Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Past hour
  2. அமெரிக்காவின் ஜனாதிபதி பேசும்போது வார்த்தைகளை அளந்து பேச வேண்டும்.அது தான் ஒரு வல்லரசு நாட்டின் அதிபருக்கு வேண்டியது. ஆனால் தம்பர் வாய்க்கு வந்தபடி முன்னுக்குப் பின் முரணாகப் பேசிவருகிறார்.அமெரிக்காவின் பலவீனத்தை தம்பர் போட்டு உடைத்து விட்டார்.இது அவரைத் தெரிவு செய்த மக்களுக்குத் தேவை.
  3. யாழ் களத்தில் சிலர் (நீங்கள் அல்ல) - x ஐ பற்றி விவாதித்து தம் கருத்து தோற்கும் போது திடீரென y ஐ பற்றி கேள்வி கேட்டு விட்டு எஸ் ஆகுவார்கள் அல்லவா? தம்பரும் அதுபோலவே, அணுகுண்டை அழிக்கிறேன், மிசைல் வல்லமையை அழிக்கிறேன், என்னிடம் கேட்டு அடுத்த சுப்ரீம் லீடரை நியமிக்க வேண்டும் என போய்…. இப்போ சண்டைக்கு முன் சும்மா திறந்திருந்த ஹோர்மூஸ் நீரிணையை திறப்பேன் என்ற அளவில் வந்து நிற்கிறார்😂. அப்படியே யாழ்கள தம்பர்களை கண் முன் கொண்டு வருகிறார்.
  4. தம்பர் ஆவது வான் வழியில் வித்தை காட்டுவார்… செத்த கிளியை நம்பினால் பின் சல்மானும், சேய்க்கும் மாஸ்கோவில்தான் இறுதி நாட்களை கழிக்க வேண்டி வரும்😂. ரஸ்யாவை நம்புவதற்கு உக்ரேனை நம்பலாம். வளைகுடா நாடுகள் மிக விரைவாக, சீனாவிடம் சரணடைவது நல்லம். வேறு வழியில்லை. இனி அமெரிக்காவுக்கு ஈரான் பயப்படும் என நான் நம்பவில்லை. இஸ்ரேலுக்குத்தான் அமெரிக்காவை கட்டுப்படுத்துவது போல் சீனாவை கட்டுப்படுத்த முடியாது என்ற பின்னடைவு உண்டு. ஆனால் வளைகுடா நாடுகள், இஸ்ரேல், ஈரான் இடையே சமநிலையை பேண சீனாவால் மட்டுமே முடியும். விலை? பெட்டிரோ யுவான்.
  5. Today
  6. நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லையே😂. புலிகள், எண்டாலும் இயக்கம் எண்டாலும் ஒன்றேதான். நானும் நீங்களும் கூட இரெண்டு வார்த்தைகளையும் தமிழீழ விடுதலை புலிகள் என்ற இயக்கத்தை சுட்ட, முன்னர் பாவித்துள்ளோம். ஆகவே எக்கில் ஹேர் புடுங்காமல் உரையாடுவோம்😂.
  7. மக்கள் வீதிக்கு இறங்காமைக்கு நான் பின்வரும் காரணங்களை காண்கிறேன். ஜனவரியில்தான் 20,000க்கு மேலெ கொன்று குவிக்கப்பட்டார்கள். அதில் இருந்து மீண்டு மீள போராட 3 வருடம் எடுக்கும். இதுதான் ஈரானில் எப்போதும் நடப்பது. பஃலவி கூட இன்னும் வீதிக்கு இறங்க வேண்டாம் என்றே சொன்னார் யுத்தகால நடைமுறைகள் போராட்டம் இன்னும் மிருக தனமாக அடக்க வழிகோலும். இஸ்ரேலை நம்பிபாலும், தம்பரை நம்பி வீதியில் இறங்க அவர்கள் தயாரில்லை. ஏன் என்றால் ஆரம்பம் முதலே தம்பர் “வெனிசுவேலா” தீர்வைத்தான் விரும்பினார். பஃலவியை கூட அவர் சரிவரார் என கூறி ஒதுக்கினார் தம்பர். நல்லகாலம் தம்பரை நம்பி இறங்கி இருந்தால் மக்கள் அநியாயமாக பழிவாங்க பட்டு இருப்பார்கள். பிகு ஆனால் ஈரானிய மக்களை தாண்டி, ஈரான் இப்படி வெல்வது ஷியா அடிப்படைவாதிகள் இல்லாத அனைவருக்கும் நீண்ட கால நோக்கில் நல்ல செய்தி அல்ல. அரபு நாட்டினர் மட்டும் அல்ல, சதாமும், அசாத்தும், கடாபியும், நசாரும் கூட இவர்களில் இருந்து தள்ளியே நின்றார்கள். தனியே இவர்கள் ஷியா என்பது மட்டுமே காரணம் அல்ல.
  8. சகோதரி அருமையாக எழுதுகிறீர்கள் ....... கோட் மாற்றுவதுபோல் கோட்டல்களை மாற்றுகிறீர்கள் . ....... சூப்பர் தொடர்ந்து எழுதுங்கோ ........! 😂
  9. சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்பது போல . ஈரான் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் பெருமளவில் போரடிக் கொண்டிருந்த போது தேவையில்லாமல் அமெரிக்கா இஸ்ரேல் போரில் இறங்கி ஈரானியர்களை ஒற்றுமையாக்கி விட்டது.
  10. அவரவர் கண் பார்வை. எனவே என் பார்வையில் இயக்கம். உங்கள் பார்வையில் புலி. என் பார்வையில் நல்லவை மட்டுமே படும். தொடரும்....
  11. அமெரிக்காவுடனான பாதுகாப்பு உறவை கைவிட்டு ரஷ்யா அல்லது சீனாவுடன் வளைகுடா நாடுகள் கைகோர்க்குமா? பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,மார்ச் 12 அன்று முஹர்ரக்கில் உள்ள எரிபொருள் கிடங்குகள் மீது இரான் தாக்குதல் நடத்தியது. அதே நாளில் பஹ்ரைன், சௌதி அரேபியா மற்றும் ஓமனில் உள்ள எரிபொருள் நிலையங்களும் தாக்கப்பட்டன. கட்டுரை தகவல் பிபிசி மானிட்டரிங் 23 மார்ச் 2026, 02:10 GMT வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் இரான் இடையிலான போர் ஒரு விரிவான பிராந்திய மோதலாக உருவெடுத்துள்ளது. இரானிய ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்கள் வளைகுடாவின் உட்பகுதி வரை சென்றடைகின்றன. அவை அமெரிக்கத் தளங்களைத் தாண்டிப் பல வளைகுடா நாடுகளின் விமான நிலையங்கள், எரிசக்தி தளங்கள், துறைமுகங்கள் மற்றும் பொதுமக்களின் இடங்களைக் குறிவைக்கின்றன. இரானிய தாக்குதல்களை அரபு மற்றும் மேற்கத்திய தலைவர்கள் பரவலாகக் கண்டித்துள்ளனர். அதேநேரத்தில், பிராந்தியத்தின் முக்கிய நாடுகள் அதிகரித்து வரும் நெருக்கடியைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் வெளியுறவு அமைச்சர்களும் ஓர் அவசரக் கூட்டத்தைக் கூட்டினர். அடுத்தகட்டத் தாக்குதல்கள் 'கூட்டுத் தற்காப்பு நடவடிக்கைகளை' தூண்டக்கூடும் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர். பிராந்தியத்தை ஒரு விரிவான போருக்குள் தள்ளுவதைத் தடுக்க பதற்றத்தைக் குறைக்குமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். பஹ்ரைனைச் சேர்ந்த டெராசாட் மையம், வளைகுடா நாடுகள் இரான் நாட்டுக்கு எதிராக எந்தவொரு விரோத நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றாலும் இரானிய தாக்குதல்களில் குடிமக்களுக்கும் முக்கியமான உள்கட்டமைப்புகளுக்கும் சேதம் ஏற்பட்டிருப்பதால் அவை மோதலில் சிக்கியுள்ளன என்றும் வலியுறுத்தியது. இதன் காரணமாக ஐக்கிய நாடுகள் சபையின் 51-வது விதியின் கீழ் கடுமையான சர்வதேசப் பொறுப்புக்கூறல் கோரிக்கைகள் எழுந்துள்ளன. பிராந்திய நெருக்கடி அதிகரித்து வருவதால், வளைகுடா நாடுகள் அமெரிக்காவுடனான தங்கள் பாதுகாப்பு உறவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இதனுடன் எதிர்கால உத்தி ரீதியான கூட்டணிகளின் தன்மையைக் கண்டறியவும், தங்கள் பாதுகாப்பு உத்திகளை மறுஆய்வு செய்யவும் அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். நெருக்கடிக்கு மத்தியில் அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளின் உறவு பட மூலாதாரம்,Chip Somodevilla/Getty Images படக்குறிப்பு,சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் 2025 நவம்பரில் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டார் (நவம்பர் 18, 2025 அன்று எடுக்கப்பட்ட புகைப்படம்) அரபு பிராந்திய மற்றும் உள்நாட்டு ஊடகங்கள் அமெரிக்கா குறித்த ஜிசிசி நாடுகளின் அணுகுமுறையை வெவ்வேறு விதமாகச் சித்தரித்துள்ளன. சில ஊடகங்கள் ராய்ட்டர்ஸ் செய்தியை மேற்கோள் காட்டி, வளைகுடா நாடுகள் அமெரிக்காவிடம் 'ஹோர்மூஸ் நெருக்கடி தீவிரமடைவதால் இரான் நாட்டை முழுமையாக முடக்க' அழுத்தம் கொடுத்ததாகத் தெரிவித்தன. மறுபுறம், மற்ற ஊடகங்கள் இரான் மீது தாக்குதல் நடத்தும் அமெரிக்காவின் முடிவை விமர்சித்தன. மேலும் 'வளைகுடா நாடுகள் குறிவைக்கப்படும் அபாயத்தை அமெரிக்கா புறக்கணிப்பதாக' குற்றம் சாட்டின. இதற்கிடையில், இந்தப் போர் அமெரிக்கப் பாதுகாப்பு குறித்த வளைகுடா நாடுகளின் பார்வையை அடிப்படை ரீதியாக மாற்றியுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இது வளைகுடா நாடுகள் மற்றும் அமெரிக்கா இடையிலான உறவுகள் மற்றும் அவர்களின் மூலோபாயக் கூட்டணியின் எதிர்காலத்தில் மாற்றத்தைக் கொண்டு வரக்கூடும். மார்ச் 16 அன்று 'ஏஹாத்தா' என்ற அரபு பாட்காஸ்ட், தற்போதைய மோதலில் இருந்து வளைகுடா நாடுகள் கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள் குறித்து விவாதித்தது. அந்தப் பாட்காஸ்ட்டில் நிபுணர்கள் கூறுகையில், வளைகுடா நாடுகளின் பாதுகாப்புக் கோட்பாடு 'பலவீனமடைந்துள்ளது' என்றும், பிராந்தியத்தில் அமெரிக்காவின் இருப்பு 'பொருளாதார ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் தொடர்ச்சியான சுமையாக மாறி வருகிறது' என்றும் கூறினர். ஏனெனில், இரான் இப்போது பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கச் சொத்துகளை தாக்குதலுக்கான இலக்குகளாகக் கருதுகிறது. பதிலடி நடவடிக்கையாக அமெரிக்காவுடன் தொடர்புடைய பொருளாதார நலன்களைக் குறிவைப்பதாக இரான் எச்சரித்திருந்தாலும், டிரம்ப் நிர்வாகம் பதற்றத்தைத் தொடர்ந்து அதிகரிக்கச் செய்ததாக நிபுணர்கள் சுட்டிக்காட்டினர். இது 'அமெரிக்கா தங்கள் பாதுகாப்பு கவலைகளைக் கண்டுகொள்ளவில்லை என்ற வளைகுடா நாடுகளின் எண்ணத்தை மேலும் வலுப்படுத்தியது'. இதனால் வளைகுடா நாடுகளில் 'ஏமாற்றம் அல்லது துரோகம்' போன்ற ஆழமான உணர்வு ஏற்பட்டுள்ளதாக ஒரு நிபுணர் கூறினார். "அமெரிக்கா ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது மற்றும் வளைகுடா நாடுகளை இரானிய பழிவாங்கலின் அபாயத்தில் தள்ளுகிறது என்ற எண்ணம் நிலவுகிறது. இருப்பினும், இந்த அதிருப்தி இருந்தபோதிலும், வளைகுடா அரசுகள் அமெரிக்கப் பாதுகாப்பு கூட்டணியை முடிவுக்குக் கொண்டுவர முடியாது என்பதை உணர்ந்துள்ளன. ஆனால் இப்போது இதற்கான 'அரசியல் விலை அதிகமாக' இருக்கும்," என்று அவர் கூறினார். ரஷ்யா அல்லது சீனாவுடன் வளைகுடா நாடுகள் கைகோர்க்குமா? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,தற்சமயம் வளைகுடா நாடுகள் சீனா மற்றும் ரஷ்யாவை முழுமையாகச் சார்ந்திருக்க வாய்ப்பில்லை (சித்தரிப்புப் படம்). அமெரிக்காவுடனான கூட்டணியில் வளைகுடா நாடுகளின் 'ஏமாற்றம்' குறித்துச் சில நிபுணர்கள் கூறினாலும், தற்போது ரஷ்யா அல்லது சீனாவுடன் புதிய கூட்டணிகளை உருவாக்குவது குறித்து அவர்களின் தரப்பிலிருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிக்கையும் வரவில்லை. ஏஹாத்தா பாட்காஸ்ட்டில் பேசிய நிபுணர்கள், அமெரிக்காவுக்குப் பதிலாக முழுமையாகச் சீனா அல்லது ரஷ்யாவுடன் கூட்டணி வைப்பது 'நடைமுறைக்குச் சாத்தியமற்றது' என்று கூறினர். இருப்பினும், வளைகுடா நாடுகள் புதிய கூட்டணிகளைத் தேடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் அமெரிக்காவுடனான அவர்களின் உறவுகள் இனி 'தனித்துவமானவை அல்லது உத்திரீதியானவை என்று இருக்காது. வளைகுடா நாடுகள் அமெரிக்காவுடனான கூட்டணியைத் தக்கவைத்துக்கொண்டு, பிராந்திய ராஜீய ரீதியிலான தன்னாட்சியை விரிவுபடுத்த முயலலாம். அதேநேரத்தில் மேற்கத்திய நாடுகள் அல்லாத நாடுகளுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பை மேற்கொள்வதற்கான பன்முக உத்தியை அவர்கள் கடைப்பிடிக்கலாம். உதாரணமாக அமெரிக்கா-இரான் பேச்சுவார்த்தையில் கத்தார் மற்றும் ஓமன் மத்தியஸ்தப் பாத்திரத்தை வகித்துள்ளன. இது பிராந்தியத்தில் தங்கள் ராஜீய செல்வாக்கை வலுப்படுத்தும் அவர்களின் விருப்பத்தைக் காட்டுகிறது. கத்தாரின் அல் ஜசீரா முபாஷெர் தொலைக்காட்சியும் போருக்குப் பிந்தைய வளைகுடா நாடுகளின் யதார்த்தங்கள் குறித்து விவாதித்தது. அதில் ஒரு நிபுணர் கூறுகையில், வளைகுடா நாடுகள் "அமெரிக்காவுடனான கூட்டணியை முழுமையாகக் கைவிடத் தயாராக இல்லை" என்றார். ஆனால் அதற்குப் பதிலாக இந்த அனுபவம், போருக்குப் பிந்தைய திட்டமிடல் மற்றும் வெளிநாட்டுக் கூட்டணிகள் (அமெரிக்காவாக இருந்தாலும் சரி, பிற நாடுகளாக இருந்தாலும் சரி) வளைகுடா நாடுகளின் தன்னிறைவுக்கு மாற்றாக அமைய முடியாது என்ற புரிதலை வளர்க்கும் ஒரு படியாக அமைந்துள்ளது. "அமெரிக்க தளங்கள் தங்கள் சிறிய மற்றும் பாதுகாப்பற்ற நாடுகளைப் பாதுகாக்கும் என்று வளைகுடா நாடுகள் நம்பி, அமெரிக்கத் தளங்களுக்காகப் பில்லியன் கணக்கான டாலர்களைச் செலவழித்தன. ஆனால் அனைத்து வளைகுடா நாடுகளின் தலைநகரங்களும் விதிவிலக்கின்றி குறிவைக்கப்பட்ட போது, இந்தத் தளங்களால் எந்தப் பயனும் இல்லை என்பதைப் போர் நிரூபித்துள்ளது," என்று நிபுணர்கள் கூறினர். அவர்கள் மேலும் கூறுகையில், "இது அமெரிக்கப் பாதுகாப்பை மட்டுமல்லாமல், ஆறு ஜிசிசி நாடுகளை பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் பிற வல்லரசுகளுடன் இணைக்கும் பரந்த ஒப்பந்த நெட்வொர்க்கையும் விரிவான மறுமதிப்பீட்டுக்கு உள்ளாக்கியுள்ளது. பிராந்தியம் தாக்கப்பட்ட நேரத்தில் இத்தகைய ஏற்பாடுகள் பலனளிக்கவில்லை," என்றனர். வளைகுடா நாடுகளின் முன்னுரிமைகள் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,போர்கள் இப்போது போர் விமானங்களைத் தாண்டி ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் வரை விரிவடைந்துள்ளன (சித்தரிப்புப் படம்) வளைகுடா நாடுகளுக்குக் கூட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்துவது தற்போது முதன்மையான முன்னுரிமையாக மாறியுள்ளது குறித்துப் பல செய்திக் கட்டுரைகள் விவாதித்துள்ளன. எழுத்தாளர் அப்துல்லா அகமது அலி, பிராந்திய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வளைகுடா சக்திகளின் ஒருங்கிணைப்புக்கு அழைப்பு விடுத்தார். எமிரேட்ஸ் செய்தித்தாளான அல்-கலீஜில் வெளியான கட்டுரையில், "தற்போதைய நெருக்கடி, நவீனப் போரை இனி படைகள் அல்லது விமானங்களின் எண்ணிக்கையை வைத்து மட்டும் மதிப்பிட முடியாது என்பதைத் தெளிவுபடுத்துகிறது. மாறாக, ஒரு நாட்டின் பாலிஸ்டிக் ஏவுகணைகள், டிரோன்கள் மற்றும் சைபர் தாக்குதல்கள் போன்ற சிக்கலான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் திறன் கொண்ட பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்கும் திறனே முக்கியமானது," என்று அவர் எழுதியுள்ளார். வளைகுடா நாடுகள் "தற்காலிக வளைகுடா ஒருங்கிணைப்பில் இருந்து உண்மையான மற்றும் நிரந்தர ஒருங்கிணைப்பை நோக்கி நகர முடியுமா" என்ற கேள்வியை எழுத்தாளர் எழுப்பியுள்ளார். இதையே வலியுறுத்தி எழுத்தாளர் ஜாசிம் அல்-மாலிகி, வளைகுடா நாடுகளின் ராணுவ சக்திகளை ஒன்றிணைக்க வேண்டுகோள் விடுத்தார். கத்தாரின் அல்-ஷார்க் (Al-Sharq) செய்தித்தாளில் அவர் எழுதியுள்ள கட்டுரையில், கூட்டு வளைகுடா ராணுவப் படையை நிறுவுவது என்பது ஒவ்வொரு நாட்டின் தேசிய ராணுவங்களையும் கொண்டு ஒரு ஒருங்கிணைந்த ராணுவத்தை உருவாக்குவது அல்ல, மாறாக ஒரு ஒருங்கிணைந்த பாதுகாப்பு அமைப்பை உருவாக்குவதாகும் என குறிப்பிட்டுள்ளார். "நவீன பாதுகாப்பு சவால்கள் இனி முந்தைய காலங்களைப் போலப் பாரம்பரியமானவை அல்ல. இவற்றில் இப்போது பாலிஸ்டிக் ஏவுகணைகள், டிரோன்கள், சைபர் தாக்குதல்கள் மற்றும் கடல்சார் அச்சுறுத்தல்கள் அடங்கும். இவை ஒரு நாட்டின் திறன்களைத் தாண்டி கூட்டான எதிர்வினை தேவைப்படும் சவால்கள்," என்று அவர் மேலும் எழுதியுள்ளார். வளைகுடா நாடுகள் இரானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதா? பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,கடந்த ஆண்டு மே மாதம் கோலாலம்பூரில் நடைபெற்ற இரண்டாவது ஆசியான்-ஜிசிசி கூட்டத்தின் போது குவைத்தின் பட்டத்து இளவரசர் ஷேக் சபா காலித் அல்-ஹமத் அல்-சபா. மோதல் அதிகரித்து வரும் நிலையில், வளைகுடா நாடுகள் தாங்கள் தொடங்காத ஒரு போருக்குள் இழுக்கப்படும் பயத்திற்கும், தங்கள் தற்காப்பு உரிமையைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய அவசியத்திற்கும் இடையில் சிக்கியுள்ளன. வளைகுடா நாடுகளின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்று 'இரான் உடனான நேரடிப் போருக்குள் இழுக்கப்படுவதைத் தவிர்ப்பது' என்பதாகும். கடந்த சில வாரங்களாக, பல நிபுணர்கள் மற்றும் வளைகுடா அதிகாரிகள், வளைகுடா நாடுகள் "போரின் ஒரு பகுதி அல்ல" என்பதை வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும், இரான் எரிசக்தித் தளங்களையும் தனது இலக்குகளில் சேர்த்தவுடன், இரானிய தாக்குதல்களுக்கு ராணுவ நடவடிக்கை மூலம் பதிலடி கொடுக்கும் உரிமையை வளைகுடா நாடுகள் கொண்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கைகளில் மீண்டும் மீண்டும் கூறப்பட்டது. மார்ச் 19 அன்று செளதி அரேபிய வெளியுறவு அமைச்சர் பைசல் பின் ஃபர்ஹான், தனது நாடு மற்றும் பிற வளைகுடா நாடுகள் மீதான தாக்குதல்களைப் பொறுத்துக் கொள்வதற்கு ஒரு எல்லை உண்டு என்று இரானுக்கு எச்சரிக்கை விடுத்தார். செளதி அரேபியா மற்றும் பிற வளைகுடா நாடுகளிடம் 'மிக முக்கியமான திறன்களும் ஆற்றலும்' உள்ளன என்றும், அவற்றை அவர்கள் 'விருப்பப்படி' பயன்படுத்தலாம் என்றும் அவர் எச்சரித்தார். இரானுக்கு எதிரான தாக்குதலில் வளைகுடா நாடுகளின் சாத்தியமான பங்களிப்புக்கான பல காரணங்களை அல் ஜசீரா பட்டியலிட்டுள்ளது. அவற்றில் சர்வதேசச் சட்டத்தின் கீழ் வளைகுடா நாடுகளின் தற்காப்பு உரிமை, அமெரிக்காவுடன் வலுவான பாதுகாப்பு கூட்டணியின் சாத்தியக்கூறு மற்றும் வளைகுடா நலன்களுக்கு ஏற்ப ஒரு புதிய இரானிய அரசு அமைவதற்கு உதவும் திறன் ஆகியவை அடங்கும். இருப்பினும், வளைகுடா நாடுகள் இரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிரான பிற வாதங்களும் இருப்பதாக அந்தச் சேனல் கூறியுள்ளது. தாக்குதலில் ஈடுபடுவது, குறிப்பாக இஸ்ரேலுடன் நிற்பது, வளைகுடா நாடுகளின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் என்ற கவலை இதில் அடங்கும். இது அவர்கள் 'இஸ்ரேலின் நலன்களுடன் நிற்கிறார்கள்' என்ற வாதத்தை வலுப்படுத்தும். போரில் ஈடுபடுவது பிராந்தியத்தின் பொருளாதார முன்னுரிமைகளுக்கு எந்தப் பலனையும் தராது என்பதும் தெளிவாகத் தெரிகிறது. வளைகுடா நாடுகள் தாக்குதலில் ஈடுபட்டால், அமெரிக்கா-இஸ்ரேல் ஆகியவை இரானுடனான மோதலில் இருந்து பின்வாங்கக்கூடும் என்றும், இதன் மூலம் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் பலவீனப்படுத்திக் கொள்வார்கள், பின்னர் அமெரிக்காவும் இஸ்ரேலும் 'வளைகுடா நாடுகளின் பாதுகாப்புக்கு' வந்த 'ரட்சகர்களாக' மாறிப் போரை முடிவுக்குக் கொண்டு வர அழைப்பு விடுப்பார்கள், அதற்குப் பதிலாகப் பெரிய சலுகைகளைக் கோருவார்கள் என வளைகுடா அதிகாரிகள் அஞ்சுவதையும் அந்தச் சேனல் சுட்டிக்காட்டியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce84vemmg5xo
  12. தம்பர் விழுந்தும் மண்படவில்லை என்று எஸ்கேப் ஆகப்பார்க்கிறார்.
  13. எரிபொருள் விலை உயர்வு தாக்கம்: பேருந்து கட்டணம் அதிகரிப்பு Published By: Vishnu 23 Mar, 2026 | 07:06 PM பேருந்துக் கட்டணங்களை இன்று திங்கட்கிழமை (23) நள்ளிரவு முதல் 12.19 சதவீதம் உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜெயதித்த தெரிவித்தார். இதன்படி, குறைந்தபட்ச கட்டணம் ரூ. 27 இலிருந்து ரூ. 30 ஆக உயர்கிறது. மேலும், மேற்கு மாகாண சாலைப் பயணிகள் போக்குவரத்து ஆணையம் முச்சக்கர வண்டி கட்டணத்தையும் உயர்த்தியுள்ளது. எரிபொருள் விலை உயர்வைத் தொடர்ந்து சில தனியார் பேருந்துகள் சேவையை நிறுத்தியதால், பயணிகள் கடும் சிரமத்தையும் நெரிசலையும் எதிர்கொண்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/241771
  14. புரிகிறது. கொள்கையளவில் ஈரானின் அடிப்படை வாதிகள் வெல்லக் கூடாது. ஆனால், இந்த 3 வாரங்களில் என்னிடம் உருவான ஒரு கேள்வி, பெரும்பாலான ஈரானியர்களே இந்த அடிப்படை வாதத்தைச் சகித்துக் கொள்ளத் தயாராக இருக்கும் போது வெளியார் என்ன செய்ய முடியும் என்பது தான்! அவர்கள் அடிப்படை வாதத்தை ஆதரிக்கவில்லை, ஆனால் அதோடு வாழ்ந்து விட்டுப் போகலாம் என்று நினைத்திருக்கிறார்கள் என நம்புகிறேன். அந்த சகிப்புத் தன்மை இருக்கும் வரை தலைமையைக் கொன்று ஒன்றும் மாறப் போவதில்லை என நினைக்கிறேன். தென்னமெரிக்க நாடுகளில் ஒரு போதை வஸ்துக் கும்பல் தலைவரைக் கொன்றால் உடனேயே அடுத்தவர் பதவிக்கு வருவது போல, ஈரானிலும் இருப்பார்கள். கடைசியில் "பாலாவி" (Pahlavi) தான் பாவம்😂!
  15. வலுசக்தியை மிகச்சிறந்த முகாமைத்துவத்துடன் பயன்படுத்துவது குறித்து மக்களுக்குத் தெளிவுபடுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார் ஜனாதிபதி Published By: Vishnu 23 Mar, 2026 | 06:44 PM நாட்டின் நாளாந்த வலுசக்தி நுகர்வு அதிகமுள்ள மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலான காலப்பகுதியில், வலுசக்தியை மிகச்சிறந்த முகாமைத்துவத்துடன் பயன்படுத்துவது குறித்து மக்களுக்குத் தெளிவுபடுத்தி, அவர்களின் பங்களிப்புடன் நாட்டின் வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் எதிர்நோக்கியுள்ள வலுசக்தி விநியோகத்திலான சவால்களுக்கு மத்தியில், வலுசக்தியைச் சரியான முகாமைத்துவத்துடன் பயன்படுத்தி நாடு எதிர்கொண்டுள்ள சவால்களை வெற்றிகொள்ள அதிகபட்ச பங்களிப்பை வழங்குவது, நிறுவன ரீதியாகவும் தனிநபர் ரீதியாகவும் தற்போது அனைவர் மீதும் சுமத்தப்பட்டுள்ள பொறுப்பாகும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். வலுசக்தி பாதுகாப்பைப் பேணுவதற்காக தொடர்ச்சியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயும் பொருட்டு திங்கட்கிழமை (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். கடந்த சில வாரங்களாக வலுசக்தி முகாமைத்துவம் தொடர்பாக அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மேலும் நடைமுறைச் சாத்தியமான நிலைக்குக் கொண்டு வருவது குறித்தும், குறிப்பாக அரச சேவைக்கு வழங்கப்பட வேண்டிய வழிகாட்டல்கள் குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது. அதேபோல், உள்ளூராட்சி மன்ற மட்டத்தில் வலுசக்தி நுகர்வை முறையான முகாமைத்துவத்திற்கு உட்படுத்துவதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து அந்தந்த நிறுவனங்களுடன் கலந்துரையாடுமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார். விளம்பரங்களுக்காகப் பயன்படுத்தப்படும் மின்சாரப் பெயர்ப்பலகைகள் மற்றும் ஏனைய அலங்கார மின் கட்டமைப்புகளுக்கு அதிகளவிலான மின்சாரம் செலவிடப்படுவதாகவும், அதனைக் மட்டுப்படுத்துவதன் மூலம் நாட்டின் மின்சார நுகர்வில் குறிப்பிடத்தக்க அளவைச் சேமிக்க முடியும் என்றும் இதன்போது குறிப்பிடப்பட்டது. நகர்ப்புறங்களில் அவசியமற்ற வீதி விளக்குகளின் பயன்பாட்டைக் குறைத்தல் மற்றும் வலுசக்தி முகாமைத்துவத்திற்காக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அது தொடர்பாகப் பின்பற்றக்கூடிய மாற்று வழிமுறைகள் குறித்து சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் இணைந்து கலந்துரையாடி, விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார். வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஆலோக பண்டார, போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிரேஷ்ட பேராசிரியர் கபில சி.கே. பெரேரா, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் டி. பாஸ்கரன் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர். https://www.virakesari.lk/article/241769
  16. அமெரிக்காவில் தற்போது வித்தியாசம் இல்லை என்பது என் அனுபவம் (ஐரோப்பா, கனடா நிலை எனக்குத் தெரியவில்லை). கடைசியாக நான் ஏஜென்சி மூலம் இலங்கைக்கு ரிக்கற் வாங்கியது 2012 இல். அதுவும் வாழ்ந்த நகரத்தில் எனக்கு அறிமுகமான ஒரு இந்தியர் ஏஜென்சி வைத்திருந்ததால் அவருக்கு போனைப் போட்டு வாங்கியிருக்கிறேன். அதன் பிறகு குடும்பத்தில் இருப்பவர்களின் பல பயணங்கள், எல்லாம் நேரடியாக இணையத் தளத்தில் தான். இதில் பல சௌகரியங்கள் உண்டு. தற்போது போன் app கள் இருக்கின்றன. பெரும்பாலான விமான சேவைகளுக்கு app மூலமே check-in செய்து கொள்ளலாம். விமான நிலையத்தில், ஆவணத்தைக் காட்டி பயணப் பைகளை நிறுத்து அவர்களிடம் கொடுத்து விட்டுப் போக வேண்டியது தான். பயண முகவர்கள் மூலம் பயணச் சீட்டு வாங்கினாலும், இறுதியில் ஏதாவது மாற்றங்கள் செய்ய வேண்டுமெனின் பயணி விமான நிறுவனத்திடம் தான் நேரில் செல்ல வேண்டும், மேலே சுமே சென்றது போல. எனவே, என்ன வகையான பயன் பயண முகவர்களிடம் வாங்குவதால் கிடைக்கிறதெனத் தெரியவில்லை. ஐரோப்பாவில் அப்படியான ஏதும் பயன்கள் இருக்கின்றனவோ தெரியவில்லை.
  17. கொமேனியின் மறைவை போல ஒரு நல்ல விடயமாகவே பி பி யின் தம்பரின் அகற்றமும், அடக்கமும் இருக்கும், என்னை பொறுத்தமட்டில். ஆனால் ஈரானிய அடிப்படைவாதிகள் இவ்வாறு வெல்வது, நிச்சயம் அரபு முஸ்லிம் நாடுகளுக்கோ எனைய தனி மனித சுதந்திரங்களை அனுசரித்து போகும் இஸ்லாமிய நாடுகளுக்கோ, நல்ல சகுனமாக இராது. அமெரிக்காவின் அடிவருடிகள் என நாம் மிக சுலபமாக அரபுநாடுகளை கடந்து போகலாம். ஆனால் உண்மையில் அடிப்படைவாதத்துக்கு எதிரான மிக் முக்கிய பங்கை ஆற்றுவது யு ஏ ஈ. சல்மான் வந்த பின் சவுதியில் கூட மிக நல்ல மாற்றங்கள் வந்தன. சில மத விதிகளை, சில ஹதீசுகளை நடைமுறை படுத்தவே தேவையில்லை என அண்மையில் அறிவித்தார். ஈரான் இந்த போரில் படுதோல்வி அடையாமல், சரணாகதி ஆகாமல், ஒரு போர்நிறுத்தம் வரும் எனில் - அது ஈரானின் வெற்றியே. தம்பர், செத்த கிளி, பிபி எல்லாரும் தற்காலிகமானவர்கள். ஆனால் ஈரானின் இந்த வெற்றி, அந்த பிராந்தியத்துக்கும், உலகுக்கும், ஷியா அடிப்படைவாதத்தில் நம்பிக்கை இல்லாத அனைவருக்கும் நீண்ட கால நோக்கில் ஒரு பெரும் தலையிடியாக அமையும். யாழ்களத்தில் ஸ்கோர் கேட்கும் மனநிலையில், அமெரிக்காவுக்கு அடி போட்டால் காணும் என்ற நிலையில் உள்ளவர்களுக்கு இது உறைக்கும் போது காலம் கடந்து விட்டிருக்கும். இதே ஆட்கள்தான் பொதுபல சேனாவின் முஸ்லிம் எதிர்ப்பை ஆதரித்து, முஸ்லிம்களை ஆதரித்து எழுதிய எம்போன்றோரை திட்டினார்கள் என்பது அடுத்த லெவல் முரண்நகை. ஆனால் உங்கள் போன்ற கருத்தாளர்களுக்கு நான் சொல்வது புரியும் என நினைக்கிறேன்.
  18. கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் : இதுவரை ஐவர் கைது! 23 Mar, 2026 | 07:51 PM கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குளுவினாமடு, நெல்லிக்காடு பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து பெண்ணொருவர் உயிருடன் மீட்கப்பட்டதோடு, அதே கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னதாக மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை (22) மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைதாகியுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொக்கட்டிச்சோலை பொலிஸாரும் கிழக்கு மாகாண குற்றத்தடுப்புப் பிரிவினரும் இச்சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மேலும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. பின்னணி கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குளுவினாமடு, நெல்லிக்காடு பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் பெண் ஒருவர் உயிருக்குப் போராடிய நிலையில் மீட்கப்பட்டதோடு, அன்றைய தினம் அதே கிணற்றில் மற்றுமொரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. கிணற்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட பெண், சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதனையடுத்து, ஆரம்பகட்ட விசாரணையின் பின்னர், இச்சம்பவத்தில் கடத்தல், கொள்ளை மற்றும் மனிதப் படுகொலை ஆகியவற்றுடன் தொடர்புடைய இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் என 3 சந்தேக நபர்கள் கிழக்கு மாகாண குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு கொக்கட்டிச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். குறித்த சந்தேக நபர்கள் 22 மற்றும் 34 வயதுடைய நாவற்காடு மற்றும் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், பெண் சந்தேக நபர் காஞ்சனகுடா பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் ஆவார். சந்தேக நபர்கள் குறித்த இரு பெண்களையும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வீதியில் சென்றுகொண்டிருந்தபோது முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்றுள்ளனர். வழியில் அவர்களுக்கு போதைப்பொருள் கலந்த பானத்தை அருந்தக் கொடுத்துள்ளனர். அவர்கள் மயக்கமடைந்ததும், அவர்களிடம் இருந்த தங்க நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு அவர்களை நீர் நிறைந்த குறித்த கிணற்றுக்குள் தள்ளியுள்ளனர். இந்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட பெண் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவைச் சேர்ந்தவர். இவர் கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி வெல்லாவெளி பகுதியிலிருந்து களுவாஞ்சிக்குடி பளுவாமம் அரச வைத்தியசாலை மற்றும் வங்கிக்குச் சென்று மீண்டும் திரும்பிக்கொண்டிருந்தபோது, சந்தேக நபர்கள் இவரை முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்று மேற்கூறியவாறு போதைப்பொருள் கலந்த பானத்தைக் கொடுத்து நகைகளைக் கொள்ளையடித்து கிணற்றுக்குள் தள்ளியுள்ளனர். கிணற்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண், கடந்த 19ஆம் திகதி வியாழக்கிழமை தனது மூன்று வயது குழந்தையுடன் வவுணதீவு பகுதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் செல்வதற்காகப் பேருந்திற்குக் காத்திருந்தபோது, கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபரும் அவரது மனைவியும் முச்சக்கரவண்டியில் வந்து தாங்களும் மட்டக்களப்பு செல்வதாகக் கூறி அவர்களை ஏற்றியுள்ளனர். குறித்த பெண் தனது தேவைகளை முடித்துவிட்டு மட்டக்களப்பு நகரிலிருந்து திரும்பும்போது சந்தேக நபர்கள் அவர்களைப் பின்தொடர்ந்து மீண்டும் முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்றுள்ளனர். செல்லும் வழியில் போதைப்பொருள் கலந்த பானத்தை குழந்தையுடன் சென்ற பெண்ணுக்கு கொடுத்துள்ளனர். அவர் மயக்கமடைந்த பிறகு நகைகளைக் கொள்ளையிட்டு அவரை கிணற்றுக்குள் தள்ளியுள்ளனர். இந்நிலையில் அவரது குழந்தை வவுணதீவு பாலக்காடு பகுதியில் உள்ள வயல்வெளியில் கைவிடப்பட்ட நிலையில் பின்னர் மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தில் முதலில் 3 பேர் கைது செய்யப்பட்டதையடுத்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை மேலும் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கொள்ளையிடப்பட்ட தங்க நகைகளைத் தம்வசம் வைத்திருந்தமை மற்றும் அவற்றை விற்பனை செய்தமை தொடர்பில் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 39 மற்றும் 49 வயதுடைய இவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, கொள்ளையிடப்பட்ட தங்க நகைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கொக்கட்டிச்சோலை பொலிஸார் மற்றும் கிழக்கு மாகாண குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் இதுவரை கைது செய்யப்பட்ட 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இன்று (23) அழைத்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/241768
  19. ஒரு காதல் என்ன செய்துவிட முடியும்? இந்த கேள்விக்கான பதில் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். அன்புராஜுக்கோ அது வாழ்க்கைக்கான நம்பிக்கை ஒளி. வீரப்பன் குழுவில் சேர்ந்து அதன் தொடர்ச்சியாக வாழ்நாள் முழுவதும் சிறையில் கழிக்கும் தண்டனைக்கு உள்ளானவர் அன்புராஜ். சிறையில் நாடக கலை அவரது வாழ்க்கையை மாற்ற, அதனூடாக கிடைத்த காதல் ‘தனது எதிர்காலத்தையே மாற்றியதாக’ அன்புராஜ் கூறுகிறார். அது எப்படி? இந்த காணொளியில் பார்க்கலாம். Producer: Murugesh Maadakannu Shoot & Edit : Sam Daniel #Valentinesday #AnthiyurAnburaj #Love இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
  20. பதுளை வைத்தியசாலையில் மற்றொரு அதிசய அறுவை சிகிச்சை Mar 23, 2026 - 08:50 PM வயிற்றைத் துளைத்து முதுகின் வழியாக இரும்புக்கம்பி வெளியே வந்த நிலையில், மிக மோசமான விபத்துக்குள்ளான ஒருவரின் உயிரைப் பதுளை வைத்தியசாலை வைத்தியக் குழுவினர் வெற்றிகரமாகக் காப்பாற்றியுள்ளனர். இவ்வாறு விபத்துக்குள்ளானவர் 37 வயதுடைய ஒருவராவார். விபத்துக்குள்ளான நபர் பதுளை வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டதையடுத்து, அவசர சிகிச்சைப் பிரிவின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி பாலித ராஜபக்ஷ உள்ளிட்ட வைத்தியக் குழுவினர், அந்த இரும்புக் கம்பியின் ஒரு பகுதியை வெட்டி அகற்றிவிட்டு, காயமடைந்தவரை அவசர அறுவை சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர், வைத்தியர்கள் அறுவை சிகிச்சையை மேற்கொண்டபோது, உடலினுள் இருந்த இரும்புப் பகுதிகளை முழுமையாக அகற்றியுள்ளனர். முருங்கை மரத்தில் முருங்கைக்காய் பறிக்கச் சென்றபோது கிளை முறிந்ததால், இந்த நபர் அங்கிருந்த கொன்க்ரீட் மதில் ஒன்றின் மீது விழுந்துள்ளார். இதன்போது மதிலில் இருந்த இரும்புக் கம்பி ஒன்று அவரது உடலைப் துளைத்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmn3byuhm0001356pz39zmej7
  21. அண்ணை, நேரடியாக இணையத்தளத்தில் வாங்குவதற்கும் முகவர்களிடம் வாங்குவதற்கும் இடையில் விலை வித்தியாசம் உண்டா? அக்கா, மறுபடியுமா?!
  22. ட்ரம்ப்பின் அறிவிப்பை தொடர்ந்து சர்வதேச சந்தையில் சரிந்த கச்சா எண்ணெய் விலை! Mar 23, 2026 - 06:20 PM ஈரான் மீதான திட்டமிடப்பட்ட இராணுவத் தாக்குதல்களை அமெரிக்கா தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்கமைய பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை சுமார் 15% சரிந்து, ஒரு பீப்பாய் 96 டொலராகக் குறைந்தது. அமெரிக்க WTI கச்சா எண்ணெய் விலை 13.5% சரிந்து, ஒரு பீப்பாய் 85.28 டொலராக வீழ்ச்சியடைந்தது. ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக அமெரிக்கா முன்னதாக எச்சரித்திருந்தது. இதனால் போர் பதற்றம் அதிகரித்து எண்ணெய் விலை உயர்ந்திருந்தது. இந்நிலையில், ஈரானுடன் நடத்தப்பட்ட முதற்கட்டப் பேச்சுவார்த்தைகள் "ஆக்கபூர்வமாக" இருந்ததாகத் தெரிவித்த ட்ரம்ப், அடுத்த 5 நாட்களுக்கு ஈரான் மீதான எந்தவொரு இராணுவத் தாக்குதலையும் நடத்த வேண்டாம் எனத் தனது இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmn36ojxf0008356p1ebftg8g
  23. ஹோர்முஸ் நீரிணையை சர்வதேசக் கப்பல்கள் பயன்படுத்துவது தொடர்பில் ஈரானின் பாதுகாப்பு சபையின் நிபந்தனை Published By: Digital Desk 3 23 Mar, 2026 | 03:51 PM ஹோர்முஸ் நீரிணையை சர்வதேசக் கப்பல்கள் பயன்படுத்துவது தொடர்பிர் ஈரானின் பாதுகாப்பு சபை நிபந்தனைகளை விதித்துள்ளது. ஈரானுடன் குரோதமற்ற நாடுகள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து செல்ல ஈரானுடன் ஒருங்கிணைந்து செயற்படுவதுதான் ஒரே வழி என ஈரானின் உயர்மட்ட பாதுகாப்பு அமைப்பான பாதுகாப்பு சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும், ஈரானின் கடற்கரைகள் அல்லது தீவுகள் மீது ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால், பாரசீக வளைகுடாவிலுள்ள அனைத்துப் போக்குவரத்துப் பாதைகளும் பல்வேறு வகையான கடற்படை கண்ணிவெடிகள் மூலம் முடக்கப்படும். கடற்கரையிலிருந்து ஏவப்படக்கூடிய மற்றும் கடலில் மிதந்து செல்லக்கூடிய கண்ணிவெடிகள் இதற்காகப் பயன்படுத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்தகைய தாக்குதல் நிகழ்ந்தால், ஹோர்முஸ் நீரிணை மட்டுமல்லாமல் முழு பாரசீக வளைகுடாவும் நடைமுறையில் முடக்கப்படும் எனவும், அதன் பொறுப்பு தாக்குதல் நடத்திய தரப்பினருக்கே சேரும் எனவும் அந்த அறிக்கை மேலும் குறிப்பிடுகிறது. https://www.virakesari.lk/article/241735
  24. அத தெரண கருத்துப்படம்.
  25. யாழ்.ஒட்டகப்புலத்தில் 02 ஏக்கர் காணி விடுவிப்பு Published By: Digital Desk 3 23 Mar, 2026 | 04:33 PM யாழ்ப்பாணத்தில் சுமார் 36 வருட காலமாக இராணுவ கட்டுப்பாட்டில் காணப்பட்ட 2 ஏக்கர் காணி இன்று திங்கட்கிழமை (23) இராணுவத்தினரால் விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் , வசாவிளான் கிழக்கு (J/244) பகுதியிலுள்ள ஒட்டகப்புலம் தேவாலயத்திற்கு அருகில் இராணுவ பயன்பாட்டிற்காக கையகப்படுத்தப்பட்டள்ள காணிகளில் 02 ஏக்கர் தனியார் காணிகளை இராணுவத்தினர் விடுவித்துள்ளனர். குறித்த பகுதியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த காணிகளில் 234.8 ஏக்கர் காணி கடந்த 2024ஆம் ஆண்டு மே மாத கால பகுதியில் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால், விடுவிக்கப்பட்டது. ஏனைய காணிகளையும் விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுப்போம் என அப்போது உறுதி அளிக்கப்பட்டிருந்த போதிலும், சுமார் 22 மாதங்களின் பின்னர் 02 ஏக்கர் காணி தற்போது விடுக்கப்பட்டுள்ளது. இன்னமும் தேவாலயத்திற்கு அருகில் உள்ள காணிகள் சில இராணுவ கட்டுப்பாட்டினுள் காணப்படுகின்றன. அவற்றினையும் விரைந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/241741
  26. தற்காலத்திலும் ஏஜென்சி வழியாகத் தான் விமானச் சீட்டு வாங்குகிறார்களா மக்கள்? எல்லா விமான நிறுவனங்களிலும் இணையத் தளத்தில் நேரடியாக விற்பனை செய்கிறார்களே?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.