Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அரசுக்காகத் துடிக்கும் புது டில்லியின் இதயம்! – செண்பகத்தார்

Featured Replies

எதிர்வரும் பெப்ரவரி 27 தொடக்கம் மார்ச்சு 23 வரையான நாட்களில் ஜநா மனித உரிமைக் கவுன்சில் அமர்வுகள் ஜெனிவாவில் நடக்கவிருக்கின்றன. அதன் தலைவி நவநீதம்பிள்ளை கொழும்புக்கு மேற்கொள்ளத் திட்டமிட்ட பயணத்தை ரத்து செய்துள்ளார்.

இது இலங்கை – இந்திய தரப்பினருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. நவநீதம்பிள்ளையை வளைத்துப் போடலாம் என்ற இலங்கை அரசின் நப்பாசை கை கூடவில்லை. இலங்கை அரச படைகளின் போர்க் குற்றங்களும் மனித உரிமை மீறல்களும் சுயாதீனமான சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்பதில் திருவாட்டி நவநீதம்பிள்ளை உறுதியாக இருக்கிறார்.

மனித உரிமை கவுன்சிலில் மேற்கு நாடுகள் கொண்டுவர உத்தேசித்திருக்கும் இலங்கைக்கு எதிரான பிரேரணையை தடுப்பதற்கு அல்லது தோற்கடிப்பதற்கு இந்திய மத்திய அரசு கங்கணம் கட்டி நிற்கிறது. மிகவும் தூரநோக்கோடு சென்ற வருடம் தொடக்கம் அது இந்த முயற்சியில் ஈடுபடுகிறது.

இந்தியா வழங்கும் பாதுகாப்பு இலங்கை அரசை காப்பாற்றப் போதுமானதல்ல. அமெரிக்க இராஜாங்கத் துணைச் செயலர் றொபேட் ஓ பிளேக் இலங்கை அரசு மீது அழுத்தம் பிரயோகித்துக் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் நடைமுறையைச் செயற்படுத்துகிறார்.

இராஜங்கத் திணைக்களத்தின் பொதுமக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான பிரதிச் செயலர் மாறி ஒட்டீரோ (Marie Otero) இலங்கை அரசு தொடர்பான கடும் போக்கைக் கடைப்பிடிக்கிறார். உலகளாவிய குற்றவியல் நீதிக்குப் பொறுப்பான தூதர் ஸ்ரீவன் றாப் (Ambassador at Large for Global criminal Justice Steven Rapp) இலங்கை அரசின் போர்க்கால நடவடிக்கைகள் விசாரிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

கனடாவின் வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயர்ட் (John Baird) இலங்கை அரசின் நல்லிணக்க ஆணைய அறிக்கை போதுமானதல்ல என்றும் ஜநா நிபுணர் குழுவின் அறிக்கையில் இடம் பெற்ற குற்றச்சாட்டுக்களுக்கு அது பதில் கூறவில்லை என்றும் 18 ஜனவரி 2012ம் நாள் கூறினார்.“

நாங்கள் தனிப்பட்ட சர்வதேச விசாரணைக்குக் குரல் கொடுக்கிறோம்” என்றார் ஜோன் பெயர்ட். சர்வதேச மட்டத்தில் எழும் கண்டனக் குரல்களை மழுங்கடிப்பதற்கு இந்தியா பலவிதமான தந்திரோபாயங்களைக் கையாள்கிறது. சுதர்சன நாச்சியப்பனின் யாழ் விஜயம், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பயணம், வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம் கிருஷ்ணாவின் யாழ் – கிளிநொச்சி சுற்றுலா என்பன இதிலடங்கும்.

இந்தப் பயணங்களின் பொது நோக்கம் ஈழத் தமிழர்களின் விடுதலை உணர்வை மழுங்கடிப்பதோடு அவர்கள் இந்திய மத்திய அரசு மீது கொண்ட வெறுப்பைத் தணிப்பதுமாகும். இந்தியா மீது ஈழத் தமிழர்கள் முற்றுமுழுதாக அவநம்பிக்கை அடைந்துள்ளனர். எத்தனை பேர் வந்தாலும் தமிழர் மனதை மாற்ற இயலாது.

யாழ்ப்பாணத்தவரான கணித அசிரியர் கனகசுந்தரம் தனக்கு ராமேஸ்வரத்தில் 5ம் வகுப்பில் 1941ல் கணித பாடமும் நன்னெறியும் போதித்ததாக அப்துல் கலாம் யாழ் பல்கலைக் கழகத்தில் சொன்னார். சுப்பிரமணிய பாரதியாரும் தனது ஞான குரு யாழ்ப்பாணத்துத் தவசீலர் முத்துக்குமார் தான் என்று ஒருமுறை குறிப்பிட்டார். இதெல்லாம் தமிழர் மனதை மாற்றப் போதுமானதல்ல.

தமிழ்ர் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு உதவுவேன் என்றும் கலாம் உறுதி மொழி வழங்கினார். ஓன்றுமட்டும் நிட்சயம். இந்திய அரசோ அது காலத்திற்குக் காலம் அனுப்பும் நல்லெண்ணைத் தூதர்களோ ஈழத் தமிழர்கள் இழந்த அரசியல் உரிமைகளை பெற்றுக் கொள்ள உதவப் போவதில்லை.

இந்தியாவின் பாதுகாப்பிற்கு இலங்கை முக்கியம். இது தான் இந்திய அரசின் முக்கிய கரிசனை. இதற்காக இலங்கை அரசை மகிழ்விக்க அது எதையும் செய்யத் தயாராக இருக்கிறது. வெளிவிவகார அமைச்சர் கிறிஷ்ணா இலங்கையின் நல்லிணக்க ஆணைக் குழு அறிக்கையைப் பாராட்டிப் பேசினார்.

முழு உலகமே கண்டிக்கும் போது அவர் தனித்து நின்று இப்படித் தனது நாட்டைக் கேவலப் படுத்தினார். இலங்கை அரசைக் காப்பாற்றுவது மூலம் இனப் படுகொலைப் பங்காளியான தன்னையும் பாதுகாக்க இந்தியா முயற்சிக்கிறது. தமிழ் நாடு சட்ட சபையில் மத்திய அரசிற்கு முரணான குரல்கள் எழுகின்றன.

இந்திய கொமியூனிஸ்ற் கட்சியின் தமிழகக் கிளை முதலமைச்சர் ஜெயலலிதாவை பின்வருமாறு கேட்டுள்ளது. மார்ச்சு மாத மனித உரிமைக் கவுன்சில் அமர்வுகளில் இலங்கை அரசுக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று முதல்வர் கேட்க வேண்டுமாம்.

இது நடக்கும் காரியமா.? யுத்தம் முடிந்து மூன்று வருடமாகியும் வெண்ணிற ஆடை தரித்த இராணுவ ஆளுநர் ஆட்சி தான் நடக்கிறது. 13ம் திருத்தத்திற்கும் கூடிய அதிகாரங்களை வழங்கத் தயார் என்று கிறிஷ்ணாவுக்குக் கூறிய அதே நாளில் ஜனாதிபதி கூட்டமைப்புப் பிரதிநிதிகளை அவமதித்துள்ளார்.

கிறிஷ்ணாவுக்கு உறுதி வழங்கிய அதே நாள் மாலை நடக்கவிருந்த கூட்டமைப்புடனான பேச்சுக்களை முன்னறிவித்தல் கொடுக்காமல் ஜனாதிபதி ரத்து செய்தார். கிறிஷ்ணா வருகையின் பெறுபேறு அத்துடன் முடிந்து விட்டது. பேச்சு நடவாது என்று அறிவிக்காமல் ஒரு தலைப்பட்சமாக பேச்சுக்களை ரத்து செய்த அரசைக் கண்டிக்க இந்தியா மறுக்கிறது.

இதைத் தான் தேசியத் தலைவர் எப்போதும் திருப்பித் திருப்பிக் கூறிவந்தார். “சிங்களத் தலைமைகள் ஒரு போதும் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வைத் தரமாட்டா”. பிரபாகரன் கூறியதைக் காலம் மெய்பித்து வருகிறது. அவர் களத்தில் நின்று போராடிய காலம் தற்காலிகமாக முடிந்தாலும் ஈழத் தமிழர் விடுதலைக்குப் போர் தான் முதல் தெரிவு என்பதில் ஜயமில்லை.

இந்திய அரசு விக்கிரமாதித்தன் கதையில் வரும் முருக்க மரத்தில் மீண்டும் மீண்டும் ஏறும் வேதாளம் போல் இலங்கை அரசுக்கு உதவும் முயற்சியைக் கைவிடத் தயாரில்லை. பெப்ரவரி 5ம் நாள் 60 வரையான புதுடில்லி இராசதந்திரிகளை யாழ்ப்பாணத்திற்கு இந்திய அரசு சுற்றுப் பயணம் அனுப்பியுள்ளது.

ஆபிரிக்க, தென்னமரிக்க, மேற்கு ஆசிய, ஜரோப்பிய நாடுகளைச் சேர்ந்த இவர்கள் புது டில்லியில் தங்கள் நாட்டுத் தூதரகங்களில் பணியாற்றுகின்றனர். வடக்கில் நடக்கும் மேம்பாட்டுத் திட்டங்களையும் இராணுவ ஆட்சியில் நடக்கும் இன நல்லிணக்கத்தையும் பார்வையிடப் புது டில்லி இவர்களை அனுப்பியுள்ளது.

மனித உரிமைக் கவுன்சில் வாக்களிப்பில் இவர்களுடைய நாடுகளை இலங்கை அரசிற்குச் சாதகமாக வாக்களிப்புச் செய்ய வைப்பது தான் இந்திய மத்திய அரசின் அடிப்படை நோக்கம். இந்த இராசதந்திரிகள் பொது மக்களோடு பேசுவதற்குப் பாதுகாப்பைக் காரணம் காட்டி இராணுவம் அனுமதி மறுத்து விட்டது.

மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்ட நீச்சல் தடாகத்தை அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தா இராசதந்திரிகளுக்குக் காட்டினார். இது தான் வடக்கில் நடக்கும் மேம்பாடும் மீள்கட்டமைப்புமாம். இராசதந்திரிகள் வாயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கற்றுக் கொண்டவர்கள். இந்திய மத்திய அரசின் திருவிளையாடலை அவர்கள் நன்றாக விளங்கிக் கொண்டனர்.

புதுடில்லி டெரி (Teri) எனப்படும் சக்திக்கும் அழியாது தொடரும் வளங்களுக்குமான அமைப்பு (The Energy And Resources institute) நோர்வேயின் மேம்பாட்டு அமைச்சர் எறிக் சொல்கைம் அவர்களுக்குக் கௌரவ முனைவர் பட்டம் வழங்கியுள்ளது. ஈழத் தமிழர் இன அழிப்பை கச்சிதமாக முடித்த சாதனைக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.

எஸ்எம் கிறிஷ்ணா இப்போது பதவி பறிபோகும் நிலையில் இருக்கிறார். அவர் கர்நாடகா முதலமைச்சராகப் பதவி வகித்த 1999 -2004 காலத்தில் பல கோடி ரூபா பெறுமதியான ஊழல் புரிந்ததாகக் கர்நாடாகாவின் விசேட ஊழலுக்கு எதிரான லோக்கயுக்த (Lokayukta) நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கிறிஷ்ணா வெளிவிவகார அமைச்சராக 22மே 2007ல் பதிவியேற்றார். ஊழல் குற்றச்சாட்டிலிருந்து விடுவிப்பதற்காக அவர் உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஊழல் வழக்குத் தொடர்கிறது.

கிறிஷ்ணா பதவியிழக்க நேரிட்டாலும் வெளிவிவகார அமைச்சகம் (Ministry of External affairs) வலுவான நிலையில் உள்ளது. புதுடில்லி றாய்சினா (Raisina Hill) குன்றில் இந்திய மத்திய அரசின் செயலகம். (Secretariat) இருக்கிறது. தெற்கு மாடி, வடக்கு மாடி (South Block, North block) என்ற நான்கு அடக்குகளைக் கொண்ட இரு பாரிய கட்டிடத் தொகுதிகள் தனித்தனியே ஒன்றை ஒன்று பார்த்தபடி இருக்கின்றன.

இரு மாடித் தொடர்கள் ஒவ்வொன்றிலும் 1000 அறைகள் இருக்கின்றன. இரு கட்டிடங்களும் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டன. தென் மாடித் தொடரில் பாதுகாப்பு அமைச்சகம், வெளிவிவகார அமைச்சகம், பிரதமரின் அலுவலகம் என்பன காணப்படுகின்றன.

வடக்கு மாடித் தொடரில் நிதி அமைச்சகம், உள்நாட்டு அமைச்சகம் என்பன காணப்படுகின்றன. சவுத் புளொக் எனப்படும் தென் மாடித் தொடரில் ஈழத் தமிழர்களின் தலைவிதி தொடர்பான பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன. 1987ல் இந்திய இராணுவத்தை ஈழத் தமிழர்களை நசுக்குவதற்கு அனுப்பும் இரகசிய முடிவு இங்கு தான் எடுக்கப்பட்டது.

இந்த இரகசிய அமர்வுகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர் இப்போது தமிழ்நாடு சட்டசபையில் தே.மு.தி.க உறுப்பினராக இருக்கும் பன்ருட்டி இராமசந்திரன் ஆவர்; பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தகவல்கள் அவரிடம் இருக்கின்றன. அவற்றை ஆவணப்படுத்துவது அவருடைய கடனே.

ஈழத் தமிழர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வலு தென் மாடித் தொடர் அலுவலர்களுக்கு இருப்பதால் இது பற்றிய ஆய்வுக்கு நம்மவர் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்

senpagam@hotmail.com

www.eelampress.com/2012/02/49539/

ஜனநாயக வேடம் கொண்டிருக்கும் தமிழினப் படுகொலைகளுக்கு துணை நின்ற இந்திய காட்டுமிராண்டிகளை மேற்குலகம் நம்பினால் அது மண் குதிரையை நம்புவதற்கு சமனாகும் என்பதை மீண்டும் உணர்வார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.