Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் பிள்ளைகளை பாதுகாருங்கள் - தமிழ்க் கைதிகளின் உறவினர்கள் வேண்டுகோள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் பிள்ளைகளின் பாதுகாருங்கள் - தமிழ்க் கைதிகளின் உறவினர்கள் வேண்டுகோள்

Published on Thursday, 16 February 2012 09:05

2012தை மாதம் 24ம் திகதி புதியமகசீன் சிறைச்சாலை நிர்வாகத்திற்கும் சிங்களக் கைதிகளுக்கும் இடையே நடைபெற்ற கலவரத்தில் புதிய மகசீன் சிறைச்சாலையிலிருந்து தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்புக் கருதி களுத்துறைச் சிறைச்சாலைக்கு 199 தமிழ் அரசியல் கைதிகள் இடம் மாற்றப்பட்டனர்.

அதன் பின்னர் இடநெருக்கடி காரணமாக கொழும்பு விளக்க மறியல் சிறைச்சாலையில் இருந்து 2 தொகுதிகளாக 65 பேர் கழுத்துறைச் சிறைச்சாலைக்கு இடம்மாற்றப்பட்டனர். இவ்வாறு இடம்மாற்றப்பட்ட 265 பேர் கழுத்துறைச் சிறைச்சாலையில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அதில் 13-02-2012 , 14-02-2012 இல் இரண்டு தொகுதிகளாக நீதவான் நீதிமன்றம் மற்றும் உயர்நீதி மன்றம் ஆகியவற்றுக்கு 120 பேர் புதிய மகசீன் சிறைச்சாலைக்கும் மாற்றப்பட்டு மிகுதியான 142 பேர் கழுத்துறைச் சிறைச்சாலையில் உள்ளனர்.

சிறைச்சாலை உயர் மட்ட அதிகாரிகள் களுத்துறைச் சிறையில் உள்ள அரசியல் கைதிகள் அனைவருக்கும் விரைவில் வேறு இடத்திற்கு மாற்றப்படுவார்கள் என்று கூறியுள்ள போதும் அதற்கான காலம் நிர்ணயிக்கப்படவில்லை.

தற்போது மகசீன் சிறைச்சாலையில் அதிகாரிகளின் கருத்துப்படி 24.01.2012அன்று நடந்த சம்பவங்களின் பின்னர் சில திருத்தவேலைகள் செய்யவிருப்பதாலும் நிர்வாக நடைமுறை சரியானமுறையில் சீர் செய்யப்படாத காரணத்தினாலும் உடன் கழுத்துறையில் இருந்து மகசீனுக்கு அனைவரையும் மாற்றம் செய்யமுடியாது எனவும் இரண்டு மூன்று கிழமைகளுக்குள் பகுதிபகுதியாக மாற்றம் செய்ய நடிவடிக்கை எடுப்பதாகவும் மகசீன்சிறைச்சாலை உயரதிகாரி குறிப்பிடார்.

இது தொடர்பில் கைதிகள் மத்தியிலும் சட்டதத்தரணிகள் மத்தியிலும் பார்வையிடுபவர்கள் மத்தியிலும் ஒரு குழப்பநிலை தோன்றியுள்ளது. அத்தோடு ஏதோ ஒரு இடத்தில் அனைவரும் தனித்துவமான இடத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்தி தங்கவைக்கப்பட வேண்டும் என்பதே கைதிகளின் எதிர்பார்ப்பாகும்.

இருந்தபோதும் தற்போது மகசீன் சிறைச்சாலையில் நீதிமன்றங்களுக்காய் கொண்டு செல்லப்பட்ட 120 கைதிகளில் ஒரு தொகுதியினரை வன்முறையில் ஈடுபட்ட சிங்களக் கைதிகளுடன் கலந்து தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர்.

புதிய அதிகாரி எமில் நிறஞ்சன் தொடர்ந்தும் பதவியில் இருப்பதனை விரும்பாத சிங்களக் கைதிகள் மீண்டும் ஒரு கலவரத்தைத் தோற்றுவிப்பதற்கான சூழ்நிலைகளைத் தோற்றுவிப்பதாகவும் தமிழ் கைதிகளுடன் வேண்டுமென்றே சிங்களக் கைதிகளில் ஒருசிலர் தமிழ்க்கைதிகளுடன் கடுமையாக நடந்து கொள்ளவதாக அறிய முடிகிறது.

இந்நிலமையால் அச்சமடைந்துள்ள தமிழ் கைதிகள் தமக்கான பாதுகாப்பினை உறுதிப்படுத்த மனிதவுரிமை ஆணைக்குழு மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அகியவற்றுக்கு தமது நிலமையைத் தெரிவிக்குமாறு பார்வையிடச் சென்ற உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர்.

எனவே இவர்களுக்கு தீர்க்கமான முடிவொன்றைச் சிறைச்சாலைத் திணைக்களம் மேற்கொள்ள வேண்டுமென்று தமிழ்க் கைதிகளின் உறவினர்கள் வேண்டுகோளொன்றை விடுத்துள்ளனர். தமது பிள்ளைகளின் பாதுகாப்பை சிறைச்சாலைத் திணைக்களம் உறுதி செய்ய வேண்டுமெனவும் அவ்வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://tamilnews24.c...-02-16-09-05-08

Edited by shanthy

தமிழ் அரசியல் கைதிகளை உறவினர்கள் பார்ப்பதற்கு அனுமதி மறுக்கப்படுவதாக முறையீடு

களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை உறவினர்கள் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லையென மனித உரிமை வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டினார்கள்.

கைதிகள் சிலரின் உறவினர்கள் சிறைச்சாலைக்குப் பல சிரமங்களின் மத்தியில் சென்றபோதும், நீண்டநேரத்தின் பின்னர், கைதிகளை பார்வையிட முடியாதென அவர்களை அதிகாரிகள் திருப்பி அனுப்புவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதென வழக்கறிஞர்கள் தெரிவித்தார்கள்.

பாதிக்கப்பட்ட உறவினர்கள் கொள்பிட்டியில் உள்ள மனித உரிமைகள் காப்பகத்துக்கு இன்று காலை சென்று இது தொடர்பாக முறையிட்டு, வழக்கறிஞர்களின் உதவிகளைக் கோரியதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகசீன் சிறைச்சாலையில் ஏற்பட்ட குழப்பங்களை அடுத்து அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த 180 தமிழ்க் கைதிகள் கடந்த மாதம் களுத்துறை சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்கள்.

அவர்களுக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் வழங்கப்படவில்லையெனவும், அவர்களது வழங்கு ஆவணங்கள் எவையும் மீளப்பெற்றுக் கொடுக்கப்படவில்லையெனவும் உறவினர்கள் மனித உரிமைகள் காப்பகத்திடம் தெரிவித்தார்கள்.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=11127

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.