24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை தினமாக பிரகடனம் - அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர்
அரச ஊழியர்களுக்கு ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை Mar 16, 2026 - 07:10 PM தற்போது நிலவும் எரிபொருள் விநியோகச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, அதனை எதிர்கொள்ளும் வகையில் அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் புதன்கிழமை (18) முதல் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி இதனைத் தெரிவித்தார். மேலும், வாரத்தின் ஏனைய 4 வேலை நாட்களிலும், எத்தனை பணியாளர்களை பணிக்கு அழைக்க வேண்டும் என்பது குறித்த முடிவை எடுப்பதற்கான அதிகாரம் அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இருப்பினும், இந்த விடுமுறையானது சுகாதாரத் துறை, துறைமுகங்கள், நீர்வழங்கல் மற்றும் சுங்கத் திணைக்களம் உள்ளிட்ட துறைகளுக்குப் பொருந்தாது என அவர் தெளிவுபடுத்தினார். அரச ஊழியர்களுக்கு மேலதிகமாக, அனைத்து அரச பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதிமன்றங்களுக்கும் புதன்கிழமை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார். அத்துடன் அனைத்து அரச விழாக்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் விடுமுறை தொடர்பில் தனியார் நிறுவனங்களும் இதே நடைமுறைகளைப் பின்பற்றுமாறு கோரப்படுவதாக இதன்போது அவர் மேலும் தெரிவித்தார். 🔴BREAKING NEWS | රජයේ සේවකයින්ට සෑම බදාදා දිනයක්ම නිවාඩු">https://adaderanatamil.lk/news/cmmt8czcu000s356p1s37ivhg
-
அனைத்து அரச விழாக்களும் தற்காலிகமாக இரத்து - பொது நிர்வாக அமைச்சு
அனைத்து அரச விழாக்களும் தற்காலிகமாக இரத்து - பொது நிர்வாக அமைச்சு 16 Mar, 2026 | 07:39 PM சகல அரச விழாக்கள், உற்சவங்கள், சம்மேளனங்களையும் தற்காலிகமாக இரத்து செய்யவும், பாரிய ஒன்றுகூடல்களை வரையறுக்கவும் பொது நிர்வாக அமைச்சு தீர்மானித்துள்ளது. நாட்டில் நிலவும் எரிபொருள் சிக்கல்களை கருத்திற்கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/241137
-
ஆபத்து : சந்தேகத்துக்குரிய QR குறியீடுகளை ஸ்கேன் செய்யாதீர்கள்!
ஆபத்து : சந்தேகத்துக்குரிய QR குறியீடுகளை ஸ்கேன் செய்யாதீர்கள்! 16 Mar, 2026 | 07:22 PM தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர சேவையை வழங்குவதாகக் கூறி, போலியான சமூக ஊடகங்கள் மற்றும் செய்தி இணையத்தளங்கள் பண மோசடியில் ஈடுபட்டு வருவது குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (Sri Lanka CERT) பொதுமக்களை எச்சரிக்கிறது. வலைத்தள பயனர்களை தவறாக வழிநடத்தவும் அவர்களது தனிப்பட்ட நிதி தொடர்பான தகவல்களை திருடவும் நிகழ்நிலையில் மோசடிச் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக இந்த அமைப்பு சுட்டிக்காட்டுகிறது. எனவே, சந்தேகத்துக்கிடமான இணைப்புகளை (Link) க்ளிக் செய்யவோ, அதிகாரபூர்வமற்ற வலைத்தளங்கள், செய்தி இணையத்தளங்கள் அல்லது சமூக ஊடகங்களின் மூலம் பகிரப்படும் QR குறியீடுகளை ஸ்கேன் செய்யவோ வேண்டாம் என பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். மோசடியில் ஈடுபடுபவர்கள், இணையத்தள பயனர்களை ஏமாற்ற, வேண்டுமென்றே சிறிது மாற்றப்பட்ட எழுத்துப்பிழைகளை கையாளக்கூடும். ஆகையால், URLஇல் உள்ள வலைத்தள பெயர்கள் மற்றும் எழுத்துக்களை கவனமாக சரிபார்க்க வேண்டும் என்றும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரே ஒரு அதிகாரபூர்வ வலைத்தளமாக https://fuelpass.gov.lk என்பதே விளங்குவதாக இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு அறிவித்திருப்பதோடு, சைபர் தொடர்பான குற்றங்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்தால் குழுவில் https://www.cert.gov.lk/ புகாரளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/241135
-
ஈரான் நாட்டுப்புற சமையல்
சீன காஸ் அடுப்பு எப்படி?
-
சீனாவுக்கு ட்ரம்ப் நிபந்தனை விதிக்கிறார்!
சீனாவுக்கு ட்ரம்ப் நிபந்தனை விதிக்கிறார்! --- --- --- *பீஜிங் பயணத்திற்கு முன்னர், ஹார்மூஸ் நீணையை கைப்பற்ற வேண்டும் என்கிறார்... *ட்ரம்ப், பீஜிங் வருவதற்கான பேச்சு நடப்பதாக சீனா கூறுகிறது... *பயணம் தாமதமடைந்தால் வர்த்தக பேச்சின் நிலை??? --- --- --- ஹார்மூஸ் நீணை விவகாரத்தில் சீனா ஒத்துழைக்க மறுத்தால் பீஜிங்கிற்கான தனது பயணத்தை நிறுத்தவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து சீன அரச ஊடகமான குளோபல் ரைமஸ் (globaltimes) செய்தி வெளியிட்டுள்ளது. அதேநேரம், ட்ரம்பின் சீனப் பயணம் குறித்து இரு தரப்பும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் (Lin Jian) இன்று திங்கட்கிழமை கூறியுள்ளார். அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஸ்காட் பெசென்ட் (Scott Bessent) சீன துணை பிரதமர் ஹீ லைஃபெங் (He Lifeng) ஆகியோர் தலைமையிலான பிரதிநிதிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசிய பின்னர், ட்ரம்பின் சீன பயணம் தொடர்பான செய்தி வெளியாகியிருந்தது. இந்த நிலையில், தனது சீன பயணம் தொடர்பாக ட்ரம்ப், சீன அரசிடம் பேரம் பேசுவதாக. குளோபல் ரைமஸ் கூறுகிறது. ட்ரம்பின் மிரட்டல் குறித்து அமெரிக்க செய்தி நிறுவனமான சீஎன்என் (cnn) செய்தியிலும் விபரிக்கப்பட்டுள்ளது. பைனான்சியல் ரைம்ஸுக்கு (Financial Times) ட்ரம்ப் வழங்கிய நேர்காணலை மேற்கோள் காண்பித்து சீன்என் இச் செய்தியை வெளியிட்டுள்ளது. சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் திட்டமிடப்பட்ட மாநாட்டிற்கு முன்னதாக, ஹார்மூஸ் நீணை விவகாரத்தில் சீனா ஒத்துழைக்குமா என்பதை அறிய விரும்புவதாக ட்ரமப் கற்பிதம் செய்கிறார். ஆகவே, சீனாவிடம் இருந்து உரிய பதில் கிடைக்காமல் விட்டால், ட்ரம் தனது பயணத்தை தாமதப்படுத்துவர் என்பது தெரிகிறது. புவிசார் அரசியல் பதற்றங்கள் (geopolitical tensions) ட்ரம்பினுடைய சீன பயணத்துக்கு தடை என்பதை விடவும், ஹார்மூஸ் நீணை விவகாரத்தில் சீனா ஒத்துழைக்க வேண்டும் என ட்ரம்ப் எதிர்பார்க்கிறார் என்பது புரிகிறது. அதாவது, ஹார்மூஸ் நீணையை, அமெரிக்க படைகளினால் தனித்து நின்று கைப்பற்ற முடியாது என்பது புரிகிறது. ஆனால், ஹார்மூஸ் நீணை பகுதி ஈரான் என்ற ஒரு அரசின் இறைமைக்கு உட்பட பகுதி என ஐரோப்பிய நாடுகள் விபரிக்கின்றன. சீனாவும் அவ்வாறு தான் கூறுகிறது. அதேநேரம், பரிஸ் நகரில் ஞாயிற்றுக்கிழமை சீனாவுடன் இடம்பெற்ற வர்த்தக பேச்சை, ட்ரம்ப சீனாவுக்கு சென்று தொடர வேண்டிய கட்டாயம் உள்ளது. இல்லையேல், ஈரான் போரின் பின்னரான பொருளாதார மூதலீடுகள் பற்றிய விவகாரங்களில், கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகள், சீனாவுடன் ஒத்துழைக்கும். அல்லது சீன - ரசிய நாடுகளை மையப்படுத்திய பிறிக்ஸ் பொருளாதார கட்டமைப்பின் செயற்திறன் மேலும் நீட்சியடையும் எனலாம். அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://www.facebook.com/1457391262/posts/pfbid02uwJTXZBfgfyWvwcgYjHKBjnzBzU8qu7nFm8RGjSfoJTQqnvbXsd6HTXqPW7oJe6ml/?mibextid=wwXIfr
-
ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை தினமாக பிரகடனம் - அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர்
ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை தினமாக பிரகடனம் - அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் 16 Mar, 2026 | 07:56 PM அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் 18ஆம் திகதி முதல் ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்படும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். மேலும், அனைத்து அரசு பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதிமன்றங்களுக்கும் இவ்விதமாகவே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களும் இந்த விடுமுறை நடைமுறையைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் விநியோக பிரச்சினைகள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/241136
-
ஈரான் நாட்டுப்புற சமையல்
வாவ்....😂 இந்த மீன் சமைக்க ரஷ்ய காஸ் அடுப்பு பாவிச்சால் இன்னும் அந்தமாதிரி இருக்கும்....😎
-
ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து எல்பிஜி எரிவாயுவுடன் வரும் கப்பல்கள் - மத்திய அரசு அளித்த புதிய தகவல்
நேற்று பாகிஸ்தான் எண்ணைக் கப்பல் ஒன்று இந்த நீரிணையைக் கடந்துள்ளது. Automatic Identification System (AIS) மூலம் ஈரானால் இனம்காணப்பட்டு இக் கப்பல் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஈரானுடன் முன்கூட்டியே கப்பல் அனுமதிக்கான ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கலாம்.
- Today
-
ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஒத்துழைக்குமாறு ட்ரம்ப் கோரிக்கை
ஹோர்முஸ் நீரிணையை மீள திறக்க ட்ரம்ப் முயற்சி; மசகு எண்ணெய் விலைகள் தொடர்ந்து அதிகரிப்பு Published By: Digital Desk 3 16 Mar, 2026 | 12:02 PM மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணை வழியாக கடல் போக்குவரத்து முடக்கப்பட்டதால் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்று திங்கட்கிழமை பாரியளவில் அதிகரித்துள்ளது. சர்வதேச விலையை நிர்ணயிக்கும் பிரெண்ட் மசகு எண்ணெய் இன்றைய நிலவரப்படி 3 சதவீதம் அதிகரித்து ஒரு பீப்பாய் 106 டொலரைக் கடந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்காக மற்ற நாடுகளின் உதவியை கோரிய பின்னர் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நீரிணை சர்வதேச மசகு விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கை கொண்டுள்ளது. இவ்வரையில், ட்ரம்பின் அழைப்புக்கு மந்தமான பதில்கள் மட்டுமே கிடைத்துள்ளன. சீனா, ஜப்பான், பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகள் இதுவரை தங்கள் கடற்படைகளை அனுப்ப உறுதி செய்யவில்லை. ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் திங்களன்று முக்கிய வழித்தடங்களுக்கு கப்பல்களை அனுப்ப திட்டமிடவில்லை என தெரிவித்துள்ளன. ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்கு பதிலாக, நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்தை நிறுத்தியுள்ளது. சர்வதேச எரிசக்தி நிறுவனம் இதை வரலாற்றில் மிகப்பெரிய இடையூறு எனக் குறிப்பிட்டுள்ளது. போரின் தொடக்கத்திலிருந்து சர்வதேச எண்ணெய் விலைகள் 40% க்கும் மேலாக அதிகரித்துள்ளன, இது உலக பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்படும் அச்சத்தை அதிகரித்துள்ளது. ஹோர்முஸ் நீரிணை வழியாக முன்னர் நாளொன்றுக்கு சராசரி 138 வர்த்தகக் கப்பல்கள் பயணித்திருந்தன. ஆனால் கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி போர் ஆரம்பமானது முதல், இதுவரை ஒரு நாளைக்கு 5 கப்பல்களுக்கு குறைவான போக்குவரத்தே நடைபெற்றுள்ளது. இந்த பகுதியில் குறைந்தது 16 வணிகக் கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளன என பிரித்தானிய கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/241083
-
ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து எல்பிஜி எரிவாயுவுடன் வரும் கப்பல்கள் - மத்திய அரசு அளித்த புதிய தகவல்
'சிக்னல் அணைப்பு' - 2 இந்திய கப்பல்கள் ஹோர்மூஸ் நீரிணையை கடந்தது எப்படி? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஹோர்மூஸ் நீரிணை அருகே பல கப்பல்கள் சிக்கியுள்ளன (கோப்புப் படம்) 26 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட இரு திரவ பெட்ரோலிய எரிவாயு கப்பல்களான நந்தா தேவி மற்றும் சிவலிக் ஆகியவை கடந்த சனிக்கிழமை ஹோர்மூஸ் நீரிணையைக் கடந்துள்ளன. கப்பல்களின் பயணத்தை கண்காணிக்கும் இணையதளம் மரைன் டிராபிக் வழங்கிய தகவலின்படி, இந்த இரண்டு கப்பல்களும் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள துறைமுகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருந்தன. கப்பல்களின் பயணத் தகவல்கள்படி, நந்தா தேவி மற்றும் சிவலிக் ஆகிய இரு கப்பல்களும் கத்தாரில் உள்ள துறைமுகத்தில் எரிவாயுவை ஏற்றிக் கொண்டுள்ளன. அதன் பிறகு அவை ஹோர்மூஸ் நீரிணையைக் கடக்கும்போது தானியங்கி அடையாள அமைப்பு (AIS - ஏஐஎஸ்) என்ற சிக்னலை அணைத்துவிட்டு பயணம் செய்துள்ளன. பட மூலாதாரம்,MarineTraffic ஏஐஎஸ் என்பது கப்பல்கள் தங்கள் இருப்பிடத்தை வெளிப்படுத்தப் பயன்படுத்தும் சிக்னல். இதன் மூலம் கப்பல்களின் பயணத்தை இணையத்தில் கண்காணிக்கலாம். வரைபடத்தில் காட்டப்படும் புள்ளி கோடு அந்த கப்பல்கள் எவ்வாறு சென்றிருக்கலாம் என்று கணிக்கப்பட்ட பாதையைக் காட்டுகிறது. மார்ச் 14 அன்று, அந்த எரிவாயு கப்பல்கள் ஏஐஎஸ் சிக்னலை அணைத்திருந்த நேரத்தில், அந்தப் பகுதியில் இரண்டு இந்தியப் போர்க் கப்பல்கள் இருப்பதையும் காண முடிகிறது. நந்தா தேவி கப்பல், இரானின் கேஷம் தீவில் பல நாட்கள் நின்றிருந்தது. அந்த கப்பல் நாளை இந்தியாவின் கண்ட்லா துறைமுகத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு கப்பலான சிவலிக் இன்று காலையே இந்தியாவின் முந்தரா துறைமுகத்தை வந்து சேர்ந்தது. ஜெய்சங்கர் கூறியது என்ன? இரானுடன் நேரடியாக நடத்திய பேச்சுவார்த்தைகள் இந்தியக் கப்பல்கள் ஹோர்மூஸ் நீரிணையைக் கடந்து வர உதவியுள்ளதாக இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் முன்னதாக தெரிவித்தார். இந்திய கப்பல்கள் செல்வதற்கு 'சாதாரண' அல்லது 'நிரந்தர ஒப்பந்தம்' எதுவுமில்லை என்றும், இதற்கு 'இரான் எதையும் பிரதிபலனாகப் பெறவில்லை' என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் பைனான்சியல் டைம்ஸ்' இதழிடம் தெரிவித்தார். அவர் அந்தப் பேட்டியில், "நான் தற்போது அவர்களுடன் பேசி வருகிறேன். எனது பேச்சுவார்த்தை சில முடிவுகளைத் தந்துள்ளது. இந்த செயல்முறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது பலன் அளிக்கும் பட்சத்தில், இயல்பாகவே நான் இதைத் தொடர்ந்து முன்னெடுப்பேன்." என்று கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cddn1z019d2o
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
பாஜக, அதிமுக போன்ற கட்சிகளுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறவில்லை ; தமிழக வெற்றி கழகம் விளக்கம் 16 Mar, 2026 | 04:40 PM பாஜக- அதிமுக போன்ற கட்சிகளுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை. இது தொடர்பாக வெளியாகும் செய்திகள் அனைத்தும் வதந்தி'' என தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விளக்க அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இது தொடர்பாக கட்சியின் இணை பொது செயலாளர் நிர்மல் குமார் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, சமீபகாலமாக சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் அரசியல் லாபத்திற்காக திட்டமிட்டு சில பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக பாஜக /அதிமுக, திருமதி சசிகலா, மருத்துவர் ஐயா ராமதாஸ் ஆகியோர்களை தமிழக வெற்றிக்கழகத்துடன் தொடர்புபடுத்தி கூட்டணி பேச்சு வார்த்தைகள் நடத்தப்படுவதாக கூறப்படும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை. குறிப்பிட்ட கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தையும், எந்த மட்டத்திலும் நடைபெறவில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறோம். இதே போன்ற பொய் செய்தி உத்தியை காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளோடு தொடர்பு படுத்தியும் கடந்த காலங்களில் கடைப்பிடிக்கப்பட்டதும் அது உண்மை இல்லை என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று. இருப்பினும் பொது மக்களிடையேயும் தொண்டர்கள் இடையேயும் தொடர்ந்து குழப்பத்தை விளைவிப்பதற்காகவே இத்தகைய ஆதாரமற்ற செய்திகள் திமுகவினரால் பரப்பப்படுகின்றன. செய்தியின் உண்மைத் தன்மையை ஆராயாமல் இத்தகைய வதந்திகளை பகிர வேண்டாம்.'' என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனால் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதியன்று தமிழகத்தில் நடைபெறும் பொது தேர்தலில் திமுக - அதிமுக - நாம் தமிழர் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய நான்கு முனை போட்டி நடைபெறுவது உறுதி என அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/241127
-
நேட்டோ நட்பு நாடுகள் மிகவும் மோசமான எதிர்காலத்தை எதிர்கொள்ள நேரிடும் – ட்ரம்ப் எச்சரிக்கை!
ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் நேட்டோ நாடுகளுக்கு டிரம்ப் அச்சுறுத்தல் ஏன்? பட மூலாதாரம்,Getty Images 59 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் இரானுடன் அமெரிக்காவும் இஸ்ரேலும் மோதிக்கொண்டிருக்கும் சூழலில், ஹோர்முஸ் நீரிணை டொனால்ட் டிரம்புக்கு சிக்கலாக மாறியுள்ளது. போர்க்கப்பல்களை அனுப்புமாறு அவர் வேண்டுகோள் விடுத்த போதிலும், ஐரோப்பாவும் பிற நாடுகளும் இதுவரை அதிக அக்கறை காட்டவில்லை. இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை, டிரம்ப் ஐரோப்பிய நாடுகளை எச்சரித்தார். ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க அவர்கள் உதவாவிட்டால், அது நேட்டோ அமைப்பின் எதிர்காலத்திற்கு 'மிகவும் மோசமானதாக' அமையும் என்று அவர் கூறினார். பினான்சியல் டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியிலும், புளோரிடாவிலிருந்து வாஷிங்டனுக்கு ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் திரும்பும் போது செய்தியாளர்களிடம் பேசியபோதும் அவர் இதனை மீண்டும் வலியுறுத்தினார். இந்த மாதம் சீனாவில் சீன அதிபருடன் நடைபெறவுள்ள சந்திப்பிற்கு முன்னதாக, ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க சீனா உதவும் என்று டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார். சீனா தனது எண்ணெய் பயன்பாட்டில் "90 சதவீதத்தை இந்த நீரிணை வழியாகவே பெறுகிறது" என்று அவர் கூறினார். டிரம்ப் மற்றும் ஷி ஜின்பிங் இடையிலான சந்திப்பு மார்ச் இறுதியில் சீனாவில் நடைபெற உள்ளது. ஆனால் அதற்கு முன்பே சீனா சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று டிரம்ப் கூறினார். ஏனெனில் இந்தச் சந்திப்பு இன்னும் இரண்டு வாரங்களுக்குப் பிறகுதான் நடைபெறவுள்ளது, இது 'நீண்ட காலம்' என்று அவர் குறிப்பிட்டார். தனது சீனப் பயணம் ஒத்திவைக்கப்படலாம் என்றும் அவர் கூறினார், இருப்பினும் இது குறித்து மேலதிக தெளிவான தகவல்கள் எதையும் அவர் வழங்கவில்லை. ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான "பொதுவான முயற்சியில்" இணையுமாறு சீனா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்த மறுநாளே டிரம்ப் இவ்வாறு கூறியுள்ளார். உலகின் எண்ணெய் வர்த்தகத்தில் 20 சதவீதம் ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் நிலையில், இவ்வழியாக செல்லும் கப்பல்கள் தாக்கப்படும் என இரான் எச்சரித்துள்ளது. இந்தப் போரினால் எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால், உள்நாட்டிலும் டிரம்புக்கு அழுத்தம் அதிகரித்து வருகிறது. பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,ஹோர்முஸ் நீரிணைக்கு அருகே தாக்கப்பட்ட ஒரு கப்பல் ஐரோப்பாவைப் பற்றி டிரம்ப் கூறியது என்ன? வளைகுடா நாடுகளில் இருந்து வரும் எண்ணெயை ஐரோப்பாவும் சீனாவும் பெருமளவில் சார்ந்துள்ளதாக டிரம்ப் கூறுகிறார். தனது கோரிக்கைக்கு எந்தப் பதிலும் இல்லையென்றால், அது 'நேட்டோவின் எதிர்காலத்திற்கு மிகவும் மோசமானதாக' அமையக்கூடும் என்று டிரம்ப் எச்சரித்தார். 'இந்த முயற்சியில் எந்த நாடு அமெரிக்காவுக்கு உதவுகிறது என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்' என்றும் அவர் கூறினார். தனது சமீபத்திய கருத்தில் அவர் குறிப்பிட்ட எந்த நாட்டின் பெயரையும் தெரிவிக்கவில்லை என்றாலும், நேட்டோ கூட்டணி மற்றும் 'தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலையில்' இருப்பதாக அவர் கருதும் நாடுகளைப் பற்றிக் குறிப்பிட்டார். இரண்டு நாட்களுக்கு முன்பு, டிரம்ப் ட்ரூத் சோஷியல் தளத்தில், "முற்றிலும் அழிந்துபோன ஒரு நாட்டினால் ஹோர்முஸ் நீரிணைக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா, பிரிட்டன் மற்றும் பிற நாடுகள் கப்பல்களை அனுப்பும் என்று நம்புகிறேன்" என்று பதிவிட்டிருந்தார். மற்ற நாடுகளிடம் இருந்து எந்தப் பதிலும் வராவிட்டால், அது நேட்டோவின் எதிர்காலத்திற்கு மிகவும் மோசமானதாக இருக்கும் என்று எச்சரித்த டிரம்ப், "அமெரிக்கா தனது ஐரோப்பிய கூட்டாளிகளிடம் மிகவும் மென்மையாக நடந்து கொண்டுள்ளது" என்றும் கூறினார். "நாங்கள் யுக்ரேனுக்கு உதவி செய்திருக்க வேண்டிய அவசியமில்லை. யுக்ரேன் எங்களிடமிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ளது... ஆனால் நாங்கள் அவர்களுக்கு உதவினோம். இப்போது அவர்கள் எங்களுக்கு உதவுகிறார்களா என்று பார்ப்போம். ஏனெனில் நாங்கள் அவர்களுக்காகத் துணை நிற்போம், ஆனால் அவர்கள் எங்களுக்காகத் துணை நிற்க மாட்டார்கள் என்று நான் நீண்ட காலமாகச் சொல்லி வருகிறேன். அவர்கள் துணை நிற்பார்களா என்று எனக்கு உறுதியாக தெரியவில்லை" என்றார் டிரம்ப். பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாக்க போர்க்கப்பல்களை அனுப்புமாறு சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளிடம் டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார் (கோப்புப் படம்) நாடுகள் என்ன கூறின? டிரம்பின் கருத்துக்கு சில நாடுகள் எதிர்வினையாற்றியுள்ளன. பிரிட்டன்: இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர்,''சந்தைகளில் நிலைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட வேண்டும். அது எளிதான வேலை அல்ல. அந்தப் பகுதியில் கப்பல்கள் சுதந்திரமாகச் செல்லும் நிலையை மீண்டும் உருவாக்குவதற்கான ஒரு திட்டத்தைக் கொண்டு வர பிரிட்டன் அதன் கூட்டாளி நாடுகளுடன் சேர்ந்து பணியாற்றி வருகிறது'' என்றார். சீனா: வாஷிங்டனில் உள்ள சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் சிஎன்என்-இடம் கூறுகையில், மோதலை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருமாறு சீனா அழைப்பு விடுப்பதாகத் தெரிவித்தார். டிரம்பின் கோரிக்கையைச் சீனா ஏற்குமா என்பதை அவர் குறிப்பிடவில்லை என்றாலும், நிலையான மற்றும் தடையற்ற எரிசக்தி விநியோகத்தை உறுதி செய்வது அனைத்து தரப்பினரின் பொறுப்பாகும் என்று அவர் கூறினார். மேலும், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் சீனா தொடர்ந்து தொடர்புகளை வலுப்படுத்தும் என்றும் அவர் கூறினார். ஜப்பான்: பிரதமர் சனே தகாய்ச்சி புதன்கிழமை தொடங்கும் தனது அமெரிக்கப் பயணத்தின் போது இந்த விவகாரம் குறித்து விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க உதவி கோரி தனது நாட்டிற்கு எந்த அதிகாரப்பூர்வ கோரிக்கையும் வரவில்லை என்று திங்களன்று தகாய்ச்சி கூறியிருந்தாலும், "தகுந்த முறையில் எவ்வாறு பதிலளிப்பது" என்பது குறித்துப் பரிசீலித்து வருவதாகத் தெரிவித்தார். பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,கோப்புப்படம் பிரான்ஸ்: பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கு, பிரான்ஸ் ஹோர்முஸ் நீரிணைக்குப் போர்க்கப்பல்களை அனுப்புவதாக வெளிவந்த செய்திகளை மறுத்துள்ளது. பிரான்ஸ் அதிபர் மக்ரோங் திங்களன்று எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், இரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் பேசியதாகத் தெரிவித்தார். "இப்பகுதியில் உள்ள மற்ற நாடுகளுக்கு எதிரான தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு இரானுக்கு நான் அழைப்பு விடுத்துள்ளேன். பிரான்ஸ் தற்போது தனது நலன்கள், இப்பகுதியில் உள்ள தனது நட்பு நாடுகளின் நலன்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து சுதந்திரம் ஆகியவற்றைப் பாதுகாப்பதில் தற்காப்பு நிலைப்பாட்டைக் கடைப்பிடிக்கிறது என்பதையும், எங்கள் நாட்டிற்கு எதிரான தாக்குதல்களைப் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்பதையும் நான் நினைவுபடுத்தினேன். ஹோர்முஸ் நீரிணையில் தடையற்ற கப்பல் போக்குவரத்து உடனடியாக மீட்டெடுக்கப்பட வேண்டும்" என்று அவர் அதில் குறிப்பிட்டிருந்தார். தென் கொரியா: மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் மோதல்களைத் தாங்கள் "நெருக்கமாகக் கண்காணித்து" வருவதாகத் தென் கொரியா அரசாங்கம் திங்களன்று தெரிவித்துள்ளது. வெளியுறவு அமைச்சகம், "கொரிய குடிமக்களைப் பாதுகாக்கவும், எரிசக்தி போக்குவரத்துப் பாதைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தென் கொரியா பல்வேறு வாய்ப்புகளைப் பரிசீலித்து வருகிறது," என்று தெரிவித்தது. ஆஸ்திரேலியா: ''ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க உதவுவதற்காக போர்க்கப்பல்களை அனுப்பமாட்டோம். ஹோர்முஸ் நீரிணையின் முக்கியத்துவம் எங்களுக்கு தெரியும்.உதவிக்காக எங்களை யாரும் கோரவில்லை.நாங்கள் எந்த உதவியும் வழங்கவில்லை," என அமைச்சர் கேத்ரின் கிங் அரசின் ஒளிபரப்பு சேவையான ஏபிசிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார் - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/crl4gdr92dro
-
உக்ரைனின் கண்ணுக்குத் தெரியாத போர்க்களம்: பொருளாதாரச் சரிவைத் தடுக்கப் போராடும் அரசு!
உக்ரைனின் கண்ணுக்குத் தெரியாத போர்க்களம்: பொருளாதாரச் சரிவைத் தடுக்கப் போராடும் அரசு! உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான போர் நான்கு ஆண்டுகளை எட்டியுள்ள நிலையில், களமுனைப் போருக்கு நிகராக உக்ரைன் தனது பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பப் போராடி வருகின்றது. உக்ரைனின் வரவு செலவுத் திட்டத்தில் நிலவும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் 90 பில்லியன் யூரோக்களை (சுமார் 105 பில்லியன் டாலர்) கடனாக வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. சர்வதேச நாடுகளின் மொத்த நிதியுதவியான 136.5 பில்லியன் டொலரில் இதுவே மிகப்பெரிய பங்காகும். இந்த நிதியுதவியின் முதல் தவணை வரும் ஏப்ரல் மாதம் கிடைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. “வலுவான இராணுவம் என்பது வலுவான பொருளாதாரத்தையே சார்ந்துள்ளது” என உக்ரைனின் நிதி அமைச்சர் செர்ஜி மார்ச்செங்கோ தெரிவித்துள்ளார். உக்ரைனின் 2026-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 60 சதவீத நிதி (சுமார் 112 பில்லியன் டாலர்) இராணுவத்திற்கே ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை ஈடுகட்ட, உக்ரைன் வரலாற்றில் முதல்முறையாக தனிநபர் வருமானம் மற்றும் சிறு வணிகங்கள் மீதான வரிகளை அரசாங்கம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டு 67.5 பில்லியன் டாலர் வருமானம் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியம் வழங்கியுள்ள 8.1 பில்லியன் டாலர் கடன் நிதியைப் பெறுவதற்கு, உக்ரைன் தனது டிஜிட்டல் தளங்கள் மீதான வரியை அதிகரிக்கவும், வரி ஏய்ப்புகளைத் தடுக்கவும் உறுதியளித்துள்ளது. இருப்பினும், போர்க்காலத்தில் தொடர்ந்து வரி அதிகரிப்பது நாட்டைப் பொருளாதார வீழ்ச்சிக்கு இட்டுச் செல்லும் என ‘Ukrainian Institute of the Future’ போன்ற ஆய்வு மையங்கள் எச்சரித்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவி கிடைப்பதில் ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பன் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறார். ரஷ்யாவிலிருந்து ஹங்கேரிக்கு எண்ணெய் கொண்டு வரும் குழாய்களை உக்ரைன் திட்டமிட்டுத் தடுத்துள்ளதாக அவர் குற்றம் சாட்டுகிறார். ஆனால், ரஷ்யத் தாக்குதல்களால் பழுதடைந்த குழாய்களைச் சீரமைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதமே இதற்குக் காரணம் என உக்ரைன் பதிலளித்துள்ளது. இதனால், அடுத்த மாதம் ஹங்கேரியில் நடைபெறவுள்ள தேர்தலின் முடிவுகள் உக்ரைனுக்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ரஷ்யா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 5.1 சதவீதத்தை மட்டுமே இராணுவத்திற்காகச் செலவிடும் நிலையில், உக்ரைன் தனது ஜிடிபியில் 27 சதவீதத்தை இராணுவத்திற்காகச் செலவிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இது உக்ரைனின் பொருளாதாரத்திற்குப் பெரும் சுமையாக மாறியுள்ளது. https://athavannews.com/2026/1468726
-
ஈரான் நாட்டுப்புற சமையல்
காலத்திற்கு ஏற்ற பொருத்தமான சமையல் குறிப்பு. 😂 இந்த ஈரான் மீன் சமையலை ஒருக்கா செய்து பார்க்க ஆசையாக உள்ளது. 🤣
-
மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமனம்
யாழ். மத்திய கல்லூரி என்பது ஒரு வகையில் ட்ரம்ப் கூட்டம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பிருந்த அமெரிக்கா போன்றது. காசுள்ளவன், இல்லாதவன், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சாதி காரணமாக ஒதுக்கப் பட்டவர்கள் என எல்லோரையும் உள் வாங்கி ஒரு மட்டத்திற்கு உயர்த்தி வெளியே விடும் கல்லூரி. இதனால் தான் குண்டு சுற்றிவர விழுந்து கொண்டிருந்த நிலையிலும், 90 களில் கல்லூரியை மூடிவிடாமல் மாணவர்களும் ஆசிரியர்களும் உயிரைப் பணயம் வைத்து கடமையைச் செய்து கொண்டிருந்தார்கள். சதீஸ்கரனைப் பற்றி: நான் அறிந்த வரை கறாரான பேர்வழி. அந்தக் காலத்தில் (~30 ஆண்டுகள் முன்பு) கொஞ்சம் முன் கோபக் காரர். ஒரு கல்லூரி மாணவர் அமைப்பில் என் கனிஷ்டராக இருந்தார். நான் உட்பட எந்த சிரேஷ்ட உறுப்பினருக்கும் சதீஸ்கரன் என்றால் ஒரு அச்சம், பணிவு😂!
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!
ஜெயமோகனுடன் இந்த விடயத்தில் எனக்கு உடன்பாடு. அதிக புத்தகங்களை வெளியிடுவது, அதிக திரைப் படப் பாடல்களை எழுதுவது என்பன வர்த்தக வெற்றிகள். "வர்த்தக மயப்படுத்திய தமிழ்" என்ற பிரிவில் ஒரு விருது இருந்தால் அதற்கு வைரமுத்து அவர்கள் உரித்தானவர். "நவீன தமிழ் இலக்கியம்" என்ற பிரிவில் உச்ச அடைவாக வைரமுத்துவின் கவிதைகளையும் பாடல் வரிகளையும் வகைப் படுத்த இயலாது. அதிலும் குற்றஞ் சாட்டப் பட்டிருப்பது போல அரசியல் வாதிகளின் செல்வாக்கினால் அதை அவரே முயன்று பெற்றிருக்கிறார் எனும் போது, இது மிக மரியாதை குறைந்த ஒரு விருதாகிறது.
-
"மூன்று கவிதைகள் / 31"
"மூன்று கவிதைகள் / 31" "எந்தனுயிர் காதலியே இன்னிசை தேவதையே" எந்தனுயிர் காதலியே இன்னிசை தேவதையே சிந்தையில் ஆடும் செழுந்தமிழ் ஓவியமே விண்ணுலக பண்ணிசைக்கும் கவின்மிகு யாழே கண்களில் சிறைபிடித்து சரணடைந்தேன் அணங்கே! இன்பத் தேனூறும் இனியவள் சொல்லே துன்பம் துடைக்கும் தூயவள் அன்பே அன்பின் வழிதந்து ஆளுகின்ற அரசியே உன்னுடன் வாழ்வதே உன்னதப் பேறே! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] .............................................................. 'மின்னலாய் ஒரு பின்னல்' [அரவணைப்பு,அகங்காரம்,பரிதாபம் & பங்களிப்பு] அன்பின் அரவணைப்பு அகிலத்தைப் போற்றும் அழிக்கும் அகங்காரம் தீயாகும்! தவிர்ப்போம் பரிதாபம் தனையே பண்பான பங்களிப்பு பாரினை உயர்த்தும்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ......................................................... "வசந்தத்தில் ஓர்நாள்" வசந்தத்தில் ஓர்நாள் மலர்ந்த பூக்கள் பசுமை போர்த்தியது புல்வெளி எங்கும் இனிமை சேர்த்தது குயிலின் கீதம் இளமை தந்தது இதமான தென்றல் புதிய கனவுகளை இதயத்தில் ஏந்தி புன்னகை சிந்தியது இயற்கை அன்னை! கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம். துளி/DROP: 2095 ["மூன்று கவிதைகள் / 31" https://www.facebook.com/groups/978753388866632/posts/34325944333720775/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 134 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 134 / பின் இணைப்பு - "இலங்கையின் நாளாகமங்கள் மற்றும் தமிழ் காவியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை" பின்னர் மணிபல்லவம் தீவில் தீவ திலகை என்ற பெண்ணை மணிமேகலை சந்திக்க நேர்ந்தது. இந்த தீவ திலகை, சம்மன குட்டத்தில் [Sammana Kutta / சமந்தகம் என்ற மலை உச்சியின் மேல்] புத்தரின் பாதங்களை வணங்கி, புத்தர் இருக்கையின் காவலில் இருந்தார். மேற்கண்ட விவரிப்பு மன்னிமேகலை காவியத்தின் 11வது காண்டத்தில் 20 முதல் 30 வரையிலான பாடல்களில் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு, "சம்மன குட்டா" ["Sammana Kutta" ] என்ற வார்த்தையை பாளி மொழியில் இரண்டாக்கப் பிரிக்கலாம், அங்கு "சம்மன" என்பது ஒரு துறவி அல்லது துறவியைக் குறிக்கிறது, மேலும் "குட்டா" என்பது சிகரம் அல்லது மலை என்று பொருள்படும். எனவே, "சம்மன குட்டா" என்பதை "துறவியின் மலை" அல்லது "துறவியின் சிகரம்" என்று விளக்கலாம், இது மலைப்பாங்கான அல்லது காட்டுப் பகுதிகளில் தியானம் மற்றும் கற்பிப்பதற்காக வசிக்கும் துறவிகளின் பாரம்பரியத்துடன் ஒத்துப்போகிறது. "மன்பெரும் பீடிகை என்பிறப்பு உணர்ந்தேன் ஈங்குஎன் வரவுஇதுஈங்கு எய்திய பயன்இது பூங்கொடி அன்னாய் யார்நீ என்றலும், ஆயிழை தன்பிறப்பு அறிந்தமை அறிந்த தீவ திலகை செவ்வனம் உரைக்கும் ஈங்குஇதன் அயலகத்து இரத்தின தீவத்து ஓங்குஉயர் சமந்தத்து உச்சி மீமிசை அறவியங் கிழவோன் அடிஇணை ஆகிய பிறவி என்னும் பெருங்கடல் விடூஉம் அறவி நாவாய் ஆங்குஉளது ஆதலின் தொழுதுவலம் கொண்டு வந்தேன் ஈங்குப் பழுதுஇல் காட்சிஇந் நன்மணிப் பீடிகை தேவர்கோன் ஏவலின் காவல் பூண்டேன் தீவ திலகை என்பெயர் இதுகேள்:" பெருமை பொருந்திய, புகழ் பெற்ற, இப் பெரும் பீடிகையால் என் முற்பிறப்பினை [என் பழைய பிறப்பைப்] பற்றித் தெரிந்து கொண்டேன். இது நான் அடைந்த பயன். பூங்கொடியே நீ யார் என்பதைத் தெரிந்து கொள்ளலாமா?” என மணிமேலை கேட்டாள். மணிமேகலை தனது முற்பிற்பினை அறிந்ததை தீவதிலகை அறிந்தாள். நல்ல முறையில் சில செய்திகளைக் கூறலானாள். “இந்த மணிபல்லவத் தீவின் அருகில் இரத்தினத் தீவகம் உள்ளது. அதில் உள்ள சமந்தகம் என்ற மலை உச்சியின் மேல், தன்னைச் சேர்ந்தவர்களைப் பிறவிக் கடலில் இருந்து கரை சேர்க்கும் புத்தரின் பாத பீடிகை உள்ளது. (சமந்தகம் என்பது இலங்கையில் உள்ள சிவனொளி பாதமலை) அதனை வலம் செய்து இங்கு வந்தேன். குற்றிமின்றிக் காட்சி தரும் இந்தப் பாத பீடத்தை இந்திரனின் ஆணையால் காவல் செய்து வருகிறேன். என் பெயர் தீவதிலகை” என்று கூறினாள் என்கிறது. இந்தக் காவியத்தின்படி, கி.பி இரண்டாம் நூற்றாண்டில் தமிழ் மக்கள் புத்த மதத்தைப் பின்பற்றினர். சம்மன மலையின் உச்சியில் புத்தரின் பாதச் சுவடு இருப்பதை அவர்கள் அறிந்திருந்தனர். வட இந்தியாவில் பன்னிரண்டு ஆண்டு பஞ்சத்தின் போது சமண மதம் (Jainism) கி.மு மூன்றாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டிற்கு வந்தது. மௌரிய வம்சத்தின் நிறுவனர் சந்திர குப்த மௌரியரும் [The founder of the Maurya dynasty, Chandragupta Maurya / reigned 320 BCE – 298 BCE] தனது மகன் பிந்துசாரனுக்கு [Bindusara] ஆட்சியைக் கொடுத்துவிட்டு தெற்கே ஓய்வு பெற்றார். அதைத் தொடர்ந்து புத்த மதம் உடனடியாகத் தமிழ் நாட்டிற்கு வந்தது. வி.ஏ. ஸ்மித் வலியுறுத்தியது போல், புத்த மதம் உண்மையில் தமிழ் நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்திருக்க வேண்டும். 'The Early History of India - Vincent A. Smith, Third edition, 1914' and 'Asoka, the Buddhist Emperor of India. By Vincent A. Smith, Third edition, 1919'. என்ற நூல்களைப் பார்க்கவும். இன்று காணப்படும் மன்னார் வளைகுடா, தெற்கு தமிழ்நாடு மற்றும் இலங்கையின் தென் மேற்குப் பகுதியில் உள்ள கடல்பகுதி, பழங்காலத்தில் மலைகள், ஆறுகள் மற்றும் பரந்த நிலப்பகுதியாக இருந்திருக்கலாம். கன்னியாகுமரி முதல் இலங்கையின் தென்பகுதி வரை ஒரு தொடர்ந்த நிலப்பகுதியாக இருந்திருக்க வாய்ப்புண்டு. ஒரு நேரத்தில், இயற்கையின் மிகப் பெரிய மாறுபாடாக, நிலச்சரிவு அல்லது கடுமையான நிலக் கவிழ்ச்சி ஏற்பட்டது. இதன் விளைவாக மலைகள் மற்றும் சுற்றியுள்ள நிலப்பகுதிகள் கடலுக்குள் ஆழமாக கவிழ்ந்து மூழ்கியிருக்கும். இதனால் இன்றைய மன்னார் வளைகுடாவின் ஆழமான கடல்தொகுப்பு உருவானது. பண்டைய தமிழர்களும் சிங்களர்களும் பெரும் கடல் வெள்ளம் பற்றிய நினைவுகளை தலைமுறை தோறும் கொண்டுள்ளனர். இதனால் இந்த பெரும் பேரழிவு மிகப் பழமையானது அல்ல, சுமார் 5000 ஆண்டுகளுக்குள் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. இது 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட சுனாமி போன்ற ஒரு பெரும் இயற்கை பேரழிவாக இருந்திருக்கலாம். Part: 134 / APPENDIX – "The Chronicles of Ceylon and the Tamil Epics Silappathikaram and Mannimeghalai" Then Mannimeghalai happened to meet a lady named Theeva-Thilagai in the island Mannipallavam. This Theeva-Thilagai, having worshiped the Buddha’s feet on the Sammana Kutta, was in guard of the Buddha Seat. The above narrative is given in the verses 20 to 30 in the Canto 11 of the Epic Mannimeghalai. மன்பெரும்பீடிகைஎன்பிறப்புஉணர்ந்தேன் ஈங்குஎன்வரவுஇதுஈங்குஎய்தியபயன்இது பூங்கொடிஅன்னாய்யார்நீஎன்றலும், ஆயிழைதன்பிறப்புஅறிந்தமைஅறிந்த தீவதிலகைசெவ்வனம்உரைக்கும் ஈங்குஇதன்அயலகத்துஇரத்தினதீவத்து ஓங்குஉயர்சமந்தத்துஉச்சிமீமிசை அறவியங்கிழவோன்அடிஇணைஆகிய பிறவிஎன்னும்பெருங்கடல்விடூஉம் அறவிநாவாய்ஆங்குஉளதுஆதலின் தொழுதுவலம்கொண்டுவந்தேன்ஈங்குப் பழுதுஇல்காட்சிஇந்நன்மணிப்பீடிகை தேவர்கோன்ஏவலின்காவல்பூண்டேன் தீவதிலகைஎன்பெயர்இதுகேள்: The translation in brief: Quote ‘There on the high peak of the hill Samantakuta there are the footprints of the Buddha. Having offered worship at the footprints I came to this island long ago. Since then I have remained here keeping guard over this " Dharma-seat" under the orders of Indra. My name is Tiva-Tilakai (Dvipa Tilaka). People following the Dharma of the Buddha strictly, offering worship to this "Buddha’s seat" will gain knowledge of their previous birth, knowing their past as a result of this worship’. Unquote Tamil people were following of the Buddhist faith as per this epic around the second century A. D. They were aware of the Buddha’s foot print on the top of the Sammana hill’. The Samanna religion, (Jainism), came to Tamil country about third century B. C. during a twelve year famine in north India. The founder of the Maurya dynasty, Chandragupta Maurya, too retired to South, after giving the reign to his son Bindusara. The Buddhism followed suit immediately after to the Tamil country. The Buddhism must have really come to Lanka from Tamil country, as asserted by V. A. Smith. See References 15 and 21. The present day Gulf of Mannar between the southern Tamil Nadu and south-west coast of Sri Lanka must been a land with hills, and rivers around it. The dotted line connecting Cape Commorin (Kannnya-Kumari) to the southern tip of Sri Lanka must have been the extent of land. A slope stability failure must have taken place in which the hills and adjoining lands plunged deep into the ocean as shown by the two arrows. The picture below is a rendering showing the bathymetric contours of the Gulf Mannar in a continuous seascape. The memories of the Tamils and the Sinhalese about an ancient sea deluge have not faded. Therefore the deluge, the slope stability failure, must have happened not very long ago. The Biblical flood, Noachic flood, as per the introductory page XXXVIII of the Reference 42 is about 3044 B. C. This slope stability failure too must have occurred within the last 5000 years, or could even be recent. The effect must have been colossal and very destructive, similar to the Tsunami which occurred during the Christmas time of the year 2004 REFERENCES 15. The Early History of India by Vincent A. Smith, 3Rd edition, 1914 21. Asoka – The Buddhist Emperor of India by Vincent A. Smith, Third Edition 1919 42. The Mahavansi, The Raja-Ratnacari, The Raja-Vali Translation by Edward Upham, M. R. A. S. and F. S. A. Volume 1, 1833 நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 135 தொடரும் / Will follow துளி/DROP: 2096 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 134 https://www.facebook.com/groups/978753388866632/posts/34326065530375322/?
-
இஸ்ரேல் - கட்டார் - துபாய் - அபுதாபி மீது ஈரான் தாக்குதல்
டுபாய் விமான நிலையத்திற்கு அருகில் ட்ரோன் தாக்குதல் ; விமான பயணங்கள் இடைநிறுத்தம் Published By: Digital Desk 3 16 Mar, 2026 | 09:05 AM டுபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே திங்கள்கிழமை ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த ட்ரோன் தாக்குதலின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், எனினும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலின் பின்னர் பாதுகாப்பு காரணங்களால் விமானப் பயணங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக டுபாய் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டுபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே ஏற்பட்ட ட்ரோன் தாக்குதலில் எரிபொருள் கொள்கலன் ஒன்று சேதமடைந்துள்ளதாக டுபாய் ஊடக நிறுவனம் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், டுபாய்க்கு வருகை தரும் மற்றும் டுபாயிலிருந்து புறப்படும் விமானப் பயணங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக எமிரேட்ஸ் விமான நிறுவனம் எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி ஈரான் மீது அமெரிக்க - இஸ்ரேல் போர் ஆரம்பத்தித்த பின்னர், வளைகுடா அரபு நாடுகள் 2,000-க்கும் மேற்பட்ட ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல்கள் அமெரிக்க இராஜதந்திர அலுவலகங்கள் மற்றும் இராணுவத் தளங்களை மட்டுமன்றி, வளைகுடா பிராந்தியத்தின் முக்கிய எண்ணெய் உட்கட்டமைப்புகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், ஹோட்டல்கள், குடியிருப்பு மற்றும் அலுவலகக் கட்டிடங்களையும் குறிவைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 2020 ஆம் ஆண்டில் ஈரானின் பரம எதிரியான இஸ்ரேலுடனான உறவுகளை இயல்பாக்கிய ஐக்கிய அரபு அமீரகம், தாக்குதல்களின் பெரும் தாக்குதலை எதிர்கொண்டது. ஆனால் அனைத்து வளைகுடா அரபு நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன, மேலும் அனைவரும் ஈரானை கண்டித்துள்ளனர். https://www.virakesari.lk/article/241069
-
சீன மக்கள் குடியரசின் குடிவரவு நிர்வாக பிரதி அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கிடையில் சந்திப்பு!
சீன மக்கள் குடியரசின் குடிவரவு நிர்வாக பிரதி அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கிடையில் சந்திப்பு! Published By: Digital Desk 1 16 Mar, 2026 | 10:00 AM சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பு குறித்த இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்காக இலங்கைக்கு வருகை தந்துள்ள சீன மக்கள் குடியரசின் தேசிய குடிவரவு நிர்வாக பிரதி அமைச்சர் Zhang Yong தலைமையிலான பிரதிநிதிகள் குழு, 14ஆம் திகதி பொலிஸ் தலைமையகத்தில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவை சந்தித்துள்ளனர். இதன்போது, திட்டமிடப்பட்ட குற்றங்கள், ஆட்கடத்தல், சைபர் குற்றங்கள் போன்ற இரு நாடுகளினதும் பொதுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் செயற்பாடுகளைத் தடுப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றம் மற்றும் புதிய தொழில்நுட்பப் பயன்பாடு குறித்து கலந்துரையாடப்பட்டது. சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பு குறித்த இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்காக இலங்கைக்கு வருகை தந்துள்ள சீன மக்கள் குடியரசின் தேசிய குடிவரவு நிர்வாக பிரதி அமைச்சர் Zhang Yong தலைமையிலான பிரதிநிதிகள் குழு, 14ஆம் திகதி பொலிஸ் தலைமையகத்தில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவை சந்தித்துள்ளனர். இதன்போது, திட்டமிடப்பட்ட குற்றங்கள், ஆட்கடத்தல், சைபர் குற்றங்கள் போன்ற இரு நாடுகளினதும் பொதுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் செயற்பாடுகளைத் தடுப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றம் மற்றும் புதிய தொழில்நுட்பப் பயன்பாடு குறித்து கலந்துரையாடப்பட்டது. அத்துடன், அன்றையதினம் Zhang Yong தலைமையிலான தூதுக்குழுவினருக்கும், பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபாலவிற்கும் இடையில் பொதுப் பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையிலும் பொலிஸ் மா அதிபர் கலந்துகொண்டார். அங்கு இரு நாடுகளினதும் குடிவரவு நிர்வாகம், திட்டமிடப்பட்ட குற்றங்களைத் தடுத்தல் மற்றும் பொதுப் பாதுகாப்பு தொடர்பான முக்கிய விடயங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆராயப்பட்டது. இந்த நிகழ்வில் இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong, பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார பிரதி அமைச்சர் சுனில் வடகல, அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பதில் கட்டுப்பாட்டாளர் நாயகம் சமிந்த பத்திராஜ உள்ளிட்ட உயர் அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/241075
-
ஈரான் நாட்டுப்புற சமையல்
மத்திய கிழக்கு பிரச்சனைகளுடன் நம்ம உடையார் தனது கால்களை ஈரானுக்குள் ரொம்ப ஆழமாய் விட்டுட்டார் போல உள்ளது.
-
வீதியோரம்.
வீதியோரம் . மலர் . .......... 13. இந்த சில மாதங்களில் “வீதியோரக்கடை”யடியில் பல மாற்றங்கள் உண்டாகி விட்டன. மின்சார சபையால் விகாரையில் இருந்து கடையையும் தாண்டி ஒரு மைல் நீளத்துக்கு வீதியை அகலமாக்கி வீதி விளக்குகள் பொருத்தப்பட்டு இருந்தன. அதனால் கடைக்கும் அவர்களது வீட்டுக்கும் குளத்தின் கரைகளிலும் விளக்குகள் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதனால் அவர்கள் வீட்டின் அருகில் ஒரு பெரிய வட்டமான கிணறு ஒன்றும் வெட்டி மோட்டார் போட்டு பக்கத்தில் உயரத்தில் தண்ணீர் தொட்டி அமைத்து விட்டிருந்தார்கள். அதில் இருந்து குழாய்கள் பொருத்தி சமைக்க, குடிக்க, குளிக்க அதற்கொரு அறை என்று எல்லாம் அமைத்திருந்தனர். மேலும் ஆட்களை வைத்து பின்னால் ஐந்து ஏக்கர் வரை காடுவெட்டி நிலமெல்லாம் எரித்து டிராக்ட்டரால் சமன் படுத்தி விட்டிருந்தார்கள்.இனி அதில் விவசாயத்துடன், வாழை மற்றும் பல பயிர்கள் பயன்தரு பழ மரங்கள் எல்லாம் நட்டு வைத்திருந்தார்கள். இப்போதெல்லாம் அங்கு தப்பான காரியங்கள் ஒன்றும் இருப்பதில்லை.முன்பு மது வித்த பையனும் அங்கு வந்து கடையில் எடுபிடி வேலைகள் செய்து வருவதால் அவனுக்கும் ஒரு சம்பளம் போட்டுக் குடுக்கிறார்கள். வழக்கமாய் போய்வரும் வழியில் அண்ணாச்சியும் வந்து இளைப்பாறிப் போகிறார்…… அன்று காலையில் சுஜிதா மேகலையிடம் அம்மா இன்று பாடசாலையால் பக்கத்துக் கிராமத்தில் ஒரு மருத்துவ முகாம் அமைக்கப் போகிறோம். சில நேரம் நான் வரத் தாமதமாகலாம் என்று சொல்லி விட்டு ஸ்கூட்டியில் வெள்ளை யூனிபார்முடன் போகிறாள். யுகேந்திரனும் அந்த இளஞனுடன் பணம் போடுவதற்கு வங்கிக்கு போயிருக்கிறான். விநோதன் வீட்டுக்குள் ஏதோ வேலைகள் செய்து கொண்டிருக்கிறான். மணிமேகலை மட்டும் கடைக்குள் உணவு சமைப்பதற்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருக்கிறாள். அப்போது மிக வேகமாய் சுஜிதா ஸ்கூட்டியில் ஓடிவந்து கடைக்குமுன் அதை விழுத்திவிட்டு உள்ளே ஓடிவந்து அம்மா என்னைக் காப்பாத்துங்கோ, அவங்கள் என்னைத் திரத்திக் கொண்டு வாறாங்கள். என்று கத்திக் கொண்டு அவள் பின்னால் கோழிக்குஞ்சுபோல் ஒட்டிக்கொண்டு நிக்கிறாள் பயத்துடன். மேகலையும் நீ பயப்பிடாதை, யாரடி அது துரத்தி வாறது என்று சொல்லி விநோ இஞ்சை ஒருக்கால் வாங்கோ என்று பின்னால் பார்த்து குரல் கொடுக்கிறாள். அப்போது ஒரு வெள்ளை வான் வந்து அரை வட்டமடித்து நிக்கிறது. அதிலிருந்து மூன்றுபேர் இறங்கி கடைக்குள் ஓடி வருகிறார்கள். நீ மாறன் மகள் சுஜிதாதானே என்று கத்த அது நானில்லை என்று சொல்லிக்கொண்டு அவள் பின்னால் ஓடுகிறாள். அவர்களில் ஒருவன் டேய் இவள் சுஜிதாதான், நல்ல வடிவா வளர்ந்து விட்டாள் விடாதையுங்கோடா பிடியாடா அவளை இனி எங்களுக்கு கொண்டாடட்டம்தான் என்று கத்திக் கொண்டு துரத்துகிறான். மற்றவன் அவள் மட்டுமென்ன இவளும் செமையாதான் இருக்கிறாள்…… பொறுடா இவளைப் பிறகு பார்க்கலாம் முதல்ல அவளைப் பிடிப்பம் வாடா என்று முன்னால் ஓடியவனைத் தொடர்ந்து இருவரும் ஓடுகிறார்கள். அவர்களுக்கு முன்னால் ஓடிய சுஜிதா வீட்டை அடைந்து கதவைத் திறக்க முயல அது திறபடவில்லை, உள்ளிருந்து விநோதன் சுஜிதா நீ பயப்பிடாதே நேராக காட்டுக்குள் ஓடு, பின்னால் திரும்பிப் பார்க்காதே நான் இருக்கிறேன் என்று சொல்ல சரி அப்பா என்று சொல்லிவிட்டு காட்டை நோக்கி ஓடுகிறாள். வீட்டுக்கும் காட்டுக்கும் இடையில் கொஞ்ச தூரம் இருந்தது. முன்னால் வந்தவன் நில்லடி என்று சொல்லி அவளை நெருங்குகிறான், தொடர்ந்து பின்னால் இருவரும் ஓடிவர அவர்களுக்குப் பின்னால் மணிமேகலையும் ஓடிவருகிறாள். அவன் எட்டி அவள் முடியை பிடிக்கும் சமயம் சரியாக அவன் பிடரியில் “டப்” என்றொரு சத்தம்.அவன் வேகமாய் கால்கள் தேய திரும்பி விழுகிறான். அவன் விழுவத்தைக் கண்டு இவங்கள் இருவரும் ஒரே நேரத்தில் திரும்பிப் பார்க்க மிகக் குறைவான வினாடியில் அந்த இருவர் நெற்றியிலும் “டப் டப்” பொட்டு விழுந்திருக்கு. திடுக்கிட்ட மேகலை திரும்பிப் பார்க்க பின்னால் வீட்டருகில் விநோதன் சாவகாசமாய் பிஸ்டலை அதன் உறைக்குள் போட்டுக்கொண்டிருந்தான். பின்பு விறகு அள்ளும் வண்டிலை எடுத்து வந்து அவர்களை அதில் போட்டுகொண்டு சுஜிதாவிடம் இனி நீ பயப்பிடாமல் வீட்டுக்குப் போய் இரு ………இப்பொழுது இங்கு ஒன்றுமே நடக்கவில்லை சரியா என்று சொல்லி அனுப்பி வைக்கிறான். பின் மேகலையும் அவனுமாய் அவர்களை காட்டுக்குள் வெகுதூரம் குளகரையோடு தள்ளிக்கொண்டு போய் அவர்களது ஆடைகள் முழுவதையும் களைந்து விட்டு வெற்றுடலுடன் குளத்துக்குள் தள்ளி விடுகிறார்கள். அப்போது மேகலை, விநோதனும் அசந்திருந்த நேரத்தில் அந்த பிஸ்டல் , தோட்டா, பெல்ட் எல்லாவற்றையும் தூக்கி அந்தக் குளத்தில் தூரமாக எறிந்து விட்டு இனிமேல் இந்தக் கோதாரி ஒண்டும் வீட்டுக்குள் இருக்க வேண்டாம் என்று சொல்கிறாள் . நானும் அதைத்தான் நினைத்தேன் நீ செய்து விட்டாய் என்று விநோவும் சொல்கிறான். சற்று நேரத்தில் பல முதலைகள் கூட்டமாய் வந்து அந்த உடல்களை உள்ளே இழுத்துக் கொண்டு போகின்றன. ஆடைகளை குப்பை மேட்டில் போட்டு விறகுகளால் மூடி எரித்து விடுகிறார்கள். பின் கடையடிப்பக்கமாய் வந்து குளித்துவிட்டு வீட்டுக்குள் வருகின்றனர்.......! மலர் ............. 🦈 13.
-
ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஒத்துழைக்குமாறு ட்ரம்ப் கோரிக்கை
ஹோர்முஸ் நீரிணை தொடர்பில் ஈரானின் புதிய எச்சரிக்கை Mar 16, 2026 - 04:49 PM ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஹோர்முஸ் நீரிணையை எந்தவொரு நாடும் பயன்படுத்துவதற்கு இடமளிக்கப் போவதில்லை என ஈரான் வெளியுறவு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் எஸ்மாயில் பகாயி தெரிவித்துள்ளார். அமெரிக்காவும் இஸ்ரேலும் பிராந்தியத்தில் ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளதால், தற்போது இந்த கடல் வழியாக கப்பல் போக்குவரத்து விசேட நிபந்தனைகளின் கீழ் இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு ஈரானிய ஆயுதப் படைகளின் வசம் இருப்பதாகவும், தனது தேசியப் பாதுகாப்பிற்காகத் தேவையான எந்தவொரு நடவடிக்கையையும் எடுப்பதற்கு ஒரு கடற்கரை நாடு என்ற ரீதியில் ஈரானுக்கு உரிமை உண்டு என்றும் அவர் கூறியுள்ளார். வரலாற்று ரீதியாக இந்த கடல் பாதையின் பாதுகாவலனாக ஈரான் இருந்து வந்த போதிலும், தற்போது ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற நிலைக்கு அமெரிக்காவும் இஸ்ரேலுமே பொறுப்பேற்க வேண்டும் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். உலகின் எண்ணெய் போக்குவரத்திற்கு மிக முக்கியமான இந்த கடல் பாதையை, தங்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தும் நாடுகள் பயன்படுத்துவதற்கு இடமளிக்கப் போவதில்லை என ஈரான் கடுமையாகத் தெரிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmmt3a9xk000n356p0qi98vj0
-
98வது ஒஸ்கார் விருதுகள்!
ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் மின்னிய நட்சத்திரங்கள் - ஒரு புகைப்படத் தொகுப்பு பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,அமெரிக்க திரைப்படத் தயாரிப்பாளர் பால் தாமஸ் ஆண்டர்சன் "ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்" படத்திற்காக சிறந்த தழுவல் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை வென்றார். இது அவருக்கு முதல் அகாடமி விருது. 3 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,அமெரிக்க திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான ரியான் கூக்லர் தனது 'சின்னர்ஸ்' படத்திற்காக சிறந்த அசல் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதைப் பெறுகிறார். பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,ஃபிராங்கன்ஸ்டைன் படத்திற்காக ஆஸ்கர் விருது பெற்ற ஒப்பனை மற்றும் சிகை அலங்கார கலைஞர்களான ஜோர்டான் சாமுவேல் மற்றும் மைக் ஹில் ஆகியோரை மெக்சிகன் இயக்குநர் கில்லர்மோ டெல் டோரோ வாழ்த்தினார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஃபிராங்கன்ஸ்டைன் படத்திற்காக சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றவுடன், கேட் ஹாலி படத்தின் இயக்குநரை நோக்கி, "கில்லர்மோ (டெல் டோரோ), நன்றி என்று கூறினார். பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,சிறந்த அனிமேஷன் படத்திற்கான ஆஸ்கர் விருதை 'கே-பாப் வாரியர்ஸ்' படத்திற்காக அமெரிக்க இயக்குநர் கிறிஸ் அப்பெல்ஹான்ஸ், தென் கொரிய-கனடா திரைக்கதை எழுத்தாளர் மேகி காங் மற்றும் தயாரிப்பாளர் மிச்செல் வோங் ஆகியோர் வென்றனர். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,'இஃப் ஐ ஹேட் லெக்ஸ் ஐ வுட் கிக் யூ' படத்தின் நட்சத்திரமான ரோஸ் பைர்ன், டால்பி தியேட்டர் சிவப்பு கம்பளத்தில் பிரமிக்க வைக்கும் 'டியோர்' உடையில் தோன்றினார். பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,'சின்னர்ஸ்' படத்தில் இரட்டையர்களாக நடித்த மைக்கேல் பி. ஜோர்டான் பட மூலாதாரம்,Penske Media via Getty Images படக்குறிப்பு,'சென்டிமென்ட் வேல்யூஸ்' பாடலின் நட்சத்திரமான நார்வேயின் ரெனேட் ரென்ஸ்வே, 2026 ஆஸ்கர் விருதுக்கு சிவப்பு நிற ஆடையில் வந்திருந்தார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,'தி சீக்ரெட் ஏஜென்ட்' படத்தின் நட்சத்திரமான பிரேசிலிய வாக்னர் மௌரா, ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் காணப்பட்டார். பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டருக்கு லியோனார்டோ டிகாப்ரியோ வந்திருந்தார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,'ஹேம்நெட்' படத்தில் ஷேக்ஸ்பியரின் மனைவியாக நடித்த ஜெஸ்ஸி பக்லி, ஆஸ்கர் விருது விழாவுக்கு வந்திருந்தார். பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,'சுப்ரீம் மார்டி' படத்தில் நடித்ததற்காக பரிந்துரைக்கப்பட்ட டிமோதி சலமெட் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,'புகோனியா' நட்சத்திரம் எம்மா ஸ்டோன் வெள்ளி நிற உடையில் விழாவுக்கு வந்திருந்தார். பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,ஜேக்கப் எலோர்டி பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,'ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்' படத்தில் செர்ஜியோ 'சென்செய்' செயிண்ட் கார்லோஸாக நடித்த பெனிசியோ டெல் டோரோ, கருப்பு நிற ஆடை மற்றும் சன்கிளாஸ்களில் சிவப்பு கம்பளத்தில் காணப்பட்டார். பட மூலாதாரம்,WWD via Getty Images படக்குறிப்பு,'ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்' படத்தில் வில்லா பெர்குசனாக நடித்த சேஸ் இன்பினிட்டி, ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டருக்கு வந்திருந்தார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் 'சிராட்' படத்தின் இயக்குநர் கலீசியாவைச் சேர்ந்த ஆலிவர் லாக்ஸ் . பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,'ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்' படத்தில் பெர்ஃபிடியா பெவர்லி ஹில்ஸாக நடித்த டெயானா டெய்லர், 98வது அகாடமி விருதுகளில் கருப்பு மற்றும் வெள்ளை நிற உடையில் தோன்றினார், அதில் முத்து எம்பிராய்டரி இடம்பெற்றிருந்தது. பட மூலாதாரம்,FilmMagic படக்குறிப்பு,'டிரெய்ன் ட்ரீம்ஸ்' படத்தில் தோன்றிய பிரிட்டிஷ் நட்சத்திரம் ஃபெலிசிட்டி ஜோன்ஸ், 2026 ஆஸ்கர் விருது விழாவிற்கு பிராடா உடையில் வந்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cdxz1nn40wpo
-
தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் திகதிகள் அறிவிப்பு
தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் திகதிகள் அறிவிப்பு 16 Mar, 2026 | 04:40 PM தமிழ்நாடு -மேற்கு வங்காளம்- கேரளம்- அசாம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கான பொதுத் தேர்தல் நடைபெறும் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் புது தில்லியில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டு தெரிவித்ததாவது... இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாம், தென்னிந்திய மாநிலங்களில் ஒன்றான கேரளம், தமிழ்நாட்டை ஒட்டி உள்ள யூனியன் பிரதேசமான புதுச்சேரி ஆகிய மூன்று மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கு ஒரே கட்டமாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஒன்பதாம் திகதியன்று சட்டைப் பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ஆம் திகதியன்று சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து மேற்கு வங்காள மாநிலத்தில் ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 என திகதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல்கள் நிறைவடைந்த பிறகு எதிர்வரும் மே மாதம் நான்காம் திகதி அன்று ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை நடைபெறும்'' என தெரிவித்துள்ளார். இதனிடையே தமிழ்நாட்டில் நடைபெறும் சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 30 தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் ஆறாம் திகதி ஆகும். வேட்பு மணி வேட்பு மனு பரிசீலனை ஏப்ரல் ஏழாம் திகதி என்றும், வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கு ஏப்ரல் ஒன்பதாம் திகதி தி நிறைவு திகதி என்றும் அறிவித்திருக்கும் தேர்தல் ஆணையம்.. ஏப்ரல் 23ஆம் திகதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தெரிவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/241126