Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Past hour
  2. கண் மையேந்தும் விழியாட படம் :பூஜைக்கு வந்த மலர் இசை: விசுவநாதன் - ராமமூர்த்தி வரிகள்: வாலி பாடியோர்: PB சீனிவாஸ் & P சுசிலா
  3. Today
  4. திருகோணமலை ஐந்து மாணவர் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்த புத்த பிக்கு சுட்டுக் கொலை செய்யப்பட்டார்: அந்த பிக்குவை நான் நேரில் சந்தித்தவன் திருகோணமலை ஐந்து தமிழ் மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிராக பொதுவெளியில் வெளிப்படையாகக் கண்டனம் தெரிவித்த புத்த பிக்கு ஹந்துங்கமுவே நந்தரதன பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை நான் நேரில் சந்தித்திருக்கிறேன். மாணவர்கள் கொலை செய்யப்பட்டதற்கான நினைவேந்தல் நிகழ்வில் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படங்கள் உருவான தருணத்தில் நானும் அங்கு இருந்தேன். சமாதானம், நல்லிணக்கம், மொழி மத எல்லைகளைத் தாண்டிய மனித உறவை உருவாக்க வேண்டிய பணிகளில் அவர் ஈடுபட்டிருந்ததை நான் நேரடியாகக் கண்ட அனுபவம் உண்டு. அவர் சிங்களமும் தமிழும் பேசக்கூடியவர். மாணவர் படுகொலைக்கு எதிரான நினைவேந்தல் நிகழ்வுகளிலும், பொங்குத் தமிழ் பொதுக் கூட்டங்களிலும் கலந்து கொண்டு சமூக ஒற்றுமையை வலியுறுத்தினார். பின்னர் மிக விரைவாகவே, சிங்கள மொழி பேசும் துப்பாக்கி தாரிகளால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். உண்மையை வெளியில் கொண்டு வர துணிந்தவர்களை மௌனப்படுத்தும் அரசியல் வன்முறையின் தொடர்ச்சியாகவே இந்தக் கொலை எனக்குத் தென்பட்டது. அவருடைய மரணம், திருகோணமலை மாணவர் படுகொலையின் உண்மையை மறைக்க அதிகாரத்தால் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பதை வெளிப்படுத்தும் சம்பவமாக இருக்கின்றது . இன்றுவரை இந்தக் கொலைக்கான உண்மையான பொறுப்பாளர்கள் யாரும் நீதிமுன் நிறுத்தப்படாதது இன்னும் வேதனை அளிக்கிறது. Trincomalee Five Student Massacre Buddhist Monk Who Condemned the Killings Was Shot Dead: I Am Someone Who Met Him in Person The Buddhist monk Handungamuwe Nandarathana, who publicly and openly condemned the killing of the five Tamil students in Trincomalee, was later shot dead. I have met that monk in person. I was also present at the moment when these photographs were taken during the memorial event held for the murdered students. I personally witnessed his commitment to peace, reconciliation, and building human relationships that transcended linguistic and religious divisions. He was able to speak both Sinhala and Tamil. He participated in memorial events held in protest of the student killings and attended Pongu Thamil gatherings, consistently emphasising the need for social unity. Soon afterwards, he was shot dead by Sinhala-speaking gunmen. To me, this killing clearly appeared as part of the continuum of political violence aimed at silencing those who dared to speak the truth. His death stands as powerful evidence of how far the authorities were willing to go to conceal the truth behind the Trincomalee student massacre. Even today, the fact that no genuine perpetrators have been brought before justice continues to cause deep pain. https://www.facebook.com/share/p/1CEX5wNyoe/
  5. கெஜம் முழம் அடி அங்குலம் காதம் என்று நீட்டல் அளவைகளை மக்கள் பயன்படுத்திய காலத்தில் வந்த அரசு அறிவிப்பு இது! 1955ம் ஆண்டில் நீட்டல் அளவைகளுக்கு பொதுவான வழிமுறையாக மெட்ரிக் அளவைகளை பயன்படுத்த அரசு மக்களுக்கு பரிந்துரை செய்தது!
  6. இதில் எத்தனை சுவைத்து இருப்பீர்கள் .. விடுபட்டவை எவை ரெல் மீ..?
  7. களத்திற்கு கொசு மருந்து அடிக்கவேணும், கொசு பெருகி தொல்லை தாங்க முடியவில்லை. இது தென்பகுதியில் இருந்து வந்த கொசுபோல் தெரிகிறது, விளங்காத கிணுகிணுப்பு.
  8. சிறியர், பெருமாள் எல்லாரும் ஓடியாங்கோ, எங்கே நீங்கள் விஷயம் அறியவில்லையோ? தினேஷ் ஷாப்டாரின் கொலை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இதில், முன்னைய போலீஸ் மா அதிபர், முன்னாள் கிறிக்கெற் வர்ணனையாளர் பிரையன் தாமஸ், வெவ்வேறு பட்ட அறிக்கையளித்த சட்ட மருத்துவர், இன்னும்பலர் சிக்க உள்ளனர். போலீசார் வேண்டுமென்றே கொலைக்கான ஆதாரங்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த கொலையில் வேறு யாருக்கெல்லாம் சம்பந்தம் உள்ளது என துருவப்போகிறார்கள். இந்த வழக்கு மீண்டும் விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்டதற்கு யாரை குற்றம் சாட்டப்போகிறார்கள் அரசியல் வியாதிகள்? சட்டம் தன்கடமையை செய்ய குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை தடுக்கிறார்கள், புலம் பெயர்ந்தோரையும் அனுராவையும் எடுத்ததற்கெல்லாம் குற்றம் சாட்டி.
  9. அவர்களைத்தான் யாழில் அனுர காவடிகள் என்போம். அதென்ன சிங்களம்? அனுர எண்டு சொல்ல வாய் வருதுகுதில்லையோ? இங்கே இருந்த 100 வருட போத்துகேய ஆட்சி, 100 வருட டச்சு ஆட்சி எங்கே காணோம்? இன்னொரு திரியில் சொன்னேன்… தையிட்டியில் இன்னொரு விகாரை வருவது உறுதி. குறைந்தபட்சம் பிரிவேனா பள்ளிகூடமாவது வரும். என்னமாரி? மலையக மக்களை கூப்பிட்டு இருத்துவோமா? நத்தங் அபி ஒக்கமலா பெளத்த சிங்க-லே வெலா, நாதாயோ வாகே ஒக்கட்டம ஜீவத் வெமுத?
  10. தகவலுக்கு நன்றி. அப்போ நிஷான் இரெண்டாவது. சென்ரல், சென் ஜோன்ஸ் எண்டு யாழின் இரு பெரிய பாடசாலைகளும் வடக்கின் பெரும் போரை இதிலும் ஆரம்பித்து விட்டனர் 😂. இன்னொரு கொசுறு - சேர்மாரை முதல் பெயராலும் Sir Ian, Sir Alan எனவும், லோர்ட் மாரை கடைசி பெயராலும் Lord Prescott அழைப்பார்கள். சில நிலவுடமைவாதிகள் எந்த பெயராலும் அன்றி அவர்களின் நிலத்தின் பெயராலேயே அழைக்கப்படுவர் உதாரணம்: Northumberland என்பது இடத்தையும் அதேசமயம் Duke ஐயும் குறிக்கும். உண்மையில் பிரித்தானியாவில் வாழ்ந்து, படித்து வேலை செய்யும் நம்மவருக்கு கூட இவை பற்றி போதிய புரிதல் இல்லை என்பது நான் கண்ட உண்மை. இந்த பட்டங்கள் அநேகம் அரசியல் அதிகாரம் அறவே அற்றவை. ஒரு அங்கீகாரம் என்பது மட்டுமே. இந்த பட்டங்களில் உண்மையில் கொஞ்சம் அரசியல் அதிகாரம் உள்ளது என்றால் அது Lord/Lady மட்டுமே. முன்னர் பிரபுக்கள் சபையில் hereditary peers எனப்படும் வம்சாவழி வந்த பிறப்புரிமயால் பிரபு ஆனவர்கள் கனக்க. 97 லேபர் ஆட்சியில் ஆரம்பித்து, இந்த ஆட்சியில் - கிட்டதட்ட இதை வழக்கொழித்து விட்டார்கள். இருப்பவர்கள் இறக்க, இனி வரும் காலங்களில் தனியே நியமன உறுபினர்கள்தான் பிரபுக்கள் சபையில் இருப்பார்கள். அவர்கள் கட்சி சார்ந்தோ, அல்லது cross bench peers எனப்படும் கட்சி சாராமலோ இருக்கலாம். இலங்கையில் உள்ள தேசிய பட்டியலை ஒத்த ஒரு விடயம்தான் இங்கே பிரபுக்கள் சபை. பின்கதவு எண்டும் சொல்லலாம். பிரிடிஷ் பாராளுமன்ற வளாகத்தில் - பக்கிங்காம் அரண்மனையில் இருந்து போனால், முதல் கதவு House of Commons இன் கேட். பின் கதவுதான் பிரபுகள் சபையின் கேட் 😂.
  11. எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.
  12. தமிழீழ போராட்டத்தில் சுயமாக இணைந்து, பயிற்சிகள் பெற்று போராடிய இவர்கள், பின் அந்த இயக்கத்திற்கு துரோகம் செய்து, அதற்கு எதிராக போராடினார்கள், காட்டிக்கொடுத்தார்கள் அந்த இயக்கத்தை அழிக்க முக்கிய சக்திகளாக இயங்கினார்கள். இயக்க ஒழுக்கங்களை மீறி கொலை, கொள்ளை, கப்பம் பெறுதல், பாலியல் வல்லுறவு கலாச்சாரத்தில் ஊறியவர்கள், அரசியலாளர்கள், அமைச்சர்கள் தங்கள் சொந்த பழிவாங்கலுக்காக இவர்களை பயன்படுத்தியவர்கள், அனுராவை அழிப்பதற்கு, நாட்டின் இஸ்திரத்தன்மையை பாதிக்க பயன்படுத்தப்பட மாட்டார்கள் அல்லது அவர்களே இயங்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? தாங்கள் பாதுகாத்த, நடவடிக்கை எடுக்கத்தவறிய குற்றவாளிகள் தண்டிக்கப்படக்கூடாது என்பது இவர்கள் நீதி. அதைத்தானே சர்வதேசமும் பார்த்துக்கொண்டிருக்கிறது. எப்படியிருந்தாலும் இவர்கள் மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டு அதுவல்ல, அதை நிரூபிக்க வேண்டியது பொலிஸாரின் கடமை. அவர்கள்மேல் சட்ட நடவடிக்கை எடுக்காததற்கு முன்னைய அரசுகளும் பொறுப்பு கூற வேண்டும், தண்டிக்கப்பட வேண்டும்.
  13. இங்கிலாந்து அணி - அரை இறுதிக்கு வருவார்களா
  14. தென்னாபிரிக்க அணி - சென்ற முறை இறுதிப் போட்டியாளர்கள். சூரியகுமார் யாதவின் எல்லைக் கோட்டில் வைத்துப் பிடித்தாந்தப் பிடி மட்டும் இல்லையென்றால், கிண்ணத்தைத் தூக்கியிருப்பார்கள்.
  15. அவுஸ்ரேலிய அணி. இறுதிப் போட்டியில் விளையாட தகுதியான அணி
  16. ஆண்டு சரியாக நினைவிலில்லை, ஆயிரத்து தொள்ளாயிரத்து இருபது நான்காம் ஆண்டாக இருக்கலாம். ஒரு தமிழர் அன்பளிப்பாக அப்போதிருந்த விகாராதிபதிக்கு கொடுத்ததாக தகவல், அவரோடிருந்த இந்த நயினாதீவு பிக்கு அவருக்கு பிறகு சொந்தம் கொண்டாடினார், அதன் பின் ஒரு பிக்கு இங்கு விகாரை கட்ட முற்பட்ட போது, இவர் மறுப்புத்தெரிவிக்கவில்லை. அவரும் பிழைக்கட்டும் என்று விட்டு விட்டாராம். அதன்பிறகு வேறொரு பிக்குவுக்கு கைமாறியதாம், அவர் இன்னொரு பிக்குவுக்கு கொடுக்க, அவர் பிக்குவிலிருந்து விலகியபோது ஒரு இளம் பிக்கு பொறுப்பானாராம், அவர் பல்கலைக்கழகம் போவதால் இப்போதைய திஸ்ஸ விகாராதிபதி கையில் போயிருக்கிறதாம், இப்படி பல கதைகள். தனது காணி, உறுதியிருக்கிறது, என்றெல்லாம் கதைவிட்டவர் இப்போ பின் வாங்குகிறார். இந்தப்பிக்கு தலைமை பிரச்சனையில் ஏதேதோ பேசி குழப்புகிறார். திஸ்ஸ விகாராதிபதிக்கு பதவி வழங்கிய பின்னே தீவிரமாக இந்தப்பிரச்சனை பற்றி பேசினார். விகாரை கட்டும்பொழுதே இவருக்குத் தெரியும். அப்போ இவர் அதை கண்டிக்கவோ, தடுக்கவோ, அனுமதி பெற்று கட்டுங்கள் என்று அறிவுத்தவோ இல்லை. அதிலும் இப்போதைய காணிக்காரர் ஒருவர் அந்த விகாரைக்கு ஐந்து பரப்பு விட்டுக்கொடுத்திருக்கிறாராம். எல்லாம் நம்முன்னோர் விட்ட தவறு. அவர்கள் நல்லிணக்கத்தோடு பேதம் பாராட்டாமல் வாழ்ந்தார்கள், இப்போ அதுவே இனத்துக்கு மதத்திற்கு பேரிடராக மாறியுள்ளது. அதுதான் ஒரே தீர்வு. ஆனால் அது ஒரு இனப்பிரச்னையுமில்லை, அப்படியொரு பிரச்சினையும் நாட்டில் இல்லை, சர்வதேசம் தலையிடத்தேவையில்லை என்று சிங்களமும் நம்மில் சிலரும் அடித்துக்கூறுகின்றனர். அது நடப்பதென்றால் எப்பவோ நடந்திருக்கும், அது நடக்க வாய்ப்பேயில்லை. பிரித்தானியா நம் நாட்டுக்குள் நுழைந்து நமது அரசியல் அதிகாரங்களை, நிலங்களை குழப்பாமல் இருந்திருந்தால்; நாமே நம்மை ஆண்டிருப்போம். இப்போ இந்தப்பிரச்சனை அவர்களுக்கு பொழுதுபோக்கு, பேசுபொருள்.
  17. இந்திய அணி - கிண்ணத்தை வெல்லப்போகும் நம்ம தெரிவு.
  18. இதுவரை, ஏழு அணிகள், உலகக்கிண்ணத்தில் விளையாடும் அணிகளை அறிவித்துள்ளனர். இந்தியா அவுஸ்ரேலியா ஆப்கானிஸ்தான் தென்னாபிரிக்கா சிம்பாப்வே இங்கிலாந்து ஓமான்
  19. Yesterday
  20. முன்பெல்லாம் கண்விழித்து எழுந்தவுடன் புலிகள் பல்லவி,இப்போ புலம்பெயர்ந்தோர் பல்லவி. கைதுசெய்யப்பட்டவர்கள் மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை மீண்டும் ஒருக்கா இவருக்கு வாசித்து காட்டுங்களப்பா, இவருக்கு வாசித்து விளங்குவதில் ஏதோ தவறு இருக்கிறதுபோலுள்ளது. இந்தக்குற்றங்கள் நாட்டில் நடந்ததா இல்லையா? சம்பவம் நடந்த சந்தர்ப்பத்தில் அந்தப்பிரதேசத்தில் ஆயுதத்துடன் நடமாடியவர்கள் யார்,யார்? இவர்கள் அந்தக்குற்றத்தை செய்யாது விட்டால் அடுத்த சந்தேகம் இராணுவத்தினர் செய்திருக்க வாய்ப்புண்டு. இவர்களை விசாரித்து உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? உங்கள் வீட்டில் யாராவது கொலை செய்யப்பட்டிருந்தால் இப்படித்தான் பேசுவீர்களா? இவர்களுக்கு ஏன் ஆயுதம் வழங்கப்பட்டது அல்லது ஆயுதத்தை கையாள உரிமை அளித்தது? யார் யார் ஆட்சிக்காலத்தில் இந்தக்குற்றங்கள் நடந்தவை, ஏன் அப்போது அவற்றிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை? அப்போதே சட்ட நடவடிக்கை எடுத்திருந்தால் இப்போ புலம்பெயர்ந்தவர்கள் தலையிட்டிருக்கவும் தேவையில்லை, அனுரா கைது செய்ய வேண்டியிருக்கவும் தேவையில்லை. கொலைக்குற்றவாளிகளையும் நீதிமன்ற தண்டனைக்கைதிகளையும் விடுதலை செய்தது யார், நீதிமன்ற நடவடிக்கைகளை தடுக்க நீதிபதிகளை வீட்டுக்கனுப்பியது யார், ஏன்? இவர்கள் பதறியடித்து தங்கள் குற்றங்களையும் கைதுகளையும் மறைக்க முயல்கின்றனரே ஒழிய இந்த ஆயுதக்குழுக்களை காப்பற்றவல்ல. இவர்களை வேண்டுமென்று திட்டமிட்டு பயன்படுத்தியதும் இவர்களே! இவர்களுக்கு ஆயுதம், பதவி, பாதுகாப்பு, வசதி வழங்கியவர்கள் இவர்கள், ஏன் வழங்கினார்கள்? பிரச்சனைக்கு ஒரு தீர்வை அடையாமல் தடுப்பதற்கு, புலிகளை பெலவீனப்படுத்துவதற்கு, மக்களை அழிப்பதற்கு, நீதியின் குரலை நசுக்குவதற்கு இந்தக்குற்றவாளிகளை பயன்படுத்திக்கொண்டார்கள். இவர்கள் கைதுசெய்யப்பட்டவர்களுக்காக அழுகிறார்கள் என்றால் இவர்களும் விசாரிக்கப்படவேண்டும். "சோழியன் குடுமி சும்மா ஆடாது." இந்த குற்றவாளிகளுக்குப்பின்னால் இருக்கும் சூத்திரதாரிகள் இவர்களே இவர்கள் பதறத்தான் செய்வார்கள். உண்மையாகவே இந்தக்குழுக்கள் மேல் நன்றியும், நல்லெண்ணமும் இருந்திருந்தால் அவர்களை இந்தக்குற்றச்செயல்களில் பயன்படுத்தியிருக்கமாட்டார்கள். இவர்களை பலிக்கடாவாக பயன்படுத்தியிருக்கிறார்கள். பாதாள போதைக்கும்பலை கைது செய்தாலும் விமர்ச்சிக்கிறார்கள், ஊழல் செய்தோரை கைதுசெய்தால் தெருக்களில் இறங்கி சவால் விடுகிறார்கள், கொலையாளிகளை கைதுசெய்தால் குற்றம் சாட்டுகிறார்கள். இவர்களின் பிரச்சனைதான் என்ன? இந்தக் குற்றங்கள் எல்லாவற்றிலும் இவர்களுக்கு பங்குண்டு, இவைகளின் எஜமானர்கள் இவர்களே, தாங்களே பொறியில் தலையை வைக்கிறார்கள். இவையெல்லா குற்றங்களுக்கு முந்தைய அரசாங்கங்கள், அமைச்சர்களே காரணம். ஏதோ, புலம்பெயர் அமைப்புகளின் விருப்பத்திலாவது, புண்ணியத்திலாவது நாட்டில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு, நீதி, சமாதானம், சமத்துவம் மலரட்டும். அவர்களே நாட்டில் அக்கறையுள்ளவர்கள். கொலை, கொள்ளை, ஊழல் செய்பவர்களோ அவற்றிற்கு பாதுகாப்பு, வாக்காளத்து கொடுப்பவர்களோ அல்ல. தன் இனத்துரோகியை சுயநலத்திற்கே யாரும் பயன்படுத்துவார்கள், அவர்களை யாரும் நம்புவதில்லை. "துரோகி துரோகத்தினாலேயே அழிக்கப்படுவான்."
  21. போட்டி திகதி நெருங்கும் போது இங்கு நிற்க கூட இடம் இருக்காது.🤣
  22. அர்சுனா ஏதாவது வேலைக்கு நேர்முக தேர்விற்காக அந்த கேள்வியினை கேட்டிருப்பார்.🤣 இங்கு வேலை நேர்முக தேர்விற்கு கூட பெரிதாக கல்வியினை பார்க்கமாட்டார்கள், அனுபவ்மில்லாவிட்டால் வேலைக்கு எடுக்க மாட்டார்கள் ஆனால் அனுபவம் இருந்தால் கல்வித்தகமைகளை கவனிக்கமாட்டார்கள் (சாதாரண வேலைகளுக்கு).
  23. ஆறுபேர் களத்தில்...... எல்லாரும் வாருங்கள்
  24. ரொய்டர்ஸ் மேலுள்ள கட்டுரையில் அப்படித்தான் கூறியுள்ளார்கள். 5 சதம் யுரோ நாணயத்தில், சீன மின் கட்டணம் 7 - 9 சதம் என நினைக்கிறேன் (தற்போதய ஜேர்மன் மின் கட்டணம் 9 சதத்திலிருந்து யுரோ சிறிது அதிகமாக உள்ளதென கருதுகிறேன் ச் அரியாக நினைவில்லை ஆனால் 2022 இற்கு முன்னர் இருந்த விலையில் 31% அதிகரிப்பு மட்டுமே என கூறப்படுகிறது. நிறுவனங்களுக்குதான் இந்த விலை கட்டணம் என நினைக்கிறேன், 0.09சதம் மானியத்தின் பின்னர் 0.05 சதம். சாதாரண வாடிக்கையாளர்களுக்கு 0.40 சத யுரோ நாணயத்தில் என இணையம் குறிப்பிடுகிறது. இங்கு எரிசக்தி ஏற்றுமதி செய்யும் நாடாக அவுஸ்ரேலியா இருந்தாலும் சாதாரண வாடிக்கையாளர்கள் 0.31 அவுஸ்ரேலிய நாணயத்தில் செலுத்துகிறோம் (சிறிய நிறுவனங்களும் இதே தொகையினையே செலுத்துகிறது) (0.18 யுரோ).

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.