Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நோபல் பரிசுக்கு சிறிலங்காவின் கொலைக்களங்கள்

Featured Replies

நோபல் பரிசுக்கு சிறிலங்காவின் கொலைக்களங்கள்

February 5, 2012

chanal4112.jpg

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட’சிறிலங்காவின் கொலைக்களங்கள்’ ஆவணப்படத்தை இந்த ஆண்டின் சமாதானத்துக்கான நோபல் பரிசுக்கு தெரிவு செய்யுமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் சோபெய்ன் மக் டொனாவும், ஆஸ்திரேலியாவின் கிறின் சென்ட்டர் லீ றியனோனும் இணைந்து நோர்வேயின் நோபல் பரிசுக் குழுவுக்கு இந்தப் பரிந்துரையை அனுப்பியுள்ளனர்.

சரியான நேரத்தில் சனல்4 வெளியிட்ட இந்த ஆவணப்படம் இலங்கை அரசின் அனைத்துலக மனித உரிமை மீறல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததாகவும், இது இலங்கையில் உள்ள எல்லா மக்களுக்கும் உண்மை, நல்லிணக்கம், அமைதி ஆகியவற்றுக்குப் பங்களிப்பு செய்துள்ளதாகவும் பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் மக் டொனா தெரிவித்துள்ளார்.

இந்த ஆவணப்படத்தை நோபல் பரிசுக் குழுவுக்கு பரிந்துரைத்துள்ளதன் மூலம், இலங்கையில் தொடர்ந்தும் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து உலகின் கவனத்தை ஈர்ப்பதுடன், அங்கு நீண்டகாலமாக பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு நீதியையும், அமைதியையும் கொண்டு வரும் என்று நம்புவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

http://www.alaikal.com/news/?p=95895

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழரின் அரசியல் போராட்டத்திற்கு உயிர்ப்பு கொடுத்த ஆவண படம். 

ஸ்ரீ லங்கா ஜெனோசைட் ஊது குழல்களின் கொட்டத்தை அடக்கி இப்போது அரசியல் ஆப்படிக்கும் படம்.

இந்த நல்ல உள்ளம் படைத்த குழுவிற்கு பரிசு கிடைக்க வாழ்த்துவோம்.

இந்த படம் உலகில் உள்ள அத்தனை மொழிகளிலும் மொழி பெயர்க்க படவேண்டும். 

உலகில் மிக மோசமான இனப்படுகொலைகளை மேற்கொண்ட அரச பயங்கரவாதிகளை உரிய முறையில் அம்பலப்படுத்தியதன் மூலம் நீதியான அமைதியை நோக்கிய கவனத்தை ஏற்படுத்தியதட்காக அமைதிக்கான நோபெல் பரிசைப் பெரும் தகுதியை சேனல் 4 பெற்றுள்ளது.

வாழ்த்துக்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.