Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னார் ஆயருக்கு மிரட்டல்

Featured Replies

மன்னார் ஆயருக்கு மிரட்டல்

இலங்கைச் சூழல் குறித்து ஐ நா மனித உரிமைப் பேரவைக்கு கடிதம் எழுதிய மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப், ஊடகங்கள் மற்றும் இலங்கை அரசில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உரிமைய போன்ற கட்சிகளின் அச்சுறுத்தலுக்கு ஆளாவது குறித்து தாம் கவலையடைவதாக கத்தோலிக குருமார்கள், அங்கிலிகன் குருமார்கள் உள்ளிட்ட அறுபதுக்கும் மேற்பட்டோர் ஐ நாவுக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.

இலங்கை சூழல் குறித்து மன்னார் ஆயர் மற்றும் வடக்கில் உள்ள 30 கத்தோலிக குருமார்கள் சில நாட்களுக்கு முன்பு கடிதம் எழுதினர். இதையடுத்து அவர்கள் மிரட்டப்பட்டதாக நாட்டின் வடக்கு மற்றும் தெற்கில் உள்ள கிறிஸ்தவ குருமார்களும், பொதுமக்களும் ஐ நா விடம் தற்போது தெரிவித்துள்ளனர்.

வட பகுதியில் இருக்கும் கத்தோலிக குருக்கள் மக்களின் கருத்தை பிரதிபலிக்கும் நோக்கிலேயே ஐ நாவுக்கு கடிதத்தை தாம் எழுதியதாக பிபிசி தமிழோசையிடம் அருட்தந்தை டொமினிக் தெரிவித்தார்.

அந்தக் கடிதம் இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கு எதிரானது என்று தவறாக பொருள் கொள்ளப்பட்டதாகவும் அதனால் சில மிரட்டல்கள் வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் மன்னார் ஆயர் மிரட்டப்பட்டதாக தமக்கு ஏதும் புகார்கள் வரவில்லை என்று கொழும்பு மறைமாவட்டத்தின் சார்பில் பேசவல்லவர் தெரிவித்தார்.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/03/120313_bishopthreatened.shtml

ஆனால் மன்னார் ஆயர் மிரட்டப்பட்டதாக தமக்கு ஏதும் புகார்கள் வரவில்லை என்று கொழும்பு மறைமாவட்டத்தின் சார்பில் பேசவல்லவர் தெரிவித்தார்.

எப்படி வரும் புகார்.......................போர் குற்றம் எதுவுமே நடக்கவில்லை என்று உண்மைக்கு புறம்பாக சாட்சி கூறிய கொழும்பு மறை மாவட்ட வட்டம் .......

மன்னிக்கவும் இந்தக்கருத்திற்கு ஏனனில் நானும் ஓர் கத்தோலிக்கன் என்ற வகையில் ஒன்று கூறுகிறேன். வடக்கில் உள்ள ஆயரும்,குருக்களும் தாம் உண்மையில் கிறிஸ்தவன் என்றும் கொழும்பில் உள்ள ஆயரும்,குருக்களும்

தாம் புத்தன் என்று காட்டும் கொடுமையை நினைத்தால் .......................

ஐயோ கிறிஸ்தவர்களே .......................................................

  • தொடங்கியவர்

தமிழனுக்கு ஒரு சட்டம் சிங்களவனுக்கு ஒரு சட்டம்.

ஜே.வி.பி. கை ஓங்கியிருந்த காலத்தில் மகிந்தர், மனித உரிமை ஆர்வலர், ஜெனீவா மனித உரிமை தொடருக்கு சென்று ஐ.நா. தலையீட்டை வேண்டியவர். இன்று அவரே ஒரு போர்க்குற்றவாளி என்பது மட்டுமல்ல, தன்னுடன் பங்காளிகளாக தீவிரவாத சிங்கள கட்சிகளையும் வைத்துள்ளார்.

இன்று ஐ.நா.வுக்கு கடிதம் எழுதுவதே குற்றமாகியுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இயேசுவின் மலைப்பிரசங்கத்தில் சேர்க்கவேண்டிய இன்னுமொரு வசனம்: தாய்நாட்டிற்காக குரல் கொடுப்போர் பேறுபெற்றோர் ஏனெனில் அவர்கள் மகிந்தருக்கு வால்பிடிக்கும் கருதினால் எனப்படுவார்கள். ஆமென்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.