Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Past hour
  2. இந்தியா அமைதிப்படை காலத்தில் மண்டையன் குழுவை நடாத்தி பல இளைஞர்கள் சித்திரைவாதை செய்து கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்களை தமிழ் தேசிய கூட்டமைப்பில் 2004 இல் சேர்ந்த போது சொல்லப்பட்ட காரணம் சிங்கள தரப்புக்கு எதிராக தமிழ் அமைப்புகள் சேர்ந்து பலமான கூட்டணி அமைக்க வேண்டும். 2010 தேர்தலில் தமிழர்களை அழித்த மகிந்தா சரத்பொன்சேகா ஆகிய இருவர்களில் சரத் பொன்சேகாவுக்கு யாழில் ஏன் அதிகளவு மக்கள் வாக்களித்தார்கள்? இவர்களை தவிர சிவாஜிலிங்கம் , விக்கிரமபாகு கருணாரத்தினா போன்றவர்களுக்கு ஏன் வாக்களிக்கவில்லை. கடைசியாக நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வடபகுதியில் ஜேவிபிக்கு யாழ் மண்ணில் இருந்து 3 வேட்பாளர்கள் ஏன் தெரிவு செய்தார்கள். இதே ஜேவிபி தமிழர்கள் கொல்லபடும்போது தமிழர்களுக்கு எதிராக இருந்ததை யாழ் மக்கள் ஏன் கண்டுகொள்ளவில்லை. எம்மவர்களில் சிலர் வைகோ அவர்களை கடந்த 7,8 வருடங்களாக குறை சொல்கிறார்கள். அவர்கள் சொல்லும் காரணம் திமுகவில் இருந்து வை கோ பிரியும் போது வைகோவுக்காக சிலர் தீக்குளித்தார்கள். ஆனால் 2004 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் வை கோ இருந்தார். அப்பொழுது இயக்கமும் இருந்தது. அக்காலத்தில் எம்மவர்கள் திக்குளித்தவர்கள் பற்றி சொல்வதில்லை. வை கோ அவர்கள் பாரதீய ஜனதா, தமிழகத்தில் ஊடுருவதை தடுக்கத்தான் திமுகவுக்கு ஆதரவு என்று சொல்கிறார். இதே போலதானே 2004 இல் சிங்களதரப்புக்கு எதிராக போட்டியிட தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இயக்கம் இருந்த காலத்தில் சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்கள் சேர்க்கப்பட்டார்
  3. முக்கிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தொடர்பான அறிவிப்பு Mar 27, 2026 - 11:55 PM நாட்டிலுள்ள பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தொடர்பாக நீர்ப்பாசனத் திணைக்களம் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, அந்தத் திணைக்களத்தின் கீழுள்ள 73 நீர்த்தேக்கங்களில் தற்போது 76.47 சதவீத நீர் இருப்பு காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் உள்ள 9 நீர்த்தேக்கங்கள் 61.84 சதவிகித கொள்ளளவைக் கொண்டுள்ளதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள 10 நீர்த்தேக்கங்களின் நீரின் கொள்ளளவு 92.01 சதவிகிதமாகும். பதுளை மாவட்டத்தில் உள்ள 7 நீர்த்தேக்கங்களின் நீரின் கொள்ளளவு 94.93 சதவிகிதமாகவும், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 4 நீர்த்தேக்கங்கள் 91.03 சதவிகிதமாகவும் உள்ளன. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள 10 நீர்த்தேக்கங்கள் 75.14 சதவிகித நீர் கொள்ளளவைக் கொண்டுள்ளதாகவும், காலி மாவட்டத்தில் உள்ள இரண்டு நீர்த்தேக்கங்கள் 72.25 சதவிகித நீர் கொள்ளளவைக் கொண்டுள்ளதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கண்டி மாவட்டத்தில் உள்ள மூன்று நீர்த்தேக்கங்களில் 92.47 சதவீதமும், குருநாகல் மாவட்டத்தில் உள்ள 10 நீர்த்தேக்கங்களில் 76.45 சதவீதமும், மொனராகலை மாவட்டத்தில் உள்ள மூன்று நீர்த்தேக்கங்களில் 80.17 சதவீதமும் நீர் கொள்ளளவு உள்ளதாகக் கூறப்படுகிறது. பொலன்னறுவையில் உள்ள நான்கு நீர்த்தேக்கங்களில் 86.55 சதவீதமும், புத்தளத்தில் உள்ள இரண்டு நீர்த்தேக்கங்களில் 55.98 சதவீதமும் நீரின் கொள்ளளவு உள்ளது. திருகோணமலையில் உள்ள ஐந்து நீர்த்தேக்கங்களில் 95.62 சதவீதமும், மன்னார் மாவட்டத்தில் உள்ள நான்கு நீர்த்தேக்கங்களில் 59.97 சதவீதமும் நீர் கொள்ளளவு உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் மேலும் தெரிவிக்கிறது. https://adaderanatamil.lk/news/cmn98es4v0007356po4c1a4vf
  4. அமெரிக்கா, இஸ்ரேலின் கடும் தாக்குதல்களை தாங்கி இரான் அரசு நிலைத்திருப்பது எப்படி? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,மார்ச் 21 அன்று தெஹ்ரானில் நடைபெற்ற அமெரிக்க மற்றும் இஸ்ரேல் எதிர்ப்புப் போராட்டத்தின் போது ஒரு பெண் முழக்கங்களை எழுப்புகிறார். கட்டுரை தகவல் சர்பாஸ் நசாரி பிபிசி மானிட்டரிங் 3 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கடும் தாக்குதல்களுக்கு மத்தியிலும், இரான் அரசு உள்நாட்டுப் பாதுகாப்பின் மீதான தனது பிடியைத் தளர்த்திக் கொள்ளவில்லை. தலைமையின் மீது மக்களிடையே ஆழ்ந்த அதிருப்தி இருந்தபோதிலும், போரின் போது பெரிய அளவிலான போராட்டங்கள் நடைபெறவில்லை. சில நிபுணர்கள் இதனைப் போர் தொடங்கிய பிறகு உருவான அடக்குமுறைச் சூழலோடு தொடர்புபடுத்திப் பார்க்கிறார்கள். ஜனவரி மாதம் நடைபெற்ற அரசு எதிர்ப்புப் போராட்டங்களை இரானிய அரசு ஒடுக்கிய விதம், மக்களிடையே அச்சத்தைப் பரப்பியுள்ளது. சோதனைச் சாவடிகள், பலத்த பாதுகாப்புப் படைகளின் குவிப்பு மற்றும் தினசரி கைதுகள் மூலம் அரசு தனது கட்டுப்பாட்டை இன்னும் தீவிரப்படுத்தியுள்ளது. மனித உரிமை ஆர்வலர்கள், மாற்றுக்கருத்து உள்ளவர்கள் மற்றும் வெளிநாட்டு ஊடகங்களுக்குப் போர் தொடர்பான படங்கள் மற்றும் வீடியோக்களை வழங்கியதாகக் குற்றம் சாட்டப்படுபவர்கள் கூட குறி வைக்கப்படுகிறார்கள். ஏறத்தாழ முழுமையான இணைய முடக்கம் காரணமாக, மக்கள் ஒருங்கிணைந்து செயல்படும் திறன் இன்னும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தகவல் தொடர்பு, ஒருங்கிணைப்பு மற்றும் தகவல் ஓட்டத்தைத் தடுத்து நிறுத்தியதன் மூலம், போராட்டங்களை ஏற்பாடு செய்யும் நெட்வொர்க்குகள் பெருமளவில் உடைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், அரசு ஆதரவாளர்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட இணைய வசதி வழங்கப்பட்டு, அரசு சொல்ல விரும்பும் கருத்துகள் (Narrative) இரான் நாட்டிற்கு வெளியே கொண்டு செல்லப்படுகின்றன. இதன் விளைவாக, அரசு எதிர்ப்பு என்பது ஆபத்தானது மட்டுமல்லாமல், மக்களை ஒருங்கிணைப்பதும் மிகவும் கடினமாகிவிட்டது - குறிப்பாகப் போர்க்காலத்தில், மக்கள் தங்கள் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். விவரிப்பு எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகின்றன? பட மூலாதாரம்,TABNAK படக்குறிப்பு,பல முக்கியத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் கொல்லப்பட்ட போதிலும், இரானில் ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை. இந்த அனைத்து முறைகளுடன் சேர்த்து, போர் குறித்த மக்களின் பார்வையை மாற்றவும் அரசு முயற்சிக்கிறது. அதிகாரிகள் இந்த மோதலை இஸ்லாமியக் குடியரசுக்கு எதிரானது என்று சொல்லாமல், இரான் நாட்டின் இறையாண்மை மீதான தாக்குதல் என்று சித்தரிக்கிறார்கள். இந்த வேறுபாடு முக்கியமானது. அரசு மீது அதிருப்தி கொண்டவர்கள் கூட வெளிநாட்டுத் தாக்குதலின் போது தேசியவாத உணர்வுகளால் ஈர்க்கப்படலாம். இது பெரும்பாலும் 'தேசிய ஒற்றுமைக்கான திரட்சி' (Rally-around-the-flag) விளைவு என்று அழைக்கப்படுகிறது. இது ஜூன் 2025-ல் நடந்த 12 நாட்கள் போரிலும் காணப்பட்டது. இதன் காரணமாக, தற்போது அரசு எதிர்ப்பு அணி திரட்டலுக்கான வாய்ப்பு குறைவாகவே தெரிகிறது. அரசு ஊடகங்கள் பொதுமக்களின் மரணங்களை சுட்டிக்காட்டுவதன் மூலமும், தங்கள் தாக்குதல்களைத் தற்காப்பு நடவடிக்கை (Defensive) என்று கூறுவதன் மூலமும் இந்த விவரிப்பை தொடர்ந்து வலுப்படுத்தி வருகின்றன. அதேபோல், அரசு ஆதரவு பேரணிகள் மற்றும் போராட்டங்கள் 'கட்டுப்பாடு, உறுதித்தன்மை மற்றும் வலிமை' என்ற பிம்பத்தை வெளிப்படுத்துகின்றன. அதிர்ச்சிகளைத் தாங்குவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு பட மூலாதாரம்,TASNIM படக்குறிப்பு,அரசு ஆதரவு ஆர்ப்பாட்டங்களை அதிகாரிகள் தொடர்ந்து ஏற்பாடு செய்து வருகின்றனர். உயர் மட்டத் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போதிலும், இந்த அமைப்பு வீழ்ச்சியடையாததற்குக் காரணம் அதன் கட்டமைப்பாகும். இரான் நாட்டின் அமைப்பு ஒரு தனி நபரைச் சார்ந்தது அல்ல, மாறாக மதம், ராணுவம், அரசியல் மற்றும் பொருளாதார நிறுவனங்களின் வலைப்பின்னலில் நிலைபெற்றுள்ளது. அதிகாரம் ராணுவம், மதத் தலைமை மற்றும் பாதுகாப்பு முகமைகள் எனப் பல நிறுவனங்களிடையே பிரிக்கப்பட்டுள்ளது, இதனால் ஒரு உயர்மட்டத் தலைவர் அகற்றப்பட்டாலும் அமைப்பு தொடர்ந்து இயங்குகிறது. வாரிசுரிமைக்கான முறையான மற்றும் முறையற்ற ஏற்பாடுகளும் தொடர்ச்சியைப் பேண உதவுகின்றன. இந்த வலிமையின் மையத்தில் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை உள்ளது. இது வெறும் ராணுவம் மட்டுமல்ல, அரசியல், பொருளாதார மற்றும் பாதுகாப்பு சக்தியாகவும் நாடு முழுவதும் ஆழமான பிடியைக் கொண்டுள்ளது. மூத்த தளபதிகள் கொல்லப்பட்ட போதிலும், இந்த அமைப்பு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது மற்றும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நடக்கும் விஷயங்களையும், மக்களின் எதிர்வினைகளையும் கட்டுப்படுத்துகிறது. மிக முக்கியமாக பொதுவாக ஒரு ஆட்சி வீழ்வதற்கான ஒரு பெரிய அறிகுறியான ராணுவம் அல்லது பாதுகாப்பு அமைப்பில் பெரிய அளவிலான பிளவு அல்லது கிளர்ச்சிக்கான அறிகுறிகள் இதுவரை தென்படவில்லை. போரில் 'பிழைத்திருப்பதே' உத்தி இரான் இந்தப் போரில் ஒரு பாரம்பரியமான வெற்றியைப் பெற முயற்சிக்கவில்லை, மாறாக ஒரு தனித்துவமான உத்தியைக் கடைப்பிடிக்கிறது - அதாவது எதிரிக்கு பாதிப்புகளை அதிகரிப்பது மற்றும் மோதலை நீட்டிப்பது. இரானிய தலைமைக்கு 'வெற்றி' என்பது போருக்குப் பிறகும் அதிகாரம் நிலைத்திருப்பதே ஆகும். இதற்கேற்ப, அது தனது வலிமையை, குறிப்பாக ஹோர்முஸ் நீரிணையைப் பயன்படுத்தி உலகளாவிய எரிசக்தி சந்தையின் மீது அழுத்தத்தை உருவாக்கி வருகிறது. இதன் மூலம் போர் வெறும் ராணுவ மோதலாக மட்டுமின்றி, எஞ்சி நிற்பதே வெற்றி என்ற போராக மாறியுள்ளது. யார் சோர்வடைகிறார்களோ அவர்கள் தோற்பார்கள். அதேநேரத்தில், சித்தாந்தமும் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஷியா பாரம்பரியத்துடன் தொடர்புடைய 'எதிர்ப்பு, தியாகம் மற்றும் வீர மரணம்' போன்ற சிந்தனைகள் தொடர்ந்து வலுப்படுத்தப்படுகின்றன. இந்தக் கட்டமைப்பில், வீரர்களின் மரணம் தோல்வியாகப் பார்க்கப்படாமல், வீரமாகச் சித்தரிக்கப்படுகிறது. இது 1980-களின் இரான் - இராக் போரில் காணப்பட்டது. எதிர்க்கட்சிகள் எங்கே? இரான் நாட்டில் அதிருப்தி பரவலாக உள்ளது, ஆனால் அதனை ஒரு ஒருங்கிணைந்த அரசியல் சவாலாக மாற்றக்கூடிய ஒரு கூட்டுத் தலைமை இல்லை. எதிர்க்கட்சிகள் பிளவுபட்டுள்ளன, பல தலைவர்கள் நாட்டிற்கு வெளியே உள்ளனர், உள்ளே இருப்பவர்கள் சிறையில் உள்ளனர். அதிருப்தி மட்டுமே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தாது என்று வரலாறு கூறுகிறது. அதற்கு அமைப்பு, தலைமை மற்றும் மாற்றுத் திட்டம் ஆகியவையும் அவசியம். வெளிநாட்டு அழுத்தத்தால் இந்த அமைப்பு பலவீனமடைந்தாலும், அடுத்தது என்ன நடக்கும் என்பது நிச்சயமற்றதாகவே உள்ளது. லிபியா மற்றும் இராக் போன்ற உதாரணங்கள், ஒரு தயார் நிலையிலான மாற்றுத் திட்டம் இல்லாமல் போனால் நாட்டில் அராஜகமும் நீண்டகால ஸ்திரமற்ற தன்மையும் ஏற்படும் அபாயத்தைக் காட்டுகின்றன. இரானின் இந்த வலிமை எப்போதும் நிலைத்திருக்குமா? பட மூலாதாரம்,Majid Saeedi/Getty Images படக்குறிப்பு,முன்னாள் அதி உயர் தலைவர் ஆயத்துல்லா காமனெயி மறைவைத் தொடர்ந்து, அமெரிக்க மற்றும் இஸ்ரேல் எதிர்ப்புப் போராட்டங்களின் போது பெண்கள் (படம்: மார்ச் 1, 2026). தற்போதைக்கு இரானின் அமைப்பு - நிறுவன வலிமை, ஒடுக்குமுறை திறன், உத்தி ரீதியான நெகிழ்வுத்தன்மை மற்றும் புவி-அரசியல் நிலை காரணமாக நிலைத்து நிற்பதாகத் தெரிகிறது, ஆனால் இதற்கென ஒரு விலையையும் கொடுக்க வேண்டியிருக்கலாம். மக்கள் மீதான தேவைக்கு அதிகமான கட்டுப்பாடு விபரீத விளைவுகளை ஏற்படுத்தலாம் மற்றும் தகவல்களைச் சார்ந்துள்ள அமைப்புகள் காலப்போக்கில் பலவீனமடையலாம், இது எதிர்காலத்தில் பெரிய அதிர்ச்சிகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. இறுதியில், இரான் நாட்டின் எதிர்காலம் வெளிநாட்டுத் தாக்குதல்களை விட, உள்நாட்டுக் காரணிகளான - சமூக அமைப்பு, பொருளாதார நெருக்கடி மற்றும் கட்டுப்பாடு மற்றும் அழுத்தத்திற்கு இடையிலான சமநிலை ஆகியவற்றையே அதிகம் சார்ந்து இருக்கும். இதனால்தான் அரசு வீதிகளிலும் ஒரு சமாந்தரப் போரை நடத்தி வருகிறது. இதன் மூலம் சாத்தியமான எந்தவொரு கிளர்ச்சியையும், மக்களின் கோபத்தையும் ஆரம்பத்திலேயே ஒடுக்க முடியும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cpwjxjkkr7po
  5. மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் சிஐடியினரால் கைது! Mar 27, 2026 - 11:30 PM மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். https://adaderanatamil.lk/news/cmn97i3350006356p3ihngs4f
  6. மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களால் இலங்கை மீது மீண்டும் புதிய அழுத்தங்கள் ; முதலீடுகளின் அடிப்படையிலான வளர்ச்சியை நோக்கி நகர்வதற்கு முழுமையான ஆதரவு - ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் 27 Mar, 2026 | 06:21 PM (நா.தனுஜா) இலங்கை இப்போது நெருக்கடியைக் கையாள்வதிலிருந்து பொருளாதார மீட்சியையும், வளர்ச்சியையும் நோக்கி நகர்ந்துவருகிறது. இருப்பினும் மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களின் விளைவாக எரிபொருள் விலைகளில் ஏற்பட்டுள்ள உயர்வு மற்றும் உலகளாவிய கட்டமைப்புக்களின் சேதங்கள் என்பன மீண்டும் புதிய அழுத்தங்களைத் தோற்றுவித்துள்ளன என ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மஸாட்டோ கன்டா சுட்டிக்காட்டியுள்ளார். பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்ததுல், முக்கிய பங்குதாரர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளல் மற்றும் 'டித்வா' சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் சேதங்களை நேரில் ஆராய்தல் ஆகிய நோக்கங்களுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மஸாட்டோ கன்டா 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த திங்கட்கிழமை (23) நாட்டுக்கு வருகைதந்திருந்தார். இங்கு பல்வேறு சந்திப்புக்களிலும், களவிஜயங்களிலும் ஈடுபட்ட அவர், அது குறித்து மேலும் கூறியிருப்பதாவது: இலங்கை இப்போது ஒரு நிலைமாற்றத்தில் இருக்கிறது. நெருக்கடியைக் கையாள்வதிலிருந்து மீட்சியையும், மீண்டெழும் தன்மை வாய்ந்த பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதையும் நோக்கி நகர்ந்துவருகிறது. இருப்பினும் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் மோதல்களின் விளைவாக எரிபொருள் விலைகளில் ஏற்பட்டுள்ள உயர்வு மற்றும் உலகளாவிய கட்டமைப்புக்களின் சேதங்கள் என்பன மீண்டும் புதிய அழுத்தங்களைத் தோற்றுவித்துள்ளன. இந்நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடனான சந்திப்பின்போது இலங்கைக்கான 100 மில்லியன் டொலர் மேலதிக நிதியுதவி வழங்கலை உறுதிப்படுத்தினேன். இந்த உதவி வெளியக அழுத்தங்களில் இருந்து நாட்டின் பரந்துபட்ட பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்குப் பங்களிப்புச்செய்யும். அதேவேளை உட்கட்டமைப்பு, இணைப்புகள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் சார்ந்த முதலீடுகளில் இலங்கைக்கான வருடாந்த உதவி வழங்கலை சுமார் ஒரு பில்லியன் டொலர் வரை அதிகரிப்பதற்கு நாம் தயாராக இருக்கிறோம். அதேபோன்று நான் கேகாலை மாவட்டத்தில் 'தித்வா' சூறாவளியினால் சேதமடைந்த பகுதிகளைப் பார்வையிட்டேன். இவை சார்ந்த மீட்சிகள் முதலீடுகள் மற்றும் வளர்ச்சியை நோக்கி நிலைமாற்றமடையவேண்டும். முதலீடுகளை அடிப்படையாகக்கொண்ட நிலையான வளர்ச்சியை இலங்கை அடைந்துகொள்வதற்கு அவசியமான ஆதரவை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கும் என உறுதியளித்துள்ளார். https://www.virakesari.lk/article/242118
  7. யாழில் தங்க நகைகளைத் திருடிய பணிப்பெண் கைது Mar 28, 2026 - 07:37 AM யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் பணிப்பெண்ணாக வேலை செய்த பெண், அந்த வீட்டில் நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து திருடப்பட்ட நகைகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர். யாழ். நகர் பகுதியில் உள்ள வீடொன்றில் கணவன் - மனைவி இருவரும் வேலைக்குச் செல்பவர்கள் என்பதால், வீட்டு வேலைகளுக்காக 54 வயதுடைய பெண் ஒருவரைப் பணியில் அமர்த்தியுள்ளனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் அந்த வீட்டில் இருந்த 14 பவுண் நகைகள் காணாமல் போயுள்ளன. இது தொடர்பாக அந்தத் தம்பதியினர் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், குறித்த வீட்டின் பணிப்பெண்ணைக் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, திருடப்பட்ட 14 பவுண் நகைகளும் மீட்கப்பட்டுள்ளன. அதேவேளை, தான் இதற்கு முன்னர் பணியாற்றிய வீட்டிலும் நகைகளைத் திருடியுள்ளதாக அந்தப் பெண் விசாரணைகளின் போது ஒப்புக்கொண்டுள்ளார். குறித்த பெண்ணைத் தடுத்து வைத்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmn9owf250003356pczb28am1
  8. உலகளவில் இரண்டாவது இடம்: இலங்கைக்கு காத்திருக்கும் பாரிய பொருளாதார நெருக்கடி? General28 March 2026 ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்துள்ள இராணுவ நடவடிக்கைகள் காரணமாக, ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து தடைப்பட்டுள்ளமை உலகப் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நெருக்கடி நிலைமையால் பொருட்களின் விலை அதிகரிப்பினால் உலக அளவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இரண்டாவது நாடாக இலங்கை பதிவாகியுள்ளதாக பிபிசி வெரிஃபை (BBC Verify) ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. வழமையாக நாளொன்றுக்கு 100-க்கும் மேற்பட்ட கப்பல்கள் பயணிக்கும் ஹோர்முஸ் நீரிணை வழியிலான போக்குவரத்து, தற்போது ஒரு சில கப்பல்களாகக் குறைந்துள்ளதாக பிபிசி வெரிஃபை சுட்டிக்காட்டுகிறது. இதன் விளைவாக, எரிபொருள் மற்றும் எரிவாயு விலை அதிகரிப்புடன், ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள், மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் வேகமாக அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய விவசாயத் தேவைகளுக்கான யூரியா, பொட்டாஷியம், அமோனியா மற்றும் பொஸ்பரேட் போன்ற உரத் தேவைகளில் மூன்றில் ஒரு பங்கு (1/3) பொதுவாக இந்த நீரிணை வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது. வட அரைக்கோளத்தில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் முக்கிய பயிர்ச்செய்கை காலங்களாக இருப்பதால், தற்போதைய உரத் தட்டுப்பாடு ஆண்டின் பிற்பகுதியில் பயிர் விளைச்சல் குறைவதற்கு நேரடியாக வழிவகுக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், ஜெர்மனியின் கீல் ஆராய்ச்சி நிறுவனம்(Kiel Research Institute), ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டால், உலகளாவிய கோதுமை விலை 4.2% ஆகவும், பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலைகள் 5.2% ஆகவும் உயரக்கூடும் எனக் குறிப்பிடுகிறது. கீல் நிறுவனத்தின் தரவுகளின்படி, ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டால் பொருட்களின் விலை அதிகம் உயரக்கூடிய நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது. உணவுப் பொருட்களின் ஒட்டுமொத்த விலை அதிகரிப்பால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடுகளாக ஜாம்பியா (30.7%), இலங்கை (15.3%), தாய்வான் (12.5%) மற்றும் பாகிஸ்தான் (11.4%) ஆகியவை அடையாளம் காணப்பட்டுள்ளன. https://hirunews.lk/tm/456304/second-place-in-the-world-a-massive-economic-crisis-awaits-sri-lanka
  9. பாலியல் வன்முறையைத் தடுக்க ’Rape-aXe’ பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையைத் தடுக்க, தென்னாப்பிரிக்க மருத்துவர் சொன்னெட்எஹ்லர்ஸ் (Sonnet Ehlers) உருவாக்கிய பாலியல் வல்லுறவு எதிர்ப்பு சாதனம் 'Rape-aXe' ஆகும். இது பெண்கள் உள்ளே அணியக்கூடிய, கூர்மையான கொக்கிகள் கொண்ட ஒரு தற்காப்பு சாதனமாகும். பாலியல் வன்முறை முயற்சியின் போது, உள்ளே இருக்கும் சிறிய கொக்கிகள் (Hooks) தாக்குபவரின் உறுப்பில் சிக்கி, உடனே கடும் வலியை ஏற்படுத்தும். இந்த சாதனத்தை மருத்துவரின் உதவி இன்றி அகற்ற முடியாது, இதனால் குற்றவாளியை எளிதாக அடையாளம் கண்டு பிடிக்க முடியும். பாலியல் வன்கொடுமைகளைத் தடுத்து, பெண்களுக்குப் பாதுகாப்பு உணர்வை வழங்குவதே இந்த கண்டுபிடிப்பின் முக்கிய நோக்கமாகும். பெண்கள் பாதுகாப்பு தொடர்பான இந்த புதிய முயற்சி உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. https://www.tamilmirror.lk/விநோத-உலகம்/பாலியல்-வன்முறையைத்-தடுக்க-Rape-aXe/53-374648
  10. தமிழில் அழகிய நீளம் குறைந்த பெயர்களும் இருக்கிறது. உ+ம்-அகிலன், நேயன், மாறன், எழிழன், யாழவன், சேயோன், சுடர், சுரபி, மயூரன். எனது பிள்ளைகளுக்கு இப்புத்தகத்தில் இருந்தே பெயர்கள் சூட்டினேன்.
  11. Today
  12. வாள் வெட்டு, கத்திக் குத்து… எல்லாம் பழகீட்டுது குமாரசாமி அண்ணை. பைத்தியர்தான்… கண்ட கண்ட இடத்தில், வாய் வைத்து… ஒரே அரியண்டமாய் இருக்கு. இதைத்தான்… ஐ.நா.விலை சொல்லி ஒரு முடிவு கட்ட வேணும். ஐ.நா.வுக்கும் வேலை வேணுமெல்லோ… 😂
  13. இனி வரும் தமிழ் சார்ந்த சமுதாயம் தமிழ் பெயருக்காக போராடுமா என தெரியவில்லை? எனது பெயர் பெயர் சுத்த தமிழ் பெயர். கொஞ்சம் நீளமான பெயர். புலம் பெயர் நாடுகளில் என் பெயரை சொல்லி கூப்பிடவே கொஞ்சம் சிரமப்படுவார்கள்😄. உதாரணத்திற்கு கதிர்காமலிங்கம் சிவயோகபரமானந்தன். இப்படி ஒருவனுக்கு ஐந்து பெயர்களை ஒண்டடி மண்டடியாய் சூட்டினால் யார்தான் என்ன பண்ண முடியும்?😂
  14. சிங்கன்..🦁 என் தலைவன் எதுக்கு வந்தானோ .. அந்த வேலையில் கவனமாக இருக்கின்றான். நீ கலக்கு தல...... உன் மூன்று மீற்றர் கையெழுத்து .. நாட்டின் வரலாற்று தலையெழுத்து.. நீ கலக்கு தல.. அமெரிக்காவின்.. ரோயல் பமிலி எண்டால்.. நீதான் தலை😂
  15. Yesterday
  16. ஒரு நீதிமன்ற வழக்கில் குற்றவாளிக்கும் சட்டத்தரணி வேண்டும் என நினைக்கின்றேன். எனது விண்ணப்பம் என்னவெனில் குற்றவாளி கூட்டில் நிற்பவர்களுக்காக பிரபல சட்டத்தரணிகளும் ஸ்டார் சட்டத்தரணிகளும் காவலாக/ஆஜராக நிற்கக்கூடாது என்பது என் கருத்து. ஏனென்றால் இலங்கையில் பொய்யானவர்கள் கைதாவது குறைவு. அல்லது இல்லை.
  17. யாழ்ப்பாண பக்கத்திலை இப்ப மனித உரிமைமீறல் ஒண்டும் இல்லையே? சிறித்தம்பி இப்ப நீங்கள் என்ன சொல்ல வாறியள்?🤣 வாள்வெட்டு,கத்திக்குத்து எல்லாம் இப்ப நோர்மல். வேறை என்ன மனித உரிமை மீறலாய் இருக்கும்? ஒரு வேளை எம்பி அர்ச்சுனா?😂
  18. தமிழ்நாட்டின் ஈழ அரசியலை பொறுத்தவரை பழ.நெடுமாறனின் ஈழ அரசியலை விட, சீமானின் ஈழ அரசியலை விட வைகோ அவர்களின் அரசியல் பரவாயில்லை என்பது என் கருத்து. அது மட்டுமல்லாமல் நன்றிக் கடனும் உண்டு. இன்னுமொன்று..... அல்லது என் கேள்வி? தமிழ்நாட்டு அரசியலில் யாரிடம்,எந்த கட்சியிடம் பச்சோந்தி தனம் இல்லை என்று கூறுங்கள் பார்க்கலாம்? தமிழ்நாட்டு அரசியல் மட்டுமல்ல இந்திய அரசியலே ஒரு குறளி வித்தை அரசியல் நிறைந்த நாடு. அந்த அரசியல் காற்று ஈழத்தமிழ் மண்ணில் வீசக்கூடாது என்பது என் நீண்ட கால பிரார்த்தனை.
  19. கோவை என்ற ஊரில் ஒரு மாணவி பாலியல் கூட்டு வன்கொடுமை செய்பட்டதிற்கு அந்த மாணவியும் தான் பொறுப்பு என்று பாஜக பெண்நிர்வாகி நடிகை கஸ்தூரி தெரிவித்திருந்தார்.
  20. நானும் ஒளவையார் பற்றி அறிந்தது சாதிகள் இல்லை உதவிகள் செய்வோர் உதவி செய்யாதோர் என்று இருவகை தான் உண்டு என்பதை சொன்னவர்
  21. 🤣 நல்ல கருத்து.👍 மாற்றங்கள் விரும்பத்தக்கது. காலத்திற்கேற்ப மனிதர்கள் மாறவேண்டும். அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் உடை நாகரீகத்தில் மாற்றம் வேண்டும் என்பவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையில் இருந்து ஆரம்பிக்க தயாரா என்பதையும் தெரிவித்தால் நல்லது. அதாவது இன்றைய அரைகுறை உடையுடன்......
  22. எனக்கு டெக்சஸ் போன ஜேசுதாஸ் பற்றி தெரியாது புலம்பெயர் வாழ்வை கொண்ட ஈழ தமிழர்கள் பற்றி அறிந்து கொண்டதை வைத்து சொல்வதானால் டெக்சஸ் ஜேசுதாசும் அமெரிக்காவில் தனது வீட்டவர்கள் விரும்பிய ஆடைகள் அணிந்தாலும் இந்தியாவில் உள்ள பெண்கள் சீலை கட்டி அடக்க ஒடுக்கமாக தான் வெளியே வரவேண்டும் என்று விரும்புபவராக இருப்பார்
  23. அனுதாபம் எப்படி பெற வேண்டும் என்பதை இனவாத சிங்களத்திற்கு சொல்லிக்கொடுத்ததே இஸ்ரேல் அமைப்பு என்பதை நான் அறிந்துள்ளேன். உதாரணத்திற்கு ஈழத்தில் எமக்கு எதிராக நடந்த கொடுமைகளும் அழிவுகளும் நன்கு தெரியும். அதை யார் செய்தார்கள் என்பதும் நன்றாக எமக்கு தெரியும். ஏனெனில் நாம் அந்த நாட்டவர்கள்.நாம் விடுதலை இயக்கத்தை ஆதரித்தோம்.அதே விடுதலை இயக்கம் சர்வதேசத்தில் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்டார்கள்.ஏன் எப்படி எதனால் என நம்மவர்கள் ஆராய தயாரில்லை.செய்யாத குற்றத்திற்கும் தண்டனை அனுபவித்ததுதான் எமது விடுதலைப்போராட்டம். சர்வதேச ரீதியில் எமது விடுதலை போராட்ட இயக்கத்தை முதலில் பிள்ளையார் சுழி போட்டு தடை செய்தது அமெரிக்காதான்.அதே அமெரிக்காவை இன்று இங்கே எல்லோரும் ஆதரிக்கின்றோம். கால சுழற்சி வேகமானது மட்டுமல்ல விசித்திரமானதும் கூட...
  24. வாழ்த்துகள் ஆதித்யா. பிரான்சில் வாக்களிக்கும் தமிழர்களில் இரண்டு வகையினரை அவதானித்துள்ளேன். முதலாவது தமிழ் வேட்பாளரை நிறுத்தினால் எந்தக் கட்சி என்று பாராமல் அவருக்கு வாக்களிக்கும் தமிழர்கள். மற்றது வெளிநாட்டவர்கள் ஒடுக்கப்பட வேண்டும் என்று தீவிர இனவாத வலதுசாரிகளுக்கு வாக்களிக்கும் தமிழர்கள். இந்த இரு தரப்பினரும் இரு வேறு துருவங்கள் அல்லவா ? ஆனால் இருவரும் (பலர்) தமிழ் தேசிய ஆதரவாளர்கள். தமிழர்கள் ஒரு நாட்டு அரசியலுக்குள் நுளைந்து வளர வேண்டும். அதே வேளை வெளிநாட்டவர்கள் அடக்கப்பட வேண்டும். இதேபோன்றுதான் பிரான்சில் தமிழர்கள் பிரெஞ்சு அரசியலுக்குள் நுளைய வேண்டும் என்பவர்கள் சீமானின் தமிழனைத் தமிழன் ஆள வேண்டும் என்ற கோசத்தை எவ்வாறு ஏற்க முடியும் என்பது புரியவில்லை. (சீமான் பற்றி இத் திரியில் விவாதிக்கப்பட்டதால் உதாரணம் கூற வேண்டி வந்தது)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.