. அவனுடைய பலவீனத்தையும் ஒற்றர்கள் மூலமாக அறிந்து சொல்கிறேன்.

பசுக்கள் வாசனையைக்கொண்டு பார்க்கின்றன. பிராம்மணர்கள் வேதங்களைக் கொண்டு பார்க்கின்றனர். அரசர்கள் ஒற்றர்களைக் கொண்டு பார்க்கின்றனர். மற்றவர்கள் கண்களைக் கொண்டு பார்க்கின்றனர்.

இதைப்பற்றி இன்னொரு செய்யுளும் உண்டு:

தன் தரப்பிலுள்ள உதவியாளர்களையும், முக்கியமாக எதிர் தரப்பினரையும் பற்றிச் சிறந்த ஒற்றர்கள்மூலம் அறிந்து வைத்திருக்கும் அரசன் கெட்டநிலை அடைவதில்லை.

என்று ஸ்திரஜீவி சொல்லிற்று.

‘’பெரியவரே, உதவியாளர் எப்படிப்பட்டவர்கள்? எவ்வளவு பேர் இருக்க வேண்டும்? ரகசிய ஒற்றர்கள் எப்படி இருக்க வேண்டும்? எல்லாவற்றையும் சொல்லுங்கள்’’ என்றது மேகவர்ணன்.

‘’இந்த விஷயங்களை யுதிஷ்டிரர் கேட்டபோது நாரதர் சொன்னார்:

‘எதிர்தரப்பில் பதினெட்டுவிதமான உதவியாளர்களும், தன்தரப்பில் பதினைந்து வித உதவியாளர்களும் இருக்க வேண்டும். ஒவ்வொரு உதவியாளனுக்கும் மூன்று ரகசிய ஒற்றர்களை நியமித்து அவர்களைப் பற்றி அறிந்து வர வேண்டும். அவர்களின் மூலமாகத் தன் தரப்பு, எதிர் தரப்பு இரண்டும் வசமாகிவிடும்.

எதிரிக்கு உதவியளர்கள் பதினெட்டுபேர். தன் தரப்பில் பதினைந்து பேர். இவர்கள் ஒவ்வொருவரையும் அறிய இரகசிய ஒற்றர்கள் மூன்றுபேர் இருக்க வேண்டும்.

என்று சொல்லப்பட்டிருக்கிறது. உதவியாளன் என்பது இங்கே வகுத்த காரியத்தைத்தான் குறிக்கிறது. அதைச் சரியாக செய்யவிட்டால் அரசனுக்கு நாசமேற்படும். சரிவரச் செய்து முடித்தால் அரசனுக்கு உயர்வு தரும். அது எப்படி என்றால், எதிர்தரப்பில் மந்திரி, புரோகிதன், சேனாதிபதி, யுவராஜா, வாயில்காப்போன், அந்தப்புரக் காவலாளி, ஆலோசனையாளர், வரி வசூலிப்போன், கட்டியக்காரன், சடங்குகளைக் கவனிப்பவன், குதிரைலாயத்தின் தலைவன், பொருளாளன், யானைகளின் தலைவன், கணக்கன், போர் இலாகா மந்திரி, கோட்டையைக் காப்போன், அரசனின் அன்பன், காட்டு இலாகா அதிகாரி என்றபடி உதவியாளர்கள் இருக்கிறார்கள். இவர்களைப் பிரித்து விட்டால் எதிரியை வென்றுவிடலாம். தன் தரப்பில் பட்டத்தரசி, தாயார் செயலாளர், பூக்காரன், படுக்கையறைக்காவலாளி, ஒற்றர்களின் அதிகாரி, வான சாஸ்திரி, வைத்தியன், நீர் சேர்ப்பவன், தாம்பூலம் ஏந்துபவன், குரு, மெய்க் காப்பாளன், சமையல் அதிகாரி, சிவிகைபிடிப்போன், நடன மாதர்கள், என்று பதினைந்து உதவியாளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் மூலமாகத்தான் தன் தரப்பு வீழ்ச்சியடையும், எப்படி என்றால்,

வைத்தியன், வான சாஸ்திரி, குரு, தன் கட்சியிலேயே உளவு வேலை செய்வார்கள். பாம்புப்பிடாரனும், பைத்தியக்காரனும் எதிரிவசமுள்ள யாவற்றையும் அறிவார்கள்.

என்றது ஸ்திரஜீவி.

‘’பெரியவரே, காக்கைகளும் ஆந்தைகளும் கொன்றுகொள்ளும் அளவுக்கு இப்படிப் பகைத்துக்கொள்வானேன்?’’ என்று மேகவர்ணன் கேட்டது. ‘’கேள்’’ என்று ஸ்திரஜீவி சொல்லத் தொடங்கியது.

 

http://puthu.thinnai.com/?p=10898

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சதந்திரம் தொடர் 42 - அரசனைத் தேர்ந்தெடுத்த பறவைகள்
அன்னபூர்னா ஈஸ்வரன்


முன்பு ஒரு சமயம் அன்னப்பறவை, கொக்கு, குயில், மயில், சாதகப் பறவை, ஆந்தை, மாடப்புறா, புறா, நீலக்குயில், கழுகு, வானம்பாடி, நாரை, மைனா, மரங்கொத்திப் பறவை, இன்னும் பல பறவைகள் எல்லாம் ஒன்றுகூடி யோசனை செய்யத் தொடங்கின. ‘’நமக்குக் கருடன் தான் ராஜா. ஆனால் அவரோ மகாவிஷ்ணுவுக்குப் பணிவிடை செய்து வருகிறார். நம்மைக் கவனிப்ப தில்லை. ஆகவே அப்படிப்பட்ட போலி ராஜாவால் நமக்கு என்ன லாபம்? வலையில் சிக்கிவிடுவது போன்ற துக்கங்கள் நமக்கு ஏற்படும்போது அது நம்மைக் காப்பாற்றுவதில்லை.

கஷ்டமான நிலைமையிலும், அதைவிடக் கஷ்டமான நிலைமையிலும் யார் துயரத்தைப் போக்கிப் புத்துயிர் அளிக்கிறானோ அவனே எனக்கு ராஜா. சந்திரனுக்குச் சூரியன் ஒன்றே ராஜா. அதுபோல் அவன் ஒருவனுக்கே பணி விடை செய்வேன்.

மற்றவன் பெயரளவில்தான் ராஜா.

சதா துயரத்தால் பீடிக்கப்பட்டு பயந்துள்ளவர்களைக் காப்பாற்றாத அரசன், உண்மையில் அரச உருக்கொண்ட யமனே ஆவான்.

அறிவுக்குறைவான பண்டிதன், வேதம் கற்காத புரோகிதன், மக்களைக் காக்காத அரசன். வெறுப்பாகப் பேசும் மனைவி, ஊரை விரும்பும் இடையன், பணத்தில் ஆசை கொள்ளும் நாவிதன் – இவர்களை ஓட்டை விழுந்த கப்பலை விட்டுச் செல்வதைப்போல் துறக்க வேண்டும்.
.
ஆகவே பறவைகளின் அரசனாக வேறு யாரையாவது பொறுக்கி நியமிக்க வேண்டும்’’ என்று பேசின.

ஆந்தை பெரிய உருவம் உடையது அல்லவா? அதைப் பார்த்து மற்ற பறவைகள், ‘’இந்த ஆந்தை நமக்கு அரசனாக இருக்கட்டும். மகுடா பிஷேகத்துக்கு வேண்டிய எல்லாவிதமான பொருட்களையும் குவியல் குவியலாகக் கொண்டு வாருங்கள்’’ என்று சொல்லின. அதன்பிறகு, எல்லா புனித நதிகளிலிருந்தும் நீர் கொண்டுவரப்பட்டது. சக்கர அடையாளமுடைய பூ, மஞ்சள் தாமரை உள்ளிட்ட நூற்றெட்டு மலர்களாலான மாலை தயாரிக்கப்பட்டது. சிம்மாதனம் அமைக்கப்பட்டது. தரையில் ஏழு கண்டங்களும், சமுத்திரங்களும், மலைகளும் படமாக வரையப்பட்டன. புலித்தோல் விரிக்கப்பட்டது. பொற்கலசங்களில் ஐந்துவிதத் தளிர்கள், மலர்கள், அட்சதைகளை நிரப்பினர். அர்க்கியங்கள் தயாரிக்கப்பட்டன. ஸ்துதி பாடகர்கள் பாடினர். நான்கு வேதங்களையும் ஓதுவதில் நிபுணர்களான பிராமணர்கள் வேதம் ஓதினர். பெண்கள் மங்கல கீதங்கள் பாடினர். மஞ்சள் பூதிய அரிசி, வெண்கடுகம், பொரி, மஞ்சள்பொடி, பூமாலை, சங்கு ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட அட்சதைப் பாத்திரம் தயாரித்து முன்னால் வைத்தனர். ஆரத்தி எடுப்பதற்கு விதிப்படி தேவைப்பட்ட பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டன. மங்கல வாத்தியங்கள் முழங்கின. ஆந்தை உருவம் பொறித்த மேடையின்மீது சிம்மாதனம் நிறுவப்பட்டது. அபிஷேகத்தின் பொருட்டு ஆந்தையை அலங்கரித்துக்கொண்டிருந்தன. அந்த வேளையில், எங்கிருந்தோ கா கா என்று கொடூரமாகக் கத்தித் தன் வரவை அறிவித்தபடியே ஒரு காக்கை அங்கு வந்து சேர்ந்தது. ‘’ஓஹோ, என்ன இது? எல்லாப் பறவைகளும் ஒன்றுகூடி இருக்கின்றனவே! ஏதாவது உற்சவமோ?’’ என்று காக்கை எண்ணிற்று. காக்கையைப் பார்த்ததும் மற்ற பறவைகள் தங்களுக்கிடையே பேசிக்கொண்டன. ‘’பறவைகளுக்குள்ளே காக்கை சாமர்த்தியசாலி என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆகவே இவனுடைய பேச்சையும் கேட்கலாம்.

மனிதர்களில் நாவிதன் கெட்டிக்காரன்; பறவைகளில் காக்கை கெட்டிக்காரத்தனமுள்ளது; மிருகங்களில் நரி கெட்டிக்காரத்தனமுள்ளது. தபஸ்விகளில் வெள்ளையுடை தரித்தவன் கெட்டிக்காரன்.

என்றொரு பழமொழி உண்டு. மேலும்,

பல அறிவாளிகளையும் கூடிக்கலந்து பேசி, பல அத்தாட்சிகளையும் கொண்டு, பல கோணங்களிலிருந்து ஆலோசித்துச் செய்கிற காரியம் ஒருபொழுதும் வீணாவதில்லை.

என்றும் ஒரு பழமொழி இருக்கிறது’’ என்று பேசிக்கொண்டன.

ஆகவே, பறவைகள் காக்கையைப் பார்த்து, ‘’காக்கையே, பறவைகளுக்கு ராஜா இல்லை என்பது உனக்குத் தெரியும். எனவே, எல்லாப் பறவைகளும் சேர்ந்து இந்த ஆந்தையை ராஜாவாக அபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்திருக்கின்றன. ஆகவே நீயும் உன் அபிப்பிராயத்தைச் சொல். நீ சரியான வேளையில் வந்திருக்கிறாய்’’ என்றன.

காக்கை சிரித்தபடியே, ‘’கனவான்களே, இது சரியல்ல, அன்னப்பறவை, மயில், குயில், சகோரப்பறவை, சக்ரவாகம், புறா, கொக்கு முதலியவை முக்கியமாக இருக்கும்போது, பயங்கரமான முகத்தையுடைய இந்தப் பகல் குருடனை ராஜாவாக அபிஷேகம் செய்வது எனக்குச் சரியென்று தோன்ற வில்லை.

கொக்கிபோல் வளைந்த மூக்கு, அரைக்கண் பார்வை, கருணையும், அழகுமில்லாத முகம் கொண்டது ஆந்தை. சாந்தமாக இருக்கும்போதே அதன் முகம் அப்படியிருக்கிறது என்றால் கோபமடையும்போது எப்படியிருக்கும்? இயற்கையாகவே ஆந்தை கோபம் உள்ளது, அதிக உக்கிரமானது, கொடூரமானது, வெறுப்பாகப் பேசுகிற தன்மையுடையது. அதை அரசனாக ஆக்கினால் உங்களுக்கு என்ன நன்மை ஏற்படப்போகிறது?

மேலும், ஏற்கனவே கருடன் உங்களுக்கு அரசனாக இருக்கையில், இவனால் உங்களுக்கு என்ன பிரயோஜனம்? இவன் குணமுள்ளவனாகவே இருக்கட்டுமே, ஒருவன் அரசனாக இருக்கையில் இன்னொருவனை அரசனாக்குவது நல்லதல்ல.

தேசு நிறைந்த அரசன் ஒருவன் இருப்பதே உலகுக்கு நன்மை. பல அரசர்கள் இருந்தால், பிரளய காலத்தில் உதிக்கும் பல சூரியர்கள்போல் நாசம்தான் உண்டாக்குவார்கள்.

நிஜமான கருட ராஜாவின் பெயரைக் கேட்டாலே யாரும் உங்களைத் துன்புறுத்த அணுகுவதில்லை. எப்படி என்று கேட்டால்,

பெரிய அரசனின் பெயரைத் துஷ்டர்களின் முன் சொன்ன மாத்திரத்திலே நன்மை உண்டாகும். பெரிய காரியம் இருப்பதாகப் பாசாங்கு செய்வது ஒருவனுடைய நிலையை உயர்த்துகிறது. சந்திரனிடமிருந்து பெரிய காரியமாக வந்திருப்பதாகப் பாசாங்கு செய்த முயல் சுகமாக வாழ்ந்தது.

என்றொரு பழமொழி உண்டு’’ என்றது காக்கை.

‘’அது எப்படி?’’ என்று பறவைகள் கேட்கவே, காக்கை சொல்லத் தொடங்கியது

யானையை ஏமாற்றிய முயல்

ஒரு காட்டில் ஒரு யானையரசன் இருந்தது. அதன் பெயர் சதுர்தந்தன். அதன் பரிவாரமாகப் பல யானைகள் இருந்துவந்தன. யானைக் கூட்டத்தைக் காத்து, அது காலத்தைக் கழித்து வந்தது. ஒரு சமயத்தில் பன்னிரெண்டு வருஷங்கள் மழையே இல்லாமற்போய்விட்டது. அதனால் குளம், குட்டை, ஏரி, சதுப்பு நிலம் எல்லாம் வற்றிப்போய் விட்டன. எல்லா யானைகளும் யானையரசனிடம் போய், ‘’அரசே, தாகத்தின் வேதனை பொறுக்கமுடியாமல் சில யானைகள் சாகும் நிலைமையில் உள்ளன, சில செத்தும் விட்டன. ஆகவே தாகத்தைப் போக்கிக்கொள்ள உபாயம் ஏதாவது செய்யுங்கள்’’ என்று முறையிட்டன. உடனே யானையரசன் நீர்நிலையைக் கண்டுபிடிப்பதற்காக எட்டுத் திக்குகளுக்கும் யானைகளை அனுப்பியது. அவை காற்றைப் போல் வேகமாக சென்றன.

அவற்றில் கிழக்குத் திசையில் சென்ற யானைகள் முனிவர்களின் ஆஸ்ரமத்துக்குப் பக்கத்தில் உள்ள பாதையில் சுந்திரஸரஸ் என்ற ஒரு ஏரியைக் கண்டன. அன்னம், கொக்கு, மீன்கொத்தி, வாத்து, சக்ரவாகம், நாரை முதலான நீர்ப்பறவைகள் வசித்த அந்த ஏரி பார்க்க அழகாக இருந்தது. பலவிதமான மரங்கள் இரு கரைகளிலும் இருந்தன. அவற்றின் கிளைகள் மலர்களின் பாரத்தால் குனிந்து போயிருந்தன. கிளைகளில் இளந்தளிர்கள் நிறைந்திருந்தன. காற்று அடித்து அலைகள் எழும்பி நடனமாடிக்கொண்டே வந்து கரையில் மோதின. அதனால் அந்தச் சுத்த ஜலத்தில் உண்டான நுரை கரைகளை முத்தமிட்டது. யானையரசன் நீரில் மூழ்கியபோது, அதன் கன்னத்தில் இடைவிடாது பெருகிக்கொண்டிருந்த மதநீரைப் பருகி வந்த வண்டுகள் மேலே பறந்தன. அந்த மதநீரால் ஏரிநீர் வாசனை கூடியிருந்தது. கரைகளில் வளர்ந்திருந்த மரங்களின் இலைகள் கணக்கற்ற குட்டைகள்போல் விரிந்து சூரியனின் வெப்பத்தைத் தடுத்துத் தணித்தன. நீரில் மூழ்கிக் குளிக்கும் மலைக் கன்னியரின் பருத்த தொடைகளிலும், பிருஷ்டங்களிலும், ஸ்தனங்களிலும் அலைகள் மோதித் திரும்பியதில் பலவிதமான கம்பீரமான நாதங்கள் எழுந்தன. ஏரியில் பளிங்குபோன்ற நீர் நிறைந்திருந்தது. முழுதும் மலர்ந்த தாமரை மலர்கள் கூட்டம் கூட்டமாகப் புஷ்பித்து ஏரிக்குச் சோபிதம் அளித்தன. அதிகம் சொல்வானேன்? அது சுவர்க்கத்தின் ஒரு பகுதியாகவே காணப் பட்டது.

அதைக் கண்டுவிட்ட யானைகள் அதிவேகமாகத் திரும்பி யானை அரசனிடம் வந்தன. செய்தியைத் தெரிவித்தன.

அதைக் கேட்ட சதுர்தந்தன் தன் பரிவாரங்களோடு நாளடைவில் சந்திரஸரஸை அடைந்தது. சுலபமாக இறங்குவதற்குத் தகுந்த மாதிரி ஏரியைச் சுற்றிலும் சரிவுகள் இருந்தன. அந்தச் சரிவுகளில் யானைகள் இறங்கின. அப்போது அங்கே ஏற்கனவே வசித்துவந்த ஆயிரக்கணக்கான முயல்களின் தலைகளும், கழுத்துகளும், கைகால்களும் நசுக்கப்பட்டுவிட்டன. நீரைக் குடித்துக் குளித்துவிட்டு, யானையரசன் தன் பரிவாரங்களோடு வெளியே வந்து, ஒரு அடர்ந்த காட்டுக்குள் சென்றது.

கொல்லப்பட்டவைபோக மற்ற முயல்கள் எல்லாம் ஒரு அவசரக் கூட்டத்தைக் கூட்டின. ‘’இனி என்ன செய்யலாம்? யானைகளுக்கு வழி தெரிந்து விட்டது. எனவே தினசரி வந்து கொண்டிருக்கும். அவை இங்கு வராதபடி தக்க உபாயம் ஒன்று செய்ய வேண்டும்’’ என்று ஆலோசித்தன. அவற்றில் விஜயன் என்றொரு முயல் இருந்தது. குடும்பமும் உறவினர்களும் நசுக்கப்பட்டுத் துக்கமடைந்த அந்த முயல்களை விஜயன் பார்த்துவிட்டு, இரக்கத்துடன், ‘’நீங்கள் பயப்பட வேண்டாம். அவர்கள் மறுபடியும் இங்கே வரமாட்டார்கள். இது சத்தியம். ஏனென்றால் என் இஷ்டதெய்வத்தின் அருள் அப்படி வாய்த்திருக்கிறது’’ என்று சொல்லியது.

அதைக்கேட்டு சிலீமுகன் என்ற முயலரசன் விஜயனைப் பார்த்து, ‘’நண்பனே, அதில் சந்தேகமென்ன? காரணத்தைக் கேள்! விஜயன் நீதிநூல் சாரத்தில் தேர்ச்சி மிகுந்தவன். காலத்தையும் தேசத்தையும் நன்கு தெரிந்தவன். எங்கே விஜயனை அனுப்புகிறோமோ அங்கே வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

அதிகமாகப் பேசாமல் இதமாகவும், மிதமாகவும் நன்றாய் யோசித்தும், அர்த்தத்தை அலசியாராய்ந்தும் பேசுகிறவனால் எல்லாக் காரியங்களையும் சாதிக்க முடியும்.

உன் புத்திசாதுரியத்தைப் பார்த்து, முயலரசனாகிய என்னுடைய மூன்று பலங்களையும் யானைகள் தூரத்திலிருந்தபடியே அறிந்து கொள்ளும். எப்படியென்றால்,

ஒரு அசரனை நேரில் பார்க்கவிட்டாலும் அவனுடைய தூதனையோ ராஜப்பிரதிநிதியையோ பார்த்தே அந்த அரசன் புத்திசாலியா மூடனா என்று தெரிந்து கொள்வேன்.

என்றொரு பழமொழி உண்டு.

தூதன்தான் கட்டுப்போடுகிறான். தூதன்தான் கட்டையும் அவிழ்த்து விடுகிறான். தூதன்தான் காரியம் செய்து சத்ருக்களை ஜெயிக்கிறான்.

நீ போவது நானே நேரில் போவதுபோல், ஏனென்றால்,

இலக்கணப் பிழையற்ற பேச்சும், சாதுக்களின் மதிப்பைப் பெறத்தக்க பேச்சும் எல்லோருக்கும் சம்மதமான பேச்சும் அரசன் பேசிய பேச்சுக்குச் சமானம்.

காரியத்துக்கான பேச்சுப் பேசவேண்டும்; அந்தப் பேச்சில் முடிந்த வற்றை பலனளிக்கத் தக்கமாதிரி நிறைவேற்ற வேண்டும். சுருங்கச் சொன்னால், இதுதான் தூதனின் வேலை.

எனவே, நண்பனே, நீ போய் வா! அந்தத் தூதுவேலையே உன் இரண்டாவது இஷ்ட தெய்வமாயிருந்து உன்னைக் காக்கட்டும்’’ என்றது முயலரசன்.

விஜயன் போயிற்று. ஆயிரக்கணக்கான யானைகள் புடைசூழ யானையரசன் ஏரிக்கு வரப் புறப்பட்டுக் கொண்டிருப்பதை விஜயன் கண்டது. மலர்ந்த பூக்கள் நிறைந்த இலவங்க மரக்கிளைகளின் நுனித்துளிர்களாலான படுக்கையில் படுத்து, அதன் மகரந்தப் பொடியால் யானைகளின் உடம்பு பூசப்பட்டிருந்தது. மின்னல்கொடி படர்ந்து நீர் நிறைந்து செல்லும் கனத்த கருமேகங்கள்போல் அவற்றின் உடம்புகள் காட்சியளித்தன. யானைகளின் பிளிறு கனமாகவும், பயங்கரமாகவும் கேட்டது. மழைக்காலத்தில் மேகங்கள் மோதிக்கொள்வதால் ஏற்படும் இடியோசை போலவும் அதிலிருந்து பளிச்சிடும் மின்னல்கள் போலவும் இருந்தது. நிர்மலமான நீலோற்பல மலரிதழ்களைப்போல் அவற்றின் உடல்கள் ஒளி மிகுந்திருந்தன. சிறந்த நாகசர்ப்பம்போல அவற்றின் துதிக்கைகள் வளைந்து விளங்கின. இந்திரனின் ஐராவதம்போல் அவை இருந்தன. அவற்றின் தந்தங்கள் தேன் நிறமுடையவை; பளபளப்பாயும், கம்பீரமாயும் நீண்டு வளர்ந்திருந்தன. அவற்றின் அகன்ற கன்னங்களிலிருந்து பெருக்கெடுக்கும் மதநீரின் நறுமணத்தால் வசீகரிக்கப்பட்ட வண்டுக்கூட்டங்கள் யானைகளின் முகத்தின் அருகே ரமணீயமாக ரீங்காரம் செய்தன. துளிர்த்துப் பூத்துக் குலுங்கும் கிளைகளைப்போல் அவற்றின் காதுகள் மெல்ல அசைந்து நடனமாடின. அந்த யானைக்கூட்டத்தைப் பார்த்து விஜயன் யோசிக்கத் தொடங்கியது. ‘’என்னைப் போன்றவர்கள் இவனைக் கிட்ட நெருங்கவே முடியாது. ஏனென்றால்,

யானை தொட்டாலும் சாவு, பாம்பு மூச்சுவிட்டாலும் சாவு. அரசன் சிரித்தாலும் சாவு, துஷ்டன் கௌரவித்தாலும் சாவுதான்.

என்றொரு பழமொழி உண்டு. எனவே, என்னைத் தாக்கமுடியாத இடமாகப் பார்த்துப் பிடித்து உட்கார்ந்துகொண்டு, இந்த யானைகளோடு பேசுகிறேன்’’ என்று எண்ணியது.

எண்ணியபடியே முயல் ஒரு உயரமான கரடுமுரடான கற்குவியல்மேல் ஏறியமர்ந்தது. யானையைப் பார்த்து, ‘’யானை அரசனே! நீ சௌக்கியந்தானா?’’ என்று கேட்டது. யானை அரசன் சுற்றுமுற்றும் கூர்ந்து பார்த்துவிட்டு, ‘’யார் அது?’’ என்றது. ‘’நான் ஒரு தூதன்’’ என்றது முயல். ‘உன்னை அனுப்பியது யார்?’’ என்று கேட்டது யானை அரசன்.

‘’சந்திரபகவான் என்னை அனுப்பியிருக்கிறார்’’ என்று பதிலளித்தது முயல். ‘’உன் காரியத்தைச் சொல்’’ என்றது யானை அரசன்.

முயல் பதில் சொல்லத் தொடங்கியது: தன் காரியத்தை நிறைவேற்ற வந்திருக்கும் தூதனுக்குக் கெடுதல் செய்யக்கூடாது என்பதை நீங்கள் அறிவீர்கள். எல்லா அரசர்களுக்கும் தூதர்கள் தான் வாய்மாதிரி இருக்கிறார்கள்.

கத்திகளை உருவிக்கொண்டு நின்றாலும், பந்துவர்க்கங்களைக் கொன்று கொண்டிருந்தாலும், தூதன் நிந்தனையாகப் பேசினால் தூதர்களை மட்டும் அரசன் கொல்லக்கூடாது.

எனவே, சந்திரபகவானின் கட்டளையின்பேரில் நான் பேசுகிறேன். ஏ மரிக்கத்தக்கவனே, நீ உன் பலத்தையோ எதிரியின் பலத்தையோ தெரிந்துகொள்ளாமல் ஏன் பிறருக்குப் பாதகம் செய்து கொண்டிருக்கிறாய்?

தன் பலத்தையும் உணராமல், பிறர் பலத்தையும் விசாரித்தறியாமல் முட்டாள்தனமாகக் காரியத்தில் இறங்குபவன் ஆபத்தைத்தான் விரும்பிச் சேருகிறான்.

என் பெயரைத் தாங்கி புகழ்பெற்றிருக்கும் அந்தச் சந்திரஸரஸை அநியாயமாக நீ கலக்கிவிட்டிருக்கிறாய். அங்கே என் மடியில் விளையாடிக்கொண்டு, என்னால் காக்கப்பட்டு வரும் முயலரசனின் இனத்தைச் சேர்ந்த பல முயல்களைக் கொன்றிருக்கிறாய். அது ஒரு பெரிய குற்றம். இன்னொரு விஷயம். எனக்குச் ‘சசாங்கன்’ (முயலை அடையாளமாக உள்ளவன்) என்று உலகெங்கம் புகழ்பெற்ற பெயர் ஒன்று உண்டு என்பது உனக்குத் தெரியாதா? நீட்டிப் பேசுவதினால் என்ன பலன்? டூந்தக் காரியத்தைக் கைவிட்டு நீ போய்விடவில்லை என்றால் உனக்குப் பெரிய அனர்த்தம் என்னால் விளையும். விட்டுப்போய்விட்டால் உனக்குப் பெரிய நன்மையுண்டாகும். என் நிலவொளியில் நீராடியபடியே இந்தக் காட்டில் நீயும் உன் பரிவாரங்களும் இஷ்டம்போல் இன்பமாக விளையாடிக்கொண்டிருக்கலாம். இல்லாவிட்டால் நான் நிலவைப்பொழியாமல் இருந்து கொள்வேன். சூரிய வெப்பத்தில் நீயும் உன் பரிவாரங்களும் துன்பப்பட்டு நாசமடைவீர்கள்’’ என்று சந்திரன் சார்பில் முயல் சொல்லியது.

இதைக்கேட்டு யானை அரசன் மிகுந்த மனக்கவலை அடைந்தது. ரொம்ப நேரம் யோசித்தது. கடைசியில், ‘’நண்பனே, சந்திரபகவானுக்கு நான் பாதகம் செய்தது உண்மையே. இனிமேல் அவரைப் பகைத்துக்கொள்ள மாட்டேன். சந்திரனின் மன்னிப்பை நான் பெறுவதற்குச் சீக்கிரமாக நீ ஒரு வழியைக் காட்டு. நான் போய் மன்னிப்புக் கேட்கிறேன்’’ என்றது யானை அரசன்.

‘’நீ தனியாக வா. நான் வழிகாட்டுகிறேன்’’ என்றது முயல். பிறகு முயல் யானையை அழைத்துக்கொண்டு சந்திரஸரஸ¤க்குப் போயிற்று. அப்போது வானம் நிர்மலமாயிருந்தது. கிரஹங்களும், சப்தரிஷி மண்டலமும், தாரகைகளும் வானத்தில் ஏறி உலா வந்து கொண்டிருந்தன. அவற்றின் மத்தியிலே சுடர்விட்டுப் பிரகாசிக்கும் அழகிய நிலாவட்டம் தகதகவென்று துடித்துக் காய்ந்து கொண்டிருந்தது. சகல கலைகளையும் விரித்து, பூர்ண வடிவத்திலே சந்திரிகை பொலிவோடு பவனிவர, அதன் நிழல் ஏரியில் தென்பட்டது.

பூர்ண சந்திரனைப் பார்த்துவிட்டு யானை அரசன் ‘நான் சுத்தம் செய்துகொண்டு தெய்வத்தை வணங்குகிறேன்’ என்று சொல்லியது. இரண்டுபேர் கட்டியணைக்கத்தக்க அளவுக்குப் பருமனுள்ள தன் துதிக்கையை நீரில் விட்டது. உடனே நீர் கலங்கியது. சுழலும் சக்கரத்தில் ஏறியவன் மாதிரி நிலாவட்டம் சுற்றிச் சுற்றி அசைந்தாடியது. ஒரே சமயத்தில் ஆயிரம் சந்திரிகைகள் நீரில் தோன்றின.

உடனே விஜயன் மிகுந்த பரபரப்புடன் வந்து யானை அரசனைப் பார்த்து, ‘’கஷ்டம், கஷ்டம்! அரசே, சந்திரனை நீங்கள் இரண்டு மடங்காகக் கோபங்கொள்ளச் செய்திருக்கிறீர்கள்’’ என்றது.

சந்திரபகவான் என்னைக் கோபிப்பானேன்?’’ என்று யானை அரசன் கேட்டது.

‘’இந்த நீரைத் தாங்கள் தொட்டதினால்தான்’’ என்றது முயல். உடனே யானை அரசன் தன் காதுளை மடக்கி பூமியில் குனிந்து தலை வணங்கி சந்திரபகவானிடம் மன்னிப்புக் கோரியது. பிறகு விஜயனைப் பார்த்து, ‘’நண்பனே, மற்ற விஷயங்களுக்கும் என் சார்பில் சந்திரனிடம் நீ மன்னிப்புக் கேள். இனிமேல் இங்கே நான் வரமாட்டேன்’’ என்று சொல்லிற்று. பிறகு யானை வந்தவழியே திரும்பிப் போய்விட்டது.

அதனால்தான், ‘பெரிய காரியமாக…’ என்ற செய்யுளைச் சொன்னேன்’’ என்று கதையை முடித்தது காக்கை. அது மேலும் பேசிற்று: ‘’அதைவிட மோசமாக விஷயம் ஒன்றிருக்கிறது. இந்த ஆந்தை ஒரு துராத்மா, பாப எண்ணங்கொண்டவன், கடைகெட்ட நீசன். பிரஜைகளைக் காப்பாற்றப் பலமில்லாதவன், காப்பது ஒருபுறமிருக்கட்டும், இவனாலேயே உங்களுக்கு ஆபத்து உண்டாகுமே!

ஒரு நீசன் நீதிபதியாக அமர்ந்தால் வாதிப்பிரதிவாதிகளுக்கு என்ன சுகம்? பூனையிடம் நியாயம் கேட்கப்போய் முயலும் தித்திரிப் பறவையும் இறந்தன.
என்ற பாட்டு உங்களுக்குத் தெரிந்திருக்குமே?’’ என்றது காக்கை. ‘’அது எப்படி?’’ என்று பறவைகள் கேட்டன. காக்கை சொல்லத் தொடங்கியது:

http://inthiya.com/?p=11025

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சதந்திரம் தொடர் 43 – பூனை வழங்கிய தீர்ப்பு
அன்னபூர்னா ஈஸ்வரன்


ஒரு காலத்தில் ஒரு மரத்தில் நானே இருந்துவந்தேன். அதே மரத்தடியில் இன்னொரு பறவை, ஒரு தித்திரிப்பறவை, இருந்து வந்தது. அண்டை வீட்டுக்காரர்களாக இருந்ததால் எங்களிடையே பிரிக்க முடியாத அன்பு ஏற்பட்டது. சாப்பாடும், விளையாட்டும் முடிந்த பிறகு ஒவ்வொரு நாளும் நாங்கள் இருவரும் ஒன்று கூடுவோம். பிற்பகல் வேளையில் பல நீதி வாக்கியங்களைச் சொல்லிக் கொள்வோம். புராணம் முதலிய கதைகளைச் சொல்வோம். விடுகதை புதிர் போட்டுக் கொள்வோம். ஒருவர்க்கொருவர் பரிசு கொடுத்துக் கொண்டு விநோதமாகக் காலம் கழித்து வந்தோம்.

ஒருநாள் தித்திரிப் பறவை மற்றப் பறவைகளோடு இரைதேடப் பறந்து போயிற்று. முதிர்ந்த நெல் நிறைய இருக்கும் ஒரு இடத்தை அடைந்தது. பிறகு குறித்த வேளையில் திரும்பி வரவில்லை. அது வராமற்போனதால் எனக்குத் துக்கம் உண்டாயிற்று. இன்றிரவு என் நண்பனாகிய தித்திரிப் பறவை ஏன் திரும்பி வரவில்லை? யாராவது வலையில் பிடித்துவிட்டு அதைக் கொன்றிருப்பார்களா?’’ என்று ஆலோசித்தேன். இப்படிக் கவலையுடன் பல நாட்கள் சென்றன.

ஒருநாள் சாயங்காலம் இருக்கும். தித்திரிப்பறவையின் பழைய பொந்தில் ஒரு முயல் வந்து நுழைந்தது. தித்திரி வரும் என்ற நம்பிக்கை எனக்குப் போய்விட்டபடியால் நான் முயலைத் தடுக்கவில்லை.

பிறகு, ஒருநாள் தித்திரிப்பறவை, அரிசி நிறையச் சாப்பிட்டு உடல் பருத்துப்போய், தன் பழைய வீட்டின் ஞாபகம் வரவே திரும்பி வந்து சேர்ந்தது. இதில் ஆச்சரியமொன்றும் இல்லை.

ஒருவன் தரித்திரனாயிருந்தாலும் தன் நாட்டில், தன் ஊரில், தன் வீட்டில் பெறுகிற இன்பத்தைப்போல் சுவர்க்கத்தைச் சுற்றிவந்தாலும் பெறுவது கிடையாது.

பொந்தில் முயல் இருப்பதைத் தித்திரி கண்டுவிட்டது. நிந்தனை செய்யும் குரலில், ‘’ஏ முயலே, நீ செய்தது அழகல்ல. என்ன, என் வீட்டில் நுழைந்திருக்கிறாயே! சீக்கிரமாக வெளியே போய்விடு!’’ என்றது.

‘’மூடனே, நீ இருக்கிறவரைதான் எதுவும் உன் வீடாகும் என்பது உனக்குத் தெரியாதா?’’ என்றது முயல்.

‘’அப்படியா? அண்டை வீட்டுக்காரர்களைக் கேட்போம் வா, தர்ம சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறபடி,

தொட்டி, கிணறு, குளம், வீடு, தோட்டம் — இவை யாருக்குச் சொந்தம் என்ற பிரச்னையை அண்டை வீட்டுக்காரர்களின் சாட்சியே நிர்ணயிக்கப் போதுமானது, என்று மனு சொல்லியிருக்கிறார்.

வீடோ, வயலோ, கிணறோ, தோட்டமோ, நிலமோ சர்ச்சையிலிருக்கும்போது அண்டை வீட்டுக்காரர்களின் சாட்சியமே வழக்கை நிர்ணயிக்கும்.

என்றது தித்திரி.

‘’மூடனே, நீதி வாக்கியத்தைக் கேட்டதில்லையா?

அண்டை வீட்டுக்காரனின் கண்ணெதிரே யார் வயல் முதலியவற்றைப் பத்து வருஷங்களுக்கு அனுபவித்து வருகிறானோ அவன் விவகாரத்தில் சாட்சியங்கள் செல்லாது. அவன் விஷயத்தில், கண்கூடாகக் கண்டதே சாட்சி.
என்பது உனக்குத் தெரியாதா? அதேபோல், நீ நாரதருடைய வாக்கைக் கேள்விப்பட்டதில்லையா?

பத்து வருஷ அனுபோகமே ஒரு மனிதனுக்கு பாத்தியதை அளித்துவிடுகிறது. பறவைகள், மிருகங்கள் பொறுத்தவரை அவை அங்கே வசித்தாலே போதும், அந்தந்த இடம் அவற்றிற்குச் சொந்தமாகும்.

ஆகவே இது உன் வீடாகவே இருந்தபோதிலும் நான் நுழைந்தபோது இது காலியாக இருந்தது. ஆகவே இது இப்போது எனக்குத்தான் சொந்தம்’’ என்றது முயல்.

‘’சரி, சரி, நீ நீதி வாக்கியத்தைச் சாட்சியாகக் குறிப்பிடுவதால் என்னோடு வா நிபுணர்களைப் பார்த்துக் கேட்போம். அவர்களின் தீர்ப்புப்படி அது உன்னுடையதாகவோ என்னுடையதாகவோ ஆகட்டும்’’ என்றது தித்திரி. ‘’சரி’’ என்றது முயல். வழக்கைத் தீர்த்துக்கொள்ள, இரண்டும் புறப்பட்டுப் போயின. நானும் அவர்களின் பின்னே போனேன். எனக்கும் ஒரு ஆவல் பிறந்துவிட்டது. ‘’என்ன நடக்கிறது என்று பார்ப்போமே’’ என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன்.

சிறிது தூரம் போயிருப்பார்கள். அதற்குள் முயல் தித்திரியைப் பார்த்து, ‘’நண்பனே, நம் விவகாரத்தை யார் தீர்த்து வைக்கப் போகிறார்கள்?’’ என்று கேட்டது. ‘’மெல்லிய காற்று வீசி எழும்பும் அலைகளாலும், அவை ஒன்றோடொன்று மோதிக்கொள்வதாலும் எழுகிற கலகலவென்ற ஓசையோடு கூடிய புனிதமான கங்கையாற்றின் பக்கத்தில் ஒரு மணல் திட்டு இருக்கிறது. அங்கே தீர்க்க கர்ணன் என்றொரு பூனை இருக்கிறது. அது தவத்திலும், நியமத்திலும், விரதங்களிலும், யோகங்களிலும் சிறந்து, கருணையுள்ளம் பெற்றிருப்பது’’ என்றது தித்திரி.

ஆனால் அந்தப் பூனையை நேரில் பார்த்தபோது முயல் பயந்து நடுங்கிவிட்டது. ‘’வேண்டாம், வேண்டாம். இந்தப் போக்கிரியிடம் போக வேண்டாம்.

தவக்கோலத்திலிருந்தாலும் நீசர்களை நம்பக்கூடாது. அநேக புண்ணிய ஸ்தலங்களில் கபட சந்நியாசிகள் காணப்படுவதுண்டு.

என்று சொல்கிறார்கள்’’ என்றது முயல்.

இந்தச் சொற்களைத் தீர்க்க கர்ணன் (பூனை) கேட்டது, சுக வாழ்க்கை நடத்துவதற்காகத்தான் அந்தப் பூனை தவக்கோலத்தை ஏற்று வந்தது. முயலையும், தித்திரியையும் நம்பவைப்பதற்கு விரும்பியது. எனவே அது சூரியனை நேராகப் பார்த்தபடி பார்வையைச் செலுத்தி, முன்னங்கால்களை உயரத் தூக்கி, பின்னங்கால்களின் மேல் உட்கார்ந்து கொண்டது. கண்களை மூடிமூடித் திறந்தது. நல்ல சொற்களால் அவர்களை வஞ்சிக்க வேண்டி தர்மோபதேசம் செய்யத் தொடங்கியது. ‘’ஐயோ, இந்த சம்சாரமே சாரமில்லாதது. இந்த உயிர் ஒரே வினாடியில் போய்விடக் கூடியதல்லவா? காதல் வாழ்க்கை கனவுக்குச் சமானமே. குடும்பப்பற்று இந்திர ஜாலம் போல் ஒரு மாயவித்தை. ஆகவே அறவழியைவிட்டால். வேறு கதி இல்லை.

அறவழி பற்றி நிற்காதவனுக்கு நாட்கள் வந்து போய்க்கொண்டிருக்கின்றன. கருமானின் துருத்திபோல் மூச்சு வாங்கிவிட்டுக் கொண்டிருக்கிறானே யொழிய, அவன் உண்மையில் வாழவில்லை.

மானத்தையும் மறைக்காமல், ஈயையும் கொசுவையும் ஓட்டாமல் இருக்கிற நாய்வால் மாதிரி, அறவழியில் நிற்காத கல்வியும் வீணே.

தானியங்களில் பதர், பறவைகளில் வௌவால், பூச்சிகளில் கொசு; இவற்றிற்குத் தர்மம் என்பது துளிகூடக் கிடையாது.

மரத்தைவிட பூவும் பழமும் சிறந்தவை. தயிரைவிட நெய் சிறந்தது. பிண்ணாக்கைவிட எண்ணெய் சிறந்தது. மனிதனைவிட தர்மமே சிறந்தது.

திடச்சித்தமே எல்லாக் காரியங்களுக்கும் சிறந்தது என்று அறிவாளிகள் புகழ்கின்றனர். ஆனால், எவ்வளவோ கட்டுத்தளைகள் தடுத்தபோதிலும், தர்ம சிந்தனையே துரிதமாக வேலையை முடிக்கிறது.

அதிகமாக விவரிப்பதில் லாபமென்ன? அறத்தைப் பற்றிச் சுருங்கச் சொல்வது; புண்ணியம் தேடுவதானால் பரோபகாரம் செய்! பாவம் தேடுவதானால் பிறரைத் துன்புறுத்து!

பூனையின் தர்மோபதேசத்தைக் கேட்ட முயல், ‘தித்திரிப் பறவையே, இந்த நதிக்கரையிலிருப்பவன் தபஸ்வியாகவும், தர்மவாதியாகவும் இருக்கிறான். இவனைக் கேட்போம், வா!’’ என்றது.

‘’என்ன இருந்தாலும், அவன் நம்முடைய இயற்கை விரோதி. தூரத்தில் நின்றுகொண்டே கேட்போம்’’ என்றது தித்திரி. பிறகு இரண்டும் பூனையைக் கேட்கத் தொடங்கின. ‘’ஏ! தபஸ்வியே, தர்மோபதேசம் செய்பவனே, எங்களுக்கிடையே ஒரு வழக்கு உண்டாகிவிட்டது. அதைத் தர்ம சாஸ்திரத்தின்படி தீர்த்துவை. எங்கள் இருவரில் யார் பொய் சொல்கிறானோ, அவனை நீ சாப்பிடலாம்’’ என்றன.

‘’நண்பர்களே, அப்படிச் சொல்லாதீர்கள்’’ என்றது பூனை. ‘’பலாத்காரச் செய்கை என்பது நரகத்துக்கு வழிகாட்டியாகும். அதை நான் வெறுக்கிறேன்.

அறத்தின் முதல் கோட்பாடு அஹிம்சையே. எனவே, எல்லோரிடமும் இதமாக நடந்துகொள்! கொசு, பேன், பூச்சிகளானாலும் அவற்றையும் காக்கவேண்டும்.

இம்சை செய்யும் மிருகங்களைத் தயையின்றிக் கொல்பவன்கூட கோரமான நரகத்தை அடைகிறான். என்றால்,

ஒரு பாவமுமறியாத பிராணிகளைத் துன்புறுத்துபவனைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?

மேலும், யாககாரியங்களுக்காகப் பசுக்களைக் கொல்கிற மூடர்கள் கூட சுருதியின் உள்ளர்த்தத்தை அறிந்தவர்கள் அல்ல. ‘’ஆடுகளைக் (அஜம்) கொண்டு யாகம் செய்ய வேண்டும்’’ என்று யாராவது சொன்னால், அந்த இடத்தில் ‘அஜம்’ என்ற சொல்லுக்கு ஏழு வருஷங்களாகப் புழக்கத்திலுள்ள தானியம் என்றுதான் அர்த்தம். அந்த அர்த்தத்தை அவர்கள் அறியவில்லை.

மரத்தை வெட்டுபவனும், பசுக்களைக் கொல்கிறவனும் போர் செய்து ரத்தக்கிளறி உண்டாக்குகிறவனும் சுவர்க்கத்திற்குப் போகிறான் என்றால், பிறகு நரகத்திற்குப் போகிறவர்கள்தான் யார்?

ஆகவே நான் யாரையும் சாப்பிடமாட்டேன். அது இருக்கட்டும். நான் கிழவன். தூரத்திலிருந்து கொண்டு உங்களுடைய பேச்சைக் கேட்க முடியவில்லை. இருவரில் ஜெயித்தவன், தோற்றவன் யார் என்று எப்படி நான் தீர்மானிப்பேன்? அருகில் வந்து விவகாரத்தைச் சொல்லுங்கள். அதைக் கேட்டுவிட்டு உங்களுடைய வழக்கின் நியாயத்தை அறிந்து தீர்ப்பளிக்கிறேன். நான் மறுஉலகு அடைவதற்குத் தடையாக இல்லாதவாறு அந்தத் தீர்ப்பு இருக்கட்டும்.

கர்வத்தாலோ, பேராசையாலோ, கோபத்தாலோ, பயத்தாலோ, நியாயத்துக்கு மாறாக நடப்பவன் நரகத்தை அடைகிறான்.

என்றொரு பழமொழி உண்டு. மேலும்,

ஒரு ஆட்டுக்குத் தீங்கு செய்வது ஐந்து உறவினர்களைக் கொன்ற பாவத்துக்குச் சமம். ஒரு மாட்டுக்குத் தீங்கு செய்வது பத்து பேர்களைக் கொன்ற பாவத்துக்குச் சமம். ஒரு பெண்ணுக்குத் தீங்கு செய்வது நூறு பேர்களைக் கொன்ற பாவத்துக்குச் சமம். ஒரு மனிதனுக்குத் தீங்கு செய்வது ஆயிரம் பேர்களைக் கொன்ற பாவத்துக்குச் சமம்.

ஆகவே, நீங்கள் பயப்படாமல் என் காது அருகில் வந்து தெளிவாகச் சொல்லுங்கள்’’ என்றது பூனை.

விஷயத்தை வளர்ப்பானேன்? இப்படிப் பேசி நீசப்பூனை அவர்களை நம்பவைத்தது. அவை இரண்டும் அதன் அருகில் சென்றதும், அந்த வினாடியே அவர்களில் ஒருவனைக் கால்களால் பிடித்துக்கொண்டது. மற்றொருவனை ரம்பம்போன்ற தன் பற்களால் கௌவிப் பிடித்துக்கொண்டது. அவர்கள் இருவரும் செத்துவிட்டதும், பூனை அவைகளைத் தின்றது.

அதனால்தான் ‘நீசன் நீதிபதியாக அமர்ந்தால் வாதி பிரதிவாதிகளுக்கு என்ன சுகம்?…’ என்றெல்லாம் சொல்லலானேன்’’ என்றது காக்கை. மேலும் தொடர்ந்து பேசுகையில் ‘’ஆகவே, நீங்களும் இந்தப் பகல் குருடனாகிய ஆந்தையை அரசனாக்கினால் இரவில் கண் தெரியாதவர்களாகிய உங்களுக்கும் தித்திரிப்பறவையின் கதிதான் ஏற்படும். நன்றாக யோசித்துக் தக்கபடி செய்யுங்கள்’’ என்றது காக்கை.

காக்ககையின் வார்த்தைகளைக் கேட்டதும்,

‘’அவன் சொல்வதும் நியாயம்தான்’’ என்று பறவைகள் பேசிக் கொண்டன. ‘’அரசனைத் தேர்ந்தெடுக்க மறுபடியும் ஒன்றுகூடி யோசிப்போம்’’ என்று கூறிவிட்டு எல்லாப் பறவைகளும் திரும்பிப் போய்விட்டன. பகல் குருடாகிய ஆந்தை மட்டும் தன் மனைவியோடு சிம்மாதனத்தில் உட்கார்ந்திருந்தது. மகுடாபிஷேகம் நடக்கும் என்று வீணாக எண்ணிக் கொண்டிருந்தது. ‘’ஏய், யார் அங்கே? அபிஷேகம் செய்வது தாமதப் படுவானேன்?’’ என்று கூவியது. அதற்கு ஆந்தையின் மனைவி, ‘’அன்பரே, உங்களுடைய அபிஷேகத்திற்குக் காக்கை தடங்கல் ஏற்படுத்திவிட்டது. பறவைகள் எல்லாம் எல்லாத் திக்குகளிலும் பறந்து போய்விட்டன. அந்தக் காக்கை மட்டும் இங்கே தனியே உட்கார்ந்து கொண்டிருக்கிறது. என்ன காரணமோ தெரியவில்லை. ஆகவே சீக்கிரம் எழுந்திருங்கள், உங்களை வீட்டுக்கு அழைத்துப்போகிறேன்’’ என்று சொல்லிற்று.

அதைக்கேட்டு துக்கமடைந்தது ஆந்தை. அது காக்கையைப் பார்த்து, ‘’ஏ துஷ்டனே, ஏன் நீ எனக்குப் பாதகம் செய்தாய்? ராஜ்யாபிஷேகத்துக்கு ஏன் தடங்கல் ஏற்படுதினாய்? இனிமேல் நாமிருவரும் பகைவர்களே.

அம்பால் அடிபட்டாலும், மழுவினால் வெட்டுப்பட்டாலும், காட்டுமரம் வளரத்தான் செய்கிறது. ஆனால் வெறுக்கத்தக்க கெட்ட சொல்லால் உண்டாகிற புண் ஆறுவதேயில்லை.

என்றொரு பழமொழி உண்டு’’ என்றது ஆந்தை. பிறகு அது தன் மனைவியுடன் தன் இடத்திற்குப் போய்விட்டது. காக்கை யோசிக்கத் தொடங்கியது. ‘’ஐயோ, இப்படிப் பேசி வீணாகப் பகை சம்பாதித்துக் கொண்டேனே!

சமய சந்தர்ப்பமறியாத பேச்சு, தகுதியற்ற பேச்சு, கொடூரமான வெறுப்பான பேச்சு, காரணமற்ற பேச்சு, தனக்கும் நன்மையளிக்காத பேச்சு — இப்படிப்பட்ட பேச்சுக்கள் விஷமாகவே முடிகின்றன.

ஒருவன் பலசாலியாகவும், புத்திசாலியாகவும் இருந்தபோதிலும் தானாகப் பகைமையை உண்டாக்கிக் கொள்ளக்கூடாது. ஊரில் வைத்தியன் இருக்கிறான் என்பதற்காகக் காரணமின்றி யாராவது விஷத்தைக் குடிப்பார்களா?

சபை நடுவில் அறிவாளி ஒரு பொழுதும் பிறரை நிந்திக்கவே கூடாது. நீ பேசுவது உண்மையான பேச்சாக இருக்கலாம். என்றாலும் அது வருத்தமளிக்கிறதாக இருந்தால் அதைப்பேசாதே!

ஆப்த நண்பர்களுடன் அடிக்கடி கலந்தாலோசித்து, சுயபுத்தியையும் செலுத்தி ஆராய்ந்து பார்த்துக் காரியத்தில் ஈடுபடுகிற புத்திசாலியிடம்தான் செல்வமும் கீர்த்தியும் சேருகிறது.

என்று காக்கை சொல்லிவிட்டு அந்த இடத்தைவிட்டுப் பறந்து சென்றது. இப்படித்தான், குழந்தாய், நமக்கும் ஆந்தைகளுக்கும் பரம்பரையாகப் பகை உண்டாயிற்றே’’ என்றது ஸ்திரஜீவி.

‘’இந்நிலையில் நாம் என்ன செய்வது?’’ என்று மேகவர்ணன் கேட்டது. ‘’அதற்கு ஒரு சரியான மார்க்கம் இருக்கிறது. அந்த ஆறு உபாயங்களைக் காட்டிலும் மேலான வழி அது. அதை நான் பின்பற்றப் போகிறேன். நானே நேரில் தலைமை வகித்துச் சென்று எதிரியை ஜெயிக்கிறேன். அவர்களை வஞ்சித்து, கொல்லத்தக்க நிலைக்குக் கொண்டு வருகிறேன்.

அதிக அறிவும், ஞானமும், பலமும் ஒருவனுக்கு இருந்தாலும் அவனைத்திறமையுள்ள போக்கிரிகள் வஞ்சிக்க முடியும், ஆட்டைச் சுமந்து சென்ற பிராம்மணன் வஞ்சிக்கப் பட்டதுபோல!

என்றது ஸ்திரஜீவி. ‘’அது எப்படி?’’ என்று மேகவர்ணன் கேட்க, அது சொல்லத் தொடங்கியது:


http://inthiya.com/?p=11231

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சதந்திரம் தொடர் 44 – வேதியனும் திருடர்களும்

அன்னபூர்னா ஈஸ்வரன்


ஒரு ஊரில் மித்ரசர்மா என்றொரு பிராம்மணன் இருந்தான். அவன் விடாமுயற்சியோடு அக்கினிஹோத்திரங்களைச் செய்துகொண்டு இருந்துவந்தான். தை மாதத்தில் ஒரு நாள். இளங்காற்று வீசியது. வானத்தை மேகங்கள் மறைத்தன. மழை சிறு தூறலாகப் பெய்தது. அந்த வேளையில் பசுதானம் கேட்பதற்காக அந்தப் பிராம்மணன் வேறொரு கிராமத்துக்குச் சென்றான். அங்கே வேறு ஒரு பிராம்மணனிடம், ‘’பிராம்மணா! வரும் அமாவாசையன்றைக்கு நான் யாகம் செய்யப் போகிறேன். அதற்கு ஒரு பசுவை எனக்குக் கொடு!’’ என்றான்.

சாஸ்திரம் சொல்லியபடி அவன் மித்ரசர்மாவுக்கு ஒரு கொழுத்த ஆட்டைக் கொடுத்தான். அதை ஓட்டிப் பார்த்து நல்ல ஆடுதான் என்று கண்டுகொண்டு, மித்ரசர்மா அதைத் தோளில் சுமந்தபடியே தன் ஊருக்குத் திரும்ப அவசரமாகக் கிளம்பினான்.

திரும்பி வரும் வழியில், அவன் மூன்று போக்கிரிகளைச் சந்தித்தான். மூவரும் பசியால் தொண்டை வறண்டு போயிருந்தனர். மித்ரசர்மாவின் தோள்மேல் இருந்த கொழுத்த ஆட்டைக் கண்டனர். ‘’இந்த ஆட்டைத் தின்றால் இன்றைக்குக் குளிரும் பனியும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது. இவனை ஏமாற்றி ஆட்டைத் திருட வேண்டும்.’’ என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர். பிறகு அவர்களில் ஒருவன் தன் வேஷத்தை மாற்றிக்கொண்டு வேறு வழியாக வந்து மித்ர சர்மாவைப் பார்த்து, ‘’பிராம்மணனே, ஒழுக்கத்துக்கு விரோதமான, கேலிக்கிடமளிக்கும் செய்கையை நீ ஏன் செய்கிறாய்? அழுக்குப்பிடித்த நாயைத் தோளில் சுமந்து செல்கிறாயே!

நாய், கோழி, சண்டாளன், கழுதை, ஒட்டகம் — இவையெல்லாம் தொட்டாலே தோஷம், அவற்றைத் தொடாதே!

என்ற செய்யுளை நீ கேட்டதில்லையா?’’ என்று கேட்டான்.

பிராம்மணனுக்குக் கோபம் வந்துவிட்டது. ‘’நீ என்ன குருடனா? ஆட்டை நாயாக்குகிறாயே!’’ என்று சொன்னான். ‘’பிராம்மணனே, கோபிக்காதே? உன் இஷ்டம்போல் நட!’’ என்று அந்தப் போக்கிரி சொல்லிவிட்டுச் சென்றான்.

மித்ரசர்மா கொஞ்சதூரம் நடந்தவுடனே இரண்டாவது போக்கிரி அருகே வந்து, ‘’அட, கஷ்டகாலமே! ஏ சாதுவே, செத்துப்போன இந்தக் கன்றுக்குட்டி உனக்கு எவ்வளவு தான்பிரியமானதாயிருந்தாலும் அதைத் தோளில் சுமந்து செல்லலாமா? தகுமா?

செத்த மிருகத்தையும் மனிதனையும் தொடுகிறவன் முட்டாள். சந்திராயணமும், பஞ்சகவ்யமும்தான் அவனைச் சுத்தப்படுத்தக் கூடியவை.

என்றொரு பழமொழி உண்டு’’ என்று சொன்னான். மித்ரசர்மா கோபமடைந்து, ‘’நீ என்ன குருடனா? ஆட்டை ஏன் கன்றுக்குட்டி என்கிறாய்?’’ என்றான். “சுவாமி, கோபிக்காதீர்கள். தெரியாத்தனமாகச் சொல்லி விட்டேன். உங்கள் இஷ்டப்படி செய்யுங்கள்’’ என்று அவனும் சொல்லிவிட்டுப் போனான்.

மறுபடியும் பிராம்மணன் காட்டில் கொஞ்சதூரம் போவதற்குள் மூன்றாவது போக்கிரியும் வேஷத்தை மாற்றிக்காண்டு எதிரே வந்தான். ‘’ஏய், நீ செய்வது சரியல்ல. கழுதையைச் சுமந்துகொண்டு நடக்கிறாயே!

தெரிந்தோ தெரியாமலோ கழுதையைத் தொட்டாலும் அந்தப் பாவத்தைப் போக்கிக்கொள்வதற்குத் துணிமணிகளைத் துவைத்துப் போட்டுக் குளிக்க வேண்டும்.

என்றொரு பழமொழி உண்டு. வேறு யாராவது பார்ப்பதற்குள் கழுதையை இறக்கிவிடு’’ என்றான் அவன்.

ஆட்டின் உருவத்தில் உள்ளது ஒரு அரக்கனே என்று பிராம்மணன் நினைத்து விட்டான். அதைத் தரையில் போட்டுவிட்டு, பயந்துபோய் வீட்டுக்கு ஓட்டம் பிடித்தான். மூன்று போக்கிரிகளும் மறுபடியும் ஒன்று கூடினார்கள். ஆட்டை எடுத்துச் சென்று திட்டமிட்டபடி கொன்று தின்றார்கள். அதனால்தான் ‘அதிக அறிவும், ஞானமும், பலமும் இருந்தாலும்…’ என்ற செய்யுளைச் சொன்னேன்’’ என்றது ஸ்திரஜீவி. அது மேலும் பேசுகையில், ‘’இப்படிச் சொல்வதிலும் நியாயமுண்டு:

புதிதாக வேலைக்கு வந்த வேலைக்காரனின் அடக்க ஒடுக்கம், விருந்தாளியின் புகழ்ச்சி, பெண்களின் கண்ணீர், போக்கிரிகளின் பேச்சுத் திறமை –இவற்றால் வஞ்சிக்கப்படாதவன் யாராவது உண்டா?

பலவீனர்கள்தானே என்று எண்ணி பலபேர்களை ஒருவர் பகைத்துக் கொள்ளக்கூடாது.

பல பேர்களைப பகைத்துக் கொள்ளாதே! ஒரு கூட்டத்தையும் ஜெயிக்க முடியாது. பாம்பு எவ்வளவவோ துடித்துப் பார்த்ததும் எறும்புகள் அதைத் தின்றன.

என்றது ஸ்திரஜீவி. ‘’அது எப்படி?’’ என்று மேகவர்ணன் கேட்க, ஸ்திரஜீவி சொல்லத் தொடங்கியது:

பாம்பும் எறும்புகளும்

ஒரு எறும்புப் புற்றில் ஒரு பெரிய பாம்பு இருந்தது. அதன் பெயர் அதி தர்ப்பன். ஒருநாள் அது வழக்கமாப் போகிற பாதையில் போகாமல் வேறு ஒரு துவாரத்தின் வழியாக வெளியேவரத் தொடங்கியது. அந்தத் துவாரம் சிறியது. அந்தப் பெரிய பாம்பு சிறிய துவாரத்தின் வழியே வெளியேற முயற்சித்தபோது விதிவசமாக அதற்குக் காயம் ஏற்பட்டுவிட்டது. காயத்தில் உண்டான ரத்தத்தின் வாடையைக் கொண்டு எறும்புகள் வந்து அதைச் சூழ்ந்து கொண்டு துன்புறுத்தலாயின. பாம்பால் எத்தனையோ எறும்புகள் செத்தன. எத்தனையோ எறும்புகள் அடிபட்டன. இருந்தாலும், எறும்புகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருந்ததால், பாம்புக்கு ஒரு காயத்துக்குப் பதிலாக பல காயங்கள் ஏற்பட்டன. உடம்பெல்லாம் ரணமாகி அந்தப் பாம்பு செத்தது. அதனால்தான் பலபேர்களைப் பகைத்துக்கொள்ளாதே’ என்றெல்லாம் சொல்கிறேன்’’ என்றது ஸ்திரஜீவி. மேலும் அது பேசுகையில் ‘’குழந்தாய், மேலும் சில விஷயங்களைச் சொல்லவேண்டியிருக்கிறது. அவற்றையும் ஆராய்ந்து காரியத்தில் இறங்க வேண்டும்’’ என்றது.

‘’பெரியவரே உங்கள் மனதில் உள்ளதைச் சொல்லுங்கள்’’ என்றது மேகவர்ணன். ‘’குழந்தாய், சொல்கிறேன். கேள், ஸாமம் முதலிய நான்கு உபாயங்களைத் தவிர ஐந்தாவது உபாயம் ஒன்றை நான் கண்டுபிடித்திருக்கிறேன். அது என்னவென்றால், என்னை விரோதியாகப் பாவிக்கிற மாதிரி நடித்து, நிஷ்டூரமான சொற்களால் நிந்தியுங்கள். எதிரி தரப்பில் வேலைசெய்யும் ஒற்றர்கள் நம்புவதற்காக என் உடம்பில் ரத்தத்தைப் பூசி இந்தத ஆலமரத்தடியிலேயே என்னைப் போட்டுவிட்டு, நீ ரிஷ்யமூக மலைக்குப் பரிவாரங்களுடன் போய் இருந்துகொள். எனது சாதுரியமான உபாயத்தால் எதிரிகள் எல்லோரையும் நம்பவைத்து, அவர்களின் கோட்டையின் நடுபாகத்தைத் தெரிந்துகொண்டு அந்தப் பகல்குருடர்களைக் கொன்று விடுகிறேன். கோட்டையிலிருந்து அவர்கள் வெளியேறுவதற்குத் தனி வழி இருக்காது என்று ஊகித்தே இந்த உபாயத்தை யோசித்து வைத்தேன்.

தப்பித்துக் கொள்வதற்குத் தனிவழி இருக்கிறதைத் தான் அறிவாளிகள் கோட்டை என்கின்றனர். அப்படி இல்லாமற்போகிற கோட்டை உண்மையில் ஒருபொறியேயாகும்.

என்றொரு பழமொழி உண்டு. நீ என்மேல் இரக்கங்காட்டாதே.

தனக்கு வேண்டியவர்களை உயிருக்குச் சமானமாக மதித்துக் காப்பாற்றிப் பேணினாலும், யுத்தம் வரும் காலத்தில் அவர்களைக் காய்ந்த விறகு என்று நினை.

என்றொரு பழமொழி உண்டு. இந்த விஷயத்தில் நீ என்னைத் தடுக்காதே.

எதிரியைத் போரில் எதிர்கொள்ள நேருகிற நாளை எதிர்பார்த்து, எப்போதும் வேலையாட்களை உன் உயிரே போல் காப்பாற்றி வா! உன் உடலைப்போல் அவர்களைப் போஷித்து வா!

என்றது ஸ்திரஜீவி.

இப்படிச் சொன்னபிறகு, ஸ்திரஜீவி மேகவர்ணனுடன் சண்டை செய்வதுபோல் பாசாங்கு செய்தது. அது அலகைத் தூக்கிக் கொண்டு அரசனோடு சண்டை செய்வதைக் கண்ட காக்கைப் பரிவாரஙக்ள் ஸ்திரஜீவியைக் கொல்ல விரைந்தன. அவற்றைப் பார்த்து மேகவர்ணன், ‘’நீங்கள் எல்லோரும் ஒதுங்கி நில்லுங்கள். இந்த வஞ்சகத் துரோகியோடு நானே சண்டை போடுகிறேன்’’ என்று சொல்லிவிட்டு, ஸ்திரஜீவியின்மேல் ஏறித் தன் அலகால் மெல்லக் கொத்திற்கு. ரத்தம் வெளிவந்தது. அந்த ரத்தத்தை ஸ்திர ஜீவியின் உடம்பில் பூசிவிட்டு, அது சொன்னபடியே ரிஷயமூக மலைக்குத் தன் பரிவாரங்களோடு போய்விட்டது.

அந்தச் சமயத்தில் எதிரி தரப்பில் உளவுவேலை செய்யும் ஒரு பெண் ஆந்தை, ஆந்தை அரசனிடம் போயிற்று. மேகவர்ணனின் மந்திரிக்கு ஏற்பட்ட துன்பத்தைத் தெரிவித்தது. அதைக் கேட்ட ஆந்தை அரசன் அந்திப்பொழுதில் காக்கைகளைக் கொல்வதற்காகத் தன் பரிவாரங்களோடு புறப்பட்டுச் சென்றது. போகையில், ‘’சீக்கிரம், சீக்கிரமாக வாருங்கள், எதிரி பயந்து ஓடிக்கொண்டிருக்கிறான். சுலபமாகப் பிடித்துவிடலாம்.

எதிரிகள் வேறிடம் தேடி ஓடும்போது அவர்களுடைய கோட்டை எதிர்ப்பின்றி சீக்கிரமாகப் பிடிபட்டுப் போகும். அரசனின் ஆட்கள் மூட்டை கட்டிக்கொண்டிருப்பார்கள். எனவே அவர்களைச் சீக்கிரத்தில் ஜெயிக்க முடியும்.

என்றொரு பழமொழி உண்டு’’ என்று ஆந்தை அரசன் சொல்லியது.

எல்லா ஆந்தைகளும் ஆலமரத்துக்குப் போயின. ஆனால் அங்கே ஒரு காக்கையாவது காணப்படவில்லை. அதைக் கண்டு ஆந்தை அரசன் சந்தோஷத்தோடு ஒரு மரக்கிளையில் உட்கார்ந்தது. பாணர்கள் அரசனைப் புகழ்ந்து பாடினர். அப்போது ஆந்தை அரசன் அரிமர்த்தனன், ‘’அவர்கள் சென்ற வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். தங்களுடைய கோட்டையை அவர்கள் எட்டுவதற்கு முன் அவர்களைத் துரத்திப் பிடித்துக் கொல்லவேண்டும்’’ என்று உத்தரவிட்டது.

அதேசமயத்தில் ஸ்திரஜீவி யோசித்தது. ‘’நாம் செய்ததைத் தெரிந்துகொண்டு எதிரிகள் திரும்பிப் போனால் எனக்கு ஒரு லாபமும் கிடைக்காது.

காரியத்தைத் துவக்காமலிருப்பது அறிவுக்கு முதல் அடையாளம். எடுத்த காரியத்தைத் தொடுத்து முடிப்பது அறிவுக்கு இரண்டாவது அடையாளம்.

என்றொரு பழமொழி உண்டு. காரியத்தை ஆரம்பித்துத் தோல்வி காண்பதைவிட ஆரம்பிக்காமலிருப்பதே மேல். ஆகவே, நான் சத்தம் செய்து நான் இங்கு இருப்பதைத் தெரிவிக்கிறேன்’’ என்று எண்ணியது.

அதன்படியே ஈனகரத்தில் கா கா என்று ஸ்திரஜீவி கத்தியது. அதைக் கேட்டதும், ஆந்தைகள் அதைக் கொல்ல விரைந்தன. அப்போது ஸ்திரஜீவி, “மேகவர்ணனே என்னை இந்த நிலைக்குக் கொண்டு வந்தவன். இதை உங்களுடைய அரசனிடம் தெரிவியுங்கள். அவரோடு நான் நிறையப் பேசவேண்டியிருக்கிறது’’ என்று சொல்லிற்று.

பரிவாரங்களிடமிருந்து செய்தியையறிந்த அரிமர்த்தனன் ஆச்சரியமடைந்தது. தேகம் பூராவும் காயங்களின் வடுக்கள் காணப்பட்ட ஸ்திரஜீவியை அது நெருங்கியது. ‘’நீ எப்படி இந்த நிலைக்கு வந்தாய்? சொல்?’’ என்று கேட்டது.

‘’அரசே, கேளுங்கள், நேற்று நீங்கள் பல காக்கைகளைக் கொன்றீர்கள் அல்லவா? அதைக்கண்டு மேகவர்ணன் கோபமும், துயரமும் அடைந்து, மனங்கலங்கிப் போனான். அந்தக் கெட்ட அரசன் உங்கள் கோட்டையை நோக்கிப் புறப்பட்டான். அப்போது நான், ‘’நீங்கள் அங்கு போவது சரியல்ல. காரணம் அவர்கள் பலசாலிகள், நாமோ பலமற்றவர்கள்.

வலியவனிடம் மெலியவன் நன்மைபெற விரும்பினால் அவனை மனத்தாலும் விரோதித்துக் கொள்ளக்கூடாது. விரோதித்துக்கொள்வதால் வலியவனுக்கு நஷ்டமோ அவமானமோ கிடையாது. அவன்தான் வீட்டில் பூச்சிபோல் மடிகிறான்.

என்று ஒரு பழமொழி கூறுகிறது. ஆகவே, அவனைக் கௌரவித்துச் சமாதானம் செய்துகொள்வதே சரி’’ என்று சொன்னேன். இந்தச் சொற்களைக் கேட்ட மேகவர்ணன் துர்போதனையாளர்களின் பேச்சை நம்பி, நான் உங்களுடைய கட்சியைச் சேர்ந்தவன் என்று சந்தேகப்பட்டு, என்னை இந்தக் கதிக்கு ஆளாக்கினான். ஆகவே இப்போது உங்கள் காலடிகளே எனக்குச் சரணம். அதிகமாகப் போசுவானேன்? என்னால் நகர முடிந்த அளவுக்குச் சக்தியிருக்கிறவரை மேகவர்ணனின் ஜாகைக்கு உங்களை அழைத்துப்போய், காக்கைக் கூட்டத்தை நாசமடையச் செய்வேன்’’ என்றது.

இதைக்கேட்டபிறகு, அரிமர்த்தனன் தன் தாத்தாவுக்கும் தகப்பனாருக்கும் மந்திரிகளாயிருந்த பரம்பரை மந்திரிகளோடு ஆலோசனை நடத்திற்று. அதற்கு ரக்தாட்சன், குரூராட்சன், தீப்தாட்சன், விக்கிரநாசன், பிராகாரகர்ணன் என்று ஐந்து மந்திரிகள் உண்டு.

முதலில் ரக்தாட்சனைப் பார்த்து, ‘’நண்பனே, இந்நிலைமையில் நாம் என்ன செய்வது?’’ என்று கேட்டது. ‘’அரசே, இதில் யோசிப்பதற்கு என்ன இருக்கிறது? யோசிக்காமல் இவனைக் கொல்லுங்கள்.

இளைத்தவன் பலம் பெறுவதற்குள் கொன்றுவிட வேண்டும். அவன் அதிக பலம் பெற்ற பிறகு ஜெயிக்க முடியாமற்போய்விடும்.

என்று ஒரு பழமொழி உண்டு. மேலும், ‘வலுவில் வந்த சீதேவியைக் காலால் உதைத்தால் சாபம் கிடைக்கும் ‘ என்பது உலகவாக்கு.

காலத்தையும் காரியத்தையும் விரும்பியிருக்கிறவனுக்கு சந்தர்ப்பம் ஒரு முறைதான் வரும். அதைப் பயன்படுத்திக்கொள்ளா விட்டாலும் மறுபடியும் வராது.

தீ மூட்டிய ஈமச் சிதையை வேண்டுமானால் சிதைத்து எறிந்து விடலாம். ஆனால் சிதைந்த பிறகு மீண்டும் சேர்ந்த அன்பு வளர்வதில்லை.

என்றும் ஒரு பழமொழி உண்டு’’ என்றது. ‘’அது எப்படி?’’ என்று அரிமர்த்தனன் கேட்கவே, ரக்தாட்சன் சொல்லத் தொடங்கியது:


http://inthiya.com/?p=11467

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சதந்திரம் தொடர் 45 - பொன் தந்த பாம்பு

அன்னபூர்னா ஈஸ்வரன்

ஒரு ஊரில் ஒரு பிராம்மணன் இருந்தான். உழுவதே அவன் தொழில். அதில் ஆதாயம் ஒன்றும் அவனுக்குக் கிடைக்காமல் இருந்து வந்தது. ஒருநாள், கோடைக்கால முடிவில், வெய்யில் தாங்க முடியாமல் அவன் தன் வயல் மத்தியிலே ஒரு மரத்தின் நிழலில் சிறிது கண்ணயர்ந்தான். அப்போது கொஞ்சதூரம் தள்ளி இருந்த ஒரு எறும்புப் புற்றின் மேல் பயங்கரமான ஒரு பெரிய பாம்பு படமெடுத்து ஆடுவதைக் கண்டுவிட்டான். உடனே அவன், ‘’இது கட்டாயம் இந்த வயலைக் காக்கும் தேவதையாகத்தான் இருக்க வேண்டும். இதை நான் வணங்கியதே இல்லை. அதனால்தான் எனக்கு உழவுத் தொழில் பலனளிக்கவில்லை. ஆகவே இப்போது அதை வணங்குகிறேன்’’ என்று யோசித்தான்.

அப்படியே தீர்மானித்து யாரிடமிருந்தோ பிச்சையாகப் பாலைப் பெற்றுக்கொண்டுவந்து, பாத்திரத்தில் வார்த்து எடுத்துக் கொண்டு எறும்புப் புற்றின் அருகே போனான். ‘’வயலைக் காக்கும் தேவதையையே, நீ இங்கு வசிக்கிறாய் என்று இதுவரை நான் அறியவில்லை. அதனால் வணங்காமல் இருந்தேன். இப்போது என்னை மன்னித்துவிடு’’ என்று சொல்லி வணங்கி அங்கேயே பாலை வைத்துவிட்டு வீட்டுக்குப் போனான்.

மறுநாள் காலையில் திரும்பிவந்து பார்த்தபோது, பாத்திரத்தில் ஒரு தங்க நாணயம் இருக்கக் கண்டான். எனவே, அவன் தினந்தோறும் அங்கே தனியே வந்து பால் வைத்துவிட்டுத் தங்க நாணயத்தை எடுத்துச் சென்றபடி இருந்தான். ஒருநாள் புற்றுக்குப் பால் கொண்டுபோய் வைக்குமாறு தன் மகனிடம் சொல்லிவிட்டு அந்தப் பிராம்மணன் நகரத்துக்குச் சென்றான். அந்தப் பையனும் பாலை அங்கே வைத்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிவிட்டான்.

மறுநாள் அந்தப் பிள்ளை அங்கு போனபோது ஒரு தங்க நாணயம் இருப்பதைப் பார்த்துவிட்டு, ‘’இந்தப் புற்று நிறைய தங்க நாணயங்கள் நிச்சயம் இருக்கும். எனவே இந்தப் பாம்பைக் கொன்று அவற்றையெல்லாம் எடுத்துக்கொள்ளலாமே!’’ என்று யோசித்தான். அம்மாதிரியே முடிவு செய்து, மறுநாள் பால்வைக்க வந்த அந்தப் பையன் பாம்பைத் தடியால் தலையில் அடித்தான். விதிவசத்தால் அது எப்படியோ சாகாமல் தப்பித்தது. தன் கூரிய பற்களால் கடிக்கவே, அவன் உடனே இறந்து போனான். உறவினர்கள் வந்து அவனது உடலை எடுத்து வயலுக்குப் பக்கத்திலேயே விறகுக் குவியலின்மீது கிடத்தி ஈமச்சடங்கை முடித்தார்கள்.

இரண்டாம் நாளில் பையனுடைய தந்தை திரும்பி வந்தான். பையன் இறந்த காரணத்தை உறவினர்கள் சொல்லக் கேட்டான். அது உண்மை என்பதையும் கண்டுகொண்டபிறகு,
உயிரினங்களிடம் தயைகாட்டு; அடைக்கலம் புகுந்தவர்களைக் காப்பாற்று! அப்படிச் செய்யாவிட்டால், பத்மவனத்தில் அன்னப்பறவைகள் நாசமானதைப்போல் நீ நாசமடைவாய்.

என்று பிராம்மணன் சொன்னான். ‘’அது எப்படி?’’ என்று உறவினர்கள் கேட்கவே, பிராம்மணன் கூறத் தொடங்கினான்:

அடைக்கலம் அளிக்காத அன்னங்கள்

ஒரு ஊரில் சித்ரரதன் என்றொரு அரசன் இருந்தான். அவனுக்குச் சொந்தமான பத்மஸரஸ் என்றொரு ஏரி இருந்தது. அதை அவனுடைய போர் வீரர்கள் பத்திரமாகக் காத்துவந்தார்கள். ஏனென்றால், அதில் பல பொன்மயமான அன்னப்பறவைகள் வசித்து வந்தன. ஆறு மாதங்களுக்கு ஒருதடவை அவை ஒவ்வொன்றும் ஒரு தங்க இறகை அரசனுக்குக் கொடுத்து வந்தன.

ஒருநாள் அந்த ஏரிக்கு தங்கமயமான ஒரு பெரிய பறவை வந்தது. அதைப் பார்த்த அன்னங்கள், ‘’எங்களோடு நீ வசிக்கக்கூடாது. காரணம் ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை ஒரு தங்க இறகு கொடுத்து இந்த ஏரியை நாங்கள் வாடகைக்கு எடுத்திருக்கிறோம்’’ என்று சொல்லின. விஷயத்தை வளர்த்துவானேன்? இரு தரப்பினருக்குமிடையே சச்சரவு ஏற்பட்டது.

அந்தப் பறவை அரசனிடம் சென்று அடைக்கலம் புகுந்தது. ‘’அரசே, அந்த அன்னப்பறவைகள் என்னிடம் ‘யாருக்கும் தங்க இடங் கொடுக்க முடியாது. அரசானல் என்ன செய்ய முடியும்?’ என்று சொல்லின. அதற்கு நான் அவர்களிடம் ‘அப்படிச் சொல்வது அழகல்ல. நான் போய் இதை அரசரிடம் தெரிவிக்கிறேன்’ என்று சொன்னேன். இதுதான் நிலைமை. இனி உங்கள் சித்தம்.’’ என்று சொல்லிற்று.

உடனே அரசன் வேலையாட்களைப் பார்த்து ‘’நீங்கள் போய் எல்லாப் பறவைகளையும் கொன்று உடனே இங்கு எடுத்து வாருங்கள்’’ என்று சொன்னான். அரசனின் கட்டளைப்படி வேலையாட்கள் உடனே புறப்பட்டுச் சென்றனர்.

கம்பும் கையுமாக ராஜசேவர்கள் வருவதை ஒரு கிழப்பறவை பார்த்துவிட்டது. ‘’உறவினர்களே, அவர்கள் வருவதிலே நமக்கு நன்மை கிடையாது. எல்லோரும் ஒன்று சேர்ந்து பறந்து போய்விட வேண்டியதுதான்’’ என்று சொல்லிற்று, உடனே எல்லா அன்னங்களும் பறந்து போய்விட்டன. அதனால்தான் உயிரினங்களிடம் தயை காட்டு என்றெல்லாம் சொன்னேன் என்றான் பிராம்மணன்.

மறுநாள் பிராம்மணன் மறுபடியும் புற்றுக்குப் பால் கொண்டு போனான். அந்தப் பாம்பின் நம்பிக்கையைப் பெற நினைத்து, ‘’தன் புத்தியாலேயே என் மகன் மாண்டான்’’ என்று சொன்னான். அதற்குப் பாம்பு.

தீமூட்டிய ஈமச்சிதையை வேண்டுமானால் சிதைத்து எறிந்துவிடலாம். சிதைந்த பிறகு மீண்டும் சேர்ந்த அன்பு மேலும் வளர்வது கிடையாது.

என்று சொல்லிற்று. ஆகவே அவன் (ஸ்திரஜீவி) இறந்தால் நீங்கள் தொந்தரவுகள் இல்லாத ராஜ்யத்தைக் கஷ்டம் எதுவும் படாமல் அனுபவித்து வருவீர்கள்’’ என்றது ரக்தாட்சன்.

இதைக்கேட்ட ஆந்தையரசன் குரூராட்சனைப் பார்த்து, ‘’நண்பனே, நீ என்ன நினைக்கிறாய்?’’ என்று கேட்டது. அதற்கு அந்த தஞ்சம் புகுந்தவனைக் கொல்லக்கூடாது. இந்தப் பழங்கதையை நீங்கள் கேட்டிருப்பீர்களே!

எதிரி சரணடைந்தபோது அவனை நியாயப்படி கௌரவித்துத் தனி மாம்சத்தைக் கொடுத்து அவன் பசியைத் தணித்தது என்று புறாக்களைப்பற்றிய கதையைக் கேட்டதில்லையா

என்று சொல்லிற்று. ‘’அது எப்படி?’’ என்று அரிமர்த்தனன் கேட்க, மந்திரி சொல்லத் தொடங்கியது:

புறாவின் உயிர்தியாகம்

ஒரு பெரிய காட்டில் பயங்கரமான வேடன் ஒருவன் தன்னுடைய கோரத் தொழிலைச் செய்து வந்தான். பிராணிகளுக்கெல்லாம் அவன் யமனாக இருந்தான். அவனுக்கு நண்பனோ, தோழனோ, உறவினனோ யாருமில்லை. அவனுடைய கோரத்தொழிலை வெறுத்து அவர்கள் அனைவரும் அவனைவிட்டுப் போயினர். பாம்பு கடிப்பதற்கு முன்பே வெறுப்பூட்டுகிறது அல்லவா? அதைப்போல் அந்த வேடனும் உயிரினங்களின் வெறுப்பைப் பெற்றிருந்தான். கையில் வலை, கூண்டு, தடி எடுத்துக்கொண்டு தினந்தோறும் அவன் காட்டில் திரிந்தான்.

ஒருநாள் காட்டில் அவன் சுற்றித்திரிகையில், திக்குகளெல்லாம் கறுத்து, பிரளயகாலம் வந்ததுபோல் காற்றும் மழையும் பலமாக அடித்தது. உடல் வெடவெடக்க, உள்ளம் நடுநடுங்க, அவன் தங்குவதற்கு இடம் தேடியோடி ஒரு மரத்தை அடைந்தான். அங்கு நின்று கொண்டிருக்கும்போது வானம் தெளிந்து நட்சத்திரங்கள் தெரிந்தன. அவனுக்கு ஏதோ ஒரு புத்தி தோன்றியது. ‘ஆண்டவனே, நீரே எனக்கு அடைக்கலம்’ என்று சொன்னான்.

அந்த மரத்தின் ஒரு பொந்தில் ஆண்புறா ஒன்று இருந்தது. மனைவியை வெகுநேரமாகக் காணாததால், அது துக்கத்தோடு அழுதுகொண்டிருந்தது. ‘’காற்றும் மழையும் பலமாயிருக்கிறது. என் மனைவி இன்னும் வீடு திரும்பவில்லையே! அவள் இல்லாமல் வீடே சூனியமாக இருக்கிறது. மனைவியில்லாத வீடு வீடல்ல, அது காடுதான் என்று எனக்குப் படுகிறது. கற்புள்ளவளாய் புருஷனே உயிர் என்று புருஷனுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணம் செய்யும் மனைவியைப் பெற்றவனே உலகில் பாக்கியசாலி!’’ என்று பாடிப் புலம்பிக் கொண்டிருந்தது.

அப்போது வேடனுடைய கூண்டிலிருந்த பெண்புறா இந்தப் புலம்பலைக் கேட்டுச் சந்தோஷமடைந்தது. புருஷனைப் பார்த்து, ‘’புருஷனைத் திருப்தி செய்யாதவளைப் பெண் என்று கருதக்கூடாது. புருஷன் திருப்தியடைந்தால், தெய்வங்களும் திருப்தியடைகின்றன. பூங்கொத்துகள் தொங்குகிற கொடி காட்டுத் தீயால் பொசுங்கி விடுவதுபோல், புருஷனைத் திருப்திப்படுத்தாத மனைவியை நெருப்பிலிட்டுப் பொசுக்க வேண்டும். அன்பனே! நான் சொல்லும் வார்த்தை உன்னுடைய உயிருக்கு ஆபத்துண்டாக்குவதாயிருந்தாலும் அது நல்ல வார்த்தைதான். ஆகவே அதைக் கேள். சரணாகதியடைந்தவனைத் தன் உயிரைக் கொடுத்தாவது ஒருவன் காப்பாற்ற வேண்டும். குளிராலும் பசியாலும் வாடிப்போய் இந்த வேடன் உன் வீட்டுக்கு வந்து படுத்திருக்கிறான். அவனை உபசரி. ‘அந்தி வேளையில் வந்த விருந்தாளியை உபசரிக்காவிட்டால், விருந்தாளியின் பாவம் உபசரிக்காதவனுக்கும், உபசரிக்காதவனுடைய புண்ணியம் விருந்தாளிக்கும், போய்ச் சேர்ந்துவிடுகின்றன’ என்றொரு வேதவாக்கு இருக்கிறது. உன் மனைவியை இவன் சிறைப்படுத்தி விட்டானே என்று இவனை நீ வெறுக்காதே. என் முற்பிறப்பின் வினைப்பயனாகவே நான் பிடிபட்டுள்ளேன். வறுமை, நோய், துயரம், சிறை என்பவையெல்லாம் முற்பிறப்பில் ஜீவராசிகள் செய்யும் தீவினைகளின் பலன்களே, ஆகவே வேடன் என்னைக் கூண்டில் அடைத்துள்ளதால் உனக்கு ஏற்பட்டிருக்கும் பகைமையை விட்டுவிடு. அறவழியில் மனதைச் செலுத்தி இவனை உபசரிப்பாயாக!’’ என்று சொல்லிற்று.

அறம் ஒழுகும் இந்தச் சொற்களைக் கேட்டதும் ஆண்புறாவுக்கு எங்கிருந்தோ ஒரு தைரியம் பிறந்தது. அது வேடனைப் பார்த்து, ‘’நண்பனே, உன் வரவு நல்வரவாகட்டும்! உனக்கு என்ன வேண்டும் சொல்! சிறிதும் கவலைப்படாதே! இதை உன் வீடுபோல் எண்ணிக்கொள்!’’ என்று சொல்லிற்று. பறவையைக் கொல்லும் வேடன் அதற்குப் பதிலளிக்கையில், ‘’புறாவே, எனக்கு ஒரே குளிராயிருக்கிறது. அதைப்போக்க வழி பார்’’ என்று சொன்னான். புறா போய் ஒரு கங்கு கொண்டு வந்து காய்ந்த இலைகளின் மேல் போட்டு சீக்கிரத்திலே கணப்பு உண்டாக்கித் தந்தது. ‘’இதிலே நீ குளிர் காய்ந்துகொள். ஐயோ, பாவம்! உன் பசியைப் போக்குவதற்கு என்னிடம் ஒன்றும் இல்லையே? சிலர் ஆயிரம்பேர்களுக்கு அன்னமளிக்கிறார்கள். சிலர் நூறுபேருக்கும், இன்னும் மற்றவர்கள் பத்துப்பேருக்கும் சோறு போடுகிறார்கள். நான் புண்ணியம் செய்யாதவன், உன் பசியைத் தணிக்க முடியாதவனாயிருக்கிறேன். ஒரு விருந்தாளிக்குக்கூட அன்னமளிக்க முடியாதவனுடைய துயர் நிறைந்த வீட்டில் வசித்துப் பயனென்ன? துயரம் நிறைந்த என் வாழ்க்கையை நான் மாய்த்துக்கொள்கிறேன். அதனால் வேறு யாராவது விருந்தாளி வந்தால் ‘இல்லை’ என்று சொல்லும் நிலைமை ஏற்படாதல்லவா?’’ என்று சொல்லிற்று. ஆண்புறா வேடனைப் பற்றி ஒன்றும் கூறவில்லை; தன்னையே நிந்தித்துக் கொண்டது. ‘கொஞ்ச நேரம் பொறு. உனக்கு உணவு தருகிறேன்’ என்றது.

இவ்வாறு சொல்லிவிட்டு, அறவழியில் நின்று ஒழுகிய அந்தப் புறா, நெருப்பை வலம் வந்து, தன் வீட்டுக்குள் நுழைவது போல் மிகுந்த மனக்களிப்புடன் நெருப்பில் விழுந்தது.

அதைக் கண்டதும் வேடனுக்கும் அளவற்ற இரக்கம் பிறந்தது. நெருப்பில் விழுந்த புறாவைப் பார்த்து, ‘’பாவம் செய்கிற மனிதன் தன் ஆன்மாவை நேசிப்பதில்லை. தான் செய்த பாவத்தைத் தானே அனுபவிக்க வேண்டும். என் புத்தி பாவம் நிறைந்த புத்தி; பாவம் நிறைந்த செய்கைகளைச் செய்தே நான் திருப்தியடைந்து வந்திருக்கிறேன். எனக்கு நரகம் நிச்சயம். இந்தப் புறா ஒரு மகாத்மா. தன் மாம்சத்தைக் கொடுத்து, கொடிய மனம் படைத்த எனக்கு அறிவு புகட்டியிருக்கிறது. இன்றுமுதல் என் உடம்புக்குச் சுகமளித்துப் பேணாமல் கோடைக்காலத்தில் ஜலம் வற்றிவிடுவதுபோல் உடலை வாட்டப் போகிறேன். குளிர், காற்று, வெய்யிலைச் சகித்துக்கொண்டு, உடலை இளைக்கச் செய்து, பலவிதமான உபவாசங்களால் அறவழிப்பட நிற்பேன்’’ என்று சொன்னான். உடனே முளை, கம்பு, வலை, கூண்டு எல்லா வற்றையும் வேடன் முறித்தெறிந்தான். பரிதாபமான அந்தப் பெண்புறாவைக் கூண்டிலிருந்து விடுதலை செய்துவிட்டான். அந்தப் பெண்புறா நெருப்பில் விழுந்த தன் கணவனைக் கண்டதும் சோகத்தால் அதன் நெஞ்சு நடுங்கியது. பரிதாபமாகப் புலம்பத் தொடங்கியது. ‘’பிராணநாதா, நீ இன்றி நான் வாழ்ந்தென்ன பிரயோஜனம்? புருஷனில்லாத பெண்கள் உயிர் வாழ்ந்து என்ன பயன்? மானம், தன்மதிப்பு, பெருமை, குடும்பத்தில் உறவினர்கள் காட்டும் மரியாதை, வேலையாட்களிடம் செலுத்தும் அதிகாரம் எல்லாம் பெண் விதவையானவுடன் மறைந்தொழிகின்றன’ என்று பெண்புறா பலவிதமாக புலம்பிற்று. கற்பில் சிறந்த அந்தப் புறா தானும் தீயில் புகுந்தது.

உடனே, அங்கே ஆண்புறா தெய்வவிமானத்தில் ஏறி வந்து காட்சியளித்தது. பெண்புறாவும் தெய்வீக உடையும் ஆபரணங்களும் அணிந்து அங்கு தோன்றி தன் புருஷனைப் பார்த்தது. அதைப் பார்த்த ஆண்புறா, ‘’அன்பே, நீ என்னை மரணத்திலும் பின் தொடர்ந்தாய், சிறப்பான செய்கை செய்தாய்? மனித உடம்பில் வளரும் ரோமம் மூன்றரை கோடி எண்ணிக்கைக் கொண்டது. கடைசிவரை கணவனைப் பின்பற்றிவரும் மனைவியரும் சுவர்க்கத்தில் மூன்றரை கோடி வருஷங்களுக்கு வாழ்ந்து வருவார்கள்’’ என்றது. மகிழ்ச்சியுடன் பெண் புறாவைத் தெய்வ விமானத்தில் ஏற்றுவித்து அணைத்துக் கொண்டது. பிறகு அவ்விரண்டு புறாக்களும் இன்பமாக வாழ்ந்தன. வேடனோ மனோவேதனை மிகுந்தவனாகி, மரணத்தைப்பற்றிச் சிந்தித்துக் கொண்டே, காட்டில் நுழைந்தான். அவனுடைய ஆசைகள் எல்லாம் அகன்று விட்டன. காட்டில் காட்டுத்தீ பற்றியிருப்பதைப் பார்த்து, அந்தத் தீயில் அவன் புகுந்தான். பாவங்கள் எல்லாம் பஸ்மமாயின. அவன் சுவர்க்கத்துக்குச் சென்று சுகமாக வாழ்ந்தான்.

அதனால்தான் ‘எதிரி சரணமடைந்தபோது அவனைக் கௌரவித்து….’ என்ற செய்யுளைச் சொன்னேன்’’ என்று முடித்தது ரக்தாட்சன்.

அதைக் கேட்டபிறகு, ஆந்தையரசன் தீப்தாப்சனைப் பார்த்து, ‘’நீ என்ன நினைக்கிறாய்?’’ என்று கேட்டது. அதற்குத் தீப்தாட்சன் பதிலளிக்கையில்,

‘’என்னைக் கண்டதும் தினந்தோறும் ஒதுங்கிச் சென்றவள் இன்றைக்கு என்னை வந்து அணைத்துக்கொள்கிறாள்? பரோபகாரியே, உனக்கு என் நன்றி. உனக்கு இஷ்டமானதை இங்கிருந்து எடுத்துச் செல்!’’

என்ற கூற்றுக்கு ஒரு திருடன் மறுமொழியாக,

‘’திருடுவதற்கு ஏதாவது இங்கிருந்தாலும் அவை எனக்குத் திருடத் தக்கவையாக இல்லை. இப்படி அவள் உன்னை அணைத்துக் கொள்ளாமலிருந்தால் நான் திரும்பவும் இங்கு வந்திருப்பேன்

என்று சொன்னான்” என்று சொல்லிற்று.

அதைக் கேட்ட ஆந்தையரசன், ‘’ஒன்றும் புரிவில்லையே! யார் அணைத்துக்கொள்வதில்லை? யார் அந்தத் திருடன்? விவரமாகச் சொல். அதைக் கேட்க விரும்புகிறேன்’’ என்றது. தீப்தாட்சன் சொல்லத் தொடங்கியது:

http://inthiya.com/?p=11680

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சதந்திரம் தொடர் 46 - கிழவனும் குமரியும்

அன்னபூர்னா ஈஸ்வரன்



ஒரு ஊரில் காமாதுரன் என்றொரு கிழட்டு வியாபாரி இருந்தான். அவன் மனைவி இறந்து போய்விட்டாள். அவனுக்குக் காமத்தால் அறிவு மழுங்கி விட்டது. நிறையப் பணம் கொடுத்து ஒரு ஏழை வியாபாரியின் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டான். அந்தப் பெண்ணுக்கு ஒரே துக்கமாயிருந்தது. அந்தக் கிழட்டு வியாபாரியை ஏறெடுத்துப் பார்க்கவும் அவளுக்கு முடியவில்லை. அது நியாயந்தானே?

இறந்த சடலங்களைக் கொலையாளி எறிந்து விட்டதால் வெள்ளெலும்புகள் நிறைந்து கிடக்கும் ஒரு கிணறு போலத்தான் தலைநரைந்த பேர்வழிகளும் காணப்படுகிறார்கள். அந்தக் கிணற்றைக் கண்டு வேகமாக ஓட்டமெடுப்பதுபோலவே, காதலை விரும்பித் திரியும் தலை நரைத்தவர்களைக் கண்டால் பெண்கள் ஓடிவிடுகிறார்கள்.

திரை படிந்து, நடை தளர்ந்து, பற்கள் உதிர்ந்து, பார்வை மங்கி, அழகு குன்றி, தள்ளாடிச் செல்பவனை உறவினர்களும் லட்சியம் செய்வதில்லை, மனைவியும் பணிவிடை செய்வதில்லை. ஐயோ, பாவம்! அவனைச் சொந்த மகனும் கவனிப்பதில்லை.


ஒரு இரவில் அவன் படுக்கையில் படுத்திருந்தான். கணவனுக்குத் தன் முதுகைக் காட்டியபடியே மனைவியும் அதில் படுத்திருந்தாள். அப்போது அந்த வீட்டில் ஒரு திருடன் நுழைந்தான். திருடனைக் கண்டதும் மனைவி பயந்து போய், கணவன் கிழவனாயிருந்த போதிலும் கெட்டியாகக் கட்டியணைத்துக் கொண்டாள். கணவன் ஆச்சரியப்பட்டுப் போனான். உடம்பெல்லாம் புளகித்துவிட்டது. ‘என்ன ஆச்சரியம்! இவள் ஏன் இன்றைக்கு என்னை அணைத்துக்கொள்கிறாள்?’ என்று யோசித்தான். கூர்ந்து பார்த்த போது, அறையின் ஒரு மூலையில் திருடன் இருப்பதைக் கண்டுவிட்டான். ‘திருடனைக் கண்ட பயத்தினால்தான் இவள் என்னை அணைத்துக் கொண்டாள். அதில் சந்தேகமில்லை’ என்று தெரிந்து கொண்டான். எனவே, கணவன் திருடனைப் பார்த்து,

‘’என்னைக் கண்டதும் தினந்தோறும் ஒதுங்கிச் சென்றவள் இன்றைக்கு என்னை வந்து அணைத்துக் கொள்கிறாள்! பரோபகாரியே, உனக்கு என் நன்றி. உனக்கு இஷ்டமானதை இங்கிருந்து எடுத்துச் செல்!’’

என்று சொன்னான். அதைக் கேட்ட திருடன்,

‘’திருடுவதற்கு ஏதாவது இங்கிருந்தாலும் அவை எனக்குத் திருடத் தக்கவையாக இல்லை. அவள் இப்படி உன்னை அணைத்துக் கொள்ளாமல் இருந்தால் நான் திரும்பவும் இங்கு வந்திருப்பேன்’’

என்று பதில் சொன்னான்’’ என்றது தீப்தாட்சன். அது மேலும் பேசுகையில், ‘’ஆகவே, திருடனாயிருந்த போதிலும் ஒருவனிடமிருந்து நன்மை கிடைக்கக்கூடும். அப்படியிருக்க, சரணாகதியடைந்தவனைப பற்றிக் கேட்க வேண்டுமா? மேலும், அவர்கள் இவனைத் துன்புறுத்தியிருக்கிறார்கள். ஆகவே இவன் நம் நன்மைக்காகவே வேலை செய்வான். அவர்களுடைய பலவீனத்தையாவது காட்டிக் கொடுப்பான். ஆகையால் இவனைக் கொல்லக் கூடாது’’ என்றது.

இதைக்கேட்ட ஆந்தை அரசன் மற்றொரு மந்திரியான வக்ரநாசனைப் பார்த்து ‘’நண்பனே, இந்த நிலைமையில் என்ன செய்யலாம் என்று நீ நினைக்கிறாய்’’ என்று கேட்டது.

‘’அரசே, இவனைக் கொல்லக்கூடாது. ஏனென்றால்,

தன் அணிகளில் சச்சரவுகள் ஏற்படுவது விரோதிக்குத் தான் நன்மை தரும் – திருடன் உயிரைத் தந்தான். பிசாசு இரண்டு மாடுகளைத் தந்தது என்ற கதையில் உள்ளபடி,

என்று வக்ரநாசன் பதிலளித்தது.

‘’அது எப்படி?’’ என்று ஆந்தை அரசன் கேட்க வக்ரநாசன் சொல்லத் தொடங்கியது:

வேதியனும், திருடனும், பிசாசும்

ஒரு ஊரில் ஒரு தரித்திரம் பிடித்த பிராமணன் இருந்தான். அவன் பிச்சையெடுத்துக் காலம் தள்ளினான். நல்ல உடை, எண்ணெய், சந்தனம், பூமாலை முதலிய அலங்காரங்கள் எதையும் என்றைக்கும் அவன் கண்டதில்லை. தாம்பூலம் போட்டுக்கொள்வது முதலிய சுகங்களையும் கண்டதில்லை. அவனுடைய முடியும், மீசையும், தாடியும், நகங்களும், உடல் ரோமமும் நீண்டு வளர்ந்திருந்தன. வெய்யில், குளிர், மழையால் அவனுடைய உடம்பு வற்றிச் சுருங்கிப்போய் இருந்தது.

யாரோ ஒருவன் அவனிடம் இரக்கங்கொண்டு இரண்டு கன்றுக் குட்டிகளைக் கொடுத்தான். சின்னஞ்சிறிசிலிருந்து அவற்றைப் பிராமணன் வளர்க்கலாயினான். வெண்ணெய், எண்ணெய், மாட்டுத்தீவனம் ஆகியவற்றை பிச்சையெடுத்து வந்து அவற்றுக்குச் கொடுத்தான். அவை நன்றாக வளர்ந்து கொழுத்தன.

அவற்றை ஒருநாள் ஒரு திருடன் கண்டுவிட்டு, ‘இந்த இரண்டு மாடுகளையும் திருடிவிடலாம்’ என்று உடனே நினைத்தான். ஒரு கயிற்றை எடுத்துக்கொண்டு இரவில் புறப்பட்டு வந்தான். பாதி வழியில் ஒருவனைச் சந்தித்தான். அவனுக்கு உயர்ந்த மூக்கும், கோணிக்கொண்டு சென்ற கண்களும், இருந்தன. முடிச்சு முடிச்சாகத் தசைநார்கள் தடித்துத்திரண்டு உடலெங்கும் இருந்தன. இடைவெளி விட்டுப் பற்கள் கூர்மையாக வளர்ந்திருந்தன. அவனுடைய குழிவிழுந்த கன்னமும், தாடியும், உடலும் நெருப்பு மாதிரி மஞ்சளாக இருந்தன. அவனைப் பார்த்ததும் திருடன் நடுநடுங்கிப்போனான். ‘’நீ யார்?’’ என்று கேட்டான்.

‘’உண்மையைச் சொல்வதென்றால், நான் ஒரு பிரம்மராக்ஷசன். என் பெயர் சத்யவசனன். இனி நீ யார் என்று சொல்’’ என்றது பிசாசு. ‘’நான் ஒரு திருடன், கொடிய செயல்கள் புரிபவன். ஒரு ஏழைப் பிராம்மணனின் இரண்டு பசுமாடுகளைத் திருடப் போய்க் கொண்டிருக்கிறேன்’’ என்றான் திருடன்.
அதைக் கேட்டு நிம்மதியடைந்த பிசாசு, ‘’நண்பனே, நான் மூன்று நாளைக்கொருதரம் சாப்பிடுவேன். இன்றைக்கு அந்தப் பிராம்மணனைச் சாப்பிடுகிறேன். நாம் இருவரும் ஒரே காரியமாகப் போவது மிகவும் நல்லதாயிற்று’’ என்றது.

இருவரும்போய் பிராமணன் வீட்டில் ஒளிந்துகொண்டனர். நல்ல தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டு நின்றனர். பிராமணன் தூங்கியவுடன் அவனைச் சாப்பிட பிசாசு புறப்பட்டது. அதைக் கண்ட திருடன், ‘’நண்பனே, இப்படிச் செய்வது நியாயமல்ல. நான் மாடுகளைத் திருடிக் கொண்டு போனபிறகுதான் நீ பிராமணனைச் சாப்பிடவேண்டும்’’ என்று சொன்னான். ‘’நீ திருடுகிற சத்தத்தில் பிராம்மணன் விழித்துக்கொண்டாலும் கொள்வான். அப்புறம் என் காரியம் வீணாய் விடும்’’ என்றது பிசாசு. ‘’நீ சாப்பிட ஆரம்பிக்கும்போது ஏதாவது தடங்கல் ஏற்பட்டால் நானும் மாடுகளைத் திருட முடியாமல் போய்விடுமே! முதலில் மாடுகளை நான் திருடுகிறேன், பிறகு நீ பிராம்மணனைச் சாப்பிடு’’ என்றான் திருடன்.

இப்படியே இருவரும் தர்க்கம் செய்ய ஆரம்பித்தார்கள். ‘நான் முந்தி, நீ முந்தி’ என்று சத்தமிட்டுக் கொண்டார்கள். இதைக் கேட்டுப் பிராம்மணன் விழித்துக் கொண்டான். உடனே திருடன் பிராமணனைப் பார்த்து, ‘’பிராமணனே, இந்தப் பிசாசு உன்னைச் சாப்பிட விரும்புகிறது’’ என்று சொன்னான். அதைத் தொடர்ந்து பிசாசும், ‘’பிராமணனே, உன் இரண்டு மாடுகளையும் இந்தத் திருடன் திருட விரும்புகிறான்’’ என்று சொல்லிற்று.

இதைக் கேட்டுவிட்டு, பிராம்மணன் நிதானமாக எழுந்து தன் இஷ்ட தெய்வத்தை நினைத்துக்கொண்டு மந்திரத்தைத் தியானம் செய்தான். அதனால் அவன் பிசாசிடமிருந்து தப்பித்துக்கொண்டான். பிறகு அவன் ஒரு தடியைக் கையில் எடுத்துவரவே, திருடன் ஓடிவிட்டான். பசுமாடுகள் இரண்டும் காப்பாற்றப் பட்டன.

அதனால்தான் ‘தன் அணியில் சச்சரவு ஏற்பட்டால் அது விரோதிக்குத்தான் நன்மை தரும்..’ என்றெல்லாம் சொல்லலானேன்’’ என்றது வக்ரநாசன். அது மேலும் பேசுகையில், ‘’இன்னொரு விஷயமும் உண்டு:

மகாத்மாவான சிபிச்சக்கரவர்த்தி புறாவைக காப்பதற்காகத் தன் மாம்சத்தைக் கழுகுக்குத் தந்தார் என்ற கதையைப் புண்ணியம் விரும்புவோர் கேட்கின்றனர். ஆகவே, அடைக்கலம் புகுந்தவர்களைக் கொல்வது தர்மமல்ல’’

என்றது வக்ரநாசன்.

அதன்பிறகு ஆந்தையரசன் பிராகாரகர்ணனைப் பார்த்து, ‘’நீ என்ன நினைக்கிறாய். சொல்!’’ என்றது.

‘’அரசே, அவனைக் கொல்லக்கூடாது. ஏனென்றால், அவனைக் காப்பாற்றினால் நாளடைவில் ஒருவேளை உங்களிருவரிடையே அன்பு வளர்ந்து இருவரும் சுகமாகக் காலங்கழிக்கலாம்,

ஒருவனுடைய மர்மத்தை இன்னொருவன் பாதுகாக்காவிட்டால், வயிற்றுப் பாம்பும் புற்றுப் பாம்பும் நாசமடைந்ததுபோல், அவர்கள் நாசமடைகின்றனர்.

என்றொரு பழமொழி உண்டு’’ என்றது.

‘’அது எப்படி?’’ என்று ஆந்தையரசன் கேட்டது. பிராகாரகர்ணன் சொல்லத் தொடங்கியது:

வயிற்றுப் பாம்பும் புற்றுப்பாம்பும்

ஒரு ஊரில் தேவசக்தி என்றொரு அரசன் தன் மகனோடு இருந்தான். புற்றில் குடியேறுவதற்குப் பதிலாக அவனுடைய புத்திரனின் வயிற்றில் ஒரு பாம்பு குடிகொண்டது. அதனால் அரசகுமாரனின் உடம்பு நாளுக்கு நாள் மெலிந்து நலிந்து போயிற்று. அவனுக்கு வாழ்க்கையே வெறுத்துப்போயிற்று. தேசாந்தரம் போய்விட்டான். ஏதோ ஒரு நகரத்தில் பிச்சை எடுத்துச் சாப்பிட்டு ஒரு பெரிய கோவிலில் படுத்து அவன் காலம் தள்ளி வந்தான்.

அந்த ஊரில் பலி என்ற அரசன் இருந்தான். அவனுக்குப் பருவம் அடைந்த இரண்டு புத்திரிகள் இருந்தனர். அவர்களில் ஒருத்தி தினந்தோறும் அரசனின் கால்மாட்டில் இருந்துகொண்டு, ‘’அரசே, உமக்கு வெற்றியுண்டாகட்டும்’’ என்பாள். மற்றவள் வந்து ‘’அரசே, விதித்ததை அனுபவியுங்கள்’’ என்பாள். அதைக் கேட்டு அரசன் கோபமடைந்தான். தன் மந்திரிகளிடம், ‘’மந்திரிகளே, இப்படி தீமையே பேசும் இந்தப் பெண்ணை யாராவது ஒரு பரதேசிக்குக் கொடுத்துவிடும். விதித்ததை இவளே அனுபவிக்கட்டும்’’ என்று சொன்னான். ‘’அப்படியே’’ என்று மந்திரிகள் ஒப்புக் கொண்டு, சில பணிப்பெண்களோடு அந்தப் பெண்ணை அழைத்துப்போய், கோவிலில் இருந்த அரசகுமாரனுக்குக் கொடுத்து விட்டார்கள்.

அவள் தன் கணவனைச் சந்தோஷத்தோடு ஏற்றாள். கடவுள் என்றே கொண்டாடினாள். அவனோடு வேறு நாட்டுக்குச் சென்றாள். வெகு தொலைவிலிருந்த ஒரு நகரத்தில் ஒரு குளக்கரையின் அருகே இருந்த வீட்டைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளும்படி கணவனை வைத்துவிட்டு, அரசகுமாரி தன் பணிப்பெண்களுடன் நெய், எண்ணெய், உப்பு, அரிசி முதலியவற்றை வாங்கச் சென்றான். அவள் சாமான்களை வாங்கிக்கொண்டு திரும்பியபோது, கணவன் ஒரு பாம்புப்புற்றின்மேல் தலைவைத்துப் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தான். அவனுடைய வாயிலிருந்து பாம்பு வெளியே தலை நீட்டி, படமெடுத்தபடி, காற்று வாங்கிக் கொண்டிருந்தது. அரசகுமாரி அதைப் பார்த்துவிட்டாள். அதே சமயத்தில் எறும்புப் புற்றிலிருந்து இன்னொரு பாம்பு காற்றுவாங்க வெளியே தலை நீட்டியது.

பாம்புகள் ஒன்றையொன்று பார்த்துவிட்டன. இரண்டுக்கும் கோபத்தால் கண்கள் சிவந்துவிட்டன. புற்றும்பாம்பு வயிற்றுப் பாம்பைப் பார்த்து, ‘’சீ, நீசனே! இவ்வளவு அழகான அரசகுமாரனைத் துன்புறுத்த உனக்கு எப்படி மனம் வருகிறது?’’ என்றது. ‘’நீதான் நீசன். பொன்நிறைந்த இரண்டு குடங்களை நீ மண்ணடித்து மூடி விட்டிருக்கிறாயே!’’ என்றது வயிற்றுப்பாம்பு. இப்படி ஒன்றின் பலவீனத்தை மற்றொன்று வெளிப்படுத்தியது.

‘’துஷ்டனே, கடுகை அரைத்துக் குடித்தால் சீ செத்துவிடுவாய் என்ற வைத்தியமும் யாருக்குமே தெரியாமல் போயிற்றா?’’ என்றது புற்றுப்பாம்பு.

“புற்றின்மேல் வெந்நீரை ஊற்றினால் நீ செத்துவிடுவாய் என்ற வைத்தியமும் யாருக்கும் தெரியாமல் போயிற்றா” என்றது வயிற்றுப் பாம்பு.

மரத்தின்பின் மறைந்து நின்று, அரசகுமாரி இந்தப் பேச்சுக்களைக் கேட்டுவிட்டாள். பாம்புகள் சொல்லிக்கொண்டபடியே செய்து முடிந்தாள். இரண்டு பாம்புகளும் செத்தொழிந்தன. அவளால் கணவனுடைய உடம்பும் குணமாயிற்று, பணமும் நிறைய கிடைத்தது. அவள் சொந்த நாட்டுக்குத் திரும்பிச் சென்றாள். தாய் தந்தையரும், உறவினர்களும் அவளை வெகுவாகப் பாராட்டிப் புகழ்ந்தனர். அவள் கணவனோடு சுகமாக வாழ்ந்தாள். விதித்ததை அனுபவிக்கிறாள் அல்லவா அவள்!

அதனால்தான், ‘ஒருவனுடைய மர்மத்தை இன்னொருவன் பாதுகாக்காவிட்டால்…’ என்றெல்லாம் சொல்லலானேன்’’ என்றது பிராகாரகர்ணன்.

அதைக்கேட்ட ஆந்தையரசன் அவ்விதமே செய்ய நினைத்தது. அரசன் முடிவு செய்ததைக் கண்ட ரக்தாட்சன் தனக்குள்ளே சிரித்துக்கொண்டே மறுபடியும் பேசத் தொடங்கியது. ‘’கஷ்டம், கஷ்டம்; உங்களால் அரசன் நாசம் செய்யப்படுகிறார். ஒரு பழமொழி உண்டு:

எங்கே கௌரவிக்க வேண்டியவர்களைக் கௌரவிக்காமல், கௌரவிக்கத் தகாதவர்களைக் கௌரவிக்கிறார்களோ, அங்கே பஞ்சம், மரணம், பயம் மூன்றும் வந்து சேரும்.

கண்ணெதிரே பாவம் செய்தாலும் அதை நிம்மதியாகப் பார்த்தபடியே மூடன் சந்தோஷிக்கிறான். தன் மனைவியையும், அவளுடைய கள்ளப் புருஷனையும் ஒரு தச்சன் தன் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு நடந்தான்.

என்றது ரக்தாட்சன்.

‘’அது எப்படி?’’ என்றனர் மந்திரிகள். ரக்தாட்சன் சொல்லத் தொடங்கியது:


http://inthiya.com/?p=11837

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சதந்திரம் தொடர் 47 - மூடத் தச்சன்

அன்னபூர்னா ஈஸ்வரன்



ஒரு ஊரில் ஒரு தச்சன் இருந்தான். அவன் மனைவி ஒரு வேசி என்பது ஊரறிந்த சங்கதி. அவள் நடத்தையைச் சோதிக்க நினைத்தான் தச்சன்

‘’இவளை எப்படிச் சோதிப்பது?

பெண்களின் கற்பின் முன்னே நெருப்பு குளுமையடையும், நிலா நெருப்பாகிவிடும், கெட்டவன் நல்லவனாவான்.

என்றொரு பழமொழி உண்டு. ஊர் ஜனங்கள் பேசிக்கொள்வதிலிருந்து இவள் ஒரு வேசி என்று எனக்குத் தெரியும்.

வேதத்திலோ சாஸ்திரத்திலோ காணாததையும் கேளாததையும், பிரபஞ்சம் முழுவதிலுமுள்ள சகல விஷயங்களையும், ஜனங்களிடமிருந்து தெரிந்து கொள்ளலாம்.

என்றொரு பழமொழி உண்டல்லவா?’’ என்று யோசித்தான். தன் மனைவியிடம், ‘’அன்பே, காலையில் நான் வேறு கிராமத்துக்குப் போகிறேன். அங்கே சில தினங்கள் தங்க வேண்டிவரும். ஆகவே நீ எனக்கு நல்ல சாப்பாடு தயார் செய்துவை’’ என்று சொன்னான். அவனுடைய பேச்சைக் கேட்டு அவன் சந்தோஷமடைந்தாள். எல்லாக் காரியங்களையும், விட்டுவிட்டு, உற்சாகத்தோடு நெய்யும் சர்க்கரையும் கலந்து உணவு தயாரித்தாள்.

கனத்த மேகங்களால் பகல் இருண்டிருக்குபோதும், ஊர் வீதிகளில் சேற்றால் நடக்கமுடியாமல் இருக்கும்போதும், கணவன் வெளியூருக்குச் சென்றிருக்கும்போதும், சோரம் போகிறவளுக்குக் கொண்டாட்டந்தான்.

என்று சொல்லியிருப்பது சரியே.

விடியற்சாலையில் தச்சன் எழுந்து வீட்டிலிருந்து வெளியேறினான். அவன் போய்விட்டதை அவள் அறிந்துகொண்டு தன்னை அழகு படுத்திக்கொள்வதிலேயே ஈடுபட்டு ஒருவாறு பகல்பொழுது கழிந்தது. பிறகு, ஏற்கனவே தனக்குத் தெரிந்த ஒரு ஸ்திரீலோலனின் வீட்டுக்கு அவள் போய், ‘’அந்தப் படுபாவியாகிய என் புருஷன் வெளியூருக்குப் போயிருக்கிறான். ஆகவே, ஊர் உறங்கியபின் நீ என் வீட்டுக்கு வந்துவிடு’’ என்று சொன்னாள்.

அதன்படியே அவனும் வந்தான்.

அந்தத் தச்சன் பகற்பொழுதைக காட்டில் கழித்துவிட்டு, மாலையில் திரும்பி தன் வீட்டின் பக்கவழியே நுழைந்து கட்டிலின் அடியில் ஒளிந்து கொண்டான். அந்தச் சமயத்தில் அந்த ஸ்திரீலோலன் வந்து அந்தப் படுக்கையில் உட்கார்ந்தான். அவனைப் பார்த்துவிட்டுத் தச்சன் மிகுந்த கோபமடைந்தான். ‘’எழுந்துபோய் இவனைக் கொல்லலாமா? அல்லது, இரவில் இருவரும் தூங்கியபின் சுலபமாக இவர்களைக் கொல்லலாமா? அல்லது, அவள் என்ன பேசுகிறாள், என்ன செய்கிறாள் என்று கவனிக்கட்டுமா?’’ என்று யோசித்தான். அந்தச் சமயத்தில் அவள் வீட்டில் கதவை நன்றாகப் பூட்டிவிட்டு வந்து படுக்கையில் ஏறினாள்.

அவள் ஏறும்போது தச்சனின் உடம்பின்மீது அவள் கால் பட்டுவிட்டது. உடனே அவள் ‘நிச்சயம் அவன் அந்தப் படுபாவி புருஷனாகத்தான் இருக்க வேண்டும். என்னைச் சோதிக்க வந்திருக்க வேண்டும். பெண்களின் சாகஸத்தை அவனுக்குக் காட்டுகிறேன்’ என்று யோசித்து முடிவு செய்தாள்.

இவள் இப்படி நினைத்துக்கொண்டிருக்கையில் அந்தக் காமுகன் அவளைச் சேர துடிதுடித்துக் கொண்டிருந்தான். அப்போது அவள் தன் கைகளைப் கூப்பி, ‘’மகானுபாவனே, நீ என்னைத் தொடாதே’’ என்று சொன்னாள். ‘’அப்படியானால் என்னை ஏன் அழைத்தாய்?’’ என்றான் அவன். அதற்கு அவள், ‘’ஏய், நான் விடியற்காலையில் அம்மனைத் தரிசிக்கச் சண்டிகேஸ்வரி கோவிலுக்குப் போயிருந்தேன். அங்கு திடீரென்று ஆகாயத்திலிருந்து ‘பெண்ணே, என்ன செய்வேன்? நீ என் பக்தைதான். இருந்தாலும் விதிவசத்தால் நீ ஆறுமாதகாலத்தில் விதவையாகப்போகிறாய்’ என்று ஒரு குரல் கேட்டது. அதற்கு நான், ‘’ஹே பகவதி! ஆபத்துத் தெரிந்த மாதிரியே பரிகாரமும் உனக்குத் தெரிந்திருக்கும். என் கணவன் நூறு வருஷங்கள் உயிரோடிருப்பதற்கு ஏதாவது உபாயம் உண்டா?’’ என்று கேட்டேன். ‘’ஆம் இருக்கிறது, ஆனால் பரிகாரம் முழுவதும் உன்னைப் பொறுத்திருக்கிறது’’ என்று தேவி பதில் சொன்னாள். ‘’என் உயிரைத் தரவேண்டியதானாலும் சரி, கட்டளையிடு. நான் செய்கிறேன்’’ என்றேன் நான். அதற்குத் தேவி, ‘’பரபுருஷனோடு ஒரே படுக்கையில் ஏறி ஆலிங்கனம் செய்து கொண்டால் அப்போது உன் கணவனைப் பற்றியுள்ள கண்டம் அந்தப் பரபுருஷனைப் பற்றிக்கொள்ளும். உன் கணவனும் நூறு வருஷங்கள் உயிரோடு இருப்பான்’’ என்றாள் தேவி. அதனால்தான் நான் உன்னை வேண்டிக் கொண்டேன். ஆகவே, இனி உன் இஷ்டப்படிச் செய். தேவியின் வாக்கைப் பொய்யாக்கக் கூடாது. இது நிச்சயம்’’ என்றாள் அந்த வேசி மனைவி. அந்த ஸ்திரீலோலன் தனக்குள்ளே சிரித்துக்கொண்டான், அவன் முகம் மலர்ந்தது. அவள் சொன்னபடியே செய்தான்.

மூடத்தச்சன் அவளுடைய பேச்சைக் கேட்டுவிட்டுப் புளகமடைந்த தேகத்துடன் கட்டிலின் கீழேயிருந்து வெளிவந்து பேசினான். ‘’கற்பரசியே, நீ செய்தது நல்லது. என் குலவிளக்கே, கெட்ட மனிதர்களின் பேச்சைக் கேட்டு நான் உன்மேல் சந்தேகம் கொண்டேன். உன்னைச் சோதிக்க வேண்டி வேறு கிராமத்துக்குப் போவதாகச் சொல்லிவிட்டு கட்டிலின் கீழ் ஒளிந்திருந்தேன். ஆகவே, வா, என்னை அணைத்துக்கொள்’’ என்று சொன்னான். சொல்லி விட்டு, அவளை அவன் ஆலிங்கனம் செய்து தோளில் ஏற்றிக்கொண்டான். பிறகு ஸ்திரீலோலனைப் பார்த்து, ‘’ஏ மகானுபாவனே, நீ இங்கு வந்தது நான் செய்த புண்ணியத்தினால்தான். உன் அருளால் எனக்கு நூறு வருஷம் ஆயுள் கிடைக்கிறது. ஆகவே, நீயும் என் தோளில் ஏறிக்கொள்’’ என்று தச்சன் சொன்னான். அந்தக் காமுகனுக்கு விருப்பமில்லாதிருந்தும், தச்சன் அவனைப் பலவந்தமாகத் தோளில் ஏற்றிக்கொண்டு கூத்தாடினான். எல்லா உறவினர் களுடைய வீட்டு வாசல்களுக்கும் கூத்தாடியபடியே சென்று திரிந்தான்.

அதனால்தான் ‘கண்ணெதிரே பாவம் செய்தாலும் அதை நிம்மதியாகப் பார்த்தபடியே மூடன் சந்தோஷிக்கிறான்’’ என்றெல்லாம் சொல்லலானேன்’’ என்றது ரக்தாட்சன்.

அது மேலும் பேசுகையில், ‘’இனிமேல் நாம் வேரறுக்கப் பட்டமாதிரியே, நாசமான மாதிரியே.

இதமான வார்த்தை பேசி, விபரீத காரியம் செய்பவன் நண்பன் உருவில் வந்த எதிரிதான், என்று கூரிய புத்தியுடையவர்கள் அவனைக் கண்டு கொள்கின்றனர்.

என்றொரு பழமொழி உண்டு. மேலும்,

இடத்துக்கும் காலத்துக்கும் பொருந்தாத, அறிவில்லாத, யோசனைகளைக் கேட்டு நடந்தால், சூரியன் முன்னே இருள் நீங்குவது போல், அடைந்த பொருளும் போய்விடும்.

என்றது ரக்தாட்சன்.

அதன் வார்த்தையை ஆந்தைகள் சட்டைசெய்யவில்லை. ஸ்திரஜீவியைத் தூக்கிக்கொண்டு தங்களுடைய கோட்டைக்குப் போகத் தொடங்கின. போகிறவழியில் ஸ்திரஜீவி ஆந்தையரசனைப் பார்த்து, ‘’அரசே, ஒன்றும் செய்யாமலே அந்த அவஸ்தைக்கு ஆளாகிய என்னை ஏன் அழைத்துப் போகிறீர்கள்? நான் தீக்குளிக்க விரும்புகிறேன். நெருப்புக்கு ஏற்பாடு செய்தால் உங்களுக்கு நான் என்றும் கடமைப்பட்டவனாவேன்’’ என்றது.

அதன் மனதில் இருந்த எண்ணத்தை ரக்தாட்சன் தெரிந்து கொண்டது. ‘’நெருப்பில் ஏன் விழ விரும்புகிறாய்?’’ என்று கேட்டது. ‘’உங்கள் பொருட்டாகத்தான் நான் இந்தக் கதிக்கு ஆளானேன். ஆகவே அவர்களை வஞ்சம் தீர்ப்பதற்காக ஆந்தையாக மறுபிறப்பெடுக்க ஆசைப்படுகிறேன்’’ என்றது ஸ்திரஜீவி.

ரக்தாட்சன் ராஜநீதியில் நிபுணன். எனவே, அது ஸ்திரஜீவியிடம் நண்பனே, கபடத்திலும் இரண்டு அர்த்தம் கொள்ளும்படி பேசுவதிலும், நீ கெட்டிக்காரனாக இருக்கிறாய். நீ ஆந்தையாகவே பிறந்தாலும் உன் காக்கை இனத்தையே நீ பெரிதாக மதிப்பாய். இந்தக் கதையை நீ கேட்டதில்லையா?

சூரியனும், மேகமும், காற்றும், மலையும் பெண் எலியை மணக்க இருந்தும், அது அவர்களில் யாரையும் கணவனாக ஏற்றுக்கொள்ள மறுத்தது. தன் இனத்தையே மீண்டும் வந்தடைந்தது. சொந்த இனத்தை விட்டு யாரும் செல்ல முடியாது!

என்றது ரக்தாட்சன். ‘’அது எப்படி?’’ என்று ஸ்திரஜீவி கேட்க, ரக்தாட்சன் சொல்லிற்று:

எலிப்பெண் எலியானாள்

கரடுமுரடான கற்பாறைகளுள்ள கரைமீது அலைநீர் மோதி மோதி ஹ¥ங்காரம் செய்கின்றது. அந்தப் பேரொலியைக் கேட்டு மீன்கள் பயந்து துள்ளிக் குதிக்கின்றன. மீன்கள் துள்ளுவதால் முத்து முத்தாக வெண்ணுரைத் திவலைகள் கொப்பளித்து அலைகளுக்குப் புள்ளியிட்டு அழகு செய்கின்றன. இந்தக் கோலத்தில் காட்சி தரும் கங்கை நதிக்கரையின் அருகிலே ஒரு ஆஸ்ரமம் இருந்தது. அதில் பல ரிஷிகள் இருந்தனர். ஓமம், நியமம், தவம், படிப்பு, உபவாசம், யாகம், சடங்கு, அனுஷ்டானம், பாராயணம், முதலிய காரியங்களில் அவர்கள் ஈடுபட்டுக் காலங்கழித்து வந்தனர். அவர்கள் குடிப்பது சுத்த ஜலம்தான். அதையும் அளவாகக் குடிப்பார்கள். கிழங்குஇ வேர், பழம், பாசியையே அவர்கள் உண்டு வந்தனர். அதன் காரணமாக அவர்களின் உடல் வாடியிருந்தது. மரவுரியாலான கோவணமே அவர்கள் அணிந்த ஆடை.

அந்த ஆஸ்ரமத்தில் யாக்ஞவல்கியர் என்ற முனிவர்கோன் இருந்தார். அவர் கங்கையில் குளித்துவிட்டு, வாய் கொப்பளிக்கும் தருணத்தில், ஒரு பருந்தின் வாயிலிருந்து நழுவிய பெண் எலி ஒன்று அவருடைய கையில் வந்து விழுந்தது. அவர் அதைப் பார்த்து ஒரு ஆலிலைமேல் வைத்துவிட்டு மறுபடியும் குளித்து வாய் கொப்பளித்தார். அத்துடன் பிராயச்சித்தச் சடங்கும் செய்து முடித்தார். பிறகு தமது தவவலிமையால் அந்தப் பெண் எலியை ஒரு மனிதப் பெண்ணாக மாற்றி ஆஸ்ரமத்துக்கு அழைத்துச் சென்றார். குழந்தை இல்லாதிருந்த தன் மனைவியிடம், ‘’அன்பே, அவளை ஏற்றுக்கொள். உன் பெண்போல் அவள் வந்திருக்கிறாள். அவளைக் கவனமாக வளர்த்து வா’’ என்று சொன்னார். ரிஷியின் மனைவி அவளை வளர்த்துச் செல்லம் கொண்டாடி வந்தாள். பெண்ணுக்குப் பனிரெண்டு வயதானதும், கல்யாண வயது வந்துவிட்டதென்று கண்டு, ரிஷியின் மனைவி தன் கணவனிடம், ‘’நாதா, உங்கள் பெண் கல்யாண வயதைத் தாண்டிவருவது உங்களுக்குத் தெரியவில்லையா?’’ என்று கேட்டாள்.

‘’அன்பே, நீ சொல்வது நிஜமே. ஒரு முதுமொழி கூறுவதுபோல்:

பெண்களை முதலில் சந்திரன், கந்தர்வன், அக்னி முதலிய தேவர்கள் அனுபவிக்க வேண்டும். பிறகுதான் மனிதன் அனுபவிக்கிறான். அதனால் பிறகு பெண்ணுக்குத் தோஷமொன்றும் ஏற்படாது.

சந்திரன் அவளுக்கு அந்தரங்க சுத்தி அளிக்கிறான். கந்தர்வன் அவளுக்கு இனிய குரல் அளிக்கிறான். அக்னி அவளுக்குப் புனிதத்தன்மை அளிக்கிறான். அவற்றால், பெண்கள் பாவமற்றவர்களாக ஆகிறார்கள்.


பெண் பருவமடைவதற்கு முன் வெள்ளை என்று வர்ணிக்கப் படுகிறாள். பருவமடைந்தபின் சிகப்பு என்று வர்ணிக்கப்படுகிறாள். பருவமடைவதற்கு முன் பெண் நிர்வாணமாயிருந்தால் அதனால் அவளுக்கு ஒரு குற்றமுமில்லை.

பெண் பருவமடைந்தபின் அவளுடைய வளரும் அழகில் சந்திரன் அனுபவிக்கிறான். ஸ்தங்களில் கந்தர்வர்கள் அனுபவிக்கின்றனர். மாதவிடாயில் அக்னி அனுபவிக்கிறான்.

எனவே, பருவமடைவதற்குமுன் பெண்களை மணம் செய்து கொடுப்பது நல்லது. எட்டு வயதில் மணம் செய்து தருவது புகழப்படுகிறது.

முதலில் பூப்பு ஒருவனைக் கொல்கிறது: பிறகு ஸ்தானங்கள் ஒருவனைக் கொல்கின்றன. அவளிடம் சுகம் பெறாததால் உலகமும், அவளை மணம் செய்து கொடுக்காததால் தந்தையும், பிறகு கொல்லப்படுகின்றனர்.

பருவமடைந்த பின்பும் பெண் வீட்டிலிருந்தால் தனக்கு இஷ்டமானவனை வரித்துக்கொண்டு சென்றுவிடுவாள். ஆகவே, பருவமடைவதற்கு முன்பே அவளை மணம் செய்து கொடுத்துவிடு என்று மனு சொல்கிறார்.

மணமாகாமலே தந்தை வீட்டில் எந்தப் பெண் பருவமடைகிறாளோ அவளை மணக்க வேண்டாம். அவளைப் பரத்தை என்று நினை.


பெண் பருவமடைவதற்குமுன் தந்தை அவளை உயர்நிலையில் இருப்பவனுக்கோ மணம் செய்து வைக்க வேண்டும். அப்படிச் செய்தால் தோஷம் இல்லாமலிருக்கும்.

ஆகவே, இவளை இவளுக்குச் சமமான நிலையிலிருப்பவனுக்குக் கொடுக்கிறேன்.
ஒத்த குலமும், ஒத்த செல்வமும் பொருந்தியவர்களிடையே தான் திருமணமும் நட்பும் இருக்க வேண்டும். பணக்காரனுக்கும் ஏழைக்கும் இடையே அவ்வித உறவுகள் இருக்கக்கூடாது.

குலம், குணம், அந்தஸ்து, கல்வி, செல்வம், அழகு, இளமை – இந்த ஏழு அம்சங்களையும் கவனித்துத்தான் அறிவாளிகள் பெண்ணைக் கொடுக்கிறார்கள். மற்றவற்றைப் பற்றி யோசிக்க வேண்டியதில்லை.


உனக்கு இதில் இஷ்டமிருந்தால், சூரியபகவானைக் கூப்பிட்டு இவளைத் தருகிறேன்’’ என்றார் முனிவர். ‘’அதில் தோஷமென்ன இருக்கிறது? அப்படியே செய்யுங்கள்’’ என்றாள் மனைவி.

உடனே முனிவர் சூரியனை அழைத்தார். சூரியன் உடனே தோன்றி, ‘’சுவாமி, என்னை ஏன் அழைத்தீர்கள்?’’ என்று கேட்டான். ‘’இதோ என் மகள், அவளை நீ மணந்துகொள்’’ என்று முனிவர் சொல்லி, தன் பெண்ணைப் பார்த்து, ‘’மகளே, மூவுலகுக்கும் தீபமாக விளங்கும் சூரிய பகவானை நீ விரும்புகிறாயா?’’ என்று கேட்டார். ‘’அப்பா, இவன் ரொம்பவும் சுட்டெரிக்கிறான். ஆகவே, எனக்கு விருப்பமில்லை. இவனைவிட மேலானவனை அழையுங்கள்’’ என்றாள் பெண்.

அந்தப் பதிலைக் கேட்டு முனிவர் சூரியனிடம், ‘’தேவா, உன்னைவிட மேலானவர்கள் யாராவது உண்டா?’’ என்று கேட்டார். ‘’இருக்கிறான். என்னைவிட உயர்ந்தவன் மேகம். அவன் என்னை மறைத்தால் நான் கண்ணுக்குத் தெரியாமல் போகிறேன்’’ என்றான் சூரியன்.

முனிவர் மேகத்தை வரவழைத்துவிட்டு, பெண்ணைப் பார்த்து, ‘’மகளே உன்னை இவனுக்குத் தருகிறேன்’’ என்றார். ‘’இவன் கறுப்பு நிறமாயிருக்கிறான். ஜடமாயுமிருக்கிறான். எனவே இவளைவிட மேலானவனுக்கு என்னைக் கொடும்’’ என்றாள் மகள். முனிவர் மேகத்தைப் பார்த்து, ‘’மேகமே, உன்னைவிட மேலானவன் யாராவது உண்டா?’’ என்று கேட்டார். ‘’என்னைவிடப் பெரியவனான காற்று இருக்கிறானே’’ என்று மேகம் சொல்லியது.

உடனே முனிவர் காற்றை வரவழைத்தார். பெண்ணைப் பார்த்து, ‘’மகளே, உன்னை இவனுக்குக் கொடுக்கிறேன்’’ என்றார். ‘’அப்பா, இவன் ரொம்பவும் சபலபுத்தி உள்ளவன். ஆகவே இவனைவிட மேலானவனைக் கூப்பிடுங்கள்’’ எனறு பதிலளித்தாள் பெண். ‘’காற்றே, உன்னைவிட மேலானவன் யாராவது உண்டா?’’ என்று முனிவர் கேட்டார். ‘’என்னைவிட அதிக பலமுள்ளவன் மலையரசன்’’ என்றது காற்று.

உடனே முனிவர் மலையை வரவழைத்தார். பெண்ணிடம், ‘’பெண்ணே, இவனுக்கு உன்னைத் தரட்டுமா?’’ என்று கேட்டார். ‘’அப்பா, இவன் உடம்பு கடினமானது. இருக்கிற இடத்தை விட்டு அசையாதவன். ஆகவே, வேறு யாருக்காவது என்னைக் கொடும்’’ என்றாள் பெண். முனிவர் மலையைப் பார்த்து, ‘’மலையரசனே, உன்னைவிட மேலானவன் யாராவது உண்டா?’’ என்று கேட்டார். ‘’என்னைவிட மேலானவை எலிகளே’’ என்றான் மலையரசன்.

முனிவர் எலியை வரவழைத்து பெண்ணுக்குக் காட்டி, ‘’இந்த எலியை உனக்குப் பிடிக்கிறதா?’’ என்று கேட்டார். எலியைப் பார்த்த பெண், தன் இனத்தைச் சேர்ந்தது அது என்று உணர்ந்துகொண்டு, உடலெல்லாம் பொங்கிப் பூரித்துப் போனாள். ‘’அப்பா, என்னைப் பெண் எலியாகச் செய்து இவனுக்குக் கொடுத்துவிடும். அப்படிச் செய்தால், நான் என் இனத்துக்குத் தகுந்தபடி இல்லறம் நடத்திவருவேன்’’ என்று சொன்னாள். முனிவர் தமது தவ வலிமையால் அவளைப் பெண் எலியாக மாற்றி வந்த எலிக்குத் தந்துவிட்டார்.

அதனால்தான்…. சொந்த இனத்தை விட்டு யாரும் செல்லமுடியாது’ என்று சொல்லலானேன்’’ என்றது ரக்தாட்சன்.

அதன் பேச்சை கேட்காத ஆந்தைகள், தமது குலத்துக்கு நாசம் விளைவிக்கும் முறையிலே, ஸ்திரஜீவியை தம் கோட்டைக்குக் கொண்டு போயின. போகிற வழியில் ஸ்திரஜீவி தனக்குள்ளே சிரித்துக்கொண்டே பின்வருமாறு எண்ணிற்று.

‘’இவனைக் கொல்லுங்கள்’’ என்று யார் அரசனுக்கு நல்லதைச் சொன்னானோ அவனே ராஜநீதியின் தத்துவத்தை அறிந்தவன். மற்றவர்களுக் கெல்லாம் அது தெரியாது.

அவனுடைய பேச்சைக் கேட்டு நடந்திருந்தால் இந்த ஆந்தைகளுக்கு ஒரு ஆபத்தும் ஏற்பட்டிருக்காது’’.

கோட்டை வாயிலை அடைந்ததும் ஆந்தையரசன், ‘’நண்பர்களே, நமது நன்மையை விரும்பும் இந்தத ஸ்திரஜீவிக்கு அவனுக்கு இஷ்டமான ஜாகையைக் கொடுங்கள்’’ என்று சொல்லிற்று. அதைக்கேட்ட ஸ்திரஜீவி, ‘’இவர்களைக் கொல்வதற்கு நான் ஒரு திட்டம் போட்டுத் தீர வேண்டும். இவர்கள் மத்தியிலிருந்தால் அப்படிச் செய்ய முடியாது. என் காரியமாய் நான் போய்வருவதைக் கண்டுவிட்டு இவர்கள் உஷாராகி விடலாம். கோட்டை வாயிலில் இருந்து கொண்டே என் விருப்பத்தை நிறைவேற்றுகிறேன்’’ என்று எண்ணிற்று.

அப்படியே தீர்மானம் செய்து, ஆந்தையரசனிடம், ‘’அரசே, தாங்கள் சொன்னது சரியே. என்றாலும், எனக்கும் ராஜநீதி தெரியும். நான் உம் நன்மையை விரும்புகிறவன்தான். இருந்தபோதிலும், ஒருவன் விஸ்வாசமும், நல்லெண்ணமும் உள்ளவனாயிருந்தாலும்கூட அவன் கோட்டையின் மத்தியிலே வசிப்பது சரியல்ல. ஆகவே, இந்தக் கோட்டை வாயிலிலேயே நான் இருந்து கொண்டு தங்களுடைய தாமரை போன்ற பாதங்களின் தூளியால் உன் உடல் புனிதமாக்கப்பட்டபடியே தினந்தோறும் தங்களுக்குச் சேவைசெய்து வருகிறேன்’’ என்று சொல்லிற்று.

ஆந்தையரசன் அதற்கு ஒப்புக் கொண்டது. அரசனின் ஆட்கள் ராஜ கட்டளைப்படி ஸ்திரஜீவிக்கு மிகவும் மேலான மாமிச உணவை இஷ்டப்படி தினந்தோறும் கொடுத்து வந்தன. சில நாட்களிலேயே ஸ்திரஜீவி மயிலைப் போல் பலம் பெற்றுவிட்டது.

ஸ்திரஜீவியை இப்படிப் போஷிப்பதைக் கண்டு ரக்தாட்சன் ஆச்சரியமடைந்தது. மந்திரிகளிடமும், அரசனிடமும், ‘’என்ன துரதிர்ஷ்டம்! இந்த மந்திரிகளும், தாங்களும் முட்டாள்களே, வேறு விதமாக நினைக்க எனக்கு முடியவில்லை.

முதலில் நான் முட்டாள் ஆனேன். பிறகு என்னைப் பீடித்தவன் முட்டாள் ஆனான். பிறகு அரசனும், மந்திரியும் முட்டாள்கள் ஆனார்கள். எல்லோருமே ஒரு முட்டாள் கூட்டம்தான்.

என்றொரு பழமொழி உண்டு’’ என்றது ரக்தாட்சன். ‘’அது எப்படி?’’ என்று ஆந்தைகள் கேட்க, ரக்தாட்சன் சொல்லிற்று:

http://inthiya.com/?p=12126
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சதந்திரம் தொடர் 48 - பொன் எச்சமிட்ட பறவை
அன்னபூர்னா ஈஸ்வரன்


ஒரு மலைக்கருகில் பெரிய மரம் ஒன்று இருந்தது. அதில் ஒரு பறவை இருந்து வந்தது. அதன் எச்சத்திலிருந்து தங்கம் உற்பத்தியாகி வந்தது.

ஒருநாள் அந்த இடத்துக்கு ஒரு வேடன் வந்தான். அந்தப் பறவை அவன் எதிரிலேயே எச்சம் இட்டது. அது விழுகையிலேயே தங்கமாக மாறுவதை வேடன் கண்டான். ஆச்சரியமடைந்து போனான். ‘’ஆஹா, குழந்தைப் பருவத்திலிருந்து நான் பறவைகளைப் பிடித்து எட்டு வருஷங்கள் ஆகின்றனவே! ஒரு நாளாவது பறவையின் எச்சத்தில் பொன்னைக் கண்டதில்லையே!’’ என்று எண்ணினான். அந்த மரத்தில் வலையை விரித்தான். சிறிதும் சந்தேகம் கொள்ளாமல் அந்தப் பறவை முட்டாள்தனமாகப் பழைய இடத்திலேயே உட்கார்ந்தது. உடனே வலையில் சிக்கிக்கொண்டது. வேடன் அந்த வலையிலிருநது எடுத்துக் கூண்டில் அடைத்து தன் ஜாகைக்குக் கொண்டு போனான். ‘’இது அபசகுணம் படைத்த பறவை. இதை வைத்துக்கொண்டு நான் என்ன செய்வது? இதன் குணவிசேஷத்தை யாராவது பார்த்துவிட்டு அரசனுக்குத் தெரிவித்தால் நிச்சயம் என் உயிருக்கு ஆபத்து உண்டாகலாம். எனவே நானே நேரில் போய் அரசனிடம் தெரிவிக்கிறேன்’’ என்றெல்லாம் யோசித்தான். அப்படியே தீர்மானித்து அரசனிடம் போய்த் தெரிவித்தான்.

அந்தப் பறவையைப் பார்த்ததும் அரசனின் தாமரைக் கண்கள் மலர்ந்தன. அரசனுக்குப் பரமதிருப்தி ஏற்பட்டது. ‘’காவலாளிகளே, இந்தப் பறவையை மிகவும் அக்கறையுடன் பார்த்துக்கொள்ளுங்கள். அது இஷ்டப்பட்டதைச் சாப்பிடுவதற்கும் குடிப்பதற்கும் கொடுங்கள்’’ என்று சொன்னான்.

அப்போது ஒரு மந்திரி, ‘’இந்த நம்பத்தகாத வேடனின் பேச்சை மட்டும் நம்பி இந்தப் பறவையை வைத்துக் கொண்டிருப்பதில் என்ன பிரயோஜனம்? எப்போதாவது எங்கேயாவது பறவையின் எச்சத்தில் பொன் உண்டானதுண்டா? ஆகவே இதைக் கூண்டிலிருந்து எடுத்து விடுங்கள்’’ என்று சொன்னான்.

மந்திரியின் வார்த்தையைக் கேட்டு அரசன் பறவையை விடுவித்தான். அந்தப் பறவை போய் ஒரு உயர்ந்த வாயிலின் வளைவின் மேல் உட்கார்ந்துகொண்டு, பொன் மயமான எச்சத்தை இட்டுவிட்டு,

முதலில் நான் முட்டாள் ஆனேன். பிறகு என்னைப் பிடித்தவன் முட்டாள் ஆனான். பிறகு அரசனும் மந்திரியும் முட்டாள்கள் ஆனார்கள். எல்லோருமே ஒரு முட்டாள் கூட்டம்தான்.

என்று சொல்லி, தன்னிஷ்டம்போல் ஆகாயத்தில் பறந்துபோயிற்று. அதனால்தான், ‘முதலில் நான் முட்டாள்…’ என்ற செய்யுளைச் சொல்லலானேன்’’ என்றது ரக்தாட்சன்.

ஆந்தைகள் மீண்டும் ரக்தாட்சனின் நல்ல வார்த்தைகளை மதிக்கவில்லை. ஆந்தைகளுக்கு எதிராக விதி வேலை செய்தது. ஸ்திரஜீவிக்கு (காக்கை) மாம்சம் முதலான பலவிதமான உணவுகளை நிறையக் கொடுத்து மேலும் மேலும் போஷித்து வந்தன.

அதன்பிறகு ரத்தாட்சன் தன்னைச் சேர்ந்த ஆந்தைகளைக் கூட்டி வைத்து ரகசியமாகப் பேசியது. ‘’அரசனின் நன்மையும், இந்தக் கோட்டையும் இத்துடன் சரி. பரம்பரை மந்திரி சொல்லவேண்டியதை நான் சொல்லிவிட்டேன். ஆகவே, நாம் வேறு மலைக்குகைக்கு இப்பொழுதே போய்விடலாம், வாருங்கள்.

ஆபத்து வரும்முன்பே காரியம் செய்பவன்தான் விளங்குகிறான். செய்யாதவன் வருந்துகிறான்.

 

காட்டில் வாழ்ந்து கிழவனாகிவிட்ட நான் பேசும் குகையைப் பற்றிக் கேள்விப் பட்டதேயில்லை.

என்று ஒரு பழமொழி உண்டு’’ என்று சொல்லிற்று. ‘’அது எப்படி?’’ என்று அவை கேட்க, ரக்தாட்சன் சொல்லிற்று:

பேசும் குகை

ஒரு காட்டில் கரணகரன் என்னொரு சிங்கம் இருந்தது. அது ஒருநாள் பசியால் வாடிப்போய் இங்கும் அங்கும் சுற்றிப் பார்த்தது. ஒரு மிருகம் கூடக் கிடைக்கவில்லை. அஸ்தமிக்கும் வேளையில் அது ஒரு பெரிய மலைக் குகையை நெருங்கி அதற்குள் நுழைந்து யோசிக்கத் தொடங்கியது. ‘’இரவில் இந்தக் குகைக்கு ஏதாவது ஒரு மிருகம் நிச்சயமாக வரும். ஆகவே நான் இதில் ஒளிந்துகொள்கிறேன்’’ என்று எண்ணியது.

ததிமுகன் என்ற நரி அந்தக் குகைக்கு எஜமானன். அது வந்து வாயிலில் நின்றுகொண்டு, ‘’குகையே, குகையே’’ என்று ஊளையிட்டுப் பார்த்தது. பிறகு ஒரு வினாடி பேசாமல் இருந்துவிட்டு மறுபடியும் ஊளையிட்டது. ‘’ஏ குகையே, நான் வெளியே போய்ச் சுற்றிவிட்டுத் திரும்பவும் உன்னிடம் வந்து சேர்ந்தால் நீ என்னோடு பேச வேண்டும் என்பது உனக்கு ஞாபகம் இல்லையா? இன்றைக்குப் பேசமாட்டேன் என்கிறாயே! சரி, நான் வேறு ஒரு குகைக்குப் போகிறேன் அது என்னைக் கூவி அழைக்கும்’’ என்றது நரி.

இதைக் கேட்ட சிங்கம், ‘’அவன் வரும்போது இந்தக் குகை எப்போதும் எதிர்கொண்டு அழைக்கும்போல் இருக்கிறது. இதில் சந்தேகமில்லை. இன்று என்னைக் கண்டு பயந்து குகை பேசாமலிருக்கிறது.

பயத்தால் நடுங்குபவர்களுக்கு கைகால்கள் வேலை செய்வதில்லை. வார்த்தையும் வெளிவருவதில்லை. அங்கங்களில் நடுக்கம் அதிகமாகின்றது.

என்று சொல்லப்படுவது சரிதான். ஆகவே, நானே அவனை வரவேற்கிறேன். அதைக் கேட்டு அவன் குகைக்குள் நுழைவான். எனக்கு இரை கிடைத்துவிடும்’’ என்று எண்ணிக்கொண்டது. அப்படியே தீர்மானித்துவிட்டு, சிங்கம் நரிக்கு வரவேற்பு அளித்தது. ஆனால் சிங்கத்தின் கர்ஜனையை குகை அதிகப்படுத்தியதால் அதன் எதிரொலி முழங்கி வெகு தொலைவிலுள்ள காட்டுவாசிகளையும் நடுங்கச் செய்தது. நரி ஓடிக்கொண்டே,

ஆபத்து வருமுன்பே காரியம் செய்பவன் தான் விளங்குகிறான். செய்யாதவன் வருந்துகிறான். காட்டில் வாழ்ந்து கிழவனாகிவிட்ட நான் பேசும் குகையைப் பற்றிக் கேள்விப் பட்டதேயில்லை.

என்று சொல்லியது. அதை மனதில் நிறுத்தி நீங்களும் என்னோடு வந்துவிடுங்கள்’’ என்றது ரக்தாட்சன். அம்மாதிரி தீர்மானம் செய்து, ரக்தாட்சன் தன் பரிவாரங்களுடன் ஒரு தூரதேசத்துக்குச் சென்றது.

ரக்தாட்சன் போனதால் ஸ்திரஜீவிக்குச் சந்தோஷம் உண்டாயிற்று. ‘’இது நமக்கு நன்மைதான். அவன் தீர்க்கதரிசியானதால் சென்றுவிட்டான். இவர்களோ மூடர்கள். ஆகவே இவர்களை நான் சுலபமாகக் கொல்லலாம்.

தீர்க்கதரிசனமும், பரம்பரைச் சேவையுமுள்ள மந்திரிகள் அரசனுக்கு இல்லாமற்போனால் அந்த அரசன் நிச்சயமாகவும் துரிதமாகவும் நாசமடைகிறான். என்றொரு பழமொழி உண்டு. மேலும்,

சாந்தமான நயத்தைக் கைவிட்டு அதற்கெதிராக அரசனுக்கு யோசனை சொல்பவன் மந்திரி உருவிலிருக்கும் எதிரியே. புத்திசாலிகள் இதை அறிந்து கொள்கிறார்கள்.

இவ்வாறு எண்ணியபிறகு, தினந்தோறும் காட்டிலிருந்து ஒவ்வொரு கட்டையாகக் கொண்டுவந்து ஸ்திரஜீவி தன் கூட்டில் போட்டு வைக்கத் தொடங்கியது. அவை பின்னால் குகையை எரிப்பதற்குத்தான். அந்தக் கூடு பெரிதாகிக் கொண்டு வருவது தங்களை எரிப்பதற்குத்தான் என்பதை அந்த முட்டாள் ஆந்தைகள் அறிந்துகொள்ளவில்லை.

விரோதியுடன் நட்புகொள்ளாதே. நண்பனை வெறுத்துத் துயர்ப்படுத்தாதே. இழந்த நண்பனைத் திரும்பப் பெற முடியாது. விரோதி எப்பொழுதும் போல் விரோதியாகவே இருப்பான்.

என்று சொல்லிவைத்துள்ளது சரியே.

ஆக, கூடுகட்டும் சாக்கில் ஆந்தைகளின் கோட்டைவாயிலிலே கட்டைகளை அடுக்கிக்கொண்டே வந்து, ஒரு பெரிய குவியல் சேர்ந்தது. பொழுது விடிந்தது. ஆந்தைகள் குருடாகிவிட்டன. அந்த வேளையில் ஸ்திரஜீவி வேகமாகப் புறப்பட்டுப் போய் மேகவர்ணனை அடைந்தது. ‘’அரசே, விரோதிகளின் குகையை எரிப்பதற்கு ஏற்பாடு செய்து முடித்து விட்டேன். நீங்கள் உங்களுடைய பரிவாரங்களுடன் புறப்படுங்கள். ஒவ்வொருவரும் காட்டிலிருந்து ஒரு கொள்ளிக்கட்டையை எடுத்துவாருங்கள். குகைவாயிலிலுள்ள என் கூட்டில் அவற்றைக் கொண்டு வந்து போடுங்கள். நரகத்திலுள்ள கொதிக்கும் எண்ணெய்க் கொப்பரையில் அனுபவிப்பதுபோல் சித்ரவதை அனுபவித்து நமது எதிரிகள் எல்லோரும் சாவார்கள்’’ என்று சொல்லிற்று.

அதைக்கேட்டு மேகவர்ணன் மகிழ்ச்சியடைந்தது. ‘’பெரியவரே, உங்கள் அனுபவங்களைச் சொல்லுங்கள். பார்த்து வெகுநாள் ஆயிற்றே!’’ என்றது.

“குழந்தாய், பேசுவதற்கு இது நேரமல்ல. நான் இங்கு வந்ததை எதிரியின் ஒற்றன் யாராவது ஒருவேளை பார்த்துவிட்டுப் போய்த் தெரிவித்து விடலாம். அதைக்கேட்டறிந்து அந்தக் குருட்டு எதிரிகள் வேறெங்காவது தப்பித்துச் சென்றுவிடலாம். சீக்கிரம் ஆகட்டும். புறப்படுங்கள்!

துரிதமாகச் செய்யவேண்டிய காரியத்தைத் தாமதப்படுத்தினால் தேவர்கள் கோபமடைந்து அதைத் தடை செய்கின்றனர்.
கைகூடும்போலிருக்கிற காரியத்தைத் துரிதமாகச் செய்து முடிக்காவிட்டால், அந்தக் காரியத்தின் ரஸத்தைக் காலம் நன்றாகக் குடித்துவிடுகிறது. (பிறகு காரியம் செய்யும்போது வெறும் சக்தைதான் மிஞ்சும், பலன் இருக்காது.)

`எதிரிகள் எல்லோரையும் கொன்றுவிட்டு நீ வீட்டுக்குத் திரும்பியபின் எல்லாவற்றையும் கவலையின்றிச் சொல்கிறேன்’’ என்றது ஸ்திரஜீவி.

அதன் ஆலோசனையைக் கேட்டு, காக்கையரசன் தன் பரிவாரங்களோடு புறப்பட்டுச் சென்றது ஒவ்வொரு காக்கையும் ஒரு கொள்ளியை அலகில் பிடித்துத் தூக்கிக்கொண்டு போயிற்று. ஆந்தைகளின் குகையை அடைந்ததும் ஸ்திரஜீவியின் கூட்டில் எரிகிற கொள்ளிகளை எறிந்தன. ஆந்தைகள் பகல் குருடர்கள் அல்லவா? நரகத்தில் கொதிக்கும் கொப்பரையில் படும் சித்ரவதைக்கு ஆந்தைகள் ஆளாயின. அந்த நேரத்தில் ரக்தாட்சன் சொன்ன பேச்சை ஆந்தைகள் ஞாபகப்படுத்திக்கொண்டன. இவ்விதமான ஆந்தை விரோதிகள் ஒருவர் பாக்கியின்றி எல்லோரையும் மேகவர்ணன் கொன்று தீர்த்துவிட்டு, தன்னுடைய பழைய ஆலமரக் கோட்டைக்குப் பரிவாரங்களோடு திரும்பிப் போயிற்று.

அங்கே மேகவர்ணன் தன் சிம்மாசனத்தில் அமர்ந்து, ஆனந்த மடைந்த உள்ளத்தோடு, ராஜசபையில் ஸ்திரஜீவியைப் பார்த்து, ‘பெரியவரே, எதிரிகளின் நடுவே நீங்கள் எப்படி இத்தனை நாள் வாழ்ந்து வந்தீர்கள்?

விரோதிகளோடு ஒரு வினாடியேனும் கூடி வாழ்வதைவிட எரியும் நெருப்பில் விழுவதே மேல், என்று நல்லோர்கள் அறிவார்கள்.

என்றது மேகவர்ணன். அதற்கு ஸ்திரிஜீவி, ‘’அன்புள்ளவனே, கேள்:

ஆபத்து நெருங்கும்போது எந்த வழியால் நன்மை கிடைக்குமோ அந்த வழியை (அது நல்ல வழியானாலும், கெட்ட வழியானாலும் சரி)க் கூரிய அறிவுடன் பின்பற்ற வேண்டும். அர்ஜுனனைப் பார்! அவன் கைகள் யானையின் துதிக்கைக்கு ஒப்பானவை. போரில் தேர்ச்சி மிகுந்தவை. பாசுபதாஸ்திரத்தை வளைக்கும் வலிமை கொண்டவை, அப்படியிருந்தபோதிலும் அவை பெண்கள் அணியும் வளையல்களை ஏற்று அணிந்து கொண்டன. (அர்ஜுனன் பிரஹன்னளையாக மாறுவேடம் பூண்டான்.)

நீசப்பாவிகளான அரசர்களின் கொடூரமான பேச்சுக்களை எப்போதும் கேட்டுச் சகித்தவாறே, நல்ல காலத்தை எதிர்நோக்கி, அறிவும் பலமும் பெற்றவன் இருந்து வரவேண்டும். பீமனைப் பார்! கையில் கரண்டியைப் பிடித்துக்கொண்டு, புகையில் அழுக்கடைந்து, வேலைகளிலே ஈடுபட்டு, மத்ஸ்ய நாட்டில் சமையல்காரனாக இருக்கவில்லையா?

கெட்டகாலம் வரும்பொழுது நல்லகாலத்தை எதிர்நோக்கியபடியே புத்திசாலி தனது நெஞ்சைக் கடினமாக்கிக் கொண்டு தன் காரியத்தை (நல்லதோ கெட்டதோ எது வாயிலும் சரி)ச் செய்து தீரவேண்டும். காண்டீபம் என்கிற வில்லை நாணேற்றி மீட்டுவதால் கை காய்த்துப்போன அர்ஜுனன் ஸாஸ்ய நடனம் ஆடி, தன் மேகலைமணிகள் ஒலிப்பதைக் கேட்கவில்லையா?

அறிவும், உஷார் உணர்ச்சியும், உற்சாகமுள்ளவன் வெற்றிபெறவேண்டுமென்றால், தன் நடவடிக்கைகளில் எச்சரிக்கையாக இருந்துகொண்டு, தன் கௌரவத்தையும் அடக்கிவைத்து, நல்லகாலத்தை எதிர்நோக்கியவாறு இருந்து வரவேண்டும். இந்திரன், குபேரன், யமன் ஆகியோருக்குச் சமமாகத் தன் சகோதரர்களால் பூஜிக்கப்பட்டு வந்த தர்மபுத்திரன் ஒரு யாத்ரீகனின் கோலைப் பிடித்தவாறு வெகுகாலம் கஷ்டப்படவில்லையா?

அழகும் வலிமையும் உள்ள குந்தியின் இரட்டைப் புதல்வர்கள் (நகுலன், சகாதேவன்) விராட மன்னனிடம் வேலையாட்களாக அமர்ந்து மாடுகளை எண்ணிக் கணக்குப் பார்ப்பதில் ஈடுபட்டு வாழவில்லையா?

உயர்குலத்தில உதித்தவள், இணையற்ற அழகும் இளமையும் பெற்று, லக்ஷ்மிபோல் ஒளிபொருந்தியவள் திரௌபதி. அவளும்கூட காலவித்தியாசத்தால் மத்ஸ்ய அரசனின் அரண்மனையிலே கர்வங்கொண்ட பெண்களால் ஸைரந்தரி (அடிமை) என்று அழைக்கப்படவில்லையா? சந்தனத்தைப் பொடி பண்ணிக்கொண்டு காலங் கழிக்கவில்லையா?

என்றது ஸ்திரஜீவி.

‘’பெரியவரே, எதிரிகளோடு வாசம் செய்வது கத்தி முனையில் தவம் செய்வதுபோலல்லவா இருக்கிறது!’’ என்றது மேகவர்ணன்.

‘’ஆமாம், அப்படித்தான், என்றாலும் இப்படிப்பட்ட முட்டாள் கூட்டத்தை நான் எங்கும் கண்டதேயில்லை. ரக்தாட்சன் ஒருவன் தான் மிகுந்த புத்திசாலி, பல சாஸ்திரங்களில் எல்லையற்ற அறிவுள்ளவன். மற்ற அனைவருக்கும் புத்தியில்லை. ரக்தாட்சன் ஒருவன் தான் என்னுடைய உண்மையான நோக்கத்தைப் புரிந்து கொண்டவன். மற்ற மந்திரிகள் எல்லோரும் முட்டாள்கள், ராஜநீதி சிறிதும் அறியாதவர்கள். மந்திரி என்று பெயர் பண்ணிக்கொண்டு கெட்ட உபதேசங்கள் தந்து பிழைப்பு நடத்தி வருகிறவர்கள். இதுகூட அவர்களுக்குத் தெரியாமல் போயிற்று:

எதிரியின் அணியிலிருந்து வரும் நபரை நம்பிச் சேர்ந்து பழகுவது நாசமாகும். அப்படி வருபவனை விரட்டி விடவேண்டும். கஷ்டம் நித்தியமாயிருப்பது சங்கடம்தான். அப்படி வரும் எதிரியின் ஆள் நீ எங்கே உட்காருகிறாய், எங்கே படுக்கிறாய், எங்கே போய்விட்டு வருகிறாய், என்ன குடிக்கிறாய், என்ன சாப்பிடுகிறாய், என்பதையெல்லாம் நன்றாகத் தெரிந்துகொண்டு சமயம் பார்த்துத் தாக்குகிறான்.

ஆகவே அறம், அன்பு, பொருள் யாவற்றுக்கும் உறைவிடமான அறிவாளிகள் எல்லா முயற்சிகளும் செய்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அஜாக்கிரதையினால் அறிவு நாசமடைகிறது.

துர்ப்போதனை பெற்றதால் ராஜநீதியில் தவறு செய்யாதவன் யாராவது உண்டா? அளவுக்கு மீறி சாப்பிடுகிறவன் யார்தான் வியாதியால் கஷ்டப்படுவதில்லை? செல்வத்தால் செருக்குறாதவன் யார்? சாக்காடு யாரைத்தான் வீழ்த்திவிடுகிறதில்லை? உடைமைகளைக் கொண்டவன் யார்தான் கஷ்டமும் துயரமும் படுவதில்லை?

உடம்பை அசைக்காதவன் புகழையும், பதட்டமுள்ளவன் நண்பனையும், சொத்து இழந்தவன் குலத்தையும், பணம் படைத்தவன் தர்மத்தையும், பற்றுமிகுந்தவன் கல்வியையும், லோபி சுகத்தையும், கவனமில்லாத மந்திரிகளையுடைய அரசன் ராஜ்யத்தையும், இழக்க வேண்டியவர்களே.

என்ற சொல்லில் நிறைய விவேகம் இருக்கிறது. அரசே, எதிரிகளோடு வாசம் செய்வது கத்திமுனையில் தவம் கிடப்பதுபோல என்று தாங்கள் வர்ணித்தீர்களே, அதை நான் நேரில் அனுபவித்தேன்.

காலத்துக்குத் தக்கபடி அறிவாளி நடந்துகொள்வான்; எதிரியைத் தோளில் தூக்கிச் செல்லவேண்டியதானாலும் செய்வான். ஒரு பெரிய கருநாகம் பல தவளைகளை விழுங்கிற்று.

என்றொரு பேச்சு உண்டு’’ என்றது ஸ்திரஜீவி. ‘’அது எப்படி?’’ என்று மேகவர்ணன் கேட்க, ஸ்திரஜீவி சொல்லிற்று:

http://inthiya.com/?p=12306

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சதந்திரம் தொடர் 49 - பாம்பின்மேல் சவாரி செய்த தவளைகள்
அன்னபூர்னா ஈஸ்வரன்
 

ஒரு இடத்தில் மந்தவிஷன் என்றொரு கருநாகம் இருந்தது. அது வயதான பாம்பு. ‘’நான் சுகமாக வாழ்வதற்கு வழியென்ன?’’ என்று அது எண்ணிப்பார்த்தது. பிறகு, தவளைகள் நிறைய வசித்த ஒரு குளத்துக்கு அது போயிற்று. வாழ்க்கையில் வெறுப்படைந்தது போல் அது பாசாங்கு செய்தது.

அம்மாதிரி காத்து நிற்கையில், நீர் ஓரத்துக்கு வந்த ஒரு தவளை அதைப் பார்த்து, “மாமா, முன்போல் நீங்கள் ஏன் இரைதேடித் திரியவில்லை?’’ என்று கேட்டது. அதற்குப் பாம்பு, ‘’நண்பனே, நான் துரதிர்ஷ்டம் பிடித்தவன். இரையில் எனக்கு விருப்பம் ஏன் உண்டாகும்? காரணத்தைக் கேள். இன்று சாயந்திரம் நான் இரை தேடித்திரியும் போது ஒரு தவளையைக் கண்டேன். அதைப் பிடிக்கத் தாயாரானேன். அது என்னைப் பார்த்துவிட்டு மரண பயமடைந்து, ஜபங்கள் செய்து கொண்டிருந்த சில பிராம்மணர்களின் மத்தியிலே போய் நுழைந்துகொண்டது. அது எந்தத் திசையில் போயிற்று என்று எனக்குத் தெரியவில்லை. குளக்கரையோரத்தில் ஒரு பிராம்மணப் பையனின் கால்கள் நீரில் சிறிது மூழ்கியிருந்தன. அவனுடைய கட்டைவிரலைத் தவளை என்று நினைத்துக்கொண்டு நான் கடித்து விட்டேன். உடனே அந்தப் பையன் இறந்துபோய்விடான். அவனுடைய தகப்பனார் துக்கமடைந்து, ‘நீசனே, நிரபராதியான என் மகனை நீ கடித்த தோஷத்திற்காக நீ தவளைக்கு வாகனமாக ஆகி அவை மனதுவைத்துக் கொடுக்கிறதைத் தின்று நீ ஜீவிப்பாயாக!’ என்று என்னைச் சபித்துவிட்டார். ஆகவே, உங்களுக்கு வாகனமாக நான் இங்கு வந்திருக்கிறேன்’’ என்றது.

இந்த விஷயத்தை அந்தத் தவளை கேட்டுவிட்டு மற்ற தவளைகளிடம் போய்ச் சொல்லிற்று. அவையெல்லாம் சந்தோஷமடைந்து ஜலபாதன் என்ற தவளையரசனிடம் போய் இச்செய்தியைத் தெரிவித்தன. ‘அதிசயமாயிருக்கிறதே இது!’ என்று எண்ணியபடியே, ஜலபாதன் தன் மந்திரிகளோடு நீரிலிருந்து பரபரப்போடு வெளிவந்து கருநாகத்தின் படத்தின் மேல் ஏறிக்கொண்டது. மற்ற தவளைகளும், வயது வரிசைப்படி பாம்பின்மேல் ஏறிக்கொண்டன. கதையை வளர்ப்பானேன்? பாம்பின்மேல் இடங்கிடைக்காத மற்ற தவளைகள் அதைப் பின்தொடர்ந்து தத்திச் சென்றன. பிழைக்க வழி தேடிக்கொண்டிருந்த அந்தக் கருநாகம் பலவிதமாக நடை நடந்து காட்டியது. பாம்பின் உடலைத் தொட்டதிலே ஏற்பட்ட ஆனந்தத்தோடு தவளையரசன் சொல்லிற்று:

மந்தவிஷன்மேல் சவாரி செய்யும் நான் யானைமீதோ, குதிரைமீதோ, ரதத்தின்மீதோ, மனிதன் தூக்கும் பல்லக்கின் மீதோ செல்ல விரும்பவில்லை.

என்று, மறுநாள் கபடநெஞ்சுள்ள கருநாகம் மெல்ல மெல்லச் சென்றது. அதைக்கண்ட தவளையரசன், ‘’நண்பனே, முன்போல் எங்களை ஏன் சொகுசாகத் தூக்கிச் செல்லவில்லை?’’ என்று பாம்பைக் கேட்டது. ‘’இன்று எனக்குத் தீனி இல்லை. அதனால் உடம்பில் பலமில்லை’’ என்றது பாம்பு. ‘’நண்பா, அப்படியா? சரி, இந்தக் கீழ் ஜாதித் தவளைகளைச் சாப்பிடு’’ என்றது தவளையரசன்.

அதைக்கேட்டதும் கருநாகத்துக்கு உடலெல்லாம் புல்லரித்தது. மிகுந்த பரபரப்புடன் ‘’பிராம்மணனின் சாபமும் அப்படித்தான் சொல்லியிருக்கிறது. எனவே தங்களுடைய கட்டளையிலே எனக்குப் பரமதிருப்தி’’ என்றது. தங்குதடையின்றி கருநாகம் தவளைகளைச் சாப்பிட்டது. சில நாட்களிலேயே பலவானாக ஆயிற்று. மகிழ்ச்சியோடு தனக்குள் சிரித்துக்கொண்டு,

இந்த நல்ல தந்திரத்தினால் தவளைகள் எல்லாம் என்வசமாகிவிட்டன. இவை எல்லாம் எனக்கு எத்தனை நாளைக்குக் காணும் என்பது ஒன்றுதான் கேள்வி.

என்று சொல்லிக்கொண்டது. கருநாகத்தின் வஞ்சகப் பேச்சிலே ஏமாந்த தவளையரசன் எதையும் தெரிந்துகொள்ளவில்லை.

அந்தச் சமயத்தில் அங்கு மற்றொரு பெரிய கருநாகம் வந்து சேர்ந்தது. தவளைகளை ஏற்றிச்செல்லும் நாகத்தைப் பார்த்து அது ஆச்சரியமடைந்தது. ‘’நண்பனே, தவளைகள் நமக்கு இயற்கை உணவு ஆயிற்றே! அவற்றைப்போய் நீ சுமக்கிறாயே? அது நன்றாயில்லை’ என்று சொல்லிற்று. அதற்கு அந்தப் பாம்பு சொல்லிற்று:

தவளைகளைத் தூக்கிச் செல்லக்கூடாது என்பது எனக்குத் தெரிந்ததுதான். நெய்யால் குருடான பிராம்மணனைப்போல் நான் நல்ல தருணம் எதிர்பார்த்து நிற்கிறேன்.

என்று சொல்லிற்று. ‘’அது எப்படி?’’ என்று பெரிய பாம்பு கேட்க, மந்தவிஷன் சொல்லிற்று:

நெய்யால் குருடான வேதியன்

ஒரு ஊரில் யக்ஞதத்தன் என்றொரு பிராம்மணன் இருந்தான். அவன் மனைவி ஒரு வேசி. பரபுருஷனை நாடிச் செல்பவன், தன் கள்ளப்புருஷனுக்காக எப்பொழுது பார்த்தாலும் சர்க்கரையும் நெய்யும் கலந்து பணியாரம் செய்து வைத்துக் கணவனை ஏமாற்றி வந்தாள்.

ஒருநாள் கணவன் அதைப் பார்த்துவிட்டான். ‘அன்பே, நீ சமைக்கிறது என்ன? ஒவ்வொருநாளும் பணியாரத்தை எங்கே கொண்டு போகிறாய்? உண்மையைச் சொல்!’’ என்று மனைவியைக் கேட்டான். சமயோசித புத்தியுடையவள் அல்லவா அவள்? ஆகவே, பொய் சொல்லத் தொடங்கினாள். ‘’பக்கத்திலேயே அம்மன் கோயில் ஒன்று இருக்கிறது. அம்மனை வேண்டிப் பட்டினி விரதம் இருந்து வருகிறேன். பலவித பட்சணங்களை அங்கு கொண்டுபோய் நைவேத்தியம் செய்து அம்மனைச் சேவிக்கிறேன்’’ என்றாள் அவள். சொன்னபடியே, அவன் கண்ணெதிரிலேயே அவற்றை எடுத்துக் கொண்டு அம்மன் கோயிலுக்குப் புறப்பட்டுப் போனாள்.

கோயிலைடையந்த பிறகு, நதியிறங்கிக் குளித்துக் கொண்டிருந்தாள். இதற்கிடையே அவளுடைய கணவன் வேறு வழியாகக் கோயிலுக்கு வந்து அம்மனுக்குப்பிபின் ஒளிந்து நின்றான். குளித்துவிட்டு வந்த அந்தப் பெண் அபிஷேகம், அலங்காரம், தூபதீப நைவேத்தியங்கள் எல்லாம் செய்து அம்மனை வணங்கினாள். ‘’ஹே பகவதி! என் கணவன் குருடனாவதற்கு என்ன வழி?’’ என்று கேட்டாள். அதைக்கேட்டதும், அவள் புருஷன் தன் குரலை மாற்றிக் கொண்டு, ‘’நீ அவனுக்கு நெய்யும், நெய்யில் செய்த பட்சணங்களும் கொடுத்தால் அவன் சீக்கிரத்தில் குருடனாகிவிடுவான்’’ என்று சொன்னான். இந்த ஏமாற்றுப் பேச்சைக் கேட்ட அந்த வேசி மனைவி, தினந்தோறும் நெய்ப்பட்சணங்களைக் கணவனுக்குக் கொடுத்துவந்தாள்.

ஒருநாள் பிராம்மணன் அவளைப் பார்த்து, ‘’அன்பே, என்னால் நன்றாகப் பார்க்கமுடியவில்லையே’’ என்று சொன்னான். அதைக்கேட்ட அவள் ‘இது அம்மனின் அருள்’ என்று எண்ணிக் கொண்டாள். அதைக் கேள்வியுள்ள கள்ளப்புருஷன் இவன்தான் குருடனாகி விட்டானே. இனி என்னை அவன் என்ன செய்ய முடியும்?’ என்று எண்ணிவிட்டான்.பயமில்லாமல் ஒவ்வொரு நாளும் வரத்தொடங்கினான். ஒருநாள் ஆர்வத்தோடு அவன் வீட்டில் நுழைவதைக் கணவன் பார்த்துவிட்டான். அவனுடைய தலைமயிரைப் பிடித்து இழுத்து, அவனைத் தடியால் அடித்தான். காலால் நன்றாக உதைத்தான். பட்ட அடியிலே அந்தக் கள்ளபுருஷன் செத்துப் போனான். கணவன் தன் கெட்ட மனைவியின் மூக்கை அறுத்துவிட்டு வீட்டைவிட்டுத் துரத்திவிட்டான்.

அதனால்தான், தவளைகளைத் தூக்கிச் செல்லக்கூடாது என்பது எனக்குத் தெரிந்ததுதான்…’ என்றபடி சொன்னேன் என்றது கருநாகம். மறுபடியும் தனக்குள் சிரித்துக்கொண்டே, ‘இந்தத நல்ல தந்திரத்தால் தவளைகள் எல்லாம் என் வசமாகிவிட்டன…’ என்ற செய்யுளைத் திரும்பச் சொல்லிற்று. இதைக் கேட்விட்ட தவளையரசன் மனம் வருந்தி, ‘இதன் அர்த்தம் என்ன?’ என்று வியந்தபடியே, ‘’நண்பனே, அந்தக் கெட்ட வார்த்தைகளை ஏன் சொல்லுகிறாய்?’’ என்று கேட்டது. உடனே கருநாகம் தன் கெட்ட நோக்கத்தை மறைப்பதற்காக ‘ஒன்றுமில்லையே’ என்று பதில் சொல்லிற்று. அதன் கபடப்பேச்சை நம்பி, புத்திகெட்டுப்போன தவளையரசன், அதன் துரோக சிந்தனையை உணரவில்லை. அதிகம் சொல்வானேன்? ஒரு குஞ்சுகூட விட்டுவைக்காதபடி எல்லா தவளைகளையும் கருநாகம் தின்றுவிட்டது.

அதனால்தான் ‘காலத்துக்குத் தக்கபடி அறிவாளி நடந்துகொள்வான்…’ என்றெல்லாம் சொன்னேன்’’ என்றது ஸ்திரஜீவி மேலும் அது பேசுகையில், ‘’மந்தவிஷன் தவளைகளைத் தன் அறிவுபலத்தாலி கொன்றமாதிரியே நானும் எல்லா எதிரிகளையும் கொன்றேன்.

காட்டில் பற்றியெரியும் தீ மரத்தைச்சுட்டுப் பொசுக்கினாலும் வேரையாவது காக்கிறது. ஆற்றுவெள்ளம் குளுகுளு வென்றிருந்தாலும் மரத்தை வேரோடு பெயர்த்தெறிகிறது.

என்று சொல்லி வைத்திருப்பது சரியே’’ என்றது ஸ்திரிஜீவி. அதற்கு மேகவர்ணன், ‘’அது உண்மையே. மேலும்,

அறிவு என்ற ஆபரணம் அணிந்த பெரியோர்களிடம் இருக்கும் உயர்ந்த குணம் இதுதான் — எந்தக் காரியத்தை ஆரம்பிக்கிறார்களோ அதைக் கஷ்டத்தையும் துயரத்தையும் கண்டு கைவிடுவதில்லை.

என்று சொல்லிற்று, ஸ்திரஜீவி. ‘’அதுவும் உண்மைதான். இன்னொன்று சொல்கிறேன்.

கடன், நெருப்பு, எதிரி, நோய் & இவற்றைப பூர்ணமாக அழிக்கும்வரை அறிவாளி சும்மாயிருப்பதில்லை.

அரசே, நீர் பாக்கியசாலி. ஏனெனில், ஆரம்பித்த காரியங்களிலெல்லாம் வெற்றி பெற்றிருக்கிறீர்கள். ஒரு காரியத்தை வீரததைக் கொண்டு மட்டும் சாதித்துவிட முடியாது. அறிவோடு செய்கிற காரியம்தான் வெற்றியில் முடியும்.

கத்தியால் கொல்லப்பட்ட எதிரி உண்மையிலே கொல்லப்பட்டவனல்ல. புத்தியால் கொல்லப்பட்டவனே உண்மையில் கொல்லப்பட்டவன். கத்தி மனிதனின் உடலைத்தான் கொல்லும்; புத்தியோ குலத்தையும், செல்வத்தையும் புகழையும் எல்லாவற்றையும் கொல்லும்.

எனவே அறிவும் வீரமும் உள்ளவனுக்கு முயற்சில்லாமலே காரியங்கள் பலிக்கும். எப்படி என்றால்,

காரியத்தின் ஆரம்பத்தில் அறிவு விரிகிறது; எண்ணம் திடப்படுகிறது; செல்வம் தானே வந்து சேருகிறது; யோசனைகள் கிடைக்கின்றன; பலனுள்ள தர்க்கவாதம் பிரகாசிக்கிறது; மனம் உயர்ந்த நிலையை எட்டிப்பிடிக்கிறது; காரியத்தில் வெற்றி ஏற்பட்டால் மகிழ்ச்சி உண்டாகிறது.

அதைப்போலவே, நயமும் தியாக உணர்ச்சியும் வீரமும் உள்ளவனுக்கே ராஜ்யம் கிடைக்கும்.

அரசபதவியில் ருசியுள்ளவன் தியாகமும் வீரமும் கல்வியும் நிறைந்திருப்பவனோடு சேர்ந்தால், அவன் நன்மையடைவான். அவனுக்கு நல்ல குணம் ஏற்படும். குணத்தால் தனமும், தனத்தால் புகழும், புகழால் அதிகாரமும், பிறகு ராஜ்யமும் கிடைக்கும்.

என்றொரு வாக்கு உண்டு’’ எனறது ஸ்திரஜீவி.

‘’ராஜநீதி ஒன்றே உடனே பலனளிக்கக்கூடியது. அதனால்தான் நீங்கள் சுலபகமாக நுழைந்து ஆந்தையரசனைப் பரிவாரங்களோடு அழித்துவிட்டீர்கள்’’ என்றது காக்கையரசன். ஸ்திரஜீவி சொல்லிற்று:

கொடிய நடவடிக்கையால் அடையக்கூடியதாயிருந்தாலும் முதலில் சாந்தமான வழிமுறைகளைப் பின்பற்றுவதே சரியாகும். பூஜை செய்வதற்கு முன்னால் உயரமான தடித்த மரங்களை வெட்டுவதில்லை.

முயற்சியில்லாமலே பெயலாம். சுலபத்தில் கிடைக்காது, என்றெல்லாம் எதிர்கால விஷயங்களைப் பற்றி பேசி என்ன பிரயோஜனம்?

பேச்சுக்கேற்ற செய்கை செய்யாதவனும், காரியத்தில் துணவும், தீரமும் காட்டாதவனும், ஒவ்வொரு படியிலும் நூறு தோஷங்களைப் பார்க்கிறவனும், உலகத்தின் பரிகாசத்துக்கு ஆளாவார்கள்.

என்ற பேச்சில் விவேகம் இருக்கிறது. சிறு விஷயங்களில் கூட விவேகிகள் கவனமின்றி இருக்க மாட்டார்கள்.

‘இது அற்பமான வேலை; இதற்கு முயற்சியோ யோசனையோ வேண்டியதில்லை’ என்று அலட்சியம் செய்து கவனமற்றிருப்பவன் பரிதபிக்கத்தக்க துயரமடைவான்.

அதுபோகட்டும். எதிரிகளை ஜெயித்துவிட்டால் என் அரசர் முன்போல் சுகமாகத் தூங்கலாம்.

பாம்பு இல்லாத வீடாயிருந்தாலும், பாம்பைக் கட்டிப் போட்ட வீடாயிருந்தாலும், அதில் ஒருவன் சுகமாகத் தூங்கலாம். ஆனால் பார்த்தபின்பு தப்பித்துச் சென்ற பாம்புள்ள வீட்டில் நித்திரை சிரமத்தோடுதான் வரும். பெரிய காரியத்தைச் சாதிப்பதற்கு விரிந்த முயற்சி தேவை. நயமும், சாகஸமும், காரியப்பற்றும், கவனமும் தேவை. நண்பர்களின் ஆசியும் தேவை. மானமும் ரோஷமும், முயற்சியும், பலமும் உள்ளவன் காரியத்தின் முடிவைக் காணாவிட்டால் மனம் வருத்தமடைகிறது. அவனுக்கு நிம்மதி எது?

தொடுத்த காரியத்தை முடித்ததால் எனக்கு நிம்மதியாக இருக்கிறது. ஆகவே, இப்போது இந்த ராஜயத்தில் எவ்விதச் சங்கடங்களும் கிடையாது. பிரஜைகளைக் காப்பாற்றி வருவதில் தாங்கள் ஈடுபட்டுப் பிள்ளையும் பேரனும் பெற்றெடுத்துப் பரம்பரை பரம்பரையாக வெண்குடையும் சிம்மாதனமும் செல்வமும் சாயாமல் வெகுகாலம் அரசு செலுத்தி அனுபவித்து வாருங்கள்.

பரிபாலிக்கும் குணங்களோடு அரசன் மக்களைத் திருப்திப் படுத்தவில்லையானால், பெண் ஆட்டுக்குத் தாடி இருப்பது எப்படியோ அப்படியே அரசனுக்கு ராஜ்யம் இருப்பதும் அர்த்தமாயிற்று.

அறத்தில் விருப்பமும், மறத்தில் வெறுப்பும், நீதியில் பற்றும் உள்ள அரசன், வெண்கவிகையும் சிவிகையும் கொடியும் விளங்க, வெகுகாலம் — ராஜ்யலட்சுமியை அனுபவிக்கிறான்.

என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள். மேலும், ‘இனி இந்த ராஜ்யம் நம் கையில்தான்’ என்ற நினைப்பில் கர்வமடைந்து உன்னை நாசமாக்கிக்கொள்ளக் கூடாது. காரணம், அரசமகிமை நிலையில்லாதது. மூங்கில் கழியின்மேல் ஏறுவது எவ்வளவு கஷ்டமோ அவ்வளவு கஷ்டம் ராஜ்யலட்சுமியை அடைவது. ஒரு கணப்பொழுதில் நழுவிவிடும். அதை நிலைநிறுத்த நூறுவிதமாக முயற்சித்தாலும் நிற்காது. எவ்வளவுதான் சாந்தி செய்தாலும் நழுவிச் சென்று விடும். குரங்கைப்போல் பல புத்திகள் உடையது; அது தாமரை இலைத் தண்ணீர்போல் நிலையில்லாது உருளும்; காற்றின் அசைவைப் போல் அது சபலமுள்ளது. போக்கிரியின் சகவாசம்போல் நிலையற்றது; பாம்பைப்போல் பழகுவதற்குக் கஷ்டமானது:மாலை நேர வானத்தைப் போல வினாடிக்கு ஒரு நிறம் கொள்வது; நீர்க்குமிழி போல் உடையக்கூடியது; மனித உடம்பைப்போல் நன்றியில்லாதது; கனவில் கண்டெடுத்த புதையல்போல் கணப்பொழுதில் கைக்கு வந்து போவது.

அரசனுக்கு ராஜ்யாபிஷேகம் நடக்கும்போதே துக்கங்களை எதிர்பார்ப்பதில் அறிவு ஈடுபட வேண்டும். அரசனுக்கு அபிஷேகம் செய்கையில் அபிஷேக நீருடன் ஆபத்துக்களும் வந்து விழுகின்றன.

ஆபத்தின் கையில் சிக்காதவன் உலகில் யாருமில்லை.

ராமன் காட்டில் அலைந்தான்; பலி பாதாளத்தில் அழுந்தினான். பஞ்சபாண்டவர்கள் காட்டிற்குச் சென்றனர்; விருஷ்ணி நாசமடைந்தான்; நளன் ராஜ்யத்தை இழந்தான்; அர்ஜுனன் நாட்டியக்காரி ஆனான்; ராவணன் வீழ்ச்சி யடைந்தான்; இவற்றையெல்லாம் எண்ணிப் பார்க்கையில் எல்லோரும் காலவசத்தால் கஷ்டப்படுகிறார்கள். இங்கே யார் யாரைக் காப்பாற்ற முடியும்?

சுவர்க்கத்திற்குப் போய் இந்திரனின் நண்பனாக இருந்த தசரதன் எங்கே? சமுத்திரத்துக்குக் கரை கட்டிய சகரமன்னன் எங்கே? கையிலிருந்து பிறந்த பிருது எங்கே? சூரிய குமாரனான மனு எங்கே? சர்வவல்லமை படைத்த காலம் அவர்களைச் சிருஷ்டித்தது, முடித்தது.

மூவுலகையும் வென்ற மாந்தாத்ரு எங்கே? சத்யவிரதன் என்ற அரசன் எங்கே? தேவர்களின் அரசனான நகுஷன் எங்கே? சாஸ்திரங்களில் தேர்ச்சிமிகுந்த கேசவன் எங்கே? அவர்களுடைய ரதங்களும், சிறந்த யானைகளும், இந்திரனுடையது போன்ற சிம்மாதனங்களும் காலன் என்ற மகாத்மாவால் சிருஷ்டிக்கப்பட்டுக் காலத்தாலேயே அழிக்கப்பட்டன என்று நினைக்கிறேன்.

அந்த அரசன்! அந்த மந்திரிகள்! அந்தப் பெண்கள்! அந்தக் காடுகள்! அந்த நந்தவனங்கள்! அவர்களைக் காலன் கடித்தான், எல்லாம் நாசமாகிவிட்டன.

மதயானைகளின் காதுகள் அசைந்துகொண்டே யிருப்பதுபோல் சஞ்சலபுத்தியுடைய ராஜ்யலட்சுமியை அடைந்து, அறிவு ஒன்றில் மட்டும் நம்பிக்கை வைத்து, அனுபவித்து வருவாயாக!’’ என்று முடித்தது ஸ்திரஜீவி.

இத்துடன் காக்கைகளும் ஆந்தைகளும் என்ற மூன்றாவது தந்திரம் முடிவடைகிறது. இது சமாதானம் போர் முதலான ஆறு உபாயங்களைப் பற்றியது. இதன் முதற்செய்யுள் பின்வருமாறு:

ஏற்கனவே பகைவர்களாயிருந்து பின்னால் நேசம் பாராட்டுகிறவர்களை நம்பவேண்டாம்! ஆந்தைகள் கூடி வாழ்ந்த குகைக்குக் காக்கைகள் நெருப்பு வைத்து எரித்துவிட்டன.

http://inthiya.com/?p=12593

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சதந்திரம் தொடர் 50 - அடைந்ததை அழித்தல்

அன்னபூர்னா ஈஸ்வரன்



இங்கே அடைந்ததை அழித்தல் என்ற நான்காவது தந்திரம் தொடங்குகிறது. அதன் முதற்செய்யுள் பின்வருமாறு:

கிடைத்த பொருளை முட்டாள் தனத்தினால்
இழக்கிறவன் துயரப்பட வேண்டியதுதான். மூல
முதலையைக் குரங்கு வஞ்சித்தது.

அரசகுமாரர்கள், ‘’அது எப்படி?’’ என்று கேட்க, விஷ்ணுசர்மன் சொல்லத் தொடங்கினார்;

ஒரு கடற்கரையிலே பெரிய நாவல்மரம் ஒன்றிருந்தது. அதில் எப்பொழுதும் பழங்கள் இருந்துகொண்டேயிருக்கும். அந்த மரத்தில் ரக்தமுகன் என்றொரு குரங்கு இருந்துவந்தது.

ஒருநாள் கராலமுகன் என்ற பெரிய முதலை ஒன்று நீரிலிருந்து வெளிவந்து அந்த நாவல் மரத்தின் கீழிருந்த மென்மையான மணலில் உடலைப் புதைத்துக்கொண்டு கிடந்தது. ரக்தமுகன் அதைப் பார்த்து, ‘’நீ என் விருந்தாளி. அமுதத்துக்கொப்பான நாவற்பழங்களைத் தருகிறேன். சாப்பிடு!

வந்த விருந்தாளி இனியவனாகவோ வெறுக்கத்தக்கவனாகவோ மூடனாகவோ அறிவாளியாகவோ இருக்கலாம். என்றாலும் அளித்த விருந்துபசாரத்தை அவன் பெற்றுக்கொண்டால் குடும்பஸ்தன் சுவர்க்கத்துக்குச் செல்வதற்கு அவன் வழிகோலுகிறான்.

சிரார்த்தத்தில் விஸ்வேதேவனாக வரும் விருந்தாளியின் நாடு எது, கல்வி எவ்வளவு, குலம் என்ன, கோத்திரம் என்ன என்று விசாரிக்கக் கூடாது என்று மனுநீதி சொல்கிறது.

வெகுதூரம் நடந்து களைப்படைந்துபோய் விஸ்வேதேவனாக வந்த விருந்தாளியை யார் உபசரிக்கிறார்களோ அவன் மேலுலகை அடைகிறான்.

வந்த விருந்தாளி உபசாரம் கிடைக்கப்பெறாமல் பெருமூச்செறிந்து வீட்டைவிட்டுப் போகும்படி யார் செய்கிறார்களோ அவர்களுடைய முன்னோர்களைத் தேவர்கள் புறக்கணிக்கின்றனர்.

என்று குரங்கு கூறி, நாவற்பழங்களை முதலைக்குக் கொடுத்தது. பழங்களை முதலை சாப்பிட்டது. வெகுநேரம் குரங்குடன் பேசி இன்பமடைந்தபின் தன் வீட்டுக்குத் திரும்பிச் சென்றது. இப்படியே நாள்தோறும் முதலையும் குரங்கும் நாவல்மரத்தின் நிழலையடைந்து நல்ல விஷயங்களைப் பற்றிப் பேசி இன்புற்றுக் காலம் கடத்தி வந்தன. தான் சாப்பிட்டதுபோக மிஞ்சிய நாவற்பழங்களை முதலை வீட்டுக்குக் கொண்டுபோய் தன் மனைவிக்குக் கொடுத்து வந்தது.

ஒருநாள் முதலையின் மனைவி, ‘’நாதா, அமிருதம் போலிருக்கும் இந்த நாவற்பழங்கள் உங்களுக்கு எங்கே கிடைக்கிறது?’’ என்று முதலையைக் கேட்டது. ‘’அன்பே, ரக்தமுகன் என்றொரு குரங்கு இருக்கிறது. அது என் நெருங்கிய நண்பன். அதுதான் இந்தப் பழங்களை எனக்கு அன்போடு தருகிறது’’ என்றது முதலை.

அதற்கு முதலையின் மனைவி, ‘’அமிர்தம்போல் இருக்கும் இந்தப் பழங்களை எப்போதும் சாப்பிட்டுக் கொண்டிருப்பவனுடைய நெஞ்சும் கட்டாயம் அமிர்தம் போலத்தான் இருக்கும். நீ என்னை மதிக்கிறாய் என்றால் எனக்கு அந்தக் குரங்கின் நெஞ்சைக் கொண்டுவந்து கொடு. அதை நான் சாப்பிட்டு நோயும் முதுமையும் இல்லாமல் என்றும் உன்னோடு விளையாடிக்கொண்டிருப்பேன்’’ என்றது.

‘’அன்பே, முதலாவதாக அது நமக்குச் சகோதரன்மாதிரி. இரண்டாவதாக, அது நமக்குப் பழங்களைத் தருகிறது. எனவே அதை நான் கொல்லமுடியாது. இந்த வீணான ஆசையை விட்டுவிடு.

நம்மைப் பெற்றெடுத்தவள் நமது முதல் தாய்; எழுத்தறிவித்தவன் நமக்கு இரண்டாவது தாய்; சொந்த சகோதரனையும் உறவினரையும்விட எழுத்தறிவித்தவனையே மேலாகப் போற்று!

என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்’’ என்றது முதலை.

‘’நீ எப்போதும் என் பேச்சுக்கு எதிராக நடந்ததில்லையே, இப்போதும் மட்டும் ஏன்? நிச்சயமாக அந்தக் குரங்கு ஒரு பெண் குரங்காகத்தான் இருக்கவேண்டும்! அதன்மேல் உனக்கு அன்பு, அதனால்தான் தினசரி அங்கே போகிறாய். அதனால்தான் நான் விரும்புகிறதைப் பெற்றுத்தர முடியாது என்கிறாய். இரவில் என்னோடு படுத்திருக்கும்போது நெருப்புப்போல் பெருமூச்சு விடுகிறாய். எனக்கு முத்தம் கொடுக்கும்போது நீ என்னை இறுகத் தழுவிக் கொள்வதில்லை. ஆகவே நிச்சயமாக உன் மனதில் வேறு யாரோ ஒருத்தி குடி கொண்டிருக்கிறாள்’’ என்றது முதலையின் மனைவி.

அதைக்கேட்ட முதலை தாழ்மையுடன்,

என் ஆருயிரே, உன் காலடியில் விழுந்து வேலையாள் போல் இருக்கும் என்னிடம் ஏன் கோபிக்கிறாய், ஏன் பொறாமை கொள்கிறாய்?

என்று மனைவியிடம் சொல்லிற்று. அந்தத வார்த்தைகளைக் கேட்டதும் அதன் கண்களில் நீர் நிறைந்தது. தன் கணவனைப் பார்த்து,

தூர்த்தனே! நீ அவளைப் பலவாறாக விரும்பி நேசிக்கிறாய். அவளும் தன் வஞ்சகமான காதல் சேஷ்டைகளால் உன் மனதைக் கவர்ந்துவிட்டிருக்கிறாள். உன் மனதில் எனக்குச் சிறிதுகூட இடமில்லை. ஆகவே என் கால்களில் விழுந்து என்னை ஏமாற்றுவது போதும்!

இன்னொன்று: அது உன் காதலி இல்லையென்றால், பின் ஏன் நான் சொல்லியுங்கூட அதைக் கொல்லமாட்டேன் என்கிறாய்? அது ஆண் குரங்கு என்றால் அதன்மேல் உனக்கு அத்தனை அன்பு ஏன்? உன்னிடம் பேசியதுபோதும். அதனுடைய நெஞ்சை நான் சாப்பிடவில்லையானால் உன் வீட்டில் பட்டினி கிடந்து உயிரை விடுவேன்’’ என்றது மனைவி.

அதன் முடிவைக் கேட்டு முதலை கவலையடைந்தது. ‘’ஐயோ, இப்படிச் சொல்லி வைத்துள்ளதும் சரியாகவேயிருக்கிறது:

சிமிட்டி, நீலச்சாயம், கள், நண்டு, மீன், மூடன், பெண் ஒரு தடவை பற்றிக்கொண்டால் போதும், பிறகு பிடியை விடவே மாட்டார்கள்.

இனி நான் என்ன செய்வேன்? அந்தக் குரங்கை எப்படிக் கொல்வது?’’ என்று சிந்தித்தபடியே குரங்கிடம் போயிற்று. வெகுநேரம் கழித்து முதலை கவலையோடு வருவதைக் குரங்கு பார்த்தது. ‘’நண்பனே, ஏன் இவ்வளவு நேரம்? ஏன் சந்தோஷத்தோடு பேசமாட்டேன் என்கிறாய்? நல்ல நீதிகளையும் சொல்ல மாட்டேன் என்கிறாய்?’’ என்று குரங்கு கேட்டது.

‘’நண்பனே, உன் அண்ணி (முதலையின் மனைவி) என்னை நிஷ்டூரமாகச் பேசிவிட்டாள். அவள் சொன்னாள்: ‘ஏ நன்றி கெட்டவனே, என் முகத்தில் விழிக்காதே. தினந்தோறும் நீ நண்பனிடம் பழங்களைப் பெற்றுச் சாப்பிடுகிறாய். ஆனால் அதற்குப் பதில் உபசாரம் செய்யும் முறையில் அதை உன் வீட்டு வாசலுக்கும் நீ அழைத்து வரவில்லையே! இந்தத் தோஷத்துக்குப் பிராயசித்தம் கூடக்கிடையாது.

பிராம்மணனைக் கொன்றவனுக்கும், குடிகாரனுக்கும், திருடனுக்கும், பொய்யனுக்கும் பெரியோர்கள் பிராயச்சித்தம் விதித்துள்ளனர். ஆனால் செய்நன்றி கொன்றவனுக்குப் பிராயச்சித்தமே கிடையாது.

ஆகவே நீ என் மைத்துனரை நம் வீட்டுக்கு அழைத்து வா. அப்போதுதான் நீ பதில் உபசாரம் செய்ததாகும். இல்லாவிட்டால் நீ என்னை இனிமேல் உயிரோடு பார்க்க முடியாது. மறு உலகத்தில் தான் பார்க்க முடியும்’ என்று சொன்னாள். அவள் சொற்களைக் கேட்டுவிட்டு உன்னிடம் வந்திருக்கிறேன். உன் விஷயமாய் அவளோடு சண்டை போட்டதிலே இவ்வளவு நேரமாகிவிட்டது. நீ என் வீட்டுக்கு வா! உன் அண்ணி ஒரு விதானத்தை அமைத்து அதில் துணியும், மணியும் மாணிக்கமுமாக ஜோடித்து வாயிற்புறத்தில் மாலைகளையும்கட்டித் தொங்கவிட்டு விருந்தாளியை வரவேற்பதற்குரிய ஏற்பாடுகள் செய்திருக்கிறாள். ஆவலோடு உன்னை எதிர்பார்த்துக் கொண்டிருந்கிறாள்’’ என்றது முதலை.

‘’நண்பனே, அண்ணி சொன்னது சரிதான். எவ்விதமெனில்,

தருவது, பெறுவது; மனம்விட்டுப் பேசுவது, கேட்பது; விருந்து உண்பது, படைப்பது; இவை ஆறும் நட்புக்கு அடையாளங்கள் அல்லவா?

ஆனால், நான் காட்டிலும் இருப்பவனாயிற்றே! உங்களுடைய வீடு நீருக்கடியில் அல்லவா இருக்கிறது! அங்கே நான் எப்படி வரமுடியும்? நீ ஒன்று செய். அண்ணியை இங்கே அழைத்துவா, நான் வணங்கி அண்ணியின் ஆசிகளைப் பெறுகிறேன்’’ என்றது குரங்கு.

‘’நண்பனே, கடலுக்கடியில் ஒரு அழக்¢ய மணல்திட்டில் என்வீடு இருக்கிறது. எனவே என் முதுகில் ஏறிக்கொண்டு பயமில்லாமல் இன்பமாய் வா!’’ என்றது முதலை.

குரங்குக்கு ஆனந்தம் பிறந்தது. ‘’நண்பனே, அப்படியானால் சீக்கிரமாகக் கிளம்பலாமே, ஏன் தாமதிக்கவேண்டும்? இதோ நான் உன் முதுகின்மேல் ஏறிக்கொள்கிறேன்’’ என்று சொல்லிவிட்டு, குரங்கு முதலையின் முதுகின்மேல் ஏறிக்கொண்டது. ஆனால், ஆழமான கடலில் முதலை போவதைப் பார்த்துக் குரங்கு பயந்து நடுங்கிப்போயிற்று. ‘’அண்ணா மெதுவாகப் போ! அலைகள் அடித்து என் உடம்பெல்லாம் நனைந்துவிட்டது’’ என்றது.

அதைக் கேட்டதும் முதலைக்கு ஒரு யோசனையுண்டாயிற்று.இந்தக் குரங்கு என் முதுகிலிருந்து நழுவினால் ஒரு அங்குலம் கூட அப்பால் செல்லமுடியாது, அத்தனை ஆழமான கடல் இது. என் பிடியில் சிக்கிக் கொண்டுவிட்டது. ஆகவே இதனிடம் என் நிஜ நினைப்பைச் சொல்லிவிடுகிறேன். தன் இஷ்ட தெய்வத்தை அது நினைத்துப் பிரார்த்தித்துக் கொள்ளட்டும்’’ என்று எண்ணியது. குரங்கைப் பார்த்து, ‘’நண்பனே, என் மனைவி சொல்லியபடி உன்னை நம்பவைத்து, உன்னைக் கொல்வதற்காக வீட்டுக்கு அழைத்துப் போகிறேன். இனி உன் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தித்துக்கொள்’’ என்றது முதலை. ‘’அண்ணா, உனக்கோ அண்ணிக்கோ நான் என்ன தீங்கு செய்தேன்? என்னை ஏன் கொல்லப்பார்க்கிறீர்கள்?’’ என்று குரங்கு கேட்டது. ‘’கேள், நீ கொடுத்த பழங்கள் அவளுக்கு அமிர்தம் போல் ருசியாயிருந்தன. ஆகவே உன் நெஞ்தைத் தின்ன வேண்டும் என்று அவள் ஆவலாயிருக்கிறாள். அதனால்தான் இப்படிச் செய்தேன்’’ என்றது முதலை. உடனே சமயோசித புத்தியுள்ள குரங்கு, ‘’அடடா அப்படியா சங்கதி? அதை நீ ஏன் அங்கேயே என்னிடம் சொல்லவில்லை? நண்பனே, என் ருசி மிகுந்த நெஞ்சை நாவல்மரத்தின் பொந்தில் மறைத்து வைத்திருக்கிறேன். முன்பே சொல்லியிருந்தால் அண்ணிக்காக அதை எடுத்துக்கொண்டு வந்திருப்பேனே! அந்த ருசி மிகுந்த நெஞ்சு இல்லாமல் இப்போது நெஞ்சில்லாத என்னை அங்கே அழைத்துப்போவது வீண் வேலையாயிற்றே!’’ என்றது குரங்கு.

அதைக் கேட்டதும் முதலைக்கு ஆனந்தம் ஏற்பட்டது. ‘’நண்பனே, அப்படியானால் அந்த நெஞ்சை எனக்குக் கொடு, என் துஷ்ட மனைவி அதைச் சாப்பிட்டு தன் உபசாவத்தை முடிப்பாள். உன்னை நாவல் மரத்துக்கே திரும்ப அழைத்துச் செல்கிறேன்’’ என்று சொல்லிற்று.

சொன்னபடியே முதலை நாவல்மரத்தடியை நோக்கித் திரும்பிச் சென்றது. வழி நெடுக குரங்கு ஒவ்வொரு தெய்வத்தையும் நூற்றுக்கணக்கான முறை வேண்டிக்கொண்டே போயிற்று. எப்படியோ ஒருவிதமாக கரைக்கு வந்ததும், உயர உயரத் தாவிக் குதித்துச் சென்று அந்த நாவல் மரத்தின்மேல் ஏறிக்கொண்டது. ஏறிக்கொண்டே, ‘’நல்லகாலம்! நான் பிழைத்துக்கொண்டேன்.

நம்பிக்கை வைக்கத் தகாதவனிடம் நம்பிக்கை வைக்காதே! நம்பிக்கையானவனையும் நம்பாதே! நம்பிக்கை வைப்பதால் விபத்து ஏற்பட்டு வேரோடு அழித்து விடுகிறது.

என்று சொல்வதில் நியாயமிருக்கிறது. ஆகவே, இன்றைக்கு நிஜமாக நான் மறுபிறப்பெடுத்திருக்கிறேன்’’ என்று குரங்கு எண்ணியது.

குரங்கிடம் முதலை, ‘’நண்பனே, நெஞ்சைக் கொடு எனக்கு! உன் அண்ணி அதைத் தின்று உபவாசத்தை முடித்துக்கொள்வாள்’’ என்றது. குரங்கு சிரித்துவிட்டு நிர்ப்பயமாகப் பதில் சொல்லிற்று. ‘’சீ, மூடா! நம்பிக்கைத் துரோகி! யாருக்காவது இரண்டு இதயங்கள் இருக்குமா? உன் வீட்டைப் பார்த்துக்கொண்டு போய்விடு. இனிமேல் இந்த நாவல்மரத்தடிக்கு வராதே!

ஒரு நண்பன் எதிரியாக நடந்துகொண்டபிறகு மீண்டும் அவனோடு சிநேகம் கொள்ள விரும்புகிறவன். பெண்குதிரை சாவதற்காகக் கர்ப்பமடைவதுபோல், சாவைத்தான் தேடிக்கொள்கிறான்.

என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்’’ என்றது குரங்கு.

அதைக்கேட்டு முதலை மிகுந்த வெட்கமடைந்தது. ‘’முட்டாள்தனமாக இதனிடம் என் எண்ணத்தை ஏன் வெளியிட்டேன்? எப்படியாவது இதனுடைய நம்பிக்கையைப் பெற வழியுண்டா? நம்பவைக்கப் பேசிப்பார்க்கிறேன்’’ என்று எண்ணியது. ‘’நண்பனே, விளையாட்டுக்காகத்தான் அப்படிச் சொன்னேன். உன் மனதையறிய விரும்பினேன். அவ்வளவுதான். உன் நெஞ்சினால் அவளுக்கு ஒரு பிரயோஜனமுமில்லை. என் வீட்டுக்கு விருந்தாளியாக வா! அண்ணி உன்னைப் பார்க்க ஆவலோடிருக்கிறாள்’’ என்று முதலை சொல்லிற்று.

‘’துஷ்டா, உடனே நீ போய்விடு. நான் வரமாட்டேன்.

பசித்தவன் எந்தப் பாவச்செயலையும் செய்வான். நலிந்தவன் தயையில்லாதவனாக ஆகிறான். ‘அன்பே! கங்கதத்தன் மீண்டும் கிணற்றுக்கு வரமாட்டான் என்று பிரியதரிசனனிடம் சொல்’ (என்றொரு பேச்சு உண்டு)

என்றது குரங்கு. ‘’அது எப்படி?’’ என்று முதலை கேட்க, குரங்கு சொல்லிற்று:

http://inthiya.com/?p=12755

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சதந்திரம் தொடர் 51 – கெடுவான் கேடு நினைப்பான்
அன்னபூர்னா ஈஸ்வரன்


ஏதோ ஒரு கிணற்றில் கங்கதத்தன் என்ற பெயருடைய தவளையரசன் இருந்தது. அது ஒருநாள் தன் உறவினர்களால் துன்புறுத்தப்பட்டு, கிணற்றில் தொங்கிய வாளியில் ஏறி படிப்படியாக வெளியே வந்து சேர்ந்தது. ‘’இந்த உறவினர்களுக்கு தீங்கு செய்வதற்கு என்ன வழி?

ஆபத்து வந்தபோது உதவி புரிகிறவனுக்கும், கஷ்ட தசையை எள்ளி நகையாடுகிறவனுக்கும் உதவி புரிந்தால் மனிதன் மறுபிறப்புப் பெறுகிறான்.

என்றொரு பழமொழி உண்டு என்று எண்ணமிட்டது. இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கும்போது ஒரு கருநாகம் புற்றில் நுழைவதைத் தவளையரசன் பார்த்துவிட்டது. அதைக் கண்டதும் தவளைக்கு மீண்டும் யோசனை ஓடிற்று. ‘’இந்தப் பாம்பை கிணற்றுக்குக் கூட்டிக் கொண்டு போய் எல்லா உறவினர்களையும் ஒழித்துவிடுகிறேன்.

கொடியவனைக் கொண்டே கொடிய விரோதிகளை அறிவாளிகள் நிர்மூலமாக்குகின்றனர். வந்த ஆபத்தை இன்பமாக மாற்றுகின்றனர். முள்ளைக் கொண்டுதான் முள்ளை எடுக்க வேண்டும்.

என்றொரு பழமொழி உண்டு’’ என்று முடிவுசெய்து, புற்றின் வாய்க்கருகில் போய், ‘’வா, பிரியதரிசனனே, வெளியே வா!’’ என்று கூப்பிட்டது. அதைக் கேட்ட பாம்பு, ‘’யார் என்னைக் கூப்பிடுவது? நான் கேட்பது பாம்பின் குரலல்ல, அது என் ஜாதியைச் சேர்ந்தாக இருக்காது. மற்றபடி இந்த உலகில் வேறு யாரோடும் எனக்குத் தொடர்பு கிடையாதே! ஆகவே, இங்கேயே இருந்துகொண்டு கூப்பிடுவது யார் என்று கண்டுகொள்கிறேன். ஏனென்றால்

குணமும், குலமும், விலாசமும் என்னவென்று தெரிந்து கொள்ளாமல் ஒருவனுடன் சேரக்கூடாது என்று பிருகஸ்பதி சொன்னார்.

அல்லவா? ஒருவேளை மந்திரவாதி மூலிகை வைத்தியன் யாராவது வந்து என்னைக் கூப்பிட்டுக் கட்டிப்போடப் பார்க்கிறானா? அல்லது யாராவது வஞ்சம் தீர்க்க எண்ணங்கொண்டு தன் நண்பனுக்காக என்னைக் கூப்பிடுகிறானா?’’ என்ற பாம்பு கேட்டது.

‘’நான் தவளையரசன். என் பெயர் கங்கதத்தான். உன் நட்பைப் பெற உன்னிடம் வந்திருக்கிறேன்’’ என்றது தவளை. ‘’அது நம்ப முடியாத பேச்சு. நெருப்போடு புல் ஒன்று சேருமா?

யாரால் தனக்கு மரணம் ஏற்படுமோ அவனைக் கனவில் கூட ஒருவன் ஒருபோதும் நெருங்குவதில்லை. அப்படியிருக்க நீ ஏன் இப்படிப் பிதற்றிக்கொண்டிருக்கிறாய்?’’
என்றது பாம்பு. ‘’நீ சொல்வதும் உண்மைதான். நீ எனக்கு இயற்கைப் பகைவன்தான். இருந்தாலும்கூட, அவமானமடைந்து நான் உன்னிடம் வந்திருக்கிறேன்.

எல்லாம் நாசமாகிவிட்டு உயிருக்கும் சந்தேகம் ஏற்படும் போது பகைவனை வணங்கி உயிரையும் பொருளையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.

என்று சொல்லப்படுகிறது’’ என்றது தவளை.

‘’அவமானப்படுத்தியது யார்?’’ என்றது பாம்பு. ‘’என் உறவினர்கள்தான்’’ எறது தவளை. ‘’நீ எங்கே இருக்கிறாய்? ஏரியிலோ? கிணற்றிலா? ஏதாவது குளம் குட்டையிலா?’’ என்று கேட்டது பாம்பு. ‘’நான் ஒரு கிணற்றிலிருக்கிறேன்’’ என்றது தவளை. ‘’கிணறா? அங்கே நான் வரமுடியாதே! வந்தாலும் தங்க முடியாதே! நான் எங்கே தங்கி உன் உறவினர்களைக் கொல்வது? நடக்கிற காரியமாயில்லை, நீ போய்விடு. ஏனெனில்,

உனக்கு உடல்நலனில் அக்கறையிருந்தால் எந்த உணவு இறங்குமோ எதை ஜீரணிக்க முடியுமா அதைச் சாப்பிட்டு ஜீர்ணம் செய்!

என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்’ என்றது பாம்பு.

‘’நீ என்னோடு வா, நீ வந்து சேருவதற்கு ஒரு சுலபமான வழியைக் காட்டுகிறேன். அங்கே நீர்மட்டத்திற்குமேல் ஒரு நல்ல வளை இருக்கிறது. அங்கு வந்து இருந்துகொள். பிறகு என் உறவினர்களைத் தீர்த்துக் கட்டுவது உனக்கு விளையாட்டுப் போலத்தான் இருக்கும்’’ என்றது தவளை.

அதைக்கேட்டு பாம்பு யோசிக்கத் தொடங்கியது. ‘’நானோ கிழவன். எப்பொழுதாவது ஏதாவது ஒரு எலி எனக்குக் கிடைக்குமோ கிடைக்காதோ, எப்படிக் கண்டேன்?

ஆயுளும் பலமும் குன்றி, நண்பர்களும் மனைவியும் இன்றி இருக்கும் அறிவாளி மிகச் சுலபமான உபாயமுள்ள வாழ்க்கையைத் தொடங்குகிறான்.

என்று சொல்வது நியாயந்தானே!’’ என்று நினைத்து நிச்சயித்துவிட்டு, ‘’கங்கதத்தனே, அப்படியானால் அங்கே நாம் போவோம். நீ முன்னே போ’’ எனறது பாம்பு.

“பிரியதர்சனனே, உன்னைச் சுலபமான வழியாக அழைத்துப் போய் நீ தங்கும் இடத்தைக் காட்டுகிறேன். ஆனால் ஒன்று. நீ என் குடும்பத்தை விட்டுவைக்க வேண்டும். நான் யாரைக் காட்டுகிறேனோ அவர்களை மட்டுமே நீ தின்ன வேண்டும் என்றது’’ தவளையரசன்.

‘’நீதான் என்னுடைய நண்பனாகிவிட்டாயே! உனக்குப் பயமெதுவும்
வேண்டியதில்லை. உனக்கு எது இஷ்டமோ அதைத்தான் நான் செய்வேன்’’ என்றது பாம்பு. பிறகு அந்தப் பாம்பு புற்றிலிருந்து வெளியே வந்து தவளையை அணைத்துக்கொண்டு தவளையோடு கிணற்றுக்கு புறப்பட்டுப் போயிற்று. கிணற்றுக் கரைக்கு வந்ததும், ராட்டினத்தில் கட்டியிருந்த வாளியின் வழியாக தவளையோடு பாம்பு சென்று தவளையின் வீட்டை அடைந்தது. பிறகு தவளை பாம்பைக் கூட்டிச் சென்று வளையில் இருக்கச் செய்து தன் உறவினர்களைக் காட்டிற்று அவற்றையெல்லாம் பாம்பு ஒவ்வொன்றாக விழுங்கியது. பாக்கி உறவினர்கள் யாரும் இல்லாமற்போகவே தவளையின் நண்பர்களில் சிலவற்றை பயமும் நயமும் காட்டி நம்பவைத்துத் தின்று விட்டது. பிறகு தவளையரசனைப் பார்த்து, ‘’நண்பனே, ஒன்றுகூடப் பாக்கி வைக்காமல் உன் எதிரிகள் எல்லோரையும் தீர்த்துவிட்டேன். ஏதாவது தின்னக்கொடு. நீதானே என்னை இங்கு அழைத்து வந்தாய்!’’ என்றது. ‘’ஒரு நண்பன் செய்ய வேண்டியதை நீ செய்து முடித்தாயிற்று. இனி நீ அதே வாளி வழியாகப் போய்விடு!’’ என்றது தவளையரசன். ‘’நீ சொல்வது ரொம்பத் தப்பு. நான் எப்படி என் வீட்டுக்கு திரும்ப முடியும்? என் புற்றில் யாராவது அன்னியர்கள் நுழைந்து கொண்டிருப்பார்களே! நான் இங்கேயே இருக்கிறேன். உன் குடும்பத்தினரில் ஒவ்வொரு தவளையாகத் தின்னக் கொடு. கொடுக்காவிட்டால் எல்லாவற்றையும் தின்றுவிடுவேன்’’ என்றது பாம்பு.

இந்தச் சொற்களைக் கேட்டதும் தவளையரசனுக்கு மிகுந்த கவலை ஏற்பட்டது; அது யோசிக்கத் தொடங்கியது: ‘’என்ன காரியம் செய்து விட்டேன்! இந்தப் பாம்பை அழைத்து வந்து விட்டேனே! இனி இதன் பேச்சை நான் மறுத்தால் எல்லாவற்றையும் தின்றுவிடுமே!

தன்னைவிட அதிக பலமுள்ள விரோதியை யார் நண்பனாக்கிக் கொள்கிறானோ அவன் விஷத்தைத் தானே குடிக்கிற மாதிரிதான். அதில் சந்தேகமில்லை.

என்று சரியாகத்தான் சொல்லி வைத்திருக்கிறார்கள். எனவே என் நண்பர்களை ஒவ்வொன்றாக இதற்குத் தருகிறேன். ஏனெனில்,

எல்லாவற்றையும் பறித்துக்கொள்ள வல்லமை பெற்றிருக்கும் விரோதிக்கு அறிவாளிகள் சிறிது தானம் அளிததுத் திருப்திப்படுத்துகின்றனர். வாடவாக்னிக்கு (சமுத்திரத்தைப் பற்றிய தீக்கு) கடல் கொஞ்சம் நீர் கொடுத்து அதைத் தணியச் செய்திருக்கிறதில்லவா?

என்றொரு பழமொழி உண்டு. மேலும்,

எல்லாம் நாசமாகிவிடக்கூடிய நிலைமை ஏற்படும்பொழுது அறிவாளிகள் அதில் ஒரு பாதியைக் கைவிடுகின்றனர். மறு பாதியைக் கொண்டு மேலும் காரியம் பார்க்கலாம் அல்லவா? எல்லாமே நாசமானால் அதைச் சகிக்க முடியாது.

சொற்ப லாபத்துக்காகப் புத்திசாலிகள் அதிகமான பொருளை நாசமாக்க மாட்டார்கள். சொற்பப் பொருளைக் கைவிடுவதின் மூலம் அதிகமான பொருளைக் காத்துக்கொள்வதுதான் புத்திசாலித்தனம்.

என்றும் சொல்லப்பட்டிருக்கிறது’’ என்றவாறு தவளையரசன் யோசித்து முடிவுசெய்து ஒரு நாளைக்கு ஒரு தவளையாகப் பாம்புக்கு தந்தது. தவளையரசன் தந்ததை சாப்பிட்டதோடு நில்லாமல் அந்தப் பாம்பு தவளைக்குத் தெரியாமலே மற்ற தவளைகளையும் தின்று வந்தது.

அழுக்குப் படிந்த துணியை உடுத்திக் கொண்டால் கண்ட இடத்திலெல்லாம் நீ எப்படி உட்காருகிறாயோ, அதே போல் ஒரு நற்குணம் போய்விட்டால் மற்றவையும் அத்துடன் போய்விடுகின்றன.

என்கிற பேச்சு மிகவும் சரியே.

ஒருநாள் அந்தக் கருநாகம் தவளை அரசனின் மகனாகிய கனகதத்தன் என்ற தவளையைத் தின்றுவிட்டது. அதைக் கண்டதும் தவளையரசன் உச்சகுரலில் அழுது புலம்பியது. மனைவி கணவனைப் பார்த்து,

துராக்கிருதமாகச் சுற்றத்தாரைச் சாகச் செய்தவனே, ஏன் அழுகிறாய்? சுற்றத்தாரின் சாவுக்கு அழாத நீ உன்னை எப்படிக் காத்துக்கொள்வாய்?

எனவே, இங்கிருந்து போய்விடுவதற்கு இன்றைக்கே வழி தேடு, அல்லது அதைக் கொல்வதற்காவது ஒரு உபாயம் செய்!’’ என்றது.

நாளடைவில் பாம்பு எல்லாத் தவளைகளையும் தின்றுவிட்டது. தவளையரசன் மட்டுமே மிஞ்சியது. அந்நிலைமையில் பாம்பு தவளையரசனிடம், ‘’நண்பனே, எனக்குப் பசியாயிருக்கிறது. தவளைகள் எல்லாம் தீர்ந்துவிட்டன. ஏதாவது தின்னக் கொடு. நீதானே என்னை இங்கே கூட்டிவந்தாய்? என்று சொல்லியது. நான் இருக்கும்வரை சாப்பாட்டு விஷயத்தில் உனக்குக் கவலையே வேண்டியதில்லை. நீ என்னைப் போகவிட்டால் நான் போய் மற்ற கிணறுகளில் இருக்கும் தவளைகளும் நம்பி இங்கு வரும்படி செய்கிறேன்’’ என்றது தவளையரசன். ‘’நீ எனக்குச் சகோதரன் மாதிரி. உன்னை நான் சாப்பிடக்கூடாது. நீ சொன்னபடி செய்தால், எனக்கு ஒரு தந்தைபோல் ஆகிவிடுவாய்’’ என்றது கருநாகம்.

இப்படி ஒரு உபாயத்தைக் கையாண்டு தவளையரசன் கிணற்றிலிருந்து வெளியே தப்பிச் சென்றது. அது திரும்பிவரும் என்ற ஆசையோடு தவளையை எதிர்பார்த்தபடியே பாம்பு அதைக் கிணற்றுக்குள்ளே கிடந்தது. பிறகு ரொம்பநாள் கழித்து, அதே கிணற்றில் வேறொரு வளையில் இருந்த ஒரு பல்லியைப் பார்த்துப் பாம்பு ‘’சிநேகிதியே, எனக்கு ஒரு சிறு உதவி செய். உனக்குத் தவளையரசனை ரொம்பக் காலமாகத் தெரியும். அது எங்காவது ஒரு நீர்நிலையில் இருந்து கொண்டிருக்கும். நீ அதனிடம் போய், ‘வேறு தவளைகள் வராமற்போனால் போகட்டும். நீயாவது சீக்கிரமாகத் திரும்பிவந்து சேர். நீ இல்லாமல் என்னால் இங்கு இருக்க முடியாது. உனக்கு நான் ஏதாவது தீங்கு செய்தால் இந்தப் பிறப்பில் நான் செய்த புண்ணியம் எல்லாம் உன்னைச் சேரட்டும்’ என்று நான் சொன்னதாகச் சொல்!’’ என்று சொல்லிற்று.

பாம்பு சொன்னபடி பல்லி வேகமாகச் சென்று தவளையரசனைக் கண்டது. ‘’நண்பனே, உன் நண்பன் பிரியதர்சனன் (பாம்பு) நீ வரும் வழியைப் பார்த்தபடியே காத்திருக்கிறது. எனவே, சீக்கிரமாகத் திரும்பிப்போ. அது உனக்கு ஏதாவது தீங்கு செய்தால் தன் புண்ணியத்தையெல்லாம் அதற்கு ஈடாக வைக்கிறது. ஆகவே நீ பயப்படாமல் வா’’ என்று தவளையிடம் பல்லி சொல்லிற்று. அதைக் கேட்ட தவளையரசன்,

பசித்தவன் எந்தப் பாவச் செயலையும் செய்வான். நலிந்தவன் தயையில்லாதவனாக ஆகிறான். அன்பே! கங்கதத்தன் மீண்டும் கிணற்றுக்கு வரமாட்டான். என்று பிரியதரிசனனிடம் சொல்!

என்று சொல்லி பல்லியை அனுப்பி வைத்தது. ஆகவே, ஏ துஷ்ட முதலையே, நானும் தவளையரசனைப் போல் உன் வீட்டுக்கு ஒருநாளும் வரமாட்டேன்’’ என்றது குரங்கு.

அதைக் கேட்ட முதலை, ‘’நண்பனே, நீ அப்படிச் செய்வது சரியில்லை. எப்படியாவது என் செய்ந்நன்றி கொன்ற தோஷத்தை விலக்குவதற்காக என் வீட்டுக்கு வா! இல்லாவிட்டால் உன் வாயிற்படியிலேயே பட்டினி கிடந்து உயிரை விடுவேன்’’ என்றது. அதற்குக் குரங்கு ‘’மூடனே, ஆபத்தை நேரில் கண்டும்கூட அங்கே போய் லம்பகர்ணன் கொலையுண்டதே, அதைப் போலத்தான் நானும் என்று எண்ணிவிட்டாயா, என்ன?’’ என்று பதிலளித்தது.

‘’யார் அந்த லம்பகர்ணன்? ஆபத்தை நேரில் கண்டும் அது எப்படிச் செத்தது? சொல்’’ என்று முதலை கேட்க, குரங்கு சொல்லத் தொடங்கியது:

சுயபுத்தி இல்லாத கழுதை

ஒரு காட்டில் சிங்கம் ஒன்றிருந்தது. அதன்பெயர் கராலகேசரன், அதை எப்பொழுதும் பின்தொடர்ந்து வரும் தூசரகன் என்ற ஒரு நரி அதனிடம் வேலையாளாக இருந்து வந்தது.

ஒருநாள் அந்தச் சிங்கம் ஒரு யானையோடு சண்டையிட்டது. அந்தச் சண்டையிலே சிங்கத்துக்கு பலமான காயங்கள் பல ஏற்பட்டுவிட்டன. அதனால் ஒரு அடிகூட சிங்கம் நகர முடியாமற் போயிற்று. சிங்கம் நடக்க முடியாமற் போகவே, நரி உண்ண வழியின்றி பசியால் மெலிந்து போயிற்று. ஒருநாள் நரி சிங்கத்தைப் பார்த்து, ‘’அரசே, நான் பசியால் வாடுகிறேன். ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை. தங்களுக்கு எப்படி நான் சேவை செய்வது?’’ என்றது. ‘’தூசரகனே, ஏதாவது ஒரு மிருகத்தைத் தேடிக் கூட்டிவா. நான் எப்படி இருந்தாலும் அதைக் கொல்கிறேன்’’ என்றது சிங்கம்.

மிருகத்தைத் தேடிக்கொண்டு நரி போயிற்று. அருகிலுள்ள ஏதோ ஒரு கிராமத்துக்கு வந்து சேர்ந்தது. அங்கே குளத்தங்கரையிலே ஒரு கழுதை முட்களுள்ள துர்வாப்புல் நுனிகளை ஆவலோடு மேய்ந்துகொண்டிருந்தது. அதன் பெயர் லம்பகர்ணன். அந்தக் கழுதையை நரி கண்டதோ இல்லையோ, உடனே அதை நெருங்கி ‘’நமஸ்காரம், மாமா. நமஸ்காரம்! உங்களைப் பார்த்து ரொம்ப நாளாயிற்று. எதனால் இப்படி இளைத்துப் போயிருக்கிறீர்கள்?’’ என்று கேட்டது.

‘’நான் என்ன செய்யட்டும், மருமகனே? அந்த வண்ணான் கொஞ்சம்கூடத் தயை காட்டாமல் என்மேல் பாரத்தைப் போட்டு வாட்டி வதைக்கிறான். ஒரு பிடி புல்கூடப் போடுவதில்லை. புழுதிபடித்த இந்தத் துர்வாப் புல் நுனிகளை மட்டுமே தின்றுவருகிறேன். அதனால் என் உடம்பில் புஷ்டியேயில்லை’’ என்றது கழுதை.

’அப்படியானால், மாமா, நீங்கள் என்னோடு வந்து விடுங்கள். பச்சைக்கல் மாதிரி புல் வளர்ந்து கிடக்கிற ஒரு அழகான இடம் நதிக்கரையில் இருப்பது எனக்குத் தெரியும். அங்கே வந்து விடுங்கள். நீதி நிறைந்த பேச்சுக்களைப் பேசிக்கொண்டு சுகமாக ஜீவிக்கலாம்’’ என்றது நரி. ‘’மருமகனே, உன் பேச்சு சரிதான். ஆனால் கிராமத்திலுள்ள சாதுவான பிராணிகளைக் காட்டு மிருகங்கள் கொன்றுவிடுமே! அந்த அழகான இடத்தால் நமக்கு என்ன லாபம்?’’ என்று கழுதை கேட்டது. ‘’அப்படிச் சொல்லாதீர்கள். என் கைவல்லமையால் அந்த ஜாகையை நான் காத்து வருகிறேன். வேறு யாரும் அதில் நுழைவதில்லை. மேலும், அங்கே மணமாகாத மூன்று பெண் கழுதைகள் இருக்கின்றன. உன்னைப்போல் அவற்றையும் வண்ணார்கள் துன்புறுத்தி வந்தார்கள். இப்போத அவை புஷ்டியடைந்து யௌவனத்தின் வேட்கையால் பீடிக்கப்பட்டு என்னிடம் ‘மாமா, நீ ஏதாவது ஒரு கிராமத்துக்குப்போய் எங்களுக்குத் தகுந்த ஒரு கணவனை அழைத்துவா’ என்று சொல்லின. அதனால் நான் உன்னை அழைத்துப்போக நான் வந்தேன்’’ என்றது நரி.

நரியின் பேச்சைக் கேட்டதும் அந்தக் கழுதை காமவசப்பட்டுப் போயிற்று. ‘’நண்பனே, அப்படியானால் சரி சீக்கிரமாக அங்கே போய் சேருவோம். நீ முன்னால் நட’’ என்று அந்தக் கழுதை சொல்லிற்று.

பெண்ணே! நீ ஒரே விஷம் என்றோ ஒரே அமுதம் என்றோ, சொல்லிவிட முடியாது. உன்னைச் சேர்ந்தால் வாழ்வு கிடைக்கிறது, உன்னைப் பிரிந்தால் சாவு கிடைக்கிறது.

என்று சொல்லியிருப்பது சரிதான்.

அந்தக் கழுதை நரியோடு புறப்பட்டுப் போய் சிங்கத்தினருகில் வந்து சேர்ந்தது. அந்தச் சிங்கம் ஒரு முட்டாள் சிங்கம். பாய்ந்து கொல்லும் தூரத்தில் கழுதை நெருங்கித்தான் நின்று கொண்டிருந்தது. இருந்தபோதிலும் கழுதையைக் கண்டதிலே சிங்கத்துக்கும் மிதமிஞ்சிய சந்தோஷம் ஏற்பட்டுப் போனதால், அது பாய்ந்த பாய்ச்சலில் கழுதையைத் தாண்டிச் சென்று அப்பால் விழுந்தது. இதைக் கண்டதும், கழுதை இடி விழுந்ததோ என்று எண்ணிற்று. ‘’என்ன இது? என்ன இது?’’ என்று ஆச்சரியப்பட்டது. விதிவசமாக ஒரு காயமும் படாமல் கழுதை எப்படியோ தப்பித்துப் போய் விட்டது. திரும்பிப் பார்த்தபோது சிங்கத்தின் ரத்தச் சிவப்பேறிய கொடிய பயங்கரமான கண்களைக் கழுதை கண்டதும் பயத்தால் நடுநடுங்கிப் போய் ஒரே ஓட்டமாகத் தன் ஊருக்கு ஓடிவிட்டது.

அப்போது நரி சிங்கத்திடம், ‘’என்ன இது? உன் பராக்கிரமத்தைப் பார்த்துவிட்டேனே!’’ என்று சொல்லிற்று. சிங்கம் ஆச்சரியப்பட்டுப் போய், ‘’நான் என்ன செய்யட்டும். அப்போது பாய்வதற்கு நான் தயாரில்லை. என் பாய்ச்சலில் சிக்கிய எந்த யானையாவது என்னிடமிருந்து தப்பியதுண்டா?’’ என்றது. ‘’சரி மறுபடியும் பாய்வதற்கு இப்பொழுதே தயாராக நில்லுங்கள். அதை மறுபடியும் உங்கள் அருகில் அழைத்து வருகிறேன்’’ என்றது நரி. ‘’என்னை நேரில் பார்த்தவன் யாராவது மறுபடியும் திரும்பி வருவானா? ஆகவே, வேறு ஏதாவது மிருகத்தைக் கூட்டிவா?’’ என்றது சிங்கம். ‘’அதைப்பற்றி உங்களுக்கு ஏன் கவலை? அந்த விஷயத்தில் நான் உஷாராகத்தான் இருக்கிறேன்’’ என்று நரி பதிலளித்துவிட்டு கழுதை போன வழியிலேயே தானும் சென்றது. பழைய இடத்திலேயே கழதை மேய்ந்து கொண்டிருப்பதை நரி கண்டது. நரியைப் பார்த்த கழுதை, ‘’என்ன, மருமகனே! வெகு அழகான இடத்துக்குத்தான் என்னை அழைத்துப் போனாய், போ! நல்ல காலம். நான் எப்படியோ விதிவசமாகப் பிழைத்துக்கொண்டேன். மிகவும் பயங்கரமாயிருக்கிறதே, அது என்ன மிருகம், சொல்! இடிபோல் இருந்ததே அது? அதன் அடிக்குத் தப்பிவிட்டேன்’’ என்றது.

நரி சிரித்துக்கொண்டே, ‘’மாமா அது ஒரு பெண் கழுதை. அதற்குக் காமம் முற்றிப் போனதால் உன்னைக் கண்டதும் ஆசையோடு அணைத்துக் கொள்ள எழுந்தது. உனக்கோ ஒரே வெட்கம். ஓடிப்போனாய். ஓடுகிற உன்னைப் பிடிப்பதற்காக அது கையை நீட்டியது. விஷயம் வேறொன்று மில்லை. ஆகவே, நீ வா. உனக்காக அது பட்டினி கிடந்து உயிரைவிட முடிவு செய்து, ‘எனக்கு லம்பகர்ணன் கணவனாக ஆகாவிட்டால் நான் நெருப்பிலோ நீரிலோ விழுந்துவிடுவேன்; அல்லது விஷத்தைக் குடித்துவிடுவேன். எப்படியானாலும் சரி, அதைப் பிரிந்திருக்க என்னால் முடியவே முடியாது’ என்று சொல்லிவிட்டது. ஆகவே அதன்மேல் இரக்கம் கொண்டு அங்கே வா, இல்லாவிட்டால், ஒரு பெண்ணைக் கொன்ற பாவம் உன்னைச் சேரும். மன்மதனுக்கும் கோபம் உண்டாகும்.

சகல நன்மைகளும் அளிப்பவள் பெண். பெண்ணே மன்மதனின் வெற்றிக்கு முத்திரை. புத்தியில்லாதவர்கள் யாராவது பெண்ணை வெறுத்து, சொர்க்கத்தையும் முக்தியையும் விரும்பிச் செல்வார்களேயானால், அந்த தோஷத்துக்காக மன்மதன் அவர்களை அடித்துவிடுகிறான். சீக்கிரத்திலே சிலர் நிர்வாணமாக்கப்படுகின்றனர். சிலர் தலை மொட்டையடிக்கப் படுகின்றனர். சிலர் சடைதரிக்க வேண்டியதாகிறது. சிலர் மண்டை ஓடுகளை மாலையாக அணியும் காபாலிகர்களாக ஆக்கப்படுகின்றனர்.

என்று சொல்லப்படுகிறது.

நரியின் பேச்சைக் கழுதை நம்பிவிட்டது. மறுபடியும் அது நரியோடு போயிற்று.

அறிந்து தெரிந்திருந்தும் மனிதன் கெட்ட காரியத்தைச் செய்கிறான். இதற்குக் காரணம் விதிதான். இந்த உலகில் இழிசெயலை விரும்பிச் செய்கிறவன் யாராவது உண்டா? என்ற வாக்கில் நியாயம் இருக்கிறது.

இதற்கிடையே அந்தப் போக்கிரி நரி சொன்ன பற்பலவிதமான வாதப் பேச்சுகளைக் கேட்டு கழுதை ஏமாந்து போய் மறுபடியும் சிங்கத்தின் அருகில் வந்து நின்றது. முன்பே சிங்கம் பாய்வதற்குத் தயாராகத் தயாராக இருந்தது அல்லவா? எனவே அது கழுதையை உடனே கொன்றது. பிறகு சிங்கம் அதற்கு நரியைக் காவல் வைத்துவிட்டு குளிப்பதற்காக ஆற்றுக்குப் போயிற்று. பேராசையுள்ள நரி அந்தக் கழுதையின் காதுகளையும் நெஞ்சையும் தின்று விட்டது. குளித்துவிட்டு விதிப்படி எல்லா காரியங்களையும் முடித்துக்கொண்டு சிங்கம் திரும்பியது. கழுதைக்குக் காதுகளும் நெஞ்சும் இல்லாமலிருப்பதைப் பார்த்துவிட்டது. உடனே சிங்கம் கோபம் நிறைந்த உள்ளத்துடன், ‘’பாவியே, இந்தத் தகாத காரியத்தை ஏன் செய்தாய்? இதன் காதுகளையும் நெஞ்சையும் தின்று எச்சிலாக்கிவிட்டாயே’’ என்று நரியைப் பார்த்துக் கத்தியது.

மிகுந்த வணக்கத்துடன் நரி, ‘’அரசே, அப்படிச் சொல்லாதீர்கள். இதற்குக் காதுகளும் நெஞ்சும் பிறவியிலிருந்தே கிடையாது. அவை இருந்திருந்தால் இது எப்படித் தானே இங்கே வந்து உங்களை நேரில் பார்த்துப் பயந்து ஓடிப்போய் மறுபடியும் திரும்பி வந்திருக்க முடியும்?

அது வந்து, பார்த்து, போயிற்று. பயங்கரமான உன்னைப் பார்த்தும் யார் ஓடி மறுபடியும் வந்தானோ அவன் காதுகளும், ஹிருதயமுமற்ற மூடனே.

என்று சொல்லப்படுகிறது.

நரியின் வார்த்தையால் நம்பிக்கையடைந்த சிங்கம், உணவை அதனுடன் பகிர்ந்துகொண்டு சந்தேகமற்ற மனதுடன் சாப்பிட்டது.

அதனால்தான் ‘நானும் லம்பகர்ணனென்ற கழுதையில்லை’ என்று சொன்னேன். மூடனே! என்னை ஏமாற்றப் பார்த்தாய். ஆனால், யுதிஷ்டிரரைப் போல் உண்மையைச் சொல்லி அதை வீணாக்கிக் கொண்டாய். இவ்விதம் சரியாகத்தான் சொல்லப்படுகிறது:

சுயநலத்தைவிட்டு எந்தப் போக்கிரி மந்த புத்தியுடன் உண்மை பேசுகிறானோ அவன் யுதிர்ஷ்டிரனைப்போல் சுயநலத்தை நிச்சயம் அடைவதில்லை.

என்றது குரங்கு.

‘’அது எப்படி?’’ என்று முதலை கேட்க, குரங்கு சொல்லிற்று:

http://inthiya.com/?p=13141
 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சதந்திரம் தொடர் 52 - சமயோசித புத்தியற்ற குயவன்

அன்னபூர்னா ஈஸ்வரன்

ஒரு ஊரில் ஒரு குயவனிருந்தான். அவன் ஒரு சமயம் கவனமில்லாமல் வெகு வேகமாக ஓடி கூர்மையான நுனி உடைய ஒரு உடைந்த பாத்திரத்தின் மேல் விழுந்தான். அதன் கூரிய நுனி அவனுடைய நெற்றிக்கட்டை நன்கு கிழித்து விட்டது. ரத்தத்தினால் நனைந்த உடலுடன் எப்படியோ எழுந்திருந்தான். பிறகு சரியாக அதற்கு வைத்தியம் செய்யாததால் அந்தக் கூர்மையான அடி கோடுமான பெரிய வடுவாக ஆகிவிட்டது.

ஒரு சமயம் ஊர் பஞ்சத்தினால் பீடிக்கப்பட்டபொழுது பசியால் வாடிய அவன் யாரோ ராஜசேவகனுடன் வேறு தேசம் சென்று அங்கு அவனும் ராஜசேவகனாக ஆனான்.

அந்த அரசனும் அவன் நெற்றியில் உள்ள வடுவைப் பார்த்து, ‘’இவன் யாரோ ஒரு வீர புருஷனே. அதனால்தான் இவன் நெற்றியில் அடி பட்டிருக்கிறான்’’ என்று எண்ணினான். இவ்விதம் எண்ணி எல்லோரையும் விட அதிகமாகவே அவனுக்கு வெகுமானங்களும் பரிசுகளும் வழங்கி அவனைக் கவனித்துக் கொண்டான். அவனுக்கு அதிகமாக வெகுமான மளிப்பதைப் பார்த்து அரசகுமாரர்கள்கூட மிகுந்த பொறாமை அடைந்தனர். ஆனாலும் அரசனிடமுள்ள பயத்தால் அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை.

பிறகு ஒருநாள், வீரச்செயல்கள், யானையேற்றம், குதிரையின் அணிவகுப்பு படைவீரர்கள் முதலியவற்றைப் பார்வையிடும்பொழுது அரசன் அந்தக் குயவனிடம், ‘’ஏ, அரசகுமாரனே! உன் பெயரென்ன? நீ என்ன ஜாதி? உன் நெற்றியில் உள்ள இந்த வடு எந்தச் சண்டையில் ஏற்பட்டது?’’ என்று கேட்டான்.

‘’பிரபுவே, யுதிஷ்டிரன் என்ற பெயருடைய நான் குயவர் ஜாதியைச் சேர்ந்தவன். இது கத்தியால் ஏற்பட்ட காயமல்ல, அநேக உடைந்த பாத்திரங்களின் குவியலோடிருந்த கொல்லைப்புறத்தில் மதுபானத்தால் தள்ளாடியபடி நான் ஓடி ஒரு உடைந்த சட்டியின் மேல் விழுந்தேன். அதனால் என் நெற்றி கிழிக்கப்பட்டு இந்த வடு ஏற்பட்டது’’ என்று அவன் பதிலளித்தான்.

அதைக்கேட்டு அரசன் ‘’ஐயோ, அரசகுமாரனைப்போலுள்ள இந்தக் குயவனால் நான் ஏமாற்றப்பட்டேன். ஆகவே, இவனைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ள வேண்டும்’’ என்று எண்ணி அவ்விதமே செய்தபொழுது, ‘’அரசே, அவ்விதம் செய்யாதீர்கள். சண்டையில் என்னுடைய பராக்கிரமத்தைப் பாரும்’’ என்றான் குயவன்.

‘’குயவனே, நீ குணக்குன்றாக இருக்கலாம். ஆனாலும் சென்றுவிடு. மகனே, நீ வீரன்தான், கல்விமான்தான்; பார்ப்பதற்கும் அழகாக இருக்கிறாய். ஆனால் நீ உதித்த குலத்தில் யானைகள் கொல்லப்படுவதில்லை. என்றொரு பழமொழி உண்டு என்றான் அரசன்.

‘’அது எப்படி?’’ என்று குயவன் கேட்ட, அரசன் சொன்னான்.

சிங்கம் வளர்த்த நரி

ஒரு காட்டில் ஒரு சிங்கமும் அதன் மனைவியும் இருந்தன. ஒரு நாள் பெண் சிங்கம் இரண்டு ஆண்குட்டிகளைப் பெற்றது. சிங்கமும் தினம் மிருகங்களைக் கொன்று பெண் சிங்கத்திற்குக் கொடுத்து வந்தது. ஒருநாள் காட்டில் சுற்றிவந்த அதற்கு ஒன்றும் கிடைக்கவில்லை. சூரிய பகவானும் அஸ்தமனகிரியை அடைந்துவிட்டான். வீட்டிற்குத் திரும்பும் சிங்கத்துக்கு வழியில் நரிக்குட்டி ஒன்று அகப்பட்டது. அதுவும் ‘இது குழந்தையாயிற்றே’ என்று இரக்கப்பட்டு தன் பற்களினுடையே கௌவித் தூக்கிக்கொண்டு முயற்சியுடன் அதை உயிரோடு கொண்டு வந்து பெண் சிங்கத்தினிடம் கொடுத்தது. அப்பொழுது பெண் சிங்கம் ‘’கணவனே, ஏதாவது நீ சாப்பிடுவதற்குக் கொண்டு வந்திருக்கிறாயா?’’ என்று கேட்டது.

‘’அன்பே, இந்த நரிக்குட்டியைத் தவிர இன்று வேறு ஒன்றும் கிடைக்க வில்லை. இதுவும் நம் இனத்தைச் சேர்ந்தது. குட்டிதான் வேறு, என்று எண்ணி நான் அதைக் கொல்லவில்லை.

ஏனெனில்,

பெண், பிராம்மணன், சந்நியாசி, குழந்தை ஆகியோர்களை ஒருபொழுதும் கொல்லாதே! உயிர்போகும் நிலை வந்தாலும் அவர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்யாதே.

இப்பொழுது நீ இதைச் சாப்பிட்டு பசியைத் தணித்துக்கொள். காலையில் வேறு ஏதாவது கொண்டு வருகிறேன்’’ என்றது ஆண் சிங்கம். ‘’நாதா, நீ அதைக் குழந்தை என்று எண்ணிக் கொல்லவில்லை. பின் எப்படி நான் என் வயிற்றுக்காக இதைக் கொல்வேன்?

ஒரு பழமொழி உண்டு:

உயிர் போகும் நிலை வந்தாலும் செய்யத் தகாததைச் செய்யக் கூடாது. செய்யத் தக்கதையும் விடக்கூடாது. இதுவே நல்லோர்களின் தர்மம்.

ஆகவே, இது எனக்கு மூன்றாவது புத்திரனாக இருக்கட்டும்’’ என்று பெண் சிங்கம் சொல்லி தன் முலைப்பாலால் அதை மிகவும் புஷ்டியுள்ளதாக வளர்த்தது. இப்படியே அந்த மூன்று குட்டிகளும் ஒன்றுக்கொன்று ஜாதி வித்தியாசமே இல்லாமல், ஒரே விதமான ஆசாரமும், விளையாட்டுமாக பாலபருவத்தைக் கழித்தன.

ஒருசமயம் அந்தக் காட்டில் சுற்றித் திரிந்துகொண்டு ஒரு காட்டானை வந்து சேர்ந்தது. அதைப் பார்த்து அந்தச் சிங்கக் குட்டிகளிரண்டும் கோபமடைந்து அதைக் கொல்ல விரும்பி அதை நோக்கிச் சென்றன. அப்பொழுது அந்த நரிக்குட்டி, ‘ஐயோ, இது யானை. உங்கள் குலத்தின் எதிரி. அங்கு செல்லக்கூடாது’’ என்று சொல்லிற்று. இவ்விதம் சொல்லித் தன் வீட்டை நோக்கி நரிக்குட்டி ஓடிற்று. அவையும் தங்களுடைய மூத்த சகோதரன் ஓடிவிட்டதால் உற்சாகமிழந்தன.

சண்டையில் ஒரே ஒரு வீரன் உற்சாகத்துடனிருந்தால் சைன்யத்திற்கே உற்சாகமேற்படும். கோழை கோழைத்தனத்தையே உண்டு பண்ணுவான்.

என்று சொல்வது சரிதான்.

அதனாலேயே அரசர்கள் போர்வீரர்களை பலசாலியாகவும், சூரனாகவும், வீரனாகவும், உற்சாகமுள்ளவனாகவும் இருக்க வேண்டுமென்று விரும்புகின்றனர். கோழைகளை அறவே விட்டுவிடுகின்றனர்.

பிறகு இரு சகோதரர்களும் வீட்டை அடைந்து பரிகாசத்துடன் தந்தையிடம் மூத்த சகோதரனின் செயலைக் குறிப்பிட்டு, ‘’இது யானையை தூரத்தில் பார்த்தவுடனேயே ஓட்டம் பிடித்துவிட்டது’’ என்று சொல்லின.

அதுவும் அதைக்கேட்டு கோபம் நிறைந்த உள்ளத்துடனும், துடிக்கின்ற சிவந்த உதடுகளும், சிவந்த கண்களும், நெற்றியைச் சுருக்கியதால் அதில் இரண்டு கோடுகளும் விழுந்ததாக அவைகளைத் திட்டிக்கொண்டு கோபமாகப் பேசியது. அப்போது பெண் சிங்கம் அதைத் தனியாக அழைத்துச் சென்று அதற்குப் புத்திமதி சொல்லிற்று. ‘’குழந்தாய், ஒரு பொழுதும் இவ்விதம் பேசாதே. அவை இரண்டும் உன்னுடைய சகோதரர்கள்’’ என்றது. ஆனால் அந்தச் சாந்தமான வார்த்தையால் அதிகக் கோபமடைந்த அது பெண் சிங்கத்தினிடம், ‘’நான் அவர்களைவிட வீரத்திலோ, அழகிலோ, வித்தையிலோ, பழக்கத்திலோ, சாமர்த்தியத்திலோ குறைந்தவனா என்ன? ஏன் அவர்கள் என்னைப் பரிகசிக்கின்றனர்? ஆகவே நான் நிச்சயம் அவர்களைக் கொல்லப் போகிறேன்’’ என்று சொல்லிற்று.

அதைக் கேட்டு பெண் சிங்கம் நரிக்குட்டி உயிருடன் இருக்க வேண்டுமென்று விரும்பியதால் உள்ளூற சிரித்துக்கொண்டே சொல்லிற்று:

மகனே, நீ வீரன்தான், கல்விமான்தான், பார்ப்பதற்கும் அழகாக இருக்கிறாய். ஆனால், நீ உதித்த குலத்தில் யானைகள் கொல்லப் படுவதில்லை.

அதனால் கவனமாகக் கேள். குழந்தாய், நீ நரியின் பிள்ளை. நான் தயை மிகுதியால் உன்னை என் முலைப்பாலால் புஷ்டியாக வளர்த்தேன். என் புத்திரர்கள் தமது குழந்தைத்தனத்தால் உன்னை நரியென்று அறியாமலிருக்கிறார்கள். அவை தெரிந்துகொள்வதற்கு முன்பே வேகமாகச சென்று உன் ஜாதியாரிடம் போய்விடு. இல்லையெனில் அவர்களால் கொல்லப்பட்டுப் போவாய்’’ என்றது.

நரிக்குட்டி அதைக் கேட்டு மிகுந்த பயமடைந்து மெல்ல மெல்ல நழுவி தன் ஜாதியாருடன் சேர்ந்துகொண்டது.

ஆகையால் நீயும் ராஜபுத்திரர்கள் நீ குயவன் என்று அறிவதற்குள் இங்கிருந்து வேகமாகச் சென்றுவிடு. இல்லையேல் நிந்திக்கப்பட்டுச் சாவாய்’’ என்றான் அரசன். குயவனும் அதைக் கேட்டு வேகமாக வெளியேறிவிட்டான்.

அதனால்தான் ‘சுயநலத்தை விட்டு எந்தப் போக்கிரி…’ என்று நான் சொன்னேன். சீ மூடனே, நீ ஒரு பெண்ணுக்காக இந்தக் காரியத்தைச் செய்ய ஆரம்பித்திருக்கிறாய். ஒருபொழுதும் ஸ்திரீகளை நம்பக்கூடாது.

யார் பொருட்டு என் குலத்தை விட்டேனோ உயிரில் பாதியைக் கொடுத்தேனோ, அவள், என்னைப் பிரியமற்றுவிடுகிறாள். யார்தான் ஸ்திரீகளை நம்ப முடியும்?

என்ற கதை சரிதான்’’ என்றது குரங்கு.

அதைக்கேட்ட முதலை ‘’அது எப்படி?’’ என்று கேட்க, குரங்கு சொல்லிற்று:

நன்றிகெட்ட ஸ்திரீ

ஒரு ஊரில் ஒரு பிராம்மணன் இருந்தான். அவன் தன் மனைவியை உயிருக்கு மேலாக நேசித்தான். அவன் தினந்தோறும் தன் குடும்பத்தினருடன் சண்டையிட்டவாறு இருந்தான். அந்தப் பிராம்மணன் சண்டையைப் பொறுக்கமாட்டாமல், தன் குடும்பத்தைவிட்டு மனைவியிடமுள்ள பிரியத்தால் மனைவியுடன் வெகுதூரத்திலுள்ள வேறு ஊருக்குப் புறப்பட்டான். பெரிய காட்டின் நடுவில் போகையிலே மனைவி, ‘’அன்பரே தாகம் என்னை வதைக்கிறது. எங்காவது தண்ணீரைத் தேடும்’’ என்றாள். அவள் வார்த்தைப்படி அவன் ஜலத்தை எடுத்துக் கொண்டு வருவதற்குள் அவள் இறந்து விட்டிருப்பதைப் பார்த்தான்.

அவள்மேல் அவனுக்கிருந்த அதிக அன்பினால் அவன் வருத்தப்பட்டுப் புலம்பினான். அப்பொழுது ஆகாயத்திலிருந்து ‘’பிராம்மணனே, நீ உன் ஆயுளில் பாதியைக் கொடுத்தால் உன் மனைவி பிழைத்துக்கொள்வாள்’’ என்றொரு சொல் கிளம்பிற்று.

அதைக்கேட்டு பிராம்மணன் தன்னைச் சுத்தப்படுத்திக்கொண்டு மூன்று வார்த்தைகளால் தன் உயிரில் பாதியைக் கொடுத்தான். அவன் சொன்ன மாத்திரத்திலேயே அந்தப் பிராம்மண ஸ்திரீ உயிர் பெற்றாள். பிறகு அவர்களிருவரும் ஜலத்தைக் குடித்துவிட்டு காட்டுப் பழங்களையும் சாப்பிட்டு விட்டுச் செல்ல ஆரம்பித்தனர். பிறகு நாளடைவில் ஏதோ ஒரு ஊருக்கு வந்து சேர்ந்து அங்குள்ள நந்தவனத்தில் நுழைந்தனர். அங்கு பிராம்மணன் தன் மனைவியிடம், ‘’அன்பே, நான் உணவைக் கொண்டுவரும் வரை நீ இங்கேயே இரு’’ என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

அந்தப் பூஞ்சோலையில் ஒரு நொண்டி ஏற்றத்தை இறைத்துக் கொண்டு தேவாமிருதமான குரலில் பாட்டுப் பாடிக்கொண்டிருந்தான். அதைக் கேட்டு பிராம்மணப்பெண் காதல் கொண்டு அவனருகில் சென்று, ‘’பிரியனே, நீ என்னை அடையாவிட்டால், ஒரு பிராம்மண ஸ்திரீயைக் கொன்ற பாவத்தை நீ அடைவாய்’’ என்று சொன்னாள்.

அதற்கு முடவன், ‘’வியாதியால் பீடிக்கப்பட்ட நான் என்ன செய்ய முடியும்?’’ என்று சொன்னான். ‘’ஏன் அப்படிச் சொல்கிறாய்? நிச்சயம் உன்னை நான் சேரத்தான் வேண்டும்’’ என்றாள் அவள். அதைக்கேட்டு முடவன் அவளைச் சேர்ந்தான். அவனுடன் சேர்ந்தபின் அவள், ‘’இனிமேல், என் வாழ்வு முழுவதும் உங்களுக்கு என்னை அளிக்கிறேன். இதை அறிந்து நீங்களும் எங்களோடு வரவேண்டும்’’ என்றாள். அவனும் ‘’அவ்விதமே ஆகட்டும்’’ என்று ஒப்புக்கொண்டான்.

பிறகு பிராம்மணன் சாப்பாட்டை எடுத்துக்கொண்டு வந்து அவளுடன் சாப்பிட ஆரம்பித்தான். ‘’இந்த முடவன் பசியாக இருக்கிறான். அதனால் இவனுக்கும் ஒரு கவளம் கொடு’’ என்றாள் மனைவி. அவ்விதமே கொடுத்த பின், மனைவி ‘’பிராம்மணனே, உதவியற்று நீ வேறு கிராமத்திற்குச் செல்லும் பொழுது எனக்குப் பேசுவதற்குத் துணையாக ஒருவருமில்லை. ஆகவே இந்த முடவனையும் நம்மோடு அழைத்துச் செல்வோம்’’ என்றாள்.

‘’என்னையே நான் தூக்கச் சக்தியற்றிருக்கிறேன். பின் இந்த நொண்டியை இழுத்துக்கொண்டு செல்வானேன்?’’ என்றான் அவன்.

‘’பெட்டியில் வைத்து அவனை நான் தூக்கிச் செல்கிறேன்’’ என்று அவள் சொன்னாள். அவளுடைய குயுக்தியான வார்த்தையால் புத்தி குழம்பிப்போய் அவன் அதற்கு ஒப்புக் கொண்டான்.

அவ்விதமே செய்தபின் ஒரு தினம் ஒரு கிணற்றின் அருகில் சிரம பரிகாரம் செய்து கொண்டிருந்தபொழுது அந்த முடவனின் உதவியுடன் அவள் தன் கணவனைக் கிணற்றில் தள்ளிவிட்டாள்.

அவள் முடவனைத் தூக்கிக்கொண்டு ஏதோ ஒரு ஊருக்குள் சென்றாள். அங்கு வரி, திருட்டு, பாதுகாப்பு இவைகளுக்காக அரசனின் காவலாளிகள் இங்கும் அங்கும் சுற்றிக்கொண்டிருந்தபொழுது அவள் தலையிலிருக்கும் பெட்டியைப் பார்த்தனர். பலாத்காரமாக அதைப் பிடுங்கி எடுத்துச்சென்று அரசன் முன்னே வைத்தனர். அரசனும் அதைத் திறந்து பார்த்தபொழுது அதில் ஒரு முடவன் இருக்கக் கண்டான்.

இந்தச் சமயத்தில் அந்தப் பிராம்மண ஸ்திரீ அழுது புலம்பிக் கெகண்டே காவலாளிகளைப் பின் தொடர்ந்து அங்கு வந்தாள். அரசன் அவளைப் பார்த்து, ‘’என்ன விஷயம்?’’ என்று கேட்டான். ‘’வியாதியால் பீடிக்கப்பட்ட இவர் என் கணவர். இவரைத் தாயாதிகள் துன்புறுத்தினர். நான் அன்பினால் கவலையடைந்த மனதுடன் இவரைத் தலையில் தூக்கிக்கொண்டு உங்களருகில் அழைத்து வந்தேன்’’ என்றாள் அவள். அதைக்கேட்டு அரசன், ‘’நீ என் சகோதரி. இரண்டு கிராமங்களைப் பெற்றுக்கொண்டு உன் கணவனோடு சுகபோகங்களை அனுபவித்துக்கொண்டு சந்தோஷமாக இரு’’ என்று சொன்னாள்.

அந்தப் பிராம்மணன் விதிவசத்தால் ஏதோ ஒரு சந்நியாசியால் கிணற்றிலிருந்து தூக்கிவிடப்பட்டான். அவன் சுற்றிக்கொண்டு அந்தப் பட்டினத்திற்கே வந்து சேர்ந்தாள். அந்தத் துஷ்ட மனைவி அவனைப் பார்த்ததும் அரசனிடம், ‘’அரசே, என்னுடைய கணவனின் சத்ருவான இவன் வந்துள்ளான்’’ என்று கூறினாள். அரசனும் அவனைக் கொல்ல உத்தரவளித்தான். அப்பொழுது அந்தப் பிராம்மணன் ‘’பிரபுவே, என்னிடமிருந்து இவள் ஒன்று வாங்கிக்கொண்டிருக்கிறாள். நீர் தர்மப்பிரபு வானால் அதைக் கொடுக்கச் சொல்லும்’’ என்று சொன்னான்.

‘’பிரியமானவளே, நீ இவனிடமிருந்து பெற்றுக்கொண்டது ஏதாவது இருக்கிறதா? இருந்தால் அதைக் கொடுத்துவிடு’’ என்று அரசன் சொன்னான். அவள் அதற்கு ‘’அரசே நான் ஒன்றும் எடுத்துக் கொள்ளவில்லை!’’ என்று பதிலளித்தாள். அதற்குப் பிராம்மணன், ‘’நான் மூன்று வார்த்தைகளால் என் ஆயுளில் பாதியை உனக்கு அளித்தேன். அதைக் கொடு’’ என்றான். அவளும் அரசனிடமுள்ள பயத்தால் அவ்விதமே ‘’உயிரை நான் கொடுத்தேன்’’ என்ற மூன்று வார்த்தைகளைச் சொன்னாள். சொல்லிக் கொண்டிருந்தபடியே உயிரை விட்டாள்.

அப்பொழுது ஆச்சரியமடைந்த அரசன் ‘’இது என்ன விஷயம்?’’ என்று கேட்டான். பிராம்மணனும் பழைய வரலாற்றையெல்லாம் அவனுக்கு அறிவித்தான்.

அதனால், ‘’யார் பொருட்டு என் குலத்தை விட்டேனோ…’’ என்று சொல்லலானேன்’’ என்றது குரங்கு.

குரங்கு மறுபடியும் ‘’இந்தக் கதையும் இதற்குச் சரிதான்:

ஸ்திரீகளால் உத்தரவிடப்பட்ட புருஷன் எதுதான் கொடுக்க மாட்டான், என்னதான் செய்யமாட்டான்? குதிரையாக இல்லாவிட்டாலும் கனைப்பான்: அகாலத்தில் மொட்டையும் அடித்துக்கொள்வான்.’’

என்றது.

‘’எது எப்படி?’’ என்று முதலை கேட்க, குரங்கு சொல்லிற்று:

http://inthiya.com/?p=13257

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சதந்திரம் தொடர் 53 - பெண்டாட்டியாத்தாள் பெரியாத்தாள்
அன்னபூர்னா ஈஸ்வரன்



புகழ்பெற்ற பலமும் வீரமும் பெற்றவனும், அநேக அரசர்களின் கூட்டத்தினர் வணங்குவதால் அவர்களுடைய கிரீடங்களின் ரத்தினங்களின் காந்திக் கிரணங்களால் ஜ்வலிக்கும் பாதபீடத்தையுடையவனும், சரத்காலத்துச் சந்திரனின் நிர்மலமான கிரணங்களைப் போன்ற கீர்த்தியுடையவனும், சமுத்திரம் வரையிலுள்ள பூமிக்கு அதிபதியுமான நந்தன் என்ற அரசனிருந்தான். அவனுக்கு எல்லா சாஸ்திரங்களின் தத்துவங்களை நன்கு அறிந்தவனான வரருசி என்ற மந்திரி ஒருவன் இருந்தான். அவனுடைய மனைவியும் காதல் சண்டையால் கோபித்துக் கொண்டாள். மிகவும் பிரியமான அவள் அநேக விதமாக திருப்திப்படுத்தப்பட்டும் கூட சந்தோஷமடையவில்லை. அப்பொழுது அவள் கணவன், ‘’அன்பே, எதைச் செய்தால் நீ திருப்தியடைவாய்? அதைச் சொல். கட்டாயம் செய்கிறேன்’’ என்றான். பிறகு ஒருவிதமாக அவள், ‘’நீ தலையை மொட்டையடித்துக் கொண்டு என் கால்களில் விழுந்தால் அப்பொழுது திருப்தியடைந்தவளாவேன்’’ என்று சொல்ல, அவ்விதமே அவன் செய்தபொழுது அவள் பிரசன்னமானாள்.

பிறகு நந்தனின் மனைவி அதேபோல் கோபித்துக்கொண்டு சந்தோஷப்படுத்தப்பட்டும் திருப்தியடையவில்லை. நந்தன், அன்பே, நீ இல்லாமல் ஒரு கணப்பொழுதுகூட நான் ஜீவிக்கமாட்டேன். கால்களில் விழுந்து உன்னைத் திருப்திப் படுத்துகிறேன் என்றான்.

‘’ஒரு துண்டை வாயில் கௌவிக்கொண்டு நான் உன் முதுகில் ஏறிக்கொண்டு உன்னை ஓட்டுவேன். ஓடிக்கொண்டே நீ குதிரை போலக் கனைத்தால் அப்பொழுது பிரசன்னமாவேன்’’ என்றாள் அவள். அவனும் அப்படியே செய்தான்.

பிறகு காலை வேளையில் சபையில் உட்கார்ந்திருக்கும் அரசனிடம் வரருசி வந்தான். அவனைப் பார்த்து அரசன், ‘’வரருசி! ஏன் காலமற்ற காலத்தில் உன் தலையை மொட்டை அடித்துக் கொண்டாய்?’’ என்று கேட்டான்.

அவன் அதற்கு, ‘’ஸ்திரீகளால் உத்தரவிடப்பட்ட புருஷன்…’’ என்றபடி பதிலளித்தான்.

அதனால், மூடனே! நீயும் நந்தன் வரருசி மாதிரி ஸ்திரீயால் வசீகரிக்கப்பட்டவனே! அதனால் அவளால் ஏவப்பட்ட நீ என்னைக் கொல்ல முயற்சித்தாய். ஆனால் உன் வார்த்தை தோஷத்தாலேயே காட்டிக் கொடுக்கப் பட்டாய். இவ்விதம் சரியாகத்தான் சொல்லப்படுகிறது.

தன்னுடைய பேச்சு தோஷத்தினாலேயே கிளியும் ஸாரிகமும் கூட்டிலடைக்கப்படுகின்றன. கொக்குகள் அடைக்கப்படுவதில்லை. மௌனமே எல்லாவற்றையும் சிந்திக்கச் செய்யும்.

நன்கு மறைத்துக் காக்கப்பட்டிருந்தும், உடலைப் பயங்கரமாகக் காட்டியபோதிலும், புலித்தோலால் மூடப்பட்ட கழுதை கனைத்ததால் கொல்லப் பட்டது.

என்றது குரங்கு.
‘’அது எப்படி?’’ என்று முதலை கேட்க, குரங்கு சொல்லிற்று:

புலித்தோல் போர்த்த கழுதை

ஒரு ஊரில் சுத்தபடன் என்ற வண்ணான் ஒருவன் இருந்தான். அவனிடம் ஒரு கழுதை இருந்தது. அதுவும் புல் கிடைக்காததால் மிகவும் தளர்ச்சியடைந்தது. அந்த வண்ணான் காட்டில் சுற்றும் பொழுது ஒரு இறந்த புலியைக் கண்டான். ‘’ஆஹா! எனக்கு நன்மை ஏற்பட்டுள்ளது. இந்தப் புலித்தோலால் கழுதையை மறைத்து இரவில் வார்க்கோதுமை வயலில் அவிழ்த்து விடுகிறேன். வயலின் காவலாளிகளும் இதைப் புலியென்று எண்ணி இதை விரட்டமாட்டார்கள்’’ என்று எண்ணி, அவ்விதமே செய்தபொழுது கழுதையும் தன் விருப்பப்படி கோதுமைக் கதிரைத் தின்றது. விடியற்காலையில் வண்ணான் மறுபடியும் அதைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். இவ்விதமே நாட்கள் சென்றபொழுது அது பருத்த சரீரமுடையதாயிற்று. கஷ்டத்துடனேயே கொட்டிலுக்குள் சென்றது.

பிறகு ஒருநாள் கழுதை வெகுதூரத்தில் பெண் கழுதையின் கனைப்பைக் கேட்டது. அதைக் கேட்ட மாத்திரத்தில் தானும் கனைக்க ஆரம்பித்தது. அப்பொழுது அந்த உழவர்கள் ‘இது கழுதை புலித்தோலால் மறைக்கப்பட்டுள்ளது என்று அறிந்து’ கட்டை கல் அம்புகளால் அதை அடித்துக் கொன்றனர்.

அதனால்தான், ‘நன்கு மறைத்துத் காக்கப்பட்டும்…’ என்று நான் சொன்னேன்’’ என்றது குரங்கு.

இவ்விதம் முதலையுடன் குரங்கு பேசிக்கொண்டிருக்கும்பொழுது வேறு ஒரு ஜல ஜந்து வந்து முதலையிடம் ‘’ஏ முதலையே, உன் மனைவி ஆகாரம் எடுத்துக்கொள்ளாமல் இருந்து இறந்துவிட்டாள்’’ என்றது. அதைக்கேட்டு முதலை துக்கமடைந்த மனதுடன் புலம்பியது. ஐயோ, அதிர்ஷ்டமற்ற எனக்கு என்ன நேரிட்டுள்ளது!

யார் வீட்டில் தாயாரில்லையோ அன்புடன் பேசும் மனைவியும் இல்லையோ அவன் காட்டிற்குச் செல்ல வேண்டும். காடு அவனுக்கு வீடு போல் பயங்கரமானதில்லை.

என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். அதனால் நண்பா, நான் செய்த சிறு அபராதத்தை மன்னித்துக்கொள். நான் அவள் பிரிவினால் அக்னிப் பிரவேசம் செய்யப் போகிறேன்’’ என்றது முதலை. அதைக் கேட்டுக் குரங்கு சிரித்துக் கொண்டே, ‘’உன்னை நான் முதலிலிருந்தே அறிவேன். நீ ஸ்திரீயினால் வசீகரிக்கப்பட்டவன். ஜெயிக்கப்பட்டவன் என்று எனக்குத் தெரியும். இப்பொழுது அதற்கு ருசு கிடைத்து விட்டது. ஆகவே, மூடனே, சந்தோஷப்படவேண்டிய நீ துக்கப்படுகிறாய். அப்படிப்பட்ட மனைவி இறந்தால் அதை உற்சாகமாகக் கொண்டாடுவதுதான் தகும்.

எந்த மனைவி கெட்ட நடத்தையுடையவளாகவும், எப்பொழுதும் கலகப்ரியையாகவும் இருக்கிறாளோ, மனைவி உருவிலுள்ள அவளை புத்திசாலிகள் பிஞ்சில் பழுத்ததாக அறிகின்றனர்.
அதனால் மிக்க முயற்சியுடன் ‘ஸ்திரீ’ என்னும் பெயரைக் கூட உச்சரிக்காதே! உன்னுடைய சொந்த சுகத்தை விரும்பினால் பூமியிலுள்ள எல்லாப் பெண்களையும் விட்டுவிடு.

எது மனதிலுள்ளதோ அது நாக்கில் வருவதில்லை. எது நாக்கிலுள்ளதோ அது வெளியில் வருவதில்லை. எதைச் சொல்கிறாளோ அதைச் செய்வதில்லை. பெண்களே விசித்திரமான நடத்தை யுள்ளவர்கள்தான்.

பெண்ணின் கெட்டெண்ணத்தைக் காட்ட இது ஒன்றே போதும். வேறு எதற்கு? தன் வயிற்றில் பிறந்ததானாலும் அந்தப் பிள்ளையைக் கொல்கிறாள். கொடூரத்தில் அன்பையும், கடினத்தில் மிருதுத் தன்மையையும், ரஸமற்றதில் ரஸத்தையும் வாலிபர்கள் இளம் பெண்களிடம் கற்பனை செய்கின்றனர்.

என்றது குரங்கு.

‘’அது இருக்கட்டும். பின் நான் என்ன செய்வது? எனக்கு இரண்டு விதமான அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன. முதலில் என் வீடு நாசமாகிவிட்டது. இரண்டாவது நண்பனுடைய வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. அல்லது விதியால் அடிக்கப்பட்டவர்களுககு இப்படித்தான் ஏற்படுமோ?

எவ்விதமெனில்,

என் பாண்டித்தியத்தைப் போல உன்னுடையது இரண்டு மடங்கானது. உனக்குக் காதலன், கணவன் இருவருமில்லை. பின் ஏன், அம்மணமே, அப்படிப் பார்க்கிறாய்?என்றது முதலை. ‘

’அது எப்படி?’’ என்று குரங்கு கேட்க, முதலை சொல்லிற்று:

அரசனை நம்பிப் புருஷனைக் கைவிட்டாளாம்

ஒரு ஊரில் ஒரு உழவர் தம்பதிகள் வசித்து வந்தனர். அந்த உழவனின் மனைவி கணவன் கிழவனாகிவிட்டதால் எப்பொழுது பார்த்தாலும் எங்கோ மனமுடையவளாக இருந்தாள். ஒருபொழுதும் வீட்டில் நிம்மதியடையவில்லை. அவள் பரபுருஷனைப்பற்றியே எண்ணி வந்தாள்.

பிறகு பிறர் பொருளை அபகரிக்கும் ஒரு தூர்த்தன் இவளைப் பார்த்து, ‘’அழகியே, மனைவியை இழந்த நான் உன்னைப் பார்த்ததும் மன்மதனால் பீடிக்கப்பட்டுள்ளேன். அதனால் எனக்குப் போகத்தின் சுகம் முழுவதையும் கொடு’’ என்று சொன்னான்.

அப்பொழுது அவள், ‘’அழகனே, அவ்விதமெனில், என் கணவனிடம் நிறையப் பணமிருக்கிறது. அவன் கிழப்பருவத்தால் நடக்கக்கூடச் சக்தியற்று இருக்கிறான். அதனால் அதை எடுத்துக்கொண்டு வருகிறேன். உன்னுடன் வேறு எங்காவது சென்று சுகபோகத்தை அனுபவிக்கிறேன்.’’ என்றாள்.

‘’எனக்கும் அந்த யோசனை பிடித்தமாக இருக்கிறது. விடியற்காலை இந்த இடத்திற்குச் சீக்கிரமாக வரவேண்டும். ஏதாவது அழகிய பட்டினத்திற்குச் சென்று உன்னுடன் இந்த வாழ்க்கையைப் பயனுள்ளதாக்குகிறேன்’’ என்றான் அவன்.

அவளும் ‘’அப்படியே’’ என்று சத்தியம் செய்து சந்தோஷமான முகத்துடன் தன் வீட்டை அடைந்து இரவில் கணவன் தூங்கும் எல்லாப் பொருளையும் எடுத்துக்கொண்டு விடியும் சமயத்தில் குறிப்பிட்ட இடத்தை அடைந்தாள். தூர்த்தனும் அவளை முன்னால் போகச்சொல்லி தெற்குத் திசையை நோக்கிப் புறப்பட்டான். இவ்விதமே உற்சாகத்துடன் அவளுடன் பேச்சின் சுகத்தை அனுபவித்துக்கொண்டே இரண்டு யோஜனை தூரம் சென்றதும் முன்னே நதியைப் பார்த்துத் தூர்த்தன் சிந்தித்தான். ‘’நான் இந்த அரைக்கிழவியுடன் என்ன செய்வேன்? மேலும் ஒரு சமயம் இவளை யாராவது பின்தொடர்ந்து வந்தால் என்ன செய்வது? அதனால் எனக்குப் பெரிய அனர்த்தம்தான் ஏற்படும். இவளுடைய பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு செல்கிறேன்’’ என்று எண்ணினான்.

இவ்விதம் அவன் எண்ணி அவளிடம், ‘’அன்பே, இந்தப் பெரிய நதியைக் கடப்பது கஷ்டம். அதனால் பணத்தை மட்டும் மறுகரையில் வைத்து விட்டுத் திரும்புகிறேன். பிறகு உன்னைத் தனியாக என் முதுகில் ஏற்றிக் கொண்டு சுலபமாகக் கடந்துவிடுவேன்’’ என்றான். ‘’அன்பனே அவ்விதமே செய்’’ என்று பதிலளித்தாள் அவள்.

அவளிடமிருந்து பணத்தைக் கொஞ்சமும் மிச்சம் வைக்காமல் எடுத்துக் கொண்டு மறுபடியும், ‘’அன்பே, உன் புடவையையும், ரவிக்கையையும்கூடக் கொடுத்துவிடு. அதனால் நீ ஜலத்தின் நடுவில் கவலையின்றிச் செல்லலாம்’’ என்று சொன்னான். அவ்விதமே அவள் கொடுத்தபொழுது அந்தப் போக்கிரி பணத்தையும் இரண்டு வஸ்திரங்களையும் எடுத்துக்கொண்டு அவன் நினைத்து வைத்திருந்த இடத்திற்குச் சென்று விட்டான்.

அவளும் இரு கைகளையும் கழுத்தில் வைத்துக்கொண்டு துக்கத்துடன் நதியின் கரையில் உட்கார்ந்திருந்தாள். அப்பொழுது ஒரு பெண்நரி ஒரு மாமிசத்துண்டைக் கவ்விக்கொண்டு அங்கு வந்தது. வந்து பார்த்தபொழுது அந்த நதியின் கரையில் பெரிய மீன் ஜலத்தை விட்டு வெளியில் வந்திருப்பதைப் பார்த்தது. அதைப் பார்த்ததும் அது மாமிசத் துண்டை விட்டு விட்டு அந்த மீனை நோக்கிச் சென்றது. இதற்குள் ஆகாயத்திலிருந்து ஏதோ ஒரு கழுகு பாய்ந்து அந்த மாமிசத் துண்டை எடுத்துக்கொண்டு உயரப் பறந்தது. மீனும் பெண் நரியைப் பார்த்ததும் நதிக்குள் நுழைந்து கொண்டது. அப்பொழுது வீண் சிரமமடைந்த அந்தப் பெண் நரியையும் கழுகையும் பார்த்துக்கொண்டே அந்த நிர்வாண ஸ்திரீ சிரிப்புடன்,

கழுகால் மாமிசம் அபகரிக்கப்பட்டது. மீனோ ஜலத்தினுள் சென்றுவிட்டது. மீனையும் மாமிசத்தையும் இழந்துவிட்டு என்ன பார்க்கிறாய், பெண்நரியே? என்று சொன்னாள்.

அதைக்கேட்டு பெண் நரி அவளும் தன் கணவன், பொருள், காமுகன் யாவரையும் இழந்திருப்பதைப் பார்த்துப் பரிகாசத்துடன்,

‘’என் பாண்டித்தியத்தைப்போல உன்னுடையது இரண்டு மடங்கானது. உனக்குக் காதலன் கணவன் இருவருமில்லை. அம்மணமே ஜலத்தில் நிற்கிறாய், என்று சொல்லியது.
இவ்விதம் அதற்குக் கதை சொல்லிக்கொண்டிருக்கும்பொழுது வேறு ஒரு ஜல ஜந்து வந்து முதலையிடம், ‘’ஐயோ, உன்னுடைய வீட்டையும் வேறு ஒரு பெரிய முதலை பிடித்துக்கொண்டு விட்டது’’ என்று தெரிவித்தது. அதைக் கேட்டு முதலை மிகவும் துக்கமடைந்த மனதுடன் அதைத் தன் வீட்டிலிருந்து வெளியேற்றும் உபாயத்தைப் பற்றி எண்ணலாயிற்று.

‘’ஐயோ, விதியால் கொல்லப்படும் என்னைப் பார்! எவ்விதமெனில்,

நண்பன் நண்பனல்லாதவனானான். இரண்டாவது, என் மனைவி இறந்தாள். வீட்டிலும் வேறு ஒருவன் புகுந்து கொண்டான். இப்பொழுது வேறு என்ன ஏற்படப் போகிறது?

அல்லது இவ்விதம் சொல்வதில்தான் எவ்வளவு நியாயமிருக்கிறது:

‘தளர்ந்த இடத்தில் கஷ்டங்கள் அதிகமாகின்றன.’ அதனால் இவனுடன் கூடச் சண்டை செய்யட்டுமா? அல்லது சமாதானமாகச் சொல்லி வீட்டை விட்டு வெளியேற்றட்டுமா? அல்லது பேதமோ, தானமோ கையாளட்டுமா? அல்லது இந்த வானர நண்பனையே கேட்கிறேன். ஏனெனில்,

கேட்கத் தக்கவர்களையும், நன்மை செய்பவர்களையும், குருவையும், எவன் கலந்து காரியம் செய்கிறானோ அவனுக்கு எந்தவிதமான காரியத்திலும் ஒரு தடங்கலும் நேரிடாது.

என்று முதலை எண்ணி மறுபடியும் நாவல்மரத்தில் ஏறியுள்ள குரங்கைப் பார்த்து ‘’நண்பனே, என்னுடைய இந்த துரதிருஷ்டத்தைப் பார்! இப்பொழுது என் வீட்டைக்கூட வேறொரு பலமுள்ள முதலை அபகரித்துக் கொண்டிருக்கிறது. அதனால் நான் உன்னைக் கேட்கிறேன். நான் என்ன செய்யட்டும்? சொல். சாமம் முதலிய நான்கு உபாயங்களில் எந்த உபாயத்தை உபயோகிப்பது?’’ என்று கேட்டது.

‘’நன்றிகெட்டவனே, நான் தடுத்தும்கூட ஏன் என்னை மறுபடியும் தொடருகிறாய்? நான் முட்டாளாகிய உனக்கு உபதேசம் கூடத் தரமாட்டேன். எவ்விதமெனில்,

யோசனை சொல்லத் தகாதவர்களுக்கு யோசனைகள் கொடுக்கப் படாது. பார்! முட்டாள் குரங்கினால் அழகிய கூடு நாசமாக்கப் பட்டது.

என்றது குரங்கு

‘’அது எப்படி?’’ என்று முதலை கேட்க, குரங்கு சொல்லிற்று,

http://inthiya.com/?p=13455
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சதந்திரம் தொடர் 54 - அன்னபூர்னா ஈஸ்வரன்



முட்டாளுக்குச் செய்த உபதேசம்

‘’ஏதோ ஒரு காட்டில் மரக்கிளையில் கூட்டைக் கட்டிக்கொண்டு ஒரு பக்ஷ¢ தம்பதிகள் வசித்து வந்தன. ஒரு சமயம் தை மாதத்தில் காலமற்ற காலத்தில் பெய்த மழையில் நனைந்து இளம் காற்றினால் உடல் நடுங்கிய ஏதோ ஒரு குரங்கு அதே மரத்தடிக்கு வந்து சேர்ந்தது. பற்கள் வீணை வாசித்துக் கொண்டு, மிகவும் பரிதாபகரமாக கைகளையும் கால்களையும் ஒடுக்கிக்கொண்டு இருக்கும் அதனிடம் பெண் குருவி இரக்கத்துடன் சொல்லிற்று:

கால்களையும் கைகளையும் பார்த்தால் மனிதனுக்கு இருப்பது போலிருக்கிறது. குளிர் காற்றினாலடிக்கப்பட்டால், மூடனே, நீ ஏன் ஒரு வீடு கட்டிக் கொள்ளக்கூடாது?

அதுவும் அதைக் கேட்டு யோசித்தது.

‘’ஐயோ, தன்னிடம் திருப்தி அடைபவர்களேயன்றோ இந்த உலகம். இந்த அற்பப் பெண்குருவி கூடத் தன்னைத்தானே பெருமைப்படுத்திக் கொள்கிறது.

இவ்விதம் சொல்வது நியாயம்தான்:

தன்னால் உண்டு பண்ணப்பட்ட கர்வம் யாருக்குத்தானிருப்பதில்லை? கால்களை உயரத் தூக்கிக் குருவி ஆகாயம் விழும் என்ற பயத்தில் படுக்கிறது.

இவ்விதம் எண்ணிக் குரங்கு அதனிடம்,

“ஏ ஊசிமூஞ்சியே, நடத்தைக் கெட்டவளே, துப்புக் கெட்டவளே, பண்டிதை என்று நினைப்பவளே, பேசாமலிரு. இல்லையெனில் உன்னை விடற்றவளாகச் செய்துவிடுவேன்” என்றது.

இப்படி திட்டப்பட்டும் கூட பெண்குருவி திரும்பத் திரும்ப வீடு கட்டுவதைப் பற்றியே சொல்லிவந்தது. அப்பொழுது குரங்கு அந்த மரத்தின் மேல் ஏறி அதனுடைய கூட்டை துண்டு துண்டாகச் செய்து நாசமாக்கிற்று.

அதனால்தான் ‘யோசனை சொல்லத் தகாதவர்களுக்கு’ என்று நான் சொல்கிறேன் என்றது குரங்கு. அதைக்கேட்ட முதலை, ‘’நண்பனே நான் அபராதம் செய்தவனாக இருந்தும்கூட முன்பு நமக்குள் இருந்த நட்பை எண்ணிப் பார்த்து எனக்கு நல்ல உபதேசத்தைக் கொடு’’ என்றது.

‘’நான் உனக்குச் சொல்லமாட்டேன். மனைவியின் வார்த்தையைக் கேட்டு நீ என்னை சமுத்திரத்தில் எறிவதற்கு அழைத்துச் சென்றாய். உனக்கு மனைவி எவ்வளவு அன்பானவளானாலும் அதற்காக அவள் வார்த்தையைக் கேட்டு நண்பர்களையும் உறவினர்களையும் சமுத்திரத்தில் ஏன் எறிகின்றாய்?’’ என்றது குரங்கு.

அதைக்கேட்ட முதலை, ‘’அன்பனே, அது உண்மைதான். இருந்துங்கூட ‘நட்பு ஏழு வார்த்தையால் ஏற்படுகிறது’ என்பதை எண்ணி எனக்குக் கொஞ்சம் நல்லுபதேசம் செய். எவ்விதமெனில்,

நன்மையை விரும்பி மனிதர்களுக்கு உபதேசம் கொடுப்பவர்களை இவ்வுலகிலும் மறுவுலகிலும்கூட துக்கம் வந்தடையாது.

அதனால் எவ்விதத்தில் நான் தவறு செய்திருந்தாலும் எனக்கு உபதேசம் செய்து மன்னிப்புக் கொடு.
உபகாரம் செய்பவனுக்கு நன்மை செய்தால் அந்த நன்மையில் என்ன குணமுள்ளது? அபகாரம் செய்பவனுக்க்ய் நன்மை செய்தால் அந்த நன்மையை நல்லவர்கள் விரும்புகின்றனர்.

என்று சொல்லப்படுகிறது” என்றது முதலை.

அதைக்கேட்ட குரங்கு, “நண்பனே, அது உண்மைதான். இப்பொழுது நீ அங்கு சென்று அந்தப் பெரிய முதலையோடு சண்டை போடு. எவ்விதமெனில்,

அதிக பலசாலிகளை ஸாமத்தாலும் சமரஸத்தாலும், வீரனைப் பேதத்தாலும், நீசனை அற்ப தானத்தாலும் சமசக்தியுள்ளவனை தண்டத்தாலும் வெல்.

என்றது குரங்கு. ‘’அது எப்படி?’’ என்று முதலை கேட்க, குரங்கு சொல்லிற்று:

ஆளுக்குத் தக்கபடி நட

ஒரு காட்டின் ஒரு பாகத்தில் மஹாசதுரகன் என்ற நரி இருந்தது. அது ஒரு சமயம் காட்டில் ஒரு செத்த யானையைப் பார்த்தது. ஆனால் அதனருகில் சுற்றியதே தவிர அதன் கடினமான தோலை அதனால் கிழிக்க முடியவில்லை.

அப்பொழுது அந்தச் சமயத்தில் இங்கும் அங்கும் சுற்றிக் கொண்டு ஒரு சிங்கம் அதே இடத்திற்கு வந்து சேர்ந்தது. சிங்கத்தைப் பார்த்து நரி பூமியில் தலை தொடும்வரை குனிந்து நமஸ்கரித்து தாமரை போன்ற கைகளைக் கூப்பிக் கொண்டு வணக்கத்துடன், ‘’ஸ்வாமி, நான் உங்களுடைய கோலேந்துபவன். உங்களுக்காகவே இந்தத யானையைக் காக்கிறேன். அதனால் இதை எஜமானர் சாப்பிடட்டும்’’ என்றது. அதற்குச் சிங்கம், ‘நான் பிறர் கொன்றதை ஒரு பொழுதும் சாப்பிடமாட்டேன். அதனால் உனக்கே இந்த யானையை நான் அளிக்கிறேன்’’ என்றது. அதைக் கேட்ட நரி சந்தோஷத்துடன், ‘’தங்கள் வேலையாட்களிடம் இவ்விதம் செய்தது சரியானதே’’ என்றது.

பிறகு சிங்கம் சென்றவுடன் ஒரு புலி வந்தது. அதைப் பார்த்ததும் நரி நிலைத்தது. ‘’ஒரு போக்கிரியை வணங்கி ஒதுக்கி விட்டேன். இப்பொழுது இதை எப்படி ஒதுக்குவது? நிச்சயம் இது ஒரு வீரன்தான். அதனால் பேதம் செய்தாலன்றி காரியசித்தியாகாது.

எங்கு சாமமும் தானமும் நடவாதோ அங்கு பேதம் செய்து வசப்படுத்து.

என்று சொல்லப்படுகிறது. மேலும் எல்லோரும் பேதத்திற்குக் கட்டுப்படுகின்றனர்.

வழவழப்பானதும், கடினமானதும் உருண்டையானதும், அழகானது மான முத்தைக்கூட அதன் ஹிருதயத்தைத் துளைக்கத் தெரிந்தால் நூலினால் கட்டலாம்.

என்று சொல்லப்படுகிறது’’ என்று எண்ணிற்று. இவ்விதமே தீர்மானித்து அதன் எதிரில் போய் சிறிது குரலைக் கரகரத்துக்கொண்டு பரபரப்புடன் சொல்லிற்று: ‘’மாமா, ஏன் நீ மரணத்தின் வாயிலில் நுழைந்திருக்கிறாய்? இந்த யானையை சிங்கம் கொன்றிருக்கிறது. என்னை இதற்குக் காலாக நியமித்து, ஸ்னானம் செய்வதற்தாகச் சென்றிருக்கிறது. அது போகும்பொழுது ‘இங்கு ஏதாவது புலி வந்தால் நீ ரகசியமாக எனக்குத் தெரிவிக்க வேண்டும். இந்தக் காட்டை நான் புலிகள் அற்றதாகச் செய்யவேண்டும். ஏனெனில் முன்பு நான் கொன்ற யானையை ஒரு புலி சாப்பிட்டு எச்சிலாக்கிவிட்டது. அந்தத நாளிலிருந்து ஆரம்பித்து புலிகளின் பேரில் கோபமாக இருக்கிறேன்’ என்று சொல்லிற்று’’

என்றது.

அதைக் கேட்டு நடுங்கிய புலி அதனிடம், ‘’மருமகனே, எனக்கு உயிர்ப்பிச்சை கொடு. அது இங்கு நேரம் கழித்து வந்தாலும் என்னைப் பற்றிய சமாசாரத்தை நீ அதனிடம் சொல்லாதே’’ என்று சொல்லி வேகமாக ஓட்டம் பிடித்தது.

பிறகு புலி சென்றபின் அங்கு ஒரு சிறுத்தை வந்தது. அதையும் பார்த்து நரி யோசித்தது. ‘’இந்தச் சிறுத்தையோ திடமான பல்லையுடையது. அதனால் இதனாலேயே இந்த யானையின் தோலைக் கிழிக்க வைக்கிறேன்.’’ இவ்விதம் தீர்மானித்து அதனிடம், ‘’ஏ சகோதரி மகனே, ஏன் உங்களைப் பார்த்து வெகுகாலமாயிற்று? என்ன, பசியாக இருப்பவன்போலக் காணப்படுகிறாய்? அதனால் என்னுடைய விருந்தாளியாக இரு.

‘’சமயத்தில் வருபவனே விருந்தாளி.’’

என்று சொல்லப்படுகிறது. இந்த யானையைச் சிங்கம் கொன்றிருக்கிறது. நானும் அதன் கட்டளையின் பேரில் இதைக் காவல் காத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் அது வருவதற்கு முன்பு இந்த யானையினுடைய மாமிசத்தைச் சாப்பிட்டுத் திருப்தி அடைந்து சீக்கிரம் போய்விடு’’ என்றது நரி.

‘’மாமா, அவ்விதமெனில், எனக்கு இந்த மாமிசம் பிரயோசனமில்லை.

‘’வாழ விரும்புபவன் நூறு நண்பர்களைப் பார்க்கிறான்.’’ என்று சொல்லப் படுகிறது. அதனால் எது ஜீரணமாகுமோ, அதைத்தான் சாப்பிட வேண்டும். அதனால் நான் இங்கிருந்து செல்கிறேன்.’’

என்றது சிறுத்தை.

நரி சொல்லிற்று: ‘’ஏ தைரியமற்றவனே, நிம்மதியாக இருந்து சாப்பிடு. சிங்கம் தூரத்தில் வரும்பொழுது உனக்கு நான் தெரிவிக்கிறேன்’’ என்றது. பிறகு சிறுத்தையும் அவ்விதமே செய்தது. அது தோலைக் கிழித்துவிட்டது என்று அறிந்ததும் நரி ‘’ஏ மருமகனே, போய்விடு போய்விடு! அந்தச் சிங்கம் வருகிறது’’ அதைக் கேட்டு சிறுத்தை வெகுதூரம் ஓடிவிட்டது.

பிறகு எப்பொழுது அது சிறுத்தை செய்த துவாரத்தின் மூலம் சாப்பிட ஆரம்பித்ததோ அப்பொழுது மிகவும் கோபத்துடன் வேறு ஒரு நரி வந்து சேர்ந்தது. அதனைத் தனக்குச் சமமான பராக்கிரமம் உடையது என்று பார்த்து, ‘’அதிக பலசாலிகளை சாமத்தாலும்…’’ என்ற செய்யுளைச் சொல்லிக்கொண்டே அதை எதிர்த்துச் சென்று நன் பற்களால் அதைக் கிழித்துத் திக்குகளில் விட்டெறிந்து தான் மட்டும் சுகமாக வெகுகாலம் யானையின் மாமிசத்தைச் சாப்பிட்டது.

அவ்விதமே நீயும் உன் ஜாதியைச் சேர்ந்த சத்துருவை யுத்தத்தால் ஜயித்து திக்குகளுக்கு ஓட்டு. இல்லையெனில் பிறகு அவன் நன்றாக வேரூன்றி உனக்கே நாசத்தை உண்டு பண்ணுவான். எவ்விதமெனில்,

மாடுகளிடமிருந்து ஆகாரத்தையும் பிராமணனிடமிருந்து தவத்தையும் ஸ்திரீகளிடமிருந்து சபலத்தையும் சுயஜாதியினரிடமிருந்து பயத்தையும் எதிர்பார்!

விதவிதமான ஆகாரமும் சுலபமாகப் பெண்களும் கிடைக்கும். ஆனால் பரதேசத்தின் ஒரே தோஷம் சொந்த மனிதர்களே சத்துரு ஆவார்கள்.

என்றும் சொல்லப்படுகிறது’’ என்றது குரங்கு.

‘’அது எப்படி?’’ என்று முதலை கேட்க, குரங்கு சொல்ல

தாய்நாடே திருநாடு

ஒரு பட்டினத்தில் சித்திராங்கன் என்ற நாய் இருந்தது. அங்கு வெகுகாலமாகப் பஞ்சம் ஏற்பட்டது. ஆகாரமில்லாததால் நாய் முதலியவை தங்கள் குடும்பத்தை விட்டுச் செல்ல ஆரம்பித்தன. சித்திராங்கனும் பசியால் தொண்டை வறண்டுபோய் அந்தப் பயத்திலேயே வேறு தேசத்திற்குச் சென்றது. அங்கு ஏதோ ஒரு பட்டினத்தில் ஏதோ ஒரு வீட்டுக்காரி வீட்டைச் சரியாகக் கவனியாததால் தினந்தோறும் அவள் வீட்டில் நுழைந்து அன்னம் முதல் பலவிதமான ஆகாரங்களைச் சாப்பிட்டுப் பரமதிருப்தியடைந்தது. ஆனால் அந்த வீட்டிலிருந்து நாய் வெளிவந்தவுடன் மற்ற கர்வமுள்ள நாய்கள் எல்லா திக்கிலிருந்தும் வந்து அதன் எல்லா அங்கங்களையும் பற்களால் கிழித்தன. அப்பொழுது அது எண்ணிற்று: ‘’சொந்த நாடே உசிதமானது. அங்கு பஞ்சம் இருந்தாலும் சுகமாக இருக்க முடியும். அங்கு ஒருவரும் சண்டை செய்ய மாட்டார்கள். அதனால் என் ஊருக்குத் திரும்புவது உத்தமம்’’ என்று. இவ்விதம் திர்மானித்து அது தன் ஊரை நோக்கித் திரும்பியது.

பிறகு தேசாந்திரம் சென்று திரும்பிய அதை அதன் உறவினர்கள் ‘’ஏய் எப்படிப்பட்ட தேசம்? ஜனங்கள் எப்படி நடந்து கொள்கின்றனர்? என்ன ஆகாரம்? அவர்கள் பழக்க வழக்கமென்ன? என்பதையெல்லாம் சொல்’’ என்று கேட்டனர்.

அது பதிலளித்தது: ‘’அந்த தேசத்தைப் பற்றி என்ன சொல்வேன்?

விதவிதமான ஆகாரமும் சுலபமாகப் பெண்களும் கிடைக்கும். ஆனால் பரதேசத்தின் ஒரே தோஷம் சொந்த மனிதர்களே சத்துரு ஆவார்கள்.

என்று முடித்தது குரங்கு.

முதலை அந்த உபதேசத்தைக் கேட்டு இறப்பதற்குத் தீர்மானித்துக் கொண்டு குரங்கினிடம் உத்தரவு பெற்றுக்கொண்டு தன் வீட்டை அடைந்தது. தன் வீட்டில் நுழைந்த துஷ்டனுடன் சண்டைசெய்து திடமான சித்தத்துடனும் பலத்துடனும் அதைக் கொன்று, தன் இருப்பிடத்தைத் திரும்பியடைந்து சுகமாக வெகுகாலம் வசித்தது.

வீரத்தைக் காட்டாமல் சோம்பலால் அடைந்த தனத்தால் என்ன பயன்? மான்கூட தெய்வம் கொடுத்த புல்லைச் சாப்பிடுகிறது.

என்றொரு பழமொழி உண்டு.

அடைந்ததை அழித்தல் என்ற நான்காவது தந்திரம் இங்கு முடிவடைகிறது. அதன் முதல் செய்யுள் பின்வருமாறு:

கிடைத்த பொருளை முட்டாள்தனத்தினால் இழக்கிறவன் துயரப்பட்ட வேண்டியதுதான். மூட முதலையைக் குரங்கு வஞ்சித்தது.

ஐந்து

கவனமற்ற செய்கை

இங்கே கவனமற்ற செய்கை என்ற பெயருடைய ஐந்தாவது தந்திரம் ஆரம்பமாகிறது.

அதன் முதல் செய்யுள் பின்வருமாறு:

நன்கு பார்க்காமலும் நன்கு அறியாமலும் நன்கு
செய்யாமலும் நன்கு சோதிக்காமலும் நாவிதன்
செய்ததுபோல் ஒருவனும் செய்யக்கூடாது.

அரசகுமாரர்கள் ‘’அது எப்படி?’’ என்று கேட்க, விஷ்ணுசர்மன் சொல்லத் தொடங்கினார்:

தெற்குப் பிரதேசத்தில் பாடலிபுத்திரம் என்ற நகரமிருக்கிறது. அங்கு மாணிபத்ரன் என்ற வியாபாரி வசித்து வந்தான். அவன் தர்மம், அதர்மம், காமம், மோக்ஷம் இவை நான்கையும் செய்தும், விதிவசத்தால் அவனுக்கு தன நாசம் ஏற்பட்டது. பணநாசத்தால் அநேக அவமானங்கள் ஒன்றிற்கு மேலொன்றாக ஏற்பட்டதால் மிகுந்த கவலையடைந்து இரவில் யோசனை செய்தான். ‘’சீ, என்ன தரித்திர நிலை இது! எவ்விதமெனில்,

குணம், சுத்தம், பொறுமை, இரக்கம், அன்பு, குலம் – இவை யாவும் பணமற்ற புருஷனிடம் சோபிப்பதில்லை. மானம், தன்மதிப்பு, அறிவு, நல்லபுத்தி, கர்வம், இவை யாவும் மனிதனுக்குப் பணம் போனவுடன் உடனே நாசத்தையடைகின்றன.
எப்பொழுதும் குடும்பத்தை வகிக்கும் கவலையால் புத்திமான் களுடைய புத்தி-கூட வசந்தகாலக் காற்றினால் அடிக்கப்பட்ட குளிர்காலம் போல் தினந் தோறும் க்ஷ£ணமடைகிறது.

எப்பொழுதும், நெய், உப்பு, எண்ணெய், அரிசி, துணி, விறகு என்ற கவலையால் கூர்மையான புத்தியிருப்பவனுக்குக்கூட தனநாசம் ஏற்பட்டால் புத்தியும் நசிக்கிறது.

ஜலத்தில் நீர்க் குமிழிகள் எப்பொழுதும் ஏற்பட்டும் உடைவதும் போல் தனமற்ற இளைத்த புருஷர்கள் அண்டை அயலிலிருந்தாலும் சோபிப்பதில்லை.

பணக்காரர்கள் எதைச் செய்தாலும் எல்லாம் வெட்கப்படத் தக்கதானாலும் ஜனங்கள் அதை விரசமென்று சிரிப்பதில்லை. சமுத்திரம் கர்ஜித்தாலும் அதை யாரும் நிந்திப்பதில்லை.’’

இவ்விதமாக எண்ணி மறுபடியும் சிந்தித்தான். ‘’அதனால் நான் உபவாசமிருந்து உயிரை விடட்டுமா? பின் இந்தப் பணமற்ற வாழ்வால் ஏற்படும் துக்கத்தால் என்ன பயன்?’’ இவ்விதமே தீர்மானித்துத் தூங்கினான்.

அன்று அவன் கனவில் பத்மநிதி ஜைன சந்நியாசி உருவத்தில் பிரத்யக்ஷமாகி, ‘’ஏ வியாபாரியே, நீ இப்படி விரக்தியடையாதே. நான்தான் பத்மநிதி. உன்னுடைய முன்னோர்களால் சேர்க்கப்பட்டவன். அதனால் இந்த உருவத்திலேயே காலையில் உன்னுடைய வீட்டை வந்தடைவேன். அப்பொழுது நீ என் தலையில் கட்டையால் அடித்துக் கொல்லவேண்டும். அதன்மூலம் நான் தங்கமயமாகக் குறையாத தனம் ஆவேன்’’ என்றது.

பிறகு காலையில் விழித்த அவன் அந்தக் கனவைப் பற்றி எண்ணிக் கொண்டிருந்தான். ‘’ஐயோ, இது கனவன்றோ! உண்மையாகவும் ஆகலாம், பொய்யாகவும் ஆகலாம். எனக்கு அது தெரியாது. நிச்சயம் இது பொய்யாகத்தான் ஆகவேண்டும். ஏனெனில், நான் இரவும் பகலும் எப்பொழுதும் பணத்தைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

வியாதியஸ்தனுக்கும் துக்கமுள்ளவனுக்கும் கவலையுள்ளவனுக்கும் காதலுள்ளவனுக்கும் குடிகாரனுக்கும் மதமுள்ளவனுக்கும் பலனற்ற கனவுகள் தோன்றுகின்றன.

என்று சொல்லப்படுகிறது.

இந்தச் சமயத்தில் அவனுடைய மனைவியின் நகங்களைச் சுத்தம் செய்வதற்காக ஒரு நாவிதன் வந்தான். அவன் நகத்தைச் சுத்தம் செய்யும் வேலையைச் செய்யும்பொழுது ஜைன சந்நியாசி திடீரென்று தோன்றினார். அப்பொழுது மாணிபத்ரன் அவரைப் பார்த்துச் சந்தோஷமடைந்த மனதுடன், அருகிலுள்ள ஒரு மரக்கட்டையால் சந்நியாசியின் தலையில் அடித்தான் அவரும் தங்கமயமாக ஆகி அந்தக்கணமே பூமியில் விழுந்தார்.

உடனே வணிகன் அவரை வீட்டின் நடுவில் நிலைநிறுத்தி நாவிதனைச் சந்தோஷப்படுத்திச் சொன்னான்: ‘’நண்பனே, என் வீட்டில் நடந்ததை நீ ஒருவருக்கும் சொல்லக்கூடாது’’ என்று. நாவிதனும் அந்தச் சொல்லை ஏற்றுக்கொண்டு வீட்டிற்குச் சென்று யோசனை செய்தான். ‘’நிச்சயம் இந்த நிர்வாண சந்நியாசிகள் யாவரும் தலையில் கட்டையால் தட்டிக் கொல்லப்பட்டால் தங்கமயமாக ஆவார்கள். அதனால் நானும்கூட காலையில் அவர்களில் அநேகரை வரவழைத்து கட்டையால் அடித்துக்கொல்கிறேன். அதனால் நிறையத் தங்கம் கிடைக்கும்’’ என்று இவ்விதம் எண்ணிய அவனுக்குப் பகலும் இரவும் எவ்விதமோ நகர்ந்து சென்றது.

பிறகு காலையில் எழுந்து ஜைன விஹாரத்திற்குச் சென்று உத்தரீயத்தை இடுப்பில் கட்டி ஜைன சந்நியாசியை மூன்று முறை பிரதக்ஷ¢ணம் பண்ணி முழங்கால்களால் பூமியைத் தொட்டு நமஸ்கரித்து, வாயை உத்தரீயத்தின் நுனியால் பொத்திக்கொண்டு கைகளைக் கூப்பிக்கொண்டு, உச்சஸ்தாயியில் இந்தச் செய்யுளைச் சொன்னான்:

மனதைப் பாவங்கள் செய்யாமல் உள்ளுறவே பரிசுத்தப்படுத்தி எவர்கள் ஞானசாலிகளாயிருக்கிறார்களோ அந்த ஜைனர்களே ஜெயிக்கின்றனர்.

எந்த நாக்கு ஜைனனைப் புகழ்கிறதோ, எந்த மனது அவரிடம் ஈடுபடுகிறதோ, எந்தக்கை அவருக்குப் பூஜை செய்கிறதோ அவை மட்டும் புகழத்தக்கவை.

இப்படிப்பட்ட வேறு பல செய்யுள்களால் பலவிதமாகப் புகழ்ந்து, பிறகு முக்கிய ஜைன பிக்ஷ¤வை அடைந்து கைகளும் முழங்கால்களும் பூமியில் பட நமஸ்கரித்து, ‘நமஸ்காரம், நமஸ்கரிக்கிறேன்’’ என்று சொல்லி, அவரிடமிருந்து தர்மத்தை அதிகரிக்க ஆசீர்வாதமும், பிரம்மசரியத்தை அனுஷ்டிக்கும் விரதத்திற்கு உபதேசமும் பெற்றான். பிறகு மிக்க வினயத்துடன் ‘’பகவானே, இன்று நடக்கும்பொழுது எல்லா முனி ஜனங்களுடன் என் வீட்டிற்கு வர வேண்டும்’’ என்று வேண்டிக்கொண்டான்.

பிக்ஷ¤ சொன்னார்: ‘’ஏ சிஷ்யனே, தர்மத்தை அறிந்துங்கூட ஏன் இப்படிப் பேசுகிறாய்? நாங்கள் என்ன பிராமணர்களா எங்களை அழைக்க? ஏனெனில் நாங்கள் எப்பொழுதும் அந்தச் சமயத்தில் தோன்றியபடி சுற்றிவந்து பக்தியுடன் கூட சிஷ்யனைப் பார்த்து அவன் வீட்டிற்குச் செல்வோம். அதனால் சென்றுவிடு. மறுபடியும் இவ்விதம் சொல்லாதே’’ என்று.

இதைக் கேட்டு நாவிதன் ‘’பகவானே, நான் அறிவேன். அவ்விதமே செய்கிறேன். ஆனால் உங்களுக்கு அநேக சிஷ்யர்கள் சன் மார்க்கத்தில் இருக்கின்றனர். நானோ புத்தகங்களைச் சுற்றிவைக்கத்தக்க தோல் பைகள் தயார் செய்திருக்கிறேன். மேலும் புத்தகங்களை எழுதுவதற்கு எழுதுபவனுக்குக் கூலியும் கொடுக்கப்படும். அதனால் நீங்கள் உசிதமானதைச் செய்யுங்கள். ‘’இவ்விதம் சொல்லி நாவிதன் தன் வீட்டை நோக்கிப் புறப்பட்டான்.

அங்கு சென்ற இலவமரத்தாலான தடிகளைப் தயார் செய்து, கதவுகளுக்குப் பின்பு மூலையில் அவைகளை வைத்து, உச்சி சமயத்தில் மறுபடியும் விஹாரத்தின் வாயிலை அடைந்து நின்றான். அப்பொழுது எல்லோரும் வரிசைப்படி வெளிவருபவர்களை குருவாகப் பாவித்து பிரார்த்தித்துத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். அவர்கள் யாவரும் பையும் பணமும் கிடைக்கும். ஆகையால் மிகவும் பக்தியுள்ளவர்களான மற்ற சிஷ்யர்களைக்கூட விட்டுவிட்டு சந்தோஷத்துடன் நாவிதன் பின்பு சென்றனர். இவ்விதம் சரியாகத்தான் சொல்லப்படுகிறது.:

ஆவலைப்பார்! தனியனாகவும், வீட்டைத் திரஸ்கரித்தவனாகவும் கையே பாத்திரமாகவும், திக்குகளே வஸ்திரமாகவும் உள்ளவன்கூட பேராசையால் உலகில் கட்டுப்படுத்தப்படுகிறான்.

பிறகு நாவிதனும் வீட்டின் நடுவில் அவர்களை நுழைவித்து கட்டையால் அடித்தான். அவர்களில் அடிப்பட்டுச் சிலர் இறந்தனர். சிலர் மண்டை உடைந்து கத்துவதற்கு ஆரம்பித்தனர். இதன் மத்தியில் அவர்கள் கத்தும் சப்தத்தைக் கேட்டு ஊரைக்காக்கும் காவலாளிகள், ‘’ஏய், ஊருக்கு நடுவில் இது என்ன பெரிய அமர்க்களம்? வாருங்கள், வாருங்கள்’’ என்று சொல்லிக் கொண்டே அவர்கள் யாவரும் வேகமாகச் சென்று பார்த்தபொழுது அங்கு ஜைன பிக்ஷ¤க்கள் ரத்தத்தினால் நனைந்த உடம்புடன் நாவிதனின் வீட்டிலிருந்து ஓடுகிறதைப் பார்த்தனர். அவர்கள், ‘’இது என்ன?’’ என்று கேட்டனர்.

அவர்கள் நாவிதனின் விஷயம் முழுவதையும் நடந்தபடி சொன்னார்கள். அவர்களும் நாவிதனை பலமாகக் கட்டி, கொல்லப்பட்டவர்கள் போக மற்ற பிக்ஷ¤க்களுடன் நீதிஸ்தலத்திற்கு அழைத்துச் சென்றார்கள். ‘’இது என்ன நீ இப்படி துஷ்டக் காரியத்தைச் செய்தாய்?’’ என்று நாவிதனைக் கேட்டார்கள். அவன் பதிலளித்தாள்: ‘’பெரியவர்களே, என்ன செய்வேன்?’’ என்று கூறி, அவர்களுக்கு மாணிபத்ரனின் விஷயம் முழுவதையும் சொன்னான்.

அவர்கள் மாணிபத்ரனை அழைத்துவரச் சிலரை அனுப்பினர். அவர்களும் சென்று மணிபத்ரனை அழைத்துவந்தனர். நியாயாதிபதிகள் ‘’ஏ, குணவானே, நீ யாராவது பிக்ஷ¤வைக் கொன்றாயா?’’ என்று கேட்டனர். அப்பொழுது அவன் ஜைன பிக்ஷ¤வின் வரலாறு முழுவதையும் சொன்னான். அதற்கு அவர்கள் ‘’ஆஹா, நன்கு சோதிக்காமல் காரியம் செய்த இந்த துராத்மாவான நாவிதனைக் கழுவில் ஏற்றுங்கள்’’ என்று உத்தரவிட்டனர். அவ்விதமே செய்தபொழுது அவர்கள் சொன்னார்கள்:

நன்கு செய்யாமலும் நன்கு அறியாமலும் நன்கு கேட்காமலும் நன்கு சோதிக்காமலும் நாவிதன் செய்ததுபோல் ஒருவனும் செய்யக்கூடாது.

அல்லது, இவ்விதம் சரியாகத்தான் சொல்லப்படுகிறது.

நன்கு சோதிக்காமல் காரியம் செய்யாதே! செய்வதை நக்கு பரீக்ஷ¢த்துச் செய்! இன்றேல், பிறகு வருத்தம் ஏற்படும் – பிராம்மண ஸ்திரீயும், கீரியும் போல,

மாணிபத்ரன், ‘’அது எப்படி?’’ என்று கேட்க அவர்கள் சொன்னார்

தீர விசாரியாமல் ஒன்று செய்யாதே

ஏதோ ஒரு ஊரில் தேவசர்மா என்ற பிராம்மணன் இருந்தான். அவனுடைய மனைவி ஒரு புத்திரனையும் ஒரு கீரியையும் பிரசவித்தாள். பிறகு அவள் பிள்ளைப் பாசத்தால் பிள்ளைபோலவே கீரிக்கும் தன் பால், எண்ணெய் ஸ்நானம் முதலியவைகள் கொடுத்துப் போஷித்து வந்தாள். ஆனால் ‘’இது துஷ்ட ஜாதியாதலால் ஒருசமயம் பிள்ளைக்கு ஏதாவது கெடுதல் செய்யலாம்’’ என்று கீரியை அவள் நம்புவதில்லை. அல்லது இப்படிச் சரியாகத்தான் சொல்லப்படுகிறது:

கெட்ட நடத்தையுள்ளவன், குரூபி, முட்டாள், துக்கம் உண்டு பண்ணுபவன், போக்கிரியும் ஆனகெட்ட பிள்ளைகள் கூட மனதிற்குச் சந்தோஷத்தை உண்டுபண்ணுகின்றனர்.

அவள் ஒரு சமயம் பிள்ளையைப் படுக்கையில் பத்திரமாகப் போட்டு குடத்தை எடுத்துக்கொண்டு கணவனிடம் சொன்னாள்: ‘’ஏ உபாத்தியாயரே, நான் ஜலம் கொண்டு வருவதற்காகப் போகிறேன். இந்தப் பிள்ளையைக் கீரியிடமிருந்து காப்பாற்ற வேண்டும்’’ என்று. மனைவி சென்றவுடன் பிராமணனும் வீட்டைக் காலியாக விட்டுத் தானும் பிச்சை எடுப்பதற்காக எங்கேயோ சென்றான்.

இந்தச் சமயத்தில் கருநாகம் ஒன்று ஒரு துவாரத்திலிருந்து வெளிவந்து விதிவசத்தால் அந்தக் குழந்தையின் தொட்டிலுக்கு அருகில் ஊர்ந்து சென்றது. அப்பொழுது கீரி அதைத் தன் இயற்கைச் சத்துருவாக எண்ணி, தன் சகோதரனைக் கொன்றுவிடும் என்ற பயத்தால் நடுவழியிலேயே எதிர்த்து, கெட்ட பாம்புடன் சண்டை செய்து அதைத் துண்டு துண்டாகச் செய்து வெகு தூரத்தில் எறிந்தது. பிறகு தன் பராக்கிரமத்தில் சந்தோஷமடைந்து, ரத்தம் சொட்டும் வாயுடன் தன் வீரச்செயலைக் காட்டிக்கொள்வதற்காக தாயை நோக்கிச் சென்றது. தாயும் ரத்தம் வழியும் வாயுடன் பரபரப்புடன் ஓடிவரும் அதைப் பார்த்து, ‘’நிச்சயம் இந்த துராத்மா என் மகனைத் தின்றுவிட்டது’’ என்று பயந்த மனத்துடன் கோபத்தினால் யோசியாமல் அதன்மேல் ஜலம் நிரம்பிய குடத்தை எறிந்தாள். குடம் விழுந்த மாத்திரத்திலேயே உயிரை இழந்த அந்தக் கீரியை அங்கே கவனிக்காமல் விட்டுவிட்டு அவள் வீட்டிற்கு வந்த பொழுது அங்கு குழுந்தை அவள் விட்டுச் சென்றபடியே இருந்தது. தொட்டிலுக்கு அருகில் ஒரு பெரிய கருநாகம் துண்டு துண்டாகச் செய்யப் பட்டிருப்பதைப் பார்த்தாள். பிறகு உபகாரம் செய்த கீரிப்பிள்ளையை யோசியாமல் கொன்ற துக்கத்தினால் அவள் வருந்திய மனதுடன், தன் தலையிலும் மார்பிலும் அடித்துக்கொண்டாள்.

இந்தச் சமயத்தில் பிராமணனும் சுற்றிவிட்டு எங்கிருந்தோ வாங்கிய பிச்சையுடன் வந்தபொழுது புத்திர சோகத்தினால் பீடிக்கப்பட்ட மனைவி அழுவதைப் பார்த்தான். ‘’பேராசை பிடித்தவனே நீ என் வார்த்தைபடி செய்யாததால் இப்பொழுது உன் கெட்ட காரியமாகிற மரத்தின் பிள்ளையின் சாவு என்ற பலத்தை அனுபவி, அல்லது இது மிகுந்த பேராசையால் குருடர்களுக்கு ஏற்படத்தான் செய்யும். எவ்விதமெனில்,

அதிக ஆசை இருக்கக்கூடாது. ஆசையை விடவும் கூடாது. அதிக ஆசைகொண்டவனின் தலையில் சக்கரம் சுற்றுகிறது.

என்றாள் அவள்.

பிராமணன் ‘’அது எப்படி?’’ என்று கேட்க, மனைவி சொன்னாள்:

http://inthiya.com/?p=13607

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சதந்திரம் தொடர் 55 - புதையலைத் தேடிய நான்கு பிராம்மணர்கள்
அன்னபூர்னா ஈஸ்வரன்


இப்பூவுலகில் ஒரு ஊரில் நான்கு பிராம்மணர்கள் பரஸ்பரம் திடமான நட்புடன் வசித்து வந்தனர். அவர்களும் மிகுந்த தரித்திரத்தால் பீடிக்கப்பட்டுத் தங்களுக்குள் யோசித்தனர். ‘’என்ன வறுமை இது?’’

நியாயமும் பராக்கிரமும் உள்ளவனானாலும் எந்த மனிதனிடம் தனம் என்பதில்லையோ அவனை, நன்கு பணிவிடை செய்தாலும் எஜமானர் வெறுக்கிறார். நல்ல உறவினர்கள் அவனை உடனே விட்டுவிடுகின்றனர், அவனுடைய குணங்கள் கோபிப்பதில்லை. குழந்தைகளும் அவனை திரஸ்கரிக்கின்றனர், ஆபத்துகள் அதிகமாகின்றன. உயர்குலத்தவளானாலும் மனைவி அவனைக் கவனிப்பதில்லை. நண்பர்களும் அணுகுவதில்லை.

வீரமும், அழகும், வசீகரமும், வாக்குவன்மையும், எல்லா சாஸ்திர ஞானமும், பணமில்லாவிடில் இந்த மானிட உலகில் வீணாகின்றன.

என்று சொல்லப்படுகிறது.

வறுமையைவிட மரணமே சிரேஷ்டம். பணமற்ற ஏழை சுடுகாட்டிற்குச் சென்று இறந்த சவத்திடம் இவ்விதம் சொன்னான்: ‘’தோழா, ஒரு கணப்பொழுது எழுந்து என்னுடைய இந்த தரித்திர பாவத்தைச் சுமந்துகொள். வெகுகாலமாக நான் களைப்படைந்துள்ளேன். அதனால் உன்னுடைய சுகமான மரண நிலையை அடைகிறேன்’’ என்று, ‘’தரித்திரத்தைவிட மரணமே சுகம்’’ என்று அறிந்து சவம் பேசாமலிருந்தது.

என்று சொல்லப்படுகிறது. அதனால் எவ்விதமாகிலும் பணத்தைச் சம்பாதிக்க முயலவேண்டும்.

பணத்தினால் நடக்காத காரியம் ஒன்றுகூட இவ்வுலகில் இல்லை. அதனால் அறிவாளி முயற்சித்துப் பணத்தை நன்கு சேர்க்க வேண்டும்.

என்று சொல்லப்படுகிறது.

அந்தப் பணம் மனிதனுக்கு ஆறு உபாயங்களால் ஏற்படுகின்றது. அது எவ்விதமெனில், 1. பிச்சை எடுப்பது, 2. அரசனை சேவிப்பது, 3. வயலில் வேலை செய்வது, 4. கல்வி போதிப்பது, 5. லேவாதேவி, 6. வியாபாரம். மேலும் அவைகள் யாவற்றிலும் வியாபாரத்திலேயே தடங்கலற்ற பணலாபம் ஏற்படும்.

அறிவாளிகள் பிச்சையெடுப்பதை வெறுக்கின்றனர். அரசனுடைய மனதோ சஞ்சலமானது. வயலில் வேலை செய்வதோ அதிகக் கடினம். கல்வி போதிப்பதோ குருவிடம் படியச் செய்வதால் கஷ்டமானது. தன்னுடைய தனம் பிறரிடம் செல்வதால் லேவாதேவி தரித்திரமே, ஆஹா, வியாபாரத்தைப்போல இன்பத்துடன் பணம் சேர்ப்பது வேறில்லை.

என்று சொல்லப்படுகிறது.

இந்த வாணிபத்திலும் ஏழுவிதமாகப் பணம் சேர்க்க வழியுண்டு. அவை என்னவெனில், 1. தவறான தராசும், எடைக்கல்லும், 2. பொய்விலை சொல்லுதல், 3. அடமானம் வாங்குவது, 4. வாடிக்கை பிடிப்பது, 5. கூட்டு வியாபாரம், 6. வாசனைத் திரவிய வியாபாரம் 7. வெளிநாட்டுடன் வியாபாரம்.

தவறான தராசு எடைக்கல்லாலும், பொய்யா விலை சொல்லுதலாலும் பரிச்சயமானவர்களை வஞ்சிப்பது இயற்கையாகவே நீசனுக்குத் தக்கது.

அடமானங்கள் வீட்டிற்கு வந்தால் வியாபாரி தினம் கடவுளிடம் வேண்டுகிறான். அடகு வைத்தவன் இறந்துபோனால் நீ கேட்டதை நான் அளிப்பேன் சுவாமி என்று. கூட்டு வியாபாரத்திலீடுபட்ட வணிகள் சந்தோஷமான மனதுடன், ‘’பூமிதேவியின் பூரணமான சொத்துயாவும் என்னைச் சேர்ந்ததல்லாமல் வேறு யாருடையது?’’ என்று எண்ணுகிறான்.

வியாபாரத்தில் சிறந்தது வாசனைத் திரவிய வியாபாரம். பின் தங்கம் முதலியவற்றால் என்ன பயன்? வாங்கும் விலைக்கு மேலாக இதை ஆயிரம் மடங்கில் விற்கலாம்.

வெளிநாட்டு வியாபாரம் அதிக முதல் போடுபவர்களுக்கே தகுதியுள்ளது. எவனிடம் அதிகமாகப் பணமுள்ளதோ, வெளிநாட்டிலும் எவன் பெயர் கேட்கப்படுகிறதோ அவன், யானைகளால் காட்டானை களைப் பிடிப்பதுபோல், பணத்தால் பணத்தைக் கட்டுப் படுத்துகிறான்.

கொடுக்கல் வாங்கலில் நிபுணர்கள் தூர தேசத்திற்குச் சென்று, முயற்சியால் இரண்டு மடங்கும் மூன்று மடங்குமாகப் பணத்தை உலகில் அடைகின்றனர்.

பரதேசத்தைக் கண்டு பயப்படும் சோம்பேறிகளும், கோழைகளும் காக்கைகளும் மான்களும்கூட சொந்த நாட்டில் தனத்தை அடைகின்றன.

இவ்விதம் தர்க்கிந்து தேசாந்திரம் செல்வதற்குத் தீர்மானம் செய்து, வீட்டையும் நண்பர்களையும் விட்டு நால்வரும் புறப்பட்டனர்.

இவ்விதம் சொல்வதில் நல்ல நியாயமிருக்கிறது:

பணத்தாசை பிடித்த புருஷர்கள் சத்தியத்தை விடுகின்றனர். உறவினர்களைக் கைவிடுகின்றனர். தாயாரையும் விட்டுப் பிரிந்து தாய் நாட்டையும் திரஸ்கரித்து விருப்பமில்லாத விதேசம் செல்லுகின்றனர். வேறு என்னதான் செய்ய மாட்டார்கள் அவர்கள்!

அவர்கள் கிரமப்படி அவந்தி தேசத்தை அடைந்தனர். அங்கு ஸிப்ரா நதி ஜலத்தில் ஸ்னானம் செய்து ஸ்ரீமஹாகால தேவரை நமஸ்கரித்தனர். மேலும் அங்கிருந்து மேலே செல்லும்பொழுது பைரவானந்தர் என்ற யோகீந்தரரை சந்தித்தனர். அவர்களும் அவனைப் பிராம்மணர்களுக்கு உகந்த விதிப்படி பேசி அவர்கள் யாவரும் அவன்கூடவே அவனுடைய மடத்திற்குச் சென்றனர். அங்கு அவர்களை யோகி, ‘’எங்கிருந்து வருகிறீர்கள்? எங்கு போகிறீர்கள்? உங்கள் குறிக்கோள் என்ன?’’ என்று கேட்டான்.

அதற்கு அவர்கள், ‘’நாங்கள் சித்தியை விரும்பிச் செல்லும் யாத்ரிகர்கள். எந்த இடத்தில் விரும்பிய தனமோ அல்லது மரணமோ ஏற்படுமோ அங்கு செல்கிறோம்.

ஆகாயத்திலிருந்து எப்பொழுதாவது ஜலம் விழுகிறது. தோண்டினால் பாதாளத்திலிருந்தும் ஜலம் கிடைக்கிறது. விதி நிச்சயமாகப் பலமுள்ளதே. ஆனால் மனிதனும் பலவானன்றோ?

மனிதனுடய புருஷத்தன்மையால் விரும்பிய காரியத்தின முழு சித்தியும் ஏற்படுகிறது. விதியென்று முட்டாள் எதைச் சொல்கிறானோ அது புருஷனின் குணமே.

தேகத்தைச் சிரமப்படுத்தாமல் சுகமாகச் சுகம் கிடைப்பதில்லை. மஹாவிஷ்ணுகூட பாற்கடலைக் கடைந்த கையினால்தான் அதில் கிடைத்த லக்ஷ்மியை ஆலிங்கனம் செய்துகொள்கிறார்.

என்று சொல்லப்படுகிறது.

அதனால் எங்களுக்கு தனம் கிடைக்கும் உபாயம் ஏதாவது சொல்லுங்கள். துவாரத்தில் நுழைவதோ, சூனியக்காரியை வசப்படுத்துவதோ, சுடுகாட்டில் சேவை செய்வதோ, மனித மாமிசத்தை விற்பதோ, எதுவானாலும் பாதகமில்லை. உன்னிடமோ அற்புதமான சித்திகள் இருப்பதாகச் சொல்லப் படுகிறது. நாங்களோ மிகுந்த தைரியசாலிகள். எவ்விதமெனில்,

பெரியவர்களே பெரியோரின் விருப்பத்தை ஈடேற்ற சக்தியுள்ளவர்கள். சமுத்திரத்தைத் தவிர வேறு யார் வாடவாக்கினியைத் தாக்குகிறது?

என்று சொன்னார்கள்.

அவனும் அந்தச் சீடர்களின் யோக்யதையை அறிந்து நான்கு மாந்தரீக மாத்திரைகள் செய்து தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் கொடுத்து, ‘’ஹிமயமலையின் வடக்குப் பாகத்தில் யாருடைய மாத்திரை எந்த எந்த இடத்தில் விழுகிறதோ அங்கு அவனுக்கு நிறைய நிதி கிடைக்கும்.’’ என்று சொன்னார்.

பிறகு அவ்விதமே அவர்கள் செல்லும்பொழுது அவர்களில் தலைவனாக இருப்பவனுடைய குளிகை பூமியில் விழுந்தது. அப்பொழுது அவன் இந்த இடத்தைத் தோண்டியபொழுது பூமி முழுவதும் செம்பாக இருந்தது. அதைக் கண்டு அவன் ‘’ஆஹா, உங்களுக்கு வேண்டிய அளவு இந்த தாமிரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்’’ என்றான். அதற்கு மற்றவர்கள், ‘’ஏ மூடனே, இதனால் என்ன பயன்? எவ்வளவு அதிகமானாலும் தரித்திரம் இதனால் போகாது. அதனால் எழுந்திரு மேலே செல்வோம்’’ என்றனர். அவன் ‘’நீங்கள் செல்லுங்கள். நான் மேலே வரமாட்டேன் என்று சொன்னான். இவ்விதம் சொல்லிச் செம்பை எடுத்துக் கொண்டு முதலில் திரும்பினான்.

மற்ற மூவரும் மேலே புறப்பட்டனர். சிறிது தூரம் சென்றதும் முன்னே செல்பவனின் குளிகை விழுந்தது. அவனும் பூமியைத் தோண்டியபொழுது வெள்ளிமயமான பூமியைக் கண்டான். அப்பொழுது அவன் சந்தோஷத்துடன், ‘’உங்களுக்கு விருப்பமான அளவு வெள்ளியை எடுத்துக் கொள்ளுங்கள். மேலே செல்ல வேண்டாம்’’ என்றான். அவர்களிருவரும், ‘’ஏ மூடனே, முன்பு தாமரமயமான பூமி, அதற்குச் சிறிது மேலே வெள்ளிமயமான பூமி. அதனால் நிச்சயம் இதற்கு மேலே தங்கமயமாக இருக்கும். மேலும் இது அதிகமிருந்தாலும் அதனால் தரித்திர நாசம் ஏற்படாது’’ என்றனர்.

அதற்கு அவன், ‘’நீங்களிருவரும் செல்லுங்கள். நான் வரப் போவதில்லை’’ என்றான். இவ்விதம் சொல்லி வெள்ளியை எடுத்துக்கொண்டு திரும்பினான்.

பிறகு அவர்கள் இருவரும் செல்லும்பொழுது ஒருவனுடைய மாத்திரை விழுந்தது. அவனும் தோண்டியபொழுது அங்கு தங்கமயமான பூமியாக இருந்தது. அதைப்பார்த்துச் சந்தோஷமடைந்து அவன் மற்றவனிடம் உனக்கு விருப்பமான அளவு சுவர்ணத்தை எடுத்துக்கொள். இதற்கு மேல் உயர்வானது வேறு எதுவுமில்லை’’ என்றான் அவன்.

‘’மூடனே, நீ அறியவில்லையா? முதலில் செம்பு, அடுத்து வெள்ளி, அதற்கடுத்து தங்கம் கிடைத்தது. அதனால் நிச்சயம் இதற்குமேல் ரத்தினங்கள் இருக்கும். அதனால் எழுந்திரு. மேலே செல்வோம். இதைப் பாரமாக சுமப்பதால் என்ன பலன்?’’ என்று அவன் பதிலளித்தான்,

‘’நீ செல், நான் இங்கேயே இருந்து உன்னை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்’’ என்றான்.

பிறகு அவனும் தனியாகச் சென்று, கோடைகால சூரிய கிரகணங்களால் எரிக்கும் உடம்பும் தாகத்தினால் குழம்பிய புத்தியுமுடையவனாகி, சித்தபூமியின் வழியில் இங்கும் அங்கும் அலைந்தான். அப்பொழுது சுழலும் ஒரு இடத்தில் தலையின்மேல் ஒரு சக்கரம் சுற்றிக்கொண்டிருக்க, ரத்தம் சொட்டும் தேகத்துடன் இருக்கும் ஒரு புருஷனைப் பார்த்தான். உடனே வேகமாகச் சென்று அவனைப்பார்த்து ‘’பெரியவரே, தாங்கள் ஏன் இப்படித் தலையில் சுற்றும் சக்கரத்துடன் நிற்கிறீர்கள்? சொல்லுங்கள். இங்கு எங்காவது குடிப்பதற்கு ஜலம் கிடைக்குமா? எனக்கு மிகவும் தாகமாக இருக்கிறது’’ என்று கேட்டான்.

இவ்விதம் அவன் சொல்லிய அந்தக் கணத்திலேயே அவன் தலையிலிருந்து சக்கரம் பிராமணனின் தலையில் ஏறிக்கொண்டது. அவன் கேட்டான்: நண்பனே, இது என்ன?’’ என்று. ‘’என் தலையில் கூட இதேமாதிரித்தான் ஏறிக்கொண்டது’’ என்றான் அவன். அவன் கேட்டான்: ‘’அப்பொழுது சொல், எப்பொழுது இது இறங்கும்? எனக்கு வேதனை அதிகமாக இருக்கிறது’’ என்று. ‘’எப்பொழுது உன்னைப்போல எவனாவது சித்தகுளிகையைக் கையில் வைத்துக்கொண்டு வந்து இவ்விதம் பேசுகிறானோ அப்பொழுது அவன் தலையில் இது ஏறிக்கொள்ளும்’’ என்று அவன் பதிலளித்தான். பிராமணன் கேட்டான்: ‘’எவ்வளவு காலமாக நீ இப்படி நின்றாய்?’’ என்று. அவன் அதற்கு ‘’இப்பொழுது பூமியில் யார் அரசன்?’’ என்று கேட்டான். சக்கரத்தைத் தலையில் வைத்துக்கொண்டிருப்பவன் சொன்னான்: ‘’வீணாவத்ஸ ராஜன்’’ என்று. அதற்கு அந்தப் புருஷன் ‘’எப்பொழுது ராமர் அரசனாக இருந்தாரோ அப்பொழுது நான் தரித்திரத்தால் பீடிக்கப்பட்டு சித்தகுளிகையை எடுத்துக்கொண்டு உன்னைப்போல் வந்தேன். அப்பொழுது நான் ஒருவன் தலையில் சக்கரம் இருப்பதைப் பார்த்துக் கேட்கவும் செய்தேன். அப்பொழுது அவனைக் கேட்ட மாத்திரத்திலேயே அவன் தலையிலிருந்து சக்கரம் என் தலையில் ஏறிக்கொண்டது. ஆனால் வருஷக் கணக்கை நான் அறியேன்’ என்று சொன்னான்.

சக்கரதாரி கேட்டான்: ‘’நண்பனே, இப்படி நின்ற உனக்கு ஆகாரம் பின் எப்படி கிடைத்தது?’’ என்று. ‘’நண்பனே, புதையலை எடுத்துச் சென்று விடுவோம் என்ற பயத்தால் குபேரன் சித்தர்களுக்கு இப்படிப் பயம் காட்டுகிறான். அதனால் ஒருவரும் வரமாட்டார்கள் என நினைக்கிறான். அப்படியும் யாராவது வந்தால் அவன் பசியும் தாகமுமற்று, முதுமையும் மரணமுமற்று கேவலம் இந்த வேதனையை மட்டும் அனுபவிக்கிறான். இப்பொழுது எனக்கு உத்தரவு கொடு. நீ தான் என்னை இந்தப் பெரிய துக்கத்திலிருந்து விடுவித்தாய். இப்பொழுது நான் என் இடத்திற்குச் செல்கிறேன்’’ என்று அவன் சொல்லிச் சென்றான்.

அவன் சென்றதும் ‘’ஏன் என் கூட வந்தவன் நேரமாக்குகிறான்?’’ என்று அவனைத் தேடுவதற்காக அவன் காலடியைப் பின்பற்றிக் கொண்டு தங்கத்தை அடைந்தவன் (சுவர்ணசித்தன்) புறப்பட்டுக்கொண்டுக் கொஞ்சதூரம் செல்வதற்குள் அங்கு ரத்தத்தால் தோய்ந்த சரீரத்துடன் கூர்மையான சக்கரம் தலையின்மேல் சுற்றுவதால் வேதனைப்படும் தன் நண்பனைப் பார்த்தான். உடனே அருகில் சென்று கண்ணீர் விட்டுக்கொண்டே ‘’நண்பனே, இது என்ன?’’ என்று கேட்டான். ‘’விதியின் விளையாட்டு’’ என்றான் அவன். ‘’சரி, அது எப்படி என்று சொல்’’ என்று அவன் கேட்க, நான் கேட்ட சக்கர விருத்தாந்தம் முழுவதையும் அவன் சொன்னான்.

அதைக்கேட்டு அவன் சக்கரதாரியை நிந்தித்துக்கொண்டே, ‘’ஹா, நான் திரும்பத் திரும்பத் தடுத்தேன். ஆனால் புத்திஹீனத்தால் நீ என் வார்த்தையைக் கேட்கவில்லை. இவ்விதம் சரியாகத்தான் சொல்லப்படுகிறது.

கல்வியைவிட புத்தி உத்தமம். அதனால் கல்வியைவிட புத்தியைத் தேடு! புத்தியற்றவர்கள், சிங்கத்தைத் செய்தவர்கள்போல், நசிக்கின்றனர்.

சக்ரதரன், ‘’அது எப்படி?’’ என்று கேட்க, சுவர்ணசித்தன் சொன்னான்:

http://inthiya.com/?p=13839

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சதந்திரம் தொடர் 56 - கல்வி கற்ற முட்டாள்கள்
அன்னபூர்னா ஈஸ்வரன்


ஒரு ஊரில் நான்கு பிராமணர்கள் நண்பர்களாக இருந்தனர். அதில் மூவர் எல்லா சாஸ்திரங்களையும் நன்கு அறிந்து கரை கண்டவர்கள். ஆனால் புத்தியென்பது கிடையாது. ஒருவன் சாஸ்திரமே அறியாதவன். ஆனால் மிகவும் புத்திசாலி.

ஒரு சமயம் அவர்கள் கூடி ஆலோசித்தனர். ‘’வெளிநாட்டிற்குச் சென்று அரசர்களைச் சந்தோஷப்படுத்தி பணம் சம்பாதிக்கா விட்டால் வித்தையால் என்ன பிரயோஜனம்! அதனால் எவ்விதமாகிலும் நாம் யாவரும் வேறு தேசம் செல்வோம்’’ என்று. அவ்விதமே புறப்பட்டுச் சிறிது தூரம் சென்றதும், அவர்களில் மூத்தவன், ‘’நம் நால்வரில் ஒருவன் மூடன். அவனுக்குப் புத்தி மட்டும் உண்டு. கல்வியின்றி புத்தியால் மட்டும் அரசனுடைய அருளைப் பெறமுடியாது. நாம் சம்பாதிக்கும் பணத்தில் அவனுக்குப் பாகம் கொடுக்க மாட்டோம். அதனால் அவன் திரும்பி தன் வீட்டிற்குச் செல்லட்டும்’’ என்றான்.

அப்பொழுது இரண்டாமவன், ‘’அறிவுள்ளவனே, உனக்கு கல்வியில்லை. அதனால் வீட்டிற்குச் செல் என்றான். அப்பொழுது, மூன்றாமவன் சொன்னான், ‘’இவ்விதம் செய்வது நியாயமில்லை. ஏனெனில் நாம் பாலபருவம் முதல் ஒன்றாகவே விளையாடியுள்ளோம். புத்திசாலியே, நீ எங்களுடன் வா, நாங்கள் சம்பாதிக்கும் பணத்தில் பங்கு உனக்கு அளிக்கிறோம்’’ என்றான்.

இதற்கு யாவரும் ஒப்புக்கொண்டு செல்லும்பொழுது வழியில் ஒரு காட்டில் இறந்த சிங்கத்தின் எலும்புக்கூட்டைப் பார்த்தனர். அப்பொழுது ஒருவன், ‘’முன்பு கற்றுக்கொண்ட கல்வியைச் சோதித்துக் கொள்வோம். இங்கு ஏதோ இறந்த மிருகம் இருக்கிறது. அதை நாம் அடைந்த வித்தையின் பிரபாவத்தால் திரும்ப உயிர்ப்பிப்போம்’’ என்றான். அப்பொழுது ஒருவன் ‘’எனக்கு எலும்புகளை ஒன்று சேர்க்கத் தெரியும்’’ என்றான். இரண்டாமவன், ‘’நான் தோலும் மாமிசமும் ரத்தமும் அளிப்பேன்’’ என்றான். மூன்றாமவன் ‘’நான் உயிர் உள்ளதாகச் செய்வேன்’’ என்றான்.

பிறகு ஒருவன் எலும்புகளை ஒன்று சேர்த்தான். இராண்டாமவன் அதைத் தோல், மாமிசம், ரத்தத்தால் நிரப்பினான். மூன்றாமவன் அதற்கு உயிர் அளிப்பதில் ஈடுபட்டபொழுது புத்தியுள்ளவன் அதைத் தடுத்து, ‘’இது சிங்கம். இதை நீ உயிருள்ளதாகப பண்ணினால் அப்பொழுது நம் எல்லோரையும் கொன்றுவிடும்’’ என்றான். அதற்கு அவன் ‘’சீ மூடனே, நான் வித்தையை பலனற்றதாகச் செய்யமாட்டேன்’’ என்றான்.

அதற்கு அவன் ‘’அவ்விதமெனில் ஒரு கணப்பொழுது தாமதியுங்கள். அதற்குள் நான் இந்த அருகிலுள்ள மரத்தில் ஏறிக்கொள்கிறே’ன்’ என்று சொல்லி அவ்விதமே செய்தான். அந்தக் சிங்கத்திற்கு உயிர் அளித்தவுடன் அது அவர் மூவர் மேலும் பாய்ந்து கொன்றது. சிங்கம் வேறு இடத்திற்குச் சென்றதும் அந்தப் புத்திசாலி மரத்திலிருந்து இறங்கி வீட்டிற்குச் சென்றான்.

அதனால்தான், ‘கல்வியைவிட புத்தி உத்தமம்…’ என்று சொல்கிறேன்’ என்றான் சுவர்ணசித்தன். அதைக் கேட்டுச் சக்ரதரன் தர்க்கித்தான்.

‘’இது காரணமற்றது. ஏனெனில் விதியால் பீடிக்கப்பட்டவர்கள் அதிக புத்தி பெற்றிருந்தாலும் நாசமாகின்றனர். அற்ப புத்தியுள்ளவனும் விதியால் காப்பாற்றப்பட்டால் சந்தோஷமாக இருக்கின்றான்:

“அன்பே, சதபுத்தி தலையில் இருக்கிறான். சகஸ்ரபுத்தி கயிற்றில் தொங்குகிறான். ஏகபுத்தியான நான் பரிசுத்தமான ஜலத்தில் விளையாடுகிறேன்.

என்று சொல்லப்படுகிறது’’ என்றான் சக்ரதரன். சுவர்ணசித்தன் அது எப்படி?’’ என்று கேட்க, சக்ரதரன் சொன்னான்:

அதிக புத்தி அதிக நாசம்

ஒரு நீர்நிலையில் சதபுத்தி, சகஸ்ரபுத்தி என்ற பெயருடைய இரண்டு மீன்கள் வசித்துவந்தன. அவைகளுக்கு ஏகபுத்தி என்ற தவளை நண்பனாயிற்று. இவ்விதமே அவை மூன்றும் ஜலத்தின் ஓரத்தில் சிறிது காலம் ஒருவரோடு ஒருவர் பேச்சுக்கள் பேசி சுகத்தை அனுபவித்துவிட்டு மறுபடியும் ஜலத்தினுள் நுழைந்துவிடும்.

ஒருநாள் அவை பேசிக்கொண்டிருக்கும்போது அந்தி மயங்கும் வேளையில் கையில் வலையை வைத்துக்கொண்டு செம்படவர்கள் வந்தார்கள். அந்தத நீர்நிலையைப் பார்த்துத் தங்களுக்குள் சொல்லிக் கொண்டனர்: ‘’அதிக ஜலமற்ற இந்த ஏரியில் நிறைய மீன்கள் இருப்பதுபோலக் காணப்படுகிறது. அதனால் காலையில் வருவோம்’’ என்று. இவ்விதம் சொல்லி அவர்கள் தங்கள் வீட்டிற்குச் சென்றனர். அவைகளும் இடிவிழுந்ததற்கொப்பான அந்தப் பேச்சைக் கேட்டு தங்களுக்குள் யோசனை செய்தன.

அப்பொழுது தவளை சொல்லிற்று: ‘’ஏ நண்பர்களே, சதபுத்தி, சகஸ்ரபுத்தியே, இப்பொழுது என்ன செய்தால் தகும்? ஓடுவதா அல்லது தங்குவதா?’’

அதைக்கேடட சகஸ்ரபுத்தி சிரித்துவிட்டு, ‘’ஏ நண்பனே, வார்த்தையைக் கேட்ட மாத்திரத்தில் பயப்படாதே. அவர்கள் இங்கே வரமாட்டார்கள். அப்படியே வந்தாலும் அப்பொழுது என் சுயபுத்தியால் உன்னையும் என்னையும் காப்பாற்றுகிறேன். ஏனெனில் நான் அநேகவிதமாக ஜலத்தில் செல்வதை அறிவேன்’’ என்றது.

அதைக் கேட்டுச் சதபுத்தி, ‘’ஆஹா, சகஸ்ரபுத்தி சொல்வது சரியானதே. எவ்விதமெனில்,

எங்கு காற்றுகூடப் புகாதோ சூரியகிரணமும் நுழையாதோ அந்த இடத்தில் கூட புத்திசாலிகள் புத்தி சீக்கிரமாக நுழைகிறது.

அதனால், வார்த்தையைக் கேட்டதனால் மட்டும் பரம்பரையாக வந்து பிறந்த இடத்தை விட முடியாது. அதனால் வேறு எங்கும் செல்லக்கூடாது. நான் உன்னை என் புத்திப் பிரபாவத்தால் காப்பாற்றுகிறேன்’’ என்றது.

தவளை சொல்லிற்று: ‘’எனக்கு ஒரு புத்திதான் இருக்கிறது. அது என்னை ஓடு என்கிறது. அதனால் நான் வேறு ஏதாவது நீர்த்தேக்கத்திற்கு இன்றே என் மனைவியுடன் செல்லப்போகிறேன்’’ என்றது.

இப்படிச் சொல்லி தவளை இரவு சமயத்தில் வேறு நீர்த்தேக்கத்திற்குச் சென்றது. மறுதினம் காலையில் யமகிங்கரர்கள் போன்ற உருவுடைய செம்படவர்கள் வந்து ஏரியில் வலையைப் பரப்பினர். மீன், ஆமை, தவளை, நண்டு முதலிய எல்லா நீர்ஜந்துக்களும் வலையால் கட்டப்பட்டு எடுக்கப் பட்டன. அந்த சதபுத்தியும், சகஸ்ரபுத்தியும் கூட பலவிதமாக நீரில் பாய்ந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளப் பார்த்தும் முடியாமல் வலையில் விழவே, அவையும் கொல்லப்பட்டன.

பிறகு சாயங்கால சமயத்தில் சந்தோஷத்துடன் அந்தச் செம்படவர்கள் வீட்டை நோக்கிப் புறப்பட்டனர். சதபுத்தி கனமாக இருந்ததால் ஒருவன் தலையில் தூக்கிக்கொண்டான். மற்றொருவன் கயிற்றினால் சகஸ்ரபுத்தியைக் கட்டித் தூக்கிச் சென்றான். அப்பொழுது நீர்த்தொட்டியின் ஓரத்தில் நின்ற தவளை தன் மனைவியிடம், ‘’அன்பே, பார், பார்!

அன்பே, சதபுத்தி தலையில் இருக்கிறான். சகஸ்ரபுத்தி கயிற்றில் தொங்குகிறான். ஏகபுத்தியான நான் பரிசுத்தமான ஜலத்தில் விளையாடுகிறேன்.’’
என்று சொல்லிற்று. அதனால்தான் ‘விதிக்கு புத்திமட்டும் பிரமாணமில்லை’ என்று சொல்லுகிறேன்’’ என்றான் சக்ரதரன்.

சுவர்ணசித்தன் ‘’அது அவ்விதமே இருக்கட்டும். இருந்தாலும்கூட நண்பனின் வார்த்தையை மீறி நடக்கக் கூடாது. பின் என்ன செய்வது? நான் தடுத்தும்கூட மிகுந்த பேராசையாலும், வித்தையின் அஹங்காரத்தாலும் நீ நிற்கவில்லை.

அல்லது இவ்விதம் சொல்வதிலும் நல்ல நியாயமிருக்கிறது.

“மாமா, சங்கீதத்தை நன்றாகத்தான் அறிவாய். ஆனால் நான் தடுத்தும் நீ நிறுத்த வில்லை. அதனால் அந்தச் சங்கீதத்திற்குப் பரிசாக இந்த அபூர்வ மணியைக் கட்டிக் கொண்டிருக்கிறாய்.”

என்றான் சுவர்ணசித்தன். சக்ரதரன் ‘’அது எப்படி?’’ என்று கேட்க, அவன் சொன்னான்:

சங்கீதம் பாடிய கழுதை

ஒரு ஊரில் உத்தன் என்ற பெயருடைய கழுதை இருந்தது. அதுவும் பகல் வேளையில் வண்ணான் வீட்டில் பாரத்தைச் சுமந்துவிட்டு இரவில் இஷ்டம் போலச் சுற்றியது. ஒரு தினம் அது இரவில் வயற்காட்டில் சுற்றும் பொழுது ஒரு நரியுடன் அதற்கு நட்பு ஏற்பட்டது. அவை இரண்டும் வெள்ளரித் தோட்டத்தின் வேலியைப் பிய்த்துக் கொண்டு உள்ளே நுழைந்து அதன் காய்களை இஷ்டம்போலத தின்று, பகலில் தங்கள் தங்கள் இடத்துக்குச் சென்றன.

ஒருசமயம் தோட்டத்தின் நடுவில் கர்வத்துடன் நின்ற கழுதை நரியிடம், ‘’ஏ சகோதரி மகனே, பார்! இரவு மிகவும் நிர்மலமாக இருக்கிறது. அதனால் நான் ஒரு பாட்டுப் பாடுகிறேன். அதை எந்த ராகத்தில் பாட வேண்டும்?’’ என்று கேட்டது.

நரி ‘’மாமா, நாம் திருட்டுக் காரியத்தில் ஈடுபட்டிருப்பதால் அது அனர்த்தத்தை விளைவிக்கும்.

திருடனும், காதலனும் சப்தம் செய்யாமலிக்க வேண்டும். தும்மலுள்ளவன் திருட்டுத் தொழிலையும், தூக்கமுள்ளவன் களவாடுவதையும், வியாதியுள்ளவன் நாக்கின் ஆசையையும் (அவர்கள் வாழ விரும்பினால்) விடவேண்டும்.

என்று சொல்லப்படுகிறது. மேலும் உன் சங்கீதமானது சங்க நாதத்தைப் போலிருக்குமேயல்லாமல் மதுரமாக இராது. தூரத்திலிருந்து கேட்டும் தோட்டக் காவலாளிகள் பிடித்துக் கட்டிப்போடுவார்கள் அல்லது அடித்துக் கொலை செய்வார்கள். அதனால் பேசாமல் சாப்பிடு’’ என்றது.

அதைக்கேட்டு கழுதை சொல்லிற்று: நீ காட்டில் வசிப்பவனாதலால் சங்கீதத்தின் ருசியை அறியமாட்டாய். அதனால்தான் இப்படிச் சொல்கிறாய்.

‘சரத்கால சந்திரன் இருட்டை விரட்டி காதலியும் அருகிலுள்ளபொழுது தன்யர்களின் காதில் சங்கீதத்தின் ரீங்கார அமுதம் விழுகிறது’ என்று சொல்லப்படுகிறது’’ என்றது கழுதை.

நரி கேட்டது: ‘’மாமா, அது உண்மைதான். ஆனால் உன் கணைப்பு கடூரமாக இருக்கிறது. அதனால் உன் காரியத்தையே கெடுக்கும் காரியத்தால் என்ன பயன்?’’ என்று,

கழுதை சொல்லிற்று: ‘’சீ மூடனே, என்ன, எனக்குச் சங்கீதம் தெரியாதா? அவைகளின் வித்தியாசங்களைக் கேள்:

ஏழு ஸ்வரங்கள், மூன்று கிரமங்கள், இருபத்தொன்று மூர்ச்சனைகள் உண்டு. நாற்பத்தொன்பது தானங்கள், மூன்று லயங்கள், மூன்று மாத்திரைகள், யதிகளுக்கு மூன்று ஸ்தானங்கள், ஆறு ப்ரஸ்தாரங்கள், நவரஸங்கள், முப்பத்தாறு ஸ்வர பேதங்கள், நாற்பது பாஷைகள், சங்கீதத்தில் ஆறுநூற்று எண்பத்தைந்து கீதங்கள், அதனுடைய அங்கங்கள் யாவும் கொண்டதாக ஸ்வரங்களுடன் கூடிச் சுத்தமாக இருக்கிறது.

உலகில் சங்கீதத்தைவிடச் சிறந்த ஒன்றை தேவர்கள் கூடப் பார்க்கவில்லை. முன்பு ராவணன் பரமேஸ்வரனை தந்திகளை மீட்டிப் பாடிச் சந்தோஷப்படுத்தினான்.

ஏன் என்னை நீ ஞானமற்றவன் என்று சொல்லித் தடுக்கிறாய்?’’ என்றது கழுதை.

நரி சொல்லிற்று: ‘’மாமா, அது உண்மைதான். நான் வேலி ஓரத்திலுள்ள துவாரத்திலிருந்து காவலாளிகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நீ உன் இஷ்டம் போலப் பாட்டுப் பாடு’’ என்றது.

அவ்விதமே செய்தபொழுது கழுதை கழுத்தை உயரத் தூக்கிக் கொண்டு சப்தம் செய்ய ஆரம்பித்தது. உடனே காவலாளிகள், கழுதையின் கனைப்பைக் கேட்டுக் கோபத்தால் பற்களை நறநறவென்று கடித்துக்கொண்டே குச்சிகளை எடுத்துக்கொண்டு ஓடி வந்து, அதை நையப் புடைத்தனர். அது பூமியில் விழுந்ததும், அது வேகமாக நடக்காமலிப்பதற்காக அதன் கழுத்தில் கனமான கல்லைக் கட்டிவிட்டுக் காவலாளிகள் உறங்கினர். கழுதையும் தன் ஜாதி சுபாவப்படி வேதனையடைந்துவிட கணப்பொழுதில் எழுந்து நின்றது.

நாய்களுக்கும் குதிரைகளுக்கும் விசேஷமாகக் கழுதைகளுக்கும் அடிகளால் உண்டான வேதனை முகூர்த்த நேரத்திற்குப்பின் இருப்பதில்லை.

என்று சொல்லப்படுகிறது.

பிறகு அந்தக் கல்லைத் தூக்கிக்கொண்டே வேலியை நாசம் செய்து விட்டு ஓட ஆரம்பித்தது. இந்தச் சமயத்தில் நரி அதைத் தூரத்திலிருந்தே பார்த்து ஆச்சரியத்துடன்,

மாமா, சங்கீதத்தை நன்றாகத்தான் அறிவாய். ஆனால் நான் தடுத்தும் நீ நிறுத்தவில்லை. அதனால் அந்தச் சங்கீதத்திற்குப் பரிசாக இந்த அபூர்வ மணியைக் கட்டிக்கொண்டிருக்கிறாய்.

என்று சொல்லிற்று.

அதனால் நீயும் என்னால் தடுக்கப்பட்டும்கூட நிற்கவில்லை’’ என்றான் சுவர்ணசித்தன்.

அதைக்கேட்ட சக்ரதரன், ‘’ஏ நண்பனே, நீ சொல்வது உண்மை. ஆனால் இதுவும் நியாயம்தான்:

எவனுக்குச் சுயபுத்தி இல்லையோ, நண்பனின் வார்த்தையையும் கேட்பதில்லையோ, அவன் நெசவுக்காரன் மந்தரகனைப்போல பணம் யாவற்றையும் இழக்கிறான்.

என்றான் சுவர்ணசித்தன்.

‘’அது எப்படி?’’ என்று கேட்க, சக்ரதரன் சொன்னான்

சுயபுத்தியற்ற நெசவாளி

ஒரு ஊரில் மந்தரகன் என்ற நெசவுக்காரன் இருந்தான். ஒரு சமயம் அவனுடைய தறியின் எல்லாக் கழிகளும் உடைந்தன. அவன் மழுவை எடுத்துக்கொண்டு கட்டைக்காகச் சுற்றிக்கொண்டு சமுத்திரக் கரையை அடைந்தான். அங்கு ஒரு மரத்தைப் பார்த்து யோசித்தான். ‘’இந்த மரம் பெரியதாகக் காணப்படுகிறது. இதை வெட்டுவதால் நெய்வதற்கு வேண்டிய சாமான்களையெல்லாம் நிறையப் பண்ணலாம்’’ என்று தீர்மானித்து அதன்மேல் மழுவை எறியத் தூக்கினான்.

அந்த மரத்தில் ஒரு தேவதை வசித்தது. அது சொல்லிற்று: ‘’இந்த மரம் என்னுடைய இருப்பிடம். அதனால் இதைக் காப்பாற்ற வேண்டும். ஏனெனில் இங்கு சமுத்திர அலைகளினர் குளுமையான காற்று என் உடலில் பட மிகவும் சுகமாக வசிக்கிறேன்’’ என்றது.

நெசவுக்காரன் சொன்னான்: ‘’தேவதையே அதற்கு நான் என்ன செய்வேன்? மரத்தினால் செய்த உபகரணங்களில்லாததால் என் குடும்பம் பசியால் வாடுகிறது. அதனால்வேறு எங்காவது சீக்கரமாகப் போய்விடு. நான் இதை வெட்டுகிறேன்’’ என்றான்.

தேவதை சொல்லிற்று: ‘’உன்னிடம் நான் சந்தோஷமடைந்துள்ளேன். உனக்கு ஏதாவது விருப்பமானதைக் கேள். இந்த மரத்தை மட்டும் காப்பாற்று’’ என்றது.

நெசவுக்காரன் சொன்னான்: ‘’அவ்விதமெனில் என் வீட்டிற்குச் சென்று என் நண்பர்களையும், மனைவியையும் கேட்டுவிட்டு வருகிறேன்’’ என்றான். தேவதையும் அதற்குச் சரிஎன்று ஒப்புக்கொண்டதும் நெசவுக்காரன் தன் வீட்டை நோக்கிச் செல்வதற்காக ஊருக்குள் நுழையும்பொழுது அவனுடைய நண்பனான நாவிதனைப் பார்த்தான். அவனிடம் கேட்டான்: ‘’ஏ நண்பனே, எனக்கு ஒரு தேவதையின் அருள் கிட்டியுள்ளது. அதனால், சொல்! என்ன வேண்டிக்கொள்வது?’’ என்றான். நாவிதன் சொன்னான்: ‘’அன்பனே, அவ்வித மெனில், ஒரு ராஜ்யத்தைக் கேள். நீ அரசனானால் நான் மந்திரியாவேன். இருவரும் இந்த உலக சுகத்தை அனுபவித்த, பரலோகத்தின் சுகத்தையும் அனுபவிப்போம்’’ எனறான். நெசவுக்காரன் சொன்னன்: ‘’ஏ நண்பனே, அவ்விதமே ஆகட்டும். ஆனால் என் மனைவியையும் கேட்கிறேன்’’ என்றான்.

நாவிதன் சொன்னான்:

‘’வேண்டாம், ஸ்திரீகளுடன் யோசிப்பது நல்லதல்ல. முக்கியமாக ருது காலத்தில் போஜனமும் துணிகளும் கொடு, நகை முதலியவைகளும் பெண்களுக்குக் கொடு. ஆனால், அறிவாளி அவளுடன் கலந்து ஆலோசிக்க மாட்டான்.

எங்கு ஸ்திரீயும், சூதாடுபவனும், குழந்தையும் அதிகாரம் செய்கிறதோ அந்த வீடு நாசத்தை அடைகிறது என்று பார்க்கவமுனி சொல்லியுள்ளார்.

புருஷன் பெண்களின் வார்த்தைகளுக்கு எதுவரை காது கொடாமலிருக்கிறானோ அதுவரையே மதிப்புடன் இருக்கிறான். அதுவரையே அதிகாரியாக இருக்கிறான்.

இந்தப் பெண்களே சுயநலக்காரிகள்தான். கேவலம் தன் சுகத்தில் ஈடுபடுபவர்கள். தன் வயிற்றுப் பிள்ளைகள் கூட தன் சுகத்திற்குப் பின்பே விரயமாகிறார்கள்.

என்று சொல்லப்படுகிறது’’ என்றான் நாவிதன்.

நெசவுக்காரன் சொன்னான்: ‘’இவை யாவும் உண்மைதான். இருந்தாலும் அந்தப் பதிவிரதையைக் கேட்கவேண்டும்’’ என்றான்.

இப்படி அவனிடம் சொல்லி வேகமாகச் சென்று மனைவியிடம் சொன்னான்: ‘’அன்பே இன்று எனக்கு ஒரு தேவதையின் அருள் கிட்டி உள்ளது. அது இஷ்டப்பட்டதைக் கொடுக்கிறது. அதனால் நான் உன்னைக் கேட்பதற்காக வந்துள்ளேன். அதனால், சொல்! என்ன வேண்டிக்கொள்வது? என் நண்பன் நாவிதனோ ராஜ்யத்தை வேண்டிக்கொள் என்கிறான்’’ என்றான்.

அவள் பதில் சொன்னாள்: ‘’அன்பனே, நாவிதர்களுக்குத்தான் என்ன புத்தியிருக்கும்? அதனால் அவன் வார்த்தையைக் கேட்காதே.

பாடகன், சந்நியாசி, கீழ்த்தரப்பட்டவன், நாவிதன், குழந்தை, யதிகள், பிக்ஷ¤க்கள் ஆகியோருடன் எப்பொழுதும் யோசனை செய்யக்கூடாது.

என்று சொல்லப்படுகிறது. மற்றொன்று:

மிகவும் கவலையும், பயங்கரமான சங்கடங்களும் உள்ளது அரச பதவி. சமாதானம், சண்டை, இடம் மாற்றல், முற்றுகையிடல், சேர்க்கை, கபடம், முதலியவற்றின் கவலையால் மனிதனுக்கு ஒருபொழுதும் சுகம் என்பதையே கொடுக்காது.

அப்படியே,

எந்த ராஜ்யத்தின் பொருட்டுச் சொந்த சகோதரனும் மகனுமே அரசனைக் கொல்ல விரும்புகிறானோ அந்த ராஜ்யத்தைத் தூரத்தில் தள்ளு.

என்றாள் மனைவி.

நெசவுக்காரன் கேட்டான்: ‘’நீ சொல்வது உண்மையே. பின் சொல். என்னவேண்டுவது?’’ என்றான். அவள் பதிலளித்தாள்:

‘’நீயோ தினந்தோறும் ஒரு துணியை நெய்கிறாய். அதனால் எல்லாச் செலவுகளும் சரிகட்டுகின்றன. இப்பொழுது உனக்கு வேறு இரண்டு கைகளும் மற்றொரு தலையும் வேண்டிக்கொள். அதனால் முன்பும், பின்புமாக ஒவ்வொரு துணி நெய்ய முடியும். இரண்டாவதின் விலையால் விசேஷமான காரியங்கள் செய்வதால் நம் ஜாதியார் மத்தியிலே கௌரவத்துடன் காலத்தைக் கழிக்கலாம்’’ என்றாள்.

அவனும் அதைக்கேட்டுச் சந்தோஷத்துடன் சொன்னான்: ‘’சரி அன்பே, சரியாகத்தான் சொன்னாய். அவ்விதமே செய்கிறேன் இது நிச்சயம்’’ என்றான்.

பிறகு நெசவுக்காரன் சென்று தேவதையிடம் வேண்டினான்: ‘’தேவதையே, நீ விரும்பியதைக் கொடுக்கிறதானால் அப்பொழுது எனக்கு மற்றும் இரண்டு கைகளும் ஒரு தலையும் கொடு’’ என்றான். இவ்விதம் அவள் சொன்ன அந்தக் கணத்திலேயே இரண்டு தலையும், நான்கு கைகளும் அவனுக்கு உண்டாயின. பிறகு அவன் சந்தோஷத்துடன் வீட்டுக்குத் திரும்பும் பொழுது ஊர் ஜனங்கள் ‘’இவன் ராக்ஷஸன்’’ என்று எண்ணி அவனைக் கட்டை, கற்களால் அடித்துக் கொன்றனர்.

அதனால்தான் ‘’எவனுக்குச் சுயபுத்தியில்லையோ…என்று சொல்கிறேன்’’ என்றான் சக்ரதரன்.

சக்ரதரன் மேலும் சொன்னான்: எந்த மனிதனுமே வீணான பேராசை என்னும் பிசாசால் பீடிக்கப்பட்டால் சிரிப்புக்கு இடமாகிறான். இவ்விதம் சொல்வதில் நியாயமிருக்கிறது:

நடக்கக்கூடாத விருப்பத்தில் எவன் மனதைப் பறிகொடுக்கிறானோ அவன் சோமசர்மனின் தந்தைபோல வெளுத்த தேகத்துடன் படுக்கிறான்.

சுவர்ணசித்தன் ‘’அது எப்படி?’’ என்று கேட்க, அவன் சொன்னான்:


http://inthiya.com/?p=14023

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சதந்திரம் தொடர் 57 - பிராமணனின் மனக்கோட்டை
அன்னபூர்னா ஈஸ்வரன்



‘’ஓர் ஊரில் சுபாவக்ருபணன் என்ற பெயருடைய பிராம்மணன் இருந்தான். அவன் பிச்சையெடுத்து வந்த மாவில் ஒரு பகுதியைச் சாப்பிட்டு மிகுதியை ஒரு பாத்திரத்தில் நிரப்பி வந்தான். அந்தப் பாத்திரத்தை ஒரு முனையில் தொங்கவிட்டு அதன் அடியில் கட்டிலைப் போட்டுக்கொண்டு எப்பொழுதும் ஒரு கண்ணால் அதைப் பார்த்துக்கொண்டே இரவில் யோசனை செய்தான்: ‘’இந்தக் குடமோ நிறைந்திருக்கிறது. எப்பொழுதாவது மாவுக்குப் பஞ்சம் ஏற்பட்டால் இதிலிருந்து நூறு ரூபாய் கிடைக்கும். பிறகு அதன்மூலம் இரண்டு ஆடுகளை வாங்குவேன். பிறகு ஆறு அறு மாதத்திற்கு அது குட்டி போடுமாதலால் ஒரு ஆட்டுமந்தையே ஏற்படும். பிறகு ஆடுகளால் மாடுகளையும், மாடுகளின் ஈற்றினால் அதன் கன்றுகளையும் விலைக்கு விற்பேன். பிறகு மாடுகளால் எருமைகள், எருமைகளால் குதிரைகள், குதிரையின் பிரஸவத்தால் எனக்கு அநேகக் குதிரைகள் கிடைக்கும். அவைகளை விற்பதால் நிறையத் தங்கம் கிடைக்கும். தங்கத்தினால் நடுவில் பெரிய தாழ்வாரம் உள்ள வீட்டை வாங்குவேன். பிறகு யாராவது ஒருவன் என் வீட்டிற்கு வந்து மிகவும் அழகிய பெண்ணை வரதட்சணையுடன் எனக்குக் கொடுப்பான். அவளுக்குப் பிள்ளை பிறக்கும். அவனுக்கு நான் சோமசர்மா என்று பெயர் வைப்பேன். பிறகு அவனுக்குத் தவழும் நிலை வந்தவுடன் நான் ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு குதிரை லாயத்தின் பக்கத்தில் உட்கார்ந்து யோசனை செய்வேன். இந்த சமயத்தில் சோமசர்மா என்னைப் பார்த்து தந்தை என்ற ஆதுரத்தினால் முழங்கால்களால் தவழ்ந்துகொண்டே குதிரைகளின் அருகில் செல்வான். அப்பொழுது நான் மனைவியைக் கோபத்துடன் ‘’குழந்தையை எடுத்துச் செல், எடுத்துச் செல்’’ என்று கட்டளையிடுவேன். வீட்டுக்காரியத்தில் ஈடுபட்டிருக்கும் அவளுக்கு என் வார்த்தை கேட்காது. அப்பொழுது நான் எழுந்து கால்களினால் அவளை உதைப்பேன்.’’ இப்படி மனோராஜ்யத்திலிருந்த அவன் கால்களால் எட்டி உதைத்தான். அப்பொழுது பானை உடைந்து பானையிலிருந்த மாவால் வெள்ளை நிறத்தவனாக ஆனான்.

அதனால்தான் ‘நடக்கக்கூடாத விருப்பத்தில்’… என்று சொல்கிறேன் என்றான். சக்ரதரன்.

சுவர்ணசித்தன் சொன்னான்: ‘’இது மிகவும் உண்மை. எவ்விதமெனில்,

அதன் அனர்த்தத்தைப் பாராமல் எவன் பேராசையால் காரியம் செய்கிறானோ அவன் சந்திரன் என்ற அரசன் போல ஏமாற்றத்தை அடைகிறான்.’’

சக்ரதரன் ‘’அது எப்படி?’’ என்று கேட்க, அவன் சொன்னான்.

பழிக்குப் பழி

ஒரு நகரத்தில் சந்திரன் என்ற அரசன் இருந்தான். அவன் மகன் விளையாடுவதற்காக ஒரு குரங்குக் கூட்டம் இருந்தது. அவைகளுக்கு தினசரி அநேகவிதமான ஆகாரங்களைக் கொடுத்து புஷ்டியாக வளர்த்தனர். அதே அரசகுமாரனுக்கு விளையாடுவதற்காக ஒரு செம்மறியாட்டு மந்தையுமிருந்தது. அவைகளின் நடுவில் ஒன்று நாக்கின் பேராசையால் இரவும் பகலும் சமையலறையில் நுழைந்து எதுஎது கண்ணில் படுகிறதோ அவை யாவற்றையும் சாப்பிட்டது. சமையற்காரர்களும் கட்டை முதல் எது கையில் கிடைக்கிறதோ அதனால் அந்த ஆட்டை அடித்தனர்.

குரங்குக்கூட்டத் தலைவன் அதைப் பார்த்து எண்ணிற்று: ‘’ஐயோ, ஆட்டிற்கும் சமையற்காரனுக்கும் உள்ள இந்தக் கலகம் இந்தக் குரங்குகளின் நாசத்திற்காகவே ஏற்படுகிறது. எவ்விதமெனில், இந்த ஆடோ ருசிப் பேராசை பிடித்தது. மிகவும் கோபங்கொண்ட சமையற்காரர்கள் இருந்த இடத்திலிருந்தே எது கிடைக்கிறதோ அந்த வஸ்துவால் அடிக்கின்றனர். பிறகு ஒரு பொருளும் கிடைக்காவிட்டால் ஒரு சமயம் கொள்ளிக்கட்டையால் அடிக்கலாம். பிறகு கம்பளி நிரம்பிய இந்த ஆடு சிறிது நெருப்பாலும் பற்றிக்கொள்ளும். அப்படி எரிந்துகொண்டே குதிரை லாயத்தின் அருகில் அது நுழையும். அந்த லாயத்தில் புற்களே அதிகமாக இருப்பதால் அதுவும் எரிந்துவிடும். பிறகு குதிரைகள் நெருப்பினால் சுடப்படும். மிருக வைத்தியத்திலோ இப்படிச் சொல்லப் படுகிறது: குதிரைகளின் நெருப்புச் சுட்ட புண்கள் குரங்குகளின் கொழுப்பால் குணப்படுத்தப்படும் இதனால் நிச்சயம் தங்களுக்கு மரணம் நெருங்கிவிட்டது’’ என்று இவ்விதம் தீர்க்காலோசனை செய்து, அது எல்லாக் குரங்குகளையும் அழைத்துச் சொல்லிற்று:

‘’ஆட்டிற்கும் சமையற்காரர்களுக்கும் எங்கு சண்டை நடக்கிறதோ,அங்கு சந்தேகமின்றி குரங்குகளுக்கு நாசம் ஏற்படும். எந்த வீட்டில் தினந்தோறும் சண்டை நடக்கிறதோ அந்த வீட்டை வாழ்வை விரும்புபவன் தூரத்திலேயே விட்டுவிட வேண்டும்.

கலகம் சந்தோஷமான வீட்டையும், கெட்ட வார்த்தை நல்ல நட்பையும், துஷ்ட அரசன் ராஜ்யத்தையும், கெட்டட காரியம் மனிதனின் கீர்த்தியையும் முடிக்கின்றன.

அதனால் நம் எல்லோருக்கும் நாசம் ஏற்படுவதற்கு முன்பு வீட்டைவிட்டு காட்டிற்குச் செல்வோம்’’ என்று.

அதனுடைய அந்த வார்த்தைகளை கேட்டு அவைகள் அகந்தையுடன் சொல்லின: ‘’ஓஹோ, கிழத்தன்மையால் உனக்குப் புத்தி குழம்பியுள்ளது. அதனால்தான் இப்படிச் சொல்கிறாய். நாங்கள் அரசகுமாரர்கள் தங்கள் கையாலேயே கொடுக்கும் அமிருதத்திற்கொப்பான விசேஷமான ஆகாரங்களை விட்டுவிட்டு அந்தக் காட்டில் கசப்பும், புளிப்பும், துவர்ப்பும், தித்திப்புமான மரத்தின் பழங்களை நாங்கள் சாப்பிடப்போவதில்லை’’ என்றன.

அதைக் கேட்டுக் கோணலான பார்வை பார்த்துவிட்டு அந்தக் கூட்டத் தலைவன் சொல்லிற்று: ‘’சீ! நீங்கள் யாவரும் முட்டாள்கள். இந்தச் சுக வாழ்க்கையின் முடிவை நீங்கள் அறியமாட்டீர்கள். ஏனெனில் இப்பொழுது இனிப்பாக இந்தச் சுகம் முடிவில் விஷமாக ஆகும். அதனால் நானே என் குலத்தின் நாசத்தைப் பார்க்கப்போவதில்லை. இப்பொழுது நான் அந்தக் காட்டிற்கே செல்கிறேன்.

இப்படிச் சொல்லப்படுகிறது:

பிறரிடம் சென்ற மனைவியையும், கஷ்டத்திலிருக்கும் நண்பனையும், வீட்டில் மரணத்தையும், தேசத்தின் நாசத்தையும் யார் பார்ப்பதில்லையோ அவனே பாக்கியசாலி.

இவ்விதம் சொல்லி எல்லோரையும் விட்டுவிட்டு அந்தக் குரங்குத் தலைவன் காட்டிற்குச் சென்றது.

அது சென்றபின் ஒரு தினம் அந்த ஆடு சமையற்கட்டில் நுழைந்தது. சமையற்காரனுக்குக் கையில் ஒன்றும் கிடைக்காததால் பாதி எரிந்த கொள்ளிக் கட்டையை எடுத்து அதை அடித்தான். அதுவும் அதனால் அடிபட்டு, பாதி எரிகின்ற சரீரத்துடன் கத்திக்கொண்டே அருகிலே உள்ள குதிரை லாயத்தில் நுழைந்தது. அங்கு படுத்துப் புரண்டதால் புற்களினால் செய்யப்பட்ட அந்த லாயம் எங்கும் நெருப்பு ஜுவாலை எழுந்தது. லாயத்தில் கட்டியிருந்த குதிரைகளில் சிலவற்றின் கண்கள் பிதுங்கி இறந்தன. சில கட்டுகளை அறுத்துக்கொண்டே எல்லோரையும் துன்பத்தில் ஆழ்த்தின.

இந்தச் சமயத்தில் அரசன் துக்கத்துடன் சாலிஹோத்திரரின் மிருக சாஸ்திரத்தை அறிந்த மிருக வைத்தியர்களை அழைத்துக் கேட்டான். ‘’இந்தக் குதிரைகளின் நெருப்புப் புண்ணை ஆற்றுவதற்கு ஏதாவது மருந்து சொல்லுங்கள்’’ என்று. அவர்களும் சாஸ்திரத்தைப் பார்த்துவிட்டுச் சொன்னார்கள்: ‘’பிரபுவே, இந்த விஷயத்தில் பகவான் சாலிஹோத்திரர் சொல்கிறார்:

குதிரைகளின் சுட்ட புண்ணிற்கு குரங்குகளின் கொழுப்பைத் தடவினால் சூரியோதயத்தால் இருள் நீங்குவது போல் சுட்ட புண்கள் உடனே ஆறும். அவை இந்த வியாதியால் நாசமாவதற்கு முன்பு இந்த வைத்தியதைச் செய்யுங்கள்’’ என்றனர்.

அரசனும் அதைக்கேட்டு குரங்குகளைக் கொல்ல உத்தரவளித்தான். அதிகம் சொல்வானேன்? அவை யாவும் கொல்லப்பட்டன. குரங்குக் கூட்டத் தலைவனோ அந்த குலநாசத்தை நேரில் தன் கண்களால் பார்க்கவில்லை. ஆனால் பராபரியாகக் கேட்டு அதைச் சகிக்கவில்லை.

எவ்விதமெனில்:

வம்சத்தின் பேரில் ஒருவன் கெடுதல் செய்து அந்த எதிரியை பயத்தினாலோ, பேராசையாலோ மன்னித்தால் அவனைப் புருஷர்களில் கடை கெட்டவன் என்று அறிவாயாக!

பிறகு அந்தக் கிழக் குரங்கு தாகத்தால் பீடிக்கப்பட்டு எங்கேயே சுற்றும்பொழுது தாமரைகள் நிறைந்த ஒரு ஏரியை அடைந்தது. அங்கு கூர்ந்து நோக்கிய பொழுது அங்கு குளத்தினுள் செல்லும் காலடிகளைப் பார்த்ததேயல்லாமல், திரும்பும் காலடிகளைக் காணவில்லை. அப்பொழுது அது எண்ணிற்று: நிச்சயம் இந்த ஜலத்தினுள் துஷ்ட ஐந்து ஏதாவது இருக்க வேண்டும். அதனால் தாமரைத் தண்டை எடுத்து வெகு தூரத்திலிருந்தபடியே ஜலத்தை அதன் மூலம் உறிஞ்சிக் குடிக்கிறேன்’’ என்று. அவ்விதமே செய்தபொழுது அதன் நடுவிலிருந்து ரத்தினமாலையால் அலங்கரிக்கப்பட்ட கழுத்தை உடைய ஒரு ராக்ஷஸன் வெளிவந்து அதனிடம் சொன்னான்: ‘’ஏய், யார் இந்த ஜலத்தில் நுழைகிறார்களோ அவனைச் சாப்பிடுபவன் நான். ஆனால், உன்னைவிட அதிகக் கூர்மையான புத்தியுள்ள மற்றொருவனை நான் பார்த்ததில்லை. நீ இப்படிப்பட்ட வழியாக ஜலத்தைக் குடிக்கிறாய். அதனால் நான் திருப்தி அடைந்துள்ளேன். அதனால் உனக்கு விருப்பமானதைக் கேள்’’ என்றான்.

குரங்கு கேட்டது, ‘’எவ்வளவு உன்னால் சாப்பிட முடியும்?’’ என்று. அவன் சொன்னான்: ‘’ஜலத்தில் நுழைந்தவர்கள் நூறு. ஆயிரம், பத்தாயிரம், லக்ஷமானாலும் சாப்பிடுவேன். வெளியிலோ நரி கூட என்னை ஜெயித்து விடும்’’ என்று.

குரங்கு சொல்லிற்று: ‘’எனக்கு அரசனோடு ஒரு பெரிய துவேஷ இருக்கிறது. நீ எனக்கு இந்த ரத்தினஹாரத்தைக் கொடுத்தால் நான் அந்த அரசனைப் பரிவாரங்களுடன் வாக்குச் சாதுர்யத்தால் மோகிக்கச் செய்து ஏரியில் நுழைய வைப்பேன்’’ என்று. உடனே ராக்ஷஸனும் அதனிடம் ரத்தினமாலையைக் கொடுத்தான்.

வானரமும் ரத்தினஹாரத்தால் அலங்கரிக்கப்பட்ட கழுத்துடன் மரங்களிலும் மாளிகைகளிலும் சுற்றிற்று. ஜனங்களும் அதைப் பார்த்துக் கேட்டனர். ‘’ஏ குரங்குக் கூட்டத்தின் அதிபதியே, எங்கு நீ இவ்வளவு காலம் சென்றிருந்தாய்? எங்கிருந்து உனக்கு இப்படிப்பட்ட ரத்தினஹாரம் கிடைத்தது? பிரகாசத்தால் அது சூரியனைக்கூட வெல்கிறது’’ என்று.

குரங்கு சொல்லிற்று, ‘’ஒரு காட்டில் குபேரனால் நிர்மானிக்கப்பட்டு நன்றாக மறைக்கப்பட்ட ஒரு ஏரி இருக்கிறது. அதில் ஞாயிற்றுக்கிழமையன்று காலை சூரியன் பாதி உதித்திருக்கும்பொழுது எவன் முழுகுகிறானோ அவன் கழுத்து குபேரனின் அருளால் இப்படிப்பட்ட ரத்தின ஹாரத்தால் அலங்கரிக்கப்பட்டு வெளியே வருகிறான்’’ என்று.

பிறகு அரசனும் ஜனங்கள் மூலம் அதைக்கேட்டு அந்தக் குரங்கை அழைத்துக் கேட்டான். ‘’ஏ குரங்குக் கூட்டத் தலைவனே, இது உண்மையா?’’ என்று. குரங்கு சொல்லிற்று: ‘’அரசே, இதோ, உங்கள் எதிரிலேயே என் கழுத்திலுள்ள ரத்தினஹாரம் உங்களுக்கு ருசுவாகிறது. உமக்கும் இதனால் உபயோகம் உண்டானால் அப்பொழுது என்னுடன் யாரையாவது அனுப்பும். அவனுக்குக் காட்டுகிறேன்.’’

இதைக் கேட்டு அரசன் சொன்னான், ‘’அவ்விதமெனில், நானே பரிவாரங்களுடன் வருகிறேன். அதனால் நிறைய ரத்தின ஹாரங்களை அடைவேன்’ என்று. குரங்கு ‘’அரசே, அதுவே தகுதியானது என்று சொல்லிற்று. பிறகு அரசன் பரிவாரத்துடன் ரத்தினஹாரப் பேராசையால் புறப்பட்டான். குரங்கையும் பல்லக்கில் உள்ள அரசன் தன் மடியில் ஏற்றிக்கொண்டு அதற்கு மரியாதை செய்துகொண்டே சென்றான்.

இவ்விதம் சரியாகத்தான் சொல்லப்படுகிறது.

பணமும் கல்வியுமிருந்துங்கூட பேராசையால் ஜனங்கள் மூடர்களாகி செய்யத் தகாததில் ஈடுபடுகின்றனர். செல்ல முடியாத இடத்திலும் செல்கின்றனர்.

நூறு உள்ளவன் ஆயிரத்தையும், ஆயிரம் உள்ளவன் லக்ஷத்தையும லக்ஷ¡திபதி ராஜ்யத்தையும், ராஜ்யத்திலிருந்து ஸ¤வர்க்கத்தையும் விரும்பு கின்றனர்.

வயது வந்தால் மயிர் உதிர்கிறது. பற்களும் வயதானால் விழுகிறது. கண்களும், காதுகளும் வயதை அடைகிறது. ஆனால் பேராசை மட்டும் முதுமையை அடைவதில்லை.

விடியற்காலையில் அந்த ஏரியை அடைந்தனர். வானரம் அரசனிடம் சொல்லிற்று. ‘’தேவ, இப்பொழுது சூரியன் பாதி உதயமாகி இருக்கும்பொழுது நீரில் முழுகுபவர்களுக்குச் சித்தி ஏற்படும் என்று பரிவாரங்கள் எல்லோருக்கும் சொல்லுங்கள். அவர்கள் ஒரே கூட்டமாக நுழையட்டும். நீங்கள் மட்டும் என்னுடன் முழுகவேண்டும். நான் முன்பு பார்த்து வைத்திருக்கும் இடத்தை அடைந்து உமக்கு நிறைய ரத்தின மாலைகளைக் காட்டுவேன்’’ என்றது. பிறகு அந்தப் பரிவாரம் முழுவதும் நீரில் மூழ்கின. ராக்ஷஸனும் அவர்களை விழுங்கினான்.

அவர்கள் நேரமாக்குவதால் அரசன் குரங்கினிடம், ‘’ஏ குரங்குக் கூட்டத் தலைவனே! இது என்ன, என் வேலையாட்கள் ஏன் நேரமாக்குகின்றனர்?’’ என்று கேட்டான்.

அதைக்கேட்டு குரங்கு வேகமாக மரத்தில் ஏறிக்கொண்டு அரசனிடம், ‘’ஏ கெட்ட அரசனே ஜலத்தில் உள்ள ராக்ஷஸன் உன் பரிவாரத்தை விழுங்கி விட்டான். என் குலத்தை நீ நாசம் செய்த காரணத்தால் உன்மேல் ஏற்பட்ட துவேஷத்தை நான் தீர்த்துக்கொண்டேன். அதனால், செல்! நான் உன்னை எஜமானர் என்று மதித்து அதில் முழுகவிடவில்லை.

எவ்விதமெனில்,

நன்மை செய்தவனுக்குத் திரும்ப நன்மையும், ஹிம்ஸை செய்தவனுக்குத் திரும்ப ஹிம்ஸையும் செய்! எவன் துஷ்டனோ அவனுக்குக் கெடுதல் செய்வதில் ஒருவிதமான தவறையும் நான் காணவில்லை.

நீ என்னுடைய குலத்தை நாசம் செய்தாய். நான் உன்னுடையதை நாசமாக்கினேன்’’ என்றது.

அதைக்கேட்டு அரசன் துக்கத்தினால் பீடிக்கப்பட்டு வேகமாக வந்த வழியே திரும்பினான். அந்த அரசன் சென்றவுடன், ராக்ஷஸன் மிகுந்த திருப்தியுடன் ஜலத்திலிருந்து வெளிவந்து சந்தோஷத்துடன்,

குரங்கே, நல்லது, வெகு நல்லது. எதிரியைக் கொன்றாய்! நண்பனை அடைந்தாய்! தாமரைத் தண்டால் ஜலத்தைக் குடித்ததால் ரத்தின மாலையை அழுக்காக்கவில்லை.

என்று சொன்னான். அதனால்தான், ‘’அவன் அனர்த்தத்தைப் பாராமல்… என்று சொல்லுகிறேன்’’ என்றான். சுவர்ணசித்தன். அவன் மேலும் பேசுகையில், “என்னை அனுப்பு. நான் வீட்டிற்குச் செல்கிறேன்” என்றான். சக்ரதரன் கேட்டான் ‘’எப்படி என்னை இந்த நிலையில் விட்டுவிட்டுச் செல்வாய்?

எவன் ஆபத்திலுள்ள நண்பனை விட்டு கடின மனதுடன் செல்கிறானோ அந்த நன்றிகெட்ட பாவியானவன் நிச்சயம் நரகத்தை அடைகிறான்.

என்று சொல்லப்படுகிறது’’ என்றான்.

அப்போது சுவர்ணசித்தன், நீ சொல்வது உண்மைதான். செல்லக்கூடிய இடத்தில் அவனுக்கு ‘’நீ சொல்வது உண்மைதான். செல்லக்கூடிய இடத்தில் அவனுக்கு விடுக்கச் சக்தியிருக்கும்பொழுது விட்டுவிட்டுச் சென்றால் சரி. இதுவோ மனிதர்களால் அடைய முடியாத இடம், உன்னை விடுவிப்பதற்கும் ஒருபொழுதும் எனக்குச் சக்தி ஏற்படாது. மற்றொன்று, அவ்வப்பொழுது அந்த சக்கரத்தின் வேதனையால் உன் முகத்தில் வேதனையைப் பார்க்கிறேனோ எவ்வப்பொழுது ‘எனக்கு ஒருபொழுதும் இப்படிப்பட்ட அனர்த்தம் ஏற்படாது. அதனால் நான் இந்த இடத்தை விட்டுச் சீக்கிரமாகச் சென்று விடுவேன்’ என்று அறிவேன்.

இவ்விதம் சொல்வதில் நல்ல நியாயமிருக்கிறது:

குரங்கே உன் முகத்தில் இப்படிப்பட்ட குறிகள் தோன்றுவதால் நிச்சயம் நீ சந்தியால் பீடிக்கப்பட்டிருக்கிறாய். எவன் ஜெயிக்கிறானோ அவனே வாழ்கிறான்.

என்றான் சக்ரதரன் ‘’அது எப்படி?’’ என்று கேட்க, அவன் சொன்னான்:

ராக்ஷஸனும் சந்தியும்

ஒரு ஊரில் பத்ரசேனன் என்று பெயருடைய அரசன் இருந்தான். அவனுக்கு எல்லா வக்ஷணங்களும் பொருந்திய ரத்தினாவதி என்ற பெண் இருந்தாள். அவளை யாரோ ராக்ஷஸன் அபகரித்துச் செல்ல விரும்பினான். தினந்தோறும் இரவில் வந்து அவளை நிந்திப்பான். ஆனால் மந்திரத்தினால் வரைந்த படத்தினுள் அவள் இருந்ததால் அவளை அபகரிக்க முடியவில்லை. அவளும் சுகத்தை அனுபவிக்கும்பொழுது ராக்ஷஸன் வந்துள்ள அவஸ்தையை, நடுக்கம் ஜுரம் முதலியவற்றால் அனுபவித்தாள். இப்படியே காலம் செல்கையில் ராக்ஷஸன் வீட்டின் ஒரு மூலையில் நின்றுகொண்டு ராஜ குமாரிக்குக் தன்னைக் காண்பித்தான். அப்பொழுது அவள் தோழியிடம் ‘’ஸகி, பார், சந்திவேளையில் ராக்ஷஸன் தினந்தோறும் இங்கு வந்து துன்புறுத்துகிறான். அந்த துராத்மாவைத் தடுப்பதற்கு ஏதாவது வழி உண்டா?’’ என்று கேட்டாள்.

அதைக்கேட்டு ராக்ஷஸன் எண்ணினான்: ‘’நிச்சயம் நான் எப்படியோ அப்படியே சந்தி என்று பெயருடைய வேறு யாரோ இவளை அபகரித்துச் செல்வதற்காக வருகிறான் போலிருக்கிறது. ஆனால் அவனுக்கும் அபகரிக்கச் சக்தியில்லை. அதனால் இப்பொழுது நான் குதிரை உருவை எடுத்துக்கொண்டு, குதிரைகளுக்கு நடுவில் மறைந்துகொண்டு அந்த சந்தி ‘எப்படிப்பட்ட உருவமுள்ளவன்? அவன் சக்தியென்ன?’ என்று அறிகிறேன்’’ என்று எண்ணினான். அவன் அவ்விதமே செய்தபொழுது இரவுவேளையில் அரசனுடைய அரண்மனையில் யாரோ குதிரைத் திருடன் ஒருவன் நுழைந்தான். அவனும் எல்லாக் குதிரைகளையும் பார்த்துவிட்டு அந்த ராக்ஷஸக் குதிரையே மிகவும் நன்றாக இருப்பதைப் பார்த்து கடிவாளத்தை அதன் வாயில் போட்டு ஏறிக்கொண்டான். இந்தச் சமயத்தில் ராக்ஷஸன் ‘’நிச்சயம் இவன்தான் அந்த சந்தி என்பவன். என்னைப் போக்கிரி என்று மதித்து கோபத்தினால் கொல்வதற்கு வந்துள்ளான். அதனால் என்ன செய்வது?’’ என்று அவன் யோசித்துக் கொண்டிருக்கும்பொழுது அந்தக் குதிரைத் திருடன் சவுக்கால் அடித்தான். பிறகு பயத்தால் நடுங்கும் உள்ளத்துடன் ராக்ஷஸன் ஓடுவதற்கு ஆரம்பித்தான். திருடனும் வெகுதூரம் சென்று கடிவாளத்தை இழுத்து அதை நிறுத்துவதற்கு ஆரம்பித்தான். ஆனால் அது குதிரையாக இருந்தால்தானே கடிவாளத்தைக் கவனிக்கும்? அதுவோ இன்னும் அதிக வேகமாகச் சென்றது.

அப்படி கடிவாளத்தை இழுப்பதைக் கவனியாமல் அது இருப்பதைப் பார்த்துத் திருடன் எண்ணினான்: ‘’ஐயோ’ குதிரைகள் இவ்விதம் இருக்காது. அதனால் நிச்சயம் இது குதிரை உருவிலுள்ள ராக்ஷஸனாகத்தான் இருக்க வேண்டும். அதனால் புழுதி நிறைந்த பூமியை எப்பொழுது பார்க்கிறேனோ அப்பொழுது நான் விழுந்து விடுகிறேன். வேறு விதத்தில் எனக்கு வாழ்வு கிடைக்காது’’ என்று திருடன் யோசித்தான். இவ்விதம் எண்ணிக்கொண்டே திருடன் இஷ்ட தெய்வத்தைத் தியானிக்கும்பொழுது, குதிரைத் திருடனை இழுத்துச் செல்லும் ராக்ஷஸக் குதிரை ஒரு ஆலமரத்தின் கீழ் சென்றது. திருடனும் ஆலம் விழுதைப் பிடித்துக்கொண்டு அங்கேயே தங்கினான். அப்பொழுது இருவரும் தனித்தனியாக ஆனதால் இருவருக்கும் தங்கள் உயிர்மேல் நம்பிக்கை திரும்பி மிகவும் சந்தோஷமடைந்தனர்.

ஆனால் அந்த மரத்தில் ராக்ஷஸனின் நண்பனான ஒரு குரங்கு இருந்தது. அது ஓடும் ராக்ஷஸனைப் பார்த்துக் கூவியது: ‘’ஏன் இப்படி பயத்தைக் கற்பனை செய்துகொண்டு ஓடுகிறாய்? உனக்கு ஆகாரமான இவன் மனிதனன்றோ? அதனால் இவனை விழுங்கு’’ என்றது. ராக்ஷஸன் அந்த வார்த்தையைக் கேட்டு தன் சுய ரூபத்தை எடுத்துக்கொண்டு பயந்த உள்ளத்துடனும், மங்கிய புத்தியுடனும் திரும்பினான். அந்தத் திருடனும் குரங்கு அவனைத் திருப்பி அனுப்பியுள்ளது என்று அறிந்து கோபமடைந்து உயர உட்கார்ந்திருக்கும் குரங்கின் தொங்கும் வாலை பலம் கொண்ட மட்டும் கடிக்க ஆரம்பித்தான். அவன் ராக்ஷஸனைவிடப் பலசாலி என்று எண்ணி பயத்தால் குரங்கு வாய்திறந்து ஒன்றுகூடச் சொல்லவில்லை. ஆனால் வலியால் இறுகக் கண்களை மூடிக்கொண்டு பற்களையும் நறநறவென்று கடித்துக் கொண்டிருந்தது. ராக்ஷஸனும் அது அவ்விதம் இருப்பதைப் பார்த்து இந்தச் செய்யுளைச் சொன்னான்:

குரங்கே, உன் முகத்தில் இப்படிப்பட்ட குறிகள் தோன்றுவதால் நிச்சயம் நீ சந்தியால் பீடிக்கப்பட்டிருக்கிறாய். எவன் ஜெயிக்கிறானோ அவனே வாழ்கிறான்.

என்றான்.

சுவர்ணசித்தன் மறுபடியும் சொன்னான்: ‘’என்னை அனுப்பு, என் வீட்டை அடைகிறேன். நீ இங்கு இருந்துகொண்டு உன் வணக்கமற்ற தன்மையாகிற மரத்தின் பலத்தை அனுபவித்துக்கொண்டிரு’’ என்றான்.

சக்ரதரன், ‘’நீ சொல்வது காரணமற்றது.

வணக்கமற்றவனோ, இல்லையோ, விதிவசத்தால் மனிதர்களுக்கு நன்மையோ தீமையோ ஏற்படுகிறது.

குருடனும், கூனனும், மூன்று மார்புகள் உள்ள அரச குமாரியும்போல் யாருக்கு விதி சாதகமாயுள்ளதோ அவர்கள் வணக்கமற்றிருந்தாலும் வணக்கமுள்ளவர்களாகின்றனர்.’’

என்றான்.

சுவர்ணசித்தன் ‘’அது எப்படி?’’ என்று கேட்க, சக்ரதரன் சொன்னான்:


http://inthiya.com/?p=15001

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சதந்திரம் தொடர் 58 – மூன்று ஸ்தனமுள்ள அரசகுமாரி
அன்னபூர்னா ஈஸ்வரன்


வடக்குப் பிரதேசத்தில் மதுபுரம் என்ற நகரம் இருக்கிறது. அங்கு மதுசேனன் என்ற அரசன் இருந்தான். அவனுக்கு ஒரு சமயம் மூன்று ஸ்தனங்கள் உள்ள பெண் பிறந்தாள். அரசன் மூன்று ஸ்தனங்களுடன் அவள் பிறந்திருப்பதைக் கேட்டு மந்திரியை அழைத்து, ‘’இவளைக் காட்டில் கொண்டு விட்டுவிடு. அதனால் ஒருவரும் அறியமாட்டார்கள்’’ என்றான். அதைக்கேட்ட மந்திரி ‘’மஹாராஜா, மூன்று ஸ்தனங்களையுடையவள் குலத்திற்குக் கெடுதலை கொண்டு வருவாள் என்று அறிந்ததே. இருந்தாலும் பிராமணர்களை அழைத்துக் கேட்க வேண்டும். அதனால் இரு உலகங்களுக்கும் எதிராக நடக்காமலிருக்கலாம். எவ்விதமெனில்,

அறிவு உள்ள புருஷன் எப்பொழுதும் கலந்தாலோசிப்பவனாக இருக்க வேண்டும். முன்பு ராக்ஷஸனைப் பிடித்தும் கூட பிரஸ்னத்தால் அவனை விட்டான்.

அரசன் ‘’அது எப்படி?’’ என்று கேட்க, மந்திரி சொன்னான்:

கால் அலம்பிய ராக்ஷஸன்

ஏதோ ஒரு காட்டில் சண்டகர்மா என்ற ராக்ஷஸன் இருந்தான். ஒரு சமயம் அவன் சுற்றி வரும்பொழுது, ஒரு பிராமணனைச் சந்தித்தான். உடனே அவன் தோளில் ஏறிக்கொண்டு கட்டளையிட்டான். ‘’முன்னே செல்’’ என்று. பிராமணனும் பயத்தினால் நடுங்கும் உள்ளத்துடன் அவனைத் தூக்கிக்கொண்டு புறப்பட்டான். ஆனால் ராக்ஷஸனுடைய தாமரை இதழ்களுக்கொப்பான பாதகங்களைப் பார்த்து அவனிடம் ‘’ஏய், எப்படி உனக்கு இப்படிப்பட்ட மிருதுவான கால்கள் உண்டாயிற்று?’’ என்று கேட்டான்.

ராக்ஷஸன் ‘’நான் கால்களை அலம்பாமல் ஒருபொழுதும் ‘பூமியைத் தொடுவதில்லை என்று எனக்கு ஒரு விரதம் இருக்கிறது’ என்று சொன்னான். பிராமணனும் தன்னை விடுவித்துக்கொள்ள உபாயத்தை நினைத்துக்கொண்டே ஒரு ஏரியை அடைந்தான். அப்பொழுது ராக்ஷஸன் ‘’ஏய், நான் ஸ்னானம் செய்து சுவாமிக்கு பூஜையும் செய்துவிட்டுத் திரும்பி வரும்வரை நீ இந்த இடத்திலிருந்து வேறு எங்கும் செல்லக்கூடாது’’ என்றான். அவ்விதமே செய்த பொழுது, பிராமணன் ‘’நிச்சயம் தெய்வ பூஜைக்குப்பின் என்னை இவன் விழுங்கி விடுவான். அதனால் வேகமாகச் செல்கிறேன். ஏனெனில் கால்களை அலம்பாமல் அவன் என்னைப் பின் தொடரமாட்டான்’’ என்று யோசித்து அவ்விதமே செய்தபொழுது, ராக்ஷஸன் விரதம் பங்கமாகிவிடும் என்ற பயத்தால் அவன் பின்னே செல்லவில்லை.

அதனால்தான் ‘அறிவுள்ள புருஷன் எப்பொழுதும்…’ என்று சொல்கிறேன்’’ என்றான் மந்திரி.

அவனுடைய வார்த்தையைக் கேட்டு அரசனும் பிராமணர்களை அழைத்து, ‘’ஏ பிராமணர்களே, எனக்கு மூன்று ஸ்தனங்களுடன் ஒரு பெண் பிறந்திருக்கிறாள். அவளுக்கு ஏதாவது பிராயச்சித்தம் உண்டா இல்லையா என்று சொல்லுங்கள்’’ என்று கேட்டான்.

அவர்கள் சொன்னார்கள்: ‘’தேவ, கேளுங்கள்!

அங்கஹீன முள்ளவளாகவோ, அதிக அங்கமுள்ளவளாகவோ எங்கு பெண் பிறக்கிறாளோ அவள் கணவனுக்கு நாசத்தை உண்டு பண்ணுவாள், தன் குணமும் கெட்டுப்போவாள்.

மூன்ற ஸ்தனங்களுடைய எந்த மகளை தந்தை கண்ணெடுத்துப் பார்க்கிறானோ, அவள் வேகமாக தந்தையின் நாசத்தை சந்தேகமற உண்டு பண்ணுகிறாள்.

அதனால் அவளைக் கண்ணெடுத்தும் பார்க்காதீர்கள். யாராவது அவளை ஏற்றுக்கொள்வதாக இருந்தால் அவனுக்கு அவளைக் கொடுத்து தேசத்திலிருந்து வெளியேற்றிவிடும். இவ்விதம் செய்தால் இரு உலகிற்கும் எதிராகச் செய்தவர் ஆகமாட்டீர்’’ என்றார்கள்.

அவர்களின் யோசனைப்படியே அரசன் எங்கும் பறையடிக்கச்சொல்லிக் கட்டளையிட்டான் ‘’மஹாஜனங்களே, மூன்று ஸ்தனங்களையுடைய அரச குமாரியை எவன் மணம்புரிந்து கொள்கிறானோ, அவனுக்கு அரசன் லக்ஷம் பொன் கொடுப்பான். ஆனால் தேசத்தைவிட்டு அனுப்பி விடுவான்’’ என்று. இவ்விதமே வெகுகாலம் சென்றது. ஆனால் ஒருவரும் அவளை மணம்புரிய முன்வரவில்லை. அவளும் தனியிடத்தில் இருந்து வளர்ந்து யௌவனப் பருவத்தை அடைந்தாள்.

அந்த ஊரில் ஒரு குருடனும் இருந்தான். அவனுக்கு மந்தரகன் என்ற குச்சியைப் பிடித்து உதவும் கூனன் ஒருவன் இருந்தான். அவர்கள் தமுக்கடிக்கும் சப்தத்தைக்கேட்டு தங்களுக்குள் ஆலோசித்தனர். ‘’அந்தத் தமுக்கை நாம் தொட்டால் பெண்ணும் பொன்னும் கிடைக்கும். பொன் கிடைப்பதால் சுகமாகக் காலத்தைக் கடத்தலாம். பெண்ணின் தோஷத்தால் மரணம் ஏற்பட்டாலும் நம்முடைய இந்த தரித்திரத்தின் கஷ்டத்திற்கு முடிவு ஏற்படும். எவ்விதமெனில்,

ஜீவன்களின் வயிறு பூராவாக நிரம்பாவிட்டால் வெட்கம், நட்பு, சங்கீதம், புத்தி, யௌவனத்தின் அழகு, பிராண சங்கடம், துக்கத்தின் பாரம், கேளிக்கை, தர்மம், சாஸ்திரம், மிகப்பெரிய அறிவு, சுத்தம், ஆசாரச் சிந்தை இவை ஒன்றையும் கவனிப்பதில்லை.

இவ்விதம் யோசனை செய்து குருடன் சென்று பேரிகையைத் தொட்டு, ‘’நான் அந்தப் பெண்ணை மணந்துகொள்கிறேன்’’ என்றான். அப்பொழுது அந்த அரசனின் ஆட்கள் சென்று அரசனிடம் ‘’தேவ யாரோ ஒரு குருடன் பேரிகையைத் தொட்டான். இனி இந்த விஷயத்தை அரசனே தீர்மானிக்க வேண்டும்’’ என்று தெரிவித்தனர். அரசன் சொன்னான்:

“குருடனானாலும், செவிடனானாலும், குஷ்டரோகியானாலும், நீச குலத்தோனானாலும் லக்ஷம் பொன்னுடன், பெண்ணை ஏற்றுக்கொண்டு வேறுதேசம் செல்லட்டும்.”

அரசனின் கட்டளைக்குப்பின் அரசனின் ஆட்கள் அந்த மூன்று ஸ்தனங்களுடையவளை நதிக்கரைக்கு அழைத்துச்சென்று அந்தக் குருடனுக்கு மணம் முடித்து லக்ஷம் பொன்களையும் கொடுத்தனர். பிறகு மீன் பிடிக்கும் படகில் அவர்களை ஏற்றி செம்படவர்களிடம், ‘’இவர்களை வேறு தேசத்திற்கு அழைத்துச் சென்று, கூனனுடனும் மனைவியுடனும் கூடிய இந்தக் குருடனை ஏதாவது ஊரில் தங்கச் செய்யுங்கள்’’ என்று சொன்னார்கள். அவ்விதமே செய்தபொழுது, அவர்கள் வேறு தேசம் சென்று ஏதாவது ஒரு ஊரில் மூவரும் அந்தப் பணத்தால் ஒரு வீட்டை வாங்கி சுகமாகக் காலத்தைக் கடத்தி வந்தனர். குருடன் எப்பொழுதும் கட்டிலில் தூங்கிக் கொண்டேயிருந்தான். வீட்டு வேலை முழுவதையும் கூனன் செய்தான்.

காலப்போக்கில் மூன்று ஸ்தனங்களையுடையவள் கூனனுடன் சேர ஆரம்பித்தாள். அவனிடம், ‘’அழகனே, இந்தக் குருடனை எப்படியாவது கொன்றுவிட்டால் அப்பொழுது நாமிருவரும் சுகமாகக் காலத்தைக் கடத்தலாம். அதனால் ஏதாவது விஷத்தைத் தேடு. அதை அவனுக்குக் கொடுத்து அவனைக் கொன்று நான் திருப்தியடைவேன்’’ என்றாள்.

மறுதினம் கூனன் ஒரு இறந்த கருநாகத்தை எங்கோ கண்டான். அதை எடுத்துக்கொண்டு சந்தோஷமான மனதுடன் தன் வீட்டை அடைந்து அவனிடம், ‘’அன்பே, இந்தக் கருநாகம் எனக்கு கிடைத்தது. இதைத் துண்டுகளாகப் பண்ணி நல்ல வஸ்துக்களால் பக்குவப்படுத்தி அந்தக் குருடனுக்கு ‘மீன்’ என்று சொல்லிக் கொடு. அதனால் அவன் சீக்கிரம் இறந்துவிடுவான்’’ என்றான். இவ்விதம் சொல்லி மறுபடியும் கடைப்பக்கம் சென்றான்.

அவளும் அந்தக் கருநாகத்தைத் துண்டுகளாக்கி மோருடன் கலந்து பாத்திரத்தில் விட்டு அதை நெருப்பில் வைத்துத் தனக்கு வீட்டு வேலை வேறு இருந்ததால் அந்தக் குருடனிடம் மரியாதையுடன் இவ்விதம் சொன்னான்: ‘’அன்பனே, நான் இன்று உனக்கு மிகவும் விருப்பமான மீன்களை வாங்கி வந்து சமைத்துக்கொண்டிருக்கிறேன். நான் வேறு வீட்டுக்காரியம் செய்யும் வரை நீ கரண்டியை எடுத்து இதைக் கிளறிக் கொண்டிரு’’ என்றாள். அவனும் அதைக் கேட்டு சந்தோஷத்துடன் கைகளை நக்கிக்கொண்டே வேகமாக எழுந்து கரண்டியை எடுத்து அதைக் கிளற ஆரம்பித்தான். அதைக் கிளறும் பொழுது விஷம் நிரம்பிய ஆவிபட்டதால் அவன் கண்களை மறைத்திருந்த திரை மெல்ல மெல்ல விலகிற்று. அவனும் அதையே குணமுள்ளதாக எண்ணி நன்கு அந்த ஆவியைக் கண்களில் ஏற்றுக்கொண்டான். பிறகு பிரகாசமாகப் பார்க்க முடிந்ததும் அவன் பார்த்தபொழுது பாத்திரத்தில் கேவலம் கருநாகத் துண்டுகளேயிருந்தன. அப்பொழுது அவன், ‘ஐயோ, இது என்ன? எனக்கு இதை மீன்களென்று முன்பு சொன்னாள். ஆனால் இவைகளோ கருநாகத் துண்டுகள் ஆயிற்றே! அதனால் நான் இதை நன்கு ஆராய்ந்தறிய வேண்டும். இதை மூன்று ஸ்தனங்களுள்ளவள் செய்தாளா? அல்லது என்னைக் கொல்வதற்காக மந்தரகன் செய்த உபாயமா? அல்லது வேறு யாராவது ஒருவனுடைய வேலையா?’ என்று எண்ணினான். இப்படி எண்ணிக்கொண்டே, தன் எண்ணங்களை மறைத்துக்கொண்டு குருடனைப் போலவே காரியம் பார்த்துக் கொண்டிருந்தான்.

இதற்கிடையில் மந்தரகன் திரும்பி வந்து பயமின்றி மூன்று ஸ்தனங்களுள்ளவளை ஆலிங்கனம் செய்து, முத்தமிட்டு அனுபவிக்க ஆரம்பித்தாள். குருடனும் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தான். ஆனால் அருகில் கத்தியொன்றும் கிடைக்காததால் கோபத்தினால் குருடனாகி முன்பு போலவே அருகில் சென்று மந்தரகனை கால்களால் தூக்கி தன் பலம் கொண்ட மட்டும் தலைக்கு மேல் சுழற்றி அவனை மூன்று ஸ்தனங் களுடையவளின் மார்பில் எறிந்தான். அப்பொழுது கூனனின் உடல் பட்ட அடியால் அவளுடைய மூன்றாவது ஸ்தனம் உள்ளே சென்று விட்டது. முதுகுப் பக்கத்தில் நல்ல அடிபட்டதால் கூனனும் நேராக நிமிர்ந்துவிட்டான்.

அதனால்தான் ‘குருடனும் கூனனும்…’ என்று சொல்கிறேன்’’ என்றான் சக்ரதரன். சுவர்ணசித்தன் சொன்னான். ‘’நண்பனே, நீ உண்மையையே சொன்னாய். விதி அனுகூலமாக இருப்பவர்களுக்கு எங்கும் மங்களம் ஏற்படும். ஆனால் மனிதன் விதியை நினைத்துக் கொண்டு எப்படி நீ என் வார்த்தையைக் கேட்கவில்லையோ அப்படி விவேகத்தை விடக்கூடாது’’ என்று.
இவ்விதம் சொல்லி சுவர்ணசித்தன் அவனிடம் விடைபெற்றுக் கொண்டு தன் வீட்டை நோக்கிப் புறப்பட்டான்.

கவனமற்ற செய்கை என்ற ஐந்தாவது தந்திரம் இத்துடன் முடிவடைகிறது. அதன் முதல் செய்யுளானது:

நன்கு பார்க்காமலும் நன்கு அறியாமலும்
நன்கு செய்யாமலும் நன்கு சோதிக்காமலும்
நாவிதன் செய்ததுபோல் ஒருவனும் செய்யக்கூடாது.

http://inthiya.com/?p=15133

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சதந்திரம்

க்ருஷாங்கினி


மகிளாரூப்யம் என்ற நாட்டை ஆண்டு வந்தவன் அமரசக்தி. அவனின் மூன்று மகன்களும் புத்தி சாதுர்யம் அற்றவர்கள். அவர்களுக்கு விஷ்ணுசர்மன் என்கிற 80 வயதான சாஸ்திர நிபுணர் பாடம் கற்பிப்பதற்காக அமர்த்தப்படுகிறார். நூலை எழுதியவர் பெயரும் விஷ்ணுசர்மன். அவருக்கு 80 வயதா? முட்டாள் அசரகுமாரர்களுக்குப் பாடம் சொல்லித்தர முதல் கதையை ஆரம்பிக்கிறார் விஷ்ணு சர்மன். அந்த கதை நடக்கும் இடத்தின் பெயர் மகிளாரூப்யம். இதுவே ஒரு நவீன இலக்கியம் போல ஆரம்பிக்கிறது. எதிர் எதிர் கண்ணாடியின் பிரதிபிம்பம் போல கதையின் நிகழ்வு தொடங்குகிறது.

அரசாட்சியில் ஒரு மன்னன் தனக்கான பாதுகாப்பை எப்படி வடிவமைத்துக் கொள்ள வேண்டும் என்பது மிக தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது இந்நூலில். ஆரம்பத்திலேயே தலைவன், அவனின் ஆட்சி என்பவை சொல்லப்பட்டிருக்கின்றன. சதுர் மண்டலாவஸ்தானம், நால்வகைப் படை, அரசைக் காக்கும் கவசம் என பிரிந்து நிற்கும் விதத்தைத் தெளிவாக்குகிறது.

பிறருக்குத் தலை வணங்கி குழைந்து பேசும் வழக்கம் அதற்குத் தெரியாது. பொறுமையின்மை, கோபம் ஆக்ரோஷம், பரபரப்பு, ஆகியவற்றைக் கொண்டுதான் தன் காரியங்களை சாதித்து வந்தது. பயமின்றி திரிவது, இச்சகம் பேசுவதை இகழ்வது, காலைப் பிடித்துக் கொண்டு கெஞ்சுவதை வெறுப்பது, மனக்கலக்கமின்றி இருப்பது, இவைதான் அந்த சிங்கராஜனின் அடையாளங்கள். ஒரு தலைவன், அரசன் எப்படி தலை நிமிர்ந்து நேர்மையாக சிங்கம் என்ற விலங்கின் மூலமான அரசியல் தலைவன் பற்றிப் பேசுகிறது. ஆனால், தற்கால அரசியல் இவை எல்லாவற்றிகும் எதிர் நிலையிலிருக்கிறது. அதிலிருந்துதான் ஆரம்பமே ஆகிறது.

பஞ்ச தந்திரம் முழுக்க முழுக்க அரசியல் தந்திரம். இன்றைய அரசியல் கூட்டணிகள், துரோகங்கள், பொய்கள், புரட்டுக்கள் இவை இந்தப்புத்தகத்தைப் படிக்கும் போது நினவுக்கு வராமல் போகாது. என்னால் இவைகளின் நினைவு இல்லாமல் படிக்க இயலவில்லை. அதே சமயம் இதிலுள்ள சுலோகங்கள் என்றென்றைக்கும் மனித இனம் அறிந்துணர வேண்டிய பொன் மொழிகளாக இருக்கின்றன. திரு சக்தி. வை.கோவிந்தன் தனது முன்னுரையில் கூறி இருப்பதைப் போன்று சில இக்காலத்திற்கு ஒவ்வாததாக இருக்கின்றன. உள்ளது உள்ளபடி பதிப்பிப்பதுதான் ஒரு பதிப்பாளரின் கடமை.

பெண்கள், சாதிகள் ஆகியன பற்றிக் கூறியிருப்பது பொருத்தம் அற்றதாக மட்டுமல்லாமல் சற்றே கோபம் கொள்ள வைப்பதாகவும் கூட இருக்கிறது. ஆனால், அது சொல்லப்பட்ட காலத்தை மனதில் கொள்ள வேண்டியிருக்கிறது. எழுதியது யார் என்பதை மனதில் கொள்ள வேண்டியிருக்கிறது. யாருக்காக சொல்லப்பட்டிருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டி உள்ளது.

பிங்களன் என்ற சிங்கத்திடம் மந்திரியாயிருந்த நரியின் பிள்ளைகள் இருவர் என்று தொடர்ந்து செல்கிறது கதை. அதில், ‘சிங்கம் சாப்பிட்டு மிச்சமான ஆகாரம் நமக்கு இருக்கிறது. புத்திசாலிகள் அநாவசிய விஷயங்களில் தலையிடலாகாது’ என்று ஒரு நரி சொல்வதாய் வருகிறது. இந்த இடத்தில் இரண்டு விதமான விவரங்கள் இருக்கின்றன. அரசன் நேர்மையானவனாகவும், தைரியமானவனாகவும், சுயகௌரவத்துடன் இருப்பவனாகவும் இருந்தாலும், அவரின் அடுத்த வட்டத்தைச் சேர்ந்த மந்திரிகள் அதற்கு எதிர் மாறாக கிடைத்ததைச் சுருட்டிக் கொள்ளும் விதமாகச் செயல் படுகிறார்கள் என்பது ஒன்று. நரி சுயமாக வேட்டை ஆடாது. வேட்டையாடிய உணவின் பகுதியை விட்டுச் சென்றதை சாமர்த்தியமாகத் தின்று பசியாறும். இந்த விலங்குகளின் வாழ்க்கை முறையை நன்கு அறிந்து அதைப் பயன் படுத்தி வாழ்க்கையைச் சொல்லும் முறை, அரசியலைச் சொல்லும் முறை. இது, இந்த பஞ்சதந்திரத்தில் முழுவதுமாகக் காணமுடிகிறது.

விலங்கினங்கள் பற்றிய ஆவணப்படங்களும் அதன் வாழ்க்கையைப் பற்றிய விவரங்களும் அடங்கிய புத்தகங்களும், ஊடகங்களும் இல்லாத அக்காலத்தில், நாம் கண்டறியும் விலங்கின வாழ்க்கையை மிக அழகாக நுட்பமாக மனித இனத்துடன் தொடுத்து வழங்கி இருக்கிறார், விஷ்ணுசர்மன். ராஜ தந்திரம், ஞானம், விவேகம் மட்டுமல்லாமல் உலக உயிரினங்கள் பற்றிய தெளிந்த அறிவும் கொண்டவராய் இருந்திருக்கிறார். இந்த புத்தகத்தின் நெடுகிலும் வரும் விலங்குகளும் மனிதர்களும், அரசர்களும், குடும்பங்களும், எந்த நேரத்தில் (விலங்கு மனிதனாக, மனிதன் விலங்காக) எதுவாக எந்த தளத்தில் மாற்றம் கொள்ளப்படுகிறார்கள், என்பதை இடைவெளிக்கோடிட்டு பிரித்தறியவே முடியவில்லை.


‘மித்ரர்களுக்கு உபகாரமும், சத்ருக்களுக்கு அபகாரமும் செய்து புத்திமான்கள் அரசனைத் திருப்தி செய்கிறார்கள் .’

இப்போது அரசனின் சத்ருக்களுக்கு உபகாரம் செய்து அரசனின் பயத்தை அதிகரிக்கச் செய்து, அருகில் அருகில் செல்கிறார்கள் மனிதர்கள்.


‘அரசர்கள், ஸ்திரீகள், கொடிகள் இவை மூன்றும் அருகில் எது இருக்கிறதோ அதைப் பற்றிக் கொள்கிறது’ என விலங்கோடு, செடி கொடி போன்ற உயிரினங்களின் தன்மையும் இந்த நூலில் பரவலாகக் காணக்கிடைக்கிறது. விஷ்ணுசர்மன் முட்டாள்களுக்குச் சொன்ன அறிவுரையை விட அதில் விரவிக்கிடக்கிற விஷ்ணுசர்மனின் புத்திசாலித்தனமும், சொல்ல வேண்டியதை மிக எளிய முறையில் சிறு சிறு சொற்களால் சிறு சிறு சம்பவங்களாகக் கோர்த்து கொடுக்கப்பட்டிருக்கும் விதமும், பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்டிருக்கும் இவைகள் இன்றைக்கும் பொருத்தமாக இருப்பதையும் அதிசயத்தோடும், பிரமிப்போடும் பார்க்க வைக்கிறது.

அரசனிடம் நடந்து கொள்கிற மாதிரியே அரசனின் தாயார், ராணி, அரசகுமாரன், முக்கிய மந்திரி, புரோகிதன், வாயில் காப்போன் ஆகியோரிடமும் நடந்து கொள்ள வேண்டும். என்கிற இந்த சுலோகத்திலிருந்து அரசனுக்கு அருகாமையிலிருக்கும் மனிதர்களை அனுசரித்துக்கொண்டு நற்பெயர் எடுத்துவிட்டால், மற்ற கதவுகள் விரைவில் திறக்கும் என்பதை அறிய முடிகிறது.


‘குத்தலும், ஏளனமுமாக அரசன் பேசும் போது யார் பதிலுரைப்பதில்லையோ, அவனை அரசன் விரும்புகிறான்.’

‘காலத்தில் பெய்த மழையால் ஒரு விதையிலிருந்து மற்ற விதைகள் முளைப்பது போல, (இயற்கைசார் செய்திகள் ஒரு சிறு விதை விருட்சமாகி பல விதைகளைக் கொடுத்து, அதன் மூலம் பல விதைகள் கிளைப்பது போன்ற சிறு உதாரணம் சொல்லி) வார்த்தைக்குக் கிடைக்கும் பதிலிலிருந்து மற்ற பேச்சுக்கள் முளைக்கின்றன.


‘அரசன், விடாமல் சங்கடங்களில் மாட்டிக்கொண்டிருந்தால்தான் மந்திரிகளுக்கு சுகம்’

இந்த சுலோகங்கள் முதல் தந்திரமான ‘நட்பு அறுத்தல்’ என்ற பகுதியில் வருகின்றன.

இது போல பரவலாக ஐந்து தந்திரங்களிலும் அதற்கேற்றவாறு கதைகளும், அதனுள் மற்றொரு கிளைக்கதையும், என்று பின்னிப் பின்னி கதை சொல்லும் முறை, இன்றைய பின் நவீனத்துவமும், மாஜிக்கல் ரியலிஸமும் அன்றே கையாளப்பட்டுள்ளது என்பதைத் தெரிவிக்கிறது. இன்றைய அரசியல் கூட்டணிகளும் அக்காலத்தியவையே என்றும் சொல்லுவது போல உள்ளது.


நாங்கள் பாண்டிச்சேரியில் வசித்த வந்த போது டெல்லியில் வசித்து வந்த சாருநிவேதிதாவும் விசாலாட்சியும் பாண்டிக்கு வேலை மாற்றலில் வந்தனர். அடிக்கடி அவர்களின் வீட்டிற்கு நாங்களும் குடும்பத்துடன், அவர்களும் குடும்பத்துடன் சந்தித்துக் கொள்வோம். (1984,85) அருகில் வசித்து வந்தார்கள். அப்போது இந்தப் புத்தகத்தை எங்களிடம் கொடுத்தார். இந்த நூல் மிக அருமையானது என்றும் அதன் பல விஷயங்கள் குறித்தும் நிறைய பேசி இருக்கிறோம். அப்போதெல்லாம் நூல் வெளியிடுவது என்பதெல்லாம் இல்லை. அந்தப் புத்தகம் அவர்களிடமிருந்து வந்த பின் எப்போதும் எங்கள் வீட்டில் யார் கைகளிலாவது இருந்து கொண்டே இருக்கும். எந்தப் பக்கத்தையும் இஷ்டம் போல புரட்டி எந்தப்பக்கத்திலிருந்தும் படிக்கத் துவங்கலாம். அப்படிப்பட்ட சுதந்திரமும், வெளியும் உடையது பஞ்சதந்திரம், ஆனால் படிக்க ஆரம்பித்தவுடன் அது உங்களை உள் இழுத்துக் கொண்டுவிடும்.


இதிலுள்ள சுலோகங்கள் எத்தனை ஆழமானவை என்பதை எப்போதும் உணர்த்தும். அந்த சுலோகம் சார்ந்த அனுபவங்கள் நமக்கு ஏற்படும் போது இன்னமும் நெருக்கமும் ஆழமும் அதிகம் தென்படும்.

‘பஞ்சதந்திரம்’ என்பது குழந்தைகள் கதை என்பதாக தவறான தளத்தில் மனதில் பதியவைக்கப் பட்டுள்ளது. அது வெறும் குழந்தைகளுக்கானது மட்டுமல்ல. அவ்வாறு குழந்தைகளுக்கானதாகப் பார்க்கப்படுவதும் ஆர்வமுடையதாகத்தான் இருக்கும் என்றாலும் கூட, அரசியல் தந்திரங்கள் நிறைந்த இந்த ‘பஞ்சதந்திரம்’ குழந்தைகள் கதையாக சிறு சிமிழில் அடைக்கமுடியாதது. மேலும் குழந்தைகளுக்காக வடிவமைத்த பஞ்சதந்திரக் கதைகள் மிகவும் நீர்த்துப் போனதாக இருக்கிறது. எளிமைப் படுத்துவது என்பது வேறு, நீர்த்துப் போக வைப்பது என்பது வேறு. எல்லாப் பெயர்களிலும் அந்தந்த சந்தர்ப்பத்திற்கு பொருந்துவதாக அந்த நிகழ்வின் காரணத்தை இன்னமும் அதிகம் அருகில் கொண்டுவருவதாக அமைக்கப்பட்ட காரணப் பெயர்களாக அமைந்திருக்கின்றன. இடங்களின் பெயர்களும் கூட இப்படியேதான். ஆனால், மனைவி, மகள் அன்னை என்று ஆண்களின் பெயர்களுடன் இணைக்கப்பட்டதாகவே இருக்கின்றன. விலங்குகளில் பெண்ணின் பெயர்களும் கூட இதே போலத்தான். பெண்களின் உணர்வை சொல்கிறதே தவிர, பெண்ணுக்குப் பெயரிட்டு ஓரிடத்தில் கூட அழைப்பதில்லை. ஒரே ஒரு இடத்தில் ஒரு பெண்ணுக்குப் பெயர் இருக்கிறது. முதலையின் மனைவி, குரங்கின் மனைவி, அரச குமாரி என்பதாகவே வருகிறது.அரசியல், நிர்வாகம் பற்றிப் பேசுவதால் பெண்கள் பெயர் தவிர்க்கப்பட்டு இருக்கிறதா? இக்காலத்திலும் கூட, நிர்வாகத்திலும், அரசியலிலும் பெண்கள் பங்கு மிகக் குறைவுதான். அன்றைய கால கட்டத்தில் அரசு பரிபாலனத்தில் பெண்களின் பங்கு அறவே கிடையாது. அந்தக்காலத்தில் இவர்களின் பங்கு அந்தப்புரத்துடன் சரி.

அதே போல பஞ்சதந்திரத்தில் கடவுள் இடம் பெறவும் இல்லை. காளை மாட்டைப் பற்றி குறிப்பிடும் போது அது சிவனுக்கு வாகனமாயிருந்தது என்று ஓரிடத்தில் உள்ளது. கடவுள் வாழ்த்து என்ற பாடல் ஒன்று ஆரம்பத்தில் இடம் பெற்றிருக்கிறது. அது பஞ்சதந்திரத்தின் ஆரம்பப் பாடலாக இடம் பெற்றிருக்கிறது. அந்தக் கால முறைப்படி கடவுள் வாழ்த்துடன் துவங்க அந்தப் பாடல் பயன் பட்டிருக்கிறது. 1910 இல் நூலாக்கப்பட்ட – பண்டிட் ஜ்வாலா ப்ரசாத் மிஸ்ரா என்பவரால் வெளியிடப்பட்ட முதல் நூல் இது- அதில் சம்ஸ்கிருத மூலத்துக்கு ஹிந்தியில் பொழிப்புரை கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக விஷ்ணு சர்மனால் அறிஞர்களுக்கு வந்தனம் சொல்லும் பாடல் ஒன்றும் இடம் பெற்றுள்ளது. அதையும் ஹிந்தியில் மொழிபெயர்த்து இருக்கின்றனர். தமிழில் இந்த இரு பாடல்களும் இடம் பெறவில்லை. இந்தத் தமிழ் மொழிபெயர்ப்புக்கு பூர்ணபத்திரரின் பிரதியே மூல நூலாக அமைந்துள்ளது கடவுள் வாழ்த்தில் விஷ்ணு சர்மா ப்ரம்மா, விஷ்ணு, கார்த்திகேயன், மழை, காலன், நெருப்பு, இந்திரன், சந்திரன், குபேரன், சூரியன், சரஸ்வதி, கடல், நான்கு வேகங்கள், மலை, காற்று, பூமி, வாசுகி முதலான பாம்புகள், நதி, அஸ்வினி குமாரர்கள், லட்சுமி, காஸ்யபரின் மனைவி, தேவர்கள், புனித நீரிடங்கள், (காசி முதலானவை) ய்க்ஞம்(திதிகள்) வசு( எட்டு திக்கு தேவர்கள், முனி(வியாசர் போன்றவர்கள்) கோள்கள் (ஒன்பது கிரகங்கள்) எல்லாவற்¨றையும் கூறி எங்களைக் காப்பற்றுங்கள் என்று கூறுகிறார்.

அடுத்ததாக தனக்கு முன்பாக வாழ்ந்த அறிஞர்களுக்கு வந்தனத்தில் சுயமாய்த்தோன்றிய முனி, சுக்கிரன், வியாசர், பராசர் போன்ற முனிவர்கள் பண்டிதர்கள், சாணக்கியன் மற்று எனக்கு முன்னால் நீதி சாஸ்திர நூல் எழுதிய அனைத்து முன்னோர்களுக்கும் வணக்கம் என்று இயற்றப்பட்டுள்ளது.

கடவுள் வாழ்த்திலும் இயற்கையையும் கடவுளர்களையும் இணைத்தும் எழுதப்பட்டிருக்கிறது.

சிலேடை ஆங்காங்கே காணக்கிடைக்கிறது. தூணுக்கும், மந்திரிக்குமான சிலேடை, பாம்புக்கும் அரசனுக்குமான சிலேடை, சூரியனுக்கும் குடிகாரனுக்குமான சிலேடை, என்று இருக்கிறது. மூல மொழியில் இருக்கும் மொழித்திறமையை நாம் இந்த சிலேடைகளில் உணர முடியாது. பொருள் மட்டுமே அறிய இயலும்.

சம்ஸ்கிருதத்தில் சுலோகங்கள் கவிதை நடையில் இருக்கின்றன. மொழி பெயர்ப்பில் உரைநடை வடிவம் உள்ளது. இத்தனை சுலோகங்களையும் ஆங்காங்கே விதைத்து கதைப் போக்கை நடத்திச் சென்ற விஷ்ணுசர்மனின் வாசிப்பு அறிவும் வியப்பூடுகிறது. இவைகள் எதிலிருந்தெடுத்தாளப்பட்டது என்பதும் கண்டறிய முடியவில்லை.

பெண்களைப்பற்றி கூறப்பட்டுள்ள பலதும் முன்னமே சொல்லியதைப் போல சற்று வேதனையாக இருக்கிறது.

‘உயர உயரக் குதித்தாலும், பருப்பு வாணலியை உடைக்க முடியுமா?’

‘மேலும் ஸ்திரிகள் விஷயம் தான் தெரிந்ததாயிற்றே’

ஒருவனோடு வம்பளப்பாள். இன்னொருவனைக் கனிவுடன் பார்ப்பாள். மூன்றாமவனை மனதில் நினைத்துக் கொண்டே இருப்பாள். யாரைத்தான் பெண் திடமாகக் காதலித்தாள்’

‘எத்தனை கட்டைகள் போட்டாலும் நெருப்பு திருப்தி இல்லை.

எத்தனை நீரைக் கொட்டினாலும் சமுத்திரத்திற்கு திருப்தி இல்லை.

எத்தனை ஜீவராசிகளைக் கொண்டாலும் யமனுக்கு திருப்தி இல்லை.

எத்தனை ஆண்களைச் சேர்ந்தாலும் பெண்களுக்கு திருப்தி இல்லை.’

இது போன்று பெண்ணை மலினப்படுத்தும் பல சுலோகங்களை விஷ்ணு சர்மன் எடுத்தாண்டிருக்கிறார்.

பஞ்ச தந்திரம் முழுக்க முழுக்க நிர்வாக அரசியல் என்று முன்னுரை கொடுத்திருக்கிறார் ஹிந்து ஆர். நடராஜன். இது அரசியல், நிர்வாகம் இரண்டும் கலந்ததாக எனக்குத் தோன்றியது. நிர்வாக அரசியல், அரசியல் நிர்வாகம் இரண்டும் இருக்கிறது இதில். இந்த இரண்டும் கலந்த வாழ்க்கை முறை முக்கியமாக சாதாரண மக்களுக்கு என்று இல்லாமல் ஆளும் அரசர்களுக்கும், தலைமை ஏற்று நடத்தும் முன் வரிசை மக்களுக்கும் ஆன கதைகள் இவை. நீதி போதனை என்று நேரடியாகக் கொடுக்கப்படாமல் எல்லாமே கதைகள் மூல எளிய முறையில் சொல்லப்பட்டிருக்கிறது.

‘அரசர்கள் நாடுகளை விழுங்குகிறார்கள்.

வைத்தியர்கள் நோயாளிகளை விழுங்குகிறார்கள்.

வியாபாரிகள் சரக்கு வாங்குபவர்களை விழுங்குகிறார்கள்.

பண்டிதர்கள் மூடர்களை விழுங்குகிறார்கள்.’ என்று எத்தனை எளிமையாக ஆனால் கடுமையானதை சொல்லி இருக்கிறது.

இதுதானே வியாபாரம்.

இதுதானே அரசியல்.



‘பற்றற்றவன் அதிகார பீடத்தில் அமர மாட்டான்.’

‘புத்தியற்றவன் முகஸ்துதி செய்ய மாட்டான்’

இந்த சுலோகம் சூரியனுக்கும் குடிகாரனுக்குமான சிலேடை.



அரசனுக்கும், அவனுக்குக் கீழ் உள்ளவர்களுக்குமான அரசியல் நிர்வாகம்.

அரசனின் அருகில் இருக்க வேண்டிய நபர்களுக்காக, அரசனின் குண தோஷங்கள் கண்டு தனது தூரத்தை நிர்ணயம் செய்ய வேண்டிய நிர்வாகம்.

கணவன், மனைவியிடையே ஏற்படும் குழப்பங்கள் அதை சீர் செய்யும் நிர்வாகம்.

ஆணுக்குத் தனியாகவும் பெண்ணுக்குத் தனியாகவும் நிர்வாக முறை. பணத்தை சம்பாதிக்க நிர்வாகம்.

பணத்தை இழந்த பிறகு அடையும் வேதனையிலிருந்து வெளியேற நிர்வாகம்.

தனக்குக் கிடைத்த இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள பராமரிக்கவும் ஆன அரசியல்.

ஒருவன் அடைந்த இடத்திலிருந்து அவனைக் கிளப்பி அந்த இடத்தைப் பிடிப்பதற்கான அரசியல்

என்று எதிர் எதிர் துருவங்களுக்குமான அரசியல் தந்திரங்களையும் விஷ்ணுசர்மன் பஞ்சதந்திரத்தில் விலாவாரியாகச் சொல்லியிருக்கிறார். சுலோகங்களுடன்.



மொழிபெயர்ப்பு மிக எளிமையாயும் நேர்த்தியாகவும் தெளிவாகவும் இருக்கிறது. சம்ஸ்கிருதம் நன்கு அறிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். மூலத்திற்கு மிக நெருக்கமாகவும் அழகாகவும் மொழிபெயர்ப்பு இருக்கிறது என்றும் தெரிந்து கொண்டேன். அன்னபூர்ணா ஈஸ்வரனின் உரையும் இதில் இருக்கிறது.



இந்த விவரங்களை சக்தி.வை.கோவிந்தனின் முன்னுரையிலும் படிக்க முடிகிறது. அதுவும் இங்கு இணைக்கப்பட்டிருக்கிறது. 1958 இல் கணினியும், கைப்பேசியும் இல்லாத தொடர்பு சாதனங்களுக்காக அலைந்து, பாடுபட்டு, தகவல்கள் சேகரித்து, ஆதாரங்களை சேர்த்து வெளியிட்டிருக்கும் கோவிந்தன் எப்படி பாடுபட்டு இதைச் செய்திருப்பார்? அதை எண்ணும் போது அவருடைய பணி தமிழுக்காக நூல்களுக்காக அளவிடமுடியாதது. பஞ்சதந்திரம் எந்த எந்த மொழிகளில் அக்காலத்தில் மொழிபெயர்ப்பு ஆகி இருக்கிறது என தகவல்கள் கொடுத்திருக்கிறார்.

கெட்டி அட்டையில், எழுத்துப் பிழைகளே இல்லாமல், தரமான அச்சில், மலிவு விலையில், நல்ல தாளில் … இது ஒரு முன் உதாரணம். ஓரிரு நூல்கள் வந்த உடனேயே மிகுந்த தமிழ்ச் சேவை செய்து களைப்படைந்துவிட்டதைப் போலவும், அதற்குத் தகுந்த அங்கீகாரத்தை இந்த தமிழ் கூறும் நல்லுலகம் தனக்குக் கொடுக்கவில்லை என்றும், அடுத்தவர்களின் எழுத்துக்களைக் குப்பை என்றும், பரிசுகள் குவியவில்லை எனவும் கூவி கூவி விற்கும், புலம்பும் நம்மிடையே இப்படியும் வாழ்ந்திருக்கிறார்கள்.

சக்தி. வை.கோவிந்தனுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் நாம்.



ஹிந்து நடராஜன் நல்ல நண்பர். அவரிடம் எல்லோரிடமும் எப்போதும் வியந்து சொல்லிக்கொண்டே இருக்கும் பஞ்ச தந்திரம் பற்றி பேசினேன். அதைப் பதிப்பிக்க வேண்டும் என்றும் சொன்னேன். அவர் தானும் அந்த நூலைமிகவும் மதிப்பதாகவும், அந்த தந்திரங்கள் மேனேஜ்மெண்ட் எனப்படும் நிர்வாகவியல் முறையில் நிறைய ஆராய்ந்திருப்பதாகவும் சொல்ல, உடனே அவரிடம் அதற்கு ஒரு அணிந்துரை கொடுக்க முடியுமா? என்று கேட்டேன். என்னால் நம்பவே முடியவில்லை, இரண்டே நாளில் எழுதி கணினியில் பதிவு செய்து அனுப்பிவிட்டார். அணிந்துரைக்காக காத்திருந்த, காக்க வைத்த அனுபவமும் எனக்கு உண்டு. அவருக்கு என் நன்றி.

நூலைப் பதிப்பிக்க தமிழ் வளர்ச்சித் துறைக்கு நிதி உதவிக்காக விண்ணப்பித்திருந்தேன். குழுவினரின் ஆதரவுடன் அது தேர்வாகியது. எனவே எனக்கு ஊக்கம் அளித்த தமிழ் வளர்ச்சித் துறைக்கு நன்றி.

ஐம்பத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் (பிப்ரவரி 1958) அச்சடிக்கப்பட்ட பழைய நூல் அது. பழுப்பு நிறத்திற்கு மாறி இருந்தன பக்கங்கள். தொட்டால் உதிரும் நிலை. தட்டச்சுசெய்ய என் தோழி அமுதாவை அணுகியபோது அந்தப் பொடியும் பக்கங்களிலிருந்து புத்தகத்திற்கு சேதாரம் வராத வகையில் அதை சரியான நேரத்திற்கு தட்டச்சு செய்து கொடுத்ததற்கு மிக்க நன்றி.

திண்ணையில் பஞ்ச தந்திரத்தைத் தொடராகப் போட முடியுமா? அது நூலாவதற்கு முன்னதாக இன்னமும் சிலரையும் சென்றடைந்தால் நன்றாக இருக்குமே என்று திண்ணை இணைய இதழ் ராஜாராமனைக் கேட்ட போது உடனேயே ஆரம்பித்து அதை ‘திண்ணை’ இணைய இதழில் தொடராக வெளியிட்டுக்கொண்டிருக்கும் ராஜாராமனுக்கு நன்றி.

இன்னமும் சில விஷயங்களை இந்த முன்னுரையில் கூற வேண்டும். கணினியைப் பற்றி சொல்லாமல் எதையுமே சொல்ல முடிவதில்லை. அப்படியான காலம் இது. கணினியில் பஞ்சதந்திரம் பற்றிய குறிப்புகளைக் கண்டு மகிழ்ந்தேன். எத்தனை அழகழகான ஓவியங்கள். அவற்றிலிருந்து சிலவற்றை எடுத்து முகப்போவியமாகவும், பின் அட்டை ஓவியமாகவும் உள்ளே சில கருப்பு வெள்ளைப் படங்களாவும் கொடுத்திருக்கிறோம்.

எல்லாவற்றையும் பிரமிப்பையே கொடுத்த பஞ்சதந்திரம் எனக்கு ஒரு அதிர்ச்சியையும் கொடுத்தது. கணனியின் மூலமாக. கணினியில் தமிழில் பஞ்சதந்திரம் என்று தட்டினால் கொட்டுவது, கமலஹாசன் நடித்த பஞ்சதந்திரம் சினிமா மட்டுமே. இனிமேல் மொழிபெயர்ப்பு பஞ்சதந்திரமும் தமிழ் என்பதில் இடம் பெற வேண்டும். மற்றபடி ஆங்கிலம், ஹிந்தி, சம்ஸ்கிருதம் என்று எல்லாவற்றிலும் விஷ்ணு சர்மனின் பஞ்சதந்திரம் பற்றிய தகவல்கள் கொட்டுகின்றன. கல்லூரியில் (காசியில்) பாடத்திட்டமாக வைத்திருந்தது. அவை எத்தனை பிரதிகள் அச்சிடப்பட்டன. எத்தனை பதிப்புக்களைக் கண்டிருக்கிறது என எல்லா விவரமும் கிடக்கின்றன.

பொருளீட்ட இதை மறு பதிப்பு செய்யவில்லை. தமிழில் நூல்கள் வெளியிட்டு, தரமான நூல்கள் வெளியிட்டு லாபம் அடைந்ததாக வை.கோவிந்தன் காலத்திலும் சரி தற்காலத்திலும் சரி கிடையாது. நூலக ஆணை இருந்தால்தான், நூல்கள் அடுத்தடுத்து வெளியிட பணமும், குடும்பத்தின் அனுமதியும், குழந்தைகளிடம் மரியாதையும் கிடைக்கும்.


1910 ஆம் ஆண்டு பதிப்பித்த பஞ்சதந்திரம் (சம்ஸ்க்ருதம்) நூலுக்கு பண்டிட் ஜ்வாலா பிரசாத் மிஸ்ரா எழுதிய முன்னுரைலிருந்து சில பகுதிகளையும் இணைக்கலாம் என்றுஎண்ணினேன்.

அதில் நமது பாரத தேசம் கல்விகளின் புதையல், இங்கு அரசியல் சாஸ்திரங்களுக்கும் குறைவில்லை. பெரும் அறிஞர்கள் ஞானிகள் இந்த நாட்டில் பிறந்து அரும் பெரும் செல்வங்களை நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார் என்று ஆரம்பிக்கிறார்.


பஞ்சதந்திரம் படைத்த விஷ்ணுசர்மன் நீண்டகாலத்திற்கும் முன்னதாக நமது நாட்டில் வாழ்ந்தவர். அவரின் அறிஞர்களுக்கான வந்தனத்திலிருந்து அவர் சாணக்கியர் காலத்துக்குப் பிறகானவர் என்று இருக்கலாம் என்கிறார்.


வெகு காலத்திற்கு முன்பாகவே பஞ்சதந்திரம் செவி வழிக்கதைகளாய் மக்களிடையே இருந்து வந்திருக்கிறது. காலத்தின் ஓட்டத்தில் இந்த பஞ்சதந்திரம் பல வெளி நாட்டவர்களால் கருப்பொருளின் உயர்வு உணரப்பட்டு ஆசியா, ஐரோப்பியா அமெரிக்கா ஆகிய நாடுகளில் பரவலாக அறியப்பட்டுள்ளது என்கிறார் ஜ்வாலா பிரசாத் சர்மா.


மேலும் ஜ்வாலா ப்ரசாத் சர்மா தனது முன்னுரையில் பஞ்சதந்திரம் எழுதிய விஷ்ணுசர்மன் என்பது அவரின் உண்மைப் பெயராய் இருக்க வேண்டியதில்லை. எனவே இவரின் காலத்தை கண்டு பிடிப்பதில் மிகுந்த சிரமங்கள் இருக்கின்றன. நமது நாட்டில் பல நூல்களை எழுதிய அறிஞர்கள் தமது அடையாளத்தை வெளியிடுவதில்லை. எந்த இடத்தைச் சேர்ந்தவர்கள், என்ன குலம், எந்தப் பகுதி, எந்த சந்தர்ப்பத்தில் எழுதப்பட்டது, போன்ற எந்த அடையாளத்தையும் அது விட்டுச் செல்வதில்லை. அது தேவை என்று அவர்கள் கருதுவதும் கிடையாது. மகாபாரதம், ராமாயணம் போன்ற நூல்களை எழுதியர்களின் பெயர்கள் கூட காரணப்பெயர்களாக இருக்கின்றன. அவர்களின் உண்மைப் பெயர் நமக்குத் தெரியாது. புற்றிலிருந்தவர் அதனால் வால்மீகி என்றும் வேதத்தை உரைத்தவர், அதனால் வேதவியாசர் என்ற பெயராலும் அவர்களை அறிகிறோம்.

‘பஞ்சதந்திரம் மற்றும்’ ‘ஹிதோபதேசம்’ இரண்டும் ஹிப்ரூ, லத்தீன், கிரேக்க, இத்தாலி, சயாரிஜ், ஜெர்மனி, பிரெஞ்சு, ஸ்பானிஷ், அரபி, பாரசீகம், துருக்கி, சீனா, உருது ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது. (இது 1910 ஆண்டு எழுதப்பட்ட முன்னுரை)

இவர்கள் சாதாரண மக்களோடு மக்களாக வாழ்ந்து கொண்டிருந்தாலும், எழுத்தில் தம் அடையாளம் அற்று எழுத்தையே அடையாளமாக்கி விட்டுச் சென்றிருக்கிறார்கள். இந்தநூலின் மறு பதிப்பு மக்களைச் சென்றடையும் என்று நம்புகிறேன். ஆசைப்படுகிறேன். அரசியலும், நிர்வாகமும், வாழ்வியலும் நிறைந்த இந்த நூல் இன்னமும் வெவ்வேறு தளங்களில் ஆராயவும் இடம் கொடுக்கிறது.

சக்தி வை.கோவிந்தன் அவர்களின் நூற்றாண்டான இந்த ஆண்டில் இந்நூலைப் பதிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


அக்டோபர்-2012

சென்னை-600 047

க்ருஷாங்கினி


http://inthiya.com/?p=15488

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.