Jump to content

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக உதவ முன்வந்துள்ள மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக உதவ முன்வந்துள்ள மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்

[ வியாழக்கிழமை, 14 யூலை 2011, 08:14 GMT ] [ சிறப்புச் செய்தியாளர் ]

சிறிலங்காவில் 30 ஆண்டுகளாக இடம்பெற்ற யுத்தமானது முடிவிற்கு வந்ததையடுத்து தற்போது சிறிலங்கா தமிழர்களுக்கு உதவி செய்யவேண்டும் என மலேசியாவின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.மனோகரன் தெரிவித்துள்ளார்.

இந்திய மத்திய அரசு மற்றும் தமிழ்நாட்டு அரசாங்கம் ஆகியவற்றுடன் பேச்சுக்களில் ஈடுபட்டு தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் உதவப் போவதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் தமிழர் அதிகம் வாழும் பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தமானது 2009ல் முடிவிற்கு வந்ததிலிருந்து 300,000 வரையான பொதுமக்கள் இராணுவத்தின் அதிகாரத்தின் கீழ் இடம்பெயர்ந்தோர் முகாங்களில் வசிந்து வந்துள்னர்.

"தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவை ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளோம்" என Teluk Intan நாடாளுமன்ற உறுப்பினரான மனோகரன் தெரிவித்துள்ளார்.

மனோகரன் கடந்த மாதம் நாடாளுமன்ற உறுப்பினர் Sungai Petani ஜொகாரி அப்துல் மற்றும் செனற்றர் எஸ்.இராமகிருஸ்ணன் ஆகியோருடன் சிறிலங்காவிற்கு வந்திருந்தார். ஈழத்தமிழர் தொடர்பான நிலைப்பாட்டை உள்ளடக்கிய இறுதி அறிக்கை ஒன்று மனோகரன் குழுவினரால் நேற்று வெளியிடப்பட்டது.

"சிறிலங்காவில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் பொருத்தமான அர்த்தப்பாடுடைய மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதில் இந்தியாவின் உதவியை நாம் நாடி நிற்கின்றோம்" என மனோகரன் தெரிவித்துள்ளார். தென்னாசியாவில் செல்வாக்கு மிக்க ஒரு நாடாக இந்தியா உள்ளது.

சிறிலங்காவில் பிரேரிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவானது எவ்வளவு தூரம் வினைத்திறன் மிக்கதாக அமையும் என்பதில் தாம் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என மனோகரன் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

"மியான்மாரில் ஒரு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவொன்று உள்ளது. ஆனால் அக்குழுவால் எந்தவொரு தீர்மானங்களையும் மேற்கொள்ள முடியாது" எனவும் மனோகரன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் வாழும் தமிழர் விவகாரம் தொடர்பாக மலேசிய வெளியுறவு அமைச்சர் அனிபா அமானை, மனோகரன் மற்றும் இராமகிருஸ்ணன் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடவுள்ளதுடன், தமிழர் விடயத்தில் சிறிலங்கா ஏன் சாதகமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என்பது தொடர்பாகவும் வெளியுறவு அமைச்சரிடம் விளக்கிக் கூறவுள்ளதாகவும் மனோகரன் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.com/view.php?20110714104280

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.