Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Past hour
  2. 75 மில்லியன் நஷ்டஈட்டை செலுத்த கெஹெலியவுக்கு உத்தரவு Mar 27, 2026 - 12:45 PM 2022 ஆம் ஆண்டு இந்திய கடன் திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்படாத நிறுவனம் ஒன்றிடமிருந்து கொள்முதல் நடைமுறைகளை மீறி சுகாதாரப் பொருட்களைக் கொள்வனவு செய்ததன் மூலம், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட குழுவினர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் இன்று (27) தீர்ப்பளித்துள்ளது. இதனால் அவரது தனிப்பட்ட பணத்தில் இருந்து 75 மில்லியன் ரூபாய் நஷ்டஈட்டை அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேநேரம் சுகாதார அமைச்சின் அன்றைய செயலாளர் ஜனக்க சந்திரகுப்த, மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் எஸ்.டி. ஜயரத்ன ஆகியோர் தலா 50 மில்லியன் ரூபாயைச் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் முன்னாள் பிரதான நிறைவேற்று அதிகாரி வைத்தியர் விஜித் குணசேகர மற்றும் மருத்துவ வழங்கல் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் வைத்தியர் துசித சுதர்சன ஆகியோர் 50 மில்லியன் ரூபாவை நஷ்டஈடாக அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. டிரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா உள்ளிட்ட இரு தரப்பினர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணை செய்த பின்னரே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான மூவர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அறிவித்தது. https://adaderanatamil.lk/news/cmn8kgig0000i356poaagrmbb
  3. ஈ.பி.எஃப் கொடுக்கல் வாங்கல் தகவல்களை வெளியிட முடியாது! மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு Mar 27, 2026 - 06:41 PM ஊழியர் சேமலாப நிதியத்தின் (EPF) கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு வழங்கிய தீர்மானத்தை மேன்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இவ்விடயத்தில் இலங்கை மத்திய வங்கியின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டே நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. 'வெரிட்டே ரிசர்ச்' (Verité Research) நிறுவனம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அரச பிணையங்கள் தொடர்பான கொடுக்கல் வாங்கல் குறித்த தகவல்களை கோரியிருந்தது. குறித்த கொடுக்கல் வாங்கல் இடம்பெற்ற திகதிகள், அவற்றின் செயல்திறன், விலைகள் மற்றும் கொடுக்கல் வாங்கல் சம்பந்தப்பட்ட தரப்பினர் குறித்த விரிவான பதிவுகள் உள்ளிட்ட விபரங்களை அது கோரியிருந்தது. இது தொடர்பாக மத்திய வங்கி சில பொதுவான தகவல்களை வெளியிட்ட போதிலும், இவை வணிக ரீதியாக உணர்திறன் மிக்கவை என்பதாலும், 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 5(1) பிரிவின் கீழ் உள்ள விதிவிலக்குகளுக்குள் வருவதாலும், விரிவான தகவல்களை வழங்க மறுப்புத் தெரிவித்தது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 5(1)(d) பிரிவின் கீழ், மூன்றாம் தரப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வணிக ரீதியான இரகசியத் தகவல்களைப் பாதுகாப்பதற்கான விதிவிலக்கிற்குள் இந்தத் தகவல்கள் அடங்குவதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. ஊழியர் சேமலாப நிதியத்தின் கொடுக்கல் வாங்கல்கள் குறித்த விரிவான தகவல்களை வெளிப்படுத்துவதன் மூலம் நிதியத்தின் மூலோபாயங்கள் பகிரங்கப்படும் என நீதிமன்றம் அவதானித்துள்ளது. இதன் மூலம் அரச பிணையங்கள் ஏலத்தில் சந்தையிலுள்ள ஏனைய தரப்பினர் முன்கூட்டியே எதிர்வுகூறல்களை மேற்கொண்டு தந்திரோபாய ரீதியில் ஏலங்களை சமர்ப்பிக்க முடியும். இது இறுதியாக மில்லியன் கணக்கான சந்தாதாரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நிதியத்தின் போட்டித்தன்மை மற்றும் இலாபமீட்டலைக் குறைக்கும் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. நிதியத்தின் சொத்துக்களைப் பாதுகாப்பதில் மத்திய வங்கிக்குள்ள பொறுப்பை வலியுறுத்திய நீதிமன்றம், இவ்வாறான உணர்திறன் மிக்க நிதித் தகவல்களை வெளியிடுவது நிதியத்தின் சந்தை ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளது. நிதியத்தின் வெளிப்படைத்தன்மையானது வருடாந்த அறிக்கைகள், கணக்காய்வாளர் நாயகத்தின் தணிக்கை மற்றும் பாராளுமன்ற மேற்பார்வை போன்ற சட்டரீதியான பொறிமுறைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. பொது நலன் சார்ந்த விடயத்தில், இந்தத் தகவல்களை வெளியிடுவதால் கிடைக்கும் நன்மைகள், ஊழியர் சேமலாப நிதியத்திற்கும் அதன் உறுப்பினர்களுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை விடவும் அதிகம் என்பதை நிரூபிக்க மனுதாரர் தவறிவிட்டதாகவும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் முடிவெடுத்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmn8x6xuo0000356p9xf3491g https://epf.lk/ https://etfb.lk/ta/home/
  4. வட கொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன்னுக்கு துப்பாக்கியைப் பரிசளித்தார் பெலாரஸ் ஜனாதிபதி லுகாஷென்கோ Published By: Digital Desk 3 27 Mar, 2026 | 10:00 AM வடகொரியாவிற்கு முதன்முறையாக உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ, கிம் ஜாங் உன்னுக்கு நவீன ரகத் துப்பாக்கி ஒன்றைப் பரிசாக வழங்கியுள்ளதாக அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. வியாழக்கிழமை (26) பியொங்யாங்கில் இடம்பெற்ற சந்திப்பின் போது, பெலாரஸில் தயாரிக்கப்பட்ட நவீன தானியங்கி துப்பாக்கி ஒன்றை கிம் ஜாங் உன்னுக்கு லுகாஷென்கோ வழங்கியுள்ளார். "எதிரிகள் யாராவது தோன்றினால் இதைப் பயன்படுத்துங்கள்" என அவர் கிண்டலாகக் கூறியபோது, கிம் ஜாங் உன் அதனைச் சிரித்துக்கொண்டே ஏற்றுக்கொண்டுள்ளார். பதிலுக்கு, கிம் ஜாங் உன் லுகாஷென்கோவிற்கு ஒரு வாள் மற்றும் லுகாஷென்கோவின் உருவம் பொறிக்கப்பட்ட பெரிய பூச்சாடி ஒன்றையும் பரிசளித்துள்ளார். வடகொரியா மற்றும் பெலாரஸ் ஆகியவற்றுக்கிடையே புதிய 'நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு' ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட இந்த 'அடிப்படை நட்பு ஒப்பந்தம்' உறவுகளை புதிய கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் எனத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். விவசாயம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொது சுகாதாரம் ஆகிய துறைகளில் இரு நாடுகளும் ஒத்துழைக்க இணக்கம் தெரிவித்துள்ளன. "சர்வதேச விதிகளைப் பெரிய நாடுகள் மீறி வரும் வேளையில், சுதந்திரமான நாடுகள் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியம்" என லுகாஷென்கோ இதன்போது வலியுறுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/242046
  5. அதிக காற்று மாசுபாடு கொண்ட நாடாக பாகிஸ்தான் Mar 27, 2026 - 08:18 AM 2025 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் உலகின் மிக மோசமான காற்று மாசுபாடு கொண்ட நாடாகக் காணப்பட்டதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. அங்குள்ள நுண்துகள்களின் செறிவு, உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைத்த அளவை விட 13 மடங்கு அதிகமாக பதிவாகியுள்ளது. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த காற்றுத் தரக் கண்காணிப்பு நிறுவனமான IQAir இந்த வாரம் வெளியிட்ட அதன் வருடாந்த அறிக்கையில், உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டல்களுக்குக் குறைவாக சராசரி நுண்துகள் அளவைப் பேண முடிந்தவை வெறும் 13 நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் மட்டுமே எனக் குறிப்பிட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டில் காணப்பட்ட 7 நாடுகளுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. IQAir நிறுவனம் 143 நாடுகள், பிராந்தியங்கள் மற்றும் மாகாணங்களிலுள்ள 9,446 நகரங்களிலிருந்து தரவுகளைத் திரட்டியுள்ளது. ஒட்டுமொத்தமாக, கண்காணிக்கப்பட்ட 143 நாடுகளில் 130 நாடுகள் உலக சுகாதார நிறுவனத்தின் காற்றுத் தரநிலையை எட்டுவதற்குத் தவறியுள்ளன. இந்தப்பட்டியலில் இலங்கை 42 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இலங்கையில் 2024 ஆம் ஆண்டை காட்டிலும் 2025 இல் காற்று மாசுபாடு சற்று அதிகரித்துள்ளது குறித்தப்பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்திலும் பங்களாதேஷ் இரண்டாம் இடத்திலும் தஜிகிஸ்தான் மூன்றாம் இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியா 6 ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmn8ax39a0005356paxykmt1d
  6. இரானுக்கு மேலும் 10 நாள் கால அவகாசம் - பாகிஸ்தான் பற்றி டிரம்ப் கூறியது என்ன? பட மூலாதாரம்,Chip Somodevilla/Getty Images 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள் இரான் விவகாரத்தில் ஒரு புதிய 'கால அவகாசத்தை' அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை இரவு அறிவித்தார். "இரானின் எரிசக்தி நிலையங்கள் மீது அடுத்த 10 நாட்களுக்கு எந்தத் தாக்குதல்களும் நடத்தப்படாது" என்று அவர் தெரிவித்தார். முன்னதாக திங்களன்று, இது தொடர்பாக அவர் ஐந்து நாட்கள் கொண்ட ஒரு 'காலக்கெடுவை' அறிவித்திருந்தார்; அந்தக் காலக்கெடு இன்றுடன் (வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது. "இரான் அரசாங்கத்தின் கோரிக்கையை ஏற்று, அதன் எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்களை நாங்கள் 10 நாட்களுக்கு ஒத்திவைத்துள்ளோம். இந்த அவகாசம் ஏப்ரல் 6, 2026 அன்று இரவு 8 மணி வரை அமலில் இருக்கும்," என்று அவர் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இரானுடன் பேச்சுவார்த்தைகள் தொடர்வதாக அவர் கூறினார். "போலிச் செய்தி ஊடகங்களின் (Fake News Media) கூற்றுகளுக்கு மாறாக, எங்களது பேச்சுவார்த்தைகள் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றன," என்று டிரம்ப் எழுதியிருந்தார். முன்னதாக திங்களன்றும், இரானுடனான தனது பேச்சுவார்த்தைகள் சரியான திசையில் பயணித்து வருவதாக ட்ரம்ப் கூறியிருந்தார். இரான் இந்தக் கூற்றை மறுத்ததுடன், பேச்சுவார்த்தைகள் தங்கள் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே நடைபெறும் என்றும் கூறியது. இரானின் 'பரிசு' பட மூலாதாரம்,Gallo Images/Orbital Horizon/Copernicus Sentinel Data 2025 முன்னதாக வியாழக்கிழமை இரவு (இந்திய நேரப்படி), வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது, இரானிடமிருந்து தங்களுக்குக் கிடைத்த ஒரு 'பரிசு' குறித்து டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டார். "இரானில் உள்ள சரியான நபர்களுடன் நாங்கள் மிகச் சிறந்த பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறோம். அவர்கள் எங்களுக்கு ஒரு பரிசை அளித்தனர். 'உங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் நாங்கள் தீவிரமாக இருக்கிறோம் என்பதை நிரூபிக்கும் வகையில், 8 பெரிய கப்பல்களை ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல நாங்கள் அனுமதிக்கிறோம்' என்று இரான் எங்களிடம் கூறியது," என்று அவர் தெரிவித்தார். பாகிஸ்தான் கொடிகளைப் பறக்கவிட்ட 8 கப்பல்கள் உண்மையில் ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்றன என்ற தகவல் தனக்குப் பின்னர் கிடைத்ததாக டிரம்ப் கூறினார். மேலும் இரண்டு கப்பல்களைச் செல்ல அனுமதிக்கப் போவதாக இரான் பின்னர் தன்னிடம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார். முன்னதாக புதன்கிழமை, நட்பு நாடுகளின் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல இரான் அனுமதி அளித்து வருவதாக இரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறியிருந்தார். "சீனா, ரஷ்யா, இந்தியா, இராக் மற்றும் பாகிஸ்தான் போன்ற நட்பு நாடுகளுக்கு ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல நாங்கள் அனுமதி வழங்குகிறோம்," என்று அராக்சி தெரிவித்தார். அராக்சியின் இந்தக் கூற்று குறித்த தகவலை, மும்பையில் உள்ள இரானியத் துணைத் தூதரகம் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு ஒரு சாத்தியமான இடமாகப் பாகிஸ்தானின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதை இங்கு நினைவுகூரலாம். "மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போரை பேச்சுவார்த்தைகள் மூலம் முடிவுக்குக் கொண்டுவரவும், அப்பிராந்தியத்தில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் நிலைநாட்டவும் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளுக்குப் பாகிஸ்தான் முழு ஆதரவை அளிக்கிறது," என்று பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் செவ்வாய்க்கிழமை மாலை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஷாபாஸ் ஷெரீப்பின் இந்த அறிக்கையை 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பகிர்ந்திருந்தார். இதிலிருந்து, பாகிஸ்தான் மத்தியஸ்தத்தின் கீழ் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்காவும் தயாராக இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. எண்ணெய் விலையில் லேசான சரிவு பட மூலாதாரம்,Agoes Rudianto/Anadolu via Getty Images பிபிசி நியூயார்க் பிசினஸ் செய்தியாளர் நடாலி ஷெர்மனின் கூற்றுப்படி, இரானிய எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்களை நிறுத்தி வைப்பது குறித்த டிரம்பின் சமூக ஊடகப் பதிவிற்குப் பிறகு எண்ணெய் விலைகள் சரிந்தன. அமெரிக்கப் பங்குச் சந்தை மூடப்பட்ட சிறிது நேரத்திலேயே, இரானிய எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்களை ஏப்ரல் 6 வரை ஒத்திவைப்பதாக டிரம்ப் கூறினார். போர் காரணமாக எண்ணெய் விநியோகத்தில் ஏற்படக் கூடிய பற்றாக்குறை குறித்த கவலைகளால் வியாழக்கிழமை எண்ணெய் விலைகள் உயர்ந்திருந்தன, ஆனால் டிரம்பின் சமூக ஊடகப் பதிவிற்குப் பிறகு விலைகள் மீண்டும் சரிந்தன. பிரென்ட் கச்சா எண்ணெயின் எதிர்கால ஒப்பந்தங்கள் ஒரு பீப்பாய் சுமார் $108-ல் முடிவடைந்தன, ஆனால் டிரம்பின் அறிவிப்பிற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு சுமார் $1 சரிந்தன. தொழில்நுட்ப நிறுவனங்களின் பெரும் பங்கைக் கொண்ட நாஸ்டாக் குறியீடு, சுமார் 2.4% சரிந்தது. இந்த வீழ்ச்சிக்கு ஒரு காரணம், அமெரிக்காவில் மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்திற்கு எதிராக அடுத்தடுத்து இரண்டு தீர்ப்புகள் வந்ததைத் தொடர்ந்து, அதன் பங்குகளில் ஏற்பட்ட கடுமையான சரிவு ஆகும். சமூக ஊடக அடிமைத்தனம் தொடர்பான ஒரு வழக்கில், லாஸ் ஏஞ்சல்ஸ் ஜூரி மெட்டா மற்றும் யூடியூப் நிறுவனங்களை குற்றவாளிகளாக அறிவித்து, மனுதாரருக்கு ரூ. 56.5 கோடி அபராதம் செலுத்த உத்தரவிட்டது. அமெரிக்க சந்தைகள் அக்டோபரில் இருந்த சமீபத்திய உச்சத்திலிருந்து 11% சரிந்துள்ள. அவை அதிகாரப்பூர்வமாக சரிவு நிலைக்குள் நுழைந்துவிட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர். வியாழக்கிழமை வர்த்தக அமர்வில் எஸ்&பி 500 குறியீடு 1.7% சரிந்தது, அதே நேரத்தில் டௌ ஜோன்ஸ் தொழில்துறை சராசரி குறியிடு 1% சரிவுடன் முடிவடைந்தது. https://www.bbc.com/tamil/articles/ce3dnxprg73o
  7. சிறு கதை - 207 / பெயர்களுக்கு முன் நினைவிருந்த தீவு அல்லது ஒரு நிலத்தின் கதை / அத்தியாயம் 4] [இந்த கதை ஒரு கல்லைப் பற்றியது மட்டுமல்ல. இது ஒரு நிலத்தின் கதை. அதில் வாழ்ந்த மக்களின் கதை. மாற்றப்பட்ட ஒரு சொல்லின் கதை. மறைக்கப்பட்ட நினைவுகளின் கதை. வரலாறு என்றால் நாம் புத்தகங்களில் படிப்பதையே நினைப்போம். ஆனால் வரலாறு மக்களின் நினைவுகளிலும் வாழ்கிறது. ஒரு கல், ஒரு சொல், ஒரு மாற்றம் — இவை எல்லாம் சேர்ந்து எவ்வாறு ஒரு சமூகத்தின் வாழ்க்கையை மாற்றுகின்றன என்பதையே இந்த கதை சொல்லுகிறது. ஒரு கல் பேசாது. ஆனால் அது பல காலங்களைக் காணும். மனிதர்கள் வரலாற்றை எழுதுகிறார்கள். ஆனால் அவர்கள் எல்லாவற்றையும் எழுத மாட்டார்கள். சில உண்மைகள் தெரிவு செய்யப்படுகின்றன. சில உண்மைகள் மறைக்கப்படுகின்றன. இந்த கதை சொல்லும் முக்கியமான செய்தி இதுதான்: வரலாறு முழுவதும் பொய்யாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அது ஆபத்தாக மாறுவதற்கு சில உண்மைகளை மட்டும் தேர்ந்தெடுத்து சொல்லினால் போதும். என் குறிப்பு: இந்த நூல் ஒரு கற்பனைக்கதை. ஆனால் இதில் பேசப்படும் உணர்வுகள் உண்மையானவை. நிலம், மொழி, அடையாளம், நினைவு — இவை எல்லாம் மனிதர்களின் வாழ்க்கையில் முக்கியமானவை. இந்த நூல் ஒருபக்கத்தை ஆதரிப்பதற்காக அல்ல. பேசப்படாத குரல்களை நினைவில் கொள்ளச் செய்வதற்காக. நாம் வரலாற்றைப் படிக்கும் போது ஒரு கேள்வியை கேட்க வேண்டும்: “இங்கே யாருடைய குரல் கேட்கப்படவில்லை?” அந்தக் கேள்வியே இந்த கதையின் இதயம்.] பஞ்சம் திடீரென ஒரு பெருவெடிப்பைப் போல வந்ததாகத் தோன்றினாலும், அது ஒரே நாளில் உருவானது அல்ல. கி.மு. முதலாம் நூற்றாண்டில் (கி.மு. 103 - 89), அனுராதபுரத்தின் வலகம்பாகு மன்னன் ஆட்சிக்காலத்தில், நாட்டின் அரசியல் அஸ்திவாரம் ஏற்கனவே பலவீனப்பட்டிருந்தது. தென்னிந்தியப் படையெடுப்புகள், ஏழு தமிழ் மன்னர்களின் குறுக்கீடு மற்றும் உள்நாட்டு அதிகாரப் போட்டிகளால் நீர் மேலாண்மை சிதைந்தது. பல ஆண்டுகளாக நீர்த்தேக்கங்கள் தூர்வாரப்படாமல் விடப்பட்டதும், பருவமழை தொடர்ந்து பொய்த்ததும் நிலத்தை மெல்ல மெல்ல மரணத்தின் விளிம்பிற்குத் தள்ளியது. முதலில் கிழக்குக் கடற்கரையின் திருகோணமலை அருகே கருகத் தொடங்கிய நிலம், பின்னர் ரஜரட்டையின் இதயப்பகுதியான அனுராதபுரத்தை நோக்கி நகர்ந்தது. பிரம்மாண்டமான குளங்களின் அடித்தளம் பிளந்து, நிலம் தாகத்தால் வெடித்தது. நீர் இல்லையெனில் பயிர் இல்லை; பயிர் இல்லையெனில் உயிர் இல்லை. 12 ஆண்டுகள் நீடித்த இந்தப் பஞ்சம் "பெமினிட்டிய சேய" (Beminitiya Seya) அல்லது பிராமண தீய பஞ்சமென அழைக்கப்பட்டது. களஞ்சியங்கள் காலியானதும், மக்கள் பசியால் நிலைகுலைந்தனர். வரலாற்றுக் குறிப்புகளின்படி, பசியின் கொடுமையால் மனிதர்களே மனிதர்களை உண்ணும் அவலமும் நேர்ந்தது. இது வெறும் வறட்சி மட்டுமல்ல; ஆட்சி மாற்றம், நிர்வாகக் குழப்பம் மற்றும் மக்களின் இடப்பெயர்வு என ஒரு நாகரிகத்தின் இருண்ட காலமாக மாறியது. மடங்களில் இருந்த ஆயிரக்கணக்கான பிக்குகள் உணவின்றி மடிந்தனர்; எஞ்சியவர்கள் உயிர் பிழைக்க இந்தியாவுக்கும், மலையகத்திற்கும் ஓடினர். அழியும் நிலையில் இருந்த தர்மத்தைப் பாதுகாக்க, அதுவரை வாய்மொழியாக இருந்த ‘திரிபிடகம்’ மாத்தளை அலுவிஹாரையில் முதல்முறையாக ஓலைச்சுவடிகளில் ஆவணப்படுத்தப்பட்டது. இந்த நெருக்கடி காலத்தைப் பழைய குடிகளான நாகர்கள், கடலோரத் தமிழர்கள் மற்றும் வேட்டுவ இனக்குழுக்கள் எதிர்கொண்ட விதம் வேறுபட்டது. அவர்கள் நிலத்தின் ரகசியங்களை அறிந்தவர்கள். ஆனால் இம்முறை இயற்கை மட்டும் சவால் விடவில்லை; புதிய அதிகார வர்க்கமும் சேர்ந்தே அழுத்தியது. நீர் எங்கு எஞ்சியிருந்ததோ, அங்கெல்லாம் மன்னரின் ஆணை புகுந்தது. நீர்நிலைகளின் உரிமை தனிநபர்களிடமிருந்து பறிக்கப்பட்டு, அதிகாரத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. பழைய நடுகற்களிலும், பாறைகளிலும் இருந்த தமிழ்-பிராமி எழுத்துக்களும், நாக வம்சத்தின் பாம்புச் சின்னங்களும், பழங்குடி இனக்குழுக்களின் குறியீடுகளும் மெல்ல அழிக்கப்பட்டன. அவற்றின் மேல், "இந்த நிலமும் நீரும் மன்னரின் கட்டளைப்படி வழங்கப்படுகிறது" என்ற புதிய அதிகாரத்துவ எழுத்துக்கள் செதுக்கப்பட்டன. பழைய வரலாற்றின் மேல் புதிய கதைகள் எழுதப்பட்டன. நிலத்தின் உண்மையான உரிமையாளர்களின் பெயர்கள் பாசி படிந்த கற்களில் மறைக்கப்பட, நீர் யாரிடம் இருந்ததோ அவர்கள் புதிய எஜமானர்களாக உருவெடுத்தனர். 12 ஆண்டுகளுக்குப் பிறகு மழை பெய்தபோது, நிலம் குளிர்ந்தது; ஆனால் அதன் பழைய அடையாளம் மீட்க முடியாதபடி மாறியிருந்தது. நீர் வற்றிய காலத்தில், ஒரு சமூகத்தின் கூட்டு நினைவுகளும், உரிமைகளும் சேர்த்தே வற்றச் செய்யப்பட்டன. பசி ஆறிய பின் எஞ்சியது, புதிய அதிகாரத்தால் மாற்றி எழுதப்பட்ட ஒரு தேசத்தின் வரலாறு மட்டுமே. அந்த நேரத்தில் அமைதியான எதிர்ப்பு உருவானது. வெளியில் பசி. உள்ளே கோபம். மன்னார் மீனவர்கள் இரவில் வலைகளில் செய்திகளை மறைத்து எடுத்துச் சென்றனர். யாழ்ப்பாணத்தில் பெண்கள் தங்களின் ஆடைகளில், குறிப்பாகப் புடவைகளில் நுணுக்கமான தையல் வேலைப்பாடுகள் (Embroidery) மூலம் செய்திகளையும், நில வரைபடக் குறிகளையும் ரகசியமாகப் பொறித்தனர். வவுனியா காடுகளில் வேட்டைக்காரர்கள் மறைவுப் பாதைகளை மனப்பாடம் செய்தனர். கலினி ஒருபோதும் தன்னை ஒரு கிளர்ச்சியாளர் என்று பகிரங்கமாக அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால், அவள் அந்த ரகசிய வலையமைப்பின் மூளையாகச் செயல்பட்டாள். பகலில் அவள் ஒரு குடியேற்ற அதிகாரியின் மனைவியாக, அமைதியான வாழ்க்கையை வாழ்ந்தாள். வெளியில் பார்த்தால் கீழ்ப்படியும் மனைவி போலத் தோன்றினாள். ஆனால் இரவில் அவள் வேறு. தன் கணவனுக்கு எழுத்தாளராக பணிபுரிந்த போர்வையில், தன் கணவனின் அலுவலகத்தில் இருந்த ஆவணங்களில் அவள் செய்த மாற்றங்கள் நுட்பமானவை. அவள் சில பதிவுகளை திட்டமிட்டு “தவறவிட்டாள்.” சில ஆவணங்கள் இடம் மாறின. சில பெயர்கள் நீக்கப்பட்டன. சில உத்தரவுகள் தாமதமானது. அவள் குழந்தைகளிடம் பழைய ஊர் பெயர்களைச் சொன்னாள். “இந்த நிலத்திற்கு முன்பு வேறு பெயர் இருந்தது,” என்று நினைவூட்டினாள். அவள் தாலாட்டு பாடல்கள் பாடினாள். அவை சாதாரண பாடல்கள் போல இருந்தது. ஆனால் அவற்றில் மறைந்த பாதைகள், கிணறுகள், ஆறுகள் பற்றிய தகவல்கள் இருந்தது. அவளின் எதிர்ப்பு ஆயுதமில்லாதது. அவள் வாள் எடுத்துக்கொள்ளவில்லை. அவள் தீ வைத்துக் கொள்ளவில்லை. அவள் நினைவைக் காத்தாள். அவள் புரிந்துகொண்டிருந்தாள்: நிலம் பறிக்கப்படலாம். நீர் தடுக்கப்படலாம். ஆனால் நினைவு உயிரோடு இருந்தால், மீண்டும் எழுந்து நிற்க முடியும். கிமு 2-ஆம் நூற்றாண்டு. இலங்கையில் புதிய குடியேற்றங்களும், மதம் சார்ந்த அதிகார மாற்றங்களும் நிகழத் தொடங்கிய காலம். வரலாற்று ஆய்வாளர் டாக்டர் பால் ஈ. பீரிஸ் (Dr. Paul E. Pieris) 1917-ஆம் ஆண்டு அரச ஆசியக் கழகத்தில் (Royal Asiatic Society) குறிப்பிட்டது போல, விஜயன் வருகைக்கு நீண்ட காலத்திற்கு முன்பே, பாரத தேசமே போற்றும் வண்ணம் பஞ்ச ஈஸ்வரங்கள் (ஐந்து சிவத்தலங்கள்) இலங்கையில் செழித்திருந்தன. சிவா இந்தத் தொன்மையான மரபின் காவலனாக இருந்தான். அவன் கடலோரப் பகுதிகளில் வாழ்ந்த சைவத் தமிழ் மக்களிடையே இந்த இரகசிய வலைப்பின்னலை உருவாக்கியிருந்தான். பஞ்சம் வருவதற்கு முன்பே அவன் இதை அமைத்திருந்தாலும், புதிய குடியேற்ற அதிகாரிகளின் வருகைக்குப் பின் இது உயிர்-மரணம் பிரச்சினையாக மாறியது. சிவா ஒரு முடிவெடுக்க வேண்டிய நிலை வந்தது. பலர் ஏற்கனவே கடல் கடந்து தமிழகம் நோக்கிச் சென்றுவிட்டனர். அங்கு மொழி மாறவில்லை, பூர்வீகப் பெயர்கள் சிதைக்கப்படவில்லை. ஆனால் ஓடுவது உயிரைக் காப்பாற்றலாம்; நம் நிலத்தையும் நினைவையும் காப்பாற்றுமா? “உயிர் மட்டும் போதுமா? நாம் யார் என்ற அடையாளத்தை காக்க வேண்டாமா?” – இதுவே அவனின் போராக மாறியது. ஒரு நீர்க்கால்வாய் அருகே மோதல் வெடித்தது. மூன்று பேர் இறந்தனர் – இரண்டு குடியேற்றக்காரர்கள், ஒரு பூர்வீக மனிதன். பின்னர் அங்கு எழுப்பப்பட்ட கல்வெட்டில், புதிய மதத்தைத் தழுவிய குடியேற்றக்காரர்களின் பெயர்கள் மட்டுமே பொறிக்கப்பட்டன. அந்த இரவு, சிவாவும் கலினியும் ஒரு பழைய நாகர் கோயில் இடிபாடுகளில் சந்தித்தனர். “நாம் போய்விட்டால், இந்த இடத்தை அவர்கள் காலி நிலம் என்பார்கள்,” என்றான் சிவா. “நாம் போராடினால், நம்மை தர்மத்திற்கு எதிரான காட்டுமிராண்டிகள் என்பார்கள்,” என்றாள் கலினி. அனுராதபுரத்தில் புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டது: பஞ்சத்தால் கைவிடப்பட்ட நிலங்கள் அனைத்தும் அரசாங்கத்தால் மறுவினியோகம் செய்யப்படும். பௌத்த மதம் பரப்பப்பட்ட அதே வேகத்தில், பூர்வீக நாகர் மற்றும் தமிழ் மக்களின் நிலங்கள் 'புனித தானம்' என்ற பெயரில் கையகப்படுத்தப்பட்டன. அப்போது சிவாவுக்கு ஒன்று புரிந்தது: இது நிலத்துக்கான போர் மட்டும் அல்ல. திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம், நகுலேஸ்வரம், முன்னேஸ்வரம், தொண்டீஸ்வரம் எனத் தீவைச் சுற்றி அரணாக நின்ற பஞ்ச ஈஸ்வரங்களின் நினைவுகளை அழித்துவிட்டு, புதிய வரலாற்றை எழுதும் முயற்சி இது. அவர்களுக்கிடையே ஒரு கனமான மௌனம் நிலவியது. அப்போது அவர்களுக்குப் புரிந்தது: மொழி மாற்றம்: பழைய பெயர்கள் மெல்ல பாளி மற்றும் ஆரம்பகால சிங்கள மொழி [எலு மொழி] வடிவங்களுக்கு மாற்றப்பட்டுக் கொண்டிருந்தன. நில அபகரிப்பு: ‘தர்ம தானம்’ என்ற பெயரில் பூர்வீக மக்களின் விளைநிலங்கள் புதிய விகாரைகளுக்கு வழங்கப்பட்டன. அடையாளப் போர்: இது வெறும் மண்ணுக்கான சண்டை அல்ல; யார் இந்த நாட்டின் முதல் குடிமக்கள் என்ற வரலாற்று நினைவிற்கான போர். சிவா தன் கையில் இருந்த பழைய ஓலைச்சுவடிகளை இறுகப் பற்றினான். அதில் அந்த நிலத்தின் உண்மையான எல்லைகளும், நாகர்களின் பரம்பரை பெயர்களும் இருந்தன. வாளை விட வலிமையானது நினைவு என்பதை அவன் உணர்ந்தான். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] அத்தியாயம் 5 தொடரும் துளி/DROP: 2117 [சிறு கதை - 207 / பெயர்களுக்கு முன் நினைவிருந்த தீவு அல்லது ஒரு நிலத்தின் கதை / அத்தியாயம் 4 https://www.facebook.com/groups/978753388866632/posts/34545175638464309/?
  8. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 145 பகுதி: 145 / பின் இணைப்பு - "புத்தரும் அவரது போதனைகளும்" பண்டைய இந்தியாவின் வரலாற்று மற்றும் கலாச்சார சூழல் இந்த மரபுகளுக்கு இடையில் கருத்துக்கள் மற்றும் நடைமுறைகளைப் பரிமாறிக் கொள்ள ஏதுவாக இருந்துள்ளது. பௌத்தத்தில் காணப்படும் தியானம், துறவு மற்றும் நெறிமுறைக் கொள்கைகள் [Concepts such as meditation, renunciation, and ethical principles] போன்ற கருத்துக்கள் இந்து மதத்தின் ஆன்மீக மரபுகளுடன் ஒற்றுமையைக் கொண்டுள்ளன. கௌதம புத்தருக்கும் இந்து மதத்திற்கும் இடையிலான உறவு சிக்கலானது மற்றும் ஒரு குறுகிய விவாதத்தில் முழுமையாக அதை தர முடியாது என்பதையும் கவனத்தில் கொள்ளவது அவசியம். பௌத்தம் மற்றும் இந்து மதம் இரண்டும் காலப்போக்கில் பரிணமித்துள்ளதுடன் அவற்றின் சமகால வடிவங்கள் அவற்றின் பண்டைய தோற்றத்திலிருந்து இன்று வேறுபட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. கௌதம புத்தர், தன்னை ஒரு கடவுளாக வழிபடவேண்டாம் என்று கூறினார். அவர் சொல்லியது — மனிதர்கள் தங்களால் உண்மையைத் தேடவேண்டும், தானே சிந்திக்க வேண்டும், அறம், ஞானம், தியானம் ஆகியவற்றை பின்பற்ற வேண்டும் என்பதே ஆகும். ஆனால், புத்தரின் மறைவுக்குப் பிறகு, சில புத்த துறவிகள், அவரது போதனைகளை ஒரு மதமாக மாற்றினர். இதனால் இன்று புத்தர் ஒரு தெய்வமாக காட்சியளிக்கப் பெற்றார். மடாதிபதிகள் அல்லது புத்த தேரர்கள் போன்றோர் அவரது தூதுவர்கள் (messengers) என இன்று எண்ணப்பட்டு அவர்களையும் வழிபட வேண்டும் என்று நம்பிக்கை உருவானது. இது புத்தர் சொன்னதுக்கே முற்றிலும் எதிராகும். உதாரணமாக புத்தர் சொன்னது: “தாங்களே ஒளியாக இருங்கள்” — மற்றவர்களைச் சாராமல், தாங்களே உண்மை அறிய வேண்டும் ஆகும் [“Be a light unto yourself” – meaning, find your own truth.]. ஆனால் இன்று, பல இடங்களில் புத்தருக்கு பூஜை, படிம வழிபாடு, புத்த தேரர்களுக்கு கீழ்ப்படிதல் போன்றவை நடக்கின்றன. இவை இன்று சர்வசாதாரணமாக அரசியல் தலைவர்கள் முதல் சாதாரண மக்கள் வரை நாம் இலங்கையில் காண்கிறோம். சுருக்கமாகச் சொல்லுவது என்றால், புத்தர் மக்கள் தாங்களே சிந்திக்க வேண்டும் என்றார் [to be free thinkers]. ஆனால் சிலர், அவரை தெய்வமாக மாற்றி, புத்த தேரர்களை பரமராய் மாற்றிவிட்டனர் — இது அவரின் உண்மைப் போதனைகளுக்குப் முற்றிலும் புறம்பானது. அபத்தமானது ஆகும் [But many later turned him into a god, and monks into mediators, which goes against his true message.]. உதாரணமாக, ஒரு மரியாதையின் பொருட்டு பல தலைமுறைகளாகவும், வெவ்வேறு இடங்களிலும் நடைமுறையில் இருந்தாலும், மரபுகளின் நம்பிக்கையில் எதையும் நம்ப வேண்டாம். பலர் அதைப் பற்றி பேசுகிறார்கள், என்பதால் அந்த விடயத்தை நம்ப வேண்டாம். கடந்த கால முனிவர்களின் அல்லது ஆசாரியர்களின் மேல் உள்ள விசுவாசத்தால் எதையும் நம்ப வேண்டாம். கடவுள் உத்வேகம் தந்தார் என்று உன்னை இணங்கவைத்து, நீ உன் கற்பனையின் பிரகாரம், எதையும் நம்ப வேண்டாம். உங்கள் எஜமானர்கள் மற்றும் ஆசாரியர்களின் அதிகாரத்தில் மட்டும் எதையும் நம்ப வேண்டாம். நீங்கள் உங்கள் பாட்டில் ஆராய்ந்து அல்லது சோதித்து, நியாயமானதாகக் நீங்கள் கண்டறிந்தவற்றை மட்டும் நம்புங்கள், அதற்குத் தக்க உங்கள் நடத்தையை இணங்க வையுங்கள் என்கிறார் கௌதம புத்தர். இவ்வாறு இலங்கையில் நடக்குமாயின், தமிழ் பேசும் எந்த மக்களுக்கும் எந்த அவலநிலையும் ஏற்பட்டு இருக்காது ! இலங்கையில் பௌத்தம் முதலில் சிங்கள இன மதமாக இருக்கவில்லை என்று பல அறிஞர்களும் சிந்தனையாளர்களும் வாதிடுகின்றனர். புத்தரின் முக்கிய போதனைகள் உள் அமைதி, இரக்கம் மற்றும் துன்பங்களிலிருந்து விடுதலை பற்றியவை மட்டுமே ஆகும். - அவை உலகளாவியவை என்பதுடன் அது எந்த இனம், சாதி அல்லது தேசத்துடன் என்றும் பிணைக்கப்படவில்லை. Part: 145 / APPENDIX – "The Buddha and His teachings" It's important to note that the relationship between Gautama Buddha and Hinduism is complex and cannot be fully encapsulated in a brief discussion. Both Buddhism and Hinduism have evolved over time, and their contemporary forms may differ from their ancient origins. Whatever Gautama Buddha preached and practiced , Buddhist monks, By converting the philosophy into a religion, also converted the Buddha, into a ‘God’, and themselves, as his ‘Messengers’, who must be revered and worshiped; totally disregarding the Buddha’s words as given below. “Believe nothing, in the faith of traditions, even though, they have been held in honor, for many generations, and in diverse places. Do not believe, a thing, because many people speak of it. Do not believe, in the faith, of the sages of the past. Do not believe, what you yourself have imagined, persuading yourself, that a God inspires you. Believe nothing, on the sole authority, of your masters and priests. After examination, believe what you yourself, have tested and found, to be reasonable, and conform your conduct thereto.” [The Buddha] நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 146 தொடரும் / Will follow துளி/DROP: 2118 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 145 https://www.facebook.com/groups/978753388866632/posts/34545240858457787/?
  9. Today
  10. 🫣................... இப்படியான பிரபலங்களுடன் தான் ஒரு சாதாரண மனிதன் மல்லுக்கட்டி வாழ்ந்து, முன்னோக்கிப் போக வேண்டிய நிலை. பிரபலங்கள் சொல்வதால் அதை சரியென்று அப்படியே மேற்கோள் காட்டும் அறியாமையும், அவசரமும் வேறு எங்களின் சமூகத்தில் ஊறி நிற்கின்றது. பல வருடங்களின் முன்னர், கே ஜே ஜேசுதாஸ் அவர்கள் பெண்கள் ஜீன்ஸ் போன்ற ஆடைகளை அணிந்து கொண்டு வெளியே செல்லுவது தான் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தூண்டுகின்றது என்று சொன்னார். அன்று கேரளாவில் அவரின் கூற்றுக்கு எதிராக ஒரு போராட்டமே நடந்தது. ஜெயமோகன் கூட ஜேசுதாஸ் ஒரு பெரியவர், அவரை மன்னித்து விடலாம் என்று ஒரு கட்டுரை எழுதியதாக ஞாபகம். இப்பொழுது ஜேசுதாஸ் டெக்சாஸில் இருக்கின்றார் என்று நினைக்கின்றேன். இப்பொழுதாவது அவர் மாறியிருப்பார் என்று நம்புவோம்.
  11. மிக்க நன்றி அல்வாயன். நீங்கள் சொல்லும் விடயம் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றேன். நான் அங்கு இருந்ததில்லை, ஆதலால் அவர்கள் எவரையும் எனக்குத் தெரியாது. கோவில் கதைகள் போன்று இவை தெரிந்தாலும், இவை மனிதர்களின் கதைகளே...............🤣.
  12. https://www.nature.com/articles/d41586-023-01313-5 👆 இந்தக் கட்டுரை 2023 இல் வெளிவந்தது. இதில் இருக்கும் தவல்களின் படி பார்த்தால், லோகமகாதேவியின் கட்டுரையில் இருப்பது போல எதுவும் எளிதாக, நேரடியாக நடக்கவில்லை. ஒரு படம் மட்டுமே டி.என்.ஏ அமைப்பின் கண்டு பிடிப்பை நிகழ்த்தி விடவில்லை. தனது ஆய்வுக்கு, றோசலின்ட் "B" வடிவத்தை தவிர்த்து விட்டு, "A" வடிவத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார் என்பது தான் அவர் நோபல் பரிசுக் குழுவில் உள்ளடக்கப் படாமைக்கான காரணம். இது அவரிடமிருந்து, அவரது அனுமதியின்றித் திருடப் பட்டது என்பது சென்ஷேனல் கதை எழுதுவோரின் வாதமாகவே தெரிகிறது.
  13. சீமான் இந்த தடவை பெட்டியை திமுகவிடம் வாங்கி கொண்டு அவர்களை முன்பு போல் விமர்சிப்பதில்லை என மக்கள் மத்தியில் ஒரு நிரூபிக்க முடியாத கதை அடிபடுவது தெரிந்ததே. இதற்கு வலு சேர்க்கும் படி, சீமானும் திமுகவை விமர்சிக்கிறேன் என ஆரம்பித்து பல நிமிடங்கள் திமுகவின் திட்டங்களை பாசிட்டிவாக பேசி விட்டு, கடைசி அரை நிமிடம் மட்டும் அதை விமர்சிக்கிறார். இதனால் இவர் திமுகவின் நல்லதுகளை மக்களிடம் எடுத்து சொல்லவா வந்தார் என தம்பிகள் குழம்பி போயுள்ளனராம்😂. அண்ணன் சபரீசனிடம் வாங்கிய பெட்டிக்கு விசுவாசமாக நடக்கிறார் என்பதே என் கருத்து. அண்ணன் திமுகவை பற்றி பேசியதை எடிட் பண்ணிய தொகுப்பு👇.
  14. தனி…. அரசு…..பெயரில் உள்ள தில் செயலில் இல்லையேப்பா…கூட்டணிக்கு தவமிருக்கிறீர்களே😂
  15. றியாஸ் குரானா பின்பற்ற விரும்பும் "நிபுணர்களை எதிர்த்தல், எல்லோரையும் நிபுணர்களாகக் கருதுதல்" என்ற போக்குத் தான் இன்று தீவிர வலதுசாரிகளிடமும் இருக்கிறது. அதே ஆயுதத்தை தீவிர இடது சாரிகளும் எடுத்துக் கொள்கின்றனர். இதனால் தான் கொஞ்சம் யோசிக்கக் கூடியவர்கள் இரு பக்கமும் சாராத moderates களாகவே இருந்து விட்டுப் போகின்றனர்.
  16. எஸ்.வி. சேகர் போன்ற சங்கி மங்கிகளிடம் இருந்து இப்படியான கருத்துக்கள் வருவதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?
  17. அப்படியானால் இது கறுப்பு வெள்ளை ஊழல் கேஸ். இப்படி பட்டவர்களை ஏன் பிரதேச சபை உறுப்பினர்களாகவும், ஊழியர்களாகவும் தொடர்ந்து வைத்திருக்கிறார்கள்? என்ற கேள்வியைத் தான் ஒருவர் கேட்க வேண்டுமேயொழிய, ஏன் வேலை பிந்துகிறது என்று கேட்க முடியாது.
  18. திருவாரூர் தேர் அழகு . .......! 🙏
  19. அரசியல் பச்சோந்தி வைகோவின் மதிமுக விற்கு எந்த ஒரு தொகுதியும் வழங்கியிருக்க கூடாது. தனித்து நின்றால் ஐந்து வாக்குகள் கூட இவர்களுக்கு கிடைக்காது.
  20. 75 மில்லியனை செலுத்துங்கள்! கெஹெலியவுக்கு நீதிமன்றம் வழங்கிய கடும் எச்சரிக்கை! 2022 ஆம் ஆண்டு இந்திய கடன் திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்படாத நிறுவனம் ஒன்றிடமிருந்து கொள்முதல் நடைமுறைகளை மீறி சுகாதாரப் பொருட்களைக் கொள்வனவு செய்ததன் மூலம், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட குழுவினர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் இன்று (27) தீர்ப்பளித்துள்ளது. இதனால் அவரது தனிப்பட்ட பணத்தில் இருந்து 75 மில்லியன் ரூபாய் நஷ்டஈட்டை அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேநேரம் சுகாதார அமைச்சின் அன்றைய செயலாளர் ஜனக்க சந்திரகுப்த, மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் எஸ்.டி. ஜயரத்ன ஆகியோர் தலா 50 மில்லியன் ரூபாயைச் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் முன்னாள் பிரதான நிறைவேற்று அதிகாரி வைத்தியர் விஜித் குணசேகர மற்றும் மருத்துவ வழங்கல் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் வைத்தியர் துசித சுதர்சன ஆகியோர் 50 மில்லியன் ரூபாவை நஷ்டஈடாக அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. டிரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா உள்ளிட்ட இரு தரப்பினர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணை செய்த பின்னரே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான மூவர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அறிவித்தது. https://athavannews.com/2026/1470218
  21. யாழ்ப்பாணத்தில் ஐ.நா உயரதிகாரியுடன் விசேட சந்திப்பு! ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தினருக்குமிடையே இன்றையதினம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்துள்ளார். Marc Andre Franche மற்றும் அவரது குழுவினர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜை சந்தித்து யாழ்ப்பாண மாவட்டத்தின் தற்போதைய மனித உரிமை நிலைமைகள் குறித்து கலந்துரையாடினர். இக்கலந்துரையாடலில் மனித உரிமைகள் உத்தியோகத்தர் சேவியர் குமுதினியும் கலந்துகொண்டார். https://athavannews.com/2026/1470236
  22. சிரித்துக் கொண்டே அழுகிறோம்!- தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க புலம்பல்! தி.மு.க., அளித்த தொகுதி எண்ணிக்கையில் திருப்தி அடையாத நிலையில், ‘சிரித்துக் கொண்டே அழுவதாக’ ம.தி.மு.க., தெரிவித்துள்ளது. தி.மு.க., கூட்டணியில், தொகுதி பங்கீட்டில் கடும் அதிருப்தி நிலவுகிறது. இரட்டை இலக்கத்தில் தொகுதியை எதிர்பார்த்த விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எட்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் கடந்த சட்டசபை தேர்தலை விட, ஒரு தொகுதியை குறைத்து தலா ஐந்து தொகுதிகள் தரப்பட்டுள்ளன. ம.தி.மு.க.,வுக்கு கடந்த முறை ஆறு தொகுதிகள் ஒதுக்கிய நிலையில் தற்போது நான்கு தொகுதிகளை மட்டுமே ஒதுக்கியதோடு, ஒரு தொகுதியில் மட்டும் தனி சின்னத்தில் போட்டியிடவும், மூன்று தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவும் ஒப்பந்தம் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், புதிதாக கூட்டணிக்கு வந்த தே.மு.தி.க.,வுக்கு 10 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் தரப்பட்டுள்ளன. இந்நிலையில், கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது தொடர்பான பேச்சு, தி.மு.க., தலைமை அலுவலகமான சென்னை அறிவாலயத்தில் துவங்கி உள்ளது. ம.தி.மு.க.,வுக்கான தொகுதிகள் விபரம் குறித்து, இரு தரப்பும் இடையே நேற்று பேச்சு நடத்தப்பட்டது. நேற்றைய பேச்சுக்கு பின், ம.தி.மு.க., அவைத்தலைவர் அர்ஜுனராஜிடம், தொகுதிகள் ஒதுக்கீடு குறித்து செய்தியாளர்கள் சரமாரியாக கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், ”சிலர் சிரிப்பார், சிலர் அழுவார்; நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகிறோம். எங்களின் தகுதிக்கு ஏற்ப தொகுதிகள் வழங்கப்படவில்லை,” என்றார். ம.தி.மு.க.,வை தொடர்ந்து, கொங்கு மக்கள் தேசிய கட்சி, முக்குலத்தோர் புலிப்படை ஆகிய கட்சிகளின் தலைவர்களுடன் தி.மு.க., தரப்பில் பேச்சு நடந்தது. அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து சில மாதங்களுக்கு முன் விலகி, தி.மு.க., கூட்டணியில் கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு இணைந்தார். அவருக்கு தி.மு.க., தலைமை, ஒரு தொகுதியை உறுதி செய்ததாகவும், கொங்கு மண்டலத்தில் உள்ள சங்ககிரி அல்லது பரமத்திவேலுார் தொகுதி ஒதுக்கப்படும் எனவும் கூறப்பட்டது. ஆனால், சென்னை அறிவாலயத்தில் தி.மு.க., தொகுதி பங்கீட்டு குழுவினரை, நேற்று முன்தினம் தனியரசு சந்தித்தபோது, ‘முதல்வர் ஸ்டாலின் தங்களுக்கு தொகுதி ஒதுக்க உத்தரவு தரவில்லை’ என கூறப்பட்டதால், அவர் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, தி.மு.க., கூட்டணியில் தொடருவதா என்பது குறித்து, இன்று தன் முடிவை அறிவிக்க உள்ளார். https://athavannews.com/2026/1470233
  23. டிஜிட்டல் காலத்தில் பெண்கள் மீதான புதிய அச்சுறுத்தல் சமூக ஊடகங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு வேகமாக வளர்ந்து வரும் இன்றைய உலகில், மனிதர்களின் தனியுரிமையும், பாதுகாப்பும், புதிய சவால்களை எதிர்கொள்கின்றன. குறிப்பாக, டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் தவறாகப் பயன்படுத்தப்படும் போது, அது ஒருவரின் வாழ்க்கையை முழுமையாகவே பாதிக்கக்கூடியதாக மாற்றும் வல்லமை கொண்டது. யேர்மனியில் சமீபத்தில் பலரின் கவனத்துக்கு வந்த Collien Fernandes தொடர்பான விவகாரம், இந்த புதிய ஆபத்துகளை மிகத் தெளிவாகக் காட்டுகின்றது. Collien Fernandes யேர்மனியில் பிரபலமான தொலைக்காட்சித் தொகுப்பாளரும் நடிகையும் ஆவார். ஊடகங்களில் நேர்மையான, பலமான பெண் குரலாக அறியப்பட்ட இவர், சமீபத்தில் தனது தனிப்பட்ட வாழ்க்கையைச் சுற்றியிருந்த வேண்டத்தகாத ஒரு நிகழ்வை இப்பொழுது பொதுவெளியில் வெளிப்படுத்தியிருக்கின்றார். இந்த குற்றச்சாட்டுக்கு அவர் சுட்டிக் காட்டுவது அவரது முன்னாள் கணவர் Christian Ulmenஐ. Fernandes கூறுவதன்படி, பல ஆண்டுகளாக அவரது பெயரில் போலியான சமூக வலைத்தள கணக்குகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அந்தக் கணக்குகளூடாக, பிறருடன் பாலியல் சம்பந்தமான உரையாடல்கள் நடத்தப்பட்டிருப்பதாக அவர் குற்றம்சாட்டுகிறார். மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட deepfake பாலியல் படங்களும் பரப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த அனுபவத்தை அவர் “மெய்நிகர் பாலியல் வன்முறை” என்று குறிப்பிட்டிருக்கின்றார். இந்த விவகாரம் ஏன் இப்பொழுது முக்கியமானதாக மாறியிருக்கின்றது என்றால், இது ஒரு தனிநபரின் பிரச்சினையைத் தாண்டி, சமூக அளவிலான ஆபத்துகளைக் கொண்டது என்பதால். Deepfake தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இன்று யாருடைய முகத்தையும் வைத்து போலியான வீடியோக்களை உருவாக்கலாம். இது குறிப்பாக பெண்களுக்கு எதிரான ஒரு புதிய வகை டிஜிட்டல் வன்முறை எனலாம். ஒருவரின் அடையாளம், சமூகத்தில் அவருக்கான மதிப்பு, மற்றும் மனநிலை ஆகியவற்றை ஒரே நேரத்தில் பாதிக்கும் இந்தத் தொழில்நுட்பம், சட்ட ரீதியாகவும் சவாலாக இருக்கின்றது. இந்த குற்றச்சாட்டுகள் வெளிவந்ததன் பின்னர், யேர்மனியில் ஒரு சமூக எழுச்சி ஏற்பட்டிருக்கின்றது. இப்பொழுது, நாளுக்கு ஒரு ஊர்வலம் என்று ஏதாவது ஒரு பெரும் நகரத்தில் நடந்து கொண்டிருக்கின்றது. Fernandesஉம் இதில் கலந்து கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் சட்டங்களை வலுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கைவிடுக்கிறார். இன்று இது ஒரு பெண்ணின் தனிப்பட்ட குற்றச்சாட்டு என்பதைத் தாண்டி, ஒரு சமூக விழிப்புணர்வாக மாறியிருப்பது கவனிக்கத்தக்கது. இந்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் இருக்கிறது. விசாரணைகள் நடைபெறுகின்றன. Fernandesஇன் முன்னால் கணவர். Christian Ulmen இந்த குற்றச்சாட்டுகளை முற்றாக மறுக்கின்றார். Collien Fernandes விவகாரம், இன்றைய உலகில் நாங்கள் எதிர்கொள்ளும் புதிய சவால்களின் ஒன்று. ஒரு பக்கம் தொழில்நுட்ப முன்னேற்றம் மனித வாழ்வை எளிதாக்குகிறது, அதே நேரத்தில் அதைத் தவறாக பயன்படுத்தப்படும் அபாயத்தையும் உருவாக்குகிறது. இந்த நிகழ்வு, டிஜிட்டல் பாதுகாப்பு, பெண்களின் உரிமைகள், மற்றும் சட்ட மாற்றங்களின் அவசியம் குறித்து நாம் தீவிரமாக சிந்திக்க வேண்டிய அவசியத்தைச் சொல்கிறது. படம்- நன்றி,விக்கிபீடியா
  24. DPD பார்சல் சேவிஸ் தான் எமக்குப் பார்சல்களைக் கொண்டுவந்து தந்தது. அதனால் பயமில்லை அண்ணா. ஏன் கருவாட்டுடன் தான் பார்ட்டி வைக்கலாமா ??? ஆனாலும் திரியாய்ப் பாரைக் கருவாட்டை முதல் வாரம் போய்ப் பார்த்துவிட்டு வந்தும் இன்னும் இரண்டு வாரம் இருக்குத்தானே என்று எண்ணி வாங்காமல் விட்டிட்டனே என்ற கவலை இருக்குத்தான்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.