Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பூந்தமல்லி சிறப்பு முகாமில் நீராகாரம் கூட அருந்தாது ஈழத்தமிழர் சாகும்வரையான உண்ணா நிலைப்போராட்டம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Lankan-tamilPoonthamialli070312_150.jpg

யுத்தத்தின்போது தமது உயிரைக் காப்பாற்றுவதற்காக அகதியாக இந்தியா சென்றடைந்த ஈழத்தமிழர் ஒருவர் நீராகாரம் கூட அருந்தாது சாகும்வரையான உண்ணா நிலைப்போராட்டத்தை மேற்கொண்டுள்ளார். பூந்தமல்லி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள திரு. ஜெயமோகன் என்பவரே இவ்வாறு நீராகாரம் கூட அருந்தாது சாகும்வரையான உண்ணா நிலைப்போராட்டத்தை மேற்கொண்டுள்ளார்.

அகதியாக தமிழ்நாட்டில் தங்கியிருந்த திரு.வீ.ஜெயமோகன் உட்பட 14 பேரை கடந்த 2009 ஆம் ஆண்டு பங்குனி மாதம் இந்திய குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினர் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மருந்துகளை இந்தியாவிலிருந்து அனுப்ப முயன்றதான குற்றச்சாடின் பேரில் திடீரென கைது செய்து செங்கல்பட்டு முகாமிற்கு கொண்டுசென்றிருந்தனர். ஆனால் ஒரே குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 14 பேரில் 12 பேரை விடுதலை செய்துள்ளபோதும் ஜெயமோகன், கெங்காதரன் ஆகிய இருவரை மட்டும் இன்னும் விடுதலை செய்யாது நீதிக்குப் புறம்பாக தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

Lankan-tamilPoonthamialli070312_001.jpg

இதனாலேயே இதற்கு முன்னரும் 3 தடவைகள் ஜெயமோகன் தம்மை விடுவிக்கக் கோரி உண்ணானிலைப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தார். இருப்பினும் பல வாக்குறுதிகளை வழங்கி அவரது உண்ணா நிலைப் போராட்டத்தை நிறுத்திய முகாம் அதிகாரிகள் இதுவரை அந்த வாக்குறுதிகளஇ நிறைவேற்றாத காரணத்தால் தான் இந்த முடிவை எடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து திரு.ஜெயமோகன் அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில்:

நான் முன்னரும் பல தடவைகள் உண்ணாவிரதம் இருந்தபோதும் உதவி அத்தியட்சர், தாசிதார், மற்ரும் பூந்தமல்லி காவல் ஆய்வாளருக்கு முன்னாள் இரண்டு வாரங்களுக்குள் என்னை விடுதலை செய்வதாக வாக்குறுதி தந்த போதும் இதுவரை எந்த பதிலும் இன்றி நான் ஏமாற்றப்பட்டுள்ளேன்.

SUB COLLECTER வந்தும் இப்படி பொய்யாக வாக்குறுதி தந்தால் நான் யாரை நம்புவது! எனவே இனிமேலும் அதனை நம்பி இருக்கத் தயார் இல்லை என்ற முடிவோடு இறுதியாகவும், உறுதியாகவும் நீராகாரம் கூட அருந்தாது சாகும்வரையான உண்ணா நிலைப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

இவர் தனது உண்ணாநிலைப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு முன் தனது இந்த முடிவிற்கான காரணத்தை விளக்கமாக தனது கைப்பட கடிதமாக எழுதி பூந்தமல்லி சிறப்பு முகாம் அதிகாரிக்கும், வட்டாச்சியர் அலுவலகத்திற்கும் அனுப்பிவைத்ததோடு தனக்கு நேர்ந்த இந்த நிலையை வெளியுலகிற்கு கொண்டுவந்து தனக்கான நீதி கிடைக்க அனைவரும் உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இவருக்கும், இவரைப்போல் சிறைகளில் நீதி மறுக்கப்பட்டு இளமை வாழ்வை சிறைகளில் அனுபவித்துக்கொண்டிருக்கும் தமிழர்களுக்கு விடுதலை பெற்றுக்கொடுத்து நல்ல வாழ்வை அமைக்க தமிழ் உணர்வாளர்களும், மனித நேய அமைப்புக்களும் தொடர்ந்து குரல் எழுப்புவதோடு அழுத்தங்களை கொடுக்கவேண்டியதும் அவசியமானதாகும்.

http://www.seithy.co...&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.