இலங்கைக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்கு! இலங்கைக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்கு! இலங்கைக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 200க்கும் அதிகமான தமிழர்கள் சார்பில் global Rights Compliance LLP என்ற அமைப்பினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக இலங்கையின் பல மூத்த அதிகாரிகளை விசாரணை செய்து உரிய நேரத்தில் கைது செய்ய தலைமை வழக்கறிஞருக்கு அழைப்பு விடுக்கும் வகையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன, முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூரிய உட்பட பல சிரேஷ்ட அதிகாரிகள், கடத்தல்கள், சட்டவிரோத காவலில் வைத்தல் மற்றும் சித்திரவதை போன்ற மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு பொறுப்பானவர்கள் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொண்ட துன்புறுத்தலின் தீவிரம் இலங்கையை விட்டு வெளியேறி இங்கிலாந்தில் தஞ்சம் அடைவதைத் தவிர அmவர்களுக்கு வேறு வழியில்லை என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. அத்தோடு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன தலைமையிலான இலங்கை பாதுகாப்புப் படையினரின் அச்சுறுத்தல்கள், சித்திரவதைகள் மற்றும் துன்புறுத்தல்களின் விளைவாக பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதற்கான உரிமையை இழந்தனர் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது. இலங்கையில் தங்கியிருக்கும் தங்கள் அன்புக்குரியவர்களின் துன்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தல்களாலும், இங்கிலாந்தில் தங்களை நோக்கித் தொடரும் கண்காணிப்பு மற்றும் துன்புறுத்தல்களாலும் தாம் தொடர்ந்து அவதிப்படுவதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கை தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்படுகின்ற முதலாவது வழக்கு இதுவென்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1247083

ஆட்சியை ஒப்படைத்துவிட்டு ஒதுங்குமாறு அரசாங்தக்திடம் சஜித் கோரிக்கை! புவிசார் அரசியலில் இலங்கையை விளையாட்டுக் களமாக மாற்றுவதற்கு இடமளிக்க மாட்டோம் – சஜித் புவிசார் அரசியலில் இலங்கையை விளையாட்டுக் களமாக மாற்றுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எவருக்கும் இடமளிக்காது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். காசல் வைத்தியசாலைக்கு வைத்திய உபகரணங்களை வழங்கி வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “சீன உரம் கொண்ட கப்பல் எவ்வாறு இலங்கை கடற்பரப்பிற்குள் ஊடுருவியது என்பது எமக்கு ஆச்சரியமாக உள்ளது. அது எவ்வாறு சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் பிரவேசித்தது? எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட எவரையும் ஐக்கிய மக்கள் சக்தி அனுமதிக்காது. இலங்கையை நாடகமாட எவரையும் அனுமதிக்க மாட்டோம்” என அவர் மேலும் கூறினார். https://athavannews.com/2021/1247104

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலுக்கு தற்போதைய அரசாங்கம் காரணமில்லை – மைத்திரி “தாக்குதலை முன்கூட்டியே அறிந்து நாட்டைவிட்டு செல்லும் அளவிற்கு பலவீனமானவனல்ல” -மைத்திரி ஈஸ்டர் தாக்குதலை முன்கூட்டியே அறிந்து நாட்டை விட்டுவெளியேறும் அளவிற்கு பலவீனமான நபர் தான் அல்ல என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பயங்கரவாத தாக்குதல் சம்பவம் குறித்து தான் ஆரம்பத்தில் அறித்ததாக தெரிவிக்கப்படும் கருத்துக்கள் முற்றிலும் பொய்யானது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்த சம்பவத்தை அரசாங்கம் என்ற ரீதியில் பொறுப்பேற்க தயாராக இருப்பதாக தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, ஒருபோதும் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்கப் போவதில்லை என்றும் தெரிவித்தார். இதேவேளை இரசாயன உரத்திற்கு தடை விதித்து சேதன பசளைக்கு செல்வது பெரும் பிரச்சினையை தோற்றுவிக்கும் என்பதனால் அத்திட்டத்தை கட்டம் கட்டமாக செயற்படுத்த வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரியதாக மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார். இருப்பினும் சேதன பசளை தொடர்பாக ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துக்கொள்வதற்கு தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் மைத்திரிபால சிறிசேன குற்றம் சாட்டியுள்ளார். https://athavannews.com/2021/1246965

புதிய பதிவுகள்

மூலம்: https://www.pathivu.com/2018/04/blog-post_298.html   பயிற்சி தந்திரம் துணிவு வெற்றி என்ற தேசியத் தலைவரின் தாரக மந்திரத்துடன், 1991 ம் ஆண்டு இதே நாளில் தமிழரின் படைக் கட்டமைப்பின் புதிய படிநிலை வளர்ச்சியாக சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி உருவாக்கம் பெற்றது. 17862659_772773992886565_4204062863624433396_n.jpg   தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதலாவது மரபுவழிப் படையணியாக கட்டமைக்கப்பட்ட இப் படையணிக்கு, இயக்கத்தின் முதலாவது தாக்குதல் தளபதி லெப். சீலன் அவர்களின் இயற்பெயரை தலைவர் சூட்டினார். சீலனின் துணிவு, பற்றுறுதி ,அறிவுக்கூர்மை, செயல்வேகம் ,ஈகம் ஆகிய அனைத்தையும் முன்னுதாரணமாக கொண்டு செயற்பட வேண்டும் என்ற உயரிய நோக்கு தலைவரால் போராளிகளுக்கு வலியுறுத்தப்பட்டது. சமர்க்கள நாயகன் பால்ராஜ் அவர்களை சிறப்புத் தளபதியாக நியமித்த தலைவர், புகழ்பூத்த தளபதிகள் ராஜன் ( றோமியோ - நவம்பர் ) அவர்களை தளபதியாகவும் ஜஸ்டின் அவர்களை துணைத் தளபதியாகவும் நியமித்து வழிநடத்தினார். 17862810_772773806219917_6335867942390291039_n.jpg   மிக உயர்ந்த உளவுரண் , தெளிவான திட்டமிடுதல், விரைவான நகர்வு திறன், களச் சூழலுக்கேற்ப சிறப்பு பயிற்சிகள் ,திறமான தகவல் தொடர்பு ,துல்லியமான வேவு , தேர்ந்த கள நிர்வாகம் ,அணித் தலைவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிகள் முதலான அனைத்தையும் உள்ளடக்கிய சிறப்புப் பயிற்சிகளில் படையணியை ஈடுபடுத்திய பால்ராஜ், களத்தின் எந்தச் சவால்களையும் எதிர்கொள்ளும் திறனுடன் படையணியை வளர்த்தார். வவுனியா பெரும் காடுகளூடாக வன்னிப் பெரு நிலத்தை முழுமையாக ஆக்கிரமிக்க சிறிலங்கா இராணுவம் மேற்கொண்ட வன்னி விக்கிரம -2 நடவடிக்கையை முறியடிக்கும் பாரிய தாக்குதலில் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தனது முதல் தாக்குதலை தொடுத்தது . மிகவும் தீவிரமாக
அமெரிக்க செனட்டரால் பாலியல் வன்கொடுமை – கிளிண்டன் உதவியாளர் பரபரப்பு தகவல் அமெரிக்க செனட்டரால் பாலியல் வன்கொடுமை – கிளிண்டன் உதவியாளர் பரபரப்பு தகவல் அமெரிக்க செனட்டரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விடயம் குறித்து ஹிலாரி கிளிண்டனின் முன்னாள் நெருங்கிய உதவியாளர் ஹூமா அபெடின் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ள குறித்த புத்தகத்தில் அவர், 2000 ஆம் ஆண்டு நடுப்பகுதியில், பெயரிடப்படாத அரசியல்வாதி தன்னை வீட்டிற்கு அழைத்து பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்றுள்ளதாக கூறியுள்ளார். 2016 ஆம் ஆண்டு ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரும், ஒபாமா காலத்தின் முன்னாள் வெளிவிவகார அமைச்சின் செயலாளருமான திருமதி கிளிண்டனின் மிகவும் நம்பகமான உதவியாளர்களில் ஒருவரான அபெடின் காணப்படுகின்றார். அவர் 2001-09 க்கு இடையில் நியூயோர்க்கிற்கான அமெரிக்க செனட்டராக இருந்த கிளிண்டனுக்காக தனது பணியை மேற்கொள்ளும்போது இந்த பாலியல் வன்கொடுமை இடம்பெற்றதாக சுட்டிக்காட்டியுள்ளார். 45 வயதாகும் ஹூமா அபெடின், செனட்டரின் அடையாளத்தையோ அல்லது அவரது கட்சியையோ வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1247001
சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – லான்சூவில் ஊரடங்கு அமுல்! சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – லான்சூவில் ஊரடங்கு அமுல்! சீனாவின் வடமேற்கு மாகாணமான கான்சுவின் தலைநகரமான லான்சூவில் நேற்று முதல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, மக்கள் அவசரநிலை தவிர ஏனைய காரணங்களுக்காக வீட்டைவிட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், குடியிருப்பு வளாகங்களில் இருந்து வெளியே செல்வதற்கு அனுமதிச்சீட்டு முறை நடைமுறைபடுத்தப்படுவதாக நகர நிர்வாகம் அறிவித்துள்ளது. சீனாவின் வடமேற்கு மாகாணமான கான்சுவின் தலைநகரம் லான்சூவில் நேற்று முன்தினம் புதிதாக 6 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, கடந்த 18ஆம் திகதி முதல் மொத்தம் 39 பேர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1247113

யாழ் இணையம் - உலகத் தமிழரின் கருத்துக்களம்

இலங்கைக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்கு! இலங்கைக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்கு! இலங்கைக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 200க்கும் அதிகமான தமிழர்கள் சார்பில் global Rights Compliance LLP என்ற அமைப்பினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக இலங்கையின் பல மூத்த அதிகாரிகளை விசாரணை செய்து உரிய நேரத்தில் கைது செய்ய தலைமை வழக்கறிஞருக்கு அழைப்பு விடுக்கும் வகையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன, முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூரிய உட்பட பல சிரேஷ்ட அதிகாரிகள், கடத்தல்கள், சட்டவிரோத காவலில் வைத்தல் மற்றும் சித்திரவதை போன்ற மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு பொறுப்பானவர்கள் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொண்ட துன்புறுத்தலின் தீவிரம் இலங்கையை விட்டு வெளியேறி இங்கிலாந்தில் தஞ்சம் அடைவதைத் தவிர அmவர்களுக்கு வேறு வழியில்லை என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. அத்தோடு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன தலைமையிலான இலங்கை பாதுகாப்புப் படையினரின் அச்சுறுத்தல்கள், சித்திரவதைகள் மற்றும் துன்புறுத்தல்களின் விளைவாக பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதற்கான உரிமையை இழந்தனர் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது. இலங்கையில் தங்கியிருக்கும் தங்கள் அன்புக்குரியவர்களின் துன்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தல்களாலும், இங்கிலாந்தில் தங்களை நோக்கித் தொடரும் கண்காணிப்பு மற்றும் துன்புறுத்தல்களாலும் தாம் தொடர்ந்து அவதிப்படுவதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கை தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்படுகின்ற முதலாவது வழக்கு இதுவென்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1247083
அமெரிக்க செனட்டரால் பாலியல் வன்கொடுமை – கிளிண்டன் உதவியாளர் பரபரப்பு தகவல் அமெரிக்க செனட்டரால் பாலியல் வன்கொடுமை – கிளிண்டன் உதவியாளர் பரபரப்பு தகவல் அமெரிக்க செனட்டரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விடயம் குறித்து ஹிலாரி கிளிண்டனின் முன்னாள் நெருங்கிய உதவியாளர் ஹூமா அபெடின் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ள குறித்த புத்தகத்தில் அவர், 2000 ஆம் ஆண்டு நடுப்பகுதியில், பெயரிடப்படாத அரசியல்வாதி தன்னை வீட்டிற்கு அழைத்து பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்றுள்ளதாக கூறியுள்ளார். 2016 ஆம் ஆண்டு ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரும், ஒபாமா காலத்தின் முன்னாள் வெளிவிவகார அமைச்சின் செயலாளருமான திருமதி கிளிண்டனின் மிகவும் நம்பகமான உதவியாளர்களில் ஒருவரான அபெடின் காணப்படுகின்றார். அவர் 2001-09 க்கு இடையில் நியூயோர்க்கிற்கான அமெரிக்க செனட்டராக இருந்த கிளிண்டனுக்காக தனது பணியை மேற்கொள்ளும்போது இந்த பாலியல் வன்கொடுமை இடம்பெற்றதாக சுட்டிக்காட்டியுள்ளார். 45 வயதாகும் ஹூமா அபெடின், செனட்டரின் அடையாளத்தையோ அல்லது அவரது
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் திட்டத்துக்கு தி.மு.க அடிபணிகிறதா ? சர்ச்சையில் 'இல்லம் தேடி கல்வி' திட்டம் ஆ. விஜயானந்த் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் மு.க.ஸ்டாலின்   படக்குறிப்பு, விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த முதலியார்குப்பத்தில் தமிழக
கோட்டாபாய ராஜபக்சவிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக புலம்பெயர் தமிழர்கள் பாரிய அளவிலான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். காலநிலை மாற்றம் தொடர்பாக எதிர்வரும் 31ம் திகதி ஸ்கொட்லன்ட் தலைநகர் கிளாசோவில் ஆரம்பமாகவிருக்கும் ஐ.நா உச்சி மாநாட்டில் (United Nations Climate Change Conference) கலந்துகொள்வதற்காக வருகைதர இருக்கும் இலங்கை அரசதலைவர் கோட்டாபாய ராஜபக்சவிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக புலம்பெயர் தமிழர்கள் பாரிய அளவிலான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். அந்தவகையில் இன்று பிரபல ஸ்கொட்லாந்து ஆங்கில பத்திகை ஒன்றில் சிறிலங்கா அரச அதிபரின் வருகை பற்றிய ஒரு விளம்பரச் செய்தி பிரசுரமாகியிருந்தது. ஸ்காட்லாந்து தேசத்தில் இருந்து வெளியாகும் பிரபல பத்திரிகையான, ‘த ஹெரால்’ (The Herald) என்ற பத்திரிகை, ‘இனப்படுகொலையாளி உங்கள் நகரத்திற்கு வருகிறார்’ என்ற செய்தியை முழுப் பக்கத்தில் பிரசுரித்துள்ளது. ஒரு இனத்தின் விடுதலையை நசுக்கிய இனப் படுகொலையாளி என்றும், ‘டேர்மினேட்டர்’ என்றும் அவர் குறிப்பிடப்பட்டுள்ளார். ஸ்கொட்லன்ட் வருகைதரும் கோட்டாபாயவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக ஆர்பாட்டங்கள் உட்பட பல செயற்பாடுகளை புலம்பெயர் அமைப்புக்கள் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
16/11/1978 இல் ஒளிபரப்பு செய்யப்பட்ட இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியுடன் ஒரு நேர்காணல்.  தேம்ஸ் டெலிவிஷன்ஸ் ஜொனாதன் டிம்பிள்பி, இந்திய அரசியல் மற்றும் அவர் பிரதமராக இருந்தபோது பத்திரிகைகள் மீதான ஒடுக்குமுறை குறித்து திருமதி காந்தியிடம் சில சங்கடமான கேள்விகளைக் கேட்டார். திருமதி காந்தி எவ்வளவு லாவகமாக அவரின் பேட்டி காண்பவரின் குறுக்கு விசாரணை போன்ற கேள்விகளை கையாள்கிறார் பாருங்கள். 👌 Indira Gandhi Interview | TV Eye | 1978 https://youtu.be/q8aETK5pQR4
இன்று வெள்ளிக்கிழமை (22/10/21), தனது “காலைக்கதிர்” மின்-ஏட்டில், நண்பர் வித்யாதரன், “இனி இது ரகசியம் அல்ல”, என்ற வழமையான அங்கத்தில் கொஞ்சம் நீட்டி நீளமாக ஒரு சம்பவத்தை எழுதியுள்ளார். அதை என் கவனத்துக்கு நியுசிலாந்து நண்பர் “வரதா” கொண்டு வந்துள்ளார். (செய்தி யாழ்ப்பாணத்திலிருந்து, நியுசிலாந்து ஓக்லன்ட் சென்று கொழும்புக்கு வந்துள்ளது.!) எனது கட்சி/கூட்டணியில் இன்று இல்லாத, “திரு. பிரபா கணேசனை சந்தித்து நான் அரசியல் பேசியுள்ளேன்” என்பதே செய்தி சுருக்கம். 1970 களிலிருந்து கொழும்பில் வாழும், யாழ் நல்லூரை சேர்ந்த எமது குடும்ப நண்பர் ஸ்ரீகாந்தாவின் தனிப்பட்ட விவகாரம் ஒன்றின் தொடர்பாக, பிரபாவை நீண்ட காலத்தின் பின், நண்பர் ஸ்ரீகாந்தின் அழைப்பின் பேரில் சந்தித்தேன். பின்னர் எமது சகோதரி கெளரியின் வீட்டில் நடைபெற்ற பிறந்த நாள் வைபவம் ஒன்றிற்கு போன போது அங்கு பிரபாவும் வந்திருந்தார். “கருத்து வேறுபாடுகளை மறந்து இணைந்து செயற்பட இருவரும் இணங்கி இருக்கின்றார்கள்” என்ற காலைக்கதிர் செய்தி, ஒரு அரசியல் செய்தி. இதில் உண்மையில்லை. இந்த செய்தி தவறு. அரசியல் தொடர்பில் ஒரு வார்த்தைகூட பேசப்படவில்லை. சிந்திக்கவும் இல்லை. எங்கள் நண்பர் ஸ்ரீகாந்தாவின் விவகாரம் தொடர்பாக இருவரும் பேசினோம். எங்களது நேரடி ஆலோசனைகளை, நண்பர் ஸ்ரீகாந்தா
“ போதி மரம்”  காலமை எழும்பி கடனை முடிக்க கிணத்தடிக்குப் போனா ,அடுப்புச் சாம்பலையும் கரியையும் கலந்து தும்பால இயத்துக்களை மினுக்கின படி “ கொஞ்சம் தண்ணி அள்ளித்தாவான்” எண்டு அம்மம்மா கேட்டா . மனிசிக்கு விடியல் கிணத்தடீல தான். அள்ளிக்குடுத்திட்டு் நானும் ,கடனை வைக்காமல் முடிக்க வேண்டும் இல்லாட்டி துன்பம் தான் எண்ட படியாத்தான் காலைக கடன் எண்டு சொல்லிறவங்களோ ? எண்டு யோச்சபடி வாளியோட நடந்தன் ,கடனை அடைக்க. ஒவ்வொருத்தனுக்கும் கிணத்தடியும் கக்கூசும் கூட போதி மரங்கள் தான் ஏனெண்டால் இங்க தான் கன பேருக்கு தத்துவம் பிறக்கிறது. ஓட்டைக்கிணத்து வாளீல தண்ணி அள்ளி ஒழுகிற கக்கூஸ் வாளீக்குள்ள விட்டிட்டு போய் குந்தி இருந்து போட்டு ,எட்டிப்பாக்க தண்ணி இல்லை எண்டேக்க தான் எனக்கு விளங்கிச்சு காதறுந்த ஊசியும் ஓட்டை கக்கூஸ் வாளியும் கடைசிவரை உதவாது எண்டு. வாளீன்டை ஓட்டையை அடைக்க பிலாக்காய்பால்ல இருந்து தார் வரை try பண்ணி கடைசீல புது வாளி வாங்கிக் கொண்டு வர கக்குசுக்கா? எண்ட கேள்வி வந்திச்சுது. ஓட்டைக் கிணத்து வாளி இடம் மாறி கழுவிறதுக்குப் போக புதிசு கப்பீல தொங்கிச்சுது. இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே எண்ட கிணத்தடி ஞானம் அப்ப பிறந்திச்சு. “என்ன கிணத்துக்கட்டில பிள்ளைய வளத்தின மாதிரி பறக்கிறாய் “ எண்டு அம்மா நான் அந்தரப்பட்டா பேசவா . அப்ப ஒருக்கா படுத்தால் என்ன எண்டு
May be an illustration 1876- 1878 ஆண்டுகளில் மதுரை மிக மோசமான பஞ்சத்தை சந்தித்தது, எங்கள் பாட்டி வீடு 19 கீழ் அனுமந்தராயன் கோவில் தெருவில் 137 ஆம் வயதில் இன்னும் உள்ளது, இந்த தெருவில் மாற்றம் காணாத பழைய வீடென இது மட்டுமே எஞ்சியுள்ளது, இந்த வீட்டிற்கு ஒரு துயரமான சாபம் உண்டு ,அது ஒரு சிறுமியின் சாபம்., நவராத்திரி சமயத்தில் பட்டுப்பாவாடை அணிந்து அக்கம் பக்கம் சுற்றி விளையாடிய சிறுமி அன்று நெல் களஞ்சியத்தின் கதவு திறந்து வைத்திருப்பதைக் கண்டதும் அதன் உள்ளே உள்ள உயரமான பானைகளில் ஒன்றில் சென்று ஒளிந்து கொள்கிறாள்,பின்னர் உறங்கியும் போகிறாள்.   மகாபஞ்சத்தின் எதிரொலியால் மக்கள் அந்தந்த பருவங்களில் என்ன உணவு தானியங்கள் கிடைக்கிறதோ? அதை வாங்கி சேர்த்து வைக்கத் துவங்கியிருந்த காலம் அது, அதற்கேற்ப குயவர்களிடம் சொல்லி இது போல பெரிய வஞ்சிகளை செய்து வீட்டின் தென்மேற்கிலோ
டேட்டிங், ஃபேஸ்புக் போலி நபர்கள் வலையில் விழும் இந்தியர்கள் - சுங்கத்துறை பெயரில் தொடரும் மோசடி எம்.ஏ.பரணிதரன் பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் சுங்கத்துறை பட மூலாதாரம்,GETTY IMAGES   படக்குறிப்பு, சித்திரிப்புப்படம் இணையம் வழியாக உங்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்கள், அதனால் நீங்கள்
ஃபேஸ்புக் குழந்தைகளை பாதிக்கிறது, ஜனநாயகத்தை பலவீனப்படுத்துகிறது - முன்னாள் ஊழியர் 34 நிமிடங்களுக்கு முன்னர் ஃப்ரான்செஸ் ஹாகென், முன்னாள் ஃபேஸ்புக் ஊழியர் பட மூலாதாரம்,GETTY IMAGES   படக்குறிப்பு, ஃப்ரான்செஸ் ஹாகென், முன்னாள் ஃபேஸ்புக் ஊழியர்
            large.0-02-0a-7ded3d42162e3d27fcf792fc37ca93c170364002125909fc7700011f9c4d608a_1c6da8809b2eb4.jpg.3994e25a2f3f3677fca4196bbb71d0ef.jpg திறமைகள்..! ********** ஒவ்வொரு உயிரினத்துக்கும் ஒரு திறமையுண்டு-மனிதா உன் திறமை எங்கே?   கசக்கினால் இறக்கும்  கறையான்கூட அதன் உமிழ்நீரில் மண்குழைத்து அடுக்குமாடி கட்டி அதற்குள் வாழுது  புற்றெனும் வீட்டில்.   ஓரிடத்தில் இருந்தே வலை பரப்பி வீடு கட்டி வந்து விழும் உணவை உண்டு உயிர்வாழும்   சிலந்தி.   உயரத்தில் இருந்தும்  ஒழுகாமல் தேனை அறைகட்டி சேமிக்கும்  தேனி.   அலகால் தும்பெடுத்து அந்தரத்தில் கூடமைத்து  உள்ளே குஞ்சு பொரித்து உயி வாழும் தூக்கணாம் குருவி.   சுறு சுறுப்பாக எழுந்து  வரிசைகட்டி வாழ்வதற்காக  உணவெடுத்து-தன் வீடு நிரப்பும் எறும்பு.   வீடமைக்க,சேமிக்க தொழில்நுட்பத்தோடு  சுறுசுறுப்பய் நிமிர்ந்து நிற்க இவைகளே
  large.De-aarde-CC0-Pixabay.jpg.d85b6e647ee6f291a788ecfe7676fddb.jpg   என் அன்பு யாழ் இதயங்களுக்கு..  எனி வரும் காலம் பற்றி முளித்திருக்கவே வந்த கனவிது.   இப்படியும் நடக்கலாம்..! ***************** வேலை ரோபோக்கள் வீடெங்கும் திரியலாம் விரும்பிய சமையலறை காணாமல் போகலாம் மூன்று வேளையுணவும் மாத்திரையாகலாம் முளித்திருக்க கதிர்வீச்சால் உறுப்பும் திருடலாம்.    சந்திரன் செவ்வாய்க்கு ரொக்கட் பறக்கலாம் சரித்திர தேடல்கள் குழி வெட்டிப்புதைக்கலாம் சுவாசிக்கும் காற்றும் காசுக்கு விற்கலாம்-எம் சுயசரிதை சொல்ல சிப்பொன்றும் வைக்கலாம்.   பிறப்பு வீதத்தை ஐம்பதால் குறைக்கலாம் பிறந்த பின் வீரத்தை கோழையாய்யாக்கலாம் வயோதிப மரங்களை ஊசியால் சாய்க்கலாம் வயது வரமுன்னே பெரியவர் போலாக்கலாம்.   ஓரினச் சேர்க்கைக்கு ஊதியம்
இந்தியா Vs பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை: 'இது சாதாரண ஆட்டமல்ல' - இரு நாடுகளிலும் உணர்ச்சிப் பெருக்கு 20 அக்டோபர் 2021 கோலி ரோஹித் பட மூலாதாரம்,GETTY IMAGES அக்டோபர் 24 ஞாயிற்றுக்கிழமை துபாயில் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை போட்டி குறித்து இந்திய கேப்டன்
main-qimg-88acff1a073f337672313c9618e143af-lq.jpg   குறிஞ்சித்திணைப் பாடல்களில் இவை காணப்படுவதால் புவியியல், வேதியல் என்பன போன்று மலையும் மலை சார்ந்தவற்றையும் குறிஞ்சியியல் (credit: திருவள்ளுவன் இலக்குவனார் ) என்றே நாம் தனியியல் கண்டு பல கலைச்சொற்களைப் புதுப்பிக்க இயலும். சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் மலையியல் தொடர்பான கலைச் சொற்கள் : அடிவாரம், தாள், வெற்பு - மலையின் அடிப்பகுதி (spur / Foot of a hill/mountain) அடுக்கம் - பன்மலை வரிசை (a complex mountain range.) அறைவாய், கணவாய், கண்டி - (mountain pass) ஆரிப்படுகர் - (very difficult mountain path with ascents and descents) அரிதின் முயன்று ஏறியும் இறங்கியும் செல்லும் கடிய மலை வழி கது, கிழிப்பு, பிளப்பு, விடர், விடரளை, விடம்பு, விடப்பு, மறுமாடி- mountain cleft கமர் - chasm கவான் - கவைந்து கிடக்கும் பக்க மலை கோடு - இரு குவடுகள் சேருமிடம் (joining place of two summits) கல்லளை, விடரகம், அளை,
மூலம்: https://www.pathivu.com/2018/04/blog-post_298.html   பயிற்சி தந்திரம் துணிவு வெற்றி என்ற தேசியத் தலைவரின் தாரக மந்திரத்துடன், 1991 ம் ஆண்டு இதே நாளில் தமிழரின் படைக் கட்டமைப்பின் புதிய படிநிலை வளர்ச்சியாக சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி உருவாக்கம் பெற்றது. 17862659_772773992886565_4204062863624433396_n.jpg   தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதலாவது மரபுவழிப் படையணியாக கட்டமைக்கப்பட்ட இப் படையணிக்கு, இயக்கத்தின் முதலாவது தாக்குதல் தளபதி லெப். சீலன் அவர்களின் இயற்பெயரை தலைவர் சூட்டினார். சீலனின் துணிவு, பற்றுறுதி ,அறிவுக்கூர்மை, செயல்வேகம் ,ஈகம் ஆகிய அனைத்தையும் முன்னுதாரணமாக கொண்டு செயற்பட வேண்டும் என்ற உயரிய நோக்கு தலைவரால் போராளிகளுக்கு வலியுறுத்தப்பட்டது. சமர்க்கள நாயகன் பால்ராஜ் அவர்களை சிறப்புத் தளபதியாக நியமித்த தலைவர், புகழ்பூத்த தளபதிகள் ராஜன் ( றோமியோ - நவம்பர் ) அவர்களை தளபதியாகவும் ஜஸ்டின் அவர்களை துணைத் தளபதியாகவும் நியமித்து