24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
யாழ் இணயத்தின் லோகோ(LOGO) சின்னம்
வணக்கம் வணாங்காமுடி. முகப்பு வழியாக யாழின் உள்ளே நுளைந்தவுடன் மறுபடி முகப்புக்குச் செல்ல வேண்டிய தேவை இல்லை. ஏனென்றால் முகப்பில் உள்ளவை அனைத்தும் கருத்துக்களத்தில் உள்ளன. அத்துடன் முகப்பும் கருத்துக் களமும் வெவ்வேறு மென்பொருட்கள் (வெவ்வேறு இணையத் தளங்கள் போன்றவை). கருத்துக் களத்திலிருந்து முகப்புக்குப் போக வேண்டிய அவசியம் இருந்தால், மேலுள்ள "முகப்பு" என்ற இணைப்பின் மூலம் செல்லலாம் (தொலைபேசியில் "Menu" இல் உள்ளது).
- Today
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
sStponodregt9thtggc23lc3fg07i40c9tfl2tih018h22t5a 6t130hcaat · 🚗" Ever Wondered What Those Little Colored Plugs in Your Car Are? ⚡" Think of your car's electrical system as a network of "water pipes," but instead of water, it carries electric current. Sometimes, there’s a "surge" (too much electricity), which can catch fire or fry your expensive radio! 📻" 🔥 That’s where Fuses come in—they are the tiny bodyguards of your vehicle. 🛡️ How do they work? A fuse has a small wire inside designed to melt and break the circuit if the electricity gets too high. It literally sacrifices itself to save your car’s components! 🎨" The Secret "Color Code" Each color represents a specific Ampere (A) rating. This tells you how much "pressure" the fuse can handle before it pops: * Red (10A): Usually protects smaller things like Headlights. * Blue (15A): Often for the Radio or power windows. * Yellow (20A): Handles things like Auxiliary outlets (charging your phone). * Green (30A): Used for heavy lifters like the A/C system. * Large Blue (100A): This is the "Big Boss." It protects the Alternator and the main battery charging system. 💡" Pro Tip: If a fuse blows, never replace it with a higher-rated one (e.g., don't put a 30A fuse where a 10A should be). It’s like putting a steel pipe where a safety valve should be—the fuse won't melt, but your wires might! Stay safe and keep your "Craft Skills" sharp! 🛠️"
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
sonSoptdre008ma34ma1g0hh1ca 6hha14a0cg4fmai97gttm11h9i9tu01f · ஜெயிச்சது இந்தியா… ஆனா போராட்டத்தால் மனசை ஜெயிச்சது பெத்தல்! அரையிறுதி… அழுத்தம்… உலகக்கோப்பை கனவு… இந்த மூன்றும் சேரும் போது தான் ஒரு வீரனின் உண்மையான மதிப்பு தெரிய வரும். இன்று நடந்த இந்தியா vs இங்கிலாந்து அரையிறுதி போட்டி அதற்கு ஒரு சிறந்த உதாரணம். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்தது சஞ்சு சாம்சன் தான். Knockout போட்டி என்ற அழுத்தத்திலும் அவர் ஒரு நிமிஷமும் பதட்டப்படாமல் விளையாடினார். 42 பந்துகளில் 89 ரன்கள்… 8 பவுண்டரி, 7 சிக்சர்கள்… இது ஒரு இன்னிங்ஸ் மட்டும் இல்ல, ஒரு Statement. Powerplayலேயே ரன் வேகத்தை உயர்த்தி இந்தியாவை சரியான பாதைக்கு அழைத்துச் சென்றார். ஏற்கனவே வாழ்வா சாவா போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எதிராக இந்தியாவை காப்பாற்றியவர்… இன்று மீண்டும் அதே மாதிரி பெரிய மேடையில் இந்தியாவுக்கு backbone ஆக நின்று இருக்கிறார். இந்தியா இறுதியில் 253 ரன்கள் குவித்தது. அந்த ஸ்கோர் பெரியதாக இருந்தாலும், அரையிறுதிப் போட்டி என்பதால் எந்த நேரத்திலும் மேட்ச் திரும்பலாம் என்ற பதட்டம் இருந்தது. அதற்கான காரணம் இங்கிலாந்து அணியின் இளம் வீரர் ஜேக்கப் பெத்தெல் . எதிரணியாக இருந்தாலும் அவருடைய இன்னிங்ஸ்க்கு நாம தலை வணங்கியே ஆகணும். அவர் ஆடிய அந்த போராட்டம்… அது வெறும் ரன் எடுப்பதல்ல. கடைசி மூச்சு வரை போராடும் ஒரு வீரனின் மனநிலையை காட்டியது. எந்த பவுலர் வந்தாலும் முதல் மூன்று பந்துகளில் ஒரு பவுண்டரி அல்லது சிக்சர் அடித்து அழுத்தத்தை மீண்டும் இந்தியாவிற்கு திருப்பினார். ரன் ரேட்டை கட்டுக்குள் வைத்துக் கொண்டு 18வது ஓவர் வரை இங்கிலாந்தை போட்டிக்குள் வைத்திருந்தது அவர் மட்டும்தான். ஒரு தருணத்தில் கூட “இங்கிலாந்து ஜெயிக்கலாம்” என்று ரசிகர்கள் நினைத்தார்கள். ஆனால் கிரிக்கெட்டில் சில சமயம் ஒரே ஒரு வீரன் போட்டியை மாற்றிவிடுவான். இன்று அந்த வீரன் ஜஸ்ப்ரித் பும்ரா. எல்லா பவுலர்களும் ரன் கொடுத்த நேரத்தில் கூட, பும்ரா மட்டும் ரன்னை கட்டுப்படுத்தினார். 16வது ஓவரில் வெறும் 8 ரன்கள்… 18வது ஓவரில் 6 ரன்கள்… கடைசி இரண்டு ஓவர்களில் மொத்தம் 14 ரன்கள் மட்டும். அந்த இரண்டு ஓவர்கள்தான் இந்த போட்டியின் திருப்புமுனை. அவர் “Boom Boom Bumrah”! இறுதியில் இங்கிலாந்து 246 ரன்களில் முடிந்தது. இந்தியா வெறும் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்கோர்போர்டில் இந்தியா வென்றது என்று எழுதப்பட்டாலும், அந்த மைதானத்தில் இருந்த அனைவரின் மனதையும் கவர்ந்த வீரன் பெத்தெல் தான். அவர் அவுட் ஆன தருணத்தில் இந்திய வீரர்கள் கொண்டாடிய அந்த ஆர்ப்பரிப்பு கூட அவருக்கான மரியாதைதான். இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதை பெற்றவர் சஞ்சு சாம்சன். 42 பந்துகளில் 89 ரன்கள் குவித்து இந்தியாவை வலுவான நிலைக்கு கொண்டு சென்றதற்காக அந்த விருது அவருக்கே உரியது. இந்த உலகக்கோப்பையில் தொடர்ந்து இரண்டாவது முறையாக அவர் அந்த விருதை வென்றுள்ளார். இன்று ஒரு உண்மை மட்டும் தெளிவாக தெரிய வந்தது… பெரிய மேடைகளில் தான் சாம்சன், பெத்தல் போன்ற உண்மையான வீரர்கள் பிறக்கிறார்கள். இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது. ஆனால் இந்த அரையிறுதி போட்டியின் நினைவில் இரண்டு பெயர்கள் எப்போதும் இருக்கும் சஞ்சு சாம்சன்… மற்றும் ஜேக்கப் பெத்தெல். இந்தியா ஜெயிச்சிருக்கலாம்… ஆனா இந்த மேட்ச்சின் அடையாளம் அந்த கடைசி வரை போராடிய இன்னிங்ஸ்தான். 🏏" வாழ்த்துக்கள்! #easternsports | #INDvsENG | #T20WC2026.......!- குட்டிக் கதைகள்.
ntreSpsoodit98c4ugg2i0tm350h38c90 48673m2130uih334ia01619igg · பாரிஸின் பரபரப்பான வீதிகளுக்கு மத்தியில், 18-ஆம் நூற்றாண்டின் பிரெஞ்சுப் புரட்சியின் இருண்ட ரகசியங்களையும், உலகை மாற்றிய சரித்திர நிகழ்வுகளையும் தன்னுள் ஒளித்து வைத்திருக்கும் ஒரு ரகசிய சந்துதான் Cour du Commerce-Saint-André. இந்த குறுகலான கல் பதிக்கப்பட்ட பாதையில் நடந்து செல்வது, ஒரு வரலாற்றுத் திரைப்படத்திற்குள் நுழைவது போன்ற உணர்வைத் தரும். பிரெஞ்சுப் புரட்சி என்றாலே சட்டென்று நினைவுக்கு வருவது 'கில்லட்டின்' (Guillotine) எனப்படும் தலையைத் துண்டிக்கும் இயந்திரம் தான். அந்த கொடூரமான இயந்திரம் முதன்முதலில் உருவானது இந்தச் சந்தில் தான்! மரண தண்டனையை வலியின்றி நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக டாக்டர் கில்லட்டின் என்பவர் ஒரு கருவியை வடிவமைக்கச் சொன்னார். இந்தச் சந்தில் எண் 9-ல் வசித்து வந்த 'டோபியாஸ் ஷ்மிட்' (Tobias Schmidt) என்ற ஜெர்மானிய பியானோ தயாரிப்பாளர் தான் முதல் கில்லட்டின் இயந்திரத்தை மரத்தால் உருவாக்கினார். மனிதர்கள் மீது பயன்படுத்துவதற்கு முன்பு, இந்த இயந்திரம் சரியா வேலை செய்கிறதா என்பதை அறிய, இதே சந்தில் வைத்துத் தான் ஆடுகள் மற்றும் கன்றுகளின் மீது முதன்முதலில் சோதனை செய்யப்பட்டது. அமைதியான இந்தச் சந்தில் இப்படி ஒரு ரத்த சரித்திரம் அரங்கேறியது பலருக்கும் ஆச்சரியம்! இந்தச் சந்து பிரெஞ்சுப் புரட்சியாளர்களின் ரகசியக் கூடாரமாகச் செயல்பட்டது. பிரெஞ்சு புரட்சியின் தீவிரவாதத் தலைவரான Jean-Paul Marat இங்குள்ள 8-ஆம் எண் வீட்டில் தான் வசித்து வந்தார். இங்கு வைத்துதான் அவர் தனது "L'Ami du Peuple" (மக்களின் நண்பன்) என்ற புகழ்பெற்ற செய்தித்தாளை அச்சிட்டார். இந்தச் செய்தித்தாள் தான் பிரெஞ்சு மக்களிடையே மன்னராட்சிக்கு எதிரான கோபத் தீயை மூட்டியது. இதே சந்தில் தான் புரட்சியாளர்கள் கூடி ரகசியத் திட்டங்களைத் தீட்டினார்கள். இந்தச் சந்தின் மற்றொரு மிகப் பெரிய பொக்கிஷம், 1686-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட 'லு புரோகோப்' (Le Procope). இதுவே பாரிஸின் செயல்படும் மிகப்பழமையான கஃபே (Coffeehouse) ஆகும். இது வெறும் உணவகம் அல்ல, உலக வரலாற்றை மாற்றிய பல மேதைகளின் விவாத மேடை! பிரான்சின் புகழ்பெற்ற தத்துவஞானிகளான வால்டேர் (Voltaire), ரூஸோ (Rousseau) போன்றோர் இங்குத் தான் மணிக்கணக்கில் அமர்ந்து விவாதிப்பார்கள் (வால்டேர் தினமும் 40 கப் கோப்பி குடிப்பார் என்று ஒரு கதை உண்டு!). அமெரிக்காவின் நிறுவனர்களில் ஒருவரான பெஞ்சமின் பிராங்க்ளின் (Benjamin Franklin) பிரான்சுக்கு வந்திருந்தபோது இங்கு அமர்ந்துதான் அமெரிக்க அரசியலமைப்பின் சில பகுதிகளை எழுதினார். இளம் இராணுவ அதிகாரியாக இருந்த நெப்போலியன் போனபார்ட், ஒருமுறை இங்கு சாப்பிட்டுவிட்டு பில் கொடுக்க தன்னிடம் பணம் இல்லாததால், தனது தொப்பியை (Bicorne hat) அடமானமாக வைத்துவிட்டுச் சென்றார். அந்தத் தொப்பி இன்றும் இந்த உணவகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது! இன்று நீங்கள் இந்த இடத்திற்குச் சென்றால், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பதிக்கப்பட்ட அதே கற்களின் (Cobblestones) மீது நடக்கலாம். பழமையான இரும்பு விளக்குகள், சிறிய புத்தகக் கடைகள், தேநீர் விடுதிகள் என இந்த இடம் 18-ஆம் நூற்றாண்டின் அழகை அப்படியே பாதுகாத்து வருகிறது. லெ புரோகோப் உணவகத்தில் இன்றும் நீங்கள் சென்று உணவருந்தலாம். வரலாறும், புரட்சியும், கலையும் ஒருங்கே கலந்த ஒரு அரிய இடம் இது......!- ஈரானிய கடற்படை பணியாளர்களை பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்த இலங்கை கடற்படை
இதையே சாட்டாக வைத்து அமெரிக்கா திருகோணமலைக்குள் உள்நுழையலாம்.- ஈரானிய கடற்படை பணியாளர்களை பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்த இலங்கை கடற்படை
இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் இருந்த ஈரான் கடற்படை கப்பல் : 208 கப்பற் பணியாளர்களை பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்த இலங்கை கடற்படை Published By: Vishnu 06 Mar, 2026 | 06:57 AM இலங்கையின் கடற்பரப்பிற்கு அருகில் இருந்த ஈரானிய கடற்படை கப்பலான IRIS Bushehr-இல் பணியாற்றியிருந்த 208 கப்பற் பணியாளர்களையும் இலங்கை கடற்படை பாதுகாப்பாக மீட்டு கரைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. இலங்கை கடற்படையினரின் தகவலின்படி, இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் ஏற்பட்ட அவசர நிலையைத் தொடர்ந்து குறித்த ஈரானிய கடற்படை கப்பலில் இருந்த அனைத்து 208 பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். மீட்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கப்பலில் இருந்த பணியாளர்கள் தற்போது கொழும்பு நோக்கி கரைக்கு கொண்டு வரப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் உதவி நடவடிக்கைகள் இலங்கை கடற்படையினரால் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில், IRIS Bushehr கப்பலை இலங்கை கடற்படை தற்காலிக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து, அதை திருகோணமலை துறைமுகத்திற்குக் கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த நடவடிக்கை பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான காரணங்களை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், கப்பலில் ஏற்பட்ட அவசர நிலைமை குறித்த விவரங்களை உறுதிப்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் இருந்த ஈரான் கடற்படை கப்பல் : 208 கப்பற் பணியாளர்களை பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்த இலங்கை கடற்படை- கருத்து படங்கள்
அத தெரண கருத்துப்படங்கள்.- ஈரானில் இரண்டு ஜப்பானியர்கள் தடுத்து வைப்பு; ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு
ஈரானில் இரண்டு ஜப்பானியர்கள் தடுத்து வைப்பு ; ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு Published By: Digital Desk 3 06 Mar, 2026 | 11:43 AM ஈரானில் இரண்டு ஜப்பானியப் பிரஜைகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை ஜப்பானிய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. ஜப்பானிய பாராளுமன்றத்தின் வெளிவிவகாரக் குழுக் கூட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (06) கலந்துகொண்டு உரையாற்றிய ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் தோஷிமிட்சு மொடேகி இது குறித்த விபரங்களை வெளியிட்டார். தடுத்து வைக்கப்பட்டுள்ள இருவருடனும் ஜப்பான் தொடர்பில் இருப்பதாகவும், தற்போதைய நிலையில் அவர்கள் இருவரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்துள்ளதாகவும் அமைச்சர் மொடேகி தெரிவித்தார். தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவர், ஜப்பானின் அரச ஊடகம் தெஹ்ரான் பணியகத் தலைவர் என நம்பப்படுகிறது. அவர் கடந்த ஜனவரி மாதம் ஈரானிய அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு ஈரான் அரசாங்கத்திடம் ஜப்பான் வலியுறுத்தியுள்ளது. ஈரானில் இரண்டு ஜப்பானியர்கள் தடுத்து வைப்பு; ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு- காணாமல் போன ஊரணி மீனவர்கள்!
காணாமல் போன இலங்கை மீனவர்கள் இந்தியாவில் கண்டுபிடிப்பு Mar 5, 2026 - 07:37 PM யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் இருவர் காணாமல் போன நிலையில் தமிழ்நாடு அரியமான் கடற்பரப்பில் வைத்து தமிழ்நாடு கடலோர காவல் படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவது கடந்த வெள்ளிக்கிழமை குறித்த இரு மீனவர்களும் மீன்பிடிக்கச் சென்ற நிலையில் அவர்களின் படகு பழுதடைந்து இந்திய கடல் எல்லைக்குள் பயணித்துள்ளது. இதனை அவதானித்த இந்திய மீனவர்கள் குறித்த படகினை தமது விசைப் படகால் இழுத்துச் சென்று மீனவர்களுக்கு உணவும் நீரும் வழங்கி இலங்கை கடல் எல்லையில் விட்டு விட்டு சென்றனர். பின்னர் கடல் அலையினால் அடித்துச் செல்லப்பட்ட படகு மீண்டும் இந்திய கடல் எல்லைக்குள் சென்ற நிலையில் இன்றைய தினம் ஏழாவது நாள் தமிழ்நாட்டின் வடக்கு கரையில் வைத்து மீட்கப்பட்டுள்ளது. -யாழ். நிருபர் பிரதீபன்- காணாமல் போன இலங்கை மீனவர்கள் இந்தியாவில் கண்டுபிடிப்பு- உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - மூன்றாவது சந்தேகநபராக பெயரிடப்பட்ட சுரேஷ் சலே
மூன்றாவது சந்தேகநபராக பெயரிடப்பட்ட சுரேஷ் சலே Mar 5, 2026 - 08:16 PM தற்போது தடுப்புக்காவலில் உள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கோட்டை நீதவான் நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கின் மூன்றாவது சந்தேக நபராக இன்று (05) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் பெயரிடப்பட்டுள்ளார். அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, கடந்த பெப்ரவரி 25ஆம் திகதி பேலியகொடையில் வைத்து கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் தற்காலிக ஏற்பாடுகளின் கீழ் சுரேஷ் சலேயை 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சரிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அனுமதி பெற்றுக்கொண்டது. இந்த சூழலில் போதுமான ஆதாரங்கள் இன்றி தனது கட்சிக்காரர் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள உத்தரவை மேல் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்துவதற்காக, இது தொடர்பான வழக்குக் கோப்புகளின் சான்றளிக்கப்பட்ட பிரதிகளை வழங்குமாறு சுரேஷ் சலேயின் சட்டத்தரணிகள் நேற்று (04) கோட்டை நீதவான் நீதிமன்றில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர். தனது கட்சிக்காரரைச் சந்திப்பதற்கு மேலதிக ஒரு நாளை ஒதுக்கித் தருமாறும், அவருக்கு வீட்டிலிருந்து உணவு கொண்டு வருவதற்கு அனுமதி அளிக்குமாறும் சட்டத்தரணிகள் கோரினர். வழக்குக் கோப்புகளின் பிரதிகளை வழங்க நீதவான் உத்தரவிட்ட போதிலும், ஏனைய கோரிக்கைகளை நிராகரித்தார். சுரேஷ் சலேயைக் கைது செய்து தடுப்புக்காவலில் வைத்திருப்பது குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அதுவரை நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்காததே இதற்குக் காரணமாக அமைந்தது. இவ்வாறானதொரு பின்னணியில், சுரேஷ் சலேயைத் தடுப்புக்காவலில் வைத்திருப்பது குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் விடயங்களை அறிக்கையிட்டது. வவுணதீவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை திசைதிருப்பப்பட்டமை, சாய்ந்தமருது வீட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளுடன் தொடர்புடையதாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் நிலுவையில் உள்ள 35882/24 இலக்க வழக்கின் மூன்றாவது சந்தேக நபராக சுரேஷ் சலே பெயரிடப்பட்டுள்ளார். தற்போது தடுப்புக்காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் சந்தேக நபரை, நீதவான் பொருத்தமான ஒரு நாளில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருகை தந்து பார்வையிடுமாறும் திணைக்கள அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதவான், இதற்கான விடயங்களை எழுத்துப்பூர்வமாகப் பதிவு செய்ய உத்தரவிட்டதுடன், விரைவில் அங்கு சென்று சந்தேக நபரைப் பார்வையிடுவதாகவும் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmmdk45af0005356p4812ol20- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்த உலகக் கிண்ணத்தின் சிறந்த வீரருக்கான குறும்பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. வாக்குளை அளிக்கலாம். வில் ஜாக்கஸ் சகிப்சாடா பஃர்கான் லுங்கி ங்கிடி எய்டன் மார்க்ரம் ரச்சின் ரவீந்த்ரா ஸாட்லி வான் ஸால்க்விக் ரிம் ஸிபேஃட் சாஞ்ஜு சாம்சன் iccICC Men's T20 World Cup, 2026 | ICCOfficial ICC Men’s T20 World Cup, 2026 website – live cricket scores, fixtures, results, teams, rankings, news, videos and exclusive updates from the International Cricket Council.- கருத்து படங்கள்
- குருநகர் இறங்குதுறையிலிருந்து புறப்பட்ட படகு விபத்து…! நீரில் மூழ்கிய பலர் – மீட்பு நடவடிக்கை தீவிரம்
குருநகர் இறங்குதுறையிலிருந்து புறப்பட்ட படகு விபத்து…! நீரில் மூழ்கிய பலர் – மீட்பு நடவடிக்கை தீவிரம். குருநகர் இறங்குதுறையிலிருந்து புதிய அந்தோனியர் ஆலயத்திற்குப் புறப்பட்ட படகு ஒன்று நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்துச் சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் “ஆலயத்திற்குச் சென்ற பயணிகள் படகு ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த படகில் முதியவர்கள், சிறுவர்கள், பெண்கள் எனப் பலர் நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில், அவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் அப்பிரதேச கடற்றொழிலாளர்கள் உடனடியாக ஈடுபட்டுள்ளனர். இதில் மூன்று பேர் கரைக்குக் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதனால் அங்கு பரபரப்பான சூழல் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1467362- இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு: 6 புதிய துணை நிறுவனங்கள் உருவாக்கம்!
இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு: 6 புதிய துணை நிறுவனங்கள் உருவாக்கம்! Published By: Digital Desk 1 06 Mar, 2026 | 10:52 AM இலங்கை மின்சார சபையின் செயல்பாடுகள் மற்றும் கடமைகளைத் தனித்தனியாகப் பிரித்து, ஆறு துணை நிறுவனங்களை நிறுவுவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி வெளியிட்டுள்ளார். குறித்த வர்த்தமானி அறிவித்தலின்படி, இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் 09ஆம் திகதி முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரவுள்ளது அதன்படி, மின்சார உற்பத்தி, கடத்தல் (Transmission), விநியோகம் மற்றும் கட்டமைப்பு செயல்பாடுகள் ஆகியவற்றை நிர்வகிக்கும் வகையில் ஆறு தனித்தனி துணை நிறுவனங்கள் உருவாக்கப்படவுள்ளன. சில குறிப்பிட்ட சரத்துக்களைத் தவிர, 2024ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் ஏனைய அனைத்து விதிகளும் எதிர்வரும் 09ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகின்றன. இதன் மூலம் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இலங்கை மின்சாரசபையின் மறுசீரமைப்பு பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளன. இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு: 6 புதிய துணை நிறுவனங்கள் உருவாக்கம்!- தெஹ்ரானுக்கு எதிரான போராட்டத்தில் ஈரானிய குர்துகள் இணையுமாறு ட்ரம்ப் ஊக்குவிப்பு!
தெஹ்ரானுக்கு எதிரான போராட்டத்தில் ஈரானிய குர்துகள் இணையுமாறு ட்ரம்ப் ஊக்குவிப்பு! மத்திய கிழக்கு மோதல்கள் விரிவடைந்ததால் ஈராக்கில் உள்ள ஈரானிய குர்திஷ் படைகள் ஈரானுக்கு எதிராக தாக்குதல்களை நடத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஊக்குவித்தார். அதேநேரம் அசர்பைஜான், ஈரானிய ஏவுகணைகளால் குறிவைக்கப்படுவதற்கு பதிலடி கொடுக்கும் என்றும் எச்சரித்தார். இதேவேளை, வளைகுடா நகரங்கள் ஈரானால் மீண்டும் குண்டுவீச்சுக்கு உள்ளானதால், தெஹ்ரானில் உள்ள உள்கட்டமைப்பு இலக்குகளுக்கு எதிராக “பரந்த அளவிலான” தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக இஸ்ரேல் வெள்ளிக்கிழமை (06) தெரிவித்துள்ளது. ஏழு நாள் போரில் ஈரான் இஸ்ரேல், வளைகுடா நாடுகள், சைப்ரஸ், துருக்கி மற்றும் அசர்பைஜான் ஆகிய நாடுகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இலங்கை அருகே அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஈரானிய கடற்படைக் கப்பலை மூழ்கடித்தமையினால் இந்த மோதல் மேற்கு ஆசியாவுக்கு அப்பால் இந்தியப் பெருங்கடல் வரை பரவியது. வியாழக்கிழமை ஈராக்கிய குர்திஸ்தானில் உள்ள ஈரானிய எதிர்ப்பு முகாமை குறிவைத்து இரண்டு ஈரானிய ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. ஈரானிய குர்திஷ் போராளிகள், நாட்டின் மேற்குப் பகுதியில் ஈரானின் பாதுகாப்புப் படைகளைத் தாக்கலாமா, எப்படித் தாக்குவது என்பது குறித்து அண்மைய நாட்களில் அமெரிக்காவுடன் ஆலோசனை நடத்தியதாக, இந்த விடயத்தைப் பற்றிய அறிவுள்ள மூன்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை, கடந்த வாரம் வான்வழித் தாக்குதல்களில் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட பிறகு, ஈரானின் அடுத்த தலைவர் யார் என்பதை தீர்மானிப்பதில் அமெரிக்காவிற்கு ஒரு பங்கு இருக்க வேண்டும் என்றும் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்கு ஒரு தொலைபேசி நேர்காணலில் பேசிய ட்ரம்ப் கூறியுள்ளார். இதன்போது, ஈரானுடன் சேர்ந்து அந்த நபரை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். நாட்டின் அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுப்பது குறித்து ட்ரம்ப் என்ன சொன்னாலும், ஈரானில் அமெரிக்கா தனது இராணுவ நோக்கங்களை விரிவுபடுத்தவில்லை என்று அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் வியாழக்கிழமை தெரிவித்தார். இந்தப் பதட்டங்களுக்கு மத்தியில் உலகெங்கிலும் உள்ள நாடுகள் எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவின் உலகளாவிய விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கை துண்டித்து, உலகளாவிய தளவாடங்கள் பெருகிய முறையில் குழப்பத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், பொருளாதார தாக்கம் பிரச்சாரத்தின் புதிய கட்டத்தைத் தீவிரப்படுத்தியதால், வியாழக்கிழமை வால் ஸ்ட்ரீட்டின் பங்குகள் சரிந்தன. பதிலடி கொடுக்கத் தயாராகும் அசர்பைஜான் நக்சிவன் பகுதியில் நான்கு ஈரானிய ட்ரோன்கள் அதன் எல்லையைக் கடந்து நான்கு பேரைக் காயப்படுத்தியதாகக் கூறியதை அடுத்து, வியாழக்கிழமை அசர்பைஜான் குறிப்பிடப்படாத பழிவாங்கும் நடவடிக்கைகளைத் தயாரித்து வந்தது. அசர்பைஜானுக்கு எதிரான இந்த பயங்கரவாத மற்றும் ஆக்கிரமிப்புச் செயலை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ் தனது பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கூறினார். எனினும், அசர்பைஜானில் கணிசமான சிறுபான்மையினரைக் கொண்ட ஈரான், தனது அண்டை நாட்டை குறிவைத்ததை மறுத்தது. ஹெஸ்பொல்லா போராளிகள் இஸ்ரேலியர்களுக்கு எச்சரிக்கை லெபனானின் ஈரான் ஆதரவு பெற்ற ஹெஸ்பொல்லா போராளிகள், வெள்ளிக்கிழமை (06) அதிகாலை எபிரேய மொழியில் அதன் டெலிகிராம் சேனலில் வெளியிடப்பட்ட செய்தியில், நாடுகளுக்கு இடையிலான எல்லையிலிருந்து 5 கிமீ (3 மைல்) தொலைவில் உள்ள நகரங்களை காலி செய்யுமாறு இஸ்ரேலிய குடியிருப்பாளர்களை எச்சரித்தனர். லெபனான் இறையாண்மைக்கும் குடிமக்களைப் பாதுகாப்பதற்கும் எதிரான உங்கள் இராணுவத்தின் ஆக்கிரமிப்பு, பொதுமக்களின் உள்கட்டமைப்பை அழித்தல் மற்றும் அது மேற்கொண்டு வரும் வெளியேற்ற நடவடிக்கை ஆகியவை சவால் செய்யப்படாமல் இருக்காது என்று ஹெஸ்பொல்லா கூறினார். போதுமான வெடி பொருட்கள் உள்ளதாக அமெரிக்கா தெரிவிப்பு மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகளுக்குத் தலைமை தாங்கும் ஹெக்செத் மற்றும் அட்மிரல் பிராட் கூப்பர், அமெரிக்கா தனது குண்டுவீச்சை காலவரையின்றித் தொடர போதுமான வெடிமருந்துகளைக் கொண்டிருப்பதாக நடவடிக்கைகள் குறித்த விளக்கக் கூட்டத்தில் தெரிவித்தனர். அமெரிக்கா இப்போது குறைந்தது 30 ஈரானிய கப்பல்களைத் தாக்கியுள்ளதாக இதன்போது கூப்பர் கூறினார். இதில் இரண்டாம் உலகப் போரின் விமானம் தாங்கி கப்பலின் அளவு என்று அவர் கூறிய ஒரு பெரிய ட்ரோன் தாங்கி கப்பல் அடங்கும். கடந்த சில மணிநேரங்களில் B-2 குண்டுவீச்சு விமானங்கள் ஈரானில் ஆழமாகப் புதைக்கப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை ஏவுகணைகளை குறிவைத்து டஜன் கணக்கான ஊடுருவல் குண்டுகளை வீசியதாகவும், தெஹ்ரானின் ஏவுகணை உற்பத்தி வசதிகளையும் குறிவைத்து குண்டுவீச்சுகள் நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார். போரின் முதல் நாளிலிருந்து ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்கள் 90% குறைந்துள்ளன, அதே நேரத்தில் அந்தக் காலகட்டத்தில் ட்ரோன் தாக்குதல்கள் 83% குறைந்துள்ளன என்றும் அவர் கூறினார். https://athavannews.com/2026/1467352- 'இந்தியா ரஷ்யாவிடம் 30 நாள் கச்சா எண்ணெய் வாங்கலாம்' - அமெரிக்கா கூறியது என்ன?
'இந்தியா ரஷ்யாவிடம் 30 நாள் கச்சா எண்ணெய் வாங்கலாம்' - அமெரிக்கா கூறியது என்ன? பட மூலாதாரம்,Getty Images ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதற்கு இந்தியாவுக்கு அமெரிக்கா '30 நாள் விலக்கு' வழங்கியுள்ளது. சர்வதேச சந்தையில் எண்ணெய் விநியோகத்தை பராமரிக்க, அமெரிக்க கருவூலத் துறை இந்திய சுத்திகரிப்பு நிலையங்களுக்கு ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க 30 நாள் விலக்கு அளித்துள்ளதாக அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசன்ட் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஒரு கட்டத்தில், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்கா கூடுதலாக 25 சதவீத வரியை விதித்ததால், இந்தியா மீதான அமெரிக்காவின் மொத்த வரி 50 சதவீதமாக உயர்ந்திருந்தது. கடந்த பிப்ரவரி மாதத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக உறுதியளித்துள்ளது. இந்தியாவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தம் செய்யப்படுகிறது. இந்தியா மீது விதிக்கப்பட்ட 50 சதவீத வரி 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார். ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியைக் குறைக்காவிட்டால், இந்தியா மீதான வரி 18% இலிருந்து 25% ஆக உயர்த்தப்படும் எனறு டிரம்ப் அச்சுறுத்தியிருந்தார், இது யுக்ரேனுக்கு எதிராகப் போர் தொடுக்கும் ரஷ்யா மீது அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், நாட்டின் 140 கோடி மக்களின் எரிசக்தி தேவைகள் மற்றும் பாதுகாப்பு தன்னுடைய முதன்மையான முன்னுரிமையாக இருக்கும் என்று இந்தியா கூறியிருந்தது. ரஷ்ய எண்ணெயை இறக்குமதி செய்து சுத்திகரிக்கும் இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் பின்னர் பல நாடுகளுக்கு பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்து வருகின்றன. பட மூலாதாரம்,Getty Images அமெரிக்கா கூறியது என்ன? இந்திய சுத்திகரிப்பு நிலையங்களுக்கு '30 நாள் எண்ணெய் கொள்முதல்' விலக்கை அறிவித்த அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் தனது எக்ஸ் பக்கத்தில், "அதிபர் டிரம்பின் எரிசக்தி கொள்கையால் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது." "உலக சந்தைக்கு தொடர்ந்து எண்ணெய் விநியோகத்தை உறுதி செய்வதற்காக, அமெரிக்க கருவூலத் துறை இந்திய சுத்திகரிப்பு நிலையங்கள் ரஷ்ய எண்ணெயை வாங்க அனுமதிக்கும் 'தற்காலிக 30 நாள் விலக்கை' அளிக்கிறது." "இது மிகக் குறுகிய காலத்திற்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது, எனவே இது ரஷ்ய அரசாங்கத்திற்கு குறிப்பிடத்தக்க நிதி நன்மையை வழங்காது, ஏனெனில் இது ஏற்கனவே கடலில் சிக்கித் தவிக்கும் எண்ணெயை உள்ளடக்கிய எண்ணெய் ஒப்பந்தங்களை மட்டுமே அனுமதிக்கிறது." "இந்தியா அமெரிக்காவின் ஒரு முக்கியமான பங்காளியாகும், அமெரிக்க எண்ணெய் கொள்முதலை இந்தியா அதிகரிக்கும் என்று நாங்கள் முழுமையாக எதிர்பார்க்கிறோம்." "உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கு இடையூறு செய்வதை ஒரு ஆயுதமாக பயன்படுத்தும் இரானின் முயற்சியால் உருவான அழுத்தத்தைக் குறைக்க இந்த தற்காலிக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது." இரான் போர் ஏற்கனவே உலகளாவிய எண்ணெய் விநியோகச் சங்கிலியைப் பாதிக்கத் தொடங்கியுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நடந்து வரும் தாக்குதல்களும், ஹோர்முஸ் நீரிணையைச் சுற்றி அதிகரித்து வரும் பதற்றங்களும் சர்வதேச எண்ணெய் சந்தையை சீர்குலைத்துள்ளன. இரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களுக்குப் பிறகு, ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக இரான் அறிவித்தது, எந்தக் கப்பலையும் அவ்வழியாகச் செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று இரான் எச்சரித்தது. இது உலகின் மிக முக்கியமான கடல் பாதையாகும். உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் 20 சதவீதம் இதன் வழியாகவே செல்கிறது. இந்தியா தனது எண்ணெய் விநியோகத்தில் 40 சதவீதத்தை ஹோர்முஸ் ஜலசந்தியிலிருந்து பூர்த்தி செய்கிறது. பட மூலாதாரம்,ANDREW CABALLERO-REYNOLDS/AFP via Getty Image இந்தியாவில் எண்ணெய் பற்றாக்குறை வருமா? பிபிசி செய்தியாளர் சவுதிக் பிஸ்வாஸின் கூற்றுப்படி, இந்தியாவில் தற்போது எண்ணெய் மற்றும் எரிவாயு பற்றாக்குறை இல்லை, ஆனால் ஹோர்முஸ் நீரிணையைச் சுற்றி நடந்து வரும் மோதல், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மிகவும் குறுகிய கடல் பாதையை எவ்வாறு சார்ந்துள்ளது என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. சமீபத்திய நாட்களில் இந்தப் பகுதியில் கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடந்துள்ளன. ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதாகவும், அவ்வழியாக செல்லும் கப்பல்கள் தாக்குதலுக்கு இலக்காகலாம் என்றும் இரான் எச்சரித்துள்ளது. இந்தியாவிற்கு இந்த ஆபத்து மிகப்பெரியது, ஏனெனில் இந்தியா தன் கச்சா எண்ணெய் தேவைகளில் சுமார் 90 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் சுமார் 25 முதல் 27 லட்சம் பீப்பாய்கள் இந்த வழித்தடம் வழியாகவே தினசரி வருகின்றன. இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் இராக், சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் குவைத்தில் இருந்து வருகிறது. முதலீட்டு நிறுவனமான ஜெஃப்ரிஸின் கூற்றுப்படி, கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு $10 அதிகரித்தால், இந்தியாவில் பணவீக்கம் சுமார் 0.2 முதல் 0.25 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும். கடல்சார் புலனாய்வு நிறுவனமான கெப்ளரைச் சேர்ந்த ஆய்வாளர் சுமித் ரிட்டோலியா பிபிசி செய்தியாளர் சௌதிக் பிஸ்வாஸிடம் பேசுகையில், "இந்தியாவில் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் சேமிப்புக் கிடங்குகளில் சுமார் 100 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் உள்ளது. இதில் சுமார் 80 சதவீதம் பயன்படுத்தப்படலாம், இது சுமார் 30 முதல் 35 நாட்களுக்கு தேவைகளைப் பூர்த்தி செய்யும்." என்றார். கூடுதலாக, டீசல் மற்றும் விமான எரிபொருள் போன்ற சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களின் முக்கிய ஏற்றுமதியாளராகவும் இந்தியா உள்ளது. எனவே, தேவைப்பட்டால், உள்நாட்டு விநியோகத்தைப் பராமரிக்க இந்தியா இந்த ஏற்றுமதிகளைக் குறைக்கலாம். தற்போதைய சூழ்நிலையைச் சமாளிக்க போதுமான அளவுக்கு எண்ணெய் இருப்பு இருப்பதாக இந்திய அரசாங்கம் தெளிவாகக் கூறியுள்ளது. நிபுணர்களின் கருத்தும் அரசாங்கத்தின் அறிக்கையுடன் ஒத்துப்போகிறது. பொதுவாகத் தற்போதைய போர் ரஷ்யா-யுக்ரேன் போரைப் போல நீண்ட காலம் நீடிக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல நிபுணர்கள் 15 நாட்களுக்கு மேல் சண்டை தொடர்ந்தால், அது இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்றும் கூறியுள்ளனர். 74 நாளுக்கு போதுமான எண்ணெய் இருப்பு: இந்திய அரசு பட மூலாதாரம்,Dhiraj Singh/Bloomberg via Getty ஜனவரியில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மாநிலங்களவையில் கூறுகையில், ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் சேமிப்பு வசதிகளில் வைக்கப்பட்டுள்ள கச்சா எண்ணெய், உள்நாட்டுத் தேவையை 74 நாட்களுக்குப் பூர்த்தி செய்யப் போதுமானது என்றார். கச்சா எண்ணெய் இருப்பு 25 நாட்கள் வரை போதுமானது, அதே நேரத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற பெட்ரோலியப் பொருட்களின் இருப்பு அடுத்த 25 நாட்களுக்கான தேவையை பூர்த்தி செய்ய போதுமானது என்று அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஏஎன்ஐ செய்தி நிறுவனம் கூறுகிறது. இது குறுகிய கால விநியோக அதிர்ச்சிகளைச் சமாளிக்க வைக்கப்பட்டுள்ள உத்தி ரீதியான இருப்பிலிருந்து வேறுபட்டது. இரான் டிரோன் தாக்குதலுக்குப் பிந்தைய எதிர்பாராத சூழ்நிலைகளை சுட்டிக்காட்டி இயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தி வைக்கப் போவதாக சர்வதேச சந்தையில் அதன் மிகப்பெரிய விநியோகஸ்தரான கத்தார் கூறியுள்ளது. இந்தியா தனது சுமார் 2.7 கோடி டன் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு இறக்குமதியில் 40 சதவீதத்தை கத்தாரிலிருந்து வாங்குகிறது. எரிவாயு இறக்குமதி செய்யும் நிறுவனமான பெட்ரோநெட் எல்என்ஜி லிமிடெட் சப்ளையில் உள்ள இடையூறுகள் குறித்து தனது வாடிக்கையாளர்களான கெயில் இந்தியா மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு 'இந்தியா ரஷ்யாவிடம் 30 நாள் கச்சா எண்ணெய் வாங்கலாம்' - அமெரிக்கா கூறியது என்ன?- வடக்கில் கால்நடை விவசாயத்திற்கு ‘மௌனப் பேரழிவு’ – எம்.பி. அடைக்கலநாதன்
வடக்கில் கால்நடை விவசாயத்திற்கு ‘மௌனப் பேரழிவு’ – எம்.பி. அடைக்கலநாதன் Published By: Vishnu 06 Mar, 2026 | 05:39 AM ( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) வடக்கு மாகாண கால்நடை விவசாயத்தை ஒரு 'மௌனப் பேரழிவு' தாக்கியுள்ளது. திடீர் வெப்பநிலை குறைவு மற்றும் தொடர்ச்சியான மழை காரணமாக, கடந்த 48 மணி நேரத்திற்குள் ஆயிரக்கணக்கான கால்நடைகளும் ஆடுகள் கோழிகள் உயிரிழந்துள்ளன. இது வெறும் விலங்குகளின் இழப்பு மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கிராமியப் பொருளாதாரத்தின் முழுமையான வீழ்ச்சியாகும். என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (5) நடைபெற்ற அமர்வின் போது நிலையியற் கட்டளை 27/2 இல் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, அண்மைய காலநிலை பேரழிவைத் தொடர்ந்து, வடக்கு மாகாணத்தில் குறிப்பாக மன்னார். முல்லைத்தீவு வவுனியா,கிளிநொச்சி,மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாரதூரமான நெருக்கடி நிலை குறித்து, விவசாய,கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரின் அவசர கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றேன். நாடு பயிர்ச் சேதங்கள் குறித்து கவனம் செலுத்தி வரும் வேளையில்,எமது கால்நடை விவசாயம் மீது ஒரு 'மௌனப் பேரழிவு' தாக்கியுள்ளது. திடீர் வெப்பநிலை குறைவு மற்றும் தொடர்ச்சிய மழை காரணமாக, 48 மணி நேரத்திற்குள் ஆயிரக்கணக்கான கால்நடைகளும் ஆடுகளும் மற்று கோழிகள் உயிரிழந்துள்ளன. இது வெறும் விலங்குகளின் இழப்பு மட்டுமல்ல, ஆயிரக்கணக்க குடும்பங்களின் கிராமியப் பொருளாதாரத்தின் முழுமையான வீழ்ச்சியாகும். ஆரம்பகட்ட அறிக்கைகளின்படி, வடக்கு மாகாணத்தில் ஆயிரக்கணக் மாடுகள் மற்றும் எருமைகளும், மற்றும் ஆடுகளும் உயிரிழந்துள்ளன.இறப்புக்கு சராசரி வெப்பநிலையை விட கணிசமாகக் குறைந்த கடும் குளிர் மற்றும் மேய்ச்சல் நிலங்களில் இருந்த கால்நடைகளுக்குப் போதிய தங்குமிட வசதி இல்லாமையுமே இதற்குக் காரணம் என கால்நடை மருத்துவ அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன. நீண்டகால பால் உற்பத்தி இழப்பைத் தவிர்த்து,நேரடியாக கால்நடைகளின் பெறுமதி மட்டும் சுமார் 150 மில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.எனவே உயிரிழந்த கால்நடைகள் குறித்து அமைச்சு முறையான கணக்கெடுப்பை நடத்தி,ஒரு தெளிவான தரவுத் தொகுப்பை உருவாக்கியுள்ளதா? வடக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட மாடு மற்றும் எருமை உரிமையாளர்கள் கோழிபாண்ணையாளர்களுக்கும், அதேபோல் தொடர்புடைய பண்ணை உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு அமைச்சு எவ்வளவு இழப்பீடு வழங்கியுள்ளன? ஏற்கனவே பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீண்டு வரும் விவசாயிகளுக்கு, உயிரிழந்த ஒவ்வொரு கால்நடைக்கும் உடனடி இழப்பீட்டுத் தொகுப்பை வழங்க அரசாங்கம் முன்வருமா? பலவீனமான நிலையில் இருக்கும் எஞ்சிய கால்நடைகளுக்கு அவசர விற்றமின்கள் மற்றும் மருத்துவ சிகிச்சைகளை வழங்க கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? இது போன்ற அனர்த்தங்களுக்கு உள்ளாகும் வடக்கு மேய்ச்சல் நிலங்களில், வானிலையைத் தாங்கக்கூடிய கால்நடைத் தொழுவங்களை அமைப்பதற்கு மானியங்களை வழங்க அரசாங்கம் நீண்டகாலத் திட்டத்தைக் கொண்டுள்ளதா?இந்த விவசாயிகளே எமது குழந்தைகளின் பசியைத் தீர்க்கும் பாலை வழங்குகிறார்கள். அவர்கள் தம்மால் கையாள முடியாத ஒரு காலநிலை பேரழிவினால் மேலும் கடனாளிகளாக மாற நாம் அனுமதிக்க முடியாது என்றார். வடக்கில் கால்நடை விவசாயத்திற்கு ‘மௌனப் பேரழிவு’ – எம்.பி. அடைக்கலநாதன்- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
ஈரானுக்கு எதிரான போர் அடுத்த கட்டத்தை நோக்கி Mar 6, 2026 - 06:55 AM ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை அமைப்புகளைக் குறிவைத்து ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருமுறை அமெரிக்கப் படைகள் தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்தி வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்வொன்றில், ஈரானுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், தமது நாடு தற்போது போரின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக இஸ்ரேலிய இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். உடனடியாக ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடையுமாறு ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை மற்றும் பொலிஸாரை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவுறுத்தியுள்ளார். அவர்கள் அவ்வாறு செய்தால் அவர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கப்படும் என்றும், இல்லையெனில் அவர்கள் நிச்சயம் மரணத்தை சந்திக்க நேரிடும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி எச்சரித்துள்ளார். அத்துடன் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் அனைத்து உறுப்பினர்களுக்கும், இராணுவம் மற்றும் பொலிஸாருக்கும் நான் மீண்டும் ஒருமுறை வேண்டுகோள் விடுக்கிறேன், உங்கள் ஆயுதங்களைக் கீழே போடுங்கள். நீங்கள் அவ்வாறு செய்தால், நீங்கள் முழுமையாகப் பாதுகாக்கப்படுவீர்கள். ஆனால், நீங்கள் அதைச் செய்யாவிட்டால், நீங்கள் நிச்சயமாக மரணத்தை சந்திக்க நேரிடும். அது நடப்பதை நான் பார்க்க விரும்பவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். ஈரானுக்கு எதிரான போர் அடுத்த கட்டத்தை நோக்கி- ஜனாதிபதி விசேட ஊடகவியலாளர் சந்திப்பு : மத்திய கிழக்கு மோதலில் நடுநிலை – நிலம், கடல், வான்வழி பயன்பாட்டிற்கு அனுமதி இல்லை
ஜனாதிபதி விசேட ஊடகவியலாளர் சந்திப்பு : மத்திய கிழக்கு மோதலில் நடுநிலை – நிலம், கடல், வான்வழி பயன்பாட்டிற்கு அனுமதி இல்லை Published By: Vishnu 06 Mar, 2026 | 05:08 AM தற்போதைய மத்திய கிழக்கு மோதலின் போதும் சர்வதேச ரீதியிலான எந்தவொரு மோதல்களின் போதும் நாம் நடுநிலை வகிக்கும் நிலைப்பாட்டிலே இருந்தோம். எமது நிலம், எமது கடற்பரப்பு, எமது வான் பரப்பு என்பவற்றை மோதல்களின் போது எந்த வகையிலும் எந்தவொரு நாட்டிற்கும் சார்பாகவோ எந்தவொரு நாட்டிற்கும் பாதிப்பு ஏற்படும் வகையிலோ பயன்படுத்த அனுமதிப்பதில்லை என்பதே எமது நிலைப்பாடாகும். மோதல் ஆரம்பமான சந்தர்ப்பம் முதல் நாம் மேற்கொண்ட நடவடிக்கைகள் எமது அறிவிப்புகள் என்பன எமது நிலைப்பாட்டிற்குட்பட்டதாகவே முன்னெடுக்கப்பட்டன. இந்த நிலையிலே இரு ஈரான் நாட்டு கப்பல்கள் தொடர்பான பிரச்சினை எழுந்துள்ளது. அதிலும் நாம் நடுநிலையையே பின்பற்றியுள்ளோம். நாடென்ற வகையில் எந்த வகையிலும் நடுநிலையை பாதுகாக்கும் அதே சமயம் மனிதாபிமானத்திற்கு முதன்மையளிக்கிறோம். மனித உயிர்களை பாதுகாக்க ஒருபோதும் பின்நிற்க மாட்டோம். கடந்த மாதம் 26 ஆம் திகதி எமது நாட்டு வெளிவிவகார அமைச்சின் ஊடாக மார்ச் 9 முதல் 13 வரை எமது துறைமுகத்திற்கு வருகை தர அனுமதி வழங்குமாறு ஈரான் கோரியிருந்தது. ஒத்துழைப்பை மேம்படுத்துவற்கான விஜயமாக அது குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பில் நாம் ஆராய்ந்ததில் எமது நாட்டு கடற்பரப்பிற்கு அருகில் அதற்கு வெளியில் ஈரான் கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்தன.ஒத்துழைப்பு விஜயங்கள் அவ்வாறு முன்னெடுக்கப்படுவதில்லை. அதற்குப் பல செயற்பாடுகள் இருக்கின்றன. அது தொடர்பில் நாம் ஆராய்ந்து கொண்டிருந்தோம். இந்த நிலையில் நாம் தற்பொழுது எமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ள கப்பலில் இருந்த கடற்படை வீரர் ஒருவர் காயமடைந்துள்ளதாக கடந்த மாதம் 27 ஆம் திகதி எமக்கு அறிவிக்கப்பட்டது. அவரையும் அதிகாரி ஒருவரையும் கரைக்கு எடுத்து வர அனுமதி கோரியிருந்தனர். அதற்கமைய அவர்களை அழைத்து வந்து தேவையான சிகிச்சைகளை வழங்கினோம். இந்த நிலையில் தான் கடந்த 4 ஆம் திகதி அதிகாலை 5.08- 5.30 ற்கும் இடைப்பட்ட நேரத்தில் காலி துறைமுகத்தில் இருந்து 19 கடல் மைல் தொலைவில் கப்பலொன்றுக்கு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும் அந்தப் பிரதேசத்தில் அனர்த்த சமிக்ஞை எழுப்பப்பட்டிருந்தது. எமது கடற்படையும் விமானப் படையும் பாரிய முன்னெடுப்பில் ஈடுபட்டன. நாம் பக்கசார்பற்றவர்கள் என்பதைப் போன்றே மனிதாபிமானம் கொண்டவர்கள். பலர் அனர்த்தத்திற்கு முகங்கொடுத்திருந்தனர். எனவே எமது கடற்படையினரும் விமானப் படையினரும் துரிதமாக தலையிட்டு 32 பேரை மீட்டனர். 84 பேரின் சடலங்கள் மீட்க்கப்பட்டன. அந்த சடலங்களையும் காயமடைந்தவர்களையும் கரைக்கு எடுத்து வந்தோம். காயமடைந்தோர் கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றனர். அனர்த்தத்திற்கு முகங்கொடுத்த IRIS கப்பலில் இருந்து 4 அல்லது 5 ஆம் திகதியில் எமது துறைமுகத்தில் நங்கூரமிட வெளிவிவகார அமைச்சின் ஊடாக கோரிக்கை முன்வைத்திருந்தனர். நாம் அது குறித்து ஆராய்ந்து கொண்டிருந்தோம். எமது வெளிவிவகார அமைச்சர் , ஈரான் வெளிவிவகார அமைச்சருடன் இது தொடர்பில் கலந்துரையாடினார். தூதரக பாதுகாப்பு அதிகாரிகளுடன் பாதுகாப்பு தரப்பினரும் கூட ஆராய்ந்தனர். கப்பலின் ஒரு இயந்திரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக எமக்கு அறிவிக்கப்பட்டது. எமது கடற்பரப்பில் பின்பற்றப்படவேண்டிய சர்வதே உடன்பாடுகள் உள்ளன. யுத்தத்துடன் தொடர்புள்ள ஒரு தரப்பிற்குரிய கடற்படை கப்பல் என்பதால் நடுநிலையான நாடு என்ற வகையில் எவ்வாறு அவ்வாறான கப்பல் தொடர்பில் செயற்படுவது என்பது குறித்தும் ஐ.நா. சமுத்திர சட்டம், 1907 ஹேக் சட்டம் ஊடாக வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் என்பவற்றின் அடிப்படையில் அவர்களுடன் தொடர்ச்சியாக கலந்துரையாடினோம். இது சாதாரண நிலைமை அல்ல. நடுநிலையான நாட்டில் ஒரு தரப்பிற்குரிய கப்பலொன்று எமது துறைமுகத்திற்கு பிரவேசிக்க அனுமதி கோரப்பட்டிருந்தது. அதனை சர்வதேச சட்டங்கள் மற்றும் சர்வதேச உடன்பாடுகளுக்கு அமையவே கையாள வேண்டும். இதனை அவசரப்பட்டு செய்ய முடியாது. சட்டங்கள் மற்றும் சர்வதேச பிணைப்புகள் தொடர்பில் இருதரப்பும் ஒரு புரிந்துணர்விற்கு மற்றும் உடன்பாட்டிற்கு வர வேண்டும். எமது கடற்படை அதிகாரிகளும் அந்த கப்பலின் மாலுமியுடனும் ஈரான் தூதரகத்துடனுடன் கலந்துரையாடினார்கள். இந்த கலந்துரையாடலின் பின்னர் கப்பலில் உள்ளவர்களையும் கப்பலையும் எமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர நாம் தயார் என அறிவித்தோம். கப்பலில் இருப்போரை மீட்கவும் கப்பலை நங்கூரமிடும் இடம் தொடர்பிலும் பொது உடன்பாட்டிற்கு வந்தோம். கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலே இந்த கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது. கொழும்பு துறைமுகம் எமது பிரதான வர்த்தக துறைமுகமாகும். இந்த கப்பலை இங்கு நிறுத்துவது எமது கடல் சார்ந்த வர்த்தகத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தும். சில கப்பல் நிறுவனங்கள் தமது காப்புறுதி கட்டணங்களை அதிகரிக்கும் நிலை ஏற்படலாம். அதனால் அந்த கப்பலை திருகோணமலைக்கு எடுத்துச் செல்ல முடிவு செய்தோம். கப்பலில் இருப்போரை கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வருவதற்காக எமது கடற்படையினர் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 208 பேர் கரைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில் 53 அதிகாரிகளும் 84 கெடட் அதிகாரிகளும் 48 சிரேஸ்ட கடற்படையினரும் 23 கடற்படையினரும் உள்ளனர். அவர்களை எமது படகுகளில் ஏற்றி கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்துள்ளோம். அதன் பின்னர் ஈரான் கடற்படையினரும் எமது கடற்படையினரும் இணைத்து கப்பலை திருகோணமலைக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுப்பார்கள். எனவே நாம் தெளிவான நிலைப்பாட்டையே பின்பற்றுகிறோம். எந்த நாட்டுக்கு பக்கசார்பாகவோ எந்த நாட்டுக்கு அடிபணிந்தோ நாம் செயற்பட மாட்டோம். எமது நாடு இறையான்மையுள்ள நாடு. அரசாங்கமென்ற வகையில் எமது கடற்பரப்பு தொடர்பிலும் எமது நாடு தொடர்பிலும் எமது மக்கள் தொடர்பிலும் எமக்குப் பொறுப்புள்ளது. அவையும் எமக்கு முக்கியமானவை. அவற்றுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் அன்றி எமது மக்கள் மற்றும் எமது தாய்நாடு தொடர்பில் முன்னுரிமை அளித்தே தீர்மானங்களை எடுக்கின்றோம். வெளியில் எவ்வாறான கோசம், அழுத்தம் இருந்தாலும் நாம் குழப்பமடைய மாட்டோம். எமது நடுநிலை போக்கை பாதுகாத்து எமது மனிதாபிமானத்தை எவ்வாறு வெளிப்படுத்துவது எமது நிலைப்பாடாக இருந்தது. எந்த நாட்டுப் பிரஜையும் இவ்வாறான மோதலினால் உயிரிழப்பதை நாம் ஏற்கவில்லை. சகல பிரஜைகளினதும் உயிர்கள் தமது உயிர்களுக்கு சமமானதாக கருதி செயற்பட வேண்டும். அதற்கமையவே நாம் இந்த முடிவுகளை எடுத்து செயற்படுத்தினோம். அதன் படி அவர்களை மீட்கும் பணிகளை மேற்கொண்டோம். உலகின் அமைதிக்காக தமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்த வேண்டும் என யுத்தத்துடன் தொடர்புள்ள அனைத்து தரப்பினரிடமும் கோருகிறோம். மக்கள் உயிரிழக்கின்றனர். பாரிய பொருளாதார நெருக்கடி சூறாவளியாக வீசும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த யுத்த நிலைமையினால் எங்கும் சிக்கல் நிலை உருவாகும் அபாய நிலை உருவாகியுள்ளது. அமைதியையே முழு உலகமும் எதிர்பார்க்கிறது. அமைதிக்காக அனைவரும் தமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்த வேண்டும். நாடென்ற வகையில் அமைதிக்கான அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்போம். இந்த விவகாரம் தொடர்பில் பொய்யான, பயமுறுத்தும் நோக்குடனான அதிகமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. நாட்டின் கௌரவத்தையும் மனித உயிர்களை பாதுகாக்கும் வகையிலும் நாடென்ற வகையில் சர்வதே உடன்பாடுகளுக்கு எமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில் தான் நாம் இந்த தலையீட்டை செய்தோம். இது நாடென்ற வகையில் மிகவும் தைரியமான மனிதாபிமான முன்னெடுப்பாகும். ஜனாதிபதி விசேட ஊடகவியலாளர் சந்திப்பு : மத்திய கிழக்கு மோதலில் நடுநிலை – நிலம், கடல், வான்வழி பயன்பாட்டிற்கு அனுமதி இல்லை- தமிழ் இனத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட திட்டமிட்ட இனவழிப்பு பற்றி ஆராய்ந்து நீதியை நிலைநாட்டுக - சிறிதரன்
தமிழ் இனத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட திட்டமிட்ட இனவழிப்பு பற்றி ஆராய்ந்து நீதியை நிலைநாட்டுக - சிறிதரன் Published By: Vishnu 06 Mar, 2026 | 04:14 AM ( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) யுத்தம் முடிவடைந்தவுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியிடம் பல தமிழ் குழந்தைகள் ஒப்படைக்கப்பட்டன. அந்த குழந்தைகளுக் கு என்ன நேர்ந்தது. ஊடகவியலாளர் இசைப்பிரியா உட்பட பல தமிழ் பெண்கள் பகிரங்கமாக சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்களுக்கு இன்றும் நீதி கிடைக்கவில்லை. இந்த அரசாங்கம் கடந்த கால ஊழல் மோசடிகள், படுகொலைகள் பற்றி ஆராய்வதை போன்று தமிழ் இனத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட திட்டமிட்ட இனவழிப்பு பற்றி ஆராய்ந்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (5) நடைபெற்ற சர்வதேச மகளிர் தினம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 90 ஆயிரம் விதவைகள் வாழ்வதாக பல அறிக்கைகளில் குறிப்பிடப்படுகிறது. யுத்தம் முடிவடைந்து பல ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் உறவுகளை தேடும் போராட்டமும், பயணமும் இன்றளவிலும் முடிவடையவில்லை. வலிந்து காணாமல் போனோர் இன்றும் தமது உறவுகளுக்காக வீதிகளில் போராடுகிறார்கள். பல தமிழ் பெண்கள் நெற்றியில் குங்குமத்துடனும், கழுத்தில் தாலியுடனும் தனது கணவனுக்காக காத்திருக்கிறார்கள். இவர்களுக்கு இந்த அரசாங்கம் என்ன பதிலை சொல்ல போகிறது. உலக நடப்புகள் மற்றும் குழந்தைகள், பெண்கள் கொல்லப்படுவது பற்றி இன்று சபையில் பலர் பேசுகிறார்கள். இதே நிலைமை தான் அன்று வடக்கு மற்றும் கிழக்கில் நடந்தது. செஞ்சோலை பகுதியில் பல பெண் பிள்ளைகள் படுகொலை செய்யப்பட்டார்கள். விமானம் ஊடாக தாக்குதல்கள் நடத்தப்பட்டு பச்சிளம் குழந்தைகளையும் படுகொலை செய்தார்கள். இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களுக்கு நேர்ந்தது என்னவென்பது இன்றளவிலும் மறைக்கப்படுகிறது. விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறையின் பொறுப்பாளராக இருந்த இளம்பரிதி குடும்பத்தாருடன் இராணுவத்தில் சரணடைந்தார். அதேபோல் வனவளத்துறை பிரிவின் அதிகாரி சக்தி, பாலா, ராஜா உட்பட பலர் வவுனியா மற்றும் முல்லைத்தீவு பகுதியில் விடுக்கப்பட்ட அறிவிப்புக்கு அமைய இராணுவத்தில் சரணமடைந்தார்கள். இவர்கள் இன்றும் திரும்பவில்லை. யுத்தம் முடிவடைந்தவுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியிடம் பல தமிழ் குழந்தைகள் ஒப்படைக்கப்பட்டன. அந்த குழந்தைகளுக் கு என்ன நேர்ந்தது. ஊடகவியலாளர் இசைப்பிரியா உட்பட பல தமிழ் பெண்கள் பகிரங்கமாக சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்களுக்கு இன்றும் நீதி கிடைக்கவில்லை. இந்த அரசாங்கம் கடந்த கால ஊழல் மோசடிகள், படுகொலைகள் பற்றி ஆராய்வதை போன்று தமிழ் இனத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட திட்டமிட்ட இனவழிப்பு பற்றி ஆராய்ந்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என்றார். தமிழ் இனத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட திட்டமிட்ட இனவழிப்பு பற்றி ஆராய்ந்து நீதியை நிலைநாட்டுக - சிறிதரன்- ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
'499 ரன்கள், 34 சிக்ஸர்கள்' - இமாலய ஸ்கோர் அடித்தும் கடைசி ஓவர் வரை ஆட்டம் சென்றது ஏன்? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 5 மார்ச் 2026, 19:01 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மார்ச் 2026, 19:09 GMT வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்கிறது இந்திய அணி. கடைசி ஓவர் வரை பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா. இதன்மூலம் தொடர்ந்து இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. இந்தப் போட்டியில் இரண்டு அணிகளும் ரன் மழையாகப் பொழிய, மொத்தம் 499 ரன்கள் எடுக்கப்பட்டன. மொத்தம் 34 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசியது. தொடர்ந்து அதிரடியை வெளிப்படுத்திய இந்திய அணி, 7 விக்கெட்டுகளை இழந்து 253 ரன்களைக் குவித்தது. பெரிய இலக்கை சேஸ் செய்த இங்கிலாந்து கடைசி வரை போராடி 246/7 என இன்னிங்ஸை முடித்தது. 89 ரன்கள் அடித்த சஞ்சு சாம்சன், தொடர்ந்து இரண்டாவது போட்டியாக ஆட்ட நாயகன் விருது பெற்றார். பட மூலாதாரம்,Getty Images அதிரடியைத் தொடர்ந்த சஞ்சு சாம்சன் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் எடுத்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்த சஞ்சு சாம்சன், இந்த அறையிறுதிப் போட்டியிலும் அதைத் தொடர்ந்தார். இந்தப் போட்டிக்கு முன்பாக ஆர்ச்சர் vs சாம்சன் யுத்தம் அதிகம் பேசப்பட்டது. அதிவேக பந்துகளுக்கு முன்பு சாம்சன் தடுமாறியிருக்கிறார் என்பதால், ஆர்சரை சமாளிக்க முடியுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. ஆனால், ஆர்ச்சர் பந்துவீச்சில்தான் தன் அதிரடியைக் கட்டவிழ்த்தார் சாம்சன். ஆர்ச்சர் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரின் மூன்றாவது பந்தில் பவுண்டரி அடித்து தன் ரன் கணக்கைத் தொடங்கியவர், அடுத்த பந்திலேயே சிக்ஸர் அடித்தார். மீண்டும் மூன்றாவது ஓவரில் ஸ்டிரைக்குக்கு வந்த சாம்சன், அந்த ஓவரின் முதல் பந்தையே பவுண்டரிக்கு அனுப்பினார். வில் ஜேக்ஸ் வீசிய முந்தைய ஓவரின் கடைசிப் பந்தில்தான் அபிஷேக் ஷர்மா அவுட் ஆகியிருந்தார். அந்த நிலையில், அடுத்த பந்தில் ஆர்ச்சர் போன்றதொரு அதிவேக பௌலரை சந்தித்தபோதும், டிஃபன்ஸிவாக ஆட நினைக்காமல் அதிரடியையே தொடர்ந்தார் சாம்சன். பட மூலாதாரம்,Getty Images அந்த மூன்றாவது ஓவரில் சாம்சனின் விக்கெட்டுமே விழுந்திருக்கும். அவர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை இங்கிலாந்து கேப்டன் ஹேரி ப்ரூக் தவறவிட்டார். அதுவும் கூட சாம்சனின் நம்பிக்கையைக் குலைக்கவில்லை. இரண்டாவது பந்தில் கேட்ச் டிராப் ஆயிருந்தாலும், நான்காவது பந்திலேயே ஒரு பெரிய சிக்ஸர் அடித்தார். அதே ஓவரின் கடைசிப் பந்தில் ஆர்ச்சர் யார்க்கர் வீசினார். ஆனால், அதையும் மிகவும் துல்லியமாகக் கணித்து தேர்ட் மேன் திசையில் தொட்டு விட்டு பவுண்டரி அடித்தார் சாம்சன். அவருடைய கணிப்பு, பந்தை அடித்த அவரது 'டைமிங்', அவரது உறுதி அனைத்துமே அந்த மூன்றாவது ஓவரிலேயே தெளிவாக வெளிப்பட்டது. சாம்சனின் அந்த அதிரடி ஆட்டம் எந்த இடத்திலும் தொய்வடையாமல் தொடர்ந்தது. ஒவ்வொரு பௌலரின் பந்துவீச்சிலுமே அவர் பவுண்டரிகளும், சிக்ஸர்களும் அடித்துக்கொண்டே இருந்தார். அதிலும், குறிப்பாக ஒவ்வொரு பௌலரையும் தான் சந்திக்கும் முதல் பந்திலேயோ, இரண்டாவது பந்திலேயோவே பவுண்டரி/சிக்ஸர் அடித்து நெருக்கடி ஏற்படுத்தப் பார்த்தார் சாம்சன். ஆர்ச்சர் தவிர்த்து அனைத்து பௌலருக்கு எதிராகவும் அப்படித்தான் ஆடினார். ஜேக்ஸின் பந்துவீச்சில் தான் சந்தித்தந்த முதல் பந்திலேயே பவுண்டரி அடித்தார். சாம் கரண் தனக்கு வீசிய இரண்டாவது பந்தில் பவுண்டரி அடித்தார். ஆதில் ரஷீத் இந்தப் போட்டியில் வீசிய முதல் பந்திலேயே பவுண்டரி அடித்தார். லியாம் டாசன் பந்துவீச்சில் தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து தன் அரைசதத்தை நிறைவு செய்தார். ஓவர்டன் தனக்கு வீசிய இரண்டாவது பந்தில் சிக்ஸர் அடித்தார். அதுமட்டுமல்லாமல், பெரும்பாலான ஓவர்களில் தான் சந்தித்த முதல் பந்திலேயே அவர் பவுண்டரியோ சிக்ஸரோ அடிக்க முயற்சி செய்தார். இது ஒவ்வொரு பௌலரையும் ஆரம்பத்தில் இருந்தே நெருக்கடிக்குத் தள்ளியது. பெரும்பாலான போட்டிகளில் பவர்பிளேவில் ஆர்ச்சர் அல்லது ஜேக்ஸ் இருவரில் ஒருவரை மூன்று ஓவர்கள் வரை பயன்படுத்திக்கொண்டிருந்த ஹேரி ப்ரூக்கை உடனடியாக வேறு திட்டங்களுக்கு நகர வைத்தது. அந்த தொடர் அதிரடியின் காரணமாக பவர்பிளேவிலேயே 67/1 என்ற பெரிய ஸ்கோரை பதிவு செய்தது இந்தியா. தொடர்ச்சியாக 180+ ஸ்டிரைக் ரேட்டிலேயே ஆடிய சாம்சன் 26 பந்துகளிலேயே அரைசதம் கடந்தார். அதன்பிறகும் தன் அதிரடியைத் தொடர்ந்த அவர், 42 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழக்கும்போது, 13.1 ஓவர்களில் இந்தியாவின் ஸ்கோர் 160/3. அப்போதே ஆட்டத்தில் பெரும் ஆதிக்கம் செலுத்தியிருந்தது இந்தியா. இந்திய அணியின் முடிவும், வீரர்களின் பங்களிப்பும் பட மூலாதாரம்,Getty Images இந்தப் போட்டியில் இந்திய அணி எடுத்த ஒரு முடிவுமே அவர்கள் பெரிய ஸ்கோர் எடுப்பதற்குக் காரணமாக இருந்தது. பத்தாவது ஓவரில் ஆதில் ரஷீத் பந்துவிச்சில் இஷன் கிஷன் அவுட் ஆனதும், ஷிவம் துபேவை நான்காவது வீரராகக் களமிறக்கியது இந்தியா. வழக்கமாக அந்த இடத்தில் சூர்யகுமார் யாதவ்தான் ஆடுவார். ஆனால், துபே ஸ்பின்னர்களுக்கு எதிராக நன்றாக விளையாடுவார் என்பதால், ரஷீத் ஓவரை டார்கெட் செய்யும் நோக்கோடு துபேவைக் களமிறக்கியது இந்தியா. துபேவும் இந்தியாவின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது போலவே விளையாடினார். தன் முதல் இரண்டு ஓவர்களில் ரஷீத் 13 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்திருந்தார். இந்த இன்னிங்ஸில் இந்திய பேட்டர்களை கட்டுக்குள் வைத்திருந்த ஒரே இங்கிலாந்து பௌலரான அவரது மூன்றாவது ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் விளாசினார் துபே. ரஷீத்தின் நான்காவது ஓவரிலுமே கூட அவர் ஒரு சிக்ஸர் அடித்தார். அதுமட்டுமல்லாமல், சாம்சன் கொடுத்த அதிரடியான தொடக்கத்தை மற்ற வீரர்களுமே நன்றாகப் பயன்படுத்திக்கொண்டார்கள். அவர்களும் மற்றொரு பக்கம் அதிரடியைத் தொடர்ந்துகொண்டே இருந்ததால் இந்திய அணியின் ரன்ரேட் தொடர்ச்சியாக 11 ரன்களுக்கு மேலேயே இருந்தது. வந்த அனைத்து பேட்டர்களுமே முதல் பந்தில் இருந்தே அடித்து ஆடும் நோக்கத்தில்தான் ஆடினார்கள். அபிஷேக் ஷர்மாவைத் தவிர்த்து, அவுட் ஆன மற்ற 6 பேட்டர்களுமே 170+ ஸ்டிரைக் ரேட்டில் தான் ஆடினார்கள். அதேபோல், அபிஷேக் தவிர்த்து அனைவருமே குறைந்தபட்சம் ஒரு சிக்ஸராவது அடித்தார்கள். கடைசி இரு ஓவர்களில் திலக் வர்மாவும், ஹர்திக் பாண்ட்யாவும் சேர்ந்து 5 சிக்ஸர்கள் அடிக்க, அப்போது 36 ரன்கள் எடுக்கப்பட்டன. இங்கிலாந்து அணி இறுதியில் 7 ரன்களில் தான் தோற்றது எனும்போது, இந்த இரண்டு ஓவர்கள் இந்தியாவுக்கு எவ்வளவு சாதகமாக அமைந்தன என்பதை உணர முடியும். இந்த தொடர் அதிரடியின் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்தது இந்திய அணி. டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு அணி எடுத்த நான்காவது அதிகபட்ச ஸ்கோர் இது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ப்ரூக் தவறான ஷாட்கள் அடித்த இங்கிலாந்து பேட்டர்கள் மிகப் பெரிய இலக்கை சேஸ் செய்த இங்கிலாந்து அணியும் ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆடியது. அதனால், தவறான ஷாட்கள் ஆடி அந்த அணியின் பேட்டர்கள் தொடர்ச்சியாக அவுட் ஆனார்கள். பெரும்பாலான ஓவர்களில் முதல் பந்திலேயே பெரிய ஷாட் ஆட நினைத்தவர்கள், பந்தை சரியாகக் கணிக்காமல் அடித்து வெளியேறினார்கள். இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரின் முதல் பந்து... ஹர்திக் பாண்ட்யா நன்கு ஆஃப் சைட் வெளியே வீசிய பந்தின் ஸ்விங்கை சரியாகக் கணிக்காமல் பெரிய ஷாட் ஆடச் சென்ற ஃபில் சால்ட் எட்ஜ் ஆகி கேட்ச் ஆனார். அதேபோல், ஐந்தாவது ஓவரின் முதல் பந்து... பும்ரா இந்தப் போட்டியில் வீசும் முதல் பந்து. அந்த முதல் பந்திலேயே தூக்கி அடித்தார் இங்கிலாந்து கேப்டன் ஹேரி ப்ரூக். ஆனால், பும்ரா வீசிய 'ஸ்லோ பால்' அவரை ஏமாற்றியது. சரியாகக் கணிக்காமல் ப்ரூக் தூக்கி அடித்த பந்தை, அக்ஷர் பட்டேல் பின்னால் ஓடிச் சென்று மிகச் சிறப்பாகப் பிடித்தார். இதேபோலத்தான் ஒரு பெரிய ஷாட் அடிக்கப்போய் ஆட்டமிழந்தார் ஜாஸ் பட்லர். வருண் சக்கர்வர்த்தி வீசிய இன்னிங்ஸின் ஆறாவது ஓவரின் முதல் மூன்று பந்துகளிலுமே ஜேக்கப் பெத்தேல் சிக்ஸர்கள் அடித்தார். நான்காவது பந்தில் அவர் சிங்கிள் அடிக்க, ஸ்டிரைக்குக்கு வந்தார் பட்லர். ஏற்கெனவே அந்த ஓவரில் 19 ரன்கள் வந்திருந்தது. அதிலும், பவர்பிளேவின் கடைசி 2 பந்துகள். அப்படியிருந்தும் பட்லர் பெரிய ஷாட் ஆடச் சென்றார். வருண் சக்கர்வர்த்தியின் கூக்ளியை சரியாகக் கணிக்காமல் அவர் சுற்றிப் பந்தை விட ஸ்டம்புகள் தகர்ந்தன. பட மூலாதாரம்,Getty Images கடைசி வரை போராடிய ஜேக்கப் பெத்தேல் ஆட்டத்தின் ஐந்தாவது ஓவர் களத்துக்குள் வந்த ஜேக்கப் பெதெல், கடைசி ஓவர் வரை போராடினார். ஆட்டம், கடைசி கட்டம் வரை செல்வதற்கும் மிகமுக்கியக் காரணமாக இருந்தார். மிகவும் தைரியமாக ஆடிய பெத்தேல், பெரும்பாலான பேட்டர்கள் கவனமாக ஆடும் பௌலர்களை தைரியமாக அடித்து ஆடினார். தான் சந்தித்த இரண்டாவது பந்திலேயே (பும்ரா வீசிய பந்து) சிக்ஸர் அடித்து ரன் கணக்கைத் தொடங்கினார் அவர். வருண் சக்கர்வர்த்தி போன்ற ஒரு மிஸ்டிரி பௌலர் இந்தப் போட்டியில் வீசிய முதல் மூன்று பந்துகளிலுமே சிக்ஸர் அடித்தார். ஹர்திக், வருண், அர்ஷ்தீப் என அனைத்து பௌலர்களின் பந்துவீச்சையுமே அடித்து ஆடினார். சீனியர் பேட்டர்கள், பந்துகளைத் தவறாகக் கணித்து ஒருபக்கம் அவுட் ஆகிக்கொண்டிருக்க, பெத்தேல் தன் ஆட்டத்தில் முதிர்ச்சியை வெளிப்படுத்தினார். ஓரிரு பவுண்டரிகள் தொடர்ச்சியாக அடிக்கும்போது, உடனடியாக ஸ்டிரைக்கை ரொடேட் செய்தார். எல்லா ஷாட்களையும் அவர் பலமாக அடிக்கவில்லை. எப்போதெல்லாம் இரு ஃபீல்டர்களுக்கு இடையே இடைவெளியைப் பார்த்தாரோ, அந்த இடங்களைக் குறிவைத்து பவுண்டரிகள் அடித்தார். 19 பந்துகளில் அரைசதம் கடந்த பெத்தேல் , 45 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்தார். கடைசி ஓவரில் 30 ரன்கள் தேவை என்ற நிலை வந்ததால் இரண்டாவது ரன்னுக்கு ஆசைப்பட்டு அவுட் ஆனார். மற்றபடி அவர் எந்த பௌலருக்கும் ஒரு வாய்ப்பு கூட உருவாக்கவில்லை. அந்த அளவுக்கு முழுமையாக இருந்தது அவருடைய ஆட்டம். இறுதியில் 48 பந்துகளில் 105 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் அவர். பட மூலாதாரம்,Getty Images பெரும் தாக்கம் ஏற்படுத்திய ஜஸ்ப்ரித் பும்ரா மொத்தம் 499 ரன்கள் இந்தப் போட்டியில் அடிக்கப்பட்டிருக்கிறது. அதாவது சரிசரியாக ஓவருக்கு 12.475 ரன்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இதில் பந்துவீசிய 12 பௌலர்களில் பத்து பேர் ஓவருக்கு சராசரியாக 10 ரன்களுக்கு மேல் கொடுத்தனர். மீதமிருக்கும் இரு பௌலர்களில் ஒன்பதுக்கும் குறைவான எகானமி வைத்திருக்கும் ஒரே பௌலர் - பும்ரா தான். இந்தப் போட்டியில் அவர் வீசிய முதல் பந்திலேயே இங்கிலாந்தின் முக்கிய பேட்டரான ஹேரி ப்ரூக் விக்கெட்டை வீழ்த்தினார். அதுவே ஆட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதேபோல், கடைசி 3 ஓவர்களில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 45 ரன்கள் தேவை என்ற நிலையில், 18-வது ஓவர் பந்துவீச வந்து வெறும் 6 ரன்கள் மட்டுமே கொடுத்தார் அவர். கடைசி கட்டத்தில் அது இங்கிலாந்துக்கு பெறும் நெருக்கடியை ஏற்படுத்தியது. அந்த அணி இறுதி இரு ஓவர்களில் இலக்கை எட்ட முடியாமல் போனதற்கு அது மிகவும் முக்கியக் காரணமாக அமைந்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு '499 ரன்கள், 34 சிக்ஸர்கள்' - இமாலய ஸ்கோர் அடித்தும் கடைசி ஓவர் வரை ஆட்டம் சென்றது ஏன்?- 2026 – 2030 ஐந்தாண்டுத் திட்டம் : உயர் தர வளர்ச்சிக்கான புதிய சமிக்ஞைகளை வெளியிடவுள்ள சீனா
2026 – 2030 ஐந்தாண்டுத் திட்டம் : உயர் தர வளர்ச்சிக்கான புதிய சமிக்ஞைகளை வெளியிடவுள்ள சீனா 05 Mar, 2026 | 05:13 PM வருடாந்திர தேசிய “Two Sessions” கூட்டங்கள் நெருங்கி வரும் நிலையில், சீனா தனது பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்துக்கான புதிய கொள்கை சமிக்ஞைகளை வெளியிடத் தயாராக உள்ளது. குறிப்பாக 2026 முதல் 2030 வரையிலான புதிய ஐந்தாண்டு வளர்ச்சி திட்டத்துக்கான வழிகாட்டி வரைபடம் இந்த அமர்வுகளில் பரிசீலிக்கப்பட உள்ளது. உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக விளங்கும் சீனா, வளர்ச்சியின் வேகத்தை மட்டும் அல்லாது அதன் தரத்தையும் முக்கியமாகக் கவனத்தில் கொண்டு முன்னேறி வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 2035ஆம் ஆண்டிற்குள் சமூகநீதியை அடிப்படையாகக் கொண்ட நவீனமயமான நாடாக மாறும் இலக்கை அடைவதற்கான முக்கிய கட்டமாக 15ஆவது ஐந்தாண்டுத் திட்ட காலப்பகுதி கருதப்படுகிறது. சீனாவின் ஆட்சிமுறையில் ஐந்தாண்டு வளர்ச்சி திட்டங்கள் முக்கிய இடம் பெறுகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில் பல சவால்களை எதிர்கொண்டபோதிலும், நாடு தொடர்ந்து வளர்ச்சி இலக்குகளை அடைந்து சீன நவீனமயமாக்கல் பயணத்தில் நிலையான முன்னேற்றத்தை சாதித்துள்ளது. வரவிருக்கும் தேசிய மக்கள் பிரதிநிதிகள் சபை மற்றும் உயர்மட்ட அரசியல் ஆலோசனை அமைப்பின் கூட்டங்களில், உள்நாட்டு தேவையை அதிகரிக்கும் கொள்கைகள் முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளன. உள்நாட்டு சந்தையை வலுப்படுத்துவது, அறிவியல்-தொழில்நுட்ப புதுமைகளை மேம்படுத்துவது, பொருளாதார சீர்திருத்தங்களை ஆழப்படுத்துவது மற்றும் உயர்தர திறந்த பொருளாதாரத்தை விரிவுபடுத்துவது போன்ற நடவடிக்கைகள் இதில் அடங்கும். சீன பொருளாதார வளர்ச்சியில் நுகர்வு முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2025ஆம் ஆண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சியில் இறுதி நுகர்வு செலவினங்கள் 52 சதவீத பங்களிப்பை வழங்கியுள்ளன. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஐந்து சதவீதம் அதிகமாகும். நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் மக்களின் வருமானத்தை உயர்த்துதல், சேவை துறையின் நுகர்வை ஊக்குவித்தல் போன்ற நடவடிக்கைகள் வளர்ச்சிக்கு புதிய ஊக்கத்தை அளிக்கும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இதனுடன், தனியார் முதலீட்டை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் மற்றும் மத்திய அரசின் முதலீட்டு செலவினங்களை அதிகரிக்கும் திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளன. உட்கட்டமைப்பு வளர்ச்சியுடனும் மனித வள முதலீட்டுடனும் இணைந்த இந்த நடவடிக்கைகள் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனா தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கும் அதிக முக்கியத்துவம் வழங்கி வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற வசந்தகால பண்டிகை நிகழ்ச்சியில் மனித வடிவ ரோபோக்கள் கலந்துகொண்ட கலை நிகழ்ச்சி, தொழில்நுட்ப அடிப்படையிலான எதிர்காலத்துக்கான சீனாவின் முன்னேற்றத்தை வெளிப்படுத்தியதாக மதிப்பிடப்படுகிறது. அறிவியல்-தொழில்நுட்ப தன்னிறைவு மற்றும் புதுமைகளை மேம்படுத்துவதற்காக அடிப்படை ஆராய்ச்சிகளுக்கு அதிக நிதி ஆதரவு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் உயர்தர வளர்ச்சிக்கு சீர்திருத்தங்கள் முக்கிய பங்காற்றும் என தெரிவிக்கப்படுகிறது. ஒருங்கிணைந்த தேசிய சந்தை அமைப்பை உருவாக்குதல், மூலதன சந்தை முதலீடு மற்றும் நிதியமைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட உள்ளன. 2024ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட முக்கியமான 300க்கும் மேற்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகளை 2029ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்ற சீனா இலக்கு நிர்ணயித்துள்ளது. 2030ஆம் ஆண்டுக்கு முன் கார்பன் டையாக்சைட் வெளியீட்டை உச்ச கட்டத்துக்கு கொண்டு வந்து பின்னர் குறைப்பதற்கான இலக்குடன், சீனா பசுமை ஆற்றல் மாற்றத்தையும் வேகப்படுத்த உள்ளது. சாமார்ட் மின்வலையமைப்பு, ஹைட்ரஜன் ஆற்றல் மற்றும் பசுமை எரிபொருள் தொழில்துறைகளை மேம்படுத்தும் முயற்சிகளும் இதில் அடங்கும். உலகளாவிய சவால்கள் அதிகரித்துள்ள சூழ்நிலையிலும், நிலைத்தன்மையை உறுதிப்படுத்தி முன்னேற்றத்தை அடையும் கொள்கையை சீனா தொடர்ந்து பின்பற்றும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2026–2030 ஐந்தாண்டுத் திட்டத்தின் வழிகாட்டி ஆவணம் சீனாவின் எதிர்கால வளர்ச்சி திட்டங்கள் மற்றும் அரசின் முன்னுரிமைகளை வெளிப்படுத்தும் முக்கிய ஆவணமாகக் கருதப்படுகிறது. இதன் மூலம் உலக பொருளாதார வளர்ச்சியில் சீனா தொடர்ந்து முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026 – 2030 ஐந்தாண்டுத் திட்டம் : உயர் தர வளர்ச்சிக்கான புதிய சமிக்ஞைகளை வெளியிடவுள்ள சீனா- சுகோய் போர் விமான விபத்து - 2 விமானப்படை வீரர்கள் பலி
சுகோய் போர் விமான விபத்து - 2 விமானப்படை வீரர்கள் பலி பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சுகோய் விமானம் (கோப்புப் படம்) இந்திய விமானப் படையின் சுகோய் (Sukhoi) விமானம் ஒன்று வியாழக்கிழமை இரவு அசாமின் கர்பி அங்லாங் மாவட்டத்தில் விழுந்து நொறுங்கியது. இந்திய விமானப் படையின் கூற்றுப்படி, Su-30 MKI விமானம் பயிற்சிப் பணியில் ஈடுபட்டிருந்தது. அசாமின் ஜோர்ஹாட்டில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கர்பி அங்லாங் பகுதியில் அந்த விமானம் விபத்துக்குள்ளானது. அசாமின் ஜோர்ஹாட்டில் இருந்து அந்த விமானம் புறப்பட்டதாக விமானப் படை தெரிவித்துள்ளது. இரவு 7:42 மணியளவில் அந்த விமானத்துடனான ரேடார் தொடர்பு துண்டிக்கப்பட்டது. பட மூலாதாரம்,@IAF_MCC/X இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது. ஸ்குவாட்ரன் லீடர் அனுஜ், பிளைட் லெப்டினன்ட் பூர்வேஷ் துர்காகர் ஆகிய இருவரும் மரணமடைந்ததாக இந்திய விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது. விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. சுகோய் போர் விமானம் இந்திய விமானப் படையின் முதுகெலும்பாகக் கருதப்படுகிறது. சுகோய் போர் விமான விபத்து - 2 விமானப்படை வீரர்கள் பலி- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
எடுத்ததற்கெல்லாம் பழமைவாதம் பேசும் நீங்எள் ஆங்கிலேயர் அறிமுகப்படுத்திய பதிவு திருமண முறையை மட்டும் ஏற்பதேனோ? இங்கு திரிக்கு திரிக்கு ஒரே விடயத்தை பலர் காவித்திரியும் போது இப்படி நீங்கள் அவர்களை கேள்வி கேட்டதில்லை. மாறாக அவர்களுடன் நீங்களும் இணைந்து லூட்டி அடித்து மகிழ்ந்து கொண்டிருக்கின்றீர்களே! அது ஏன் சார்? அவர்கள் உங்கள் நண்பர்கள் என்பதாலோ? - யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Important Information
By using this site, you agree to our Terms of Use.