Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழர்களின் உணர்வினை கவனத்தில் எடுத்து, எமது கொள்கையிலும் முன்னுரிமை கொடுத்துள்ளோம் - கிருஷ்ணா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்களின் உணர்வினை கவனத்தில் எடுத்து, எமது கொள்கையிலும் முன்னுரிமை கொடுத்துள்ளோம் - கிருஷ்ணா

IFM-SM%20Krishna.jpg

தமிழ் பேசும் சிறுபான்மை சிறிலங்காத் தமிழர்களிற்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் நிலுவையில் உள்ள பிரச்சினைகளிற்கு இறுதி அரசியற் தீர்வொன்று பெறப்படும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

"சிறுபான்மைத் தமிழ் மக்களிற்கு இறுதித் தீர்வொன்றைப் பெற்றுக் கொடுப்பதற்காகப் பாடுபடுவதென்பது சிறிலங்காத் தீவு மீது கொண்டுள்ள நலன் சார்ந்ததாகும்" என திங்களன்று சிறிலங்காவிற்கான தனது நான்கு நாள் சுற்றுப் பயணத்தை ஆரம்பிப்பதற்கு முதல்நாள் ஞாயிறன்று கிருஷ்ணா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசாங்கம் தனது நாட்டில் வாழும் தமிழ் பேசும் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக அவர்களின் தலைமைத்துவத்துடன் பேச்சுக்களில் ஈடுபட்டு தற்போது தீர்வு காணப்படாதுள்ள பிரச்சினைகளிற்கு இணக்கமான தீர்வொன்றை எட்டவேண்டும் எனவும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சிறிலங்காவில் தற்போது தீர்க்கப்படாது தொடரப்படும் பிரச்சினைக்கு தேசிய மீளிணக்கப்பாட்டுடன் கூடிய முயற்சிகளை முன்னெடுத்து அத்தீவில் இறுதியான அரசியற் தீர்வொன்றைப் பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவதே இந்தியாவின் அணுகுமுறையாக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

"தமிழ் மக்களின் உணர்வுகளை நாங்கள் கவனத்தில் எடுத்துள்ளோம். அத்துடன் அவற்றை எமது கொள்கைகளிலும் முக்கியத்துவப்படுத்தியுள்ளோம். தற்போது சிறிலங்காத் தீவில் தீர்க்கப்படாது எஞ்சியுள்ள அனைத்துப் பிரச்சினைகளும் கலந்துரையாடல்கள் ஊடாகத் தீர்க்கப்படுவதுடன், இரு தரப்புக்களும் இதில் திருப்தியடையக் கூடியவிதமாகத் தீர்வு எட்டப்பட வேண்டும்" எனவும் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

இரண்டாவது தடவையாக சிறிலங்காவிற்கு உத்தியோகபூர்வப் பயணத்தை மேற்கொள்ளும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரான ஜி.எல்.பீரிசுடன் பல்வேறு விடயங்கள் தொடர்பாகப் பேச்சுக்களை நடாத்தவுள்ளார். அதாவது தமிழ் மக்களின் பிரச்சினைகள், தத்தம் கடல் எல்லைகளிற்கு அப்பால் தவறுதலாகச் சென்ற போது கைதுசெய்யப்பட்ட இரு நாட்டு மீனவர்களையும் அவரவர் நாடுகளிற்கு விடுவித்தல், மீன்பிடித்துறையை கூட்டாக இணைந்து அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தில் சமரசங்களை மேற்கொள்ளல் போன்ற விடயங்கள் ஆராயப்படவுள்ளன.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சராக கிருஷ்ணா முதன் முதலில் நவம்பர் 2010ல் சிறிலங்காவிற்குப் பயணம் செய்திருந்தார். "விரைவாக எட்டப்படும் சமூகமான தீர்வானது இந்தியாவில் உள்ள தமிழர்களதும், சிறிலங்காவின் வடக்குப் பகுதியில் உள்ள மக்களினதும் தொடர்பை மேலும் வலுப்படுத்துவதற்கு உதவி புரியும் என நான் கருதுகிறேன். இவ்விரு நாடுகளிற்கும் இடையிலான குறிப்பாக தமிழ்நாட்டு மக்களிற்கும் சிறிலங்காத் தமிழர்களிற்கும் இடையிலான வர்த்தக, போக்குவரத்துச் செயற்பாடுகள் மேலும் முன்னேற்றமடைந்தால், அது வெற்றிக்கான சூழலாக இருக்கும்" என கிருஷ்ணா சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் தனது சிறிலங்காப் பயணத்தின் போது சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவையும், பிரதமர் டி.எம்.ஜெயரட்னாவையும் சந்தித்து இரு நாடுகளிற்கும் இடையிலான பரஸ்பர விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடவுள்ளார்.

அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சந்திக்கவுள்ளதுடன், பிராந்தியங்களிற்கான அதிகாரப் பகிர்வு தொடர்பாக கொழும்புடன் கூட்டமைப்பினர் மேற்கொள்ளும் பேச்சுக்களின் தற்போதைய நிலைப்பாடு தொடர்பாகவும் மீளாய்வு செய்யவுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது மாகாணங்களிற்கான காணி, காவற்துறை அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் அழுத்தம் கொடுத்து வருகின்றது.

13வது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் சிறிலங்கா அரசாங்கமானது இவ் அதிகாரங்களை பிராந்தியங்களிற்கு வழங்காது என ராஜபக்ச தெளிவாகத் தெரிவித்த போதிலும், இது தொடர்பாகப் பேசுவதில் தான் விருப்பம் கொண்டுள்ளதாக ராஜபக்ச அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

சிறிலங்காவின் வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு இந்திய நிதி உதவியுடன் 50,000 வீடுகளைக் கட்டிக் கொடுப்பது தொடர்பான திட்டத்தின் தற்போதைய நிலைப்பாடு மற்றும் தமிழ் மக்களிற்காகக் கட்டப்பட்டு யாழ்ப்பாணத்தில் கையளிக்கப்படவுள்ள முதலாவது தொகுதி வீடுகள் தொடர்பாகவும் கிருஷ்ணா சிறிலங்காவிற்கான தனது சுற்றுப் பயணத்தின் போது மீளாய்வு செய்யவுள்ளார்.

இந்திய தவணைக் கடன் அடிப்படையில் கட்டப்படவுள்ள தெற்குப் தொடருந்துப் பாதைத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கான நிகழ்வில் கலந்து கொள்வதற்காகவும் இவர் காலி செல்லவுள்ளார்.

"நாங்கள் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களிற்கான சமூக-பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதற்கான நிதியுதவிகளை வழங்கிவருகின்ற போதிலும், உள்நாட்டுப் பிரச்சினையின் போது தெற்கு தொடடருந்துப் பாதை சேதமடைந்துள்ளது. தற்போது இயல்புநிலை மீளத் திரும்பியுள்ளது. இதுவரையில் காலந் தாழ்த்தப்பட்டு அல்லது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் இதன் பின்னர் துரிதமாக முன்னெடுத்துச் செல்லப்படும்" எனவும் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுடனான இந்தியாவின் அரசியல் உறவானது பொருளாதார சூழலிலேயே நிச்சயமாகத் தங்கியுள்ளதால், இத்தீவுடன் மேலும் பொருளாதாரத் தொடர்புகளை நெருக்கமாகப் பேணுவதற்கான அழுத்தங்களைத் தான் தொடர்ந்தும் வழங்கப்போவதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வீடமைப்பு, தொடருந்துப் பாதைகள் அமைத்தல் மற்றும் விவசாய, தொலைத் தொடர்பாடல் அபிவிருத்திகளுடன் தொடர்புபட்ட நான்கு உடன்படிக்கைகளில் சிறிலங்கா, இந்தியா ஆகிய இரு நாடுகளும் கிருஸ்ணாவின் பயணத்தின் போது கைச்சாத்திடவுள்ளதாகவும் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கிருஷ்ணா சிறிலங்காவிற்கான தனது வருகையின் போது யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய இடங்களைப் பார்வையிடவுள்ளதுடன், கொழும்பிற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள இந்திய அமைதி காக்கும் படையினரின் நினைவிடத்திற்கும் செல்லவுள்ளார்.

செய்தி வழிமூலம்: Thaindian News

http://www.puthinapp...?20120116105380

ஈழத்தமிழர்களின் உணர்வினை கவனத்தில் எடுத்து, எமது கொள்கையிலும் முன்னுரிமை கொடுத்துள்ளோம் - கிருஷ்ணா

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கிருஷ்ணா சிறிலங்காவிற்கான தனது வருகையின் போது யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய இடங்களைப் பார்வையிடவுள்ளதுடன், கொழும்பிற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள இந்திய அமைதி காக்கும் படையினரின் நினைவிடத்திற்கும் செல்லவுள்ளார்.

அமைதிப்படை என்ற வேடத்தில் தமிழினப் படுகொலைகளை மேற்கொண்ட, தமிழ் பெண்களை பாலியல் இம்சை செய்த, தமிழரின் சொத்துக்களைக் கொள்ளையடித்த இந்திய இராணுவப் பயங்கரவாதிகளுக்கு சிங்களப் பயங்கரவாதிகளால் அமைக்கபட்ட நினைவுச் சின்னத்தைப் பார்க்கும் கிருஷ்ணா தமிழரின் உணர்வுகளுக்கு முன்னுரிமை கொடுப்பான் என்பதை ஒருசிலர் நம்பி ஏமாறலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.