Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குற்றவியல் M-A பட்டம் பெறவுள்ளார் சட்டத்தரணியான நாமல் ராஜபக்க்ஷ!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Namal_R150.jpg

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுக்கு அண்மையில் சட்டத்தரணி பட்டமளிப்பு நடைபெற்றதைத்தொடர்ந்து - குற்றவியலில் முதுகலைமாணி (M-A) பட்டம் வழங்குவதற்கு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தீர்மானித்துள்ளதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்திருந்தது.

எனினும் அவ்வாறான பட்டம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்படவில்லை எனவும் ஆனால் குற்றவியலில் முதுகலை பாடநெறியை தொடர்வதற்கு நாமல் ராஜபக்ஷ பதிவுசெய்துள்ளார். அவர் அப்பட்டத்தை பெறுவதற்கு உரிய நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

குற்றவியல் முதுகலைமாணி பட்டப்படிப்புக்கு தகுதி பெறுவதற்கு குற்றவியலில் பி.ஏ. பட்டத்தை பெற்றிருக்க வேண்டும். அல்லது குற்றவியல் பட்டப்பின்படிப்பு டிப்ளோமா அல்லது முதுநிலை கலை தகுதியை (எம்.ஏ.கியூ) பெற்றிருக்க வேண்டும் என அப்பல்ககை கழகத்தின் மானுடவியல் பிரிவுத் தலைவர் எம்.டபிள்யூ. ஜயசுந்தர கூறினார்.

நாமல் ராஜபக்ஷ எல்.எல்.பி. பட்டப்படிப்புடன் எம்.ஏ.கியூ தராதரத்தையும் கொண்டுள்ளார். எனவே மாணவர் சங்கங்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் அவர் இந்த எம்.ஏ. பட்டப்படிப்புக்கு தகுதி பெற்றுள்ளார் என ஜயசுந்தர தெரிவித்தார்.

இந்த பட்டப்படிப்புக்கு நாமல் ராஜபக்ஷ பதிவுசெய்யும் உரிமையை நாம் நிராகரிக்க முடியாது. ஏனெனில் அனைவருக்கும் போல் அவருக்கும் சமத்துவ சந்தர்ப்பங்களை பெறுவதற்கு உரிமையுள்ளது. அத்துடன் அவர் இதற்கான தகுதியை அவர் கொண்டுள்ளார் என ஜயசுந்தர கூறினார்.

http://www.seithy.co...&language=tamil

ஒரு காலத்தில் இங்கை உட்பட பல ஆசிய நாடுகளின் கல்வித்தகமைக்கு ஒரு மரியாதை இருந்தது. காரணம், திறமைக்கு மட்டுமே இடம் தரப்பட்டது.

இன்றோ, அரசியலும் ஊழலும் அதிகரித்து படிப்பும் பட்டமும் விலைபொருளாகி விட்டன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.