Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Today
  2. உண்ணாவிரதமில்லை சத்தியாகிரகமே. அதுவும் தொடர்ந்து செய்யமாட்டேன். நான் வீட்டுக்குப் போனால் வேறொரு கூட்டம் வந்து சத்தியாக்கிரகம் செய்வார்கள். கரிணி அமரசூரியாவுக்கு உணர்வு சம்பந்தப்பட்ட பிரச்சனை இருந்தால் லால்காந்தவுடன் சேர்ந்து கொள்.
  3. முதலீடு மாநாடு தேவை தான். அதேநேரம் தமிழர்களுக்கு ஒரு அரசியல் தீர்வும் தேவை. எனவே தண்டவாளம் மாதிரி சமாந்தரமாக போக வேண்டும். அரசாங்கம் தான் செய்ய வேண்டிய வேலைகளை தட்டிக் கழித்து தனக்கு தேவையான வேலைகளை மாத்திரம் தமிழர்களை வைத்து செய்ய முயற்சி செய்கிறது. பலாலி விமானநிலையம் ஏன் சர்வதேச விமானநிலையமாக்க முடியாது? காங்கேசன்துறை துறைமுகத்தை இந்தியா அபிவிருத்தி செய்ய முன்வந்த போதும் தட்டிக் கழித்தது ஏன்?
  4. முன்னர் வீட்டுக்கு வீடு மண் பானையிலேயே பொங்கல் மட்டுமல்ல நாளாந்த வீட்டுத் தேவைகளுக்கு மண் பானை சட்டிகளையே பாவித்தார்கள். இதனால் பானை சட்டி செய்பவர்களுக்கும் பொருளாதாரமாக இருந்தது. இப்போது பானைசட்டி செய்பவர்களும் குறைந்து போனார்கள். அதன் பாவனையும் அருகிவிட்டது. இப்போது சட்டிபானை செய்பவர்களுக்காகவாவது மண்பானை பாவிக்க வேண்டும். கடைகளில் மண் சட்டிபானைகளில் சமையல் செய்தால் கூடுதலான பணம் கொடுத்து சாப்பிட்டு நண்பர்கள் வட்டத்திலும் படங்களைப் பகிர்ந்து கொள்வார்கள்.
  5. வடக்கு மாகாணத்திற்கான தேர்தல் இன்னும் நடத்தப்படாத நிலையில் இப்படியான கவர்ச்சி விளம்பரங்கள் தேவையா என்ற கேள்வி உருவாகின்றது . அனுர அரசு வடக்கில் இன்னும் ஆழமாகக் கால் ஊன்ற வேண்டும் என்ற முனைப்பில் பல செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது அதில் இதுவும் ஒன்று
  6. வாடகைக்கு விடாத வரைக்கும் அந்த வீடுகள் உரிமையாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும்.... எங்கிருந்தும் கவனிக்கலாம் . ஆனால் வாடகைக்கு விட்ட பின்னர் அந்த வீட்டைக் கண்காணிக்க முடியாதல்லவா! ஒருவரின் தனிப்பட்ட விடையம் கண்காணிக்க முடியாதல்லவா!
  7. “தை மாதம்: தமிழர் வாழ்வின் பண்பாட்டு இதயம்” தை - தமிழ் நாட்காட்டியின் பத்தாவது மாதம், ஜனவரி நடுப்பகுதி முதல் பிப்ரவரி நடுப்பகுதி வரை நீடிக்கும் - தமிழ் இதயங்களிலும் கலாச்சாரத்திலும் ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது. இது ஒரு மாதம் என்பதை விட அதற்கும் மேலானது; இது அறுவடை, நன்றியுணர்வு, புத்துணர்வு மற்றும் சமூக, ஆன்மீக புதுப்பித்தலுக்கான பருவமாகவும் திகழ்கிறது. வடகிழக்கு பருவமழையைத் தொடர்ந்து, மார்கழியின் போது (டிசம்பர் நடுப்பகுதி முதல் ஜனவரி நடுப்பகுதி வரை) வெள்ளம் வடிந்து ஆங்காங்கே குளம் போல நீர் தேங்கி இருக்கும். மார்கழி முடிந்து வரும் தை மாதத்தில் நீர் தெளிந்து விடும். தெளிவாக இருக்கும் தை மாத நீர், மக்கள் எண்ணங்களைத் தைத்துக் கொள்ளும் பளிங்கு போல இருக்கிறது. - இது சடங்கு குளியல், பிரார்த்தனை மற்றும் ஒருவரின் எண்ணங்கள், நோக்கங்கள் மற்றும் வாழ்க்கையைப் பற்றிய அமைதியான சிந்தனைக்கு ஏற்றவாறு காணப்படுகிறது. தை மாதத்தின் கலாச்சார முக்கியத்துவத்தின் மையத்தில் தைப் பொங்கல் உள்ளது — இது நன்றி சொல்லும் திருவிழா ஆகும். ‘பொங்கல்’ என்றால் பொங்கிப் பெருகி வருவது என்று பொருள். இது வாழ்க்கையின் செழிப்பையும், வளத்தையும் குறிக்கிறது. சோழர் காலத்தில் இதற்க்கு "புதியீடு" என்று பெயர் இருந்தது. அதாவது, ஆண்டின் முதல் அறுவடை என்று அதற்குப் பொருள். குடும்பங்கள் விடியற்காலையில் ஒன்றுகூடி பால், அரிசி, வெல்லம் கலந்து சமைத்து, அந்தப் பொங்கலை, சூரியனுக்குப் படைத்து, மாடு [காளை], நீர் மற்றும் மண்ணின் உதவிக்கு நன்றி செலுத்துகின்றனர். இந்த விழா சாராம்சத்தில் மதச்சார்பற்றது, விவசாயம் மற்றும் சமூக நல்வாழ்வில் வேரூன்றியுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. மேலும் குறைந்தபட்சம் சங்க காலம் (கிமு 500–கிபி 300) முதல் சோழர்கள், பல்லவர்கள் மற்றும் நவீன தமிழ் சமூகம் முழுவதும் தொடர்ந்து கொண்டாடப்படுகிறது. திருமணங்களைக் கொண்டாட குடும்பங்கள் போதுமான வளங்களைச் சேமித்து வைத்திருக்கும் அறுவடை மாதமான மார்கழியின் பின்னரே, தை மாதம் இருப்பதால், இயற்கையாகவே புதிய தொடக்கங்களுக்கும், திருமண நிகழ்வுகளுக்கும் சிறந்த காலமாக மாறியது. இதன் காரணமாகத் தான் தமிழர் “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்று சொல்லுகிறார்கள். எனவே, இதனால், இந்த பழமொழியை இலகுவாக விளங்கிக்கொள்ள முடியும். இந்த சொற்றொடர் நம்பிக்கையை மட்டுமல்ல, இயற்கை, உழைப்பு மற்றும் மனித திட்டமிடலின் நடைமுறை சீரமைப்பையும் பிரதிபலிக்கிறது. காதல் பண்டிகைகள் மற்றும் இந்திர விழாவுடன் தொடர்புடைய சித்திரையைப் போலல்லாமல், தை - சமூக மற்றும் ஆன்மீக புதுப்பித்தல் மற்றும் புதிய தொடக்கங்களின் உண்மையான பருவமாக செயல்படுகிறது. விவசாயம், வானியல் மற்றும் சடங்கு ரீதியாக, தை - சூரியனின் வடக்கு நோக்கிய பயணத்துடன் மகர ராசியில் (Capricorn) இணைகிறது, இது நீண்ட, வெப்பமான நாட்களையும், புதிய தொடக்கங்களின் உளவியல் உணர்வையும் குறிக்கிறது. சங்க காலம் முதல் பக்தி யுகம் வரையிலான இலக்கியங்கள் தையை மீண்டும் மீண்டும் கொண்டாடுகின்றன - நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, புறநானூறு மற்றும் பரிபாடல் வரை உள்ள சங்க பாடல்களில் - நிறைவான அறுவடை , சமூக கொண்டாட்டம், சடங்கு குளியல் மற்றும் பருவகால சுழற்சிகளின் அழகியல் இன்பத்தை [aesthetic enjoyment of seasonal cycles] வலியுறுத்துகின்றன. இந்த நூல்களில், ஆறுகள், குளங்கள் மற்றும் தூய்மை, சமூக தொடர்ச்சி மற்றும் மனித மற்றும் இயற்கை தாளங்களின் நல்லிணக்கத்தைக் [the harmony of human and natural rhythms] குறியீடாகக் காட்டும் பெண்களின் சடங்கு நடனங்கள் காணப்படுகின்றன. எனவே, தை மாதம் தமிழர்களுக்குப் பெரும் விருப்பமான, ஆன்மீக, சமூக மற்றும் கலாச்சார முக்கியத்துவம் கொண்ட, காலமாகத் திகழ்கிறது. இவ்வாறு, தை மாதம் கலாச்சார, சுற்றுச்சூழல் மற்றும் ஆன்மீக ஒருங்கிணைப்பின் மாதமாகும். இது விவசாயிகளின் உழைப்பு, சூரிய ஒளி, பெண்களின் முகமைத்துவம் (சுயசெயல்பாட்டுத் திறன்), மற்றும் தமிழ் சமூகங்களின் கூட்டு மகிழ்ச்சியைக் கொண்டாடுகிறது. சங்க காலம் முதல் நவீன காலம் வரை, தை மாதத்தின் சடங்குகள், கவிதைகள் மற்றும் பண்டிகைகள் தமிழர்களை அவர்களின் நிலம், வரலாறு மற்றும் சமூக விழுமியங்களுடன் இணைக்கின்றன. இந்த மாதம் சிந்தனை, நன்றியுணர்வு மற்றும் புதுப்பித்தலை ஊக்குவிக்கிறது, எனவே தை மாதம் அனைத்து தமிழ் மாதங்களிலும் மிகவும் போற்றத்தக்கதாக, சிறப்பானதாக அமைகிறது. "அருவியில் தவம் முடித்து இருவராய் சேர்த்தது தையே! ஊருக்கு பொங்கல் படைத்து பெருவிழா தந்தது தையே! முருகிற்கு அழகு சேர்த்து ஒருபூசம் தந்தது தையே! பெருமை பற்பல படைத்து அருமை மாதம் தையே!" நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ........................................................................................................................ Thai Month: The Cultural Heart of Tamil Life Thai — the tenth month of the Tamil calendar, spanning mid-January to mid-February — occupies a unique place in Tamil hearts and culture. It is more than a month; it is a season of harvest, gratitude, renewal, and social and spiritual renewal. Following the Northeast Monsoon, Tamil lands are full of rain-fed rivers and ponds during Maargazhi (mid-December to mid-January). The waters, muddy and cold, symbolize abundance yet caution; when Thai arrives, the waters settle, becoming clear and glass-like — perfect for ritual bathing, prayer, and quiet contemplation of one’s thoughts, intentions, and life. At the center of Thai’s cultural prominence lies Thai Pongal, a festival of thanksgiving to nature. ‘Pongal’ literally means “to boil over,” symbolizing abundance and prosperity. Families gather at dawn to cook rice with milk and jaggery, offering it to the Sun God, Sūrya, and honoring farm animals, water, and the land. The festival is secular in essence, rooted in agriculture and community well-being, and has been celebrated since at least the Sangam period (c. 500 BCE–300 CE), continuing through the Cholas, Pallavas, and modern Tamil society. Thai also marks a time for personal vows and renewal, where individuals commit to discipline, charity, and spiritual or practical resolutions. In villages, Thai strengthens social bonds: neighbors share Pongal, exchange harvest stories, and participate in communal prayers. Migrants around the world continue these rituals, reinforcing cultural memory and social continuity. Historically, Thai is linked with rituals for women’s prosperity and marital harmony. Ancient texts, especially Paripaadal, describe Paavai Nonbu and Thai Neeraadal, rituals observed by young unmarried women for good husbands, lasting love, and social prosperity. Women created symbolic figures on riverbanks, offered flowers, and bathed in the morning waters, accompanied by friends and mothers. This 2,000-year-old tradition exemplifies early South Indian women’s agency and ritual life, later immortalized in Aandaal’s Thiruppavai and Manickavaasakar’s Thiruvempaavai. Thai follows Maargazhi, the harvest month, when families have stored sufficient resources to celebrate weddings. This economic and ecological timing explains the adage: “Thai pirandhaal vazhi pirakkum” — “When Thai is born, paths open.” The phrase reflects not only hope but practical alignment of nature, labor, and human planning. Unlike Chithirai, associated with love festivals and Indra Vizha, Thai functioned as a true season of social and spiritual renewal and new beginnings. Agriculturally, astronomically, and ritually, Thai aligns with the sun’s northward journey into Makara Rasi (Capricorn), signaling longer, warmer days, and a psychological sense of new beginnings. Literature from the Sangam period to the Bhakti age repeatedly celebrates Thai — from Kurunthokai and Natrinai to Kalithokai, Purananuru, and Paripaadal — emphasizing harvest abundance, community celebration, ritual bathing, and aesthetic enjoyment of seasonal cycles. In these texts, rivers, ponds, and women’s ritual dances symbolize purity, social continuity, and the harmony of human and natural rhythms. Thai is thus a month of cultural, ecological, and spiritual convergence. It celebrates the farmer’s labor, the sun’s light, women’s agency, and the collective joy of Tamil communities. Rituals, poetry, and festivals of Thai, from Sangam to modern times, connect Tamils to their land, history, and social values. The month encourages reflection, gratitude, and renewal, making it the most cherished of all Tamil months. After ascetic rites in rushing streams, It is Thai that joins two lives as one. Offering Pongal to every home, It is Thai that grants a festival of abundance. Adorning Murugan with sacred beauty, It is Thai that gives the holy Thaipusam. Bestowing honour in countless ways, Thai stands — a month of rare and noble grace. Thanks [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] துளி/DROP: 1989 [“தை மாதம்: தமிழர் வாழ்வின் பண்பாட்டு இதயம்” https://www.facebook.com/groups/978753388866632/posts/33252230694425483/?
  8. காற்றுப் பை விரிவடைந்தமைக்கான எந்த அறிகுறிகளையும் காணவில்லை. இத்தகைய வாகனங்களை நம்பி எப்படிப் பயணம் செய்கிறார்கள்?
  9. உணவுப் பாத்திரத்தில் இருக்கும் அலுமினியம் அமில உணவுகளைச் (தேசிக்காய்ப் புளி, மரப்புளி) சமைக்கும் போது சிறிது உணவுடன் சேரலாம். இதை leeching என்பார்கள். ஆனால், அப்படி உணவுடன் சேரும் அலுமினியம் உடலில் இருந்து அகற்றப் படும் அளவுக்கு மிகவும் குறைவான அளவு தான். இந்த அலுமினியத்தால் மூளை, நரம்பியல் பாதிப்புகள் ஏற்படுமென்பதற்கு ஆதாரங்கள் இல்லை. இன்னொரு விடயம், அலுமினியம் மண்ணிலும், தண்ணீரிலும் கூட இயற்கையாக இருக்கும் ஒரு உலோகம். மண்பானையில் இருந்து அலுமினியம் உணவுக்குள் கசியாதா? யாராவது இதை ஆராய்ந்து பார்த்திருக்கிறார்களா? மற்றபடி, மண்பானையில் சமைப்பதும் தண்ணீர் பரிமாறுவதும் தனிப் பட்ட விருப்பங்கள்.
  10. ஊருக்கு போய் சொகுசு வீட்டை கட்டியபின் வெளி நாட்டில் இருந்து zoom மூலமும், CCTV மூலமும் சதா கண்காணித்து கொண்டிருக்கும் உரிமையாளர்களுக்கு இது பற்றி அறிய முடியாதா?
  11. நல்லதொரு முயற்சி. இந்த முனைப்பு வெற்றியளிக்க வேண்டும்.
  12. யுத்தம் விட்டு வைத்தவர் எம்மவர்களை விபத்துகள் கொண்டு சொல்கின்றன...
  13. ஈன்ற குழந்தையுடன் பெண் ஏகாம்பரநாதர் - காஞ்சிபுரம்
  14. பரந்தன் - முல்லைத்தீவு வீதியில் கோர விபத்து: நால்வர் பலி Jan 12, 2026 - 06:43 PM கிளிநொச்சி - முரசுமோட்டை பகுதியில் பேருந்துடன் கார் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், காரில் பயணித்த நால்வர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பரந்தன் - முல்லைத்தீவு வீதியில், முரசுமோட்டை சங்கரநாராயணர் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இன்று (12) பிற்பகல் பரந்தனில் இருந்து முல்லைத்தீவு நோக்கிப் பயணித்த தனியார் பயணிகள் பேருந்துடன், முல்லைத்தீவு விசுவமடுவில் இருந்து பரந்தன் நோக்கிப் பயணித்த கார் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தின் போது காருக்குள் சிக்கி நசுங்கிய நிலையில் இருந்த இருவரது உடல்கள் நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் மீட்கப்பட்டு, கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூவரில், சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் விசுவமடு பகுதியை சேர்ந்த 32, 34, 46 வயதானவர்களே உயிரிழந்தனர். மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார். கிளிநொச்சி பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். -முல்லைத்தீவு நிருபர் தவசீலன்- பரந்தன் - முல்லைத்தீவு வீதியில் கோர விபத்து: நால்வர் பலி
  15. சினோபெக் எண்ணெய் சுத்திகரிப்பு ஒப்பந்தம் 2026 முதல் காலாண்டில் நிறைவு Jan 12, 2026 - 06:34 PM ஹம்பாந்தோட்டை சினோபெக் எண்ணெய் சுத்திகரிப்புத் திட்டத்துடன் தொடர்புடைய ஒப்பந்தம் 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இறுதி செய்யப்படும் என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு குறுகிய கால உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ (Wang Yi) மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையில் இன்று (12) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 2027 ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்ட 70 வது ஆண்டு நிறைவை கூட்டாகக் கொண்டாடுவதற்கு இரு தரப்பினரும் உடன்பட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதும் இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய ஒத்துழைப்பு பங்காளித்துவத்தை முன்னெடுத்துச் செல்வதுமே இந்தச் சந்திப்பின் நோக்கமாக அமைந்திருந்தது. இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் பல நூற்றாண்டுகளாக நிலவி வரும் நல்லுறவு மற்றும் ஏழு தசாப்தங்களுக்கு முன்னர் இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் உறுதிப்படுத்தப்பட்ட நீண்டகால நட்பு மற்றும் காலத்திற்கேற்ற ஒத்துழைப்பு ஆகியவற்றை இரு அமைச்சர்களும் இதன்போது மீண்டும் உறுதிப்படுத்தினர். வர்த்தகம், முதலீடு, அபிவிருத்தி ஒத்துழைப்பு மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் பங்காளித்துவத்தை மேம்படுத்துவது குறித்தும் இக்கலந்துரையாடலில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. இதேவேளை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையின் கீழ் இலங்கை விரைவாக மீட்சியடையும் எனத் தான் நம்புவதாக சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ தெரிவித்துள்ளார். சினோபெக் எண்ணெய் சுத்திகரிப்பு ஒப்பந்தம் 2026 முதல் காலாண்டில் நிறைவு
  16. “நாங்கள் என்ன செய்யவேண்டும் என யாரும் எங்களுக்கு ஆணையிட முடியாது” - ட்ரம்புக்கு கியூபா ஜனாதிபதி பதிலடி 12 Jan, 2026 | 03:50 PM “காலம் கடப்பதற்குள் அமெரிக்க அரசுடன் கியூபா ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும்” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் “நாங்கள் என்ன செய்யவேண்டும் என யாரும் எங்களுக்கு ஆணையிட முடியாது” என கியூபா நாட்டு ஜனாதிபதி மிகுவெல் டயாஸ் கெனல் பெர்முடெஸ் (Miguel Díaz-Canel Bermúdez) தெரிவித்துள்ளார். “இனி, வெனிசுவெலாவில் இருந்து கியூபாவுக்கு எரிபொருள் வர்த்தகம் நடைபெறாது” என்றும் “காலம் கடப்பதற்குள் அமெரிக்காவுடன் கியூபா ஒப்பந்தம் மேற்கொள்ளவேண்டும்” என்றும் ட்ரம்ப் சமூக ஊடகத்தில் பதிவு செய்துள்ளார். அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே கியூபா ஜனாதிபதி மேற்கண்டவாறு தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மனித உயிர்கள் உட்பட அனைத்தையும் வியாபாரமாக மாற்றுபவர்களுக்கு கியூபாவை நோக்கி விரல் நீட்ட எந்த தார்மீக அதிகாரமும் இல்லை. கியூபாவின் மக்கள் இறையாண்மையுடன் தங்களுக்கான அரசியல் மாதிரியை தேர்வு செய்வதை பொறுக்க முடியாமல் நமது நாட்டின் மீது வெறுப்பை கொட்டுகிறார்கள். கியூபாவின் பொருளாதார நெருக்கடிக்கு புரட்சியை குறை கூறுபவர்கள் நாக்கை அடக்கிக்கொள்ளவேண்டும். ஏனென்றால், அமெரிக்கா கடந்த 60 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த கழுத்தை நெரிக்கும் நடவடிக்கைகளின் பலனை இப்போது அனுபவித்து வருகிறது. கியூபா ஒரு சுதந்திரமான, இறையாண்மை கொண்ட நாடு. நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று யாரும் எங்களுக்கு ஆணையிட முடியாது. கியூபா ஆக்கிரமிப்பு செய்யவில்லை. அது 66 ஆண்டுகளாக அமெரிக்காவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலும், கியூபா யாரையும் அச்சுறுத்துவதில்லை. கடைசி சொட்டு இரத்தம் உள்ள வரை தாயகத்தைப் பாதுகாக்க கியூபா தயாராக உள்ளது” என்று கூறியுள்ளார். “நாங்கள் என்ன செய்யவேண்டும் என யாரும் எங்களுக்கு ஆணையிட முடியாது” - ட்ரம்புக்கு கியூபா ஜனாதிபதி பதிலடி
  17. அதீத செயற்கைவழி விவசாயமும் நாட்பட்டசிறுநீரக செயலிழப்பு நோயும் நிஜத்திலிருந்து..... சட்ட மருத்துவம் December 28, 2025 1 Minute வடமாகாணத்தின் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் இந்நோய் காரணமாக கணிசமானோர் பாதிக்கப்ட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் குறிப்பாக மல்லாவி, ஒட்டிசுட்டான் மற்றும் மணலாறு (வெலிஓயா ) பிரதேசங்களில் அதிகளவான நாட்பட்ட சிறுநீரக நோயாளிகள் உள்ளனர். இவ்வாறே இலங்கையின் வடமத்திய, வடமேல், கிழக்கு மாகாணங்களிலும், அம்பாந்தோட்டைகளின் ஒரு சில பகுதிகளிலும் இந்நோயானது கடந்த சில வருடங்களில் வேகமாக பரவி அங்கு வாழும் மக்களை குறிப்பாக விவசாயமும் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபடும் பாமர மக்களை பாதித்து வருகின்றது. இந்நோய் காரணமாக 15% வடமத்திய மாகாண மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கு மாகாண மக்களாகிய எம்மையும் இக்கொடிய சிறுநீரக செயலிழப்பு நோய் வெகுவாக பாதிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதே யதார்த்தமாகும். 1. சிறுநீரக செயலிழப்பின் இருவேறு வடிவங்களும் எவை? சடுதியான சிறுநீரக செயலிழப்பு (Acute Kidney Injury) – குருதி இழப்பு, நஞ்சினை உட்கொள்ளல், அதிக வயிற்றோட்டம்… போன்ற பல்வேறு காரணங்களினால் ஒருசில மணித்தியாலங்களில் தொடங்கி ஒரு சிலநாட்கள் வரையான காலப்பகுதியில் சிறுநீரகத்தின் தொழில்பாடானது முற்றாக நிறுத்தப்படல் சடுதியான சிறுநீரக செயலிழப்பு எனப்படும். நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு (Chronic Kidney Disease) – நீரிழிவு, உயர் குருதி அழுத்தம்… போன்ற காரணிகளினால் எமது சிறுநீரகத்தின் செயற்பாடானது வருடக்கணக்கில் சிறிது சிறிதாக குறைந்து முற்றாக அற்றுப்போதல் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு எனப்படும். 2. அறியப்படாத காரணவியல் கொண்ட நாட்பட்ட சிறுநீரக நோய் என்றால் என்ன? அறியப்படாத காரணவியல் கொண்ட நாட்பட்ட சிறுநீரக நோய் (CKDu – Chronic kidney disease of unknown etiology ) என்பது நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் அல்லது பிற தெளிவான காரணங்கள் இன்றி ஏற்படும் நாட்பட்ட சிறுநீரக நோயின் ஒரு வடிவமாகும். இந்த நோய் மெதுவாக முன்னேறி, பின்னர் சிறுநீரகத்தில் மீள முடியாத சேதத்தை ஏற்படுத்தும். இந்த நோய் அதிகமாக விவசாயிகளில் ஏற்படுவதன் காரணமாக chronic interstitial nephritis in agricultural communities (CINAC) என்றும் இந்த நோய் அழைக்கப்படும். 3. இந்நோயின் தாக்கம் பற்றிய சில புள்ளி விபரங்கள் இந்நோயானது முதன்முதலாக 1990 ஆம் ஆண்டுகளின் ஆரம்ப காலப்பகுதிகளில் மதவாச்சி பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டது. இன்றுவரைக்கும் மூன்று லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் இந்நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். வடமத்திய மாகாணத்தில் 15% மக்கள் தொகையினர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏறத்தாழ 10,000 வரையான மக்கள் இந்நோயிற்கான சிகிச்சையை தற்போழது பெற்ற வண்ணம் உள்ளனர். 4. இந்நோயின் தாக்கத்திற்கு உள்ளாகும் ஆபத்திற்கு கூடியவர்கள் யார்? இந்நோயானது ஏற்படுவதற்கு அச்சூழலில் காணப்படும் பல்வேறுபட்ட காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. முக்கியமாக நீர், நிலம், ஆகியன மாசடைதல் ஆகும். இந்நோயின் தாக்கத்திற்கு உள்ளாகும் ஆபத்திற்கு கூடியவர்கள் • இலங்கையின் உலர்வலயத்தில் காணப்படும் மக்கள். • விவசாயமும் அதன் சார்ந்த தொழில்களிலும் ஈடுபடும் கூலித்தொழிலாளர்கள் • சமூக பொருளாதர நிலைகளில் பின்தங்கி உள்ளோர்கள். • குடிப்பதற்காக நிலத்தடி நீரினை கிணறு மூலம் பெற்றுக் கொள்ளும் மக்கள் • கடினத்தன்மையான (Hardness of water) நீரினை அருந்தும் மக்கள். • கசிப்பு போன்ற சட்ட விரோத மதுபானங்களை அருந்தும் ஆண்கள். • இந்நோயானது பொதுவாக 55-60 வயதுகளில் வெளிக்காட்ட ஆரம்பிக்கும். • பெண்களை காட்டிலும் ஆண்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். • ஆண்: பெண் விகிதசமம் 3:1 ஆகும். • இந்நோய் பரவிய இடங்களில் பயிரிடப்படும் புகையிலை, மற்றும் மரக்கறிவகைகளை பயன்படுத்தும் மக்கள். 5. விவசாயிகளுக்கும் அவர்கள் சார்ந்தவர்களுக்கும் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோய் ஏற்படுவதற்கான காரணங்கள்? 1. ஆசனிக்கு, கட்மியம், ஈயம் போன்ற பார உலோகங்கள் மனித உடலை அடைதல் மனித உடலிற்கு தீங்கு பயற்கும் மேற்கூறப்பட்ட உலோகங்கள் பின்வரும் வழிமுறைகளின் ஊடாக மனித உடலை அடைகின்றன. அ) பயிர்களிற்குப் பாவிக்கப்படும் அசேதன வளமாக்கிகள் மூலம் குறிப்பாக பொசுபேற்று வகை வளமாக்கிகள் பார உலோகங்களான கட்மியம், ஆசனிக்கு, ஈயம் என்பவற்றை சிறிதளவில் கொண்டுள்ளன. எல்லா வகையான பொசுபரேற்று வளமாக்கிகளும் (Single Super Phosphate –SSP, Triple Super Phosphate – TSP, Epawella phosphate) ஆசனிக்கு என்ற உலோகத்தை சிறிதளவு கொண்டுள்ளது. இவ்வகை வளமாக்கிகளை அளவிற்கு அதிகமாக பாவிக்கும் போது மண்ணை அடையும் அவ்வுலோகம் நீரினால் கழுவப்பட்டு நீர்நிலைகளை அடையும். அங்கு நீரின் கடினத்தன்மைக்கு பொறுப்பான கல்சியம் மற்றும் மக்னீசியம் என்பவற்றுடன் தாக்கமடைந்து நீரில் கரையும் தன்மைக்கு மாற்றமடையும் பின்பு குடிக்கும் நீரின் ஊடாக உடலை அடையும். ஆசனிக்கு உலோகமானது உடலில் செறிவடையும் போது சிறுநீரகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆ) உணவுச்சங்கிலி மூலம் நீர் நிலைகளை அடைந்த ஆசனிக்கு கல்சியம் போன்ற பார உலோகங்கள் தண்ணீர் மீன்கள் மற்றும் தாமரைக்கிழங்கு போன்றவற்றினால் செறிவடையும் அவற்றை மனிதர்கள் உண்ணும் போது அவை மனித உடலை அடையும். 2. அளவிற்கு அதிகமான பூச்சிகொல்லிகளைப் பாவித்தல் சிலவகைகளான பூச்சி கொல்லிகளை விசுறும் போது (neonicotinoid) அவை நேரடியாக பழங்கள் மரக்கறிவகைகள் தானியங்களுடன் இணைந்து கொள்கின்றது. இவ்வுணவுகளை உண்ணும் மனிதர்களின் உடலில் செறிவடைந்து அவர்களின் சிறுநீரகத்தின் தொழிற்பாட்டைப் பாதிக்கும். குளோரோபிரிவோஸ் (Chloropyrifos) என்ற பூச்சிகொல்லியானது நேரடியாகவே சிறுநீரகத்தைப் பாதித்து இறப்பை ஏற்படுத்தும். உலக சுகாதாரநிறுவனம் நடத்திய ஆய்வுகளின் போது சிறுநீரக செயலிழப்பிற்கு உள்ளானவர்களின் 31 வீதமானவர்களின் சிறுநீர் மாதிரியில் பூச்சிகொல்லி மருந்துகள் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் காணப்பட்டது. 3. களை கொல்லிகள் (Herbicide) இனை மிதமிஞ்சி பாவிப்பதால் புரோப்பனில் (Propanil) போன்ற களை கொல்லிகளை விசுறும்போது அவை தோலின் ஊடாகவோ சுவாசத்தின் ஊடாகவோ அல்லது உணவுச்சங்கில் ஊடாகவோ மனிதஉடலை அடைந்து நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்துகின்றது. முக்கியமாக பயிர்ச்செய்கைக்கு முன்பாக மண்ணை பதப்படுத்தும் போது விசிறப்படும் கிளைபொசேற் (Glyphosate) எனும் களை கொல்லியானது ஏனைய வளமாக்கிகள் மூலம் மண்ணை அடையும் ஆசனிக்கு கட்மியம் போன்ற பார உலோகங்களை மண்ணுடன் நிலையாகப் பிணைத்து வைத்திருந்து நீர்நிலைகளை சென்றடைய உதவுகின்றது. 4. நீரின் கடினத் தன்மை (Hardness of Water) உலகசுகாதார நிறுவனத்தின் ஆராச்சிகளின்படி அதிகளவு கடினத்தன்மை உள்ள நிலத்தடி நீரினை (>500mg/L) பாவிக்கும் பிரதேச மக்கள் அதிகளவில் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதற்கான காரணம் என்னவெனில் நீரிலுள்ள சிறுநீரகத்தைப் பாதிக்கும் நச்சுத்தன்மைப் பதார்த்தங்களின் அளவு நீரின் கடினத் தன்மைக்கு நேர்விகித சமனாகக் காணப்படுகிறது மேற்கூறிய காரணிகளைத் தவிர பின்வரும் காரணிகளும் விவசாயிகளில் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோயை ஏற்படுத்துகின்றன. • கசிப்புப் போன்ற சட்டவிரோத மதுபாவனை • உள்நாட்டில் அதாவது நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோய் பாதித்த பிரதேசங்களில் பயிரிடப்பட்ட புகையிலையின் பாவனை • அளவுக்கதிகமான வலிநோய் நிவாரணிப் பாவனை முக்கியமாக புரூவன் (Brufen) போன்ற (NSAIDs) மருந்துகளின் பாவனை. 7. வடமாகாணமக்களாகிய நாம் இந்நோயினையிட்டு ஏன் கவலைப்பட வேண்டும்? 1. வடமாகாணத்தின் பெருமளவு நீர்வளம் பாதிக்கப்பட்ட ஏனைய பிரதேசங்களைப் போன்று நிலத்தடி நீர்வளமாக காணப்படுகின்றமையும், நீரானது கடினத்தன்மையுள்ளதாக காணப்படுகின்றமையாகும். மற்றும் ஏறக்குறைய பெரும்பாலான மக்கள் நிலத்தடி நீரினை தமது அன்றாடத் தேவைக்காகப் பாவிக்கின்றனர். மற்றும் நீரின் கடினத்தன்மை பிரதேசத்திற்குப் பிரதேசம் வேறுபடுவதோடு நீரின் கடினத்தன்மையானது விவசாயிகளில் ஏற்படும் நாடப்பட்ட சிறுநீரக செயலிழப்பிற்கு நேர்விகித சமனாகவுள்ளது. 2. வடமாகாணத்தின் பெருமளவு நிலம் பாதிக்கப்பட்ட ஏனைய பிரதேசங்களைப் போன்று உலர்வலயத்தில் காணப்படுகின்றமையும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான மக்கள் விவசாயம் மற்றும் அதனோடு சார்ந்த தொழில்களை மேற்கொள்பவர்கள். 3. அண்மைக்காலமாக யுத்தம் நிறைவடைந்த பின்னர் குறிப்பாக பொருளாதாரத்தடை நீக்கப்பட்ட பின்னர் வடக்கிலுள்ள விவசாயப் பெருமக்கள் அளவுக்கதிகமான அசேதனப் பசளைகள், பீடைகொல்லி மற்றும் களைகொல்லிகளை பாவித்து வருகின்றனர் யுத்த காலத்தில் 30வருட காலமாக இப்பாவனை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அல்லது முற்றாக இல்லாமல் இருந்தது. 1977ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கை காரணமாவும் மகாவலித் திட்டம் காரணமாகவும் வடமத்திய மாகாணத்தில் உரப்பாவனை அளவுக்கதிகமாக அதிகரித்ததன் விளைவே 1990ம் ஆண்டு மதவாச்சிப் பகுதியில் முதலாவதாக விவசாயி ஒருவருக்கு நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோய் கண்டுபிடிக்கப்பட்டது. யுத்த காலத்தில் இருந்த மட்டுப்படுத்தப்பட்ட உரப்பாவனை காரணமாகவே வடமாகாண மக்கள் இன்னமும் இந்நோயின் தாக்கத்திற்கு உள்ளாகவில்லை, ஆனால் வவுனியாவின் தென்பகுதியில் உள்ள சில பிரதேசங்களில் இந்நோய் பரவியுள்ளது இனங்காணப்பட்டுள்ளது. இதன் மூலம் தெளிவாக விளங்குவது எனில் கடந்த 30 வருடங்களாக நாம் யுத்தம் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விவசாய இரசாயனப் பொருட்களை பாவித்த காரணத்தினாலேயே நாம் இன்னமும் பாதிப்படையவில்லை, மற்றும் இந்நோயானது 12 தொடக்கம் 15 வருடங்களின் பின்பே வெளித்தெரியவரும். ஏன் எனில் பார உலோகங்களான ஆசனிக்கு, கட்சியம் போன்றன மெதுவான வீதத்திலேயே உடலில் சேர்கின்றமையும் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோய் இறுதிக்கட்டத்திலேயே கண்டுபிடிக்கப்படுகின்றமையும் ஆகும். 4. இன்றைய வடமாகாண சனத்தொகையில் பெரும்பான்மையினர் பெண்கள் ஆனால் விவசாயிகளில் ஏற்படும் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பானது பெரும்பாலும் பெண்களைவிட ஆண்களையே பாதிக்கும். குறிப்பாக 50 தொடக்கம் 60 வயதில் உள்ளவர்களை பாதிக்கும். ஏற்கனவே போரினால் ஆண்களை அதிகளவில் இளந்துள்ள வடமாகாணம் இன்று நடைபெறும் அதிகரித்த விவசாய இரசாயனப் பொருட்களின் பாவனை காரணமாக எதிர்வரும் 12 தொடக்கம் 15 வருடங்களின் பின்பு குறிப்பாக உழைக்கும் குடும்பத் தலைவர்களின் உயிரிழப்பை அல்லது நோய்வாய்ப்பட்ட இயலாத நிலமையை எதிர்கொள்ள நேரிடும். இதன் காரணமாக குடும்பங்களின் பொருளாதாரநிலை மேலும் சரிவடையும். 5. வடமாகாணத்தில் தற்பொழுது கசிப்புப் போன்ற சட்டவிரோத மதுபாவனை அதிகரித்துள்ளது. அத்தோடு வடமாகாணத்தில் பலபிரதேசங்களில் புகையிலை பயிரிடப்பட்டு நுகரப்படுகின்றது. இதன்போது பூச்சி கொல்லிகள் புகையிலையின் மீது நேரடியாக விசிறப்பட்டு கழுவப்படாமல் உடலை அடைகின்றது. இவ்விரு காரணிகளும் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பை விவசாயிகளில் ஏற்படுத்தும் சாத்தியக் கூறு அதிகம். 6. கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய போரினால் மோசமாக பாதிக்கப்பட்ட மாவடடங்களில் உள்ள மக்களில் பெரும்பாலானோர் உளச் சோர்வு (Depression) நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் உடல் உபாதைகளிற்காக புரூவன் (Brufen) போன்ற வலி நிவாரணிகளை (NSAIDs) வைத்திய ஆலோசனை இன்றி பாவிக்கின்றனர். இம்மாத்திரைகள் காலப்போக்கில் சிறுநீரக செயலிழப்பிற்கு வித்திடும். 7. வடமத்திய மாகாணத்தில் உள்ள மக்கள் தான் இந்த நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோயினால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு உற்பத்தி செய்யப்படும் மரக்கறிவகைகள், நெல், சோளம், நன்னீர் மீன்கள் போன்றவற்றில் இந்நோயினை ஏற்படுத்தும் ஆசனிக்கு மற்றும் கட்மியம் போன்ற பார உலோகங்கள் நேரடியாகவோ அல்லது உணவுச் சங்கிலி மூலமாகவோ நிச்சயம் செறிந்து இருக்கும். உலக சுகாதமார நிறுவனத்தின் ஆராய்ச்சி முடிவுகளின்படி வட மத்திய மாகாணத்தில் உள்ள நன்னீர் மீன்கள் (திலாப்பியா) தாமரைக்கிழங்கு, சிலவகை அரிசி என்பவற்றில் இப்பார உலோகங்கள் காணப்பட்டுள்ளது. எனவே வடமத்திய, வடமேல் மாகாணங்களில் உற்பத்தி செய்யப்படும் ஏனைய மரக்கறிவகைகள் என்பவற்றில் இப்பார உலோகங்கள் அல்லது பூச்சி கொல்லிகள் காணப்படாது என்பதற்கு உத்தரவாதம் இல்லை. 8. இந்நோயின் பாதிப்பு, வராமல் தடுப்பதற்குரிய வழிமுறைகள் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோய் ஏற்பட்டு விட்டால் மருத்துவ சிகிச்சைகளின் மூலம் இந்நோயினை முற்றாக குணமாக்க முடியாது. சிறுநீரகத்தின் செயற்பாடு செயலிழக்கும் வீதத்தினை குறைக்கலாம். செலவுமிக்க சிறுநீரக மாற்றீட்டு அறுவைச் சிகிச்சையையே இந்நோயினை முற்றுமுழுதாக குணமாக்கவல்லது. இக்காரணங்களினால் இந்நோயினை வருமுன் காப்பதே சிறந்தது ஆகும். இந்நோயில் இருந்து எம்மை பாதுகாக்க நாம் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் அவையாவன. 1) தேவையான அளவில் அசேதன பசளைகள், பீடைகொல்லிகள், மற்றும் பூச்சி கொல்லிகள் என்பவற்றை பாவித்தல் அல்லது முற்றாக பாவித்தலை தடைசெய்தல். 2) அசேதனப் பசளைகளிற்கு பதிலாக இயற்கயான பசளைகளை பாவித்தல். 3) இரசாயன பீடைகொல்லிகள் மற்றும் பூச்சி கொல்லிகள் என்பவற்றை பாவிப்பதற்க பதிலாக இயற்கையான முறைகள் மூலம் அல்லது உயரியல் கட்டுப்பாட்டு முறை மூலம் அவற்றை கட்டுப்படுத்தல். 4) விவசாயிகளுக்கு போதிய அறிவுட்டற் செயற்பாடுகளை செய்தல். குறிப்பாக அசேதன பசளைகளை அளவோடு பாவித்தல், பூச்சி நாசினிகளை விசிறும்போது கையுறை, காலணி, முகமூடி என்பவற்றை அணிதல். 5) புகையிலை மற்றும் கசிப்பு பாவனையை கட்டுப்படுத்தல். 6) உள்ளுரில் இயற்கை பசளைகளை கொண்டு உற்பத்தி செய்யப்படும் மரக்கறிவகைகள் மற்றும் பழவகைகளின் உற்பத்தி மற்றும் விற்பனையை ஊக்குவித்தல். 9. முக்கிய கேள்வி ஏன் ஒருசிலர் மட்டும் பாதிக்கப்படுகின்றனர்? உதாரணமாக ஒரு குடும்பத்தினர் ஆண்டாண்டு காலம் ஒரு இடத்தில் வசித்து தமது கிணற்று நீரினை பருகும் பொழுது ஏன் அக்குடும்பத்தில் ஒருவர் மட்டும் இந்த நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இந்த நாட்பட்ட சிறுநீரக செயலிப்பிற்கு பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. இந்த ஒரு காரணி மட்டும் தான் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோயினை உருவாக்கியது என்று திட்ட வட்டமாக கூறமுடியாது. உதாரணமாக அதிக நேரம் வெயிலில் இருக்கின்ற தன்மை, பிறப்பு நிறை குறைவாக இருக்கின்றமை, பாரம்பரியம், சிறுநீரக பாதிப்பினை ஏற்படுத்தும் மருந்துகளின் பாவனை, சிறுவயதில் அடிக்கடி ஏற்படும் கிருமி தொற்றுக்கள் … என பல்வேறு தனிநபருக்குரிய காரணிகள் ஒருவருக்கு நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு செயலிழப்பு நோய் ஏற்படுவதினை தீர்மானிக்கும். 10. ஆறுதல் தரும் விடயம் 2017ம் ஆண்டு மேற்படி நோய் நிலவும் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட நீர் வழங்கும் வசதிகள் மற்றும் எடுக்கப்பட்ட தடுப்பு வசதிகள் காரணமாக 2024ம் ஆண்டு வட மத்திய மாகாணத்தில் குறித்த நோயாளர்களின் எண்ணிக்கையில் குறைவு ஏற்படத்தொடங்கியுள்ளது. மேலும் வழங்கப்படும் மருத்துவ வசதிகள் காரணமாக நோயாளர்களின் ஆயுட் காலமும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் குறித்த நோயின் காரணமாக சிறுநீரகங்களின் செயற்பாடு குறித்த அளவு குறைந்த குறைந்த பின்னரே நாட்பட்ட சீறுநீரக செயலிழப்புக்கான அறிகுறிகள் எம்மில் வெளித்தெரிய வரும் எனவே அவதானத்துடன் இருப்போம். வரும் முன் காப்போம். நன்றி அதீத செயற்கைவழி விவசாயமும் நாட்பட்டசிறுநீரக செயலிழப்பு நோயும்
  18. இளையராஜாவின் 50 ஆண்டுகால இசைப் பயணத்தைக் கொண்டாடும் விதமாகவும், சமூக சேவைக்காக நிதி திரட்டும் நோக்கத்துடனும் 'Music for Meals' என்ற தலைப்பில் நேற்று (ஜன.11) பெங்களூருவில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பெங்களூரு மட்டுமின்றி கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், தமிழகத்திலிருந்தும் ஏராளமான ரசிகர்கள் இந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். வயது, மொழி என எந்த வேறுபாடும் இன்றி, அனைவரையும் இளையராஜாவின் இசை ஒன்றிணைத்திருக்கிறது. இளையராஜாவின் பிரபலமான பாடல்கள், காலத்தை வென்ற மெலடிகள் ரசிர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றன. மேடையில் ஒலித்த ஒவ்வொரு பாடலும் ரசிகர்களைக் கடந்த கால நினைவுகளுக்குள் அழைத்துச் சென்றன. குறிப்பாக புகழ்பெற்ற அக்ஷய பாத்ரா அறக்கட்டளைக்கு நிதி திரட்டும் வகையில் இந்த இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டிருக்கிறது. இளையராஜா படித்துக் கொண்டிருக்கும் ஏழைக் குழந்தையருக்கு தினசரி சாப்பாடு வழங்கும் இந்த அமைப்புக்காக இசை மூலம் ஆதரவு திரட்டிய இளையராஜாவின் முயற்சியைப் பலரும் பாராட்டி வருகின்றனர். பெங்களூரு; இசைநிகழ்ச்சி மூலம் அறக்கட்டளைக்கு நிதி திரட்டிய இளையராஜா | Ilaiyaraja Raises Funds for a Charity Foundation Through a Music Concert
  19. 11 Jan, 2026 | 05:27 PM (இராஜதுரை ஹஷான்) அறிமுகப்படுத்தியுள்ள புதிய கல்விக் கொள்கை தொடர்பில் போலியான மற்றும் திரிபுப்படுத்தப்பட்ட விடயங்களை முன்னிலைப்படுத்தி அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கலாம், பலவீனப்படுத்தலாம் என்று விமர்சனங்களை முன்வைப்பவர்கள் நினைக்கிறார்கள். நாட்டுக்கு பொருந்தும் வகையிலான கல்வி கொள்கையை அமுல்படுத்துவோம். விமர்சனங்களை முன்வைப்பவர்களின் அரசியல் நோக்கம் ஒருபோதும் வெற்றிப் பெறாது என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறோம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். குருநாகல் பகுதியில் நேற்று சனிக்கிழமை (10) மாலை நடைப்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, முறைமை மாற்றத்தை நோக்கிச் செல்வது ஒன்றும் இலகுவானதல்ல, கடும் எதிர்ப்புகள் எழும்.இதுவரை காலமும் இந்த கட்டமைப்பில் சலுகைப் பெற்றவர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்கள். பெற்றுக் கொண்ட சலுகை நீங்கும் போது அதனை எதிர்ப்பார்கள். ஒரு நாளில், ஒரு இரவில் கல்வி மறுசீரமைப்பை அமுல்படுத்த முடியாது. இதனால் தான் புதிய கல்வி கொள்கையில் தொழிற்றுறை கல்விக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை நாட்டுக்கு அவசியமானது. பிள்ளைகள் மற்றும் கல்வி தொடர்பில் அக்கறை இல்லாதவர்களே புதிய கல்வி கொள்கையை எதிர்க்கிறார்கள். அறிமுகப்படுத்தியுள்ள புதிய கல்விக் கொள்கை தொடர்பில் போலியான மற்றும் திரிபுப்படுத்தப்பட்ட விடயங்களை முன்னிலைப்படுத்தி அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கலாம், பலவீனப்படுத்தலாம் என்று விமர்சனங்களை முன்வைப்பவர்கள் நினைக்கிறார்கள். நாட்டுக்கு பொருந்தும் வகையிலான கல்வி கொள்கையை அமுல்படுத்துவோம். விமர்சனங்களை முன்வைப்பவர்களின் அரசியல் நோக்கம் ஒருபோதும் வெற்றிப் பெறாது என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறோம் என்றார். புதிய கல்வி மறுசீரமைப்பு : போலியான திரிபுப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் முயற்சி வெற்றிப்பெறாது -பிரதமர் | Virakesari.lk
  20. 12 Jan, 2026 | 10:55 AM வெளிநாட்டில் வசிப்பவரின் சொகுசு வீட்டினை வாடகைக்கு பெற்று வீட்டினை விபச்சார நடவடிக்கைக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வெளி மாவட்டத்தை சேர்ந்த மூன்று பெண்கள் உள்ளிட்ட நால்வரையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி பகுதியில் வெளிநாட்டில் வசிக்கும் நபர் ஒருவரின் சொகுசு வீட்டினை கிளிநொச்சியை சேர்ந்த நபர் ஒருவர் வாடகைக்கு பெற்றுள்ளார். அந்நிலையில் குறித்த வீட்டிற்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் பெண்கள் ஆண்கள் என பலர் மோட்டார் சைக்கிள்கள் கார்களில் வந்து செல்வது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றது. இதனையடுத்து பொலிஸார் குறித்த வீட்டினை தமது கண்காணிப்புக்குள் கொண்டு வந்து, சில நாட்களாக கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில், சனிக்கிழமை (10) வீட்டினை முற்றுகையிட்டு, வீட்டில் இருந்து வெளிமாவட்டங்களை சேர்ந்த மூன்று பெண்கள் மற்றும் அந்த வீட்டினை வாடகைக்கு பெற்றிருந்தவர் ஆகியோரை கைது செய்திருந்தனர். கைது செய்யப்பட்ட நால்வரையும் விசாரணைகளின் பின்னர் ஞாயிற்றுக்கிழமை (11) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. யாழில் வெளிநாட்டில் வசிப்பவரின் சொகுசு வீட்டில் தவறான தொழில் ; கைதானவர்கள் விளக்கமறியலில் | Virakesari.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.