Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திரு.வைத்திலிங்கம் பரமேஸ்வரன் அவர்களுக்கு நாட்டுப்பற்றாளர் என மதிப்பளிக்கப்பட்டது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திரு.வைத்திலிங்கம் பரமேஸ்வரன் அவர்களுக்கு நாட்டுப்பற்றாளர் என மதிப்பளிக்கப்பட்டது.

யேர்மனியில் 20 வருடங்களுக்கு மேலாக உறுதியுடன் தேசியச் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்து 06.01.2012 இன்று சாவடைந்த திரு.வைத்திலிங்கம் பரமேஸ்வரன் அவர்களுக்குத் தமிழீழ விடுதலைப் புலிகளால் நாட்டுப்பற்றாளர் என்று மதிப்பளிக்கப்பட்டுள்ளது.

வீரவணக்கம்

'நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு'

திரு. வைத்திலிங்கம் பரமேஸ்வரன்.

தமிழ்த் தேசிய பணியை அயராது திறம்படச் செய்து வந்த திரு. வைத்திலிங்கம் பரமேஸ்வரன் அவர்களுக்கு 'நாட்டுப்பற்றாளர்' என மதிப்பளிப்பதில் நாம் பெருமை கொள்கின்றோம்.

சிறிலங்கா அரசாங்கம் தமிழினத்தின் மீது நடத்தி வரும் இன அழிப்பு நடவடிக்கைக்கெதிரான தமிழ்த் தேசியப் பணியினை புலம்பெயர்ந்த தேசத்தில் இருந்து திறம்பட செய்தவர் நாட்டுப்பற்றாளர் திரு. வைத்திலிங்கம் பரமேஸ்வரன் அவர்கள்.

திரு வைத்திலிங்கம் பரமேஸ்வரன் அவர்கள் மிக நீண்டகாலமாக ஜேர்மனியில் வாழ்ந்துவந்தபோதிலும் தனது தாய்மண் மீதான தீராப் பற்றின் காரணமாக தமிழீழ விடுதலைப் பயணத்தில் தன்னையும் முற்றுமுழுதாக இணைத்து உறுதி தளராத தேசப் பணியாளனாகத் திகழ்ந்தார். விடுதலைப் போராட்டம் பற்றியும் அதற்கான அவசியம் பற்றியும் முற்றுணர்ந்த நாட்டுப்பற்றாளர் வைத்திலிங்கம் பரமேஸ்வரன் அவர்கள் புலம்பெயர் விடுதலைத் தளத்தில் தனக்கான கடமைகளை ஒரு கணமும் பின் நிற்காது முழுமூச்சுடன் செய்துவந்தார்.

கொடிய நோயினால் உடல் தளர்ந்து கண் மூடும் வேளையிலும் தமிழீழக் கனவுடனேயே அவர் எம்மை விட்டுச்சென்றுள்ளார். நாட்டுப்பற்றாளர் திரு. வைத்திலிங்கம் பரமேஸ்வரன் அவர்களின் பிரிவு தேசியப் பணியில் ஒரு பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தி அவரது குடும்பத்தினருக்கும் பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டுப்பற்றாளர் திரு. வைத்திலிங்கம் பரமேஸ்வரன் அவர்களின் பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கும் ஜேர்மன் வாழ் தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்களுக்கும் தமிழ்பேசும் மக்களோடு இணைந்து எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

அனைத்துலகத் தொடர்பகம்

தமிழீழ விடுதலைப் புலிகள்தமிழீழம்

Parmeshvaran%20LTTE.jpg

அவருடைய இறுதிக்கிரிகைகள் 12.01.2012 வியாழக்கிழமை 10.00 மணியிலிருந்து 13.00 மணிவரை கீழே உள்ள முகவரியில் நடைபெறும் என்பதனை அறியத்தருகின்றோம்.

Neuer Friedhof

Konrat-Adenauer-Ring

66981 Münchweiler a.d Rodalben

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-யேர்மனி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.