Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Past hour
  2. பாழ்கிணற்றுப் படுகொலை: ’’ சட்டத்தரணிகள் ஆஜராகக் கூடாது’’ :கண்டனப் போராட்டம் ரீ.எல். ஜவ்பர்கான் மட்டக்களப்பு, நெல்லிக்காடு பகுதியில் இடம்பெற்ற கொடூரக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் எவரும் நீதிமன்றில் முன்னிலையாகக் கூடாது என வலியுறுத்தியும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைக் கோரியும் மட்டக்களப்பு நகரில் பாரிய கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை (27) முன்னெடுக்கப்பட்டது. வெல்லாவெளி 40ஆம் கிராம மக்களின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடந்த 20ஆம் திகதி கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். அதே கிணற்றிலிருந்து மற்றொரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவம் மட்டக்களப்பில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த பாரிய கொள்ளை மற்றும் கொலைகளின் பின்னணியை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. இது தொடர்பாக மூவர் உட்பட ஆறு சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கடந்த 23ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டவர்களில், மூவரை நான்கு நாட்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்கவும், ஏனைய இருவரை மார்ச் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கு இன்று (27) மீண்டும் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையிலேயே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. காந்தி பூங்காவிலிருந்து பழைய கச்சேரி (மாவட்ட செயலகம்) வரை பேரணியாகச் சென்ற போராட்டக்காரர்கள்: “இக்கொடூரக் குற்றச்செயல்களில் ஈடுபட்ட சந்தேக நபர்களுக்கு ஆதரவாக எந்தவொரு சட்டத்தரணியும் நீதிமன்றில் முன்னிலையாகக் கூடாது”, “குற்றவாளிகளுக்கு உச்சகட்டத் தண்டனை வழங்கப்பட வேண்டும்”.“பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான வன்முறைகளைத் தடுக்க பொலிஸார் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்” ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தனர். "கொலைக்குற்றவாளிகளுக்குத் துணை போகாதே!", "பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும்!", "பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீது கை வைக்காதே!" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு பொதுமக்கள் கோஷங்களை எழுப்பினர். மாவட்ட செயலகத்தின் முன்பாகத் திரண்ட மக்களைச் சந்தித்த மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர், அவர்களுடன் கலந்துரையாடினார். இதன்போது, இனிவரும் காலங்களில் இத்தகைய சம்பவங்கள் இடம்பெறாதிருப்பதை நீதித்துறை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, அரசாங்க அதிபரிடம் போராட்டக்காரர்களால் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன், ஞானமுத்து ஸ்ரீநேசன், வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத் ஆகியோருடன் பிரதேச சபைத் தவிசாளர்கள், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பெருமளவிலான பொதுமக்கள் கலந்துகொண்டனர். https://www.tamilmirror.lk/செய்திகள்/பாழ்கிணற்றுப்-படுகொலை-சட்டத்தரணிகள்-ஆஜராகக்-கூடாது-கண்டனப்-போராட்டம்/175-374634
  3. ’’தலைமையே பதவி விலகு; ரெலோ தலைமைக்கு எதிராக போராட்டம்! எஸ். கீதபொன்கலன் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (TELO) தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் தலைமைத்துவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கட்சியின் 12-வது தேசிய மகாநாட்டை உடனடியாகக் கூட்டி புதிய நிர்வாகிகளைத் தெரிவு செய்ய வலியுறுத்தியும் இன்று (27) திருகோணமலையில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை மாவட்ட தமிழீழ விடுதலை இயக்க அங்கத்தவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போராட்டம், கட்சியின் மாவட்டக் காரியாலயத்திற்கு முன்பாக ஆரம்பமானது. அங்கிருந்து பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாகச் சென்ற அங்கத்தவர்கள், திருகோணமலை கடற்கரையில் அமைந்துள்ள வெலிக்கடை தியாகிகள் அரங்கிற்கு முன்பாகத் தொடர்ந்து தமது எதிர்ப்பை வெளியிட்டனர். போராட்டத்தின் போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த கட்சியின் மூத்த உறுப்பினர் கௌரிதாஸ் பத்மலோஜினி கூறியதாவது: "கட்சியின் யாப்பு விதிகளின்படி, தற்போதைய தலைவர் உள்ளிட்ட உயர்மட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த 23.03.2026 அன்றுடன் நிறைவடைந்துள்ளது. எனவே, தாமதமின்றி கட்சியின் 12-வது தேசிய மகாநாடு கூட்டப்பட வேண்டும் என்பதே எமது பிரதான கோரிக்கையாகும்." மேலும் அவர் குறிப்பிடுகையில், வடக்கு மற்றும் கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் கட்சியின் புதிய நிர்வாகிகள் யாப்பு விதிகளின்படி தெரிவு செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை மாவட்ட நிர்வாகிகளின் தெரிவும் கட்சியின் தலைமைக் குழு முன்னிலையிலேயே நடைபெற்றது. இருப்பினும், இந்தத் தெரிவு யாப்புக்கு முரணானது என தற்போது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் பின்னணியில் கட்சியின் தலைமைத்துவத்தின் ஆசீர்வாதம் இருப்பதாகத் தாம் சந்தேகிப்பதாகவும், உட்கட்சி ஜனநாயகத்தை மீறும் இச்செயற்பாட்டை உடனடியாக நிறுத்தி, வழக்கை மீளப்பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர். அவற்றுள் சில: • "தலைமைக் குழுவே! தேசிய மகாநாட்டை உடனே நடத்து!" • "தங்கண்ணா, சிறி அண்ணா கட்டிக்காத்த கட்சியைச் சீரழிக்காதே!" • "கட்சித் தலைமையே! இரட்டை வேடம் போடாதே, ரெலோவை அழிக்காதே!" • "பதவி ஆசை போதும்; சாகும் வரை நீங்களா பதவியில் இருப்பீர்கள்?" • "தலைமைக்குழு உறுப்பினர்களே! பதவி ஆசைக்காகவா அன்று ஆயுதம் தூக்கினீர்கள்?" கட்சியின் புதிய நிர்வாகிகளின் தெரிவை அங்கீகரித்து, ஜனநாயக ரீதியாக மகாநாட்டை நடத்தி புதிய தலைமையை உருவாக்க வழிவிடுமாறு போராட்டக்காரர்கள் இதன்போது வலியுறுத்தினர். https://www.tamilmirror.lk/செய்திகள்/தலைமையே-பதவி-விலகு-ரெலோ-தலைமைக்கு-எதிராக-போராட்டம்/175-374635
  4. 10 இந்திய மீனவர்களுக்கு 10 வருட சிறை – தலா 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம்- சான்று பொருட்கள் அரசுடமையாக்கம் adminMarch 27, 2026 இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 10 இந்திய மீனவர்களையும், எதிர்வரும் 12 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருட சிறைத் தண்டனை வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளனர். இலங்கை கடற்பரப்பில் கடந்த மாதம் 19 ஆம் திகதி அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட இந்திய 10 மீனவர் களின் வழக்கு விசாரணை நேற்றைய தினம் வியாழக்கிழமை (26) மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. கடந்த மாதம் 19 ஆம் திகதி இலங்கை கடற்பரப்பில் வைத்து 2 படகுகளுடன் குறித்த 10 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது குறித்த மீனவர்களை நேற்று வியாழக்கிழமை 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் குறித்த மீனவர்கள் 10 பேர் நேற்றைய தினம் வியாழக்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் குறித்த 10 மீனவர்களையும் எதிர்வரும் 12 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருட சிறை தண்டனை வழங்கி விடுவித்தார். மேலும் ஒவ்வொரு மீனவர் களுக்கும் தலா 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதோடு வழக்கின் சான்று பொருட்களை அரசுடமையாக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. https://globaltamilnews.net/2026/231091/
  5. யாழில் முக்கிய கூட்டம்: குவிக்கப்பட்ட மேலதிக படையினர்! யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்று வரும் நிலையில் , மாவட்ட செயலக சூழலில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு , பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்றைய தினம் ஒருங்கிணைப்பு குழு தலைவர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகனின் இணை தலைமையுடன் , நடைபெற்று வருகிறது. அதேநேரம் ஆசிரியர்கள் இடமாற்றம் தொடர்பில் ஆசிரியர்களால் மாவட்ட செயலகம் முன் போராட்டம் நடத்தப்படவுள்ளதாகவும் , காணி விடுவிப்பு கோரி காணி உரிமையாளர்களும் மாவட்ட செயலகம் முன் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , மாவட்ட செயலக சுற்று வட்ட பகுதிகளில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. https://athavannews.com/2026/1470146
  6. 38 அரிய வகை செல்லப்பிராணிகளை கடத்த முயன்ற ஒருவர் கைது! 8 அரிய வகை செல்லப்பிராணிகளை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்த முயன்ற இலங்கை பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் இன்று (27) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். அறிக்கைகளின்படி, கண்டி, திகனவைச் சேர்ந்த 56 வயதான சந்தேக நபர் இன்று அதிகாலை பெங்கோக்கிலிருந்து வந்தடைந்தபோது, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் அவரை வழிமறித்தனர். சோதனையின் போது, அவரது பயணப் பைகளில் கினி எலிகள், அணில்கள், புறாக்கள், சுகர் கிளைடர்ஸ் (Sugar Gliders) மற்றும் முள்ளம்பன்றிகள் ஆகியவை அவரிடமிருந்து இதன்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விசாரணையைத் தொடர்ந்து, சுங்கத்துறை சந்தேக நபருக்கு 2,50,000 ரூபா அபராதம் விதித்தது. பறிமுதல் செய்யப்பட்ட விலங்குகள் பின்னர் பங்கொக்கிற்குத் திருப்பி அனுப்பப்படுவதற்காக தாய் ஏர்வேஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். https://athavannews.com/2026/1470157
  7. ரவிராஜ் கொலை வழக்கின் தீர்ப்பை இரத்து செய்தது மேன்முறையீட்டுமன்று ; மேல் நீதிமன்றத்தில் புதிய மீள் விசாரணைக்கு எடுக்குமாறு உத்தரவு 27 Mar, 2026 | 10:17 AM எம்.எம்.எம்.பஷீர், செ.சுதர்ஷினி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் லகுவெல்லமுரகே லக்ஷ்மன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், குற்றம் சுமத்தப்பட்டிருந்த பிரதிவாதிகளை விடுவித்து கொழும்பு மேல் நீதிமன்றத்தின் விசேட ஜூரி சபை வழங்கிய தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் வியாழக்கிழமை (26) இரத்து செய்துள்ளது. அத்துடன், இந்த வழக்குத் தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் புதிய விசாரணையை ஆரம்பிக்குமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான பி. சசி மகேந்திரன் மற்றும் அமல் ரணராஜா ஆகியோரடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்தத் தீர்ப்பை அறிவித்தது. கடந்த 2016-ஆம் ஆண்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் பிரதிவாதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டமைக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டை பரிசீலித்த பின்னரே நீதிமன்றம் இந்தத் தீர்மானத்துக்கு வந்துள்ளது. வழக்கின் பிரதான சாட்சியாளரான பிரிதிவிராஜ் எனப்படும் குற்றப் பங்காளியின் சாட்சியம் தொடர்பாக, மேல் நீதிமன்ற நீதியரசர் ஜூரி சபையைச் சரியாக வழிநடத்தவில்லை என்பதே சட்டமா அதிபரின் பிரதான வாதமாகும். இந்த வழக்கில் ‘பிரிதி விராஜ்’ என அழைக்கப்படுபவர், தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் தொடர்புடையவர் எனவும் போதைப்பொருள் கடத்தல்களுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படுபவருமான சம்பத் மனம்பேரி என்பவராவார். குற்றப் பங்காளி ஒருவரின் சாட்சியம் சுயாதீன சாட்சியங்கள் மூலம் உறுதிப்படுத்தப்படாவிட்டால், அதனை நம்புவதில் உள்ள ஆபத்து குறித்து ஜூரி சபைக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க மேல் நீதிமன்ற நீதியரசர் தவறியுள்ளார் என மேன்முறையீட்டு நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. சான்றுச் சட்டத்தின் 133 மற்றும் 114(ஆ) பிரிவுகளின்படி, ஒரு கூட்டாளியின் சாட்சியத்தின் நம்பகத்தன்மை குறித்து மிகுந்த கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. மேலும், வழக்கு விசாரணையின் முடிவில் ஜூரி சபைக்கு அறிவுறுத்தல்கள் வழங்கும் பணி இரவு 8:50 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், ஜூரி சபை தனது தீர்ப்பை நள்ளிரவு 12:50 மணிக்கே வழங்கியுள்ளது. இது மிகவும் அசாதாரணமான நிலை என மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் திகதி நாரஹேன்பிட்டியில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாகப் பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் ஐந்து பிரதிவாதிகளுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. இரண்டாவது பிரதிவாதி ரி56 ரக துப்பாக்கியால் ரவிராஜ் பயணித்த சிவப்பு நிற ஜீப் வண்டியின் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகப் பிரதான சாட்சியாளர் தெரிவித்திருந்தார். தற்போதிலுள்ள சாட்சியங்களின்படி, பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கினைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்குப் போதுமான காரணிகள் உள்ளதாகத் தீர்மானித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், மேல் நீதிமன்றத்தின் விடுதலை உத்தரவைத் தள்ளுபடி செய்தது. அதற்கமைய, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மீண்டும் புதிய விசாரணைகளை ஆரம்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ரவிராஜ் படுகொலை விவகாரத்தில் கொழும்பு மேல்நீதிமன்றம் ஹெட்டியாரச்சி முதியன்சலாகே சந்தனகுமார ஹெட்டியாரச்சி, காமினி செனரத், கங்கானம்லாகே பிரதீப் சமந்த ஆகிய மூன்று கடற்படை புலனாய்வாளர்களையும் விடுவித்திருந்தது. ஜூரி சபை ஒன்றின் முன் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்த நிலையில் நான்காவது பிரதிதியாகப் பெயரிடப்பட்டிருந்த சரண் எனும் சிவகாந்த விவேகானந்தன் மற்றும் பேபியன் ரோஸ்டன் ஆகியோர் இல்லாமலேயே இந்த வழக்கு விசாரிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் செய்த மேன்முறையீட்டுக்கு அமைய சசி மகேந்திரன் மற்றும் அமல் ரணராஜா ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் நேற்று இந்த தீர்ப்பை அறிவித்திருந்தது. அதன்படி ஜூரி சபை முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட தீர்ப்பை இரத்துச் செய்துள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் மீண்டும் அது தொடர்பான வழக்கை விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுகர் ஹேரத் ஆஜரானதுடன் இரண்டாம் மூன்றாம் பிரதிவாதிகளுக்காக ஜனாதிபதி சட்டத்தரணி அனுச்ச பிரேமரத்னவும் முதலாம் பிரதிவாதி சார்பில் சட்டத்தரணி சகான் குலத்துங்கவும் ஆஜரானமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/242049
  8. ஈரானின் எரிசக்தி ஆலைகள் மீதான தாக்குதல் இடைநிறுத்தத்தை ஏப்ரல் வரை நீட்டித்த ட்ரம்ப்! ஈரானின் எரிசக்தி ஆலைகள் மீதான தாக்குதல்களை ஏப்ரல் மாதம் வரை நிறுத்தி வைப்பதை நீட்டிப்பதாகவும், ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழனன்று (26) கூறினார். ஆனால், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்காவின் முன்மொழிவு ஒருதலைப்பட்சமானதும் நியாயமற்றதும் என்று ஈரானிய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். நான்கு வாரங்களாக நீடித்த இந்தப் போர், மத்திய கிழக்கு முழுவதும் பரவி ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றுள்ளதுடன், விண்ணை முட்டும் எரிசக்தி விலைகளால் உலகப் பொருளாதாரத்தைப் பாதித்து, உலகளாவிய பணவீக்க அச்சங்களையும் தூண்டியுள்ளது. தெஹ்ரானின் அணுசக்தித் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகள் ஒரு உடன்பாட்டை எட்டத் தவறியதைத் தொடர்ந்து, அமெரிக்காவும் இஸ்ரேலும் பெப்ரவரி 28 அன்று ஈரான் மீது தாக்குதல்களைத் தொடங்கின. வெள்ளை வியாழக்கிழமை மாளிகையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது, ஈரான் ஒரு உடன்பாட்டை எட்டவில்லை என்றால் அதன் மீதான அழுத்தத்தை அதிகரிப்பதாக ட்ரம்ப் அச்சுறுத்தினார். பின்னர் 2026 ஏப்ரல் 6 ஆம் திகதி வரை 10 நாட்களுக்கு ஈரானிய எரிசக்தி ஆலைகள் மீதான தாக்குதல்களை நிறுத்தி வைப்பதாக சமூக ஊடகங்களில் பதிவிட்டார். எனினும், போரில் பல உயர் அதிகாரிகள் கொல்லப்பட்ட நிலையில், ஈரான் விவகாரத்தில் அமெரிக்கா யாருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது என்பதை ட்ரம்ப் வெளிப்படையாகக் கூறவில்லை. 2026 மார்ச் 23 அன்று, மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான அனைத்துத் தாக்குதல்களையும் ஐந்து நாட்களுக்கு நிறுத்துவதாக ட்ரம்ப் அறிவித்தார், ஆனால் இப்போது அதை 10 நாட்களுக்கு நீட்டித்துள்ளார். எனினும், வொஷிங்டனுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவில்லை என்று ஈரான் கூறியுள்ளது. பொருளாதாரத்தை சீர்குலைத்துள்ள போர் இந்தப் போர், கப்பல் போக்குவரத்தைப் பெருமளவில் சீர்குலைத்துள்ளது. இதன் விளைவாக, மசகு எண்ணெய் விலை சுமார் 40% உயர்ந்துள்ளது, திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு விலை கடுமையாக அதிகரித்துள்ளது, மேலும் உணவு உற்பத்திக்கு இன்றியமையாத நைட்ரஜன் அடிப்படையிலான உரங்களின் விலை சுமார் 50% உயர்ந்துள்ளது. ட்ரம்ப்பின் நம்பிக்கையூட்டும் மதிப்பீட்டிற்கு மத்தியிலும், அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரான் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தளங்களைத் தாக்கித் தொடர்ந்து பதிலடி கொடுத்து வந்தது. அது வளைகுடா நாடுகளையும் தாக்கியதுடன், உலகளாவிய எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் சுமார் 20% கொண்டுசெல்லும் ஹார்முஸ் நீரிணை வழியாக மத்திய கிழக்கு எரிபொருள் ஏற்றுமதியையும் திறம்படத் தடுத்துள்ளது. 10,000 வீரர்களை மத்திய கிழக்கிற்கு அனுப்புவது குறித்து பென்டகன் பரிசீலனை பேச்சுவார்த்தைகளில் நல்லெண்ண நடவடிக்கையாக, பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்ட சில கப்பல்கள் உட்பட 10 எண்ணெய் கப்பல்களை ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து செல்ல ஈரான் அனுமதித்ததாக ட்ரம்ப் வியாழக்கிழமை தெரிவித்தார். அதேநேரம், மத்திய கிழக்குக்கு 10,000 வரையிலான மேலதிக தரைப்படை வீரர்களை அனுப்புவது குறித்து பென்டகன் பரிசீலித்து வருவதாக, அத்துறையின் அதிகாரிகளை மேற்கோள் காட்டி வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் வியாழக்கிழமை செய்தி வெளியிட்டது. இந்த விடயம் தொடர்பில் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவையின் கருத்துக்கான கோரிக்கைக்கு பென்டகன் உடனடியாகப் பதிலளிக்கவில்லை. ஈரானுக்கு எதிரான தனது நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ரோந்துப் பணிகளுக்காக ஆளில்லா ட்ரோன் வேகப் படகுகளை அமெரிக்கா பயன்படுத்தியுள்ளது என்று பென்டகன் கூறியுள்ளது. ஒரு தீவிரமான மோதலில் இதுபோன்ற படகுகளைப் பயன்படுத்துவதை வொஷிங்டன் உறுதிப்படுத்துவது இதுவே முதல் முறையாகும். அமெரிக்காவின் 15 அம்சத் திட்டம் நிராகரிப்பு பாகிஸ்தான் மூலம் தெஹ்ரானுக்கு அனுப்பப்பட்ட 15 அம்ச அமெரிக்க முன்மொழிவை, ஈரானின் மூத்த அதிகாரிகள் மற்றும் ஈரானின் உச்ச தலைவரின் பிரதிநிதி ஆகியோர் புதன்கிழமை விரிவாக ஆய்வு செய்ததாகவும், அது அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய நலன்களுக்கு மட்டுமே சேவை செய்வதாக அவர்கள் கருதியதாகவும் ஒரு ஈரானிய அதிகாரி கூறியுள்ளார். எனினும், ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரவில்லை என்றும் அந்த அதிகாரி கூறினார். ஈரானின் அணுசக்தித் திட்டத்தைக் கலைப்பது, அதன் ஏவுகணைகளைக் கட்டுப்படுத்துவது மற்றும் நீரிணையின் கட்டுப்பாட்டைத் திறம்பட ஒப்படைப்பது வரையிலான கோரிக்கைகளை அந்த முன்மொழிவு உள்ளடக்கியிருந்ததாக ஆதாரங்களும் அறிக்கைகளும் தெரிவிக்கின்றன. இஸ்லாமாபாத் மூலம் அனுப்பப்படும் செய்திகள் வழியாக அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே “மறைமுகப் பேச்சுவார்த்தைகள்” நடைபெற்று வருவதாகவும், துருக்கி மற்றும் எகிப்து உள்ளிட்ட பிற நாடுகளும் மத்தியஸ்த முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாகவும் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் கூறினார். போர் தொடங்கியதிலிருந்து ஈரான் தனது நிலைப்பாட்டைக் கடுமையாக்கியுள்ளது; எதிர்கால இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிரான உத்தரவாதங்கள், இழப்புகளுக்கான இழப்பீடு மற்றும் நீரிணையின் மீதான முறையான கட்டுப்பாடு ஆகியவற்றை அது கோரியுள்ளது என ஈரானிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், எந்தவொரு போர்நிறுத்த ஒப்பந்தத்திலும் லெபனான் சேர்க்கப்பட வேண்டும் என்று அது இடைத்தரகர்களிடம் கூறியதாக பிராந்திய வட்டாரங்கள் தெரிவித்தன. இஸ்ரேல் மீதான ஈரானின் ஏவுகணை அலை வியாழக்கிழமையன்று, ஈரான் இஸ்ரேல் மீது பல அலைகளாக ஏவுகணைகளை ஏவியது. டெல் அவிவ், ஹைஃபா மற்றும் மத்திய இஸ்ரேலில் உள்ள ஒரு பாலஸ்தீனிய நகரம் உள்ளிட்ட பிற பகுதிகளையும் அது தாக்கியது. குறைந்தது ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையாவது டெல் அவிவ் மீது தாக்கியது, மற்றவை சிறிய வெடிபொருட்களை சிதறடிக்கும் கொத்து ஏவுகணைகளைக் கொண்டிருந்தன, அவை வீடுகளையும் கார்களையும் சேதப்படுத்தியதாக இஸ்ரேலின் இராணுவத் தகவல்கள் தெரிவித்துள்ளன. வடக்கு நகரமான நஹாரியா மீது ஹிஸ்புல்லா ராக்கெட் தாக்குதல் நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலின் அம்பியூலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது. ஈரானில், தெற்கு நகரமான பந்தர் அப்பாஸ் மற்றும் தெற்கு நகரமான ஷிராஸின் புறநகரில் உள்ள ஒரு கிராமம் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இஸ்ஃபஹானில் உள்ள ஒரு பல்கலைக்கழக கட்டிடம் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. https://athavannews.com/2026/1470134
  9. மட்டக்களப்பில் பெண்களை கடத்தி கொலை செய்து கும்பலிடம் இருந்து சத்திர சிகிச்சைக்கு பாவிக்கும் மயக்க மருந்துகள் மீட்பு - ஒருவர் கைது Published By: Vishnu 27 Mar, 2026 | 04:52 AM மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மயக்க மருந்து கொடுத்து பெண்களை கடத்தப்பட்டு தாலி உள்ளிட்ட தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு கிணற்றில் வீசி எறிந்து கொலை செய்து வந்த கும்பலுடன் தொடர்புபட்ட மற்றுமொரு சந்தேக நபரான 37 வயதுடைய ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை வியாழக்கிழமை (26) இரவு மயக்கத்துக்கு பாவிக்கும் ஸ்பிரே யருடன் கைது செய்ததுடன் கொள்ளைச் சம்பவத்துக்கு பயன்படுத்தி வந்த சத்திர சிகிச்சைக்கு பாவிக்கும் மயக்க மருந்துகள் மற்றும் ஸ்பிரே,மாத்திரைகள் என்பவற்றை மீட்டுள்ளதாக கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் தெரிவித்தார். கடந்த 20ம் திகதி கொக்கட்டிச்சோலை நெல்லிக்காட்டு வயல் பிரதேசத்தில் பாழடைந்த கிணற்றில் இருந்து வவுணதீவு கொத்தியாவல பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயது இளம் தாய் ஒருவர் உயிருடனும் ஏற்கனவே காணாமல் போனதாகக் கருதப்பட்ட மற்றொரு பெண் ஒருவர் சடலமாக கிணற்றில் இருந்தும். மற்றும் இளம்தாயின் 3 வயதும் 4 மாதம் கொண்ட சிறுமி வயல் பகுதியில் உயிருடனும் மீட்கப்பட்டனர். இச் சம்பவம் தொடர்பாக கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வர்ண ஜயசுந்தரவின் வழிகாட்டலில் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரெத்தினவின் நேரடி கண்காணிப்பில் கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் அதிரடி விசாரணை முன்னெடுத்தனர். இதன்போது வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள காஞ்சிரம்குடா பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண் அவரது 34 வயதுடைய கணவர் அவரது 22 வயதுடைய தம்பியார் மற்றும் கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்களை வாங்கிய ஊறணி, திருகோணமலை, வீதிகளைச் சேர்ந்த இரு நகைக்கடை உரிமையாளர்கள் இருவர் உட்பட 5 பேரை 24 மணித்தியாலத்தில் பொலிசார் கைது செய்தவுடன் இரு ஆட்டோக்கள் கார் ஒன்று மற்றும் கோடாரி, கூரிய ஆயுதங்களை மீட்டனர். இதில் கைது செய்யப்பட்ட இவர்களை கடந்த 22 ம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது தங்க ஆபரண கடைகளின் உரிமையாளர் இருவரையும் 27 வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொலை கொள்ளையில் ஈடுபட்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரையும் 72 மணித்தியாலம் பொலிஸ் தடுப்பில் வைத்து விசாரணைக்கு செய்வதற்கு நீதவான் உத்தரவிட்டார். இந்த நிலையில் கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபரின் நேரடி வழிகாட்டலில் பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவர்களிடம் தொடர் விசாரணைகளின் போது கொள்ளையர்களின் காஞ்சிரம்குடா வீட்டின் பகுதியில் நிலத்தில் மயக்க மருந்துக்களை புதைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் கடந்த இரண்டு மாதத்துக்கு முன்னர் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரிடம் மயக்கத்துக்கு பாவிக்கும் ஸ்பிரேயர் வழங்கி வைத்துள்ளதாகவும் வெளி மாவட்டத்தில் உள்ள ஒருவரிடம் இருந்து இந்த மயக்க மருந்தை பல ஆயிரம் ரூபா பணம் செலுத்தி பெற்றுக் கொண்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து நேற்று வியாழக்கிழமை இரவு கொள்ளையர்களின் காஞ்சிரம்குடா வீட்டை முற்றுகையிட்டு நிலத்தில் இரண்டு அடி ஆழத்தில் பாதுகாப்பாக பொலித்தீன் பைகளில் சுற்றி வைக்கப்பட்டிருந்த வைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சையின் போது பாவிக்கப்படும் 6 மயக்க மருந்துகளை கொண்ட போத்தல் மற்றும் மயக்க மாத்திரைகள், மருந்துகள் மீட்டனர். அதனை தொடர்ந்து கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் வீடு ஒன்றை முற்றுகையிட்டு 37 வயதுடைய ஆட்டோ ஓட்டுனர் ஒருவரை கைது செய்ததுடன் அவரது வீட்டின் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த கொள்ளையர்கள் வழங்கிய மயக்கத்துக்கு பாவிக்கும் ஸ்பிரேயர் போத்தல் ஒன்றையும் குற்ற செயலுக்கு பயன்படுத்திய ஆட்டோ ஒன்றையும் மீட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதேவேளை இந்தக் கொடூரச் சம்பவத்தையடுத்து மட்டக்களப்பு மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிப்பதுடன் இக்கொலைகளின் பின்னணியில் உள்ள முழுமையான வலையமைப்பை கண்டறியும் நோக்கில் கிழக்கு மாகாண விசேட குற்ற விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை தீவிரப்படுத்தி வருகின்றதுடன் குறித்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணைகள் வெள்ளிக்கிழமை (27) மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/242030
  10. சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களில் ஒரு பகுதியில் எவ்வித சிக்கல்களும் கண்டறியபடவில்லை - சுங்க ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா Published By: Vishnu 27 Mar, 2026 | 04:33 AM (செ. சுபதர்ஷனி) சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களில் ஒரு பகுதியை விசாரணை செய்வதற்குத் தமக்கு சந்தர்ப்பம் கிடைத்ததாகவும், அந்தப் பகுதியில் எவ்வித முறைகேடுகளும் கண்டறியப்படவில்லை என சுங்க ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்தார். வியாழக்கிழமை (26) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், முழுநாடும் ஒன்றாக" போதைப்பொருள் ஒழிப்பு தேசியவேலைத் திட்டத்தின் கீழ் இலங்கை சுங்கப் திணைக்களம் பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளது. அதன்படி, 2025 ஆம் ஆண்டில் மாத்திரம் பல்வேறு வகையான போதைப்பொருள் கடத்தல்கள் தொடர்பான 147 சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டு, 5.8 பில்லியன் ரூபா பெறுமதியான 435 கிலோ கிராம் போதைப்பொருள் சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. தான் பணிப்பாளராகக் கடமையாற்றும் தடுப்புப் பிரிவிக்கு குறித்த கொள்கலன்களில் ஒரு தொகுதி விசாரணைகளுக்காகக் கிடைத்தது. இதன்போது முன்னெடுக்கப்பட்ட கணாய்வு மற்றும் தணிக்கைகளின் போது, அந்த கொள்கலன்களை இறக்குமதி செய்த நிறுவனங்கள் தொடர்பில் எவ்வித சட்டவிரோத நடவடிக்கைகளும் கண்டறியப்படவில்லை. இருப்பினும், குறித்த 323 கொள்கலன்கள் தொடர்பான முழுமையான அறிக்கைகள் கிடைத்த பின்னரே இது குறித்த இறுதித் தீர்மானத்தை வழங்க முடியும். தற்போது தான் வெளியிட்டுள்ள கருத்துக்கள் தான் பரிசோதனை செய்த கொள்கலன்களுக்கு மாத்திரமே செல்லுபடியாகும் என்றார். https://www.virakesari.lk/article/242029
  11. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமை தேசத் துரோக செயற்பாடு - சரத் வீரசேகர சாடல் 26 Mar, 2026 | 06:42 PM (இராஜதுரை ஹஷான்) பயங்கரவாத்தை முற்றாக அழிக்க ஒத்துழைப்பு வழங்கிய சுரேஷ் சலே,பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமை தேசதுரோக செயற்பாடாகும். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவங்களுக்கும், சுரேஷ் சலேவுக்கும் இடையில் எவ்வித தொடர்பும் கிடையாது. புலிகள் அமைப்பின் ஆதரவாளர்களை திருப்திப்படுத்தவே சுரேஷ் சலே சித்திரவதைக்குள்ளாக்கப்படுகிறார் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் வியாழக்கிழமை (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, ஆரோக்கியமாக இருந்த அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவை அரசாங்கம் திட்டமிட்டு நோயாளியாக்கியுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் ஜனாதிபதிக்கு ஒதுக்கப்பட்டிருந்த பிரத்தியேக சிகிச்சை அறை தற்போது பொதுமக்கள் பாவனைக்காக வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தை இல்லாதொழித்து, புலிகள் அமைப்பை அழிப்பதற்கு சுரேஷ் சலே அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார். ஆகவே ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் ஜனாதிபதிக்காக ஒதுக்கப்பட்ட அறையை சுரேஷ் சலேவுக்கு வழங்க வேண்டும். அவருக்கு அரச செலவில் சிகிச்சையளிக்க வேண்டும். பயங்கரவாத்தை முற்றாக அழிக்க ஒத்துழைப்பு வழங்கிய சுரேஷ் சலே,பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமை தேசதுரோக செயற்பாடாகும். புலம்பெயர் விடுதலை புலிகள் அமைப்புக்களை திருப்திப்படுத்துவதற்காகவே சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்படுகிறார். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவங்களுக்கும், சுரேஷ் சலேவுக்கும் இடையில் எவ்வித தொடர்பும் கிடையாது. குண்டுத்தாக்குதல் பற்றி விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, தெரிவுக்குழுக்களில் சுரேஷ் சலேவின் பெயர் குறிப்பிடப்படவில்லை. குண்டுத்தாக்குதல் பற்றி முழுமையான புலனாய்வுத் தகவல்கள் தொடர்ச்சியாக கிடைத்தும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தான் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. பயங்கரவாதி சஹ்ரானை கைது செய்யவுமில்லை. அவ்வாறாயின் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/242020
  12. அமெரிக்க டொலரில் டொனால்ட் ட்ரம்ப்பின் கையெழுத்து Published By: Digital Desk 3 27 Mar, 2026 | 09:01 AM (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு) அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக, பதிவியிலிருக்கும் ஜனாதிபதி ஒருவரின் கையெழுத்து அந்நாட்டுப் நாணயத்தாள்களில் பதிவுசெய்யப்படவுள்ளது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கையெழுத்து பொறிக்கப்பட்ட புதிய டொலர் நாணயத்தாள்கள் எதிர்வரும் ஜூன் மாதம் முதல் புழக்கத்திற்கு வரும் என அமெரிக்கத் திறைசேரி திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. 1861 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க நாணயத்தாள்களில் திறைசேரி செயலாளருடன் இணைந்து அமெரிக்கப் பொருளாளர் கையெழுத்திடும் பாரம்பரியமே நடைமுறையில் இருந்தது. தற்போது அந்தப் பாரம்பரியம் மாற்றப்பட்டு, பொருளாளரின் கையெழுத்துக்குப் பதிலாக ஜனாதிபதி ட்ரம்ப்பின் கையெழுத்து பதிவுசெய்யப்படவுள்ளது. எதிர்வரும் ஜூலை 4 ஆம் திகதி அமெரிக்கா தனது 250 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதை முன்னிட்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் திறைசேரி செயலாளர் ஸ்காட் பெசென்ட் ஆகியோரின் கையெழுத்துக்களைக் கொண்ட 100 டொலர் நாணயத்தாள்கள் ஜூன் மாதம் அச்சிடப்படவுள்ளன. அதனைத் தொடர்ந்து ஏனைய நாணயத்தாள்களும் மாற்றியமைக்கப்படும். ஜனாதிபதி ட்ரம்ப் தனது பெயரை அரச நிறுவனங்களுடன் இணைக்கும் தொடர் நடவடிக்கைகளில் இது மற்றுமொரு கட்டமாகும். வொஷிங்டனில் உள்ள புகழ்பெற்ற 'ஜோன் எஃப் கென்னடி' கலை மையம், 'ட்ரம்ப்-கென்னடி' மையம் எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்தப் பெயர் மாற்றத்தினால் அதிருப்தியடைந்த பல கலைஞர்கள் தமது நிகழ்ச்சிகளை இரத்து செய்துள்ளனர். இதனால் புனரமைப்புப் பணிகளுக்காக இந்த மையம் ஜூலை மாதம் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மூடப்படவுள்ளது. "எமது நாட்டின் 250 ஆண்டுகால வரலாற்றுச் சாதனைகளையும் ஜனாதிபதி ட்ரம்ப்பின் பங்களிப்பையும் கௌரவிக்க இதைவிடச் சிறந்த வழி எதுவுமில்லை" எனத் திறைசேரி செயலாளர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/242038
  13. பெங்களூரு மைதானம் நிறைந்தாலும் இந்த 11 இருக்கைகள் காலியாக விடப்படுமா? ஆர்சிபி பரிசீலனை பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் சேவியர் செல்வக்குமார், பிபிசி தமிழ் மற்றும் பிரதீப் கிருஷ்ணா, பிபிசி தமிழ் 26 மார்ச் 2026 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் நடக்கவிருக்கும் 2026 ஐபிஎல் தொடரின்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் 'ஹோம் ஸ்டேடியம்' சின்னசாமி மைதானத்தில் நடக்கும் போட்டிகளில் 11 இருக்கைகள் காலியாக விடப்படுவது குறித்து ஆலோசித்து வருவதாக ஆர்சிபி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. 2025 ஐபிஎல் கோப்பை வென்றதற்கான கொண்டாட்டத்தின்போது சின்னசாமி ஸ்டேடியத்துக்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 ரசிகர்கள் உயிரிழந்தனர். அவர்கள் நினைவாக அந்த மைதானத்தில் நடக்கும் ஆர்சிபி-யின் போட்டிகளில் 11 காலி இருக்கைகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த அசம்பாவிதத்துக்குப் பிறகு வரும் சனிக்கிழமைதான் ராயல் சேலஞ்சர்ஸ் அணி இங்கு விளையாடுகிறது. சில வாரங்கள் முன்பு வரை இந்த மைதானத்தில் ஐபிஎல் தொடர் நடக்குமா என்பது பெரும் கேள்விக்குறியாக இருந்தது. என்ன நடந்தது? 2008ம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்தே ஆர்சிபி அணியின் கோப்பை கனவு என்பது நிறைவேறாமல் இருந்துவந்தது. சுமார் 18 ஆண்டுகளாக அந்த அணியின் ரசிகர்கள் கோப்பைக்காகக் காத்திருந்தனர். இந்நிலையில் 2025 சீசன் இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி முதல் முறையாக ஐபிஎல் பட்டம் வென்றது அந்த அணி. இதைப் பெரிய அளவில் ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாடிக்கொண்டிருந்தார்கள். இறுதிப் போட்டி நடந்த செவ்வாய் (ஜூன் 3) மற்றும் புதன்கிழமைக்கு இடைப்பட்ட இரவில் பெங்களூரு முழுவதும் பட்டாசு வெடித்து அந்த வெற்றி கொண்டாடப்பட்டது. இந்நிலையில் ஜூன் 4 ஆர்சிபி அணி தங்கள் வெற்றிக் கொண்டாட்டத்தை சின்னசாமி மைதானத்தில் நடத்துவதாக அறிவித்தது. ஆர்சிபியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், விதான் சவுதாவிலிருந்து சின்னசாமி மைதானம் வரை வெற்றி அணிவகுப்பு நடைபெறும் என்று ஜூன் 4ஆம் தேதி காலை 7.01 மணிக்கு அறிவிக்கப்பட்டது. அதில் இந்த அணிவகுப்பு பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. பிற்பகல் 3.14 மணிக்கு ஆர்சிபி தரப்பில் இருந்து வெற்றி அணிவகுப்பு குறித்து வெளியான மற்றொரு பதிவில், இலவச பாஸ்களை அதன் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. காவல்துறை மற்றும் பிற அதிகாரிகள் வழங்கிய வழிகாட்டும் நெறிமுறைகளைப் பின்பற்றுமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். இந்த அறிவிப்பின் காரணமாக ஆர்சிபி ரசிகர்கள் சின்னசாமி மைதானத்துக்கு முன் பெருமளவு குவிந்தனர். வெற்றி அணிவகுப்பிற்கு 2,00,000-க்கும் அதிகமான மக்கள் வந்திருந்ததாகவும், ஆனால் தாங்கள் அதில் பாதியளவு மட்டுமே எதிர்பார்த்ததாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்திருந்தார். இந்த அளவுக்கு எதிர்பாராத கூட்டம் ஏற்பட்டதால் மைதானத்துக்கு வெளியே பெரும் நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இதில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த காமாட்சியும் (29 வயது) ஒருவர். பட மூலாதாரம்,Getty Images மீண்டும் சின்னசாமியில் ஐபிஎல் இந்த நிகழ்வின் காரணமாக கர்நாடகா கிரிக்கெட் அசோசியேஷன் மற்றும் ஆர்சிபி நிர்வாகத்தின் மீது பெரும் விமர்சனங்கள் எழுந்தன. கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா செய்தியாளர்களிடம் பேசுகையில், "முழு நிகழ்வையும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (KSCA) மற்றும் ஆர்சிபி நிர்வாகம் தான் ஏற்பாடு செய்தன. அரசாங்கம் இந்த விழாவில் பங்கேற்க மட்டுமே செய்தது" என்றார். அதேபோல், சின்னசாமி மைதானத்தின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் நிறைய கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன. 2025 மகளிர் உலகக் கோப்பை, 2026 வுமன்ஸ் பிரீமியர் லீக், 2026 ஆண்கள் டி20 உலகக் கோப்பை போன்ற தொடர்களை நடத்த பெங்களூரு மைதானம் பரிசீலிக்கப்படவில்லை. அதனால், மீண்டும் அங்கு ஐபிஎல் போட்டிகள் நடக்காது என்றும் கருதப்பட்டது. வேறு மைதானங்களில் போட்டியை நடத்தவும் ஆர்சிபி நிர்வாகம் பரிசீலித்து வந்தது. இதற்கிடையே ஆர்சிபி நிர்வாகம் தங்கள் அணியை விற்க முடிவு செய்திருப்பதாக செய்திகள் வந்ததால், பெங்களூருவில் ஐபிஎல் இனி நடக்குமா என்றுமே பலரும் கேள்வியெழுப்பினர். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவராகப் பதவியேற்ற இந்திய அணியின் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத், மீண்டும் பெங்களூருவில் ஐபிஎல் போட்டி நடத்துவதற்குத் தேவையான முயற்சிகளை மேற்கொண்டார். மீண்டும் சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடப்பதற்கு கடந்த மார்ச் 16ம் தேதி கர்நாடக அரசு அனுமதி கொடுத்தது. 2026 ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணியின் 5 ஹோம் ஆட்டங்கள் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கிறது. மீதமிருக்கும் 2 ஆட்டங்கள் ராய்ப்பூரில் நடக்கின்றன. 11 பேர் நினைவாக... இந்த புதிய சீசனின் முன்பாக பேசிய ஆர்சிபி அணியின் தலைமை செயல் அதிகாரி ராஜேஷ் மேனன், "ஜூன் 4-ஆம் தேதி நாம் இழந்த அந்த 11 ரசிகர்களின் நினைவாக, போட்டிக்கு முன்னதான பயிற்சியின் போது வீரர்கள் 11-ஆம் எண் கொண்ட ஜெர்சியை அணிவார்கள். அனைத்து வீரர்களின் முதுகிலும் 11-ஆம் எண் இருக்கும். அதுமட்டுமின்றி, அன்றைய தினம் (மார்ச் 28) போட்டியின்போது அவர்கள் கையில் கறுப்பு நிறப் பட்டையையும் அணிந்திருப்பார்கள். மேலும், சின்னசாமி ஸ்டேடியத்தில் 11 இருக்கைகளை நிரந்தரமாக காலியாக வைப்பதற்கும் நாங்கள் ஆலோசித்து வருகிறோம். இது நம்முடன் எப்போதும் நிலைத்திருக்கும் அந்த 11 ரசிகர்களுக்குச் செலுத்தும் ஒரு அஞ்சலியாகும்." என்று கூறினார். மேலும், செவ்வாய்கிழமை (மார்ச் 24) உயிரிழந்த 11 பேரின் நினைவாக, கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா சின்னசாமி மைதானத்தில் நினைவுப் பலகையைத் திறந்து வைத்தார். படக்குறிப்பு,சின்னசாமி மைதான கூட்ட நெரிசலில் இறந்த காமாட்சி மகளை இழந்த குடும்பம் இந்த சம்பவத்தில் உடுமலையைச் சேர்ந்த தனியார் பள்ளி தாளாளர் மூர்த்தியின் மகள் காமாட்சி, உயிரிழந்தார். ஒரே மகள் இறந்து போனதில், அவருடைய தாயும், தந்தையும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய காமாட்சியின் தந்தை மூர்த்தி, ''எனது மகள் இறந்த பின்பு, இழப்பீடாக ரூ.5 லட்சம் தரப்பட்டது. என்னிடம் பேசிய மைதானத்தின் பொது மேலாளர், இந்தத் தகவலைக் கூறி, முடிந்தால் அந்த நிகழ்வுக்கு வரவேண்டுமென்று அழைப்பு விடுத்தார். ஆனால் நானும் எனது மனைவியும், எங்கேயுமே செல்கிற மனநிலையில் இல்லை. அதிலும் எனது மனைவி உடலாலும், உள்ளத்தாலும் உருக்குலைந்த நிலையில் உள்ளார்.'' என்றார். ''ஒரே மகளை ஆசை ஆசையாக வளர்த்து நன்கு படிக்க வைத்து, அவளையும் பறிகொடுத்து விட்டு, நிர்கதியாக நிற்கிறோம். இனி யாருக்காக, எதற்காக சம்பாதிக்க வேண்டுமென்று நினைக்கிறோம். இனி எங்களுக்கு என்று எதையும் வைத்துக் கொள்ளும் எண்ணம் எதுவுமில்லை. நாங்கள் நடத்தி வந்த பள்ளியையும் இந்த ஆண்டுடன் விற்று விட முடிவு செய்திருக்கிறோம். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு என்னால் இயன்ற சில உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறேன். இருக்கும் வரையிலும் இந்த சமூகத்துக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி, பயனுள்ள வாழ்க்கையை வாழ்ந்து விட்டுப் போகவேண்டுமென்று நினைக்கிறோம்.'' என்றார் மூர்த்தி. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckgernd6nv7o
  14. Today
  15. ஈரான் 10 எண்ணெய் கப்பல்களை அனுமதித்தது; இதை ‘பெரிய பரிசு’ என்கிறார் டிரம்ப் Published By: Vishnu 27 Mar, 2026 | 05:12 AM பேச்சுவார்த்தைகளுக்கு ஒரு நேர்மறையான பதிலளிப்பாக, ஹோர்முஸ் நீரிணை வழியாக 10 எண்ணெய் கப்பல்களை ஈரான் செல்ல அனுமதித்துள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய அதிபர், இந்த நடவடிக்கையை ஈரான் தனக்கு அளித்த ஒரு "பெரிய பரிசு" என்று அறிமுகப்படுத்தினார். ஈரான் தனது நேர்மையையும் ஸ்திரத்தன்மையையும் வெளிப்படுத்துவதற்காக 8 பெரிய எண்ணெய் கப்பல்களை செல்ல அனுமதிப்பதாக ஆரம்பத்தில் அறிவித்திருந்தாலும், 10 கப்பல்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் கூறுகிறார். இந்த எண்ணெய் கப்பல்கள் பாகிஸ்தான் கொடியின் கீழ் பயணிக்கும் கப்பல்களாக இருக்கலாம் என்று அதிபர் சந்தேகம் தெரிவித்துள்ளார், ஆனால் இதுகுறித்த மேலதிக விவரங்களை வெள்ளை மாளிகை இன்னும் வெளியிடவில்லை. https://www.virakesari.lk/article/242033
  16. Kyiv — Volodymyr Dudnyk was picked up by Ukrainian military draft officers almost immediately after crossing the border into Ukraine following his deportation from the United States. He was sent straight to a training center. “When I was on the plane to Ukraine, I knew what was coming. But I hoped that perhaps they’d at least let me go home first. Everything happened even faster than I’d thought. I never made it home; I haven’t seen my parents yet,” the 28-year-old told CNN. Dudnyk spent 51 days in boot camp, then a few weeks training as a drone operator. He is now fighting on the frontline in eastern Ukraine, where his fellow soldiers gave him a new military callsign: “America.” In President Donald Trump’s second term, the United States has cracked down on every form of immigration and embarked on a mass deportation campaign. While the Trump administration says it is focused primarily on major criminals that it calls “the worst of the worst,” many of those detained have committed only minor offenses or have no criminal records. This has brought deep uncertainty to the lives of hundreds of thousands of people who are now at risk of being removed from the US. But for Ukrainian men of fighting age, there is an added risk. Deportation could lead straight to the front lines. https://edition.cnn.com/2026/03/27/europe/ukrainians-deported-ice-military-draft-intl-cmd Illegal உக்ரேனியர்களைப் பிடித்து நேரடியாக போராட்டத்துக்கு அனுப்பும் அமெரிக்கா.
  17. சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூசணம் ஏ.எல்.எம்.சலீம் காலமானார் Published By: Digital Desk 3 25 Mar, 2026 | 01:27 PM நிந்தவூரைப் பிறப்பிடமாகக் கொண்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூசணம் ஏ.எல்.எம்.சலீம் இன்று காலை 08 மணியளவில் தனது 75வது வயதில் நிந்தவூர் இல்லத்தில் காலமானர். இவர் ஓய்வுபெற்ற வைத்திய அதிகாரி ஜெஸ்மின் சலீம் அவர்களின் அன்புத் துணைவியாரும், அகீலா, அகீல் ஆகியோரின் பாசமுள்ள தந்தையுமானவர். தினபதி, சிந்தாமணி, வீரகேசரி, தினக்குரல், தினகரன் உள்ளிட்ட பல பத்திரிகைளினது பிராந்திய செய்தியாளராகவும் கடமையாற்றிய இவர், ஒரு சிறந்த ஆய்வுக் கட்டுரையாளருமாவார்.செய்தி சந்தா சுமார் 50 வருடங்களுக்கும் மேலாக ஊடகப் பணி செய்தவர். ஊடகவியலாளர்கள் மத்தியில் மிகுந்த மதிப்பையும், மரியாதையும் பெற்றிருந்த இவர், எழுத்தை ஆளுகை செய்த ஆளுமையாகவும் திகழ்கின்றார். பல ஊடகவியலாளர்களுக்கு வழிகாட்டியாகவும், செய்திகளை எழுதுவதில் புதிய வடிவங்களையும், சொற்பிரயோகங்களையும் கையாண்டவராவார். அதுமட்டுமன்றி சகல அரசியல்வாதிகளுடனும் நெருக்கமான உறவைப் பேணிய ஒருவராகவும் காணப்பட்டார். ஊடகத்துறையில் அச்சமின்றி பணி செய்தார். அவரின் ஊடக ஆளுமை பலரை அச்சம் கொள்ளச் செய்தது. எந்தவொரு அரசியல்வாதியும், ஏனைய துறையினராக இருந்தாலும் அவர்களின் பணி குறித்து கேள்வி எழுப்புவதற்கு தயக்கம் காட்டாத ஊடக உலகின் சிங்கமாக நெஞ்சு நிமிர்த்தி பணி செய்தார். அதேவேளை, எல்லோருடனும் மிகவும் அன்பாகவும், சிரிந்த மனதுடனும், நகைச் சுவையாகவும் பழகக் கூடியவராகவும் தமுது வாழ்வினை முன்னெடுத்தவர். அன்னாரின் ஜனாஸா நல்லக்கம் இன்று இஷாவிற்கு பின்னர் நிந்தவூர் ரவாஹா பொது மையானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. https://www.virakesari.lk/article/241891
  18. உதாரணம் முருகன் தம்பி பிள்ளையார். அத விட்டுட்டு கீழ உள்ளவர்களிடம் போய் லஞ்சம் கொடுத்து மேலே போகாமல் இருப்பதும் ஒரு கெட்டித்தனம். அடபாவிகளா ஐயர் அம்மாவைக் கூட விட்டு வைக்கலையாடா?
  19. ஐ.நா வதிவிட பிரதிநிதிக்கும் தமிழ்த் தேசிய பேரவையினருக்கும் இடையிலான சந்திப்பு 26 Mar, 2026 | 06:26 PM (எம்.நியூட்டன்) ஐ.நா. வதிவிட பிரதிநிதிக்கும் தமிழ்த் தேசிய பேரவையினருக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றுள்ளது. கடந்த ஒரு வாரகாலமாக வடக்கில் தங்கியிருந்து பல்வேறு தரப்பினரை சந்தித்து வரும் இலங்கைக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதி. மார்க் அன்றி பிரான்சிக்கும் தமிழ்த் தேசியப் பேரவை உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு வியாழக்கிழமை (26) யாழ்ப்பாணம் தாவடிப் பகுதியில் அமைந்துள்ள பொக்ஸ் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் தமிழ்த் தேசிய பேரவை சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளருமாகிய செல்வராசா கஜேந்திரன், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் வடக்கு மாகாண சபை அமைச்சருமான பொ.ஜங்கரநேசன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஸ், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கை பரப்புச் செயலாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான நடராஜர் காண்டீபன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/242015
  20. கடவுள் கதைச்சா என்ன சொல்லியிருப்பார்?! தொடருங்கள் அண்ணா.
  21. இதுதான் உண்மை போலத் தெரிகிறது. அமெரிக்காவின் விசேட வான்வழிப் படையினர் ஹோர்முஸ் பகுதியை அடைவதற்கான கால அவகாசத்திற்காகவே தம்பர் இதைச் செய்ததாக பலர் கூறுகிறார்கள். முன்னர் குறிப்பிட்டவாறு கார்க் தீவினையல்லாமல் வேறு ஒரு தீவான அபு முசாப்பிலேயே அமெரிக்கப் படைகள் தரையிறங்கலாம் என்றும் கூறுகிறார்கள். இதன்பின்னர் ஈரான் ராணுவத்தின் உண்மையான வலிமையினைக் காண முடியும். பார்க்கலாம்.
  22. ரஷ்யாவின் லெனின்கிராட் பிராந்தியத்தில் உள்ள துறைமுகங்கள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் நடத்திய மூன்று நாள் ஆளில்லா விமானத் தாக்குதல்கள், 2022-ல் உக்ரைன் மீதான கிரெம்ளினின் முழு அளவிலான படையெடுப்பு தொடங்கியதிலிருந்து ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதிக்கு "மிகவும் கடுமையான அச்சுறுத்தலை" ஏற்படுத்தியுள்ளதாக ஒரு ஆய்வாளர் குறிப்பிட்டார். மார்ச் 23 அன்று பால்டிக் துறைமுகமான பிரிமோர்ஸ்க் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலுடன் தொடங்கிய இந்தத் தாக்குதல்கள், இரண்டு நாட்களுக்குப் பிறகு உஸ்ட்-லுகாவில் உள்ள மற்றொரு முக்கிய எண்ணெய் ஏற்றுமதி முனையத்தின் மீதான தாக்குதல்களுடன் தொடர்ந்தன. பின்னர் மார்ச் 26 அன்று கிரிஷி மாவட்டத்தில் உள்ள ரஷ்யாவின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்று குறிவைக்கப்பட்டது. லெனின்கிராட் பிராந்திய ஆளுநர் அலெக்சாண்டர் ட்ரோஸ்டென்கோ, தனது டெலிகிராம் சேனலில் இந்தத் தாக்குதல்கள் குறித்துத் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். அதில், முதல் இரண்டு நாட்களில் ஏற்பட்ட தீச்சம்பவங்களையும், சமீபத்திய சம்பவத்தில் கிரிஷி மாவட்டத்தின் "தொழில்துறைப் பகுதியில் ஏற்பட்ட சேதத்தையும்" ஆவணப்படுத்தியுள்ளார். ஈரானுடனான போரின் காரணமாக அதிகரித்த உலகளாவிய எண்ணெய் விலைகள் மற்றும் அமெரிக்கத் தடைகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதன் மூலம் ரஷ்யா பயனடைய இலக்கு வைத்திருந்த நேரத்தில், உக்ரைன் ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதிக்கு ஒரு பெரும் அடியை கொடுத்துள்ளது என்று சுயாதீன ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர் . "போர் தொடங்கியதிலிருந்து ரஷ்ய எண்ணெய் மற்றும் எண்ணெய் பொருட்களின் ஏற்றுமதிக்கு இதுவே மிகவும் கடுமையான அச்சுறுத்தலாகும்," என்று எரிசக்தி ஆய்வாளர் போரிஸ் அரோன்ஸ்டீன் மார்ச் 26 அன்று கரண்ட் டைம் பத்திரிகையிடம் தெரிவித்தார். "தாக்குதல்களின் திட்டமிட்ட செயல்பாடு, அவற்றின் அளவு மற்றும் திசை, அத்துடன் அவை செயல்படுத்தப்பட்ட நேரம் ஆகிய அனைத்தும் ஒன்றுசேர்ந்து, நான்கு ஆண்டுகளுக்கும் மேலான போரில் தனிப்பட்ட முறையில் என்னால் நினைவுகூர முடியாத ஓர் விளைவை ஏற்படுத்தின," என்று அவர் மேலும் கூறினார். கடுமையான இடையூறு சமீபத்திய தாக்குதலுக்கு முன்பு, மார்ச் 25 அன்று ராய்ட்டர்ஸ் வெளியிட்ட ஒரு பகுப்பாய்வில், ரஷ்யாவின் ஏற்றுமதித் திறனில் 40 சதவீதம் நிறுத்தப்பட்டதாக மதிப்பிடப்பட்டு, இது "ரஷ்யாவின் நவீன வரலாற்றில் ஏற்பட்ட மிகக் கடுமையான எண்ணெய் விநியோகத் தடை" என்று விவரிக்கப்பட்டது. அந்த எண்ணிக்கை 50 சதவீதத்திற்கு நெருக்கமாக இருக்கும் என்று அரோன்ஸ்டீன் கூறினார். இந்த மதிப்பீடுகள், வடக்கு ரஷ்யாவில் நடந்த தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்களை மட்டுமல்லாமல், நோவோரோசிஸ்க் கருங்கடல் துறைமுகம் மற்றும் உக்ரைன் வழியாகச் செல்லும் ட்ருஷ்பா குழாய்வழி போன்ற பிற வழித்தடங்கள் வழியாகக் குறைந்த ஏற்றுமதிப் போக்குவரத்து, அத்துடன் ரஷ்யாவின் 'நிழல் கப்பற்படை' என்று அழைக்கப்படும் கப்பல் குழுவைச் சேர்ந்த எண்ணெய்க் கப்பல்கள் கைப்பற்றப்பட்டதால் ஏற்பட்ட இடையூறுகளையும் கணக்கில் எடுத்துக்கொள்கின்றன. ஜனவரியில் நடந்த ரஷ்யத் தாக்குதலில் சேதமடைந்ததிலிருந்து ட்ருஷ்பா செயலிழந்துள்ளதாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியாவிற்கு எண்ணெய் விநியோகம் செய்யப் பயன்படுத்தப்பட்டது. சமீபத்திய மாதங்களில் ரஷ்யாவின் நிழல் கடற்படைக்குச் சொந்தமான பல எண்ணெய்க் கப்பல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன . மார்ச் 25 அன்று, அமெரிக்கா, பிரான்ஸ், பின்லாந்து, சுவீடன் மற்றும் எஸ்டோனியா ஆகிய நாடுகளின் இடைமறிப்புகளைத் தொடர்ந்து, ராயல் நேவி கப்பல்களும் இனி அவற்றைக் கைப்பற்றும் என்று பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கூறினார். "நாம் அந்த நிழல் கப்பற்படையை இன்னும் கடுமையாகத் தாக்க வேண்டும்," என்று ஹெல்சிங்கியில் நடந்த ஒரு தூதரகக் கூட்டத்தில் ஸ்டார்மர் கூறினார். அதே கூட்டத்தில் காணொளி வாயிலாக உரையாற்றிய உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்ய எண்ணெய்க் கப்பல்களில் இருந்து எண்ணெயைப் பறிமுதல் செய்யுமாறு ஐரோப்பிய நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார். கருங்கடலில் மற்ற எண்ணெய்க் கப்பல்களும் உக்ரேனிய ஆளில்லா விமானங்களால் தாக்கப்பட்டுள்ளன. மார்ச் 26 அன்று, இஸ்தான்புல் அருகே உள்ள கடற்பரப்பில் ரஷ்ய கச்சா எண்ணெயை ஏற்றிச் சென்ற ஒரு கப்பல் ஆளில்லா விமானத்தால் தாக்கப்பட்ட புதிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. "சமீபத்தில் ரஷ்யாவிலிருந்து புறப்பட்ட, துருக்கியால் இயக்கப்படும் வெளிநாட்டுக் கொடி கொண்ட கப்பலின் இயந்திர அறையில் வெடிப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளில்லா நீருக்கடியில் செல்லும் வாகனம் ஒன்றால் இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என நாங்கள் சந்தேகிக்கிறோம்," என்று துருக்கிய போக்குவரத்து அமைச்சர் அப்துல்காதிர் உரலோக்லு உள்ளூர் ஒளிபரப்பு நிறுவனமான 24TV-யிடம் கூறினார். நீண்ட கால பாதிப்பா? லெனின்கிராட் பகுதியில் சமீபத்தில் நடந்த தொடர் தாக்குதல்கள், அங்குள்ள ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதி உள்கட்டமைப்பை எவ்வளவு காலத்திற்குச் செயலிழக்கச் செய்யும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. "எங்களுக்குத் தெரிந்தவரை, இரண்டு துறைமுகங்களிலும் முனையங்களுக்கும், எல்லாவற்றிற்கும் மேலாக, எண்ணெய் கிடங்குகளுக்கும் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. பிரிமோர்ஸ்க் மற்றும் உஸ்ட்-லுகா ஆகிய இரண்டிலும் அவற்றில் பல தீப்பிடித்து எரிந்தன," என்று இராணுவப் பகுப்பாய்வாளர் யான் மத்வீவ் கரண்ட் டைம் பத்திரிகையிடம் தெரிவித்தார். "எண்ணெய் மற்றும் எண்ணெய் பொருட்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்பும் துறைமுக உள்கட்டமைப்பு எந்த அளவிற்கு சேதமடைந்துள்ளது என்பதே முக்கிய கேள்வி... உபகரணங்களே சேதமடைந்திருந்தால், எண்ணெய் மற்றும் எரிபொருள் ஏற்றுவதில் ஒரு கடுமையான இடைநிறுத்தம் ஏற்படக்கூடும்," என்று அவர் மேலும் கூறினார். இந்தத் தாக்குதல்களின் தாக்கத்தின் கால அளவு குறித்து, உக்ரைன் மற்ற இடங்களில் நடத்திய இதே போன்ற தாக்குதல்களிலிருந்து ஒரு துப்பு கிடைக்கக்கூடும். நவம்பரில், நோவோரோசிஸ்க் கடற்கரைக்கு அப்பால் இருந்த ஒரு எண்ணெய் ஏற்றும் தளத்தை கடற்படை ஆளில்லா விமானங்கள் தாக்கின . ஜனவரி மாதத்தின் பிற்பகுதியில்தான் முழுமையான செயல்பாடுகள் மீண்டும் தொடங்கப்பட்டன. இந்த மாதம், நோவோரோசிஸ்க் துறைமுகத்திற்கு சேவை செய்யும் எண்ணெய் நீரேற்று நிலையம் மீது உக்ரேனிய ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு சரக்கு ஏற்றுவதில் மீண்டும் சரிவு ஏற்பட்டது. காஸ்பியன் கடலில் உள்ள எண்ணெய் இலக்குகளையும் உக்ரேனியத் தாக்குதல்கள் தாக்கியுள்ளன. கடந்த ஐந்து நாட்களாக பிரிமோர்ஸ்க், உஸ்ட்-லுகா மற்றும் நோவோரோசிஸ்க் ஆகிய துறைமுகங்களில் எண்ணெய் ஏற்றப்படவில்லை என எரிசக்தி மற்றும் தூய காற்று ஆராய்ச்சி மையம் (CREA) தெரிவித்துள்ளது. "முன்னர் ரஷ்யா சேதமடைந்த சுத்திகரிப்பு நிலையங்களை சில வாரங்களுக்குள் சீரமைத்திருந்தாலும், உக்ரைனின் தொடர்ச்சியான ஆளில்லா விமானத் தாக்குதல்கள் மீட்புப் பணிகளுக்கான காலக்கெடுவை வேண்டுமென்றே தாமதப்படுத்தியுள்ளன," என்று CREA ஆய்வாளர் ஐசக் லெவி RFE/RL இடம் கூறினார். "பழுதுபார்ப்பு அல்லது மறுதொடக்கம் செய்யப்படும்போது, சுத்திகரிப்பு ஆலைகள் பெரும்பாலும் இரண்டு-மூன்று வார சுழற்சிகளில் மீண்டும் பாதிக்கப்படுகின்றன. இதனால் முக்கிய தளங்கள் செயல்படாமல் இருப்பதுடன், வழக்கமான பராமரிப்புப் பணிகள் நீடித்த இடையூறுகளாகவும் மாறுகின்றன," என்று அவர் மேலும் கூறினார். அதிக எண்ணெய் விலையால் என்ன நன்மை? ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் தொடங்கியதைத் தொடர்ந்த 24 நாட்களில், பிப்ரவரி மாத சராசரியுடன் ஒப்பிடுகையில் ரஷ்யாவின் தினசரி எண்ணெய் வருவாய் 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக CREA புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. ரஷ்ய எண்ணெய்க் கப்பல்கள் தற்போது எண்ணெயை இறக்கி வருவதாகவும், புதிய ஏற்றுமதிகளுக்குத் தயாராக இருப்பதாகவும் லெவி கூறினார். மார்ச் 26 அன்று மாஸ்கோவில் எரிசக்தி விவகாரங்கள் குறித்துப் பேசிய ரஷ்ய துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவாக், உக்ரேனியத் தாக்குதல்கள் மற்றும் கப்பல் பறிமுதல் ஆகியவற்றால் நாட்டின் எண்ணெய் ஏற்றுமதி எந்த அளவிற்குப் பாதிக்கப்பட்டுள்ளது என்பது பற்றி நேரடியாகக் குறிப்பிடவில்லை. இருப்பினும், ரஷ்யாவிடம் எண்ணெய் ஏற்றுமதிக்கு "பல்வேறு வழிகள்" இருப்பதாக அவர் வலியுறுத்தினார். மேலும், சீனாவுக்கு எண்ணெய் வழங்கும் கிழக்கு சைபீரியா-பசிபிக் பெருங்கடல் குழாய்வழி மற்றும் ஸ்கோவோரோடினோ-மோஹே குழாய்வழி ஆகியவற்றையும் அவர் குறிப்பிட்டார் . "எங்களிடம் இந்தக் காப்புப் பிரதிகள் உள்ளன, நாங்கள் அவற்றைப் பயன்படுத்துவோம்," என்று அவர் மேலும் கூறினார். கடல் வழியாக ரஷ்ய எண்ணெயை இறக்குமதி செய்யும் ஒரு முக்கிய நாடாகவும் சீனா உள்ளது, ஆனால் பெரும் அளவிலான புதிய எண்ணெயை உள்வாங்கும் அதன் திறன் குறைவாகவே உள்ளது. அந்நாடு ஏற்கனவே பல மாதங்களாக எண்ணெய் இருப்புகளைக் குவித்து வருகிறது, மேலும் மஞ்சள் கடலில் உள்ள சீனத் துறைமுகங்களுக்கு அப்பால், ரஷ்ய மற்றும் ஈரானிய கச்சா எண்ணெய் ஏற்றப்பட்ட எண்ணெய்க் கப்பல்களும் சும்மா நின்று கொண்டிருக்கின்றன. உயர்ந்த எண்ணெய் விலைகளால் ரஷ்யா ஒட்டுமொத்தமாக எந்த அளவிற்குப் பயனடைய முடியும் என்று சில ஆய்வாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். "மாதத்திற்குச் சுமார் 5 பில்லியன் டாலர் என்ற அளவில் கிடைக்கும் போரினால் உந்தப்பட்ட இந்த எண்ணெய் வருவாயானது, ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் மட்டும் 40 பில்லியன் டாலரை எட்டிய நிதிப் பற்றாக்குறைக்கு ஒரு தற்காலிகத் தீர்வைத் தவிர வேறொன்றுமில்லை," என்று மார்ச் 24 அன்று ஐரோப்பிய வெளியுறவுக் கவுன்சிலுக்காக எழுதிய ஒரு பகுப்பாய்வில் அகாதே டெமரைஸ் குறிப்பிட்டார். "12 ஆண்டுகளுக்கும் மேலான தடைகளுக்குப் பிறகு, மாஸ்கோவின் எண்ணெய் உள்கட்டமைப்பு சிதைந்து வருகிறது. ஒரு நாளைக்கு 300,000 பீப்பாய்கள் மட்டுமே உபரி உற்பத்தித் திறன் உள்ளது. இது, வளைகுடா நாடுகளின் ஏற்றுமதியில் ஏற்படும் ஒரு நாளைக்கு 10-15 மில்லியன் பீப்பாய்கள் இழப்பை ஈடுகட்டப் போதுமானதாக இல்லை. போர் நீடிக்குமா என்பதில் நிச்சயமற்ற தன்மை இருப்பதால், ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் இப்போதைக்கு முதலீட்டை அதிகரிக்க வாய்ப்பில்லை. தற்போது காஸ்பியன் கடல் வரை எட்டியுள்ள உக்ரைனின் ஆளில்லா விமானத் தாக்குதல்கள், இந்தச் சுமையை மேலும் கூட்டுகின்றன," என்று அவர் மேலும் கூறினார். https://www.rferl.org/a/ukraine-strikes-russia-oil-exports/33717215.html
  23. அது சரிதான் பிரியன் சார்.. இந்த தலைவர்மார் யாரென்று அறியலாமா வல்லிபுரம் அய்யா...சுங்க இலாகா அதிகாரி ...நம்முடன் நல்ல தோஸ்து...மதிப்புகுரியவர்...மயூராபதியின் கோவில் முன்னால்தான் குடியிருந்தனான்...கோவில் தேவைக்காக அந்தவீடு எடுத்தவுடன் ..அதன் 4 வது மாடியில் வீடு வாங்கிவிட்டோம் ...ஒரு வடிவான அய்யரும் அம்மாவும் இருந்தாங்களே... அயல் பொடியளின் ஆக்கினை தாங்காமல் அய்யர் சோல்லாமல் கொள்ளாமல் அம்மாவுடன் ஜெர்மனி போய் ...அங்கு மயூராகணபதி கோவில் நடாத்துகிறார் ..தெரியுமா ... கடவுல் கவனமா கதையெழுதுங்கோ ....வாசிக்க நல்லாத்தான் இருக்கு...
  24. மகிந்தவின் கையாளாக இருந்தவர் அரசதரப்பு சாட்சியாக மாறி இருப்பதால் இந்த கொலை பற்றி மேலதிக தகவல்களை வழங்கலாம்.
  25. சரி பொதிகள் வந்து சேர்ந்தனவா? உள்ளே இருந்த சாமான்கள் கருவாட்டு பொதிகள் எல்லாம் இருந்ததா? இவற்றையுமல்லவா எழுதியிருக்க வேண்டும்?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.