Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Past hour
  2. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 135 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 135 / பின் இணைப்பு - "இலங்கை நாளிதழ் ஆசிரியர்களால் புத்தர் துரோகம் செய்யப்பட்டாரா?" புத்தர் என்பது அனைத்துலக மக்களாலும் மரியாதை செய்யப்படும், கருணையும், அன்பும் நிறைந்த சிறந்த முனிவர் ஆகும். 29 வயதில் இளம் மனைவியையும், புதிதாக பிறந்த மகனையும் விட்டுவிட்டு அரச வாழவைத் துறந்தவர். வாழ்க்கையின் துன்பங்களைப் பார்த்து அதற்கான விடியலைத் தேடி புறப்பட்டவர். இவரைப் பற்றிய இந்த உயர்ந்த பார்வைக்கு முற்றிலும் முரணாக, இலங்கையின் புராண நூல்களான தீபவம்சம் (Dipavamsa) மகாவம்சம் (Mahavamsa) மற்றும் இரசவலிய புத்தரை இதற்கு மாறாக வர்ணிக்கின்றன. இந்த நூல்கள், புத்தர் வாழ்ந்த காலத்தில் இலங்கையில் உருவமற்ற, மனிதரல்லாத இயக்கர்கள் (Yaksha) மனித மாமிசத்தை உண்ணும் கொடூரமான, கோபக் குணமும், வடிவமற்ற பிசாசுகள் [Pisacas], அரக்கர்கள் அல்லது அசுரர்கள் [Rakkhasas] போன்ற இயற்கைக்கு அப்பாற்பட்ட மனிதரல்லாத உருவங்கள் அல்லது உயிரினங்கள் வாழ்ந்ததாகக் கூறுகின்றன. ஆனால் இவர்கள் எல்லோரும் இந்நாட்டின் மூலப் பழங் குடியினர் [original inhabitants of Lanka] என்பதே உண்மை. இவர்கள் மீது இப்படியான குற்றச்சாட்டுகளை சுமத்துவதன் மூலம், அவர்களை "மனிதர்கள் அல்ல" எனக் கூறி பாரம்பரிய நிலங்களை கைப்பற்றும் முயற்சியாக இது இருந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. தீபவம்சம் 1.51 : புத்தர் இலங்கைக்கு மூன்று முறை பறந்து வந்தார் என்றும், ஒருமுறை அங்கே கூடியிருந்த இயக்கர்களின் கூட்டத்தினர் சம்புத்தர் அங்கே நிற்பதைக் கண்டார்கள் என்றும், ஆனால் அவர் புத்தர் என்று அவர்கள் நினைக்கவில்லை; அவரை வேறொரு இயக்கர் என்று நினைத்தார்கள் என்றும் கூறுகிறது. அதனால்த்தான் "இவர் நம்மவர்" என்று நினைத்தனர். இது இயக்கர்களும் புத்தரும் மனித வடிவில் இருந்தனர் என்பதைக் காட்டுகிறது. ஆனால், பிறகு புத்தர் அவர்களை பயமுறுத்த பலத்த மழை, குளிர் காற்று, கடுமையான வெப்பம் மற்றும் இருள் போன்றவற்றை ஏற்படுத்தினார். அன்பினதும் கருணையினதும் மொத்த வடிவான புத்தர், மேலே கூறியவாறு, இலங்கை நாட்டின் சொந்த மக்களை, பழங்க்குடியினரை அடக்குமுறையில் பயமுறுத்தி விரட்டும் செயல்கள் செய்தார் என்பது அவரின் இயல்புக்கு முற்றிலும் முரண்பாடாக இருக்கிறது? தீபவம்சம் 1.78: கோடையில் தாகம் கொண்டவர்கள் நதியை நோக்கி ஓடுவது போல, இயக்கர்கள் 'கிரிதீபத்திற்கு' [Giridipa] ஓடினார்கள்; அவர்கள் அனைவரும் ஒருபோதும் திரும்பி வராமல் அங்கே அதில் நுழைந்தனர்; முனிவர் (பின்னர்) தீவை அதன் முந்தைய இடத்திற்கு மீட்டெடுத்தார் என்கிறது. இது புத்தரின் அகிம்சை (nonviolence) மற்றும் கருணை என்ற தத்துவங்களுக்கு மீண்டும் இது எதிரானது ஆகும். இப்படியான கதைகள், புத்தரை அதிமானுட ஆற்றல்கள் கொண்டவர் போலவும், பிறரை வன்முறையால் விரட்டும் பயங்கரவாதி போலவும் காட்டுகின்றன. இது புத்தரின் உண்மையான உருவத்துக்கு கேடாக உள்ளது. இதனால் இலங்கை வரலாற்று புராணங்களை எழுதிய பௌத்த பிக்குகள், புத்தருக்கு துரோகம் செய்துள்ளனர். அவரின் புனித உருவத்தை அழித்துள்ளனர் என்பதே உண்மை. உதாரணமாக அங்கு வாழும் மக்கள் தமிழ் பேசும் மக்களாகவும், புத்த சமயத்தை சேராதவர்களாகவும் இருக்கும் பொழுதும், அவர்கள் வழிபாடும் சைவ ஆலயங்களுக்கு இடையூறாக அல்லது அவர்களுக்கு சொந்தமான காணியிலேயே பலவந்தமாக புத்தர் சிலை வைப்பதும் பின் விகாரை காட்டுவதும் பின் சிங்கள குடியேற்றத்தால் ஆக்கிரமிப்பு செய்வதும் 2009 க்குப் பின் அதிகரித்துக்கொண்டு போவது ஒரு சாதாரண விடயமாகி விட்டது. எந்த அரசாங்கம் வந்தாலும் அது நின்றபாடில்லை. இன்றும் மே 25, 2025, இலும் இப்படியான வன்முறைச் செயல்கள் தொடர்வதைக் காணலாம். உதாரணமாக, திடீரென அம்பாறை மாவட்டம் உகந்தைமலை முருகன் ஆலய சூழலில் முளைத்த புத்தர் சிலையைக் எடுத்துக் காட்டலாம். இது என்ன கொடுமை என்றால், தாங்கள் புத்தரை போற்றுகிறோம், பின்பற்றுகிறோம் என்று வாய்க்கு வாய் சொல்லும் அவர்கள் செய்யும் செயல்கள் தான் இவை! இது தான் சிங்கள அரசியல்வாதிகளும், பிக்குகளும் பல நாட்களாக முயற்சி செய்து கொண்டிருப்பது — வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வாழும் தமிழர்களை அவர்களது பூர்வீக நிலங்களிலிருந்து விரட்டுவதுதான். அவர்கள் இதில் பெரிதளவில் வெற்றி பெற்று விட்டார்கள். தமிழர்களில் பாதிக்கு மேற்பட்டோர் நாட்டின் பிற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து விட்டார்கள், அல்லது இந்தியாவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் அகதிகளாகச் சென்று விட்டார்கள். எல்லைப் பகுதிகளில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு, அவர்களுக்குப் பதிலாக ஆயுதம் தரப்பட்ட சிங்களர்கள் குடியமர்த்தப்பட்டனர். கல் ஓயா, மகாவலி திட்டம் போன்ற பல பெரும் நீர்ப்பாசனத் திட்டங்கள் தமிழர் நிலங்களை அபகரிக்க பயன்படுத்தப் பட்டன. இவை அனைத்துக்கும் உலகத் தொண்டு நிறுவனங்கள் நிதி உதவி வழங்கியுள்ளன. ஆனால் அவர்கள் இந்த அநியாயங்களைக் கண்டும் காணாதது போல நடந்து கொண்டனர். இதே நேரத்தில், தமிழர்கள் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்தனர். தேர்தல் எல்லைகள் மாற்றப்பட்டு, அரச ஆதரவுடன் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டதால், தமிழர் வாக்குரிமையும் குறைக்கப் பட்டது. Part: 135 / APPENDIX – "Is BUDDHA BETRAYED by Lanka chronicles authors?" Buddha is understood to be a very kind person who renounced the royal comforts, his just born son and his young wife when he was 29 years of age. He was saddened by the misery of this worldly life and wanted to find a way out of this misery. Dipavamsa describes Buddha as; the chief among Sages, the bringer of Happiness, the compassionate, and merciful grate Sage. Buddha was born more than 2400 years ago, and the Ceylon chronicles wanted us to believe that there were non- humans; blood thirsty Yakkhas, savage Pisacas and Rakkhasas during his life time in Lanka. The monkish authors branded the original inhabitants of Lanka as above to misappropriate their traditional land. The Buddha wanted to clear Lanka of the above sub-humans to make way for his chosen followers yet to come to Lanka from Vanga, and he came, flying to Lanka thrice. Buddha is a Human, and couldn’t have flown, and his flying is a plagiarism from the Epic Ramayana. When he came he was hovering over the heads of Yakkhas in mid air! Yakkahs mistook Buddha as one of theirs, the Dipavamsa, 1- 51. Both, the Buddha and the Yakkhas, must have been humans to look similar. The Buddha then terrorized Yakkhas by sending heavy rain, cold wind, darkness and extreme heat etc. The first terrorist of the world, one may say! In the end, the merciful Buddha, made the Yakkhas run away to another island, Giridipa; never to return, Dipavamsa 1-78. What kind of merciful and compassionate Buddha was he to indulge in these cruelties? The monkish chroniclers betrayed the Buddha by ascribing these sorts of uncivilized and criminal acts to the Buddha, shame on them. This is what the Sinhala politicians and the monks want to do with the Tamils, to drive them away from their ancestral homeland. They succeed in this about more than fifty percentage by driving the Tamils to India, and to the western world. They also brutally massacred Tamils in many pockets of border area, and replaced them with armed Sinhalese militia. Vast tracks of Tamils home lands were forcefully appropriated under various irrigation schemes, with the help of the major World Donor agencies. These Donor agencies are also the silent partners in the murder, mayhem and robbing of Tamils. Tamils’ lost their representations in the parliament while Sinhalese were increasing their representation in the Parliament. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 136 தொடரும் / Will follow எனது அறிவார்ந்த தேடல்: 1514 துளி/DROP: 2098 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 135] [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 135 / பின் இணைப்பு - "இலங்கை நாளிதழ் ஆசிரியர்களால் புத்தர் துரோகம் செய்யப்பட்டாரா?" புத்தர் என்பது அனைத்துலக மக்களாலும் மரியாதை செய்யப்படும், கருணையும், அன்பும் நிறைந்த சிறந்த முனிவர் ஆகும். 29 வயதில் இளம் மனைவியையும், புதிதாக பிறந்த மகனையும் விட்டுவிட்டு அரச வாழவைத் துறந்தவர். வாழ்க்கையின் துன்பங்களைப் பார்த்து அதற்கான விடியலைத் தேடி புறப்பட்டவர். இவரைப் பற்றிய இந்த உயர்ந்த பார்வைக்கு முற்றிலும் முரணாக, இலங்கையின் புராண நூல்களான தீபவம்சம் (Dipavamsa) மகாவம்சம் (Mahavamsa) மற்றும் இரசவலிய புத்தரை இதற்கு மாறாக வர்ணிக்கின்றன. இந்த நூல்கள், புத்தர் வாழ்ந்த காலத்தில் இலங்கையில் உருவமற்ற, மனிதரல்லாத இயக்கர்கள் (Yaksha) மனித மாமிசத்தை உண்ணும் கொடூரமான, கோபக் குணமும், வடிவமற்ற பிசாசுகள் [Pisacas], அரக்கர்கள் அல்லது அசுரர்கள் [Rakkhasas] போன்ற இயற்கைக்கு அப்பாற்பட்ட மனிதரல்லாத உருவங்கள் அல்லது உயிரினங்கள் வாழ்ந்ததாகக் கூறுகின்றன. ஆனால் இவர்கள் எல்லோரும் இந்நாட்டின் மூலப் பழங் குடியினர் [original inhabitants of Lanka] என்பதே உண்மை. இவர்கள் மீது இப்படியான குற்றச்சாட்டுகளை சுமத்துவதன் மூலம், அவர்களை "மனிதர்கள் அல்ல" எனக் கூறி பாரம்பரிய நிலங்களை கைப்பற்றும் முயற்சியாக இது இருந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. தீபவம்சம் 1.51 : புத்தர் இலங்கைக்கு மூன்று முறை பறந்து வந்தார் என்றும், ஒருமுறை அங்கே கூடியிருந்த இயக்கர்களின் கூட்டத்தினர் சம்புத்தர் அங்கே நிற்பதைக் கண்டார்கள் என்றும், ஆனால் அவர் புத்தர் என்று அவர்கள் நினைக்கவில்லை; அவரை வேறொரு இயக்கர் என்று நினைத்தார்கள் என்றும் கூறுகிறது. அதனால்த்தான் "இவர் நம்மவர்" என்று நினைத்தனர். இது இயக்கர்களும் புத்தரும் மனித வடிவில் இருந்தனர் என்பதைக் காட்டுகிறது. ஆனால், பிறகு புத்தர் அவர்களை பயமுறுத்த பலத்த மழை, குளிர் காற்று, கடுமையான வெப்பம் மற்றும் இருள் போன்றவற்றை ஏற்படுத்தினார். அன்பினதும் கருணையினதும் மொத்த வடிவான புத்தர், மேலே கூறியவாறு, இலங்கை நாட்டின் சொந்த மக்களை, பழங்க்குடியினரை அடக்குமுறையில் பயமுறுத்தி விரட்டும் செயல்கள் செய்தார் என்பது அவரின் இயல்புக்கு முற்றிலும் முரண்பாடாக இருக்கிறது? தீபவம்சம் 1.78: கோடையில் தாகம் கொண்டவர்கள் நதியை நோக்கி ஓடுவது போல, இயக்கர்கள் 'கிரிதீபத்திற்கு' [Giridipa] ஓடினார்கள்; அவர்கள் அனைவரும் ஒருபோதும் திரும்பி வராமல் அங்கே அதில் நுழைந்தனர்; முனிவர் (பின்னர்) தீவை அதன் முந்தைய இடத்திற்கு மீட்டெடுத்தார் என்கிறது. இது புத்தரின் அகிம்சை (nonviolence) மற்றும் கருணை என்ற தத்துவங்களுக்கு மீண்டும் இது எதிரானது ஆகும். இப்படியான கதைகள், புத்தரை அதிமானுட ஆற்றல்கள் கொண்டவர் போலவும், பிறரை வன்முறையால் விரட்டும் பயங்கரவாதி போலவும் காட்டுகின்றன. இது புத்தரின் உண்மையான உருவத்துக்கு கேடாக உள்ளது. இதனால் இலங்கை வரலாற்று புராணங்களை எழுதிய பௌத்த பிக்குகள், புத்தருக்கு துரோகம் செய்துள்ளனர். அவரின் புனித உருவத்தை அழித்துள்ளனர் என்பதே உண்மை. உதாரணமாக அங்கு வாழும் மக்கள் தமிழ் பேசும் மக்களாகவும், புத்த சமயத்தை சேராதவர்களாகவும் இருக்கும் பொழுதும், அவர்கள் வழிபாடும் சைவ ஆலயங்களுக்கு இடையூறாக அல்லது அவர்களுக்கு சொந்தமான காணியிலேயே பலவந்தமாக புத்தர் சிலை வைப்பதும் பின் விகாரை காட்டுவதும் பின் சிங்கள குடியேற்றத்தால் ஆக்கிரமிப்பு செய்வதும் 2009 க்குப் பின் அதிகரித்துக்கொண்டு போவது ஒரு சாதாரண விடயமாகி விட்டது. எந்த அரசாங்கம் வந்தாலும் அது நின்றபாடில்லை. இன்றும் மே 25, 2025, இலும் இப்படியான வன்முறைச் செயல்கள் தொடர்வதைக் காணலாம். உதாரணமாக, திடீரென அம்பாறை மாவட்டம் உகந்தைமலை முருகன் ஆலய சூழலில் முளைத்த புத்தர் சிலையைக் எடுத்துக் காட்டலாம். இது என்ன கொடுமை என்றால், தாங்கள் புத்தரை போற்றுகிறோம், பின்பற்றுகிறோம் என்று வாய்க்கு வாய் சொல்லும் அவர்கள் செய்யும் செயல்கள் தான் இவை! இது தான் சிங்கள அரசியல்வாதிகளும், பிக்குகளும் பல நாட்களாக முயற்சி செய்து கொண்டிருப்பது — வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வாழும் தமிழர்களை அவர்களது பூர்வீக நிலங்களிலிருந்து விரட்டுவதுதான். அவர்கள் இதில் பெரிதளவில் வெற்றி பெற்று விட்டார்கள். தமிழர்களில் பாதிக்கு மேற்பட்டோர் நாட்டின் பிற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து விட்டார்கள், அல்லது இந்தியாவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் அகதிகளாகச் சென்று விட்டார்கள். எல்லைப் பகுதிகளில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு, அவர்களுக்குப் பதிலாக ஆயுதம் தரப்பட்ட சிங்களர்கள் குடியமர்த்தப்பட்டனர். கல் ஓயா, மகாவலி திட்டம் போன்ற பல பெரும் நீர்ப்பாசனத் திட்டங்கள் தமிழர் நிலங்களை அபகரிக்க பயன்படுத்தப் பட்டன. இவை அனைத்துக்கும் உலகத் தொண்டு நிறுவனங்கள் நிதி உதவி வழங்கியுள்ளன. ஆனால் அவர்கள் இந்த அநியாயங்களைக் கண்டும் காணாதது போல நடந்து கொண்டனர். இதே நேரத்தில், தமிழர்கள் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்தனர். தேர்தல் எல்லைகள் மாற்றப்பட்டு, அரச ஆதரவுடன் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டதால், தமிழர் வாக்குரிமையும் குறைக்கப் பட்டது. Part: 135 / APPENDIX – "Is BUDDHA BETRAYED by Lanka chronicles authors?" Buddha is understood to be a very kind person who renounced the royal comforts, his just born son and his young wife when he was 29 years of age. He was saddened by the misery of this worldly life and wanted to find a way out of this misery. Dipavamsa describes Buddha as; the chief among Sages, the bringer of Happiness, the compassionate, and merciful grate Sage. Buddha was born more than 2400 years ago, and the Ceylon chronicles wanted us to believe that there were non- humans; blood thirsty Yakkhas, savage Pisacas and Rakkhasas during his life time in Lanka. The monkish authors branded the original inhabitants of Lanka as above to misappropriate their traditional land. The Buddha wanted to clear Lanka of the above sub-humans to make way for his chosen followers yet to come to Lanka from Vanga, and he came, flying to Lanka thrice. Buddha is a Human, and couldn’t have flown, and his flying is a plagiarism from the Epic Ramayana. When he came he was hovering over the heads of Yakkhas in mid air! Yakkahs mistook Buddha as one of theirs, the Dipavamsa, 1- 51. Both, the Buddha and the Yakkhas, must have been humans to look similar. The Buddha then terrorized Yakkhas by sending heavy rain, cold wind, darkness and extreme heat etc. The first terrorist of the world, one may say! In the end, the merciful Buddha, made the Yakkhas run away to another island, Giridipa; never to return, Dipavamsa 1-78. What kind of merciful and compassionate Buddha was he to indulge in these cruelties? The monkish chroniclers betrayed the Buddha by ascribing these sorts of uncivilized and criminal acts to the Buddha, shame on them. This is what the Sinhala politicians and the monks want to do with the Tamils, to drive them away from their ancestral homeland. They succeed in this about more than fifty percentage by driving the Tamils to India, and to the western world. They also brutally massacred Tamils in many pockets of border area, and replaced them with armed Sinhalese militia. Vast tracks of Tamils home lands were forcefully appropriated under various irrigation schemes, with the help of the major World Donor agencies. These Donor agencies are also the silent partners in the murder, mayhem and robbing of Tamils. Tamils’ lost their representations in the parliament while Sinhalese were increasing their representation in the Parliament. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 136 தொடரும் / Will follow துளி/DROP: 2098 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 135 https://www.facebook.com/groups/978753388866632/posts/34348151934833348/?
  3. கேக்காயினம்....கேக்காயினம்....பாக்கவும் மாட்டீனம். எட்டியும் பாக்க மாட்டீனம். கண்டாலும் விலத்தி போய் விடுவினம்.
  4. அதெல்லாம் அந்தக்காலம் ஐயா.இப்பவெல்லாம் அந்த சோலியள் இல்லை கண்டியளோ....
  5. எரிச்சல் மட்டுமில்ல....நக்கலும் அதிகம் ஐயா உங்களுக்கு 😂
  6. Today
  7. வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைக்கக்கூடாது என கொக்கரிக்கும் எவரும் தாமோ, தம் சார்ந்தாரோ இந்த பாடலை, இவை போன்ற இன்னும் பலப்பல பாடல்களை கேட்கவோ, கேட்டு இரசிக்கவோ, குத்தாட்டம் போடவோ, கிளுகிளுப்பு அடையவோ இல்லை இல்லை என நம்புவோமாக!
  8. இவ்வளவு வேகமாக தொடர்கதை எழுதுபவர் நீங்கள் தான் அண்ணை! 4 பேருடைய தொலைந்த வாழ்வு மீண்டமைந்தது மகிழ்ச்சி. நன்றி @suvy அண்ணை. தனித்து இருப்பதை விட இணைந்து செயல்படுவது தங்களுக்கு அதிகப் பயன் தரும் என்று அனைவரும் உணரும்போதுதான் அங்கே உண்மையான ஒற்றுமையும் மகிழ்ச்சியும் மலர்கின்றன. மாறாக, அன்பு, பாசம், ரத்த பந்தம் மாதிரியான உணர்ச்சிகளால் மட்டுமே பிணைக்கப்பட்டிருப்பதாக நினைப்பவர்கள் ஏமாற்றமடைந்து, தங்களையும் வருத்திக்கொண்டு மற்றவர்களையும் துன்பத்தில் ஆழ்த்துவார்கள். ~ நியாண்டர் செல்வன்
  9. கையடக்க தொலைப்பேசி பணப் பரிமாற்றங்களுக்கு தீவிர கண்காணிப்பு – அமைச்சரவை தீர்மானம் 18 Mar, 2026 | 05:31 PM இசிகேஷ் மற்றும் எம்கேஷ் (eZcash and mCash) போன்ற இலத்திரனியல் பணப்பரிமாற்ற முறைகளைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பணப்பரிமாற்றங்களைத் தடுப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான முன்மொழிவை பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேயபால அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார். அதற்கமைய சட்டவிரோத பணப்பரிமாற்றங்களை கண்காணிப்பதற்கும் அவற்றில் ஈடுபடுபவர்களை அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் இலங்கை மத்திய வங்கி, இலங்கை பொலிஸ் தலைமையகம், இலங்கை ஆட்பதிவுத் திணைக்களம் ஒன்றிணைந்து ஒரு புதிய தரவு தளத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுவோர் தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமல் இலகுவாகப் பணப்பரிமாற்றம் செய்வதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் குறித்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க பொதுமக்கள் மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் தலைமையில் ஏற்கனவே ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழுவினரால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை அடிப்படையாக கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் கையடக்க தொலைப்பேசி பணப்பரிமாற்றங்கள் தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படும். https://www.virakesari.lk/article/241315
  10. சங்கீதா இந்திய தேர்தலில் போட்டியிட முடியாது. மாட்டார். விஜை சங்கிதா சொத்து பிரிப்பில்தானாம் தகராறு, இருவரும் பிரிய ஓக்கேயாம்.
  11. ஈரான் மக்களை இஸ்ரேல் கிளர்ச்சிக்கு தூண்டுகிறது --- --- --- *வோசிங்டன்போஸ்ட் ஊடகம் விமர்சனம் *கிளர்ச்சியாளர்களை அமெரிக்கா ஆதரிக்க வேண்டும் எனவும் இஸ்ரேல் பரிந்துரை *ஈரான் பலமாக உள்ளதாக அமெரிக்க உளவுத்துறை மதிப்பீடு... --- --- --- ஈரான் அரசாங்கத்துக்கு எதிராக கிளர்ச்சி செய்யவுள்ள, ஈரானிய மக்கள் கொல்லப்படுவார்கள் என இஸ்ரேல் தனிப்பட்ட முறையில் மதிப்பீடு செய்வதாக வோசிங்டன்போஸ்ட் (washingtonpost) இன்று செவ்வாய்கிழமை பிரசுரித்த செய்திக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், கிளர்ச்சி செய்யும் மக்களுக்கு ஆதரவாக செயற்பட வேண்டும் என, அமெரிக்க இராஜதந்திரிகளுக்கு இஸ்ரேல் பரிந்துரைத்துள்ளது எனவும் அந்த செய்திக் கட்டுரையில் தெரிவித்துள்ளது. அதாவது, ஈரானியர்களை வீதியில் இறங்கி கிளர்ச்சி செய்ய இஸ்ரேல் தூண்டுவதாக வோசிங்டன்போஸ்ட் கட்டுரையாளர் ஜோன் கட்சன் (John Hudson) எழுதிய செய்திக் கட்டுரையில் விபரிக்கப்பட்டுள்ளது. வோசிங்டன்போஸ்ட் அமெரிக்காவின் பிரதான ஊடகமாகும். ஜோன் கட்சன், இந்த ஊடகத்தின் தேசிய பாதுகாப்புச் செய்தியாளர் (National security reporter). தான் எழுதிய நீண்ட செய்திக் கட்டுரையில், அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளை ஈரான் பக்கம் கூடுதல் கவனத்தில் வைத்திருக்க இஸ்ரேல் முற்படுவதாக குற்றம் சுமத்துகிறார். ஈரானின் ஆட்சியில் "விரிசல் இல்லை" பெப்ரவரி 28 ஆம் திகதி உயர் தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டாலும், அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டாலும், ஈரான் இறுதிவரை போராட தயாராக இருப்பதாகவும் இஸ்ரேல் மதிப்பீடு ஒன்றை செய்திருக்கிறது. இந்த மதிப்பீட்டு அறிக்கையை இஸ்ரேல் அமெரிக்க இராஜதந்திரிகளுடன் ஆராய்ந்துள்ளதாக ஜோன் கட்சன் தனது கட்டுரையில் விபரிக்கிறார். இஸ்ரேலிய அதிகாரிகள் ஈரானில் ஒரு மக்கள் கிளர்ச்சி எழும் என நம்புவதாகவும், அப்படி ஒரு கிளர்ச்சி நடந்தால், ஈரான் அரச எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவளிக்க அமெரிக்கா தயாராக இருக்க வேண்டும் எனவும் இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளதாக அக் கட்டுரை மேலும் கூறுகிறது. உயர் தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டபோது தான், புதிதாக பதவியேற்றுள்ள அவருடை மகன், மொஜ்தபா கமேனியும் காயமடைந்ததாக ஜோன் கட்சன் தனது கட்டுரையில் விளக்கியுள்ளார். அதேநேரம், அமெரிக்க இராஜதந்திரிகளையும் அதன் பாதுகாப்பு அதிகாரிகளையும், இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்ற தொனி ஜோன் கட்சன் எழுதிய நீண்ட செய்திக் கட்டுரையில் தெரிகிறது. ஈரானின் பிரதான இராணுவப் படையான இஸ்லாமிய புரட்சிகர படை கூடுதல் அதிகாரம் கொண்டது என இஸ்ரேல் சுட்டிக்காட்டுவதன் மூலம் அமெரிக்க அதிகாரிகளை, இஸ்ரேல் தன் பக்கம் ஈர்த்துள்ளது என கட்டுரையாளர் கற்பிதம் செய்கிறார். அதேவேளை, ஈரான் தமது ஆட்சி அதிகாரத்தை பலப்படுத்தி வருவதாக அமெரிக்க உளவுத்துறை கூறுவதாக வோசிங்டன்போஸ்ட் மற்றொரு செய்திக் கட்டுரையை இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது. சக்திவாய்ந்த இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படைகளின் ஆதரவுடன் தெஹ்ரானில் பலவீனமான, ஆனால் மிகவும் கடினமான அரசாங்கத்தை அமெரிக்க அதிகாரிகள் காண்பதாக வோசிங்டன்போஸ்ட் விபரிக்கிறது. ஈரானின் ஆட்சி அப்படியே தைரியமாக இருக்கும் என்று அமெரிக்க உளவுத்துறை மதிப்பீட்டுள்ளது. போரின் ஆரம்பத்தில் இருந்து இந்த மதிப்பீட்டை அமெரிக்க உளவுத் துறை மேற்கொண்டிருக்கிறது. ட்ரம்பை எதிர்த்து நின்று உயிர் பிழைத்ததாக ஈரான் நம்புவதாக அமெரிக்க உளவுத்துறையின் மதிப்பிட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக வோசிங்டன் போஸ்ட் விபரிக்கிறது. ஈரான் அரசின் மூலோபாயம் உறுதியாக உள்ளது. ஹார்மூஸ் நீரிணை மீதான தனது செல்வாக்கை ஈரான் பயன்படுத்தி, அமெரிக்காவை சங்கடப்படுத்துகிறது. நீண்ட ஒரு போருக்கு ட்ரம்ப் தயாராக இல்லை என்பதை ஈரான் உணர்கிறது எனவும் அந்தக் கட்டுரை கூறுகிறது. சென்ற வெள்ளிக்கிழமை வரை 15,000 இலக்குகளைத் தாக்கி, ஈரானின் இராணுவம் மற்றும் அதன் தலைமையின் மீது அமெரிக்க - இஸ்ரேல் இராணுவங்கள் தாக்குதல் நடத்தி ஏற்படுத்திய அழிவை, ட்ரம்பின் பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) மீண்டும் மீண்டும் பாராட்டியுள்ளார். ஆனால், ஈரான் வலுவாக இருப்பதாக அக் கட்டுரை ஆதாரங்களுடன் தனது விமர்சனத்தை முன்வைக்கிறது. அதேநேரம், ஐரோப்பிய நாடுகள், ட்ரம்பின் தவறான தீர்மானங்களுக்கு ஒத்துழைக்காமல் பாதுகாப்பாக தப்பியுள்ளன என்று வோசிங்டன்போஸ்ட் மற்றொரு செய்தியையும் வெளியிட்டுள்ளது. அதாவது, ஐரோப்பாவில் உள்ள வோசிங்டனின் கூட்டாளிகள் போரின் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து புத்திசாலித்தனமாக தப்பியிருப்பதாக வோசிங்டன்போஸ்ட் சுட்டிக்காட்டியுள்ளது. அதேநேரம், உலகளாவிய எண்ணெய் விலை அதிகரிப்பு மட்டுமல்ல, உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளரான அமெரிக்கா அனுபவிக்காத எரிபொருள் விலை உயர்வை, ஐரோப்பிய நாடுகள் எதிர்கொள்வதால் ட்ரம்ப்புக்கு ஒத்தழைக்காமல் ஒதுங்கியிருப்பதாகவும் வோசிங்டன்போஸ்ட் சுட்டிக்காட்டியுள்ளது. (The spike in energy costs is threatening to slow economic growth and increase prices in Europe more sharply than in the United States) அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0bR7Y33RuCDGMpbYDWtASavJLkuep63iLu3TeyEZkpzCmFr3RwNwPYpsiyAbfAcpUl&id=1457391262&mibextid=wwXIfr
  12. இத்தனை நாள் சந்தேகத்தை தெளிவா விளக்கிட்டார் மன்னார்குடி மருத்துவர்| Positivitea | Dr Prakashmurthy Positivitea இன் இந்த எபிசோடில், டாக்டர் பிரகாஷ்மூர்த்தியுடன் பல உடல்நலப் பிரச்சனைகளைப் பற்றி முக்கியமாக எண்ணெய், முட்டை மற்றும் பல உடல்நலப் பிரச்சனைகளைப் பற்றி பேசினோம். ரேஷன் பாமாயில், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், செக்கு எண்ணெய் போன்றவற்றைப் பற்றி அவர் எங்களிடம் ஒரு சிறந்த நேர்காணலை வழங்கியுள்ளார்.
  13. அப்போ இவர் கூட இருந்து கொமென்றி கொடுக்கும் ரமீஸ் ராஜா, அக்ரம் எல்லாரும் பாகிஸ்தானில் கட்டும் வரியும் இப்படித்தானே செலவாகும்? இதை கைவிடுவாரா காவாஸ்கர்? காவ்யா தான் பெரியாரின் பேத்தி என்பதை காட்டி உள்ளார். ஆனால் வரும் அழுத்தம் கடுமையாக இருக்கும். இதே நிலைப்பாட்டில் நிற்பாரா?
  14. suvy, இரண்டு வர்ணத்தில் உள்ள பாடலொன்றின் இரண்டு வரிகள் சொல்லட்டுமா? கண்ணதாசன் எழுதியது, “காய்த்த மரம்தான் கல்லடி படும் என்று கண்கூடாய் நான் பார்த்ததுண்டு புத்தன் யேசு காந்தியைக் கூடக் குற்றம் சொல்லிக் கேட்டதுண்டு…”😉
  15. அடபாவி இளைப்பாறச் சொல்லி தவம் கிடக்கிறார். இவர் தான் இளைப்பாறி விட்டு தோனியை முதலாளாக விளையாட வேண்டுமாம்.
  16. மின்சாரக் கட்டணத்தை 13.56 வீதத்தால் அதிகரிக்கக் கோருகிறது இலங்கை மின்சார சபை 18 Mar, 2026 | 03:32 PM ( இணையத்தள செய்திப் பிரிவு ) இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டுக்கான மின்சாரக் கட்டணங்களை 13.56 சதவீதத்தினால் அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளது. இது தொடர்பான மதிப்பாய்வு அறிக்கையினை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) வெளியிட்டுள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலப்பகுதிக்கு மின்சாரக் கட்டணத்தை 13.56 சதவீதத்தால் உயர்த்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் மின்சார சபை அனுமதி கோரியுள்ளது. இந்த கட்டண முன்மொழிவினை மின்சார சபையானது, 2009ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் 30ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய, கடந்த பெப்ரவரி 13ஆம் திகதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்தது. அதன் அடிப்படையில் மின்சார சபையின் கணிப்பின்படி, 2026ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சுமார் 15.8 பில்லியன் ரூபாய் வருமானப் பற்றாக்குறை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிதிப் பற்றாக்குறையை ஈடுசெய்வதற்காகவே இந்தக் கட்டண உயர்வினை மின்சார சபை கோரியுள்ளது. இந்த முன்மொழிவில் இறுதிப் பயனர் கட்டணங்கள் மற்றும் மொத்த விநியோகக் கட்டணங்கள் குறித்த விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் மதிப்பாய்வு ஆவணங்கள் தெரிவிக்கின்றன. மேலும், மின்சார கட்டணம் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படுவதற்கு முன், உரிய தரப்பினர் தங்கள் கருத்துக்களை சமர்ப்பிக்குமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கலந்தாலோசனை ஆவணத்தை வெளியிட்டுள்ளது. அந்த ஆவணத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது https://www.virakesari.lk/article/241291
  17. இன்னொரு மத மாணவருக்கு இன்னொரு மதம் பிடித்தவர் இன்னொரு மத புத்தகத்தை ஏன் கொடுக்கணும். இன்னொரு மதத்தைப் பற்றி அறிய இன்னொரு மதத்தவனுக்கு ஆர்வம் இருந்தால் அவனாகவே வாங்கிப் படிப்பான்.
  18. அன்று ஏவுகணை தாக்குதலில் நூலிழையில் உயிர் தப்பிய மொஜ்தபா காமேனி - என்ன நடந்தது? தெஹ்ரான்: ஈரானின் உச்சத் தலைவராக இருந்த அயதுல்லா அலி காமேனி கொல்லப்படுவதற்கு சில விநாடிகள் முன்பு மொஜ்தபா காமேனியும் அவருடன்தான் இருந்தார் என்றும், தாக்குதலுக்கு சில நொடிகள் முன்புதான் அவர் அங்கிருந்து வெளியேறினார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது கடந்த பிப்.28-ம் தேதி தாக்குதலைத் தொடங்கின. முதல் தாக்குதலே, உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனியையும், ராணுவத் தளபதி உள்ளிட்ட முக்கிய தலைவர்களையும் குறிவைத்து நடத்தப்பட்டது. உச்சத் தலைவர் தங்கி இருந்த மாளிகையை நோக்கி இஸ்ரேல் அடுத்தடுத்து மூன்று ஏவுகணைகளைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், அயதுல்லா அலி காமேனி, ராணுவத் தளபதி, முக்கியத் தலைவர்கள், அயதுல்லா அலி காமேனியின் குடும்பத்தினர் ஆகியோர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், மார்ச் 12-ம் தேதி ஈரானின் மூத்த மதகுருமார்கள், இஸ்லாமிய புரட்சிகரப் பாதுகாப்புப் படைத் தளபதிகள் ஆகியோர் பங்கேற்ற கூட்டத்தில், அயதுல்லா அலி காமேனியின் அலுவலக நெறிமுறைப் பிரிவின் தலைவர் மசாஹர் ஹுசைனி பேசியதன் ஆடியோ தற்போது கசிந்துள்ளது. அதில், மசாஹர் ஹுசைனி பேசியதை தி டெலிகிராப் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில் மசாஹர் ஹுசைனி கூறி இருப்பதாவது: தாக்குதலுக்கு சற்று முன்பு வரை மொஜ்தபா காமேனி, தனது தந்தையுடன் அந்த மாளிகையில் இருந்தார். ஏவுகணைகள் தாக்கும் சில கணங்களுக்கு முன்பே அவர் வெளியேறினார். ஏதோ ஒரு வேலையாக மொஜ்தபா வெளியே சென்றுவிட்டு திரும்ப வேண்டும் என்பதே கடவுளின் விருப்பமாக இருந்துள்ளது. கட்டிடத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடந்தபோது அவர் வெளியே மேல் தளத்துக்குச் சென்று கொண்டிருந்தார். இந்த தாக்குதலில் குறைந்தது மூன்று ஏவுகணைகளாவது பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஒரு ஏவுகணை மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி இருந்த வளாகத்தின் பகுதியை தாக்கியது. மற்றொரு ஏவுகணை மொஜ்தபா காமேனியின் குடியிருப்பைத் தாக்கியது. மூன்றாவது ஏவுகணை அவரது மைத்துனரான மிஸ்பா அல்-ஹுதா பாகேரி கானியின் வீட்டைத் தாக்கியது. இந்த தாக்குதலில், ஈரான் ராணுவத் தளபதி முகமது ஷிராசியின் உடல் துண்டு துண்டாக சிதறிவிட்டது. அவரது உடலின் எந்தப் பகுதியையும் கண்டறியமுடியவில்லை. இறுதியில் சில கிலோ கிராம் சதைகள் மட்டுமே கண்டெடுத்து அதுவே அவரது உடல் என்று அடையாளம் கண்டனர். இந்த தாக்குதலில் மொஜ்தபா காமேனியின் காலில் லேசான காயம் மட்டுமே ஏற்பட்டது. எனினும், இந்த தாக்குதலில் அவரது மனைவி சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார். இவ்வாறு மசாஹர் ஹுசைனி பேசியதாக தி டெலிகிராப் தெரிவித்துள்ளது. அன்று ஏவுகணை தாக்குதலில் நூலிழையில் உயிர் தப்பிய மொஜ்தபா காமேனி
  19. ஈரானின் கார்க் தீவைக் கைப்பற்ற அதிபர் ட்ரம்ப் திட்டம்: அமெரிக்க அதிகாரிகள் தகவல் ஈரானின் கார்க் தீவு Updated on: 17 Mar 2026, 12:10 pm 1 min read வாஷிங்டன்: ஈரானின் 90 சதவீத கச்சா எண்ணெய் ஏற்றுமதி கார்க் தீவில் நடைபெறுவதால், அதை கைப்பற்றும் நடவடிக்கையை அதிபர் ட்ரம்ப் மேற்கொள்ளலாம் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் எண்ணெய் கப்பல்களின் போக்கு வரத்துக்கு ஈரான் கடும் நிபந்தனை விதித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள போர்க் கப்பல்களை அனுப்ப அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விடுத்த கோரிக்கையை நேட்டோ நாடுகள் ஏற்கவில்லை. இந்த விஷயத்தில் நேட்டோ நாடுகள் உதவவில்லை என்றால், மோசமான எதிர்காலத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார். ஈரானின் 90 சதவீத கச்சா எண்ணெய் ஏற்றுமதி கார்க் தீவில் நடைபெறுகிறது. இத னால் ஈரானின் வருவாயை முடக்க, இந்த தீவுக்கு ராணுவத்தை அனுப்பி கைப்பற்றும் திட்டம் குறித்தும் அதிபர் ட்ரம்ப் ஆலோசித்து வருகிறார். ஆனால், இந்த தீவுக்கு அமெரிக்க ராணுவம் சென்றால், ஈரான் பதிலடியில் இறங்கும். சவுதி உட்பட வளைகுடா நாடுகளில் உள்ள எண்ணெய் கிடங்குகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரூவேன் அசார் கூறுகையில், "ஈரானுக்குள் ஊடுருவும் எண்ணம் அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் இல்லை. ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்த மட்டுமே இரு நாடுகளும் கவனம் செலுத்துகின்றன" என்றார். ஈரானின் கார்க் தீவைக் கைப்பற்ற அதிபர் ட்ரம்ப் திட்டம்
  20. ஈரானை தாக்குவது ஒரு பரந்த பிராந்திய மோதலை தூண்டும் என்று ட்ரம்ப்பை எச்சரித்தோம்: அமெரிக்க உளவுத்துறை வாஷிங்டன்: ஈரானின் பதிலடி தாக்குதல் தனக்கு ஆச்சரியமளித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்த நிலையில், ஈரானை தாக்குவது அமெரிக்காவின் வளைகுடா நட்பு நாடுகளுக்கு எதிரான பதிலடித் தாக்குதல்களைத் தூண்டிவிடும் என அவருக்கு முன்னரே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக அமெரிக்க உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளின் மீது ஈரான் நடத்திய பதிலடித் தாக்குதல்கள் தமக்கு ஆச்சரியமளித்ததாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று (மார்ச் 16) இருமுறை தெரிவித்தார். வெள்ளை மாளிகையில் பேசிய ட்ரம்ப், “ஈரான் மத்திய கிழக்கில் உள்ள மற்ற அனைத்து நாடுகளையும் குறிவைத்துத் தாக்க முற்பட்டிருக்கக் கூடாது. இதை நாங்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. இதனால் நாங்கள் அதிர்ச்சியடைந்தோம்" என்றார். இந்த சூழலில், அமெரிக்க உளவுத்துறை தரப்பில் வெளியான தகவல்களில், ஈரான் மீது தாக்குதல் நடத்தினால், பொருளாதார ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தியை மூட ஈரான் முற்படக்கூடும் என ட்ரம்ப்புக்கு தகவல் அளிக்கப்பட்டிருந்தது. ஈரான் மீது தாக்குதல் நடத்துவது ஒரு பரந்த பிராந்திய மோதலைத் தூண்டக்கூடும் என்றும், குறிப்பாக வளைகுடா நாடுகள் அமெரிக்கத் தாக்குதல்களை அங்கீகரிப்பதாகவோ அல்லது ஆதரிப்பதாகவோ ஈரான் கருதினால், அந்நாடுகளின் தலைநகரங்கள் மீது ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தக்கூடும் என்று போருக்கு முன்னரே ட்ரம்ப்புக்கு விளக்கமளிக்கப்பட்டிருந்ததாகவும் ஒரு அதிகாரி தெரிவித்தார். மேலும், அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதல்களுக்கு முன்னதாகவே, இஸ்ரேல் திட்டமிட்டுள்ள தாக்குதல்கள் மூலம் ஈரானிய தலைவர்களைக் கொல்ல முயல்வது, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ மற்றும் தூதரகத் தளங்கள் மீது ஈரான் பதிலடி கொடுப்பதற்கு வழிவகுக்கக்கூடும் என்று அமெரிக்க உளவுத்துறை கணித்திருந்தது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் மீது பிப்ரவரி 28-ல் அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக தாக்குதலை தொடங்கியது. இதற்கு பதிலடியாக கடந்த இரண்டு வாரங்களாக, ஈரானிய ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் வளைகுடா நாடுகளில் உள்ள பல்வேறு இலக்குகளைத் தாக்கியுள்ளன. அதேபோல, உலகின் மொத்த எண்ணெய் விநியோகத்தில் 20 சதவீதம் பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் அனைத்து கப்பல் போக்குவரத்தையும் ஈரான் நிறுத்தியுள்ளது; இதனால் உலகளாவிய எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளன. ஈரானை தாக்குவது ஒரு பரந்த பிராந்திய மோதலை தூண்டும் என்று ட்ரம்ப்பை எச்சரித்தோம்
  21. தமிழகத்தில் 3 நாட்களில் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.42.65 கோடிக்கு பணம், பொருட்கள் பறிமுதல் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல் இடம்: கோத்தகிரி சாலை படம்: எம்.சத்தியமூர்த்தி தமிழினி Updated on: 18 Mar 2026, 4:00 pm 1 min read சென்னை: தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினரால் தற்போது வரை ரூ.42.65 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி கடந்த 15-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அன்றில் இருந்தே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. இதையடுத்து, தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 234 தொகுதிகளிலும், தொகுதிக்கு தலா 9 பறக்கும் படைகள், 9 நிலை கண்காணிப்புக் குழுக்கள் என்ற விகிதத்தில், தமிழகம் முழுவதும் 2,160 பறக்கும் படைகள், 2,160 நிலைக் கண்காணிப்புக் குழுக்கள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தற்போது நடைபெற்று வரும் தேர்தல் செலவினக் கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பல்வேறு பிரிவுகளின் கீழ் அதிகாரிகள் கணிசமான அளவு பொருட்களைப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இன்றைய (18 மார்ச்) நிலவரப்படி, பறிமுதல் செய்யப்பட்ட மொத்த மதிப்பு ரூ. 42.65 கோடி ஆகும். தமிழகம் முழுவதும் ரூ. 2.37 கோடி ரொக்கமும், ரூ.0.18 கோடி மதிப்பிலான மதுபானம், ரூ. 2.88 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள், ரூ.16.42 கோடி மதிப்பிலான விலைமதிப்பற்ற உலோகங்கள் மற்றும் ரூ.20.80 கோடி மதிப்பிலான இலவசங்கள் / பிற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் செலவின கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் அமலாக்க முகமைகள், சட்டவிரோதப் பணப் புழக்கம், வாக்காளர்களை கவர வழங்கப்படும் இலவசப் பொருட்கள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட பொருட்களின் விநியோகத்தைக் கட்டுப்படுத்த கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு வழிமுறைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன” என்று அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 3 நாட்களில் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.42.65 கோடிக்கு பணம், பொருட்கள் பறிமுதல்
  22. பண்புத்தமிழ் பண்புத் தமிழ் என்பது தமிழர்களின் அறநெறி, கலாச்சாரம், ஒழுக்கம், நாகரிகத்தின் வெளிப்பாடாக அமையும் தமிழ் மொழியின் ஒரு சிறப்புக்கூறு ஆகும். 'பண்பு' என்ற சொல்லுக்குச் சீர்மை, நற்பண்பு, தகுதி என்று பல பொருள்கள் உண்டு. 1. சொற்களில் கண்ணியம் தமிழ் மொழியில் ஒருவரை அழைப்பதிலும், உரையாடுவதிலும் மிகுந்த மரியாதை கையாளப்படுகிறது. நீ என்பதற்குப் பதில் நீங்கள் என்று மரியாதையுடன் அழைப்பது. வா, போ என்பதற்குப் பதில் வாருங்கள், செல்லுங்கள் என விகுதி சேர்த்துப் பேசுவது. பண்பு மரபு எனக் கொள்ளலாம். அறிஞர்களையும் பெரியோர்களையும் 'ஐயா', 'அம்மா' என்று விளிப்பது. 2. இலக்கியங்களில் பண்பாடு சங்க இலக்கியம் முதல் தற்கால இலக்கியம் வரை, 'பண்பு' என்பது ஒரு மனிதனின் இலக்கணமாகவே போற்றப்படுகிறது. "பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல்" (கலித்தொகை) - அதாவது, உலக நடைமுறையை அறிந்து அதற்கேற்ப நடப்பதே பண்பு. "பண்புடையார் பட்டுண்டு உலகம்" - பண்பு உடையவர்கள் இருப்பதால்தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்கிறார் வள்ளுவர். 3. விருந்தோம்பல் தமிழ்ப் பண்பாட்டின் சிகரம் விருந்தோம்பல். வந்தவரை இன்முகத்துடன் வரவேற்று உபசரிப்பது தமிழர்களின் பண்புத் தமிழ் மரபு. "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற வரிகள் உலக மக்கள் அனைவரையும் உறவினர்களாகக் கருதும் உயரிய பண்பைப் பறைசாற்றுகின்றன. 4. பணிவும் அன்பும் "பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற" - பணிவாக நடப்பதும், இனிய சொற்களைப் பேசுவதுமே ஒருவருக்குச் சிறந்த அணிகலன் என்பது தமிழரின் வாழ்வியல் நெறி. 1970ஆம் ஆண்டு வாக்கில், மேற்கத்திய இலக்கியவாதிகள் சொற்களில் கண்ணியம் காக்கப்பட வேண்டுமென்பதற்காக முன்னெப்போதும் இல்லாதபடிக்கு இயக்கமாகக் கட்டமைத்தனர். நம் ஊரில் கால்நடை வணிகம் செய்யும் போது நீங்கள் பார்த்திருக்கலாம். துண்டுக்குள் கைகளை விட்டுக் கொண்டு விரல்களைப் பிடித்தபடி பேரம் பேசிக் கொள்வர். அதாவது, குறிப்பிட்ட விலை என்பது பொது விலை. அந்தப் பொதுவிலைக்கும் மேலாக இவ்வளவு தருகிறேன், குறைவாக இவ்வளவு தருகிறேனெனத் தனிப்பட்ட முறையில் பேசிக் கொள்வது. இதனால் பொதுவெளியில் இருப்பவர்களுக்கு அந்தப் பேரத்தின் தன்மை தெரிய வாய்ப்பில்லை. அது போலத்தான் இந்த மேற்கத்தியப் பழக்கமும். hand in cap, கையில் தொப்பி இருக்கும். பண்டமாற்று முறையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுத் தொகை, வித்தியாசத்துக்கான தொகையை முடிவு செய்யும் பொருட்டுத் தொப்பிக்குள் கைகளை விட்டு ஒருவர் பணத்தைப் போட ஏற்பிருப்பின் மற்றவர் எடுத்துக் கொள்ள, அத்தருவாயில் வணிகம் முற்றுப்பெறும். குறைவுக்கான தொகை handicapped ஆனது. அதுவே, குறைபாடு உடையவர் handicapped என்றானது. தொப்பியை நீட்டி இரவுபணம் வாங்குதலால் பிச்சைக்காரர் எனும் பொருள்படியும் ஆகிற்று. மாந்தநேயம் வளர வளர, உளவியல்ரீதியாகப் பிற்போக்கானதாக இத்தகைய சொற்கள் உணரப்பட்டன. அதன்நிமித்தம் மேம்பட்டதான, கண்ணியமிகு சொற்கள் புழக்கத்திற்கு வந்தன. அதுதான் மனிதத்தின் மேம்பாடு. ’வறியோர்க்கு உணவு’ எனும் தலைப்பில் மேம்பட்டதான ஒரு செயலைச் செய்வது நன்றன்று. நாம் ஏற்கனவே சுட்டியும் இருந்தோம். ’பசித்தோர்க்கு உணவு’ என்பது போன்ற சொற்களைப் பாவிக்கலாம். எண்ணிப்பாருங்கள். ஒருவர் அந்த நிகழ்ச்சிக்கு வந்து உணவு உண்ணுகின்றார். அந்த நிகழ்வில் உண்டமாத்திரத்திலேயே அவருக்கு “வறியவர்” எனும் முத்திரை விழும். பிறகு அம்முத்திரையின் அடிப்படையில், பகுப்புகள் தோன்றும். தேவைதானா?! சொற்களில் அரசியல் உள்ளது. சொற்களில் பண்பாடு உள்ளது. சொற்களில் எல்லாமும் உள்ளது. முறையான சொற்களைப் பாவிப்பதே ஆன்றோர்க்கழகாகும். சைவம், அசைவம் எனும்போது, மரக்கறி உண்ணுபவரே முதன்மையென்றாகின்றது. மாறாக, கறியர் - அகறியர், புலாலி - அபுலாலி எனச் சொல்லுங்கால் முறை மாறிவிடும். எல்லாம் கட்டமைத்தலே. இஃகிஃகி. 𝐖𝐨𝐫𝐝𝐬 𝐢𝐧𝐟𝐥𝐮𝐞𝐧𝐜𝐞 𝐦𝐢𝐧𝐝𝐬 𝐛𝐞𝐟𝐨𝐫𝐞 𝐚𝐜𝐭𝐢𝐨𝐧𝐬 𝐟𝐨𝐥𝐥𝐨𝐰. -பழமைபேசி. https://maniyinpakkam.blogspot.com/2025/12/blog-post_27.html
  23. முன்வரிசையில் தோனி களமிறங்க வேண்டும்: டி வில்லியர்ஸ் யோசனை மும்பை: வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் எம்.எஸ்.தோனி முன்வரிசையில் களமிறங்குவது சிறப்பாக இருக்கும் என்று தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏ.பி. டிவில்லியர்ஸ் தெரிவித்தார். இதுதொடர்பாக ஜியோ ஸ்டாருக்கு அளித்த பேட்டியில் டிவில்லியர்ஸ் கூறியதாவது: வரும் 28-ம் தேதி தொடங்கும் 2026-ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மிகவும் சிறப்பான முறையில் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஐபிஎல் போட்டி தொடங்கியது முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்காக தோனி விளையாடி வருகிறார். அந்த அணி 5 முறை கோப்பையை வென்றதற்கு தோனியின் பங்களிப்பு அதிகமாகும். கடந்த சில ஆண்டுகளாக அவர் ஆட்டத்தின் கடைசி சில ஓவர்களில் களமிறங்கி பினி ஷருக்கான பணியைச் செய்து வருகிறார். அவர் அப்படி செய்யக் கூடாது. அவர் முன்வரிசையில் வந்து விளையாடுவது அணிக்கு நல்லது. நான்கு, ஐந்து அல்லது ஆறாவது இடங்களில் இறங்கி விளையாடலாம். எப்போதும் முன்வரிசையில் அவர் இறங்கி விளையாட வேண்டும் என்று நான் கூறவில்லை. பேட்டிங் வரிசையில் முன்னதாக இறங்கும்போது அது தாக்கத்தை ஏற்படுத்தும். தோனி கேப்டனாக இல்லாததால் 7 அல்லது 8-வது இடத்தில் இறங்கி விளையாடுகிறார். இந்த வரிசையில் விளையாடும்போது அவருக்கு போதுமான பங்கு இல்லாமல் போய்விடுகிறது என்று நான் நினைக்கிறேன். அவரது பேட்டிங் எவ்வளவு பெரியத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எனக்குத் தெரியும். 44 வயதிலும் தோனியின் பங்கு அணிக்கு கூடுதல் வலுவைப் பெற்றுத் தருகிறது. எனவே, அவர் முன்வரிசையில் களமிறங்கி விளையாடவேண்டும். மேலும், சிஎஸ்கே அணியில் தற்போது சஞ்சு சாம்சன் வந்திருக்கிறார். இந்த சீசனில் அவருக்கு மிகப்பெரிய பொறுப்பு காத்திருக்கிறது. பொறுப்பை ஏற்க மிகச் சரியான வீரராக சஞ்சு சாம்சன் இருக்கிறார். அணிக்கு சஞ்சு சாம்சனை அழைத்து வந்த பெருமை தோனியையே சாரும். சரியான நபருக்காக அவர் (தோனி) காத்திருக்கிறார். அழுத்தங்கள் இருக்கும் போட்டிகளில் சஞ்சு சாம்சன் தனக்கான பொறுப்பை உணர்ந்து அதற்கேற்ப விளையாட வேண்டும். அப்போதுதான் மிகப்பெரிய சவாலாக இருக்கும் போட்டிகளை அவரால் எளிதாக கையாள முடியும். அதற்கான சந்தர்ப்பத்தை சஞ்சு சாம்சனுக்கு ஏற்படுத்தித் தரவேண்டும் என்று நான் கோருகிறேன். இவ்வாறு டிவில்லியர்ஸ் தெரிவித்தார். ஜெர்ஸி எண் மாறுகிறதா? இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் வீரருமான எம்.எஸ்.தோனியின் ஜெர்ஸி எண் மாறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தோனி, இந்திய அணிக்காக விளையாடியபோது 7-ம் எண் ஜெர்ஸியை அணிந்திருந்தார். சிஎஸ்கே-வுக்காக விளையாடும்போது 7-ம் எண் ஜெர்ஸியை அவர் அணிந்துவந்தார். இந்நிலையில், தான் இனிமேல் நம்பர் 7 ஜெர்ஸியை பயன்படுத்தபோவதில்லை என்றும், நம்பர் 8-க்கு மாறப் போவதாகவும் தோனியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் நேற்று தகவல் வெளியாகியுள்ளது. தோனியின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் உள்ள பதிவில், “சில எண்கள் உங்களுடன் நீடித்து இருக்கும், அப்படியான எண்களில் ஒன்றுதான் 7. ஆனால் இன்று.. 8-ம் எண்ணுக்கு மாறுகிறேன். இதற்கான காரணத்தை விரைவில் நீங்கள் அறிவீர்கள்” என்று பதிவிடப்பட்டுள்ளது. மேலும் அதனுடன் நம்பர் 7-லிருந்து 8-க்கு மாற்றப்பட்ட ஜெர்ஸியின் வீடியோவும் இணைக்கப்பட்டுள்ளது. https://www.hindutamil.in/news/sports/dhoni-should-be-in-the-front-row-ab-de-villiers

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.