Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மட்டும் இடம்பெயர்ந்தவர்கள் அல்லர்! - யூ.என்.எச்.சி.ஆர்

Featured Replies

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மட்டும் இடம்பெயர்ந்தவர்கள் அல்லர்! - யூ.என்.எச்.சி.ஆர்

இலங்கையில் இடம்பெற்ற நீண்டகாலப் போரினால் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மாத்திரம் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் அல்லர் என கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் (யூ.என்.எச்.சி.ஆர்) தெரிவித்துள்ளது.

வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயமே தடையாக உள்ளதாகவும், இதற்கு எதிராக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக சிறிலங்காவின் கைத்தொழில் முதலீட்டு அமைச்சரும், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான றிசாட் பதியுதீன் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

'உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் குறித்த வழிகாட்டல் தத்துவங்களுக்கு அமைய இலங்கையில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கான பாதுகாப்பு, மனிதாபிமான உதவி என்பவற்றை வழங்கும் பிரதான பொறுப்பு சிறிலங்கா அரசாங்கத்திற்கு உரியதாகும்.

இதனடிப்படையில் பழைய உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் என்பது 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கு முன் இலங்கையில் இடம்பெற்ற போரின் போது உள்நாட்டில் இடம்பெயர்ந்தோரைக் குறிக்கும் பதமாகும்.

புதிய உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் என்பது சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் இடையிலான போரின் போது 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குப் பின்னர் போர் முடியும் வரை உள்நாட்டில் இடம்பெயர்ந்தோரைக் குறிக்கும்.

சுமார் 20 வருடங்களுக்கு மேலாக உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கு உதவும் சிறிலங்கா அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் ஆதரவளித்து வருகின்றது.

வடக்கு மற்றும் கிழக்கில் போரினால் இடம்பெயர்ந்தோரின் தேவைகளை பூர்த்தி செய்வதன் மூலமும் உதவிகளை வழங்குவதன் மூலமும் இது நடந்து வந்தது.

நீண்ட காலமாக இடம்பெயர்ந்திருந்த காரணத்தினால் நீண்ட கால உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கு ஏதோவொரு கட்டத்தில் வருடம் முழுவதும் உதவிகளை பெற்றனர் என்பதை மனதிலிருத்துவது முக்கியம்.

இந்த உதவிகள் உணவு மற்றும் வீட்டு தேவை பொருட்களை வழங்கள், அவசர சுகாதார கவனிப்புக்களை வழங்குதல், உள மற்றும் சமூக செயற்பாடுகள், உறைவிட உதவி, சட்ட உதவி மற்றும் சிறுவர் பாதுகாப்பு என பல வழிகளிலும் அமைந்தன. இவை அவதானிக்கப்பட்ட தேவைகளின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டன.

இது போன்ற தற்போதும் செயற்பட்டுக் கொண்டிருக்கும் முக்கிய உதவி திட்டமாக நீண்ட கால உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கான உலக வங்கியின் புத்தளம் வீட்டு திட்டம் காணப்படுகின்றது.

32 மில்லியன் டொலர் பெறுமதியான இந்த திட்டம் 2007ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. இதில் வீடமைத்தல், குடிநீர், சுகாதார வசதிகள் என்பவற்றை புத்தளத்திலிருந்த உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கு வழங்குவதையே நோக்கமாக கொண்டது.

இலங்கையில் இடம்பெற்ற நீண்டகாலப் போரினால் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மாத்திரம் உள்நாட்டிலிருந்து இடம்பெயரவில்லை என்பதை நினைவில் வைக்க வேண்டும்.

சொந்த வீடுகளுக்கு திரும்பும் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கு ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் ஒழுங்கு முறையாக வீட்டுக்கு தேவையான பொருட்களை வழங்கி உதவுகின்றது.

இவர்கள் தத்தம் வீடுகளுக்கு திரும்பும் போது உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கான ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தின் சகல திட்டங்களிலும் சேர்க்கப்படுகின்றனர்.

உள்நாட்டுப் போர் 2009ஆம் ஆண்டு மே மாதம் நிறைவுக்கு வந்த பின்னர் புதிதாக வந்த உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்காக உனடியான உயிர் காக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனங்கள் அவற்றின் பங்குதாரர்களுடன் சிறிலங்கா அரசாங்கமும் இணைந்து கொண்டது.

இந்த வகை உள்நாட்டில் இடம்பெயர்ந்தேர்கள் பெரும் வன்முறை சார்ந்த போர் நடந்த பிரதேசத்தினுள் பல மாதங்களாக பல தடவை இடம்பெயர்ந்து அவலப்பட்டவர்கள்.

அவர்களில் அதிகமானோர் தமது சொத்துக்களை இழந்து உளரீதியாக பாதிக்கப்பட்டு நிர்க்கதி நிலைக்கு ஆளானவர்கள். கடும் போரினால் பல வீடுகள் சேதமடைந்தன அல்லது அழிக்கப்பட்டன. அதே சமயம் பல வைத்தியசாலைகளும் பாடசாலைகளும் அரச அலுவலகங்களும் இயங்கிய கட்டிடங்கள் சேதமடைந்தன.

அவர்கள் வாழ்ந்த போர்ப் பகுதியில் அத்தியாவசிய சேவைகள் கூட தொழிற்படவில்லை. இந்த நிலையில் புதிய உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கு அவசியமனதும் அவசரமானதுமான உதவிகளை தேவைப்படும் நிலையில் காணப்பட்டனர்.

எனவே இந்த மக்களுக்கு உதவுவதில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கு தமது வீடுகளுக்கு திரும்பும் அகதிகளுக்கும் தன்னானாலான உதவிகளை கிடைக்கும் நன்கொடைகளுக்கு அமையச் செய்யும்' என இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=d3f98e78-e68a-4fe6-b13f-67a370a6020b

றிசாட் பதியுதீன் என்ற இஸ்லாமிய மத வெறியனுக்கு சாட்டையடி.

இடம்பெயர்ந்த வன்னி மக்களுக்கான நிவாரணங்களை கொள்ளையடித்த றிசாட் பதியுதீன் உரிய தண்டனையை விரைவில் பெறுவான்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.