Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடிசன தொகை மதிப்பீட்டின் அடுத்தக்கட்ட பணிகள் பெப்ரவரியில்

Featured Replies

குடிசன தொகை மதிப்பீட்டின் அடுத்தக்கட்ட பணிகள் பெப்ரவரியில்

நாட்டின் 14 ஆவது குடிசன மதிப்பீட்டு மற்றும் தொகை மதிப்பு செயற்பாட்டின் மூன்றாம் கட்டம் எதிர்வரும் பெப்வரி மாதம் 27 ஆம் திகதியிலிருந்து மார்ச் மாதம் 19 ஆம் திகதி வரை வடக்கு கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் நடைபெறும் என்று தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இக்காலப்பகுதியில் சகல நபர்களிடமும் தகவல்கள் பெறப்படும். அதன் பின்னர் மார்ச் 19 ஆம் திகதியிலிருந்து 21 ஆம் திகதிவரையான இறப்புக்கள் மற்றும் பிறப்புக்கள் தொடர்பான திருத்தங்கள் உள்ளடக்கப்படும். வசிப்பதற்கு இடமில்லாது திறந்த வெளியில் வசிப்பவர்களும் கணக்கெடுப்படுவார்கள் என்றும் திணைக்களத்தின் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

நாட்டில் 30 வருடங்களின் பின்னர் முழு நாடும் உள்ளடங்கும் வகையில் இந்த தொகை மதிப்பு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. பொது மக்கள் சரியான தகவல்களை பெற்றுக்கொடுத்து கணக்கெடுக்கும் உத்தியோகத்தர்களுக்கு ஒத்துழைப்பை வழங்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

http://www.virakesar...asp?key_c=35940

  • தொடங்கியவர்

மலசலக்கூடங்கள் தொடர்பாகவும் கணக்கெடுப்பு

நாடாளாவிய ரீதியிலான சனத்தொகை மற்றும் வீடுகள் கணக்கெடுப்பின் மூன்றாவது கட்டம் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளது. இதன்போது, வீட்டிலுள்ளோரின் எண்ணிக்கை, சொத்துக்களை அனுபவிக்கும் காலம், குடிநீர், மின்சாரம், சமையல் எரிபொருள், மலசலகூட வசதிகள், இணைய போன்ற தொடர்புசாதன வசதி, கழிவுகளை அகற்றும் முறை முதலான தகவல்களும் திரட்டப்படும் என தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நடவடிக்கையின் முதல் இரு கட்டங்களிலும் கிராம அலுவலர் பிரிவு மட்டங்களில் உள்ள கட்டிடங்களின் விபரங்கள் திரட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மூன்றாவது கட்ட நடவடிக்கை பெப்ரவரி 27 முதல் மார்ச் 19 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. மார்ச் 20, 21 ஆம் திகதிகளில் மீளாய்வுகள் மேற்கொள்ளப்படும்.

இவை தவிர, நிரந்தர வீடுகள் இல்லாத, திறந்தவெளிகளில் வசிப்போர் தொடர்பான கணக்கெடுப்பு மார்ச் 19 ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ளது.

http://tamilmirror.lk/2010-07-14-09-13-23/33851-2012-01-04-16-42-19.html

இது சம்பந்தமாக, விஷியம் தெரிந்தவர் ஒருவர் சொன்னார்..

இந்த குடிசன மதிப்பீட்டின் பெறுபேறுகள் சிங்களவர்கள் 85 சதவீதமும் முஸ்லீம்கள் 8 சதவீதமும் தமிழர்கள் 7 சதவீதமுமாக தேறுமெனவும்.. 2014/15க்களில் தமிழ் மொழியை இலங்கையில் பெயரளவில் கூட அதிகாரமற்றதாக்குவதுதான் தற்போதய சிங்களத்தின் நிகழ்ச்சி நிரல்.

ஆகவே.. நாம் எல்லொரும் உடனடியாக செய்யக்கூடியது என்னவெண்டல், உடனடியா சர்வதேச சமூகத்துக்கு, கருணை காட்டுமாறு மனு எழுதலாம்.. எழுதவேண்டிய முகவரி www.dietamildie.com

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் இந்த ஒருவிடயத்தில் மட்டும் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கின்றான்

தமிழருக்கு இதில் மட்டுமே சந்தேகங்களும் பயங்களும் அடிபிடிகளும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.