Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலகுமாரன் பற்றித் தெரியாது : பாதுகாப்புச் செயலர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் போராளிகள் பலர் விடுதலை - பாலகுமாரன் பற்றித் தெரியாது : பாதுகாப்புச் செயலர்

gotabaya.jpgமுன்னாள் போராளிகளுக்கு எதிராக சிறிலங்கா அரசு செயற்படவில்லை எனத் தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷ

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சிரேஸ்ட தலைவர் வி.பாலகுமாரன் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பற்றித் தமக்கு எதுவும் தெரியாது எனக் கூறியுள்ளதாகத் தெரிய வருகிறது. இந்தியப் பத்திரிகையாளருக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக அறிய வருகிறது.

ltteforce.jpg

இது தொடர்பில் மேலும் அறிய வருவதாவது; அல் கொய்தா தீவிரவாத அமைப்பினை விடப் பலம் மிகுந்ததாக இருந்த விடுதலைப்புலிகளை ஒடுக்கியது என்பது சாதாரண விடயமல்ல. இது ஒரு மிகப்பெரிய போர். 30 ஆண்டுகள் தொடர்ந்த ஒரு போரை முடிவுக்கு கொண்டு வந்து, நாட்டில் இயல்பான வாழ்நிலையைத் தோற்றுவித்துள்ளோம். எந்தவொரு நாடும் இவ்வளவு குறுகிய காலத்தில் இதனைச் சாதிக்கவில்லை எனக் குறிப்பிட்ட அவர், இதனை ஒருவரும் அங்கீகரிக்கவில்லை என்பது வருத்தத்துக்குரியது எனக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தொடர்கையில், போரின் முடிவில் இடம்பெயர்ந்த 300,000 மக்களை மீளக் குடியேற்றி, சுமார் 11,000 முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளித்துள்ளது. இன்னமம் 700 போராளிகள் மட்டுமே விடுவிக்கப்பட்டாமல் உள்ளனர். முன்னாள் போராளிகளை சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் வைத்திருக்காமல் சமூகத்துடன் இணைந்து வாழப் புனர்வாழ்வுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம் எனக் குறிப்பிட்டார்.

தமிழ்பகுதிகளில் இராணுவ நிலைகள் தொடர்பான கேள்விக்கு, இந்தியாவின் காஸ்மீர், தமிழ்நாடு ஆகிய இடங்களிலும் இந்திய இராணுவப் படைப்பிரிவுகள் நிலைகொண்டுள்ளன. அதற்காக அங்கு இராணுவ ஆட்சி நிலவுவதாக அர்த்தம் கொள்ள முடியாது. தற்போது வடக்கில் குறைந்தளவு படையினரே நிலைகொண்டுள்ளனர். சிறிலங்காவில் உள்ள 22 மாவட்டங்களையும் போன்று தான் வடக்கிலும் அவசியமான படையினர் மட்டுமே வடக்கில் நிலைகொண்டுள்ளனர். ஆயினம் அங்கு இப்போது வீதித் தடைககளோ சுற்றிவளைப்பு தேடுதல்ககளோ இல்லை என்பதைக் கவனத்திற் கொள்ள வேண்டும்.

வடபகுதியில் சட்டம் ஒழுங்கு என்பவை படிப்படியாகக் காவல்துறையிடம் ஒப்படைத்து வருகின்றோம். காவல்துறைக்கு தமிழ்க் காவலர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இதேவேளை இராணுவ ஆட்சேர்ப்பை நிறுத்தியுள்ளோம். இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவோரால் ஏற்படும் வெற்றிடங்களுக்குக் கூட புதியவர்கள் சேர்க்கப்படவில்லை. இவ்வாறான நிலையில், வடக்கில் அதிகளவில் படைகளைக் குவிக்கப்பட்டு, இராணுவ மயப்படுத்தப்பட்டு வருவதாக தமிழ்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகள் பொருத்தமானவையல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

30 வருட யுத்தம் நிறைவு பெற்று, மூன்று வருட காலப் பகுதியில், வடக்கில் பாரிய அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இந்த வேளையில், தேவையற்ற விவகாரங்கள் குறித்தும் எமது அரசுக்கு எதிரான தடைகள் குறித்தும் சிலர் பேசி வருவதாகக் கவலை தெரிவித்துள்ளார்.

balakumar.jpg

சரணடைந்த விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்துக் கேட்கப்பட்ட போது, விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் சிலர் சரணடைந்துள்ளனர். அவ்வாறானோர் சரணடையம் போது, அப் பகுதிகளில் அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவினர், பிரான்ஸ், இந்தியா, ஆகிய நாடுகளின் மருத்துவக் குழுவினர் உள்ளிட்ட முகவரமைப்புகள் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வேளையில் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் வே.பாலகுமாரன் குறித்துக் கேள்வி எழுப்பட்ட போது, அவர் தடுத்து வைக்கப்பட்டள்ளாரா என்று எனக்குத் தெரியாது ஆயினும் விடுதலைப் புலிகளின் அறியப்பட்ட பிரமுகர்களில் பெரும்பாலானோர் இறுதிப்போரில் கொல்லப்பட்டு விட்டனர் எனக் குறிப்பிட்டார்.

ஆனால் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரான பாலகுமாரனும் அவரது மகனும் 2009 மே 17ந் திகதி இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டிருந்த போது எடுகப்பட்ட படம் ஒன்று ஏற்கனவே வெளியாகியிருந்தமையும், அப்பத்தின் பின்னணியில் இராணுவத்தினரின் நடமாட்டம் தெரிவது, அப்படம் இராணுவ நிலையொன்றில் எடுக்கப்பட்டதனை உறுதிப்படுத்துவதாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகிருந்தன.

gota%2520saibaba.jpg

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவின் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சனை எழுப்பபடலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அன்மையில் இந்தியாவிற்கு குறுகிய கால விஜயமொன்றினை மேற்கொண்டிருந்த சிறிலங்காவின் பாதுகாப்புத்துறைச் செயலர், அங்கு இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இந்த நேர்காணல் காணப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்புச் செயலரின் இந்தியப் பயணத்தின் போது, சீரடி சாய்பாபா ஆச்சரமத்தில் விசேட வழிபாடுகளில் அவர் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

http://www.4tamilmedia.com/newses/srilanka/3286-2012-02-06-11-37-28

சிறிலங்கா இராணுவத்தின் இரகசியத் தடுப்பு முகாமில் பாலகுமாரன், யோகி – ஆங்கில ஊடகம் தகவல் [ செவ்வாய்க்கிழமை, 07 பெப்ரவரி 2012, 01:08 GMT ] [ கார்வண்ணன் ] bala-yogi.jpgவிடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களான வே.பாலகுமாரன் மற்றும் யோ.யோகி ஆகியோர் சிறிலங்கா இராணுவத்தின் இரகசியத் தடுப்பு முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ‘சிறிலங்கா கார்டியன்‘ தகவல் வெளியிட்டுள்ளது.

இவர்கள் இருவரும் போர்முனையில் கொல்லப்பட்டு விட்டதாக சிறிலங்கா அமைச்சர் டியு.குணசேகர முன்னர் தகவல் வெளியிட்டிருந்த நிலையில், நம்பத்தகுந்த - சிறிலங்கா இராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இவர்கள் தடுப்பில் இருப்பதாக கூறியுள்ளார்.

தெற்கிலுள்ள இரகசியத் தடுப்பு முகாம் ஒன்றில்- இறுக்கமான இராணுவப் பாதுகாப்பின் கீழ்- விடுதலைப் புலிகளின் ஏனைய மூத்த தலைவர்களுடன் இவர்கள் இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த பாலகுமாரன், யோகி, லோறன்ஸ் திலகர், பாப்பா, புதுவை இரத்தினதுரை உள்ளிட்ட சுமார் 50 விடுதலைப் புலிகள் உடற்சோதனைகளின் பின்னர் பேருந்து ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்டதைக் கண்டதாக நேரில் கண்டவர்கள் சாட்சியம் அளித்திருந்தனர்.

இவர்களின் நிலை தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் எந்தத் தகவலையும் வழங்க மறுத்து வருகிறது.

இந்தநிலையிலேயே பாலகுமாரன், யோகி ஆகியோர் போர் முனையில் கொல்லப்பட்டு விட்டதாக சிறிலங்கா அமைச்சர் டியு.குணசேகர ஒரு ஆண்டுக்கு முன்னர் கூறியிருந்தார்.

எனினும் பாலகுமாரன், யோகி ஆகியோர் கடுமையான செயல்முறைகளின் மூலம் விசாரிக்கப்பட்ட பின்னர் நன்றாக கவனிக்கப்படுவதாக சிறிலங்கா இராணுவ வட்டாரங்கள் கூறியுள்ளன.

எனினும் அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டனரா என்பது பற்றியோ, அவர்கள் எங்கே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது பற்றியோ தகவல் வெளியிட அந்த வட்டாரங்கள் மறுத்துள்ளன.

பாலகுமாரன் பற்றி `டெக்கன் குரோனிக்கல்` செய்தியாளர், சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவிடம் எழுப்பிய கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காமல் தவிர்த்திருந்த நிலையில் தான் `சிறிலங்கா` கார்டியன் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

கவிஞர் புதுவை இரத்தினதுரை மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டிய நிலையிலும், லோறன்ஸ் திலகர் மனக்குழப்பத்தினால் தொடர் சிகிச்சை பெறவேண்டிய நிலையிலும் இருப்பதாகவும் `சிறிலங்கா கார்டியன்` தகவல் வெளியிட்டுள்ளது.

போர்க்குற்றவாளிகளை ஒல்லாந்தில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தி விசாரிக்கவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.