24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அவுஸ்ரேலிய அணி. இறுதிப் போட்டியில் விளையாட தகுதியான அணி
-
நயினாதீவு விகாராதிபதி தையிட்டிக்கு விஜயம்
ஆண்டு சரியாக நினைவிலில்லை, ஆயிரத்து தொள்ளாயிரத்து இருபது நான்காம் ஆண்டாக இருக்கலாம். ஒரு தமிழர் அன்பளிப்பாக அப்போதிருந்த விகாராதிபதிக்கு கொடுத்ததாக தகவல், அவரோடிருந்த இந்த நயினாதீவு பிக்கு அவருக்கு பிறகு சொந்தம் கொண்டாடினார், அதன் பின் ஒரு பிக்கு இங்கு விகாரை கட்ட முற்பட்ட போது, இவர் மறுப்புத்தெரிவிக்கவில்லை. அவரும் பிழைக்கட்டும் என்று விட்டு விட்டாராம். அதன்பிறகு வேறொரு பிக்குவுக்கு கைமாறியதாம், அவர் இன்னொரு பிக்குவுக்கு கொடுக்க, அவர் பிக்குவிலிருந்து விலகியபோது ஒரு இளம் பிக்கு பொறுப்பானாராம், அவர் பல்கலைக்கழகம் போவதால் இப்போதைய திஸ்ஸ விகாராதிபதி கையில் போயிருக்கிறதாம், இப்படி பல கதைகள். தனது காணி, உறுதியிருக்கிறது, என்றெல்லாம் கதைவிட்டவர் இப்போ பின் வாங்குகிறார். இந்தப்பிக்கு தலைமை பிரச்சனையில் ஏதேதோ பேசி குழப்புகிறார். திஸ்ஸ விகாராதிபதிக்கு பதவி வழங்கிய பின்னே தீவிரமாக இந்தப்பிரச்சனை பற்றி பேசினார். விகாரை கட்டும்பொழுதே இவருக்குத் தெரியும். அப்போ இவர் அதை கண்டிக்கவோ, தடுக்கவோ, அனுமதி பெற்று கட்டுங்கள் என்று அறிவுத்தவோ இல்லை. அதிலும் இப்போதைய காணிக்காரர் ஒருவர் அந்த விகாரைக்கு ஐந்து பரப்பு விட்டுக்கொடுத்திருக்கிறாராம். எல்லாம் நம்முன்னோர் விட்ட தவறு. அவர்கள் நல்லிணக்கத்தோடு பேதம் பாராட்டாமல் வாழ்ந்தார்கள், இப்போ அதுவே இனத்துக்கு மதத்திற்கு பேரிடராக மாறியுள்ளது. அதுதான் ஒரே தீர்வு. ஆனால் அது ஒரு இனப்பிரச்னையுமில்லை, அப்படியொரு பிரச்சினையும் நாட்டில் இல்லை, சர்வதேசம் தலையிடத்தேவையில்லை என்று சிங்களமும் நம்மில் சிலரும் அடித்துக்கூறுகின்றனர். அது நடப்பதென்றால் எப்பவோ நடந்திருக்கும், அது நடக்க வாய்ப்பேயில்லை. பிரித்தானியா நம் நாட்டுக்குள் நுழைந்து நமது அரசியல் அதிகாரங்களை, நிலங்களை குழப்பாமல் இருந்திருந்தால்; நாமே நம்மை ஆண்டிருப்போம். இப்போ இந்தப்பிரச்சனை அவர்களுக்கு பொழுதுபோக்கு, பேசுபொருள்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்திய அணி - கிண்ணத்தை வெல்லப்போகும் நம்ம தெரிவு.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இதுவரை, ஏழு அணிகள், உலகக்கிண்ணத்தில் விளையாடும் அணிகளை அறிவித்துள்ளனர். இந்தியா அவுஸ்ரேலியா ஆப்கானிஸ்தான் தென்னாபிரிக்கா சிம்பாப்வே இங்கிலாந்து ஓமான்
- Yesterday
-
விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிராக ஒத்துழைப்பு வழங்கிய சிலர் கைது - சாகர காரியவசம்
முன்பெல்லாம் கண்விழித்து எழுந்தவுடன் புலிகள் பல்லவி,இப்போ புலம்பெயர்ந்தோர் பல்லவி. கைதுசெய்யப்பட்டவர்கள் மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை மீண்டும் ஒருக்கா இவருக்கு வாசித்து காட்டுங்களப்பா, இவருக்கு வாசித்து விளங்குவதில் ஏதோ தவறு இருக்கிறதுபோலுள்ளது. இந்தக்குற்றங்கள் நாட்டில் நடந்ததா இல்லையா? சம்பவம் நடந்த சந்தர்ப்பத்தில் அந்தப்பிரதேசத்தில் ஆயுதத்துடன் நடமாடியவர்கள் யார்,யார்? இவர்கள் அந்தக்குற்றத்தை செய்யாது விட்டால் அடுத்த சந்தேகம் இராணுவத்தினர் செய்திருக்க வாய்ப்புண்டு. இவர்களை விசாரித்து உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? உங்கள் வீட்டில் யாராவது கொலை செய்யப்பட்டிருந்தால் இப்படித்தான் பேசுவீர்களா? இவர்களுக்கு ஏன் ஆயுதம் வழங்கப்பட்டது அல்லது ஆயுதத்தை கையாள உரிமை அளித்தது? யார் யார் ஆட்சிக்காலத்தில் இந்தக்குற்றங்கள் நடந்தவை, ஏன் அப்போது அவற்றிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை? அப்போதே சட்ட நடவடிக்கை எடுத்திருந்தால் இப்போ புலம்பெயர்ந்தவர்கள் தலையிட்டிருக்கவும் தேவையில்லை, அனுரா கைது செய்ய வேண்டியிருக்கவும் தேவையில்லை. கொலைக்குற்றவாளிகளையும் நீதிமன்ற தண்டனைக்கைதிகளையும் விடுதலை செய்தது யார், நீதிமன்ற நடவடிக்கைகளை தடுக்க நீதிபதிகளை வீட்டுக்கனுப்பியது யார், ஏன்? இவர்கள் பதறியடித்து தங்கள் குற்றங்களையும் கைதுகளையும் மறைக்க முயல்கின்றனரே ஒழிய இந்த ஆயுதக்குழுக்களை காப்பற்றவல்ல. இவர்களை வேண்டுமென்று திட்டமிட்டு பயன்படுத்தியதும் இவர்களே! இவர்களுக்கு ஆயுதம், பதவி, பாதுகாப்பு, வசதி வழங்கியவர்கள் இவர்கள், ஏன் வழங்கினார்கள்? பிரச்சனைக்கு ஒரு தீர்வை அடையாமல் தடுப்பதற்கு, புலிகளை பெலவீனப்படுத்துவதற்கு, மக்களை அழிப்பதற்கு, நீதியின் குரலை நசுக்குவதற்கு இந்தக்குற்றவாளிகளை பயன்படுத்திக்கொண்டார்கள். இவர்கள் கைதுசெய்யப்பட்டவர்களுக்காக அழுகிறார்கள் என்றால் இவர்களும் விசாரிக்கப்படவேண்டும். "சோழியன் குடுமி சும்மா ஆடாது." இந்த குற்றவாளிகளுக்குப்பின்னால் இருக்கும் சூத்திரதாரிகள் இவர்களே இவர்கள் பதறத்தான் செய்வார்கள். உண்மையாகவே இந்தக்குழுக்கள் மேல் நன்றியும், நல்லெண்ணமும் இருந்திருந்தால் அவர்களை இந்தக்குற்றச்செயல்களில் பயன்படுத்தியிருக்கமாட்டார்கள். இவர்களை பலிக்கடாவாக பயன்படுத்தியிருக்கிறார்கள். பாதாள போதைக்கும்பலை கைது செய்தாலும் விமர்ச்சிக்கிறார்கள், ஊழல் செய்தோரை கைதுசெய்தால் தெருக்களில் இறங்கி சவால் விடுகிறார்கள், கொலையாளிகளை கைதுசெய்தால் குற்றம் சாட்டுகிறார்கள். இவர்களின் பிரச்சனைதான் என்ன? இந்தக் குற்றங்கள் எல்லாவற்றிலும் இவர்களுக்கு பங்குண்டு, இவைகளின் எஜமானர்கள் இவர்களே, தாங்களே பொறியில் தலையை வைக்கிறார்கள். இவையெல்லா குற்றங்களுக்கு முந்தைய அரசாங்கங்கள், அமைச்சர்களே காரணம். ஏதோ, புலம்பெயர் அமைப்புகளின் விருப்பத்திலாவது, புண்ணியத்திலாவது நாட்டில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு, நீதி, சமாதானம், சமத்துவம் மலரட்டும். அவர்களே நாட்டில் அக்கறையுள்ளவர்கள். கொலை, கொள்ளை, ஊழல் செய்பவர்களோ அவற்றிற்கு பாதுகாப்பு, வாக்காளத்து கொடுப்பவர்களோ அல்ல. தன் இனத்துரோகியை சுயநலத்திற்கே யாரும் பயன்படுத்துவார்கள், அவர்களை யாரும் நம்புவதில்லை. "துரோகி துரோகத்தினாலேயே அழிக்கப்படுவான்."
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
போட்டி திகதி நெருங்கும் போது இங்கு நிற்க கூட இடம் இருக்காது.🤣
-
இலங்கையில் பிறந்த தமிழ் கல்வியாளருக்கு இங்கிலாந்தில் கெளரவ பட்டம்!
அர்சுனா ஏதாவது வேலைக்கு நேர்முக தேர்விற்காக அந்த கேள்வியினை கேட்டிருப்பார்.🤣 இங்கு வேலை நேர்முக தேர்விற்கு கூட பெரிதாக கல்வியினை பார்க்கமாட்டார்கள், அனுபவ்மில்லாவிட்டால் வேலைக்கு எடுக்க மாட்டார்கள் ஆனால் அனுபவம் இருந்தால் கல்வித்தகமைகளை கவனிக்கமாட்டார்கள் (சாதாரண வேலைகளுக்கு).
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஆறுபேர் களத்தில்...... எல்லாரும் வாருங்கள்
-
ஜெர்மன் மின் கட்டக் கட்டணங்கள் 2026 ஆம் ஆண்டில் பாதிக்கும் மேல் குறைய உள்ளன.
ரொய்டர்ஸ் மேலுள்ள கட்டுரையில் அப்படித்தான் கூறியுள்ளார்கள். 5 சதம் யுரோ நாணயத்தில், சீன மின் கட்டணம் 7 - 9 சதம் என நினைக்கிறேன் (தற்போதய ஜேர்மன் மின் கட்டணம் 9 சதத்திலிருந்து யுரோ சிறிது அதிகமாக உள்ளதென கருதுகிறேன் ச் அரியாக நினைவில்லை ஆனால் 2022 இற்கு முன்னர் இருந்த விலையில் 31% அதிகரிப்பு மட்டுமே என கூறப்படுகிறது. நிறுவனங்களுக்குதான் இந்த விலை கட்டணம் என நினைக்கிறேன், 0.09சதம் மானியத்தின் பின்னர் 0.05 சதம். சாதாரண வாடிக்கையாளர்களுக்கு 0.40 சத யுரோ நாணயத்தில் என இணையம் குறிப்பிடுகிறது. இங்கு எரிசக்தி ஏற்றுமதி செய்யும் நாடாக அவுஸ்ரேலியா இருந்தாலும் சாதாரண வாடிக்கையாளர்கள் 0.31 அவுஸ்ரேலிய நாணயத்தில் செலுத்துகிறோம் (சிறிய நிறுவனங்களும் இதே தொகையினையே செலுத்துகிறது) (0.18 யுரோ).
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Zimbabwe: Sikandar Raza (c), Brian Bennett, Ryan Burl, Graeme Cremer, Bradley Evans, Clive Madande, Tinotenda Maposa, Tadiwanashe Marumani, Wellington Masakadza, Tony Munyonga, Tashinga Musekiwa, Blessing Muzarabani, Dion Myers, Richard Ngarava, Brendan Taylor
-
இலங்கையில் பிறந்த தமிழ் கல்வியாளருக்கு இங்கிலாந்தில் கெளரவ பட்டம்!
மக்களின் வரிப்பணத்தில் வாழும் பிரித்தானிய அரச குடும்பத்தின் ஒன்றுமில்லாத கெளரவ பட்டங்கள் (சேர் பட்டம் உள்ளங்க) தான் இவை. இதற்காகவே தான் தமிழினத்தை காட்டிக்கொடுத்து இன்று நடுவீதியில் நாடற்ற அகதிகளாக்கி விட்டுள்ளனர்.. இராமநாதன் போன்றவர்கள். கடந்த ஆண்டில் இந்த கெளரவ பட்டம் பெற்ற ஒருவர் தான்.. கொரோனா காலத்தில் அரசை தவறாக வழிநடத்தி பல்லாயிரம் உயிர்களை பாதுகாக்க தவறிவிட்டமை அண்மையில் விசாரணை அறிக்கையில் சொல்லப்பட்டிருந்து. உண்மையில் சார்ள்ஸுக்கு இந்த கெளரவப் பட்டங்களை எதுக்கு வழங்கிறம் என்ற புரிதல் இருக்கோ தெரியாது, சிபார்சு செய்யப்படும் ஆக்களுக்கு குத்தி விடுது... இப்படி பல விமர்சனங்கள் பிரித்தானியர்கள் மத்தியில் உண்டு.
-
லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு
தையிட்டி... வவுனியா திருகோணமலை... அரசியல்வியாதிகள் ஒட்டுக்குழு கூலிக்கொலைஞர்கள் கைதுகள் என்று மக்களைப் போக்கு காட்டிக் கொண்டு என் பி பி அரசும் ரணில் செய்ததை தான் செய்யினம்...
-
மாதவிடாய் பற்றி பிள்ளைகளிடம் பெற்றோர் பேசுவது அவசியம்
ஏன் எல்லா நாட்டிலும் பாடத்திட்டங்களில் இது படிப்பிக்கப்படுகுது.. நிச்சயம் வினாக்களில் வினவப்படுகுது. அதுக்கு அப்புறமும் விளக்கல்லையாமா.. வீட்டில பறைஞ்சு பேச....! இந்த கட்டுரையாளர் பள்ளிக்கூடப் பக்கம் போகாத காட்டு வாசியா...??!
-
டக்ளஸ் தேவானந்தாவின் கைதுக்கு பின்னால்…..!
வெடிச்ச குண்டுகள் ஒழுங்கா வெடிச்சிருந்தால்.. இந்த கைதுக்கும் இடமிருந்திருக்காது.. பல நூறு அப்பாவி உயிர்களும் ஒரு இனத்தின் அழிவும் தவிர்க்கப்பட்டிருக்கலாம். எல்லாம் காலக் கொடுமையின் தொடர்ச்சி.. இப்படியானதுகள் இன்னும் உயிர் வாழ்வது.
-
அடிப்படை சுகாதார வசதி திட்டம்
முதலாவதும் இரண்டாவதும் சரியாக வருமா என்று தெரியவில்லை. உதவி செய்ப்பவர்கள் நேரடியாகப் பயனாளிகளுக்கு அல்லது ஒப்பந்தக்காரர்களுக்கு அனுப்புவதை விரும்புவார்களா என்பது ஒரு கேள்வி. அங்கெ அவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள் தெரிய வரலாம் மூன்றாவது சரியாக இருக்கும் என்னைப் பொறுத்தவரையில் ஒரு புதிய வங்கிக்கணக்கு இருந்தால் உதவி செய்பவர்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்படும் உதவி செய்பவர்களின் விருப்பத்திற்கேற்ப அவர்களின் தனிப்பட்ட தகவல்களை தெரியப்படுத்தலாம் இல்லையா ? பெயர் உண்மையிலேயே வித்தியாசமான ஒரு நல்ல தமிழ்ப் பெயராக இருக்கின்றது. நல்லதொரு தெரிவு 👌 மற்றவர்களின் கருத்துக்களையும் கேட்போம் பலரும் முன்னோடிகளாக இருப்பதை விரும்புவார்கள்
-
“தமிழர்கள் ஓட்டு போதும்; திராவிடர்கள் ஓட்டு வேண்டாம்!” - நாதக பொதுக் குழுவில் சீமான் பேச்சு
தமிழ் நாட்டில் மட்டுமே வாழ வைக்கப்பட்டிருக்கும் போலித் திராவிடம் ஒழித்துக் கட்டப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்கில்லை. ஏன் இதே திரா(விட)த்தை கேராளாவில் பேசி தி மு க ஆட்சி அமைக்கவில்லை..??! கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க முடியவில்லை..??! தெலுங்கானாவில்.. ஆந்திராவில் ஆட்சி அமைக்க முடியவில்லை..??! எல்லாருக்கும் அரசியல் சவாரிவிட இழிச்சவாய் தமிழன் தான் கிடைச்சான் ஆக்கும். சீமானின் துணிச்சல் பாராட்டத்தக்கது. திராவிடப் பொய் கூச்சலும்.. தமிழ் மொழி.. இன எதிர்ப்பாளர்களான ஈ வே ரா போன்ற துரோகிகளின் பெயரை வைச்சு போலித் திராவிட ஆட்சி நடத்துவதற்கு முடிவு கட்டாமல்.. தெற்காசியாவில் தமிழரின் இருப்பை பாதுகாக்க முடியாது. தென்னிந்தியாவில் திராவிட.. பார்பர்னிய ஆக்கிரமிப்புக்குள் தமிழர் தேசம்.. இலங்கையில் சிங்கள பெளத்த ஆக்கிரமிப்புக்குள் தமிழர் தேசம். ஒட்டுமொத்தத்தில் தமிழர்கள் தேசம் எங்கும் ஆக்கிரமிப்பும் இன அழிப்புப்புமே தொடர்கிறது. ஆனால் சிலர் இந்த விளக்கமின்றி அந்நியநாடுகளில் ஒட்டி வாழ்ந்து கொண்டு சீமானுக்கு வகுப்பெடுப்பது தான் வேடிக்கை விநோதமாக உள்ளது,
-
திருகோணமலை 5 மாணவர்கள் படுகொலை : 20ஆவது நினைவேந்தல் நிகழ்வு கடற்கரையில் நடைபெற்றது
சர்வதேச முக்கியம் பெற்ற போதும்.. இந்தப் படுகொலைகளுக்கு இன்று வரை தீர்வில்லை. இதில உக்ரைனில ரஷ்சியாவுக்கு வகுப்பெடுக்கினம்.
-
ஜெர்மன் மின் கட்டக் கட்டணங்கள் 2026 ஆம் ஆண்டில் பாதிக்கும் மேல் குறைய உள்ளன.
மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது ஆனால் நீங்கள் கூறியது போல 50 வீதம் என்பது பிழையான தகவல் . இந்த வருடத்தில் கட்டணம் குறைவு என்பது ஒரு வருடம் ஒரு குடும்பத்தினருக்கு அதிக பட்சமாக 100 யுரோ விற்குள் தான் இருக்கும். அதை விட இங்கே மின்சார விநியோகம் பல நிறுவனங்களினால் கையாளப்படுகின்றது. வருடத்திற்கு ஒருமுறை நீங்கள் உங்களின் மிசார விநியோக நிறுவனத்தை மாற்றும் முறையைக் கையில் வைத்துக் கொண்டால் அதாவது ஒப்பந்தம் வருட ரீதியில் செய்தால் ஒவ்வொரு வருடமும் குறைந்த விலையில் விநியோகிக்கும் நிறுவனங்களால் அதிக லாபம் பெற்றுக் கொள்ளலாம். இதில் விழிப்பாக இருக்க வேண்டும் வருடம் முடிவதற்குள் அடுத்தநிறுவனத்தை தெரிவு செய்து பழைய நிறுவனத்தின் ஒப்பந்தத்தை முடித்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் அவர்களின் ஒப்பந்தப்படி இரண்டாவது வருடத்திற்கான அதிகப்படியான விலையைக் கொடுக்க வேண்டி வரும்
-
தையிட்டி விவகாரம் – சிங்கள ஊடகங்களில் விளம்பரம் செய்ய தீர்மானம்!
சாதாரண சில சிங்களவர்களுக்கு புரிதல் வந்தாலும் சிங்கள ஆட்சியாளர்களுக்கும் சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவம் கடற்படை விமானப்படை பொலிஸுக்கும்.. சிங்கள பெளத்த மேலாதிக்க சிந்தனை நிறைந்த சிங்கள பெளத்த பயங்கரவாதப் பிக்குகளுக்கும் இந்த விளம்பரங்களால் அறிவூட்ட விளைவது வீண் முயற்சியாக்கும். புலிகள் சிங்கள மக்களுக்கு புரிய வைக்க தமிழீழ வானொலியில் சிங்கள மொழி நிகழ்ச்சி நடத்தியது தான்.. நினைவுக்கு வந்து போகுது..! பலன்...??????!
-
விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிராக ஒத்துழைப்பு வழங்கிய சிலர் கைது - சாகர காரியவசம்
தமிழனக் கொலையாளிகளை பாதுகாக்க முனையும் தமிழினவழிப்பாளர்கள். இதில் வியப்பில்லை தானே. ஏவியவர்கள் விசுவாச அம்புகளை பாதுகாக்கவே செய்வர். இல்ல எல்லாரும் மாட்டுப்பட வேண்டி ஏற்படும்.. சங்கிலித் தொடராக.
-
நயினாதீவு விகாராதிபதி தையிட்டிக்கு விஜயம்
இவருக்கு எப்படி இங்க நிலம் கிடைத்தது... எம்மவர்கள் விற்றார்களா..???! இல்ல இவர் இடையில் புகுந்து விளையாடுறரோ.. ??! இவர் நயினாதீவில் அடாத்தாப் பிடிச்சதை எப்ப விடப்போறார்..????! இவர் இனக்கொலைஞன் மகிந்தவின் விசுவாசி...! இந்தப் பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவத்தை வெளியேற்றுவதும் தனித் தமிழீழத்துக்கான ஐநா மேற்பார்வையின் கீழ் நீதியான தேர்தலை வடக்குக் கிழக்கில் நடத்துவதுமாகும். இல்ல இந்தப் பிரச்சனை தொடரும். புங்குடுதீவில் விகாரை,.. நாவற்குழியில் விகாரை... கிளிநொச்சியில் விகாரை.. யாழில் விகாரைகள் என்று.. தமிழர் தாயகம் எங்கும் விகாரைகள் தீர்வின்றி எதிர்ப்புகளையும் தாண்டி முளைத்தே வருகின்றன. இதற்கு முடிவு... சர்வதேச தலையீட்டின் கீழ் சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புக்குள் கொண்டு வரப்பட்ட தமிழர் தேசத்தை சர்வதேசத்தின் தலையீட்டின் கீழ் சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பை அகற்றி நீதி நிர்வாக பொருண்மிய அதிகாரங்களை தமிழர்களிடம் வழங்குவது மட்டுமே ஆகும். மற்றும்படி.. இதற்கு நிரத்தர தீர்வை எவரும் பெற முடியாது என்பதே கள நிஜமாகும். இந்தப் பிரச்சனை சர்வதேச மயப்படாமல்... தமிழர்களுக்கு விடிவில்லை...!!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
வாங்க சேர்ந்து கலக்குவம்
-
ஜெர்மன் மின் கட்டக் கட்டணங்கள் 2026 ஆம் ஆண்டில் பாதிக்கும் மேல் குறைய உள்ளன.
ஜெர்மன் மின் கட்டக் கட்டணங்கள் 2026 ஆம் ஆண்டில் பாதிக்கும் மேல் குறைய உள்ளன. ராய்ட்டர்ஸ் மூலம் அக்டோபர் 1, 2025 7:52 PM GMT+10 அக்டோபர் 1, 2025 அன்று புதுப்பிக்கப்பட்டது ஜனவரி 31, 2025 அன்று ஜெர்மனியின் லுயெட்டோ-வல்லுன் அருகே A24 மோட்டார் பாதைக்கு அருகில் உயர் மின்னழுத்த மின் இணைப்புகள் மற்றும் மின்சார தூண்கள் படத்தில் காட்டப்பட்டுள்ளன. REUTERS/Annegret Hilse/கோப்பு புகைப்படம் உரிமம் வாங்கும் உரிமைகள், புதிய தாவலைத் திறக்கிறது நிறுவனங்கள் 50ஹெர்ட்ஸ் டிரான்ஸ்மிஷன் GmbH ஆம்ப்ரியன் ஜிஎம்பிஹெச் டென்னெட் ஹோல்டிங் பிவி பெர்லின், அக்டோபர் 1 (ராய்ட்டர்ஸ்) - ஜெர்மனியின் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம் ஆபரேட்டர்கள் 2026 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட மின்சார கட்டக் கட்டணங்களை அறிவித்தனர், இது அரசாங்க மானியங்களைப் பொறுத்து 57% குறைப்பைக் கணித்துள்ளது. இந்தக் குறைப்பு, ஐரோப்பாவிலேயே மிக உயர்ந்த மின்சாரச் செலவுகளால் பாதிக்கப்பட்ட நுகர்வோர் மற்றும் தொழில்துறை வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் அளிக்கிறது. ராய்ட்டர்ஸ் பவர் அப் செய்திமடல் உலகளாவிய எரிசக்தி துறையைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் வழங்குகிறது. இங்கே பதிவு செய்யவும் . நாட்டின் தேசிய காலநிலை நிதியிலிருந்து 6.5 பில்லியன் யூரோக்கள் ($7.6 பில்லியன்) மானியம் மூலம், ஒரு கிலோவாட் மணிக்கு (kWh) 6.65 சென்ட்கள் / kWh ஆக கட்டணம் குறைக்கப்படும் என்று கிரிட் ஆபரேட்டர்கள் 50Hertz, Amprion, TenneT மற்றும் TransnetBW ஆகியவை புதன்கிழமை ஒரு கூட்டு அறிக்கையில் தெரிவித்தன. டிசம்பர் 5 ஆம் தேதிக்குள் நாடாளுமன்றம் சட்டத்தை அங்கீகரிப்பதைப் பொறுத்து இந்தக் குறைப்பு சாத்தியமாகும் என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர். ஜெர்மனியின் மின்சார விலைகள் பரிமாற்றக் கட்டணங்கள், வரிகள் மற்றும் வரிகளால் உயர்த்தப்படுகின்றன, இது ஆற்றல் மிகுந்த தொழில்கள் மற்றும் பரந்த பொருளாதாரத்தின் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்துகிறது. சராசரியாக, தனியார் நுகர்வோர் தற்போது ஒரு கிலோவாட் மணிநேரத்திற்கு சுமார் 40 காசுகள் செலுத்துகிறார்கள் என்று எரிசக்தி தொழில் சங்கமான BDEW கூறுகிறது, இது ரஷ்யாவின் உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்பால் தூண்டப்பட்ட எரிசக்தி நெருக்கடிக்கு முந்தைய நிலைகளை விட 20% அதிகமாகும். மின்சார பரிமாற்றக் கட்டணங்களில் திட்டமிடப்பட்ட குறைப்புக்கு கூடுதலாக, சான்சலர் பிரீட்ரிக் மெர்ஸின் கூட்டணி அரசாங்கம், தொழில்துறை மற்றும் விவசாயத் துறைகள் உள்ளிட்டவற்றிற்கான மின்சார வரியை ஐரோப்பிய குறைந்தபட்சத்திற்குக் குறைக்க திட்டமிட்டுள்ளது. ($1 = 0.8509 யூரோக்கள்) தாமஸ் சேத்தல் அறிக்கை செய்தல் https://www.reuters.com/business/energy/german-power-grid-fees-set-drop-by-more-than-half-2026-2025-10-01/#:~:text=BERLIN%2C%20Oct%201%20(Reuters),and%20agricultural%20sectors%20among%20others. இது ஒக்டோபரில் வெளியான செய்தி, இந்த செய்தி பிரகாரம் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து மின்சார கட்டணம் பாதியாக குறையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது, இன்னொரு செய்தி ஒரு கிலோவாட்டிற்கு 5 சதத்திற்கு மின் கட்டணம் அறவிடப்படும் என கூறப்படுகிறது, இது சீனாவின் மின் கட்டணத்தினை விட குறைவானது, அண்மையில் சில நிறுவனங்கள் எரிபொருள் விலையேற்றத்தினை குற்றம் கூறி வெளியேறியுள்ளன அதில் ஒரு நிறுவனம் (BASF) சீனாவிற்கு இடமாறவுள்ளதாக கூறப்படுகிறது. ஜேர்மன் கள உறவுகளே! இந்த மின்சார கட்டண குறைப்பு அமுலுக்கு வந்து விட்டதா? அது எவ்வாறான தாக்கத்தினை பொதுச்செலவில் ஏற்படுத்துகிறது?
-
இலங்கையில் பிறந்த தமிழ் கல்வியாளருக்கு இங்கிலாந்தில் கெளரவ பட்டம்!
2009 இல் மகப்பேற்று மருத்துவ நிபுணர் சபாரட்ணம் அருள்குமரன் இதே வகையான நைற் கௌரவம் பெற்று விட்டார். அவர் தான் நிபுணர்கள் பட்டியலில் நைற் கௌரவம் பெற்ற முதல் ஈழத்தமிழராக இருப்பார் என நம்புகிறேன். https://en.wikipedia.org/wiki/Sabaratnam_Arulkumaran சேர் அருள்குமரன் யாழ் மத்திய கல்லூரிப் பழைய மாணவர். எப்பவாவது "once in a blue moon" யாழ் மத்திய கல்லூரி ஓரிருவரை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பும்😎. அப்படி மருத்துவராக வருபவர் ஏனைய பிரபல கல்லூரிகளில் இருந்து சென்றோரை விட உச்சமான தர நிலைக்கு வருவார்! மத்திய கல்லூரியின் கிணற்றுத் தண்ணீரில் தான் ஏதோ இருக்கிறது என நினைக்கிறேன் (அதனால் தான் Upper school இல் இருக்கும் அந்த ஒற்றைக் கிணற்றை நாம் இறைப்பதில்லை😂!)
-
இலங்கையில் பிறந்த தமிழ் கல்வியாளருக்கு இங்கிலாந்தில் கெளரவ பட்டம்!
இராமநாதன், முத்துகுமாரசாமி, வைத்திலிங்கம் துரைசாமி, ஓலிவர் குணதிலக, ஜோன் கொத்தலாவல என பல இலங்கையர் முன்பும் இந்த மரியாதையை பெற்றுள்ளனர். ஆனால் புலம்பெயர் தமிழரில் நிஷான் முதலாவது என நினைக்கிறேன். ஆனால் இது நிஷான் போல பலருக்கு சரியான தகமைக்கு கிடைத்தாலும், இன்னும் சிலருக்கு கொன்சேவேடிவ் கட்சிக்கு டொனேசன் கொடுத்தமைக்காக கூட வழங்கபட்டுள்ளது. நல்ல காலம் சுபாஸ்கரன் இல்லாமல் நிஷான் இந்த விருதை முதலாவதாக பெற்று கொண்டார்😂. King/Queen, Duke, Earl, Prince/Princes, Marquess, Viscount, Baron, Lord/Lady, Sir/Dame, இதற்கு கீழே - Commander of the British Empire (CBE), Officer of the British Empire (OBE), Member of the BE (MBE), மற்றும் British Empire Medal (BEM) என்பன வரும். இதுதான் மேலோட்டமாக பிரிதானியாவில் சமூக தரவரிசை. இதில் சாதாரணமானவர்கள் (commoners ) சேர், லோர்ட் வரைக்கும்தான் போக முடியும். மிகுதி பட்டங்கள், நிலவுடமை+பரம்பரையாக வருவன. ஒவ்வொரு பிரதமந்திரி விலகும் போது அவர் ஆட்களை இப்பதவிகளுக்கு நியமிக்கலாம். கள்ளன் பொரிஸ் தனக்கு காரியதரிசியாக வேலை செய்த எதையும் சாதிக்காத 30 வயதும் ஆகாத ஒரு இளம்பெண்ணை Lady யாக நியமித்தார். அதே போல் புத்தாண்டில் அரசும், அரச குடும்பமும் ஒரு தொகை பேரை நியமிப்பார்கள். இதில் சமூகத்தில் பல நல்லது செய்தோர், வேலையில், விளையாட்டில் சாதித்தோர் நியமிக்கபடுவார்கள். என்னுடைய ஒரு நெருங்கிய வெள்ள இன நண்பிக்கு, பெண்கள் கிரிகெட்டை ஊக்குவித்தமைக்காக MBE கிடைத்தது. ஆனால் அரசு விரும்பினால் எப்போதும் எவரையும் நியமிக்கலாம். சரி…நான் என்ன எண்டு நினைகிறியள்? VPBE - வெட்டி பயல் ஒவ் த பிரிடிஷ் எம்பயர்😂. இந்த knights க்குள்ளும் பல ஓடர் இருக்கு. Order of the Garter இல் அரசர், முன்னாள் பிரதமர்கள் அந்த ரேஞ்சில் உள்ளவர்கள் மட்டுமே.