24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.
மோகன் அவர்களே! இதுவும் கடந்துபோகும் என்று சொல்வார்கள். ஆனால் வாழ்நாளில் கடக்கவே முடியாத துன்பங்களும் உண்டென்பதை மறுக்கவே முடியாது. அத்தகைய ஒரு துன்பம் உங்களையும் சூழ்ந்துவிட்டதை எண்ணிக் கலங்குகிறோம். ஆழ்ந்த துயரில் மூழ்கியிருக்கும் உங்களுக்கு ஆறுதல்கூற வார்த்தைகள் இல்லை. தமிழினம் அழிவுகளைச் சந்தித்துவந்த வேளையில் யாழ்களத்தை ஆரம்பித்து எங்கள் மனதுயருக்கு ஆறுதல்தந்து ஆற்றுவதற்கு வந்த ஒருவராகவே உங்களை எங்கள் மனங்களில் பதியவைத்தோம். அந்தப்பதிவு அழியாது. என்றும் உங்களுக்கு ஆதரவு தரவே மனம் விரும்புகிறது. ஆறுதல்கூற முடியாத உங்கள் துணைவியாரின் இழப்பிற்கு எங்கள் ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலிகளை தெரிவித்துக் கொள்கிறோம்... அன்னாரின் ஆன்மா சாந்தி அடையட்டும்!!🙏
-
“மரியாவை சந்தித்ததே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் ; நன்றி மரியா!” - அமைதிக்கான நோபல் பரிசை மரியாவிடமிருந்து பெற்ற மகிழ்ச்சியில் ட்ரம்ப்!
பாவம் மரியா கிடைச்சதை பிச்சை பொட்டிட்டு வெளிய வந்து செய்தியார்களை சந்தித்து அதை பிச்சை போட்டதை பெருமையாக சொல்லிக்கொண்டிருக்க வெள்ளை மாளிகைக்குள் நடந்த பத்திரையாளர் சந்திப்பில் மரியாயாவை மரியாதை குறைவாக சொன்னதை பார்க்க ஒரு பழமொழி ஞாபகத்திற்கு வந்தது “ பார்த்திரம் அறிந்து பிச்சை போடு”
-
யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.
ஆழ்ந்த இரங்கல்😥 மோகன் அண்ணாவுக்கும் அவருடைய பிள்ளைகளுக்கும் இந்த கடினமான நேரத்தில் கடவுள் ஆற்றலும் துணையும் தந்து தாங்கட்டும்
-
கதை - 196 / கண்மணி டீச்சர் [ஆறு பகுதிகள் ]
கதை - 196 / கண்மணி டீச்சர் / பகுதி : 02 மதுவில் கொஞ்சம் பலவீனமாக இருந்த அவன், கண்மணியைச் சரியாகக் கவனிக்கவில்லை. என்றாலும் எதோ தானோ என்று குடும்பவாழ்வு ஓடியது. ஒருநாள், உண்மை பெரும் சத்தத்துடன் வரவில்லை. அது சுலபமாக வந்தது. அவனுடைய பூட்டப்படாத கைப்பேசி அவள் கைகளில் சிக்கியது. அடிக்கடி தோன்றும் ஒரு பெயர். வேறொரு பெண். வேறொரு வாழ்க்கை. அதில் அவனின் இரட்டை வாழ்வு (Double Life) வெளிச்சத்துக்கு வந்தது. கண்மணி அழவில்லை. கெஞ்சவில்லை. ஒரு முடிவு மட்டும் அவளுக்கு வந்தது. இது தவறு அல்ல. இது திட்டமிட்ட புறக்கணிப்பு. அது துரோகம் மட்டும் அல்ல — கண்மணிக்கு அவள் வாழ்ந்த திருமணம் ஒரு பொய்யென்று உறுதி செய்த தருணம். அவள் துரோகத்தையும் அதனால் மனவேதனையையும் அடைந்தாள். அவளது இளமைக் கனவு சுக்குநூறாகியது. அதிர்ச்சி அடைந்தாள், திருமண வாழ்வை வெறுத்தாள். ஆனால், அவள் கோபப்படவில்லை. அவள் கத்தவில்லை. அவள் விழித்தாள். “பொறுத்துக்கொள்” என்று சொன்ன உலகை அவள் இனி கேட்கவில்லை. “பெண்ணாக இருந்தால் சகிக்க வேண்டும்” என்ற பொய்யை அவள் உடைத்தாள். விவாகரத்து வழக்கறிஞர் மென்மையாகப் பேசினார். “குழந்தைக்காக மீண்டும் யோசியுங்கள்.” நீதிபதி நடுநிலையாகக் கேட்டார். ஆனால் கேள்விகளில் சமூக தீர்ப்பு மறைந்திருந்தது. உறவினர்கள் சொன்னார்கள்: “பெண் பொறுத்துக் கொள்ள வேண்டும்.” கண்மணி ஒருமுறை மட்டும் சொன்னாள்: “நான் திருமணத்திலிருந்து தப்பவில்லை. பொய்யிலிருந்து வெளியேறுகிறேன்.” விவாகரத்து கிடைத்தது. வெளியில் யாரும் வாழ்த்தவில்லை. பெண்கள் பெற்ற சுதந்திரம் பொதுவாகக் கொண்டாடப்படுவதில்லை. உண்மையில் விவாகரத்து கண்மணிக்குத் தோல்வி அல்ல— அது மூச்சை மீண்டும் பெறும் தருணம். கண்மணி ஒரு கணவனை விட்டு வரவில்லை; அவள் தன்னைச் சிதைத்த வாழ்க்கையிலிருந்து வெளியே வந்தாள். எனக்கு மீண்டும் காதல் அல்லது திருமணம் வேண்டாம். இந்த வகையான வலியிலிருந்து நான் என்னைப் பாதுகாத்துக் கொள்ள தனிமைதான் ஒரே வழி என்று, தன் பெற்றோரிடம் பிறந்த கைக் குழந்தையுடன் திரும்பினாள். அவளுக்கு உழைப்பு இருந்தது. அந்த உழைப்பு அவளும் மகளும் வாழப் போதுமாக இருந்தது. கண்மணியின் கையில் புதிதாகப் பிறந்த பெண் குழந்தை. வீடும் அதே வாசனை. ஆனால் பார்வைகள், எதிர்பார்ப்புக்கள் மாறின. பெருமைக்கு பதிலாக பரிதாபம் வந்தது. பாசத்திற்குப் பதிலாக அறிவுரை வந்தது. [Pity replaced pride. Advice replaced affection.] அவளுடைய அம்மா அண்டை வீட்டாரைப் பற்றி கவலைப்பட்டார். அவளுடைய தந்தை எதிர்காலப் பாதுகாப்பைப் பற்றி கவலைப்பட்டார். கண்மணி ஒரே ஒரு விடயத்தைப் பற்றி மட்டுமே கவலைப்பட்டாள் - தன் மகள் ஒருபோதும் உயிர்வாழ்வதை காதலோடு, அன்போடு குழப்பக்கூடாது [her daughter should never confuse survival with love.]. இரவில், தூங்கிக் கொண்டிருந்த குழந்தையைத் தூக்கிக்கொண்டு, அவள் கிசுகிசுத்தாள்: நீ என்னிடமிருந்து மௌனத்தைக் கற்றுக்கொள்ள மாட்டாய் [You will not learn silence from me]. அக்கம்பக்கத்தினர் பார்த்தார்கள். சிலர் பரிதாபப்பட்டனர். சிலர் தீர்ப்பளித்தனர். சிலர் அமைதியாக சரிப்பண்ணி அவனுடன் மீண்டும் இருக்குமாறு அறிவுறுத்தினர். ஒரு உறவினர் மெதுவாக, “குழந்தைக்காக, நீங்கள் சரிப்பண்ணி வாழ்ந்து இருக்க வேண்டும்” என்றார். ஆனால், கண்மணி அமைதியாக, “என் குழந்தைக்காக, நான் சரிசெய்ய மாட்டேன்” ஏன் எனறால், அப்படியான தந்தையிடம் எந்த நல்ல பழக்கவழக்கங்களையோ, பாசத்தையோ குழந்தை காணாது, வெறுப்பைத் தவிர என்றாள். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 03 தொடரும் துளி/DROP: 1997 [கதை - 196 / கண்மணி டீச்சர் / பகுதி : 02] / எனது அறிவார்ந்த தேடல்: 1413 https://www.facebook.com/groups/978753388866632/posts/33310717181910167/?
- Today
-
“மரியாவை சந்தித்ததே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் ; நன்றி மரியா!” - அமைதிக்கான நோபல் பரிசை மரியாவிடமிருந்து பெற்ற மகிழ்ச்சியில் ட்ரம்ப்!
“மரியாவை சந்தித்ததே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் ; நன்றி மரியா!” - அமைதிக்கான நோபல் பரிசை மரியாவிடமிருந்து பெற்ற மகிழ்ச்சியில் ட்ரம்ப்! 16 Jan, 2026 | 12:48 PM வெனிசுவெலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவைச் சந்தித்ததே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம். நான் செய்த பணிக்காக மரியா தனது அமைதிக்கான நோபல் பரிசை எனக்கு வழங்கினார். பரஸ்பர மரியாதையின் அற்புதமான செயல் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்ததோடு, மரியா கொரினா மச்சாடோவுக்கு தனது நன்றியினையும் வெளிப்படுத்தியுள்ளார். நேற்று வியாழக்கிழமை (15) வெள்ளை மாளிகைக்கு சென்று ட்ரம்பை சந்தித்த வெனிசுவெலா நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, தான் பெற்ற 2025ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுப் பதக்கத்தை ட்ரம்பிடம் வழங்கினார். தனது நாட்டின் சுதந்திரத்துக்கான ட்ரம்பின் தனித்துவமான அர்ப்பணிப்புக்கு, தான் அளிக்கும் கௌரவம் என்று கூறிய மரியா கொரினா மச்சாடோவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ட்ரம்ப் சமூக ஊடகத்தில் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார். “மரியா கொரினா மச்சாடோ, பலவற்றைக் கடந்து வந்த ஒரு அற்புதமான பெண்மணி. நான் செய்த பணிக்காக மரியா தனது அமைதிக்கான நோபல் பரிசை எனக்கு வழங்கினார். பரஸ்பர மரியாதையின் அற்புதமான செயல். நன்றி மரியா!” என்றும் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார். கடந்த ஆண்டு இந்த நோபல் பரிசுக்காக உலகில் இடம்பெறும் போர்களையெல்லாம் நிறுத்தியதாக ட்ரம்ப் வெற்றி முழக்கமிட்டதாக சர்வதேச ஊடகங்களும் தெரிவித்திருந்தன. எனினும், 2025ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை ட்ரம்ப் பெறாத காரணத்தினாலும் அந்தப் பரிசை மரியா பெற்றதனாலும் தனது அதிருப்தியை அண்மையில் வெளிப்படுத்தியிருந்தார். அதன் பின்னர், வெனிசுவெலா நாட்டின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ், ட்ரம்பின் ஆலோசனைப்படி அமெரிக்க இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். அதன் பின்னர், அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர், ட்ரம்பின் செயலுக்காக, தான் பெற்ற அமைதிக்கான நோபல் பரிசை ட்ரம்புக்கு வழங்கி கௌரவிக்கவுள்ளதாக அறிவித்திருந்தார். எனினும், ஒருவர் பெற்ற நோபல் பரிசை இன்னொருவருக்கு கைமாற்ற முடியாது என நோபல் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையிலேயே நேற்று மரியா, தனது அமைதிக்கான நோபல் பரிசை, வெள்ளை மாளிகையில் ட்ரம்பை சந்தித்தபோது அவருக்கு வழங்கியுள்ளார். Virakesari.lk“மரியாவை சந்தித்ததே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் ;...“மரியாவை சந்தித்ததே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் ; நன்றி மரியா!” - அமைதிக்கான நோபல் பரிசை மரியாவிடமிருந்து பெற்ற மகிழ்ச்சியில் ட்ரம்ப்!
-
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விசேட குழுவின் இலங்கை வருகை!
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விசேட குழுவின் இலங்கை வருகை! 16 Jan, 2026 | 11:57 AM எதிர்வரும் 22ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை சர்வதேச நாணய நிதியத்தின் உண்மை கண்டறியும் குழு இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்பு பணிப்பாளர் ஜூலி கொசக் (Julie Kozack) அறிவித்துள்ளார். அண்மையில் ஏற்பட்ட டித்வா சூறாவளியின் சேதவிபரங்களை இந்தக் குழு மதிப்பீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டம் தொடர்பான கொள்கை விவாதங்களையும் அவர்கள் நடத்துவார்கள் என சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்பு பணிப்பாளர் ஜூலி கொசக் மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/236159
-
இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து பகிரங்கக் குற்றச்சாட்டு - பொறுப்புக்கூறலில் இலங்கையின் மௌனம் கலைக்கப்படுமா?
இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து பகிரங்கக் குற்றச்சாட்டு - பொறுப்புக்கூறலில் இலங்கையின் மௌனம் கலைக்கப்படுமா? 15 January 2026 அரச படைகளுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான 26 ஆண்டுகால உள்நாட்டுப்போர் தொடர்பான சர்வதேச குற்றங்களை, நம்பகத்தன்மையுடன் விசாரணை செய்து, வழக்குத்தொடர்வதற்கு, இலங்கை அரசாங்கங்கள் தவறிவிட்டதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தற்போதைய அரசாங்கம் 2024 இல் பதவிக்கு வந்த போது, நீதி வழங்குவதாக உறுதியளித்த போதிலும், இதுவரையில் வெளிப்படையான முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது. அதே நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களும், உயிர் பிழைத்தவர்களும் நீண்டகாலமாக பாதிக்கப்பட்ட நிலையிலேயே வாழ்ந்து வருவதாகவும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், மோதல் தொடர்பான பாலியல் வன்முறையை, இலங்கை நிவர்த்தி செய்யத்தவறியது, பொறுப்புக்கூறல் மற்றும் உயிர் பிழைத்தவர்களின் உரிமைகள் குறித்த கவலைகளை அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு உள்நாட்டுயுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட போது, இரு தரப்பினரும் ஏராளமான போர்க்குற்றங்களைச் செய்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், அடுத்தடுத்த இலங்கை அரசாங்கங்கள், விசாரணைகளை முடக்கி, நீதியை மறுத்ததாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டறிந்துள்ளதாகவும், அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://hirunews.lk/tm/440847/public-accusations-about-sri-lankas-war-crimes-will-sri-lankas-silence-on-accountability-be-broken
-
தென்கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு 5 ஆண்டுகள் சிறை
தென்கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு 5 ஆண்டுகள் சிறை தென்கொரியவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இராணுவ சட்ட அமுலாக்கம் மற்றும் கிளர்ச்சி ஆகிய விவகாரங்களில், தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோல் குற்றவாளி என அடையாளம் காணப்பட்டுள்ளார். சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் இன்று (16) இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது. கடந்த 2024, டிசம்பர் 3ஆம் திகதி நள்ளிரவில், ஜனாதிபதி யூன் சுக் இயோல் திடீரென இராணுவச் சட்டத்தை அமுல்படுத்தி பாராளுமன்றை முடக்க முயன்றார். இருப்பினும், எம்.பிக்கள் மற்றும் பொதுமக்களின் துணிச்சலான போராட்டத்தால் சில மணிநேரங்களிலேயே இந்த முயற்சி தோல்வியடைந்தது. இதனைத் தொடர்ந்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன், வழக்கும் தொடரப்பட்டிருந்தது. வழக்கு விசாரணையின் பின்னர் இன்று இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmkgilyic03zko29nrtecabjc
-
முன்னாள் காதலரின் நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்த பெண் கணினி பொறியலாளர் கைது
முன்னாள் காதலரின் நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்த பெண் கணினி பொறியலாளர் கைது 16 Jan, 2026 | 11:11 AM முன்னாள் காதலரின் நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண் பெண் கணினி பொறியியலாளரை கைது செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் பிரிவினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட பெண் சந்தேக நபர் யாழ்ப்பாணம், கந்தர்மடத்தில் வசிக்கும் 25 வயதுடைய கணினி பொறியாளர் என குற்றப் புலனாய்வுத் பிரிவினர் மேலும் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர், தனது நிர்வாண புகைப்படங்களை தனது முன்னாள் காதலி வாட்ஸ்அப் குழு மூலம் பகிர்ந்து கொண்டதாகக் கூறி, குற்றப் புலனாய்வுத் பிரிவினரிடம் முறைப்பாடு அளித்துள்ளார். இந்த முறைப்பாட்டடின் அடிப்படையில் வடக்கு மாகாண குற்றப் புலனாய்வுத் பிரிவினர் விசாரணை தொடங்கியபோது சந்தேகநபரான பெண் முன்னாள் காதலனின் நிர்வாண புகைப்படங்களை வாட்ஸ்அப் குழுவிற்கு பகிரந்துள்ளமை தெரியவந்ததுள்ளது. பின்னர் குற்றப் புலனாய்வுத் பிரிவினர் குறித்த பெண் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்ட போது இந்த பெண் அவர் சுமார் ஐந்து ஆண்டுகளாக முன்பு முன்னால் காதலடன் உறவை பேணிவந்துள்ளார். அவர்களின் காதல் முறிவை தொடர்ந்து, அந்த பெண் உணர்ச்சி ரீதியான துயரத்தையும் மனக்கசப்பையும் அனுபவித்ததால் முன்னால் காதலனை பழிவாங்கும் நோக்குடன் நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் குறித்த பெண் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/236148 காதலர்கள் ஜாக்கிரதை!
-
யாழில் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட ஜனாதிபதி : மக்களுடன் உரையாடினார் !
நடந்து சென்று பலாலி காணிகளை பார்வையிட்ட ஜனாதிபதி Editorial / 2026 ஜனவரி 16 , மு.ப. 09:55 பலாலியில் இராணுவ படைத் தளபதிகளை இன்று (16.01.2026) காலை சந்தித்த ஜனாதிபதி அனரகுமார திஸாநாயக்க வலி வடக்கின் விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் குறித்து கலந்துரையாடியுள்ளார். எழுபது வீதமான காணிகளை விடுவிப்பதாக இராணுவத்தினர் ஜனாதிபதியிடம் உறுதியளித்ததாக தெரிய வருகிறது. https://www.tamilmirror.lk/செய்திகள்/நடந்து-சென்று-பலாலி-காணிகளை-பார்வையிட்ட-ஜனாதிபதி/175-371115
-
யாழில் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட ஜனாதிபதி : மக்களுடன் உரையாடினார் !
யாழில் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட ஜனாதிபதி : மக்களுடன் உரையாடினார் ! 16 Jan, 2026 | 12:25 PM யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இன்று வெள்ளிக்கிழமை (16 ) காலை பலாலி–அன்ரனிபுரம் வீதி வழியாக நடைப்பயிற்சி மேற்கொண்டார். காலை நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடைப்பயிற்சியின் போது, வீதியோரங்களில் இருந்த பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் இளைஞர்களுடன் ஜனாதிபதி சுருக்கமாக உரையாடியதுடன், அவர்களின் தினசரி வாழ்வாதார நிலவரங்கள், அடிப்படை தேவைகள் மற்றும் பிரதேசத்தின் தற்போதைய சூழ்நிலை குறித்து கேட்டறிந்தார். மேலும், குறித்த பிரதேசத்தின் உட்கட்டமைப்பு வசதிகள், வீதி அபிவிருத்தி மற்றும் பொது சேவைகள் தொடர்பான விடயங்களிலும் அவர் கவனம் செலுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் இந்த திடீர் நடைப்பயிற்சி பொதுமக்களிடையே கவனத்தை ஈர்த்ததுடன், அவரை நேரில் காண பொதுமக்கள் ஆர்வத்துடன் திரண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கூடிய இந்த நடைப்பயிற்சி எந்தவித இடையூறும் இன்றி நிறைவு பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/236163
-
தாய்லாந்தில் மீண்டுமொரு கிரேன் சரிந்து கார்களின் மீது விழுந்ததில் 2 பேர் பலி! ; “மரண வீதி”யானது நெடுஞ்சாலை!
தாய்லாந்தில் மீண்டுமொரு கிரேன் சரிந்து கார்களின் மீது விழுந்ததில் 2 பேர் பலி! ; “மரண வீதி”யானது நெடுஞ்சாலை! 16 Jan, 2026 | 11:36 AM தாய்லாந்து நாட்டில் நேற்றும் (15) மற்றுமொரு கிரேன் சரிந்து விழுந்ததில் இரண்டு கார்கள் நொறுங்கி, சம்பவ இடத்திலேயே 2 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இவ்விபத்து இடம்பெற்றதற்கு முதல்நாள் (14) நகோன் ரச்சசீமா மாகாணத்திலிருந்து சிகியோ மாவட்டத்தில் பயணித்துக்கொண்டிருந்த ரயில் மீதும் கிரேன் ஒன்று விழுந்ததில் இதுவரை 32 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வரும் நிலையில் தற்போது மற்றுமொரு கிரேன் விழுந்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பெங்கொக்கிலிருந்து சமுதத் சகோன் மாகாணத்தின் பாங்குன் தியான் வரை ரமா 2 என்ற நெடுஞ்சாலையில் அபிவிருத்திப் பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்று அப்பகுதியில் மேம்பால வீதி கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோதே அங்கிருந்த கிரேன் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் இரண்டு கார்கள் சேதமடைந்துள்ளன. அவ்வேளை அவ்வாகனங்களுக்குள் இருந்த இருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அப்பகுதியில் மீட்புக்குழுவினர் சென்று மீட்புப் பணிகளில் ஈடுபடுவதில் பெரும் சிரமங்கள் இருப்பதாக கூறப்படும் அதேவேளை அங்கு வேறு வாகனங்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளனவா என்பதை அறியவும் கடினமான நிலை ஏற்பட்டிருப்பதாக அந்நாட்டு போக்குவரத்துத்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அப்பகுதியில் இரும்புத்தகடுகள் தொங்கிக்கொண்டிருப்பதால் மேலும் இடிபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மீட்புக்குழுவினர் அச்சம் தெரிவித்துள்ளனர். அந்த நெடுஞ்சாலையில் கடந்த ஏழு ஆண்டுகளில் சுமார் 150 பேர் உயிரிழந்த காரணத்தினால் நேற்றைய விபத்துக்குப் பின்னர், குறித்த அவ்வீதி “மரண வீதி” என்று அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. https://www.virakesari.lk/article/236157
-
🌾 தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸநாயக்க பங்கேற்பு! ✨
🌾 தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸநாயக்க பங்கேற்பு! ✨ adminJanuary 15, 2026 யாழ்ப்பாணம், வேலணை ஐயனார் கோவில் விளையாட்டு மைதானத்தில் இன்று (15) நடைபெற்ற வட மாகாண தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸநாயக்க அவர்கள் கலந்துகொண்டார். தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் விழாவில் யாழ். மக்களுடன் இணைந்து கொண்டாடுவதில் பெருமகிழ்ச்சி அடைவதாக ஜனாதிபதி இதன்போது நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். ஜனாதிபதியின் உரையில் பல இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 🗣️ குறிப்பாக தேசிய ஒருமைப்பாடு – “எந்த மொழியைப் பேசினாலும், எந்த மதத்தைப் பின்பற்றினாலும் அனைத்துப் பிரஜைகளும் கௌரவத்துடன் வாழக்கூடிய ஒரு நாட்டை உருவாக்குவதே தமது இலக்கு.” எனக் குறிப்பிட்டுள்ளார் இனவாதமற்ற சமூகத்துடனான பாகுபாடுகளற்ற, தேசிய ஒருமைப்பாடு நிறைந்த வளமான நாட்டை கட்டியெழுப்புவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது எனவும், கலாசார மதிப்பை பேண “ஒரு நாடு அழகாக இருக்கவும், மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவும் ஒவ்வொரு சமூகத்தின் கலாசாரத்தையும் மதித்து ஏற்றுக்கொள்வது அவசியம் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தி உள்ளார். பொதுமக்களின் உற்சாகமான வரவேற்புடன் நடைபெற்ற இவ்விழா, வடக்கு மற்றும் தெற்கு மக்களிடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் ஒரு நிகழ்வாக அமையும் என எதிர்பாரக்கப்படுகிறது. https://globaltamilnews.net/2026/226606/
-
சிரியாவில் அசாத் போல் இரானில் காமனெயி அரசு வீழுமா? ஒரு விரிவான அலசல்
சிறிலங்கா வில் பெளத்தர்களும் ,இந்துக்களும் சிறுபான்மை கிறிஸ்தவர்களையும் இஸ்லாமியர்களையும் கொடுமைப்படுத்துகின்றனர் என அமேரிக்கா அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.... இதன் பின்னனி என்ன ? ஆசியாவில் உள்ள நாடுகளின் எல்லைகளை மதரீதியாக உருவாக்கியதன் காரணம் என்ன? உலக போர் இரண்டின் பின் மதம் ,சார்ந்த போர்கள் நடத்த வேணும் என தீர்மானிக்க பட்ட ஒர் விடயமாக இருக்குமோ?
-
வல்வெட்டித்துறை கடற்கரையில் பட்டதிருவிழா!
வல்வெட்டித்துறை கடற்கரையில் பட்டதிருவிழா! adminJanuary 16, 2026 வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையமும், வல்வை உதயசூரியன் விளையாட்டுக்கழகவும் இணைந்து நடாத்திய பட்டத் திருவிழா வல்வெட்டித்துறை கடற்கரையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை (15.01.26) இடம்பெற்றது. இதில் முதலாம் இடத்தை யோ. பிரகாஷின் அச்சுலேட்டர் பட்டம் பெற்றது. இரண்டாம் இடத்தை லோ.கோபிசாந்தின் விண்ணில் சிதறிய ரத்தினங்கள் பட்டமும், மூன்றாம் இடத்தை யோ.பிரகாஷின் சாகசம் காட்டும் விமானம் பட்டமும் பெற்றது. இந்த நிகழ்வில் விருந்தினர்களாக இந்திய துணைத் தூதர் சாய் முரளி, வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் எம்.கே சிவாஜிலிங்கம், யாழ் பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதிபராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். https://globaltamilnews.net/2026/226615/
-
💔மன்னார் பேசாலையில் பெரும் சோகம்: கடலில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கி பலி! 🌊
💔மன்னார் பேசாலையில் பெரும் சோகம்: கடலில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கி பலி! 🌊 adminJanuary 16, 2026 மன்னார் பேசாலை கடல் பகுதியில் நேற்று வியாழக்கிழமை (15) மாலை நீராடச் சென்ற நான்கு இளைஞர்களில் மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நண்பர்களுடன் இணைந்து பேசாலை கடல் பகுதிக்கு நீராடச் சென்றுள்ளனர். இதன்போது எதிர்பாராத விதமாக அவர்கள் அலையில் சிக்கி நீரில் மூழ்கியுள்ளனர். உயிரிழந்தவர்கள் 16 முதல் 18 வயதுடைய பேசாலை, வசந்தபுரம் மற்றும் உதயபுரம் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் ஒரு பாடசாலை மாணவரும் அடங்குவார். நீரில் மூழ்கி காணாமல் போன இளைஞனின் சடலம் நேற்று இரவு கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டு, மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒரு இளைஞன் உயிருடன் மீட்கப்பட்டு மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். பேசாலை காவற்துறையினர் இந்த துயரச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். தைப்பொங்கல் கொண்டாட்டங்களின் மத்தியில் நிகழ்ந்த இந்த உயிரிழப்புகள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்களிடையே மீளாத் துயரை ஏற்படுத்தியுள்ளது. https://globaltamilnews.net/2026/226620/
-
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் 2026 தொடர்
16ஆவது ஐ.சி.சி. 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணம் ஆரம்பம் – மேற்கிந்தியத் தீவுகள் வெற்றியுடன் தொடக்கம் 15 Jan, 2026 | 09:28 PM (நெவில் அன்தனி) 16ஆவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் முதலாவது வெற்றியை மேற்கிந்தியத் தீவுகள் பதிவுசெய்தது. ஸிம்பாப்வேயிலும் நமிபியாவிலும் கூட்டாக நடத்தப்படும் இந்த உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி தைப்பொங்கல் தினமான இன்று வியாழக்கிழமை (15) ஆரம்பமானது. ஸிம்பாப்வேக்கும் ஸ்கொட்லாந்துக்கும் இடையில் ஹராரே டக்காஷிங்க விளையாட்டுக் கழக மைதானத்தில் இன்று நடைபெறவிருந்த சி குழுவுக்கான போட்டி சீரற்ற காலநிலை காரணமாக முழுமையாக கைவிடப்பட்டது. இதன் காரணமாக இரண்டு அணிகளும் தலா ஒரு புள்ளியைப் பெற்றுக்கொண்டன. விண்ட்ஹோக், ஹை பேர்ஃபோமன்ஸ் ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்ற தன்ஸானியாவுக்கு எதிரான டி குழு போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 5 விக்கெட்களால் வெற்றியீட்டியது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட தன்ஸானியா 34 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 122 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. தன்ஸானியாவின் மொத்த எண்ணிக்கையில் 27 உதிரிகளே அதிகூடிய எண்ணிக்கையாக பதிவானது. துடுப்பாட்டத்தில் டிலான் தக்கார் (36), தர்பன் ஜோபன்புத்ரா (19), காலிதி ஜுமா (12), அக்ரி ஹியூகோ (10) ஆகிய நால்வரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். பந்துவீச்சில் விட்டெல் லோஸ் 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மிக்கா மெக்கென்ஸி 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஷக்குவான் பெலே 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் 29 ஓவர்கள் மீதம் இருக்க 5 விக்கெட்களால் வெற்றிபெற்றது. மெற்கிந்தியத் தீவுகள் 21 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 124 ஓட்டஙகளைப் பெற்று இலகுவாக வெற்றியீட்டியது. மொத்த எண்ணிக்கை 20 ஓட்டங்களாக இருந்தபோது ஸக்கரி கார்ட்டர் (8) ஆட்டம் இழந்தார். இதனைத் தொடர்ந்து தனேஸ் பிரான்சிஸ் 52 ஓட்டங்களையும் ஜுவெல் அண்ட்றூ 44 ஓட்டங்களையும் பெற்றதுடன் இருவரும் இணைந்து 2ஆவது விக்கெட்டில் 80 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றி இலக்கை அண்மிக்க உதவினர். எவ்வாறாயினும் அவர்கள் இருவர் உட்பட நால்வர் 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (114 - 4 விக்.) ஷமார் அப்ள் (4 ஆ.இ.), ஷக்குவான் பெலே (6 ஆ.இ.) ஆகிய இருவரும் வெற்றி இலக்கை அடைய உதவினர். பந்துவீச்சில் அகஸ்டினோ முவாமெலே 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ரேமண்ட் பிரான்சிஸ் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்:ஷக்குவான் பெலே https://www.virakesari.lk/article/236130
-
ஜல்லிக்கட்டு செய்திகள் 2026
பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,2025 பாலமேடு ஜல்லிக்கட்டில் காளையை அடைக்க முயற்சி செய்யும் மாடுபிடி வீரர்கள் 16 ஜனவரி 2026, 01:56 GMT புதுப்பிக்கப்பட்டது 58 நிமிடங்களுக்கு முன்னர் மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கியது. சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் காளைகளுக்கு கார் டிராக்டர் பைக் மற்றும் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படுகிறது. வீரர்கள் உறுதிமொழி ஏற்புடன் நிகழ்ச்சி தொடங்குகியது. ஊர் கோவில் காளைகள் வாடிவாசல் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. படக்குறிப்பு,பாலமேடு ஜல்லிக்கட்டை காணவந்த நடிகர் சூரி துணை முதல்வர் வருவதற்குத் தொடர்ந்து தாமதம் ஆனதால், ஆட்சியர் பிரவீன் குமார் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதி மொழி ஏற்றனர். அதைத் தொடர்ந்து , கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டு ஜல்லிக்கட்டு தொடங்கியது. முதலில் பாலமேடு கிழக்குத் தெரு மஞ்சமலை கோவிலை சேர்ந்த காளை வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்டது. 2 மணி நேரம் தாமதம் பாலமேட்டில் இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி 7 மணிக்கு தொடங்கும் என ஜல்லிக்கட்டு குழுவினர் மற்றும் அரசு தரப்பு அறிவித்திருந்தனர். இந்நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாலமேட்டுக்கு வர தாமதமான நிலையில், ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. 2 மணி நேரம் தாமதமாக காலை 9 மணியளவில் போட்டி தொடங்கியது. வெற்றி பெறுபவர்களுக்கான பரிசுகள் பாலமேடு மஞ்சமலை ஆற்று திடலில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெறும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு நிசான் கார், டிராக்டர், மோட்டார் பைக் மற்றும் தங்க நாணயம் ஆகியவை பரிசாக வழங்கப்படுகின்றன. அதேபோன்று ஒவ்வொரு சுற்றிலும் காளைகளைப் பிடிக்கும் வீரர்களுக்கும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பீரோ, கட்டில், மெத்தை, சைக்கிள், அண்டா உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்த போட்டியில் சுமார் ஆயிரம் காளைகளும் 800 மாடுபிடி வீரர்களும் களம் இறங்க உள்ளனர். 12 சுற்றுகள் வரை போட்டிகள் நடைபெறும். பாதுகாப்பு ஏற்பாடுகள் மதுரை மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை, கால்நடைத்துறை, உள்ளாட்சித் துறை மற்றும் காவல்துறை ஆகியவை சார்பாக போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காவல்துறை சார்பாக ஆயிரத்திற்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காயமடையும் வீரர்களை காப்பாற்றுவதற்காக 108 ஆம்புலன்ஸ்கள் 12, பைக் ஆம்புலன்ஸ்கள் 2, ஆம்புலன்ஸ் பணியாளர்கள் 40 பேர் என தயார் நிலையில் உள்ளனர். வீரர்களுக்கு காயம் ஏற்படும் பட்சத்தில் அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு போதிய முதலுதவிகள் அளிக்கப்பட்டு அருகில் உள்ள அரசு சிறப்பு முதலுதவி மையத்தில் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் அங்கிருந்து மேல் சிகிச்சை தேவைப்படும்பட்சத்தில் அரசு ராஜாஜி மருத்துவக்கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்படுவர் என 108 ஆம்புலன்ஸ் சேவை மண்டல மேலாளர் பிரசாத் தெரிவித்துள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0mklgz32j2o
-
நாவற்குழியில் கோர விபத்து; கிளிநொச்சியைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு
யாழ் - மன்னார் வீதியில் சோகம்: இருவர் உயிரிழப்பு! Published By: Digital Desk 1 16 Jan, 2026 | 09:52 AM யாழ்ப்பாணம் - மன்னார் வீதியில் நாவக்குளி பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற டிப்பர் வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, சுவர் மற்றும் தொலைபேசி கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் டிப்பர் வாகனத்தின் சாரதி மற்றும் உதவியாளர் இருவரும் காயமடைந்து, யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று வியாழக்கிழமை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்கள் 19 மற்றும் 23 வயதுடைய கிளிநொச்சி மற்றும் அச்சுவேலி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். சாவகச்சேரி பொலிஸார், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/236147
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
பொன்னாலை மலசலகூடம் புனரமைப்பதற்கு முன் சில படங்கள்.
-
யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.
ஆழ்ந்த அனுதாபங்கள் ..
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
பொன்னாலை ஏரம்பு ஐயாவின் 3 பிள்ளைகளின் மலசலகூடம் (பிளாற்) திருத்தப்பணிகளுக்காக 80000 ரூபா மூளாய் கணேஷா ஹாட்வெயர்ஸ் அன் எலக்ரிக்கல்ஸ் கடை உரிமையாளர் முருகசோதி அவர்களின் வங்கிக்கணக்கில் வைப்புச் செய்துள்ளேன். பணம் செலுத்தினால் தான் மணல், சல்லி, சீமந்து, கம்பி என்பவற்றை பறிப்பதாக கூறியதால் பணத்தை செலுத்திவிட்டேன். இருப்பு 380,420.67-80025=ரூ 300,395.67 சதம் இன்று 16/01/2026 80000 ரூபா வைப்புச் செய்த பின் வங்கி மீதி. 25 ரூபா இலங்கை வங்கிக்கு மாற்றுவதற்கான கட்டணம் எடுத்துள்ளார்கள்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
சிரியாவில் அசாத் போல் இரானில் காமனெயி அரசு வீழுமா? ஒரு விரிவான அலசல்
இது உண்மைதான். தாம் வாழும் இஸ்லாமிய அடிப்படைவாதக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் நாடுகளில் இருந்து தப்பி வெளியே வரும் இவர்கள், தாம் வந்து குடியேறும் மேற்கத்தைய நாடுகளில் தாம் எந்த அடிப்படைவாதத்திலிருந்து தப்பி வெளியேறினார்களோ, அதே அடிப்படைவாதக் கொள்கைகளைப் பரப்புகிறார்கள். அத்துடன் இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் கூட இஸ்லாமிய அடிப்படைவாதத்தில் ஊற்றி வளர்க்கப்படுகின்றனர். இங்கிலாந்தில் 2005 ஆம் ஆண்டிலும், அவுஸ்த்திரேலியாவில் மிக அண்மையிலும் இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் முன்னின்று படுகொலைகளில் ஈடுபட்டவர்கள் மேற்குலகில் பிறந்து வளர்ந்த இஸ்லாமிய இளைஞர் யுவதிகள்தான் என்பது அதிர்ச்சியான தகவல். 2014 முதல் 2019 வரையான காலப்பகுதியில் உலகையே ஆட்டிப்படைத்த இஸ்லாமிய அடிப்படைவாதக் கொடூரப் பயங்கரவாதிகளான ஐஸிஸ் அமைப்பில் இணைவதற்கு மேற்குலகில் பிறந்து வளர்ந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்களும் யுவதிகளும் முன்னின்று சென்றிருந்தனர் என்பதும், இவர்களுள் சிலர் மிகவும் கொடூரமான படுகொலைகளை வீடியோக்களின் முன்னால் நின்று நிகழ்த்திவிட்டு அல்லாவுக்கே மகிமை என்று கூக்குரலிட்டதும் நினைவில் இருக்கலாம். இவ்வாறு அவுஸ்த்திரேலியாவிலிருந்து சிரியா சென்ற இஸ்லாமிய அடிப்படைவாதியொருவன் தனது இரு மகன்களையும் அங்கு கூட்டிச் சென்றிருந்தான். அப்பயங்கரவாதியும், அவனது இரு புதல்வர்களும் அவுஸ்த்திரேலியாவில் பிறந்தவர்கள், லெபனானிய பின்புலத்தைக் கொண்டவர்கள். சிரியாவில் இவர்கள் கொல்லப்படுவதற்கு முன்னர், தான் படுகொலை செய்த இரு சிரியர்களின் தலைகளைக் கொய்து தனது இரு மகன்களினதும் கைகளில் கொடுத்த அவன், அல்லாவுக்கே மகிமை என்று கூவியதும் இன்னும் நினைவில் இருக்கிறது. ஈரானிய இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகள் நிச்சயம் துடைத்தழிக்கப்பட வேண்டும். இதற்காக நான் அமெரிக்க மற்றும் இஸ்ரேல் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன்.
-
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்
இப்போது நீங்கள் கூறும் நானா யாரென்று புரிந்துவிட்டது. அந்த நபரின் குரோதத்தின் காரணமும் தெளிவாகிறது. நான் விடயம் தெரியாமல் இனம்பற்றியெல்லாம் எழுதிவிட்டேன். மிக்க நன்றி!