Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வலிகாமம் வடக்கில் தொடர்ந்தும் பதற்றமான சூழல் நீடிக்கிறது:

Featured Replies

வலிகாமம் வடக்கில் தொடர்ந்தும் பதற்றமான சூழல் நீடிக்கிறது:- குளோபல் தமிழச் செய்தியாளர்:-

15 ஜனவரி 2012

மக்கள் அண்மையில் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட வலிகாமம் வடக்கில் தொடர்ந்தும் பதற்றமான சூழல் நீடிக்கின்றது.

வலி வடக்கு சேந்தாங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் மாலை மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளில் அப்பகுதி மக்களால் குடியிருப்பு பகுதிகளில் வளர்ந்திருந்த பற்றைகள் வெட்டி தீயூட்டப்பட்டிருந்தது.

அதுவரை இவற்றை பார்த்துக் கொண்டிருந்த கடற்படையினர் திடீரென அப்பகுதிக்கு சென்று அங்கு கூடியிருந்தவர்கள் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தை அடுத்து நேற்று அதிகாலை முதல் சேந்தாங்குளம் பகுதியில் கடற்படையினரும் வலிகாமம் வடக்குப் பகுதியில் நேற்று அதிகாலை முதல் இடம்பெற்ற சுற்றி வளைப்பு தேடுதலில் இராணுவத்தினரும்;;;;;;;;;;;;;;;;;;;;;;;; மேலதிகமாகக் குவிக்கப்பட்டு சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் சேந்தாங்குளம் சந்தியூடாகப் பயணிக்கின்ற அனைத்து வாகனங்களும் சோதனை செய்து வாகன இலக்கம் மற்றும் சாரதிகளின் பெயர் விபரங்களை பதிவு செய்து கையொப்பம் பெற்ற பின்னரே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

இப்பகுதி முழுவதும் கடற்படை மற்றும் இராணுவத்தினரின் வாகனங்கள் வழமைக்கு மாறாக ஓடித்திரிகின்றன. நேற்று நடைபெற்றது போன்று இன்றும் வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தலாமென பதற்றத்தில் மக்கள் இருக்கிறார்கள்.

இதனிடையே வலிவடக்கு பிரதேச சபை தலைவர் சுகித்தன் பொதுமக்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் கடற்படையுடன் பேச சென்ற வேளை தாக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற உள்ளுராட்சி தேர்தலில் கூட்டமைப்பு வலிவடக்கு பிரதேச சபையினை கைப்பற்றியிருந்தது

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/72655/language/ta-IN/article.aspx

சிங்களப் பயங்கரவாதிகளை உடன் அப்புறப்படுத்துமாறும், தாக்குதல் செய்தவர்களை கைது செய்து வழக்குப் பதியுமாரும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குமாறும் கூட்டமைப்பு உடன் கோரியிருக்க வேண்டும்!

வெறுமனே தூதரக அதிகாரிகளுக்கு இரகசியமாக செய்திகளை வழங்கிவிட்டு அவர்கள் ஏதாவது செய்வார்கள் என்றிருப்பதற்கு ஒரு தலைமை வேண்டியதில்லை!

கபடச்செயலே சேந்தாங்குளம் தாக்குதல்- தமிழரசுக் கட்சி

தமிழின ஒடுக்குமுறையின் – இராணுவ அராஜகத்தின் – இன்னுமொரு வெளிப்பாடாகவே வலி.வடக்கு பிரதேச சபைத்தலைவர் மற்றும் மக்கள் மீது சேந்தாங்குளத்தில் தாக்குதல் அரங்கேறியுள்ளது. இத்தகைய கண்மூடித்தனமான தாக்குதல்களை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்- இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி உப தலைவர் கஜன்.

கீரிமலை சேந்தாங்குளம் பகுதியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் மற்றும் வலி.வடக்கு பிரதேச சபைத் தலைவர் சுகிர்தன் ஆகியோர் மீது கடற்படையினர் நடத்திய தாக்குதலைக் கண்டித்து வெளியிட்ட அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு-

எத்தனையோ இன்னல்களுக்கு பின்னர் மீள்குடியேறிய மக்களைத் தொடர்ந்தும் துன்பத்தில் ஆழ்த்துவதும், அவர்களைச் சொந்த இடங்களில் இருந்து துரத்தி அந்தப் பகுதிகளை இராணுவம் சார் பிரதேசங்களாக அபகரித்து, அங்கு சிங்கள மேலாதிக்கத்தை நிலை நாட்டும் செயற்பாடாகவே இந்த தாக்குதலையும் நோக்க வேண்டியுள்ளது. அப்பாவிப் பொதுமக்களையும், ஜனநாயக முறைப்படி மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளையும் இராணுவத்தினர் தொடர்ந்தும் அச்சுறுத்தி வருகின்றனர். இது தமிழ்மக்களை மீண்டும் ஓர் ஆயுதக் கலாசாரத்துக்குள் தள்ளுகின்ற கபடச்செயலாகும்.- என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.alaikal.com/news/?p=94066

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.