Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனீவாவில் ஆதரவளித்த சவூதி அரேபியா அமைத்த வீடுகளை முஸ்லிம்களுக்கு வழங்குங்கள்: முஸ்லிம் உலமா கட்சி

Featured Replies

ஜெனீவாவில் ஆதரவளித்த சவூதி அரேபியா அமைத்த வீடுகளை முஸ்லிம்களுக்கு வழங்குங்கள்: முஸ்லிம் உலமா கட்சி

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சவூதி அரேபியா ஆதரவாக செயற்பட்டமைக்கு நன்றி கடனாக குறித்த நாட்டு அரசாங்கத்தினால் அக்கரைப்பற்றில் கட்டப்பட்ட சுனாமி வீடுகளை முஸ்லிம்களிடம் கையளிக்குமாறு முஸ்லிம் உலமா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு முஸ்லிம் உலமா கட்சியின் தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் அனுப்பியுள்ள கடிதத்திலேயே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் உலமாகட்சி தலைவரால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளாதாவது,

"சவூதி அரேபியாவானது அரசியல் நலன்களை பொறுத்த வரை அமெரிக்காவின் அரசியல் ஆதரவு நாடு என்பதை முழு உலகும் அறியும். அவ்வாறான நிலையில் ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அமெரிக்காவினால் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு சவூதிஅரேபியா எதிராக வாக்களித்தது.

இதன் மூலம் அமெரிக்காவுக்கு எதிராக சவூதி அரேபியா செயற்பட்டமை ஒரு வரலாற்று திருப்பமாகும். இவ்வாறு செயற்பட்ட சவூதி அரேபியாவிற்கு இலங்கை மிகவும் கடமைப்பட்டுள்ளது.

சவூதி அரேபியா இலங்கைக்கு சார்பாக செயற்பட்டதன் மூலம் எமது நாட்டில் நிலவிய பயங்கரவாதம் காரணமாக முஸ்லிம்கள் பாரியபாதிப்புக்குள்ளானதை புரிந்து கொண்டுள்ளமையை காட்டுகிறது.

அத்துடன் சவூதி அரேபியா இலங்கையிலுள்ள அனைத்து மக்களுக்கும் பல உதவிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த அடிப்படையில் முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரபின் வேண்டுகோளுக்கிணங்க சுனாமியால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட முஸ்லிம்களுக்காக சவூதி அரேபியா அரசாங்கம் அக்கரைப்பற்றில் 500 வீடுகளை கட்டிக்கொடுத்துள்ளது.

ஆனால், குறித்த வீடுகள் இதுவரை சுனாமில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கையளிக்கப்படவில்லை. அம்பாறை மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட சிங்கள மக்கள் அனைவருக்கும் வீடுகள் கிடைத்துள்ளன.

இந்நிலையில் குறித்த வீட்டுத் திட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரடியாக தலையீட்டு சுனாமியல் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் வீடுகளை பெறுவதற்கு உதவ வேண்டும்.

இதன் மூலம் இலங்கை அரசு, சவூதி அரேபியாவுக்கு நன்றி கடனை மேற்கொண்டதாக முடியும் என்பதை ஓர் ஆலோசனையாக முஸ்லிம் உலமா கட்சி முன்வைக்கிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-15-09/38374-2012-03-27-10-41-47.html

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே பேசிக்கொண்டு இருந்தால் ஒருநாளைக்கு நீங்கள் எல்லோரும் சவுதிரபியாவுக்கு குடி ஏறப்போகவேண்டிவரும் என்பதினை மனதில் கொள்ளவும்.

நாங்கள் போராடி எமது விலை மதிப்பற்ற வீரர்களை இழந்து பேச்சுவார்த்தை நடத்தும்போது எந்தபோராட்டத்திலும் கலந்துகொள்ளாது நீங்கள் கேட்பது அதில் தனி அலகு, போராட்டத்தில் இறந்தது தமிழனும் சிங்களவனும் சும்மா இருந்த உனக்கு ...... இது ரொம்ப ஓவராக இல்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடைசியில் நாங்கள் செத்தொழிய லண்காஸ்தான் அமைக்கும் கனவு வேறு. 

அப்ப இந்தியா வீடு கட்டினால் இந்துவிற்கு, அமெரிக்க வீடு கட்டினால் கிறிஸ்தவருக்கா? 

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் நீங்கள்(இலங்கையில் இருக்கும் கேப் சேன்சிங்க்ஸ் கோஸ்டிஸ்) சியாவ? சன்னியா ?எந்த முஸ்லீம் கேட்டகிரி என சொல்லவேண்டும் .அப்படி சொன்னால்தான் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடியும். <_< <_<

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.