Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரட்டை முகவர்கள் அணியும் அரசியல்-இராணுவ-ஊடக முகமூடிகள்

Featured Replies

முதலில் இங்கிணைக்கப்பட்டுள்ள காணொளியை பாருங்கள்..

http://youtu.be/6Hd1QyvKM1o

சிறீரங்கவின் பேச்சு ஏதோ தமிழ் மக்கள் மீது அக்கரையுள்ளதாகவும் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தமிழ் மக்களை ஏமாற்றுவதாகவும் சுமந்திரன் போன்றோர் அரசியல் தீர்வு பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ள தமிழ் உணர்வாளர்கள் அனுமதிக்கக் கூடாது போன்ற ஒரு மாபெரும் விம்பத்தை பாராளுமன்றத்தில் உருவாக்கிறது.

உண்மையில் மகிந்த மாத்தயா வீட்டு குசினிவரைக்கும் சிறீரங்கா போய்வரும் விசயம் சிலபேருக்குதான் தெரியும்.

ஒரு வகையில் டகிளஸ் தேவனந்தா போன்றவர்களின் அரசியல் வெளிப்படையானது. அவரது அரசியல் தென்னிலங்கையில் ஆளும் அரசாங்கத்திடன் 'ஒட்டி' செய்யும் வழிப்பாட்டு அரசியல். டக்கிளஸுடன் ஒப்பிடும்போது, உண்மையில் சிறீரங்கா ஒரு இரட்டை முகவராக (Double agent) அரசியலில் செயல்படும் மிக அபாயகரமான தமிழ் அரசியல் வாதி. இவர்கள் தமிழ் மக்களுக்கு குரல் கொடுப்பதுபோல் தமிழ்த்தேசியத்தை திட்டமிட்டு பலவீனப்படும் சிங்கள பேரினவாத அரசின் இரகசிய அரசியல் முகவர்கள்.

இதேபோல் இன்னொருவகை இரட்டை முகவர்கள் இலங்கை புலனாய்வுத்துறையுடன் இணைந்து புலம்பெயர்தேசத்தில் செயல்படுகிறார்கள். சுவிஸில் இருந்து இலங்கைநெற் எனும் பெயரில் ஒரு இணையத்தை நடத்தும் சங்கர் என அழைக்கப்படும் கேதீஸ்வரன் என்பரும் ஒரு இரட்டை முகவர் ஆகும்.

புளொட் அமைப்பில் இருந்த இவர் புலனாய்வுத்துறையுடமன் இணைந்து செயல்பட்டதால் விடுதலைப்புலிகள் அமைப்பினால் வெள்ளவத்தை பகுதியில்வைத்து தாக்குதலுக்கு உள்ளானவர். அதனால் தனது இரண்டு கால்களையும் இழந்தவர். சுவிஸில் அகதி தஞ்சம் கோரியுள்ள இவர் இலங்கை புலனாய்வுத்துறையின் சம்பளப்பட்டியலில் இன்னும் உள்ளவர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தில் மிக முக்கிய பங்காற்றிய மறைந்த மாமனிதர் சிவராம் படுகொலையுடன் இலங்கைநெற் சங்கர் தொடர்புபட்டவர். சிவராம் கடைசியாக பெற்ற தொலைபேசி அழைப்பு சங்கர் என அழைக்கப்படும் கேதீஸ்வரனால் எடுக்கப்பட்டதாகும்.

இவரது இலங்கைநெற் இணையம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு எதிராக தொடர்சியாக செய்திகளை வெளியிடுவதுடன் கிழக்கு மாகாணத்தை பிறப்பிடமாக இவர் கொண்டுள்ளதால் மட்டக்கிளப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் 'மண்டையைக்கழுவி' கூட்டமைப்புக்குள் ஒரு வடக்கு கிழக்கு பிளவை ஏற்படுத்த மிகத் தீவிரமாக வேலைசெய்கிரது. இதனைக்கும் இவர் வேலைக்கு செல்வதில்லை. சுவிஸ் அரச நிவாரணத்தில் இருக்கும் இவர் இலங்கைநெற் மூலம் தமிழ்த்தேசியத்தை கருவறுக்கும் வேலையை கச்சிதமாக செய்து வருகிறார்.

சிறீரங்கா எப்படி மகிந்தவின் செல்லப்பிள்ளையோ அப்படிதான் கெந்தவிதாரணயின் செல்லப்பிள்ளை இலங்கைநெற் சங்கர் ஆகும்

Edited by ராஜகுரு

  • தொடங்கியவர்

சுமந்திரனிடம் செவிப்பறை வெடிக்க வாங்கிக்கட்டினார் யோகேஸ்வரன்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரான யோகேஸ்வரனுக்கு தேசியப் பட்டியல் எம்பி செவிப்பறை வெடிக்க அடித்தாரா? தலையங்கம் சற்றுச் சங்கடமாகத்தான் இருக்கும், ஆனால் செவிப்பறை வெடிக்க கையால் அல்ல சொல்லாலும் செயலாலும் குடுத்திருக்கின்றார் சுமந்திரன் யோகேஸ்வரனுக்கு.

இன்ரர்நெஷ்னல் அலேட் என்கின்ற அமைப்பினால் 40 வயதுக்கு உட்பட்ட பாரளுமன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சிப் பட்டறை ஒன்று பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உரிமைகள், மக்கள் தொடர்பாடல், முகாமைத்துவம், பல்லினச்சமூகங்களுடனான உறவைபேணுதல் போன்ற விடயங்களில் இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு தம் ஆற்றலை வழர்த்துக்கொள்வது என்ற பயிற்சியை வழங்குவதே இப்பட்டறையின் நோக்கமாகும்.

இப்பயிற்சிக்காக நமது பாராளுமன்றிலிருந்தும் 40 வயதுக்குட்பட்டவர்களை இன்ரர்நெஷ்னல் அலேட் சார்பாக வன் ரெக்ஸ்ட் இனிசியேட் என்கின்ற நிறுவனம் ஒருங்கிணைக்கும் வேலையினைச் செய்துள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து 3 உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து 2 பாராளுமன்ற உறுப்பினர்கள், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸிலிருந்து 1 பாராளுமன்ற உறுப்பினர் என மேற்படி நிகழ்வுக்காக தெரிவு செய்யப்பட்டிருந்ததுடன் அவர்கள் தற்போது பிரித்தானியாவில் தங்கியுள்ளனர். அவர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் அல்லாத தமிழர் ஒருவரும். யார் இந்த தமிழர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து மேற்படி குழுவிற்கான தெரிவு என்ற விடயம் வந்தபோது கூட்டமைப்பில் 40 வயதுக்கு குறைவான பாராளுமன்ற உறுப்பினராக உள்ள ஒரே ஒருவர் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன். அவர் இப்பயிற்சியினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் தலைமையிடம் அனுமதி கோரியபோது யோகேஸ்வரனின் செவிப்பறை வெடித்துள்ளது. ஆங்கிலம் தெரியாமல் லண்டன் சென்று மானத்தை கப்பலேற்ற போறீரோ என கேட்டகப்பட்டாராம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு இத்துடன் நின்று விடவில்லை பாராளுமன்ற உறுப்பினரின் இடத்திற்கு பிரதேச சபைச் தலைவர் ஒருவரை அனுப்புவதற்கு தீர்மானித்துள்ளது. அத்தேர்வு எவ்வாறு இடம்பெற்றது. அவர் சுரேஸ் அணியைச் சேர்ந்தவரா? சம்பந்தன் அணியைச் சேர்ந்தவரா? அன்றில் சுபந்திரனுக்கு மிகவும் நெருக்கமானவரா என்பதெல்லாம் கேட்க்கக்கூடாது.

வலிகாமம் வடக்கு பிரதேச சபைத் தலைவர் ஆங்கிலம் பேசுவாராம் எனச்சொல்லி பிரித்தானிய வீசாவிற்கு அனுப்பியுள்ளார்கள். குறிப்பிட்ட நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கானது என்ற கூறப்பட்டு வீசா நிராகரிக்கப்பட்டுள்ளது. சுகிர்தர் என்ற வலி வடக்கு பிரதேச சபைத்தலைவர் பாஸ்போர்டில் றிஜெக்ட் சீலை குத்தி கொண்டு வெளியில் வந்தவுடன், பிறிதொருவர் வெளியில் பாஸ்போர்டுடன் நின்றுள்ளார். அவருக்கு வீசா வழங்கப்பட்டுள்ளது. அவர் குறிப்பிட்ட குழுவுடன் லண்டன் சென்று மேற்படி பயிற்சியில் கலந்து கொண்டுள்ளார்.

ragu.jpg

இவர் யார்? இவர் பெயர் ரகு பாலச்சந்திரன். சுமந்திரனின் நெருங்கிய சகாவாம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தேசியமும் எங்கே போகின்றது. மக்கள் பிரதிநிதி ஒருவரை ஆங்கிலம் தெரியாது என நிராகரிக்கின்றார்கள். அதேநேரம் ஆங்கிலம் தெரிந்தவர் என பாராளுமன்ற உறுப்பினர் அல்லாதவர் ஒருவரை வீசா கேட்டு அனுப்புகின்றார்கள். பிரித்தானியா வீசாவை நிராகரிப்பதற்கு காரணம் பாராளுமன்ற உறுப்பினர் இல்லை என சொல்லப்பட்டுள்ளது. ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் அல்லா சுமந்திரனின் சகாவிற்கு அதே நிகழ்வில் பங்கேற்பதற்கு வீசா வழங்கப்பட்டுள்ளது.

பின்தங்கிய பிரதேசத்திலிருந்து , மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி பின்தங்கியவராகவே இருக்கவேண்டும். ஆங்கிலம் பேசத்தெரிந்த மேல்தட்டு வர்க்கத்தினராகிய நாங்கள் சகலவற்றையும் பார்த்துக்கொள்வோம் , மக்கள் எங்களுக்கு வாக்குப்போட வேண்டும், அத்துடன் நீங்கள் தெரிவு செய்கின்றவர்கள், நாங்கள் சொல்லற பக்கத்துக்கு தலையாட்டவும், கைதூக்கவும் தயாராகவிருக்கவேண்டும், மீறினால் செவிப்பறை வெடிக்கும் எனச் செயல்படுகின்றது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை.

Source - ilankanet.com - இலங்கைநெற்

த.தே.கூ விற்கு ஞனாம் பிறந்தது. ஊனமுற்ற புலிகளை விடுவிக்கட்டமாம்!

போரில் காயமுற்று ஊனமுற்ற நிலையில் தற்போது வெலிக்கடை, அனுராதபுரம் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிகளை அரசு விடுவிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்த் தேசக் கூட்டமைப்பின் சார்பில் இலங்கை நீதித்துறை அமைச்சர் ரவூப் ஹக்கீமை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான ஆளும் சிறிலங்க சுதந்திரக் கட்சிக் குழுவை சந்தித்துப் பேசிய போது இந்தக் கோரிக்கையை சுரேஷ் பிரேமசந்திரன் தலைமையிலான குழு முன் வைத்துள்ளது.

இக்கோரிக்கை தொடர்பாக சட்ட மா அதிபர் திணைக்களத்துடன் பேசுவதாக அமைச்சர் ஹக்கீம் உறுதியளித்துள்ளார்.

போர் இறுதிக்கட்டத்தை அடைந்திதுந்தபோது புலிகள் ஊனமுற்ற புலி உறுப்பினர்களை கரும்புலிகளாக அனுப்பி வெடித்து சிதற வைத்திருந்தனர். மேலும் யுத்த முடிவில் புலிகளின் தலைவர்கள் சரணடைவதற்கு முன்னர் எஞ்சியிருந்த ஊனமுற்ற புலிகளை வாகனம் ஒன்றில் ஏற்றி அவ்வாகனத்தை குண்டு வைத்து தகர்த்தெறிந்தனர் என்பது யாவரும் அறிந்தது.

இவ்வாறு புலிகளிடமிருந்து அங்கவீனர்களை காப்பாற்ற முயலாத ததேகூ ற்கு தற்போது ஞானம் பிறந்துள்ளது என பலரும் ஆச்சரியப்பட்டுகின்றனர்.

Source - ilankanet.com - இலங்கைநெற்

  • தொடங்கியவர்

முன்னாள் போராளிகளை கண்டுபிடிக்க அரங்கேறும் சதித்திட்டம் : சனல் 4 ரூபத்தில் உலா வரும் உளவுப்படை

Channel4KillingFieldsPoster.jpg

சனல் 4தொலைக்காட்சி செய்தியாளர்கள் எனத் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு, இந்தியாவில் தங்கியுள்ள ஈழத் தமிழர்களில் போராட்டத்துடன் தொடர்புடையவர்களைக் கண்டறியும் சதித்திட்டமொன்று அரங்கேறி வருவதாகவும், இது குறித்து தமிழர்கள் உஷராயிருக்கவேண்டும் எனத் தெரிவித்தும் தமிழ்த்தாய் இணையத்தளம் செய்தி ஒன்றினை வெளியிட்டிருக்கின்றது.

அதன் விவரம் வருமாறு :

பிரித்தானியாவில் இருந்து இயங்கும் சனல் 4 தொலைகாட்சி ஈழ தமிழர்களின்விடியலுக்காக தன்னை அர்ப்பணித்துஅயராது உழைத்து வருகின்றது .பலர் அந்த தொலைகாட்சிக்காக பல போர்குற்ற ஆவணம்களை அளித்து வருவதுடன் தாம்சந்தித்த இன்னல்களையும் எடுத்தியம்பி வருகின்றனர்.

இந்தியாவை மையமாக வைத்து பலமுதுநிலை படைய போராளிகள் மறைந்து வாழ்வது தெரிந்ததே. அத்துடன் இலங்கை இராணுவத்தினால்பதிக்க பட்ட பல நூறு தமிழர்களும் அங்கே வாழ்கின்றனர். இவர்களைக் கைது செய்யும் முகமாக சனல் 4 தொலைக்சாட்சி செய்தியாளர்கள் தாமென கோரி செவ்வி கண்டுள்ளது புதிய மர்ம கும்பல் ஒன்று.

இந்த புதிய முகமூடி தமிழர் கும்பலை நம்பி அவர்களும் செவ்வி அளித்துள்ளனர் .இதனை மேப்பம் பிடித்த அந்த நாட்டு உளவு படை அவர்களை மடக்கி பிடித்துள்ளது . இந்த் சம்பவத்தில் முக்கிய சில முன்னாள் போராளிகள் அவர்கள் வசம் சிக்கியுள்ளனர். சனல் 4தொலைகட்சிக்குள் தமிழர்கள் இருப்பதாகவும் அவர்களே பல் போர்குற்ற ஆதாரங்களை வழங்கி வருவதாகவும் நம்பும் இலங்கை அரசு தமிழர்களை வைத்து அவர்களே தாம் என கோரி இந்த புதிய குழப்பகரமான நாசகார வேலையினை செய்துள்ளது .இதனை செய்த நபர் பேட்டி காண சென்ற நபர் தமிழக தலைவர்களை தமது பிடிக்குள்வைத்திருக்கும் நபர் என்றும் கண்டறியபட்டுள்ளது .

இவர்களின் பின்னால் பெரிய புலனாய்வு சூழ்ச்சி திட்டம் ஒன்று அரங்கேறிவந்துள்ளது அம்பலமாகியுள்ளது .

எனவே இந்தியாவில் உள்ள தமிழர்கள் தாம் சனல் 4 தொலை காட்சி எனகோரி யராவது வந்து உங்களுடன் செவ்வி காண முற்பட்டால் உடன் பிரித்தானியாவின் லண்டன் பகுதியில் அமைந்துள்ள அவர்களின் காரியாலயத்திற்கு அழைத்து இவர்கள் தான் அவர்களா என உறுதிப்படுத்திய பின் உங்களது செவ்விகளை வழங்குங்கள் என தயவு கூர்ந்து தெரிவித்து கொள்கின்றோம் .

Telephone: 0044- 207 306 8444, Telephone 0044-20 7396 4444 என்ற எண்ணுடன் தொடர்பு கொண்டு கேளுங்கள்.

உங்கள் உயிர் காத்து தப்பி வந்த நீங்கள் இந்த புதிதாக உருவாக்கபட்டு வழிநடத்த பட்டு வரும் புதிய மர்ம கும்பல்களிற்குள் சிக்கி சீரழிந்துபோகாதீர்கள் என தாழ்மையுடன் வேண்டி நிற்கின்றோம் .

இந்த செய்தியினை அனைத்து ஊடகங்களும் பர பட்சம் இன்றி தங்கள் ஊடகங்களிலும்வெளியிட்டு உதவுமாறு தாழ்மையுடன் வேண்டி கொள்கின்றோம்.

(யாழ் உதயன் பத்திரிகை செய்தி)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.