24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!
உண்மையில் இந்த மிகை இலக்கிய மேட்டுகுடிகளின் அலப்பறைகள் போல்…இதுதான் இலக்கியம்…இது இலக்கியம் இல்லை என பகுத்தறிய ஏதும் இல்லை. ஒரு காலத்தில் நாவல்களை இலக்கியம் என ஏற்க மறுத்தார்கள். மரபு கவிஞர்கள் இன்றும் புதுகவிதையை கவிதை என்றே ஏற்பதில்லை. நவீன ஓவியமும் இதை தாண்டியே வந்தது. எது இலக்கியம், எது இலக்கியம் இல்லை என்பதும், அது நல்ல இலக்கியமா இல்லையா என்பதும் அவரவர் பார்வையின் பால் பட்டது. கற்பனை ஆழத்தோடு, உணர்வுகளை உலுப்பி, சமூகத்தின் கண்ணாடியாக பிரதிபலிக்கும் , குறை நிறை காட்டும் எந்த எழுத்தும் இலக்கியமே. அது விருதுக்கு உரியதா இல்லையா என்பது - விருதுக் குழு தமது பார்வையில் எடுக்கும் முடிவு.
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!
இது நான் 28ம் திகதி, மார்கழி மாதம், 2017ம் ஆண்டில் எழுதியது ............... பல வருடங்களாக நானும் எழுதிக் கொண்டிருக்கின்றேன் என்று எனக்கே இப்பொழுது தான் தெரிகின்றது................. இவற்றை இரண்டு மூன்று புத்தகங்களாக போட்டு விட்டு, விருதுகளுக்கான வேலைகளை ஆரம்பிக்க வேண்டும்.......................🤣: பாடலாசிரியர் வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்துவிடும் போல தெரிகிறது. எல்லா வகையிலும் முயன்று, மோடியின் ஆட்சியில் அவர் இதைப் பெற்று விடுவார் என்றே தெரிகின்றது. ஞானபீடம் இந்தியாவில் வருடாவருடம் அளிக்கப்படும் இலக்கியத்திற்கான மிக உயர் விருது. தமிழில் இதுவரை அகிலனும் (சித்திரப்பாவை நாவலுக்காக) ஜெயகாந்தனுமே பெற்றுள்ளார்கள். வைரமுத்து ஒரு மிகச்சிறந்த பாடலாசிரியர். அவர் வேறெந்த வகையிலும் ஒரு சிறந்த இலக்கியவாதி இல்லை. இவருக்கு ஞானபீடம் கிடைத்தால் தமிழ் இலக்கிய உலகம் கண்ட மிகப்பெரும் சிறுமைகளில் இதுவும் ஒன்றாகும். இவர்தான் தமிழின் இன்றைய இலக்கியவாதி என்பது தமிழில் தோன்றி மறைந்த பெரும் இலக்கியவாதிகளுக்கும், இன்று இருப்போருக்கும் செய்யப்படும் மிகப் பெரும் அவமரியாதை. சென்ற ஆண்டுகளில் இந்தியச்சூழலில் இன்று அறியப்பட்ட எந்த மேதைக்கும் நிகரான பெரும்படைப்பாளிகள் சிலர் தமிழிலிருந்து ஞானபீடத்திற்கு முன்வைக்கப்பட்டனர். லா.ச.ராமாமிருதம், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, கி.ராஜநாராயணன் என. அவர்கள் அனைவரும் திறமையான உள்குத்துகள் வழியாக தோற்கடிக்கப்பட்டனர். இன்று வைரமுத்து மேலேறிச்செல்கிறார். அகிலனுக்கும் இந்த விருது வழங்கப்பட்டிருக்கக்கூடாது. அகிலனை இன்று இந்தியாவில் எவருக்கும் தெரியாது, தமிழிலேயே அவரை பெரும்பாலானோருக்குத் தெரியாது. குளத்தில் எறிந்த கல் ஏற்படுத்தும் சிறிய சலனம் அளவில் கூட ஒரு மாற்றத்தை உண்டாக்காதவர்.
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!
பவுடர் டப்பா திரைபாடல்கள் தாண்டியும் பல கவிதைகளை, நூல்களை எழுதியுள்ளார் என்பதை அறிந்தும், முட்டு கொடுக்கும் ஆர்வத்தில் அதை மறந்து கொண்டு😂😂
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!
இந்த விடயம் சம்பந்தமாக சாரு எழுதியிருக்கும் 'ஸூகராணாம் ஸூகர ஏவ அதிபதி' என்ற கட்டுரையை படித்தீர்கள் என்றால், வீட்டிலிருக்கும் ஏதாவது பொருட்களை உடைத்து விடப் போகின்றீர்கள்......................🤣. 'அகழ்' வாசிக்கின்றீர்களா என்று தெரியவில்லை. அவர்கள் சில ஈழத்து இளைஞர்கள்.......... ஆனால் என் போன்றோர் அண்ணாந்து பார்க்கும் உயரத்துக்கு எப்பவோ போய் விட்டார்கள்............... இந்த விருது அறிவிக்கப்பட்டவுடன் அவர்கள் எழுதிய ஆசிரியர் தலையங்கத்தை ஒரு தடவை வாசித்துப் பாருங்கள்............. நான் இங்கு காரணமாகவே இணைப்பு எதுவும் கொடுக்கவில்லை................ இன்னும் உங்களை உக்கிரமாக்க...................... சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவில் இருந்து ஒரு சிறு பகுதி; ஒரு கிணற்றில் தவளை ஒன்று வாழ்ந்தது. நீண்ட காலமாக அங்கு அது வசித்து வந்தது. அங்கேயே பிறந்து அங்கேயே வளர்ந்த அந்தத் தவளை சின்னஞ் சிறியது. அது கண்களை இழந்து விட்டதா, இல்லையா என்று சொல்வதற்கு, நல்லவேளையாக அங்கே பரிணாமவாதிகள் யாரும் இல்லை. நம் கதைக்காக, அதற்குக் கண்கள் இருந்தன என்றே வைத்துக் கொள்வோம். அந்தத் தவளை நாள்தோறும் நீரிலிருந்து புழு பூச்சிகளையும் கிருமிகளையும் மிகவும் சுறுசுறுப்பாக அகற்றிச் சுத்தப் படுத்தியது. அந்தச் சுறுசுறுப்பு, நம் தற்காலக் கிருமி ஆராய்ச்சியாளர்களுக்கு இருந்தால் அது அவர்களுக்குப் பெருமை தரும் விஷயமாகும். அவ்வாறே வாழ்ந்ததால் அந்தத் தவளை சிறிது பருத்தும் விட்டது. ஒரு நாள் கடலில் வாழ்ந்து வந்த தவளையொன்று அங்கு வந்து அந்தக் கிணற்றில் விழுந்துவிட்டது. 'நீ எங்கிருந்து வருகிறாய்?' 'கடலிலிருந்து' 'கடலா? அது எவ்வளவு பெரியது? எனது கிணற்றளவு பெரியதாயிருக்குமா?' என்று கூறி, ஒரு பக்கத்திலிருந்து எதிர்ப்பக்கத்திற்குத் தாவிக் குதித்தது கிணற்றுத் தவளை. 'நண்பா, இந்தச் சின்னக் கிணற்றோடு எப்படிக் கடலை ஒப்பிட முடியும்?' என்று கேட்டது கடல் தவளை. கிணற்றுத் தவளை மறுபடியும் ஒரு குதிகுதித்து, 'உனது கடல் இவ்வளவு பெரிதாய் இருக்குமோ?' என்று கேட்டது. 'சேச்சே! என்ன முட்டாள்தனம்! கடலை உன் கிணற்றோடு ஒப்பிடுவதா?' 'நீ என்ன சொன்னாலும் சரி, என் கிணற்றை விட எதுவும் பெரிதாக இருக்க முடியாது. கண்டிப்பாக, இதைவிடப் பெரிதாக எதுவும் இருக்க முடியாது. இவன் பொய்யன், இவனை வெளியே விரட்டுங்கள்!' என்று கத்தியது கிணற்றுத் தவளை.
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!
திரைப் பாடல்கள் இலக்கிய வகைக்குள் இல்லை என்பதையே புரியாமல் 😂🤣 ஞானபீடம் விருது : எங்கள் கண்டனங்கள் அகழ் வைரமுத்து இந்த வருடத்துக்கான ஞானபீட விருது கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்திய அளவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் உயரிய விருது இது. நவீன தமிழ் இலக்கியச் சூழலில், யாருமே வைரமுத்துவை நல்ல கவிஞராகவோ அல்லது புனைவாசிரியராகவோ கருதுவதில்லை. அவர் எழுத்து நுண்ணுணர்வில்லாதது. வைரமுத்துவின் கவிதைகள் வானம்பாடி மரபை சேர்ந்தவையாக அடையாளம் காட்டப்படுகின்றன. எழுத்து, வானம்பாடி இவ்விரு பத்திரிக்கைகள் வழியே இருவேறு அழகியல்கள் தமிழ் கவிதையில் நிலைப்பெற்றன. எழுத்துவழி அழகியலே இன்று தமிழ் இலக்கியச் சூழலில் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாக உள்ளது. எவ்வித பாசாங்குமில்லாமல் வாழ்க்கையை, மனித குணாதிசயங்களை, உள அடுக்குகளை, கருத்தியல்களை – கூர்மையுடன் – விசாரிப்பதே இவ்வகை ஆக்கங்களின் குறிக்கோள். அதற்கு நுட்பமான எழுத்துமுறை தேவைப்படுகிறது. அலங்காரங்களில்லாத தனி வாசிப்புக்குரிய அந்தரங்கமான மொழிநடை தேவைப்படுகிறது. வாசக இடைவெளிகளுக்கு அதில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. எதையும் நேரடியாக பகிர்வதைக் காட்டிலும் குறிப்புணர்த்துவதையே முதன்மையாகக் கொண்ட அழகியல் அது. வானம்பாடி இதற்கு நேர்மாறானது. அது வெளிப்படையான கூற்றுகளையே தேர்கிறது. எனினும் அதற்கும் ஒரு வரலாற்று பொருத்தப்பாடு உண்டு. இடதுசாரி அரசியலின் பின்னனியில் அது உருப்பெற்றது. புரட்சிக்கான அறைக்கூவல் கொண்டிருந்தது. இன்னொருபுறம் பொது மனதின் அக ஏக்கத்துக்கான வடிகாலாக இருந்தது. இன்றைய சமூகச் சூழல் கடந்தகாலத்திலிருந்து வேறுபட்டது. எனவே அக்கவிதைகளுக்கான பொருத்தப்பாடும் ஏறத்தாழ இல்லாமல் ஆகிவிட்டது. வைரமுத்து வானம்பாடி மரபின் தொடர்ச்சியாக அடையாளம் காட்டப்பட்டாலும் அவ்வரிசையிலும் பொருட்படுத்தத்தக்க இடம் அவருக்கில்லை. பைரன் போன்ற புகழ்பெற்ற கற்பனாவாதிகளை நகலெடுக்கும்விதமாக இயற்கையை வருணிப்பது; கலையின் உன்னதத்தை சுட்டுவது. மறுமுனையில், சுயமுன்னேற்றத்துக்கான ஒழுக்க விதிகள். (அவருடைய அமைப்பின் பெயரே ‘வெற்றித் தமிழர் பேரவை’தான்). கொச்சையான காதல் வரிகள். அறிவியல் தகவல்களை வைத்து மேம்போக்காக சமூக விமர்சனம் செய்வது. மிகை நாடகீயம். இவையே அவர் எழுத்துக்களின் மையமாக இருந்துள்ளது. ஒருவகையில் அறிவியல் மயப்பட்ட நேருவிய சோஷியலிச யுகத்திற்கும் உலகமயமாதல் யுகத்திற்கும் நடுவே அவர் இருக்கிறார். இரண்டிலிருந்தும் சுய அடையாளத்தையும், லாபத்தையும் பெருக்கும்விதமாய் கருத்துக்களை எடுத்து, தேய்ந்த பழைய நடையில் எழுதுவதே அவர் பாணியாக உள்ளது. சங்க இலக்கியச் சான்றுகளும் வட்டார வழக்கும் ஊடாடுவது அவருடைய தனித்தன்மையாக கருதப்படுகிறது. இவை யாவுமே, சில ஆயிரம் பரிசுத் தொகையில் ஆரம்பிக்கப்பட்டு, இரண்டே வருடங்களில் நின்று போகிற விருதுகளுக்குக்கூட பெறுமதியானவை அல்ல. ஆனால் வைரமுத்து சாகித்திய அகாடெமி வாங்கிவிட்டார். இப்போது ஞானபீடத்தையும் வாங்கிவிட்டார். திரைப்பட பாடலாசிரியராக வைரமுத்துவை மதிப்பிடுவது இவ்விருதுக்கு வெளியே பேசுவதாகும். அத்துறையில் அவருடைய நிபுணத்துவம் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. ஆனால் ஒரு கவிஞராக, புனைவாசிரியராக அவருக்கு நவீன இலக்கியத்தில் எந்த இடமும் இல்லை. இந்நிலையில் அவர் தேசிய அளவில் இத்தகைய உயரிய விருதை பெறுவது நவீன தமிழ் இலக்கிய இயக்கத்துக்கு நேர்கிற அவமரியாதை; தமிழ் மொழிக்கு நேர்கிற அவமரியாதை. (தமிழ் மொழியும், நவீன இலக்கிய இயக்கமும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை என்பதே பொதுச் சமூகத்தின் புரிதல். எனவே அது இந்த விருதை வரவேற்கவே செய்யும்). வைரமுத்துவின் அரசியல் செல்வாக்கு ரகசியமானதன்று. பல்வேறு மட்டங்களில் அவருடைய தொடர்பு வலை நீள்கிறது. மாநிலத்தின் முதலமைச்சர் வரை அவருக்கு நட்பு வட்டம் இருக்கிறது. அதை அடிக்கடி பிரகடனம் செய்யவும் அவர் தவறுவதில்லை. கவிஞன் எனும் அடையாளத்தை -குரலும் உடையும் பாவனையுமாக- ஒரு கேடயம் போல அவர் பயன்படுத்திக் கொள்கிறார். ஓர் இலக்கியவாதிக்குரிய லட்சணங்கள் அல்ல இவை. வைரமுத்து ஞானபீடம் விருதுக்கு நீண்ட காலமாகவே முயற்சித்து வந்தார் என்பது செய்தி. பல ஆண்டுகளாக வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தமிழுக்கு ஞானபீடம் வேண்டும் என்று முழங்கியிருக்கிறார். தனக்கு வேண்டும் என்று நேரடியாக கேட்க முடியாது என்பதால் தமிழுக்கு வேண்டும் என கேட்பது பலரும் பின்பற்றும் ஒரு வழிமுறை. (அந்தளவு நாகரீகம் மிச்சம் இருப்பதும் மெச்சத்தக்கதே). வைரமுத்து மீது பொதுவெளியில் சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுகளினாலேயே இவ்விருது அவருக்கு காலத் தாமதமாக கிடைத்திருப்பதாக கருதப்படுகிறது. பரவலாக விவாதிக்கப்பட்ட அக்குற்றச்சாட்டுகள்கூட இவ்விருதுக்கு தடையாகவில்லை; அவருடைய அரசியல் சார்புகளும் தடையாகவில்லை. இவை எல்லாம் வைரமுத்துவின் செல்வாக்கையே காட்டுகின்றன. 2017லேயே எழுத்தாளர் ஜெயமோகன் தன் வலைத்தளத்தில் வைரமுத்து ஞானபீடத்தை வெல்லும் இடத்தில் இருப்பதாக எழுதினார். தன் எதிர்ப்பை தெரிவித்ததுடன் கரிசல் எழுத்தின் முன்னோடியான கி.ராஜநாராயணனுக்கு அவ்விருது வழங்கப்பட வேண்டும் என்றும் முன்மொழிந்தார். ஆனால் கி.ராஜநாராயணன் அவ்விருதை பெறாமலேயே 2021ல் மறைந்துவிட்டார். இன்று வைரமுத்து அதை வாங்கிவிட்டார். நவீன தமிழ் இலக்கிய இயக்கம், மிகச் சிறிய வாசக வட்டத்தினுள் புழங்குவது. அமைப்புகளுடனும் அதிகார மட்டங்களுடனும் நெருக்கமான தொடர்பில்லாதது. தனித்து செயல்படுவது. சமீப ஆண்டுகளில்தான் சாகித்திய அகாடெமி விருதுகளே தகுதியான எழுத்தாளர்களை அடைகின்றன. அந்த இடத்துக்கே இப்போதுதான் வந்து சேர்ந்திருக்கிறோம். எனினும் சிறிய குழுவாக இயங்கினாலும் அதனுடைய தீவிரம் எந்த உலக இலக்கிய சூழலுக்கும் குறைவானதல்ல. இன்று, வைரமுத்து இவ்விருதுக்கு தகுதியானவர் அல்ல என்று ஓர் ஆரம்ப நிலை வாசகனால் கூட சொல்ல முடிகிறதென்றால் அது இந்த இயக்கத்தின் மதிப்பையே காட்டுகிறது. அந்த மதிப்பை தொடர்ந்து தக்க வைப்பதும், ஒவ்வொரு காலக்கட்டத்திற்கும் கடத்துவதுமே நம்முடைய லட்சியங்கள். அதன் நிமித்தமாகவே இவ்விருதுக்கு அகழ் தன் கடும் கண்டனங்களை பதிவு செய்கிறது. வைரமுத்துவுக்கு ஞானபீடம் அறிவித்திருப்பதன் வழியே பாரதிய ஞானபீட அமைப்பு தனக்கும் தமிழ் மொழிக்கும் களங்கம் ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் இத்தகைய உயரிய விருதுகள் தொடர்ந்து ரகசியமான முறைகளிலேயே செயல்படுவதும் விமர்சனத்திற்குரியது. தேர்வுக் குழு, பரிந்துரை விவரம் இவை எல்லாம் பொதுவெளியில் அறிவிக்கப்பட வேண்டும். அப்படி இல்லாமல், ரகசியமாக விற்கப்படுவதினால்தானே இவ்விருதுகளை வாங்கவும் முடிகிறது. சுந்தர ராமசாமி இந்த நேரத்தில் முன்னோடி எழுத்தாளரான சுந்தர ராமசாமியினை நினைவுக் கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது. தன் வாழ்நாள் முழுக்க சாகித்திய அகாடெமியின் தேர்வுகளுக்கு எதிராக அவர் பேசியும் எழுதியும் வந்தார். அவை ஒரு அடிப்படை வரையறையை நமக்கு அளித்தன. பலரும் பின்பற்றுவதற்கான மாதிரியாக அது மாறியது. அகிலன் ஞானபீடம் வாங்கியபோது அதை எதிர்த்து அவர் எழுதிய கட்டுரை – “போலி முகங்கள் சந்தர்ப்பம் : ஞானபீடப் பரிசு”- புகழ்பெற்றது. பல சூழ்நிலைகளிலும் அது தொடர்ந்து மேற்கோள் காட்டப்படுகிறது. அகிலன் விருது பெற்றதை பத்திரிக்கைகள் கொண்டாடுவது பற்றி அவர் எழுதிய வரி -“ஜிப்பா தேசிய உடையாவதை ஜேப்படித் திருடர்கள் வரவேற்பது மாதிரி இது”- பழமொழி போலாகிவிட்டது. “எந்த இலக்கியப் பரிசும் ஒரு சமூகச் செயல்” என வகுத்து விருதுகளில் நிகழும் மோசடிகளை எதிர்கொள்வதற்கான மொழியை நமக்கு அது தந்தது. அதை நவீன தமிழ் இலக்கியச் சூழலின் அறிக்கை எனலாம். ஞானபீடம் பரிசுப் பெற்ற அகிலனின் “சித்திரப் பாவை” நூலைவிட சிறந்த நாவல்கள் ஐம்பதேனும் தமிழில் உண்டு என்று 1976ல் சுந்தர ராமசாமி எழுதுகிறார். இப்போது மேலும் ஐம்பது வருடங்கள் கடந்துவிட்டன. இன்னும் கூடுதலாக ஐம்பது நாவல்களை நம்மால் பட்டியல் போட முடியும் என்பது பெருமையளிக்கிறது. போலியான விருதும் புகழும் நீண்ட காலம் நிலைத்திருப்பவை அல்ல. ஆனால் தீவிர இலக்கிய நூல்கள் அழியாது நிலைக்கும். “சித்திரப் பாவை” பற்றி இப்போது யாரும் பேசுவது போல தெரியவில்லை. ஆனால் சுந்தர ராமசாமி உத்தேசித்த ஐம்பது நாவல்களும் தொடர்ந்து வாசிக்கப்படுகின்றன. அவை உரையாடலில் உள்ளன. பெயர் சொல்லாமலேயே அவை என்னென்ன நூல்கள் என்பதை நம் எல்லோராலும் கிட்டத்தட்ட யூகித்துவிட முடியும். ஞானபீடம் விருதுக்கு எதிராக நியாயமான எதிர்ப்புகளும் கண்டனங்களும் பரவும் வேளையில் இதை எண்ணுவதும் அவசியமானதே. அகழ் ஆசிரியர் குழு https://akazhonline.com/?p=11611
-
ஈரானுக்கு எதிரான போர் - அமெரிக்காவுக்கு ஏற்பட்ட செலவு
ஈரானும் கத்தாரும் பங்கு பிரித்துள்ள உலகின் மிகபெரிய எரிவாயு வயலை இஸ்ரேல் தாக்க. பதிலுக்கு அரபு நாடுகளின் எண்ணை, எரிவாயு கட்டமைப்பு மீது தாக்க தொடங்கி உள்ளது ஈரான். வசி - ஒரு விடயம். அவுஸ் பற்றி ஆராய்ந்ததில். அவுஸ் எண்ணை அதிகம் வாங்குவது கொரியாவிடம். கொரிய ஆலைகள் அடர்த்தி கூடிய ஓமான்/டுபாய் எண்ணையை சுத்தீகரிக்க தக்கன. Brent உலக பொது எண்ணை, WTC அமெரிக்க எண்ணை. ஜனவரி மாதம் ஓமான்/WTC விலை வேறு பாடு 6 டொலர். இப்போ 60 டொலர். எல்லா மசகு எண்ணையும் ஒரே வகை அல்ல. வளை குடா வகை எண்ணையில் தங்கி உள்ள நாடுகள் முதலில் பாதிக்கபடும். பின்னர் அவை ஏனைய நாட்டு வகை எண்ணைக்கு மாறும் போது - அவற்றின் விலையும் கூடும். இதில் ஒரு delayed effect உள்ளது. தவிரவும் கொரியா போன்ற நாடுகளில் உள்ள ஆலைகளில் ஏனைய எண்ணைகளை சுத்தீகரிக்க முடியாது. முன்பே சொன்னது போல் காவும் தூரம் அதிகம். எண்ணையின் சந்தை விலை ஒன்றே ஆனாலும் ஏன இது ஆசியா, ஆவுஸை அதிகம் பாதிக்கிறது என்பதை இது விளக்குகிறது. எண்ணை 130 ஐ தொடும் என நினைக்கிறேன். கொஞ்சமாக வாங்கியுள்ளேன். உலகின் 20% எண்ணை வழங்கல் பாதையை மூடினாலும் யுத்தம் நிண்ட மறு நொடியே அதை திறக்கலாம் 3 மாததில் வில வழமைக்கு திரும்பும். எண்ணை கட்டுமானங்களை உடைத்தால் 2 + வருடம் எடுக்கும். விலை கூடும் வேகத்தில் குறையாது. விலை வீக்கம், ஒட்டு மொத்த உலகுக்கே recession, பணவீக்கம், உணவு தட்டுப்பாடு நடக்க நேற்றை விட்ச் இன்று வாய்ப்பு கூடியுள்ளது.
- Today
-
ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஒத்துழைக்குமாறு ட்ரம்ப் கோரிக்கை
😂 அமெரிக்கா, ஈரான் என்பதை இடம் மாற்றுக😂
-
ஈரான் நாட்டுப்புற சமையல்
குரைக்கிற சிங்கம் கடிக்காது… கடிக்கிற சிங்கம் குரைக்காது😂
-
சிறு கதை - 204 / ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து ஒட்டாவா விமான நிலையம் வரை [மூன்று பகுதிகள்]
சிறு கதை - 204 / ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து ஒட்டாவா விமான நிலையம் வரை / பகுதி 1 ஹீத்ரோ விமான நிலையத்தின் பெரிய கண்ணாடி சுவர்களுக்கு வெளியே, மழை மெதுவாக வழிந்துகொண்டிருந்தது. உலகத்தின் பல மொழிகள் கலந்து ஒலித்த அந்த பரபரப்பில், சிலர் பிரிவை அணைத்துக் கொண்டிருந்தார்கள்; சிலர் புதிய வாழ்க்கையை நோக்கி நடந்துகொண்டிருந்தார்கள். அந்த கூட்டத்தில் அவளும் இருந்தாள். அவள் கையில் ஒரு சிறிய பையைத் தவிர அதிகச் சுமை இல்லை. ஆனால் அவள் கண்களில் இருந்த சுமை பல ஆண்டுகளின் நினைவுகளால் நிரம்பியிருந்தது. விமானத்தில் ஏறி, ஜன்னல் பக்க இருக்கையில் அவள் அமர்ந்தபோது, மேகங்களுக்கு மேலே போவது மட்டும் அல்ல — கடந்த நாட்களிலிருந்து சிறிது தூரம் செல்லும் முயற்சியும் அதுவாக இருந்தது. ஹீத்ரோவிலிருந்து ஒட்டாவாவுக்குப் புறப்படும் விமானம் நீண்ட பயணத்துக்குத் தயாராக அப்பொழுது இருந்தது. அந்தப் பயணம் பிரயாணிகளை தாங்கள் தாங்கள் வந்த உலகத்தை, சிறிது நேரம் மறக்கச் செய்யும் அளவுக்கு நீளமானது. சிறிது நரைத்த தலையோடும், மெல்லிய அசைவுகளோடும், வாழ்க்கையை அதிகம் பேசாமல் அதிகம் தாங்கி வந்த நடுத்தர வயதைச் சற்றுத் தாண்டிய ஒருவர் அவளருகே அமர்ந்திருந்தார். முதலில் அங்கு மௌனம் மட்டுமே நிலவியது. இருவரும் தங்கள் தங்கள் இருக்கையை சரிசெய்து, இருக்கை வாரை [பெல்ட்டை] ஒழுங்காக ஓரளவு இறுக்கமாக மாட்டி, பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் கவனமாக இருந்தனர். அட்லாண்டிக் கடலின் மேலே, காற்று அடுக்குகள் (Air Layers) வெவ்வேறு வேகத்தில் நகரும்போது அல்லது சூடான காற்று மேலே எழும்பும்போது, வழமையாக ஏற்படும் சிறிய குலுக்கல் விமானத்தில் வந்தது. அந்த குலுக்கள் மௌனத்தை சிதறியது. இவ்வளவு நேரமும், ஆழந்த சிந்தனையில் இருந்த அவள், சொல்ல முடியாத பயணங்களை கண்கள் சுமந்தபடியே அமைதியாக அவரை நோக்கித் திரும்பியது. வலிமை விளம்பரம் செய்ய வேண்டியதில்லை என்பதையும், புயலுக்குப் பிறகும் அழகு உயிரோடு இருப்பதையும், அவள் கண்களை நேருக்கு நேர் பார்த்த பொழுது அவர் உணர்ந்தார். சில ஆன்மாக்கள் ஒளியைத் தேடுவதில்லை; அவை அமைதியாக ஒளியாகவே மாறுகின்றன. அப்படித்தான் அவள் இருந்தாள். முதலில் அவள் சிரித்தாள். அவரும் ஒரு மரியாதைக்குச் சிரித்தார். ஆனால் அந்தச் சிரிப்பில் ஒரு அந்நியத் தனிமை கரைந்தது. “நீங்கள் அடிக்கடி பயணம் செய்வீர்களா?” என்று அவள் முதலில் கேட்டாள். “இல்லை,” என்றார் அவர். “ஆனால் வாழ்க்கை பல இடங்களுக்கு அழைத்துச் சென்றது.” அந்த பதில் ஒரு வரலாற்றின் கதவுபோல் இருந்தது. அவள் சிறிது ஆர்வத்துடன் கேட்டாள்: “வேலைக்காகவா?” அவர் மெதுவாக சிரித்தார். “சில பயணங்கள் வேலைக்காக. சில பயணங்கள் உயிர் தப்பிக்க.” அவள் எதுவும் பேசவில்லை. அந்த ஒரு வாக்கியமே போதுமான விளக்கமாக இருந்தது. சிறிது நேரம் அமைதி நிலவியது. பின்னர் அவள் கேட்டாள்: “நீங்கள் தமிழரா?” “ஆம்,” என்றார் அவர். “வட இலங்கையில் பிறந்தவன்.” அவள் உடனே அவரை கவனமாகப் பார்த்தாள். “நானும் தமிழ் தான்… ஆனால் லண்டனில்தான் வளர்ந்தேன்,” என்றாள். அவர் தலையசைத்தார். “அதனால் தான் உங்க தமிழ் சற்றுக் கலந்த ஒலியில் இருக்கிறது,” என்றார் மென்மையாக. அவள் சிரித்தாள். “நீங்கள் கவனித்துட்டீங்களே!” அவர் சாளரத்தை நோக்கிப் பார்த்தார். “ஒரு தலைமுறை தாய்மொழியை உயிருடன் காப்பாற்ற முயற்சிக்கிறது. அடுத்த தலைமுறை அதை நினைவாக வைத்திருக்க முயற்சிக்கிறது. அது இயல்பான மாற்றம்.” அவள் அந்த வார்த்தைகளை அமைதியாகக் கேட்டாள். சில நொடிகள் கழித்து அவள் கேட்டாள்: “நீங்கள் காதலை நம்புகிறீர்களா?” அவர் உடனே பதில் சொல்லவில்லை. விமானத்தின் சீரான ஒலி நடுவே சிறிது நேரம் யோசித்து, பின்னர் சொன்னார்: “காதலை நம்பாமல் மனிதன் வாழ முடியாது. ஆனால் சரியான மனிதரைத் தேர்ந்தெடுப்பது — அதுதான் பெரும்பாலானவர்களுக்கு கடினம்.” அந்த பதில் அவளின் முகத்தில் ஒரு மென்மையான சோகத்தை உருவாக்கியது. “நான் ஒருவரை நேசித்தேன்,” என்றாள் அவள். “ஆனால் வாழ்க்கை வேறு வழி தேர்ந்தெடுத்தது.” அவர் அவளை நோக்கி பார்த்தார். “சில நேரங்களில் வாழ்க்கை தேர்ந்தெடுக்கிறது என்று நாம் நினைப்பது — மற்றவர்கள் எடுக்கிற முடிவுகள்தான்,” என்றார் அமைதியாக. அவள் கண்களில் சிறிது கண்ணீர் தோன்றியது; ஆனால் அவள் சிரித்தாள். “நீங்கள் கவிஞராக இருந்திருக்கலாம்,” என்றாள். அவர் மெதுவாகச் சொன்னார்: “இல்லை. வாழ்க்கை தான் கவிதை. நாம்தான் அதை புரிந்துகொள்ள தாமதமாகிறோம்.” விமானம் மேகங்களுக்கு மேலே பறந்துகொண்டிருந்தது. கீழே உலகம் மறைந்தது. மேல் வானம் மட்டும் இருந்தது. அந்த இருவருக்கும் இடையில் இன்னும் பல கேள்விகள் இருந்தன. இன்னும் சொல்லப்படாத பல கதைகள் இருந்தன. ஆனால் அந்த நேரத்தில், ஒரே உண்மை மட்டும் அமைதியாக உருவாகிக் கொண்டிருந்தது — அந்நியர்களாகத் தொடங்கிய இரண்டு மனிதர்கள், ஒரே பயணத்தின் நினைவாக மாறிக் கொண்டிருந்தனர் விமானத்தின் விளக்குகள் மங்கியபோது, பலர் தூங்கத் தொடங்கினர். ஆனால் அவர்களில் இருவருக்கும் தூக்கம் வரவில்லை. அவள் ஜன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள். கீழே எதுவும் இல்லை — மேகங்கள் மட்டும். அவர் முன் இருக்கை திரையில் ஓடிக்கொண்டிருந்த வரைபடத்தை பார்த்துக் கொண்டிருந்தார். ஹீத்ரோ — அட்லாண்டிக் — ஒட்டாவா [Heathrow — Atlantic — Ottawa.] ஒரு நேர்கோடு போல தெரிந்த அந்த பாதை, வாழ்க்கையில் ஒருபோதும் நேராக இருக்காது என்று அவர் நினைத்தார். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி 2 தொடரும் துளி/DROP: 2097 [சிறு கதை - 204 / ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து ஒட்டாவா விமான நிலையம் வரை / பகுதி 1 https://www.facebook.com/groups/978753388866632/posts/34347802758201599/? சிறு கதை - 204 / ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து ஒட்டாவா விமான நிலையம் வரை / பகுதி 2 விமானம் பறந்து கொஞ்ச நேரம் கழித்து அவள் மெதுவாகக் கேட்டாள்: “நீங்கள் ஒட்டாவாவுக்கு வேலைக்காக போகிறீர்களா?” அவர் சிரித்தார். “வேலை முடிந்து விட்டது. இப்போது வாழ்க்கையின் மீதமுள்ள நாட்களை அமைதியாக கழிக்கப் போகிறேன். என் மகள் அங்கே இருக்கிறாள்.” “நீங்கள் லண்டனில்தான் இருந்தீர்களா?” “இல்லை… பல இடங்களில். ஆரம்பம் — யாழ்ப்பாணம்.” அந்தச் சொல் வந்ததும், அவரது குரலில் தெரியாத ஒரு பாரம் இருந்தது. “அங்கு அன்று போர் காலம்…” என்று அவள் மெதுவாகச் சொன்னாள். அவர் தலையசைத்தார். “ஒரு தலைமுறை வாழ்க்கையை கட்டியெழுப்ப கற்றுக்கொண்டது. இன்னொரு தலைமுறை உயிர் தப்பிக்க கற்றுக்கொண்டது. நான் இரண்டையும் கற்றுக்கொண்ட தலைமுறையிலிருந்து வந்தவன்.” அவள் அமைதியாகச் சொன்னாள்: “நாங்கள் அப்பொழுது சிறு வயதில்,” அவர் தொடர்ந்தார், “காதல் என்றால் குடும்பம் பார்த்து திருமணம். பொறுப்பு முதலில்; உணர்வு பின்னால். இப்போது பல இடங்களில் — உணர்வு முதலில்; பொறுப்பு வருமா என்று காத்திருக்கும் நிலை.” அவள் மெதுவாகச் சிரித்தாள். “அது உண்மை.” “அதில் எது சரி?” என்று அவர் கேட்டார். அவள் சில நொடிகள் யோசித்தாள். “எனக்குத் தெரியவில்லை. சில நேரங்களில் பழைய உலகம் மனிதர்களை கட்டுப்படுத்தியது. இப்போது சுதந்திரம் மனிதர்களை குழப்புகிறது.” அவர் அவளைப் பார்த்தார். “அது மிகவும் சரியான வரி.” சிறிது நேரம் அமைதி நிலவியது. விமானப் பணிப்பெண் தண்ணீர் கொண்டு வந்தார். இருவரும் எடுத்துக் கொண்டனர். அவள் திடீரென்று கேட்டாள்: “நீங்கள் ஒருபோதும் காதலித்து தோற்றிருக்கிறீர்களா?” அவர் உடனே பதில் சொல்லவில்லை. பின்னர் மெதுவாகச் சொன்னார்: “ஒரு மனிதன் காதலில் வெல்ல முடியாது. அவர் நேசித்தால் — ஏற்கனவே தோற்றுவிட்டார். ஏனெனில் அந்த நெஞ்சம் இனி முழுவதும் அவருடையது அல்ல.” அவள் அந்த வார்த்தைகளை நீண்ட நேரம் நினைத்தாள். “அப்படின்னா … நீங்கள் தோற்றவரா?” என்று மெதுவாகக் கேட்டாள். அவர் சிரித்தார். “ஆம். பல ஆண்டுகளுக்கு முன். ஆனால் அதனால் தான் நான் மனிதனாக இருந்தேன்.” அவள் முகத்தில் ஒரு மென்மையான புரிதல் தோன்றியது. “நானும்…” என்று சொல்லி நிறுத்திக் கொண்டாள். “சொல்லலாம்,” என்றார் அவர் மெதுவாக. அவள் ஆழமாக மூச்சை இழுத்து தனது ஆழ்ந்த சிந்தனையில் இருந்து விடுபட்டு சட்டெனக் கேட்டாள்: "காதலுக்கு பாலினம் உண்டுன்னு நீங்க நம்புறீங்களா?" என்று அவர் உடனே பதில் சொல்லவில்லை. சற்று யோசித்து மெதுவாகச் பதில் சொன்னார். "பண்டைய தமிழ் சங்கக் கவிதைகளில், "காதலின் பாலினம் அரிதாகவே விவாதிக்கப்பட்டது. உடல்கள் மீது எந்த வெறியும் இல்லை. ஆன்மா மட்டுமே அங்கே முக்கியமாக இருந்தது." அவள் அவரை ஆச்சரியத்துடன் பார்த்தாள் - பதிலில் அல்ல, ஆனால் அது எவ்வளவு மென்மையாக அவளுக்கு வழங்கப்பட்டது என்பதைப் பார்த்து. அவர் மேலும் ஒரு தொடர்ச்சியாக, சங்க இலக்கியத்தின் பின் தோன்றிய இந்து புராணமான, கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம் பாகம் 5, 2. அசுர காண்டம், 32. மகா சாத்தாப் படலம், 29 ஆவது பாடலில், திருமாலை பார்த்து, சிவபெருமான், உன்னைக் புணரும் வேட்கை எமக்கும் உண்டு; நீ கொண்ட வேடம் மிக இனிது என்கிறார். அதற்கு பாடல் 33 இல், திருமால், சிவபெருமானை நோக்கி, "அன்பில் ஆடவர் ஆடவ ரோடுசேர்ந் தின்ப மெய்தி யிருந்தனர் இல்லையால் முன்பு கேட்டது மன்று முதல்வநீ வன்பொ டென்னைப் புணர்வது மாட்சியோ" ஆடவர் ஆடவரோடு கூடும் வழக்கம் இல்லை. ஆதலால் எம்பெருமானே! நீர் அடியேனை புணர்தல் முறையோ? என்று கேட்பதை அங்கு காண்கிறோம் என்றார். அன்புக்கு, காதலுக்கு பாலினம் இல்லை என்றாலும், கூடும் வழக்கத்தில் அதைக் காண்கிறோம் என்றார். அவள் அவரை கொஞ்ச நேரம் இமை வெட்டாமல் பார்த்தால், இங்கு 'அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்!' என்ற கம்பரின் சிறப்பு வாய்ந்த வரி இல்லை. 'கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல.' என்ற திருவள்ளுவர் கூற்றும் இல்லை. அவள் வெறுமனே அவர் மேல் ஒரு நம்பிக்கை வைத்தாள். தன் கவலையை, ஏக்கத்தை பகிர்ந்து கொள்ள. அந்த நம்பிக்கையுடன், அவள் தன் கதையைத், அவருக்குச் சொல்ல, பகிரத் தொடங்கினாள். அவள் தொடர்ந்தாள்: “நான் ஒருவரை நேசித்தேன்,” என்று அவள் சொன்னாள். “ஆழமாக. அமைதியாக. அனுமதி இல்லாமல்.” அவர் இடையில் குறுக்கீடு செய்யவில்லை. மிகுதிக்கு காத்திருந்தார். “உலகம் அது ஒரு ஆண் என்று கருதுகிறது,” என்று அவள் தொடர்ந்தாள். “வரலாறு பெரும்பாலும் அதையே செய்கிறது.” அவள் இடைநிறுத்தி, அவரின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள். அவரின் முகத்தில் எந்த சலனமும் இல்லை. ஆர்வமாக கேட்டுக் கொண்டு இருந்தார். அவள் தொடர்ந்தாள். "சில புராணக் கதைகளில், தெய்வங்கள் ஒப்புதல் இல்லாமல் காதலர்களைத் தேர்ந்தெடுத்தன. அனுமதிக்கு முன்பே ஆசை இருந்தது. அது போகட்டும். அவை தெய்வங்கள். மனித குலத்து மீராபாய் (பொ.ஊ. 1498 – பொ.ஊ. 1547) கிருஷ்ணனை நேசித்தாள் - சமூகத்தின் அர்த்தத்தில் ஒரு மனைவியாக அல்ல, மாறாக வேறொரு ஆன்மாவில் கரையும் ஆன்மாவாக. உலகம் அதை பைத்தியக்காரத்தனம் என்று அழைத்தது. அது ஒரு வழமையான திருமணம் அல்ல. அது பெரும்பாலோரால் ஏற்றுக்கொள்ளப்படவும் இல்லை. ஆனாலும் அது நீடித்தது." அவர் இடைமறித்தார். "புத்தர் அன்பைத் தடை செய்யவில்லை. மனதை அடிமைப்படுத்தும் பற்றுதலை மட்டுமே அவர் எச்சரித்தார் [He warned only against attachment—the kind that enslaves the mind.]. உலகம் பின்னர் இரக்கத்தை கோட்பாடாகவும், கோட்பாட்டை கட்டுப் பாட்டாகவும் மாற்றியது. கிரேக்க வரலாற்றில், இரண்டு வீரர்கள் ஒருவரை யொருவர் நேசித்தார்கள். அவர்கள் நண்பர்களா? அவர்கள் காதலர்களா? வரலாறு அதை முடிவு செய்ய மறுத்தது மட்டும் அல்ல, அவர்களின் பிணைப்பு அவமானத்தின் அடிக்குறிப்பாக இல்லாமல், போர்ப் பாடலாக மாறியது." என்றார். அவள் கவனமாக அவர் சொல்வதைக் கேட்டாள். அப்பொழுது அவர்களுக்கு சாப்பாடும் பானமும் விமானப் பணிப்பெண்கள் கொண்டு வந்தார்கள். அவருக்கு, சிறப்பு உணவாக சைவ உணவும் சீனி இல்லாத காபியும் கொடுத்தார்கள். அவள் அசைவ உணவுடன் சிவப்பு ஒயின் [red wine] எடுத்தாள். சாப்பிட்டு முடியும் மட்டும் இருவரும் கதைக்கவில்லை. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி 3 தொடரும் துளி/DROP: 2099 [சிறு கதை - 204 / ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து ஒட்டாவா விமான நிலையம் வரை / பகுதி 2 https://www.facebook.com/groups/978753388866632/posts/34364639906517884/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 135 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 135 / பின் இணைப்பு - "இலங்கை நாளிதழ் ஆசிரியர்களால் புத்தர் துரோகம் செய்யப்பட்டாரா?" புத்தர் என்பது அனைத்துலக மக்களாலும் மரியாதை செய்யப்படும், கருணையும், அன்பும் நிறைந்த சிறந்த முனிவர் ஆகும். 29 வயதில் இளம் மனைவியையும், புதிதாக பிறந்த மகனையும் விட்டுவிட்டு அரச வாழவைத் துறந்தவர். வாழ்க்கையின் துன்பங்களைப் பார்த்து அதற்கான விடியலைத் தேடி புறப்பட்டவர். இவரைப் பற்றிய இந்த உயர்ந்த பார்வைக்கு முற்றிலும் முரணாக, இலங்கையின் புராண நூல்களான தீபவம்சம் (Dipavamsa) மகாவம்சம் (Mahavamsa) மற்றும் இரசவலிய புத்தரை இதற்கு மாறாக வர்ணிக்கின்றன. இந்த நூல்கள், புத்தர் வாழ்ந்த காலத்தில் இலங்கையில் உருவமற்ற, மனிதரல்லாத இயக்கர்கள் (Yaksha) மனித மாமிசத்தை உண்ணும் கொடூரமான, கோபக் குணமும், வடிவமற்ற பிசாசுகள் [Pisacas], அரக்கர்கள் அல்லது அசுரர்கள் [Rakkhasas] போன்ற இயற்கைக்கு அப்பாற்பட்ட மனிதரல்லாத உருவங்கள் அல்லது உயிரினங்கள் வாழ்ந்ததாகக் கூறுகின்றன. ஆனால் இவர்கள் எல்லோரும் இந்நாட்டின் மூலப் பழங் குடியினர் [original inhabitants of Lanka] என்பதே உண்மை. இவர்கள் மீது இப்படியான குற்றச்சாட்டுகளை சுமத்துவதன் மூலம், அவர்களை "மனிதர்கள் அல்ல" எனக் கூறி பாரம்பரிய நிலங்களை கைப்பற்றும் முயற்சியாக இது இருந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. தீபவம்சம் 1.51 : புத்தர் இலங்கைக்கு மூன்று முறை பறந்து வந்தார் என்றும், ஒருமுறை அங்கே கூடியிருந்த இயக்கர்களின் கூட்டத்தினர் சம்புத்தர் அங்கே நிற்பதைக் கண்டார்கள் என்றும், ஆனால் அவர் புத்தர் என்று அவர்கள் நினைக்கவில்லை; அவரை வேறொரு இயக்கர் என்று நினைத்தார்கள் என்றும் கூறுகிறது. அதனால்த்தான் "இவர் நம்மவர்" என்று நினைத்தனர். இது இயக்கர்களும் புத்தரும் மனித வடிவில் இருந்தனர் என்பதைக் காட்டுகிறது. ஆனால், பிறகு புத்தர் அவர்களை பயமுறுத்த பலத்த மழை, குளிர் காற்று, கடுமையான வெப்பம் மற்றும் இருள் போன்றவற்றை ஏற்படுத்தினார். அன்பினதும் கருணையினதும் மொத்த வடிவான புத்தர், மேலே கூறியவாறு, இலங்கை நாட்டின் சொந்த மக்களை, பழங்க்குடியினரை அடக்குமுறையில் பயமுறுத்தி விரட்டும் செயல்கள் செய்தார் என்பது அவரின் இயல்புக்கு முற்றிலும் முரண்பாடாக இருக்கிறது? தீபவம்சம் 1.78: கோடையில் தாகம் கொண்டவர்கள் நதியை நோக்கி ஓடுவது போல, இயக்கர்கள் 'கிரிதீபத்திற்கு' [Giridipa] ஓடினார்கள்; அவர்கள் அனைவரும் ஒருபோதும் திரும்பி வராமல் அங்கே அதில் நுழைந்தனர்; முனிவர் (பின்னர்) தீவை அதன் முந்தைய இடத்திற்கு மீட்டெடுத்தார் என்கிறது. இது புத்தரின் அகிம்சை (nonviolence) மற்றும் கருணை என்ற தத்துவங்களுக்கு மீண்டும் இது எதிரானது ஆகும். இப்படியான கதைகள், புத்தரை அதிமானுட ஆற்றல்கள் கொண்டவர் போலவும், பிறரை வன்முறையால் விரட்டும் பயங்கரவாதி போலவும் காட்டுகின்றன. இது புத்தரின் உண்மையான உருவத்துக்கு கேடாக உள்ளது. இதனால் இலங்கை வரலாற்று புராணங்களை எழுதிய பௌத்த பிக்குகள், புத்தருக்கு துரோகம் செய்துள்ளனர். அவரின் புனித உருவத்தை அழித்துள்ளனர் என்பதே உண்மை. உதாரணமாக அங்கு வாழும் மக்கள் தமிழ் பேசும் மக்களாகவும், புத்த சமயத்தை சேராதவர்களாகவும் இருக்கும் பொழுதும், அவர்கள் வழிபாடும் சைவ ஆலயங்களுக்கு இடையூறாக அல்லது அவர்களுக்கு சொந்தமான காணியிலேயே பலவந்தமாக புத்தர் சிலை வைப்பதும் பின் விகாரை காட்டுவதும் பின் சிங்கள குடியேற்றத்தால் ஆக்கிரமிப்பு செய்வதும் 2009 க்குப் பின் அதிகரித்துக்கொண்டு போவது ஒரு சாதாரண விடயமாகி விட்டது. எந்த அரசாங்கம் வந்தாலும் அது நின்றபாடில்லை. இன்றும் மே 25, 2025, இலும் இப்படியான வன்முறைச் செயல்கள் தொடர்வதைக் காணலாம். உதாரணமாக, திடீரென அம்பாறை மாவட்டம் உகந்தைமலை முருகன் ஆலய சூழலில் முளைத்த புத்தர் சிலையைக் எடுத்துக் காட்டலாம். இது என்ன கொடுமை என்றால், தாங்கள் புத்தரை போற்றுகிறோம், பின்பற்றுகிறோம் என்று வாய்க்கு வாய் சொல்லும் அவர்கள் செய்யும் செயல்கள் தான் இவை! இது தான் சிங்கள அரசியல்வாதிகளும், பிக்குகளும் பல நாட்களாக முயற்சி செய்து கொண்டிருப்பது — வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வாழும் தமிழர்களை அவர்களது பூர்வீக நிலங்களிலிருந்து விரட்டுவதுதான். அவர்கள் இதில் பெரிதளவில் வெற்றி பெற்று விட்டார்கள். தமிழர்களில் பாதிக்கு மேற்பட்டோர் நாட்டின் பிற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து விட்டார்கள், அல்லது இந்தியாவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் அகதிகளாகச் சென்று விட்டார்கள். எல்லைப் பகுதிகளில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு, அவர்களுக்குப் பதிலாக ஆயுதம் தரப்பட்ட சிங்களர்கள் குடியமர்த்தப்பட்டனர். கல் ஓயா, மகாவலி திட்டம் போன்ற பல பெரும் நீர்ப்பாசனத் திட்டங்கள் தமிழர் நிலங்களை அபகரிக்க பயன்படுத்தப் பட்டன. இவை அனைத்துக்கும் உலகத் தொண்டு நிறுவனங்கள் நிதி உதவி வழங்கியுள்ளன. ஆனால் அவர்கள் இந்த அநியாயங்களைக் கண்டும் காணாதது போல நடந்து கொண்டனர். இதே நேரத்தில், தமிழர்கள் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்தனர். தேர்தல் எல்லைகள் மாற்றப்பட்டு, அரச ஆதரவுடன் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டதால், தமிழர் வாக்குரிமையும் குறைக்கப் பட்டது. Part: 135 / APPENDIX – "Is BUDDHA BETRAYED by Lanka chronicles authors?" Buddha is understood to be a very kind person who renounced the royal comforts, his just born son and his young wife when he was 29 years of age. He was saddened by the misery of this worldly life and wanted to find a way out of this misery. Dipavamsa describes Buddha as; the chief among Sages, the bringer of Happiness, the compassionate, and merciful grate Sage. Buddha was born more than 2400 years ago, and the Ceylon chronicles wanted us to believe that there were non- humans; blood thirsty Yakkhas, savage Pisacas and Rakkhasas during his life time in Lanka. The monkish authors branded the original inhabitants of Lanka as above to misappropriate their traditional land. The Buddha wanted to clear Lanka of the above sub-humans to make way for his chosen followers yet to come to Lanka from Vanga, and he came, flying to Lanka thrice. Buddha is a Human, and couldn’t have flown, and his flying is a plagiarism from the Epic Ramayana. When he came he was hovering over the heads of Yakkhas in mid air! Yakkahs mistook Buddha as one of theirs, the Dipavamsa, 1- 51. Both, the Buddha and the Yakkhas, must have been humans to look similar. The Buddha then terrorized Yakkhas by sending heavy rain, cold wind, darkness and extreme heat etc. The first terrorist of the world, one may say! In the end, the merciful Buddha, made the Yakkhas run away to another island, Giridipa; never to return, Dipavamsa 1-78. What kind of merciful and compassionate Buddha was he to indulge in these cruelties? The monkish chroniclers betrayed the Buddha by ascribing these sorts of uncivilized and criminal acts to the Buddha, shame on them. This is what the Sinhala politicians and the monks want to do with the Tamils, to drive them away from their ancestral homeland. They succeed in this about more than fifty percentage by driving the Tamils to India, and to the western world. They also brutally massacred Tamils in many pockets of border area, and replaced them with armed Sinhalese militia. Vast tracks of Tamils home lands were forcefully appropriated under various irrigation schemes, with the help of the major World Donor agencies. These Donor agencies are also the silent partners in the murder, mayhem and robbing of Tamils. Tamils’ lost their representations in the parliament while Sinhalese were increasing their representation in the Parliament. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 136 தொடரும் / Will follow எனது அறிவார்ந்த தேடல்: 1514 துளி/DROP: 2098 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 135] [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 135 / பின் இணைப்பு - "இலங்கை நாளிதழ் ஆசிரியர்களால் புத்தர் துரோகம் செய்யப்பட்டாரா?" புத்தர் என்பது அனைத்துலக மக்களாலும் மரியாதை செய்யப்படும், கருணையும், அன்பும் நிறைந்த சிறந்த முனிவர் ஆகும். 29 வயதில் இளம் மனைவியையும், புதிதாக பிறந்த மகனையும் விட்டுவிட்டு அரச வாழவைத் துறந்தவர். வாழ்க்கையின் துன்பங்களைப் பார்த்து அதற்கான விடியலைத் தேடி புறப்பட்டவர். இவரைப் பற்றிய இந்த உயர்ந்த பார்வைக்கு முற்றிலும் முரணாக, இலங்கையின் புராண நூல்களான தீபவம்சம் (Dipavamsa) மகாவம்சம் (Mahavamsa) மற்றும் இரசவலிய புத்தரை இதற்கு மாறாக வர்ணிக்கின்றன. இந்த நூல்கள், புத்தர் வாழ்ந்த காலத்தில் இலங்கையில் உருவமற்ற, மனிதரல்லாத இயக்கர்கள் (Yaksha) மனித மாமிசத்தை உண்ணும் கொடூரமான, கோபக் குணமும், வடிவமற்ற பிசாசுகள் [Pisacas], அரக்கர்கள் அல்லது அசுரர்கள் [Rakkhasas] போன்ற இயற்கைக்கு அப்பாற்பட்ட மனிதரல்லாத உருவங்கள் அல்லது உயிரினங்கள் வாழ்ந்ததாகக் கூறுகின்றன. ஆனால் இவர்கள் எல்லோரும் இந்நாட்டின் மூலப் பழங் குடியினர் [original inhabitants of Lanka] என்பதே உண்மை. இவர்கள் மீது இப்படியான குற்றச்சாட்டுகளை சுமத்துவதன் மூலம், அவர்களை "மனிதர்கள் அல்ல" எனக் கூறி பாரம்பரிய நிலங்களை கைப்பற்றும் முயற்சியாக இது இருந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. தீபவம்சம் 1.51 : புத்தர் இலங்கைக்கு மூன்று முறை பறந்து வந்தார் என்றும், ஒருமுறை அங்கே கூடியிருந்த இயக்கர்களின் கூட்டத்தினர் சம்புத்தர் அங்கே நிற்பதைக் கண்டார்கள் என்றும், ஆனால் அவர் புத்தர் என்று அவர்கள் நினைக்கவில்லை; அவரை வேறொரு இயக்கர் என்று நினைத்தார்கள் என்றும் கூறுகிறது. அதனால்த்தான் "இவர் நம்மவர்" என்று நினைத்தனர். இது இயக்கர்களும் புத்தரும் மனித வடிவில் இருந்தனர் என்பதைக் காட்டுகிறது. ஆனால், பிறகு புத்தர் அவர்களை பயமுறுத்த பலத்த மழை, குளிர் காற்று, கடுமையான வெப்பம் மற்றும் இருள் போன்றவற்றை ஏற்படுத்தினார். அன்பினதும் கருணையினதும் மொத்த வடிவான புத்தர், மேலே கூறியவாறு, இலங்கை நாட்டின் சொந்த மக்களை, பழங்க்குடியினரை அடக்குமுறையில் பயமுறுத்தி விரட்டும் செயல்கள் செய்தார் என்பது அவரின் இயல்புக்கு முற்றிலும் முரண்பாடாக இருக்கிறது? தீபவம்சம் 1.78: கோடையில் தாகம் கொண்டவர்கள் நதியை நோக்கி ஓடுவது போல, இயக்கர்கள் 'கிரிதீபத்திற்கு' [Giridipa] ஓடினார்கள்; அவர்கள் அனைவரும் ஒருபோதும் திரும்பி வராமல் அங்கே அதில் நுழைந்தனர்; முனிவர் (பின்னர்) தீவை அதன் முந்தைய இடத்திற்கு மீட்டெடுத்தார் என்கிறது. இது புத்தரின் அகிம்சை (nonviolence) மற்றும் கருணை என்ற தத்துவங்களுக்கு மீண்டும் இது எதிரானது ஆகும். இப்படியான கதைகள், புத்தரை அதிமானுட ஆற்றல்கள் கொண்டவர் போலவும், பிறரை வன்முறையால் விரட்டும் பயங்கரவாதி போலவும் காட்டுகின்றன. இது புத்தரின் உண்மையான உருவத்துக்கு கேடாக உள்ளது. இதனால் இலங்கை வரலாற்று புராணங்களை எழுதிய பௌத்த பிக்குகள், புத்தருக்கு துரோகம் செய்துள்ளனர். அவரின் புனித உருவத்தை அழித்துள்ளனர் என்பதே உண்மை. உதாரணமாக அங்கு வாழும் மக்கள் தமிழ் பேசும் மக்களாகவும், புத்த சமயத்தை சேராதவர்களாகவும் இருக்கும் பொழுதும், அவர்கள் வழிபாடும் சைவ ஆலயங்களுக்கு இடையூறாக அல்லது அவர்களுக்கு சொந்தமான காணியிலேயே பலவந்தமாக புத்தர் சிலை வைப்பதும் பின் விகாரை காட்டுவதும் பின் சிங்கள குடியேற்றத்தால் ஆக்கிரமிப்பு செய்வதும் 2009 க்குப் பின் அதிகரித்துக்கொண்டு போவது ஒரு சாதாரண விடயமாகி விட்டது. எந்த அரசாங்கம் வந்தாலும் அது நின்றபாடில்லை. இன்றும் மே 25, 2025, இலும் இப்படியான வன்முறைச் செயல்கள் தொடர்வதைக் காணலாம். உதாரணமாக, திடீரென அம்பாறை மாவட்டம் உகந்தைமலை முருகன் ஆலய சூழலில் முளைத்த புத்தர் சிலையைக் எடுத்துக் காட்டலாம். இது என்ன கொடுமை என்றால், தாங்கள் புத்தரை போற்றுகிறோம், பின்பற்றுகிறோம் என்று வாய்க்கு வாய் சொல்லும் அவர்கள் செய்யும் செயல்கள் தான் இவை! இது தான் சிங்கள அரசியல்வாதிகளும், பிக்குகளும் பல நாட்களாக முயற்சி செய்து கொண்டிருப்பது — வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வாழும் தமிழர்களை அவர்களது பூர்வீக நிலங்களிலிருந்து விரட்டுவதுதான். அவர்கள் இதில் பெரிதளவில் வெற்றி பெற்று விட்டார்கள். தமிழர்களில் பாதிக்கு மேற்பட்டோர் நாட்டின் பிற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து விட்டார்கள், அல்லது இந்தியாவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் அகதிகளாகச் சென்று விட்டார்கள். எல்லைப் பகுதிகளில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு, அவர்களுக்குப் பதிலாக ஆயுதம் தரப்பட்ட சிங்களர்கள் குடியமர்த்தப்பட்டனர். கல் ஓயா, மகாவலி திட்டம் போன்ற பல பெரும் நீர்ப்பாசனத் திட்டங்கள் தமிழர் நிலங்களை அபகரிக்க பயன்படுத்தப் பட்டன. இவை அனைத்துக்கும் உலகத் தொண்டு நிறுவனங்கள் நிதி உதவி வழங்கியுள்ளன. ஆனால் அவர்கள் இந்த அநியாயங்களைக் கண்டும் காணாதது போல நடந்து கொண்டனர். இதே நேரத்தில், தமிழர்கள் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்தனர். தேர்தல் எல்லைகள் மாற்றப்பட்டு, அரச ஆதரவுடன் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டதால், தமிழர் வாக்குரிமையும் குறைக்கப் பட்டது. Part: 135 / APPENDIX – "Is BUDDHA BETRAYED by Lanka chronicles authors?" Buddha is understood to be a very kind person who renounced the royal comforts, his just born son and his young wife when he was 29 years of age. He was saddened by the misery of this worldly life and wanted to find a way out of this misery. Dipavamsa describes Buddha as; the chief among Sages, the bringer of Happiness, the compassionate, and merciful grate Sage. Buddha was born more than 2400 years ago, and the Ceylon chronicles wanted us to believe that there were non- humans; blood thirsty Yakkhas, savage Pisacas and Rakkhasas during his life time in Lanka. The monkish authors branded the original inhabitants of Lanka as above to misappropriate their traditional land. The Buddha wanted to clear Lanka of the above sub-humans to make way for his chosen followers yet to come to Lanka from Vanga, and he came, flying to Lanka thrice. Buddha is a Human, and couldn’t have flown, and his flying is a plagiarism from the Epic Ramayana. When he came he was hovering over the heads of Yakkhas in mid air! Yakkahs mistook Buddha as one of theirs, the Dipavamsa, 1- 51. Both, the Buddha and the Yakkhas, must have been humans to look similar. The Buddha then terrorized Yakkhas by sending heavy rain, cold wind, darkness and extreme heat etc. The first terrorist of the world, one may say! In the end, the merciful Buddha, made the Yakkhas run away to another island, Giridipa; never to return, Dipavamsa 1-78. What kind of merciful and compassionate Buddha was he to indulge in these cruelties? The monkish chroniclers betrayed the Buddha by ascribing these sorts of uncivilized and criminal acts to the Buddha, shame on them. This is what the Sinhala politicians and the monks want to do with the Tamils, to drive them away from their ancestral homeland. They succeed in this about more than fifty percentage by driving the Tamils to India, and to the western world. They also brutally massacred Tamils in many pockets of border area, and replaced them with armed Sinhalese militia. Vast tracks of Tamils home lands were forcefully appropriated under various irrigation schemes, with the help of the major World Donor agencies. These Donor agencies are also the silent partners in the murder, mayhem and robbing of Tamils. Tamils’ lost their representations in the parliament while Sinhalese were increasing their representation in the Parliament. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 136 தொடரும் / Will follow துளி/DROP: 2098 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 135 https://www.facebook.com/groups/978753388866632/posts/34348151934833348/? "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 136 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 136 / பின் இணைப்பு - "இலங்கை நாளிதழ் ஆசிரியர்களால் புத்தர் துரோகம் செய்யப்பட்டாரா?" மிக பழமையான புத்தமத நூல்களான தீபவம்சம் மற்றும் மகாவம்சம் போன்றவை கூட, புத்த மத அரசர்கள் செய்த கொலைகளைப் புகழ்ந்து பேசுகின்றன. உதாரணமாக, தீபவம்சம், அசோக சக்ரவர்த்தி தனது நூறு சகோதரர்களை கொன்ற பின்னும், அவரை ‘நல்ல ஒழுக்கமுடைய, புகழ்பெற்ற மன்னன்’ எனப் போற்றப்படுகிறார். இது என்ன வகையான நீதிக் கருத்து? இப்போது இலங்கையில் உள்ள பிக்குகள் இதே போன்று நடக்கின்றனர். தமிழர்களுக்கு, அவர்களின் சம உரிமைகளில் எதுவுமே வழங்கப்படக் கூடாது எனத் திட்டமிட்டுப் பேசுகிறார்கள். பின்னர் அதே விரோதத்தை ஊட்டி, இராணுவத்தின் மூலம் மேலும் தமிழர்கள் விரட்டப் படுகிறார்கள் அல்லது துரத்தப் படுகிறார்கள். பின் அவர்களது நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. உதாரணமாக, இன்று 29, ஜூலை 2025, கொடியேற்றம் அன்று, நல்லூர் ஆலய வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த இராணுவத்தின் செயலைக் கூறலாம்? இவ்வாறு, தீபவம்சம், மகாவம்சம் போன்ற புத்த நுால்கள் புத்தரின் சத்தியங்களை தவிர்த்து, அசோகனின் கொடூரத் செயல்களையும் வெறுப்புப் பரப்புதலையும் நீதியென புகழ்ந்தன. அசோக்கர் பிறகு அமைதியையும் தர்மத்தையும் பின்பற்றினாலும், இந்த நூல்கள் அவரது மறுமாற்றத்தைப் பேசாமல், ஆரம்பக் கொலைகளையே புகழ்கின்றன. இன்று சில பிக்குகள், இராணுவத்தினதும் அரசியல்வாதிகளினதும் மற்றும் குண்டர்களினதும் உதவியுடன் இதையே பின்பற்றித் தமிழர்களை ஒடுக்க முயல்கின்றனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. தீபவம்சம் 1 - 26 இல், பின்னர் இந்த ஜம்புதீபத்தின் [இந்தியாவின்] மீது ஒரு ஆட்சியாளர் இருப்பார், அவர் தம்ம அசோகர் என்றும் மிகவும் நல்லொழுக்கமுள்ள, புகழ்பெற்ற மன்னன் என்றும், புத்த பிக்கு ஆசிரியரால் எதிர்வு கூறப்பட்ட அந்த அசோகன் தான் தீபவம்சம் 6 - 22 இல், தனது நூறு சகோதரர்களைக் கொன்று, அதன் பின் தனியாக தனது பரம்பரை ஆட்சியை, மகிந்தவின் பதினான்காம் அகவையில், மன்னனாக முடி சூடினார் என்றும் கூறப்பட்டுள்ளதைக் காண்க. தீபவம்சம் (பாகம் 9, செய்யுள் 7) இல், புத்தர் "மக்களுக்குள் சிறந்தவனான விஜயனின் வருகைக்காக இலங்கையைத் தயார் செய்தார்" என்று கூறுகிறது. இருப்பினும், இந்தக் கூற்று கடுமையான நெறிமுறை மற்றும் வரலாற்று கவலைகளை அல்லது கேள்விகளை எழுப்புகிறது. "தலைவன்" விஜயன் என்று அழைக்கப்படுபவர் அதே உரையில் தீய மற்றும் பயங்கரமான செயல்களைச் செய்ததாக விவரிக்கப்படுகிறார். அதாவது இது போன்ற ஒரு கெட்ட நடத்தை கொண்ட ஒருவனுக்காக, புத்தர் இலங்கையைத் தயார் செய்தார் எனக் கூறுவது தார்மீகமும் வரலாற்றுத் தரவுகளும் மோதும் விடயமாகும். சுதந்திரத்திற்குப் பிந்தைய இலங்கை அரசாங்கங்களும் அவற்றின் ஆயுதப் படைகளும் இந்த புராண நபரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, தமிழ் மக்களுக்கு எதிராக அடக்குமுறை மற்றும் வன்முறைச் செயல்களை அல்லது கொடூரச் செயல்களை மேற்கொண்டன, மேற்கொள்ளுகின்றன என்பது மறக்க முடியாத வரலாறு ஆகும் - இது விஜயனின் மரபின் துயரமான தொடர்ச்சி போல் தோன்றுகிறது! விஜயன் ஒரு உண்மையான தலைவன் அல்ல; மாறாக, அவனுடைய சொந்த தந்தையால் நாடு கடத்தப்பட்ட ஒரு மனிதன். அவனும் அவனது தோழர்களும் ஒரே மாதிரியான கட்டுக்கடங்காத கொடிய பண்புகளைப் பகிர்ந்து கொண்டதால், ஒரு படகில் அங்கிருந்து துரத்தப்பட்டனர். அதாவது விஜயன் சொந்த நாட்டில் இருந்து அகற்றப்பட்ட ஒரு குற்றவாளி. அவனுடன் பயணித்த எல்லோரும் அதே போன்ற குற்ற இயல்புகள் கொண்டவர்கள் ஆகும். அவர்கள் முதலில் சுப்பரகாவில் (அநேகமாக இந்தியாவின் மேற்கு கடற்கரையில்) தரையிறங்கினர், அங்கு அவர்கள் ஆரம்பத்தில் வரவேற்கப்பட்டனர் என்றாலும், விரைவில், அவர்கள் தங்கள் காட்டுமிராண்டித்தனமான நடத்தைகளுக்குத் திரும்பினர் - திருடுதல், பொய்சொல்லுதல், விபச்சாரம் மற்றும் அவதூறு செய்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இந்தத் தவறான செயல்களால் கோபமடைந்த சுப்பரக மக்கள் அவர்களைக் கொல்லத் திட்டமிட்டனர். இதனால் அங்கிருந்து தப்பிச் சென்று, அவர்கள் பருகாச்சாவை அடைந்தனர், அங்கு தீபவம்சம் 9-26 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மூன்று மாதங்களுக்கு அதே தீய நடத்தையை மீண்டும் செய்தனர். பின்னர் தான் அவர்கள் இலங்கைக்கு வந்தனர். ஆனால் மகாவம்சம், இந்த பருகச்சா நிகழ்வை முழுமையாக ஒதுக்குகிறது. இது ஒரு முக்கிய வரலாற்று முரணாகும். இது, இந்த பௌத்த நூல்களின் நம்பிக்கையற்ற தன்மை மற்றும் அரசியல் நோக்கங்களை காட்டுகிறது. வரலாற்று புராண நூல்களை எழுதிய புத்த மடாலய குருக்கள் தங்கள் நலன்களுக்காக குற்றவாளிகளையும் புனிதப்படுத்துவதில் வெட்கமடையவில்லை என்பதை இது மீண்டும் தெளிவாகக் காட்டுகிறது. Part: 136 / APPENDIX – "Is BUDDHA BETRAYED by Lanka chronicles authors?" It is forecast, Dipavamsa1- 26, that there would be a ruler over Jambudipa a highly virtuous, glorious monarch known as Dhammasoka. The Dipavamsa records, 6-22, that the same king killed his one hundred brothers to continue with the reign. What kind of glory is this? No wonder that the monks in the present day Sri Lanka is hell bent to get rid of the Tamils from their ancestral home land by any means. Moral of the monkish author of the Ceylon chronicles is that you kill your one hundred brothers; you are virtuous and glorious so long as you belong to the Buddhist faith. The present day monks always in the forefront to scuttle any reprieve, however small it is, the Government negotiate with the Tamils. Enmity and issues are created to generate violence and then direct the security forces to kill more Tamils on the name of sovereignty, and take their lands. The monkish authors of the Dipavamsa and the Mahavamsa not only betrayed the Buddha, but also the King Asoka and his sermons on his several edicts. Asoka might have had killed few of his brothers to come to the throne. However the monkish authors of the chronicles sent a loud and clear approval that you kill your one hundred brothers in the case of the Dipavamsa, ninety nine in the case of the Mahavamsa, still you are virtuous and glorious. The Sri Lankan chronicles proudly claim that the King Asoka killed one hundred or ninety nine of his brothers without expressing any remorse or compunction. The Buddha prepared Lanka for the arrival of Vijaya, the chief of men. What kind of chief he was! He committed most wicked and fearful deeds, Dipavamsa, 9-7. The post independent Sri Lanka Government and its security forces emulated and still continue to emulate Vijaya in their wicked and murderous acts against the Tamils. Vijaya was banished from his own land by his own father, and forced to drift on a boat along with his companions who are of same characters. The boat aimlessly reached Suppara, probably on the western coast of India, and the people Suppara hospitably received them. There too they displayed their inborn behaviours: of barbarous deeds, theft, adultery, falsehood and slander. The people of Suppara wanted to kill Vijaya and his companions. Then they escaped, and landed in Bharukaccha and did the same evil deeds for three months, Dipavamsa 9-26. Then they landed in Lankadipa. The Mahavamsa omitted the landing in Bharukaccha or the Dipavamsa added this. Either way, it is an anomaly. Vijaya’s arrival is a myth as stated elsewhere. The above paragraph is to show that to what extent that the monkish authors would go to advance their own interest. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 137 தொடரும் / Will follow எனது அறிவார்ந்த தேடல்: 1516 துளி/DROP: 2100 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 136] [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 136 / பின் இணைப்பு - "இலங்கை நாளிதழ் ஆசிரியர்களால் புத்தர் துரோகம் செய்யப்பட்டாரா?" மிக பழமையான புத்தமத நூல்களான தீபவம்சம் மற்றும் மகாவம்சம் போன்றவை கூட, புத்த மத அரசர்கள் செய்த கொலைகளைப் புகழ்ந்து பேசுகின்றன. உதாரணமாக, தீபவம்சம், அசோக சக்ரவர்த்தி தனது நூறு சகோதரர்களை கொன்ற பின்னும், அவரை ‘நல்ல ஒழுக்கமுடைய, புகழ்பெற்ற மன்னன்’ எனப் போற்றப்படுகிறார். இது என்ன வகையான நீதிக் கருத்து? இப்போது இலங்கையில் உள்ள பிக்குகள் இதே போன்று நடக்கின்றனர். தமிழர்களுக்கு, அவர்களின் சம உரிமைகளில் எதுவுமே வழங்கப்படக் கூடாது எனத் திட்டமிட்டுப் பேசுகிறார்கள். பின்னர் அதே விரோதத்தை ஊட்டி, இராணுவத்தின் மூலம் மேலும் தமிழர்கள் விரட்டப் படுகிறார்கள் அல்லது துரத்தப் படுகிறார்கள். பின் அவர்களது நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. உதாரணமாக, இன்று 29, ஜூலை 2025, கொடியேற்றம் அன்று, நல்லூர் ஆலய வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த இராணுவத்தின் செயலைக் கூறலாம்? இவ்வாறு, தீபவம்சம், மகாவம்சம் போன்ற புத்த நுால்கள் புத்தரின் சத்தியங்களை தவிர்த்து, அசோகனின் கொடூரத் செயல்களையும் வெறுப்புப் பரப்புதலையும் நீதியென புகழ்ந்தன. அசோக்கர் பிறகு அமைதியையும் தர்மத்தையும் பின்பற்றினாலும், இந்த நூல்கள் அவரது மறுமாற்றத்தைப் பேசாமல், ஆரம்பக் கொலைகளையே புகழ்கின்றன. இன்று சில பிக்குகள், இராணுவத்தினதும் அரசியல்வாதிகளினதும் மற்றும் குண்டர்களினதும் உதவியுடன் இதையே பின்பற்றித் தமிழர்களை ஒடுக்க முயல்கின்றனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. தீபவம்சம் 1 - 26 இல், பின்னர் இந்த ஜம்புதீபத்தின் [இந்தியாவின்] மீது ஒரு ஆட்சியாளர் இருப்பார், அவர் தம்ம அசோகர் என்றும் மிகவும் நல்லொழுக்கமுள்ள, புகழ்பெற்ற மன்னன் என்றும், புத்த பிக்கு ஆசிரியரால் எதிர்வு கூறப்பட்ட அந்த அசோகன் தான் தீபவம்சம் 6 - 22 இல், தனது நூறு சகோதரர்களைக் கொன்று, அதன் பின் தனியாக தனது பரம்பரை ஆட்சியை, மகிந்தவின் பதினான்காம் அகவையில், மன்னனாக முடி சூடினார் என்றும் கூறப்பட்டுள்ளதைக் காண்க. தீபவம்சம் (பாகம் 9, செய்யுள் 7) இல், புத்தர் "மக்களுக்குள் சிறந்தவனான விஜயனின் வருகைக்காக இலங்கையைத் தயார் செய்தார்" என்று கூறுகிறது. இருப்பினும், இந்தக் கூற்று கடுமையான நெறிமுறை மற்றும் வரலாற்று கவலைகளை அல்லது கேள்விகளை எழுப்புகிறது. "தலைவன்" விஜயன் என்று அழைக்கப்படுபவர் அதே உரையில் தீய மற்றும் பயங்கரமான செயல்களைச் செய்ததாக விவரிக்கப்படுகிறார். அதாவது இது போன்ற ஒரு கெட்ட நடத்தை கொண்ட ஒருவனுக்காக, புத்தர் இலங்கையைத் தயார் செய்தார் எனக் கூறுவது தார்மீகமும் வரலாற்றுத் தரவுகளும் மோதும் விடயமாகும். சுதந்திரத்திற்குப் பிந்தைய இலங்கை அரசாங்கங்களும் அவற்றின் ஆயுதப் படைகளும் இந்த புராண நபரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, தமிழ் மக்களுக்கு எதிராக அடக்குமுறை மற்றும் வன்முறைச் செயல்களை அல்லது கொடூரச் செயல்களை மேற்கொண்டன, மேற்கொள்ளுகின்றன என்பது மறக்க முடியாத வரலாறு ஆகும் - இது விஜயனின் மரபின் துயரமான தொடர்ச்சி போல் தோன்றுகிறது! விஜயன் ஒரு உண்மையான தலைவன் அல்ல; மாறாக, அவனுடைய சொந்த தந்தையால் நாடு கடத்தப்பட்ட ஒரு மனிதன். அவனும் அவனது தோழர்களும் ஒரே மாதிரியான கட்டுக்கடங்காத கொடிய பண்புகளைப் பகிர்ந்து கொண்டதால், ஒரு படகில் அங்கிருந்து துரத்தப்பட்டனர். அதாவது விஜயன் சொந்த நாட்டில் இருந்து அகற்றப்பட்ட ஒரு குற்றவாளி. அவனுடன் பயணித்த எல்லோரும் அதே போன்ற குற்ற இயல்புகள் கொண்டவர்கள் ஆகும். அவர்கள் முதலில் சுப்பரகாவில் (அநேகமாக இந்தியாவின் மேற்கு கடற்கரையில்) தரையிறங்கினர், அங்கு அவர்கள் ஆரம்பத்தில் வரவேற்கப்பட்டனர் என்றாலும், விரைவில், அவர்கள் தங்கள் காட்டுமிராண்டித்தனமான நடத்தைகளுக்குத் திரும்பினர் - திருடுதல், பொய்சொல்லுதல், விபச்சாரம் மற்றும் அவதூறு செய்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இந்தத் தவறான செயல்களால் கோபமடைந்த சுப்பரக மக்கள் அவர்களைக் கொல்லத் திட்டமிட்டனர். இதனால் அங்கிருந்து தப்பிச் சென்று, அவர்கள் பருகாச்சாவை அடைந்தனர், அங்கு தீபவம்சம் 9-26 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மூன்று மாதங்களுக்கு அதே தீய நடத்தையை மீண்டும் செய்தனர். பின்னர் தான் அவர்கள் இலங்கைக்கு வந்தனர். ஆனால் மகாவம்சம், இந்த பருகச்சா நிகழ்வை முழுமையாக ஒதுக்குகிறது. இது ஒரு முக்கிய வரலாற்று முரணாகும். இது, இந்த பௌத்த நூல்களின் நம்பிக்கையற்ற தன்மை மற்றும் அரசியல் நோக்கங்களை காட்டுகிறது. வரலாற்று புராண நூல்களை எழுதிய புத்த மடாலய குருக்கள் தங்கள் நலன்களுக்காக குற்றவாளிகளையும் புனிதப்படுத்துவதில் வெட்கமடையவில்லை என்பதை இது மீண்டும் தெளிவாகக் காட்டுகிறது. Part: 136 / APPENDIX – "Is BUDDHA BETRAYED by Lanka chronicles authors?" It is forecast, Dipavamsa1- 26, that there would be a ruler over Jambudipa a highly virtuous, glorious monarch known as Dhammasoka. The Dipavamsa records, 6-22, that the same king killed his one hundred brothers to continue with the reign. What kind of glory is this? No wonder that the monks in the present day Sri Lanka is hell bent to get rid of the Tamils from their ancestral home land by any means. Moral of the monkish author of the Ceylon chronicles is that you kill your one hundred brothers; you are virtuous and glorious so long as you belong to the Buddhist faith. The present day monks always in the forefront to scuttle any reprieve, however small it is, the Government negotiate with the Tamils. Enmity and issues are created to generate violence and then direct the security forces to kill more Tamils on the name of sovereignty, and take their lands. The monkish authors of the Dipavamsa and the Mahavamsa not only betrayed the Buddha, but also the King Asoka and his sermons on his several edicts. Asoka might have had killed few of his brothers to come to the throne. However the monkish authors of the chronicles sent a loud and clear approval that you kill your one hundred brothers in the case of the Dipavamsa, ninety nine in the case of the Mahavamsa, still you are virtuous and glorious. The Sri Lankan chronicles proudly claim that the King Asoka killed one hundred or ninety nine of his brothers without expressing any remorse or compunction. The Buddha prepared Lanka for the arrival of Vijaya, the chief of men. What kind of chief he was! He committed most wicked and fearful deeds, Dipavamsa, 9-7. The post independent Sri Lanka Government and its security forces emulated and still continue to emulate Vijaya in their wicked and murderous acts against the Tamils. Vijaya was banished from his own land by his own father, and forced to drift on a boat along with his companions who are of same characters. The boat aimlessly reached Suppara, probably on the western coast of India, and the people Suppara hospitably received them. There too they displayed their inborn behaviours: of barbarous deeds, theft, adultery, falsehood and slander. The people of Suppara wanted to kill Vijaya and his companions. Then they escaped, and landed in Bharukaccha and did the same evil deeds for three months, Dipavamsa 9-26. Then they landed in Lankadipa. The Mahavamsa omitted the landing in Bharukaccha or the Dipavamsa added this. Either way, it is an anomaly. Vijaya’s arrival is a myth as stated elsewhere. The above paragraph is to show that to what extent that the monkish authors would go to advance their own interest. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 137 தொடரும் / Will follow துளி/DROP: 2100 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 136 https://www.facebook.com/groups/978753388866632/posts/34364710406510834/?
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!
கேக்காயினம்....கேக்காயினம்....பாக்கவும் மாட்டீனம். எட்டியும் பாக்க மாட்டீனம். கண்டாலும் விலத்தி போய் விடுவினம்.
-
ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை தினமாக பிரகடனம் - அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர்
அதெல்லாம் அந்தக்காலம் ஐயா.இப்பவெல்லாம் அந்த சோலியள் இல்லை கண்டியளோ....
-
ஈரான் நாட்டுப்புற சமையல்
எரிச்சல் மட்டுமில்ல....நக்கலும் அதிகம் ஐயா உங்களுக்கு 😂
-
ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஒத்துழைக்குமாறு ட்ரம்ப் கோரிக்கை
- வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!
வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைக்கக்கூடாது என கொக்கரிக்கும் எவரும் தாமோ, தம் சார்ந்தாரோ இந்த பாடலை, இவை போன்ற இன்னும் பலப்பல பாடல்களை கேட்கவோ, கேட்டு இரசிக்கவோ, குத்தாட்டம் போடவோ, கிளுகிளுப்பு அடையவோ இல்லை இல்லை என நம்புவோமாக!- தமிழா நீ பேசுவது தமிழா?
- வீதியோரம்.
இவ்வளவு வேகமாக தொடர்கதை எழுதுபவர் நீங்கள் தான் அண்ணை! 4 பேருடைய தொலைந்த வாழ்வு மீண்டமைந்தது மகிழ்ச்சி. நன்றி @suvy அண்ணை. தனித்து இருப்பதை விட இணைந்து செயல்படுவது தங்களுக்கு அதிகப் பயன் தரும் என்று அனைவரும் உணரும்போதுதான் அங்கே உண்மையான ஒற்றுமையும் மகிழ்ச்சியும் மலர்கின்றன. மாறாக, அன்பு, பாசம், ரத்த பந்தம் மாதிரியான உணர்ச்சிகளால் மட்டுமே பிணைக்கப்பட்டிருப்பதாக நினைப்பவர்கள் ஏமாற்றமடைந்து, தங்களையும் வருத்திக்கொண்டு மற்றவர்களையும் துன்பத்தில் ஆழ்த்துவார்கள். ~ நியாண்டர் செல்வன்- கையடக்க தொலைப்பேசி பணப் பரிமாற்றங்களுக்கு தீவிர கண்காணிப்பு – அமைச்சரவை தீர்மானம்
கையடக்க தொலைப்பேசி பணப் பரிமாற்றங்களுக்கு தீவிர கண்காணிப்பு – அமைச்சரவை தீர்மானம் 18 Mar, 2026 | 05:31 PM இசிகேஷ் மற்றும் எம்கேஷ் (eZcash and mCash) போன்ற இலத்திரனியல் பணப்பரிமாற்ற முறைகளைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பணப்பரிமாற்றங்களைத் தடுப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான முன்மொழிவை பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேயபால அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார். அதற்கமைய சட்டவிரோத பணப்பரிமாற்றங்களை கண்காணிப்பதற்கும் அவற்றில் ஈடுபடுபவர்களை அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் இலங்கை மத்திய வங்கி, இலங்கை பொலிஸ் தலைமையகம், இலங்கை ஆட்பதிவுத் திணைக்களம் ஒன்றிணைந்து ஒரு புதிய தரவு தளத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுவோர் தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமல் இலகுவாகப் பணப்பரிமாற்றம் செய்வதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் குறித்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க பொதுமக்கள் மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் தலைமையில் ஏற்கனவே ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழுவினரால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை அடிப்படையாக கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் கையடக்க தொலைப்பேசி பணப்பரிமாற்றங்கள் தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படும். https://www.virakesari.lk/article/241315- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
சங்கீதா இந்திய தேர்தலில் போட்டியிட முடியாது. மாட்டார். விஜை சங்கிதா சொத்து பிரிப்பில்தானாம் தகராறு, இருவரும் பிரிய ஓக்கேயாம்.- ஈரான் மக்களை இஸ்ரேல் கிளர்ச்சிக்கு தூண்டுகிறது.
ஈரான் மக்களை இஸ்ரேல் கிளர்ச்சிக்கு தூண்டுகிறது --- --- --- *வோசிங்டன்போஸ்ட் ஊடகம் விமர்சனம் *கிளர்ச்சியாளர்களை அமெரிக்கா ஆதரிக்க வேண்டும் எனவும் இஸ்ரேல் பரிந்துரை *ஈரான் பலமாக உள்ளதாக அமெரிக்க உளவுத்துறை மதிப்பீடு... --- --- --- ஈரான் அரசாங்கத்துக்கு எதிராக கிளர்ச்சி செய்யவுள்ள, ஈரானிய மக்கள் கொல்லப்படுவார்கள் என இஸ்ரேல் தனிப்பட்ட முறையில் மதிப்பீடு செய்வதாக வோசிங்டன்போஸ்ட் (washingtonpost) இன்று செவ்வாய்கிழமை பிரசுரித்த செய்திக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், கிளர்ச்சி செய்யும் மக்களுக்கு ஆதரவாக செயற்பட வேண்டும் என, அமெரிக்க இராஜதந்திரிகளுக்கு இஸ்ரேல் பரிந்துரைத்துள்ளது எனவும் அந்த செய்திக் கட்டுரையில் தெரிவித்துள்ளது. அதாவது, ஈரானியர்களை வீதியில் இறங்கி கிளர்ச்சி செய்ய இஸ்ரேல் தூண்டுவதாக வோசிங்டன்போஸ்ட் கட்டுரையாளர் ஜோன் கட்சன் (John Hudson) எழுதிய செய்திக் கட்டுரையில் விபரிக்கப்பட்டுள்ளது. வோசிங்டன்போஸ்ட் அமெரிக்காவின் பிரதான ஊடகமாகும். ஜோன் கட்சன், இந்த ஊடகத்தின் தேசிய பாதுகாப்புச் செய்தியாளர் (National security reporter). தான் எழுதிய நீண்ட செய்திக் கட்டுரையில், அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளை ஈரான் பக்கம் கூடுதல் கவனத்தில் வைத்திருக்க இஸ்ரேல் முற்படுவதாக குற்றம் சுமத்துகிறார். ஈரானின் ஆட்சியில் "விரிசல் இல்லை" பெப்ரவரி 28 ஆம் திகதி உயர் தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டாலும், அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டாலும், ஈரான் இறுதிவரை போராட தயாராக இருப்பதாகவும் இஸ்ரேல் மதிப்பீடு ஒன்றை செய்திருக்கிறது. இந்த மதிப்பீட்டு அறிக்கையை இஸ்ரேல் அமெரிக்க இராஜதந்திரிகளுடன் ஆராய்ந்துள்ளதாக ஜோன் கட்சன் தனது கட்டுரையில் விபரிக்கிறார். இஸ்ரேலிய அதிகாரிகள் ஈரானில் ஒரு மக்கள் கிளர்ச்சி எழும் என நம்புவதாகவும், அப்படி ஒரு கிளர்ச்சி நடந்தால், ஈரான் அரச எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவளிக்க அமெரிக்கா தயாராக இருக்க வேண்டும் எனவும் இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளதாக அக் கட்டுரை மேலும் கூறுகிறது. உயர் தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டபோது தான், புதிதாக பதவியேற்றுள்ள அவருடை மகன், மொஜ்தபா கமேனியும் காயமடைந்ததாக ஜோன் கட்சன் தனது கட்டுரையில் விளக்கியுள்ளார். அதேநேரம், அமெரிக்க இராஜதந்திரிகளையும் அதன் பாதுகாப்பு அதிகாரிகளையும், இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்ற தொனி ஜோன் கட்சன் எழுதிய நீண்ட செய்திக் கட்டுரையில் தெரிகிறது. ஈரானின் பிரதான இராணுவப் படையான இஸ்லாமிய புரட்சிகர படை கூடுதல் அதிகாரம் கொண்டது என இஸ்ரேல் சுட்டிக்காட்டுவதன் மூலம் அமெரிக்க அதிகாரிகளை, இஸ்ரேல் தன் பக்கம் ஈர்த்துள்ளது என கட்டுரையாளர் கற்பிதம் செய்கிறார். அதேவேளை, ஈரான் தமது ஆட்சி அதிகாரத்தை பலப்படுத்தி வருவதாக அமெரிக்க உளவுத்துறை கூறுவதாக வோசிங்டன்போஸ்ட் மற்றொரு செய்திக் கட்டுரையை இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது. சக்திவாய்ந்த இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படைகளின் ஆதரவுடன் தெஹ்ரானில் பலவீனமான, ஆனால் மிகவும் கடினமான அரசாங்கத்தை அமெரிக்க அதிகாரிகள் காண்பதாக வோசிங்டன்போஸ்ட் விபரிக்கிறது. ஈரானின் ஆட்சி அப்படியே தைரியமாக இருக்கும் என்று அமெரிக்க உளவுத்துறை மதிப்பீட்டுள்ளது. போரின் ஆரம்பத்தில் இருந்து இந்த மதிப்பீட்டை அமெரிக்க உளவுத் துறை மேற்கொண்டிருக்கிறது. ட்ரம்பை எதிர்த்து நின்று உயிர் பிழைத்ததாக ஈரான் நம்புவதாக அமெரிக்க உளவுத்துறையின் மதிப்பிட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக வோசிங்டன் போஸ்ட் விபரிக்கிறது. ஈரான் அரசின் மூலோபாயம் உறுதியாக உள்ளது. ஹார்மூஸ் நீரிணை மீதான தனது செல்வாக்கை ஈரான் பயன்படுத்தி, அமெரிக்காவை சங்கடப்படுத்துகிறது. நீண்ட ஒரு போருக்கு ட்ரம்ப் தயாராக இல்லை என்பதை ஈரான் உணர்கிறது எனவும் அந்தக் கட்டுரை கூறுகிறது. சென்ற வெள்ளிக்கிழமை வரை 15,000 இலக்குகளைத் தாக்கி, ஈரானின் இராணுவம் மற்றும் அதன் தலைமையின் மீது அமெரிக்க - இஸ்ரேல் இராணுவங்கள் தாக்குதல் நடத்தி ஏற்படுத்திய அழிவை, ட்ரம்பின் பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) மீண்டும் மீண்டும் பாராட்டியுள்ளார். ஆனால், ஈரான் வலுவாக இருப்பதாக அக் கட்டுரை ஆதாரங்களுடன் தனது விமர்சனத்தை முன்வைக்கிறது. அதேநேரம், ஐரோப்பிய நாடுகள், ட்ரம்பின் தவறான தீர்மானங்களுக்கு ஒத்துழைக்காமல் பாதுகாப்பாக தப்பியுள்ளன என்று வோசிங்டன்போஸ்ட் மற்றொரு செய்தியையும் வெளியிட்டுள்ளது. அதாவது, ஐரோப்பாவில் உள்ள வோசிங்டனின் கூட்டாளிகள் போரின் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து புத்திசாலித்தனமாக தப்பியிருப்பதாக வோசிங்டன்போஸ்ட் சுட்டிக்காட்டியுள்ளது. அதேநேரம், உலகளாவிய எண்ணெய் விலை அதிகரிப்பு மட்டுமல்ல, உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளரான அமெரிக்கா அனுபவிக்காத எரிபொருள் விலை உயர்வை, ஐரோப்பிய நாடுகள் எதிர்கொள்வதால் ட்ரம்ப்புக்கு ஒத்தழைக்காமல் ஒதுங்கியிருப்பதாகவும் வோசிங்டன்போஸ்ட் சுட்டிக்காட்டியுள்ளது. (The spike in energy costs is threatening to slow economic growth and increase prices in Europe more sharply than in the United States) அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0bR7Y33RuCDGMpbYDWtASavJLkuep63iLu3TeyEZkpzCmFr3RwNwPYpsiyAbfAcpUl&id=1457391262&mibextid=wwXIfr- உணவுமுறை, எண்ணெய் வகைகள் பற்றிய புதிய தகவல்களுடன் மருத்துவர் பிரகாஸ்மூர்த்தியுடனான உரையாடல்
இத்தனை நாள் சந்தேகத்தை தெளிவா விளக்கிட்டார் மன்னார்குடி மருத்துவர்| Positivitea | Dr Prakashmurthy Positivitea இன் இந்த எபிசோடில், டாக்டர் பிரகாஷ்மூர்த்தியுடன் பல உடல்நலப் பிரச்சனைகளைப் பற்றி முக்கியமாக எண்ணெய், முட்டை மற்றும் பல உடல்நலப் பிரச்சனைகளைப் பற்றி பேசினோம். ரேஷன் பாமாயில், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், செக்கு எண்ணெய் போன்றவற்றைப் பற்றி அவர் எங்களிடம் ஒரு சிறந்த நேர்காணலை வழங்கியுள்ளார்.- 'தி ஹண்ட்ரட்' ஏலத்தில் பாகிஸ்தான் வீரரை வாங்கிய சன்ரைசர்ஸ் லீட்ஸ் உரிமையாளர் காவ்யா மாறன்!
அப்போ இவர் கூட இருந்து கொமென்றி கொடுக்கும் ரமீஸ் ராஜா, அக்ரம் எல்லாரும் பாகிஸ்தானில் கட்டும் வரியும் இப்படித்தானே செலவாகும்? இதை கைவிடுவாரா காவாஸ்கர்? காவ்யா தான் பெரியாரின் பேத்தி என்பதை காட்டி உள்ளார். ஆனால் வரும் அழுத்தம் கடுமையாக இருக்கும். இதே நிலைப்பாட்டில் நிற்பாரா?- மீண்டும் எழுதப்படுமா எம்.ஜி.ஆர் வரலாறு?
suvy, இரண்டு வர்ணத்தில் உள்ள பாடலொன்றின் இரண்டு வரிகள் சொல்லட்டுமா? கண்ணதாசன் எழுதியது, “காய்த்த மரம்தான் கல்லடி படும் என்று கண்கூடாய் நான் பார்த்ததுண்டு புத்தன் யேசு காந்தியைக் கூடக் குற்றம் சொல்லிக் கேட்டதுண்டு…”😉- இரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் பற்றி அரபு ஊடகங்கள் கூறுவது என்ன?
இது நடக்குமாக இருந்தால் அமெரிக்காவுக்கு பேரிடியே.- ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 - செய்திகள்
அடபாவி இளைப்பாறச் சொல்லி தவம் கிடக்கிறார். இவர் தான் இளைப்பாறி விட்டு தோனியை முதலாளாக விளையாட வேண்டுமாம். - வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!
Important Information
By using this site, you agree to our Terms of Use.