Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆதிதமிழர்கள்

Featured Replies

மிகவும் பயனுள்ள காணொளி இணைப்பிற்கு நன்றிகள் நெல்லையன் :):):) .

சிவன் சிந்து வெளி நாகரிக காலத்தில் கழிமண் உருவங்களில் வடிக்கப் பட்டிருக்கிறார். அங்கு அவர் ஞானநிலையில் சப்பாணிகாட்டியிருப்பவராக காட்டப்பட்டிருக்கிறார். அங்கிருந்து அலப்பட்டு வெளியேறிய மக்கள் சிவனின் நினைவை யோகத்தில் இருக்கும் ஞானியாகா மட்டும் தம்முடன் காவித்திரிந்தனர். அதாவது சிந்துவெளித்தமிழர் ஞானத்தை மட்டும் கவனித்தார்களே அல்லாமல் பிற்காலம் பிழையாக விளங்கிக்கொண்ட ஆண்களுக்கான படைத்தல் காத்தல் அழிதலும், பெண்களுக்கான கல்வி செல்வம் வீரமும் போன்ற தொழில்களை கடவுள்களுக்கு அளித்திருக்கவில்லை. எப்படி பல உருவங்களில் காணப்படும் முருகன் தென்தமிழருக்கு உயிர்வாழ்வுக்கான தலைவனோ, அததேமாதிரியே சிவன் சிந்துவெளிதமிழருக்கு இருந்தார். ஆனால் மனித நாகரிகத்தின் உச்சத்திலிருந்த சிவனுக்கு தமிழ்நாட்டு முருகன் நாகரீகத்தில் சமனாக இருந்திருக்க முடியாது.

துறவியும் ஞானியுமான சிவன் இவர்களை நியாயத்தின் பால் வழிநடத்தி சென்றிருந்தார். நியாயத்தின் அதி உச்ச நிலையில் சிபி தன்னைத்தான் வெட்டி புறாவை காப்பாற்றவேண்டும் என்பதுவரைக்கும், சிவனை பின்பற்றியோர் போத்தித்திருந்தனர். புத்தாபிரான் காலத்திலும் இதே தத்துவங்கள் திரும்பி வந்ததால் சிபியின் கதை சிவன் கதை அல்ல புத்த சமயத்தினரின் கதை என்றும் வந்தது. ஆக, ஆரம்பத்தில் சிவனிலிருந்து, புத்தர், ஆதிசங்கரர் உடாக நேற்றைய நூற்றாணடு பரமகம்சர் வரை, வாழ்வின் கடைசி எல்லையான துறவறம் தான் போதிக்கப்பட்டது. இந்த தத்துவங்கள் வேறு எதிலும் ஒட்டிக்கொள்ளாமல் 6000,-7000 வருடங்களுக்கு தனியாக வாழ்கின்றன.

பிரித்தானியா உலகையாள எப்படி அவர்களின் தச்சர்களும் கொல்லர்களும் காரணமாக இருந்தார்களோ, அதேமாதிரியே சிந்துவெளியின் நாகரீத்திற்கு காரணமானவர்கள் அதன் கழிமண் குயவர்கள். இவர்களின் தயவால்த்தான் நாம் நமது முழுமுதல் கடவுளான சிவன் 6000-7000 வருடங்களாக ஞானத்தில் இருக்கும் ஒரு துறவி என்பதைத் தெரிய வருகிறோம். ஆனால் சிந்துவெளிநாகரீகத்தின் பின் ஆரியரால் அடிமைகளாக்கப்பட்ட குயவர் மெல்ல மெல்ல தமது விஞ்ஞானக்கலையை மறந்ததுமட்டுமல்ல பிரத்தியேகமாக சமூகத்தில் தமது அந்தஸ்த்தையும் இழக்க நேர்ந்தது. இந்த குயவர்களின் அபார ஆற்ற்லைக்கண்ட ஆரியர் இவர்களை தாம் நாடோடிகளாகப் போகும் இடங்களுக்கு கயிற்றால் தமது வண்டியின் பின் இணத்து கொண்டு சென்றார்கள். தமது வாழ்வை இழந்த சிந்துவெளிமக்கள் தமது சமூகத்தின் சிறப்பம்சமான கழிமண் குயவர்களையும் இழந்து சிவனை சிலை வடிக்க முடியாமல் மனத்தில் மட்டும் கொண்டு திரிந்தார்கள்.

பிற்காலம், ஆரிய திராவிட கலப்பால் பல புதிய சமயங்கள் தோன்றின. எதுசமயமானாலும் தமது தலைவனை காவலனாகவும் தெய்வமாகவும் காண்பது இயல்பு. தெய்வ நம்பிக்கை உயரும் போது இறவனை படைப்பவனாக காண்பதுவும் இயல்பு. ஆனால் படைத்தல் காத்தல் அழித்தல் என்ற தொழில்த் துறைக் கடவுள்கள் இந்த புதிய மதங்களில் இருந்தே தோன்றினர். எப்படித்தான் மதம் மாற்றப்பட்டாலும் திராவிடர் மனத்தில் சிவன் திரும்பத் திருமப வந்து அவற்றையெல்லாம் தொடந்து உள்வாங்கிக்கொண்டேயிருந்தான். ஆனால் மிக வலிமையான அடையாளம் கொண்ட உருத்திரன் போன்ற தலைவர்களை இலகுவாக பழைய ஞானியான சிவனாக மற்ற முடியவில்லை. என்வே உருத்திரன் முற்றிலும் வேறான அழித்தல் கடவுளானான். ஆனால் சிவனை அழித்தல் கடவுளாக எற்றுக்கொள்ளாத மக்கள் அவனை புதிதாகக் கண்டு பிடித்த படைத்தல் காத்தல் அழித்தல் போன்ற எல்லாத்தொழில்களுக்கும் தலைவனான பழைய தனிப்பெரும் கடவுளான சிவனாக்கி விட்டனர். மொத்தத்தில் சிவன் எல்லா அடையாளங்களையும் உள்வாங்கினாலும், கடையில் தனக்கென ஒரு அடையாளமும் இல்லாமல் தவிக்க நேர்வதால்த்தான் பிழையான சிவலிங்க விளக்கங்களும் எழுகின்றன.

தத்துவங்கள் இப்படி யெல்லம் பல பயணங்கள் செய்துகொண்டிருக்கும் போது, தமது சமூக நாகரீக முன்னோடிகளான குயவர்களை இழந்தபின் திராவிடர்களிடம் சிவப்பு கழிமண்களில் காணப்பட்ட சிவப்பனுக்கு இப்போது உருவம் இல்லாமல் போய்விட்டது. குயவர்களை ஆரியர்களுக்கு அடிமைகளாக கொடுத்துவிட்டாலும் கற்பனை வளம் குறையாத திராவிட மக்கள் ஆற்றோரங்களில் நீரினால் அரிக்கப்பட்ட கற்களில் ஒரு ஞானி சப்பாணை கட்டியிருந்து தவம் செய்யும் காட்சிகளை கண்டார்கள். அதாவ்து தமது சிவனை பிரதிநிதிப்படுத்த ஒன்று கண்டு கொண்டார்கள். அதுதான் சுயம்பு லிங்கங்கள்.

லிங்கம் என்பது இன்னொருபொருளைச் சுட்டிக்காட்டி அதை வேறுபடுத்தி பிரதிநிதிப்படுத்தும் பொருள். அதனாலேயே இது ஆண்களுக்கு பாவிக்க பட்டதும்; பெண்களுக்கு பாவிக்க படாமலிருந்ததும். அதை வைத்து பார்க்கும் போது லிங்கம் என்ற சொல் ஆண் பெண் சேர்ந்த இனவேறு பாடு தேவையில்லாத கூட்டு நிலையில் கிட்டவும் பொருந்தாத ஒரு பாவனை. அதாவது சிவலிங்கம் என்பது இனப்பெருக்கத்தை காட்டுவதாகவும், எனவே சிவன் படைத்தல் கடவுளே அல்லாமல் அழித்தல் கடவுள் அல்ல என்று விவாதம் வைப்பதும் வெறும் பேதமை. குயவர்களைக்காணாமல் தவித்த திராவிடர் சுயம்பு லிங்கங்களைக்கண்டு சற்று ஆறுதல் அடைந்தார்கள். அவறை தமது, தலைவன்- கடவுளின் பிரதிநிதிதுவம் என்று பொருள் பட சிவலிங்கம் என்று அழைத்தார்கள். காலம் செல்ல செல்ல இயற்கையில் கண்டெடுக்கும் சுயம்பு லிங்கங்களுக்கு மேலாகவும் கற்களை தாமே திருத்தி லிங்க வடிவில் அமைத்தார்கள். இது கல்லுளித்தச்சர் கற்களை முற்றிலும் மாற்றி சிற்பங்கள் வடிக்க தொடங்க கன காலங்களுக்கு முதல் நடந்தது.

அதாவது சிவலிங்கமென்பது செம்மண் உருவங்களில் காணப்பட்ட ஞான நிலையில் இருக்கும் அவர்களின் தலைவனின் உயிர் துடிப்பான பிரதிநித்துதவமேயன்றி ஆண்-பெண் உறவை சித்தரிக்கும் வறட்டு தத்துவம் அல்ல. ஆண்-பெண் உறவென்பது புரணக்கதைகளை பிழையாக விளங்கிக் கொண்டுவிட்ட மேலைநாட்டவரின் கட்டுக்கதை. தாமேதோ புதிதாக படித்து விட்டதாக காட்டிகொள்ள முயல்வோர் அதை வைத்து தமது பிழைப்பை நடத்துகிறார்கள்

Edited by மல்லையூரான்

  • 1 month later...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.