புதிய பதிவுகள்

மலையகப் பாதைகளில் குவியும் மண்சரிவு மண்: சமூக சிக்கலாக மாறும் அபாயம்30 Dec, 2025 | 03:51 PMimageமலையகப் பிரதேசங்களில் மண்சரிவு  காரணமாகக் குவிந்துள்ள மண் ஒரு சமூகப்பிரச்சினையாக மாறி வருகிறது. கடந்த அனர்த்தின் போது ஏற்பட்ட பல்வேறு மண்சரிவுகள் காரணமாக  நுவரெலியா மாவட்டத்தில் மட்டும் பாதைகளில் இருந்து  நான்கு இலட்சம்  கியுபிக் மண்  அகற்றப்படுள்ளதாக நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுல சுரவீர ஆரச்சி தெரிவித்தார்.வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் மதகதண வீதி அபிவிருத்தி அதிகார சபை என்பவற்றால் இவை அகற்றப்பட்டுள்ளன.அதே நேரம் இவற்றை அப்புறபப்டுத்தி கொட்டுவதற்குஇடமில்லாது காணப்படுகிறது. பொருத்த மற்ற இடங்களில் கொட்டப்பட்டால் அவை மீண்டும் நீரினால் கழுவப்பட்டு அல்லது மீண்டும் மண் அரிப்பு ஏற்பட்டு நீர் நிரைகளில் சேரக்கூடும். அப்படியாயின் நீர் நிலைகளின் ஆழம் குறைந்து சிறிய மழைக்குக் கூட வௌ்ளப் பெருக்குகள் ஏற்பட
பௌத்த மயமாக்கல் செயற்பாடுகளை நிறுத்துங்கள் ; வவுனியாவில் போராட்டம்30 Dec, 2025 | 02:19 PMimageவவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.தையிட்டியில் ஜனநாயக ரீதியாக போராடியவர்கள் கைதுசெய்யப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்தும்,  வவுனியா உட்பட வடகிழக்கில் புதிதாக அமைக்கப்படும் விகாரைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இவ் ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள், சட்டவிரோதமாக தையிட்டியில் அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிராக ஜனநாயக ரீதியில் போராடியவர்கள் மிலேச்சத்தனமாக கைதுசெய்யப்பட்டுள்ளனர்.ஒரு மதகுரு என்று கூட பாராமல் மோசமான முறையில் வேலன் சுவாமி நடாத்தப்பட்டிருந்தார். இது தமிழ்மக்கள் மீதானஒரு அடக்குமுறை செயற்பாடாகவே உள்ளது. வடக்கில் குருந்தூர்மலை, வெடுக்குநாறிமலை, தையிட்டி, தற்போது வவுனியா கல்லுமலை என்பன
அரசு வாக்குறுதி அளித்த நிவாரணங்களை பெற்றுக் கொடுக்க வேண்டும்Dec 30, 2025 - 03:20 PMஅரசு வாக்குறுதி அளித்த நிவாரணங்களை பெற்றுக் கொடுக்க வேண்டும்இந்த டித்வா சூறாவளி ஏற்பட்ட சமயத்திலும் அதற்குப் பின்னரும், பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும், மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை முன்வைத்து அவற்றை முன்னெடுப்போம் என்று அரசாங்கமும் ஜனாதிபதியும் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்தனர். ஆனால் அவ்வாறு வாக்குறுதியளித்த சலுகைகள், நிவாரணங்கள், அவற்றுக்குத் தேவையான வளங்கள் மற்றும் நிதிகளைப் பெற்றுக் கொடுப்பதில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது. ஒரு தகரத் துண்டு அடிபட்டுச் சென்றாலும் அதற்கும் 10 இலட்சம் ரூபா தருவோம் என்று உறுதியளித்த அரசாங்கம், முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு தருவோம் என்று உறுதியளித்த 50 இலட்சம் ரூபாயையோ, அல்லது வாழத் தகுதியற்ற
மலையகப் பாதைகளில் குவியும் மண்சரிவு மண்: சமூக சிக்கலாக மாறும் அபாயம்30 Dec, 2025 | 03:51 PMimageமலையகப் பிரதேசங்களில் மண்சரிவு  காரணமாகக் குவிந்துள்ள மண் ஒரு சமூகப்பிரச்சினையாக மாறி வருகிறது. கடந்த அனர்த்தின் போது ஏற்பட்ட பல்வேறு மண்சரிவுகள் காரணமாக  நுவரெலியா மாவட்டத்தில் மட்டும் பாதைகளில் இருந்து  நான்கு இலட்சம்  கியுபிக் மண்  அகற்றப்படுள்ளதாக நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுல சுரவீர ஆரச்சி தெரிவித்தார்.வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் மதகதண வீதி அபிவிருத்தி அதிகார சபை என்பவற்றால் இவை அகற்றப்பட்டுள்ளன.அதே நேரம் இவற்றை அப்புறபப்டுத்தி கொட்டுவதற்குஇடமில்லாது காணப்படுகிறது. பொருத்த மற்ற இடங்களில் கொட்டப்பட்டால் அவை மீண்டும் நீரினால் கழுவப்பட்டு அல்லது மீண்டும் மண் அரிப்பு ஏற்பட்டு நீர் நிரைகளில் சேரக்கூடும். அப்படியாயின் நீர் நிலைகளின் ஆழம் குறைந்து சிறிய மழைக்குக் கூட வௌ்ளப் பெருக்குகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.எனவே அவற்றை மீளப்பயன்படுத்தும் முறையொன்று கண்டு பிடிக்கப்படாவிட்டால் இன்னும் சொற்ப காலத்தில் சுற்றாடல் பிரச்சினையாக மாறி பின்னர் அது சமூகப்பிரசசினையாக இடமுண்டு என்றார்.https://www.virakesari.lk/article/234753
சீனாவின் மலிவான இறக்குமதியால் பிரித்தானியாவில் பணவீக்கம் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.அமெரிக்காவின் புதிய வரி கொள்கைகளால் சீனாவின் ஏற்றுமதி பாதிக்கப்பட்ட நிலையில், அந்த நாடு தனது பொருட்களை மாற்று சந்தைகளுக்கு அனுப்பத் தொடங்கியுள்ளது.இதில் பிரித்தானியா முக்கிய இடமாக மாறி வருகிறது.சீனாவின் மலிவு விலை கார்கள், தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் ஒலி உபகரணங்கள் பிரித்தானியாவிற்கு அதிக அளவில் வருவதால் அங்குள்ள பணவீக்கம் குறைய வாய்ப்பு உள்ளது என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.UK inflation news, Chinese imports UK, Trump tariffs impact, UK economy 2026 forecast, Bank of England rate cut, UK trade with China, UK headline inflation drop, Catherine Mann inflation statement, Rachel Reeves budget inflation, UK import prices moderationசீனாவின் வர்த்தக
இந்தியாவில் அதிக ஆபத்தான 4 நச்சுப் பாம்புகளை கண்டதும் அடையாளம் காண்பது எப்படி?நஞ்சுள்ள, நஞ்சற்ற பாம்புகளை வகைப்படுத்தி எளிதாக அடையாளம் காண்பது எப்படி?பட மூலாதாரம்,SAMSON KIRUBAKARANபடக்குறிப்பு,சுருட்டை விரியன்கட்டுரை தகவல்க.சுபகுணம்பிபிசி தமிழ்4 மணி நேரங்களுக்கு முன்னர்பாம்புக்கடி சம்பவங்கள் அதிகம் நிகழும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இந்தியாவில் பாம்புக்கடி நிகழ்வுகளால் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மரணங்கள் நிகழ்கின்றன."தமிழ்நாட்டில் நிகழும் பாம்புக்கடிகளில் கிட்டத்தட்ட 95% நஞ்சற்ற பாம்புகளால்தான் நிகழ்கின்றன. மீதமுள்ள 5% சம்பவங்களில் பெரும்பாலும் கண்ணாடி விரியன், நாகம், சுருட்டை விரியன், கட்டு வரியன் ஆகிய நான்கு வகை நச்சுப் பாம்புகளே காரணமாக இருக்கின்றன," என்று கூறுகிறார் யுனிவர்சல் பாம்புக்கடி ஆராய்ச்சி அமைப்பின் நிறுவனரும் முதன்மை விஞ்ஞானியுமான முனைவர் என்.எஸ்.மனோஜ்."நஞ்சுள்ளவை, நஞ்சற்றவை எனப் பிரித்தறிய முடியாத காரணத்தால் பல நேரங்களில் நஞ்சற்றவை எனக் கருதி மக்கள் கவனமின்றிச் செயல்படுவது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் பாம்புக்கடி விபத்துகள் நிகழக் காரணமாவதாக," கூறுகிறார் பாம்பு
Nishan-Canagarajah.jpg?resize=750%2C375&இலங்கையில் பிறந்த தமிழ் கல்வியாளருக்கு இங்கிலாந்தில் கெளரவ பட்டம்!இலங்கையில் பிறந்த கல்வியாளரும், இங்கிலாந்தின் லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் தற்போதைய தலைவரும் துணைவேந்தருமான பேராசிரியர் நிஷான் கனகராஜா (Nishan Canagarajah) 2026 ஆம் ஆண்டுக்கான கிங்ஸ் புத்தாண்டு விருதுகளில் நைட் பட்டம் பெற்றுள்ளார்.உயர்கல்விக்கு, குறிப்பாக உள்ளடக்கத்தை ஆதரிப்பதில் பேராசிரியர் கனகராஜாவின் மதிப்பிட முடியாத பங்களிப்பை இந்த விருது அங்கீகரிக்கிறது.பேராசிரியர் கனகராஜா தனது புகழ்பெற்ற வாழ்க்கை முழுவதும், வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் நியாயமான சமூகத்தை உருவாக்குவதற்கும் கல்வி ஒரு சக்தியாக இருப்பதில் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டியுள்ளார்.இங்கிலாந்தின் முதல் பன்மை நகரமான லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் முதல் சிறுபான்மை இன துணைவேந்தராக அவர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி கவனிக்கப்படாதவர்களுக்கும், பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளவர்களுக்கும் குரல் கொடுத்துள்ளார். மேலும், தடைகளைத் தாண்டி ஏனையவர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கவும் பாடுபட்டுள்ளார்.இலங்கையில்
2025: அனுர அலையில் தொடக்கி மனிதாபிமான அலையில் முடிந்த ஆண்டு - நிலாந்தன்599682467_122221042040114056_90464635600இந்த ஆண்டு பிறந்த போது நாட்டில்  “அனுர அலை” வீசியது. இந்த ஆண்டு முடியும் போது புயலுக்கு பின்னரான ஒரு மனிதாபிமான அலை நிலவுகிறது. இரண்டுமே அலைகள்தான். இரண்டுமே அரசாங்கத்தைப் பலப்படுத்தும் அலைகள்தான்.அனுர அலை என்பது தமிழ் நோக்கு நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகளை பின்னுக்குத் தள்ளியது. அது நாடாளுமன்றத் தேர்தலில் நிரூபிக்கப்பட்டது. தமிழ் மக்கள் மத்தியில் உள்ள பெரிய கட்சியாகிய தமிழரசுக் கட்சிக்குக் கிடைத்த அதீயளவு ஆசனங்கள்தான் அரசாங்கத்துக்கும் கிடைத்தன. யாருக்கு வாக்களிக்கிறோம் என்பது தெரியாமலேயே தமிழ்மக்கள் வாக்களித்திருந்தார்கள். இப்படிப் பார்த்தால் இந்த ஆண்டு தொடங்கும் பொழுது அது தமிழ்த்தேசிய அரசியலுக்குப் பாதகமான ஓர் ஆண்டாகத்தான் தொடங்கியது.அந்தத் தோல்விக்கான காரணங்களைக் கண்டுபிடித்து அவற்றைச் சரி செய்யும் விடயத்தில் தமிழ்த்தேசிய அரசியல் எந்த அளவுக்கு முன்னேறியிருக்கிறது? உள்ளூராட்சி சபைகளில் பெற்ற வெற்றிகள் சற்று ஆறுதல் தரக்கூடும். ஆனால் கடந்த வாரம்
குளிர் காலத்தில் மாரடைப்பு ஆபத்தை அதிகரிக்கும் 4 காரணிகள்இதய நோய், மாரடைப்பு, கொழுப்பு அளவு, இதய பாதிப்புகள்பட மூலாதாரம்,Getty Imagesகட்டுரை தகவல்சுப் ரானாபிபிசி இந்திக்காக28 டிசம்பர் 2025, 03:25 GMTபுதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்இந்தியாவில் அதிக மரணங்களை விளைவிக்கும் காரணிகளுள் இதய நோயும் ஒன்று. குளோபல் பர்டன் ஆஃப் டிசீஸ் ஆய்வின்படி, இந்தியாவில் நிகழும் மரணங்களில் நான்கில் ஒன்று இதய நோயால் நிகழ்கின்றன.இதய நோயால் ஏற்படும் மரணங்களில் 80 சதவிகிதத்துக்கும் அதிகமானவை மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தால் ஏற்படுகின்றன.உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு சரியாக இருந்தால் அனைத்தும் நன்றாக உள்ளது என்பது தான் இதய ஆரோக்கியம் தொடர்பான பரவலான நம்பிக்கையாக உள்ளது. ஆனால் இந்த அனுமானம் சரியா என்கிற கேள்வியும் மருத்துவ வட்டாரங்களில் எழுப்பப்படுகிறது.கொலஸ்ட்ரால் தவிர வேறு எந்த அறிகுறிகள் மற்றும் காரணிகள் மாரடைப்பு தொடர்பான எச்சரிக்கையை வழங்குகின்றன, குளிர்காலத்தில் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது எப்படி என்பதை இந்தக் கட்டுரையில் காணலாம்.குளிர் காலத்தில் வரும் ஆபத்துகள்2024-ஆம் ஆண்டு அமெரிக்கன்
ஆல்கஹால் இல்லாத பியர், வைன் போன்ற பானங்கள் உடலுக்கு நல்லதா?மது பானம், மது அல்லாத பானங்கள்பட மூலாதாரம்,Getty Imagesகட்டுரை தகவல்கேடி ஜோன்ஸ்4 மணி நேரங்களுக்கு முன்னர்சமீப ஆண்டுகளில் மது அல்லாத பானங்கள் மிகவும் பிரபலமடைந்து வருகின்றன. வைன், ஸ்பிரிட்ஸ், பியர் மற்றும் சிடர் எனப் பல வகையான பானங்கள் சந்தையில் உள்ளன. யூகவ் நடத்திய ஆய்வில் பிரிட்டனில் மது அருந்துபவர்களில் 38% பேர் குறைவான மது அளவு அல்லது மது இல்லாத பானங்களை விரும்புவதாக தெரியவந்துள்ளது. 2022-இல் இது 29% ஆக இருந்தது.மது அல்லாத பானங்கள் பிரபலமடைவது பலருக்கும் அதன் சுவை மீதான ஆர்வத்தினால் தானே தவிர மது அருந்த வேண்டும் என்கிற ஆசையால் அல்ல. அதில் பலரும் மது பானங்களை விட மது அல்லாத பானங்கள் ஆரோக்கியமானது எனக் கருதுவதாலும் வாங்குகின்றனர். மின்டெல் மேற்கோண்ட ஆய்வில் மது நுகர்வோரில் 15 முதல் 20% பேர் மது அல்லாத பானங்களை வாங்குவதில் கூடுதல் சுகாதாரப் பலன்கள் இருப்பதாக கருதுகின்றனர்.மது அல்லாத பானங்கள் அதிகாலை தலைவலியிலிருந்து உங்களை காப்பதோடு கூடுதல் சுகாதார நன்மைகளுடன் வருகிறதா என்கிற கேள்வியும் எழுப்பப்படுகிறது.மது அல்லாத பானங்கள்
மூளைச்சாவும் உடல் அவயவங்களின் தானமும் நிஜத்திலிருந்து..... சட்ட மருத்துவம் December 16, 2025 1 Minuteகடந்த வாரம் யாழ். போதனா வைத்தியசாலையில் மூளைச்சாவு அடைந்த ஒருவரிடம் இருந்து பெறப்பட்ட சீறுநீரகங்கள் வேறு தேவையான  நபர்களுக்கு பொறுத்தப்படவுள்ளன. இந்நிலையில் மனிதனில் இறப்பு என்றால் என்ன, அதன் வகைகள் என்ன, மூளைச்சாவு என்றால் என்ன, மூளைச்சாவு – சட்ட ரீதியான வலு என்ன மற்றும் மூளைச்சாவின் பொழுது உறவினர்கள் உடல் அங்க தானங்களுக்கு பின்னிற்க மத ரீதியான காரணங்கள் என்ன  போன்ற பல்வேறு விடயங்களை இப்பதிவு அலசுகின்றது.download-2.jpg?w=259மருத்துவத் துறையில் இறப்பு என்றால் எமது இருதயம் நுரையீரல் ஆகியவற்றின் செயற்பாடுகள் அதாவது சுவாசம் மற்றும் இதயத்துடிப்பு ஆகியன  முற்றாக  நிறுத்தப்படுவதினை தொடர்ந்து மூளையின் செயற்பாடு நிறுத்தப்படல் இறப்பு ஆகும். சில சந்தர்ப்பங்களில் மூளையின் செயற்பாடு முதலில் நிறுத்தப்படுவதினை தொடர்ந்து இருதய மற்றும் சுவாச செயற்பாடுகள் நிறுத்தப்படும் உதாரணம் தலையில் நிகழும் துப்பாக்கி சூடு. மருத்துவத் துறையில் மனிதனின் இறப்பை பின்வரும் 03 வகைகளாக பிரிக்கலாம்.1. உடலியல்/மருத்துவ மரணம் (Somatic/Clinical Death): இரத்த
மின்னல் எச்சரிக்கை!!நிஜத்திலிருந்து..... சட்ட மருத்துவம் December 10, 2025 1 Minuteடிட்வா புயல் மற்றும் மண்சரிவினால் பலர் இறந்த நிலையில் இலங்கையில் மீண்டும் வடகீழ் பருவ மழை  தொடங்கியுள்ளது இந்நிலையில் நாளாந்தம் இலங்கையின் பல மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை விடப்படுகின்றது. இந்நிலையில் மின்னலின் தாக்கத்தினால் வருடாந்தம் 30 தொடக்கம் 50 பேர்கள் இலங்கையில் பரிதாபகரமான முறையில் மரணத்தினை தழுவுகின்றனர். மேலும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் தனி நபர்களின் இறப்புக்கள் பெரிதான சமூக கவனத்தினை ஈர்ப்பதில்லை அத்துடன் பல சந்தர்ப்பங்களில் இத்தரவுகள் தேசிய ரீதியான தரவுகளுக்கு செய்வதில்லை. இதன் காரணமாகவே வருடாந்தம் மின்னலின் தாக்கத்தினால் இறப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக காட்டபட்டுள்ளது. பொதுவாக மின்னலினால் இறப்பவர்கள் வயல், கடற்கரை போன்ற திறந்த வெளிகளில் வேலை செய்பவர்களாகவே இருக்கின்றனர். இந்நிலையில் இவ்வாறு திறந்த வெளியில் வேலை செய்பவர்கள் எவ்வாறு மின்னலின் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம் என்பதினை இப்பதிவு விளக்குகின்றது.image-1.png?w=392வெளிவேலைகளுக்கு செல்வதற்கு முன்பாக அன்றைய தினத்திற்குரிய வானிலை அறிக்கையினை கவனத்தில் கொள்ளல்
நிஜத்திலிருந்து..... சட்ட மருத்துவம் November 16, 2025 1 Minuteஅண்மைய காலங்களில் யாழ் குடாநாட்டின் பல பகுதிகளில் “மாவா” பாக்கு பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுகின்ற நிலை அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் மாவா பாக்கு என்றால் என்ன?, அது எவ்வாறு உடலில் போதையினை ஏற்படுத்துகின்றது?,  மாவா பாக்கு உடலில் ஏற்படுத்தும் தீங்கான விளைவுகள் என்ன? மற்றும் அது எவ்வாறு மனிதனை அடிமையாக்குகின்றது என்பது பற்றி இப்பதிவு விளக்குகின்றது.1. மாவா பாக்கில் என்ன இருக்கின்றது?மாவா பாக்கின் முக்கிய உள்ளடக்கம் மூன்று பொருட்கள்தான்:பாக்கு (Areca Nut): கொட்டைப் பாக்கை சிறு துண்டுகளாக நறுக்கி அல்லது சீவி பயன்படுத்துகின்றனர்.புகையிலை (Tobacco): உலர்ந்த புகையிலை இலைகள்.சுண்ணாம்பு (Slaked Lime): புகையிலை மற்றும் பாக்கின் காரத்தன்மையை (alkalinity) மாற்றி, அதில் உள்ள நிக்கோடினை (Nicotine) உடல் வேகமாக உறிஞ்சிக்கொள்ள இது உதவுகிறது.சில நேரங்களில், கூடுதல் சுவைக்காக சில மசாலாப் பொருட்களும் சேர்க்கப்படலாம், ஆனால் மேற்கண்ட மூன்றுமே இதன் முக்கியப் பொருட்கள் ஆகும்.22-639ff73ed3765.jpeg?w=6002. மாவா பாக்கில் கஞ்சா இருக்கின்றதா?இல்லை.
581925393_10236519770008218_297368784632காணொளி: 👉 https://www.facebook.com/watch/?v=720409650518617 👈வெளிநாட்டு சுற்றுலா பயணியிடம் அசிங்கம் காட்டிய இளைஞன் – வீடியோ வைரல்இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த ஒரு வெளிநாட்டு பெண் பயணியிடம், ஒரு இளைஞன் தனது அந்தரங்க உறுப்பை காட்டும் அசிங்கமான செயல் சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகியுள்ளது.இது ஒரு கடுமையான பாலியல் துன்புறுத்தல் குற்றம் ஆகும்.நாட்டின் பெயருக்கும், சுற்றுலா வளர்ச்சிக்கும் பெரும் சேதம் விளைவிக்கும் செயல் இது.Nuraichcholai boys
ஆப்பிள் ஐபோன் iPhone பயனர்கள் உடனடியாக தங்கள் சாதனங்களின் மென்பொருளை புதுப்பிக்க வேண்டும் என ஆப்பிள் நிறுவனம் அவசர பாதுகாப்பு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.மிக தீவிரமான இரண்டு மென்பொருள் பாதுகாப்புக் குறைகள் (software vulnerabilities) கண்டறியப்பட்டுள்ளதுடன், அவை “மிகவும் நுணுக்கமான” சைபர் தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது.ஐபோன் பயனர்கள்இந்த வாரம் வெளியிடப்பட்ட பாதுகாப்பு அறிவிப்பில், Safari உலாவி மற்றும் iOS இயங்குதளத்தில் இயங்கும் அனைத்து மூன்றாம் தரப்பு உலாவிகளுக்கும் அடிப்படையாக உள்ள WebKit என்ற உலாவி இயந்திரத்தை இந்த குறைகள் பாதிப்பதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது.ஐபோன் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை | Apple Issues Urgent Notice To All Usersஇந்த பாதுகாப்பு குறைகளை பயன்படுத்தி, ஒரு பாதிக்கப்பட்ட இணையதளத்தை பயனர் பார்வையிட்டாலே, அவருடைய சாதனத்தில் தீங்கு விளைவிக்கும் நிரல்கள் (malicious code) இயங்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.இந்த குறைகள்
அமரசிறி : கருணாகரன்PHOTO-2025-12-09-10-21-31.jpg?resize=76901உளநல மருத்துவர் மேகதாஸ் ஒரு புதன்கிழமை என்னை அழைத்திருந்தார். அவரிடம் சென்றபோது இளைய மருத்துவ அணியினருக்கு உளநிலை விரிவுரை நடந்து கொண்டிருந்தது. அது முடியட்டும் என்று அங்கேயிருந்த புத்தக அடுக்கிலிருந்து புத்தகங்களை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். மாணவர்களில் சிலர் பாடங்களைக் கடந்து என்னைப் பார்ப்பதாக உணர்ந்தேன். அதைக் கண்டு கொள்ளாத மாதிரிப் புத்தகங்களிலேயே கவனம் செலுத்துவதாகப் பாவனை செய்தேன். இருந்தாற்போல ஒரு மாணவன், “சேர், உடலுறவுக்கும் உளவியலுக்கும் உள்ள தொடர்பு என்ன?” என்ற கேள்வியை மேகதாஸிடம் கேட்டான். என்னுடைய பார்வை சட்டென, துடிப்பான அந்த மாணவன் யார் என அறிய விழைந்தது. அந்தக் கூட்டத்தில் அவனை அடையாளம் காண முடியவில்லை. எல்லோரும் சிரித்துக் கொண்டிருந்தார்கள். மூன்று மாணவர்கள் அதற்கு மாறாக சற்று அமைதியாக இருந்தனர். மேகதாஸ் மிக அமைதியான முறையில், “வெரிகுட் குயிஸென்ஸ். உங்களுக்கு நல்ல மூட் இல்லை என்றால், உங்களால் எதையுமே செய்ய முடியாது. அது முத்தமிடுவதாக இருந்தாலென்ன, புத்தகம் வாசிப்பதாக இருந்தாலென்ன?“ என்று என்னைத் திரும்பிப் பார்த்தார். ஒரு கணம் அதிர்ந்து விட்டேன். என்னையும் கவனித்துக்கொண்டிருக்கிறார் மேகதாஸ். மாணவர்கள் மெல்லச் சிரித்தனர். இந்த மாதிரிக் கேள்விகளை மேகதாஸ் எத்தனையோ தடவை எத்தனையோ பேரிடமிருந்து எதிர்கொண்டிருக்கக் கூடும். மாணவர்கள் உற்சாகமாகத் தொடங்கி விட்டனர். மாணவர்கள்
மாவளி கண் பார்--------------------------large.Maavali.jpgசொக்கப்பானை தான் அதன் பெயர் என்று நினைத்திருந்தேன். ஐம்பது வயதில் கூட அப்படித்தான் நினைத்திருந்தேன். முன்னர் இறைவனுக்கும், மனிதர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்த காலம் ஒன்றில் இப்படியான ஒரு நெருப்புக்குள் புகுந்து சொர்க்கத்திற்கு போகும் ஒரு வழி இருந்திருக்கின்றது போல என்று ஒரு கதையை எனக்கு நானே சொல்லியும் இருக்கின்றேன். அந்தக் காலங்களில் கடவுள் அடிக்கடி தோன்றி மனிதர்களை காப்பாற்றிய கதைகள் ஏராளம் உண்டு தானே. சொக்கப்பானையின் நெருப்புக்குள் புகும் மனிதர்களையும் கடவுள் காப்பாற்றினார் ஆக்கும் என்று நான் நினைத்ததில் பெரிய பிழை என்று எதுவும் இல்லை.நடுவில் பச்சை தென்னை மரம் ஒன்றையே வைத்திருந்தார்கள் என்று நினைக்கின்றேன். நீண்ட காலமாக இந்த நிகழ்வை நேரடியாக பார்க்கும் சந்தர்ப்பங்கள் எனக்கு அமையவில்லை. 40 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. நட்ட தென்னை மரத்தைச் சுற்றி கூம்பு வடிவில் பச்சை தென்னை ஓலைகளை கட்டியிருந்தார்கள். பின்னர் சடங்கு மற்றும் பூசைகளின் பின் அதை எரித்தார்கள். பச்சை ஓலைகள் வெடித்து
நில உயிர்கள்--------------------large.Submission.jpgஒரு பக்கமாக சாய்ந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தவர்கள்யுத்தங்களால் இழப்பன்றி வேறு எதுவும் இல்லை சமாதானம் சமாதானம் என்றனர்நாடு நகரம் குடும்பம் குழந்தை எதிர்காலத்துடன்இப்படியே போனால்உன்னைக் கூட இழக்கப் போகின்றாய் என்றனர்எத்தனை நாளைக்குத்தான் முடியும்மூன்று வாரங்கள் கூட தாங்க மாட்டாய் என்றனர்மூன்று வாரங்கள் தாண்டிமூன்று வருடங்களும் வந்து போனதுஒரு மலையை உளியால் பிளப்பது போலஎன் வீட்டுக்குள் வரும் பலசாலியைஎன்னால் முடிந்த வரை நிறுத்தப் போராடுகின்றேன்  அவர்களின் கணக்கு சரியேநான் இழந்து கொண்டேயிருக்கின்றேன்என் குலமும் நிலமும் வளமும் அழிந்து கொண்டிருக்கின்றன இழந்து இழந்துஎதற்காகப் போராடுகின்றாய் இப்போது கூட நீ அடங்கினால்ஒரு மூலையில் ஒதுங்கினால் உயிர் தப்பி பலசாலியுடன் வாழலாம் என்கின்றனர்சாய்ந்து நிற்பவர்கள்உயிர் விட்ட பின்னும்நிலமாகப் பரந்து நீராக ஓடிஅங்கே புதிய உயிர்களாக நித்தியமாக வாழும்மனிதர்களை நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா..........?உங்கள் வீட்டுக்குள்ளும்ஒரு பலசாலி வரும் போதுபணிந்து
சாதனை படைத்த சாம்பியன்கள்: 2025-ல் கிரிக்கெட் உலகில் நடந்த 10 முக்கிய நிகழ்வுகள்2025-ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகில் நடந்த 10 முக்கிய நிகழ்வுகள்பட மூலாதாரம்,Getty Imagesகட்டுரை தகவல்பிரதீப் கிருஷ்ணாபிபிசி தமிழ்6 மணி நேரங்களுக்கு முன்னர்2025-ஆம் ஆண்டின் இறுதி கட்டத்தை அடைந்துவிட்டோம். கிரிக்கெட் அரங்கை திரும்பிப் பார்க்கும்போது சர்வதேச மற்றும் உள்ளூர் அரங்கில் பல்வேறு விஷயங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஒருசில உலகக் கோப்பைகள், இன்னும் சில பிரதான ஐசிசி தொடர்கள் நடந்திருக்கின்றன. டி20 லீகுகளில் வழக்கம்போல் எதிர்பார்ப்புகளை மிஞ்சிய நிகழ்வுகள் நடந்திருக்கின்றன.அதேபோல். டெஸ்ட் போட்டிகளிலும் கூட பல முக்கியமான தொடர்கள் பெரும் கவனம் ஈர்த்தன. ஒட்டுமொத்தமாகவே இந்த ஆண்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது. பெரும் வெற்றிகள், சாதனைகள், சர்ச்சைகள் என 2025-ல் நடந்த 10 முக்கியமான சம்பவங்களின் தொகுப்பு இங்கே.இந்தியாவின் பெண்கள் உலகக் கோப்பை வெற்றி50 ஓவர் உலகக் கோப்பையை முதல் முறையாக வென்று வரலாறு படைத்தது ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி. லீக் சுற்றில் ஒருகட்டத்தில் தொடர்ச்சியாக 3 தோல்விகளை
அகநானூறு முதல் நற்றிணை வரை.. தமிழ் இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள கார்த்திகை தீபம்!153233804.jpgகார்த்திகை தீபம் கொண்டாடப்பட உள்ள நிலையில் அதுபற்றி சங்ககால இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளதை பற்றி பார்க்கலாம்..கார்த்திகை தீப விழாவை பழந்தமிழர் சங்க காலம் தொட்டே வழிபட்டு வந்தனர். தமிழ் இலக்கியங்களில் கார்த்திகை தீப விழாவினைப் பற்றி சில இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.களவழி நாற்பது:''நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்டதலைநாள் விளக்கிலே - கார் நாற்பதுகார்த்திகை சாற்றில் கழி விளக்குப்போன்றனவை - களவழி நாற்பதுஅகநானூறு:''நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்டதலைநாள் விளக்கின் தகையுடையவாகிப்புலமெல்லாம் பூத்தன தோன்றி சிலமொழிதூதொடு வந்த மழை''சீவக சிந்தாமணி:குன்றிற் கார்த்திகை விளக்கிட்டன்னகடிகமழ் குவளை பைந்தார்நற்றிணை:சங்க காலத்தில் நிகழ்ந்த கார்த்திகை விழா ஒளிவிளக்கை எடுத்துக் காட்டுகிறது நற்றிணை.வீரை வேண்மான் வெளியன் தித்தன்முரசுமுதல் கொளீஇய மாலை விளக்கின்வெண்கோடு இயம்ப, நுண்பனி அரும்பக்கையற வந்த பொழுது - நற்றிணை 58மலைபடுகடாம்“கார்த்திகை காதில் கனமகர
சமராய்வுதலைவர் பிரபாகரனை முடித்து விடுமாறு கேட்டுக்கொண்ட சம்பந்தன...தினக்குரலில் வெளியாகிய செய்தியை இங்கே அப்படியே தரப்படுகிறது: சம்பந்தன், கருணாநிதி, ஜெயலலிதா உட்பட சர்வதேச, உள்ளூர் தலைவர்கள் பிரபாகரனை முடித...தினக்குரலில் வெளியாகிய செய்தியை இங்கே அப்படியே தரப்படுகிறது:சம்பந்தன், கருணாநிதி, ஜெயலலிதா உட்பட சர்வதேச, உள்ளூர் தலைவர்கள் பிரபாகரனை முடித்து விடுமாறு கூறினர்- பாட்டலி சம்பிக்கரணவக்க தெரிவப்பு!இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்ட வேளையில் பிரபாகரனைக் கொன்றுவிடக் கூறிய தலைவர்கள்!சம்பந்தன், கருணாநிதி, ஜெயலலிதா உட்பட சர்வதேச, உள்ளூர் தலைவர்கள் பிரபாகரனை முடித்து விடுமாறு கூறினர்.இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றியை பெற்றுவரும் போது, 'முடித்துக் கொள்ளுங்கள்' என சிவசங்கர் மேனனும் எங்களுக்கு கட்டளை வழங்கினார்.பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவிப்புஇறுதிப் போரின் போது புதுமாத்தளன் பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்ட வேளையில், அவரை மீட்க பல்வேறு தரப்பினரால் முயற்சிகள் முன்னெ டுக்கப்பட்ட போதும், அவரை மீட்க முடியாது என்ற நிலைமை உருவாகியிருந்த போது, சம்பந்தன்; கருணாநிதி, ஜெயலலிதா உட்பட அனைத்து சர்வதேச மற்றும் உள்ளூர்