24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
அமெரிக்காவின் பொக்கிசமாகும் இலங்கை.
- செங்கலடியில் பாரிய கொள்ளை
செங்கலடியில் பாரிய கொள்ளை Jan 9, 2026 - 07:22 PM மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி - பதுளை வீதிச் சந்தியில் அமைந்துள்ள பிரபல சில்லறை வர்த்தக நிலையம் ஒன்றில், இன்று (09) வெள்ளிக்கிழமை அதிகாலை பாரிய கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மிகவும் திட்டமிட்ட முறையில் வர்த்தக நிலையத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த பெறுமதியான சொத்துக்களைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். வர்த்தக நிலைய உரிமையாளர் வழங்கிய தகவலின் அடிப்படையில், சுமார் 45 இலட்சம் ரூபா பணம், 5 பவுன் தங்க நகைகள், கடையில் இருந்த பெறுமதியான விற்பனைப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் ஆகியவை கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொள்ளையர்கள் தாங்கள் அடையாளம் காணப்படுவதைத் தவிர்ப்பதற்காக மிகவும் சாதுர்யமாகச் செயற்பட்டுள்ளனர். கடையில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராக்களைச் சேதப்படுத்தியதுடன், காட்சிகளைப் பதிவு செய்யும் கருவிகளையும் (DVR) கையோடு எடுத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து ஏறாவூர் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து நேரடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடையிலிருந்த கண்காணிப்புப் பதிவுக்கருவி திருடப்பட்ட போதிலும், அந்தச் சந்தியில் அமைந்துள்ள ஏனைய வர்த்தக நிலையங்கள் மற்றும் வீதிகளில் உள்ள பொதுவான CCTV கெமரா காட்சிகளைப் பயன்படுத்தி கொள்ளையர்களை அடையாளம் காண பொலிஸார் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். -மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்- https://adaderanatamil.lk/news/cmk6xr19803qao29noxw128gf- Today
- இலங்கையில் பாலின அடையாள விவகாரம்: ஜனாதிபதிக்கு கிறிஸ்தவ சபைகள் அவசர கடிதம்
09 Jan, 2026 | 05:26 PM இலங்கை கிறிஸ்தவ வாலிபர் ஒன்றியத்தின் தலைவர் பாஸ்டர் சிவனேஷ் தலைமையில், நாட்டின் அனைத்து கிறிஸ்தவ சபைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றை இன்று வெள்ளிக்கிழமை (09) சமர்ப்பித்தனர். இலங்கையில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் ஓரினச்சேர்க்கை மற்றும் பாலின அடையாளங்கள் தொடர்பான விவகாரங்கள் குறித்து, கிறிஸ்தவ சமூகத்தின் தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பரிசுத்த வேதாகமத்தின் போதனைகளின் அடிப்படையில் இந்த விடயங்களை தாங்கள் எவ்வாறு நோக்குகிறோம் என்பதை ஜனாதிபதிக்கு இக்கடிதம் மூலம் விளக்கியுள்ளதாக பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக மாணவர்கள் மத்தியில் இத்தகைய விடயங்களை ஊக்குவிக்கும் அல்லது பரப்பும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதை சுட்டிக்காட்டியுள்ள அவர்கள், இது சமூகத்திற்கும், குடும்பக் கட்டமைப்பிற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ளனர். விவிலிய விழுமியங்கள் மற்றும் நாட்டின் சட்ட ரீதியான காரணிகளின் அடிப்படையில் இவ்வாறான போக்குகள் மனிதர்களுக்கு எவ்விதமான இடையூறுகளை விளைவிக்கும் என்பதை ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட கடிதத்தில் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்தச் சந்திப்பின் போது கருத்துக்களைக் கேட்டறிந்த ஜனாதிபதி செயலக அதிகாரிகள், இது குறித்து விரிவாகக் கலந்துரையாடுவதற்குத் தேவையான நேரத்தை ஒதுக்கித் தருவதாக உறுதியளித்துள்ளதாகக் குறிப்பிட்ட பிரதிநிதிகள், வரும் நாட்களில் ஜனாதிபதியை நேரில் சந்தித்து இது குறித்து மேலதிக விளக்கங்களை முன்வைக்க எதிர்பார்ப்பதாகவும் ஊடகங்களிடம் தெரிவித்தனர். இலங்கையில் பாலின அடையாள விவகாரம்: ஜனாதிபதிக்கு கிறிஸ்தவ சபைகள் அவசர கடிதம் | Virakesari.lk- கட்டுநாயக்கவிலிருந்து குவைத் நோக்கிப் பயணித்த விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது!
09 Jan, 2026 | 05:22 PM (செ.சுபதர்ஷனி) கட்டுநாயக்கவிலிருந்து குவைத் நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யு.எல் 229 என்ற விமானம், வியாழக்கிழமை (8) இயந்திரக் கோளாறு காரணமாக மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. குறித்த விமானம் பயணத்தை ஆரம்பித்து சுமார் 2 மணித்தியாலம் 21 நிமிடங்களின் பின்னர் இவ்வாறு அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாக விமான நிலையம் தெரிவித்துள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து 8 ஆம் திகதி குவைத் இராஜியத்தின் குவைத் விமான நிலையம் நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யு.எல் 229 என்ற விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. குறித்த விமானம் தனது பயணத்தை ஆரம்பித்ததன் பின்னர் வான்பரப்பில் பறந்துகொண்டிருந்தபோதே, விமானி இயந்திரக் கோளாறு ஏற்பட்டிருந்தமையை அறிந்துள்ளார். இந்நிலையில் சுமார் 2 மணித்தியாலம் 21 நிமிடங்கள் வான்பரப்பில் பறந்ததன் பின்னர் மேற்படி விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. யு.எல் 229 என்ற இந்த விமானம், வியாழக்கிழமை மாலை 6.44 மணியளவில் குவைத் சர்வதேச விமான நிலையம் நோக்கிப் பயணித்தது. விமானம் வான்பரப்பில் பறந்துகொண்டிருந்தபோது, அதன் ஹைட்ரோலிக் தொகுதியில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி அவதானித்துள்ளார். உடனடியாகக் கட்டுநாயக்க விமான நிலையக் கட்டுப்பாட்டு நிலையத்தைத் தொடர்பு கொண்ட விமானிக்கு, பாதுகாப்பு கருதி விமானத்தை மீண்டும் திருப்புமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. அதற்கமையச் செயற்பட்ட விமானி இரவு 9.05 மணியளவில் விமானத்தைப் பாதுகாப்பாகக் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கினார். இதன்போது குறித்த விமானத்தில் 179 பயணிகளும் 8 பணியாளர்களும் இருந்துள்ளனர். அவர்கள் அனைவரும் எவ்வித பாதிப்புமின்றித் தரையிறங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்த ஸ்ரீலங்கன் விமான சேவையின் தொடர்பாடல் பிரிவின் தலைவர் தீபால் பெரேரா, தொழில்நுட்பக் கோளாறுக்குள்ளான விமானத்தின் பயணிகள் அனைவரும் மாற்று விமானங்கள் மூலமாக குவைத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். கட்டுநாயக்கவிலிருந்து குவைத் நோக்கிப் பயணித்த விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது! | Virakesari.lk- குழந்தை பிறப்பு வீதத்தை அதிகரிப்பதற்காக குடும்பங்களுக்கு ஊக்குவிப்புத் தொகையை வழங்க வேண்டும் ; அஜித் பி பெரேரா தனிநபர் பிரேரணை முன்வைப்பு
09 Jan, 2026 | 05:18 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) நாட்டில் அண்மைகாலமாக பிறப்பு வீதம் குறைவடைந்துள்ள நிலையில், குழந்தை பிறப்பு வீதத்தை அதிகரிப்பதற்காக குடும்பங்களுக்கு ஊக்குவிப்புத் தொகையை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா பாராளுமன்றத்தில் தனிநபர் பிரேரணையொன்றை முன்வைத்துள்ளார். குழந்தை பிறப்பு எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக குடும்பங்களுக்கு ஊக்கவிப்புத் தொகையை வழங்குதல் என்ற தலைப்பில் அஜித் பி. பெரேராவினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 2018 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை இலங்கையின் வருடாந்த குழந்தை பிறப்பு எண்ணிக்கை தொடர்ச்சியாக விழ்ச்சியடைந்து வருவதாக அவதானிக்கப்பட்டுள்ளதாலும் இதனால் எதிர்காலத்தில் இலங்கையில் இளைஞர் சனத்தொகை நிச்சயமாக வீழ்ச்சியடையக் கூடிய வாய்ப்பு உள்ளதாலும் இளைஞர் சனத்தொகை இவ்வாறு வீழ்ச்சியடையும்போது நாட்டின் பொருளாதார அபிவிருத்தி செயன்முறையில் பாதகமான தாக்கங்கள் ஏற்படக் கூடும். இதனால் இலங்கையில் குழந்தை பிறப்பு எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக குடும்ப அலகுகளை கவரக்கூடிய ஊக்குவிப்புத் தொகையை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை பிறப்பு வீதத்தை அதிகரிப்பதற்காக குடும்பங்களுக்கு ஊக்குவிப்புத் தொகையை வழங்க வேண்டும் ; அஜித் பி பெரேரா தனிநபர் பிரேரணை முன்வைப்பு | Virakesari.lk- முன்னோடி அடிப்படை சுகாதார வசதி திட்டம்
கட்டாயம் வங்கிக் கணக்கு கிடைத்த உடனேயே உதவித் தொகையை அனுப்பிய உறவிற்கு கோடி நன்றிகள் 🙏- "மூன்று கவிதைகள் / 20"
"மூன்று கவிதைகள் / 20" 'பட்டாம்பூச்சியின் காதல் ... ' பட்டாம்பூச்சியின் காதல் நிரந்தரம் அல்ல பருவம் கொடுத்த அழகின் ஈர்ப்பு! தொட்டால் குலுங்கும் ஒரு உணர்வு பட்டால் தெரியும் அதன் மாயை! திடீரென பிறக்கும் இதயத்தின் துடிப்பு திட்டம் இல்லா மனிதனின் ஆசை! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ............................................................................. 'புத்தருக்கும் ஆசை வருமா' புத்தருக்கும் ஆசை வருமா? இலங்கைத் தமிழரைக் கேட்டுப் பார்— சிலை வடிவில் ஊடுருவும் பேராசையை! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] .............................................................................. 'வெள்ளை மழை இங்கு பொழிகிறது' வெள்ளை மழை இங்கு பொழிகிறது பிள்ளை நிலா வானில் ஒளிர்கிறது வள்ளி உன்னை மனம் தேடுகிறது! துள்ளி இருவரும் பனியில் சறுக்கி அள்ளி அணைத்து குளிர் காய்ந்து பள்ளி அறையில் இன்பம் காண்போம்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ............................................................................ துளி/DROP: 1982 ["மூன்று கவிதைகள் / 20" https://www.facebook.com/groups/978753388866632/posts/33204560462525840/?- ஈரான் ஒருபோதும் பின்வாங்காது : டிரம்ப் தனது நாட்டை நடத்துவதில் கவனம் செலுத்தட்டும் - ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லாஹ் அலி கொமெய்னி கடும் பதில்
ஈரான் ஒருபோதும் பின்வாங்காது : டிரம்ப் தனது நாட்டை நடத்துவதில் கவனம் செலுத்தட்டும் - ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லாஹ் அலி கொமெய்னி கடும் பதில் 09 Jan, 2026 | 03:47 PM ஈரான் எந்தவித அழுத்தங்களுக்கும் ஒருபோதும் பின்வாங்காது என ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லாஹ் அலி கொமெய்னி உறுதியாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரானை நோக்கி வெளியிட்ட கடும் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். “ஈரான் ஒரு சுயாதீன நாடு. எங்களின் இறையாண்மையும், தேசிய மரியாதையும் கேள்விக்குள்ளாக்கப்படும் எந்த முயற்சிக்கும் நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். ஈரான் பின்வாங்கும் நாடல்ல,” என அயத்துல்லாஹ் கொமெய்னி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் உள்நாட்டு பிரச்சினைகளை முதலில் கவனிக்க வேண்டிய நிலையில் டொனால்ட் டிரம்ப் பிற நாடுகளுக்கு அறிவுரை வழங்குவதாகவும், “டிரம்ப் தனது சொந்த நாட்டை எவ்வாறு நடத்துவது என்பதிலேயே கவனம் செலுத்துவது நல்லது” என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார். அண்மைக்காலமாக அமெரிக்கா – ஈரான் இடையிலான பதற்றம் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், ஈரானுக்கு எதிராக டிரம்ப் வெளியிட்டுள்ள கருத்துகள் மத்திய கிழக்கு அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதற்குப் பதிலளித்துள்ள ஈரான், தனது தேசிய பாதுகாப்பு மற்றும் பிராந்திய நலன்களை பாதுகாப்பதில் எந்த சமரசத்திற்கும் இடமளிக்காது எனத் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், வெளிநாட்டு அழுத்தங்கள், பொருளாதார தடைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் ஈரானின் நிலைப்பாட்டை பலவீனப்படுத்த முடியாது என்றும், மக்கள் ஆதரவுடன் ஈரான் தனது பாதையில் முன்னேறும் என்றும் அயத்துல்லாஹ் கொமெய்னி வலியுறுத்தினார். இந்தக் கருத்துக்கள், மத்திய கிழக்கில் நிலவி வரும் அரசியல் பதற்றத்தின் பின்னணியில் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/235596- கருத்து படங்கள்
அத தெரண கருத்துப்படங்கள்.- 25,000 புதிய வீடுகளை மேலதிகமாக அமைக்க வேண்டும் - ஜனாதிபதி
25,000 புதிய வீடுகளை மேலதிகமாக அமைக்க வேண்டும் - ஜனாதிபதி Jan 9, 2026 - 01:32 PM 'டித்வா' புயலினால் அனர்த்தத்திற்குள்ளான வீடுகளை மீளக் கட்டியெழுப்பும் பணிகளின் போது, சுமார் 20,000 முதல் 25,000 வீடுகள் வரை புதிதாகக் கட்டப்பட வேண்டியுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (09) முற்பகல் கல்நேவ, ஹந்துன்கம, அலுபெத்த பகுதியில் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை அமைப்பதற்கும், வீடு ஒன்றைக் கட்டுவதற்கு 50 இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அங்கு மேலும் ஜனாதிபதி கருத்து வௌியிடுகையில், தற்போதைய அறிக்கைகளின்படி சுமார் 6,000 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. மேலும் 17,000 - 18,000 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்தும் அல்லது வசிக்க முடியாத அபாய நிலையிலும் உள்ளன. எனவே, ஒட்டுமொத்தமாக 20,000 முதல் 25,000 வீடுகள் வரை கட்ட வேண்டியுள்ளது. 2026 வரவுசெலவுத் திட்டத்தில் மேலும் 31,000 வீடுகளைக் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 'எமக்கு ஒரு வீடு' திட்டத்தின் கீழ் கிராமங்களில் உள்ள வறிய மக்களுக்காக 10,000 வீடுகளும், தேசிய வீடமைப்பு அதிகார சபையூடாக மேலும் 10,000 வீடுகளும் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளன. யுத்தம் 2009 ஆம் ஆண்டில் நிறைவுக்கு வந்த போதிலும், இன்னும் பலர் முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்காக 2,500 வீடுகளுக்கு தலா 20 இலட்சம் ரூபாய் வீதமும், தோட்டப்புற மக்களுக்காக இந்திய உதவியுடன் வீடுகளை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறான சூழலிலேயே மேலதிகமாக இந்த 25,000 வீடுகளைக் கட்டும் பொறுப்பு ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். முழுமையாகப் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு முன்பிருந்ததை விடச் சிறந்த வாழ்வை ஏற்படுத்திக் கொடுக்க 50 இலட்சம் ரூபாய் வழங்க தீர்மானித்துள்ளோம். அதற்கு 20 + 15 + 15 இலட்சம் வீதம் கட்டம் கட்டமாக வழங்கப்படும். நிதியில் ஒருபோதும் தாமதம் ஏற்படாது, 2-3 மாதங்களுக்குள் விரைவாக வீடுகளைக் கட்டி முடிக்க வேண்டும். அதேநேரம் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும். எமது தற்போதைய வாழ்க்கை தரத்திலேயே இறக்கக் கூடாது. தற்போதைய நிலையில் இருந்து மேம்பட்ட வாழ்க்கை முறைக்கு செல்ல முற்பட வேண்டும். இன்று 26 பேருக்கு 50 இலட்சம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படுகிறது. ஒரு மனிதனுக்குத் தேவையான பல அடிப்படை உரிமைகள் உள்ளன. சிறந்த வருமான வழி, பிள்ளைகளுக்குச் சிறந்த கல்வி, ஆரோக்கியமான வாழ்வு, நல்லதொரு இல்லம் மற்றும் மன அமைதி ஆகியவற்றை உறுதிப்படுத்துவதே எமது நோக்கமாகும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmk6l91pm03pto29n1m1hqmrb- ஜப்பானுக்கான தொழில்நுட்பப் பொருட்கள் ஏற்றுமதிக்கு தடை - சீனா
ஜப்பானுக்கான தொழில்நுட்பப் பொருட்கள் ஏற்றுமதிக்கு தடை - சீனா 08 Jan, 2026 | 03:31 PM சீனாவிலிருந்து ஜப்பானுக்கு தொழில்நுட்பப் பொருட்களை ஏற்றுமதி செய்வது நிறுத்தப்பட்டுள்ளதாக சீனா அறிவித்துள்ளது. சீனாவில் இருந்து ஜப்பானுக்கு ஏற்றுமதியாகும் இராணுவ தொழில்நுட்பங்களான அணுசக்தி உபகரணங்கள், மின்னனு பொருட்கள், கணினிகள், விமான பொருட்கள் உட்பட தொழில்நுட்ப பொருட்களின் ஏற்றுமதிக்கு சீனா தடை விதித்துள்ளது. ஜப்பான் நாட்டின் முதல் பெண் பிரதமராக சனே தகைச்சி பதவியேற்றமைக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்துடன் டோக்கியோவுக்கு நேரில் சென்று அவரை சந்தித்தார். இருபெரும் தலைவர்களும் சீனாவின் ஆதிக்கத்துக்கு எதிராக இணைவோம் என்று அறிக்கையை வெளியிட்டனர். பின்னர், தமது நாட்டுக்கு எதிராக செயற்பட்டால் போர் நடவடிக்கை எடுக்கப்படும் என சனே தகைச்சி சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்தார். இதனால் சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான உறவு படிப்படியாக நீங்கி, வர்த்தகத் தொடர்புகளிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாகவே, ஜப்பான் நாட்டுக்கான தொழில்நுட்பப் பொருட்கள் ஏற்றுமதியை சீனா இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/235521- கடல் சீற்றத்திற்கு மத்தியிலும் சட்டவிரோத மீன்பிடியில் இந்திய மீனவர்கள்!
கடல் சீற்றத்திற்கு மத்தியிலும் சட்டவிரோத மீன்பிடியில் இந்திய மீனவர்கள்! Jan 9, 2026 - 10:37 AM தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக கடலுக்கு செல்ல வேண்டாம் என இலங்கை மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த சூழலில் பல இழுவைப் படகுகளில் இலங்கையின் வடக்கு கடற்பகுதிக்குள் அத்துமீறி பிரவேசித்துள்ள இந்திய மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடியில் நடவடிக்கையில் ஈடுபடுகின்றமையை அவதானிக்க முடிந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். முல்லைத்தீவு உள்ளிட்ட பல பகுதிகளில் அவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகின்றது. கடல் கொந்தளிப்பு காரணமாக ஏற்கனவே வாழ்வாதாரத்தை வட பகுதி மீனவர்கள் இழந்துள்ள நிலையில், இந்திய மீனவர்கள் இந்த நடவடிக்கை மேலும் மோசமாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. -முல்லைத்தீவு நிருபர் தவசீலன்- https://adaderanatamil.lk/news/cmk6ezwoc03pmo29n070u1n1n- ஈரானில் தீவிரமடையும் போராட்டம்: இணைய சேவைகள் முடக்கம்
மேற்கு வாய் கிழிய கத்தும் இரானில் சுதந்திரம் இல்லை என்பது பொய்த்து பொய் உள்ளது. அதுவும் மேற்கு, இஸ்ரேல் உள்நாட்டில் குழப்பத்தை ஏற்றப்படுத்தலாம் என்ற சாத்திய கூறுகள் இருந்தும் இரானின் அதி உச்ச ஆட்சி பீடத்தில் இருந்து அடிவரை சொல்வது, மக்களுக்கு ல மனப்புழுக்கம், மற்றும் குறைகளை வன்முறை இல்லாது சொல்லலாம், வன்முறை வந்த்தால், வெளியார் தூண்டியாது என்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேட்ற்கும் அப்படியாந மொழியிலேயே அந்தந்த நாடுகளில் நாடாகும் போராட்டத்துக்கு சொல்வது.- இலங்கைக்கு கடும் எச்சரிக்கை: வங்காள விரிகுடாவில் புயல் உருவாகுமா? நிலவரம் என்ன?
தென்கிழக்கு கடலில் நிலைகொண்டுள்ள சக்தி மிக்க தாழமுக்கம் : இன்று மாலை இலங்கையின் கரையை நோக்கி நகரும் சாத்தியம்! 09 Jan, 2026 | 07:06 AM இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் இன்று அதிகாலை நான்கு மணியளவில் மட்டக்களப்புக்கு தென்கிழக்காக சுமார் 200 கிலோமீற்றர் தொலைவில் சக்தி மிக்க தாழ் அமுக்கம் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது மேலும் தீவிரமடைவதுடன் இன்று மாலையளவில் பொத்துவிலுக்கும் திருகோணமலைக்கும் இடையாக இலங்கையின் கரையை நோக்கி வடமேற்குத் திசையினூடாக நகர்ந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் செறிந்து காணப்படும். வடக்கு , கிழக்கு, வடமத்திய, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் . வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் மாத்தளை, திருகோணமலை மற்றும் புத்தளம் மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லமீற்றரிலும் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். கண்டி, நுவரெலியா மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில் 50 - 75 மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். மத்திய மலைப் பிராந்தியங்களின் கிழக்கு சரிவுகளிலும், வடக்கு, கிழக்கு , வடமத்திய, மத்திய ,வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் கொழும்பு மற்றும் ஹம்பகா மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 50 - 60 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும். காற்றின் வேகம் மணிக்கு 70 கிலோமீற்றராக அதிகரித்தும் காணப்படும். பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். சக்தி வாய்ந்த தாழ் அமுக்கம் இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடாவில் மட்டக்களப்பில் இருந்து சுமார் 200 km தொலைவில் நிலை கொண்டுள்ளது. அதன்படியினால் நாட்டை சூழ உள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிராந்தியங்களுக்கு மறு அறிவித்தல் வரையில் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர். மேலும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற எதிர்வு கூறல்களை கவனத்திற் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். சிலாபம் தொடக்கம் மன்னார், காங்கேசன்துறை, திருகோணமலை, பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 35 - 45 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும். காற்றின் வேகமானது மணிக்கு 60 - 70 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி அதிகரித்து வீசக் கூடும். நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் அடிக்கடி கொந்தளிப்பான நிலையில் இருந்து மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும். காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை, பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது சுமார் 2.5 - 3.5 மீற்றர் உயரத்திற்கு மேலெளக்கூடும். இது தரைப் பிரதேசத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தாது. https://www.virakesari.lk/article/235567- சிங்கத்துக்கு பதிலாக கண்காணிப்பவர் மீது செலுத்தப்பட்ட மயக்க ஊசி – என்ன நடந்தது?
சிங்கத்துக்கு பதிலாக கண்காணிப்பவர் மீது செலுத்தப்பட்ட மயக்க ஊசி – என்ன நடந்தது? பட மூலாதாரம்,Hanif Khokhar/Getty 9 ஜனவரி 2026, 10:20 GMT புதுப்பிக்கப்பட்டது 35 நிமிடங்களுக்கு முன்னர் குஜராத்தில் பெண் சிங்கம் ஒன்றைப் பிடிக்க முயன்றபோது 'டிராக்கர்' ஒருவர் உயிரிழந்தார். இந்தத் டிராக்கர் உயிரிழந்த விதம் மிகவும் அரிதானது என்றும், குஜராத் வனத்துறையின் வரலாற்றில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடப்பது இதுவே முதல்முறை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு விஷயங்கள் மற்றும் தரவுகள் மூலம் விலங்குகளின் நடமாட்டம் மற்றும் நடத்தையை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுபவர்கள் டிராக்கர்கள் என அழைக்கப்படுகின்றனர். பெண் சிங்கத்தை மயக்கமடையச் செய்வதற்காகச் செலுத்தப்பட்ட ஊசி, சிங்கத்தின் மீது செலுத்தப்படுவதற்குப் பதிலாக, அதற்குப் பின்னால் நின்று கொண்டிருந்த டிராக்கரின் கையில் தவறுதலாகப் பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், ஆனால் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை காலை அவர் உயிரிழந்தார். இது எப்படி நடந்தது மற்றும் ஒரு சிங்கத்தை மயக்கமடையச் செய்ய எவ்வளவு மருந்தளவு பயன்படுத்தப்படுகிறது? இது மனிதர்கள் மீது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது? இந்த முழுச் சம்பவமும் நடந்தது எப்படி? பிபிசி குஜராத்தியின் ஹனிப் கோகர் ஜூனாகத்திலிருந்து வழங்கிய தகவலின்படி, விஸாவதரின் நாணி மோன்பாரி என்ற சிறிய கிராமத்தில் ஒரு பெண் சிங்கத்தினால் மக்களிடையே அச்சம் பரவியது பண்ணைப் பகுதியில் வசித்து வந்த தொழிலாளியான சைலேஷ்பாய் பர்கியின் சிவம் என்கிற நான்கு வயது மகனை, ஒரு பெண் சிங்கம் தாக்கியது. அந்தச் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். குழந்தையின் மரணத்திற்குப் பிறகு, அந்தப் பெண் சிங்கத்தை மீட்பதற்காக சாசனிலிருந்து ஒரு சிறப்புக் குழு வரவழைக்கப்பட்டது. மீட்புக் குழுவில் விஸாவதர் வனச்சரக அதிகாரிகள், ஆர்.எஃப்.ஓ, மருத்துவர்களின் குழு மற்றும் டிராக்கர்கள் இடம்பெற்றிருந்தனர். பட மூலாதாரம்,Hanif Khokhar படக்குறிப்பு,ராம்ரத்தன் நாலா ஜூனாகத் வனப் பாதுகாவலர் முனைவர் ராம்ரத்தன் நாலா, "மீட்புப் பணியின் போது, பெண் சிங்கத்தை மயக்கமடையச் செய்வதற்காக மயக்க மருந்து செலுத்தும் துப்பாக்கியிலிருந்து மயக்க மருந்து ஊசி செலுத்தப்பட்டது. அந்த நேரத்தில், டிராக்கர் அஷ்ரப் பாய் சௌஹான் பெண் சிங்கத்திற்குப் பின்னால் நின்று கொண்டிருந்தார், துரதிர்ஷ்டவசமாக அந்த ஊசி சிங்கத்தின் மீது படுவதற்குப் பதிலாக டிராக்கரின் இடது கையில் குத்தியது," என்றார். "அதன் பிறகு அவர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அஷ்ரப் பாய் சௌஹான் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார்," என்றார். சிங்கத்தை மீட்கும் முயற்சியின் போது டிராக்கர் ஒருவர் உயிரிழந்த இந்தச் சம்பவம், குஜராத் வரலாற்றிலேயே இதுவே முதல்முறை என்று வனத்துறை தெரிவித்துள்ளது. மனிதர்களுக்கு எவ்வளவு ஆபத்தானது? பட மூலாதாரம்,Getty Images முனைவர் ராம்ரத்தன் நாலா கூறுகையில், "பெண் சிங்கத்தின் எடையானது ஒரு மனிதனை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாகும். ஒரு மனிதனின் சராசரி எடை 70 கிலோ, ஆனால் ஒரு பெண் சிங்கத்தின் எடை 210 முதல் 250 கிலோ வரை இருக்கும். பெண் சிங்கத்தை மயக்கமடையச் செய்வதற்கான மருந்தின் அளவு அதன் எடையைக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது. எனவே, ஒரு மனிதருக்கு இந்த அளவு மருந்து செலுத்தப்பட்டால், அது அவரைத் தீவிரமாகப் பாதிக்கும்," என்றார். பெண் சிங்கத்திற்கு வழங்கப்பட்ட மருந்து மனிதர்கள் மீது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது என்றும் அவர் தெரிவித்தார். "அந்த ஊழியர் வனத்துறையின் ஒப்பந்தத்தின் கீழ் இருந்தார், அவருக்கு காப்பீடு உள்ளது. அந்தப் பணம் அவரின் குடும்பத்துக்கு சென்றடையும் மற்றும் வனத்துறையினால் சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்," என்றார் முனைவர் ராம்ரத்தன் நாலா. இந்த நடவடிக்கையின்போது அந்தப் பெண் சிங்கம் வெற்றிகரமாகப் பிடிக்கப்பட்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckgyxz274y0o- முன்னோடி அடிப்படை சுகாதார வசதி திட்டம்
ஏற்கிறேன்.- இலங்கைக்கு கடும் எச்சரிக்கை: வங்காள விரிகுடாவில் புயல் உருவாகுமா? நிலவரம் என்ன?
24 மணிநேரத்தில் அதிகூடிய மழை வீழ்ச்சி அம்பாறையில் Jan 9, 2026 - 07:43 AM கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி அம்பாறை மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. அங்கு 38 மி.மீ. அளவில் மழை பதிவாகியுள்ளதாக நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார இன்று (9) காலை தெரிவித்தார். அதேநேரம் நாட்டின் ஏனைய பெரும்பாலான பகுதிகளில் 10 மி.மீ. க்கும் குறைவான மழைவீழ்ச்சியே பதிவாகியுள்ளது. இதன் காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிக்கவில்லை என அவர் குறிப்பிட்டார். இருப்பினும், 73 பிரதான நீர்த்தேக்கங்களில் 28 நீர்த்தேக்கங்களும், அதேபோல் 22 நடுத்தர அளவிலான குளங்களும் இன்னும் வான் பாய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. யான் ஓயா மற்றும் தெதுரு ஓயா நீர்த்தேக்கங்களில் இருந்து நீர் வெளியேற்றம் கணிசமான அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும் எந்தவொரு ஆற்றுப் பள்ளத்தாக்கிலும் ஆபத்தான நிலையை ஏற்படுத்தும் வகையில் நீர் வெளியேற்றப்படவில்லை என்றும் பொறியியலாளர் சூரியபண்டார மேலும் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmk68s3r403pdo29n1e0bmg4g- முன்னோடி அடிப்படை சுகாதார வசதி திட்டம்
1) முன்னோடிக்கான முதலாவது நன்கொடை ரூபா 100,080.02 சதம் 09/01/2026 கிடைக்கப்பெற்றது. நன்கொடையை அனுப்பி வைத்தமைக்கு மிக்க நன்றி உறவே. உங்கள் ஒவ்வொருவரின் கூட்டு முயற்சியால் முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம் 2026 வெற்றி பெறும் என நம்புகிறேன். இந்த திட்டத்தில் இயலாமை உடையவர்களை உள்ளடக்கிய குடும்பங்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்பங்கள் என முன்னுரிமை வழங்கிச் செயற்படலாம் என எண்ணுகிறேன். உங்கள் கருத்துகளையும் தெரிவியுங்கள் உறவுகளே.- முன்னோடி அடிப்படை சுகாதார வசதி திட்டம்
கிடைத்த தொகையை அறிவிக்கத் தான் வேண்டும். நான் மேலே பிழையாக எழுதிவிட்டேன்.🙏 அத்தியாவசியமான உதவித் திட்டம் என்ற அடிப்படையில் ஓரளவு நன்கொடை கிடைத்ததும் வேலைகளை ஆரம்பித்தல் நல்லது என்றே நினைக்கின்றேன் எல்லோரும் ஏற்றுக் கொண்ட மாதிரி அராலியில் எங்கள் திட்டத்தை ஆரம்பிப்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை மற்றவர்களின் கருத்துக்களையயும் கேட்போம்- இலங்கை விமானப்படைக்கு அமெரிக்காவிடமிருந்து 10 ஹெலிகொப்டர்கள்!
தாய்லாந்தில் ஆட்சி மாற்றம், மக்கள் வீதிக்கு இறங்கிய நேரம் அங்கே நிண்டாவோ தெரியாது.- இலங்கை விமானப்படைக்கு அமெரிக்காவிடமிருந்து 10 ஹெலிகொப்டர்கள்!
தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப்பிடித்து பார்க்கக்கூடாது.- பழமொழி.🤣 தானம் கொடுத்த கெலின் விசிறியைச் சுற்றிப் பார்க்கக்கூடாது.- புதுமொழி.😁- முன்னோடி அடிப்படை சுகாதார வசதி திட்டம்
அண்ணை, பெயர் குறிப்பிடுவது நன்கொடையாளரின் விருப்பம். ஆனால் ஒவ்வொரு நன்கொடை கிடைத்ததும் அதை இங்கே வெளிப்படையாக பதிவது நல்லது. ஆவணப்படுத்தல் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த பயனுள்ளதாக இருக்கும். இப்போது ஒரு மலசலகூடம் புதிதாக அமைக்க/பூரணப்படுத்த(வட்டு.தெற்கு) அல்லது திருத்த(பொன்னாலை) நிதி முழுவதும் கிடைத்த பின் பணிக்குரிய நிதியை படிப்படியாக வழங்குவமா? இல்லை முதற்கட்டமாக 50000 ரூபாவை வங்கிக்கணக்கிற்கு வழங்கி வட்டு.தெற்கில் மலசலகூடக்குழி வெட்டத் தொடங்கச் சொல்லவா?- இலங்கை விமானப்படைக்கு அமெரிக்காவிடமிருந்து 10 ஹெலிகொப்டர்கள்!
அப்ப ஆய்வாளர்(வாய்வாளர் (அவற்றை பேரை சொல்லமாட்டன்) சொன்னது பொய்யா அண்ணை?!- இலங்கை விமானப்படைக்கு அமெரிக்காவிடமிருந்து 10 ஹெலிகொப்டர்கள்!
இந்தியாவை கொஞ்சம் எச்சரித்த மாதிரியும் இருக்கும். இந்தியா பதறியடித்துக்கொண்டு ஓடி வரும், வந்துவிட்டது என்றும் செய்தி சொல்கிறது.- ஈழத்து நாட்டார் தெய்வங்கள் - தி. செல்வமனோகரன்
செவ்வாச்சியம்மன் வழிபாடு தி. செல்வமனோகரன் அறிமுகம் ஐரோப்பியக் காலனிய ஆட்சிமுறைக்கு உட்பட்ட காலத்தில் தென்னிந்தியச் சமூகம் எதிர்கொள்ளாததும் எதிர்பாராததுமான சமய ஒடுக்குமுறைக்கு இலங்கை முழுவதும் உட்பட்டது. குறிப்பாக கரையோரப் பிரதேசங்களில் இருந்த சைவ, பௌத்த, இஸ்லாமிய வழிபாட்டுத்தலங்கள் யாவும் இடித்து அழிக்கப்பட்டன. சுதேச சமய வழிபாட்டு முறைகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. இத்தகைய சூழலில் ஈழத்துத் தமிழ்ச் சமூகம் தன் வாழ்வோடும் தொழிலோடும் இணைந்த, பண்டையகால வழிபாட்டு முறையான இயற்கைப் பொருள் வழிபாட்டுக்குத் திரும்பியது. மரம், கல் முதலிய இயற்கைப் பொருள்கள் வழிபடப்பட்டன. சூலம், வேல், பிரம்பு, பொல்லு, பானை முதலான பொருட்களும் வழிபடு பொருட்களாக, தெய்வீகம் பொருந்தியவையாகக் கருதி (குறி வழிபாடு) வழிபடப்பட்டன. 19 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த ஆறுமுக நாவலரின் வருகையும் செவ்வியல் சைவ மீட்டுருவாக்கமும் சமஸ்கிருதமயமாதல், மேனிலையாக்கம் எனும் கருத்துநிலைகளின் வழி, பெருந்தெய்வ வழிபாட்டை நிகழ்த்தியமை சிறுதெய்வ வழிபாட்டை செல்வாக்கிழக்கச் செய்துவிட்டது. குறிப்பாக யாழ்ப்பாணம் சமஸ்கிருதமயமாதலுக்கு முழுமையாக உட்பட்டு சிறுதெய்வங்களைப் பெருந்தெய்வமாக்கி பெருமரபாகிய மேனிலையாக்கத்திற்கு உட்பட்டுவிட்டது எனக் கூறப்பட்டு வருகிறது. இக்கூற்று மேம்போக்காகப் பார்க்கும் போது உண்மை போலத் தோன்றினும் அது முழுமையான உண்மையல்ல என்பதை அண்மைக்கால ஆய்வுகள் நிரூபணம் செய்கின்றன. நாட்டாரியல் தளத்திலான ஆய்வுகள் ஈழத்தில் சரிவர முன்னெடுக்கப்பட வேண்டிய அவசியத்தை இது உணர்த்தி நிற்கின்றது. செவ்வாச்சி அம்மன் ஈழத்தில் தமிழ்ச் சமூகம் வாழுமிடமெங்கும் தாய்த் தெய்வ வழிபாடான அம்மன் வழிபாடு மிகுந்து காணப்படுகின்றது. கண்ணகி, மாரி, முத்துமாரி, காளி, பத்திரகாளி, பேச்சி, பூசைக்கிழவி, கொத்தி, நீலி முதலான கிராமியப் பெண் தெய்வங்கள் பல காணப்படுகின்றன. அவற்றுள் ஒன்றாக செவ்வாச்சி அம்மன் வழிபாடு காணப்படுகின்றது. செவ்வாச்சி என்பது சிவலை நிறத்தை உடைய ஆச்சி, செவ்வாய்க்குரிய ஆச்சி, செவ்வாயில் பூசிக்கப்படுகின்றவள் எனப் பல பொருள் கொள்ளப்பட்டாலும் தெளிவான விளக்கம் சொல்லப்படவில்லை. பூச்சி என்பதே காலப்போக்கில் ஆச்சி என்று வந்திருக்கலாம். சிவந்த அல்லது நன்மைபுரிகின்ற ஒன்றாக இது கருதப்பட்டு இருக்கலாம். செவ்வாச்சி எனும் சொல்லுக்கான அர்த்தத்தைச் சரிவர அறிய முடியவில்லை. ஆயினும் அவர் ஒரு முதிர் பெண்ணாக சிறுகுடி வேளாளர் மரபினரால் வழிபடப்பட்டு வருவதை அறிய முடிகின்றது. யாழ்ப்பாணத்தின் வடமராட்சிப் பிரதேசத்தில் பொலிகண்டி, கொற்றாவத்தை, சமரபாகு, வதிரி போன்ற இடங்களில் இவ்வழிபாடு இன்றும் நிகழ்த்தப்படுகின்றது. இது முன்னோர் வழிபாடாகவும் இருக்கலாம். ஆயிரம் கண்ணுடையாள் கண்ணகியின் பிறிதொரு வழிபாட்டுமுறையாகவும் இருக்கலாம். ஏனெனில் ஆறு ஆலயங்களில் செவ்வாச்சியின் குறியீடாக பல்துவாரங்களை உடையதான பானையே வைத்து வழிபடப்பட்டு வருகின்றது. இலங்கையில் இவ்வழிபாடு முக்கியமாக வற்றாப்பளை கண்ணகி அம்மனின் திருத்தலத்தில் காணப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இத்தெய்வம் குலதெய்வமாகவே இருந்து வருகின்றது. இவ்வம்மனின் கோயில்கள் வீட்டு வளவினில் அமைந்துள்ளன. இப்போது சில கோயில்கள் தனித்து அறுக்கைப்படுத்தப்பட்டு நாற்புறமும் மதில்கள் கட்டப்பட்டு புனிதம் கருதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. யாவரும் வழிபாடியற்ற வழி செய்யப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் வீட்டுவளவினில் தென்னோலைக் கிடுகுகளால் கூரை வேயப்பட்டு சுற்றி வர பனம் மட்டை வரியப்பட்டு, நிலம் பசும் சாணத்தால் மெழுகப்பட்டதாகக் கோயில்கள் அமைந்திருந்தன. அம்மன் உயர்ந்த கல்லின் மீது (பீடம்) வைக்கப்பட்டிருந்தது. கால ஓட்டத்தில் அவரவர் பொருளாதார, நம்பிக்கை வளர்ச்சிக்கு ஏற்ப சீமெந்துக் கட்டடங்கள் ஆக்கப்பட்டன. பெரும்பாலான கோயில்களில் முன்மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. செவ்வாச்சி அம்மனுக்கு உருவம் எனத் தனியாக ஒன்று இல்லை. செவ்வாச்சி, குறித்த ஒரு பூச்சி உருவில் வைத்தே வழிபடப்படுகிறார். வண்ணத்துப்பூச்சியை ஒத்த வடிவத்தை உடைய பூச்சி அதுவாகும். சாம்பல், கருப்பு, சிவப்பு, மஞ்சள் எனப் பல வர்ணங்களில் காணப்படும் இப்பூச்சியின் இருபக்கச் இறகுகளிலும் கண்கள் போன்ற வடிவம் காணப்படும். தவிர இறகுகளில் சிறுசிறு புள்ளிகளும் காணப்படும். அதனைக் குறிப்பதாக துவாரமுடைய பானை வைத்து வழிபடப்படுவதாகவும் சிலர் கூறுகின்றனர். ஒவ்வொரு கோயிலுக்கும் குறித்த நிறத்தை உடைய குறித்த பூச்சிவகையே வரும் என்ற கருத்தை கோயில் உரிமையாளர்கள், பூசாரிகள் கூறுவது குறிப்பிடத்தக்கது. கண் தெரியாத குருடுப் பூச்சி, காது இல்லாத பூச்சி, சிறகு சிதைந்த பூச்சி என இவை பலவாறு அமைகின்றன. எல்லாக் கோயில்களிலும் செவ்வாச்சி பூச்சியின் உருவமோ படமோ காணப்படுகிறது. நம்பிக்கைகள் செவ்வாச்சி அம்மன் நேரே வருவது இல்லை என்றும் பூச்சியின் ரூபத்தில் வருவாள் என்றும் அதுவே செவ்வாச்சிப் பூச்சி என்றும் மக்களிடையே நம்பிக்கை காணப்படுகின்றது. செவ்வாச்சிப் பூச்சி சிறிய ரூபத்தில் வந்தால் அவ்வீட்டில் அல்லது குறித்த நபருக்கு நன்மை நிகழும் என்றும் மத்திம அல்லது பெரிய பூச்சியாக வந்தால் துயரம் நிகழும் என்றும் மக்களிடையே இன்றும் நம்பிக்கை காணப்படுகின்றது. இவ்வழிபாட்டோடு சம்பந்தப்பட்ட மனிதர்கள் வாழும் இடம் எங்கும் (வவுனியா தொட்டு கனடா வரை) இந்தப் பூச்சி இவ்வண்ணம் அவர்கள் கண் முன்னே தோன்றி நன்மை, தீமையை முன்கூட்டியே அறிவிப்பதாக கோயில் பூசாரிகள் குறிப்பிடுகிறார்கள். இதனால் இத்தெய்வம் ‘கண் கண்ட தெய்வம்’ என யாவராலும் சுட்டப்படுகின்றது. பூசை முறை செவ்வாச்சி அம்மனுக்கு எல்லா நாட்களும் விளக்கு வைக்கப்படுகின்றது. அதனை விரும்பியவர் யாரும் வைக்கலாம். அதுபோலவே பூ வைத்தல், கற்பூரம் காட்டல் முதலியனவும் யாவராலும் நிகழ்த்தப்பட்டு வருகிறது. வருடாந்த, விசேட தினங்களில் மட்டுமே பூசாரி பூசை செய்யும் வழக்கம் காணப்படுகிறது. பொலிகண்டி மேற்கில் உள்ள பழவத்தை எனும் இடத்தில் காணப்படும் கோயிலில் மாசி மாதத்தில் ஒரு செவ்வாய் வருடாந்தப் விசேட பூசையும், நாச்சிமார் கோயிலடி செவ்வாச்சியம்மன் கோயிலில் பங்குனி இரண்டாங் கிழமையும், ஏனைய கோவில்களில் ஆடிச் செவ்வாய் ஒன்றில் அவரவர் வசதிக்கேற்ப விசேட பூசையும் இடம்பெற்று வருகின்றன. செவ்வாச்சிக்கு உகந்த நாளாக செவ்வாய்க்கிழமையே அமைவதாக நம்பப்படுகிறது. இவை தவிர பொங்கல், சித்திரை வருடம், நவராத்திரி, தீபாவளி, போன்ற சிறப்பு நாள்களும் விசேட தினங்களாகக் கருதப்பட்டு சிறப்புப் பூசைகள் இடம்பெறுகின்றன. நேர்த்திக்கடன் வைத்தவர்கள் தமக்குகந்த நாளில் நேர்த்திக் கடனைத் தீர்ப்பர். பழவத்தை, பொலிகண்டி தெற்கு, சமரபாகு, வதிரி ஆகிய இடங்களில் உள்ள செவ்வாச்சி அம்மன் கோயில்களில் ஆண் பூசாரிகளும்; ஏனைய கோயில்களில் பெண் பூசாரிகளும் பூசை செய்து வருகின்றனர். தலையில் முழுகி, ஈரச்சேலையோடு பெண் பூசாரிகள் வருடாந்தப் பூசையை செய்யும் முறைமை இன்றும் காணப்படுகிறது. சமரபாகு செவ்வாச்சி கோயில் இவை யாவற்றிலும் வேறுபாடு உடையதாக உள்ளது. முன்பு மண்பானை வைத்து வழிபடப்பட்டாலும் தற்போது சில்வர் குடம் வைத்து வழிபடப்படுகிறது. பொதுவில் பானைக்கு பீடம் காணப்பட, இங்கு அடுப்பின் மீது குடம் வைக்கப்பட்டிருப்பதும் கோயிலுக்கு வெளியேயும் தனி அடுப்பு நிரந்தரமாக அமைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இது அடுப்பு நாச்சியம்மன் வழிபாட்டை ஒத்ததாக அமைகின்றது. வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி, ஆழியவளை, உடுத்துறை போன்ற இடங்களில் மீனவ மக்கள் பானை வைத்து அதனுள் நிறைவாக நெல்லையிட்டு சட்டியினால் மூடி பூசைக்கிழவி என்னும் தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். படையல் செவ்வாச்சியம்மன் கோயிலில், சமரபாகு கோயில் தவிர்ந்த ஏனையவற்றில் மரக்கறி உணவுப்படையல், மட்ச – மாமிசப் படையல், சாராயம், கள் முதலான படையல் முறைகள் காணப்படுகின்றன. சமரபாகு கோயிலில் சைவவுணவுப் படையல்முறை மட்டுமே தொடர்ந்து நடைபெற்று வருவதாக அக்கோயில் உரிமையாளர் சிவஞானம் சரஸ்வதி தெரிவித்தார். செவ்வாச்சியம்மனுக்கான பொதுப்படையல், நெல்லுப் பொரியும் தானியங்களில் அவிக்கப்பட்ட பிடிக்கொழுக்கட்டையும் ஆகும். குறித்த பூசைத் தினத்தில் காலையில் அடுப்பை மூட்டி நெல் பொரிக்கப்பட்டு அவை அம்மன் இருக்கும் இடம் எங்கும் சுற்றி வீசப்படும். இது செவ்வாச்சிப்பூச்சியின் செட்டையில் இருக்கின்ற புள்ளிகளைக் குறிப்பெனவாகவே கொள்ளப்படுகின்றது. நெல்லைப் பொரித்து அம்மனைச் சுற்றிப் பரவியபின் அரிசிமாவைக் குழைத்து சாத்துக்கொழுக்கட்டை அவித்துப் படைப்பர். வளுந்து, கோவிலை அண்மித்திருக்கும் கிணற்றடி, மரத்தடி முதலான இடங்களில் வைக்கப்பட்டு எடுக்கப்படுகிறது. தெய்வத்தின் முன்பு வாழையிலையைப் பரவி அதில் அக்காலப் பகுதியில் கிடைக்கும் மரக்கறிகளைப் படைப்பர். அவை இக்கோயிற் சூழலில் வாழும் மக்களின் விளைபொருட்களாக முன்பு இருந்தன. கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சி, விவசாயத்தைச் சுருங்கச் செய்த அல்லது கைவிடச் செய்த காலம் தொட்டு மரக்கறிகள் சந்தைகளில் வாங்கிவரப்பட்டு தூயநீரில் கழுவிப் படைக்கப்படுகின்றன. கத்தரிக்காய், வாழைக்காய், பூசணிக்காய், மரவள்ளிக்கிழங்கு, ஈரப்பலா, உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, வெண்டிக்காய், வெங்காயம், மிளகாய், கீரை, பசளிக் கீரை, தேசிக்காய் உள்ளிட்ட பல்வேறு மரக்கறிவகைகள் படைக்கப்படுகின்றன. இவற்றின் மீதும் நெல்லுப்பொரி தூவப்படும். இது புனிதமாக்கும் செயலாக இருக்கலாம். இதன்பின் வளுந்து வைக்கப்பட்டு மூன்று சிறங்கை அல்லது மூன்று சுண்டு என ஒற்றை இலக்கத்தில் குத்தரிசி இட்டு சோறு காய்ச்சப்படும். எவ்வளவு நேரம் சென்றாலும் சோறு ஆக்கப்பட்ட பின்புதான் படையல் வைக்கப்பட்ட மரக்கறிகளை எடுத்து, வெட்டிக் கறியாக்கும் வழக்கம் இன்றுவரை காணப்பட்டு வருகிறது. செவ்வாச்சியம்மனுக்கான படையலாக மிளகாய்த்தூள் இடப்பட்ட கறிவகைகள், மிளகாய்த்தூள் இடப்படாத வெள்ளைக் கறிவகைகள் என்பன படைக்கப்படுகின்றன. அப்பளம் உள்ளிட்ட பொரியல்களும் பசுநெய், தயிர் போன்றனவும் படைக்கப்படுகின்றன. அதன்பின் சாமை, தினை, வரகு, குரக்கன், பனமொடியல், நெல்லரிசி, கூப்பன்மா (கோதுமை மா) உள்ளிட்ட தானியங்களின் மாவை தனித்தனியாகக் குழைத்து (சில கோயில்களில் தேங்காய்ப் பூ, சீனி அல்லது சர்க்கரை போன்றவற்றையும் கலந்து) கையால் பிடித்து விரல்கள் பதிந்த பிடிக்கொழுக்கட்டை செய்து அதனை நீராவியில் அவித்துப் படைப்பர். இது முதலாம் மடை எனப்படுகிறது (பழவத்தை, திருமதி. தவராசா சாந்தகுணதேவி, வயது 67). செவ்வாச்சியம்மனுக்கான சிறப்பு உணவுப்பண்டமாக இக்கொழுக்கட்டையே எல்லாக் கோயில்களிலும் படைக்கப்படுகின்றது. இன்பிலன் செவ்வாச்சியம்மன் கோயிலில் பனங்கட்டிப்பாணி கலந்து கொழுக்கட்டை அவித்துப் படைக்கப்படுகின்றது (அப்புத்துரை இரகுநாதன், வயது 58). முதலாம் மடையில் ஆயிரம் மோதகம் அவித்துப் படைக்கும் வழக்கமும் காணப்படுகின்றது (திருமதி. கிருபாகரன் ரஜிதா, வயது 45, ஆண்டாவளை, கரணவாய்). பொங்கல் பொங்கப்படும். பலகாரங்கள் யாவும் படைக்கப்படுகின்றன. குறிப்பாகக் கொழுக்கட்டை, மோதகம் என்பனவற்றோடு உழுந்து வடை படைக்கப்படுகிறது. அதிலும் வடை படைப்போர் யாவரும் அதில் ஒரு மாலையினைக் கட்டி மூலத்திலிருக்கும் பானைக்கு மாலையாக இடுவர். செவ்வாச்சிக்கு பழப்படையல்களுள் பிரதானமாக வாழைப்பழமே படைக்கப்படுகிறது. சீப்புச்சீப்பாகக் வெட்டி, மூக்கு நாக்குத்தள்ளி (பழத்தின் முன்பகுதியை வெட்டி விடுதல்) படையலாக்குவர். அதேவேளை வருடாந்தம் பூசைக்காலத்தில் கிடைக்கக்கூடிய மா, பலா, விளாம்பழம், தோடம்பழம் போன்ற பழங்களையும் படைப்பர். பழங்களை வெட்டி தேன், நெய் கலந்து பஞ்சாமிர்தமாகப் படைக்கும் வழக்கமுண்டு, உடல் வெப்பத்தைத் தணிக்கச் சிறந்த பழச்சாறாக இது அமையும். இவ்வாலயங்களில் பலியிடும் வழக்கம் இல்லை. ஆனால் மட்ச – மாமிசப் படையல் படைக்கும் வழக்கம் காணப்படுகிறது. இவ்வழக்கம் இணுவில் பத்திரகாளி உள்ளிட்ட வேறு சில இடங்களிலும் காணப்படுகிறது. தெய்வத்துக்கு மரக்கறி (சைவம்) படையலிடும் இடங்களில் மட்ச – மாமிசப் படையல் இடுவது குறைவெனினும் செவ்வாச்சிக்கு இருபடையலும் இடும் வழக்கம் காணப்படுகிறது. செவ்வாச்சி அம்மனுக்கு காலை, மதியப் படையல்கள் நடைபெறுவது போல இரவு ஆறு மணிக்குப் பின்பே மட்ச – மாமிசப் படையல் நடைபெறும். ஆடு, கோழி போன்றவற்றின் இறைச்சி கறியாக்கப்பட்டுப் படைக்கப்படும். மாடு, முயல், பன்றி போன்றன தமக்குத் தெரியப் படைக்கப்படுவதில்லை எனக் கோயிலின் உரிமையாளர்கள் யாவரும் தெரிவித்தனர். அதேவேளை பலவகை மீன்கள் படைக்கப்படுகின்றன. மீன் தலையை சுட்டோ, பொரித்தோ படைப்பர். ஏனைய பகுதிகள் கறிக் குழம்பாக்கப்படுகின்றன. குறிப்பாக வாளைமீன் படையல் முதன்மை பெறுகிறது. மீன் பொரியல், சுட்ட கருவாடு என்பனவும் படைக்கப்படுகின்றன. சில கோயில்களில் சுறா வறை, திருக்கை வறை, நண்டு, இறால், கணவாய் போன்றனவும் படைக்கப்படுகின்றன. முன்பு தட்டுவத்தில் (பனையோலையால் முடையப்பட்ட தட்டு) தான் மட்சப்படையல் வைக்கப்பட்டு வந்தது. பிற்காலத்தில் வாழையிலையிலிலும் பனையோலைப் பாயிலும் சோறு குவிக்கப்பட்டு சுற்றிவர, மட்ச – மாமிசப் பண்டங்களை நிறையுணவாக இடுவர். நடுவில் அவித்த கோழி முட்டைகள் இடப்பட்டிருக்கும். பூசை நிறைவுற்றபின் படைக்கப்பட்ட அத்தனை உணவிலிருந்தும் சிறிதளவு எடுக்கப்பட்டு இளநீர் கோம்பைக்குள் இடப்பட்டு அதனை முச்சந்தியிலோ நாற்சந்தியிலோ வைக்கும் வழக்கமும் உண்டு. சோற்றோடு இவை யாவும் குழைக்கப்பட்டு திரணை திரணையாக யாவர்க்கும் இறை பிரசாதமாக வழங்கப்படும். இம் மட்ச – மாமிசப் படையலோடு கள், கருப்பணி, சாராயம் என்பனவும் படைக்கப்படுகின்றன. செவ்வாச்சியை வழிபடும் மக்கள் குலத்தினர் முன்பு சீவல்தொழிலை பிரதான தொழிலாகக் கொண்ட பள்ளர் சமூகத்தினராவர். தம் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்த பனம் பொருட்களையும் சிறிது தூரத்தில் இருக்கும் கடலின் வழி பெறப்பட்ட கடலுணவையும், கால்நடைகளையும் தம் செம்பாட்டு நிலத்தில் விளையும் பொருட்களையும் செவ்வாச்சிக்குப் படையலாக இட்டு வந்தனர். கண்ணப்பர், காளத்தி நாதருக்குத் தான் தன் இனம் உண்ணும் உணவுகளையே உண்ணக் கொடுத்தமையை ஒத்த பண்பாட்டசைவே இதுவாகும். சமரபாகு செவ்வாச்சிக்கு 60 வருடங்களுக்கு மேல் சைவப்படையல் மட்டுமே படைக்கப்படுகிறது. நேர்த்திக்கடனும் படையலும் செவ்வாச்சியம்மனை வழிபடும் மக்கள், நோய் நொடி ஏற்படாதிருக்கவும், ஏற்பட்ட காலத்திலும், மேலும் வேலைவாய்ப்பு, கல்வி, திருமணம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காகவும், இத்தெய்வத்தின் கோயிலில் நேர்த்தி வைத்து, நேர்த்திக்கடன் செலுத்தும் வழக்கம் காணப்படுகிறது. துவாரமுள்ள பானையை வாங்கி வழங்குதல், ஆலயத்திற்கு தேவையான எண்ணை, கற்பூரம் முதலியவற்றை வழங்குதல், கட்டடம் கட்டல் முதலானவையும் இடம்பெறுகின்றன. தேங்காய் நேர்ந்து ஆலயத்திலேயே வைத்துவிட்டுச் செல்வர். நேர்ந்த விடயம் நிறைவேறியபின் ஆலயத்திற்கு வந்து அத்தேங்காயை எடுத்து சிதறு தேங்காயாக உடைத்து நேர்த்திக்கடனைத் தீர்ப்பர். (1) குறித்த நபருக்கு அம்மாள் வருத்தம் வருமிடத்து செவ்வாச்சியிடம் நோய் நீக்கத்திற்காக நேருவர். நோய் நீங்கிய பின் மூலத்தில் உள்ள பானையில் கற்பூரம் ஏற்றி வழிபடுவர். பின்பு நீர்க்கஞ்சி காய்ச்சி அடியார்க்கு வழங்குவர். நீர்க்கஞ்சி என்பது குத்தரிசியோடு எல்லா வகை மரக்கறிகளையும் இட்டு அவித்து (மிளகாய்த்தூள் இடுவதில்லை) நீருணவாக வழங்கப்படுவதாகும். 2) ஏனைய நேர்த்திகள் – தமது விருப்பங்கள் நிறைவேறிய காலத்தில் முன்சொன்னது போல குத்தரிசியோடு மரக்கறிகளை ஒன்றாக இட்டு அவித்து (மிளகாய்த்தூள் இடுபவரும் உண்டு, இடாதவரும் உண்டு) குழைசாதமாக வழங்குவர். தவிர அன்னதானமாக கறி, சோறு ஆக்கி வழங்கும் வழக்கமும் உண்டு. துடக்குப் படையல் தமது காணிக்குள் இருக்கும் குலதெய்வமான செவ்வாச்சிக்கு தமது வீட்டில் சமைக்கும் சிறப்புணவைப் படையலிட்டு உண்ணும் வழக்கம் காணப்பட்டுள்ளது. வீட்டில் நடைபெறும் திருமணம், குடிபுகுதல் விழா போன்றவற்றோடு, பிள்ளைப்பேறு, சாமத்தியவீடு (பூப்புனித நிகழ்வு) என்பவற்றுக்கான சமையலில் இருந்து யாவற்றையும் எடுத்துத் தெய்வத்துக்குப் படைத்து வழிபட்ட பின்னரே தாம் உண்பர். அதிலும் குறிப்பாக அரைத்த கறியை (மட்ச, மாமிசமுமோ மரக்கறியோ எதுவாயினும்) செவ்வாச்சிக்குப் படைத்த பின்னரே குறித்த பெண்ணுக்கு உண்ணக் கொடுப்பர். நற்சீரகம், மிளகு, உள்ளி, மஞ்சள், வேர்க்கொம்பு அல்லது இஞ்சி, தேங்காய்ச் சொட்டு (சிலர் மல்லியும் சேர்த்துக் கொள்வர்) இடப்பட்டு பட்டுப்போல அம்மியில் அரைத்து அதனை இட்டு வைக்கப்படும் கறியே அரைத்த கறி எனப்படுகிறது. இதனைப் பிறசமூகங்களில் சாமத்தியம் அடைந்த சிறுமியும் பிள்ளை பெற்ற தாயுமே உண்ணுவர். அதாவது யாருக்காக அரைத்த கறி வைக்கப்பட்டதோ அவர் மட்டுமே உண்பர். மிஞ்சிய கறியைச் சில இடங்களில் நிலத்தை வெட்டி அதனுள் இட்டுப் புதைக்கும் வழக்கமும் உண்டு. இம்மக்களிடம் செவ்வாச்சிக்குப் படைத்ததன் பின்பே உண்ணும் வழக்கம் காணப்படுதல் இவ்வழிபாட்டின் தனித்துவம் எனலாம். அதேவேளை இன்பிலன் பிரதேச அம்மன் கோயிலில் மரணவீட்டு உணவை – படையலை இத்தெய்வத்துக்குப் படைத்த பின்பே உண்ணும் வழக்கம் இன்றும் காணப்படுகிறது. இது ‘துடக்குச் சாப்பாடு’ (தீட்டு உணவு) என்று கூறப்பட்டாலும், தெய்வத்துக்குப் படைக்கப்படுதல் தம் இன்பத்திலும் துன்பத்திலும் தெய்வம் துணையிருக்கும் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடாகிறது. அதிலும் குறிப்பாக மரணம் நடந்து எட்டாம் நாள் இறந்தவரின் விருப்பத்திற்குரிய அனைத்து வகையான சுவைகளையும் உடைய உணவுப்பண்டங்கள், குடிபான வகைகள், சுருட்டு எனப் படைக்கப்படும் அனைத்தையும் இத்தெய்வத்துக்கு இன்றும் படைத்து வருகின்றனர். மற்றைய செவ்வாச்சி ஆலயங்களில் இவ்வழக்கம் இல்லை. முதல் விளைச்சலைப் படைத்தல் தங்கள் வீட்டு வளவில் – விவசாய நிலத்தில் விளைகின்ற முதல் விளைச்சலை இத்தெய்வத்துக்கே வழங்குவர். தேங்காய், மாங்காயிலிருந்து தோட்டத்தில் விளையும் மிளகாய், வெங்காயம் வரை இது பொருந்தும். அதேபோல சீவல்தொழில் செய்யும் ஒருவர் கள்ளிறக்கும் போது அதனை விற்க முன் சிறிது கள்ளை எடுத்து தெய்வத்தின் வாசலில் சிந்தும் வழக்கம் காணப்படுகிறது. அதேபோல பதநீர், கருப்பணி முதலியனவும் முதற் படையலாக்கப்படுகின்றன. பசு கன்று ஈன்ற பின் பாலைத் தாம் குடிக்கவோ விற்கவோ தொடங்கமுன் கறந்து தெய்வத்துக்கு அர்ப்பணமாக்குவர். அதேபோல கோழியின் முதல் முட்டையும் படையலாக்கப்படும். இத்தெய்வத்துக்கு முதல் விளைச்சலை வழங்காதுவிடின் விளைச்சல் அழிந்துவிடும், கள் வற்றிவிடும், பசுவில் பால் அற்றுப்போய்விடும் முதலான நம்பிக்கைகள் காணப்படுகின்றன. நிறைவாக ஈழத்துச் சூழலில் பெரும்பாலும் கல், சூலம், மரம் உள்ளிட்ட பொருட்களே வழிபடப்பட்டு வந்துள்ளன. வடமராட்சி செவ்வாச்சியம்மன், பூச்சி வடிவிலான தெய்வமாக வழிபடப்படுதல் தனித்துவம் வாய்ந்த வழிபாடெனினும், அது தொடர்பான தொன்மக்கதைகள் பேணப்படாமை துரதிர்ஷ்டமேயாகும். மக்கள் தாம் வாழும் சூழமைவை அடிப்படையாகக் கொண்டே வழிபாட்டு முறைமையையும் படையல், பாத்திரங்கள், பண்டங்கள் வரை அனைத்தையும் கட்டமைத்திருந்துள்ளனர். கால்நடை, கடலுணவு, தானியங்கள், மரக்கறிகள், பழங்கள் என பல்வகைச் சத்துணவுகளைப் படையலாக்கியுள்ளனர். வெப்பம் நிறைந்த சூழலில் வரும் அம்மன் வருத்தத்தின் நேர்த்திக்கடனாக நீர்க்கஞ்சியையும் குழைசாதத்தையும் வழங்கி வருகின்றனர். இது ஈழத்து வடபுல தட்பவெப்ப சூழலுக்கு ஏற்ற, குறித்த காலத்துக்கான சிறந்த உணவு என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய இயந்திர வாழ்வினாலும் விலைவாசிகளாலும் படையல் பொருட்கள் குறைவடைந்து வருகின்றன. சாதிய நீக்கம், தொழில்சார் கௌரவம், கல்வி, பொருளாதார விருத்தி என்பவற்றால் பலர் சீவல்தொழில் செய்வதில்லை. பனம் பொருட் பயன்பாடும் குறைவடைந்து தட்டுவம், ஓலைப்பாய் என்பவற்றுக்குப் பதிலாக வாழையிலையும், பின்னர் இன்று பிளாஸ்ரிக், சில்வர் பொருட்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நாட்டாரியல் பண்பு மாறாத வழிபாடாக இன்றும் மக்களால் மக்களுக்காகவே ஜனநாயகப் பண்போடு பூசை வழிபாடுகள் நடைபெறுகின்றதாக செவ்வாச்சியம்மன் வழிபாடு இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.ezhunaonline.com/worship-of-goddess-sevvachi-amman/ - செங்கலடியில் பாரிய கொள்ளை
Important Information
By using this site, you agree to our Terms of Use.