Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா கட்டிக் கொடுத்த வீட்டில் இராணுவம்

Featured Replies

மத்திய அரசால் பலகோடி ரூபாய் நிதி இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை இலங்கையில் உள்ள தமிழர்களுக்காக கட்டி கொடுத்த வீடுகளில் தமிழர்கள் குடியேறவில்லை. ஆனால் இராணுவத்தினர் தான் அதிகம் பேர் குடியேறியுள்ளனர் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்குத் தொடர்பாக இராமேஸ்வரம் நீதிமன்றத்தில் இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோர் நேற்று ஆஜகினர். கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இராமேஸ்வரத்தில் திரையுலகம் சார்பில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பேசிய இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோர் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக புலனாய்வு பிரிவு பொலிஸார் வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிகையை இராமேஸ்வரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

நீதிமன்ற விசாரணைகளின் பின்னதாக ஊடகவியலாளர்களிடம் பேசிய போதே சீமான் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு மேலும் பேசிய சீமான்,

இலங்கையில் போர் நடந்தபோது விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் தமிழர்கள் சொந்த வீடுகளில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர். போர் முடிந்து 3 ஆண்டுகள் ஆகியும் தமிழ் மக்கள் இன்னமும் முள்வேலி முகாமில் தான் அடைக்கப்பட்டுள்ளனர்.

முதலில் முள்வேலி முகாமில் உள்ள தமிழ் மக்களை வெளியே கொண்டுவர வேண்டும். தமிழக மீனவர்களை 550 பேரை இலங்கை கடற்படையினர் சுட்டு கொன்றுள்ளனர். இதுவரை காங்கிரஸ் மத்திய அரசு தட்டிக் கேட்கவில்லை.

நமது பகை நாடான பாகிஸ்தான் கூட நமது மீனவர்களை சுடவில்லை. நமது நட்பு நாடான இலங்கை, தமிழக மீனவர்களை சுட்டு கொன்றது வேதனை அளிக்கிறது.

நான் இதுபற்றி பேசினால் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வழக்கு போடுகிறார்கள். என் மீது பல மாவட்டங்களில் வழக்குகள் உள்ளது என கூறினார்.

http://akkinikkunchu.com/new/index.php

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு புலி பயங்கரவாதிகள் இருந்தபோதுதான் இராணுவத்தினர் கொஞ்சம் இராணுவ தனத்துடன் இருந்தார்கள். இப்போ அவர்களும் மக்கள்தான். மக்களுடன் மக்களாக வாழ்ந்துவருகிறார்கள்.

இனி இராணுவம் மக்கள் என்று பிரித்து பார்க்க ஏதும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா கட்டிக் கொடுத்த வீட்டில் இராணுவம்

நீங்களா ஒரு கற்பனை பண்ணிக்க வேண்டியது.. நல்ல பாம்பு எங்காவது புற்று கட்டி கேள்வி பட்டதுண்டா லேது...?மறி.. எறும்பு கட்டிய புற்றுக்குள் எறும்புகளை விரட்டிவிட்டு புகுந்துகொள்ளும்... இவன் எறும்புக்ளுக்கு வீடு எனும் போது அது பாம்புகளுக்கு என தெரிந்து கொள்ள வேண்டாமா..?

டிஸ்கி:

இதற்கு ஒத்துக்கபட்ட பணத்தில் எவ்வளவு ஊழல் .. எவன் எங்க சுட்டான் யாராவது கேஸ் போட்டால் தான் வெளிவரும்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.