Jump to content

சமண - பௌத்த மதங்களை அழித்த சைவம்!


Recommended Posts

பதியப்பட்டது

சமண - பௌத்த மதங்களை அழித்த சைவம்!

கி.பி.ஐந்து ஆறு ஏழாம நூற்றாண்டுகளில் தமிழ் நாட்டில் சமண சமயமும் பௌத்த மதமும் பெரிதும் செழித்து வளர்ந்திருந்தது. சைவ வைணவ மதங்கள் முடங்கிக் கிடந்தன. மக்களில்பெரும்பாலோர் சமணராகவும் பௌத்தராகவும் இருந்தனர். நாட்டை ஆண்ட மன்னர்களும் சமண பௌத்த மதங்களைத் தழுவியிருந்தனர்.

கி.பி.ஏழாம் நூற்றாண்டில் சைவ அடியார்களான நாயன்மார்களும், வைணவ அடியார்களான ஆழ்வார்களும் 'பக்தி' இயக்கத்தை ஆயுதமாகக் கொண்டு சமண பௌத்த மதங்களை அழித்திட முற்பட்டனர்.

'சமண சமயம் பலவிதத்தில் தாக்கப்பட்டது. கொடுமைப் படுத்துதல், கழுவேற்றுதல், கொலை செய்தல், கலகம் விளைவித்தல், நில புலங்களைக் கவர்தல் முதலிய செயல்கள் நிகழ்ந்ததைக் காண்கிறோம். இந்துக்கள் சமண மதத்தை அழித்த செய்திகள் பல உள்ளன.

-மயிலை சீனி வேங்கடசாமி, சமணமும் தமிழும்,

Page 68.

'வெறுப்போடு சமணர் முண்டர் வீதியில் சாக்கியர்கள் நின்பால் பொறுப்பரியன்கள் பேசில் போவதே நோயதாகிக் குறிப்பெனக் கடையுமாகில் கூடு மேல் தரையை ஆங்கே அறுப்பதே கருமங்கண்டாய் அரங்கமா நகருளானே!'

-தொண்டரடிப் பொடியாழ்வார், திருமலை, எட்டாவது பாடல்.

ஆழ்வாரின் இந்தப் பாடலின் மூலம் அக்காலத்தில் சமயப் போர் எவ்வளவு வேகம் கொண்டிருந்தது என்பது விளங்குகிறது. இங்கு சாக்கியர்கள் என்று வருவது பௌத்தர்களைக் குறிக்கும்.

திருநாவுக்கரசர்!

தென் ஆற்காடு மாவட்டத்தில் உள்ள பாடலிபுத்திரத்தில் சிறப்புப் பெற்றிருந்த சமணப்பள்ளி இருந்தது. இங்கிருந்து தான் சர்வநந்தி என்பவர் 'லோகவிபாகம்' என்னும் நூலை எழுதினார்.கி.பி. 458 - ல் சிம்மவர்மன் என்னும் பல்லவ மன்னன் காஞ்சிபுரத்தை அரசாண்டிருந்த போது அவ்வரசனது இருபத்திரண்டாவது ஆட்சி ஆண்டில் 'லோகவிபாகம்'பாகத மொழியிலிருந்து வட மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது. இதன் பிறகு நூற்று அறுபது ஆண்டுகளுக்கு பின்னர் திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூரில் புகழானார், மாதினியார் புதல்வராகப் பிறந்தவர் மருணீக்கியார். இவரது சமய அறிவால் சமணர்கள் 'தருமசேனர்' என்னும் பெயர் கொடுத்து அவரைப் போற்றினார்கள். நெடுங்காலம் சமணகுருவாக பாடலிபுத்திர சமணப் பள்ளியில் இருந்த தருமசேனர் சமண சமயத்தை விட்டு சைவ சமயத்திற்கு வந்த போதுதான் திருநாவுக்கரசர் என்ற பெயர் மாற்றம் பெற்றார்.

-மயிலை சீனி. வேங்கடசாமி, மகேந்திரவர்மன்,

Chennai, Page 27-29

-Mysore Archaeological Report, 1909-10, Page 112

சமண மதம் துடைக்கப் படுதல்

சமண சமயத்தவனாக இருந்த பல்லவ மன்னன் மகேந்திரவர்மனைச் சைவ சமயத்தில் திருநாவுக்கரசர் சேர்த்தார். அத்தோடு நின்று விடாமல், தாம் அப்பர், தருமசேனர் என்னும் பெயருடன் தங்கியிருந்த பாடலிபுத்திர சமணப் பள்ளியை இடித்துத் தள்ளவும் ஏற்பாடு செய்தார்.

பல்லவ அரசனும் சமணக் கல்லூரியை ஒழித்தான். பள்ளிகளையும் பாழிகளையும் அழித்தான். அவற்றின் சிதைவுகளைக் கொண்டு வந்து திருவதிகையிற் 'குணதரஈச்சரம்' என்று தன் பெயரால் கோவில் ஒன்று கட்டினான்.

-Page 275, பல்லவர் வரலாறு,

இங்கு சமணர் கோவில் இருந்தது என்பதை உறுதிப்படுத்த மஞ்சக் குப்பம் சாலையில் யாத்திரிகர் பங்களாவுக்கு அருகில் இன்றும் சமணத்திற்கு உருவம் காணப்படுகிறது.

-South Arcot District, Gazetter, Page 369.

பெரிய புராணம் தரும் செய்தி!

'வீடறியாச் சமணர் மொழி பொய்யென்று மெய்யுணர்ந்த காடவனுந் திருவதிகை நகரின் கட்கண்ணுதற்குப் பாடலிபுத்திரத்தில் மண் பள்ளியொடு பாழிகளுங் கூட இடித்துக் கொணர்ந்து குணதரவீச்சரம் எடுத்தான்.

-தெய்வப் புலவர் சேக்கிழாரடிகள் அருளிய திருத் தொண்டர் மாக்கதை, ப.இராமநாதபிள்ளை

-திருநாவுக்கரசு நாயனார் புராணம், பாடல் 146, பக்கம் 289.

இஸ்லாம்

இதே கால கட்டத்தில் தான் மக்காவில் இஸ்லாம் தோன்ற ஆரம்பித்தது. முகமது நபி தன்னுடைய பிரச்சாரத்தை துவக்கியது இந்த கால கட்டத்தில்தான். இஸ்லாம் தொன்றுவதற்கு முன்பே உலகின் பல்வேறு பாகங்களில் ஒரு மதத்தவரின் வழிபாட்டுத் தவங்களை இன்னொரு மதத்தினர் அழித்ததையும் அல்லது அதனை தங்களது வழிபாட்டுத் தலமாக மாற்றியதையும் சரித்திரத்தில் நாம் காண முடிகிறது.

-வரலாற்றின் வெளிச்சத்தில் ஒளரங்கஜேப், செ. திவான்.

திருஞான சம்பந்தருக்கனுப்பிய தூது!

'மங்கையர்க்கரசியும் குலச்சிரையாரும் ஓர் பிராமணன் மூலமாக திருஞான சம்பந்த மூர்த்திக்கு ஒரு திருமுகம் அனுப்பி, மதுரைக்கு வந்து சமண இருளைப் போக்கி சைவப் பயிர் முன் போல் தழைக்க அனுக்ரஹிக்கும்படி வேண்டினர்.'

-கா.சு. சேஷகிரி அய்யர், சிவபிரானது 64 திருவிளையாடற்சுருக்கம், பக்கம் 84.

கழுவிலேறிய சமணர்கள்!

'பாண்டியவரசர் குலச்சிறை நாயனாரை நோக்கி சமணரைக் கழுவிலேற்றி முறை செய்யுமாறு பணித்தார். பிள்ளையார் அவர் செய்த சிவா பராதங்கருதி விலக்காதிருந்தார். குலச்சிறை நாயனார் முறை செய்யச் சமணர் யாவரும் கழுவிலேறி மாண்டார்கள்.'

-சதாசிவ செட்டியார், தேவாரப் பதிகங்கள், சென்னை

1925, page 18

'அரசர் குலச்சிறையாரை நோக்கி, 'சமணர்களைக் கழுவிலே ஏற்றுக என்று ஆஞ்ஞாபித்தார்..... திடபக்தியுடைய அமைச்சர் குலச்சிறையார் கழுத்தறிகளை நிறையாக நாட்டு வித்து அவைகளில் ஏற்ற, அதிபாதகர்களாகிய சமணர்கள் எண்ணாயிரவரும் தானாகவே ஏறினார்கள்.'

ஏ.ஜி.கோமதி அம்மாள், திருத் தொண்டர் பெரிய புராணம், சைவம் வளர்த்த அரசி, கோவில்பட்டி,

1948, Page 18

'அமைச்சர் குலச்சிறையார் கழுத்தறிகளை நாட்டிய பின் தோல்வியுற்று நின்ற சமணர் அனைவரும் அத்தறிகளில் ஏறி உயிர் துறந்தனர்.'

க. வெள்ளைவாரணன்,பன்னிறு திருமறை வரலாறு, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,

1972, Page 144

சமணர்கள் அனுபவித்த கொடுமை!

'மன்னன் சமண விரோதியாகி, பாண்டிய நாட்டிலுள்ள சமணர்களை வெட்டி வீழ்த்தி, அவர்கள் சொத்து, சுதந்திரம், கோயில், குளம், மடம் முதலியவைகளைக் கைப்பற்றும்படி தன் சைன்யங்களை ஏவியதோடு, தன் முன்னிலையிலேயே அநேக ஆயிரக்கணக்கான சமண முனிவர்களை வலியப் பிடித்து கழுமரத்திலேற்றி பதைக்கப் பதைக்கக் கொன்றான்.'

-அ.பொன்னம்பலம், அப்பரும் சமபந்தரும், சென்னை,

1983, Page 28

'கழுவிலேறாத சமணர்களை எல்லாம், சைவாச்சாரத்தைக் கொண்டவர்கள் ஒவ்வொருத்தராகப் பிடித்து அந்த முத்தலைக் கழுமரங்களிலே ஏற்றியிருத்திக் கொன்றார்கள். அந்த சமணர்களுக்குப் பாரம்பரியாக அடியார்களானவர்கள் சாவப்பயந்து மனங்குலைந்து விபூதி பூசிக் கொண்டார்கள். அந்த விபூதி கிடையாமல் பசுவின் கோமயத்தை எடுத்திட்டுக் கொண்டார்கள். அதுவும் கிடைக்காத சிலர் பசுவின் கன்றைத் தோள் மேலே தூக்கிப் போட்டுக் கொண்டார்கள்.'

'விபூதி, கோமயம், பசுவின் கன்று இந்த மூன்றுங் கிடையாத சிலர் விபூதி பூசின நெற்றியுடனே நெற்றியை மோதிப் பூசிக் கொள்ள கோமயத்திலுமப்படியே மோதியிட்டுக் கொண்டும் இப்படியாகத் தங்கள் பாசங்களை வென்று பிழைக்க எண்ணினவர்களைக் கொல்லாமல் விட்டு விட்டனர்.'

-பூவை கலயாண சுந்தர முதலியார் பொழிப்புரை, திருவிளையாடற் புராணம்,சென்னை,

1925, Page 494.

நாய் நரி தின்ற சமணர் உடல்கள்!

விபூதி பூசியவர்கள் உயிர் தப்பினர். அதற்கு உடன் பட மறுத்ததால், கழுவிலேற்றிக் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் என்ன ஆயிற்று தெரியுமா?

'கழுவிலேறி இறந்தவர்களெல்லாம் சுற்றப்பட்ட பருந்துகளும், காக்கைகளும், நரிகளும், நாய்களும், தொடர்ந்து கௌவிப் பிடித்திழுத்துத் தின்னக் கிடந்தார்கள்.'

'மற்றிவர் தம்மை யூற்றஞ் செய்திலர் யாருஞ் சுற்றிய சேனங்காக நரிகணாய் தொடர்ந்து கௌவிப் பற்றிநின் றிர்த்துத் தின்னக் கிடந்தனர்.'

பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம், உ.வே.சா.பதிப்பு, சென்னை,

1937, Page 1195.

'கூன் பாண்டியன் சைவத்திற் புகுந்த நாளே சமணமும் வீழ்ந்த நாளாகும். அதன்பின் புத்தமதம் திரும்பத் தலை தூக்கவே இல்லை. நம்பியாண்டார் நம்பி காலமாகிய பதினோறாவது நூற்றாண்டில் தமிழ்நாட்டிலிருந்து அவை அழிந்து பொயின.'

பெ. சுந்தரம் பிள்ளை எழுதிய 'திருஞான சம்பந்தர் காலம்' என்ற ஆங்கில நூல்.

'திருஞான சம்பந்தர் மதுரையில் எட்டு ஆயிரம் சமணரைக் கழுவில் ஏற்றினார் என்று சைவ சமய நூல்களாகிய பெரிய புராணம், திருவிளையாடற்புராணம், தக்கயாகப் பரணி முதலிய நூல்கள் கூறுவதும் இவற்றை நினைவு படுத்த மதுரைப் பொற்றாமரைக் குளத்து மண்டபத்தின் சுவற்றில் சமணரைக் கழுவேற்றும் காட்சியைச்சித்திரம் தீட்டி வைத்திருப்பதும், மதுரைக் கொவிலில் நடை பெற்று வரும் உற்சவங்களில் ஐந்து நாள் கழுவேற்று உற்சவம் ஆண்டு தோறும் நடைபெற்று வருவதும் இவை நடைபெற்றதற்கு முதன்மையான சான்றுகளாகும்.'

மயிலை சீனி வேங்கடசாமி, சமணமும் தமிழும், பக்கம் அறுபத்தெட்டு.

திருமங்கையாழ்வார்

தொள்ளாற்றுப் போர் வென்ற நந்தியின் பாட்டனான பல்லவ மன்னன் நந்திவர்மன் காலத்தில் திருமங்கையாழ்வார் வாழ்ந்திருந்தார். அவர் சமண பௌத்த சமயங்களைத் தாக்கி வைணவ சமயத்தை நிலை நிறுத்தினார்.

-மாணிக்கம் பிள்ளை, பல்லவர் வரலாறு, சென்னை, பக்கம் இருநூற்று எழுபத்தேழு.

கி.பி.எட்டாம் நூற்றாண்டினரான இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் சோழ நாட்டின் ஒரு பகுதியான ஆலி நாட்டை ஆண்ட குறுநில மன்னர் திருமங்கை ஆழ்வார்.

இவர் நாகப் பட்டினத்துப் பௌத்த விகாரத்தில்இரந்த பொன்னால் வேயப்பட்ட புத்தர் சிலையைக் கவர்ந்து வந்து அதைக் கொண்டு பல கொவில் திருப்பணிகள் செய்தார். பௌத்த சமண சமயங்கள் மீது நாயன்மாரைப் போலவே மிக்க வெறுப்புற்றவர் என்பதை இவரது பாடல்களைக் கொண்டு நன்கு உணர முடிகிறது.

-மயிலை சினி வேங்கடசாமி, மூன்றாம் நந்திவர்மன்,சென்னை,பக்கம் ஐம்பத்து இரண்டு.

-மா.இராசமாணிக்கம் பிள்ளை, பல்லவர் வரலாறு, பக்கம் இருநூற்று எழுபத்து ஏழு.

'திருமங்கை ஆழ்வார் திருவரங்கம் பெரிய கொவில் விமான மண்டப கோபுராதி கைங்கரியங்கள் செய்யத் திருவுள்ளமாய்ப் பொருள் தேட எண்ணுகையில் நாகப்பட்டினத்தில் ஒரு பொன்னாலான புத்த விக்ரஹமிருப்பதை அறிந்து அதை அறுத்துத் திருப்பணி செய்ய நினைத்து நாகப்பட்டினம் சென்று புத்தன் கோயிலுக்குச் சென்று விக்ரஹத்தை எடுத்து வந்துடைத்துச் சுட்டுரைத்து நன் பொன்னாக்கித் திருமதிள் கைங்கர்யத்துக்கு உபயோகப்படுத்தினர்.'

-நாலாயிர திவ்விய பிரபந்தம், சென்னை, பக்கம் இருபத்திஆறு.

கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப் பேட்டை திரு மூர்த்தி மலையிலுள்ள சமணர் கோவில் அமணலிங்கேசுவரர் என்று ஹிந்து மதக் கோவிலாக மாற்றப் பட்டது.

-புலவர் செந்தலை ந. கவுதமன், சூலூர் வரலாறு, பக்கம் நூற்று தொண்ணூற்றொம்பது.

'நாகராஜர் கோவில் தூண்களில் சமண சமயத் தீர்த்தங்கரர்களான பார்வத நாதரும், மகா வீரரும் தவக் கோலத்தில் நின்றும் அமர்ந்தும் காட்சி தருகின்றனர்.'

'கிபி பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை உள்ள இடைப் பட்ட காலத்தில் நாகராஜர் கோவில் இந்து சமய கோவிலுக்குரிய மாற்றங்களைப் பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிகிறது.'

-எஸ். பத்மநாபன்,குமரி மாவட்ட கொவில்கள், நாகர் கோவில், பக்கம் 51,52

செஞ்சியை ஆட்சி செய்து வந்த வேங்கடபதி நாயக்கர் சமணர்களுக்கு மிகுந்த கொடுமைகளைச் செய்தார். அதனைத் தாங்க முடியாத சமணர்கள் தப்பியோடினர். செஞ்சி அரசன் அந்நாட்டுச் சமணர் தலையை வெட்டிய காலத்தில் வேறு நாடுகளுக்குத் தப்பிப் போய்விட்ட சமணர்களில் காங்கேய உடையாரும் ஒருவர்.

-மயிலை சீனி. வேங்கட சாமி, சமணமும் தமிழும், பக்கம் எழுபத்து நாலு.

திருவாரூர் திருக்குளம்

தமிழ் நாட்டிலே பெரிய அளவிலானதும் பதினெட்டு ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டதுமான திருவாரூர் திருக்குளம் இப்போதும் இருக்கிறது. திருவாரூரில் சமணர்கள் செல்வாக்குடன் இரந்த காலத்தில் அந்தத் திருக்குளம் சிறியதாக இருந்தது. அத்துடன் அந்தக் குளத்தின் நான்கு பக்கங்களிலும் சமண சமயத்தவருடைய நிலங்களும், மடங்களும், பள்ளிகளும், பாழிகளும் இருந்தன. அப்போது 'தண'டியடிகள்' என்னும் சைவ நாயனார் அந்தக் குளத்தைப் பெரிய குளமாக்கிட முயற்சி செய்தார். அங்குள்ள அரசன் சமணரை ஊரை விட்டுத் துரத்திய பின்னர் அவர்களுடைய கட்டிடங்களையும் நிலங்களையும் அழித்துப் பறித்து அந்தச் சிறிய குளத்தை இப்போதுள்ள பெரிய குளமாகத் தொண்டினான்.

'பன்னும் பாழிப் பள்ளிகளும் பறித்துக் குளஞ்சூழ் கரைபடுத்து'

-திருத் தொண்டர் புராணம், தண்டியடிகள், பக்கம் அறுபத்தொன்பது.

கும்பகோணம் தாலுகாவைச் சேர்ந்த திருநாகேச்சுவரர் கோயிலின் மண்டபக் கற்றூணில் உள்ள சாசனம் தென் கரைத்திமூர் நாட்டில் இருந்த மிலாடுடையார் பள்ளி என்னும் சமணக் கொவிலைக் குறிப்பிடுகிறது. திருக் கோவலூரில் இருந்த 'மிலாட்' அரசனால் கட்டப்பட்ட இந்தச் சமணக் கோவில் பின்னால் இடிக்கப் பட்டது. அக் கோயிற் கற்களைக் கொண்டு இப்போதுள்ள திருநாகேசுவரத்துச் சைவக் கோயில் கட்டப் பட்டது. இவ்வூருக்கு அருகிலுள்ள வயல்களில் சமண உருவங்கள் இன்றும் காணப்படுகின்றன.

-சமணமும் தமிழும், பக்கம் நூற்று முப்பத்தொன்பது.

நன்னிலம் ரயில் நிலையத்திற்கு கிழக்கே வர்த்தமானீச்சுவரர் கோயில் இப்போது உள்ளது. ஸ்ரீவர்த்தமானர்(மகாவீரர்) 24 வது தீர்த்தங்கரர். இவரத பெயரைக் கொண்டே இது பழங்காலத்தில் சமணக் கோயிலாக இருந்ததைத் தெரிந்து கொள்ள முடிகிறது. கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னரே சைவரால் கைப்பற்றப்பட்ட இச்சமணக் கோவில் சைவக் கோவிலாக்கப்பட்டது.

-சமணமும் தமிழும், பக்கம் நூற்று நாற்பது

(தகவல்கள் தொடரும்)

நன்றி : சுகவனப்பிரியனின் வலைப்பதிவு

  • Replies 102
  • Created
  • Last Reply
Posted

அன்பே சிவம் என்பார்

சைவம் அன்பு மதம் என்பார்

நாகரீகம் அடைந்த இன்றைய காலகட்டத்திலும் பல்லாயிரக் கணக்கான மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு காரணமானவர்களை வணங்குகிறார்கள்.

வெட்கம்! வெட்கம்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதோ பாருங்கோ! கிபி. 800 களில் நடந்ததை கிபி 1900ம் ஆண்டுகளில் இருப்பவை படம் பிடிச்சுக் காட்டுகினமாம்.

வீதியில் நடக்கும்போது மயிற்பீலியால் நிலத்தைத் தடவி, ஏதும் ஊர்வன சாகக் கூடாது என்று திரிந்த சமணசமயம் தான் இந்து மதச் சித்தர்களைக் கழு ஏற்றிக் கொன்றது. இந்த இடவெளியைப் பயன்படுத்தித் தான், பிராமணர்கள் என்பவர்கள் ஆலயத்துக்குள் நுழைந்தனர். நாயன்மார்களின் வரலாற்றினைப் பார்த்தாலே தெரியும். அவர்களுக்கு சமணர்கள் எவ்வளவு தூரம் கொடுமை செய்தார்கள் என்று. ஆனால் சமணர்களுக்கு கொடுமை செய்யப்பட்டதாக, அவர்களின் வரலாறுகளில் இல்லை.

திருஞானசம்பந்தர் நாயனரின் திருமணத்தில் சோதிப் பிளம்பு தோன்றி அதில் கலந்தனர் என்று சொல்லப்படுவது கூட என் கருத்தில் அது ஒரு திரிப்பு ஆகும். திருஞானசம்பந்தரையும், அவர் கூட இருந்தவர்களையும் சமணர்கள் திருமண நேரத்தில் நெருப்பு மூட்டிக் கொலை செய்தனர் என்றே நினைக்கின்றேன்.

துஸ்டர்களையும், கெட்டவர்களையும் அழிப்பது சரி என்றே மதங்கள் சொல்கின்றன. அது கூட போராட்ட வடிவில் நம்மோடு ஒன்றித்துப் போனதும் தான். எனவே அதில் தப்பில்லை.

---------------------

இங்கே, இந்து மதத்தைக் கேவலப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் சீண்டுவதற்காகவுமே சில வெறியர்கள் அலைவது தெளிவாகத் தெரிகின்றது.

---------------

வெட்கப்படுவதாகச் சொன்னீங்களல்லவா!

இந்து மதத்தில் ஆதிசங்கரரால் ஒன்றிணைக்கப்பட்ட 6 மதங்களில்(சைவம், வைணவம், சாக்தம், காணபத்தியம், கௌமாரம், சௌரம்) சௌரம் என்பது தான் சூரியவழிபாடு. இன்றைக்கு தமிழர் விழாவாக சொல்லிக் கொள்ளும், தைப்பொங்கல் கூட சூரிய வழிபாட்டின் ஒரு அம்சம் தான். கடவுளே மறுப்பதாகச் சொல்லிக் கொண்டு, சூரிய வழிபாட்டைச் செய்ய வெக்கமாக இல்லை??

Posted

இங்கே ஆதாரங்களாக தரப்பட்டிருக்கிற நூல்கள் அனைத்துமே சைவர்களுடையது.

திருநாவுக்கரசிரனுதும், சம்பந்தரினதும் பாடல்களிலேயே சமண, பௌத்த மக்கள் மீது நடத்தப்பட்ட கொலைகளைப் பற்றி தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்கள். அதை நியாயப்படுத்தி ஊக்குவித்து இருக்கிறார்கள்.

பௌத்த பெண்களை பாலியல் வல்லுறுவு செய்ய வேண்டும் என்று சம்பந்தர் பாடிய பாடலும் இருக்கிறது.

அவர்களே ஒப்புதல் வாக்குமூலம் தந்து விட்டார்கள்.

பௌத்த, சமணர்கள் இந்துக்களை கழுவில் ஏற்றிக் கொன்றதாக யாருமே சொல்லவில்லை. அவர்களை கொலை செய்தவர்கள் கூட அப்படியான குற்றச்சாட்டுக்களை சொல்லவில்லை.

விவாதம் செய்வது என்றால், நேர்மையாக செய்யுங்கள். பொய்யான தகவல்களை தர வேண்டாம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்துக்கள் நாங்கள் என்று என்று சொல்லிக் கொண்டு இங்கே, இந்துமதம் பற்றி விமர்சிக்க உரிமை கேட்டகவில்லையா?

சம்பந்தரும் இதர நாயன்மார்களையும் ஆதாரமாகக் கொண்டால், சமணசமயம் எவ்வாறு சைவத்தைச் சிதைத்தது என்றும், எவ்வாறு ஆலயங்கள் தகர்க்கப்பட்டன, அழிக்கப்பட்டன என்பதையும் சொல்லியிருப்பது உங்களின் கண்ணுக்குத் தெரியவில்லையா?

நிச்சயமாக என்னால் அதை ஆதாரப்படுத்த முடியும். இது பட்டிமன்றமில்லை என்பதால் கால எல்லை குறிக்காமல் நிச்சயமாக இதற்குப் பதிலளிக்க முடியும்.

Posted

பௌத்தர்கள், சமணர்கள் எத்தனை இந்துக் கோயில்களை இடித்தார்கள்?

எத்தனை இந்துக்களை கொலை செய்தார்கள்?

இதைப் பற்றிய குறிப்புக்கள் இருந்தால் தாருங்கள்.

அறிய ஆவலாக இருக்கிறேன்.

உலகில் உள்ள பெரும்பாலான மதங்கள் (யூத மதம், கிறிஸ்தவ மதம், இஸ்லாமிய மதம், இந்து மதம்) மற்றைய மதங்களோடு போரிட்டு அவைகளை அழித்தே வளர்ந்தன. இது வரலாறு. இதை யாரும் இல்லை என்று சொல்ல முடியாது.

இன்றைக்கு நாகரீகம் வளந்துள்ளது. புதிய சிந்தனைகள் உருவாகி உள்ளன.

இன்றைய காலகட்டத்தில் எட்டாயிரம் பேர்களை கழுவில் ஏற்றிக் கொன்றோம் என்று சொல்பவர்களை வணங்கத்தக்கவர்களாக கொள்ள முடியாது. மற்றைய மதங்களை இழிக்கின்ற, பழிக்கின்ற தேவாரங்களை கடவுளுக்கான பாடல்கள் என்று சொல்ல முடியாது. படுகொலை செய்த நாட்களை விழாக்களாக கொண்டாட முடியாது.

அப்படி செய்வது காட்டுமிராண்டிகளின் செயல்.

வெட்கம்! வெட்கம்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

திருநாவுக்கரசிரனுதும், சம்பந்தரினதும் பாடல்களிலேயே சமண, பௌத்த மக்கள் மீது நடத்தப்பட்ட கொலைகளைப் பற்றி தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்கள். அதை நியாயப்படுத்தி ஊக்குவித்து இருக்கிறார்கள்.

பௌத்த பெண்களை பாலியல் வல்லுறுவு செய்ய வேண்டும் என்று சம்பந்தர் பாடிய பாடலும் இருக்கிறது.

அவர்களே ஒப்புதல் வாக்குமூலம் தந்து விட்டார்கள்.

தாங்கள் கொடுத்த மடலில் எவ்விதமான சம்பந்தர், நாவுக்கரசர்( இருவரும் தான் சமணர்களோடு மோதினார்கள்) குறித்தான பாடலில் இருந்து எவ்விதமான ஆதாரங்களோ, வரிகளோ மேற்கோள் காட்ட முடியவில்லை என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.

யாரோ, எழுதியதற்கு நாயன்மார்கள் ஆதாரம் கொடுக்கின்றார்கள் என்று சொல்வது சுத்த ஏமாற்றுத்தனம். நீங்கள் சொன்னது போல நாயன்மார்களின் பாடல்வரிகளை எதிர்பார்க்கின்றேன்.

Posted

நான் கொடுத்த இணைப்பில் அந்தப் பாடல் இல்லை.

ஒரு தேவாரம் இருக்கிறது. அதனுடைய முழுவடிவமும் இப்பொழுது நினைவில் இல்லை. ஆனால் தேடி எடுத்து தருகிறேன்.

அந்தத் தேவாரத்தில் இப்படி வரும்

"சாக்கிய பெண்டிரை கற்பழிக்க (இச் சொல்லை ஒத்த) திருவுளமே"

முழுத் தேவாரத்தையும் விரைவில் தருகிறேன். கவலை வேண்டாம்.

இந்தத் தேவாரம் குறித்து சில காலங்களுக்கு முன்னர் பார்ப்பன துக்ளக் இதழில் ஒரு விவாதம் கூட போனது.

Posted

திருஞானசம்பந்தரை பார்ப்பனியமே கொலை செய்தது என்பது பற்றி யாழ் களத்தில் ஏற்கனவே கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளன.

நீச மொழியான தமிழை வளர்ப்பதற்கு சம்பந்தர் முயன்றதால், அவர் பார்ப்பனர்களாகல் கொல்லப்பட்டார் என்று கருத்து வலு உள்ளதாக தெரிகிறது.

இன்று வரை சிதம்பரத்தில் தமிழில் தேவாரம், திருவாசகம் பாட அனுமதி இல்லை என்பதை இங்கு கவனத்தில் எடுத்தல் வேண்டும்.

அப்பர், சம்பந்தர்களுக்காக வாதிடுபவர்கள், அவர்கள் விரும்பியது போன்று சைவ ஆலயங்களில் தமிழில் வழிபாடு செய்தால் மகிழ்ச்சி அடைவேன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீங்கள் எவ்வளவு காலமும் எடுத்துக் கொள்ளலாம். இன்று தெரிவதை விட நாளைக்கு உங்களுக்கு தெளிவான விளக்கமும் கிடைக்கலாம். எனவே வாதிடுவது என்பதல்ல, நல்ல விளக்கமே தேவை!

நீங்கள் இங்கே பார்ப்பாணர் என்று சொல்வது பிராமணர்களைக் கருதித் தான் என நினைக்கின்றேன். பார்ப்பாணர் என்று ஒரு சமுதாயத்தைக் கீழ்த்தரப்படுத்த பெரியார் கேவலமாகப் பாவித்த சொல்லைத் திருத்த நீங்கள் முனையவில்லை என்பது வருத்தத்தை அளிக்கின்றது.

திருஞான சம்பந்தரும் பிராமணரே, அவர் காலத்தில் வாழ்ந்த அப்பர் கூட தமிழ்மொழியை சிறப்பிக்க தொண்டு புரிந்தவர். எனவே சம்பந்தரை மட்டும் தமிழ்மொழி வளர்த்தார் என்பதால் கொல்லப்பட்டார் என்று சொல்வது பொருத்தமாக இல்லை.

ஆனால் பாண்டிய மன்னனின் சூலை நேயைத் தீர்க்க சம்பந்தர் சென்றதும், அங்கே அவரைக் கொல்வதற்காக அவர் தங்கியிருந்த மடாலயத்தை சமணர்கள் தீ மூட்டியதும், அதில் இருந்து அவர் தப்பித் கொண்டது போலவே, அவரது திருமண நேரத்தில் தீ மூட்டிக் கொல்லப்பட்டதற்கு நிகராக இருக்கின்றது.

பாண்டிய மன்னர் சமணத்தில் இருந்து பிற்பாடு சைவத்துக்கு மதம் மாறியது நிச்சயமாக சமணர்களுக்கு வெறுப்பைக் கொடுத்திருக்கலாம்.

ஆனால் தமிழ் வளர்த்தால் தான் கொல்லப்பட்டதாக கதை விடுவது எல்லாம், வெறுமனே பிராமணர்களை எதிர்ப்பதற்கான தொடர்ச்சியான வடிவம் என்றே கொள்ளலாம். அந்த நேரம் தமிழ்மொழி தொடர்பான எழுச்சியான காலமாகும். சம்பந்தர் மறைந்த பின்னரும் கூட தமிழ்மொழி செழுமை பெற்றிருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சமணர்கள் தான் அப்பரைச் சுண்ணாம்பு அறையில் அடைத்ததும், யானையால் மிதிக்க முனைந்ததும், கடலில் கல்லோடு தூக்கிக் கடலில் போட்டதும் அவர்களும் படுகொலைகளைச் செய்யத் துணிந்தவர் என்பதற்கு எடுத்துக்காட்டு. அவ்வாறே மேலே சொன்ன சம்பந்தரை நெருப்பு மூட்டி பாண்டிய நாட்டில் கொல்ல முயற்சித்தது தொடக்கம் பல சம்பவங்கள் நடந்தன என்பதையும் அடையாளம் செய்கின்றது.

அப்பர் பல இடங்களில் இந்து ஆலயங்கள், சமண ஆலயங்களாகக்கப்பட்டதையும், சைவச் சிலைகள் மறைக்கப்பட்டதை எடுத்துக் காட்டியதையும் நிச்சயமாக அவரது வரலாற்றில் இருந்து காட்ட முடியும். எனவே சமணர்கள் அப்பாவிகள் என்ற பொய்மை வேண்டாமே!

பல இந்து ஆலயங்களைத் தகர்த்து, அல்லது அதை தங்களின் மடலாயங்களாக அவர்கள் மாற்றிக் கொண்டார்கள்.

என் கருத்துப்படி, சமண சமயம், இந்து ஆலயங்களில் இருந்த சித்தர்களைக் கழு ஏற்றிக் கொன்றபடியால் தான் அந்த இடவெளிக்குள் பிராமணர்கள் இந்து ஆலயங்களில் பூசாரி ஆனார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

போர்த்திக்கேயர்,ஒல்லாந்தர், ஆங்கிலேயர்யர்களினால் சைவக்கோவில்கள் களவாடப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டன. ஈழத்திலும்,தமிழகத்திலும் ஆங்கிலேயர்களினால் களவாடப்பட்ட விக்கிரகங்கள் சிலவற்றினை இப்பொழுதும் லண்டனில் உள்ள பிரித்தானையா அருங்காட்சியத்தில் காணலாம்.

ஈழத்து அரசனான சங்கிலியனுக்கு எதிராக போரிட்ட போர்த்துக்கேயரின் பண உதவியினால் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியவர்கள் பலர் சங்கிலி மன்னாரால் கொலை செய்யப்பட்டார்கள் -ஆதாரம் திரு குணசிங்கம் அவர்களினால் எழுதப்பட்ட 'இலங்கைத் தமிழர் வரலாற்று மூலங்கள்: அனைத்துலகத்தேடல் - ஆய்வு நூல்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மன்னார் கோட்டை, திருக்கேதிஸ்வரம் ஆலயத்தைத் தகர்த்துத் தான் கட்டப்பட்டது. அவ்வாறே நல்லூர் உற்பட பல ஆலயங்களைப் போத்துக்கேயர் தகர்த்திருந்தனர். அவ் நேரத்தில் சிவ வழிபாடு என்பது மறைவில் வைத்து வழிபட்ட நிலையையில் தான் இருந்தது. பல ஆலயங்களின் விக்கிரகங்கள் கிணற்றினுள் ஒளித்து வைக்கப்பட்டன.

Posted

சித்தர்களை கழுவில் ஏற்றிக் கொன்றதாக சொல்கிறீர்களே தவிர, அது பற்றி ஒரு குறிப்பும் தருகிறீர்கள் இல்லை.

அத்துடன் இங்கு ஒல்லாந்தர்கள், ஆங்கேலயர்கள் செய்த மத வெறியாட்டங்களை சுட்டிக்காட்டுவதன் மூலம் சைவர்கள் செய்ததையோ, செய்ததை இன்று வரை நியாயப்படுத்துவதையோ ஏற்றுக் கொள்ள முடியாது.

தூயவன்! உங்களுக்கு பார்ப்பனர் என்றால் என்னவென்று கூட தெரியவில்லை.

அடிமை விசுவாசத்தோடு வட மொழியில் "பிராமணர்கள்" என்று சொல்கிறீர்கள். பிராமணன் என்ற சொல்லின் உள் அர்த்தமே பிறப்பால் உயர்ந்தவன் என்பதுதான்.

நாம் தமிழில் பார்ப்பனர் என்று சொல்கிறோம்.

"மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்"

-திருவள்ளுவர்

"மாமுது பார்ப்பான் மறை வழி காட்டிட..."

-சிலப்பதிகாரம்

பார்ப்பான் என்று சொல்வதில் எந்தத் தவறும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சபேசன் ஏற்கனவே பார்ப்பாணி என்பதற்கு நீங்கள் யாழ்பாண விடயம் குறித்து எவ்வாறு பொய்யான தகவலை வழங்கினீர்கள் என்று அடையாளப்படுத்தியிருந்தேன். எனவே ஒவ்வொரு முறையும் நீங்கள் பார்ப்பாணி என்று குறித்த சமூகத்தை மட்டும் தான் கேவலப்படுத்துகின்றீர்கள் என வியாக்கியமானப்படுத்த தேவையில்லை என நினைக்கின்றேன்.

பிராமணர்கள் என்று சொன்னால் அடிமை என்று புது விளக்கம் கொடுக்கின்றீர்கள். அப்படியே ஜெர்மனியன், அவுஸ்ரேலியன், ஆபிரிக்கன் என்று சொல்வது எல்லாம் அடிமைத்தனமாகவா நினைக்கின்றீர்கள்.

ஏன் என்றால் உங்களின் அடிமைத்தனத் தகர்ப்பு என்று இந்து மத்தில் இந்து, தமிழர்களைப் பிரிப்பதும், வேறு மதங்களுக்கு வழி ஏற்படுத்திக் கொடுப்பதும் மட்டும் தானே!

ஆனால் உங்களின் செயற்பாடு என்பது போலித்தனமானது. பிராமணர்கள் தமிழர் இல்லை என்கின்றீர்கள். ஆனால் அவர்களுக்கு தமிழ்பெயர் இருக்கின்றது என்கின்றீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தாங்களாகவே கட்டுரை எழுதி தாங்களாகவே நம்பும் பழக்கம் சில பேருக்கு உண்டு. ஆனால் சபேசன் இணைத்த இது உங்களின் சொந்த ஆக்கமில்லை என நினைக்கின்றேன். இது ஒரு புளோக்சில் விவாதமாகப் போனது. எனவே பிரிதொருவரின் ஆக்கத்தை இணைக்கும்போது, அவரின் ஆக்கத்துக்கு மதிப்புக் கொடுக்கும் வண்ணம் கட்டாயம், ஒரு அடையாளமாவது செய்ய வேண்டியது தான் களவிதி.

-----------------------------------------

திருஞானசம்பந்தர் வாழ்ந்தது 16 வரை என நினைக்கின்றேன். சிலவேளை அதை விடக்குறைவாகவும் இருக்கலாம். அவ்வாறே அப்பர், தனது முதுமைக்காலத்தில் தான் சைவமதத்துக்கு வந்து, சேவை ஆற்றினார்.

அப்பர் தனியத் தான் செல்வார். சம்பந்தர் பல்லாக்கு சுமப்பவர்களோடு செல்வார். இவர்கள் 8000 பேரைக் கழு மரத்தில் ஏற்றிக் கொன்றார்கள் என்று சொல்வது பொருத்தமானதாகவோ, அல்லது நம்பக் கூடியதாகவோ இல்லை.

Posted

நான் யாழ்ப்பாண விடயத்தில் என்ன பொய்யான தகவலைக் கொடுத்தேன்? எனக்கு இது உண்மையிலேயே விளங்கவில்லை.

மானமுள்ள தமிழர்கள் பிராமணர்களை பார்ப்பனர் என்றே அழைப்பர். பார்ப்பனர் என்பது தங்களை தாங்களே பிராமணர்கள் என்று அழைத்தவர்களுக்கு தமிழர்கள் இட்ட பெயர்.

பிராமணர் என்பதன் உள்ளர்த்தம் பிறப்பால் உயர்ந்தவர்கள் என்பதே. அப்படி அவர்களை பிறப்பினால் உயர்ந்தவர்கள் என்று ஏற்றுக் கொள்பவர்கள் அடிமைப் புத்தி உள்ளவாகளாகத்தான் இருக்க முடியும்.

ஒரு சாதியை தேசிய இனங்களோடு ஒப்பிடுவதில் இருந்தே தெரியவில்லையா, உங்களுக்குள் உங்களை அறியாமலேயே இந்த அடிமைப் புத்தி இருக்கிறது என்று?

இந்து மதத்தில் இருந்து தமிழர்களை பிரிப்பதுதான் என்னுடைய விருப்பம். இதை நான் எங்கும் மறுத்ததில்லை. அழுக்டையும் ஆபாசமும் மிகுந்த, தாய் மொழியை மதிக்காத, மனிதர்களை பிறப்பை வைத்து பிரிக்கின்ற ஒரு மதம் தமிழர்களுக்கு தேவை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry242511

மானமுள்ள தமிழர், அறிவுபூர்வத்தமிழர் என்று சொல்லிக் கொண்டு உங்களின் வெற்று வீச்சை நியாயப்படுத்தப் பார்க்கின்றீர்கள். அப்படித் தானே!

எந்த ஒரு சமூகத்தையும் ஜாதி அடிப்படையில் சொல்லப்படுவதை நான் உண்மையில் வெறுக்கின்றேன். ஆனால் திராவிடம் என்று சொல்லிக் கொள்பவர்களின் ஜாதிவெறியை அடையாளப்படுத்த வேண்டும் என்பதற்கே, பிராமணிகள் என்று ஒரு சமூகத்தை அடையாளப்படுத்துவதைச் சுட்டிக்காட்ட வேண்டிய தேவையிருக்கின்றது.

பிராமணர்கள் எவ்வாறு ஜாதி வெறி என்கின்றார்களோ, அதே அளவான வெறி திராவிடம் கதைப்பதவர்களிமும் இருப்பது தான் நான் இவ்விடயத்தில் சொல்ல விரும்பியது.

சபேசன் என்ற பெயரின் தன்மை தெரிந்தும் உங்களால் எவ்வாறு தவிர்க்க முடியாமல் போனதோ, அவ்வாறே இதுவும்.

இந்து மதத்தை உங்களால் பிரிக்க முடியாது. ஏன் என்றால் உங்களுக்கு ஒரு கொள்கை செயற்பாடு, அல்லது ஏதும் ஒரு பிடிப்பாவது இருக்க வேண்டும். ஒன்றுமே இல்லாத உங்கரளைப் போன்றவர்களை நம்பி என்னுமொரு குகையில் தஞ்சமடைந்திருப்பவர்கள் , நம்பி நடுத்தெருவில் நிற்க எப்போதும் தயாராகமாட்டார்கள். பெரியாரும் அவ்வாறே முயற்சித்தும் தோற்றுப் போன ஒருவர்.

மற்றய மதங்களும், எவ்வாறு குறித்த இனத்தை மட்டும் தான் மதிக்கின்றன என்று சொன்னால் உங்களால் அந்த மதத்pல் இருக்கின்ற தமிழர்களையும் பிரிக்க தயாரா? :mellow: ;)

ஆபாசம் என்றால் என்ன என்றும் அர்ததம் தெரியாதவர்களாகவே இருக்கின்றீர்கள் என நினைக்கின்றேன். விரைவில் உங்களுக்காக...!

Posted

தமிழ் பொற்காவியங்கள் எல்லாம் சமணர்களால் எரிக்கபட்து என்று வரலாறு சொல்கிறது.

தமிழன் வரலாறை உரு தெரியாமல் அழித்த இந்த மத வெறியர்களை சைவம் எதிர் கொண்டது தவறா?

திரு சபேசன் வரலாறு தெரியாமல் சொல்கிறார் என்று எடுத்து கொள்வோம்

Posted

சமணர்களால் அழிக்கப்பட்ட தமிழ் நூல்கள் சிலவற்றை குறிப்பிடுங்கள்!

தூயவன்! சில வாரங்களுக்கு முன்பு இந்தியாவில் 30 இலட்சம் பேர் பௌத்தத்திற்கு மாறியது பற்றி நீஙகள் படிக்கவில்லையா?

இது இன்று ஈழத்தில் இருக்கின்ற தமிழர்களின் எண்ணிக்கையை விட அதிகம்!

Posted

சமணர்களால் அழிக்கப்பட்ட தமிழ் நூல்கள் சிலவற்றை குறிப்பிடுங்கள்!

தமிழ் மொழி 5000 வருடங்கள் பழைமையானது என்று எதை வைத்து சொன்னார்கள். இந்த சமணர்காளால் அழிக்க பட்ட நாகரீகம் சேர்த்து தான்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

30 லட்சம்பேர், வெ வ்வேறு இடங்களில் அதுவும், தாழ்த்தப்பட்ட வசதியற்ற மக்கள் ஒரே நேரத்தில் மாறுகின்றார்கள் என்றால் அதன் பின்னால், யாருடையதோ கையிருக்கின்றது புலனாகும்.

வௌ;வேறு இடங்களில் வழ்ந்த இவர்களுக்கு ஒரு தொடர்பாடல் செய்தது என்று கேட்டால் பதில் கிடைக்கும். சொல்லப் போனால் மதமாற்றத் தடைச்சட்டத்துக்கு பாப்பாரசர் அடிக்கடி இந்தியாவிற்கெதிராக கண்டணம் தெரிவிப்பதும், கூட இதற்கு பின்னணியில் உள்ளவர்கள் பற்றித் தெரியும்.

.....

மதமாற்றம் செய்வது என்பதை இந்துமதம் பல தடவை கண்டிருக்கின்றது. அந்த ஏமாற்றம் தெரிந்தபின்னர் தாங்களாகவே இந்து மதத்தைத் தேடி வருவார்கள். ஆனால் நம்பிக்கையுள்ளவர்கள் பின்பற்றல்லாம். யாரையம் தடுக்கவில்லை.

ஆரம்பத்தில் பௌத்தம் முயற்சித்துப் பார்த்தது. சமணம், பின்பு இஸ்லாம் வந்து முயற்சித்துப் பார்த்தது. கடைசியாக மேலைத்தேயர்... ஒன்றுமே அசைக்க முடியாது என்பது தான் முடிவு. கவர்ச்சிக்கு மௌவு கொஞ்சக்காலம் தான் நண்பரே!

Posted

முன்பு செய்தது போன்று இப்பொழுது உள்ள ஆர்எஸ்எஸ், விஷ்வஹிந்துபரிசத் போன்றவைகள் மதம் மாறியவர்களை கழுவில் ஏற்றினால், இந்து மதம் செழிக்கத்தான் செய்யும்.

யார் இல்லை என்றது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஹிஹிஹி! :mellow::mellow:

கடைசியில் பொறுக்க முடியாமல் என்ன சிந்தனை உங்களுடையது என்று காட்டி விட்டீர்கள். இந்த லட்சணத்தில் பகுத்தறிவு வேறு கதைக்கின்றீர்கள். பலே பலே!

இப்ப நான் வெக்கம் வெக்கம் என்று போடட்டுமா? :P

Posted

நான் சொன்னதில் இருந்து உங்களுக்கு புரிந்தவைகளை சற்று விளக்க முடியுமா?

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தியாவின் உதவி எப்போதும் தேவை – வடக்கு ஆளுநர் வேதநாயகன் December 12, 2024 11:44 am இந்தியாவின் ஒத்துழைப்பும், உதவியும் எப்போதும் எங்களுக்குத் தேவை என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத் தினம் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கலாசார நிலையத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. இதன்போது, மகாகவி சுப்பிரமணியம் பாரதியாரின் 142 ஆவது பிறந்த நாள் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு ஆளுநர் உட்பட அதிதிகள் மலர்மாலை அணிவித்தனர். இந்த நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், எங்கள் சேவைகள் மெருகூட்டப்படுவதற்குப் பயிற்சிகள் முக்கியம் என்று குறிப்பிட்டார். தாம் பதவிக்கு வந்த காலத்தில் இவ்வாறான பயிற்சிகளுக்கான வாய்ப்புக்கள் கிடைக்கப்பெறவில்லை என்றும், தற்போது வழங்கப்படும் இந்தப் பயிற்சிகளை உத்தியோகத்தர்கள் உரியமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஆளுநர் தெரிவித்தார். மனித வளத்தை மேம்படுத்தாவிட்டால் மக்களுக்கான சேவைகளைச்  சிறப்பாக வழங்க முடியாது என்றும் ஆளுநர் குறிப்பிட்டார். ஐரெக் திட்டத்தின் கீழ் இந்தியாவிலுள்ள தரமான கல்வி நிலையங்களிலேயே பயிற்சிகள் வழங்கப்படுகின்றன என்றும், அந்தப் பயிற்சிகளைப் பெற்றுக்கொள்வதன் ஊடாக சிறந்த சேவைகளை எமது மக்களுக்கு வழங்கக்கூடியதாகவும் இருக்கும் என்றும் ஆளுநர் தனது உரையில் தெரிவித்தார். “இந்தியா எமக்குப் பல வழிகளிலும் உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்கி வருகின்றது. அது தொடர வேண்டும். குறிப்பாக வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் விவசாயம் முக்கியமானது. விவசாயத்துறை சார்ந்த பயிற்சிகளை வழங்குவதற்கு முன்வரவேண்டும்.” – என்றும் ஆளுநர் தனது உரையில் கோரிக்கை முன்வைத்தார். வடக்கு மாகாண ஆளுநரின் கோரிக்கைக்கு இந்தியத் துணைத்தூதரகத்தின் சார்பில் சாதகமான பதில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் இந்தியத் துணைத்தூதுவர் சாய்முரளி, வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன், யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சிறி.சற்குணராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.   https://oruvan.com/indias-help-is-always-needed-northern-governor-vedanayagan/
    • அநுரவின் இந்தியப் பயணம் – பூகோள அரசியலில் ஏற்படுத்தப்போகும் தாக்கம் என்ன? December 12, 2024 11:26 am இந்திய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது முதலாவது அதிகாரப்பூர்வ வெளிநாட்டு பயணத்தை எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை புதுடில்லிக்கு மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தப் பயணத்தின் போது, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் மற்றும் ஏனைய உயர் அதிகாரிகளை சந்திக்க உள்ளார். அத்துடன், பல்வேறு துறையினரையும் ஜனாதிபதி சந்திக்க திட்டமிட்டுள்ளதுடன், இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் முதலீடுகளை ஈர்க்கும் சில சந்திப்புகளையும் அவர் நடத்த உள்ளார். இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான தீர்மானங்கள் இல்லை ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உட்பட உயர்மட்ட அரச குழுவொன்று புதுடில்லி செல்ல உள்ளது. இந்தப் பயணத்தில் இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் சில ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட உள்ளன. அநுரகுமார திசாநாயக்க இந்திய விஸ்தரிப்புவாதத்தை பேசிய ஜே.வி.பியின் தலைவராக உள்ள போதிலும் இலங்கையின் அடுத்த மக்கள் தலைவராக உருவெடுக்க போகிறார் என்பதை புலனாய்வு தகவல்கள் ஊடாக உணர்ந்த புதுடில்லி கடந்த ஆண்டு அவரை புதுடில்லிக்கு அழைத்து சிவப்பு கம்பள வரவேற்பை அளித்தது. இந்தியா தொடர்பான ஜேவிபியின் வரலாற்று நிலைப்பாடு அநுரவின் இந்தப் பயணத்தின் பின்னர் சில மாற்றங்களுக்கு உள்ளானது என்பதுடன், இந்தியாவையை பகைத்துக்கொண்டு இலங்கையை அபிவிருத்திப் பாதைக்கு கொண்டுசெல்வது கடினம் என்பதையும் ஜனாதிபதி அநுர தலைமையிலான அரசியல் கூட்டணியான தேசிய மக்கள் சக்தி உணர்ந்ததுடன், பிராந்தியத்தில் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எந்தவொரு தீர்மானத்தையும் எதிர்காலத்தில் அமையும் தமது அரசாங்கம் எடுக்காதெனவும் தெரிவித்திருந்தார். பேசுபொருளாகுமா கச்சத்தீவு பாரம்பரியமாக தேசியவாதத்தை பேசிய கட்சியான ஜே.வி.பி , இலங்கைத் தீவில் இந்திய செல்வாக்கை நீண்டகாலமாக எதிர்த்திருந்தது. 1987ஆம் ஆண்டு கிளர்ச்சியின் போது ஜே.வி.பி.யின் கடுமையான எதிர்ப்பு சர்வதேச ரீதியில் மிகவும் உச்சரிக்கப்பட்டது. வடக்கு கிழக்கில் தமிழர் சுயாட்சிக்காக உருவாகிய சில வாய்ப்புகளையும் ஜே.வி.பியின் கடுமையான எதிர்ப்பே இல்லாதொழித்தது. பல தசாப்தங்களாக, ஜே.வி.பி இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகம் மற்றும் முதலீட்டை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் (CEPA) போன்ற உடன்படிக்கைகளுக்கு எதிராக செயல்பட்டிருந்தது. 2008இல் “கச்சத்தீவை இந்தியாவிடம் ஒப்படைக்க ரகசிய திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது.” என அநுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்க வேண்டும் என்பதையும் 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்பதையும் இந்தியா தொடர்ந்து இலங்கையிடம் வலியுறுத்தி வருகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கச்சத்தீவு விவகாரம் இந்தியாவில் மிகவும் பேசுபொருளானதுடன், கச்சத்தீவை காங்கிரஸ்தான் இலங்கைக்கு வழங்கியது என பிரதமர் மோடி கூறியிருந்தார். மோடி கூறப்போகும் செய்தி  இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அரசியல் உறவுகள் கடந்த காலத்தில் வலுவாக இருந்த போதிலும் இந்திய விஸ்தரிப்பு வாதத்தை பேசிய கட்சியாக உள்ள ஜே.வி.பியின் தலைவர் ஒருவர் முதல் முறையாக இலங்கையின் அரச தலைவராக இந்திய அரச தலைவரை சந்திக்கிறார். இதனால் கடந்தகால வரலாறுகளும் அவை ஏற்படுத்தியுள்ள தாக்கங்களும் இந்த சந்திப்பு குறித்து சர்வதேசம் உற்றுநோக்கியுள்ளது. கடந்த பல தசாப்தங்களாக இலங்கையின் அரசாங்கங்கள் செய்துகொண்டுள்ள இருதரப்பு ஒப்பந்தங்களின் அடுத்தகட்ட நகர்வு எவ்வாறு இருக்கிற போகிறது, இலங்கையில் அதிகரித்துவரும் சீனாவின் செல்வாக்கு தொடர்பில் மோடி அநுரவிடம் என்ன கூற போகிறார், இருநாட்டு பொருளாதார உறவுகள் எவ்வாறு வலுபெற போகிறது மற்றும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பில் அநுரவிடம் மோடி கூற போகும் செய்தி என்ன என்பது தொடர்பில் பல்வேறு கருத்துகள் சர்வதேச மட்டத்தில் பேசுபொருளாக உள்ளது. புதிய அரசியலமைப்பொன்று உருவாக்கப்பட்டாலும் அதில் 13ஆவது திருத்தச்சட்டம் உள்வாங்கப்பட வேண்டும் என்பது இந்தியாவின் நிலைப்பாடாக இருக்க என்பதே இந்திய அரசியல் ஆய்வாளர்களது கருத்தாகும். இதனை மோடி அநுரவிடம் உறுதியாக கூற உள்ளதாக இராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன. இருதரப்பு ஒப்பந்தங்கள் குறித்து ஆழமான பேச்சு இந்தியா தொடர்பில் அநுரகுமார திசாநாயக்க தனது தொனியை குறிப்பிடத்தக்க வகையில் மாற்றியுள்ளார் என்பதே அவரது பல கருத்துகள் எடுத்துரைக்கின்றன.  அதன் காரணமாகவே தனது முதல் வெளிநாட்டு பயணத்துக்காக அநுர இந்தியாவை தேர்ந்தெடுத்துள்ளார். ஆட்சி மாற்றத்தின் பின்னர் முதல் இராஜதந்திரியாக இலங்கை வந்திருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இலங்கையின் பூகோள அரசியல் நகர்வுகள் இந்தியாவின் நலனுக்கு எதிராக அமையக் கூடாதென்ற செய்தியை தெரிவிக்கும் வகையில் இடம்பெற்றதாகும். வெளியுலகுக்கு அது சம்பிரதாயப்பூர்வமான அழைப்பை விடும் சந்திப்பாக காட்டப்பட்டாலும் அது இந்தியாவின் உள் எண்ண ஓட்டத்தின் நிகழ்ச்சி நிரலாகும். பூகோள அரசியலில் இயக்கவியலை அநுர மறுத்துச் செயல்பட்டால் அது மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு ஏற்பட்ட நெருக்கடியான சூழலை மீண்டும் தமது அரசாங்கத்துக்கும் ஏற்படுத்தும் என்பதை அநுர அறிந்தவராக இருப்பார என்பதால் இந்தியாவின் கருத்துகளை அவர் புறக்கணித்து செயல்பட மாட்டார் என்றும் புதுடில்லி வழங்கப்போகும் சிவப்பு கம்பள வரவேற்புக்கு மரியாதையளிக்கும் நபராகவே அநுர எதிர்காலத்தில் செயல்படுவார் என்றும் சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மன்னாரில் முன்மொழியப்பட்ட காற்றாலை மின் நிலையம், இருநாடுகளையும் இணைக்கும் கடல்வழி பாலம், கேபிள் முறையில் மின்சாரப் பரிமாற்ற திட்டம் மற்றும் கடந்த அரசாங்கம் செய்துகொண்டுள்ள இருதரப்பு ஒப்பந்தங்கள் அநுரவின் இந்தப் பயணத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கும் என்பதுடன், இவை தொடர்பிலான ஆழமான பேச்சுகள் இடம்பெறும் என அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுப்ரமணியம் நிஷாந்தன்   https://oruvan.com/sri-lankan-president-makes-india-the-destination-for-his-first-foreign-visit/
    • பைடன் மனைவியுடனான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து டிரம்ப் குசும்பு The photo’s caption reads, “A fragrance your enemies can’t resist!”   அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள டொனால்டு டிரம்ப், தன் வாசனை திரவிய பொருட்களின் விளம்பரத்துக்காக தற்போதைய அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில்லுடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசுக் கட்சியின் டொனால்டு டிரம்ப், அடுத்த மாதம் 20ல் அதிபராக பொறுப்பேற்க உள்ளார். தொழிலதிபரான டிரம்ப், தன் நிறுவனம் தயாரிக்கும் பொருட்களை தன் சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது விளம்பரப்படுத்துவார். உயர் ரக கை கடிகாரங்கள், வர்த்தக அட்டைகள், தான் கையெழுத்திட்ட கிதார் இசைக்கருவி உள்ளிட்டவை இவற்றில் பிரபலமானவை. தேர்தல் வெற்றிக்கு பின், ‘ஷூ’க்கள், வாசனை திரவியங்கள் உள்ளிட்டவற்றை அவர் தன் சமூக வலைதள பக்கம் வாயிலாக விளம்பரப்படுத்தி வருகிறார். இந்நிலையில், ஐரோப்பிய நாடான, பிரான்ஸ் நாட்டின் பாரிசில் உள்ள புதுப்பிக்கப்பட்ட நார்டே – டேம் – கதீட்ரல் தேவாலயம் கடந்த 7ம் தேதி திறக்கப்பட்டது. இந்த விழாவில், டொனால்டு டிரம்ப், அமெரிக்காவின் தற்போதைய அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில், மகள் ஆஷ்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது அவர்கள் மூவரும் சேர்ந்திருக்கும் புகைப்படத்தை தன் வாசனை திரவியத்துக்கான விளம்பர படமாக, சமூக வலைதளத்தில் டிரம்ப் பகிர்ந்துள்ளார். ‘உங்கள் எதிரிகளாலும் நிராகரிக்க முடியாத நறுமணம்’ என்ற வரியுடன் அந்த புகைப்படம் வெளியாகி உள்ளது. டிரம்பின் இந்த விளம்பரம் சமூக வலைதளங்களில் வெளியானநிலையில், பெரும்பாலானோர் அதை கடுமையாக விமர்சித்துள்ளனர். தேர்தல் பிரசாரத்தின் போது, ஜோ பைடனை தரக்குறைவாக விமர்சித்திருந்த நிலையில், தற்போது அதிபரின் மனைவியை தன் சுய விளம்பரத்துக்காக டிரம்ப் பயன்படுத்தியுள்ளது காட்டுமிராண்டித்தனமானது என பலர் கருத்து தெரிவித்துள்ளனர். அதேசமயம், எதிரிகளும் தன் வாசனை திரவியத்தை விரும்புவர் என்ற வாசகத்தை பயன்படுத்தியுள்ளதை குறிப்பிட்டுள்ள இணையதளவாசிகள், டிரம்பின் நகைச்சுவை உணர்வை பாராட்டி வருகின்றனர்.   https://akkinikkunchu.com/?p=302786
    • சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர எதிர்பார்ப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். சபாநாயகரின் கலாநிதி பட்டம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியோ அல்லது சபாநாயகரோ விளக்கம் அளிக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவ்வாறு செய்யாவிட்டால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூடி கலந்துரையாடி சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவோம் என பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார். அவர் உண்மையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய கலாநிதி பட்டம் பெற்றிருந்தால், இந்தக் கதைக்கு எந்த அர்த்தமும் இல்லை. ஆனால் அதற்கு பதில் தராமல் காலம் தாழ்த்தி வருவதும், அரசாங்கம் தரப்பில் பேசப்பட்ட ஊடகவியலாளர் செய்தியில் பதில் அளிக்காமல் இருப்பதும், கலாநிதி பட்டம் தொடர்பான விவகாரத்தை பாராளுமன்ற இணையதளத்தில் இருந்து நீக்கியதும் பெரும் சிக்கலைக் காண முடிகிறது. அவரது கலாநிதி பட்டம் அடுத்த இரண்டு வாரங்களில் நாட்டுக்கு சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழுவுடன் நாங்கள் கலந்துரையாடப் போகிறோம். அப்படி நடந்தால், தேசிய மக்கள் சக்தி எம்.பி.க்களும் தங்கள் மனசாட்சிப்படி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் போது வாக்களிப்பார்கள் என்றார்.   https://thinakkural.lk/article/313594
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.