Jump to content

இப்போது ராகு(ல்) காலம் – பிற்பாடு (என் காலம் )- எம கண்டம் – சொல்வது ராபர்ட் (ப்ரியங்கா) காந்தி !!


Recommended Posts

இப்போது ராகு(ல்) காலம் -

பிற்பாடு (என் காலம் )- எம கண்டம் -

சொல்வது ராபர்ட் (ப்ரியங்கா) காந்தி !!

(இந்த தேசத்தின் ஒட்டு மொத்த குத்தகைதாரர்கள் .முன் வரிசையில் …….)

wadera-connected-6.jpg?w=500&h=308

இந்திய மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.

“வாராது வந்த மாமணி போல்” இன்னுமொரு காந்தி -

தீவிர அரசியலுக்கு வந்து விட்டார் !

இம்முறை - ராபர்ட் ப்ரியங்கா காந்தி.

(ராபர்ட் வாத்ராவின் பெயரை தவறாகப் போட்டு விட்டேன்

என்று நினைக்கிறீர்களா ? – கணவரை முன்நிறுத்தி

மனைவி இருந்தால், கணவனின் குடும்பப்பெயர் வரும்.

மனைவியை முன்நிறுத்தி கணவன் இருந்தால் -

மனைவியின் குடும்பப்பெயர் தானே வர வேண்டும் ?)

(இது தான் ஒரிஜினல் காஸ்டியூம் )

wadera-connected-3.jpg?w=500&h=531

உத்திரப் பிரதேச தேர்தலுக்கு பிரச்சாரத்திற்காக

முதலில் ராகுல் காந்தி வந்தார்.

பின்னர் அவருக்கு உதவ ப்ரியங்கா காந்தி வந்தார்.

இப்போது அவர் பின்னால் ராபர்ட்(ப்ரியங்கா)காந்தி

வந்திருக்கிறார். (கூடவே காந்தி(?) குடும்பத்தின்

குட்டி வாரிசு - அவர்களது பெண் “ராய்ஹன்”உடன் வர)

robert-daughter-1.jpg?w=500&h=400

உ.பி.தேர்தலில் புகைப்படங்கள் -

ப்ரியங்கா, ராபர்ட், ராகுல் காந்தி

(இது ச்சும்மா – தேர்தலுக்காக )

wadera-connected-11.jpg?w=500&h=308

ராபர்ட்(ப்ரியங்கா) காந்தியுடன் அவரது

குட்டி வாரிசான “ராய்ஹன்” (அடுத்த தலைமுறை

பிரதமர் வேட்பாளர் ?)

ஏற்கெனவே அரசியலில் குதிக்க காத்திருந்த ராபர்ட்,

நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது அதை

வெளிப்படையாகவே கூறி விட்டார்.

“இப்போது நான் ராகுல் காந்திக்கு

உதவ வந்திருக்கிறேன்.

இது ராகுல் காலம்.

பிற்பாடு ப்ரியங்கா வருவார் – அப்போது நானும்

வருவேன். அப்போது எங்கள் காலமாக இருக்கும் !”

“நான் திருமணம் செய்துகொண்டது

ஒரு அரசியல் குடும்பத்தோடு -நான் மட்டும்

குடும்பப் பொறுப்பிலிருந்து எப்படி விலக முடியும் ? !!”

ராபர்ட் அரசியலுக்கு வருவதன் பலன் நேற்றே

தெரிந்தது. ராகுலின் அமேதி தொகுதியில் ஒரு

மோட்டார் சைக்கிளில் ஊர்வலம் வந்தார் ராபர்ட்.

அவருடன் ஏகப்பட்ட வண்டிகள் வந்தன.

அந்த தொகுதியில் தேர்தல் கண்காணிப்பாளராக

தேர்தல் கமிஷனால் நியமிக்கப்பட்டிருந்த

(கலெக்டர் அந்தஸ்து உள்ள ) பவன் சென் என்கிற

அதிகாரி ஊர்வலத்தை நிறுத்தி, வாகனங்களின்

எண்ணிக்கை தேர்தல் கமிஷன் விதித்துள்ள

வரம்பைத் தாண்டக் கூடாது என்று

வலியுறுத்தினார். தேர்தல் விதிமீறல் புகாரையும்

பதிவு செய்தார்.

robert-wadra-1.jpg?w=500

4 மணி நேரத்தில் அதன் விளைவை அவர் எதிர்நோக்க

நேர்ந்தது. ஆமாம் – அவர் உத்திரப் பிரதேசம்,

அமேதி தொகுதியிலிருந்து உடனடியாக கோவா

மாநிலத்திற்கு தேர்தல் பணிக்காக இடமாற்றம்

செய்யப்பட்டார்.

ஆனால், இது மீடியாவில் உடனடியாக வெளியாகி

செய்தி விஸ்வரூபம் எடுத்ததால், தலைமை

தேர்தல் கமிஷனர் குரேஷி தலையிட்டு, அமேதியில்

ஓட்டுப்பதிவு முடியும் வரையில் மாற்றலை நிறுத்தி

வைத்துள்ளார். (ரத்து செய்யவில்லை !)

ஒரு வேளை இந்திய மக்கள் செய்த

பாவ/புண்ணியங்களின் விளைவாக, எதிர்காலத்தில்

எப்போதாவது ராகுல் காந்தி பிரதமர் பொறுப்பை

ஏற்பாரேயானால், இந்த ராபர்ட் தான் உள்துறை

அமைச்சர் என்பது உறுதி.

எனவே இப்படிப்பட்ட ஒளிமயமான எதிர்காலம் உடைய

ராபர்ட்டைப் பற்றி சில விஷயங்களை நம் மக்கள்

தெரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம்.

இது ராபர்ட் (வதேரா) காந்தியின்

வரலாற்றுப் பின்னணி -

திருமதி சோனியா காந்தியின் நம்பிக்கையை ராபர்ட்

பெற முடிந்ததன் முதல் காரணம் -

இவரும் ஒரு அரை இந்தியர் என்பது தான்.

ராபர்ட் ராஜீந்தர் வாத்ரா என்ற பெயருடைய

(உத்திரப் பிரதேசம் -மொராதாபாத்)

இந்தியத் தந்தைக்கும்,

மௌரீன் என்கிற பெயருடைய

ஸ்பானிஷ் தாய்க்கும் மகனாகப் பிறந்தவர்.

ராபர்ட்டின் தாய் ஏற்கெனவே திருமதி சோனியாவின்

குடும்ப நண்பர் !

அடுத்து இந்த குடும்பத்தில் நேர்ந்த மர்மமான இறப்புகள்

குறித்து கூறியாக வேண்டும் -

முதலில் – திருமதி சோனியாவின்

மைத்துனர் சஞ்சய் காந்தி -

விமான விபத்தில் இறந்தார்.

-23 ஜூன் 1980 (33 வயதில்)

அடுத்து – மாமியார் இந்திரா காந்தி – அவரது சொந்த

பாதுகாவலர்களாலேயே சுடப்பட்டு இறந்தார்.

-31 அக்டோபர் 1984

பின் கணவர் ராஜீவ் காந்தி –

ஈழத்தை சேர்ந்த தற்கொலைப்படையைச் சேர்ந்த

தணுவால் வெடி விபத்தில் கொல்லப்பட்டார்.

-21 மே 1991 (aged 46)

திருமணத்திற்கு பின்னர் ராபர்ட் வாத்ராவின்

சகோதரி – மிச்சில் 2001ஆம் ஆண்டு ஒரு விபத்தில்

உயிர் இழந்திருக்கிறார்.

பின்னர் ராபர்ட் வாத்ராவின் சகோதரர்

ரிச்சர்டு வாத்ராவும் 2003 ஆம் ஆண்டு

செப்டம்பர் மாதம் வசந்த் விஹார்

என்கிற குடியிருப்பில்

மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இன்னும் கொஞ்ச நாட்கள் கழித்து,

2009ஆம் ஆண்டு ஏப்ரல் 2- ஆம் தேதி

ராபர்ட் வாத்ராவின் தந்தை ராஜீந்தர் மர்மமான

பின்னணியில் தற்கொலை

செய்து கொண்டு இறந்து போனார்.

ஒரே குடும்பத்தில் இவ்வளவு துர்மரணங்கள் -

ஆச்சரியமாக இல்லை ?

அடுத்த விசேஷம் -

விமான நிலையங்களில் அனைவரையும்

பரிசோதிக்கும் செக்யூரிடி செக்கப்

(frisking) ராபர்ட்டுக்கு கிடையாது.

இவர் எந்தவித செக்யூரிடி பரிசோதனைகளும் இன்றி

இந்தியாவின் எந்த விமான நிலையத்திற்கு

உள்ளே போகவும், வெளியே வரவும்

விசேஷ அனுமதி பெற்றவர்.

மத்திய அரசின் விசேஷ உத்திரவு ஒன்று -

ஜனாதிபதி, பிரதம மந்திரி, சுப்ரீம்

கோர்ட் தலைமை நீதிபதி ஆகியோருக்கு

இணையாக இந்த நபரையும் செக்யூரிடி

பரிசோதனையிலிருந்து விலக்கு அளித்திருக்கிறது.

விமான நிலையத்தில் அதைத் அறிவித்து

வைக்கப்பட்டிருக்கும் நோட்டீஸ் போர்டு இதோ -

(கடைசி எண் -31 ராபர்ட் வாத்ரா )

robert-vadra-secuity-checks.jpg?w=500&h=375

நிதி வசதி பின்னணி -

திருமணத்திற்கு முன்னர் -

சாதாரண ஒரு நகை மற்றும் கைவினைப் பொருட்கள்

ஏற்றுமதி கம்பெனி ஒன்றை மட்டும் வைத்திருந்த

இந்த நபர் இன்றைய தினத்தில் மிகப்பெரிய கோடீஸ்வர

தொழில் அதிபராகத் திகழ்கிறார். தன் மாமியார்

குடும்பத்தின் சொத்துக்களைப் பாதுகாக்கும்

பொறுப்பினைத்தவிர -

கீழ்க்கண்ட தொழில் முதலீடுகளிலும் அவர்

முனைப்புடன் ஈடுபட்டுள்ளார்-

இந்தியாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான

DLF Limited – உடன் முதலீடு,

ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிடி என்கிற நிறுவனத்தின்

மூலமாக,

டெல்லி ஹில்டன் கார்டன் இன் என்கிற மிகப்பெரிய

ஓட்டலில் பங்குதாரர்,

ப்ளூ ப்ரீஸ் என்கிற விமானங்களை வாடகைக்கு

விடும் நிறுவனம்,

நார்த் இந்தியா ஐ.டி.பார்க்ஸ் நிறுவனம்,

ரியல் எர்த் எஸ்டேட்ஸ் என்கிற நிறுவனம்,

ஸ்கைலைட் ரியல்டி ப்ரைவேட் என்கிற நிறுவனம்.

நமக்குத் தெரிந்து -

வெளிவந்திருப்பது இவ்வளவு தான். இன்னும்

வெளிவராத முதலீட்டுத் தகவல்கள் எவ்வளவோ !

தப்பித் தவறி உத்திரப் பிரதேச தேர்தலில் காங்கிரசுக்கு

சொல்லிக் கொள்கிற அளவிற்கு சீட்டுக்கள் கிடைத்து

விட்டன என்றால் போதும் -

மிக வளமையான எதிர்காலத்தை இந்திய மக்கள்

இந்த காந்தி குடும்பத்தின் மூலம் எதிர்பார்க்கலாம் !

“மக்களின் தகுதிக்கு ஏற்றார்போல் தான் -

அவர்களுக்கு கிடைக்கும் அரசனும் இருப்பான் “

-என்று 2300 ஆண்டுகளுக்கு முன்னரே சாணக்கியன்

சொன்னான். நம் தகுதி என்ன, நாம் எதற்கு

கொடுத்து வைத்திருக்கிறோம் என்பதை உத்திரப்

பிரதேச தேர்தல் தான் வெளிப்படுத்தப் போகிறது !!

http://yarlanpu.blogspot.com

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ரொம்ப நாளைக்கப்புறம் உருப்படியா என் மனம் குளிரும் படி பின்னி எடுத்திருக்கார் . உருப்படியான கட்டுரை . உங்களைபோல ஆட்கள் கூட யாழ் இணையத்தில் இருப்பதை நினைக்கும் போது என் நெஞ்சம் பெருமை கொள்கிறது ( உண்மையாகவே வஞ்ச புகழ்ச்சி வார்த்தைகள் இல்லை )

Link to comment
Share on other sites

  • 5 months later...

கேலியும் கிண்டலுமாக இந்தியநடப்பு அரசியலின் அற்புதமான உண்மைகளை அப்படியே

வெளிப்படுத்தியதற்கு பாராட்டுகள்! நன்றிகள். அங்கதச்சுவையின் அழகிய வெளிப்பாடு!

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.