Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சென்னையில் உரையாற்றும் சுமந்திரன் வெளியேற்றப்படுவாரா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

sumanthira-hang21-100x100.jpg

இன்று மலை 5 மணிக்கு தமிழகத்தில் சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் PUCL ஏற்பாடு செய்யும் கருத்தரங்கு நடக்கிறது. அதில் தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்துவரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஏ.சுமந்திரன் உரையற்றுகின்றார் . இதில்நாடு கடந்த தமிழீழ அரசாங்க தோழமை மையத்தின் பேராசிரியர் சரஸ்வதி அம்மா அவர்களும் கலந்து சிறப்பிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் தென்னிலங்கை தொலைக்காட்சியொன்றிற்கு கருத்து தெரிவித்திருந்த சுமங்திரன் தமிழ் தேசியத்திற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்ததுடன் தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.அத்துடன் தமிழீழ விடுதலை போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் விதத்திலான கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்.

தென்னிலங்கை தொலைக்காட்சிக்கு தெரிவித்த கருத்துக்களை டெயிலி மிரர் வெளியிட்டிருந்தது. அதன் முழு விபரம் வருமாறு,யுத்தத்தின் போது பெரும்பாலான பொதுமக்களை புலிகளே சுட்டுக்கொன்றனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கொழும்பில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

புலிகளை நாங்கள் ஒருபோதும் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என ஏற்றுக்கொள்ளவில்லை. இறுதி யுத்தத்தின் போது புலிகளும், இராணுவமும் பொதுமக்களை சுட்டுக்கொன்றனர். சிறிலங்கா இராணுவத்தின் மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட்டால் விடுதலைப்புலிகள் மீதும் போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். இரு தரப்பும் போர்க்குற்றங்களை புரிந்தனர். எனவே போர்க்குற்ற விசாரணை வேண்டும் என கோருவதில் அர்த்தம் இல்லை என சுமந்திரன் தெரிவித்தார்.

போர் நடைபெற்ற காலத்தில் விடுதலைப்புலிகள் பொதுமக்களை இராணுவக்கட்டுப்பாட்டு பகுதிக்கு செல்வதற்கு அனுமதிக்கவில்லை. அனுமதித்திருந்தால் பொதுமக்களின் உயிரிழப்பை தவிர்த்திருக்க முடியும். இதனாலேயே பெருமளவிலான பொதுமக்கள் உயிரிழக்க காரணமாக அமைந்தது என்றும் சுமந்திரன் தெரிவித்தார்.

அரசியல் தீர்வு திட்டம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த சுமந்திரன் சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வுத்திட்டத்தை தான் தமிழர்கள் முன்வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு வருவதாலும் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி வருவதாலும் சிங்களத்தடன் ஒட்டி உறவாடுவதாலும் யாழ் பல்கலைக்கழகத்தில் இவரது கொடும்பாவி எரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

டெயிலி மிரரில் வெளியான செய்தி ஆதாரம்

SUMANTHIRDAILY-MIRROR.jpgsumanthira-hang21.jpg

sumanthiran.jpg

http://www.saritham.com/?p=55167

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் அவமதிக்கப்படுத்தப்பட்டு அனுப்பபடுவர் என்றே நான் நம்புகின்றேன்.

இவரைப்போன்றவர்களுக்கு இதெல்லாம் ஒரு மேற்ரரேயில்லை ......

சுமந்திரன் இவர் கொழும்பில் பிறந்து வளர்ந்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும் வடமாகாண கிழக்கு மாகாண மக்கள் பட்ட அவஸ்தைகள் தெரியாத ஒரு சிங்களக்காற்றைச்சுவாசித்தவர் இவரை தமிழ்த்தேசீயக்கூட்டமைப்புக்குள் கொண்டு வந்தவர் சம்பந்தந்தான் என்றால் அவரே இவரைக்கூட்டிக்கொண்டு ஓய்வு பெறுவது அவருக்கும் மரியாதை அப்படி இல்லையென்றால் வரும் தேர்தலில் சம்பந்தனும் சுமந்திரனும் மக்களிடம் அனுமதி கேட்டு வென்றால் எல்லோருக்கும் நல்லது இல்லையென்றால் சுமந்திரன் தானாகவே ஒதுங்கிக்கொள்வது அவருக்கு நல்லது.தமிழரின் சாபக்கேடு இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழருக்குள் தறுதலைகள் புகுந்து கெடுப்பது.

  • கருத்துக்கள உறவுகள்

மாலை நடந்த பியுசிஎல் கூட்டத்திற்க்கு நானும் தீபசெல்வனும் சென்றிருந்தோம். சுமந்திரனுக்கு தீபச் ச்டெல்வனையே தெரியவில்லை.

சுமந்திரன் ஒரு தேர்ந்த பேச்சாளரல்ல. சுமந்திரன் வரலாறு பற்றியும் ஜெனிவா அமரிக்கத் தீர்மானம் பற்றியும் தமிழர் கூட்டமைப்பு நிலைபாட்டில் இருந்து பேசினார். ஆட்சேபகரமாக எதுவும் பேசவில்லை. கூடங்குளத்தில் இருந்து உதயகுமார் செல்பேசி மூலம் பேசினார். பின்னர் நாம் கிளம்பிவிட்டோம்.

சுமந்திரனின் கருத்துகளோ அல்லது வேறு முரண்பாட்டான கருத்துக்களோ எதுவாயினும் கருத்துக்களைக் கருத்துரீதியாக அணுகும் பக்குவத்தை நாம் வளர்த்துக் கொள்வதன் மட்டுமே நமது விடுதலைக்கு பங்களிக்க முடியும். கருத்து முரண்பாட்டுக்கு ஒருவரைக் கொல்வது போன்ற அணுகுமுறைகள் எங்கள் கடந்த கால வரலாற்றை இரத்தக் கறைப் படுத்தியிருக்கு. . சர்வதேச அரங்குகளில் கருத்துகளுக்கு எதிரான வன்முறைப் போக்குகள் நமது இலட்சியங்களுக்கு தீங்கையே ஏற்ப்படுத்தும்.

எங்கள் இளையவர்களை நாம் பிழையாக வழிநடத்தக் கூடாது.

Edited by poet

சுமந்திரனை சென்னையில் உரையாற்ற அனுமதிக்க வேண்டாம்.

sumanthira-hang-yarl-uni-play-cricket-with-srilanka-killers.jpg

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின், மக்களால் தெரிவு செய்யப்படாத பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சென்னையில் உள்ள லயோலா கல்லூரியின் ஏற்பாட்டில் உரையாற்ற உள்ளதாக அறிகின்றோம்.

தமிழ் மக்களுக்கு தமிழீழ விடுதலைக்கும் போராடிய எமது போராளிகளையும் தலைவரையும் புலம்பெயர் மக்களையும் தொடாந்தும் அவதூறாக பேசிவரும் சுமந்திரன் அவர்களை கல்லூரியில் உரையாற்ற அனுமதிக்க வேண்டாம்.

சுமந்திரன் சிங்கள பேரினவாத அரசுக்கு சார்பாகவும் தமிழர்களுக்கு விரோதமாகவும் விதைத்த கருத்துக்களை இங்கே பட்டியல் இடுகின்றோம்.

1. தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் இல்லை

2 .புலிகளை நாங்கள் ஒருபோதும் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என ஏற்றுக்கொள்ளவில்லை

3. இறுதி யுத்தத்தின் போது புலிகளும் பொதுமக்களை சுட்டுக்கொன்றனர்

4. சிறிலங்கா இராணுவத்தின் மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட்டால் விடுதலைப்புலிகள் மீதும் போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்

5. இரு தரப்பும் போர்க்குற்றங்களை புரிந்தனர். எனவே போர்க்குற்ற விசாரணை வேண்டும் என கோருவதில் அர்த்தம் இல்லை

6. சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வுத்திட்டத்தை தான் தமிழர்கள் முன்வைக்க வேண்டும்

7. புலம்பெயர் மக்கள் போர்க்குற்ற விசாரனை என்ற ரீதியில் போராட்டங்கள் செய்யக்கூடாது.[இலண்டனில் நடந்த கூட்டத்தில்]

8. பெரும் எதிர்ப்புக்கு மத்தியிலும் சிங்கள பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் இனப்படுகொலைவாதி மகிந்தவுடன் கிரிக்கெட் விளையாடியது.

9. புலம்பெயர் மக்கள் எவ்வளவு போராட்டங்கள் செய்தாலும் அதனால் எதுவும் நடக்காது, வெளிநாட்டு அரசியல்வாதிகள் அப்போராட்டங்களை மதிப்பதில்லை எதை என்னிடம் அவர்களே கூறியதாக இலண்டனில் நடந்த கூட்டத்தில் கூறி புலம்பெயர் மக்களின் பேராட்டங்கள் அர்த்தமற்றது என போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முற்பட்டார்.

10. வன்முறையை கைவிடுமாறு நான் புலிகளை கேட்டிருந்தேன். தேசியப் பிரச்சனைக்கு வன்முறை மூலம் தீர்வு சாத்தியமில்லை.

இவர் கூறிய கருத்துக்கள் அவ்வளவும் சிங்கள பேரிவாத அரசியல்வாதிகள் பரப்புரை செய்த கருத்துக்கள். இப்போது இவர் ஊடாக தமிழ் மொழியில் பிரச்சாரம் செய்யப்படுகின்றது.

தமிழ் தேசியத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு வருவதாலும் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி வருவதாலும் சிங்களத்தடன் ஒட்டி உறவாடுவதாலும் யாழ் பல்கலைக்கழகத்தில் இவரது கொடும்பாவி எரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழகத்தில் உள்ள எம்தமிழ் உறவுகளும் தமிழ் உணர்வாளர்களும் இவரை வெளியேற்றி தகுந்த பாடம் புகட்டுமாறு கேட்டுக்கொள்கின்றோம். மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் நாம் தெரிவிக்க விரும்புவது உடனடியாக சுமந்திரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு வெளியேற்றுமாறு கோரிக்கைவிடுக்கின்றோம். [ ஆதாரங்களை கீழே தொகுத்திருக்கின்றோம் ]

நாங்கள்

தமிழீழ புரட்சிகர மாணவர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

UNHRC resolution anti-government, but pro-people, says Sri Lankan MP

26THSUMINTHARAN_1024923e.jpg

M.A. Sumanthiran. Photo: R. Ragu

Rejecting the notion that the Sinhalese community as a whole would harden its stand as a result of the resolution against Sri Lanka in the United Nations Human Rights Council (UNHRC), the country's Tamil Nationalist Alliance MP M.A. Sumanthiran on Sunday said that on the contrary, there was realisation that the resolution had come about because of the Sri Lankan Government's failure to do the right things at the right time.

“There is realisation that grave injustice has been done to the Tamil people and it is coming back to them. We keep saying it is a good resolution for the whole country. It is anti-government, but pro-people. Regardless of ethnicity it will help all our people. It is an indictment of the government for it failure to live up to its promise,” Mr. Sumanthiran told
The Hindu
.

While expressing happiness over India's decision to support the resolution, he said he appreciated that it was a difficult decision for India, considering the bilateral relations between the two countries. “But we are happy that India took a decision. Because it is only now the Sri Lankan government will realise that giving assurances gives it a duty to keep them. It will have some positive effect,” Mr. Sumanthiran said.

He said the TNA MPs were invited by the U.S. State department in October last year to discuss the issue and in January this year he went again to hold talks. “The resolution was the result of those efforts. The U.S. redefined its policy towards Sri Lanka in this period. It decided that the Sri Lankan government is not going to do anything unless some pressure is exercised,” he said.

Responding to a question whether such external pressure would not have adverse consequences, he said Tamil people could not continue to live as slaves or second-class citizens in their own country. Equality and respect for human rights had international standards. “The Sri Lankan government must discharge its accountability by agreeing to an independent investigation into allegations of war crimes and crimes against humanity,” he said.

Asked about the talks between the Sri Lankan Government and the TNA, he said the onus on the government is to restart the talks and take it to a conclusion. Urging the Sri Lankan government to quickly resettle the people, demilitarise the area and grant meaningful devolution of powers, he said resettlement must incorporate housing and creation of livelihood.

http://www.thehindu.com/news/states/tamil-nadu/article3223609.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.