Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Past hour
  2. ஏற்கிறேன் மிக சரியான அணுகுமுறையாக படுகிறது. அப்படியே செய்வோம்.
  3. நானும் அப்படித்தான் நினைக்கிறேன். மேலும் அமெரிக்காவில் உள்ள் மத்திய வங்கி ஏனைய நாடுகளில் உள்ளதை விட மிகவும் வேறுபட்டது. அது ஒரு ஒற்றை அமைப்பு அல்ல. அதில் தனியார் ஆதிக்கம் அதிகம்.
  4. மடுரோ கைதுக்கு முதல் வெனிசுவேலா அருகில் வைத்து இப்படி இரு கப்பலை மூழ்கடித்தது அமேரிக்கா. புலிகளின் கப்பலை கூட இந்தியா இலங்கை இப்படித்தான் மூழ்கடித்தன. முன்னரும் அமெரிக்கா சட்ட மீறலை செய்துள்ளது. ஆனால் நீங்கள் சொல்வது சரிதான்…முன்னர் போல அல்லாமல் இப்போ ஒரு படி மேலே போய் அமெரிக்கா அடாவடி செய்கிறது. இதுவும் மேற்கு இதுவரை தன் நலனுக்கு ஏற்ப கட்டியமைத்த rules based order ஐ உடைக்கும் வேலைதான். நான் முன்வைக்கும் டிரம்ப்-புட்டின் சதிகோட்பாட்டினை பொருத்தி பார்க்கவும்.
  5. ஓகே கோஷான் அப்படியும் நான் நினைத்தேன் ஆகவே தற்சமயம் முடிந்தவர்கள் தங்கள் நிதிப்பங்களிப்பை முன்னோடி வங்கிக் கணக்கிற்கு அனுப்பட்டும்.யார் என்ன தொகை அனுப்பியது என்ற விபரங்கள் தெரியப்படுத்தத் தேவையில்லை கிடைத்த நிதி முதலாவது திட்டமான பொன்னாலை சகோதரர்களின் திட்டத்திற்கு ஏற்றவகையில் சேர்ந்ததும் ஏராளன் எங்களுக்கு அதைத் தெரியப்படுத்தி விட்டால் நாங்கள் அந்தத் திட்டத்திற்கான அனுமதியைக் கொடுத்து நிறைவேற்றி வைக்கலாம். எங்களின் இலக்கான திட்டம்( காரைநகர் 5, சுழிபுரம் 5 )நிறைவேறும் வரை நிதி உதவி செய்பவர்களின் விபரங்களைத் தெரியப்படுத்துவதைத் தவிர்ப்போம். எங்களின் இலக்கான திட்டத்திற்கான செலவு அண்ணளவாக 15 இலிருந்து 20 லட்சம் வரை தேவைப்படும் இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர்...... அந்த் திட்டத்தில் நிதி பங்களிப்புச் செய்தவர்களின் விபரங்களை...... அவர்கள் விரும்புவதை பொறுத்து வெளியிடலாம்.
  6. கவி அருணாசலம் அண்ணை கூறுவதும் நன்மை தரும் விடையமே ஒவ்வொரு நாட்டிற்கு ஒரு அமைப்பாளர் என்ற ரீதியில் முன்னோடி அமைப்பிற்கான முன்னோடி அமைப்பாளர்கள் இருப்பதும் சிறப்பாக இருக்கும் uk யில் கோஷான்..... ஜெர்மனியில் குமாரசாமி அண்ணை ... கனடாவில் ஒருவர் தேவை.... அமெரிக்காவில் ஈழப்பிரியன் ....... இப்படி அவர்கள் இந்தத் திட்டத்திற்கான ஒருங்கிணைக்கும் வேலைகளையும் கிடைக்கும் சிறு துளி நிதியையும் சேர்த்து இலங்கை முன்னோடி வங்கிக்கு கணக்கிற்கு அனுப்பலாம். சாதாரண வங்கியினூடாக நிதியை அனுப்பும் வேளை வங்கி அறவிடும் கட்டணம் அதிகமாக இருக்கும் .அதுவும் சிறு தொகையாக பல முறைகள் அனுப்புவதால் இன்னும் அதிக கட்டணம் கொடுக்க வேண்டும் மிகுந்த கரிசனையுடன் இந்தத் திட்டத்தை முன் கொண்டு செல்ல உதவும் வகையில்வங்கிக்கணக்கை அறிவித்த ஏராளனுக்கு நன்றிகள்
  7. Today
  8. கந்தரோடை விகாரை பெயர்ப்பலகை அகற்றம். யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையினால் , கந்தோரோடை பகுதியில் விகாரைகள் அமைந்துள்ளதாக கூறப்படும் பகுதிகள் ” கந்தரோடை தொல்லியல் ஆய்வு மையம்” என அடையாளப்படுத்தப்பட்டதை அடுத்து , “கந்தரோடை விகாரை” என நாட்டப்பட்டிருந்த பெயர் பலகை அகற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில் , சுன்னாகம் சந்தைக்கு அருகில் , தனியார் காப்புறுதி நிறுவனம் ஒன்றினால் “கந்தரோடை விகாரை” என திசை காட்டும் பெயர் பலகை நடாத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் கந்தரோடை விகாரைகள் அமையப் பெற்றுள்ளதாக கூறப்படும் , புராதன இடத்தினை , ” தொல்லியல் ஆய்வு மையம்” என அடையாளப்படுத்தப்பட வேண்டும் என பிரதேச சபையில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை அடுத்து வீதிகளில் “கந்தரோடை விகாரை ” என திசை காட்டும் பெயர் பலகைகளை அகற்றும் செயற்பாட்டை பிரதேச சபை முன்னெடுத்துள்ளது. அந்த வகையில் சுன்னாகம் பகுதியில் நாட்டப்பட்டிருந்த பெயர் பலகை அகற்றப்பட்டுள்ளது. அதேவேளை , குறித்த பகுதியில் காணப்படும் சந்தைக்கட்டடம் ஒல்லாந்தர் காலத்திற்கு உரியதாகும். அதன் சிறப்புக்கள் தொடர்பில் மும்மொழிகளிலும் எழுதிய கல்வெட்டு அப்பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. https://athavannews.com/2026/1458977
  9. எனக்கு நேரப்பற்றாக்குறையும்,வேலையிடத்து பண வரவுகள் இருப்பதாலும் நீங்கள் அல்லது வாத்தியார் அந்த பொறுப்பை எடுத்தால் எனக்கு பெரிய உதவியாக இருக்கும் என நினைக்கின்றேன்.சம்மதமாயின் இன்றே ஏராளன் குறிப்பிட்ட தொகையை அனுப்பி விடுகின்றேன்.
  10. இந்தியர்களுக்கான விசா மற்றும் தூதரக சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக பங்களாதேஷ் அறிவிப்பு! பங்களாதேஷில் கடந்த டிசம்பர் 18ம் திகதி பங்களாதேஷ் மாணவர்கள் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, அங்கு வன்முறை சம்பவங்கள் தீவிரம் அடைந்துள்ளன. இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியர்களுக்கான விசா மற்றும் தூதரக சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக பங்களாதேஷ் கூறியுள்ளது. பங்களாதேஷில் கடந்த டிசம்பர் 18ம் திகதி பங்களாதேஷ் மாணவர்கள் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, அங்கு வன்முறை சம்பவங்கள் தீவிரம் அடைந்துள்ளன. அங்குள்ளவர்கள் ஹிந்துக்களை தேடிப்பிடித்து தாக்குவதுடன், அவர்களின் வீடுகளுக்கு தீ வைக்கும் சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. கடந்த 35 நாட்களில் மட்டுமே 11 ஹிந்துக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டில்லியில் ஹிந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். மேலும், ஹிந்துக்களுக்கு எதிரான சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடரில் ஒப்பந்தமாகி இருந்த முஷ்தபிஜூர் ரகுமான், கோல்கட்டா அணியில் இருந்து விலக்கப்பட்டார். இதனால், அதிருப்தியடைந்த பங்களாதேஷ் , டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு இந்தியாவுக்கு வர மாட்டோம் என்று முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக இருநாடுகளிடையே பதற்றம் நிலவி வந்தது. இந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியர்களுக்கான விசா மற்றும் தூதரக சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக பங்களாதேஷ் அறிவித்துள்ளது. டில்லி, கோல்கட்டா, சென்னை,மும்பை, அகர்தலா மற்றும் கவுகாத்தியில் செயல்பட்டு வரும் பங்களாதேஷ் தூதரகங்கள் மூலம் வழங்கப்படும் வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான விசாக்களை தவிர்த்து, சுற்றுலா உள்ளிட்ட பிற வகை விசாக்கள் வழங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தூதரக அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில்,’ வணிக மற்றும் வேலைவாய்ப்பு நோக்கங்களைத் தவிர, இந்தியர்களுக்கு ஏனைய வகை விசாக்கள் வழங்குவதை நிறுத்திவிட்டோம் என கூறியுள்ளார். https://athavannews.com/2026/1458863
  11. யாருடைய எதிர்காலத்தை கவனத்திற்கொண்டு நாம் இந்தியா எமக்குச் செய்தவற்றைக் கடந்து செல்லவேண்டும் என்கிறீர்கள்? எமது ஒரே நம்பிக்கையாக இருந்த விடுதலைப் போராட்டத்தை முழுமையாக அழித்து, இன்றுவரை தனது கட்டுப்பாட்டிற்குள் எம்மை வைத்துக்கொண்டு தீர்வொன்றையும் தராது அல்லது அதைத் தருவதற்கான அழுத்தத்தினை இலங்கையரசிற்குக் கொடுக்க விரும்பாத இந்தியாவின் துரோகத்தை, கபடத்தனத்தை எதற்காகத் தமிழர்கள் கடந்துபோகவேண்டும் என்கிறீர்கள்? எமது அன்றாட வாழ்வும் இருப்பும் இன்றுவரை இந்தியாவால் பாதிக்கப்பட்டு வருகையில் எதற்காக இதுகுறித்துப் பேசாது சென்றுவிட வேண்டும் என்கிறீர்கள்? அடுத்தது விட்டுக் கொடுப்பு. நாம் எதை விட்டுக்கொடுக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள்? எம்மிடம் விட்டுக் கொடுப்பதற்கு என்னவிருக்கிறது? எமது கவசத்தை முற்றாக களைந்து, அழித்து, எம்மை சிங்களப் பேரினவாதத்தின் கால்களில் அடிமைகளாக வீழ்த்திவிட்டுச் சென்றிருக்கும் இந்தியாவுக்குக் கொடுப்பதற்கு எம்மிடம் இன்னமும் என்ன மீதமாயிருக்கிறது என்கிறீர்கள்? ரஸ்ஸியாவின் அனுதாபியான நீங்கள், அதன் நேசநாடான இந்தியாவிடம் தமிழர்களைப் பார்த்து அடிபணிந்து போங்கள் என்று கூறுவதில் எனக்கு வியப்பில்லை. எமக்கு நடந்த, இன்றுவரை நடந்துவருகின்ற அநீதிகளை நாமே பேசாது, மெளனமாக, உங்கள் பார்வையில் "விட்டுக் கொடுத்து" கடந்து சென்றால் எமக்காக யார்தான் பேசப்போகிறார்கள் என்று நினைக்கிறீர்கள்?
  12. கூகிள் ஷீற்றைப் பாவிப்பவர்கள் கணிப்புக்களை இந்தத் திரியில் பிரதிசெய்யவேண்டும். இல்லாவிட்டால் போட்டியில் இணைத்துக்கொள்ள இயலாது.. இன்று கூகிள் ஷீற்றைப் பாவித்தவர் (யாரென்று என்னால் அறியமுடியாது) பதில்களை இங்கே பதிவிடவும். நன்றி இதுவரை 11 அணிகள் தமது வீரர்களின் பட்டியலைத் தந்துள்ளன. மிகுதி ஒன்பது அணிகளும் பட்டியலை வெளியிட்ட பின்னர், முழுமையான பட்டியலைத் தருகின்றேன். Afghanistan Squad 31-Dec-2025 Australia Squad 01-Jan-2026 Bangladesh Squad 04-Jan-2026 England Squad 30-Dec-2025 India Squad 20-Dec-2025 Namibia Squad 03-Jan-2026 Nepal Squad 06-Jan-2026 New Zealand Squad 07-Jan-2026 Oman Squad 30-Dec-2025 South Africa Squad 02-Jan-2026 Zimbabwe Squad 02-Jan-2026
  13. நீங்கள் சொல்வது சரிதான் உலக வரலாறும் அப்படித்தான் போகின்றது ஆனால் எதிர்கால சந்ததி என்பது ஒன்று இருக்குமா என்பது சந்தேகமே வடகிழக்கு எங்கும் தற்போதுள்ள அரசியல்வாதிகளின் ஒத்துழைப்புடன் போதை கலாசாரம் வளர்தெடுக்க படுகிறதே .
  14. கதை - 194 / தை பிறந்தால் … / பகுதி 02 மார்கழிக்கும் தைப்பொங்கலுக்கும் இடையிலான நாட்கள் வேலைகளால் நிறைந்திருந்தன. கடன் வாங்கிய மரங்களைப் பயன்படுத்தி மேடைகள் கட்டப்பட்டன. விவசாயிகள் கரும்பு மற்றும் புதிதாக அறுவடை செய்யப்பட்ட அரிசியைக் கொண்டு வந்தனர். மீனவர்கள் மேளங்களை [டிரம்ஸை] வழங்கினர். பெண்கள் பழங்கால பாவை நோன்பு பாடல்களை ஒரு சடங்காக மட்டுமல்லாமல், நினைவாக ஒத்திகை பார்த்தனர், புது இளம் மாணவிகளுக்கு பயிற்சியும் கொடுத்தனர். ஆதபோல ஆண்கள் பறை மேளம் மூலம் நாட்டுப் பாடல்களை ஒத்திகை பார்த்து, பயிற்சியும் கொடுத்தனர். அப்பொழுது கதிரவனும் மதுமிதாவும் அருகருகே பணியாற்றினர். அவன் மைக்ரோஃபோன்களை [microphones] சரிசெய்து கிராமப்புற குழந்தைகளுக்கு நாட்டுப்புற தாளங்களைக் கற்பித்தான், அவள் நடன அசைவுகளை சரிசெய்து வேப்ப மரத்தின் கீழ் வீணையை இசைத்தாள். இருவரும் நகர்ப்புற மேடைகளைச் சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் வயல்வெளிகளையும் கரைகளையும் சேர்ந்தவர்கள். கதிரவன் பாடினார் — மீனவர்களின் பாடல். அது உழைப்பைச் சுமந்தது. அது வலியைச் சுமந்தது. அது எதிர்ப்பைச் சுமந்தது. மதுமிதா நடனமாடினார் — பரதநாட்டியம். ஆனால் ஒரு அரங்கத்திற்கு அல்ல. அது நிலத்திற்கான ஒரு மொழி. “பரிபாடல் - தாய் மொழியில் சடங்கு குளியல், பாவை சபதம்,பெண்களின் கனவுகள் [ritual bathing in Thai, the Paavai vow, the dreams of women] பற்றி எமக்குச் சொல்கிறது. அது வாழ்க்கை உணர்வுபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு காலத்தின் மொழி. இன்று எம் வாழ்வு சங்கிலியால் பிணைக்கப் பட்டு, அரச கெடுபிடிகள் மத்தியில் நடை போடுகிறது. கதிரவன், “இதுபோன்ற காலங்களில் அதற்கு இடம் இருக்கிறதா?” அவள் சிரித்தாள். “இடமில்லாததால்தான்—நாம் இதைச் செய்கிறோம்.” அதைத் தொடர்ந்து அவர்கள் வரலாற்றைப் பற்றிப் பேசினர். குறிப்பாக சங்கக் கவிதைகளில் தைத்திங்கள் எவ்வாறு கூறப்பட்டது என்பதை சுருக்கமாக வாதாடினர். பெண்கள் ஒரு காலத்தில் கணவர்களுக்காக மட்டுமல்ல, குளிர்ந்த உலகம், வளமான நிலம் மற்றும் பகிரப்பட்ட செழிப்புக்காக பிரார்த்தனை செய்து [praying not just for husbands, but for a cool world, fertile land, and shared prosperity.] ஆறுகளில் குளித்தனர் என்ற விபரம் அவர்களின் உரையாடலில் இருந்தது. ஒரு கட்டத்தில், மதுமிதா பரிபாடல் 11 இல் சிலவரியை பாடிக்காட்டினாள். அவன் அதை கேட்பதை விட, அவளின் செவ்விதழும் அதற்கு ஏற்ப கண்களும் நடனமாடுவதையே, இமை வெட்டாமல் பார்த்துக் கொண்டு இருந்தான். “கழுத்து அமை கை வாங்காக் காதலர்ப் புல்ல, விழுத் தகை பெறுக!” என வேண்டுதும்’ என்மாரும், ‘பூ வீழ் அரியின் புலம்பப் போகாது, யாம் வீழ்வார், ஏமம் எய்துக!’ என்மாரும், ‘ “கிழவர் கிழவியர்” என்னாது, ஏழ்காறும், மழ ஈன்று மல்லற் கேள் மன்னுக!” என்மாரும் “எம் கழுத்தைச் சுற்றித் தழுவிய எம் காதலர் (கணவர்) எம்மைப் பிரியாது இருக்க வேண்டும். பல பூக்களை நாடும் வண்டுகள் போல, எம் கணவர் பிறரை நாடாமல் என்றும் எம்மோடு இருக்க வேண்டும். எம் கணவரும், யாமும், கிழவர்,கிழவியர் என்று உலகத்தோர் கூறா வண்ணம், பேரிளம் பெண் என்னும் எமது ஏழாம் பருவம் [பேதை, பொதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை & பேரிளம் பெண் ] எய்துமளவும், இந்த இளம் பருவத்தினராகவே இன்று இங்கு தைந் நீராடுவது போல என்றும் நிலை பெற வேண்டும்.”என்கிறது. “பொங்கல்” என்றால் ‘பொங்கி வழிதல்’. அது வீணாகப் பெருகுதல் அல்ல; தேவைக்கேற்ற நிறைவு, உழைப்புக்கான பலன், மண்ணும் மனிதனும் சேர்ந்து பெற்ற செழிப்பு. அதிகம் அல்ல — அர்த்தமுள்ள வளம்." அவன் பொங்கலுக்கு ஒரு விளக்கம் கொடுத்தான் [Pongal meant “boiling over”—abundance, not excess] கதிரவன் ஒரு மாலையில் கூறினான், அவர்கள் எங்களை ஆள்கிறவர்கள். ஆனால் நாம் யார் என்பதை நினைவுகூரும் தருணம், நமது பண்பாடு, மொழி, நிலம், நினைவு, மரியாதை இவற்றை மீண்டும் பிடித்துக்கொள்ளும் நேரம் — அவர்கள் கட்டுப்பாட்டுக்கு வெளியே நாம் நிற்கிறோம். அதனால் தான் அது அவர்களுக்கு பயமளிக்கிறது. அவர்கள் ஆயுதங்களை வைத்திருக்கலாம், சட்டங்களை எழுதலாம், அதிகாரத்தைப் பிடித்திருக்கலாம் — ஆனால் ஒரு மக்கள் தங்களின் அடையாளத்தை உணர்ந்து, மௌனமாக உறுதியாக நிற்கும்போது, அந்த நிலை எந்த ஆட்சிக்கும் அச்சத்தை உண்டாக்கும். அதனால் தான் அது ஆள்பவர்களை பயமுறுத்துகிறது. [That is why it frightens those who rule us.”]" மதுமிதா தலையசைத்தாள். "ஏனென்றால் அது மண்ணுக்குச் சொந்தமானது." என்றாள். உழவன் ஆண்டு முழுவதும் உழைத்து இயற்கையோடு இயைந்து பருவத்தே பயிர் செய்து முடிவில் பலன் காண்கின்ற மாதம் தைமாதம். அந்த மாதத்தின் முதல் நாளில், சூரியன் மெதுவாக உதித்தது. மீனவ கிராமங்களிலும் விவசாயக் குடியிருப்புகளிலும் பொங்கல் பானைகள் கொதித்தன. பால் சிந்தியது. அரிசி உயர்ந்தது. குழந்தைகள் சிரித்தனர். பொங்கல் என்பதற்கு பொங்கிப் பெருகி வருவது என்று பொருள். அறுவடை செய்துக் கிடைத்த புது அரிசியைக் களைந்து போட்டால் அது வெண்மையாகப் பொங்கும். அது மேகத்தின் பொங்கலாடுதல் போல இருப்பதால், அந்த உணவுக்கும் பொங்கல் என்ற பெயர் வந்தது. பஞ்சு போல வெண்மையாக மேலெழுந்து மேகம் நின்றால் அதற்குப் பொங்கலாடுதல் என்று பெயர். 2500 ஆண்டுகளுக்கு முன்பே, முதிர்ச்சி அடைந்த மொழியையும் பண்பாட்டையும் கொண்டிருந்த தமிழர்கள், அன்றில் இருந்து அவர்களுடன் கலந்த சைவ சமயத்தின் படி இன்னும் பொங்கலை முறைப்படி கொண்டாடுகிறார்கள் என்பது தவிர பொங்கல் மத விழாவாக அல்லாமல் தமிழர் திருநாளாகவே அன்றும் இன்றும் இருந்து வருகிறது. பொங்கல் யாரையும் வணங்குவதல்ல. மாறாக நன்றி செலுத்துவது மட்டுமே. இயற்கைக்கு நன்றி என்பதை தமிழர்கள் சூரிய வழிபாடாக வணங்குகின்றனர். உலகுக்கு உணவு தரும் உழவனுக்கு நன்றி சொல்லும் நன்னாள் தான் பொங்கல். உழவன் அதை இயற்கைக்கு நன்றி சொல்லும் நாளாக நினைக்கிறான். அவ்வளவுதான்! பத்திக்கும் பெருமைக்கும் புகழ் வீசி புத்திக்கும் ஆற்றலுக்கும் களம் அமைத்து கத்திக்கும் வெறுப்புக்கும் இடம் இல்லா தித்திக்கும் பொங்கல் தமிழர் பெருநாளே நாத்து நட்டு புதுநெல் எடுக்க காத்து இருந்து அறுவடை செய்து தத்தி நடக்கும் மழலையும் மகிழ மூத்த மகளீர் பொங்கும் திருவிழாவே நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 03 தொடரும் துளி/DROP: 1980 [கதை - 194 / தை பிறந்தால் … / பகுதி 02 https://www.facebook.com/groups/978753388866632/posts/33187012377613982/?
  15. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 83 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 83 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை அசோகர் போதிமரத்தில் வரைந்த கோட்டின் வழியாக போதி மரக் கிளை மரத்திலிருந்து தானாகப் பிரிந்து, தனக்காக உருவாக்கப்பட்ட பாத்திரத்தை அடைந்தது. எதிர்பார்த்தபடி, அந்த நேரத்தில், அதை வரவேற்பதாக, ஒரு பூகம்பம் ஏற்பட்டது. போதி கிளை தானாகப் பிரிவது, வான இசை [celestial music] மற்றும் அரிதன் புறப்பட்ட அதே நாளில் பாடலிபுத்ரத்தை அடைந்தது ஆகியவை நம்பமுடியாத நிகழ்வுகள். இந்த அத்தியாயம் ஒட்டுமொத்தமாக நம்பமுடியாதது ஆகும். அத்தியாயம் 19 [போதி விருட்சம் வருகை]: இது தேரி சங்கமித்தா மற்றும் அவள் போதிக் கிளையை கப்பல் மூலம் இலங்கைக்கு கொண்டு வருவது பற்றியது. அவள் பதினொரு பிக்குனிகளுடனும் போதிக் மரக் கிளையுடனும் ஒரு கப்பலில் வந்தாள். அப்பொழுது நாகர்கள் போதிக் கிளையை எடுக்க முயன்றனர், சங்கமித்தா ஒரு கிறிப்பன் அல்லது கிரிஃபின் (griffin, சமஸ்கிருதத்தில் கருடன்) வடிவத்தை எடுத்து அவர்களின் முயற்சியை முறியடித்தாள். சங்கமித்தா அசோகருக்குப் பிறந்தால், அவள் எப்படி ஒரு கிரிஃபின் வடிவத்தை எடுக்க முடியும்? மேலும் பயந்துபோன நாகர்கள் அவளிடம் சமாதானம் கேட்டு, ஜம்புகோலம் [Jambukola, Jambukolapattinam or Dambakola Patuna, Tamil: ஜம்புகோலப்பட்டினம், is an ancient port to the north of Jaffna, in the Northern Province of Sri Lanka.] வரை கப்பலை அழைத்துச் சென்றனர். பல அதிசய நிகழ்வுகள் அப்பொழுது நடந்தன. இறுதியாக போதிக் மரக் கிளையுடன் சென்ற கப்பல் அது புறப்பட்ட அதே நாளில் அதன் திட்டமிட்ட இடத்தை அடைந்தது. போதிக் கிளையின் வருகையைக் குறிக்கும் வகையில் வழக்கம் போல் ஒரு பூகம்பம் ஏற்பட்டது. ஒரே நாளில் வருகையும், பூகம்பமும் வழக்கமான இந்த புத்த மத நூல்களில் காணப்படும் கதை வர்ணனைகளாகும். கஜரகாமத்தில் [கதிர்காமம் / Kajaragama / Katragama] லிருந்து பிரபுக்களும் வருகையைக் கொண்டாட வந்தனர். எனவே, போதி மரம் மற்றும் புத்த மதம் வருவதற்கு முன்பே முருக (கதிர்காமம்) வழிபாடு அங்கு இருந்தது தெளிவாகிறது. பிராமணர்களும் அங்கு இருந்தனர். பிராமணர்கள் பௌத்தர்கள் அல்ல. சங்கமித்தா ஒரு மனிதரான அசோகரின் மகள் என்று நாம் கருதினால், இந்த அத்தியாயம் ஒரு மதக் கற்பனையே தவிர வரலாற்றுப் பதிவு அல்ல. முருக வழிபாட்டின் தொன்மை மற்றும் பண்டைய இலங்கையில் பிராமணர்களின் இருப்பு ஆகியவை மறைமுகமாக இங்கு உறுதிப்படுத்தப்படுகின்றன. கதிர்காமம் 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக முருக வழிபாட்டின் புனித மையமாக இருந்து வருகிறது, இது தமிழ் இந்து மரபுகள், உள்ளூர் வேடர் நம்பிக்கைகள் மற்றும் பிற்கால பௌத்த நடைமுறைகளால் பாதிக்கப்பட்டுள்ளது. பல மதங்களைக் கொண்ட தளமாக அதன் முக்கியத்துவம், இலங்கையின் ஆன்மீக நிலப்பரப்பில் அதை தனித்துவமாக்குகிறது. இலங்கை பௌத்த மரபுகளின்படி, கிமு 2 ஆம் நூற்றாண்டில் மன்னன் எல்லாளன் உடனான தனது புகழ்பெற்ற போருக்கு முன்பு, மன்னன் துட்டகாமினி, கதிர்காம தெய்வத்தை (முருகன் / ஸ்கந்தன்) பிரார்த்தனை செய்து ஆசிகளைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த பாரம்பரியம் பௌத்த வரலாறுகள் மற்றும் உள்ளூர் நாட்டுப்புறக் கதைகள் இரண்டையும் அடிப்படையாகக் கொண்டது. அவை துட்டகாமினி ஒரு பக்தியுள்ள பௌத்தராகவும், அவருக்கு வெற்றியைத் தரக்கூடிய உள்ளூர் தெய்வங்களில் நம்பிக்கை கொண்டவராகவும் விவரிக்கின்றன. அதுமட்டும் அல்ல, துட்டகாமினியின் காலத்திற்கு முன்பே, கிமு 2 ஆம் நூற்றாண்டு முன்பே, கதிர்காம கோயில், தெய்வீக உதவியை நாடும் போர்வீரர்கள் மற்றும் மன்னர்களுக்கு ஒரு முக்கிய வழிபாட்டுத் தலமாக இருந்தது என்றும் நம்பப்படுகிறது. அத்தியாயம் 20 [தேரருடைய நிர்வாணம்]: இது அசோகர், தேவநம்பிய தீசன், மகிந்த தேரர் மற்றும் தேரி சங்கமித்தா ஆகியோரின் மரணங்களைப் பற்றியது. தேவநம்பிய தீசன் பல மதக் கட்டிடங்களைக் கட்டினார், மேலும் நாற்பது ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு இறந்தார். அவரது மரணத்திற்குப் பிறகு அவரது தம்பி உத்தியன் (uttiya) ஆட்சி செய்தார். உத்தியாவின் எட்டாம் ஆண்டில் மகிந்த தேரர் இறந்தார். மகிந்த தேரரின் இறுதிச் சடங்கு மற்றும் நினைவுச் சின்னம் நிறுவப்பட்டது பற்றி மிக நீண்ட விளக்கம் உள்ளது. தேரி சங்கமித்தாவும் அடுத்த ஆண்டு இறந்தார். இந்த அத்தியாயத்தில் தேரர்கள் மற்றும் தேரிகளின் பல மரணங்கள் சொல்லப்பட்டு உள்ளன. பத்து ஆண்டுகள் ஆட்சி செய்த பிறகு மன்னர் உத்தியனும் இறந்தான். அத்தியாயம் 21 [ஐந்து அரசர்கள்]: இது மகாசிவன், சூரதிஸ்ஸன் [சூரதிச்சன்], சேனன், குத்திகன் மற்றும் அசேலா [அசேலன்] ஆகிய [Mahasiva, Suratissa, Sena, Guttaka and Asela] ஐந்து மன்னர்களின் ஆட்சியைப் பற்றியது. மகாசிவன், சுரதிஸ்ஸன் மற்றும் அசேலா ஆகியோர் தேவநம்பிய தீசனின் இளைய சகோதரர்கள். மகாசிவனும் சுரதிஸ்ஸனும் தலா பத்து ஆண்டுகள் ஆட்சி செய்தனர். மகாசிவன் மற்றும் சுரதிஸ்ஸனின் பிறகு, இரண்டு தமிழ் மன்னர்களான சேனன் மற்றும் குத்திகன் (தீபவம்சத்தில் Gutta / குட்டன்) இருபத்தி இரண்டு ஆண்டுகள் நீதியாக ஆட்சி செய்தனர். தீபவம்சமும் மகாவம்சமும் இந்த இருவரையும் தமிழர்கள் என்று அடையாளம் காட்டுகின்றன, ஆனால் இந்த இரண்டு தமிழர்களும் குதிரைகளை கையாளும் ஒரு சரக்குக் கப்பலின் மகன்கள் என்று மகாவம்ச ஆசிரியர் கூறுகிறார். ஒரு குதிரை வியாபாரி ஒரு அரசாங்கத்தை பதவி நீக்கம் செய்ய முடிந்தது என்று நம்புவது அபத்தமானது? அப்படி என்றால், அது ஒரு அரசாங்கம் அல்ல, ஆனால் ஒரு சிறிய [குழு ஒன்றின் அரசாக இருக்கவேண்டும்] குலத் தலைவரின் ஆட்சியாக இருக்க வேண்டும்; அதாவது மிகவும் உள்ளூர் விவகாரம் இது. இங்கே, தீபவம்சம், 18-47: சூரதீசனை வென்ற பிறகு, இரண்டு தமிழ் இளவரசர்களான சேனா மற்றும் குட்டா பன்னிரண்டு (இருபத்தி இரண்டு?) ஆண்டுகள் நீதியுடன் ஆட்சி செய்தனர் என்று கூறுகிறது. எனவே அவர்கள் உள்ளூர் தமிழர்களாக இருக்கலாம்? மகாவம்ச ஆசிரியர் அப்போது இருந்த தமிழ் அடையாளத்தை அழிக்க விரும்பினார், மேலும் அவர்கள் வெளிநாட்டினர் என்பதைக் குறிக்க குதிரை வியாபாரியைக் கண்டுபிடித்தார் என்று கருதலாம். தமிழர்கள் குதிரை வியாபாரிகளாக இருந்திருக்க முடியாது; அந்தக் காலத்தில் அரேபியர்கள் மட்டுமே குதிரை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் மூத்தசிவனின் ஒன்பதாவது மகனான அசேலன், சேனனையும் மற்றும் குத்திகனையும் வீழ்த்தி பத்து ஆண்டுகள் ஆட்சி செய்தார். பின்னர் எல்லாளன் நாற்பத்து நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தார். தீபவம்சம் எல்லாளனை ஒரு தமிழர் என்று கூறவில்லை, மேலும் சோழ நாட்டைச் சேர்ந்தவன் என்றும் கூறவில்லை. அவர் நண்பனுக்கும் எதிரிக்கும் நீதியுடன் ஆட்சி செய்தார். அவரது புண்ணிய செயல்கள் இந்த அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. அவர் வேறுபட்ட நம்பிக்கை [இந்து / சைவ] கொண்டவர் என்பதால் மகாவம்ச ஆசிரியர் அவர் மீது குற்றம் காண்கிறார். "பௌத்த மதத்திற்கு மாறான" இவ்வகையான செயல்களால், புத்தரின் ஆத்மா, நினைவுச் சின்னங்களில் மிகவும் கலக்கமடைந்து திகிலடைந்து வெறுப்பில் நெளிந்து கொண்டிருக்கும் என்று நம்புகிறேன்! Part: 83 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 Bo tree branch detached from the tree along the line drawn by Asoka, and reached vessels made for it on its own. There was an earthquake at this time, as expected. Self detaching of Bo branch, celestial music and the arrival at Pupphapura on the same day of departure by Arittha are unbelievable events. This chapter is, on the whole, untrustworthy for historical purpose. Chapter 19: This is about Theri Samghamitta and her bringing the Bodhi branch to Lanka by ship. She came with eleven Bhikkhunis along with the Bo tree branch in a ship. Nagas tried to take the Bo branch, and Samghamitta took the form of a griffin (garuda in Sanskrit) and thwarted their attempt. If Samghamitta is born to Asoka, how could she take the form of a griffin? Terrified Nagas then begged peace with her, and escorted the ship until Jambukola. There were many miraculous happenings and finally the ship with Bo tree branch reached to its intended place on the same day it departed. There was an earthquake, as usual, to mark the arrival of the Bo branch. Arrival on the same day and earthquake are usual religious embellishments. Nobles from Kajaragama (Katragama) too came to celebrate the arrival. Muruga (Katragama) worship was there before the arrival of Bo tree and the Buddhism. Brahmins were also there. Brahmins were not Buddhists. If we have to assume Samghamitta is the daughter of Asoka who is a human, then this chapter is a religious fantasy and not a historical record. The antiquity of Muruga worship and the presence of Brahmins in the ancient Lanka are also indirectly confirmed. Chapter 20: This about the deaths of Asoka, Devanampiya Tissa, Mahinda Thera and Theri Samghamitta. There seems to be some errors in the length of Asoka’s reign. Bo tree was planted in the Mahamegavanarama garden on the eighteenth year of the reign (18 years). Asoka’s first queen died twelve years after this (18+12). He raised Tissarakkha to the rank queen after four years (18+12+4). She caused the Bo tree to die three years thereafter (18+12+4+3). Asoka died fourth year after this (18+12+4+3+4=41). The Mahavamsa, 20-6, says the total is thirty seven years. There may be some confusion in the wording or it is from the time of assuming the power; four years before the consecration. It seems that the Mahnama wanted to stress that Bo tree by Asoka died, but that by Devanampiya Tissa survived. Devanampiya Tissa constructed many religious buildings, and died after the forty years of rule. After his death his younger brother, Uttiya, ruled. Mahinda Thera died on the eighth year of Uttiya, and Mahinda Thera was sixty years of age. There seems to be some confusion on the age of Mahinda Thera when he died. Mahinda Thera came to Ceylon when he was thirty two years of age (32). Devanampiya Tissa ruled for forty years (32+40). Then he died on the eighth year of Uttiya’s rule (32+40+8=80). Mahinda Thera should be eighty years of age when he died, but the Mahavamsa, 20-32, says he was sixty years of age when he died, 20 - 32. Wilhelm Geiger says there was some play of words, but let it be as it is. There is quite a long description of the funeral of Mahinda and the installation of the relic. Theri Samghamitta also died next year, and though the Mahavamsa, 20-49, says she died at fifty nine years of age, but she must have died at the age of seventy nine. The same confusion or play of words here too. The Mahavamsa is full of happy coincidences, and one is here too. Gautama Buddha died at eighty years of age, and the Mahinda Thera too died at the same age of eighty years, another invented coincidence. There were many deaths of Theras and Theris in this chapter. The King Uttiya also died after reigning for ten years. This chapter is kind of a chapter of deaths. This chapter is also full of invented details and coincidences. Chapter 21: This is about the rule by five kings: Mahasiva, Suratissa, Sena, Guttaka and Asela. Mahasiva, Suratisa and Sena are younger brothers of Devanampiyatissa. Mahasiva and Suratissa ruled for ten years each. After the rules of Mahasiva and Suratissa two Damila kings, Sena and Guttaka (Gutta in the Dipavamsa) justly ruled twenty-two years. Both, the Dipavamsa and the Mahavamsa identify these two as Damilas, but Mahavamsa author invented that these two Damilas are sons of a freighter who deals with horses. It is ridiculous to believe that a horse dealer was able to dethrone a government. That means it was not a government, but a head of a small clan; a very local affair. (The Dipavamsa, 18-47, says they are Damila Princes). They could be local Tamils. The Mahavamsa author wanted to erase the then existing Tamil identity, and invented the horse dealer to indicate they were foreigners. Tamilians could not have been horse dealers; only Arabs dealt in horse-trading in those days. Then Asela, the ninth son of Mutasiva, overpowered Sena and Guttaka, and ruled for ten years. Then Elara ruled for forty-four years. Dipavamsa does not say he was a Tamil, and does not say he was from Cola country. He ruled with justice to friend and foe. His meritorious deeds are described in this chapter. The Mahavamsa author finds fault with him because he was of different faith. Buddha’s relics must be writhing in disgust in their reliquaries on this un-Buddhist logic. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 84 தொடரும் / Will follow துளி/DROP: 1979 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 83 https://www.facebook.com/groups/978753388866632/posts/33186888984292988/?
  16. முன்னோடி’ நகரத் தொடங்கியிருப்பதில் மகிழ்ச்சி. மாதாந்த பங்களிப்பு செய்பவர்களின் தனிப்பட்ட விபரங்களை பொதுவெளியில் அறிவிக்க வேண்டிய அவசியமில்லை என நினைக்கிறேன். ஆனால், முன்னோடி மூலம் நடைமுறைப்படுத்தப்படும் பிரத்தியேக மற்றும் அவசர உதவுத் திட்டங்கள், அவற்றுக்கான நிதி தொகை, செயற்படுத்தும் காலஅளவு, மற்றும் உதவி பெற்றோர் தொடர்பான அடிப்படை விபரங்கள் அறிவிக்கப்படுவது நல்லது என்பது என் கருத்து. இது நிறுவனத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும். ஒவ்வொருவரும் தனித்தனியாக தாயகத்தில் உள்ள முன்னோடிக்கான வங்கிக் கணக்குக்கு நேரடியாகப் பணம் அனுப்பும் போது வங்கி கட்டணங்கள் போன்ற கூடுதல் செலவுகள் ஏற்படலாம். அனுப்பப்படும் தொகைகளின் விபரங்கள் வங்கியில் பதிவாகினாலும், அவற்றை ஒரே நபர் அல்லது குழு பொறுப்புடன் கண்காணித்து பராமரிப்பது அவசியம். அதற்காக, முன்னோடியில் நிதிப் பொறுப்பாளர் ஒருவரை அல்லது இருவரைக் கொண்ட குழுவை நியமிப்பது சிறந்தது எனக் கருதுகிறேன். அந்த பொறுப்புக்கு கோசன் ஜி, குமரசாமி, வாத்தியார் ஆகிய மூவரில் ஒருவரை அல்லது இருவரை தெரிவு செய்யலாம். மாற்றாக, ஒவ்வொரு நாட்டிலும் முன்னோடியின் நாட்டு பொறுப்பாளரை நியமித்தால், அந்த நாட்டில் உள்ளவர்கள் அவர்களிடம் பணம் அனுப்பி வைக்கலாம். தேவையான விபரங்களையும் அவர்களிடம் இருந்தும் பெறலாம். அந்தந்த நாட்டில் திரட்டப்படும் தொகைகளை, பொறுப்பாளர்கள் முன்னோடியின் பொதுக் கணக்கில் முறையாக சேர்த்துவிடலாம். இது செலவுகளைக் குறைப்பதுடன், நிதி நிர்வாகத்தையும் எளிதாக்கும். நான் இருக்கும் நாட்டிற்கான பொறுப்பாளராக குமரசாமியை முன்மொழிகிறேன். அவர் சம்மதித்தால், எனது மாதாந்த பங்களிப்பை அவர் குறிப்பிடும் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைக்கத் தயாராக இருக்கிறேன். இதுபோன்ற அமைப்புசார், வெளிப்படையான மற்றும் பலராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய செயற்பாடுகளுக்குள் நானும் முழுமையாக இணைந்து செயல்படுவேன். உங்களது கருத்துகளையும் முன்மொழிவுகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள். பலராலும் ஏற்றுக் கொள்ளப்படும் செயற்பாடுகளுக்குள் நானும் இணைந்து கொள்கிறேன்.
  17. பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை சபாநாயகரிடம் சமர்ப்பிக்க தீர்மானம்! பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாளை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிக்க திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். அத்துடன் சர்ச்சைக்குரிய தரம் 6 ஆங்கிலப் பாடத்திட்டம் தொடபான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம், நுகேகொடை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இதேவேளை 6ஆம் வகுப்புக்கான ஆங்கிலப் பாடத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய பாட அலகை நீக்குவதற்கு, தேசிய கல்வி நிறுவகம் அனுமதி வழங்கியுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இந்த விடயம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக கல்வியமைச்சின் முன்னாள் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன தலைமையிலான குழுவை நியமிப்பதற்கு, தேசிய கல்வி நிறுவகத்தின் நிர்வாக சபை தீர்மானித்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். இதேவேளை தற்போதைய அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்கள் பிள்ளைகளின் மனதிற்கு பொருத்தமற்ற பல விடயங்களையும், பாட அலகுத் தொகுதிகளில் பல்வேறு பிழைகளைக் கொண்டு காணப்படுவது மற்றும் இது தொடர்பாக சரியான நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட விடயங்களைக் கருத்திற் கொண்டு, கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை எதிர்க்கட்சிகள் கொண்டு வரவுள்ள நிலையில் நேற்றையதினம் பிரேரணையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைச்சாத்திட்டுள்ளனர். https://athavannews.com/2026/1458927
  18. புகையிலை, சிகரெட் பயன்பாட்டினால் இலங்கையில் வருடாந்தம் 22,000 உயிரிழப்புகள்! புகையிலை மற்றும் சிகரெட் பாவனைக் காரணமாக இலங்கையில் வருடாந்தம் சுமார் 22 ஆயிரம் உயிரிழப்புகள் பதிவாவதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் (ADIC) தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்படும் அனைத்து இறப்புகளில் 83 சதவீதமானவை தொற்று அல்லாத நோய்களால் ஏற்படுகின்றது. இந்த இறப்புகளில் செல்வாக்கு செலுத்தும் நான்கு பிரதான காரணிகளில் புகையிலை பயன்பாடும் ஒன்றாகும் என்றும் ADIC சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் சுமார் 1.5 மில்லின் பெரியவர்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். அதேநேரம், உலகளவில் ஒவ்வொரு ஆறு வினாடிக்கும் புகையிலை பயன்பாடு காரணமாக ஒரு இறப்பு பதிவாவதாக புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க குறிப்பிட்டார். https://athavannews.com/2026/1458815
  19. விஷ மதுபானத்தால் 7 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதான சந்தேகநபர் கைது! சட்டவிரோத மதுபானம் அருந்தியதால் 7 பேர் உயிரிழந்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபரை வென்னப்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 47 வயதுடையவர் எனவும், அவர் காலவத்தை, கிழக்கு பண்டிரிப்புவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுபானம் அருந்தி உடல்நலக்குறைவு ஏற்பட்ட மேலும் 08 பேர் தற்போது நீர்கொழும்பு மற்றும் பேராதனை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 6ஆம் திகதி சட்டவிரோத மதுபானம் அருந்தி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். இதன்போது ஏற்கனவே இரண்டு பெண் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். குறித்த இரு பெண்களையும் நேற்று மாரவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து, அவர்களை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. வென்னப்புவ பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2026/1458823
  20. நாங்கள் கடந்த காலத்தில் வாழ்கிறோம், தவறுகள் நிகழ்ந்துள்ளது அதனையே பேசிக்கொண்டிருந்தால் எதிர்கால சந்ததியினர் வாழ்க்கை கடினமாகிவிடும். அவர்களது எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு சில விடயங்களை கடந்து செல்ல வேண்டும். விட்டுக்கொடுப்பதால் யாரும் கெட்டுப்போவதில்லை என சொல்வார்கள்.
  21. ரஷ்ய எண்ணெய்க் கொள்வனவு: இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது ட்ரம்பின் 500% வரி! ரஷ்யாவிலிருந்து எண்ணெய் உள்ளிட்ட எரிசக்தி பொருட்களை வாங்கும் நாடுகள் மீதான வரிகளை குறைந்தது 500 சதவீதமாக உயர்த்த அச்சுறுத்தும் ஒரு சட்டமூலத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பச்சைக்கொடி காட்டியதாக கூறப்படுகிறது. இந்த சட்டமூலம் அங்கீகரிக்கப்பட்டால், அமெரிக்காவின் தடைகளை மீறி ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளுக்கு வரிகளால் அழுத்தம் கொடுக்கப்படும். செனட் சபையில் ட்ரம்பின் நெருங்கிய காங்கிரஸ் நண்பர்களில் ஒருவரான அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாமின் இந்த விடயத்தை உறுதிபடுத்தினார். ரஷ்யாவின் உக்ரேன் படையெடுப்புடன் தொடங்கிய போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு ஒப்பந்தத்துக்காக ட்ரம்ப் நிர்வாகம் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. இதில் அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகளின் தொகுப்பு மொஸ்கோவை பொருளாதார ரீதியாக முடக்கும் நோக்கம் கொண்டது. இந்த நிலையில் மேற்படி புதிய சட்டமூலம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. இந்த சட்டம், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு சீனா, இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளின் மீது மிகப்பெரிய செல்வாக்கை வழங்கும். மேலும் உக்ரேனில் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் போருக்கு நிதியளிக்கும் தள்ளுபடி செய்யப்பட்ட ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்த அவர்களை ஊக்குவிக்கும் என்று தென் கரோலினா குடியரசுக் கட்சி தனது பதிவில் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2026/1458914
  22. டேங்கர் கப்பலை கைப்பற்ற அமெரிக்காவுடன் இணைந்து இங்கிலாந்தும் உதவியதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவிப்பு! சர்வதேசத் தடைகளை மீறிச் செயல்பட்ட (Marinera) மரைனேரா மற்றும் (M/T Sophia) எம்/டி சோபியா ஆகிய இரண்டு எண்ணெய் கப்பல்களை அமெரிக்கக் கடலோரக் காவல்படை வெற்றிகரமாகக் கைப்பற்றியது. இந்தப் பாரிய நடவடிக்கையில், பிரித்தானியப் படைகள் கண்காணிப்பு மற்றும் ஆதரவுப் பணிகளை மேற்கொண்டு அமெரிக்காவிற்குத் துணையாக நின்றன. பிடிபட்ட குறித்த கப்பல்கள் ரஷ்யா, ஈரான் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக எண்ணெய் கடத்தியதாகவும், பயங்கரவாதச் செயல்களுக்கு நிதியுதவி செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளன. கப்பல்களைக் கைப்பற்றுவதற்கு முன்பாக அவை தங்கள் அடையாளங்களை மாற்றிக்கொண்டு தப்பிக்க முயன்ற போதிலும், வட அட்லாண்டிக் பகுதியில் வைத்து அவை மறிக்கப்பட்டன. இந்தச் சம்பவம் நிழல் கப்பற்படைக்கு (Shadow Fleet) எதிரான ஒரு முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும் இதற்கு ரஷ்யா தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. அமெரிக்க மற்றும் பிரித்தானியத் தலைவர்கள் இந்த வெற்றியைக் கடல்சார் பாதுகாப்பிற்கான ஒரு கூட்டு முயற்சியாகக் கொண்டாடுகின்றனர். https://athavannews.com/2026/1458958
  23. அமெரிக்காவிற்கு மேற்கு நாடுகளின் ஆதரவு கட்டாயம் தேவை. வெனிசுலா அமெரிக்க நடவடிக்கையில் கூட மேற்கு நாடுகள் அடக்கியே வாசிக்கின்றன, இரண்டு தரப்பிற்கும் மறுதரப்பின் உதவி தேவை. இது ஒரு பெரும் பொருளாதார நெருக்கடிக்கு இந்த நடவடிக்கை இட்டு செல்லும் (சர்வதேச கடல் சட்டத்தினை மீறும்), சர்வதே கடலில் இவ்வாறான சோமாலிய கடத்தல்காரர்கள் ரேஞ்சிற்கு அமெரிக்கா இறங்கி வந்திருப்பது பெரும் அதிர்ச்சியாகவுள்ளது. எதிர்காலம் ஒரு இக்கட்டான காலகட்டத்திற்குள் செல்கிறது.
  24. ஐக்கிய நாடுகள் சபையின் 31 அமைப்புகளில் இருந்து வெளியேறுகிறது அமெரிக்கா : ட்ரம்ப்பின் அதிரடி உத்தரவு 08 January 2026 அமெரிக்காவின் தேசிய நலன்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்துவதாகக் கூறி, ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய பிரிவுகள் உட்பட 66 சர்வதேச அமைப்புகளிலிருந்து அமெரிக்கா உடனடியாக வெளியேறுவதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ட்ரம்பினால் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ அறிவிப்பின்படி, அமெரிக்கா பின்வரும் அமைப்புகளில் இருந்து விலகுகிறது. 1. ஐநா சார்ந்த அமைப்புகள்: ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பு (UN Women), ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் (UNFPA) உள்ளிட்ட 31 ஐ.நா அமைப்புகள். 2. ஏனைய சர்வதேச அமைப்புகள்: சர்வதேச சூரியசக்தி கூட்டணி (International Solar Alliance), கொழும்புத் திட்டம் (Colombo Plan) உள்ளிட்ட 35 ஐ.நா அல்லாத அமைப்புகள். அமெரிக்க வரி செலுத்துவோரின் பணம் வீணடிக்கப்படுவதாகவும், இந்த அமைப்புகளின் செயல்பாடுகள் "அமெரிக்கா முதலில்" (America First) என்ற கொள்கைக்கும் தேசிய நலனுக்கும் முரணாக இருப்பதாகவும் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக, சர்வதேச நிதியுதவிகள் அமெரிக்காவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக அமைவதை அனுமதிக்க முடியாது என அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த முடிவினால் சர்வதேச அளவில் சுகாதாரம், கல்வி, மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்களுக்கு அமெரிக்கா வழங்கி வந்த பெருமளவிலான நிதியுதவி நிறுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக, இலங்கையைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் கொழும்புத் திட்டம் (Colombo Plan) போன்ற அமைப்புகளில் அமெரிக்காவின் விலகல் ஆசிய பிராந்தியத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. The White HouseWithdrawing the United States from International Organiza...MEMORANDUM FOR THE HEADS OF EXECUTIVE DEPARTMENTS AND AGENCIES By the authority vested in me as President by the Constitution and the laws of the Unitedhttps://hirunews.lk/tm/439619/us-withdraws-from-31-united-nations-organizations-trumps-executive-order
  25. A/L மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு செய்திகள் அனர்த்தம் காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பாடங்களுக்கான பரீட்சைகள், எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பரீட்சைகள் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார். நாடு முழுவதும் 2,086 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைகள் நடைபெறவுள்ள நிலையில், பரீட்சை பணிகளை ஒருங்கிணைக்க 325 ஒருங்கிணைப்பு மத்திய நிலையங்கள் செயற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, 32 பிராந்திய சேகரிப்பு மத்திய நிலையங்கள் செயற்படுவதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்தது. https://adaderanatamil.lk/news/cmk51j25903oeo29n1u0yaaca

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.