Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலாத்காரமாக ஏற்றி இறக்கப்பட்டவர்களின் கைகளில் UNக்கு எதிரான பதாகைகளை திணித்து ஆர்ப்பரிக்கச் செய்தனர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைப் படையினர்:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

GTN.special_CI.jpg

யாழ்ப்பாண நகரப்பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களை கொண்டு படைத்தரப்பும் ஜெனிவாவிற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டமொன்றை இன்று நடத்தி முடித்துள்ளது.குடாநாட்டின் பல பகுதிகளிலிருந்தும் இன்று காலை முதல் வாகனங்களில் ஆட்களை திரட்டும் பணியில் படையினர் முழு அளவில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பல இடங்களிலும் வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த நிலையில் முகாம்களில் அகதி வாழ்க்கையை தொடரும் மக்களே இந்த ஆட்பிடிப்பிற்கு உள்ளாகியிருந்தனர். வடமராட்சி கிழக்கில் அண்மையில் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்டவர்களும் இலக்கு வைக்கப்பட்டிருந்தனர். குடாநாட்டிற்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்த எதிர் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தனது சந்திப்புக்களினல் முக்கிய நிகழ்ச்சி நிரலாக வலி.வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தவர்களை சந்திப்பதையே திட்டமிட்டிருந்தார்.அத்தகைய சூழலில் படையினரது ஆட்பிடிப்பில் முக்கியமாக இடம்பெயர்ந்த நிலையில் மீள்குடியமர்விற்கு போராடி வரும் மக்களும் மீளக்குடியமர்ந்த மக்களும் இலக்கு வைக்கப்பட்டமை உள் நோக்கம் கொண்டதென சந்தேகம் எழுப்பப்பட்டிருந்தது.

காலை முதல் படையினர் வடமராட்சி மற்றும் வலிகாமம் பகுதிகளில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாம்களுக்கு நேரில் சென்று ஆட்களை திரட்டியிருந்தனர். குறிப்பாக வலிகாமத்தின் அராலிப் பகுதியில் கூலி வேலைக்கென புறப்பட்டுக்கொண்டிருந்த ஆண்கள் மற்றும் பெண்கள் பால் வேறுபாடின்றி மறுப்பு தெரிவித்த போதும் பொருட்படுத்தப்படாது வாகனங்களில் ஏற்றிச் செல்லப்பட்டனர்.யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் இவர்கள் அனைவரும் இறக்கப்பட்டு கைகளில் சுலோக அட்டைகளும் திணிக்கப்பட்டன. ஜ.நாவிற்கு எதிராகவும் அமெரிக்க அரசினது இலங்கைக்கு எதிரான பிரேரணை தொடர்பாகவும் சுலோக அட்டைகளில் அரை குறை தமிழில் அவசர அவசரமாக எழுதப்பட்ட குற்றச்சாட்டுக்கள் எழுதப்பட்டிருந்தன.

சுமார் ஜநூறிற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இவ்வாறு கொண்டு வந்து சேர்க்கப்பட்டிருந்தனர். வடமராட்சி கிழக்கிலிருந்து குறிப்பாக ஆழியவளை-பருத்தி;த்துறை சேவையிலீடுபட்டிருந்த பேருந்துகள் வழி; மறிக்கப்பட்டு அண் =மையில் மீள்குடியமர்ந்தவர்களும் அள்ளிக் கொண்டுவரப்பட்டிருந்தனர்.நேற்றைய தினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த நிலையில் இன்றைய தினமே சேவைக்கு திரும்பியிருந்த போக்குவரத்து சபை பேருந்துகள் இன்று ஆட்களை ஊர்வலத்திற்கு ஏற்றி திரியும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.

வழமை போலவே எடுத்து கொடுக்க கோசங்களை எழுப்பி வி;ட்டு ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்து சென்றனர்.ஊடகவியாலாளர்கள் புகைப்படம் பிடிக்க முற்பட்ட வேளையில் எல்லாம் அவர்கள் எல்லோரும் தம்மை படம் பிடிக்க வேண்டாமென கெஞ்சிக் கேட்டுக்கொண்டனர்.தமது விருப்பின்றியே மிரட்டி அழைத்து வரப்பட்டிருந்ததாக அவர்கள் அங்கு நின்றிருந்த ஊடகவியலாளர்களிடம் குறை கூறினர்.ஆர்ப்பாட்டத்தி;ன் பின்னர் சிலரை ஏற்றி வந்த பேருந்துகள் விட்டு சென்று விட வீடு திரும்ப பணம் இன்றி அவர்கள் அல்லாடி திரிந்தனர்.

ஏற்கனவே சுதந்திரக்கட்சியின் யாழ்மாவட்ட பிரிவினர் மற்றும் ஈபிடிபியினர் இத்தகைய ஆர்ப்பாட்டங்களை நடத்திவிட்ட நிலையில் இன்றைய தினம் படையனினரும் தமது பணியினை நிறைவு செய்துள்ளனர்.

http://www.globaltam...IN/article.aspx

நேற்றைய தினம் தென்மராட்சிப் பகுதியின் சில இடங்களில் வீடுகளுக்கு சென்ற இராணுவத்தினர் அங்கிருந்தவர்களின் அடையாள அட்டைகளைப் பெற்றுச் சென்று, அதனை இன்று ஆர்ப்பாட்டத்திற்கு வந்து பெற்று கொள்ளுமாறும் தெரிவித்துள்ளனர்.

http://news.lankasri.com/show-RUmqyDSbPdkxy.html

ஐ நா வும் உலக நாடுகளும் இவைகளைப் புரிந்து கொள்ளும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.