24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
ஒரு யாழ்பாண யூடியூப் காரனுக்கு இருக்கிற பிரச்சினையையும் மன அழுத்தத்தை யும் விடவா உலகத்திலே உங்களுக்கு வேற பிரச்சினை இருக்கப் போகிறது! ,
ஏதோ நமக்கு நல்லாய் பொழுதுபோகுது. பல விடயங்களையும் அறியக்கூடியதாய் உள்ளது. அதற்கொரு பெரிய நன்றி இலங்கை யூரியூப்பர்களுக்கு சொல்லத்தான் வேண்டும்.
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
என்னய்யா, எங்கள் அரசியல் பனங்காய்கள் கடைசியில் புதிய உலக ஒழுங்கின் பிரகாரம் நாங்கள் இலங்கையில் இருந்து பிரிந்து உலக வல்லரசு இந்தியாவுடன் இணைந்திடலாம் என கதையை முடித்து வைக்க போகின்றார்களோ? எதற்கும் முப்பது நாட்களில் கிரமமாக கிந்தியில் கதைப்பது எப்படி என்கிற புத்தகத்திற்கு ஒரு ஓடர் கொடுப்போம்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஜஸ்பிரிட் பும்ரா
- Today
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
ஆதாரம் இருக்கா அல்லது புலவர் எழுதினாலே அது ஆதாரம்தான் என்கிறீர்களா? 😂 ஆனால் இவை எல்லாம் புலிகள் மீது நான் உட்பட பலரும் முன்வைத்த விமர்சனங்கள்தான். ஆனால் இதை வைத்து புலிகளை அழித்தமைக்கு மகிந்தவுக்கு நன்றி சொன்னார் என்றோ அல்லது மேற்கு நாடு தன்னிடம் புலிகளை அழித்த பின் தீர்வு தருவதாக சொன்னார்கள் என சொன்னார் என்றோ நிறுவ முடியாது. 2008, 2009 நேரம் சம்பந்தரிடம் மட்டும் அல்ல, போரை நிறுத்த சொல்லி இலண்டன் உட்பட வெளிநாட்டில் சந்தித்த இடங்களில் கூட,…. போரை நிறுத்த முயல்கிறோம், இல்லை எனில் போரின் பின் தக்க தீர்வை கொடுக்க வலியுறுத்துவோம் என பலரிடம் கூறினார்கள். மன்மோகன் சிங் நேரடியாகவே இலங்கை விஜயத்தில் 13+ கொடுப்பதாக சொன்னீர்களே என வலியுறுத்தினார் என வாசித்த நியாபகம். அதைத்தான் சம்பந்தர் சொல்லியுள்ளார்.
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
விடுதலைபுலிகள் அழிவதற்கு வெளிநாடுகளுக்கும், மேற்குக்கும், இந்தியாவுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறுவேற்றி, அதன் மூலம் 13 பிளஸ் தமிழருக்கு கொடுக்கபடின், அவர்களின் அழிவை ஒரு நல்ல விடயம் என கருதலாம் என சம்பந்தர் மேலே கூறி உள்ளார். இதில் எமக்கு உடன்பாடில்லாமல் இருக்கலாம் - ஆனால்…. புலிகளை அழித்தமைக்காகக சம்பந்தர் மகிந்தவுக்கு நன்றி கூறினார் என்பதற்கு இது ஆதாரம் அல்ல. அதற்கான ஆதாரம் உங்களிடம் கட்டாயம் இருக்கும் - போட்டு விடுங்கள். இல்லை… இதுவும் நான் மேலே சொன்னது போல் கஜன் கட்சி தீவிர ஆதரவாளர் (யாழ்கள பிரச்சார பீரங்கி) புலவர், சம்பந்தன் கூறியதன் சூழமைவை தவிர்த்து விட்டு, அதற்கு கை, கால் எல்லாம் வைத்து உருட்டும், உருட்டே. மகிந்த அவர்களே, புலிகளை அடித்து விட்டீர்கள் நன்றி. என சம்பந்தர் கூறியதாக எனக்கு நினைவில்லை.
-
இனி வாட்சப் , பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த கட்டணம் – மெட்டாவின் புதிய அறிவிப்பு!
முட்டாள்தனமாக ஆதவன் செய்திக்கு தலையங்கம் கொடுத்துள்ளது. தலையங்கத்தை மட்டும் மேய்ந்து விட்டு கச்சேரி வேறு களை கட்டுகிறது😂. இதுதான் செய்தி. இதை ஏலவே எக்ஸ் செய்கிறது. எக்ஸுக்கு சந்தா கட்டினால் சில சலுகைகள், ஏ ஐ கருவியான கொரொக்கின் முழு பாவிப்பு கிடைக்கும். இல்லை எண்டால் அடிப்படை சேவை இலவசம்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
71,72 வது கேள்விகளில் சின்ன சந்தேகம் ( அரைஇறுதி போட்டிகள்) 71 வது கேள்வி- சுப்பர் 8 குழு 1 முதல் இடம் எதிர் சுப்பர் 8 குழு 2 இரண்டாவது இடம் 72 வது கேள்வி- சுப்பர் 8 குழு 2 முதல் இடம் எதிர் சுப்பர் 8 குழு 1 இரண்டாவது இடம். உ+ம் பாகிஸ்தான் அரை இறுதிக்கு தெரிவாகாமல் குழு ஒன்றில் இந்தியா முதல் இடம் பெற்றால், இந்தியா முதலாவது அரை இறுதி போட்டி நடக்கும் ஏடென்கார்டன்ஸில் விளையாடவேண்டும். இரண்டாவது போட்டி மும்பாயில் நடைபெறும். அண்மையில் நடைபெற்ற மகளிர் உலக கிண்ண போட்டியில் முதலாவது அரை இறுதி போட்டியில் ஆரம்ப சுற்றில் முதல் இடம் பிடித்த அவுஸ்திரேலியாவும் 4 ம் இடம் பிடித்த இந்தியாவும் விளையாடி இருக்கவேண்டும். ஆனால் அவுஸ்திரேலியா, இந்தியாவுக்கு இடையிலான போட்டி சுழல் பந்து விச்சுக்கு சாதகமான மும்பாய் மைதானத்தில் ( இரண்டாவது போட்டி) நடைபெற்றது. இம்முறை கொல்கத்தா, மும்பாய் இரு இடங்களும் சூழல் பந்து வீச்சுக்கு சாதகமானவை. எனினும் போட்டி நடாத்தும் நாடுகளில் ஒன்றான இந்தியாவுக்கு சாதகமாக ஐசிசி இம்முறையும் மும்பாயில் இந்தியா விளையாடும் அரை இறுதி போட்டியை (2 வது போட்டி)நடாத்துமா ???😳
- Yesterday
-
ஒரு யாழ்பாண யூடியூப் காரனுக்கு இருக்கிற பிரச்சினையையும் மன அழுத்தத்தை யும் விடவா உலகத்திலே உங்களுக்கு வேற பிரச்சினை இருக்கப் போகிறது! ,
கூடுதலானவர்கள் தலைப்புக்கும் உள்ளே இருப்பதற்கும் சம்பந்தமே இல்லாமல் போடுவார்கள். நாங்க ஒருக்கா தட்டினால் அவர்களுக்கு பணம் போயிடும்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
கட்டயாம் கலந்து கொள்கிறேன்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
@suvy தலைவரே களத்தில் துணிந்து குதிக்கவும்.......................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பாக்கிஸ்தான் அணி இந்த உலக கோபையில் விளையாட சம்மதிச்சது பாராட்ட தக்கது............இல்லையேன் இந்த உலக கோப்பை விறுவிறுப்பாக இருந்து இருக்காது.................விளையாட்டுக்குள் அரசியலை புகுத்துவது நல்லம் அல்ல......................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
வீரப்பையன் இல்லாமல் போட்டியா. ஆமாம் எறும்பு இலவசம்.
-
இனி வாட்சப் , பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த கட்டணம் – மெட்டாவின் புதிய அறிவிப்பு!
இலங்கை இந்தியாவில் வெள்ளைக்காரன் தேயிலையை அறிமுகப்படுத்தி ஓரிரு வருடங்கள் இலவசமாக சந்திக்கு சந்தி கொடுத்தார்கள். பெரும்பாலவர்கள் அடிமையாகி விட்டார்கள் என்று தெரிந்ததும் பணத்தைக் கொடுத்து தேயிலையை வாங்கி நீயே வைத்துக் குடி என்றான். இப்போதும் என்னவிலை என்றாலும் வாங்கி குடிக்கிறோம்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 40) வரை. 1) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), நெதர்லாந்து எதிர் பாகிஸ்தான் NED எதிர் PAK 2) முதல் சுற்று குழு C:சனி 07 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் SCOT எதிர் WI 3) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 1:30 PM, வாங்கெடே, இந்தியா எதிர் ஐக்கிய அமெரிக்கா IND எதிர் USA 4) முதல் சுற்று குழு D:ஞாயிறு 08 பெப்: 5:30 AM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து AFG எதிர் NZ 5) முதல் சுற்று குழு C:ஞாயிறு 08 பெப்: 9:30 AM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் நேபாளம் ENG எதிர் NEP 6) முதல் சுற்று குழு B:ஞாயிறு 08 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் அயர்லாந்து SL எதிர் IRE 7) முதல் சுற்று குழு C:திங்கள் 09 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் இத்தாலி SCOT எதிர் ITA 8) முதல் சுற்று குழு B:திங்கள் 09 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), ஓமான் எதிர் ஸிம்பாப்வே OMA எதிர் ZIM 9) முதல் சுற்று குழு D:திங்கள் 09 பெப்: 1:30 PM, அஹமதாபாத், கனடா எதிர் தென்னாபிரிக்கா CAN எதிர் SA 10) முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 5:30 AM, டெல்லி, நமீபியா எதிர் நெதர்லாந்து NAM எதிர் NED 11) முதல் சுற்று குழு D:செவ்வாய் 10 பெப்: 9:30 AM, சென்னை, நியூஸிலாந்து எதிர் ஐக்கிய அமீரகம் NZ எதிர் UAE 12) முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 1:30 PM, கொழும்பு (SSC), பாகிஸ்தான் எதிர் ஐக்கிய அமெரிக்கா PAK எதிர் USA 13) முதல் சுற்று குழு D:புதன் 11 பெப்: 5:30 AM, அஹமதாபாத், ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா AFG எதிர் SA 14) முதல் சுற்று குழு B:புதன் 11 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் அயர்லாந்து AUS எதிர் IRE 15) முதல் சுற்று குழு C:புதன் 11 பெப்: 1:30 PM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் ENG எதிர் WI 16) முதல் சுற்று குழு B:வியாழன் 12 பெப்: 5:30 AM, பல்லேகல, சிறிலங்கா எதிர் ஓமான் SL எதிர் OMA 17) முதல் சுற்று குழு C:வியாழன் 12 பெப்: 9:30 AM, வாங்கெடே, இத்தாலி எதிர் நேபாளம் ITA எதிர் NEP 18) முதல் சுற்று குழு A:வியாழன் 12 பெப்: 1:30 PM, டெல்லி, இந்தியா எதிர் நமீபியா IND எதிர் NAM 19) முதல் சுற்று குழு B:வெள்ளி 13 பெப்: 5:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் ஸிம்பாப்வே AUS எதிர் ZIM 20) முதல் சுற்று குழு D:வெள்ளி 13 பெப்: 9:30 AM, டெல்லி, கனடா எதிர் ஐக்கிய அமீரகம் CAN எதிர் UAE 21) முதல் சுற்று குழு A:வெள்ளி 13 பெப்: 1:30 PM, சென்னை, நெதர்லாந்து எதிர் ஐக்கிய அமெரிக்கா NED எதிர் USA 22) முதல் சுற்று குழு B:சனி 14 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), அயர்லாந்து எதிர் ஓமான் IRE எதிர் OMA 23) முதல் சுற்று குழு C:சனி 14 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் இங்கிலாந்து SCOT எதிர் ENG 24) முதல் சுற்று குழு D:சனி 14 பெப்: 1:30 PM, அஹமதாபாத், நியூஸிலாந்து எதிர் தென்னாபிரிக்கா NZ எதிர் SA 25) முதல் சுற்று குழு C:ஞாயிறு 15 பெப்: 5:30 AM, வாங்கெடே, நேபாளம் vd மேற்கிந்தியத் தீவுகள் NEP எதிர் WI 26) முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 9:30 AM, சென்னை, நமீபியா எதிர் ஐக்கிய அமெரிக்கா NAM எதிர் USA 27) முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), இந்தியா எதிர் பாகிஸ்தான் IND எதிர் PAK இரண்டு அணிகளும் விளையாட வில்லை................ 28) முதல் சுற்று குழு D:திங்கள் 16 பெப்: 5:30 AM, டெல்லி, ஆப்கானிஸ்தான் எதிர் ஐக்கிய அமீரகம் AFG எதிர் UAE 29) முதல் சுற்று குழு C:திங்கள் 16 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், இங்கிலாந்து எதிர் இத்தாலி ENG எதிர் ITA 30) முதல் சுற்று குழு B:திங்கள் 16 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் சிறிலங்கா AUS எதிர் SL 31) முதல் சுற்று குழு D:செவ்வாய் 17 பெப்: 5:30 AM, சென்னை, கனடா எதிர் நியூஸிலாந்து CAN எதிர் NZ 32) முதல் சுற்று குழு B:செவ்வாய் 17 பெப்: 9:30 AM, பல்லேகல, அயர்லாந்து எதிர் ஸிம்பாப்வே IRE எதிர் ZIM 33) முதல் சுற்று குழு C:செவ்வாய் 17 பெப்: 1:30 PM, வாங்கெடே, ஸ்கொட்லாந்து எதிர் நேபாளம் SCOT எதிர் NEP 34) முதல் சுற்று குழு D:புதன் 18 பெப்: 5:30 AM, டெல்லி, தென்னாபிரிக்கா எதிர் ஐக்கிய அமீரகம் SA எதிர் UAE 35) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), நமீபியா எதிர் பாகிஸ்தான் NAM எதிர் PAK 36) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 1:30 PM, அஹமதாபாத், இந்தியா எதிர் நெதர்லாந்து IND எதிர் NED 37) முதல் சுற்று குழு C:வியாழன் 19 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், இத்தாலி எதிர் மேற்கிந்தியத் தீவுகள் ITA எதிர் WI 38) முதல் சுற்று குழு B:வியாழன் 19 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் ஸிம்பாப்வே SL எதிர் ZIM 39) முதல் சுற்று குழு D:வியாழன் 19 பெப்: 1:30 PM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் கனடா AFG எதிர் CAN 40) முதல் சுற்று குழு B:வெள்ளி 20 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் ஓமான் AUS எதிர் OMA முதல் சுற்று குழு A: 41) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND ?? PAK ?? USA ?? NED ?? NAM ?? 42) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 41) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு A: முதலிடம் - ? (2 புள்ளிகள்) IND குழு A: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) PAK 43) முதல் சுற்று குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! அணி? NAM முதல் சுற்று குழு B: 44) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS ?? SL ?? IRE ?? ZIM ?? OMA ?? 45) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு B: முதலிடம் - ? (2 புள்ளிகள்) AUS குழு B: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) SL 46) முதல் சுற்று குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! அணி? OMA முதல் சுற்று குழு C : 47) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) WI?? ENG ?? SCOT ?? NEP ?? ITA ?? 48) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு C: முதலிடம் - ? (2 புள்ளிகள்) WI குழு C: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) ENG 49) முதல் சுற்று குழு C போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! அணி? ITA முதல் சுற்று குழு D : 50) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) NZ ?? SA ?? AFG ?? CAN ?? UAE ?? 51) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 50) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு D: முதலிடம் - ? (2 புள்ளிகள்) NZ குழு D: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) SA 52) முதல் சுற்று குழு D போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! அணி? UAF சுப்பர் 8 சுற்றுப் போட்டி கேள்விகள் 53) முதல் 64) வரை. X1 IND USA NED NAM X2 AUS IRE ZIM OMA X3 WI SCOT NEP ITA X4 SA AFG CAN UAE Y1 ENG BAN NEP ITA Y2 NZ AFG CAN UAE Y3 PAK USA NED NAM Y4 SL IRE ZIM OMA 53) சுப்பர் 8: குழு 2:சனி 21 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS) NZ எதிர் PAK 54) சுப்பர் 8: குழு 2:ஞாயிறு 22 பெப்: 9:30 AM, பல்லேகல, WI எதிர் SL 55) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 22 பெப்: 1:30 PM, அஹமதாபாத் IND எதிர் X SA 56) சுப்பர் 8: குழு 1:திங்கள் 23 பெப்: 1:30 PM, வாங்கெடே, AUS எதிர் WI 57) சுப்பர் 8: குழு 2:செவ்வாய் 24 பெப்: 1:30 PM, பல்லேகல ENG எதிர் PAK 58) சுப்பர் 8: குழு 2:புதன் 25 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS) NZ எதிர் SL 59) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 9:30 AM, அஹமதாபாத் WI எதிர் X4 SA 60) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 1:30 PM, சென்னை, IND எதிர் AUS 61) சுப்பர் 8: குழு 2:வெள்ளி 27 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS) ENG எதிர் NZ 62) சுப்பர் 8: குழு 2:சனி 28 பெப்: 1:30 PM, பல்லேகல, PAK எதிர் SL 63) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 9:30 AM டெல்லி, AUS எதிர் SA 64) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ் IND எதிர் WI சுப்பர் 8 குழு 1: 65) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) X1 IND X2 AUS X3 WI X4 SA 66) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 65) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) சுப்பர் 8: குழு 1: முதலிடம் - ? (3 புள்ளிகள்) IND சுப்பர் 8: குழு 1: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) AUS 67) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! அணி? SA சுப்பர் 8 குழு 2: 68) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) Y1 ?? PAK Y2 ?? NZ Y3 ?? ENG Y4 ?? SL 69) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 68) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) சுப்பர் 8: குழு 2: முதலிடம் - ? (3 புள்ளிகள்) PAK சுப்பர் 8: குழு 2: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) NZ 70) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! அணி? SL அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 66)க்கும் 69) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 71) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) NZ அரையிறுதி 1: புதன் 04 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ்/கொழும்பு (RPS), சுப்பர் 8 குழு 1 முதல் இடம் எதிர் சுப்பர் 8 குழு 2 இரண்டாவது இடம் PAK * பாகிஸ்தான் அரையிறுதிக்குத் தெரிவானால் அரையிறுதிப் போட்டி 1 இல் விளையாடும். எனவே, இந்தத் தெரிவைக் கவனமாகப் பதியுங்கள் 72) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) IND அரையிறுதி 2: வியாழன் 05 மார்ச்: 1:30 PM, வாங்கெடே, சுப்பர் 8 குழு 2 முதல் இடம் எதிர் சுப்பர் 8 குழு 2 இரண்டாவது இடம் * பாகிஸ்தான் அரையிறுதிக்குத் தெரிவானால் அரையிறுதிப் போட்டி 1 இல் விளையாடும். எனவே, இந்தத் தெரிவைக் கவனமாகப் பதியுங்கள் இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 71)க்கும் 72) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 73) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு 08 மார்ச்: 1:30 PM, அஹமதாபாத்/கொழும்பு (RPS) PAK அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 74) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? PAK 75) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? OMA 76) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? abhishek sharma 77) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 76 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 78) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? bumrah 79) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 78 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 80) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) வீரர்? Quinton de Kock 81) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 82) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? bumrah 83) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 84) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? IND 85) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND
-
இனி வாட்சப் , பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த கட்டணம் – மெட்டாவின் புதிய அறிவிப்பு!
நீங்கள் முதலில் எழுதியிருந்ததற்கு நான் தான் சிரிப்பு குறி போட்டிருந்தேன்..இப்போ எடுத்து விட்டேன்.அங்கே நான் எந்த நக்கல் நளினமும் செய்யவில்லை... நீங்கள் சொல்லி இருந்தவை எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள முடியாமலிருக்கிறது. காரணம்.எத்தனையோ யூருப்பர்ஸ் அடுத்தவர்களின் குடும்ப பிரச்சனைகளை கூட மிகைப் படுத்தி பதிவிடுவதை உங்களால் புரிந்து கொள்ள முடியாமிலிருக்கலம் ,ஆனால் எல்லாரும் அப்படி என்று இல்லைத் தானே..குறிப்பாக ஜேர்மனியில் நடக்கும் திருமணங்கள் மற்றும் குடும்ப பிரச்சனைகளை பாதிக்கப்பட்ட பெண்கள் எடுத்து அவரிடம் சொல்கிறார்களாம் அதனை பதிவிடுகிறாராம்..இப்படி ஒரு பதிவை சோடனை செய்து பதிவிட்டு பணம் சம்பாதிக்க வேணுமா..இப்படி எத்தனையோ வருகிறது..
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஏதாவது discount இருக்கா. 😄 ஓடிவாங்க எல்லாரும்.
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
இதில் மூன்றாவது கருத்து மட்டும் பாதி உண்மை. ஏனைய இரண்டு கருத்துக்களும் முழுமையான உண்மைகள் தானே? உண்மையான ஒரு விடயத்தைச் சொன்னதற்கா சம்பந்தனுக்கு இவ்வளவு எதிர்ப்பு😂?
-
திருகோணமலை , முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்!
இது நிச்சயம் பெரிய அவியலாகத் தான் இருக்கும்! பேராசிரியர் சொல்லியிருக்க மாட்டார், வேறு எவராவது அவித்திருப்பர். இயற்கை அனர்த்தங்களில் இன்று வரை எதிர்வு கூர முடியாத ஒன்றாக இருப்பது நில நடுக்கம். இன்ன பிரதேசம் நில நடுக்கத்திற்கு அதிக வாய்ப்புள்ள இடம் என்று சொல்லலாம், ஆனால் எப்போது நிலம் நடுங்குமென எதிர்வு கூரும் தொழில் நுட்பம் எதுவும் இது வரை உருவாகவில்லை.
-
இனி வாட்சப் , பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த கட்டணம் – மெட்டாவின் புதிய அறிவிப்பு!
செல்வம் ஈட்டும் புதிய முறை , இங்கே உள்ள சிலர் மற்ற திரியில் youtube பற்றி நான் சொன்னதை ஏளனமாக / பகிடியாக குறித்து இருந்தனர் முதலில் meta க்கு தான், இருந்த்து பாருங்கள் மெட்டா இதை socialfi க்கு கொண்டுவருவதை. அப்படி கொண்டுவரும் பொது meta இந்த வருமானம் இன்னும் கூடும். (ஒன்று மட்டும் சோலா முடியும் அவர்களுக்கு செல்வத்தின் , அதை ஈட்டும் போக்கு எங்கே சென்று கொண்டு இருக்கிறது என்பதை சிறிதளவேனும் அறியவில்லை)
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
அரசியல் சுதந்திரம்: 2014-ஆம் ஆண்டு நேர்காணல் ஒன்றில், 2009 மே மாதத்திற்குப் பிறகு (யுத்தம் முடிவுக்கு வந்த பின்) அரசும் சரி, எதிர்க்கட்சியினரும் சரி, நாடாளுமன்ற உறுப்பினர்களும் சரி, இன்று சுதந்திரமாகச் செயல்பட முடிவதற்குக் காரணம் "விடுதலைப் புலிகள் அமைப்பு இன்று இல்லாததுதான்" என்று அவர் தெரிவித்தார். கட்டுப்பாடுகளில் இருந்து விடுதலை: தமிழ் தேசியக் கூட்டமைப்பு (TNA) கூட விடுதலைப் புலிகளின் பிடியில் (clutches of the LTTE) இருந்து தற்போது சுதந்திரமாக விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் அந்த நேர்காணலில் ஒப்புக்கொண்டார். முரண்பட்ட கருத்துக்கள்: அதே சமயம், மற்றொரு தருணத்தில் புலிகள் "மனித உரிமைகளை ஒருபோதும் மதிக்கவில்லை" ("never observed human rights") என்றும், அதுவே அவர்களின் அழிவுக்குக் காரணமாக அமைந்தது
-
புதினுக்கு எதிராக பேசிய ரஷ்ய செல்வந்தர்கள் என்ன ஆனார்கள்? - போரின் நடுவே நிலையற்ற சூழல்
அமெரிக்கா டாலர்க்கு மாற்றீடாக அல்லாதது ஆப்ரிக்க பிராங்க் க்கு மாற்றீடாக நாணயத்தை கொண்டுவர முயன்ற அரசின் தலைவர்கள் என்ன ஆனார்கள் என்பதை பற்றி மேற்கு ஊதுகுழல்கள் மூச்சும் காட்டாது. அதில் இறுதியாக இணைந்தது மதுரா - கடத்தியயதன் ஒரு முக்கியலாராணம் எண்ணெய் சீன யுவானில் ஒப்பீட்டளவில் மிக கூடிய என்னை காலம் கொண்டதா நாடு / அரசு விற்பது, அதாவது சந்தை உருவாகுவது. இரான்க்கும் இது ஒரு முக்கிய காரணம்.
-
இனி வாட்சப் , பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த கட்டணம் – மெட்டாவின் புதிய அறிவிப்பு!
தேர்தல் நேரம்… வோட்டுக்கு, பணம், குவாட்டர், பிரியாணி கொடுத்து வென்று.. மக்களை ஐந்து வருடம், கொத்தடிமையாக வைத்திருப்பதும், இதே வகைதான் தோழர். 😂
-
ஒரு யாழ்பாண யூடியூப் காரனுக்கு இருக்கிற பிரச்சினையையும் மன அழுத்தத்தை யும் விடவா உலகத்திலே உங்களுக்கு வேற பிரச்சினை இருக்கப் போகிறது! ,
மிக குறைந்த செலவில் ஒரு வருமானத்தை ஈட்ட முயற்சி எடுப்பது பாராட்டப்பட வேண்டும். (இவர்களுக்கு எளிநாட்டில் இருந்து பணம் அவர்களின் உறவுகளால் கொடுக்கப்பாவிட்டால் அல்லது அப்படி உறவுகள் இல்லாவிட்டால் இன்னும் நன்று) யூடுபே அல்லது க்ஸ் (X) போன்றவற்றில், இலாசமாக இருக்கும் காட்ச்ச்சிகளை , விடயங்களை அல்லாது சிந்தனைகளால் உருவாகும் காட்சிகளை, தமது creative சிந்தனைகளால் இயன்றஅளவு தத்தரூபமாக காட்சிப்படுத்தி, மற்றவர்களை சுண்டி இழுத்து, கட்டி வைத்து குறிப்பிட்ட நேரம் பார்வையாளரை அதில் லயிக்க செய்வதுனு தனித்திறமை. இந்த திறமை, நிறுவன நிர்வாக தலமை இயக்குனரிடம்(CEOs ) எதிர்பார்க்கப்டும் ஒரு முக்கிய திறமை. (capturing and holding the audience எனும் அடிப்படை திறமை) அவர்கள் செய்வது சமூகத்துக்கு பங்கம் விளைவிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உலகில் மூலை முடுக்கில் இருப்பவர்கள் கூட இந்த வருமானத்துக்கு சோதனை செய்கிறாரக்ள் (உ.ம். திபெத்தில் குளிர் காலத்தில் இப்படி வருமானம் யாரும் என்றால் அவரக்ளுக்கு உதய் தானே) விடயம் அறியாமல் நனறாக உழைக்கும் ஒருவர் அல்லது பலரை பார்த்து விடும் ஏக்க மூச்சே இந்த முகநூல் பதிவு. அனால், அவருக்கு கூட இடம் இருக்கிறது. சொல்லி இருக்கு கருத்தை ஆர் வர்ணித்த காட்சிகளை செயட்றக்கை அறிவு மென்பொருளை பாவித்து என்ற்றாலும் உருவாக்கி காட்சி படுத்தி இருக்கலாம். இப்பொது socialfi (wealth generation by social engagement) செல்வத்தின் ஒரு வடிவம் எப்படி செல்வத்தின் தன்மை , போக்குகள் மாறுகிறது என்பதை அறியாத, அறியாமல் மனம் புழங்கும் சிறுபிள்ளைத்தனத்திலும் கீழானது. மற்றது இன்னொருவரின் (தலைமை அல்லது முகாமையாளர்) கட்டாய அறிவுறுத்தல் நிமித்தம் சிரமங்களை எதிர்கொள்ளாமல், அதில் இருக்கும் சிரமங்களை தனது விரும்பிய உழைப்புக்கு இரும் ஏற்றுக்கொள்ளும் நிலையில் வருமானம் ஈட்டும் வழி இருப்பதும், இயலுமானவரை வேலை செய்யும் நேரம் தெரிவு செய்யும் நெகிழ தன்மை இருப்பதும். (இப்போது இருக்கும் ஊன்றிய தலைமுறைக்கு எரிச்சலாக இருக்கலாம்) குறிப்பு: எனக்கு தனிப்பட்ட முறையில் இப்படியானவற்றில் பங்கோ, ஈடுபாடோ இல்லை.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்னும் ஐந்து நாட்களே உள்ளதால் போட்டியில் கலந்துகொள்ள ஆர்வம் உள்ளவர்கள் விரைவில் உங்கள் பதில்களைத் தாருங்கள்.. @நியாயம் , @வீரப் பையன்26 , @suvy ஐயா, @தமிழ் சிறி ஐயா, @குமாரசாமி ஐயா, @நிலாமதி அக்கா, @ரசோதரன் , @நந்தன் , @Eppothum Thamizhan , @கந்தப்பு , @நீர்வேலியான் , @Ahasthiyan , @goshan_che , @பிரபா , @theeya
-
திருகோணமலை , முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்!
பொறாமை....இது யாழ்ப்பாணத்தானுக்கு ...மிக மிக அதிகம் பாருங்கோ..