Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒபாமாவிற்கான தமிழர் அமைப்பு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஊடாக இந்திய மத்திய அரசின் ஆதரவைக் கோரியுள்ளது:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Tamilsforobama-USA150news.jpg

ஒபாமாவுக்கான தமிழர் (Tamils for Obma) அமைப்பு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு எழுதியுள்ள கடிதமொன்றில், ஜெனீவாவில் இம்மாத இறுதியில் ஆரம்பமாகும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக ஒன்றுகூடலில் சிறிலங்காவிற்கு எதிராக பிரேரணை கொண்டுவரப்படுமிடத்து, அதற்கு இந்திய மத்திய அரசு ஆதரவளிக்க வேண்டுமென்று கேட்டுள்ளனர்.

மேலும், இந்தியா தற்போது இந்த ஆணையக அங்கத்துவ நாடாக இல்லாது விட்டாலும், பிராந்திய வல்லரசு என்பதாலும். சிறிலங்கா இந்தப் பிராந்தியத்தில் இருப்பதாலும், இந்தப் பிரேரணையை ஆதரிப்பதால், இந்த ஆணையகத்திலுள்ள 47 நாட்டு தலைவர்களும் இந்தப் பிரேரணையை ஆதரிப்பார்கள்.

இந்தப் பிரேரணை வெற்றிபெறுமிடத்து, தமிழ் மக்களுக்கு இதன்மூலம் நீதி கிடைக்கும் என்றும், ராஜபக்ஸ போன்ற அரச தலைவர்கள் எதிர்காலத்தில் மனித உரிமை மீறல்களை செய்யத் தயங்குவர் என்றும் எழுதியுள்ளனர்.

இக்கடிதத்தை முழுமையாக வாசிக்க இங்கே அழுத்தவும்: http://www.tamilsfor...India_help.html

Re (பொருள் அட்டவணை): ஜெனீவா ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தில் நிறைவேற்றப்படவுள்ள சிறிலங்காவிற்கு எதிரான பிரேரணையை ஆதரிக்குமாறு கோருகிறோம்

பெப்ரவரி 10, 2012

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அம்மா அவர்கட்கு,

ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு சார்பாக நாம் எழுதிக் கொள்வது, இம்மாத இறுதியில் ஜெனீவாtவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தில் நடைபெறும் ஒன்றுகூடலில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சிறிலங்காவிற்கு எதிராக பிரேரணை வருமிடத்து, இந்தப் பிரேரணையை இந்திய மத்திய அரசு வெளியிலிருந்து ஆதரிப்பதுடன், ஆணையகத்திலுள்ள 47 நாட்டுத் தலைவர்களுக்கும் இந்த பிரேரணையை ஆதரிக்க வேண்டிய அவசியத்தை தெரிவித்து, அவர்களும் இந்தப் பிரேரணையை ஆதரிக்க உதவுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

மேலும், இந்த பிரேரணை நிறைவேற்றப்படுமிடத்து, எமது தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்ற மனித உரிமை மீறல்களை உலகறியச் செய்வதுடன், எமது தமிழ் மக்களுக்கு நீதியான ஒரு தீர்வும் கிடைக்கும். அத்துடன் இந்த குற்றங்களை புரிந்தவர்கள் தண்டிக்கப்படவும் முடியும். மேலும் இதனால் மகிந்த ராஜபக்ஸ போன்ற உலக அரச தலைவர்கள் இவ்வாறு கொடுமைகளை செய்வதற்குத் தயங்குவர்.

இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக தமிழ்நாட்டு தமிழ் மக்கள் சார்பாக நீங்கள் இந்திய மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து, இந்திய அரசாங்கத்தை இந்த நீதியான தீர்மானத்திற்கு ஆதரவளிக்க கோருமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

இவ்வண்ணம்,

அன்புடன்,

ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு (Tamils for Obama)

http://www.seithy.co...&language=tamil

காலத்திற்கு தேவையான வேண்டுகோள், இந்த அமைப்புக்கு நன்றிகள்.

இன்று டெல்லியில் எமக்கு தேவையான அரசியல் இலாபங்களுக்கான நகர்வுகளை, ஐ.நா. மனித உரிமை தொடர் காலத்தில், ஆதரவை தேடுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு முயற்சி..!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.