Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வலிகாமம் உயர்பாதுகாப்பு வலயப்பகுதிகளை பலப்படுத்தும் நடவடிக்கையில் படையினர்

Featured Replies

வலிகாமம் வடக்கில் தொடந்தும் உயர்பாதுகாப்பு வலயங்களாகவுள்ள பகுதிகளை, படையினர் இறுக்கமான முறையில் மேலும் பலப்படுத்தும் நடவடிக்கையில் தொடர்ந்தும் ஈடுபட்டுக் கொண்டிருப்பதால், அப்பகுதி மக்கள் அச்சத்துடன் வாழவேண்டியுள்ளது.

இந்தவிடயம் தொடர்பாக வலிவடக்கு பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் எஸ்.சஜீவனுடன் தெரிவிக்கையில்,

ஒட்டகப்புலம் பிரதேசத்தில் 23 கிராம சேவகர் பிரிவுகள் உள்ளன. இங்கிருந்து சுமார் இரண்டரைக் கிலோ மீற்றர், அதாவது வசாவிளான் வரைக்கும் கொங்றிட் தூண்கள் நாட்டப்பட்டு முள்ளுக் கம்பி வேலிகளை படையினர் அமைத்து வருகின்றனர்.

வலிகாமம், வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினுள் இதுவரை 8 கிராம சேவகர் பிரிவுகளில் ஒரு பகுதியும், 15 கிராம சேவகர் பிரிவுகளில் முழுமையாகவும் மீள்குடியேற்றத்திற்கான தடை விதிக்கப்பட்டிருக்கின்றது.

அந்தவகையில், கே.கே.எஸ் தெற்கு ஜே.233, கே.கே.எஸ் மத்தி ஜே.234, கே.கே.எஸ் மேற்கு ஜே.235, குரும்பசிட்டி ஜே.242, மயிலிட்டி வடக்கு ஜே.246, தய்யிட்டி கிழக்கு ஜே.247, மயிரிட்டித்துறை மேற்கு ஜே.248, தய்யிட்டி வடக்கு ஜே.249, தய்யிட்டி மேற்கு ஜே.250, மயிலிட்டித்துறை வடக்கு ஜே.251, பலாலி மேற்கு ஜே.252, பலாலி கிழக்கு ஜே.253, பலாலி வடக்கு ஜே.254, பலாலி வடகிழக்கு ஜே.255, பலாலி தெற்கு ஜே.256 கிராம சேவகர் பிரிவுகளில் மீள்குடியேற்ற தடைவிதிக்கப்பட்ட பகுதிகளாகும்.

இதேபோன்று பலாலி வீமன்காமம் வடக்கு ஜே.236, பலாலி வீமன்காமம் மேற்கு ஜே.237, கட்டுவன் ஜே.238, கட்டுவன் தெற்கு ஜே.239, வருத்தலவிளான் ஜே.241, குரும்பசிட்டி கிழக்கு ஜே.243, வாசாவிளான் கிழக்கு ஜே.244, வாசாவிளான் தெற்கு ஜே.245 போன்ற பகுதிகளில் ஒரு பகுதியில் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் புதிதாக அமைக்கப்பட்டுவரும் முட்கம்பி வேலிகள் தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாதெனவும், அது தொடாபில் அவதானிக்கப்பட்டு தமது கட்சிக்குத் தெரியப்படுத்துவோம் எனவும் கூறினார்.

இந்த நிலையில் தற்போது, முட்கம்பிவேலிகள் அமைக்கப்பட்டு அந்தப் பகுதியை தொடர்ந்தும் பலப்படுத்தும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர் என பிரதேச மக்கள் தொடர்ந்தும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

valikamam_north_001.JPG

valikamam_north_002.JPG

valikamam_north_003.JPG

valikamam_north_004.JPG

valikamam_north_005.JPG

valikamam_north_006.JPG

http://news.lankasri.com/show-RUmqyDTWPcfp7.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.